logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருத்தெளிச்சேரி - (கோயில்பத்து)

Om symbol

இறைவர் திருப்பெயர்: பார்வதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சத்தியம்மை, பார்வதியம்மை

தல மரம்:

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி ,பார்வதி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,பிரமன், அம்பரீஷன், சூரியன் முதலியோர்

Loading map...

Sthala Puranam

  • தெளிச்சேரி காரைக்கால் நகரின் ஒரு பகுதியாகும்; தற்போது கோயில்பத்து என வழங்கப்படுகிறது.
  • இவ்வூருக்கு அருகில் உள்ள புத்தர்கள் வசிக்கப் பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோடு வருகையில் புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்  :    சம்பந்தர்  - 1. பூவலர்ந்தன கொண்டு (2.3), பாடல்கள்   L  சேக்கிழார்  -    சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து (12.28.904) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • பங்குனி மாதத்தில் 13ஆம் நாள் முதல் சூரிய பூஜைச் சிறப்பாக நடைபெறுகிறது.
  • காரைக்கால் அம்மையார் அவதரித்தத் திருத்தலம். இத்திருக்கோயிலில் காரைக்கால் அம்மையாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அவதாரத் தலம் : காரைக்கால். வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : திருவாலங்காடு குருபூசை நாள் : பங்குனி - சுவாதி.
  • திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் தலம்.
முந்தைய தலம்<வேட்டக்குடி

 அடுத்த தலம்>திருத்தருமபுரம்

 

Contact Address

அமைவிடம் அ/மி. பார்வதீசுவரர் திருக்கோயில், கோயில்பத்து, காரைக்கால், புதுச்சேரி - 609 602. தொலைபேசி : 04368 - 228124, 223054. மாநிலம் : தமிழ் நாடு காரைக்கால் - பொறையாறு பேருந்துப் பாதையில் உள்ளது இத்தலம். காரைக்காலிருந்து, பேருந்து வசதி உள்ளது. கோயில்பத்து என அழைக்கபடுகின்றது.
Loading map...

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர்

திருஅழுந்தூர் - (தேரழுந்தூர்)