புன்கு Pongamia glabra, Vent.; Fabaceae.
முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
. - திருஞானசம்பந்தர்.
திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும் நீள்சதுரக் காய்களையும் உடைய மரம். இம்மரம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் தன்மை கொண்டது. நிழலுக்காகவும் இம்மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருத்துவக் குணமுடையவை. இது தோல் நோய் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

| Name | Indian Beech Tree |
| Family | Fabaceae |
| SubFamily | Faboideae |
| Genus | Millettia |
| Species | Pinnata |
| Authority | (L.) Panigrahi |
| Type | Deciduous |
| Common Family | Pea |
| Native | India |
| Size | Medium |
| Height | 20 m |
| Wiki | wikipedia |
| Links | flowersofindia ars-grin theplantlist |
| Language Common | karum tree, poonga oil tree |
| Language Hindi | karanj, papdi, kanji, sukhchain |
| Description | A fast-growing deciduous tree up to 20 metres tall that is thought to have originated in India and is found throughout Asia. It is a deciduous tree that grows to about 15-25 meters in height with a large canopy that spreads equally wide. The leaves are a soft, shiny burgundy in early summer and mature to a glossy, deep green as the season progresses. Small clusters of white, purple, and pink flowers blossom on their branches throughout the year, maturing into brown seed pods. The tree is well suited to intense heat and sunlight and its dense network of lateral roots and its thick, long taproot make it drought tolerant. Flowering: March-April. |
| Medicinal uses | A thick brownish oil can be extracted from the large seeds, and is used industrially and in medicine, notably for the treatment of rheumatism. |
| Where | cross roads, 12th main road, indiranagar, Bangalore |

| Color | medium grey |
| Texture | not rough |

| Color | White or pinkish |
| Season | Feb-Apr |

| Shape | flat pod |
| Color | Green turning yellowish grey |

| Type | imparipinnate |
| Texture | Feathery |
| Leaflet Numbers | 2-3 pairs |
| Leaflet Terminal | odd |

Indian Beech Tree - Flower Bud 1
திருமுறைகளில் புங்கமரம் பற்றிய குறிப்பு :-
1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே. 1.132.6
வரியேர் வளையாள் அரிவை
யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த
கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ்
சூழ்ந்தங்கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ்
சோலைப் புத்தூரே. 2.063.4
6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - பிறவாதே தோன்றிய
காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாக மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6.017.8
புலங்கள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை
அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. 6.022.6
புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே. 6.51.11
கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. 6.059.3
பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6.060.10
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே. 6.070.11
மைகொள் கண்டன்எண் டோளன்முக்
கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாள்அர வாட்டித்
திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக
ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி
ஆவடு துறையதே. 7.012.10
7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்
புலர்ந்தால்யான் ஆற்றேன்
புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான்
என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான்
அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம். 11.023.74
நண்ணிப் பரவும் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின் சென்றே. 11.030.62
பொன்னம் பலத்துறை புண்ணியன்
என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு
வேலிகொள் பிஞ்ஞகனே. 11.033.54
தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத்
திருப்புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேரன்பு மிக அடி
பணிந்து தமிழ் பாடி
மானார்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த
இடம் பல வணங்கிக்
கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ்
காவிரியின் கரை அணைந்தார். 12.006.115
திருப் புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு
ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து
அவ்வூர் மருங்கணைந்தார். 12.024.16
சீர் ஏறும் இசை பாடித்
திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என
நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன்
கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள்
புரிந்து அருளிப் புலப்படுத்தார். 12.024.17
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்
காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடு
திருக்குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார். 12.027.189
நீடு திரு நின்றியூரின் நிமலனார்
நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி
நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந் தமிழ் பாடி அமர்ந்தார். 12.034.287
புதிய நாள் மதிச்சடை
முடியார் திருப்புன்கூர்க்கு
அதிகம் ஆயின திருப்பணி
அநேகமும் செய்து
நிதியம் ஆவனநீறு உகந்தார்
கழல் என்று
துதியினால் பரவித் தொழுது
இன்புறு கின்றார். 12.035.7
அம்கண் இனிது அமர்ந்து அருளால்
திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத்
திருக் கோலக்கா அணையக்
கங்கை சடைக் கரந்தவர் தாம்
எதிர் காட்சி கொடுத்து அருளப்
பொங்கு விருப்பால் தொழுது
திருப்பதிகம் போற்றி இசைப்பார். 12.035.153
இருவரும் எழுந்து புல்லி இடை
விடா நண்பினாலே
பொரு வரும் மகிழ்ச்சி பொங்கத்
திருபுன்கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன்
தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த ணாளன்
என்று எடுத்து பாடி. 12.035.406