பிரம்பு Calamus rotang, Palmae.
மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிக்காவு சேர்மினே.
. - திருஞானசம்பந்தர்.
திருக்கோடிகா என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பிரம்பு ஆகும். இஃது அடர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்தது. தமிழகக் கடற்கரைகளிலும், மலைக்காடுகளிலும் வளர்கின்றது. இதன் கிழங்கு மருத்துவக் குணமுடையதாகும்.
திருமுறைகளில் பிரம்பு பற்றிய குறிப்பு :-
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே. 6.070.6
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்
றாகத்து நீறணி யங்கக் கபாலஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே. 10.06.09.3
தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர
வண்டினம் சூழ வருமிவன்
போலும் மயில்உகுத்த
கண்டினம் சூழ்ந்த வளைபிரம்
போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே. 11.035.6
நெற்றியின் கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனியர் அநேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
பிஞ்ஞகன் தன்அருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும்
மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான். 12.02.11
மால் அயன் சதமகன் பெரும் தேவர்
மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மாமுனிவர் சென்று முன் துன்னித்
திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக்
காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த
செங்கை தலை மேற்கொடு புக்கார். 12.006.103
மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி
நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த
பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு
வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார். 12.034.715