இறைவர் திருப்பெயர்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இலட்சுமி.
Sthala Puranam
விடந்தீண்டி இறந்த காதலனை எண்ணிப் புலம்பிய நங்கையின் குரல்கேட்டுவந்து, அவளுடைய துயரைக் கண்டு, இறந்தவனை உயிர் பெறச் செய்த திருஞானசம்பந்தர், இருவருக்கும் திருமணம் நிகழ்த்திய பதி.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அங்கமும் வேதமும் (1.06), 2. சடையா யெனுமால் (2.18); அப்பர் - 1. பெருகலாந் தவம் பேதமை (5.88); பாடல்கள் : சம்பந்தர் - நெற்குன்றம் (2.39.9); அப்பர் - மங்குல் மதிதவழும் (6.02.1), செல்வப் புனற்கெடில (6.07.1), கொடிமாட நீடெருவு (6.13.1), நடையுடைய (6.22.5), புலிவலம் புத்தூர் (6.70.11); சுந்தரர் - வீழக் காலனைக் (7.12.1), மருகல் உறைவாய் (7.47.5); நம்பியாண்டார் நம்பி - வயலார் மருகல் (11.35.49) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, குழகனைப் பாடிக் (11.37.7) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆருயிரை மீட்டன் (11.38.28) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, சயமி குத்தரு (11.39.18) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், மன்னன் மருகல்விடம் (11.40.5) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; சேக்கிழார் - சீர் தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், திருமருகல் நகரின் கண் (12.28.472,476,477,481,484,485 & 486) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், உள்ளும் புறம்பும் (12.55.1) செருத்துணை நாயனார் புராணம்.
Specialities
இத் தல இறைவனின் அருளால், தடைபட்ட திருமணங்கள் கைகூடும். மேலே குறிக்கப்பட்டுள்ள "சடையா யெனுமால்" என்ற பதிகத்தை ஓத, தடைப்பட்ட திருமணம் கூட கைகூடும்.
Contact Address