நெல்லி Phyllanthus emblica, Linn.; Euphorbiaceae.
பதிதா னிலுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
. - திருஞானசம்பந்தர்.
திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி , திருவூறல் (தக்கோலம்) முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது. மிகவும் சிறிய இலைகளையும், இளம்மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மரம். காய் - இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை ஒருங்கே பெற்றுள்ளது. தமிழகமெங்கும் காடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்கின்றன. நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இஃது ஓர் கற்ப மருந்து. இலை, பூ, பட்டை, வேர், காய் விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
காய் வெப்பகற்றி, சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, குடல் வாயு அகற்றும். வேர் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியுண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும்
திருமுறைகளில் நெல்லி பற்றிய குறிப்பு :-
2.019 திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா
கொல்லி யான்குளிர்
தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர
மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை
யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு
வார்சுடர் வாணரே. 5.034.1
திரையார் புனற்கெடில வீரட்டமுந்
திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக்களே. 6.007.4
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே. 6.070.5
நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே. 6.071.10
சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
சிறியார் பெரியார் மனத்தேறல் உற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
முனிகள் முனியே அமரர்க் கமரா
சந்தித் தடமால் வரைபோல் திரைகள்
தணியா திடறுங் கடலங் கரைமேல்
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.004.3
நாளும் நன்னிலம் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவும் நெடுங்களம்
காள கண்டன் உறையும்
கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டு வேளூர்
விளத்தூர் நாட்டு விளத்தூரே. 7.012.8
கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.054.3
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் 8.003
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 8.027.4
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
1இளகும் மேனி இருளுங் கபாலமே 10.03.20.5
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 10.09.26.11
குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர்
நரகத் துறுகுழியே. 11.007.74
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து
போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார். 12.34.574
.