இறைவர் திருப்பெயர்: உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார், கற்றளி மகாதேவர்
இறைவியார் திருப்பெயர்: மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வனமுலையாள்.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம், வடகுளம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், உமாதேவியார், வருணண், காளி, அக்னி, சப்த ரிஷிகள் (காசிபர், ஆங்கிரசர், கௌதமர், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர்).
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வரைத்தலைப் பசும் (2.98), 2. ஓங்கிமேல் உழிதரும் (3.90); அப்பர் - 1. பொருத்திய குரம்பை தன்னை (4.42); சுந்தரர் - 1. மூப்பதும் இல்லை பிறப்பதும் (7.18), 2. மின்னுமா மேகங்கள் (7.74); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் (1.76.1); அப்பர் - மாலைத் தோன்றும் (4.15.8 & 9), துருத்தியாங் (4.25.4), துருத்தியார் (4.44.10), சிறையார் (6.007.3), கல்லலகு (6.009.9), பன்மலிந்த (6.013.4), கருத்துத்திக் (6.25.11), இண்டைச் சடைமுடியா (6.37.5), நெருப்பனைய (6.54.7), நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10), விண்ணோர் பரவ (6.82.2 & 8); சுந்தரர் - ஈழ நாட்டுமா (7.12.7), துருத்தி உறைவீர் (7.95.4); மாணிக்கவாசகர் - துருத்தி தன்னில் (8.02.86) கீர்த்தித் திருவகவல், உருத்தெரியாக் காலத்தே (8.31.3) கண்டபத்து; ஐயடிகள் காடவர்கோன் - வஞ்சியன நுண்ணிடையார் (11.6.5-வது பாடல்) க்ஷேத்திரத் திருவெண்பா; பட்டினத்துப் பிள்ளையார் - கனவிலும் நவிற்றும் (11.26.24) கோயில் நான்மணிமாலை, கூறுமின் தொண்டர் (11.30.60) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - நிதியார் துருத்தி (11.33.24) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - மன்னுமாடம் மகிழ்ந்த (12.28.291,435 & 436) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், மேவு புனல் பொன்னி (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மிக்க புனல் தீர்த்தத்தின் (12.29.297,299,300 & 301) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address