இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : நித்யானந்தகூபம், மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.
வழிபட்டோர்:முருகப்பெருமான், விபச்சித்து முனிவர், உரோமேச முனிவர், சுக்கிராசாரியார், யாக்ஞவல்க்கிய முனிவர், சிகண்டி, கோசிகன், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை, சம்பந்தர், அப்பர், சுந்தரர், சுவேத மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி, பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் , குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோர்
Sthala Puranam

"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)
"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி
என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி
மலைக் கிழத்தி சோறு கொண்டு வா" - என்று பாடினார்.
பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி "எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?' கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க; குருநமசிவாயர்
"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்
இடத்தாளே முற்றா இளமுலை மேலார
வடத்தாளே சோறு கொண்டு வா" என்று பாடினார்.
அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல் (1.12), 2. தேவராயும் அசுரராயும் (1.53), 3. நின்று மலர்தூவி (1.93), 4. மெய்த்தாறு சுவையும் (1.131), 5. தேவா சிறியோம் பிழையை (2.64), 6. வண்ணமா மலர்கொடு (3.34), 7. முரசதிர்ந் தெழுதரு (3.99); அப்பர் - 1. கருமணியைக் கனகத்தின் (6.68); சுந்தரர் - 1. பொன்செய்த மேனியினீர் (7.25), 2. நஞ்சி யிடையின்று நாளை (7.43), 3. மெய்யை முற்றப்பொடி (7.63); பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39); அப்பர் - மாவாய்ப் பிளந்துகந்த (6.82); சுந்தரர் - முந்தையூர் (7.31.1); பட்டினத்துப் பிள்ளையார் - இறைத்தார் (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - தூங்கானை மாடத்துச் (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அங்கு நின்று (180.181 & 182) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், கூடலை ஆற்றூர் (12.29.104,127,132.133) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், உளத்தில் (12.47.9) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்.
Specialities
மேலும் காண்க :
Contact Address