Lord Shiva Temples on the bank of River Vellaru
Vellaru also known as Niva nadhi starts in the Servarayan mountains. It flows through Selam, Vizupuram, Perambalur and Caddalore district and joins the oceam near Chidambaram. It has many devaram sung temples as well on its banks.
-
- சேலம் மாவட்டம் (Salem District)
- ஏத்தாப்பூர் - சாம்பமூர்த்தீசுவரர் (EththAppUr - sAmpamUrththIsuvarar)
- பெத்த நாயக்கன் பாளையம் - அதகொண்டீசுவரர் (peththa nAyakkan pALaiyam - athakoNdIsuvarar)
- ஆத்தூர் - கயநிர்மாலீசுவரர் (AththUr - kayanirmAlIsuvarar)
- அரகலூர் - காமநாதீசுவரர் (arakalUr - kAmanAthIsuvarar)
- பெரியயேரி - தாந்தோன்றீசுவரர் (periyayEri - thAnthOnRIsuvarar)
- கங்கவல்லி - கைலாசநாதர் (kangkavalli - kailAsanAthar)
- நடுவளர் - கைலாசநாதர் (naduvaLar - kailAsanAthar)
- ஆணையம்பட்டு - ஏகாம்பரேசுவரர் (ANaiyampattu - EkAmparEsuvarar)
- தீடவூர் - ஏகாம்பரேசுவரர் (thIdavUr - EkAmparEsuvarar)
- விரகனூர் - கங்கா சுந்தரேசுவரர் (virakanUr - kangkA suntharEsuvarar)
- விழுப்புரம் மாவட்டம் (Vizhupuram District)
- குகையூர் - சுவர்ணபுரீசுவரர் (kukaiyUr - suvarNapurIsuvarar)
- மாத்தூர் - விஸ்வநாதசுவாமி (mAththUr - viSvanAthasuvAmi)
- வடக்கனந்தள் - உமா மஹேஸ்வரர் (vadakkananthaL - umA mahESvarar)
- சோமந்தார்குடி - சோமநாதேசுவரர் (sOmanthArkudi - sOmanAthEsuvarar)
- தென்கீரனூர் - அருணாஷலேஸ்வரர் (thenkIranUr - aruNAshalESvarar)
- மலைகொத்தலம் - கோமளீசுவரர் (malaikoththalam - kOmaLIsuvarar)
- கண்ணங்கூர் - இராமநாதர் (kaNNangkUr - irAmanAthar)
- பொரசாகுறிச்சி - சோமநாதர் (porasAkuRicchi - sOmanAthar)
- நாகலூர் - அர்த்தநாரீஸ்வரர் (nAkalUr - arththanArISvarar)
- வரஞ்சரம் - பசுபதீஸ்வரர் (varanjcharam - pasupathISvarar)
- மாகரூர் - கைலாசநாதர் (mAkarUr - kailAsanAthar)
- ஆசகளத்தூர் - லோகபாலீஸ்வரர் (AsakaLaththUr - lOkapAlISvarar)
- பழைய சிறுவாங்கூர் - நீலகண்டர் (pazhaiya siRuvAngkUr - nIlakaNdar)
- தண்டலை - சுயம்புநாதர் (thaNdalai - suyampunAthar)
- வீரசோழபுரம் - நாரீஸ்வரர் (vIrasOzhapuram - nArISvarar)
- முடியனூர் - அருணாசலேஸ்வரர்கூத்தாகுடி - அருணாசலேசுவரர் (mudiyanUr - aruNAsalESvararkUththAkudi - aruNAsalEsuvarar)
- இறஞ்சி - கைலாசநாதர் (iRanjchi - kailAsanAthar)
- பெரம்பலூர் மாவட்டம் (Perambalur District)
- கைகளத்தூர் - சொக்கநாதர் (kaikaLaththUr - sokkanAthar)
- கைகளத்தூர் - கைலாசநாதர் (kaikaLaththUr - kailAsanAthar)
- பசும்பாலூர் - வாலீசுவரர் (pasumpAlUr - vAlIsuvarar)
- திருவாலந்துறை - தோலீஸ்வரர் (thiruvAlan-thuRai - thOlISvarar)
- அரும்பாவூர் - கைலாசநாதர் (arumpAvUr - kailAsanAthar)
- தொண்டமாந்துறை - காசிவிசுவநாதர் (thoNdamAnthuRai - kAsivisuvanAthar)
- வெங்கலம் - தாரபுரீஸ்வரர் (vengkalam - thArapurISvarar)
- வேங்கணூர் - பழமலைநாதர் (vEngkaNUr - pazhamalainAthar)
- பெரியவடகரை - வைத்தீஸ்வரர் (periyavadakarai - vaiththISvarar)
- வெண்பாவூர் - சொர்ணபுரீசுவரர் (veNpAvUr - sorNapurIsuvarar)
- பேறையூர் - திருமக்காட்டீஸ்வரர் (pERaiyUr - thirumakkAttISvarar)
- திருமாந்துறை - ஜோதீஸ்வரர் (thirumAnthuRai - jOthISvarar)
- பென்னகோணம் - மருதாநந்தீஸ்வரர் (pennakONam - maruthAnanthISvarar)
- ஆடுதுறை - அபராதரக்ஷகர் (AduthuRai - aparAtharaxakar)
- ஓகையூர் - அமிர்தகடேஸ்வரர் (OkaiyUr - amirthakadESvarar)
- அத்தியூர் - வடமாலீஸ்வரர் (aththiyUr - vadamAlISvarar)
- வயலூர் - தோலீஸ்வரர் (vayalUr - thOlISvarar)
- நெய்க்குப்பை - பிரம்மபுரீஸ்வரர் (neykkuppai - pirammapurISvarar)
- லாடபுரம் - பஞ்சநாதேஸ்வரர் (lAdapuram - panjchanAthESvarar)
- குரும்பலூர் - பஞ்சநாத ஈஸ்வரர் (kurumpalUr - panjsanAtha ISvarar)
- அறநாரை - சொக்கநாதர் (aRanArai - sokkanAthar)
- வாலிகண்டபுரம் - வாலிகண்டேசுவரர் (vAlikaNdapuram - vAlikaNdEsuvarar)
- சித்தலை - வீரப்பசுவாமி (siththalai - vIrappasuvAmi)
- பெருமாத்தூர் - திருச்சங்குநாதர் (perumAththUr - thirucchangkunAthar)
- நன்னை - திருமேனிநாதர் (nannai - thirumEninAthar)
- நன்னை - காளத்தீஸ்வரர் (nannai - kALaththISvarar)
- ஓலைப்பாடி - கைலாசநாதர் (OlaippAdi - kailAsanAthar)
- கிளாலி - சொக்கநாதர் (kiLAli - sokkanAthar)
- கீழ்பெரம்பலூர் - கைலாசநாதர் (kIzhperampalUr - kailAsanAthar)
- வயலப்பாடி - கைலாசநாதர் (vayalappAdi - kailAsanAthar)
- சன்னாசிநல்லூர் (அங்கனூர்) - அழகேஸ்வரர் (sannAsinallUr (angkanUr) - azhakESvarar)
- குழுமூர் - ஜெயபுரீஸ்வரர் (kuzhumUr - jeyapurISvarar)
- வஞ்சினபுரம் - தோலீஸ்வரர் (vanjchinapuram - thOlISvarar)
- நக்கம்பாடி - கைலாசநாதர் (nakkampAdi - kailAsanAthar)
- கடலூர் மாவட்டம் (Kadalur District)
- லட்சுமணபுரம் - தோலீஸ்வரர் (latchumaNapuram - thOlISvarar)
- தொழுதூர் - மதுராந்தக தொழுதீஸ்வரர் (thozhuthUr - mathurAnthaka thozhuthISvarar)
- இராமநத்தம் - ஜோதீஸ்வரர் (irAmanaththam - jOthISvarar)
- அரங்கூர் - அருணாசலேஸ்வரர் (arangkUr - aruNAchalESvarar)
- கீழ்செறுவை - கைலாசநாதர் (kIzhseRuvai - kailAsanAthar)
- திட்டக்குடி - வைத்தியநாத சுவாமி (thittakkudi - vaiththiyanAtha suvAmi)
- ஆவினங்குடி நெய்வாசல் - விஸ்வநாதர் (Avinangkudi neyvAsal - viSvanAthar)
- திருவரத்துறை - தீர்த்தபுரீஸ்வரர் (thiruvaraththuRai - thIrththapurISvarar)
- கூடலூர் - சொக்கநாதர் (kUdalUr - sokkanAthar)
- இறையூர் - தாகம்தீர்த்த ஈஸ்வரர் (iRaiyUr - thAkamthIrththa ISvarar)
- பெண்ணாகடம் - சுடர்க்கொழுந்து நாதர் (peNNAkadam - sudarkkozhunthu nAthar)
- வெண்கரம்பூர் - கைலாசநாதர் (veNkarampUr - kailAsanAthar)
- புலிவலம் - சிதம்பரேசுவரர் (pulivalam - sithamparEsuvarar)
- பெருமுளை - சோமேஸ்வரர் (perumuLai - sOmESvarar)
- அதமங்கலம் - அமிர்தகடேஸ்வரர் (athamangkalam - amirthakadESvarar)
- காட்டுமையிலூர் - திருக்கரந்தொண்டீசுவரர் (kAttumaiyilUr - thirukkaranthoNdIsuvarar)
- சேப்பாக்கம் - சுந்தரேசுவரர் (sEppAkkam - suntharEsuvarar)
- வலசை - விசுவநாதர் (valasai - visuvanAthar)
- பிஞ்சனூர் - விசுவநாதர் (pinjchanUr - visuvanAthar)
- நல்லூர் - வில்வவனநாதர் (nallUr - vilvavananAthar)
- சத்தியம் - வில்வருத்தீஸ்வரர் (saththiyam - vilvaruththISvarar)
- பரவலூர் - சுந்தரேசுவரர் (paravalUr - suntharEsuvarar)
- விருத்தாசலம் - விருத்தகிரீசுவரர் (viruththAsalam - viruththakirIsuvarar)
- தெற்குவடக்குப்புத்தூர் - ஜெயகைலாசநாதர் (theRkuvadakkuppuththUr - jeyakailAsanAthar)
- இராசேந்திரப்பட்டணம் (எருக்கத்தம்புலியூர்) - திருக்குமரேசர் (irAsEnthirappattaNam (erukkaththampuliyUr) - thirukkumarEsar)
- காவனூர் - விஸ்வநாதர் (kAvanUr - viSvanAthar)
- குணமங்கலம் - பிட்சாண்டேஸ்வரர் (kuNamangkalam - pitchANdESvarar)
- ஸ்ரீ முஷ்ணம் - நீதீஸ்வரர் (sri mushNam - nIthISvarar)
- கூடலையாற்றூர் - நெறிகாட்டுநாதர் (kUdalaiyARRUr - neRikAttunAthar)
- அகர ஆலம்பாடி - வேதபுரீஸ்வரர் (akara AlampAdi - vEthapurISvarar)
- சாத்தமங்கலம் - அகத்தீஸ்வரர் (sAththamangkalam - akaththISvarar)
- ஒரத்தூர் - மார்க்கசகாயர் (oraththUr - mArkkasakAyar)
- கீரபாளையம் - சோமநாதர் (kIrapALaiyam - sOmanAthar)
- புவனகிரி - வேதபுரீஸ்வரர் (puvanakiri - vEthapurISvarar)
- புவனகிரி - கைலாசநாதர் (puvanakiri - kailAsanAthar)
Reference to Niva nadhi (Vellar) in thirumurai
எந்தை ஈசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.01
ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.02
பிணிக லந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.03
துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.04
வெருகு ரிஞ்சுவெங் காட்டி லாடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.05
உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.06
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணுஞ்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.07
செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.08
நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.09
சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே. 2.90.10
கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லை பாட்டிவை பத்தும் வல்லார்க்கே. 2.90.11
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.01
கறிமா மிளகும் மிகுவன் மரமும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே. 7.3.02
கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.04
உலவு முலகிற் றலைகற் பொழிய
உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்
பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.05
ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை
மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.06
சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.07