thiruvarutpaa
வெளியீடு அட்டவணை
2. 1 இரண்டாம் அருட்பா முதல் பகுதி ( 571-1007) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
2.2. இரண்டாம் அருட்பா இரண்டாம் பகுதி (1007-1543) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
2.3. இரண்டாம் அருட்பா மூன்றாம் பகுதி (1544-1958) | இந்த மின்பதிப்பு | |
3. மூன்றாம் அருட்பா (1959 - 2570) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
4. நான்காம் அருட்பா (2571 - 3028) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
5. ஐந்தாம் அருட்பா (3029 - 3266) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
6.1 ஆறாம் அருட்பா - முதற் பகுதி (3267 -3580) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. | |
6.2 ஆறாம் அருட்பா - இரண்டாம் பகுதி (3872 - 4614) | 6.3 ஆறாம் அருட்பா - மூன்றாம் பகுதி (4615 - ) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) | மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. |
1007 | வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் பாவ மேஅலால் பலன்சிறி துளதோ இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
1 |
1008. | கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக் கண்ட பாவியே காமவேட் டுவனே இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
2 |
1009. | பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி மதியில் காமமாம் வஞ்சக முறியா எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
3 |
1010. | கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற பரிவி லாமலே பயன்இழந் தனன்காண் சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
4 |
1011. | சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள் இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய் சுகமி லாதநீ தூரநில் இன்றேல் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
5 |
1012. | மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில் போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம் சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
6 |
1013. | மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
7 |
1014. | அமைவ றிந்திடா ஆணவப் பயலே
அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண் இன்று நாம்பரன் இணையடி தொழுதோம் கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
8 |
1015. | கருமை யாம்அகங் காரமர்க் கடவா
கடைய னேஉனைக் கலந்தத னாலே அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம் எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
9 |
1016. | வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
விடுவி டென்றனை வித்தகம் உணராய் தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய் அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. |
10 |
(26). அறுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
1017 | ஊதி யம்பெறா ஒதியினேன் மதிபோய்
உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
1 |
1018. | கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும் வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில் இகலும் கோபமும் இருக்கின்ற தானால் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
2 |
1019. | கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன் செய்வ தென்னைநின் திருவருள் பெறவே ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
3 |
1020. | அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
அன்னை என்பர்கள் அழவலி இல்லாக் குற்றம் அன்றது மற்றவள் செயலே துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
4 |
1021. | உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும் மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
5 |
1022. | விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன் மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
6 |
1023. | நிலையி லாஉல கியல்படும் மனத்தை
நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன் வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன் அற்ப னேன்திரு அருளடை வேனே திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
7 |
1024. | காயம் என்பதா காயம்என் றறியேன்
கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன் தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன் தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
8 |
1025. | புன்னு னிப்படும் துளியினும் சிறிய
போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன் என்செய் கேன்எனை என்செயப் புகுகேன் வேற லேன்எனை விரும்பல்உன் கடனே திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
9 |
1026. | அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
ஆக நின்றனன் அம்மைஇம் மையினும் கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே. |
10 |
(27). எழுசீர்- தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
1027. | சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில் பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
1 |
1028. . | அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
ஐய நீர்அறி யாததும் அன்றே கதியி லீர்எனக் கழறினன் அல்லால் பதியில் வாழ்படம் பக்கநா யகரே பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
2 |
1029. . | முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
மூட னேன்தனை முன்வர வழைத்துப் பித்தர் என்றுமைப் பேசிட லாமே இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
3 |
1030. . | வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால் தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
4 |
1031. . | உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள் எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன் அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
5 |
1032. . | கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார் ஐய நீர்உம தருள்எனக் களிக்க ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
6 |
1033. . | விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால் கடமை நீங்குறார் உடமையின் றேனும் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
7 |
1034. . | கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன் நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
8 |
1035. . | வினையி னால்உடல் எடுத்தன னேனும்
மேலை நாள்உமை விரும்பிய அடியேன் எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர் மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
9 |
1036. | பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல் உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ. |
10 |
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க்(28) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(28). எழுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
1057. | சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன் வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
1 |
1058. | மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால் திருவ ருட்குநான் சேயனும் ஆனேன் கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன் அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
2 |
1059. | உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
உள்ளம் என்வசம் உற்றதின் றேனும் இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
3 |
1060. | என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான் ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல் இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
4 |
1061. | பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் செய்கை நின்னதே செப்பலென் சிவனே கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
5 |
1062. | மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
மோக வாரியின் முழுகுகின் றதுகாண் திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
6 |
1063. | கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
கடுகின் எல்லைதான் கலந்திடு மானால் வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால் மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
7 |
1064. | மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண் எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால் றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
8 |
1065. | ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
உள்கி டாதுளம் ஓடுகின் றதனால் திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே மாயு மோஎன மயங்குவேன் தன்னை அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
9 |
1066. | யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
என்வ சப்படா திருத்தலை உரைத்தேன் தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம் பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே. |
10 |
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
திருவொற்றியூர்
எண்சீர்க்(29) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(29). எண்சீர் - தொ.வே.1, ச.மு.க, ஆ.பா; எழுசீர் - தொ.வே.2,
1077. | இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
1 |
1078. | மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
2 |
1079. | உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன் போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
3 |
1080. | வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் தூர நின்றனை ஈரமில் லார்போல் போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
4 |
1081. | ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
5 |
1082. | கந்த மும்மல ரும்என நின்றாய்
கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண் போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
6 |
1083. | அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த் தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
7 |
1084. | ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
நாய்க ளுக்கெலாம் நாயர சானேன் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
8 |
1085. | சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் நித்த னேஅது நீஅறி யாயோ போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
9 |
1086. | தத்து மத்திடைத் தயிரென வினையால்
தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன் போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
10 |
1087. | பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத் செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் வெய்ய மாயையில் கையற வடைந்தே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே. |
11 |
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
கலி விருத்தம்(30)
(30). வஞ்சி விருத்தம் - தொ. வே. 1, ச.மு.க;
கலி விருத்தம் - தொ.வே. 2, ஆ.பா.
1098. | ஒற்றி மேவிய உத்தம னேமணித் தெற்றி மேவிய தில்லையப் பாவிழி நெற்றி மேவிய நின்மல னேஉனைப் பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே. |
1 |
1099. | பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க் காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன் மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல் ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே. |
2 |
1100. | ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய் சோதி யேதிருத் தோணிபு ரத்தனே ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது நீதி யேஎனை நீமரு வாததே. |
3 |
1101. | வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே. |
4 |
1102. | தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக் கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே நலத்த னேஒற்றி நாயக னேஇந்த மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே. |
5 |
1103. | மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம் ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன் ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக் கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே. |
6 |
1104. | உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான் செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம் எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே. |
7 |
1105. | எந்தை யேதில்லை எம்இறை யேகுகன் தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன் முந்தை ஏழ்பவ மூடம யக்கறச் சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே. |
8 |
1106. | திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத் திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப் பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு வருந்த என்தனை வைத்தத ழகதோ. |
9 |
1107. | வைத்த நின்அருள் வாழிய வாழிய மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப் பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே. |
10 |
1108. | போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச் சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத் தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே. |
11 |
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கோயில்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க்(31) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(31). எழுசீர் - தொ.வே. 1,2; எண்சீர் - ச.மு.க; ஆ.பா.
1129. | இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன் குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில் பேய ருண்மனை நாயென உழைத்தேன் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
1 |
1130. | ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார் வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய் வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ |
2 |
1131. | மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
3 |
1132. | இருக்க வாவுற உலகெலாம் உய்ய
எடுத்த சேவடிக் கெள்ளள வேனும் ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
4 |
1133. | எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும் நன்மை என்பதோர் நாளினும் அறியேன் வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
5 |
1134. | பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம் தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய் கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
6 |
1135. | வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
7 |
1136. | புல்ல னேன்புவி நடையிடை அலையும்
புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
8 |
1137. | எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
எண்ணி னுட்படா வேனும்மற் றவையை ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே கருணை ஈகுதல் கடன்உனக் கையா தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
9 |
1138. | வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
விடுத்தி டார்அந்த வெறியது தீரும் நீயும் அப்படி நீசனேன் தனக்குப் புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே. |
10 |
திருவொற்றியூர்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவொற்றியூர்
கட்டளைக் கலித்துறை
திருவொற்றியூர்
தரவு கொச்சகக் கலிப்பா
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருவொற்றியூர்
எண்சீர்க்(32) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(32). அறுசீர்- தொ.வே. 1,2; எண்சீர்- ச.மு.க; ஆ பா.
1233. | வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல் வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான் ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய் மானை நோக்கிய நோக்குடை மலையாள் மகிழ மன்றிடை மாநடம் புரிவோய் தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
1 |
1234. | வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல் வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம் தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன் துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய் கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக் கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
2 |
1235. | வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல் மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில் பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவி யேன்அருள் பண்புற நினைவாய் மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
3 |
1236. | கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல் கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும் நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய் மலம்இ லாதநல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மாமணிச் சுடரே சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
4 |
1237. | போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல் புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச் சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய் கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள் குமரன் தந்தையே கொடியதீ வினையைத் தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
5 |
1238. | ஓட உன்னியே உறங்குகின் றவன்போல் ஓங்கும் உத்தம உன்அருட் கடலில் ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய் நாட உன்னியே மால்அயன் ஏங்க நாயி னேன்உளம் நண்ணிய பொருளே தேட உன்னிய மாதவ முனிவர் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
6 |
1239. | முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும் மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன் துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
7 |
1240. | கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல் காமம் உந்திய நாமநெஞ் சகத்தால் எல்லை உந்திய பவக்கடல் கடப்பான் எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
8 |
1241. | நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன் புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக் கமலம் மேவிய விமலவித் தகனே செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
9 |
1242. | நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல் நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான் பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன் பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய் கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே. |
10 |
திருவொற்றியூர்
கட்டளைக் கலித்துறை
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
புள்ளிருக்குவேளூர்
கலிவிருத்தம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொது
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கோயில்
அறுசீர்க்(33) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(33). எழுசீர் - தொ.வே 1,2. அறுசீர் - ச. மு. க., ஆ. பா.
1340. | திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன் இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ. |
1 |
1341. | பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும் அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன் என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ. |
2 |
1342. | தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார் வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக் கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் ஈயில் சிறியேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ. |
3 |
1343. | புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான் என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 4 |
|
1344. | அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார் மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன் இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 5 |
|
1345. | இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன் எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான் எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 6 |
|
1346. | சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன் மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன் பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ் எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ. 7 |
|
1347. | அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத் தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன் மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன் இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ. 8 |
|
1348. | அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான் பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ. 9 |
|
1349. | பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன் என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ. 10 |
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொது
எண்சீர்க்(34)கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
( 34). எழுசீர்- தொ.வே. 1,2. எண்சீர்- ச.மு.க., ஆ.பா.
1370. | உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
1 |
1371. | கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன் கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன் பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
2 |
1372. | வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மாமணியே உனைநினையேன் வாளா நாளைக் கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
3 |
1373. | அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
4 |
1374. | பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண் பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக் கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
5 |
1375. | தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண் சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில் விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல் எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
6 |
1376. | விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக் கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக் கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப் பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப் புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
7 |
1377. | அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன் ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன் மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல் வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச் செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
8 |
1378. | அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத் துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன் வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
9 |
1379. | தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன் குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய். |
10 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்