logo

|

Home >

hindu-hub >

temples

பரிதிநியமம் (பருத்தியப்பர் கோயில், பரிதியப்பர் கோயில்)

இறைவர் திருப்பெயர்: பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, மங்களநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : வேத தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம். (சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும்; சந்திர தீர்த்தம் கோயிலின் பின்பும் உள்ளது.)

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார்,சூரியன்.

Sthala Puranam


 

ParitiNiyamam temple

  • இக்கோயிலை மக்கள் "பருத்தியப்பர் கோயில்" என்று அழைக்கின்றனர்.

     

  • பரிதி - சூரியன்; நியமன் - கோயில். இத்தலம் சூரியன் வழிபட்ட தலம். (இக்கோயில் ஒரு காலத்தில் சூரியன் கோயிலாக இருந்து பின்பு சிவாலயமாக மாறியிருக்கலாம் என்பர்.) - சூரியன் வழிபடும் உருவம் கோயிலில் உள்ளது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. விண்கொண்ட தூமதி சூடி (3.104); 

பாடல்கள்      :    சம்பந்தர்    -       குலாவுதிங்கட் சடையான் (2.39.8); 

                      அப்பர்      -      நாக மரைக்கசைத்த (6.002.2),       
                                          கங்கையெனுங் (6.079.5); 

                    சேக்கிழார்    -      பழுதில் சீர்த் (12.28.375) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இத்தலத்திற்கு அரசவனம் என்றும் பெயருண்டு.

     

  • சூரியன் வழிபட்ட ஏழு தலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை - திருக்கண்டியூர், வேதிகுடி, குடந்தைக்கீழ்கோட்டம், தெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா)

     

  • இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

     

  • மூலவர் - சுயம்பு மூர்த்தம்.

     

  • பங்குனித் திங்கள் 17, 18, 19 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.

     

  • சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2-கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன. தொலைபேசி : 04372-256910.

Related Content