logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்)

Om symbol

இறைவர் திருப்பெயர்: கல்யாணவிகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : குடகனாறு. விகிர்த தீர்த்தம்

வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார் முதலியோர்

Loading map...

Sthala Puranam

Vegnsamakudal temple

  • இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான குடகனாறு மற்றும் சிற்றாறு (தற்போது இது குழகனாறு என்று அழைக்கப்பட்டாலும் சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார்) இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும்  வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.
  • தேவர்கள் தலைவனான இந்திரன்  கௌதம மகரிஷி  மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு  சூழ்ச்சியால்  அடைய முயன்றது  கண்டு கௌதம மகரிஷியால் சாபம் பெற்ற இந்திரன்  இங்கு சிவபெருமானை  வணங்கி  தகுந்த காலத்தில் சாபம் நீங்கப் பெறும் என்ற  திருவருள் பெற்றான்.
  • இத்தலத்திலுள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவு கொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார்; என்ற செய்தியைக் கொங்கு மண்டலச் சதகச் செய்யுள் தெரிவிக்கிறது.

 “கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்
அழகாகும் மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருளுதி என்று 
எழுகாதலால் தமிழ்பாடிய சுந்தரர்க்கு ஈந்தஒரு 
மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே" 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. எறிக்குங் கதிர்வே யுதிர் (7.42); பாடல்கள்      :    அப்பர்     -       உஞ்சேனை மாகாளம் (6.70.8);                    சேக்கிழார்  -       பருவம் அறாப் (12.28.338) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                         ஆயிடை நீங்கி (12.29.92) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

Vegnsamakudal temple
  • வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து இக்கோயில் கருங்கற்கள் 2 கி.மீ தூரம் அடித்துச் செல்லப்பட்டு, ஊரும் அழிந்த நிலை நேர்ந்து பல்லாண்டுகட்கு பிறகு, பல லட்சங்கள் செலவில் இத்திருக்கோயிலை புதியதாக எடுப்பித்து 1986-ல் மகாகும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
  • நாயன்மார்களின் மூர்த்தங்களின் கீழ் நாடு, மரபு, காலம், திருநட்சத்திரம் முதலிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • மூலவர் சந்நிதி வாயில் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது.
  • இது திருப்புகழ் தலமுமாகும்.
  • ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது.
  • கருங்கல்லாலான விளக்குத்தூண் உள்ளது.
  • கல்வெட்டில் இறைவன் பெயர் 'வெஞ்சமாக்கூடல் விகிர்தர் ' என்றும் இறைவி பெயர் 'பனிமொழியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
  • சுந்தரபாண்டிய தேவராகிய கண்டியதேவர். அம்மன் கோயிலைச் சற்று விரிவாகக் கட்டியும், பழுதுபார்த்தும் உள்ளார். இங்ஙனம் இவர் செய்தது பரகேசரிவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியனின் மூன்றாம் ஆட்சியாண்டில் ஆகும்.
  • கோனேரின்மை கொண்டான் கல்வெட்டு ஒன்றின் தலைப்பில் ஜெயகேசரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது திருவெஞ்சமாக்கூடல் ஊரையே இறைவர்க்கு அளிக்கப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது. இந்த வெஞ்சமாக்கூடல் என்னும் ஊர் வெங்கால நாட்டுக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகும்.
முந்தைய தலம்<கொடிமாடச் செங்குன்றூர்  (திருச்செங்கோடு)

 அடுத்த தலம்>திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கரூர் - அரவக்குறிச்சி சாலையில் சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8-கி. மீ. செல்லவேண்டும். கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாக செல்கிறது. தனி ஊர்தியில் செல்வோர் கோயில் வரை செல்லலாம். தொடர்பு : 04324 - 262010, 09943527792.
Loading map...

Related Content

திருப்புக்கொளியூர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

திருநணா (பவானி) சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ