மூங்கில் Bambusa arundinaceae, Retz.; Gramineae.
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார் கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தார் பாசூ ரடிகளே.
. - திருநாவுக்கரசர்.
திருப்பாசூர், திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர், திருவேட்களம் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது மூங்கிலாகும். இது நீண்ட கூரான முனையுடைய சுரசுரப்பான மெல்லிய இலைகளைக் கொண்ட, கணுக்களில் முள்ளுள்ள, உட்கூடான, கூட்டமாக நீண்டு வளரும் மரமாகும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. காடுகளில் தானே வளர்கிறது. இலை, கணு, வேர், விதை, உப்பு ஆகியவை மருத்துவப் பயனுடையது.
இம்மரம் இசிவு அகற்றல், உடல் உரமாக்கல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களுடையது. இலை மாதவிடாய்த் தூண்டியாகவும், நுண்புழுக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
Moongkil (Golden Bamboo) |
|
Name : | Golden Bamboo |
Plant Type : | Grass |
Family | Poaceae |
Genus | Bambusa |
Species | vulgaris |
Authority | Schrad. ex J.C.Wendl. |
Type | Deciduous |
Common Family | Grass |
Native | India |
Size | Large |
Height | 23-80 feet |
Wiki | wikipedia |
Links | flowersofindia |
Description | Golden Bamboo is a of mutations of Common Bamboo (Bambusa vulgaris), and has golden colored stems. There are narrow green stripes on the stems. Leaves are narrowly lanceshaped, 10-30 cm long, 1.3-2.5 cm broad, both surfaces hairless. It is a typical bamboo for ornamental plantation in the world at present. |
Where | Everywhere |
Moongkil (Bark of Golden Bamboo) |
|
Color | Golden |
Color | white |
Color | unknown |
Moongkil (Leaves of Golden Bamboo) |
|
Type | lance |
Size | 10 - 30 cm |
< PREV < முல்லை |
Table of Content | > NEXT > வஞ்சி |