logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அகத்தியர் தேவாரத் திரட்டு

Agathiyar Thevara Thirattu


சிவாலய முனிவர் என்பவர் தினமும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்யும் பயிற்சியை மேற்கொண்டார். பல காலம் கடுமையாக பயிற்சி செய்தும், ஒரேநாளில் அனைத்துப் பாடல்களையும் பாராயணம் செய்து முடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் கவலை அடைந்த சிவாலய முனிவர், சிதம்பரம் நடராசப் பெருமான் முன் நின்று தனது இயலாமையைச் சொல்லி வேதனைப்பட்டார்.

மனம் இரங்கிய மகாதேவர், பொதிகைமலை சென்று அகத்திய முனிவரைக் கண்டால், உன் விருப்பம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கால் உணர்த்தினார். பொதிகை மலை சென்றடைந்த முனிவர், மூன்று ஆண்டுகள் அகத்திய முனிவரை நினைத்து கடும் தவம் புரிந்தார். உரிய காலத்தில் அவருக்குக் காட்சியளித்த அகத்தியர், மூவர் அருளிய அடங்கன் முறை தேவாரப் பாடல்கள் அனைத்தையும் போதித்தார். பின்னர், தினமும் பாராயணம் செய்வதற்கு ஏதுவாக அடங்கன்முறை தேவாரப் பதிகங்களிலிருந்து 263 பாடல்களைத் தேர்வு செய்து ஒரு நூலாக தொகுத்தருளினார். அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி எடுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்று பெயர் வந்தது.

 

வரிசை எண்கருத்துபதிகம்அருளியவர்
1.குருவருள்தோடுடைய செவியன்திருஞானசம்பந்தர்
2.குருவருள்கூற்றாயினவாறுதிருநாவுக்கரசர்
3.குருவருள்பித்தா பிறைசூடிசுந்தரர்
4.பரையின் வரலாறுமந்திரமாவது நீறுதிருஞானசம்பந்தர்
5.அஞ்செழுத்துண்மைதுஞ்சலும் துஞ்சல்திருஞானசம்பந்தர்
6.அஞ்செழுத்துண்மைகாதலாகிக் கசிந்துதிருஞானசம்பந்தர்
7.அஞ்செழுத்துண்மைசொற்றுணை வேதியன்திருநாவுக்கரசர்
8.அஞ்செழுத்துண்மைமற்றுப்பற்று எனக்கின்றிசுந்தரர்
9.கோயிற்றிறம்ஆரூர் தில்லையம்பலதிருஞானசம்பந்தர்
10.கோயிற்றிறம்தில்லைச் சிற்றம்பலமுதிருநாவுக்கரசர்
11.கோயிற்றிறம்காட்டூர்க் கடலேசுந்தரர்
12.சிவனுருவம்ஓருருவாயினைதிருஞானசம்பந்தர்
13.சிவனுருவம்வரிய மறையாதிருஞானசம்பந்தர்
14.சிவனுருவம்பாளையுடைக் கமுதிருநாவுக்கரசர்
15.சிவனுருவம்வடிவேறு திரிசூலம்திருநாவுக்கரசர்
16.சிவனுருவம்மருவார் கொன்றைசுந்தரர்
17.திருவடிகள்பொடியுடை மார்பினர்திருஞானசம்பந்தர்
18.திருவடிகள்அரவணையான் சிந்தித்திருநாவுக்கரசர்
19.திருவடிகள்அந்தணாளன் உன்சுந்தரர்
20.அருச்சனைபந்துசேர் விரலாள்திருஞானசம்பந்தர்
21.அருச்சனைவேற்றாகி விண்ணாகிதிருநாவுக்கரசர்
23.அருச்சனைகொன்று செய்தசுந்தரர்
23.அடிமைவேயுறு தோளிதிருஞானசம்பந்தர்
24.அடிமைகுலம்பலம்பாவருதிருநாவுக்கரசர்
25.அடிமைதில்லைவாழந்தணர்சுந்தரர்

Related Content

திருப்பதிகக் கோவை

திருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்

உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த "திருப்பதிகக் கோவை"

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng