இலந்தை Ziziphus jujube, Lamk.; Rhamnaceae.
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தான் ஆயினானை விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும விண்ணொடுமண் ஆகாசமாயினானை வளரொளியை மரகதத்தி னுருவி னானை வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தியேத்தும் கிளரொளியைக் கீழ்வேளூராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே.
- திருநாவுக்கரசர்.
Ilanthai (Ber Tree) |
Ilanthai (Ber Tree) |
Ilanthai (Ber Tree) |
Ilanthai (Ber Tree) |
Ilanthai (Ber Tree) |
Ilanthai (Ber Tree - Bark) |
Ilanthai (Ber Tree - Canopy) |
திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம் , திருவெண்பாக்கம் (பூண்டி), திருஉத்தரகோசமங்கை முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது. வளந்த கூர்மையான முள்ளுள்ள மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.
< PREV < ஆலமரம் |
Table of Content | > NEXT > இலுப்பைமரம் |