இறைவர் திருப்பெயர்: சிவக்கொழுந்தீசர், சிவாகங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பிரணவபுரீஸ்வரி, நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
தல மரம்:
தீர்த்தம் : 1 கௌரி தீர்த்தம்: பிராகாரத்தில் கிணற்று வடிவிலுள்ளது. சிவபூஜைக்காக அம்பிகையால் உண்டாக்கப்பட்டது. 2 ஜாம்பவான் தீர்த்தம் (சாம்புவ தடாகம்): ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தம் தற்போது தாமரைக் குளமாகக் கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது. 3 கருட தீர்த்தம்: ஏரி வடிவிலுள்ள இத்தீர்த்தத்தின் அருகில் கருட லிங்கக் கோயில் உள்ளது. 4 தேவ தீர்த்தம்: அருகிலுள்ள கடல் (பெரு மா ஏரி?), தேவ தீர்த்தம் எனப்படுகிறது. 5 சக்கர தீர்த்தம் : ஊரின் மூலையில் உள்ள மற்றொரு தீர்த்தம்
வழிபட்டோர்:கௌரி, நந்திதேவர், திருமால், பிருங்கி, அகத்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், ஜாம்பவான், திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், விசுவ நிருபன், வீரசேன மன்னன்
Sthala Puranam

இத்தலத்துப் பெருமானை திருமாலானவர் மூன்று தினங்கள் வழிபாட்டு, முராசுரனை வதைத்ததால் முராரி என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. நீறு தாங்கிய திருநுத (7.64); பாடல்கள் : சுந்தரர் - திருத்தினை நகர்உறை (7.58.3); சேக்கிழார் - பரம் பொருளைப் பணிந்து (12.5.91) தடுத்தாட்கொண்ட புராணம், தேவர் பிரான் (12.21.136) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், செல்வம் மல்கிய தில்லை (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address