Acacia leucophloea. Willd.; Mimosaceae.
காட்டி னாலும் அயர்ந்திடக் காலனை வீட்டி னுனுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை ஒல்லையே.
. - திருஞானசம்பந்தர்.
திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது. இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரமாகும். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும் உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், காய்கள் தட்டையாகவும் இருக்கும். இதன் இலை, பட்டை, வேர், பிசின், விதை முதலியன மருத்துவக் குணமுடையது. இது தமிழகத்தில் காடுகளிலும், தரிசுகளிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றன.
< PREV < விளாமரம் |
Table of Content | > NEXT > வேம்பு |