இறைவர் திருப்பெயர்: முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.
இறைவியார் திருப்பெயர்: ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை, முயங்குபூண்முலையம்மை, ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம், நொய்யல் ஆறு
வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர்.
Sthala Puranam
முருகப்பெருமான் வழிபட்ட தலம். அதனால் முருகன் பூண்டி எனப் பெயர் பெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவிப் பூஜை செய்தார்.
இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. கொடுகு வெஞ்சிலை (7.49); பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); சேக்கிழார் - ஆரூரர் அவர் தமக்கு (12.37.164,165 & 168) கழறிற்றறிவார் நாயனார் புராணம், செறிவுண்டு (12.52.7) முனையடுவார் நாயனார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி), செற்றார் தம் புரம் எரித்த (12.64.2) அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம், (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி).

Specialities

எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.Contact Address