மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. 4.56.1
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
ஒடிச் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ. 5.50.7
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே. 5.50.8
சுந்தரர் தேவாரம்
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.1
தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.7
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 7.55.4
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே. 7.58.10
நாளும் இன்னிசை யால்த்மிழ் பரப்பும்
ஞான சம்பந்த நுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங்கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே 7.62.8
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே. 7.67.5
நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே 7.78.10
பரந்த பாரிடம் ஊரிடைப் பலி
பற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கிடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளிதிரே 7.88.8
ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.9
ஒன்பதாம் திருமுறை
பாடலங் காரப் பரிசிகா சருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற் கெவ்விடத் தேனே. 9.5.12
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியகோன் றன்னையும் ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே 9.19.4
பதினோறாம் திருமுறை
திருக்கழுமல மும்மணிக்கோவை
...................
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பெருவத்து வளர்பசி வருத்த
'அன்னா யோ'வென் றழிப்பமுன் நின்று
ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து 'தந்தார் யார்' என
'அவனைக் காட்டுவன் அப்ப, வானார்
தோஒ டுடைய செவியன்' என்றும்
'பீஇடுடைய பெம்மான்' என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே. 9.850
திருத்தொண்டர் திருவந்தாதி
வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. 11.33-நம்பி
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. 11.34-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி - 11.12.4-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - 11.12.5-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை - 11.12.6-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை - 11.12.7-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் - 11.12.8-நம்பி
ஆளுடையபிள்ளையார் திருத்தொகை - 11.12.9-நம்பி
பெரியபுராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம்
Other stotras
saundarya lahari - shankara bhagavatpAda
Tava stanyam manye dharanidharakanye hridayatah
Payahparavarah parivahati sarasvatamiva
Dayavatya dattam Dravida Shishur asvadya tava yat
Kavinam praudhanam ajani kamaniyah kavayita.
[O Parvati! I am convinced that the milk flowing from Your breast -- like unto the milk of the Milky Main --, is truly the gushing of the Word. For when You, the compassionate One, fed the Dravidian infant with Your breast-milk, did he not become the foremost among the celebrated poets?]
See also: History of gyAnacambandha nAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais