இறைவர் திருப்பெயர்: அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம்:
தீர்த்தம் : அற்புத தீர்த்தம், காவிரி, கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது).
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சுந்தரர் ,சேக்கிழார், பிரமன், திருநீலநக்கர் முதலியோர்
Sthala Puranam
இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
![]() |
![]() |
![]() |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. திருமலர்க் கொன்றைமாலை (3.58); பாடல்கள் : சுந்தரர் - ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை (7.39.4) திருத்தொண்டத்தொகை; சேக்கிழார் - சீர் தரு செங்காட்டங்குடி(12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மான் மறிக் கையர் பொற்றாள் (12.25.45) அப்பூதி அடிகள் நாயனார் புராணம், பூத்த பங்கயப் (12.26.1 & 38) திருநீலநக்க நாயனார் புராணம், மன்னு திரு நள்ளாற்று (12.28.459 & 460) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.
'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
Contact Address