இறைவர் திருப்பெயர்: காசியாரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்
இறைவியார் திருப்பெயர்: ஏலவார் குழலி
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, அமிர்த புஷ்கர்ணி
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், விசுவாமித்ரர்
Sthala Puranam
பூளைச் செடியைத் தல மரமாக பெற்றதால், இப்பெயர் பெற்றது.
பஞ்சாரண்யங்கள் ஐந்தில் நான்காகத் திகழும் தலம்.
காசி ஆரண்யம் என்பது இதன் வட மொழிப்பெயர் ஆகும்.
திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது எழுந்த ஆல கால விஷத்தை சிவபெருமான் உகந்து பருகித் தன் கண்டத்தில் வைத்து, அகில உலகங்களையும் காத்ததால் ஆலம் குடித்தவனாக ஆனான். உலக வழக்கில் அவனை ஆலங்குடியான் (ஆலங்குடியைச் சேர்ந்தவன் என்ற பொருளில்) என்று மக்கள் அழைக்கிறார்களே என்று சிலேடையாகக் காளமேகப்புலவர் பாடி, அவ்வாறு அவன் ஆலம் குடிக்காவிட்டால் அனைத்து உயிர்களும் மாயந்திருக்க வேண்டியிருக்கும் அல்லவா என்று வினவுகிறார்.
" ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் எனு ஆர் சொன்னார் -- ஆலம்
குடியானே யாகில் குவலயத்தோர் எல்லாம்
மடியாரோ மண் மீதினில்."
கஜமுகாசுரனால் தேவர்களுக்கு வந்த ஆபத்தை நீக்கி அவர்களைக் காத்தபடியால், விநாயகப்பெருமான், கலங்காமல் காத்த கணபதி எனப்படுகிறார்.
அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்ததால் அந்த இடம் திருமணமங்கலம் எனப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் இலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர்.
முசுகுந்தன், சுவாசனன் ஆகியோரும் பூசித்துள்ளனர்.
சுந்தரர் இங்கு வந்தபோது வெட்டாற்றில் ஒடக்காரனாக வந்து சிவபெருமான் அருளியதாகச் செவிவழிச் செய்தி குறிப்பிடுகிறது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சீரார் கழலே (2.36); பாடல்கள் : அப்பர் - பெரும்புலியூர் விரும்பினார் (6.51.6) சேக்கிழார் - அப்பதியில் அமர்கின்ற (12.28.399) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மேலும் காண்க :
Contact Address