இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.
இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.
தல மரம்:
தீர்த்தம் : அப்பர் தீர்த்தம். சிவ கங்கை
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், உமாதேவி. முதலியோர்
Sthala Puranam
ஞீலி - இது ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.
இறைவன் அப்பர்பெருமானுக்கு பொதி சோறளித்துப் பசியைப் போக்கிய தலம்.
இங்கு வசிட்டமுனிவருக்கு நடராசப் பெருமான் நடனக் காட்சியருளியதால், இத்தலம் மேலைச்சிதம்பரம் என்றும் பெறுகின்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஆரிடம் பாடிலர் (3.14); அப்பர் - 1. உடையர் கோவண (5.41); சுந்தரர் - 1. காருலாவிய நஞ்சை (7.36); பாடல்கள் : அப்பர் - இடிப்பான்காண் (6.08.2), சீரார் புனற்கெடில (6.07.9), படவரவ மொன்று (6.20.3), பாரார் பரவும் (6.22.1), பகலவன்றன் (6.33.10), முந்தி யிருந்தாயும் (6.41.5), வீழி மிழலை (6.70.7); சுந்தரர் - முந்தையூர் (7.31.1); பரணதேவ நாயனார் - உருவு பலகொண்டு (11.23.93) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - மற்றப் பதிகள் (12.21.303,304,308,309 & 310) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்; நீடு திரு வாச்சிராமம் (12.28.321 & 328) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அப்பதி நீங்கி (12.29.83) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : திருப்பைஞ்ஞீலி
Specialities
ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.
மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)
இரண்டாங் கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த இடமான - கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் "பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் " என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார்.
Contact Address