இறைவர் திருப்பெயர்: | வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பாலாம்பிகை, வேற்கண்ணி. |
தல மரம்: | வேல மரம் (வெளிப் பிராகார்த்தில் உள்ளது). |
தீர்த்தம் : | வேலாயுத தீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வேதங்கள் முதலோர். |
அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலக் காட்சியை அருளிய அற்புதப் பதி.
முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்ததாக தலபுராணம் கூறுகிறது; முருகப் பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே இங்குள்ள வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது.
வேதங்கள் வழிபட்டது; நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று, இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'வேல்காடு' (வேலமரம்) = வேற்காடு என்று பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒள்ளி துள்ளக் கதிக்கா (1.57); பாடல்கள் : நம்பியாண்டார் நம்பி - தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் (11.34.39) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - மன்னு புகழ்த் திருத் தொண்டர் (12.28.1029 & 1030) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், கண்ணின் மணிகள் (12.31.26) தண்டியடிகள் நாயனார் புராணம், மன்னிப் பெருகும் (12.32.1 & 2) மூர்க்க நாயனார் புராணம்.
திருஞானசம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றத் திருத்தலம்.
மூர்க்க நாயனார் அவதரித்தத் தலம். இவருக்கு இங்கு சந்நிதி உள்ளது.
அவதாரத் தலம் : திருவேற்காடு. வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : குடமூக்கு (கும்பகோணம்). குருபூசை நாள் : கார்த்திகை - மூலம்
விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
திருவேற்காட்டுப் புராணம் | |
திருவேற்காட்டுப் புராணம் வசனம் | பூவை கலியாண சுந்தர முதலியார் |
அமைவிடம் அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில், திருவேற்காடு & அஞ்சல் - 600 077. திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி : 044 - 26800430, 26272487. மாநிலம் : தமிழ் நாடு காடுவெட்டியாறு என்று சொல்லப்படும் (பழைய) பாலாற்றங்கரையில் கோயில் உள்ளது. சென்னையிலிருந்து திருவேற்காட்டிற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பூந்தமல்லியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.