இறைவர் திருப்பெயர்: நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர், அப்புலிங்கம்
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி.
தல மரம்:
தீர்த்தம் : நவ தீர்த்தங்கள் 1. பிரம்ம தீர்த்தம்: தெற்கு நான்காம் திருச்சுற்றில் உள்ளது. 2. இந்திர தீர்த்தம்: மூன்றாம் திருச்சுற்றில் தென்மேற்கில் காசி விஸ்வநாதர் சந்நிதிக்குப் பக்கத்தில் உள்ளது. 3. ஜம்பு தீர்த்தம்: முன்னரே திருச்சுற்றுக்குக் கிழக்கில் பழைய ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. 4. இராம தீர்த்தம்: ஐந்தாம் திருச்சுற்றுக்கு வெளியே சந்நிதிக்கு மேற்கில் உள்ள தெப்பக்குளம். தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். 5. ஸ்ரீமத் தீர்த்தம்: கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கப் பெருமானுக்கு அருகில் ஊற்றுக்கண் போல் சுரப்பதாகும். 6. அக்னி தீர்த்தம்: மூன்றாம் பிராகாரத்தில் தென்கிழக்கில் வசந்த மண்டபத்திற்கு அருகில் உள்ள பெரிய கிணறு. 7. அகஸ்திய தீர்த்தம்: அம்மன் கோயில் முதல் திருச்சுற்றில் சந்நிதிக்கு எதிரில் பள்ளியறைக்குப் பக்கத்தில் உள்ள சிறிய கிணறு. 8. சோம தீர்த்தம் (சந்திர தீர்த்தம்): திருவரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணி 9. சூரிய தீர்த்தம்: நான்காம் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரில் உள்ள தெப்பக்குளம். இதைச் சுற்றிலும் இரண்டடுக்கு வரிசை மண்டபம் உள்ளது. இதில் ஆடிப்பூரத்தில் தெப்பத் திருவிழா நடக்கும். காவிரி
வழிபட்டோர்:அம்பிகை, நந்தி, பிரம்மா, ஜம்பு முனிவர், சிலந்தி, யானை, இராமன், கௌதம முனிவர், பராசர முனிவர், கோட்செங்கட் சோழ நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், தாயுமானவர் முதலியோர்
Sthala Puranam

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மழையார் மிடறா (2.23), 2. வானைக்காவில் வெண்மதி (3.53), 3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்) (3.109); அப்பர் - 1. கோனைக் காவிக் (5.31), 2. எத்தாயர் எத்தந்தை (6.62), 3. முன்னானைத் தோல்போர்த்த (6.63); சுந்தரர் - 1. மறைகள் ஆயின நான்கும் (7.75); பாடல்கள் : அப்பர் - ஆனைக் காவில் (4.15.2), சிலந்தியும் ஆனைக் காவிற் (4.49.4), செல்வப் புனற்கெடில (6.7.1), அன்னமாம் பொய்கைசூழ் (6.22.4), செருவளருஞ் செங்கண் (6.30.10), ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் (6.70.2), நள்ளாறும் பழையாறுங் (6.71.10), பூச்சூழ்ந்த பொழில்தழுவு (6.75.8), மையாருங் கண்ட (6.78.7), கரும்பிருந்த கட்டிதனைக் (6.79.8); சுந்தரர் - தேனைக் காவல் கொண்டு (7.47.7); மாணிக்கவாசகர் - முன்னானை மூவர்க்கும் (8.8.19); ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - குழீஇயிருந்த சுற்றம் (11.6.11), அடுத்தபொன் அம்பலமே (11.24.26); சேக்கிழார் - பொங்கு புனலார் (12.21.301) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், செம்மணி வாரி அருவி (12.28.344,345 & 346) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், செய்ய சடையார் (12.29.75) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், ஆன செயலால் (12.68.3 & 13) கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்.
Specialities
Contact Address