இறைவர் திருப்பெயர்: | மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | காவிரி, சிவகங்கை, பிரம்மதீர்த்தம் (சோமரோகணி), நன்றுடையான்; தீயதில்லான் குளங்கள் |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், சேக்கிழார், பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், மௌனகுரு, தாயுமானவர் முதலியோர். |
தற்போது மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது.
எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்டதாலும்,ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவினால் வாயு வன்மையால் திருக்கைலாயத்திலிருந்து மூன்று துண்டுகளுள் ஒரு சிகரம் இங்கு வந்து மலையயின்மையாலும் தலப்பெயர் என்று 'திரிசிராப்பள்ளி' பெயர் பெற்றது.
பிரம்மனால் வழிபட்டதால் பிரம்மகிரி என அழைக்கப்படுகிறது.
ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவினால் வாயு வன்மையால் திருக்கைலாயத்திலிருந்து மூன்று துண்டுகளுள் ஒரு சிகரம் இங்கு வந்து மலையானமையாலும் தலப்பெயர் ஏற்பட்டதென்பது புராண வரலாறு.
மூலன் மரபில் வந்த சாரமா முனிவர் செவ்வந்தி மலர்கொண்டு வழிபட்ட காரணத்தால் செவ்வந்திநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நன்றுடையானைத் தீயதிலானை (1.98); அப்பர் - 1. மட்டு வார்குழ லாளொடு (5.85); பாடல்கள் : சம்பந்தர் - அறப்பள்ளி (2.39.4); அப்பர் - புறம்ப யத்தெம் (4.15.4), செல்வப் புனற்கெடில (6.7.1), உலர்ந்தார்தம் (6.20.5), பொன்மணியம் (6.22.7), வெண்காட்டார் (6.51.4), தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); சுந்தரர் - தேங்கூ ருந்திருச் சிற்றம் (7.12.4); மாணிக்கவாசகர் - சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி (8.4.154 வது வரி; ஐயடிகள் காடவர்கோன் - கழிந்தது நென்னற்றுக் (11.6.17) சேக்கிழார் - சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், கற்குடி மாமலை (12.28.343 & 344) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல ஆகமம்: காமிகம்
இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
இறைவன் சுயம்பு மூர்த்தியாக மிகப்பெரிய லிங்கமாக மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளி உள்ளார். (தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம்)
ஆண்டுதோறும் பங்குனி திங்கள் 23, 24, 25 நாட்களில் தாயுமான ஈசர் திருமேனி மீது மாலையில் கதிரவனின் கதிர்கள் பட்டு பொன்வண்ணமாக பெருமான் ஒளிரும் சூரியபூஜை கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திவிழா, பங்குனி தெப்பத் திருவிழா, சித்திரை மாதம் தேர்த்திருவிழா முதலியவை இத்தலத்தில் சிறப்பான பெருந்திருவிழா ஆகும். ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகையில் சோமவார சங்காபிடேக விழாவும், கோடைவிழா ஆகிய விழாக்கள் சிறப்பான விழா ஆகும்.
தெப்ப உற்சவம் நடக்கும் பிரம்ம-தீர்த்தம் (சோமராகிணி என்ற தெப்பக்குளம் கரிகால் பெருவளத்தரால் வெட்டப்பட்டது. திருக்கோயில். திருக்குள நீளம் 611-அடி, அகலம் 330-அடி.
மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்; வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
மலையின் உச்சியில் "பிள்ளையார் " (உச்சிப் பிள்ளையார்) உள்ளார்.
தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
இம்மலைமேல் உள்ள பாறைகள் மீது மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு குடைவரைக் கோயில்கள் இங்கு உள்ளது
மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதி, மலையின் நடுவில் தாயுமானவர் சன்னதி மற்றும் அம்மன் சன்னதி, மலையின் உச்சியில் உச்சிவிநாயகர் சன்னதி என மூன்று சிகரங்களைக் கொண்டுள்ளது. மூன்று சிகரங்களை உடையதால் "முத்தன மலை" என்று அழைக்கப்படுகிறது.
தொலைவில் இருந்து பார்க்கும்போது ரிஷபம் போல் தோன்றுவதால் ரிஷபாசலம் என அழைக்கப்படுகிறது.
சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியமான அகநானூற்றில் குறுங்குடிமருதனார் என்னும் சங்கப் புலவர் "கரங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றம் பல்வேறு இசைக்கருவிகள் ஒலிக்க பல திசைகள் செம்மாந்து நிற்கும் நீண்ட பெரிய குன்று" என சிறப்பித்துப் பாடியுள்ளார்.
அம்பாள் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை மீது பக்தி கொண்ட ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் அம்மாள் பெயரில் "குந்தள" என்ற ராகத்தினை அமைத்துள்ளார்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை | |
திரிசிராமலைப் புராணமாகிய செவ்வந்திப் புராணம் | சைவ எல்லப்ப நாவலர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் பெரு நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து விரைவுப் பேருந்து மூலமாகவும், புகைவண்டி மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். புகைவண்டி சந்திப்பு நிலையம். சிவில் விமான நிலையமும் உள்ளது. தொடர்பு : 0431 - 2704621, 2710484.