logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கோகர்ணம் (கோகரணம்) கோயில் ஸ்தல வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.

தல மரம்:

தீர்த்தம் : கோகர்ண க்ஷேத்திரத்தில் பல தீர்த்தங்கள் உள்ளன. தீர்த்தங்களுள் மிக மிக முக்கியமானவவை கோடிதீர்த்தமும் கடலும் (சாகர தீர்த்தம்) ஆகும். மிக முக்கியமான 33 தீர்த்தங்கள்: 1. கோகர்ண தீர்த்தம், 2. குஹதீர்தம், 3. தாம்ரகௌரி நதி, 4. காயத்ரி தீர்த்தம், 5. சந்திர தீர்த்தம், 6. பிரமகுண்ட தீர்த்தம், 7. விஶ்வாமித்ர தீர்த்தம், 8. சங்கம தீர்த்தம், 9. சக்ரதீர்தம், 10. கபில தீர்த்தம், 11. அரண்யதீர்தம், 12. அக்னி தீர்த்தம், 13. விநாயக தீர்த்தம், 14. கௌவேர தீர்த்தம், 15. நாத தீர்த்தம், 16. சம்வர்தக தீர்த்தம், 17. ஆதித்திய தீர்த்தம், 18. மார்கண்டேய தீர்த்தம், 19. காமாகநாசினி நதி, 20. துர்கா குண்டம், 21. நாக தீர்த்தம், 22. கோடிதீர்த்தம் , 23. உன்மஞ்ஜன தீர்த்தம், 24. வைதரணீ நதி, 25. அசோக பஞ்சக தீர்த்தம், 26. சால்மலீகங்கா நதி, 27. பீம குண்டம், 28. அகஸ்த்ய தீர்த்தம், 29. வஸிஷ்ட தீர்த்தம், 30. கருட தீர்த்தம், 31. மாலினீ நதி, 32. சிம்சுமார தீர்த்தம், 33. ஏகபிந்து தீர்த்தம். முக்கியமான பிற தீர்த்தங்கள்: தாம்ர குண்டம், கமண்டல தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், பிருகு தீர்த்தம், ருது தீர்த்தம், கந்தர்வ தீர்த்தம், தும்புரு தீர்த்தம், வால்மீகி தீர்த்தம், மேதாதிதி தீர்த்தம், ஸித்ததீர்தம், ஶாத்ருதிதீர்தம், க்ஷமாதீர்தம், ஸ்ம்ருதிதீர்தம், தமதீர்தம், அஹிம்ஸாதீர்தம், லக்ஷ்மீதீர்தம் , கீர்திதீர்தம் , மானதீர்தம் , திஶாதீர்தம் , கலிதீர்தம் , த்வாபரதீர்தம் , க்ருததீர்த ,த்ரேதாதீர்தம், காலவதீர்தம் , ஸத்யதீர்தம் , ஆனந்ததீர்தம் , கஹோளதீர்தம் , மேதாதீர்தம், லஜ்ஜாதீர்தம், மோஹனாதீர்தம், கர்ஷதீர்தம், கனகதீர்தம், கோரதீர்த, அலக்ஷ்மீதீர்தம், ஈர்ஷ்யாதீர்தம், அக்ஷமாதீர்தம், ரோமஶதீர்தம், க்ரோததீர்தம், சண்டீதீர்தம், அஸூயாதீர்தம், அதர்மதீர்தம், பராஶரதீர்தம், அஸூயாதீர்தம், ஹர்யஶ்வதீர்தம், நஹுஷதீர்தம், அம்பரீஷதீர்தம், நளதீர்தம், குபேரதீர்தம், நாபாகதீர்தம், இக்ஷ்வாகுதீர்தம், கேதகீதீர்தம், பாணதீர்தம், ஹிடிம்பாதீர்தம், இந்த்ரதீர்தம், பாபநாஶினீதீர்தம், ஶுகதீர்தம், ஸாவித்ரீதீர்தம், ப்ரஹ்மதீர்தம், வருணதீர்தம், பாண்ட்யதீர்தம், அனந்ததீர்த, ஸரஸ்வதீதீர்தம், வ்யாஸதீர்த, ஔர்வதீர்தம், ஜடாதீர்தம், பல்லாளதீர்தம், விஶ்வேதேவதீர்தம், கேஸரீதீர்தம், ஸுரஸாதீர்தம், கபோததீர்தம், கஶ்யபதீர்தம், த்ருணாக்னிதீர்தம், குண்டிகாதீர்த, ஸுருசிதீர்தம், புருதீர்தம், விஶ்வாவஸுதீர்தம், சித்ரஸேனதீர்தம், மருத்தீர்தம், ஸாத்யதீர்தம், வித்யாதரதீர்தம், கிம்புருஷதீர்தம், குஹ்யகதீர்தம், அப்ஸரதீர்தம், ஸித்ததீர்தம், ஜமதக்னிதீர்தம், பௌலஸ்த்யதீர்தம், அத்ரிதீர்தம், நவக்ரஹதீர்தம், பௌமதீர்தம், ஆங்கிரஸதீர்தம், பாரத்வாஜதீர்தம், நாரததீர்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராசன்,வருணன், பரசுராமர், சுரபி முதலியோர்.

Loading map...

Sthala Puranam

  • Ganapati installing Atmalinga at Gokarna கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.
  • ஒரு சமயம் இராவணன் இலங்கையில் பிரதிஷ்டை செய்விப்பதற்காகக் கயிலையிலிருந்து ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான்; இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்க வாராது என இறைவன் அருளியிருந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர் நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் ஒரு சிறுவன் போல இராவணன் முன் தோன்றி நின்றார். அப்போது மாலை வேளையானதால் இராவணன் சந்தியாவந்தனம் செய்ய எண்ணி, அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துத் தான் வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.  
  • பஞ்ச கோகர்ணங்கள்: இராவணன் ஆத்மலிங்கத்தை பூமியிலிருந்து பெயர்த்து எடுக்க முயற்சித்தபோது, ஆத்மலிங்கத்தைச் சூழ்ந்திருந்த வஸ்திரம் முதலான விழுந்த இடங்கள் பஞ்ச கோகர்ணங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை:  ம்ருடேஸ்வர், குணவந்தேஸ்வர், தாரேஸ்வர், மஹாபலேஸ்வர், செஜ்ஜேஸ்வர்.
  • ருத்ரர் உலகத்தை மேலான சத்வ குணத்தால் ஆனதாகப் படைக்க விரும்பினார். அதற்கான தவத்தில் இருந்தார். அப்போது பிரம்மா உலகத்தை சத்வ ரஜோ தமோ குணங்களின் கலவையாகப் படைத்துவிட்டார். சினத்துடன் பாதாளத்திலிருந்து வந்த ருத்ரரின் உக்ரத்தை உலகம் தாங்காது என உணர்ந்த பூமாதேவி அவரைப் பணிந்து மெதுவாகத் தன் காதின் வழியே வெளிவரும்படிக் கேட்டுக்கொண்டார். அவரை ஸ்தோத்திரம் செய்து பிரம்மாவின் பிழையைப் பொறுத்து, படைக்கப்பட்ட உலகத்தைக் காக்க வேண்டினார். ருத்ரர் பூமாதேவியின் காது வழியே வெளிவந்த இடம் கோகரணம் என்பர். அதனால் இதற்கு ருத்ரபூமி என்ற பெயரும் உண்டு.
  • Varuna worshipping at Gokarna for waterஒரு காலத்தில் பல அசுரர்கள் (காலகேயர்கள்) கடலில் புகுந்து கொண்டனர். அவர்கள் பகலில் தண்ணீருக்குள் தங்கியிருந்தனர், ஆனால் இரவில் வெளியே வந்து மக்களைத் தொந்தரவு செய்தனர். தேவர்கள் அகஸ்திய ரிஷியிடம் பிரார்த்தனை செய்து, அசுரர்கள் வெளியேற அனைத்து தண்ணீரையும் குடிக்கச் சொன்னார்கள். ரிஷி அப்படியே செய்தார், கடல் அடிப்பகுதி வறண்டு போனது. தேவர்கள் அசுரர்களை வென்றனர். இப்போது கடலின் அதிபதி வருணன் கவலைப்பட்டு, அகஸ்திய ரிஷியிடம் தனது தண்ணீரை மீண்டும் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தார். அகஸ்தியர் ஏற்கனவே அனைத்தையும் ஜீரணித்துவிட்டதாகவும், அதை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் கூறினார். பின்னர் வருணன் கோகர்ணத்திற்கு வந்து, ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார். சங்கரர் தான் வேண்டும் வரம் யாது என்று கேட்டபோது வருணன் தனது கடல் தண்ணீரைக் கேட்டார். சிவபெருமான், அயோத்தி மன்னன் சாகரனின் சந்ததியினர் கங்கையை பூமிக்கு கொண்டு வரும்போது, கடலும் அதன் தண்ணீரைத் திரும்பப் பெறும் என்று அருள் புரிந்தார். இன்றும் மகாபலேஷ்வர் கோயிலுக்கு வெளியே சாகரேஷ்வர் சிவலிங்கத்தைக் காணலாம்.

 

  • Parashurama worshipping at Gokarnaபரசுராமர் விஷ்ணுவின் அவதாரம். அவர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தார். தனது தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்ததால், அவருக்கு பரசு (கோடரி) அருளப்பட்டது. எனவே அவருக்குப் "பரசு" ராமர் என்ற பட்டம் கிடைத்தது. கார்த்தவீர்யார்ஜுனன் என்ற சக்திவாய்ந்த மன்னன் இருந்தான். ஜமதக்னி முனிவரின் ஆசிர்வாதத்தில் இருந்த காமதேனுவை அவர் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல விரும்பினான். முனிவர் தனது கொடூரமான செயலை அனுமதிக்காததால், கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியைக் கொன்றான். இதைப் பற்றி பரசுராமர் அறிந்ததும், ஆளும் வர்க்கம் அதிகாரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். எனவே அவர் கார்த்தவீர்யார்ஜுனனுடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். 21 தலைமுறைகளாக தவறாக நடந்து கொண்ட ஆட்சியாளர்களை மேலும் சுத்தப்படுத்தினார். பின்னர், சிவபெருமானை வணங்குவதன் மூலம் கோபம் தீரத் தவம் செய்தார். தவத்திலேயே கவனம் செலுத்த விரும்பினார். எனவே, சிவபெருமான் உத்தரவின் பேரில், கோடரி இருந்த அளவுக்குப் புதிய நிலத்தை மீட்டெடுக்க தனது கோடரியை கடலில் வீசினார். இவ்வாறு மீட்கப்பட்ட நிலம் பரசுராம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலம் வடக்கே கோகர்ணம் முதல் தெற்கே சுசீந்திரம் வரை நீண்டுள்ளது. இந்த பரசுராம க்ஷேத்திரத்தில் 108 இடங்களில் பரசுராமர் சிவனை வழிபட்டார். கோகரணமே இவற்றின் முதன்மையான தலம் ஆகும். (ஜமதக்னீஸ்வரர் சிவலிங்கம் திருக்கோயிலுக்குள் உள்ளது.)
  • கோகர்ண புராணம் அல்லது கோகர்ணகண்டம் 118 அத்யாயங்களில் கோகர்ணத்தின் மகிமையைச் சொல்கிறது. இது ஸ்கந்த புராண சனத்குமார சம்ஹிதையைச் சேர்ந்தது. 
  • இத்தலச் சிறப்பை பிரமோத்திர காண்டம், உபதேசகாண்டம் முதலிய நூல்கள் புகழ்கின்றன. 
  • இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
  • காளிதாசர் ரகுவம்சத்தில் கோகர்ணேஸ்வரரைக் குறிப்பிட்டுள்ளார்.

கோகர்ண ஸ்தல ஸ்துதி சுலோகம்

गोकर्णं सा महाकाशी विश्वनाथो महाबलः । कोटितीर्थं तत्र गङ्गा समुद्रोऽयं विशिष्यते ॥ १॥ गुब्जामात्राधिकं काश्या गोकर्णमभिधीयते ॥ गोकर्णसदृशं क्षेत्रं नास्ति नास्ति जगत्रये ॥ २॥ सर्वेषां शिवलिङ्गानां सार्वभौमो महाबलः ॥ महावलसमं लिङ्गं न भूतं न भविष्यति ॥ ३ ॥ गङ्गादिसरितो यस्मात् सागरं प्रविशन्ति वै ॥ तस्मात् समुद्रो ह्यधिको गोकर्णे तद्विशिष्यते ॥ ४ ॥ आद्यं पशुपतेः स्थानं दर्शनादेव मुक्तिदं ।॥ यत्र पापोऽपि मनुजः प्राप्नोत्यभयदं पदम् ॥ पश्चिमाम्बुधितीरस्थम् गोकर्णं क्षेत्रमुत्तमम् ॥ महाबलसमं लिङ्गं नास्ति ब्रह्माण्डगोलके ॥ ६ ॥ पूर्वे मिडेश्वरं लिङ्ग दक्षिणे ह्यघनाशिनी ॥ उत्तरे शाल्मलीगङ्गा पश्चिमे लवणाम्बुधिः ॥ ७ ॥

கோகர்ணம் ஸா மஹா காசீ, விசுவ நாதோ மஹாபல:            
 கோடி தீர்த்தஸ் தத்ர கங்கா ஸமுத்ரோயம் விசிஷ்யதே           
 குஞ்சா மாத்ரா திகம் காசியா கோகர்ண மபிதீயதே           
 கோகர்ண ஸத்ருசம் க்ஷேத்ரம் நாஸ்தி ஜகத்ரயே.            
ஸர்வேஷாம் சிவலிங்காநம் ஸார்வபௌமோ மஹாபல:            
 மஹாபல ஸமலிங்கம் நபூதோ நபவிஷ்யதி           
 கங்காதி ஸரிதோ யஸ்மாத் ஸாகரம் ப்ரவிசந்தி ஹி            
 தஸ்மாத் ஸமுத்ரேஹ்யதிகோ கோகர்ண தத் விசிஷ்யதே           
ஆத்யம் பசுபதே ஸ்தாநம் தர்சநாத்ஏவ முக்திதம்            
 யத்ர பாபோபி மநுஜ: ப்ராப்நோத்ய பயதம் பதம்.           
பச்சிமாம்புதி தீரஸ்தம் கோகர்ணக்ஷேத்ர முத்தமம்            
 மஹாபல ஸமம் லிங்கம் நாஸ்தி ப்ரஹ மாண்ட கோளகே            
பூர்வே ஸித்தேச்வரோ நாம, தக்ஷிணத் யக நாசிநீ ,           
  உத்தரே சால்மலீ கங்கா, பச்சிமே லவணாம் விதி:

பொருள்:-

(1) கோகர்ணமே மஹாகாசி, மஹாபலரே விசுவநாதர், கோடி தீர்த்தமே கங்கை; சமுத்திரம் கூட இருப்பததால் பின்னும் விசேஷம். (2) காசியிலும் ஒரு பங்கு அதிகம் கோகர்ணம்,  அதற்கு இணையான தலம் மூவுலகிலும் இல்லை. (3) எல்லாச் சிவலிங்கங்களுக்கும் மஹாபலரே சக்ரவர்த்தி: அவருக்கு இணை இன்றும் இல்லை, என்றும் இராது. (4) கங்கை முதலான சகல தீர்த்தங்களும் இங்கு கடலிற் சேர்கின்றபடியால் கோகர்ணத்தில் உள்ள சமுத்திரதீர்த்தம் பெருமை வாய்ந்தது. (5) மஹாபலேசுவரர் ஆதிமூர்த்தி: தரிசித்த மாத்திரத்தில் அவர் முத்தியளிப்பவர்; பாபியான மனிதனுக்கும் அவர் அபயம் அளிப்பார். (6) மேற்குக்கரையில் உத்தம கோகர்ணம் அமைந்துள்ளது; பிரம்மாண்ட கோளத்தில் மஹாபல லிங்கத்துக்கு இணையில்லை. (7) கிழக்கில் சித்தேசுரர், தெற்கே அகநாசினி, வடக்கில் சால்மலி கங்கை; மேற்கே உப்புக்கடல்.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. என்றுமரி யானயல வர்க் (3.79);                      அப்பர்       -     1. சந்திரனுந் தண்புனலுஞ் (6.49); பாடல்கள்      :    அப்பர்       -    கால்களாற் பயனென் (4.9.9),   செழுநீர்ப் புனற்கெடில (6.7.5),                                            குற்றாலங் கோகரணம் (6.43.2),                                            தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1);             கபிலதேவ நாயனார்  -       பார்கால்வான் நீர்தீப் (11.23.79 & 80) சிவபெருமான் திருவந்தாதி;                    சேக்கிழார்     -       கூற்றுதைத்தார் மகிழ்ந்த (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            அம் மருங்கு கடந்து (12.21.350) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

श्री गोकर्ण क्षेत्रपुराणम्

Specialities

  • கைலாயத்தில் சிவபெருமான் மலையாகவும் பார்வதி தேவி நீர்நிலையாகவும் (மானஸ சரோவரம்) கட்சி தருவதுபோல் இங்கும் இறைவன் மலையாகவும் (சதசிருங்க பர்வதம்), இறைவி நதியாகவும் (தாம்ரகௌரி நதி) காட்சி தருகின்றனர். 
  • இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணலாம்.
  • இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடலாம்.
  • கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. கடற்கரை ஓங்கார வடிவில் அமைந்துள்ளது.
  • தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். 
  • ஸ்தலபுராணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கோகர்ண யாத்திரைக் கிரமம்:
    முதலில் கோடிதீர்த்தத்திலும் கடலிலும் நீராட வேண்டும். விக்னேஸ்வரரை வழிபட்ட பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும். ஆதிகோகர்ணத்தில் நீராடிய பிறகு அதிகோகர்ணேஸ்வரரை வழிபட வேண்டும். சாஸ்திரேஸ்வரரை வழிபட்ட பிறகு, குஹதீர்த்தத்தில் நீராட வேண்டும். குஹேஸ்வரரை வழிபட்ட பிறகு, தாமிரகௌரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீராடிய பிறகு, தாமிரகௌரியை நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி வழிபட வேண்டும். கௌதமேஸ்வரரை வழிபட்ட பிறகு, பிரம்மனை மனதார வழிபட வேண்டும். இந்திரேஸ்வரரை வழிபட்ட பிறகு, குபேரேஸ்வரரை வழிபட வேண்டும். புனிதமான மார்க்கண்டேயஹதத்தில் நீராடிய பிறகு, மார்க்கண்டேயேஸ்வரருக்கு வணக்கங்களைச் செலுத்த வேண்டும். பின்னர் புனித சூரிய தீர்த்தத்தில் நீராடி சூரியேஸ்வரரை வழிபடவேண்டும். அனைத்து பாவங்களையும் அழிக்கும் நதியில் (பாபவிநாசினி) நீராடிய பிறகு தர்மேஸ்வரரை வழிபட வேண்டும். புனித சம்வர்த தீர்த்தத்தில் நன்றாக நீராடிய பிறகு, சம்வர்தேஸ்வரரை வழிபட வேண்டும். புனித தத்தாத்ரேய தீர்த்தத்தில் நீராடிய பிறகு, அங்குள்ள சம்புவை வழிபட வேண்டும். பின்னர் மகாகாளியை வணங்கி, வ்யங்கடேசரை வழிபட வேண்டும். விஸ்வகர்மேஸ்வரரை வழிபட்ட பிறகு, ஏலபுத்திரரையும் வழிபட வேண்டும். பின்னர் வியாசதீர்த்தத்திலும் சுகதீர்த்தத்திலும் நீராடி, உன்மஜ்ஜினியில் நீராடி செஞ்சடைப் பெருமானை வழிபட வேண்டும். அதன் பிறகு, காமேஸ்வரரை வணங்கி ஹரிஹரரை வணங்க வேண்டும். மூன்று மண்டபங்களை வணங்கி விநாயகரை வணங்க வேண்டும். அகஸ்திய தீர்த்தத்தில் நீராடிய பிறகு வரதேஸ்வரரை வணங்க வேண்டும். கிருஷ்ணரையும் நரசிம்மரையும் வணங்க வேண்டும். பின்னர் ஹனுமதீஷ்வரரையும் க்ஷேத்ரபாலரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு துர்காகுண்டத்தில் நீராடி நந்தினியை வணங்க வேண்டும். புனித நாகதீர்த்தத்தில் நீராடிய பிறகு, நாகேசரை வணங்க வேண்டும். பின்னர் ராவணேஸ்வரரையும் மற்ற ஈஸ்வரர்களையும் வணங்கி வேதேஸ்வரரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஒருவர் புனித காயத்ரிதீர்த்தத்திலும் பின்னர் சாவித்ரிதீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்னர் சரஸ்வதிதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும். பின்னர், பிரம்மதீர்த்தத்தில் நீராடி பிரம்மேஸ்வரரை வழிபட வேண்டும். பின்னர் விஸ்வாமித்ரதீர்த்தத்தில் நீராடி விஸ்வாமித்ரேஸ்வரரை வழிபட வேண்டும். பின்னர் மணிபத்ரரை வணங்கி பிரம்மாவைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். பித்ருஸ்தாலியில் மூழ்கிய பிறகு, பித்ருஸ்தாலீஸ்வரரை வழிபட வேண்டும். விதுதபாபஸ்தலியில் நீராடிய பிறகு, அமிர்தேஸ்வரரை வழிபட வேண்டும். பின்னர் மகாபலேஸ்வரரை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்யவேண்டும். 
  • இது தவிர தக்ஷிண யாத்திரைக்கிரமம் மற்றும் உத்தர யாத்திரைக்கிரமம் ஆகியவையும் க்ஷேத்திர புராணத்தில் சொல்லப்பட்டுள்ளன.
Gokarna Temples and Tirthas Map
  • மூலத்தானம் சிறிய அளவுடையது; நடுவிலுள்ள சதுரமேடையில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது; இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. தொட்டுப்பார்த்து உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
  • "துவிபுஜ" விநாயகர் - இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர்.
  • அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது - பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது.
  • கோயில் மதிலுக்கு வெளியே வடபால் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.
  • கோகர்ணத்தில் பல தேவர், முனிவர்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அவற்றுள் 33 மிகவும் முக்கியமானவையாகத் தலபுராணம் குறிப்பிடுகின்றது. அவையாவன:
    1. பிரம்மேஸ்வரம் 2. காமேஷம் 3. சம்வர்தம் 4. கலங்கலம் 5. சனத்குமாரம்  6. கௌமாரம் 7. கௌவேரியம்  8. சூரியநாயகம் 9. மார்க்கண்டேயம் 10. தர்மசிகம் 11. சாஸ்திரம் 12. வேதேஸ்வரர் 13. ரசலிங்கம்  14. நாகலிங்கம்  15. சாவித்ரம் 16. வருணம்  17. கௌசிகம் 18. காமதஹனம்  19. நாதேஸ்வரம் 20. பாரத்வாஜம் 21. பௌமம்  22. சௌமித்ரம்  23. கணேஸ்வரம்  24. அகஸ்தியம்  25. நாரதம்  26. சௌபர்ணம்  27. விஹாயஸம்  28. மாஹேந்திரம்  29. மதுபர்கம் 30. நாராயணம்  31. ஸ்தானேஸ்வரர் 32. பஞ்சபூதம் 33. மகாபலேஸ்வரர்.
  • இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. 
  • இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.
  • மரணமடைந்தவர்களுக்காக தினமும் பிசாச மோக்ஷம் என்ற வழிபாடு நடைபெறுகிறது.
  • பௌர்ணமியன்று தாம்ர கௌரி நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.
  • கார்த்திகை பௌர்ணமியில் திரிபுர தஹன விழா நடைபெறுகிறது.
  • ஆத்மலிங்க பூஜை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அப்போது பீடத்தை அகற்றிப் பூஜை செய்து பக்தர்கள் தரிசனத்திற்கும் அனுமதி கொடுக்கப்படுகிறது..
  • மஹா சிவராத்திரியை ஒட்டி 9 நாள் பிரம்மோத்சவம்.
  • தீபாவளி மாலையில் மகாபலேஷ்வரின் திருமண வைபவப் பல்லக்கு கங்கவல்லிக்கு வருகிறது.  
  • 18 கல்வெட்டுக்கள் உள்ளன.
  • கோடிதீர்த்தத்திற்கு அருகில் உள்ள காமேஸ்வர மடத்தில் கடம்ப சக்ரவர்த்தியின் கல்வெட்டு உள்ளது. அரசனின் இரண்டு மகன்கள் காமேஸ்வர மடத்தைக் கட்டி அதில் தருமங்கள் நடக்க நிவந்தம் அளித்துள்ளார்கள். இக்கல்வெட்டு அருகிலுள்ள ஹரியர்த்த மூர்த்தியையும் குறிப்பிடுகிறது.
  • கடம்ப மன்னன் காவதேவராச காலத்தில் கோகர்ணம் தாரேஸ்வர க்ஷேத்திரத்தில் மடம் கட்டி அரசனின் குருவான புருஷோத்தமபுரி ஸ்ரீபாதவிடம் கொடுக்கப்பட்டது.
  • விஜயநகர புக்கராயர் கல்வெட்டு ஒன்று உள்ளது.
  • ஹரிஹர ராயனின் மகன் இங்கு ஒரு அறச்சாலை அமைத்து நிவந்தம் அளித்ததை இன்னொரு கல்வெட்டு தெரிவிக்கிறது. 
  • ஹரிஹர மஹாராயன் ஆட்சியில் மஹாப்ரதான மல்லப்ப உடையார் இப்பகுதியை நிர்வகித்த பொழுது செட்டியார்கள் சிலர் மஹாபலேஸ்வரர் முன்னிலையில் அன்னச்சத்திரம் பரிபாலிக்கக் கொடுத்த கொடை சக வருடம் 1315 கல்வெட்டில் பதிவாகியுள்ளது.
  • thirugokarnam templeவிஜயநகர மன்னர் விரப்ரதாப ஹரிஹர மஹாராயன் ஆட்சியில் சக ஆண்டு 1326ல் சந்திர கிரகணத்தன்று ஹெப்பாருவன தட்டகார என்ற கிராமத்தை கோகர்ணத்தின் ஆதித்யேஸ்வர சுவாமி திருக்கோயிலின் சர்வக்ஞ சரஸ்வதிக்கு கோவாவைச் சேர்ந்த கர்நாட மஹாப்ரதான இச்சப்ப வாதேய என்பவர் அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.
  • சக வருடம் 1339 கல்வெட்டு திருக்கோயிலின் முன் மண்டபத்தில் உள்ளது. அதில் மஹாப்ரதான பங்கராச உடையாரின் மகன் ஹொன்னவரத்திலிருந்து இப்பகுதியை ஆண்டபோது இங்குள்ள தருமச்சத்திரத்தின் பராமரிப்புக்கும், துறவியர்களுக்கு உணவளிப்பதற்கும் நிலம் அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விஜயநகர புக்கராயன் ஆட்சிக் கல்வெட்டு (14ம் நூற்றாண்டு) புக்கராயன் கட்டளைப்படி பசவேய தநாயக கோகர்ணத்தில் வேதேஸ்வர சுவாமிக்கு நிவேதனத்திற்காகவும் திருவிளக்கு எரிக்கவும் சர்வமான்யமாக பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய ஸ்ரீ வேதசாகர ஸ்ரீபாத என்பவருக்கு ஹுப்பனகெரே கிராமத்து நிலங்கள் அளிக்கப்பட்டதைக் கூறுகிறது.
  • 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று குறிப்பது: மஹாபலேஸ்வரர் மற்றும் அம்ருதேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள அந்தணர்கள் பாசன்னோதேய மடத்தில் உணவருந்த மாதரச உடையார் என்பவரால் நான்கு கிராமங்களில் நிலம் வழங்கப்பட்டது.
  • சக வருடம் 1475 விஜயநகர மன்னர் சதாசிவராயர் ஆட்சிக்காலத்தில் வைஸ்ரவணேஸ்வரர் திருக்கோயிலுக்கு பட்டக்கல கணபன ஜோயிஷா மற்றும் சிலர் அறச்செயல்களுக்காக நிலங்கள் அளித்ததைக் குறிக்கிறது.
  • 15ம் நூற்றாண்டு (தாம்ரகௌரி திருக்கோயில் சுவரில் உள்ள) கல்வெட்டு மஹாப்ரதான மஞ்சு நாயக மாபல லிங்க பட்டருக்கு தாம்ரகௌரி அன்னையின் திருக்கோயிலில் உள்ள சத்திரத்தைப் பரிபாலிக்க ஹொச ஊரு அளிக்கப்பட்டதையும் இவ்வறச் செயலை மேற்பார்வையிட ஹம்பி தேவராய மடத்தைச் சேர்ந்த ராகவேந்திர ஸ்ரீபாத என்பவர் நியமிக்கப்பட்டதையும் கூறுகிறது.
  • 15ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று வீர புக்கராயன் மனைவி விட்டலதேவி ராஜகுரு ஈஸ்வர பட்டர் முன்னிலையில் கோகர்ணத்தில் அன்னச்சத்திரத்திற்கு நன்கொடை அளித்தமை கூறுகிறது.
  • 15ம் நூற்றாண்டுக் கல்வெட்டு மற்றொன்று வீர புக்கராயன் மனைவி ஹொன்னாதேவி மஹாபலேஸ்வரர் முன்னிலையில் கோகர்ணத்தில் அன்னச்சத்திரத்திற்கு நன்கொடை அளித்தமை கூறுகிறது.
  • விஜயநகர அரசர் சதாசிவ ராயரின் மகன் சாளுவ கிருஷ்ண தேவராய உடையார் கோவா பிராந்தியத்தில் உள்ள அஷ்டகிராமத்தில் உள்ள நிலங்களை நிவந்தமாக அளித்ததைத் தெரிவிக்கிறது.
  • சக ஆண்டு 1608ல் சோமசேகர நாயக ஆட்சியில் பலதரப்பட்ட வருவாய்களிலிருந்து கோகர்ணம் மஹாபலேஸ்வரருக்கு பல்வேறு ஆராதனைகள் செய்ய அளிக்கப்பட்ட நிவந்தங்கள்.
  • அம்ருதேஸ்வரர் திருக்கோயில் முகப்பில் உள்ள சக வருடம் 1771 கல்வெட்டு அம்ருதேஸ்வரர் திருக்கோயில் ஹரதியைச் சேர்ந்த லக்ஷ்மய்யா என்பவரால் திருப்பணி செய்யப்பட்டதைக் கூறுகிறது.
  • மஹாபலேஸ்வரர் திருக்கோயிலின் ரங்கமண்டபத்தின் மேற்கு நுழைவாயிலின் மேலே உள்ள நிலையில் உள்ள கல்வெட்டு 18ம் நூற்றாண்டில் மலசுநாட்டின் விஸ்வேஸ்வரய்யா மேலாண்மையில் ரங்கமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறது.
  • இதுபோன்று இன்னும் பல கல்வெட்டுக்கள் அன்னச்சத்திர அறத்திற்காக கொடை அளித்ததைக் குறிப்பிடுகின்றன.
  • இங்கு விடை இலச்சினையுடன் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதுகேஸ்வரரின் பக்தனான கடம்ப மன்னன் வீர காவதேவராசன் (காமதேவ) 1256ம் ஆண்டு ராக்ஷஸ வருடம் மாசி மாதம் சந்த்ர கிரஹணத்தன்று விஸ்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்த ஆஹிதாக்னி மஹேஸ்வர பட்டர் முதலானோர்க்கு மஹாபலேஸ்வரர் முன்னிலையில் சர்வமான்யமாக நிலம் கொடுத்தது கன்னடப் பட்டயத்தில் பதிவாகியுள்ளது.

॥श्रीः॥
नमस्तुंग शिरस्तुंग चन्द्रचामर चारवे ।
त्रैलोक्यनगरारम्भ मूलस्तम्भाय शम्भवे ॥
स्वस्ति श्रीमज्जयाभ्युदय नृपशालीवाहनशकवर्ष १३१३ प्रवर्तमान प्रजापति नाम संवत्सरे उत्तरायणे वसन्त ऋतौ वैशाखमासे कृष्णेपक्षे अमायां सौम्य वासरे सूर्योपरागे भार्गव श्वामित्रां‍ऽगिरस :वासिष्ठेभ्यो महद्भ्यो ब्राह्मणेभ्यो श्रीमन्माधवाचार्यैर्दत्त ताम्रलेखन पत्रवर्णन पत्रिका इयम् ॥

इतः पूर्वं श्री मयूरवर्माख्यो राजा यात्रालुः श्री मद्गोकर्ण क्षेत्रमगात् । तत्र तावदाभीराभिः व्याप्तं महाबलं दृष्ट्वा अब्राह्मण्यं मन्वानो व्याकुल चित्तः सन् स्वविषयं प्रत्याजगाम । तदा कतिपयाहस्सु गतेषु ब्राह्मण्याधिष्ठितं पाञ्चालदेशमभिययौ । तत्र साग्निमतो विप्रानाहूय बहुशो द्रव्यवितरेण सन्तोष्य श्रीगोकर्णक्षेत्र निवासाय स्थितये च पर्यालोच्य तैः साकमागत्य तत्र स्थापयां चक्रे । ते वै शत शृंगोपत्यकासु निवसन्तः श्री महाबलेश्वरार्चनं बहुकालं निन्युः । ततश्चोरभीताः पलायनपराः सन्तो ब्रह्मदेशमेवाऽभिसेदुः । पुनस्तदब्राह्मण्यमासीत् । स एव चक्रवर्ती निशम्य छद्मना नैपथ्यान्तरं दधानो झटिति तमेव दक्षिण पांचालदेशमधिगम्य भूसुराणां वास्तुनि पृथक् पृथक् सुवर्णमेकैकं निधाय हायनं निन्ये । किमेतदिति सन्दिग्धास्तमन्वेषमाणाः स्युः । द्वित्रिदिने दृक्पथम् गतो मयूरवर्माऽपि ब्रह्मनिष्ठान् वशीकृत्य चतुर्विंशति संख्याकान् यजनशीलान् समादाय तेष्वष्टौ भार्गव प्रभृति चतुष्टय गोत्र प्रवरान् संगृह्य परिशिष्ट षोडश संस्कार युतेभ्यः महतः अग्रहार प्रवृत्ति प्रदानेन दक्षिण प्रान्तदेशे स्थापयित्वा पुनः पूर्ववत् गोकर्णे स्थापयांचक्रे । मुहुर्मुहुः क्षेत्रं हित्वा स्वदेशगतान् तान् देशीय वेष भाषाभ्यां च विनिमय्य तेभ्यो वृत्तिस्वाम्यं अदात् । वृत्तिस्तु- श्रीताम्रगौरीसमेतश्रीमन्महाबलेश्वरस्य त्रिषवणेषु महापूजोपचारं अग्रिम मान्यत्वं च भार्गव गोत्रोद्भवाय सर्वतन्त्रस्वतन्त्रत्वं,नियन्तृत्वं च, विश्वामित्र गोत्रोद्भवाय आचार्यत्वं दण्डनेतृत्वं च, अंगीरसगोत्रोद्भवाय समय निर्णेतृत्वं, वासिष्ठगोत्रोद्भवाय श्री सन्निधौ क्षेत्रवाशिनां चातुर्वर्ण्यानां नियोज्य योजकत्वं युष्मानेवाभिसरतु, इत्याज्ञापयित्वाऽगात् । अथ कस्मिंश्चित् समये हुब्बाइकाह्वयेन केनचित्सामन्तः चाण्डालेन बीबत्सवो भूत्वा भ्रष्टयाजनपरा निर्गत्य श्रीभट्टभास्कर पण्डित धुरीणं प्राप्य ते तु स्वोदन्तं व्यजिज्ञपुः- (तत्कथा वर्ण्यते)-नर्मदा दक्षिणस्यां कर्नाटकदेशे तुंगभद्रानदीतीरे पंपानामसरः क्षेत्रं चास्ति अदावस्य विजयानगर इति । तत्र वैदिकमार्गप्रवर्तको बुक्क भूपालः सार्वभौमो बोभवीतिस्म । तत्कुलगुरुः मन्त्री राजकार्य दुरन्धरः माधवाचार्यः यः शास्त्रे लौकिके व्यवहारे च तस्य महती प्रतिष्ठाऽऽसीत् । तस्य जन्म, शा.शके १३००-१३१३? सूक्तकाले साक्षतोदक पूर्वकं मयूर वर्मप्रभृति लोकादित्य शास्त्रानुसारेणैव भुक्क भूपति समक्षं -वृत्तिं ताम्रशासनं च दत्तवान् । स्वयम् श्रीमत्सकल साम्राज्य दुरन्धरेण बुक्कभूपतिसूनोः हरिहरस्य मन्त्रीभूत्वा, अन्ते ऐहिक सुखनिरपेक्षेण माधवाचार्येण अपरस्मिन् वयसि चतुर्थाश्रमः स्वीकृतः । तस्मिन्नाश्रमेऽपि श्रीमद्भगवतः शंकराचार्यस्य शारदापीठे शृंगबेरपुरे तत्पट्टाधिकारमुररीकृत्य शंकराचार्यात् षड्विंशतितमो विद्यारण्यभारतिरासीत् । श्रीमच्छंकराचार्य भगवत्पादपूज्य शंकरानन्दभारति स्थिति समये भट्टभास्कर संज्ञको महापण्डितवर्यः शाक्तोऽभूत् । अथ तान् मिलित्वा श्री भास्करपण्डितवर्योऽपि श्री गॊकर्णमण्डलवासिनां-इक्केरि, बेळगि, सिद्धापुर, (बुधापुर) सोदापुर, मल्लापुरान्तवर्तिनां तद्राजाधिराजप्रभृतिभ्यः सामन्तेभ्यो दापितताम्रसाधनेन संगृहीत श्रीमन्महाबलेश्वर प्रसाद प्रसन्नानां प्रतिवर्षं वर्तमान वर्तिष्यमाण वर्षाशन भूस्वास्थ्यं सर्वकर्मसु बहुमान्यं च दत्तवान् । अद्य प्रभृति अविच्छिन्न सन्तति पारम्पर्य धर्मनिष्ठाः श्री गोकर्णक्षेत्रे आचन्द्रार्कं निवसन्तु । अलं पल्लवितैः अत्र साक्षिणः-आदित्य चन्द्रावनिलोऽनलश्च द्यौर्भूमिरापो हृदयं यमश्च ।
अहश्च रात्रिश्च उभेच सन्ध्ये धर्मोऽपि जानाति नरस्य वृत्तम् ॥
॥ श्री रस्तु ॥
इदं- दत्तात्रेयेश्वरस्य पूर्वस्यां द्वादशधनुष्प्रमाणे शिलालेखनमस्ति ॥ शा.शके-१७९५ लब्धमेतत् ॥
॥ शुभमस्तु ॥

 

முந்தைய தலம்<திருஇரும்பைமாகாளம்

 அடுத்த தலம்>திருஅஞ்சைக்களம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : கர்நாடகா கர்நாடக மாநிலம் - பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையிலிருந்து இரயில் மூலம் செல்வதாயின், ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும். தொடர்புக்கு :- 08386 - 256167 , 257167.
Loading map...

Related Content

திருநின்றியூர்

திருப்பழுவூர்

திரு அஞ்சைக்களம் (Sri Vanjikulam)

பரசுராமேச்சரம் பரசுராமேசுவரர் திருக்கோவில்

உடையவர் தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்