logo

|

Home >

hindu-hub >

temples

திருவெண்பாக்கம் (பூண்டி - நீர்த்தேக்கம்) திருக்கோயில் தலபுராணம்

இறைவர் திருப்பெயர்: ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: தடி கௌரி அம்பாள், மின்னொளியம்மை.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், குசஸ்தலை

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Tiruvenpakkam temple
திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் திருக்கோயில் 
  • பழைய கோயில் 'திருவிளம்பூதூரில் ' இருந்தது; இவ்வூர் குசஸ்தலையாற்றின் கரையில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்திகாரண்யம் என்றும் பெயருண்டு. (இலந்தை மரக்காட்டுப் பகுதி). (சென்னையின் குடிநீர்த்தேவையைப் போக்க, குசஸ்தலையாற்றில் அணையைக்கட்ட 1942-ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டு, அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக்கொண்டபோது அப்பகுதியில் திருவிளம்பூதூரும் அடங்கிற்று. அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு. எம். பக்தவச்சலம் அவர்கள் மற்றும் அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு உத்தண்டராமப் பிள்ளை ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு, 05-07-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.)
  • திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி)
  • சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம். திருமுல்லைவாயில் பணிந்து, பின்பு இங்கு வந்த சுந்தரர், அடியார்சூழ ஆலயம் சென்று 'கோயில் உளாயோ ' என்று பிண்ணப்பிக்க, இறைவன் ஊன்றுகோலை அருளிச்செய்து 'யாம் உளோம் போகீர் ' என்றார். அதுகேட்ட சுந்தரர் 'பிழையுளன பொறுத்திடுவர் ' என்னும் பதிகம் பாடி போற்றினார்.
  • கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. பிழையுளன பொறுத்திடுவர் (7.89); பாடல்கள்      :  சேக்கிழார்   -       மன்னு திருப்பதிக இசைப் (12.28.1013) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                          தொண்டை மானுக்கு (12.29.278 & 280) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • திருவிளம்பூதூர் கோயில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்; பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது.
  • வலக் கொம்பு உடைந்த நிலையில் உள்ள நந்தியின் பக்கத்தில் கண்ணிழந்த நிலையில் இறைவனை நோக்கியவாறு சுந்தரர் திருமேனி நின்ற கோலத்தில் உள்ளது.
  • திருவிளம்பூதூர் கோயிலில் இருந்த கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு, இக்கோயிலில் (வெண்பாக்கம்) பதிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் முதலாம் இராசராசன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் பெயர் "‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்துப் பெருமூர் நாட்டு உடையார், திருவுளோம் போகி உடைய நாயனார் " என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தி விளக்கு வைத்த நிபந்தம், பூஜைக்கு நிலம் வைத்த நிபந்தம், சுவாமி அமுதுக்கு நிலம் விடப்பட்ட நிபந்தம் முதலியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவள்ளூரிலிருந்து பேருந்து வசதியுள்ளது. தொடர்பு : 044 - 27639725

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)