இறைவர் திருப்பெயர்: மருதவாணர், மகாலிங்கேசுவரர்
இறைவியார் திருப்பெயர்: பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
தல மரம்:
தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர் முதலியோர்
Sthala Puranam
இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.
பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.
மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.
சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஓடேகலன் உண்பதும் (1.32), 2. தோடொர் காதினன் (1.95), 3. மருந்தவன் வானவர் (1.110), 4. நடைமரு திரிபுரம் (1.121), 5. விரிதரு புலியுரி (1.122), 6. பொங்குநூல் மார்பினீர் (2.56); அப்பர் - 1. காடுடைச் சுடலை (4.35), 2. பாசமொன்றிலராய் (5.14), 3. பறையின் ஓசையும் (5.15), 4. சூலப் படையுடையார் (6.16), 5. ஆறு சடைக்கணிவர் (6.17); சுந்தரர் - 1. கழுதை குங்குமந் தான் (7.60); கருவூர்த்தேவர் - 1. வெய்யசெஞ் சோதி (9.17) திருவிசைப்பா; பட்டினத்துப் பிள்ளையார் - 1. தெய்வத் தாமரைச் (11.29) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை; பாடல்கள் : அப்பர் - ஏறுகந் தேற (4.38.8), தீர்த்தப் புனற்கெடில (6.7.2), நெருப்பனைய (6.54.7), அனலொருகை (6.58.5), பொழிலானைப் (6.60.10), நசையானை (6.63.9), அழித்தவன்காண் (6.64.6), இடைமரு தீங்கோ (6.70.3), இணையொருவர் (6.83.7), படமூக்கப் (6.96.8); சுந்தரர் - முந்தையூர் (7.31.1,2,3,4,5,6,7,8,9 & 10); மாணிக்கவாசகர் - தேவூர்த் தென்பால் (8.2.75வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல், வெளியிடை ஒன்றாய் (8.4.145வது வரி பாடல்) போற்றித் திருவகவல், எந்தையெந் தாய்சுற்றம் (8.13.2) திருப்பூவல்லி, மூன்றங் கிலங்கு (8.16.2) திருப்பொன்னூசல், மருவினிய மலர்ப்பாதம் (8.38.9) திருவேசறவு, குன்றங் கிடையுங் (8.18.3) திருக்கோவையார்-வரைபொருட்பிரிதல்; பரணதேவ நாயனார் - நீயேயா ளாவாயும் (11.24.4,56 & 81) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - எறி புனல் (12.21.192) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மா நாகம் (12.28.412 & 413) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், மன்னு மருதின் அமர்ந்த வரை (12.29.64 & 65) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.
இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.
இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.
பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.
இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
Contact Address