இலந்தை Ziziphus jujube, Lamk.; Rhamnaceae.
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத் துட்பொருள்தான் ஆயினானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும்
ஒன்றும விண்ணொடுமண் ஆகாசமாயினானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தியேத்தும்
கிளரொளியைக் கீழ்வேளூராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடிலாரே.
- திருநாவுக்கரசர்.
Ilanthai (Ber Tree) | Ilanthai (Ber Tree) | Ilanthai (Ber Tree) | Ilanthai (Ber Tree) | Ilanthai (Ber Tree) | Ilanthai (Ber Tree - Bark) | Ilanthai (Ber Tree - Canopy) |
திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம் , திருவெண்பாக்கம் (பூண்டி), திருஉத்தரகோசமங்கை முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது. வளந்த கூர்மையான முள்ளுள்ள மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.