இறைவர் திருப்பெயர்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
இறைவியார் திருப்பெயர்: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர்.
Sthala Puranam
வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)
அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.
வாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. செப்ப நெஞ்சே (1.28); அப்பர் - 1. பொய்விரா மேனி (4.41), 2. காலை யெழுந்து (4.85), 3. கொல்லை யேற்றினர் (5.33), 4. மூத்தவனாய் உலகுக்கு (6.44); சுந்தரர் - 1. அழல்நீர் ஒழுகி (7.94); பாடல்கள் : அப்பர் - சோற்றுத் துறையெஞ் சோதியைத் (4.15.9), சிறையார் புனற்கெடில (6.7.3), பன்மலிந்த வெண்டலை (6.13.4), சொல்லார்ந்த சோற்றுத் துறையான் (6.22.9), நன்றருளித் தீதகற்றும் (6.30.7), விடையேறி (6.36.10), அல்லாய்ப் பகலானாய் (6.41.3), நறையூரிற் (6.70.10), கயிலாயமலை யெடுத்தான் (6.71.11), பூச்சூழ்ந்த பொழில்தழுவு (6.75.8), விலையிலா ஆரஞ்சேர் (6.82.8), ஊற்றுத் துறை (6.93.5); சுந்தரர் - ழலும் மேனியன் (7.12.9), துருத்தி உறைவீர் (7.95.4); பட்டினத்துப் பிள்ளையார் - நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - எழும் பணியும் (12.21.212) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், வினவி எடுத்த திருப் பதிகம் (12.28.353,354 & 355) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், நல்லூர் இறைவர் (12.29.69) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். தல மரம் : பன்னீர் மரம்
Specialities
ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
Contact Address