logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர், பத்துநூறு பெயரன், திருப்பாற்றுறை மகாதேவர், திருப்பால்துறை நாயனார், திருப்பால்துறை உடையார்

இறைவியார் திருப்பெயர்: மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.

தல மரம்:

தீர்த்தம் : திருக்குளம், கொள்ளிடம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், மார்க்கண்டேயர், சூரியன் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

Tiruppaladurai temple

  • சூரியன் வழிபட்ட தலம்.
  • மார்க்கண்டேயர் இத்தலத்தில் வழிபடும்போது பூஜைக்குப் பால் இல்லாமல் வருந்தியபோது இம்மூர்த்தியின் சிரஸிலிருந்து பால் பெருகியது. அதனால் இவ்வாலயம் பால் துறை என்று பெயர் பெற்றது.
  • சோழ மன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும் போது காடாக இருந்த புதர் ஒன்றிலிருந்து வெண்மையான பறவை ஒன்று பறந்து செல்வதை பார்த்தான். அப்பறவை பார்ப்பதற்கு மிக வினோதமாகவும் வசீகரமாகவும் இருந்தது. பறவை வெளிப்பட்ட இடத்தில் அவன் மனம் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்றான். நறுமணம் கமழ்ந்த அவ்விடத்தைத் தோண்டச் செய்தான். அங்கு தோண்டிய இடத்திலிருந்து பால் பெருகி ஓடுவதைக் கண்ட மன்னவன் மனம் பதைத்துக் கவனமாகப் பார்க்க அங்கு சிவலிங்கத் திருமேனி தெரிந்தது. சிவலிங்க மூர்த்திக்கு அங்கேயே திருக்கோயில் கட்டி வழிபாடுகள் பல சிறப்புறச் செய்தான். 
  • இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -   1. காரார் கொன்றை கலந்த (1.56); பாடல்கள்      :   சேக்கிழார்   -      ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் (12.28.348) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

தல மரம் ; வில்வம்

Specialities

  • மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது.
  • மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.
  • அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது.
  • இவ்வாலய கோஷ்டத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியும், மாலொரு பாகரும் (சங்கர நாராயணர்) அமைந்துள்ளனர்.
  • உத்தராயணத்தில் பங்குனி 3ம் தேதியும் தக்ஷிணாயணத்தில் புரட்டாசி 3ம் தேதியும் சூரிய பூஜை நடந்து வந்தது. தற்போது ஒளிக்கதிர்கள் மூல மூர்த்தி மீது படுவதில்லை.
  • திருப்பாற்றுறை இறைவனைத்  தனி வில்வம் கொண்டு 1008 நாமங்களால் இத்தலப் பதிகத்தைப் பாடித் துதிப்பதாலும் வேண்டுபவர் மனோபீஷ்டம் சித்தி அடையும்.
  • இவ்வாலயம் முதல் பராந்தகச் சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
  • பிற்காலத்தில் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது.
  • இத்தலத்தைப் பற்றிப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பதினாறு உள்ளன. அவை முதற்பராந்தகன் பரகேசரி வர்மனான விக்கிரமசோழன், இராஜராஜன், இராஜேந்திர சோழ தேவன் காலத்தன.
  • கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீலி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் திருநாமம் “திருப்பாற்றுறை மகாதேவர்”, “திருப்பால்துறை நாயனார்”, “திருப்பால்துறை உடையார்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
  • முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடமும், ஆண்டார் எம்பிரானார் மடம் எனப்பெரிய லிங்கிய சந்தானத்து மடமும், திருவானைக்கா திருஞானசம்பந்தர் மடமும், நாற்பத்தெண்ணாயிரவர் திருமடமும் இருந்தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு அரசர்கள் நிலம் வழங்கிய செய்தியும் குறிக்கப்படுகின்றன.
  • ஏனைய கல்வெட்டுக்கள் திருக்கோயிலுக்கு விளக்கிற்காக நிலமும், பசுவும், ஆடும் விட்ட செய்தியை அறிவிப்பன. இவையன்றி, கோயிலுக்கு வட பக்கத்தில் காக்கும் நாயகன் மடம் என்ற ஒன்று இருந்ததாகவும் அதற்கு மும்முடிச் சோழ மங்கலத்துச் சபையார் நிலமளித்ததாகவும் தெரிகிறது.
  • திருப்பனம்பூதூர் பரமேசுவரருக்கு அரிகுலகேசரிதேவரால் உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து நிலம்விட்ட செய்தியும் அறியப்படுகிற்து.
முந்தைய தலம்<திருமாந்துறை

 அடுத்த தலம்>திருஆனைக்கா

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவானைக்காவிலிருந்து 10-கி. மீ. தொலைவில் உள்ளது. 'திருச்சிமெயின்கார்டு கேட்'டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும். தொடர்பு : 0431 - 2460455
Loading map...

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

கற்குடி (உய்யக்கொண்டான்மலை, உய்யக்கொண்டான்திருமலை)

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருக்கஞ்சனூர்

திருக்கூடலையாற்றூர்