logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-kadamba-tree

temple-trees-தலமர சிறப்புகள் கடம்ப மரம்

தலமர சிறப்புகள்


கடம்பு Anthocephalus Cadamba, Mig.; Rubiaceae.

கடம்பு / kaDampu / Anthocephalus Cadamba
கடம்ப மரம்

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் 
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார் 
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை 
மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே.

.                                                                                                  - திருநாவுக்கரசர்.

 

 

திருக்கடம்பந்துறை (குழித்தலை - கடம்பர்கோயில்), திருக்கடம்பூர்திருஆலவாய் (கடம்பவனம் - மதுரை) ஆகிய திருக்கோயில்கள் கடம்ப மரத்தை தலமரமாகக் கொண்டவை. இத்திருக்கோயில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் அமைந்து உள்ளன. பட்டை உடல் தேற்றும், வெப்பகற்றும், பழம் குளிர்ச்சி உண்டாக்கும்.

 

 

திருமுறைகளில் கடம்பு பற்றிய குறிப்புகள் :-

மாலன மாயன் றன்னை 
	மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் 
	பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் 
	காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் தாதை 
	இலங்குமேற் றளிய னாரே.		4.43.2

உடம்பெனு மனைய கத்துள் 
	உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி 
	உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் 
	எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை 
	கழலடி காண லாமே.	4.75.4 
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.	5.19.9

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந் 
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் 
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி 
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.	5.84.6

திரையார் புனற்கெடில வீரட்டமுந்
	திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
	ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
	மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ் 
	கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.		6.7.4

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
	திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் 
	ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது 
	இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
	கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.		6.7.10

இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
	இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
	தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
	கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
	கயிலாய நாதனையே காண லாமே.		6.70.3

கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
	கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்
	நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
	எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்
	கயிலாய நாதனையே காண லாமே.		6.70.5

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
	சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
	பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
	பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
	துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.	6.71.11

பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
	புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
	என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
	கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
	அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.	7.2.05

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.	7.12.4

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.	7.47.1

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் 
பாவகம் பலபல காட்டிய பரிசும் 
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் 
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் 
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்	8.கீர்த்தி.85

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி 
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி 
பராய்த் துறை மேவிய பரனே போற்றி 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி 
குற்றாலத்து எம் கூத்தா போற்றி 
கோகழி மேவிய கோவே போற்றி 
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி 
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி	8.போற்றித்.160

27. வழிவிளையாடல்
கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே 
விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே.	8.தி.கோவை.220
கொளு
வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல் 
மின்தங்(கு) இடையடு விளையாடி யது.

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்	11.திருமுருகாற்-9.225

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.		11.திருமுருகாற்-9.8 

நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே.	11.பட்டினத்-4.62

சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க் 
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் 
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் 
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்	12.சம்.252

 

 

< PREV <
எலுமிச்சைமரம்
Table of Content > NEXT >
கடுக்காய்மரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)