இறைவர் திருப்பெயர்: மரகதாசலேசுவரர், மரகத நாதர்.
இறைவியார் திருப்பெயர்: மரகதவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்:அம்பிகைஅம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்), சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam





தற்போது மக்கள் வழக்கில் திருவிங்கநாதலை என்று வழங்குகிறது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் (1.70); நக்கீரதேவ நாயனார் - 1. அடியும் முடியும் (11.11) திருஈங்கோய்மலை எழுபது; பாடல்கள் : அப்பர் - ஆல நிழலிருப்பர் (6.17.3), பெரும்புலியூர் விரும்பினார் (6.51.6), நெருப்பனைய திருமேனி (6.54.7), பொழிலானைப் (6.60.10); மாணிக்கவாசகர் - சேவகன் ஆகித் (8.2.84 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல், ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி (8.4.158 வது வரி பாடல்) போற்றித் திருவகவல், ஏறும் பழிதழை யேன் (8.12.24) சேட்படை,வகுத்துரைத்தல், திருக்கோவையார்; பரணதேவ நாயனார் - இடமாய எவ்வுயிர்க்கும் (11.24.96) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - வையார் மழுப்படை (11.30.16) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - பண்பயில் வண்டு (12.28.322 & 323) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், பரவி அப்பதிகத் (12.29.85) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.
சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.
நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது 'ஈங்கோய் எழுபது ' என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.
சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.
ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர். ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விசேஷமானது என்பர். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் ' என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.
Contact Address