logo

|

Home >

hindu-hub >

temples

திருநெல்வேலி

இறைவர் திருப்பெயர்: நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ.

இறைவியார் திருப்பெயர்: காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : இத்தலத்‌தில் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில்‌ 9 தீர்த்தங்கள்‌ முக்‌யமானவை. இவற்றில்‌: பொற்றாமரை, கருமாறி, வயிரவ தீர்த்தம்‌, சர்வ தீர்த்தம்‌ இந்நான்கும்‌ கோவிலுள்‌ அமைந்தவை. கம்பை தெப்பக்குளம்‌, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம்‌. குறுக்குத்‌ துறை ஆகிய ஐந்தும்‌ கோவிலுக்கு வெளியில்‌ இருப்பவை.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், கழறிற்றறிவார் நாயனார், நின்ற சீர் நெடுமாற நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

  • வேணுவனம்‌: நான்கு வேதங்களும்‌ தருவாய்‌ நின்‌று நிழலைச்செய்து நித்தியமாயிருக்கவேண்டுமென்று சிவபெருமானிடம்‌ வரங்கேட்க, அவர்‌ தாம்‌ நடனம்‌ புரியும்‌ 21 தலங்களில்‌ மிகச்சிறந்த காஞ்சி எனப்படும்‌ நெல்லையில்‌ வேணுவாய்‌ அமருங்கள்‌, அங்கு லிங்கமாயமர்ந்தருளுவோம்‌ என, வேதங்கள்‌ மூங்கில் மரங்களாக இறைவனும்‌ லிங்கமாகத் தோன்றி  அருள்புரிந்தார். 
  • அகத்தியர் வேணுவனத்தில் கைலைத்‌ திருமணக் கோலங்கண்டு மகிழ்ந்தார்.
  • சர்வதீர்த்தபுரம்‌, தென்காஞ்சி, கன்னிப்பதி முதலிய சிறப்புப்‌ பெயர்கள்‌ உடையது.
  • தசரத இராமன்‌ பேறுபெற்றது:- இவர்‌ மாரீசனாகிய மாயமானைத்‌ தொடர்ந்து போகும்‌ வழியில்‌ கயத்தாற்றில்‌ 
    வில்லினாற்‌ கீறிப்‌ பொருநையை அழைப்பித்து லிங்கம்‌ அமைத்துப்‌ பூசித்துக்‌ கோதண்ட ராமன்‌ பெயரால் வழிபட்டார். மானூரில்‌ மாயமானைக்‌ கொன்றபின்‌ சீதையைத் தேடி வருந்தினார்‌. பின்‌ அகத்தியரை அடைந்து அவரால்‌ ஐந்தெழுத்து உபதேசம்‌ பெற்று, நெல்லையப்பரை வழிபட்டுப் பாசுபதாத்திரம்‌ பெற்று, இராவணனை வென்று சீதையை மீட்டு இராமநாதரை வழிபட்டு அயோத்தியடைந்தார்  Nellaiyappar temple
  • வேதபட்டர், இறைவனுக்கு திரு அமுதுக்கு உலரப் போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காத்தமையால் இத்தல இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று திருநாமம் மலர்ந்தது.
  • பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்) இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத் தன்மீது கவிழச் செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளினார். சிவலிங்கத் திருமேனியின் மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர்த்தி 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார். அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' எனப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகைகளும் உள்ளன. உச்சிகாலத்தில் மட்டும் அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலம்.
  • வடமொழியில்‌ இருந்த புராணம்‌ நீலகண்ட சாஸ்திரியார்‌ உதவியால்‌ தமிழில் நெல்லையப்ப பிள்ளை இயற்றியுள்ளார். 
  • திருநெல்வேலி தலம் பற்றிய நூல்கள் 
    வேணுவன புராணம்‌  (454 செய்யுள்‌) 
    திருநெல்வேலித்தல புராணம்‌  
    காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்‌
    காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி 
    நெல்லை வருக்கச்‌ கோவை 
    நெல்லைச்‌ சிந்து
    நெல்லைச்‌சேத்திரக்கும்மி 
    திருநெல்லை மும்மணிக்கோவை
    நெல்லையந்தாதி 
    திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன்‌ பதிகம்‌ 
    ஸ்ரீ தாம்ரபர்ணி மாஹாத்மியம்‌
     

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்    -    1. மருந்தவை மந்திரம் (3.92); பாடல்கள்     :     சுந்தரர்     -       கறைக்கண்டன் (7.39),                    சேக்கிழார்   -        அங்குறைந்து (12.21.410)  திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                           பற்றார் தம் புரங்கள் (12.28.886 & 887) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             குற்றாலத்து (12.37.107 & 108) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                           ஆய அரசு (12.50.3) நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்.

 

தல மரம் : மூங்கில்

 

Specialities

 

வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம விருந்தபுரம், தாருகாவனம் என்பன வேறு பெயர்கள்.

 

இக்கோயிலில் ஊஞ்சல், திருக்கல்யாண, ஆயிரங்கால், வசந்த, சங்கிலி, சோமவார, நவக்கிரக, மகா மண்டபகங்கள் சிற்ப வேலைபாடுகளுடன் விளங்குகின்றன.

  • இக்கோவில்‌ முன்‌ மண்டபங்களாகிய இரண்டம்பலங்‌களும்‌ மர அலங்கார வேலைப்பாடு வாய்ந்தவை, இத்தகைய வேலைப்பாடுகள்‌, பொதுவாக மரத்தேர்களில்‌ அமைந்திருப்பன. 

 

  • திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் காணப்படுகிறது.

 

  • இத்தலம் பஞ்ச சபைகளில் தாமிர சபையாகும்.

 

இங்குள்ள பொல்லாப் பிள்ளையாருக்கு புத்திரபேறு வேண்டுபவர்கள் 41 நாட்கள் விரதமிருந்தால், புத்திரபேறு அடைகின்றார்கள்.

 

  • மாசி மகத்தில் அப்பர் தெப்பம் சிறப்பு.
  • ஆறு சபைகள்‌:
    1. சிந்துபூந்துறையினில்‌ தீர்த்த சபை
    2. சங்கரன்கோவில்‌ சாலையில் 15 கி மீ தூரத்தில்‌ உள்ள மானூரில்‌, ஆச்சரிய சபை. 
    3. அம்பிகை கோவில்‌ முன்னிடம்‌ வடபால்‌, சிவன்‌ ஆனந்த நடனம்புரி செளந்தர சபை. 
    4. அம்பிகையாலயத்து விலாப்புறம்‌. கல்யாண சபை. - (திருக்கல்யாண மண்டபம்‌)
    5. சுவாமி கோவில்‌ முன்னுள்ளது அழகிய ராஜ சபை. 
    6. சுவாமி கோவிலுள்‌ வாயுதிக்கில்‌ மேன்மையான தாமிர சபை. 
     
  • கோயிலின் சார்பில் தேவாரப் பாடசாலை நடைபெறுகிறது.
  • ஊஞ்சல்‌ மண்டபம்‌: இது, தத்துவம்‌ 96 என்பதை விளக்கக்‌ காட்டுவதுபோல்‌ 96 கற்‌தூண்‌களால்‌ அழகுபெற அமைக்கப்பட்டுள்ளது. தள வரிசை சலவைக்‌ கற்களால்‌ பத்திபத்தியாக விளங்குகிறது. வர்ணத்‌ தூண்களின்‌ அழகு மிக்கது. நிலைக்‌ கண்ணாடி அறை அமைந்‌திருப்பது. ஐப்பசி மாதம்‌ நெல்லையப்பர் காந்திமதி திருமணம்‌ நிறைவேறியதும்‌, 8 நாள்‌ ஊஞ்சல்‌ விழா நடைபெறும்‌. பத்திரதீப, லட்சதீப விழாக்காலத்தில்‌ திருவோலக்‌கக் காட்சியும்‌ இதில்‌ காணலாம்‌. 
  • நந்தவனத்தின்‌ நடுவில்‌ நூறுகால்களுடன்‌ சதுரம்பட அமைந்துள்ள வசந்தமண்டபம்‌ உள்ளது. இளவேனிற்‌ காலமாய சித்திரை. வைகாசி மாதங்களில்‌ நெல்லையப்பருக்கும்‌ காந்திமதிக்கும்‌ வசந்தவிழா மண்டபப்படிகள்‌ சிறப்பாக நடைபெறும்‌.
  • நெல்லையப்பர் சந்நிதி மணி மண்டபம்‌: மிக விசித்திரமான ஒரே பெருங்கல்லில்‌ மத்தியில்‌ பெரிதாக ஓன்றும்‌ சுற்றிலும்‌ உருவிலும்‌ உயரத்திலும்‌ வித்தியாசமான 48 சிறு தூண்களாக அமைக்கப்பட்ட ஒரு ஜோடி தூண்கள்‌ உள்ளன. ஒவ்வொரு சிறு தூணையும்‌ ஓலிப்பித்துப்‌ பார்த்தால்‌ ஒவ்வோரிசை வெளிப்படும்படியாக அமைந்திருப்பது, வியப்பையும்‌ மகழ்ச்சியையும் அளிக்கும். இம்மணி மண்டபத்தைக் காட்டியவர் நின்ற சீர் நெடுமாற பாண்டியர். 

காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி, ஞானசம்பந்தர் பாலர் பள்ளி முதலியவை நடைபெறுகின்றது.

  • விழாக்கள்‌
    • பிட்டாபுரத்தியம்மன்‌ திருநாள்‌ 
      மூவர்‌ திருநாள்‌ 
      சந்திரசேகரர்‌ திருநாள்‌ 
      ஆனிப்‌ பெருந்திருவிழா 
      வருஷாபிஷேகம்‌ 
      பவித்திர உற்சவம்‌ 
      ஆவணிமூலத்‌ திருநாள்‌  (மானூர்‌ அம்பலம்‌ கருவூர்ச் சித்தர்‌ திருவிளையாடல்) 
      கார்நாள்‌, பிசானநாள்‌ கதிர்‌ 
      கேதார கோன்பு 
      ஐப்பசி விஷு. 
      ஐப்பசி திருக்கல்யாணத் திருநாள்‌ 
      திருவனந்தல்‌
      தைப்‌ பாரிவேட்டை (ராமையன்பட்டி) 
      தைப்‌ பூசத் திருநாள்‌ 
      செளந்தரசபை நடனம்‌ 
      தை மகம்‌--தெப்போத்ஸவம்‌ 
      பத்திர தீபம்‌ அல்லது லட்ச தீபம்‌ 
      அப்பர்‌ தெப்பம்‌, மாசி மகம்‌ 
      பங்குனி உத்தரம்‌ செங்கோல்‌ திருநாள்‌ 
      சித்திரை விசு - அகத்தியர்‌ காட்சி 
      வசந்தம்‌ திருநாள்‌ 
      சுவேதகேது திருநாள்‌, வெள்ளி ரதம்‌ 
      வைகாசி விசாகம்‌ சங்காபிஷேகம்‌ 
       

இறைவன்‌ திருநெல்வேலி  உடையரர்‌ அல்லது உடைய நாயனார்‌ என்றும்‌, இறைவி திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்‌ என்றும்‌ குறிக்கப்படுகிறார் 

  • இக்கோயிலுக்குச்‌ சொந்தமான அயன்‌, இனாம்‌ கிராமங்களில்‌ சுமார்‌ 1170 ஏக்கர்‌ நன்செய்‌ நிலமும்‌, 
    சுமார்‌ 6375 ஏக்கர்‌ புன்செய்‌ நிலமும்‌ உள்ளன.
    • அயன்‌ 
      1. திருநெல்வேலிக்கஸ்பா 
      2. தென்பத்து 
      5. பாட்டப்பத்து 
      4. கண்டியப்பேரி 
      5. அருகன்குளம்‌ 
      6. சேந்திமங்கலம்‌  
      7. மேலப்பாளையம் 
      8. பல்லிக்கோட்டை 
      9. தென்குலம்‌ 
      10. அபிஷேகபட்டி 
      11. மேகமுடையார்குளம்‌ 
      19. பிள்ளையார்காடு
      18. மணிமூர்த்தீசுரம்‌ 
      14. பிரான்சேரி 
      15, தெய்வேந்திரப்பேரி
      16. சேரமாதேவி 
      17. சுப்பிரமணியபுரம்‌ 
      18. மாறமங்கலம்‌
    • இனாம்‌
    • 19. செட்டிகுறிச்சி 
      20. திருப்பணிச்செட்டிகுளம்‌ 
      21. திருப்பணிக்‌ கரிசற்குளம்‌ 
      22. திருப்பணி நெடுங்குளம்‌ 
      23. திருப்பணி கல்லாண்டார்குளம்‌ 
      24. திருப்பணி நெல்லைபுரம்‌ 
      25. வடிவாள்புரம்‌ 
      26. பூவாணி 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை, மதுரை மற்றும் அநேக ஊர்களிலிருந்தும் புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. தொடர்புக்கு :- 0462 - 233 9910.

Related Content