logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.

தல மரம்:

தீர்த்தம் : சோம தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , வியாழன், சந்திரன் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

 

  • மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும்.
  • இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று.
  • அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் - உறி) என்றும் பெயர்.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. வாரார்கொங்கை மாதோர்பாக (1.72); பாடல்கள்      :   சேக்கிழார்   -       வந்து அணைந்து (12.28.408, 409 & 410) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

    தல மரம் : வேம்பு

Specialities

  • front appearance of the viSwanAthar templeஇத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்'காசி விசுவேசம்' என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்கின்றது. சுவாமி - காசிவிஸ்வநாதர்; அம்பாள் - விசாலாட்சி.
  • திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே" என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.
  • குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார்.

 

 

 

முந்தைய தலம்<குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி)

 அடுத்த தலம்>திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தமிகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உள்ளது.
Loading map...

Related Content

குடமூக்கு (கும்பகோணம்)

குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)

திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)