இறைவர் திருப்பெயர்: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: குயிலினும் நன்மொழியம்மை.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்.
வழிபட்டோர்:உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன், சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன், இயற்பகை நாயனார், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் இப்பெயர் பெய்ற்றது.
இயற்பகை நாயனார் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம். இயற்பகை நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
இந்திரன் தாயார் தினமும் இத்தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத்திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்ட, இச்சிவலிங்கமோ, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நித்தலுந்நியமஞ்செய்துநீர் (2.38), 2. மண்புகார் வான்புகார் (2.41); அப்பர் - 1. தோடுலா மலர்கள் தூவி (4.65), 2. வானத் திளமதியும்பாம்புந் (6.82); பாடல்கள் : கருவூர்த்தேவர் - தன்சோதி எழுமேனித் (9.12.7) திரைலோக்கிய சுந்தரம் திருவிசைப்பா, ஐயடிகள் காடவர்கோன் - அஞ்சனஞ்சேர் (11.6.15) க்ஷேத்திரத் திருவெண்பா; பரணதேவ நாயனார் - சேர்வும் உடையர் (11.24.92) சிவபெருமான் திருவந்தாதி, சேக்கிழார் - இருவரால் அறிய ஒண்ணா (12.3.26) இயற்பகை நாயனார் புராணம், ஆண்ட அரசு (12.21.189 & 190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் , பன்னகப் பூணினாரைப் (12.28.120, 121 & 122) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்; வரையோடு நிகர் (12.29.147) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலம்.
காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு, 2. மயிலாடுதுறை, 3. திருவிடைமருதூர், 4. திருவையாறு 5. திருவாஞ்சியம் .
சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
Contact Address