இறைவர் திருப்பெயர்: | அமிர்தகடேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சக்தி தீர்த்தம். சக்தி குளம் |
வழிபட்டோர்: | முருகப் பெருமான், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், இந்திரன் முதலியோர் |
இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக்கோவில் எனப்படுகிறது.
இத்தலத்தை வணங்கிய இந்திரன் இதனைத் தன்னுலகத்திற்குக் கொண்டு போக
நினைத்துப் பாதாளம் வரை தோண்டியும், அஃது, அப்பாலும் ஊடுருவிப் போவது கண்டு அஞ்சி
முன்போல் அமைத்துப் பூசித்து அமிர்தம் உண்டாகும்படி வரப்பெற்றனன் என்ற வரலாறு கருதி
கரக்கோயில் எனப்படும் என்பர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானமர் திங்களும் (2.68); அப்பர் - 1. தளருங் கோளரவத்தொடு (5.19), 2. ஒருவராய் இரு (5.20); பாடல்கள் : அப்பர் - சிந்தும் புனற்கெடில (6.7.10); சுந்தரர் - பொல்லாப் புறங்காட் (7.2.5), காட்டூர்க் கடலே (7.47.1); மாணிக்கவாசகர் - கடம்பூர் தன்னில் (8.2.83 வது வரி), கடம்பூர் மேவிய (8.4.160 வது வரி); சேக்கிழார் - மாடுள பதிகள் (12.29.111) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : கடம்ப மரம்
கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரம் அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பஸ்ஸில் இத் தலத்தை அடையலாம். தொடர்பு : 09345656982