logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.

தல மரம்:

தீர்த்தம் : சோம தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , வியாழன், சந்திரன் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

 

மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும்.

 

இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று.

 

அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் - உறி) என்றும் பெயர்.

front appearance of the viSwanAthar temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. வாரார்கொங்கை மாதோர்பாக (1.72); பாடல்கள்      :   சேக்கிழார்   -       வந்து அணைந்து (12.28.408, 409 & 410) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

    தல மரம் : வேம்பு

Specialities

இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்'காசி விசுவேசம்' என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்கின்றது. சுவாமி - காசிவிஸ்வநாதர்; அம்பாள் - விசாலாட்சி.

 

திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே" என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

 

குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார்.

 

 

 

முந்தைய தலம்<குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி)

 அடுத்த தலம்>திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தமிகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உள்ளது.
Loading map...

Related Content