இறைவர் திருப்பெயர்: பல்லவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தர நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, ஜானவி தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,அகத்தியர், பல்லவ மன்னன் முதலியோர்.
Sthala Puranam
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அடையார்தம் புரங்கள் மூன்றும் (1.65), 2. பரசு பாணியர் பாடல் (3.112); பாடல்கள் : சேக்கிழார் - பன்னகப் பூணினாரைப் (12.28.121) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
அவதாரத் தலம் : திருப்பல்லவனீச்சுரம் (பூம்புகார்) வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : திருச்சாய்க்காடு. குருபூசை நாள் : மார்கழி - உத்திரம்.
வெளிமண்டபத்தில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.
மாறவர்மன் திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
உள் மண்டபத்தில் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது.
ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு பன்னிரு நாள்கள் திருவிழா எடுக்கிறார்கள்.
அகத்தியர் உண்டாக்கிய ஜானவி தீர்த்தம் கோயிலுக்கு முன்புறம் உள்ளது.
Contact Address