logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை English Translation Part 4

தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 
 

Thirugyanasambandhar Thevaram - First Thirumurai - Part 4

 English Translation and Tamil Explanation

(Copyright Courtesy: Socio Religious Guild, Tirunelveli)

 

பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3

 

திருச்சிற்றம்பலம்

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
93. திருமுதுகுன்றம் (திரு இருக்குக் குறள்)

திருத்தல வரலாறு மற்றும் பதிக வரலாறு:  
12ஆம் பதிகம் பார்க்கவும் 

93. THIRU-MUTHU-KUN-DRAM (THIRU-IRUKKU-K-KURALL)

HISTORY OF THE PLACE AND INTRODUCTION TO THE HYMN

See Twelfth Hymn.
திருச்சிற்றம்பலம்

93. திருமுதுகுன்றம் 
திரு இருக்குக் குறள் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

நின்றுமலர்தூவி, இன்றுமுதுகுன்றை 
நன்றுமேத்துவீர்க், கென்றுமின்பமே. 1

நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை 
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

பொருள்: இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவனை மலரால் அருச்சித்து 
நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

குறிப்புரை: இன்றைக்கே முதுகுன்றை மலர்தூவி ஏத்தும் உங்களுக்கு என்றைக்கும் இன்பமாம் 
என்கின்றது. ஒருநாள் வழிபாட்டிற்கு நிலைத்த இன்பம் வரும் என்கின்றது. 
Ye devotees! should you, this day, stand before Lord Civan in Thiru-muthu-kun- dram, offer flowers at His Holy Feet and adore Him with deep devotion, you will enjoy holy bliss forever.
அத்தன்முதுகுன்றைப், பத்தியாகிநீர் 
நித்தமேத்துவீர்க், குய்த்தல்செல்வமே. 2

அத்தன் முதுகுன்றை, பத்திஆகி, நீர், 
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

பொருள்: நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி 
நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.

குறிப்புரை: உய்த்தல் செல்வமே - பொருந்துதல் செல்வமேயாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம். 
Ye devotees! With piety and sincerity if you daily worship Lord Civan who is the Supreme of Thiru-muthu-kun-dram, your prosperity will be ever on the increase.
ஐயன்முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று 
கைகள்கூப்புவீர், வையமுமதாமே. 3

ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று, 
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

பொருள்: திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான 
பொய்கள் இன்றி உண்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் 
உம்முடையதாகும்.

குறிப்புரை: ஐயன் - தலைவன். பொய்யில்லாதவருக்கு உலகமே உரிமையாம் என்பதை விளக்கியவாறு. 
Ye devotees! Without any falsities in your ways of adoration, if you worship with folded hands, Lord Civa, the Supreme of Thiru-muthu-kun-dram with all sincerity and devotion, the whole world will be yours (you will become a world renowned personality).

ஈசன்முதுகுன்றை, நேசமாகிநீர் 
வாசமலர்தூவப், பாசவினைபோமே. 4

ஈசன் முதுகுன்றை நேசம்ஆகி நீர் 
வாசமலர் தூவ, பாசவினை போமே,

பொருள்: திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் 
அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.

குறிப்புரை: நேசமாகி - அன்பாகி. பாசவினை - பாசமும் வினையும். 
Ye devotees! Worship in sheer love, by strewing fragrant flowers at the Holy Feet of Civan, the Supreme Lord of the Universe enshrined in Thiru-muthu-kun-dram. Your bad karma and its evil effects will disappear from you.

மணியார்முதுகுன்றைப், பணிவாரவர்கண்டீர் 
பிணியாயினகெட்டுத், தணிவாருலகிலே. 5

மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர்கண்டீர், 
பிணிஆயின கெட்டுத் தணிவார் உலகிலே.

பொருள்: அழகிய திருமுதுகுன்றத்து இறைவனைப் பணிபவர்கள், பிணிகளில் இருந்து 
விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.

குறிப்புரை: மணி - அழகு, முத்துமாம். தணிவார் - அமைதி உறுவார்கள். 
Those who adore Civan enshrined in the renowned city Thiru-muthu-kun-dram will 
get relieved from further ailments and will lead a peaceful life in this world.

மொய்யார்முதுகுன்றில், ஐயாவெனவல்லார் 
பொய்யாரிரவோர்க்குச், செய்யாளணியாளே. 6

‘மொய் ஆர் முதுகுன்றில் ஐயா’ என வல்லார் 
பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.

பொருள்: அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீங்கள், ‘ஐயா’ 
என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத 
நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உங்களுக்கு அணியனள் ஆவாள்.

குறிப்புரை: மொய் - நெருக்கம், ஐயா எனத் தோத்திரிக்க வல்லவராய இரவலர்க்கு இல்லை என்று 
பொய்யும் சொல்லாதவர்களுக்குச் செய்யவள் அணியள் ஆவாள் என்றவாறு. 
Lord Civan is enshrined in Thiru-muthu-kun-dram where beloved persons in large numbers gather to worship Him. Ye devotees! If you offer worship to this Civan with sincere love, declaring “Oh sire - you are our Father!", you will never say 'No' to those who solicit your help, the goddess ‘Thirumagal’, goddess of wealth, will always be near you ready to shower grace on you.

விடையான்முதுகுன்றை, இடையாதேத்துவார் 
படையாயின சூழ, உடையாருலகமே. 7

விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் 
படைஆயின சூழ, உடையார், உலகமே:

பொருள்: விடை ஊர்தியை உடைய திருமுதுகுன்றத்து சிவபிரானை இடையீடுபடாது 
ஏத்துகின்றவர் படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவர் ஆவர்.

குறிப்புரை: இடையாது - இடையீடு படாது. உலகம் உடையார் - சக்கரவர்த்தியாவர். 
Lord Civan of Thiru-muthu-kun-dram owns a bull as vehicle to ride on. Those who worship this Civan with all devotion and without any break will rise to such high status as 'Emperor' and rule over the world having large and varied types of defence forces.

பத்துச் தலையோனைக், கத்தவிரலூன்றும் 
அத்தன்முதுகுன்றை, மொய்த்துப்பணிமினே. 8

பத்துத் தலையோனைக் கத்த விரல் ஊன்றும் 
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே!

பொருள்: பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை 
ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று 
பணிவீராக.

குறிப்புரை: மொய்த்து - நெருங்கி. 
Oh! Ye devotees! Go in large numbers near unto Lord Civan of Thiru-muthu- kun-dram and worship Him. He is our valiant Supremo who pressed His toe on mount Kailash and made the ten headed Raavanan to cry aloud as he was unable to bear the weight of the mountain on his head and shoulders.

இருவரறியாத, ஒருவன்முதுகுன்றை 
உருகிநினைவார்கள், பெருகிநிகழ்வோரே. 9

இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை 
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

பொருள்: திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் 
விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.

குறிப்புரை: இருவர் - அயனும் மாலும். 
Lord Civan of Thiru-muthu-kun-dram is beyond the comprehension (even of) Thirumaal and Brahma. Those who contemplate on, and adore Him with sincerity and melting love, will live in all splendour.

தேரரமணரும், சேரும்வகையில்லான் 
நேரின்முதுகுன்றை, நீர்நின்றுள்குமே. 10

தேரர் அமணரும் சேரும் வகை இல்லான் 
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே.

பொருள்: புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத 
சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின், நீர் நேரில் நின்று தியானியுங்கள்.

குறிப்புரை: உள்கும் - தியானியுங்கள். 
Lord Civan did not grace the Buddhists and Samanars who do not reach Thiru- muthu-kun-dram and worship Him. Ye devotees! If you get an opportunity to go to Thiru-muthu-kun-dram meditate on and worship Him.

நின்றுமுதுகுன்றை, நன்றுசம்பந்தன் 
ஒன்றுமுரைவல்லார், என்றுமுயர்வாரே. 11

நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் 
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வாரே.

பொருள்: திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி 
உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

குறிப்புரை: ஒன்றும் உரை - அவன் தான் என வேறின்றி ஒன்றிய உரை. 
The glorious Gnaanasambandan, with all steadfastness sang this hymn on Lord Civan of Thiru-muthu-kun-dram. Those who can chant these ten verses of this hymn will reach excellence in every walk of their life.

திருச்சிற்றம்பலம்

93 ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

94. திருஆலவாய்

திருத்தல வரலாறு:

7ஆம் பதிகம் பார்க்கவும்.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்த சுவாமிகள் மதுரையின் வெளிப்புறம் வந்து சேர்ந்த பொழுது அங்கு
குலச்சிறையார் எதிர்கொண்டு வணங்கி போற்றி அழைத்துச்சென்றார்கள். உடன்
வரும் அடியார்கள் ‘இது தான் திருஆலவாய்’ என காட்டக்கண்டு கரம்குவித்தருளி பதிகம்
பாடித் திருக்கோயிலை அடைந்தார்கள். ஆலவாய் அண்ணலை ஆராத அன்பினுடன் வழிபட்டுப்
புளகம் மெய் எல்லாம் போர்ப்ப, கண்ணீர் வார, ‘நீலமாமிடற்று ஆலவாயினான்’ 
என்னும் மூலமாகிய திருவிருக்குக்குறளை மொழிந்தார்கள். அடியார்களோடு சிவானந்த
வாரிதியில் திளைத்தார்கள்.
HISTORY OF THE PLACE

See 7th Hymn.

INTRODUCTION TO THE HYMN

94. THIRU-AALAVAAY

Beholding Aalavaai from the outskirts of Madurai, our Saint hailed it in a hymn. Then, he arrived at the temple and adored the Lord-God. He prostrated before Him times without number. Tears cascaded from his eyes. His divine frame glowed in splendour. Then he hailed the God of Aalavaai in the hymn that is as follows:

திருமுறை 94. திருஆலவாய் 
திருச்சிற்றம்பலம்

94. திருஆலவாய்

பண் : குறிஞ்சி திரு இருக்குக் குறள் 
ராகம் : குறிஞ்சி

நீலமாமிடற், றாலவாயிலான் 
பாலதாயினார், ஞாலமாள்வரே. 1

நீலமாமிடற்று ஆலவாயிலான்- 
பால்அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

பொருள்: நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திருஆலவாய் இறைவனைச் சென்று 
தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.

குறிப்புரை: பாலது ஆயினார் - சாமீப்யம் அடைந்தவர்கள். 
Lord Civan whose neck is of dark blue colour, similar to sapphire gem is enshrined in Thiru-aalavaai temple. Those who can go near and worship Him, and contemplate on Him in their mind as though they are in proximity to Him will virtually be like rulers in this world. 
Note: This state is one of four Patavi  called 'Saameeppiyam ( சாமீபம்). The other three are Saaloogam; Saaroopam and Saayuchchiyam சாலோகம்; சாரூப்பியம்; சாயுச்சியம்).

ஞாலமேழுமாம், ஆலவாயிலார் 
சீலமேசொலீர், காலன்வீடவே. 2

ஞாலம்ஏழும் ஆம் ஆலவாயிலார் 
சீலமே சொலீர், காலன் வீடவே!

பொருள்: எம பயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளி இருக்கும் ஆலவாய் 
இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.

குறிப்புரை: ஞாலம் ஏழுமாம் ஆலவாயில் - உலகேழும் உளதாதற்குக் காரணமாகிய துவாதசாந்தப் 
பெருவெளியாகிய ஆலவாயில். சீலம் - குணங்கள். வீட - அழிய. 
Lord Civan of Thiru-aalavaai is enshrined in all the seven worlds. Ye devotees! worship Him and proclaim His divine glory by chanting the holy scriptures. This will enable you to live without the fear of death. The implication is that, Yama, the god of death will not come near the devotees of Lord Civan. 
Note: It is also said that the cause for the existence of the seven worlds is this place "Thiru-aalavaai". This is also known as 'Thuvaatha Saantha-p-peruvali' .

ஆலநீழலார், ஆலவாயிலார் 
காலகாலனார், பாலதாமினே.  3

ஆலநீழலார், ஆலவாயிலார், 
காலகாலனார்பால்அது ஆமினே!

பொருள்: கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை 
அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவனை மனத்தால் 
அணுகியிருப்பீர்களாக.

குறிப்புரை: ஆலநீழலார் - வடஆல விருட்சத்தின் நிழலில் இருப்பவர். 
Lord Civan of Thiru-aalavaai once was seated under the shade of a banyan tree. Also He is the Lord Hero who killed Kaalan, the death god by kicking him down. Ye devotees, at least mentally create a state as though you are near Him and adore Him.

அந்தமில்புகழ், எந்தையாலவாய் 
பந்தியார்கழல், சிந்தைசெய்ம்மினே. 4

அந்தம்இல் புகழ் எந்தை ஆலவாய 
பந்தி ஆர் கழல் சிந்தைசெய்ம்மினே!

பொருள்: ஆலவாய்க் கோயிலில் உள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத 
புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.

குறிப்புரை: அந்தமில்புகழ் - எல்லையற்ற புகழ். பந்தியார் - இடமாகக் கொண்டவர். பாசங்களால் 
கட்டுண்ணாதவர் என்றுமாம். 
Ye devotees! contemplate on and adore the Holy Feet of Lord Civan of Thiru- aalavaai. His Holy Feet is the place for His interminable glory.

ஆடலேற்றினான், கூடலாலவாய் 
பாடியேமனம், நாடிவாழ்மினே. 5

ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் 
பாடியே, மனம் நாடி, வாழ்மினே!

பொருள்: வெற்றியோடு கூடிய எருதை வாகனமாகக் கொண்ட சிவபெருமான் 
நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயில், வீற்றிருந்து அருள் புரிந்து வருகின்றார். அவர் 
புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.

குறிப்புரை: ஆடல் ஏறு - வெற்றியோடு கூடிய இடபம். நாடி - விரும்பி, 'அடல் ஏறு' ஆடல் ஏறு என 
நீட்டித்தது எனலும் கூடும். 
Ye devotees! chant the glory of Thiru-aalavaai also known as 'Naan-maada-k- koodal' (நான் மாடக் கூடல்). Lord Civan of this place rides on His victorious bull. Seek Him in your mind, adore Him and flourish.

அண்ணலாலவாய், நண்ணினான்றனை  
எண்ணியேதொழத், திண்ணமின்பமே. 6

அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை 
எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

பொருள்: தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலில் வீற்றிருந்து 
அருன் வழங்கி வருபவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் 
இன்பம் பெறுவது திண்ணமாகும்.

குறிப்புரை: எண்ணி - தியானித்து. திண்ணம் - உறுதி. 
Lord Civan is our merciful chief god. He is enshrined at the Aalavoi temple in Madurai city where He is known as Lord Somasundarar. Think on Him and on Him alone and adore Him. You are sure to enjoy the bliss.

அம்பொனாலவாய், நம்பனார்கழல் 
நம்பிவாழ்பவர், துன்பம்வீடுமே. 7

அம் பொன்-ஆலவாய் நம்பனார்-கழல் 
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

பொருள்: அழகிய பொன் மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய 
திருவடிகளே நமக்குச் சார்வாகும், என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.

குறிப்புரை: நம்பனார் கழல் நம்பி - இதுவே எமக்கு இம்மையும் மறுமையும் இன்பமும் வீடும் என்று உறுதி 
கொண்டு. 
Lord Civan is enshrined in the golden Aalavoi temple. Ye devotees, be confident that the Holy Feet of this Supreme Being is the only source for your solace. You hail and worship Him. Your miseries will surely disappear.
அரக்கனார்வலி, நெருக்கனாலவாய் 
உரைக்குமுள்ளத்தார்க், கிரக்கமுண்மையே. 8

அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் 
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே.

பொருள்: அரக்கனாகிய பெருவலி படைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய 
ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும் (இத்தகு
உள்ளத்தார்க்கு இயல்பாகவே உயிர்கள் மாட்டு இரக்க உணர்வு கூடும் எனப் பொருள்
கோடலும் சாலும்).

குறிப்புரை: நெருக்கன் - நெருக்கியவன். 
Lord Civan of the Aalavaai temple crushed the mightiest of Asuraas Raavanan by His toe. Those who sing soulfully the glory of this Lord Hero, will definitely be graced by Him (We may also take it that compassionate feelings will naturally arise in those who sing the glory of Lord Civan).

அருவனாலவாய், மருவினான்றனை 
இருவரேத்தநின், றுருவமோங்குமே. 9

அருவன், ஆலவாய் மருவினான் தனை 
இருவர் ஏத்த, நின்று உருவம் ஒங்குமே.

பொருள்: அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமன் ஆகிய இருவர் 
போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

குறிப்புரை: அருவன் - அருவமானவன். இருவர் - அயனும் மாலும். 
Lord Civan of the Aalavoi temple is formless. However, He took the form of a tall column of blazing fire, when Thirumaal and Brahma worshipped Him.

ஆரநாகமாம், சீரனாலவாய்த் 
தேரமண்செற்ற, வீரனென்பரே. 10

‘ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த் 
தேர் அமண் செற்ற வீரன்’ என்பரே.

பொருள்: பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் 
விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று 
அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.

குறிப்புரை: ஆரம் - மாலை. சீரன் - புகழுடையவன். தேரர் - புத்தர். அமண் - அமணர். 
Servitors praise and adore the glory of Lord Civan of the Aalavaai temple by saying that He wears the snake as His garland and He is the Hero who quelled the Buddhists and Samanars.

அடிகளாலவாயப், படிகொள்சம்பந்தன் 
முடிவிலின்தமிழ், செடிகணிக்குமே.  11

அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், 
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.

பொருள்: ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த 
ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் 
போக்குவதாகும்.

குறிப்புரை: செடிகள் - வினைகள். 
Gnaanasambandan was fully united in the grace of Lord Civan of the Aalavaai temple. He sang on this greatest god, this garland of Tamil hymn of unending sweetness. This will cure the singer of his cruel karma.

திருச்சிற்றம்பலம்

94ஆம் பதிகம் முற்றிற்று

திருமுறை 95. திருவிடைமருதூர் 
உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
95. திரு இடைமருதூர்

திருத்தல வரலாறு:

32ஆம் பதிகம் பார்க்கவும். 
HISTORY OF THE PLACE

See 32nd Hymn.

INTRODUCTION TO THE HYMN

95. THIRU-IDAI-MARUTHOOR

From Thiru-naa-ke-c-charam our saint proceeded to Thiru-idai-maruthoor singing a hymn on the way. Arriving at the holy place, he entered into the temple, adored Civan and sang the following hymn. 
Note: The message of this hymn is this. The Lord who dances in the burning ghat burns away the sins of all penitent worshippers. He burns away karma even as He burnt away the hostile three citadels. The bull is an embodiment of Dharma. Constant worship of Civa keeps the devotees in prosperity that knows no decrease. Flower-offerings to Civa are efficacious. The recitation of the hymns of our young saint attenuates and eventually annuls the karma of those that sing on His glory.

திருச்சிற்றம்பலம்

95. திருஇடைமருதார்

பண் : குறிஞ்சி திரு இருக்குக் குறள் 
ராகம் : குறிஞ்சி

தோடொர்காதினன், பாடுமறையினன் 
காடுபேணிநின், றாடுமருதனே. 1

தோடு ஓர் காதினன்; பாடு மறையினன் - 
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

பொருள்: திருஇடைமருதூர் இறைவன் தோட்டை, தனது இடத் திருச்செவியில் 
அணிந்தவன். நான்கு வேதங்களைப் பாடுபவன். சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று 
ஆடுகின்றவனும் ஆவான்.

குறிப்புரை: பேணி - விரும்பி. 
Lord Civan of Thiru-idai-maruthoor wears an ola roll in His left ear. He sings all the four Vedas. He prefers to dance in the burning ghat.
கருதார்புரமெய்வர், எருதேயினிதூர்வர் 
மருதேயிடமாகும், விருதாம்வினைதீர்ப்பே. 2

கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்; 
மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.

பொருள்: தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், 
எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய சிவபெருமானுக்கு 
திருவிடைமருதூரே விரும்பி உறையும் இடம் ஆகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். 
தீய வினைகள் தீர்ந்து விடும்.

குறிப்புரை: கருதார் - பகைவர். விருது ஆம் - பெருமை உளதாம். வினை தீர்ப்பு ஆம் - வினைகள் 
தீர்தலை உடையனவாம். 
Lord Civan destroyed all the three citadels of the Asuraas who ignored Him. He rides happily on His bull. He loves to reside in Thiru-idai-maruthoor. Ye devotees! If you worship Him you will become famous; and your bad karma will have no effect on you.

எண்ணுமடியார்கள், அண்ணன்மருதரைப் 
பண்ணின்மொழிசொல்ல, விண்ணுந்தமதாமே. 3

எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை, 
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே.

பொருள்: மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்களின் தலைமையாளராய் விளங்கும் 
மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் 
வசமாகும்.

குறிப்புரை: அண்ணல் - பெருமையிற் சிறந்தவர். பண்ணின் மொழி - தோத்திரங்கள்.
Devotees contemplate in their minds on their lofty and sublime Lord Marutha Vaanar மருதவாணர் - Civan) of Thiru-idai-maruthoor and offer worship to Him. They also praise His glory in tuneful melody. They will have an enjoyable heavenly life.

விரியார்சடைமேனி, எரியார்மருதரைத் 
தரியாதேத்துவார், பெரியாருலகிலே. 4

விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத் 
தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.

பொருள்: விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய 
மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுபவர்.

குறிப்புரை: எரி - மழு, நெருப்பு, தரியாது - தாமதியாது. 
Lord Maruthavaanar of Thiru-idai-maruthoor has spreading matted hair; His ruddy body frame is like that of burning fire. Those who hail Him without any delay (or waste of time) are truly great ones, and will be praised by every one.

பந்தவிடையேறும், எந்தைமருதரைச்  
சிந்தைசெய்பவர், புந்திநல்லரே. 5

பந்த விடை ஏறும் எந்தை மருதரைச் 
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

பொருள்: கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையின் மேல் ஏறி ஊர்ந்து வரும் எந்தையாராகிய 
மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவர் ஆவர்.

குறிப்புரை: பந்தவிடை - கட்டோடு கூடிய இடபம். 
Those who contemplate on Lord Civan, our father also known as Maruthavaanan, who rides the bull (normally) kept tethered, are blessed souls with intellectual clarity.

கழலுஞ்சிலம்பார்க்கும், எழிலார்மருதரைத் 
தொழலேபேணுவார்க், குழலும்வினைபோமே. 6

கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத் 
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே.

பொருள்: ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமை பாகராகிய 
அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துவதற்கு 
உரிய வினைகள் துன்புறுத்தாது அகன்று விடும்.

குறிப்புரை: கழலும் சிலம்பும் ஆர்க்கும் - ஒருகால் கழலும், ஒருகால் சிலம்பும் ஒலிக்கும். உழலும் வினை 
- வருத்தும் வினைகள். 
Lord Maruthavaanar (Civan) of Thiru-idai-maruthoor is concorporate with His consort Umaa Devi. In His right Holy Feet the male anklet known as 'Kazhal' (வீரக்கழல்) made up of a string of little bells will be tinkling; whereas in His left foot the female anklet known as 'Silambu'  will be making a different sound. Those who with all love make it a routine, to worship this beautiful divine Maruthavaanar will stand freed from mortifying karma. The karma will leave them.

பிறையார்சடையண்ணல், மறையார்மருதரை 
நிறையால்நினைபவர், குறையாரின்பமே.  7

பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை 
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே.

பொருள்: பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளர் சிவபெருமான். அவர் 
வேதங்களை அருளியவர். திருஇடைமருதூரில் விளங்கும் இந்த மருதவாணரை நிறைந்த 
மனத்தால் நினைப்பவர் இன்பம் நிறையப் பெறுவர்.

குறிப்புரை: நிறையால் - நிறைவோடு. 
Lord Maruthavaanar of (Civan) Thiru-idai-maruthoor supports the crescent moon in His matted hair. He is the lofty god who authored the Vedas. Those who think of Him wholeheartedly will never be in want of bliss.

எடுத்தான்புயந்தன்னை, அடுத்தார்மருதரைத் 
தொடுத்தார்மலர்சூட்ட, விடுத்தார்வேட்கையே. 8

எடுத்தான் புயம்தன்னை அடுத்தார் மருதரைத் 
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.

பொருள்: கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்கு 
மாலை சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை 
விடுத்தவர்கள் ஆவர்.

குறிப்புரை: எடுத்தான் - கயிலையைத் தூக்கிய இராவணன். வேட்கை - பொருள்கள்மேல் தோன்றும் 
பற்றுள்ளம். 
Lord Maruthavaanar (Civan) of Thiru-idai-maruthoor crushed the shoulders of Raavanan who tried to lift mount Kailash. Those devotees who worship this Maruthavaanar with flowers (and make garlands) would have done away with desire which is the root cause for their future births.

இருவர்க்கெரியாய, உருவமருதரைப் 
பரவியேத்துவார், மருவிவாழ்வரே. 9

இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப் 
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

பொருள்: திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்றவர்
மருதவாணர். அவரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் 
வாழ்க்கையைப் பெறுவர்.

குறிப்புரை: இருவர்க்கு - அயனுக்கும் மாலுக்கும். மருவி - எல்லாவற்றோடும் பொருந்தி. 
Lord Maruthavaanar of Thiru-idai-maruthoor manifested before Thirumaal and Brahma in the form of a tall and big flame of fire. Those devotees who hail and adore this Maruthavaanar will live in all goodness and be blessed with weal.

நின்றுண்சமண்தேரா், என்றுமருதரை 
அன்றியுரைசொல்ல, நன்றுமொழியாரே. 10

நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை 
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.

பொருள்: நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய 
சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.

குறிப்புரை: சமணரும் புத்தரும் என்றைக்கும் மருதப் பெருமானை அன்றிப் பிறவற்றைப் பேசுவதால் 
நல்லதைச் சொல்லமாட்டார்கள். 
The Samanars who eat while standing as also the Buddhists, will always be speaking everything except on tidings of Lord Maruthavaanar of Thiru-idai-maruthoor. Therefore their words are bereft of truth.

கருதுசம்பந்தன், மருதரடி பாடிப் 
பெரிதுந்தமிழ்சொல்லப், பொருதவினைபோமே. 11

கருது சம்பந்தன், மருதர் அடி பாடி, 
பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே.

பொருள்: இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் 
திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் 
துன்புறுத்திய வினைகள் போகும்.

குறிப்புரை: பொருதவினை - இதுவரையில் வருத்திவந்த வினை. 
Thiru Gnaanasambandan always cherishes the grace of Lord Civan. He worshipped the Holy Feet of Maruthavaanar of Thiru-idai-maruthoor and sang this hymn. Those devotees who can chant this garland of Tamil will get rid of their bad karma which was troubling them so far.
திருச்சிற்றம்பலம்

95ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் - 
திருச்சிற்றம்பலம் 
96. திரு அன்னியூர்

திருத்தல வரலாறு:

திருஅன்னியூர் என்ற திருத்தலம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். பொன்னூர் 
எனவும் வழங்கப் பெறும். மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துகளில் செல்லலாம். வருணன் 
பூசித்துப் பேறுபெற்ற தலம். சுவாமி பெயர் ஆபத்சகாயேசுரார். அம்மையின் பெயர் பெரிய 
நாயகியம்மை. தீர்த்தம் வருண தீர்த்தம்.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தர் திருக்குறுக்கைப் பதியை வணங்கி, அன்னியூரை அடைந்தார்கள். 
அங்கு எழுந்தருளியுள்ள ஆபத்சகாயநாதர் அடியிணைபோற்றி ‘மன்னியூரிறை’ என்னும் 
இப்பதிகத்தை அருளிச் செய்தார். 
HISTORY OF THE PLACE

96. THIRU-ANNIYOOR

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu and is called Ponnoor. It can be reached by bus from Mayilaaduthurai and Manalmedu. 
The name of God of this place is Aabathsakaayesurar and that of the Goddess is Periyanaayaki Ammai. The sacred ford is Varuna Theerththam. Varunan offered worship here and obtained salvation.

INTRODUCTION TO THE HYMN

From Thirukkurukkai our saint arrived at Anniyoor where he hailed the presiding deity and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

96. திரு அன்னியூர்

பண் : குறிஞ்சி திரு இருக்குக் குறள்
ராகம் : குறிஞ்சி

மன்னியூரிறை, சென்னியார்பிறை 
அன்னியூரமர், மன்னுசோதியே. 1

மன்னி ஊர் இறை; சென்னியார் பிறை - 
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

பொருள்: திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை 
சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் 
தலைவனாய் விளங்குபவன்.

குறிப்புரை: சென்னி - தலை. சோதி மன்னி ஊர் இறை என முடிக்க. 
Lord Civan is enshrined in Thiru-anniyoor with a body frame blazing bright. He holds the crescent moon in His holy head. Also He is enshrined at various temples in many different places, gracing devotees who approach Him and ruling over them.
பழகுந்தொண்டர்வம், அழகனன்னியூர்க் 
குழகன்சேவடி, தொழுதுவாழ்மினே. 2

பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க் 
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!

பொருள்: இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் 
அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் 
செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

குறிப்புரை: வம் - வாருங்கள். குழகன் - இளையவன். 
Ye servitors! You that are united mentally and move closely with Lord Civan, do come to Thiru-anniyoor and worship the holy divine feet of the young and beautiful Civan of this place and flourish.

நீதிபேணுவீர், ஆதியன்னியூர்ச் 
சோதிநாமமே, ஒதியுய்ம்மினே. 4

நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் 
சோதி, நாமமே ஒதி உய்ம்மினே!

பொருள்: நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே, அன்னியூரில் விளங்கும் ஒளி 
வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதி உய்வீர்களாக. 
Ye devotees! You that show respect to justice and lead your life accordingly, pray chant the many divine names of Lord Civan of blazing brightness enshrined in Thiru- anniyoor and flourish.
பத்தராயினீர், அத்தரன்னியூர்ச் 
சித்தர்தாள்தொழ, முத்தராவரே. 4

பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் 
சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.

பொருள்: இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமையாளனாய் அன்னியூரில் 
விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளில் இருந்து 
விடுபட்டவர் ஆவீர். 
Oh! Ye devotees! You are faithful to Lord Civan. You offer worship to the Holy Feet of Lord Civan who is the chief of Thiru-anniyoor. He is an embodiment of pure intelligence clothed in wisdom. You will be relieved from the evil effects of bad karma.

நிறைவுவேண்டுவீர், அறவனன்னியூர் 
மறையுளான்கழற், குறவுசெய்ம்மினே. 5

நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் 
மறைஉளான், கழற்கு உறவு செய்ம்மினே!

பொருள்: மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு 
வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு 
அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

குறிப்புரை: நிறைவு வேண்டுவீர் - குறைவிலா நிறைவாக விரும்புகின்றவர்களே. அறவன் - 
அறவடிவானவன். 
Oh! Ye devotees! You that would like to live with full divine satisfaction in your mind. Lord Civan of Thiru-anniyoor is virtuous and is praised as the Supreme Being, by the four Vedas. You (therefore) create intimate love for His Holy Feet and be closely associated with Him.

இன்பம்வேண்டுவீர், அன்பனன்னியூர் 
நன்பொனென்னுமின், உம்பராகவே. 6

இன்பம் வேண்டுவீர்! ‘அன்பன் அன்னியூர் 
நன்பொன்’ என்னுமின், உம்பர் ஆகவே!

பொருள்: உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக 
விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்கள் ஆகலாம்.

குறிப்புரை: உம்பராக - தேவர்களாக. நன்பொன் என்னுமின் - நல்ல பொன் என்று சொல்லுங்கள். 
Oh! Ye servitors! You that desire to lead a happy worldly life, please adore Lord Civan of Thiru-anniyoor by saying "Oh Lord! You are the weal conferring 'gold like' Supremo of Thiru-anniyoor; You are our dearest one". You can then become one among the Devas.

அந்தணாளர்தம், தந்தையன்னியூர் 
எந்தையேயெனப், பந்தநீங்குமே. 7

‘அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர் 
எந்தையே!' என, பந்தம் நீங்குமே.

பொருள்: அந்தணாளர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என 
அழைக்க மலமாயைகள் நீங்கும்.

குறிப்புரை: பந்தம் - மலமாயையால் விளைந்த கட்டு, 
Oh Lord Civa of Thiru-anniyoor! "You are the Father of all kindly folks of virtue; 
You are our Father". Extol Him thus! Your bad karma will then leave you.

தூர்த்தனைச்செற்ற, தீர்த்தனன்னியூர் 
ஆத்தமாஅடைந், தேத்திவாழ்மினே. 8

தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர் 
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!

பொருள்: காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனிதனாகய அன்னியூர் இறைவனை 
அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

குறிப்புரை: தூர்த்தன் - காமியாகிய இராவணன். தீர்த்தன் - பரிசுத்தமானவன். ஆத்தமா - அன்போடு 
ஆப்தமாக என்பதன் சிதைவு. 
Ye companions! You note that the pure Lord Civa of Thiru-anniyoor is the one who punished Raavanan of carnal tendencies. You proceed to Anniyoor adore Him and be attached to Him and live happily.
இருவர்நாடிய, அரவனன்னியூர் 
பரவுவார்விண்ணுக் கொருவராவரே. 9

இருவர் நாடிய அரவன் அன்னியூர் 
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

பொருள்: திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்டவரும் பாம்பை அணிகலனாகப் 
பூண்டவரும் ஆகிய அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரன் 
ஆவர்.

குறிப்புரை: விண்ணுக்கு ஒருவராவர் - இந்திரன் ஆவர். 
Thirumaal and Brahma went out to reach the Holy Feet and head of Lord Civan in vain. He wears a serpent in His body as an ornament. Those devotees who praise and adore this Lord Civan will become much like Indran in the supernal world.
குண்டர்தேரருக், கண்டன ன்னியூர்த் 
தொண்டுளார்வினை, விண்டுபோகுமே. 10

குண்டர்தேரருக்கு அண்டன் அன்னியூர்த் 
தொண்டுஉளார் வினை விண்டு போகுமே.

பொருள்: சமணர்களாலும், புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர்
இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகளின் முளைக்கும் தன்மை அழியும்.

குறிப்புரை: அண்டன் - அண்ட முடியாதவன். வினை விண்டு போகும் - நெல் வாய் விண்டது போல 
வினை முளைக்குந் தன்மையழியும். 
Lord Civan of Thiru-anniyoor could not be approached by the Samanars and Buddhists. But those devotees who serve sincerely the Lord Civan of this place, will get their bad karma loose any further development. 
Note: Civa is beyond the ken of the Samanars and the Buddhists' comprehension.

பூந்தராய்ப்பந்தன், ஆய்ந்தபாடலால் 
வேந்தனன்னியூர், சேர்ந்துவாழ்மினே. 11

பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால், 
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே!

பொருள்: பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய 
பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக

குறிப்புரை: பந்தன் - ஞானசம்பந்தன் என்பதன் முதற்குறை. பூந்தராய் - சீகாழி. 
Ye companions! You chant the verses of this hymn sung by Gnaanasambandan of Poontharai alias Seekaazhi. These songs were the fruit of his meditation on Lord Civa. Associate yourself with the sovereign Lord Civa of Thiru-anniyoor and flourish in your life.

திருச்சிற்றம்பலம்

96ஆம் பதிகம் முற்றிற்று


உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

97. திருப் புறவம்

திருத்தல வரலாறு:

இத்திருத்தலம் சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று. தலவரலாறு முதல் பதிகம் பார்க்கவும். 
HISTORY OF THE PLACE

See first hymn.

97. THIRU-P-PURAVAM

திருச்சிற்றம்பலம்

97. திருப் புறவம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

எய்யாவென் றித்தானவரூர் மூன்றெரிசெய்த 
மையார்கண் டன்மாதுமை வைகுந்திருமேனிச் 
செய்யான் வெண்ணீறணி வான்றிகழ்பொற பதிபோலும் 
பொய்யா நாவினந்தணர் வாழும்புறவம்மே. 1

எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த 
மைஆர் கண்டன், மாதுஉமை வைகும் திருமேனிச் 
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும் - 
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவ(ம்)மே.

பொருள்: திருப்புறவம் என்னும் சீகாழிப் பதியானது இளையாத வெற்றியை உடைய 
அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டனான சிவபெருமான், உமையம்மையை ஒரு 
கூறாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் அழகிய பதியாகும். இப்பெருமான் சிவந்த 
மேனியனாய் வெண்ணீறு அணிந்தவராக விளங்குகின்றார். இப்பதியில் பொய் எதுவும்
கூறாத நாவினை உடைய அறவோர்கள் வாழ்கின்றனர்.

குறிப்புரை: புறவம் திரிபுரம் எரித்த நீலகண்டர் பதிபோலும் என்கின்றது. எய்யா வென்றி - இளையாத 
வெற்றியை உடைய. தானவர் - அசுரர்கள். மை - விடம். பொய்யா நாவின் அந்தணர் - பொய்யே 
சொல்லாத நாவினை உடைய அந்தணார். அவர்கள் கூறும் உரை, தவறாத நா என்றலுமாம். 
Seekaazhi town is also known as Thiru-p-puravam. Here live Vedic scholars whose tongue never doth utter a lie. Lord Civan who is also called as Neela-kandan destroyed by fire the three citadels of Asuraas whose might is well nigh unassailable. He concorporates with His consort Umaa Devi on the left half of His holy body. He smears His body with white holy ashes and shines in the beautiful Thiru-p-puravam. 
Note: Puravam is one of the twelve names of Seekaazhi. "Poyaa naa” This phrase can also be translated thus "The tongues that know no falsehood".

மாதொரு பாலும்மாலொரு பாலும்மகிழ்கின்ற 
நாதனென் றேத்துநம்பரன் வைகுந்நகர் போலும் 
மாதவி மேயவண்டி சைபாட மயிலாடப் 
போதலர் செம்பொன் புன்னைகொடுக் கும்புறவம்மே. 2

“மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற 
நாதன்" என்று ஏத்தும் நம்பரன் வைகும் நகர் போலும் 
மாதவி மேய வண்டு இசைபாட, மயில் ஆட, 
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவ(ம்) மே.

பொருள்: திருப்புறவம் என்னும் சீகாழிப் பதியானது, ஒரு சமயம் உமையம்மையை ஒரு 
பாகமாகவும், மற்றொரு சமயத்தில் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு
மகிழ்ந்திருக்கின்றவனும், நாதன் எனப் போற்றுகின்றவனுமாகிய சிவபெருமான் 
எழுந்தருளியிருக்கும் நகராகும்.இங்குள்ள குருக்கத்து மரத்தில் மேவிய வண்டுகள் 
இசைபாட, மயில்கள் ஆடுகின்றன. அவற்றிற்குப் பரிசாகப் புன்னை மரங்களின் விரிந்த 
மலர்கள் மகரந்தங்களைப் பொன்னாகச் சொரிகின்ற இயற்கை வளம் நிறைந்த புறவம் 
என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை: ஒருபாதி உமையும் ஒருபாதி மாலுமாக இருக்கும் நாதன் நகர் புறவம் என்கின்றது. மாதவி 
மேய வண்டு - குருக்கத்தியில் மேவிய வண்டுகள். புன்னை போதலர் செம்பொன் கொடுக்கும் புறவம் _ 
மரங்கள் போதாய் இருந்து அலர்ந்து மகரந்தங்களாய செம்பொன்னைக் கொடுக்கும் புறவம்
இதனால் மரங்களும் வள்ளன்மை செய்யும் நகரம் என்றறிவித்தவாறு. 
Bees tunefully hum in musical note while approaching the 'Kurukkaththi' flower . This flower is known as "The common delight of the woods". They blossom in the groves of Thiru-p-puravam where peacocks dance gracefully. In appreciation of the dance of peacocks the Alexandrian laural tree sheds over the peacocks the golden pollen grains from their flowers. In such a natural graceful city of Thiru-p-puravam, our Supreme Lord Civan is enshrined. He happily accommodates in His body frame His consort Umaa Devi; when desired He accommodates Thirumaal in His body in place of Umaa Devi. 
Note: Vishnu is one of the five sakthi's of Civa. Civa's body accommodates him occasionally, as it pleases Him.

வற்றாநதி யும்மதியும்பொதி யுஞ்சடைமேலே 
புற்றாடர வின்படமாட வுமிப்புவனிக்கோர் 
பற்றாயிடு மின்பலியென்ற டைவார்பதி போலும் 
பொற்றா மரையின்பொய் கைநிலாவும் புறவம்மே. 3

வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே 
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப்புவனிக்கு ஓர் 
பற்று ஆய், “இடுமின், பலி” என்று அடைவார் பதிபோலும் - 
பொன்-தாமரையின் பொய்கை நிலாவும் புறவ(ம்)மே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதியானது என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும்
பொருந்திய சடையின்மேல், புற்றை இடமாகக் கொண்ட பாம்பு படத்துடன் ஆடிக்
கொண்டிருக்க ‘எனக்குப் பலி இடுமின்’ என்று பல ஊர்களுக்குச் செல்லும் சிவபெருமானது 
பதியாகும். இப்பெருமான் இவ்வுலகத்திற்கு ஒரு பற்றுக் கோடாக இருக்க எமக்குப் பலி 
இடுமின் என்று வரும் இறைவனது பதி புறவம் ஆகும். இப்பதியில் அழகிய தாமைரைகள் 
மலர்ந்துள்ள பொய்கைகள் உள்ளன (இடுமின் பலி)

குறிப்புரை: இவ்வுலகத்திற்கு ஒரு பற்றுக் கோடாக இருக்க எமக்குப் பலியிடுங்கள் என்று வரும் 
இறைவன் பதி புறவம் என்கின்றது. வற்றா நதி - கங்கை. பொற்றாமரையின் பொய்கை நிலாவும் - 
பொற்றாமரையைப் போல பிரமதீர்த்தம் விளங்குகின்றது. 
Lord Civan holds in His matted hair the river Ganges that never goes dry. Also on His head is the crescent moon and a serpent which normally lives in the ant-hill that dances by dancing and spreading its hood. Lord Civan goes to many towns, meet the household women and says “give me alms”, so that He would be a support for this world. This Lord Civan is enshrined in Thiru-p-puravam where attractive lotus flowers blossom in the pond. 
Note: Civa begs for alms from the devotees for their weal and welfare. It serves no purpose at all for Himself. He is the supreme and He lacks nothing. This infinitely merciful Civa entreats mankind to make a gift of their ignorance to Him. This indeed is the alms He seeks for the weal of mankind. Ignorance which is offered to Civa vanishes the moment it is offered to Him. 
The devotees of Civa should offer their 'all' to Civa. St. Maanickavaachakar said "O Hill-like One, did You not that very day You redeemed and ruled over me, make me your own - My soul, body and all that I owned? Can I, this day, have any sorrows?" - (Kuzhaittha Patthu - Hymn No. 33, Verse 7)

துன்னார் புரமும்பிரமன் சிரமுந்துணி செய்து 
மின்னார் சடைமேலர வும்மதியும் விளையாடப் 
பன்னாளி டுமின்பலியென் றடைவார் பதிபோலும் 
பொன்னாரா புரிநூலந் தணா்வாழும் புறவம்மே. 4

துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து, 
மின்ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட, 
பல்-நாள், ‘இடுமின், பலி.’ என்று அடைவார் பதிபோலும் - 
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவ(ம்)மே.

பொருள்: சிவபெருமான், பகைவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவர், 
பிரமனின் தலைகளில் ஒன்றை அழித்தவர், மின்னல் போல் ஒளிவிடும் அவருடைய 
சடைமுடிமேல் பாம்பும் மதியும் விளையாடுகின்றன. பல நாள்களும் ஊர் ஊராகச் சென்று 
பலி இடுமின் என்று கூறித்திரிகின்றார். இவர் வாழும் ஊர் சீகாழி என்னும் பதியாகும். 
இப்பதியில் பொன்னாலாகிய முப்புரிநூல் அணிந்த அறவோர்கள் வாழுகின்றனர்.

குறிப்புரை: திரிபுரத்தையும் பிரமன் சிரத்தையும் அழித்து, சடைமேல் பாம்பும் மதியும் விளையாட, 
பலியிடுங்கள் என்று வருவார் பதி புறவம் என்கின்றது. பொன் ஆர் புரிநூல் - பொன்னாலாகிய பூநூல். 
Lord Civan destroyed the three citadels of the hostile Asuraas; He plucked one of the five heads of Brahma for his misdemeanour. In His matted hair, which blazes like lightning the unfriendly duo - the serpent and the crescent moon joyfully make merry with each other. For many days He goes about seeking alms. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-puravam where many scholars do live, wearing the sacred three ply thread made of gold.

தேவா அரனேசரணெ ன்றிமையோர் திசைதோறுங் 
காவா யென்றுவந் தடையக்கார் விடமுண்டு - 
பாவார் மறையும் பயில்வோ ருறையும்பதி போலும் 
பூவார் கோலச்சோலை சுலாவும் புறவம்மே. 5

“தேவா! அரனே! சரண்!" என்று இமையோர் திசைதோறும், 
“காவாய்!’ என்று வந்து அடைய, கார்விடம் உண்டு, 
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும் - 
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவ(ம்)மே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதியானது, தேவர்கள் பாற்கடலில் தோன்றிய விடத்தின் 
கொடுமை தாங்காது, திசைதோறும் சூழ்ந்து நின்று, ‘தேவனே! அரனே! உன்னிடம் 
அடைக்கலம் எங்களைக் காப்பாயாக!’ எனச் சரண் அடைந்தபோது, அந்தக் கரிய விடத்தை 
தன் தொண்டையில் பதித்துக் கொண்ட சிவபெருமான் வாழும் பதியாகும். இப்பதியில் 
பாடல்களாக அமைந்த வேதங்களைப் பலரும் பயில்கின்றனர். இப்பதியில் மலர்கள் 
நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்துள்ளன.

குறிப்புரை: தேவர்கள் 'தேவதேவா! அடைக்கலம்' என்று அரற்ற, விடம் உண்டவர் பதி இது என்கின்றது. 
சரண் - அடைக்கலம். கார் விடம் - கரிய விஷம். பா ஆர் மறை - பாக்களோடு கூடிய வேதம். 
When the Devas and Asuraas churned the ocean of milk, the unnerving poison came out of the sea. Unable to bear the severity of the poison the Devas ran helter shelter and stood before Lord Civa and prayed "Oh Deva Deva! Oh! Hara! We surrender to You; protect us from destruction by this poison!! Lord Civan positioned the dark blue poison in His throat and saved everybody. He enjoys in singing the poetic Vedas. This Lord Civan is enshrined in Thiru-p-puravam which is girt with splendid flowery gardens.

கற்றறிவெய் திக்காமன் முன்னாகும் முகவெல்லாம் 
அற்றரனே நின்னடிசரணென் னுமடியோர்க்குப் 
பற்றதுவாய பாசுபதன் சேர்பதி யென்பார் 
பொற்றிகழ் மாடத்தொளி கள்நிலாவும் புறவம்மே. 6

‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும்(ம்) உகவுஎல்லாம் 
அற்று, ‘அரனே நின் அடி சரண்!’ என்னும் அடியோர்க்குப் 
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர் - 
பொன்-திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவ(ம்)மே.

பொருள்: புறவம் என்னும் பதியானது, மெய்யறிவு நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவு 
எய்தி, மன்மதனின் தூண்டுதலால் உண்டாகும் காம இச்சைகள் எல்லாம் அழிவுபட்டு, 
அரனே! நின் திருவடிகளே சரண் என்று சரணடையும் பக்தர்களுக்கு பற்றுக் கோடாய்
விளங்கும் பாசுபதன் என்று சொல்லப்படும் சிவபெருமான் எழுந்தருளிய பதியாகும்.
இப்பதியில் பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்துள்ளது.

குறிப்புரை: கற்றறிந்து, காமனுக்கும் முன்னோனாயிருக்கும் முக ஒளியெல்லாம் கெட்டு, அரனே 
அடைக்கலம் என்னும் அடியவருக்குப் பற்றாய பரன்சேர் பதி புறவம் என்கின்றது. முகவு - முகவொளி. 
The devotees of Lord Civan gain wisdom by learning scriptures and get rid of their joys of lust induced by the god of love Kaaman. They pray "Oh! Lord Haraa! We surrender to your Holy Feet which is our only refuge". For these devotees Lord Civan also known as Paasu Pathan, becomes their prop and protector. This Lord Civan is enshrined in Thiru-p-puravam where multistoreyed mansions dazzle because of their gold contents. 
Note: Men and women can transcend lust only by the grace of Civa who reduced Manmata to ashes.

எண்டிசை யோரஞ்சிடுவகை கார்சேர்வரை யென்னக் 
கொண்டெ ழுகோலமுகில் போற்பெரிய கரிதன்னைப் 
பண்டுரி செய்தோன் பாவனைசெய் யும்பதி யென்பர் 
புண்டரிகத் தோன்போன் மறையோர்சேர் புறவம்மே. 7,

“எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன, 
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப் 
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி’ என்பா்- 
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவ(ம்)மே.

பொருள்: முன்னொரு காலத்தில், எண் திசையில் உள்ளவர்கள் அஞ்சி நடுங்குமாறு, கரி 
மலையைப் போலவும், நீரை முகந்து கொண்டு எழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த 
பெரிய களிற்று யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபெருமான் 
விரும்பியிருக்கும் பதி புறவம் என்னும் சகாழிப் பஇயாகும். தாமரை மலர்மேல் உறையும் 
நான்முகன் போன்று வேதங்களில் வல்ல அறவோர்கள் இப்பதியில் வாழ்கின்றனர்.

குறிப்புரை: திசையெல்லாம் நடுங்க வந்த யானையை உரித்துப் போர்த்தவன் பதி புறவம் என்கின்றது. 
கார் சேர் வரை - கருமை சேர்ந்த மலை. கோல முகில் போல் - அழகிய மேகத்தைப் போல. பாவனை 
செய்யும் - விரும்பியிருக்கும். புண்டரிகத்தோன் - பிரமன். 
People living in all the eight directions of this earth once got freightered at sight of a dark mountain like rising vapour clouds. This was really a huge male elephant rushing towards. Lord Civa who killed this elephant and covered His body with its skin. This Lord Civan loves to reside in Thiru-p-puravam where scholars well versed in the Vedas, much like Brahma who is seated in the Lotus flower.

பரக்குந் தொல்சீர்த்தே வர்கள்சேனைப் பெளவத்தைத் 
துரக்குஞ் செந்தீப்போ லமர்செய்யுந் தொழில்மேவும் 
அரக்கன் திண்டோள ழித்தானக் காலத்திற் 
புரக்கும் வேந்தன்சேர் தருமூதூர் புறவம்மே. 8

பரக்கும் தொல்சீர்த் தேவர்கள் சேனைப்பெளவத்தைத் 
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும் 
அரக்கன் திண் தோள் அழித்தான் அக்காலத்தில்; 
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூர் - புறவ(ம்)மே.

பொருள்: எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற 
படையை ஊழித்தீப் போன்று அழிக்கும் ஆற்றல் கொண்டவன் இராவணன். இவனுடைய 
வலிய தோள் வலிமையை அக்காலத்தில் அழித்தருளிய சிவபெருமான் எழுந்தருளிய 
பழமையான ஊர் புறவம் என்னும் சீகாழிப் பதியாகும். இப்பெருமான் அனைத்து 
உலகங்களையும் காத்தருளும் வேந்தனாக விளங்குகின்றார்.

குறிப்புரை: தேவர்களின் சேனைக் கடலை, ஒட்டும் ஊழித் தீயைப் போல, சண்டை செய்யும் 
இராவணனது தோள் வலியை வாட்டியவனது பதி புறவம் என்கின்றது. பெளவம் - கடல். 'பெள பெள’ 
என்று ஒலிப்பதால் பெளவம் எனும் பெயருடையதாயிற்று. சேனைப் பெளவம் - துரக்கும் - ஓட்டும். 
Devas had a sea of army. They were all widespread and had earned age old victorious name. Raavanan was more skilled than the Devas, in growing battle like conflagrating fire and used to chase and drive away the Devas from their world. Though Raavanan was such a strong man, Lord Civan crushed his mighty shoulders in the days of yore. This Lord Civan is the protecting sovereign; He is entempled in the ancient town of Thiru-p-puravam.

மீத்திக ழண்டந்தந் தயனோடு மிகுமாலும் 
மூர்த்தியைநாடிக்காண வொணாது முயல்விட்டாங் 
கேத்த வெளிப்பாடெய் தியவன்றனி டமென்பா் 
பூத்திகழ் சோலைத்தென் றலுலாவும் புறவம்மே.  9

“மீத் திகழ் அண்டம் தந்த(அ)யனோடு மிகு மாலும், 
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு 
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன்தன் இடம்’ என்பர் - 
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவ(ம்)மே.

பொருள்: மேன்மையாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட 
திருமாலும், அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக் காணாது, தமது 
முயற்சியைக் கைவிட்டு ஏத்திப் பணிய, அவர்கட்கு காட்சி தந்தருளிய சிவபெருமானது 
இடம் புறவம் என்னும் சீகாழிப் பதியாகும். இப்பதியில் உள்ள மலர்கள் நிறைந்த 
சோலைகளில் தென்றல் காற்று உலாவி மக்களுக்கு சுகத்தை அளிக்கின்றது.

குறிப்புரை: அயனும் மாலும் அறியாத பெருமான் இடம் புறவம் என்கின்றது. மூர்த்தியை - உருவங் 
கொண்ட இறைவனை. 
Brahma, the creator of the entire universe and Vishnu of even greater glory went in quest of head and Holy Feet of Civan who stood as a tall big flame of fire, but could not behold Him. When they gave up their attempt and hailed Him, He manifested Himself before them. This Lord Civan is entempled at Thiru-p-puravam where the southerly wind strolls through the groves full of flowers.
வையக நீர்தீவாயுவும் விண்ணும் முதலானான் 
மெய்யல தேரருண்டி லையென்றே நின்றேதங் 
கையினி லுண்போர் காணவொணா தான்நக ரென்பா் 
பொய்யக மில்லாப்பூ சுரா்வாழும் புறவம்மே. 10

வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல்ஆனான்; 
மெய் அல தேரர், ‘உண்டு, இலை’ என்றே நின்றே தம் 
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர் - 
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவ(ம்)மே.

பொருள்: மண், நீர், காற்று, தீ, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக 
விளங்கும் இறைவன் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளியுன்ள நகர் புறவம் 
என்னும் சீகாழிப் பதியாகும். புத்தரும் சமணரும் உண்மையில்லாதவற்றைப் பேசுபவர்கள். 
‘உண்டு, இல்லை’ என்ற உரைகளால் ‘அத்தி நாத்தி’ எனக் கூறித்திரிபவர்கள். தம் கைகளால் 
உணவேற்று உண்பவர்கள். இவர்கள் சிவபெருமான் உறையும் நகரைக் காண ஒண்ணார்கள். 
இந்நகரில் நெஞ்சில் பொய்யறியாத பூசுரரார்கள் (அறவோர்கள்) வாழ்கின்றனர்.

குறிப்புரை: ஐம்பெரும் பூதமானவனும் புறச் சமயிகளால் பொருந்த ஒண்ணாதவனுமாகிய இறைவன் 
நகரம் புறவம் என்கின்றது. வையகம் - மண். உண்டு இலை என்று - அஸ்தி நாஸ்தி கூறி. பூசுரர் - 
அறவோர். 
Civan is the Supreme Primal God who manifests in earth, water, fire, air and space. Samanars and Buddhists speak untrue words. They use the words 'Athhi- Naaththi' to mean 'Yes - No'. They get their alms in their hands and eat direct from their hands. Our Lord Civan who is unknowable to these Samanars and Buddhists abides in Thiru-p-puravam, where Vedic scholars who never indulge in falsehood even in their thoughts do live in large numbers.

பொன்னி யல்மாடப்புரி சைநிலாவும் புறவத்து 
மன்னிய ஈசன்சே வடிநாளும் பணிகின்ற 
தன்னியல் பில்லாச்சண் பையர்கோன் சீர்ச்சம்பந்தன் 
இன்னிசை யீரைந்தேத்த வல்லோர்கட் கிடர்போமே. . 11

பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து 
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற 
தன் இயல்பு இல்லாச் சண்பையர் கோன்-சீர்ச் சம்பந்தன்- 
இன்இசை ஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

பொருள்: சீவபோதமற்றுச் _ சிவபோதமுடையவனாய்ச் சண்பையர் தலைவனாக மிக்க 
புகழோடு விளங்குபவர் திருஞானசம்பந்தர். இவர், பொன்னால் இயன்ற மாடங்களின் 
மதில்கள் சூழ்ந்த புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபெருமானின் 
சேவடிகளை நாள்தோறும் பணிந்து போற்றி இப்பதிகத்தை இன்னிசையோடு பாடினார். 
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித் துதிக்க வல்லவர்களுக்கு இடர் போகும்.

குறிப்புரை: புறவத்து ஈசனை, இப்பதிகம் சொல்லி ஏத்த வல்லாருக்கு இடர்போம் என்கின்றது. 
தன்னியல்பில்லாச் சண்பையர் கோன் - சீவபோதமற்ற திருஞானசம்பந்தர். 
Gnaanasambandan hails from Thiru-p-puravam which is girt with storeyed mansions built in gold. He worships daily with deep devotion the Holy Feet of Lord Civan who is enshrined here permanently, as a result of which he forgot everything about his individuality; while his soul merged its individuality in Civan, the Supreme Being (சீவபோதம் அற்று சிவபோதம் உடையவன் ஆனார்). This famed supreme Gnaanasambandar has sung in musical note this hymn of ten verses. Those devotees who can chant these sweet ten verses and offer worship to Lord Civan of Thiru-p- puravam will be freed from their misery.


திருச்சிற்றம்பலம் 
97ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
98. திருச்சிராப்பள்ளி

திருத்தல வரலாறு:

திருச்சிராப்பள்ளி சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்று. தமிழகத்தின் 
பெரிய நகரங்களில் ஒன்று. இரயில், பேருந்து வசதிகள் முதலியன உள்ளன. தமிழகத்தின் 
அனைத்திடங்களில் இருந்தும் செல்லலாம். இத்தலம் மிக விளக்கமானது. சிறிய மலைக்காட்சியின் 
முதல் இடமாக உள்ளது. காவிரிக்குத் தென்கரையில் அமைந்தது. கலாசாலைகளும், கல்லூரிகளும் 
நிறைந்தது. எல்லாவிதமான அறிவுத்துறையிலும் வளர்ச்சிக்குரிய இடமாக இருக்கிறது. சரித்திர 
காலத்திற்கு முன்பே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் இருந்தே விளங்கி வருவது. 
சோழர் தலைநகரங்களில் ஒன்றாகிய உறையூரைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது.

பெயர்க் காரணம்:

திரிசிராப்பள்ளி என்பதற்கு, திரிசிரன் என்னும் அரக்கன் பூசித்துப் பேறு பெற்றதனால் 
இப்பெயர் பெற்றது என்று புராணம் கூறும். இங்குள்ள சிறு மலையில் மூன்று சிகரங்கள் உள்ளன. 
அதனால் திரிசிராப்பள்ளி எனப் பெயர் பெற்றது என்று செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தப் 
பொருள்களில் வழங்கிய திருச்சிரப்பள்ளி திரிசிராப்பள்ளி ஆதற்கு என்ன விதியுண்டு என்பதை 
அறிஞர்கள் ஆய்ந்து முடிவு காண்பார்களாக. நமது சமயாசாரியப் பெருந்தகையார்கள் சிராப்பள்ளிக் 
குன்றுடையானை, சிராப்பள்ளிச் செல்வன், சிரகிரி எனவே வழங்குகின்றார்கள். திரிசிரா என்பதில் 
திரி என்பது மூன்று என்ற பொருள் குறித்த சொல்லாயின் அதனை விடுத்துச் சிராப்பள்ளி என்று 
வழங்கியிரார்கள். ஆதலால் அவர்கள் காலத்தில் திரு என்பதை அடைமொழியாகக் கொண்டதே 
சிராப்பள்ளி என்பதற்கு வேறு பொருள் இருந்திருக்க வேண்டும் என்பதனைக் கருத 
இடந்தருகின்றது. சிராப்பள்ளி என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் 
தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே 
தரப்பெறுகின்றது.

சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை 
வருத்திச் சைவனான முதலாம் மகேந்திர வர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் 
அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவன் ஆனதையும் 
திருவதிகையில் அமண் பள்ளிகளை இடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையம் குறிப்பிடு கின்றான். 
குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், 
செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயில் கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் 
போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை 
இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்.

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய 
கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமண முனிவர் பெயர்கள் 
குறிக்கப் பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் 
சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால், பள்ளி 
கோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.

ஊர்ப்பெயரும் - கோயிற்பெயரும்:

ஊர்ப்பெயர் சிற்றம்பர். கோயிற்பெயர் சிராப்பள்ளி. இதனை நன்கு விளக்குவது, 
முதலாம் இராஜராஜன் ஆட்சியாண்டு 16இல் வெட்டப் பெற்ற விக்கிரமசிங்க மூவேந்த வேளான் 
விளத்தூர் நாட்டில் நிலம் வாங்கி அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரில் உள்ள சிராப்பள்ளிக் 
கோயிலுக்கு அளித்தான் என்ற கல்வெட்டுப் பகுதியாகும். இரண்டாம் வரகுண பாண்டியன் 
கல்வெட்டும் இதனையே குறிக்கிறது. இன்னும் சில பகுதிகளிலும் சிற்றம்பர், சிற்றம்பர் நகர், 
சிற்றம்பர் பதியென இத்தலம் வழங்கப்படுகின்றது. ஆதலால் ஊர் சிற்றம்பர் எனவும் கோயில் 
சிராப்பள்ளி எனவும் வழங்கி வந்தமை தெளிவு.

மூர்த்தி:

இறைவன் பெயர் தாயுமானவர், திருமலைக் கொழுந்தர், செவ்வந்தி நாதர். அம்மையின் 
பெயர் மட்டுவார்குழலம்மை. வடமொழிவாணர் மாதுருபூதேசுவரர், சுகந்த குந்தளாம்பிகை எனக் 
கூறுவர். கல்வெட்டுக்களில் இறைவன் திருமலைப் பெருமான் அடிகள் என்ற பெயரால் குறிக்கப் 
பெறுகின்றனர். உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் ஆலயங்களும், மெளனமடம் முருகன் 
கோயிலும் மிகச் சிறப்பு உடையன.

தீர்த்தங்கள்:

காவிரி, சிவகங்கை, நன்றுடையான், தீயதில்லான், பிரமதீரீத்தம் முதலியன உள்ளன. 
அவற்றுள் நன்றுடையான், தீயதில்லான் என்ற தீர்த்தங்கள் ஞானசம்பந்தர் தெய்வ வாக்கிலும் 
திகழ்வன. இவையன்றித் தெப்பக்குளம் ஒன்றுண்டு. அது 16ஆம் நூற்றாண்டில் அரசாண்ட 
விசுவநாத நாயகர் வெட்டுவித்தது. இது மேருவின் சிகரங்களில் ஒன்று. ஆதிசேடனுக்கும் 
வாயுதேவனுக்கும் நடந்த சொற்போட்டியால் பிரிந்த சிகரங்களில் ஒன்று திருக்காளத்தி. 
மற்றொன்று திரிகோணமலை. மற்றொன்று திரிசிராமலை என்று புராணம் கூறும். கருவுயிர்க்க 
வருந்திய இரத்தினாவதியின் நிறைந்த அன்பிற்கிரங்கிப் பெருமானே தாயாக எழுந்தருளிப் 
பணிபல புரிந்து பாதுகாத்தார். ஆதலால் தாயுமானார் ஆயினார்.

செவ்வந்திப் பூவைத் திருடிய சிவத்திர வியாபாரியான பூவாணிகனைக் கண்டிக்காத 
பராந்தகனது (ஆதித்தச் சோழன்) அரச அநீதியைக் கண்டு சாரமாமுனிவர் வேண்டுகோட்படி 
பெருமான் மேற்குப் பக்கமாக உறையூரைப் பார்க்கத் திரும்பினார். மண் மாரியால் நகர் அழிந்தது. 
மன்னன் அழிந்தான். மன்னன் மனைவி கருவுற்றிருந்தாள். காவிரியில் வீழ்ந்தாள். அந்தணன் 
ஒருவன் பாதுகாத்தான்... கரிகாலன் பிறந்தான். கருவுற்ற ஆதித்த சோழன் மனைவியாகிய 
காந்திமதிக்கு இறைவன் தானே தோன்றிக் காட்சி கொடுத்து, தான்றோன்றீசர் என்ற திருநாமம்
பெற்ற வரலாறுகளும் புராணங்களில் பேசப்படுகின்றன.

கல்வெட்டு-

இங்குக் குகைகள் உள்ளன. இவை மகேந்திரன் காலத்தனவே என்பது குறிப்பிடப் பட்டது. 
ஒன்று மலைமேல் உள்ளது. மற்றொன்று அடிவாரத்தில் உள்ளது. மலை மேலுள்ள 
கோயில்களிலேயே கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. வடமொழியில் அமைந்த எட்டு 
சுலோகங்கள் மகேந்திரவர்மனது மத மாற்றத்தையும் அதனால் அவன் செய்த சிவப்பணி களையும் 
தெரிவிக்கின்றன. அவற்றில் கல் தச்சராலே இந்த அரசனுடைய புகழ் விரிந்து நீடித்திருக்க 
வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது ஒரு சுலோகம். இத்தலத்தைப் பற்றிய 
கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நிரம்ப உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது கி.மு. 
2ஆம் நூற்றாண்டில் எழுந்த பிராமி எழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டு ஆகும். தொடர்ச்சியாகப் பல 
கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பல்லவ கிரந்தத்தாலும் தமிழாலும் ஆக்கப் பெற்றன.

இராஜகேசரி வர்மன்:

இவன் ஆட்சி 16ஆம் ஆண்டில் சாகுபடிக்குக் கொண்டு வரப்படாத நிலங்களைக் குறைந்த 
விலையாக ஐந்து கழஞ்சுக்கு விற்று, நிலம் விளைச்சலுக்கு வந்த பிறகு நிலம் வாங்கியவர்கள் 
திருவிழாக் காலங்களில் சித்திரைத் திருநாளில் ஒன்பது நாட்களுக்குப் பன்மாகேசுவரர்களுக்கு 
உணவு இடும்படி உத்தரவிட்டான்.

பாண்டியன் மாறன்சடையன்: ... .

இவன் ஆட்சி 4ஆம் ஆண்டில் நிலமளித்து இருக்கிறான். இதில் இறைவன் திருமலைப் 
பெருமான் என்றழைக்கப் படுகிறான். வேங்கட தேவமகாராயர் சகம் 1351 வீரப்ப நாயக்கருடைய 
மேன்மைக்காக நிலம் அளித்தார். மதுரை விஜயரங்க சொக்க நாத நாயக்கருடைய காலத்தில் 
நரசபந்துலு என்னும் தன்வந்திரி வைத்தியருக்கு இறையிலியாக நிலமளிக்கப்பட்டது. அவ்வாறே 
திருமலை அப்பராயத் தொண்டைமான் மகனும், திருமலை ராயத் தொண்டைமான் பேரனுமான 
இராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் சகம் 1772இல் கி.பி. 1805இல் ஓராண்டிக்கோடி 
கிராமத்தைத் தேனாம்பட்டணம் இருளப்ப முதலியாரிடம் அளித்து திருச்சிராப்பள்ளியில் 
அறச்சாலை நடத்த ஏற்பாடு செய்தான். நல்லப்ப காலாட்க தோழராலும், ரங்கப்ப காலாட்க 
தோழராலும் அளிக்கப்பட்ட தேவதானங்களை அறிவிக்கும் செப்புப் பட்டயங்கள் உள. 
கல்வெட்டுக்களில் சிறப்பாகக் குகைக்கோயில் பின்சுவரில் திரிசிராமலை அந்தாதியொன்று எழுதப் 
பெற்றுள்ளது. அது 103 பாடல்களை உடையது. அதில் 104ஆம் பாடலாக ‘மாட மதுரை மணலூர் 
மதில் வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூரின் - நீடிய நற்பதிக்கோன் நாராயணன் சிராமலை 
மேல் கற்பதித்தான் சொன்ன கவி’ என்றதால் நாராயணன் என்பவன் கல்வெட்டுவித்தான் என்று 
குறிப்பிடப்படுகிறது.

பதிக வரலாறு:

ஞானசம்பந்தர் மூக்கீச்சரம் பணிந்து, திருச்சிராப்பள்ளிச் சிலம்பணைந்தார். அங்கே 
இறைவனை வணங்கி மெய்ம்மகிழ்ந்து மனங்குளிர ‘நன்றுடையானை’ என்னும் சொற்றமிழ் மாலை 
வேய்ந்து போற்றினார்கள். 
HISTORY OF THE PLACE

98. THIRU-CH-CHIRAA-P-PALLI

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu and is one of the major cities of Tamilnadu. It is well connected by train and bus from every place in Tamilnadu. It is a historic city, going back to times prior to 2nd century BC. It incorporates within itself Uraiyoor, which was once the capital of the Chola kings. 
The Lord's names are Thaayumaanavar, Thirumalaikkozhundhar, Sevvandhi- naathar and other names. The Goddess is known as Mattuvaarkuzhalammai. The Sanskrit equivalents are Maathrubhoothesuvara and Suganthakunthalaambikai. Other shrines for the Uchchippillaiyaar, Maanikka Vinaayakar and for Murugan at the Mouna Matam are of special distinctions.
The name of the city is also given as Chitrambar in some inscriptions and the temple is referred to as Chiraappalli. While various reasons are ascribed for the name Chiraappalli, the great scholar T.V. Sadasiva Pandaraththar is of the opinion that the place where the temple is situated, was once a Jain monastery and the king Mahendhiravarman-I having converted to Saivism from Jainism had built this temple in the 7th century CE after demolishing the Jain monastery. The king has an inscription in the form of a poem of 8 Sanskrit slokas. In this inscription he notes his conversion and building of the shrine Gunaparechchuram on the site of Jain monasteries in Thiruvadhikai. Gunaparan is another name for this king. 
Behind the Uchchippillaiyaar temple, there are stone beds with the names of Jain monks inscribed on them. They belong to the 5th century BC. One of the names in these beds is Chiraa, and it can be surmised that Chirappalli meant the sleeping place of Chiraa. Although the beds are no longer in use, the temple came to be known as Chiraappalli by association with the old name. 
According to puraanaas (old legends) the hill on which the temple is located is one of the peaks of Mount Meru. When a contest arose between Vaayudhevan and Aadhiseshan, the peak got split into three, they being Thirukkaalaththi and Thirikonamalai besides this. There is also the legend that the compassionate Lord, out of love for HIS devotee Raththinaavathi who was then pregnant, took the form of her mother and helped her to have a safe delivery. Her real mother could not reach her daughter's place in time, because of heavy flood in the river Cauvery which she had to cross. 
Another legend is that of the Lord appearing in a vision to the pregnant queen Kaanthimathi of Aadhiththa Cholan. He got the name Thaanthonreesar because of this. There is also a legend associated with Chola king Karikaalan. According to this, Paraanthakan, king of Uraiyoor failed to punish a flower merchant, who committed the serious crime of stealing a flower dedicated to Siva. On the appeal of a sage, Saaramaamunivar, the Lord turned His face towards the west, upon which Uraiyoor was destroyed by a shower of mud. The king perished and his pregnant queen jumped into the river Cauvery. An Andhanan saved her and she gave birth to Karikaalan.
There are two rock-cut caves with beautiful sculptures, one on the hill and the other near the foot of the hill. Both of these are the period of Mahendhiravarman. Besides the poem in the inscription noted before, there are many inscriptions in the temple on the hill. There are also copper plate engravings about this temple. Of all the inscriptions, the oldest belongs to the 2nd century BC and is written in Brahmi characters. Other inscriptions are in grantha script as well as in Tamil. 
One of the inscriptions on the back wall of the cave temple is a long poem of 103 stanzas, known as Thirisiraamalai Andhaadhi. At the end of the last stanza, there is the mention of one Naaraayanan who caused the inscription to be engraved. 
The following is a gist of some of the notable grants found in the inscriptions: In his 16th regnal year, Raajakesarivarman, sold some uncultivated lands for five 'kazhanjchu' and after the buyers brought the land under cultivation ordered them to feed devotees of Siva during the nine days of a festival in Chiththirai. Paandiyan Maaran Sadaiyan gave land in his 4th regnal year. Venkatadheva Mahaaraayar gifted land in Saka year 1351 for the benefit of Veerappa Naayakkar. Tax-free land was given to one Narasabanthulu, a physician, during the reign of Vijayanagara Chokkanaatha Naayakkar of Madhurai. King Vijaya Raghunaatha Thondaimaan gave a village, Oraandikkodi, to a Irulappa Mudhaliar of Thenaampattinam for a choultry (arachchaalai) in this city.

INTRODUCTION TO THE HYMN

Having hailed Civa at Mukeeccharam, our saint went forth and arrived at the hill-shrine of Civa at Thiru-ch-chiraa-p-palli where he sang the following hymn:
திருச்சிற்றம்பலம்

98. திருச்சிராப்பள்ளி 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

நன்றுடை யானைத்தீய திலானைநரை வெள்ளே 
றொன்றுடை யானையுமை யொருபாக முடையானைச் 
சென்றடை யாததிருவுடை யானைச்சிராப் பள்ளிக் 
குன்றுடை யானைக்கூற என்னுள்ளங் குளிரும்மே. 1

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு 
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை, 
சென்று அடையாத திரு உடையானை, சிராப் பள்ளிக்- 
குன்று உடையானை, கூற, என உள்ளம் குளிரும்மே.

பொருள்: சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, “நன்மைகளையே 
தனக்கு உடைமையாகக் கொண்டவனே! தீயது ஒன்றுமே இல்லாதவனே! மிக 
வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனே! பார்வதியை ஒரு 
பாகமாக உடையவனே! அவனது அருளால் அன்றி சென்று அடைய முடியாத வீடுபேறு 
என்ற செல்வத்தை உடையவனே!’ என்று போற்ற என் உள்ளம் குளிரும்.

குறிப்புரை: சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், 
தீயதில்லான் இவையிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். 
சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து
அடையாத இயற்கையேயான திரு. 
Lord Civan of Thiru-ch-chiraa-p-palli is the only Supreme One who is the epitome of all absolute goodness; He is the only one who is fully free from any sinister intent. He keeps one white bull as His vehicle. He accommodates His consort Paarvathi Devi on the left half of His body. Without His grace no one can reach Heaven, the final release of liberation and enjoy the eternal state of bliss. This Lord Civan is enshrined at the temple in the hillock of Thiru-ch-chiraa-p-palli. As and when I adore Him, I do have the fullest delightfulness in my mind.

கைம்மக வேந்திக்கடுவ னொடூடிக் கழைபாய்வான் 
செம்முக மந்திகருவரை யேறுஞ்சிராப்பள்ளி 
வெம்முக வேழத்தீருரி போர்த்தவி கிர்தாநீ 
பைம்முக நாகம்மதி யுடன்வைத்தல் பழியன்றே. 2

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான், 
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி, 
வெம் முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா! நீ 
பைம்முக நாகம் மதிஉடன் வைத்தல் பழி அன்றே?

பொருள்: சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு, 
தனது குட்டியைத் தூக்கிக் கொண்டு, மூங்கில் புதரில் பாய்வதற்காக ஏறும் கரிய மலைமிசை 
ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! கொடிய முகத்தோடு கூடிய 
யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனே! படத்தோடு கூடிய முகத்தை உடைய 
நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருப்பது 
உனக்கு பழிதரும் செயல் அல்லவா?

குறிப்புரை: பெண் குரங்கு ஆண் குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் 
பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளி நாதா! நாகத்தையும் மதியையும் உடனாக வைத்தல் 
உனக்குப் பழியாகுமல்லவா? கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண்குரங்கு. கழை - மூங்கில். 
செம்முகமந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண் குரங்கு. பெண் குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற 
குரங்கின் இயற்கையையும் ஈண்டு எண்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடைய யானை. 
The ruddy faced female monkey had a love quarrel with her mate the male monkey. The female one carrying it's babe-in-arms rushed towards the bamboo thicket and climbed up the black hillock in Thiru-ch-chiraa-p-palli. Lord Civan is enshrined at the temple in this hillock. This pre-eminent Lord Civan  covered His body with the skin of a ferocious elephant. Oh Lord Civa, will it not cast a blame on you to keep in your head a serpent having poisonous sacs along with the crescent moon - both are hostile to each other?

மந்தம் முழவம்மழ லைததும்ப வரைநீழல் 
செந்தண் புனமுஞ்சுனை யுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் 
சந்தம் மலர்கள்சடை மேலுடையார் விடையூரும் 
எந்தம் மடிகளடியார்க் கல்லலில்லையே. 3

மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல் 
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி, 
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும் 
எம்தம்(ம்) அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

பொருள்: மந்த சுருதியினை உடைய முழவு மழலை போன்று ஒலிக்கின்றதும், அழகிய 
குளிர்ந்த தோட்டங்களையும் சுனைகளையும் மலை அடிவாரத்தில் கொண்டுள்ளதுமான 
சிராப்பள்ளியில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான், அழகிய மலர்களைச் 
சடைமேற் சூடியிருப்பவர். விடையேற்றில் ஊர்ந்து வருபவர். எம் தலைவராகிய 
இச்செல்வரை வணங்கும் அடியார்களுக்குத் துன்பம் இல்லை.

குறிப்புரை: சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கின்றது. மந்தம் முழவம் - 
மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி. 
Lord Civan is enshrined in Thiru-ch-chiraa-p-palli wearing elegant flowers in His head, and moves about riding on a bull. The soft and gentle noise of drums in this town resembles the babbling of children. This city is girt with fertile and cool groves and springs at the foot of the hill. Those devotees who worship Him are free from all troubles.

துறைமல்கு சாரற்சுனை மல்குநிலத் திடைவைகிச் 
சிறைமல்கு வண்டுந்தும் பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் 
கறைமல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் 
பிறைமல்கு சென்னியுடை யவனெங்கள் பெருமானே. 4

துறை மல்கு சாரல், சுனை மல்கு நிலத்துஇடை வைகி, 
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி, 
கறை மல்கு கண்டன்! கனல்எரிஆடும் கடவுள்(ள்), எம் 
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே.

பொருள்: பலப்பல வழிகளைக் கொண்டுள்ள சிராப்பள்ளி மலை அடிவாரத்தில் உள்ள 
சுனைகளில் நீல மலர்கள் நெருக்கமாகப் பூத்திருக்கின்றன. இந்த மலர்களைச் சுற்றி 
சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பிகளும் இசை பாடுகின்றன. இச்சிராப்பள்ளியில் 
எங்கள் பெருமானான சிவபெருமான், கறை பொருந்திய கண்டத்தை உடையவராகவும், 
கையில் எரியும் நெருப்பை ஏந்தி ஆடுபவராகவும், சென்னியில் பிறையைப் பொருந்தி
இருப்பவராகவும், எம் கடவுளாகவும் விளங்குகின்றார்.

குறிப்புரை: நீலகண்டன், எரியாடுங்கடவுள், பிறைச்சென்னியின் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் 
தும்பியும் நீலப்பூவில் தங்கிப் பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. 
கறை - விடம். 
The neck of our noble Lord Civan is of dark blue colour. He is our god who dances holding fire in one of His hands. He keeps the crescent moon in His head. He is enshrined in Thiru-ch-chiraa-p-palli and graces every one who approaches Him. The mountain in this town has many pathways. In the foothills there are many springs in which blue lily flowers blossom in large numbers. Winged chafers and dragon flies approach the flowers making music. Such a delightful town is Thiru-ch-chiraa-p-palli.
கொலைவரை யாதகொள்கை யர்தங்கள் மதில்மூன்றும் 
சிலைவரை யாகச்செற்றன ரேனுஞ்சிராப்பள்ளித் 
தலைவரை நாளுந்தலை வரல்லாமை யுரைப்பீர்காள் 
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே. - 5

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும் 
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித் 
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்! 
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளைநிறம் ஆமே?

பொருள்: கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினரான அசுரர்களின் 
மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு அழித்தவர் சிவபெருமான். இவர் 
சிராப்பள்ளியில் தலைமை பூண்டுறைபவர். இப்பெருமானைத் தலைவர் அல்லர் என 
நாள்தோறும் கூறிவரும் புறச் சமயத்தினரே! இந்த நில உலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட 
துணி, வெள்ளை நிறமாக மாற்றம் அடையுமா? அது போலவே உங்கள் கொள்கையிலும் 
மாறுதல் இயலுவதொன்றோ?

குறிப்புரை: சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். 
கொலை வரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். 
நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிற 
உடையாதல் கூடுமா? நீலநிறத்திற்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல் நீவிர் கொண்ட 
கொள்கையையும் மாற்றல் இயலாது. சங்க இலக்கியத்தில் பதினெண் கணக்கு நூல்களில் ஒன்றாகிய 
‘பழமொழி நானூறு’ என்ற பாட்டுக்களில் 94-ஆவது பாட்டு. 
Lord Civan using the mount Mēru as His bow destroyed the three citadels of the Asuraas who never abandon their attitude of killing people indiscriminately. Even then, these heterodox people daily declare that Civan of Thiru-ch-chiraa-p-palli is not the Supreme Lord. It is impossible to change the opinion of these people, as it is not possible to change the colour of blue dyed cloth to white.
Mythology has it that once Lord Civan consumed the poison of the churned seawaters, in order to save the fright stricken Devas and Asuras - His throat turned blue in colour in this mighty display of supernal prowess. Ye hedonistic heathenes! Won't you recognise the Supremacy of Lord Civan (even after knowing this?). Is this inimitable deed of valour, a mere white wash? A matter of no consequence? In this way, our saint establishes the glory of Lord Civan.  (vide the usage of வெளிறு in Thirukkural -"அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” - Kural (503) Asuras are generally devour saivas. All Asuras cannot possibly be described as unorthodox people.

வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது 
செய்ய பொன்சேருஞ் சிராப்பள்ளி மேயசெல்வனார் 
தைய லொர்பாக மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில் 
ஐயழுங் கொள்வாராரிவர் செய்கையறிவாரே. 6

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது 
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார், 
தையல் ஓர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓஒட்டில் 
ஐயமும் கொள்வார்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

பொருள்: சிவபெருமான், எல்லாராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் குளிர்ச்சி 
தரும் பொன் நிறமான விரிந்த வேங்கை மலர்கள் உதிரும் சிராப்பள்ளி மலையில் 
வீற்றிருக்கும் செல்வர் ஆவர். இப்பெருமான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு 
மகிழ்ந்திருப்பவர். நஞ்சினை உண்பவர். தலையோட்டில் பலி ஏற்பவர். யார்தான் இவரது 
வேறுபட்ட செயல்களின் உண்மையை அறிய முடியும்?

குறிப்புரை: சிராப்பள்ளி மேவிய செல்வர் பெண்ணொரு பாகமாகுவர். ஆகாத நஞ்சை அருந்துவர். பிரம 
கபாலத்தில் பிச்சையும் எடுப்பர். இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய 
- கொடிய. விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன் சேரும் சிராப்பள்ளி என்றது. வேங்கை 
மலர்கள் பொன் போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை. 
Lord Civan is our Supremely affluent one abiding in Thiru-ch-chiraa-p-palli. Here, in the lovely and cool slopes of the hillock, gold coloured flowers from the Kino tree drop on to the ground and give an elegant view to one and all. He happily accommodates His consort Umaa Devi on the left half of His body; He positioned the poison in His throat that came out of the ocean of milk; He accepts alms in a human skull. Who can understand the reason for His many different kinds of (above) acts?

வேயுயர் சாரற்கருவிர லூகம்விளையாடும் 
சேயுயர் கோயிற்சிராப் பள்ளிமேய செல்வனார் 
பேயுயர் கொள்ளிகை விளக்காகப் பெருமானார் 
தீயுகந் தாடல்திருக் குறிப்பாயிற் றாகாதே. 7

வேள் உயா் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும் 
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் 
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார், 
தீ உகந்து ஆடல் திருக்குறிப்ப ஆயிற்று; ஆகாதே!

பொருள்: கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடுகின்ற, உயர்ந்து 
வளர்ந்துள்ள மூங்கில் மலைச்சாரலை உடைய சிராப்பள்ளியில், நெடிதாக உயர்ந்துள்ள 
கோயிலில் சிவபெருமான் அமர்ந்துள்ளார். பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் 
கைவிளக்காகக் கொண்டு சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு 
யாதோ? அது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாமல் உள்ளதே?

குறிப்புரை: தாயுமானவர், பேயின் கையில் உள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் 
திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் 
- தூரம். கைவிளக்கு - சிறிய விளக்கு. 
The black fingered black monkeys play among themselves in the tall bamboo trees grown in the slopes of the hill in Thiru-ch-chiraa-p-palli. In the sky high temples of this town Lord Civan is enshrined. Is it the Will  of Lord Civa of this place to happily dance in the burning ghat of this town, where the goblins hold aloft in their hands firebrands, as lamps so that He may dance in that bright light of the fire. This strange behaviour could not be understood by the girls who would like to reach His Holy Feet.
மலைமல்கு தோளன்வலி கெடவூன்றி மலரோன்றன் 
தலைகலனா கப்பலிதிரிந் துண்பர்பழியோரார் 
சொலவல வேதஞ்சொல வலகீதஞ்சொ ல்லுங்கால் 
சிலவல போலுஞ்சிராப் பள்ளிச்சேடர் செய்கையே. 8

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன் 
தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார் - 
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்கால், 
சில வலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

பொருள்: மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணன் சிவபெருமான் 
தங்கியுள்ள கைலாய மலையை நகற்ற முற்பட்டபொழுது, அவர் தமது கால் விரலை மலை 
மீது ஊன்றி அவன் வலிமையைக் குறைத்து அவனை நசுக்கியவர். தாமரை மலர் மேல் 
உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண்கலனாகக் கொண்டு திரிபவர். 
அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழிவருமே என்று நினையாதவர். 
இசையோடு ஓதத்தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதும் போது சில 
பிழைபட்டன என்றாலும் அவற்றை மகழ்ச்சியோடு ஏற்பவர். சிராப்பள்ளியில் 
அமர்ந்திருக்கும் பெருமைக்குரிய இப்பெருமானின் செய்கையின் உட்பொருள்தான் என்ன?

குறிப்புரை: தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார். சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் 
சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த. வேதங்களையும் 
பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளில் இருந்து 
அறிகிறோம் என்பது கருத்து. 
Lord Civan pressed His toe on mount Kailash and quelled the mightiness of Raavanan who has very sturdy hill like shoulders. He never cares for the ridicule He might face for His abnormal behaviour of getting alms in the skull of Brahma and eating it. Devotees sing the Vedas in musical note very carefully. However, there might be some deviation in this musical tone; but Lord Civa never minds such deviation and happily accepts and enjoys the music. Such indeed are the deeds of the glorious Civa of Thiru-ch-chiraa-p-palli. What is the truth behind such behaviour of Lord Civa?

அரப்பள்ளி யானுமலருறை வானுமறியாமைக் 
கரப்புள்ளி நாடிக்கண்டி லரேனுங்கல்சூழ்ந்த 
சிரப்பள்ளி மேயவார் சடைச்செல்வர் மனைதோறும் 
இரப்புள்ளீ ரும்மையே திலர்கண்டா லிகழாரே. 9

அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக் 
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த 
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும் 
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

பொருள்: பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் 
பிரமனும் சிவபெருமான் மறைந்திருப்பதை அறியாமல், அவரது அடி முடியைத் தேடியும் 
அவர்களால் காண முடியவில்லை என்ற பெருமை சிவபெருமானே உமக்கு உள்ளது. 
அப்படி இருந்தும், கல் சூழ்ந்த சிராப்பள்ளியில் எழுந்தருளி இருக்கும் நீண்ட சடையினை 
உடைய செல்வந்தரே! நீவிர் வீடுகள்தோறும் சென்று இரப்பதை விரும்புகின்றீர். அயலவர் 
கண்டால் இதனை இகழாரோ?

குறிப்புரை: அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர். 
உம்மை யாவரும் இகழார்கள் என்கின்றது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட 
திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி. ஏதிலர் - அயலார். 
Oh Lord Civa! You are known for Your widespread reputation when You stood so high that Your Holy Feet and head could not be seen, in spite of their serious search, by Thirumaal, who reclines in the snake bed and by Brahma who is seated in the lotus flower. Oh affluent Civa! You abide in the mountain temple in Thiru-ch-chiraa-p-palli having long matted hair. You visit each and every house seeking alms. Will not those people who observe Your begging, mock at You! (Pray do not visit other's houses and seek alms).
நாணாது டைநீத்தோர் களுங்கஞ்சி நாட்காலை 
ஊணாப் பகலுண்டோ துவோர்களுரைக் குஞ்சொல் 
பேணாது றுசீர்பெறுதுமென் பீரெம்பெருமானார் 
சேணார் கோயில்சிராப் பள்ளிசென்று சேர்மினே. 10

“நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை 
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல் 
பேணாது, உறு சீர் பெறுதும்’ என்பீர்! எம்பெருமானார் 
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

பொருள்: சமணர்கள் நாணமின்றி உடையில்லாமல் திரிகின்றனர். புத்தர்கள் காலையிலும் 
நண்பகலிலும் கஞ்சியை உணவாக உண்ணுகின்றனர். இவர்கள் கூறும் பழிப்புரைகளைக்
கருதாதீர்கள். நாம் சிறப்படைய வேண்டும் என விரும்புகின்ற நீவீர் எம்பெருமான் உறையும் 
வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளிக்குச் சென்று அவனைப் போற்றி 
வணங்குவீர்களாக.

குறிப்புரை: புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! 
சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் 
உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - 
ஆகாயமளாவிய கோயில். 
Oh! Ye companions - Ignore the disparaging words of the shamelessly nude Samanars as well the Buddhists who drink gruel both at daybreak and at noon. Should You aspire to become glorious in this very life time, do visit Thiru-ch-chiraa-p-palli where our Lord Supreme Civa is enshrined in the sky-high temple and adore Him.

தேனயம் பாடுஞ்சிராப் பள்ளியானைத் திரைசூழ்ந்த 
கானலசங் கேறுங்கழுமல வூரிற்கவுணியன் 
ஞானசம் பந்தன்நலமிகு பாடலிவை வல்லார் 
வானசம் பந்தத்தவரொடு மன்னிவாழ்வாரே. 11

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த 
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் - 
ஞானசம்பந்தன் - நலம் மிகு பாடல் இவை வல்லார் 
வான சம்பந்தத்தவரொடு மன்னி வாழ்வாரே.

பொருள்: தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் 
சிவபெருமானை, அலைகளில் பொருந்தி வந்த சங்குகள்  சோலைகளில் ஏறி உலாவும் கடலை 
அடுத்துள்ள கழுமல ஊரில், கவுணிய கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் 
பாடினார். நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் வானுலகில் 
சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலை பெற்று வாழ்வர்.

குறிப்புரை: சிராப்பள்ளியானைத் துதித்த, ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து 
வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் 
சம்பந்தமுடைய தேவர்கள். 
Gnaanasambandan, the most famous personage in the Kaundinya Gotra (கௌண்டின்ய கோத்திரம்) hails from Kazhumalam (கழுமலம் - another name of Seekaazhi) where seashells are shoved by the waves into the foreshore gardens, close to the sea. He has sung these verses on the Lord of Thiru-ch-chiraa-p-palli where the humming of nectar sipping bees is heard. Those who can sing these verses will dwell in the upper world eternally, along with the supernal beings as their kin.

98ஆம் பதிகம் முற்றிறறு

திருமுறை 99. திருக்குற்றாலம் 
உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
99. திருக்குற்றாலம்

திருத்தல வரலாறு:

இத்திருக்குற்றாலத் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் 
செங்கோட்டைக்கும் இடையே பொதிகை மலையடிவாரத்தில் உள்ள ஊர் ஆகும். நடராஜப் 
பெருமானுக்குரிய பஞ்ச சபைகளில் ஒன்றாகிய சித்திரரபை என வழங்கும் சபை இங்கு 
தனிக்கோயிலாக உள்ளது. திரிகூடராசப்பக் கவிராயர் தலபுராணம் முதலிய பிரபந்தங்கள் 
எழுதியுள்ளார். சுற்றுலாத் தலங்களில் சிறப்புடையது. திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை 
அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றிய தலம். இங்குள்ள அருவி புகழ் பெற்றது. குற்றால 
அருவியில் குளிப்பதற்கு ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பலர் வருவர். 
திருஞான சம்பந்தர் தேவாரம் பாடப் பெற்றது. சுவாமி பெயர் திருக்குற்றால நாதர். அம்பாள் பெயர் 
குழல்வாய் மொழியம்மை. இத்தலம் குறும்பலா எனவும் வழங்கப் பெறும்.

பதிக வரலாறு: 
திருஞானசம்பந்தர் திருச்சுழியலை வணங்கிப் பின்னர் திருக்குற்றாலத்தை அடைந்து 
குற்றால நாதா குரைகழல் போற்றி ‘வம்பார் குன்றம்’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள் 
HISTORY OF THE PLACE

99. THIRU-K-KUT-RA-LAM

This sacred place is located in between Thenkaasi and Sengkottai at the foot of the Podhigai hills in Tirunelveli district. Chiththira Sabhai, identified as one of the five sacramental halls of Lord Nataraajar (Dance Halls) is located in a separate place near the main temple in this town. The place is also known by the name Kurumpalaa. 
The name of the Lord is Kutraalanaathar and that of the Goddess is Kuzhalvaaimozhiyammai . The celebrated Sage Agaththiyar is said to have converted the idol of Thirumaal which was originally the Deity in this temple, into a Civalingam here. Poet Thirikootaraasappak Kaviraayar  had composed many poems in later years on this temple, including legends associated with this temple (thalapuraanam). Saint Thirujnaanasambandhar has sung this hymn on this temple. 
Also famous for its waterfalls, this shrine attracts mainly tourists from Tamilnadu and outside. The season for bathing in these falls, occurs during the months of June, July and August when southwest monsoon is vigorously active.

INTRODUCTION TO THE HYMN

Having adored Civa at Thirucchuzhiyal our saint arrived at Thiru-k-kur-ra-lam where he sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

99. திருக்குற்றாலம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

வம்பார் குன்றந்நீடுயர் சாரல்வளர் வேங்கைக் 
கொம்பார் சோலைக்கோல வண்டியாழ் செய்குற்றாலம் 
அம்பால் நெய்யோடா டலமர்ந்தான லர்கொன்றை 
நம்பான் மேயநன்னகர்போலுந் நமரங்காள். 1

வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கைக் 
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம் - 
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை 
நம்பான், மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

பொருள்: நம்மவர்களே! திருக்குற்றாலமானது பலமுறை கண்டார்க்கும் காணுந்தோறும் 
புதுமையைப் பயக்கும் குன்றுகளையும், காலத்தாலும், இடத்தாலும் நீண்டு உயர்ந்த மலைச் 
சாரலையும், உயர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் நிறைந்த சோலைகளையும் உடைய 
நன்னகரமாகும். இங்கு அழகிய வண்டுகள் யாழ்போல் ஒலிக்கின்றன. இந்நகரத்தில், இனிய 
பால் நெய் ஆகியவற்றோடு நீராடுவதை விரும்புகின்றவராய், விரிந்த கொன்றை மலர்களைச் 
சூடி, யாவராலும் விரும்பப்படுகின்ற சிவபெருமானார் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: திருக்குற்றாலம், பால் நெய்யாடிய பரமன் உறைகோயில் என்கின்றது. வம்பு - புதுமை. 
வம்பார்குன்றம் - பலமுறை கண்டார்க்கும் புதுமையையே பொருந்தும் மலை. நீடு உயர் சாரல் - 
காலத்தானும் இடத்தானும் நீடிக்கும் சாரல். கோல வண்டு - அழகிய வண்டு. பால் நெய்யோடு - பால் 
நெய் இவற்றோடு. அம் ஆடல் அமர்ந்தான் - நீராடலை விரும்பியவன். நமரங்காள் - நம்மவர்களே! 
Oh! Ye companions! Every time we see the hill in Thiru-k-kut-ra-lam, it gives a new and different but imposing appearance with its tall mountain slopes and groves full of Kino trees having a number of thick branches. In these trees dainty bees make humming sound that resonates with a melodious musical note. This elegant Thiru-k- kut-ra-lam city is the place where our supreme Lord Civan is enshrined. He takes His daily sacred ceremonial bath with sweet milk and ghee along with water. He has adorned His matted hair with fully blossomed cassia flowers.

பொடிகள் பூசித்தொண் டர்பின் செல்லப் புகழ்விம்மக் 
கொடிகளோ டுந்நாள்விழ மல்குகுற்றாலம் 
கடிகொள் கொன்றைகூ விளமாலை காதல்செய் 
அடிகள் மேயநன்னகர்போலு மடியீர்காள். 2

பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம, 
கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம் - 
கடி கொள் கொன்றை, கூவிளமாலை, காதல்செய் 
அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!

பொருள்: அடியவர்களே! திருக்குற்றாலமானது, திருநீறு பூசிய தொண்டர்கள் பின்னே 
வரவும், புகழ் சிறக்கவும், கொடிகளை ஏந்திய அன்பர்கள் முன்னால் செல்லவும், 
நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகரம் ஆகும். இந்நன்னகரத்தில் மணம் கமழும் கொன்றை, 
வில்வ மாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாக சிவபெருமானார் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: நீறணிந்து தொண்டர்கள் பின்செல்ல, நாள்விழா நிறைந்த குற்றாலம். கொன்றையையும் 
கூவிளத்தையும் விரும்பிய அடிகள் நகர் என்கின்றது. பொடி - விபூதி. 
Oh! Ye devotees! Know this; the Thiru-k-kut-ra-lam city celebrates some temple festivals and other festivals almost daily. The devotees holding the temple flags move in front of the procession, while the servitors who have smeared their body with holy ashes (in the stipulated sixteen places) follow in the rear of the palanquin. In this famed city Lord Civan is enshrined. He loves to be adorned with fragrant cassia garlands as well alongside garlands made of bael leaves.

செல்வமலகு செண்பகம் வேங்கை சென்றேறிக் 
கொல்லை முல்லைமெல் லரும்பீனுங் குற்றாலம் 
வில்லினொல் கமும்மதிலெய்து வினைபோக 
நல்குநம்பான் நன்னகர்போலுந் நமரங்காள். 3

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி, 
கொல்லை முல்லை மெல்ஆரும்பு ஈனும் குற்றாலம் - 
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக 
நல்கும் நம்பான் நன்நகர் போலும்; நமரங்காள்!

பொருள்: நம்மவர்களே! திருக்குற்றாலமானது செல்வம் நிறைந்ததும், செண்பகம், வேங்கை 
ஆகிய மரங்களில் முல்லைக் கொடிகள் தாவிப் படர்ந்து தனது அரும்புகளை ஈனுகின்ற 
நகரம் ஆகும். இந்நன்னகரத்தில் வில்லின் நாண் அசைய அம்பு எய்து மும்மதில்களையும் 
அழித்த சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். யாவராலும் விரும்பப்படுகின்ற இப்பெருமான் 
தன்னை வழிபடும் அன்பர்களின் தீயவினைகள் அழியுமாறு அருள்புரிகின்றார்.

குறிப்புரை: முல்லை, செண்பகம், வேங்கை இவற்றின்மீதேறி அரும்பீனும் குற்றாலமே திரிபுரம் எய்து 
அவர்கள் பாவம் தொலைத்து அருள்வழங்கும் இறைவன் நகர் என்கின்றது. கொல்லை - காடு. 
Oh! Ye kindred souls! Note; Thiru-k-kut-ra-lam is rich in natural resources. The Arabian jasmine vines creep over the luxurious Kino trees, as well on the very fragrant large yellow flower tree (Michelia champaca சண்பகம் என்ற செண்பகம்) where their buds bloom. Lord Civan is enshrined in such a glorious city. He holds a bow in His hand with which He shot an arrow towards the three citadels of (the recalcitrant) Asuraas and destroyed them. He quells the bad karma of His devotees, who worship Him.

பக்கம் வாழைப்பாய் கனியோடு பலவின்றேன் 
கொக்கின் கோட்டுப்பைங் கனிதூங்குங் குற்றாலம் 
அக்கும் பாம்புமாமையும் பூண்டோர னலேந்தும் 
நக்கன் மேயநன்ன கர்போலுந் நமரங்காள். 4

பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன், 
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம் - 
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

பொருள்: நம்மவர்களே! திருக்குற்றாலமானது, மலையின் எல்லாப் பக்கங்களிலும் முளைத்த 
வாழைமரத்தின் கனிகளோடு, தேன் ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில்
பழுத்த புத்தம் புதிய கனிகளுமான முக்கனிகள் தொங்கும் நகரம் ஆகும். இந்நன்னகரத்தில்
சிவபெருமான், உருத்திராக்க மாலை (அக்குமணி மாலை) பாம்பு, ஆமை ஆகியவற்றை 
மாலையாக அணிந்து கொண்டு கையில் அனலை ஏந்தி விளங்குகின்றார். இங்கு சென்று 
அவனை வணங்குவீர்களாக.

குறிப்புரை: பக்கங்களில் வாழைக்கனியோடு பலாப்பழத் தேனும், மாம்பழமும் தொங்கும் குற்றாலம், 
அக்குமணி முதலியவற்றையணிந்த நக்கன் நகர் என்கின்றது. பாய்கனி - பரவிய பழம். கொக்கு - மா. 
நக்கன் - நக்நன் - ஆடையில்லாதவன். 
On all sides, of the mountain in Thiru-k-kut-ra-lam you will see banana fruits hanging in big bunches in the plantain gardens; the huge bursted ripened Jack fruits will be dripping honey in the jack groves; the fresh fully riped mango fruits hanging in abundance in mango trees in their groves all the three fruits on all sides of the mountain range is a sight to see. Oh! Ye kindred souls! Kindly note that our Lord Civan holds fire in His hand and is decked with garland of snakes, tortoise shell and the seeds of Elaeo carpus  etc., and elegantly enshrined in such a gorgeous form in Thiru-k-kut-ra-lam. Reach this place and offer worship to Him.

மலையார் சாரல்மகவுடன் வந்தமடமந்தி 
குலையார் வாழைத்தீங் கனிமாந்துங் குற்றாலம் 
இலையார் சூலமேந்திய கையானெயிலெய்த 
சிலையான் மேயநன்ன கர்போலுஞ்சிறு தொண்டீர். 5

மலையார் சாரல் மகஉடன் வந்த மடமந்தி 
குலை ஆர் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம் - 
இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த 
சிலையான், மேய நன் நகர் போலும்; சிறு தொண்டீர்!

பொருள்: இறைவனுக்கு கைத்தொண்டுூ புரிபவர்களே! தருக்குற்றாலமானது தாய்க்குரங்கு 
தன்குட்டிகளோடு மலையின் சாரலுக்கு வந்து வாழைக் குலைகளின் பழுத்த இனிய 
கனிகளை வயறு புடைக்கத் தின்னுகின்ற நகரம் ஆகும். இந்நன்னகரத்தில் சிவபெருமான், 
இலை வடிவமான சூலத்தை கையில் ஏந்தியுள்ளார். மும்மதில்களையும் எய்து அழித்த 
வில்லானனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி உள்ள நகரமும் இதுவே ஆகும்.

குறிப்புரை: குட்டியுடன் வந்த தாய்க்குரங்கு வாழைப்பழத்தை உண்ணும் குற்றாலம். திரிபுரம் எரித்த 
சிவபெருமான் மேய நகர் என்கின்றது. மாந்தும் - தின்னும். 
The bashful female monkeys with their young ones roam about on the slopes of the hill in Thiru-k-kut-ra-lam. As and when they see well riped bananas, they climb up the plantain tree, eat the sweet fruits to their stomach full; also feed the fruits to their young ones. Oh! Ye young servitors! Lord Civan wields a trident in one of His hands; He is the famous archer who shot an arrow and destroyed the three citadels of the Asuraas; He is enshrined in such a gorgeous Thiru-k-kut-ra-lam. 
Note: Kutraalam is the paradise of monkeys. The female monkeys are said to be bashful. This description is a lovely mosaic of sentimental display.

மைம்மா நீலக்கண்ணி யர்சாரல் மணிவாரிக் 
கொய்ம்மா வேனலுண் கிளியோப்புங் குற்றாலம் 
கைம்மா வேழத்தீருரி போர்த்த கடவுள்ளெம் 
பெம்மான் மேயநன்னகர் போலும் பெரியீர்காள். 6

மைம்மா நீலக்கண்ணியர் சாரல் மணி வாரி, 
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் - 
கைம்மாவேழத்து ஈர்உரி போர்த்த கடவுள்(ள்), எம் 
பெம்மான், மேய நன்நகர் போலும்; பெரியீர்காள்!

பொருள்: பெரியோர்களே! திருக்குற்றாலமானது மிகக் கரிய நீலமலர் போன்ற கண்களை 
உடைய குறமகளிர், கொய்யும் பருவத்தில் உள்ள விளைந்த தினைக் கதிர்களை 
உண்ணவரும் கிளிகளை அங்குள்ள மாணிக்க மணிகளை வாரிவீசி விரட்டுகின்ற நகரம் 
ஆகும். இந்நன்னகரத்தில் பெரிய துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்த்த 
கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: நீலமலர் போலுங் கண்ணையுடைய குறத்தியர் மாணிக்கத்தைக் கொண்டு கிளியோட்டுங் 
குற்றாலம். யானையுரிபோர்த்த நாதன் நகர் என்கின்றது. மை மா நீலம் - மிகக் கரிய நீலமலர். கொய் மா 
ஏனல் - கொய்யும் பருவத்தில் உள்ள பெரிய தினை. ஓப்பும் - ஓட்டும். கைம்மாவேழம் - கையை உடைய 
விலங்காகிய யானை. 
In the mountain slopes of Thiru-k-kut-ra-lam riped millet grains ready for harvest have grown all over the fields. The parrots flying in large numbers reach the fields to eat the riped millet grains. Young girls belonging to the gypsy community in the hilly tract having long and dark blue eyes like blue lily flowers, who are supervising he fields, pick up the ruby gem stones lying nearby and pelt at and to chase away the parrots. Such flourishing place is Thiru-k-kut-ra-lam. Oh! Ye scholars! Our master Lord Civan who covers His body with the skin of the trunked elephant is enshrined in such a gorgeous Thiru-k-kut-ra-lam. Offer worship to Him!

நீலநெய் தல்தண்சுனை சூழ்ந்தநீள் சோலைக் 
கோலமஞ் ஞைபேடையொடா டுங்குற்றாலம் 
காலன்றன் னைக்காலாற் காய்ந்தகட வுள்ளெம் 
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள். 7

நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை, 
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் - 
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள்(ள்) எம் 
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

பொருள்: தொழுது வணங்கும் அடியவர்களே! திருக்குற்றாலமானது, நீலமலரும் நெய்தல் 
மலரும் பூத்த குளிர்ச்சியான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டு வளர்ந்துள்ள மரங்களை உடைய 
சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடும் நகரமும் 
ஆகும். இந்நன்னகரத்தில் காலனைக் காலால் கடிந்த எம் கடவுளாகிய சிவபெருமான்
சூலத்தைக் கையில் ஏந்தியவராக எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: சுனை சூழ்ந்த சோலையிலே மயில் பெடையோடு விளையாடும் குற்றாலம். காலகாலனாகிய 
சூலபாணியின் நகர் என்கின்றது. கோல மஞ்ஞை - அழகிய மயில். 
Thiru-k-kut-ra-lam is endowed with glen and glade where blue lilies as well as the white Indian water lily  have blossomed in large numbers. In the gardens nearby tall trees have grown in large numbers. In these gardens peacocks dance happily with their mates the peahens. Such a gorgeous place is Thiru-k-kut-ra- lam. Oh! Ye worshippers! This Thiru-k-kut-ra-lam is the place where our Lord Civan is enshrined. He is the one who kicked down Kaalan - the god of death to die. He wields in one of His hands the trident.

போதும் பொன்னுமுந் தியருவிபுடைசூழக் 
கூதன் மாரிநுண்டுளி தூங்குங் குற்றாலம் 
மூதூரி லங்கைமுட் டியகோனை மிறைசெய்த 
நாதன் மேயநன்ன கர்போலுந் நமரங்காள். 8

போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ, 
கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம் - 
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறைசெய்த 
நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

பொருள்: திருக்குற்றாலத்தில் விழும் குளிர்ச்சியான அருவிகள் பொன்னையும் பூக்களையும்
உந்தி வருகின்றன. இந்த அருவி நீரின் நுண்துளிகள் நாற்புறமும் சிதறி விழுகின்றன. 
இத்தனை சிறப்பு வாய்ந்த நகரம் திருக்குற்றாலமாகும். இந்நன்னகரத்தில், தன் தகுதிக்கு 
மேல் செயல்பட்ட பழமையான இலங்கை நகரின் புகழ்பெற்ற அரசனான இராவணனைத் 
தண்டித்த சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். 
குறிப்புரை: பூக்களையும் பொன்னையும் உந்தி அருவி புடைசூழ நுண்துளி வீசுங் குற்றாலம். இலங்கை 
நாதனை அடக்கிய இறைவன் நகர் என்கின்றது. மீதூர் எனவும் பாடம். கூதல் மாரி - குளிர்ந்த மழை. 
In the Thiru-k-kut-ra-lam town, waterfalls carry tiny pieces of gold and flowers and they fall on the base; also it creates soft and` cool drizzling on both sides surrounding the water falling area. Such an attractive place is Thiru-k-kut-ra-lam. Oh! Ye companions! Raavanan, the king of Sri Lanka once went beyond his capacity -ruled over his kingdom in all glory, but erred later. Lord Civa who punished him for his ineptitude and later graced him. He is enshrined in this delightful Thiru-k-kut-ra-lam (You reach there and worship him, Ye devotees!).

அரவின் வாயின்முள் ளெயிறேய்ப்ப அரும்பீன்று 
குரவம் பாவைமுரு கமர்சோலைக் குற்றாலம் 
பிரமன் னோடுமால றியாதபெ ருமையெம் 
பரமன் மேயநன்ன கர்போலும் பணிவீர்காள். 9

அரவின் வாயின் முள்எயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று, 
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம் - 
பிரம(ன்)னோடு மால் அறியாத பெருமை எம் 
பரமன் மேய நன்நகர் போலும்: பணிவீர்காள்!

பொருள்: பணியும் தொண்டர்கனே! திருக்குற்றாலமானது, பாம்பின் வாயில் அமைந்த கூரிய
பற்களை ஒப்ப, குரவ மரங்கள் அரும்புகளை ஈனுகின்றன. இம்மரங்களில் பூத்துள்ள பாவை 
போன்ற மலர்கள் நிறைந்த சோலைகள், இந்நகரைச் சுற்றிலும் உள்ளன. இந்நன்னகரத்தில் 
பிரமனும், திருமாலும் அறிய முடியாத பெருமை பெற்ற பெரியோனாகிய எம்பிரானான 
சிவபெருமான் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: குரவம்பாவை பாம்பின் பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை சூழ்ந்த குற்றாலம். 
அயனும் மாலும் அறியாத பரமன் நகர் என்கின்றது. முள் எயிறு - முள் போன்ற பல். 
Thiru-k-kut-ra-lam is girt with fragrant flower gardens wherein the bottle flower tree sprouts its buds like unto the thorn-like curved fangs of a serpent. These buds blossom into fragrant flowers, like unto the pupil of girl's eyes. The fragrance of this flower spreads all around. Lord Civan whose glory is unknown to Thirumaal and Brahma is enshrined in this gorgeous city of Thiru-k-kut-ra-lam. Oh! Ye devotees reach here and worship Him.

பெருந்தண் சாரல்வாழ் சிறைவண்டு பெடைபுல்கிக் 
குருந்தம் மேறிச்செவ் வழிபாடுங் குற்றாலம் 
இருந்துண் தேரும்நின்றுண் சமணுமெடுத் தார்ப்ப 
அருந்தண் மேயநன்னகர் போலு மடியிர்காள்.  10

பெருந் தண்சாரல் வாழ் சிறைவண்டு பெடை புல்கி, 
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம் - 
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப, 
அருந் தண் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!

பொருள்: அடியவர்களே! திருக்குற்றாலமானது பெரிய குளிர்ச்சியான மலைச் சாரலில்
வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி, குருந்த மரத்தில் 
ஏறிச் செவ்வழிப் பண் இசை பாடும் நகரம் ஆகும். இந்நன்னகரத்தில் உட்கார்ந்து உண்ணும் 
புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் மகிழ்ச்சியாக எடுத்து நுகர்தற்கு இயலாத 
தண்ணிய இறைவனாகிய சிவபெருமான் எழுந்தருளி உள்ளார்.  

குறிப்புரை: வண்டு பெண் வண்டைப் புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம். தண்ணிய 
இறைவன் மேய நகர் என்கின்றது. எடுத்து ஆர்ப்ப அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து 
நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் - தண்மை. பண்பு தன்மையை உடைய 
இறைவனைக் காட்டி நின்றது. 
Oh! Ye servitors! Thiru-k-kut-ra-lam is a place where the winged bees that abide in the cool slopes, having had union with their mates, ascend the wild lime tree ( Atlantia) and then melodize in the primary melody type of the mullai class (பெரும்பண்களுள் ஒன்றாகிய செவ்வழிப்பண் என்ற முல்லைப் பண்). Such a glorious place is Thiru-k-kut-ra-lam. Here Lord Civan is enshrined who ignores the slandering words of Buddhists who sit and eat as well as Samanars who stand and eat, both could not happily enjoy the glory of our Supreme Lord Civan.

மாடவீதி வருபுனற் காழியார் மன்னன் 
கோடலீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம் 
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் 
பாடல்பத் தும்பாட நம்பாவம் பறையுமே. 11

மாட வீதி வருபுனல் காழியார் மன்னன், 
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் 
நாட வல்ல நல்-தமிழ் ஞானசம்பந்தன், 
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

பொருள்: நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பலராலும் நாடவல்லவன். மாடவீதிகளும், ஆற்று 
நீர் வளமும் மிகுந்த சீகாழிப் பதிக்கு மன்னன். இரு கைகளைக் குவித்து மூடி இறைவனை 
வணங்குவது போன்று செங்காந்தள் மலர்கள் பூத்து தன் கொழுவிய முனையான பூ 
இதழ்களை மூடி இறைவனை வணங்கும் நகரம் திருக்குற்றாலம் ஆகும். இத்திருக் 
குற்றாலத்து இறைவரான சிவபெருமான் மீது ஞானசம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார்.
இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை: குற்றாலத்தைப் பற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையும் 
என்கின்றது. கோடல் - செங்காந்தள். கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம் கூம்பியுள்ள. 
Gnaanasambandan, is the prince of Kaazhi where water is available in plenty. This city has many storeyed mansions. Gnaanasambandan is well versed in Tamil and sought by many. He has sung on Lord Civan of Thiru-k-kut-ra-lam. Here the Malabaar glory lily (red or white species) (Gloriasa superba ) flourishes well. Even these flowers worship Lord Civan by closing their well-shaped sharp petals. If we chant these ten verses with true devotion our sins will be purged.

திருச்சிற்றம்பலம்

99ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் _- 
100. திருப் பரங் குன்றம்

திருத்தல வரலாறு:

திருப்பரங்குன்றம் பாண்டிய நாட்டுத் திருத்தலம். பேருந்துகள் பல உள்ளன. இத்தலம் 
மதுரைக்குத் தென்மேற்கில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இது முருகனது ஆறு படைவீடுகளில் முதல் வீடு. முருகன் தெய்வ யானையைத் திருமணம் 
செய்து கொண்ட தலம். முருகப் பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்யுமுன்பு, தன் தாய் 
தந்தையரை வணங்கி வழிபட்ட தலம். சுவாமி பெயர் பரங்கிரிநாதர். அம்மை ஆவுடை நாயகி. 
தீர்த்தம் சரவணப் பொய்கை. மலைமேல் காசி தீர்த்தம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் பல ரக 
மீன்கள் பார்ப்போர் கண்ணைக் கவரும். நக்கீரர் வாழ்ந்த நன்னகரம். 
கல்வெட்டு-

இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பிட்டவை பதினொன்று. ஆனால் 
அவைகள் தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல. கி.பி. 1843இல் வீரசிம்ம நாயுடு 
என்பவன் மரபில் வந்த மங்கம்மாள் கோயிலுக்குச் சிறிது தானம் வழங்கினாள். 
சுந்தரபாண்டியதேவன், வீரநாராயண குளத்திற்குக் கீழ்ப்புறமிருந்த அம்பாண்டியபுரமாகிய 
புளிங்குன்றூர் கிராமத்தைப் பூசைக்கும் பணிக்கும் அளித்தான். அதில் கடவுள் பெயர் 
சுந்தரபாண்டீசுவரம் உடையார் என்று குறிக்கப்படுகிறது. முகம்மதிய அரசாங்கத்தில் 
திவானாயிருந்த ராஜகோபாலராயர் ஐரோப்பியர் படை மதுரையில் புகுந்து, கோயிலை அழித்து 
முன்னேறிக் கொண்டிருந்தபோது, வயிராவி முத்துக்கருப்பன் குமாரன் குட்டி என்பவன் 
எதிரிப்படைகளைத் தடுப்பதற்காகக் கோபுரத்திலிருந்து கீழே விழ, அவன் பரம்பரையினருக்கு 
இறையிலியாகச் சில நிலங்கள் அளித்த செய்தி அறியப்படுகிறது.

பதிக வரலாறு:

திருஞான சம்பந்தர் மதுரையை வழிபட்டுப் பிற தலங்களையும் வழிபடத் திருவுளங்
கொண்டருளினார். அது சமயம் அரசன் நெடுமாறனும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் 
மனங்கவல, பிள்ளையார் 'நீங்கள் கவலாதொழிவீர்களாக; உங்களைப் பிரியாதவண்ணம் 
இந்நாட்டுப் பிறபதிகளையும் தரிசிக்க எண்ணினோம்’ என்றார். அவர்கள் யாவரும் மகிழ்ந்து 
திருஞானசம்பந்தருடன் திருப்பரங்குன்றத்தை வந்து அடைந்தார்கள். அங்கு பிள்ளையார் 
இறைவன் திருவடிகளைப் போற்றி ‘நீடலர் சோதி’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். 
HISTORY OF THE PLACE

100. THIRU-P-PARAN-KUNDRAM

This sacred place is in Paandiya Naadu, 8 km to the south of Madurai. Many bus routes touch this place. 
God's name here is Parangkirinaathar and that of the Goddess is Aavudainaayaki. This is the first among the six 'padaiveedu' temples of Lord Murugan. Lord Murugan offered worship here to His parents before marrying Deivayaanai. It is here Lord Murugan then married Dheivayaanai. The sacred ford here is the Saravanap Poigai. In addition, there is a Kaasi Theerththam atop the hill. A variety of attractive fish may be found in it. This place also has the distinction of once having been the residence of the famed Tamil poet Nakkeerar who composed the famous poem “Thiru-muru-kaatru-p-padai ”.
Many of the eleven inscriptions here are not of historical significance. There is a reference to a small gift by Mangammaal, a descendant of Veerasimma Naayudu. Sundhara Paandiya Thevan made a gift of Pilingkunroor village for worship services and other works. An interesting episode relating to the grant of tax-free lands to the descendants of one Vayiraavi Muththukkaruppan Kumaaran Kutti is noted. As a European force invading Madhurai was advancing, this man jumped off from the gopuram with a view of stopping the invaders. Raajagopaala Raayar, dewan of the then Mahommodan ruler, made some grants to honour him for his sacrifice.

திருச்சிற்றம்பலம்

100. திருப்பநங்குன்றம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

நீடலர்சோ திவெண்பிறை யோடுநிரை கொன்றை 
சூடலனந் திச்சுடரெ ரியேந்திச் சுடுகானில் 
ஆடலனஞ் சொலணி யிழையாளை யொருபாகம் 
பாடலன் மேயநன்னகர் போலும்பரங் குன்றே.  1

நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை 
சூடலன், அந்திச் சுடர்எரி ஏந்திச் சுடுகானில் 
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம் 
பாடலன், மேய நன்நகர் போலும் - பரங்குன்றே.

பொருள்: சிவபெருமான், நீண்டு விரிந்த ஒளிக் கதிர்களை உடைய வெண்பிறையையும், 
வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையையும் தன் முடியில் சூடியிருப்பவர். அந்திப் 
பொழுதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவர். அழகிய உயர்ந்த 
சொற்களைப் பேசுபவளும், சிறந்த அணிகலன்களைப் பூண்டுள்ளவளும் ஆகிய 
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு பாடுபவர். அத்தகைய பெருமான் எழுந்தருளிய 
நன்னகரம் திருப்பரங்குன்றம் ஆகும்.

குறிப்புரை: பிறை, கொன்றை இவைகளைச் சூடியவனும், எரியேந்தியும், இடுகாட்டில் நட்டமாடுபவனும், 
உமாதேவியாரை ஒரு பாகம் வைத்து ஆடுபவனுமாம் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள நகரம் 
திருப்பரங்குன்றம் என்கின்றது. சூடலன் - சூடுதலை உடையவன். அம் சொல் அணியிழையாளை எனப் 
பிரிக்க. 
Our Lord wears on His head the crescent, which diffuses bright rays of light and rows and rows of kondrai flowers. At dusk he dances in the crematory ground, holding in his hands, ruddy fire. He also sings with his bejewelled consort of mellifluous (sweet) words. This Lord is enshrined in Thiru-p-paran-kundram, a place (known for) conferring weal on all.

அங்க மொராறு மருமறை நான்கு மருள்செய்து 
பொங்கு வெண்ணூலும் பொடியணிமார் பிற்பொலிவித்துத் 
திங்க ளும்பாம்புந் திகழ்சடை வைத்தோர் தேன்மொழி 
பங்கி னன்மேயநன் னகா்போலும் பரங்குன்றே. 2

அங்கம் ஒர் ஆறும் அருமறை நான்கும் அருள்செய்து, 
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து, 
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி 
பங்கினன் மேய நன் நகர் போலும் - பரங்குன்றே.

பொருள்: சிவபெருமான், நாங்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அருளிச்செய்தவர்.
திருநீறு ஆணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலை பொலிவுற அணிந்திருப்பவர். பிறை
பாம்பு அகியவற்றை விளங்கும் சடை மீது சூடியிருப்பவர். உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். 
இப்பெருமான் எழுந்தருளிய நன்னகரம் திருப்பரங்குன்றம் ஆகும்.

குறிப்புரை: வேதம் அங்கம் இவைகளை அருளிச் செய்து, பூணூல் நீறணிந்த மார்பில் விளங்க, பாம்பும் 
மதியும் சென்னியிற் சூடிய உமையொரு பாகன் நகர் இது என்கின்றது. பொங்கும் வெண் ணூல் - அழகு 
மிகும் பூணூல். 
Civan blessed the world with four Vedas and six Angaas. He smears on His chest the holy ashes. He wears on His body the bright, white holy thread very beautifully. He has worn on His matted hair the crescent moon and a serpent. He shares His body with His consort Umayammai who speaks honeyed words. Thiru-p- paran-kundram is a good (town or) place where our Lord is entempled.

நீரிடங் கொண்டநி மிர்சடைதன் மேல்நிரை கொன்றை 
சீரிடங் கொண்டஎம் மிறைபோலுஞ் சேய்தாய 
ஓருடம் புள்ளேயுமை யொருபாக முடனாகிப் 
பாரிடம் பாடஇனி துறைகோயில் பரங்குன்றே. 3

நீர் இடம்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரை கொன்றை 
சீர் இடம்கொண்ட எம் இறைபோலும் சேய்துஆய 
ஓர் உடம்புள்ளே உமை ஒரு பாகம் உடன் ஆகி, 
பாரிடம் பாட, இனிது உறை கோயில் - பரங்குன்றே.

பொருள்: சிவபெருமான் கங்கை சூடிய நிமர்ந்த சடைமுடி மேல் வரிசையாகத் தொடுத்த 
கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவர் ஆவார். மிக உயர்ந்துள்ள 
தமது திருமேனியின் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவர். இப்பெருமான் பூத 
கணங்கள் பாட, இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம் ஆகும்.

குறிப்புரை: கங்கை சூடிய திருச்சடையில் கொன்றையை அணிந்த எம்மிறைவன் உறைகோயில் 
பரங்குன்று போலும் என்கின்றது. நீர் - கங்கை. நிரை கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. 
பாரிடம் - பூதம். 
On His majestic crown of matted hair which bears a river (the Ganges), Civan wears kondrai flowers in a beautiful garland form. On His tall frame, He is concorporate with Uma. He who is hailed in hymns by the Bhuta-hosts is sweetly enshrined in Thiru-p-paran-kundram.

வளர்பூங் கோங்கம் மாதவி யோடுமல்லிகைக் ' 
குளிர்பூஞ் சாரல்வண் டறைசோலைப் பரங்குன்றம் 
தளிர்போல் மேனித்தையல் நல்லாளோ டொருபாகம் 
நளிர்பூங் கொன்றைசூடி னன்மேயநகர் தானே. 4

வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் 
குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம், 
தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒருபாகம், 
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர் தானே.

பொருள்: திருப்பரங்குன்றத்தில் வளர்ந்துள்ள கோங்கு மரங்களும், மணம் தரும் மாதவி 
போன்ற செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ளன. வண்டுகள் முரலும் 
சோலைகள் சூழ்ந்த சாரலை உடையது. தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளை 
ஒரு பாகமாகவும், கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகவும் விளங்கும் 
சிவபெருமானது நகர் திருப்பரங்குன்றம் ஆகும்.

குறிப்புரை: கோங்கம் மாதவி மல்லிகை இவைகள் செறிந்த சாரலை உடைய பரங்குன்றம். பெண்ணொரு 
பாகன் பேணிய நகரம் என்கின்றது. இவன் போகியாதற்கேற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணந்தரும் 
பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலமிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப் பெற்றன. 
This Thiru-p-paran-kundram is the town of our Lord Civan. In the groves of this town flourish kongu, madavi and jasmine. These creepers and buzzing beetles abound in these cool groves. In this town is enshrined our Civan who is concorporate with Umaa, the godly dame whose body is soft as young tender shoots. He wears the garland of kondrai flowers, dense and beautiful in bunches.
பொன்னியல் கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் 
துன்னிய சோதியாகிய ஈசன்தொன்மறை 
பன்னிய பாடலாடலன் மேயபரங்குன்றை 
உன்னிய சிந்தையுடை யவர்க்கில்லை யுறுநோயே. 5

பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத் 
துன்னிய சோதிஆகிய ஈசன், தொல்மறை 
பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை 
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறுநோயே.

பொருள்: சிவபெருமான் பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு 
ஆகியவற்றை முறுக்கேறிய சடைகளில் அணிந்துள்ளார். இவர் ஒளிவடிவினனாகிய ஈசன் 
ஆவார். பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவர். 
இப்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைத் தியானிக்கும் உயர்ந்த உள்ளத்தை 
உடையவர்களுக்கு வருத்தம் தரும் மிக்க நோய்கள் எவையும் இல்லை.

குறிப்புரை: சோதி வடிவாகிய ஈசனும் வேதம் அருளிச் செய்தவனும் ஆகிய நட்டமாடியின் பரங்குன்றைத் 
தியானிப்பவர்கட்கு நோயில்லை என்கின்றது. பொறி - படப்பொறி. உன்னிய - தியானித்த. உறுநோய் - 
மிக்க நோய். 
Civan who is in the form of a blaze has decorated His twisted and stiff hair with golden kondrai and speckled snake. He sings hoary Vedic hymns and dances too. This Lord resides in Thiru-p-paran-kundram. Those who have the will to meditate on Him will be always free of troubling illnesses.

கடை நெடுமாடக் கடியரண் மூன்றுங்க னல்மூழ்கத் 
தொடை நவில்கின்ற வில்லினனந் திச்சுடுகானில் 
புடை நவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் 
படை நவில்வான் றன்நன்னகர் போலும் பரங்குன்றே. 6

கடை நெடுமாடக் கடிஅரண்மூன்றும் கனல் மூழ்கத் 
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில் 
புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்- 
படை நவில்வான் தன் நன்நகர் போலும் - பரங்குன்றே.

பொருள்: வாயிலில் காவலை உடைய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் நெருப்பில் 
எரிந்து மூழ்குமாறு அம்பினை எய்த வில்லை உடையவர் சிவபெருமான். இவர் அந்திக்
காலத்தில் தன்னோடு பழகிய பூதகணங்கள் பாட சுடுகாட்டில் ஆடுபவர். போர்க் 
கருவியாகிய சூலப்படையை ஏந்தியவர். இப்பெருமானின் நன்னகர் திருப்பரங்குன்றம்
ஆகும்.

குறிப்புரை: திரிபுரம் எரிய அம்புதொடுத்த வில்லினனும், பூதம் பாட இடுகாட்டில் நடமாடும் 
சூலபாணியுமாகிய இறைவன் நகர் பரங்குன்று என்கின்றது. கடி அரண் - காவலோடு கூடிய அரண். 
தொடை - அம்பு. புடை - பக்கம். நவில்வான் - விரும்பியவன். 
The well-guarded three citadels of the Asuraas, were gutted in full, when our Lord, as an archer exercised His arrows. At dusk He dances in the burning ground to the music of the friendly Bhutas. He carries the trident, a war weapon. This Lord is enshrined in the weal-conferring Thiru-p-paran-kundram.

அயிலுடை வேலோரனல் புல்குகையினம் பொன்றால் 
எயில்பட வெய்தஎம் மிறைமேய இடம்போலும் 
மயில்பெடை புல்கிமாநட மாடும்வளர் சோலைப் 
பயில்பெடை வண்டுபாட லறாதபரங் குன்றே. 7

அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் 
எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும் - 
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை, 
பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.

பொருள்: சிவபெருமான் கூரிய வேற்படையை உடையவர். அனல் தழுவிய கை அம்பு 
ஒன்றால் முப்புரத்தை எய்து அழித்தவர். இப்பெருமான் அமர்ந்திருக்கும் இடம்
திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த 
வகையில் நடனம் ஆடுகின்றன. வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் 
வண்டுகள் இடையறாது இசை பாடுகின்றன.

குறிப்புரை: எறியம்பு ஒன்றால் எயில் எய்த இறைவன் எழுந்தருளியுள்ள இடம் பரங்குன்று என்கின்றது. 
அயில் - கூர்மை. பட - அழிய, ஆண்மயில் தன்னுடைய பெடையைத் தழுவிக் கொண்டு நடமாடும் 
சோலையிலே, பெடையோடு கூடிய வண்டுகள் பாடுகின்றன என்பதால் இன்பமயமாதல் எடுத்துக் 
காட்டப்பெற்றது. 
He is the wielder of sharp spears. With fiery arrows He destroyed the three fortresses. He is enshrined in Thiru-p-paran-kundram wherein in the groves peacocks, embracing peahens, dance beautifully. Here also found beetles, both male and female, that add to the pleasantness of the place with their ceaseless humming.

மைத்தகு மேனிவாள ரக்கன்ம குடங்கள் 
பத்தின திண்டோளி ருபதுஞ்செற் றான்பரங்குன்றைச் 
சித்தம தொன்றிச்செய் கழலுன்னிச் சிவனென்று 
நித்தலு மேத்தத்தொல் வினைநம் மேல்நில்லாவே. 8

மைத் தகு மேனி வாள் அரக்கன் மகுடங்கள் 
பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச் 
சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் ‘சிவன்’ என்று 
நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொருள்: இராவணன் மை போன்ற கரிய மேனியன். வான் போரில் வல்லவன். இவனது 
மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்து நெரித்தவர் 
சிவபெருமான். இப்பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தை ஒன்றிய மனத்துடன்
சிந்தித்து, அப்பெருமானின் சேவடிகளை ‘சிவனே’ என்று நாள்தோறும் ஏத்தித் துதிக்க, 
வினைகள் நம்மேல் நில்லாமல் அகன்றுவிடும்.

குறிப்புரை: பரங்குன்றைச் சிவபெருமானே என்றெண்ணி மனம் ஒன்றி நாள்தோறும் வழிபட நமது 
வினைகள் அழியும் என்கின்றது. மைத்தகு மேனி வாள் அரக்கன் - கரிய மேனியை உடைய கொடிய 
அரக்கன் என்றது இராவணனை. 
Thiru-p-paran-kundram is the abode of Lord Civa who crushed the ten crowned heads and the twenty formidable shoulders of the pitch dark Raavana. When we concentrate on the abode, as if it is Lord Civa and glorify Him daily our hoary karma will no longer cling to us.

முந்தியிவ் வையந்தா வியமாலு மொய்யொளி 
உந்தியில் வந்திங்கரு மறையீந்த வுரவோனும் 
சிந்தையி னாலுந்தெரி வரிதாகித் திகழ்சோதி 
பந்தியலங் கைமங்கை யொர்பங்கன் பரங்குன்றே. 9

முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி 
உந்தியில் வந்திங்கு அருமறை ஈந்த உரவோனும், 
சிந்தையினாலும் தெரிவு அரிதுஆகித் திகழ்சோதி, 
பந்து இயல் அம் கை மங்கை ஓர்பங்கன், பரங்குன்றே!

பொருள்: திருமால், மாவலி மன்னனிடம் மூன்றடி மண்கேட்டு, அவன் தந்த அளவில் முந்திக் 
கொண்டு இவ்வுலகை ஓரடியாலும், வானுலகை ஓரடியாலும் அளந்தவன். நான்முகன் 
அத்திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன். அரிய மறைகளை ஓதுபவன். 
சிவபெருமான் இவர்கள் இருவரின் மனத்தினாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் 
பிளம்பாய் ஜோதி வடிவினனாக விளங்கியவர். இப்பெருமான், பந்து தங்கிய அழகிய 
கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் தலம் 
திருப்பரங்குன்றம் ஆகும்.

குறிப்புரை: அயனும் மாலும் மனத்தாலும் அறியமுடியாத சோதி வடிவாகிய இறைவனது பரங்குன்று இது 
என்கின்றது. உந்தி - கொப்பூழ். உரவோன் - அறிஞன்; என்றது பிரமனை. பந்து இயல் அங்கை - 
மங்கைக்கு அடை. 
Begging for three feet land from Maavali, and immediately after being granted his wish, Thirumaal measured this world with one stride and the celestial world with another stride and the third on the head of Maavali and crushed him. Brahma who arose from the navel of Thirumaal proclaimed the rare Vedas. Even these two got confounded since Civan was beyond the reach of their minds and appeared as a big blaze. This Lord holds in His body, goddess Umaa whose hands sporting a ball. He is entempled in Thiru-p-paran-kundram.

குண்டாய் முற்றுந்திரி வார்கூறை மெய்போர்த்து 
மிண்டாய் மிண்டர்பே சியபேச்சு மெய்யல்ல 
பண்டால் நீழல்மேவியஈ சன்பரங்குன்றைத் 
தொண்டா யேத்தத்தொல் வினைநம் மேல்நில்லாவே. 10

குண்டுஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து, 
மிண்டுஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய்அல்ல; 
பண்டுஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் 
தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொருள்: சமணர்கள் பருத்த உடம்பினராக எங்கும் திரிபவர்கள். புத்தர்கள் உடலில் 
ஆடையை போர்த்துத் திரிபவர்கள். இவர்கள் தருக்க வாதத்துடன் மிடுக்காய்ப் பேசும் 
பேச்சுக்களில் உண்மை எதுவும் இல்லை. பழமையான காலத்தில் கல்லால மர நிழலில் 
வீற்றிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருளின் 
விளக்கத்தைத் தெளிவு படுத்திய ஈசனான சிவபெருமான் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி 
உள்ளார். அவருக்குத் தொண்டு செய்து போற்றினால் நம் தொல்வினைகள் நம்மேல் 
நில்லாது கழிந்து விடும்.

குறிப்புரை: புத்தரும் சமணரும் கூறுவன மெய்யில்லாதன; ஆதலால் பரங்குன்று ஈசன் பாதத்தைப் பணி 
செய்து தொழவே பழவினை பறக்கும் என்கின்றது. குண்டாய் - பருத்த உடலராய். மிண்டர் - 
வழக்குரைப்பார். பண்டு ஆல் நீழல் மேவிய எனப்பிரிக்க. 
The Jains, of fatted physique roaming about everywhere, and the Buddhists donning clothes on their bodies wrangle with showy words which are not at all true. In the days of yore our Lord was seated in the shade of the banyan tree and expounded dharma to the four (the Sanathana Kuravaas). When we serve and glorify this Lord of Thiru-p-paran-kundram our hoary karma will flee from us.

தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன் 
படமலி நாகமரைக் கசைத்தான்றன் பரங்குன்றைத் 
தொடைமலி பாடல்பத்தும் வல்லார்தந் துயாபோகி 
விடமலி கண்டனருள் பெறுந்தன்மை மிக்கோரே. 11

தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன், - 
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் 
தொடை மலி பாடல்பத்தும் வல்லார், தம் துயர் போகி 
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

பொருள்: ஞான சம்பந்தன், பரப்பளவு மிகுந்த பொய்கையை உடைய சண்பை என்னும் 
சீகாழிப் பதியின் மன்னர். இவர், படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியிருக்கும் 
திருப்பரங்குன்றத்தில் இறைவரான சிவபெருமான்மீது, தொடை நயம் மிகுந்த பாடல்களைப்
பாடினார். இப்பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர்களின் துன்பங்கள் நீங்கிவிடும். 
இவர்கள் விடமுண்ட கண்டனாகிய சிவபெருமானின் அருளைப் பெரும் தகுதி 
உடையவர்கள் ஆவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தன் சொன்ன பரங்குன்றப் பாடல் பத்தும் வல்லவர் தம்முடைய துன்பம் எல்லாம் 
தொலைந்து நீலகண்டனது அருளைப் பெறும் தகுதி உடையோர் ஆவர். 
Gnaanasambandan, the king of Chanbai or Seekaazhi filled with spacious springs, has sung about the god of Thiru-p-paran-kundram who wears the hooded cobra on his waist. Those who are capable of reciting these ten verses worshipping our Lord, will be freed of their sins (and sorrows). They will be transformed into deserving and sincere devotees by the grace of the Lord Civan whose throat retains the venom of the churned sea.
திருச்சிற்றம்பலம்

100ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
101. திருக்கண்ணார் கோயில்

திருத்தல வரலாறு:

சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலமாக விளங்குவது திருக் கண்ணார் கோயில். 
மயிலாடுதுறை - வைத்தீசுவரன் கோயில் பேருந்து வழியில் உள்ளது. குறுமாணக்குடி என்றும் 
வழங்கப்படும். கெளதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் பூசித்துச் சரீரத்தில் உள்ள குறிகள் 
அனைத்தையும் கண்களாக மாற்றிக் கொண்டமையால் இப்பெயர் எய்தியது. வாமனமூர்த்தியும் 
பூசித்துப் பேறு பெற்றமையின் குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று. இறைவன் பெயா் 
கண்ணாயிர நாதர். இறைவியின் பெயர் முருகு வளர் கோதை. தீர்த்தம் இந்திர தீர்த்தம். இடம் 
வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தென்கிழக்கே 2.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பதிக வரலாறு:

சீகாழியை விட்டுத் தாதையார் முதலியவர்கள் உடன்போத அடியார்கள் வாழ்த்தொலி 
எடுத்துவரத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக் கண்ணார் கோயிலை அடைந்தார். அங்கு 
எழுந்தருளியுள்ள இறைவனை ‘தண்ணார் திங்கள்’ என்னும் திருப்பதிகத்தால் தோத்திரித்தார். 
HISTORY OF THE PLACE

101. THIRU-K-KANNAAR-KOVIL

This sacred place is to the north of river Cauvery in Chola Naadu. It is on the Mayilaaduthurai -Vaiththeesuvaran Koyil bus route, 2.5 km to the east of Vaiththeesuvaran Koyil. Indhiran, who had been cursed by Sage Gouthamar, worshipped Lord Civa here and got the marks on his body changed to eyes, thus giving rise to this name. It is also known as Kuru-maana-k-kudi because Vaamana Murthi worshipped Lord Civa here and obtained His grace in this place. 
The name of God is Kannaayira-naathar here and that of the Goddess is Murugu- valar-Kothai. The sacred ford is Indhira Theerththam.
INTRODUCTION TO THE HYMN

With his father and other devotees our saint arrived at Thiru-k-kannaar-koil, adored Lord Civa and sang the following hymn.
திருச்சிற்றம்பலம்

101. திருக் கண்ணார் கோயில்

பண்: குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

தண்ணார் திங்கட்பொங் கரவந்தாழ் புனல்சூடிப் 
பெண்ணா ணாபேரரு ளாளன்பிரியாத 
கண்ணார் கோயில்கை தொழுவோர் கட்கிடர்பாவம் 
நண்ணா வாகுந்நல் வினையாய நணுகும்மே. 1

தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி, 
பெண் ஆண் ஆய பேர்அருளாளன் பிரியாத 
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம் 
நண்ணாஆகும்; நல்வினை ஆய நணுகு(ம்)மே.

பொருள்: சிவபெருமான் குளிர்ச்சியான பிறை, சினம் மிகுந்த பாம்பு, ஆகாயத்திலிருந்து 
தாழ்ந்து வந்த கங்கை ஆகியவற்றைச் சூடியுள்ளார். பெண்ணும் ஆணுமாக விளங்கும்
பெருங்கருணையாளனான இப்பெருமான் பிரியாமல் எழுந்தருளி இருக்கும் கோயில் திருக் 
கண்ணார் கோயில் ஆகும். இக்கோயிலைக் கைகளால் தொழுது வணங்குபவர்களைத் 
துன்பங்களும் பாவங்களும் அணுகா. நல்வினையால் வரும் இன்பங்கள் அவர்களை 
அணுகும்.

குறிப்புரை: திங்களும் பாம்பும் கங்கையும் சிரத்தில் அணிந்து பெண்ணுமாய் ஆணுமாயிருக்கின்ற 
பேரருளாளனது கண்ணார் கோயிலைக் கைதொழுவார்களுக்கு இடரும் பாவமும் இல்லை. நல்வினை 
நணுகும் என்கின்றது. தண்ணார் திங்கள் - குளிர்ந்த மதி. இடர் பாவம் - துன்பமும் அதற்கு 
காரணமாகிய பாவங்களும். 
Lord Civan is one of immense grace, embeds His consort on the left half of His body frame and never gets Himself separated from Thiru-k-kannaar-koil temple. He decks His head with the cool crescent moon, the raging serpent and the river Ganges that has descended drawn from heaven. Troubles and sins will never approach those who worship this Lord Civan with folded hands. Also virtue accrue to them.

கந்தமர் சந்துங்கார கிலுந்தண் கதிர்முத்தும் 
வந்தமர் தெண்ணீர் மண்ணிவளஞ் சேர்வயல் மண்டிக் 
கொந்தலர் சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு 
செந்திசை பாடுஞ்சீர் திகழ்கண்ணார் கோயிலே. 2

கந்து அமர் சந்தும், கார்அகிலும், தண்கதிர் முத்தும், 
வந்து அமர் தெண்நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி, 
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு 
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.

பொருள்: சிவபெருமானின் திருக்கண்ணார் கோயிலானது மணம் பொருந்திய சந்தனம், கரிய 
அகல், குளிர்ந்த ஒளிவீசும் முத்து ஆகியன: வரும் தெளிந்த நீரை உடைய மண்ணி நதியால் 
வளம் பெருகும் வயல்களால் சூழப்பட்டு உள்ளது. இங்கு உள்ள சோலைகளில் 
கொத்துக்களாக விரிந்துள்ள மலர்கள் நிறைந்துள்ளன. குயில்கள் பாடவும் ஆடவும்
செய்கின்றன. செவிகளைக் குளிர்விக்கும் பண் இசைபாடும் வண்டுகள் செவ்வழிப்
பண்பாடும் சீரோடு திகழ்வது சிவபிரானது திருக்கண்ணார் கோயில் ஆகும்.

குறிப்புரை: மண்ணியாறு வளம்படுத்துகின்ற வயல்கள் நிறைந்த சோலையிலே குயில் ஆட வண்டு 
பாடுங் கண்ணார் கோயில் இது என்கின்றது. கந்து அமர் சந்து - மணம் பொருந்திய சந்தனம். கந்து - 
கந்தம். கார் அகில் - வயிரமாய் இருக்கும் கறுத்த அகில். கோகிலம் - குயில், செந்திசை - 
செவ்வழிப்பண். 
Thiru-k-kannaar-koil and its town are surrounded by fertile fields getting plenty of water from the river Manni. This river also carries along with its waters, fragrant sandalwood, block eagle wood and cool bright pearls and makes the town affluent and luxurious. There are groves all around this town where bunches of well blossomed flowers are in plenty; here the Indian cuckoos dance merrily; the chafers sing melodiously in the specific note known as Chev-vali which has a very cooling effect on our ears. Such an opulent place is Thiru-k-kannaar-koil where our Lord Civan is entempled.

பல்லியல் பாணிப்பாரி டமேத்தப்படு கானின் 
எல்லிநடஞ் செய்யீசனெம் மான்றன்னி டமென்பா் 
கொல்லை யின்முல்லை மல்லிகைமெள வற்கொடி பின்னிக் 
கல்லியலிஞ் சிமஞ்சமர் கண்ணார் கோயிலே. 3

“பல்இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில் 
எல்லி நடம்செய் ஈசன் எம்மான்தன் இடம்’ என்பர் - 
கொல்லையின் முல்லை, மல்லிகை, மெளவல், கொடி பின்னி, 
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.

பொருள்: திருக்கண்ணார் கோயில் என்னும் தலமானது, முல்லை நிலத்தில் வளரும் முல்லை 
மலரும், மல்லிகை மலரும், காட்டு மல்லிகையோடு பின்னி வளர்ந்துள்ள இடமாகும். 
இங்குள்ள கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் 
செல்லுகின்றன. இத்தலமானது, பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூத கணங்கள் 
போற்றிப்பாட, சுடுகாட்டில் நள்ளிரவில் திருநடனம் செய்யும் ஈசனாகிய எம் சிவபெருமான் 
எழுந்தருளி இருக்கும் தலமாகும். மேகங்கள் சிறிது நேரம் அமர்ந்து விட்டுப் பின் 
செல்லுகின்றன.

குறிப்புரை: பூதம் ஏத்த இரவில் நடஞ்செய்யும் ஈசன் இடம் இது என்பர். பல்லியல் பாணி - பலவாகிய 
இயல்பினை உடைய பாட்டு. எல்லி - இரவு. கொல்லை - முல்லை நிலம். மெளவல் - காட்டு மல்லிகை. 
கல்லியல் இஞ்சி - கல்லால் இயன்ற மதில். மஞ்சு - மேகம். 
Our Lord Civan enacts His dance during midnight in the cremation ground to the multi splendoured singing of the Bhuta hosts. It is said that Lord Civan's shrine is Thiru-k-kannaar-koil. In the tall stonewalls of this place, clouds that are moving in the sky take rest and then move on. This town is surrounded by forest lands where the Analian jasmine, and the Himaalayan smooth jasmine get twained with the natural forest Malligai creepers and put out a very grand and pleasing appearance.

தருவளர் கானந்தங் கியதுங்கப் பெருவேழம் 
மருவளர் கோதையஞ் சவுரித்து மறைநால்வர்க் 
குருவள ராலநீழலமாந் தீங்குரை செய்தார் 
கருவளர் கண்ணார் கோயிலடைந் தோர்கற்றோரே. 4

தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம், 
மருவளர்கோதை அஞ்ச உரித்து, மறைநால்வர்க்கு 
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரைசெய்தார் 
௧ரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே.

பொருள்: மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையைக் 
கண்டு, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சினாள். 
உடனே சிவபெருமான் அதன் தோலை உரித்துப் போர்த்தினார். தெய்வத் தன்மை வாய்ந்த 
கல்ஆல மர நிழலில் அமர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லப்படும் உறுதிப் 
பொருள்களின் உட்பொருளை சனகாதி முனிவர்களுக்கு உணர்த்தியவர். திருக்கண்ணார் 
கோயில் கருவறையில் தங்கியிருக்கும் இப்பெருமானைப் போற்றி அடைந்தவர்கள் 
முழுமையான ஞானம் அடைந்தோராவர்.

குறிப்புரை: உமையாள் அஞ்ச காட்டு யானையை உரித்துப் போர்த்தியும் சனகாதியர்க்கு உபதேசித்தும் 
அமர்ந்த பெருமானது கண்ணார் கோயிலை அடைந்தவர்கள் கற்றவர்கள் என்கின்றது. துங்கம் - 
உயர்ச்சி. வேழம் - யானை. மருவளர் கோதை - மணம் மிக்க மாலை போல்வாளாகிய உமாதேவி. 
நால்வர்க்கு - சனகாதியர்களுக்கு. உர வளர் ஆலம் - தெய்வத்தன்மையாகிய அச்சம் வளர்கின்ற 
ஆலமரம். உரு - வடிவமுமாம். 
Goddess Umaa Devi wears sweet smelling flower garland; once she got terrified on seeing a massive, colossal elephant carrying tall trees from the forest, and rushing towards her. Lord Civan confronted the elephant and peeled off its skin and killed it. On another occasion Lord Civan sitting under the shade of a tall green and magnificent banyan tree, enlightened the aims of mankind (objects of human pursuit) four in number such as virtue, riches, happiness and final liberation to the four Janakaathi saints. This Lord Civan is entempled Thiru-k-kannaar-koil. Those who reach this temple and adore Him will enrich themselves with true divine knowledge.

மறுமாணுரு வாய்மற்றி ணையின்றி வானோரைச் 
செறுமாவலி பாற்சென்றுல கெல்லா மளவிட்ட 
குறுமாணுரு வன்தற்குறி யாகக்கொண்டாடுங் 
கறுமாகண் டன்மேயது கண்ணார் கோயிலே. 5

மறு மாண்உருஆய் மற்று இணை இன்றி, வானோரைச் 
செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட 
குறு மாண்உருவன், தற்குறியாகக் கொண்டாடுங் 
கறு மா கண்டன் மேயது - கண்ணார்கோயிலே.

பொருள்: மாவலி என்ற அரக்கர் குல மன்னன் வஞ்சனை பொருந்திய பெரிய உருவம் 
உடையவனாய், தனக்கு ஒப்பார் எவரும் இல்லை என்று செறுக்குற்று தேவர்களைத் 
துன்புறுத்திய மன்னன் ஆவான். திருமால் குறுகிய பிராமண வடிவத்தை எடுத்து, அவனிடம் 
மூன்றடி மண் கேட்டு உலகமெல்லாம் தன்னுடையதே என்று அளந்தவன். அந்த திருமால்
சிவபெருமானின் வடிவத்தைத் தாபித்து அவரை வழிபட்டு அருள் பெற்றவன். 
சிவபெருமான் கருத்த பெரிய கழுத்தினை உடையவராக, விரும்பி எழுந்தருளியிருக்கும்
கோயில் திருக்கண்ணார் கோயில் ஆகும்.

குறிப்புரை: மாவலியை வென்ற குறளனாகிய திருமால் வழிபட்ட இறைவன் எழுந்தருளியுள்ள இடம் 
கண்ணார் கோயில் என்கின்றது. மறு மாண் உருவாய் - குற்றம் பொருந்திய பெரிய வடிவமாய். செறும் - 
வருத்துகின்ற குறுமாண் உருவன் - குறுகிய பிரமசாரி வடிவத்தை எடுத்த திருமால். தற்குறியாக - 
சிவபெருமானின் அடையாளமாக. கறுமா கண்டன் - கறுத்த பெரிய கழுத்தினை உடையவன். 
இத்தலத்திற்குப் பக்கத்தில் குறுமாணகுடி என்ற கிராமமும் இருப்பது அறிஞர்கள் அறிந்து 
இன்புறுதற்குரியது. 
Maavali is the gigantic king of demons who had no parallel for his valour. With an evil heart he used to harass the Devaas now and then. To protect the Devaas, god Thirumaal took the form of a dwarf man and appeared before Maavali and asked him to give a load of three feet of land to which he agreed (A testament to his philanthropy and generosity). Thirumaal measured the whole world in two feet. For the third feet no land was available; he, therefore, placed his leg on Maavali's head and pushed him into the infernal regions under the earth. This Vishnu worshipped Lord Civan entempled at Thiru-k-kannaar-koil and exposing His dark blue-neck. Thirumaal considered Lord Civan as the salvific symbol and adored Him.

விண்ணவ ருக்காய்வே லையுள்நஞ் சம்விருப்பாக 
உண்ணவ னைத்தே வர்கமுதீந் தெவ்வுலகிற்குங் 
கண்ணவ னைக்கண் ணார்திகழ் கோயிற்கனி தன்னை 
நண்ணவ ல்லோர்கட் கில்லைந மன்பால் நடலையே. 6

விண்ணவருக்குஆய் வேலையுள் நஞ்சம் விருப்புஆக 
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ்உலகிற்கும் 
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை, 
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன் பால் நடலையே.

பொருள்: சிவபெருமான் விண்ணவர்களைக் காத்தருளும் பொருட்டு கடலில் தோன்றிய 
நஞ்சினை விருப்பத்தோடு உண்டவர். தேவர்களுக்கு அமுதத்தை முழுவதுமாக அளித்தவர்.
எல்லா உலகத்து உயிர்களுக்கும் பற்றுக் கோடாகவும், கண்ணாகவும் விளங்குபவர். 
திருக்கண்ணார். கோயிலில் கனிபோன்று விளங்கும் இப்பெருமானைக் ஒட்டிச் 
சேர்வோர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை.

குறிப்புரை: தேவர்களுக்காக விஷத்தை விரும்பி உண்டவனை, அவர்களுக்கு அமுதம் அளித்து, எல்லா 
உலகிற்குங் கண்ணானவனை, கண்ணார் கோயில் கனியை அடைய வல்லவர்க்கு எமன் பால் இன்னல் 
இல்லை என்கின்றது. வேலை - கடல். உண்ணவன் - உண்டவன். நடலை - துன்பம். 
Lord Civan willingly positioned the oceanic venom in His throat to save the celestial folks from death; later when elixir came out of the ocean, He dispensed it to all the Devaas. He indeed is the supporter of all the worlds and is entempled in the splendid Thiru-k-kannaar-koil which is the embodiment of complete perfection. Those who can reach this temple and worship Him will be freed from the affliction of Yama, the god of death.

முன்னொரு காலத்திந்தி ரனுற்றமுனி சாபம் 
பின்னொரு நாளவ்விண்ண வரேத்தப்பெ யர்வெய்தித் 
தன்னருளா ற்கண்ணாயிர மீந்தோன் சார்பென்பர் 
கன்னியர்நா ளுந்துன்னமர் கண்ணார் கோயிலே. 7

‘முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம், 
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி, 
தன் அருளாள் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு’ என்பர் - 
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே.

பொருள்: முன்னொரு காலத்தில் கெளதம முனிவர் இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரம்
அல்குல் தோன்றுமாறு சாபமிட்டார். அதனால் இந்திரன் மிகவும் வருந்தி சிவனை 
வழிபட்டான். பின்னொரு காலத்தில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு, சிவபெருமான் 
அச்சாபத்தை நீக்கி அருள்செய்து, இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரம் கண்களாகத் 
தோன்றுமாறு செய்தார். அப்பெருமான் எழுந்தருளிய தலம் திருக்கண்ணார் கோயில் ஆகும். 
இத்தலத்தில் கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடுகின்றனர்.

குறிப்புரை: கெளதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபத்தைத் தேவர்கள் வேண்டிக் கொள்ளப் போக்கி 
ஆயிரங்கண் அளித்த கடவுள் இடம் இது என்பர். இத்தலத்து வரலாற்றைக் குறிப்பது இது. சார்பு - இடம். 
துன் அமர் - நெருங்கியிருக்கின்ற. 
Of yore Indran the king of devaas was cursed by saint Gautama by which Indra's entire body was dotted with one thousand Pudendum muliebre. Indra prayed to Lord Civa and requested Him to remove the curse. Lord Civa lessened the curse but re- dotted his body with one thousand eyes. The celestial folks were satisfied and adored Lord Civa who is entempled in Thiru-k-kannaar-koil where pious virgins gather daily and adore Him.

பெருக்கெண் ணாதபேதை யரக்கன் வரைக்கீழால் 
நெருக்குண் ணாத்தன்நீள் கழல்நெஞ்சில் நினைந்தேத்த 
முருக்குண் ணாதோர்மொய் கதிர்வாள்தேர் முன்னீந்த 
திருக்கண் ணாரென்பார் சிவலோகஞ் சேர்வாரே. 8

‘பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால் 
நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த, 
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த 
திருக்கண்ணார்’ என்பார் சிவலோகம் சேர்வாரே.

பொருள்: இராவணன், சிவபெருமானை அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று 
அறியாத அறிவிலி. கயிலையைப் பெயர்த்தபோது அதன் தீழ் அகப்பட்டு நெருக்குண்டவன். 
அவன் நல்லறிவு பெற்று, எங்கும் புகழை உடைய சிவபெருமானின் திருவடிகளைத் தன் 
நெஞ்சில் நினைந்து போற்றினான். அவனுக்கு அழிக்க முடியாத ஒளியினை உடைய 
வாளையும், தேரையும் முற்காலத்தில் இப்பெருமான் வழங்கி அருளினார். இத்தகைய 
பெருமையை உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் தலம் திருக்கண்ணார் கோயில் என்று 
புகழ்ந்து கூறுபவர்கள் சிவலோகம் சென்றடைவார்கள்.

குறிப்புரை: இராவணன் கைலையின் கீழ் நெருக்குண்ணாதபடி திருவடியில் இருந்து தோத்திரிக்க, 
வாளும் தேருங் கொடுத்த இறைவன் எழுந்தருளியுள்ள இடத்தைப் பரவுவார் சிவலோகம் சேர்வார் 
என்கின்றது. பெருக்கு - ஆக்கம். பேதை - அறிவிலி. வரை - கைலைமலை. நெருக்குண்ணா - 
நெருக்குண்டு என்றுமாம். 
Raavanan did not realise the basic fact that people who pay obeisance to Lord Civan with sincere devotion will become good and affluent in their life. The arrogant Raavanan, therefore, tried to lift and keep aside mount Kailash, the abode of Lord Civan, but got crushed under the mountain. Then he realised his folly and came back to his normal senses. By Lord Civan's grace, he came out of the mountain and standing by the side of his chariot. He begged Lord Civan for pardon. He contemplated on Lord Civa's grace abounding ankleted feet and adored Him. Then Lord Civan of Thiru-k- kannaar-koil pardoned him and blessed him. He gave him then a radiant peerless invincible sword. Those who adore Lord Civan will reach His celestial world.


செங்கமலப் போதிற்றிகழ் செல்வன் திருமாலும் 
அங்கமலக் கண்ணோக்க ரும்வண்ணத் தழலானான் 
தங்கமலக் கண்ணார்திகழ் கோயில்தம துள்ளம் 
அங்கமலத் தோடேத்திட அண்டத் தமர்வாரே. 9

செங்கமலப் போதில்-திகழ்செல்வன் திருமாலும் 
அங்கு அ(ம்)மலக் கண் நோக்க(அ)ரும் வண்ணத்து அழல் ஆனான் 
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளம் 
அங்கு அமலத்தோடு 'ஏத்திட, அண்டத்து அமர்வாரே.

பொருள்: செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் தங்களின் அழகிய ஊனக் 
கண்களால் நோக்கியும் காண இயலாதவராக அழல் உருவாக நின்றவர் சிவபெருமான். 
இப்பெருமான் தனது கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலம் 
திருக்கண்ணார் கோயில் ஆகும். இக்கோயிலை அடைந்து தமது உள்ளத்தில் மலம் நீங்கப் 
பெற்றவராக பரிசுத்த மனத்தோடு போற்றிடுவோர் என்றும் வானுலகில் இனிது 
அமர்ந்திருப்பர்.

குறிப்புரை: அயனும் மாலும் கண்ணால் நோக்க முடியாதவண்ணம் தீயுருவான சிவன் திகழும் 
கண்ணார்கோயிலை வணங்குவார் அமரர் உலகத்து இருப்பார் என்கின்றது. அங்கு அம்மலக்கண் 
நோக்கரும் வண்ணத்து - அவ்விடத்து அழகிய ஊனக் கண்ணால் நோக்க முடியாதவண்ணம். தங்கு 
அமலக் கண்ணார் கோயில் அங்கு அமலத்தோடு ஏத்திட - அவ்விடத்து மலரகிதராய்த் துதிக்க. 
The opulent Brahma is seated on a red lotus flower. He and Thirumaal with their lotus like bodily eyes could not see Lord Civan who was then in the form of an unbeholdable tall and large flame. This Lord Civan having merciful and lotus like divine eyes is entempled in Thiru-k-kannaar-koil. Those who can reach this temple and worship Him without any evil thoughts in their mind will gain the celestial world.

தாறிடுபெண் ணைத்தட்டு டையாருந் தாமுண்ணுஞ் 
சோறுடை யார்சொல் தேறன்மின் வெண்ணூல் சேர்மார்பன் 
ஏறுடை யன்பரனென் பணிவானீள் சடைமேலோர் 
ஆறுடை யண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே. 10

தாறு இடு பெண்ணைத் தட்டுஉடையாரும், தாம் உண்ணும் 
சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன், 
ஏறுஉடையன், பரன், என்பு அணிவான், நீள்சடைமேல் ஓர் 
ஆறுஉடை அண்ணல், சேர்வது - கண்ணார்கோயிலே.

பொருள்: சமணர்கள், குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை 
என்ற உடையை உடுத்தி இருப்பவர்கள். புத்தர்கள் தாம் உண்ணும் சோற்றையே 
பெரிதெனக் கருதுபவர்கள். இவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர்கள். சிவபெருமான் 
வெண்மையான பூணூல் அணிந்த மார்பினர். ஆனேற்றை ஊர்தியாக உடையவர். 
மேலானவர். என்பு மாலை அணிந்தவர். நீண்ட சடைமுடிமேல் கங்கையை அணிந்துள்ளவர்.
தலைமைத் தன்மை உடைய இப்பெருமான் எழுந்தருளி விளங்கும் கோயில் திருக்கண்ணார் 
கோயில் ஆகும். அதனைச் சென்றடைந்து வணங்குங்கள்.

குறிப்புரை: பனந்தடுக்கை உடுத்திய சமணரும், புத்தரும் சொல்லுகின்ற சொற்களைத் தெளியாதீர்கள். 
சிவன் சேர்வது கண்ணார் கோயிலே என்கின்றது. தாறு இடு பெண்ணை - குலை தள்ளும் பெண் பனை. 
தட்டு - தடுக்கு. 
The Samanars wear cloths woven with leans of bunching palmyrah trees. Buddhists live to eat; they consider that the food they eat is the best thing in the world. Ye companions! Ignore the advices of these two groups of people. Lord Civan wears in His chest a white sacred thread. He uses the bull as His vehicle. He is above all in the world. He decks His body with garland made of bones. He accommodated the river Ganges in His long matted hair. He is the Supreme Being entempled in Thiru-k- kannaar-koil. Ye devotees! Go to this temple and worship Lord Civan therein.

காமரு கண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த 
பூமரு சோலைப் பொன்னியல் மாடப்பு கலிக்கோன் 
நாமரு தொன்மைத் தன்மையுள் ஞானசம்பந்தன் 
பாமரு பாடல்பத்தும் வல்லார்மேற் பழிபோமே. 11

காமரு கண்ணார்கோயில் உளானைக் கடல் சூழ்ந்த 
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன் - 
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன் - 
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

பொருள்: அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்தில் சிவபெருமான் எழுந்தருளி 
உள்ளார். இப்பெருமானைக் கடல் சூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும், 
அழகாக அமைந்த மாடவீடுகளை உடையதுமான புகலிப் பதியின் தலைவனான 
ஞானசம்பந்தன் போற்றிப் பாடினார். இவர் பழமையான இறைவனின் புகழை நாவினால் 
மருவிப் போற்றுபவர். பரந்துபட்டுச் செல்லும் ஓசை மருவிய இப்பதிகப் பாடல்கள் 
பத்தையும் பாட வல்லவர்கள், தம்மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: கண்ணார் கோயிலைப் பற்றி ஞானசம்பந்தன் சொல்லிய பாடல் பத்தையும் பாட வல்லார்மேல் 
பழிபோம் என்கின்றது. காமரு - அழகிய. பாமரு - பாடல் - பரந்துபட்டுச் செல்லும் ஓசை மருவிய பாடல். 
Gnaanasambandan praises the glory of the primordial Supreme Being with his blessed tongue. He is the head of the city of Puhali which is full of flower gardens and girt with sea. Imposing tall and beautiful mansions are to be seen everywhere in the city. He has sung on Lord Civan entempled in Thiru-k-kannaar-koil beautiful to behold, those who can sing these ten verses of pervasive music in proper notes and adore Lord Civan in this temple will get rid of all blame.

திருச்சிற்றம்பலம்

101ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
102. சீகாழி

திருத்தல வரலாறு: 
முதல் பதிகம் பார்க்கவும். 
102. SEE-KAAZHI

HISTORY OF THE PLACE

See first hymn.


திருச்சிற்றம்பலம்

102. சீகாழி 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கொரு நாளுங் 
கரவா வண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி 
அரவார ரையாவ வுணர்புரமூன் றெரிசெய்த 
சரவா என்பார்தத் துவஞானத் தலையாரே. 1

“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும் 
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி 
அரவு ஆர் அரையா! அவுணர் புரம்முன்று எரிசெய்த 
சரவா'” என்பார் தத்துவஞானத் தலையாரே.

பொருள்: ஞானம் நிறைந்த கலை உணர்வோடு கவிதைகள் பாடும் புலவர்களுக்கு 
தாராளமாகவும், வெளிப்படையாகவும் அள்ளிக் கொடுக்கும் கைகளை உடைய வள்ளல் 
தன்மை மிகுந்த கற்றவர்கள் வாழ்கின்ற ஒலிமிக்க நகரம் சீகாழியாகும். இம்மாநகரில் 
விளங்கும் சிவபெருமானை, ‘பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் 
முப்புரங்களையும் எரித்த அம்பை உடையவனே!’ என்று போற்றுபவர்கள், தத்துவ 
ஞானத்தில் தலையானவர்களாவர்.

குறிப்புரை: கவிவாணார்க்கு ஒருநாளும் கரவாதபடி வழங்குங் கற்றவர்சேரும் காழியரசே! திரிபுரம் எரித்த 
செல்வர் என்பவர்களே தத்துவஞானத்தில் தலையானவர்கள் என்கின்றது. உரவு - ஞானம். கரவா - 
மறைக்காத. கலி - ஒலி. அரவு ஆர் அரையா எனப்பிரிக்க. சரவா - அம்பை உடையவனே. 
Lord Civan is enshrined in Seekaazhi temple. In this city dwell munificent scholars who have very generous hands in giving away rewards, without any bias even for a day towards intelligent poets who want to sing songs on philosophy with universal knowledge containing divine revelations. Lord Civan tightens His waist using a serpent as belt. He held the bow and arrow in His hand which burnt the three citadels of Asuraas. Those who hail Lord Civan and praise Him with those two of His features are indeed the masters of spiritual truth in natural philosophy.

மொய்சேர் வண்டுண் மும்மதநால் வாய்முரண் வேழக் 
கைபோல் வாழைகாய் குலையீனுங் கலிக்காழி 
மைசேர் கண்டத்தெண் டோள்முக்கண் மறையோனே 
ஐயாவென் பார்க்கல்லல் களான அடையாவே. 2

“மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக் 
கை போல் வாழை காய் குலை ஈனும் கலிக் காழி 
மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே! 
ஐயா! என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.

பொருள்: தொங்கும் வாயையும், முரண்படும் தலையையும் உடைய ஆண் யானைகள் தனது 
தும்பிக்கையால் மும்மதங்களை அவ்வப்போது சொரிகின்றன. இந்த மதநீரை சுற்றிலும் 
வண்டுகள் சூழ்ந்து, மொய்த்து, தங்கி அதை உண்ணுகின்றன. 
இந்த யானைகளின் தும்பிக்கை போன்று வாழைத்தோட்டத்தில் வாழை மரங்கள் காய்க்குலைகளை
ஈனுகின்றன.இந்த சீகாழிப் பதியில் வேதங்களைப் படிக்கின்றவர்களின் ஓசை ஒலித்துக் 
கொண்டேயிருக்கின்றன. இப்பதியில் எழுந்தருளிய சிவபெருமானாரை, “நீலகண்டனாகவும் 
எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாக விளங்கும் மறையோனே! 
எங்கள் ஐயனே!’ எனப் போற்றுபவர்களைத் துன்பங்கள் நெருங்கா.

குறிப்புரை: காழிமறையோனே ஐயா என்பவர்களுக்கு அல்லல்கள் அடையா என்கின்றது. யானையின் 
கையைப் போல் வாழைக்குலை ஈனும் காழி என வளம் உரைத்தவாறு. மும்மதம் - கபோலம். கரடம் - 
கோசம் என்ற மூன்றிடத்திலும் பொருந்திய மதம். நால்வாய் - தொங்குகின்ற வாய். மை - விடம். 
The town Seekaazhi is a very fertile place. Here in the plantain gardens, the trees grow superb and gorgeous. The bunches are so big that they look like that of the trunk of an elephant. Poets often compare the banana bunches to the trunk of elephants. Similarly Gnaanasambandan not only compares the bunches to the trunk of elephants, but also gives the descriptive features of an elephant. This poem describes the elephants as having a long hanging hand, called the tusk; they have a huge head divided in two parts; they exude their must (Semen) from three different parts of their body. The elephant is therefore termed as Mummathathan (The semen oozes from the cheek, temple and from penis). The bees are very fond of sipping the must of elephants; so they swam near these oozing places and enjoy sipping it. Lord Civan is enshrined in the temple located in this noisy city. His neck is dark blue in colour; He has eight shoulders and three eyes. Those devotees who proclaim these special features of Lord Civan and worship Him will never face any adversity in their life.


இளகக் கமலத்தீன் களியங்குங் கழிசூழக் 
களகப் புரிசைக்க வினார்சாருங் கலிக்காழி 
அளக்த திருநன்னு தலிபங்கா அரனேயென் 
றுளகப் பாடுமடியார்க் குறுநோ யடையாவே. 3

“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ, 
களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி, 
அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!’ என்று 
உளகப் பாடும் அடியார்க்கு உறு நாய் அடையாவே.

பொருள்: மென்மையான தாமரை மலர்களில் இருந்து வெளிவருகின்ற தேன் நிறைந்து 
ஓடுகின்ற கழிகள் சூழ்ந்துள்ளதும், சுண்ணாம்புச் சாந்து பூசப்பெற்ற அழகு பொருந்திய 
மதில்கள் உடையதும், ஆரவாரம் மிகுந்ததுமான பதி காழிப்பதியாகும். இப்பதியில் 
எழுந்தருளியுள்ள சிவபெருமானை, “அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய 
உமையம்மையின் கணவனே! அரனே!’ என்று மனம் உருகிப் பாடும் அடியவர்களை மிகுந்த 
துன்பத்தைத் தரும் நோய்கள் எவையும் அணுகாது.

குறிப்புரை: காழியில் எழுந்தருளியிருக்கின்ற உமையொரு பாகனை அரனே என்று மனம் இளகப் 
பாடுகின்ற அடியார்கட்குத் துன்பம் சேரா என்கின்றது. இளகக் கமலத்து ஈன்கள் இயங்கும் கழி - 
முறுக்கவிழ தாமரையிலிருந்து உண்டான கள் ஓடுகின்ற கழி. களகப்புரிசை - சுண்ணாம்புச் சாந்து 
பூசப்பெற்ற மதில். கவின் - அழகு. அளகம் - கூந்தல். நல்நுதலி - நல்ல நெற்றியை உடையாளாகிய 
பார்வதி. உள் அகப்பாடும் - மனம் பொருந்தப் பாடுகின்ற. 
The city of Seekaazhi is always full of jubilation due to many festivities that take place there. Into the moats around the city, flows honey that is dripping from well- blossomed lotus flowers. The fortifications and the ramparts are all built artistically with lime powder paste. In such a gorgeous city Lord Civan is concorporated with Umaa Devi of lovely forehead and graceful hair. Serious illness will never affect those devotees who sing in praise of Him with ardent love and melting heart and by saying "Oh! Hara, You are the husband of Umaa Devi of such a beautiful complexion" - We pay obeisance to You; bless us with Your grace.

எண்ணார் முத்தமீன்று மரகதம்போற் காய்த்துக் 
கண்ணார் கமுகுபவ ளம்பகுக்குங் கலிக்காழிப் 
பெண்ணோர் பாகாபித்தா பிரானே யென்பார்க்கு 
நண்ணா வினைகள் நாடொறுமின்பந் நணுகும்மே.  4

“எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து, 
கண் ஆர் கமுகு பவளம் பகுக்கும் கலிக் காழி, 
பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு 
நண்ணா, வினைகள்: நாள்தொறும் இனபம் நணுகு(ம்)மே.

பொருள்: அழகிய கமுக மரங்கள் அளவில்லாத முத்துக்களைப் போன்று பூத்து, மரகதம் 
போன்று காய்த்து, பவளம் போன்று பழுக்கும் ஆரவாரம் மிகுந்த பதி சீகாழிப் பதியாகும் 
இப்பதியில் விளங்கும் சிவபெருமானாரை, 'பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே!’ 
என்று போற்றுபவர்களை வினைகள் வந்து சேராது. நாள்தோறும் அவர்களுக்கு இன்பமே
வந்து சேரும். 

குறிப்புரை: காழியின் கண்ணுள்ள பெண்ணொரு பாகனே பித்தா என்பார்க்கு வினைகள் நண்ணா, 
இன்பம் நணுகும் என்கின்றது. எண்ணார் முத்தம் - எண்ணுதற்கரிய முத்தம், கமுகு முத்தம் போல 
அரும்பி, மரகதம்போல் காய்த்து, பவளம்போல் கனியும் காழி என வளங்கூறியது. 
The devotees of Lord Civan living in the glorious Seekaazhi feel happy daily; no karmic evil will get attached to them who hail Him saying thus "Oh! Lord Civa entempled in Seekaazhi having Your consort in the left half of Your body; Oh! Most gracious One ; Oh! Chief Master ! We all pay obeisance to You - Bless us". The Seekaazhi town where Lord Civan is entempled is a very gorgeous city. Here the good looking areca trees sprout buds in large numbers which look like pearls; they develop and become sturdy nuts in dark green colour like emerald; they further grew and become ruddy ripe fruits having coral colour.

மழையார் சாரற்செம் புனல்வந்தங் கடிவருடக் 
கழையார் கரும்புகண் வளர்சோலைக் கலிக்காழி 
உழையார் கரவாவுமை பாள்கணவா வொளிர்சங்கக் 
குழையா என்றுகூற வல்லார்கள் குணவோரே.  5

“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட, 
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி, 
உழை ஆர் கரவா: உமையாள்கணவா! ஒளிர்சங்கக்- 
குழையா!' என்று கூற வல்லார்கள் குணவோரே.

பொருள்: மேகங்கள் தங்கிய மலைச்சாரலில் மழை பெய்து, சிவந்த நிறமுடைய தண்ணீர் 
வந்து கரும்பின் அடிப்பாகத்தை வருட, அந்த நீர் வளத்தால் மூங்கிலை ஒத்த வளமான 
பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க பதி சீகாழிப் 
பதியாகும். இப்பதியில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை, “மானேந்திய கையனே! 
உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே!' என்று 
கூறிப் போற்ற வல்லவர்கள் நற்குணம் உடையவர்கள் ஆவர்.

குறிப்புரை: மான் ஏந்தி, மங்கை கணவா, சங்கக் குழையா எனக் கூறவல்லவர்கள் குணமுடையராவர் 
என்கின்றது. மலைச்சாரலில் மழை பெய்து, செந்நீர் வந்து அடிவருட கரும்பு தூங்கும் சோலைக் காழி என 
வளங்கூறிற்று. கழையார் கரும்பு - கரும்பினுள் ஒருசாதி. மூங்கிலை ஒத்த வளமான கரும்பெனினும் ஆம். 
உழை - மான். கரவா - கையை உடையவனே. 
The devotees of Lord Civan entempled in the pleasant noisy city of Seekaazhi are virtuous ones who hail Him thus: "Oh! Lord Civan, You are wearing a bright ear-ring made of seashell; Oh! You are the consort of Umaa Devi; Oh! You are holding a deer in Your hand; Oh! Lord Civan, You are entempled in the city of Seekaazhi, where the ruddy rainwater descending down from the slopes of the western mountains, where the clouds are daily moving flows through the many groves that are situated around the city. In the sugarcane groves, sugarcanes grow in very big size. The sturdy nodes of the sugarcane resemble those of bamboo nodes".

குறியார் திரைகள்வ ரைகள்நின்றுங் கோட்டாறு 
கறியார் கழிசம்பிரசங் கொடுக்குங் கலிக்காழி 
வெறியார் கொன்றைச் சடையாவிடை யாஎன்பாரை 
அறியா வினைகளறு நோய்பாவம் மடையாவே. 6, 7

“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு 
கறி ஆர் கழி சம்புஇரசம் கொடுக்கும் கலிக் காழி, 
வெறி'ஆர் கொன்றைச் சடையா! விடையா என்பாரை 
அறியா, வினைகள், அருநோய், பாவம், மடையாவே.

பொருள்: மலைகளில் இருந்து அலைகள் போல வரும் அருவிகள் கரையை உடைய ஆறாக 
உருவெடுக்கிறது. அந்த ஆற்றில் அடித்துக் கொண்டு வரும் மிளகுத் தண்டுகள் தன் 
சுவையைத் தண்ணீருக்கு வழங்குகிறது. இத்தகைய ஆரவாரம் மிகுந்த பதி சீகாழிப் 
பதியாகும். இப்பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை ‘மணம் கமழும் கொன்றை 
மலர் மாலையை அணிந்த சடையினனே! விடைமீது ஊர்ந்து வருபவனே!' என்று 
போற்றுபவர்களை வினைகள் அறியவே மாட்டாது. அவர்களை அரிய நோய்களும் 
பாவங்களும் அடைய மாட்டாது.

குறிப்புரை: கொன்றைச் சடையா, விடையா என்பாரை வினைகள் அறியவே மாட்டா; நோய்களும் 
பாவங்களும் அடையா என்கின்றது. மலைகளில் இருந்து குறித்தலை உடைய அலைகளோடு கூடிய 
கரையை உடைய ஆறுகள், மிளகில் இருந்து கழிக்கப்பட்ட சம்பிரசத்தைக் கொடுக்கும் எனக் காழிச் சிறப்பு 
தெரிவித்தது. வெறி - மணம். சம்பு - தண்டு. இரசம் - சுவை. 
Karmic sufferings, uncommon maladies and sins will not affect those devotees of Seekaazhi who hail Lord Civa entempled therein by these words "Oh Lord Civa, You are decorating your matted hair with the garland made of sweet smelling cassia flowers! Oh Lord! You move about riding on Your bull! Oh! You are the God of the renowned Seekaazhi to which water that falls rhythmically down the mountains slopes forms a billowy river between its banks. The river water carries with it large quantities of pepper creepers which suffuse flavour in the river water".

உலகங் கொள்சங் கத்தார்கலி யோதத்துதையுண்டு 
கலங்கள் வந்துகார் வயலேறுங் கலிக்காழி 
இலங்கை மன்னன் றன்னையிடர் கண்டருள் செய்த 
சலங்கொள் சென்னிமன் னாஎன்னத் தவமாமே. 8

“உலகம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு, 
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி, 
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த 
சலம் கொள் சென்னி மன்னா’ என்னத் தவம் ஆமே.

பொருள்: வலிமையான சங்குகளைக் கொண்டுள்ள கடல் தனது வலிய அலைகளால் 
தோணிகளை மோதுகின்றன. அதனால் அவைகள் கார்நெல் மிகுந்த வயலில் வந்து 
சேருகின்றன. இத்தகைய ஒலிமிக்க பதி காழிப் பதியாகும். இப்பதியில் எழுந்தருளியுள்ள 
சிவபெருமானை, “இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப் பின்னர் அருள் 
செய்தவரே! கங்கை சூடிய திருமுடியை உடைய மன்னவனே!' என்று போற்றத் தவம் 
கைகூடும்.

குறிப்புரை: இலங்கை மன்னர்க்கு அருள்செய்த அரசே! என்று சொல்லத் தவம் உண்டாம் என்கின்றது. 
ஓதத்தால் உந்தப்பட்டு மரக்கலங்கள் வயலைச் சாரும் காழி என்க. ஆர்கலி - கடல். கலங்கள் - 
தோணிகள். சலம் - கங்கை. 
Seekaazhi is on the seaside. In the sea, large and heavy shells are available in plenty. The big waves of the sea dash against the boats that travel in that area and push them to the shore. The noise of the waves in the sea reverberates in the entire city of Seekaazhi. Lord Civan is entempled in this famed city. He punished King Raavanan in the first instance for his transgression. Later when he realised his impudence and begged for pardon; Lord Civa graced him. He has accommodated the river Ganges in His matted hair. Those devotees who hail Him by praising His above features will achieve the benefits of penance and all religious austenties.

Note: This hymn is a 'tell tale' geological evidence of the 'seashore' existence of the then town of Seekaazhi. Similar evidence also existing other scriptures of the time, Thiruvaachakam and others.

ஆவிக் கமலத்தன் னமியங்குங் கழிசூழக் 
காவிக் கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப் 
பூவிற் றோன்றும் புத்தேளொடு மாலவன் றானும் 
மேவிப் பரவுமரசே யென்னவினை போமே. 9

“ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ, 
காவிக்கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி, 
பூவில்-தோன்றும் புத்தேளொடு மாலவன்தானும் 
மேவிப்பரவும் அரசே!’ என்ன, வினை போமே.

பொருள்: பொய்கைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் அருகில் உள்ள 
உப்பங்கழிகளில் நடமாடுகின்றன. நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல 
ஒலி நீங்காது கேட்கும் பதி சீகாழிப் பதியாகும். இப்பதியில் எழுந்தருளியிருக்கும் 
சிவபெருமானை, “பிரமனும் திருமாலும் விரும்பிப் போற்றும் அரசனே’ என்று சொல்ல நம் 
வினைகள் நம்மைவிட்டு அகன்றுவிடும்.

குறிப்புரை: அயனும் மாலும் வணங்கும் அரசே என்று சொல்ல வினைபோம் என்கின்றது. 
பொய்கைகளில் உள்ள தாமரைகளில் அன்னம் நடமாடுகின்ற உப்பங்கழிகளைச் சுற்றிலும் மகளிர் மங்கல 
ஒலி நீங்காத காழி என்க. ஆவி - வாவி, காவிக் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணை உடைய 
பெண்கள். பூவில் தோன்றும் புத்தேள் - பிரமன். மேவி - விரும்பி. 
Brahma of the Lotus flower and Thirumaal - both come to Seekaazhi and devotedly seek for and worship Lord Civan entempled therein. The devotees who hail Lord Civan by proclaiming "Oh! Sovereign King Lord Civa of Seekaazhi! You are avidly sought for and worshipped by Brahma of the lotus flower and by Thirumaal! Pray bless us!" By saying this, the evil effects of their bad (karma) deeds will cease affecting them. Lord Civan is enshrined in the temple in Seekaazhi city which is girt with creeks and lotus pools where swans thrive. Around this area, saltpans are in plenty. This city is pervaded by the auspicious words of damsels whose eyes are like blue lily flowers.

மலையார் மாடநீடுயி ரிஞ்சிமஞ் சாருங் 
கலையார் மதியஞ்சேர் தருமந்தண் கலிக்காழித் 
தலைவா சமணா்சா க்கியார்க்கென்று மறிவொண்ணா 
நிலையா யென்னத்தொல் வினையாய நில்லாவே. 10

“மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும் 
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித் 
தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா 
நிலையாய்!’ என்ன, தொல்வினை ஆய நில்லாவே.

பொருள்: மலைபோல் உயர்ந்த மாடவீடுகளிலும் மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த 
மதில்களிலும் கலைகள் நிறைந்த சந்திரன் வந்து தங்குகின்றது. அழகிய குளிர்ந்த
ஒலிமிக்கதுமான பதி சீகாழிப் பதியாகும். இப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, 
“சீகாழியின் தலைவனே! வெளிவேஷக்கார சமண முனிவர்களும், போலி புத்தத் 
துறவிகளாலும் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே!’ என்று போற்ற நம் பழவினைகள் 
நம்மிடம் நில்லாது அகன்று விடும்.

குறிப்புரை: காழித் தலைவா, புறச்சமயிகளால் அறியப்படாதவனே என்று சொல்ல, பழவினை நில்லா 
என்கின்றது. மலையார் மாடம் - மலையையொத்த மாடங்கள். நீடு உயர் இஞ்சி - நீண்ட உயர்ந்த மதில். 
மஞ்சு - மேகம். 
The mansions in Seekaazhi are as high as mountains; the clouds move on in the sky and stay in these mansions. The moon full of many phases comes and settles down in the tall high walls of the city. In this famed cool city full of auspicious sounds - Oh! Lord Civa, You are enshrined here as the Supreme God! "You remain forever beyond the pale of the intellect of the Jains and the Buddhists. Bless us". By praying like this, all our hoary karma will be done away with.
வடிகொள் வாவிச்செங் கழுநீரிற் கொங்காடிக் 
கடிகொ டென்றன்முன் றினில்வை குங்கலிக்காழி 
அடிகள் தம்மையந்த மில்ஞான சம்பந்தன் 
படிகொள் பாடல்வல் லவர்தம்மேற் பழிபோமே. 11

வடி கொள் வாவிச் செங்கழுநீரில் கொங்கு ஆடிக் 
கடி கொள் தென்றல் முன்றினில் வைகும் கலிக் காழி 
அடிகள்தம்மை, அந்தம்இல் ஞானசம்பந்தன் 
படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.

பொருள்: தேன் மணம் கொண்ட நீர்நிலைகளில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூவின் மகரந்தங்களில் 
படிந்து, அவற்றின் மணத்தைத் தென்றல் காற்றானது வீட்டு வாசல்களில் கொண்டு வந்து 
உலாவச் செய்கின்றது. ஒலிமிகுந்த காழிப் பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை 
முடிவற்ற புகழை உடைய ஞானசம்பந்தன் போற்றிப் பாடினார். 
இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் மேல் வரும் பழிகள் தானாகவே நீங்கிவிடும்.

குறிப்புரை: ஞானசம்பந்தன் காழி அடிகளைப் பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது. தென்றல் 
செங்கழுநீர்ப் பூவில் அளைந்து முன்றலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு - தேன். கடிகொள் 
- மணத்தைக் கொள்ளுகின்ற. படிகொள் பாடல் - ஒப்பினைக் கொண்ட பாடல். 
Gnaanasambandan of endless glory has sung on Lord Civan of the renowned Seekaazhi, these ten verses. In the foreyards of the mansions in this city, where the smell of honey is already prevailing, the fragrant southerly winds also flow. They leave a further sweet smell as they have passed over the pollen grains of the sweet smelling red water lily flowers, before reaching the city. These flowers abound in the pools around the city having lucid waters. The sin and blame of those well-versed in these verses, which spread through the entire world, will leave them for good.

102 ஆம் பதிகம் முதிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
103. திருக்கழுக்குன்றம்

திருத்தல வரலாறு:

தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்று திருக்கழுக்குன்றம். இத்தலம் செங்கற்பட்டிலிருந்து 
தென்கிழக்கே 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்துகள் உள்ளன. கழுகுகள் பூசித்துப் பேறு 
பெற்றமையின் கழுக்குன்றம் எனப் பெறும். முதல் யுகத்து, சாபமெய்திய சண்டன், பிரசண்டன் 
என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்து சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்து 
சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்து சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் 
பூசித்து முறையே பேறு பெற்றன. வேதங்கள் மலையுருவாய்ச் சுவாமியைத் தாங்கலின் வேதகிரி 
எனவும் வழங்கும். வடதேசத்தினர் பட்சி தீர்த்தம் என்பர். இன்றும் இரண்டு பட்சிகள் தினந்தோறும் 
அன்னத்தை உண்டு வலம் வருகின்றன. 12 ஆண்டுக்கு ஒருமுறை திருக்குளத்தில் சங்கு 
பிறத்தலின் சங்கு பிறந்த குளம் என்னும் மகிமையைப் பெற்றுள்ளது. மாணிக்கவாசக 
சுவாமிகளுக்கு இறைவன் குருமூர்த்தி வடிவமாய்த் தரிசனம் கொடுத்த தலம். இவரன்றி நந்தி, 
இந்திரன், கோடிருத்திரர் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். இறைவன் வேதபுரீசுவரர். இறைவி 
பெண்ணின் நல்லாள் அம்மை, மலைச் சொக்க நாயகி. அடிவார இறைவன் பெயர் பக்தவத்சலர். 
இறைவி திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்கு பிறந்த குளம், சங்க தீர்த்தம், பட்சி தீர்த்தம்.

கல்வெட்டு:

பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்கிற திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன்
காலத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர் கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் 
என்றும், சோழர் காலத்தில் களத்தூர் கோட்டத்தில் களத்தூர் நாட்டில் உள்ள உலகளந்த சோழபுரம் 
என்றும் வழங்கப் பெற்றது. இறைவன் திருக்கழுக்குன்றம் உடைய நாயனார் என்று வழங்கப்படுவா். 
சண்முகப் பிள்ளையார் குறிக்கப்பட்டு உள்ளார். இராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன் காலத்தில் 
கருப்பக்கிருகத்தின் முன் மண்டபங்கட்ட ஈசானசிவாவிடம் இருந்து ஒரு பட்டி நிலம் வாங்கப்பட்டது. 
இராஜராஜபுரத்தில் வசிக்கும் ஒருவர் 10 காசுகள் கொடுக்கத் தான் வாங்கின நிலத்தை 63 
நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள் பிதாவிடம் கொடுத்துள்ளார்கள். பக்தவத்சலக் 
கோயில் குன்றத்தின் மேலுளதாக இரண்டு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. கோயிலைப் 
பழுதுபார்க்க விஜயநகர அரசன் பிரதாப்புக்கராயர் நிலம் தந்துள்ளார். மேலும் தம் பெயராகிய 
புக்கராயன் சந்தி விழாவிற்காகவும் நிலம் தானம் செய்துள்ளார். ஆயிரப்பிரிவில் உள்ள மக்களால் 
திருமலை ஆளுடை நாயனார் கோயிலுக்கு நிலம் தானம் செய்யப்பட்டு உள்ளது. களத்தூர் பிரிவில் 
உள்ள மக்களால் அதே கோயிலுக்கு காளிங்கராயன் சந்தி விழாவிற்காக நிலம் தானம்
செய்யப்பட்டது. மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன் காலத்தில் ஒரு நபரால் 
சண்முகப் பிள்ளையார் கருப்பக்கிருகத்திற்கு விளக்கிடப் பசுக்கள் தானம் செய்யப்பட்டு உள்ளன. 
விஜய நகர அரசன் வீரவிஜய பூபதிராயரது ஆட்சியில் அரசனுடைய அதிகாரியான 
நாகேசுவரமுடையான் விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான். 17ஆம் நூற்றாண்டின் 
மத்தியில் ஒல்லாந்து நாட்டு அதிகாரிகளைப் பற்றிய அடையாளச் செய்திகள் குன்றின் ஒருகால் 
மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின் 8 சுவர்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன. இவையன்றி 
விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம், ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட 
செய்திகளும் அறியப்படுகின்றன.

பதிக வரலாறு:

திருவிடைச்சுரத்தை வணங்கியபின் சண்பைக் காவலர் திருத்தொண்டர்களுடன், 
வண்டுகள் செந்துருத்திப் பண்ணைப் பாடும் திருக்கழுக் குன்றத்தை அடைந்தார்.
அவ்வூரடியார்கள் சுவாமிகளை எதிர்கொள்ள, சிவிகையினின்றும் இறங்கி, திருமலையை 
வலங்கொண்டு செஞ்சடைப் பெருமானைச் சிந்தை களிகூர வணங்கினார்.  ஒருகாலைக் 
கொருகால் பெருகியெழுங்காதலினால் வணங்கிக் ‘காதல் செய் கோயில் கழுக்குன்று’ என்று 
பதிகக்கருத்தை வைத்துத் ‘தோடுடையான்’ என்னும்.இப்பதிகத்தை அருளிச் செய்தார். 
103. THIRU-K-KAZHU-K-KUNDRAM

HISTORY OF THE PLACE

This sacred place is in Thondai Naadu and is at a distance of 14 km southeast of Chengalpattu. It can be reached by bus. As vultures worshipped the Lord on the hill here, the place got its name, which means Vulture Hill. It is also known as Vedhagiri (Vedha Hill) as the Vedhas have become the hill that supports the shrine. People of the north call this place as Pakshi Theerththam.
The name of God on the hill shrine is Vedhapureesuvarar and the Goddess is known by the names of Penninallaalammai and Malaichchokkanaayaki. The God, at the shrine at the foothill is Bhakthavathsalar and the Goddess Thiripurasundhari. The sacred fords are Pond of the Conch's Birth (Sangu Pirandha Kuzham), Sanga Theerththam and Pakshi Theerththam.

The names of the vultures that offered worship are given as follows: In the first eon, Chandan and Prachandan; in the second, Sampaathi and Jataayu; in the third, Sambukuththan and Maakuththan; and in the fourth eon, Sambu and Aadhi. Even today, two birds accept the food offering and then circle over the temple before flying away. The pond here has the distinction of having conches appear in it once in every twelve years. This temple also has the distinction of being the place where the Lord appeared to Saint Maanikkavaachakar in the form of Guru. Others such as Nandhi, Indhiran and Kotiru-dh-dhirar have offered worship and obtained their wishes here.

The inscriptions here include those of Paandiya, Chola, Raashtrakoota and Vijayanagara kings. There are even some hints about officials from Holland in a 17th century inscription, found on the 8 walls in the east verandah of the Single-pillared mandapam. Lord Vinaayaka is noted as Shanmugap Pillaiyaar. The mandapam in front of the sanctum was built during the time of Raashtrakoota king Kannara Thevan, for building which land was purchased from one Eesaana Siva. A resident of Raajaraajapuram had given some land to the father of Naminandhi Adigal, one of the 63 saints known as Naayanmaar. Two inscriptions note that the Bhakthavatshsala shrine is on top of the hill. A Vijayanagara king, Prathaapa Bukka Raaya, had donated land for renovating the temple and for instituting a festival in his name known as Bukka Raayan Sandhi. During the reign of another Vijayanagara king Veera Boopathi Raayar an official of his had given tax remission to enable a festival to be celebrated.

Besides the above, the grant of gold, land, villages, sheep and cows for lamps and other temple expenses is also recorded.

INTRODUCTION TO THE HYMN

From Idaicchuram our saint arrived at this holy mount and sang the following hymn in praise of its presiding deity.

திருச்சிற்றம்பலம்

103. திருக் கழுக் குன்றம்  
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

தோடுடையா னொருகாதிற் றூயகுழைதாழ 
ஏடுடையான றலைகலனாக இரந்துண்ணும் 
நாடுடையான் நள்ளிருளேம நடமாடுங் 
காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 1

தோடு உடையான் ஒரு காதில், - தூய குழை தாழ 
ஏடுடையான், தலைகலந் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள்இருள் ஏமம் நடம் ஆடும் 
காடு உடையான், காதல்செய் கோயில் . கழுக்குன்றே.

பொருள்: ஒரு காதில் தோடும் மற்றொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கப்
பெற்றவன். தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண்கலனாகக் 
கொண்டிருப்பவன். இரந்து உண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் 
சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் 
இடம் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: ஒருகாதில் தோடுடையான், ஒருகாதில் குழைதாழ மலரும் அணிந்தவன். கபாலத்தில் 
இரந்துண்ணும் நாட்டை உடையவன், நள்ளிருளில் நடமாடுதற்குரிய காட்டை உடையவன். அத்தகைய 
இறைவன் காதலிக்கும் இடம் கழுக்குன்று என்கின்றது. ஏடு - மலர். நள்ளிருள் - நடு இரவு. ஏமம் - 
யாமம். 
Lord Civan wears an ola-roll in one of His ears and the ear jewel in the other ear, both of which dangle in a low level. He wears a lot of flowers on His body and head. His is the region where He goes for begging and eating, carrying a begging bowl made of Brahma's skull who stays in lotus flower. He happily dances in the cremation ground during midnight. Thiru-k-kazhu-k-kundram is the place of His temple where He loves to abide.

கேணவல் லான்கேழல் வெண்கொம்பு குறளாமை 
பூணவல் லான்புரிசடை மேலொர்புனல் கொன்றை 
பேணவல் லான்பெண் மகள்தன்னை யொருபாகம் 
காணவல் லான்காதல் செய்கோயில் கழுக்குன்றே. 2

கேண வல்லான், கேழல்வெண்கொம்பு; குறள்ஆமை 
பூண வல்லான்; புரிசடைமேல் ஓர் புனல், கொன்றை, 
பேண வல்லான்: பெண்மகள் தன்னை ஒருபாகம் 
காண வல்லான்: காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணிய 
வல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மவதார ஆமையோட்டினை 
அணிகலனாகக் கோத்துப் பூண வல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, 
கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான 
உமையம்மையைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் காணுமாறு செய்தருளியவன். 
அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: பன்றிக் கொம்பைக் கேணவல்லவனும், ஆமையோட்டைப் பூணவல்லவனும், கொன்றை 
மாலையணிவிப்பவனும், உமையை யொருபாகம் உடையவனும் ஆகிய இறைவன் கோயில் கழுக்குன்று 
என்கின்றது. கேண - சிதைக்க. கேழல் - பன்றி. குறள் ஆமை - சிறிய ஆமை. ஈண்டு அதன் 
ஓட்டினைக் குறிக்கின்றது. 
Thirumaal once took the Avataar as a dwarf man; on another occasion he took the avatar as a hog when the valiant Lord Civan broke its tusk. Lord Civan wears as one of His ornaments, the tortoise shell of Thirumaal, when he took the avatar as tortoise. In His tightened matted hair He loves in holding a river and cassia flowers. He exposes in a portion of His body His consort Umaa Devi, the fairest and the best natured among women to enable the devotees to perceive her vision and to offer obeisance to her. Lord Civan of these status loves the temple in Thiru-k-kazhu-k- kundram to dwell in.

தேனகத் தார்வண் டதுவுண்டதிகழ் கொன்றை 
தானகத் தார்தண் மதிசூடித்தலை மேலோர் 
வானகத் தார்வைய கத்தார்கள்தொழு தேத்தும் 
கானகத் தான்காதல் செய்கோயில் கழுக்குன்றே. 3

தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை- 
தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர் 
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் 
கானகத்தான்; காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: பூக்களின் அகத்தில் இருந்து வண்டுகள் தேனை உண்டு விளங்கிய கொன்றை 
மாலையையும், பிறை மதியையும் தலைமேல் சூடி இருப்பவன். வானவரும் 
பூலோகத்தவரும் துதிக்குமாறு விளங்குபவன். சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் 
கொண்டிருப்பவன். இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் 
திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: கொன்றையையும், மதியையும் அணிந்து விண்ணவரும் மண்ணவரும் துதிக்க நின்ற 
இறைவன் இடம் இது என்கின்றது. தேன் அகத்து ஆர் வண்டு - தேனைப் பூவினகத்தில் இருந்து 
உண்ணும் வண்டு. கொன்றை தான் நக தார் தண்மதிசூடி - கொன்றை மலர். அம்மாலையைத் தன் 
பிறையோடு சூடி. கானகத்தான் - காட்டில் உறைபவன். 
Honeybees stick inside the cassia flowers and goes on sucking the honey. Lord Civan wears on His matted hair garlands made of these cassia flowers. He also accommodates the crescent moon in His hair along with the flowers. He uses the cremation ground as His dancing place. He is hailed and worshipped by the dwellers of the earth, as also of heaven. He is enshrined in the temple in Thiru-k-kazhu-k- kundram where He eagerly loves to abide.

துணையல் செய்தான்தூய வண்டியாழ் செய்சுடர் கொன்றை 
பிணையல் செய்தான்பெண் ணினல்லாளை யொருபாகம் 
இணையல் செய்யாவிலங் கெயில்மூன்று மெரியுண்ணக் 
கணையல் செய்தான்கா தல்செய்கோயில் கழுக்குன்றே. 4

துணையல் செய்தான், தூய வண்டு யாழ்செய் சுடர்க் கொன்றை 
பிணையல் செய்தான். பெண்ணின் நல்லாளை ஒருபாகம் 
இணையல்செய்யா, இலங்கு எயில்மூன்றும் எரியுண்ணக் 
கணையல் செய்தான், காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டும் மாலையையும், புனிதமான வண்டுகள் 
யாழ்போல் ஒலிக்கின்றதும் ஒளி நிறைந்ததுமான கொன்றை மாலையை அணிந்திருப்பவன். 
பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் உடலின் ஒருபாகமாகப் பிணைத்து 
இருப்பவன். தன்னோடு நட்புக் கொள்ளாத அசுரர்களின் முப்புரங்களும் தீயினால்
உண்ணப்படுமாறு கணையை விடுத்தவன். இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி 
உறையும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: கொன்றை அணிந்து, உமையை ஒரு பாகத்து வைத்து, திரிபுரமெரித்த இறைவன் இடம் இது 
என்கின்றது. துணையல் - இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டும் மாலை. பிணையல் - புணர்தல். 
இணையல் - நட்புக் கொள்ளல். கணையல் செய்தான் - அம்பெய்தான். நான்கு அடிகளிலும் அல் 
சாரியை. 
Lord Civan wears a garland woven with pairs of flowers. He is adorned with clean and bright cassia flowers in which bees hum in sweet voice much as in the stringed musical instruments. He accommodates His consort Umaa Devi, the good, pious and fair one among women, in the left half of His body. He sent a dart that gutted with fire the three great citadels of Asuraas who were His adversaries. Thiru-k- kazhu-k-kundram is the place of His shrine where He loves to abide.

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற 
மெய்யுடை யான்வெண்பிறை சூடிவிரிகொன்றை 
மையுடைய மாமிடற்றண் ணல்மறிசேர்ந்த 
கையுடை யானகாதல் செய்கோயில் கழுக்குன்றே. 5

பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற 
மெய் உடையான், வெண்பிறைசூடி, விரிகொன்றை 
மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த 
கை உடையான், காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: நச்சுப் பையை உடைய பாம்பையும் திருநீறு அணியப் பெற்ற திருமேனியையும் 
உடையவன் சிவபெருமான். வெண் பிறையையும் விரிந்த கொன்றையையும் முடியில் 
சூடியவன். விடம் பொருந்திய கழுத்தினை உடைய தலைமையாளன். மானேந்திய கையை 
உடையவன். இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் 
திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: அரவும் திருநீறும் பழகும் திருமேனி உடையவனும், பிறை கொன்றை இவற்றை அணிந்த 
நீலகண்டனும், மானேந்திய கையை உடையவனும் ஆகிய சிவபெருமான் இடம் கழுக்குன்று என்கின்றது. 
பை- படம். மை- விடம், 
Lord Civan smears His body with holy ashes. He is adorned with serpents having venomous sacs, in His body. He accommodates the white crescent moon in His matted hair along with well-blossomed cassia flowers. His neck is of dark blue colour caused by positioning the poison of the sea in His throat. His hand sports a fawn. He is the most merciful Supreme Lord who loves to abide in the temple in Thiru-k-kazhu-k- kundram.

வெள்ள மெல்லாம்விரி சடைமேலோர் விரிகொன்றை 
கொள்ள வல்லான்குரை கழலேத்துஞ் சிறுதொண்டர் 
உள்ள மெல்லாமுள்கி நின்றாங் கேயுடனாடுங் 
கள்ளம் வல்லான்காதல் செய்கோயில் கழுக்குன்றே. 6, 7

வெள்ளம் எல்லாம் விரிசடை மேல் ஓர் விரிகொன்றை 
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர் 
உள்ளம்எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் 
கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து 
நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சேர்த்துச் சூடியிருப்பான். தனது ஒலிக்கின்ற 
கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் அடியார்களின் உள்ளமெல்லாம் நிறைந்து 
இருப்பவன். அவர்கள் உள்ளம் உருகி தியானித்து நின்று ஆட அவர்களோடு தானும் உடன் 
திருநடனம் ஆடும் மறைப்புத் தன்மை மிகுந்த வல்லவன். இத்தகைய இறைவனான 
சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: விரிசடைமேல் கங்கையையும் கொன்றையையும் சூட வல்லவனும், அடிபணியும் அடியார் 
உள்ளங்களில் எல்லாம் உடனாய் நின்று ஆடும் கள்ளனுமாகிய பெருமான் காதலிக்கும் கோயில் 
கழுக்குன்று என்கின்றது. வெள்ளம் - கங்கை. குரை கழல் - ஒலிக்கும் வீரக்கழல். உள்கி - எண்ணி. 
Lord Civan holds the entire flood of the river Ganges in His expansive-matted hair along with well-blossomed cassia flower garlands. In the entire mind of His young devotees heart, who hail His ankleted feet that ensure salvation and to all who meditate on Him, who melt and dance in ecstasy, He - the bold thief, abides as one with them and dances along with them. This Lord Civan loves to dwell in the temple in Thiru-k- kazhu-k-kundram.

ஆதல் செய்தான ரக்கர்தங் கோனையரு வரையின் 
நோதல் செய்தான் நொடிவரை யின்கண் விரலூன்றிப் 
பேர்தல் செய்தான் பெண்மகள்தன் னோடொருபாகம் 
காதல் செய்தான்காதல் செய்கோயில் கழுக்குன்றே.

ஆதல் செய்தான்; .அரக்கர்தம் கோனை அருவரையின் 
நோதல் செய்தான், நொடிவரையின்கண் விரல் ஊன்றி; 
பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒருபாகம் 
காதல் செய்தான்; காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற அரக்கர் அரசனான இராவணனை 
அக்கயிலை மலையின் கீழ் அகப்படுத்தியவன் சிவபெருமான். நொடிப் பொழுதில் தன் கால் 
விரலை ஊன்றி அவனை வருத்தியவன். பின்னர் அவனுக்கு உயர்வு அளித்தவன். பெண் 
மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு அன்பு செய்தவன். இத்தகைய 
இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: கைலையைத் தூக்கிய இராவணனை அழியச் செய்தவனும், உமையை ஒருபாகத்து இருத்திக் 
காதல் செய்தவனும் ஆகிய இறைவன் இடம் இது என்கின்றது. நொடிவரை - நொடிப்பொழுது. 
King Raavanan once tried to lift and keep aside mount Kailash, Lord Civa's abode. Lord Civan in just a split second pressed His toe on the top of His mountain and crushed him. Later Raavanan relented and begged for pardon. Thereafter, Lord Civan blessed and granted him boons. He accommodates, His consort Umaa Devi daughter of King Himaalayaas, very lovingly in the left half of His body. This Lord Civan loves to abide in the temple in Thiru-k-kazhu-k-kundram.

இடந்த பெம்மானே னமதாயு மனமாயும் 
தொடர்ந்த பெம்மான் தூமதிசூடி வரையார்தம் 
மடந்தை பெம்மான் வார்கழலோச் சிக்காலனைக் 
கடந்த பெம்மான்காதல் செய்கோயில் கழுக்குன்றே. 9

இடந்த பெம்மான் ஏனம்அது ஆயும், அனம்ஆயும், 
தொடர்ந்த பெம்மான்; தூ மதிசூடி; வரையார்தம் 
மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக் 
கடந்த பெம்மான்; காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: அடிமுடியைத் தேடி பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், 
அன்னமாகப் பறந்து சென்ற நான்முகனும் தொடர்ந்து சென்றும் காண முடியாதவராக 
நின்றவன் சிவபெருமான். தூய பிறைமதியைத் தலைமுடியில் சூடியிருப்பவன். 
மலைமகளின் தலைவன். வீரக் கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன். 
இத்தகைய இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம் 
ஆகும். 
Lord Civan was pursued by Vishnu, who burrowed into the earth in the form of a boar to see His holy feet. Brahma flew up in the air as a swan to see His head - both in vain. Lord Civan wears in His head the pure white crescent moon. He is the Lord and consort of Himavaan's daughter. Brandishing His foot decked with a long anklet He kicked Yama (Kaalan) to death. This Lord Civan loves to dwell in the temple in Thiru-k-kazhu-k-kundram.

தேயநின் றான்திரிபுரங் கங்கை சடைமேலே 
பாயநின் றான்பலர் புகழ்ந்தேத்த வுலகெல்லாம் 
சாயநின் றான்வன்சமண குண்டர் சாக்கியர் 
காயநின் றான்காதல் செய்கோயில் கழுக்குன்றே. 10

தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே 
பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் 
சாய நின்றான், வன்சமணகுண்டர் சாக்கியர் 
காய நின்றான் காதல்செய் கோயில் - கழுக்குன்றே.

பொருள்: முப்புரங்களையும் அழியுமாறு செய்தவன் சிவபெருமான். பெருகி வந்த 
கங்கையைத் தன் சடைமேல் பாய நின்றவன். பலரும் புகழ்ந்து போற்ற உலகம் அனைத்தும் 
ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவன். உடல் பருத்த வலிய வெளிவேஷக்கார சமண 
முனிவர்களும் போலிப் புத்தத் துறவிகளும் வருந்துமாறு நின்றவன். இத்தகைய 
இறைவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை: திரிபுரம் தேயவும், கங்கை சடைமேலே பாயவும் நின்ற பெருமான், புறச்சமயிகள் காய 
நின்றவன் காதல் செய்யுமிடம் கழுக்குன்று என்கின்றது. தேய - அழிய. சாய - கெட. சாக்கியர் என்பது 
சந்த நோக்கி நீண்டது. 
Lord Civan simply stared at the three citadels of the Asuraas. Instantly they were destroyed. He stood firm praised by the entire people of the world when the river Ganges flowed from heaven to the earth at high speed and pressure. He remained calm all along at the time of great deluge when the entire universe perished into dust and ashes. He stood poised into dust and ashes. He stood poised when the mighty gangster Samanars and Saakkiars stood totally mortified. This Lord Civan loves to dwell in the temple in Thiru-k-kazhu-k-kundram.

கண்ணு தலான்காதல் செய்கோயில் கழுக்குன்றை 
நண்ணி யசீர்ஞான சம்பந்தன் தமிழ்மாலை 
பண்ணி யல்பாற்பாடிய பத்துமிவை வல்லார் 
புண்ணி யராய்விண் ணவரோடும் புகுவாரே. 11

கண்நுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை, 
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, 
பண் இயல்பால் பாடிய பத்தும்இவை வல்லார் 
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

பொருள்: நெற்றியில் கண்ணுடையவனான சிவபெருமான் விரும்பி உறையும் கோயில் 
திருக்கழுக்குன்றம் ஆகும். இக்கோயிலையும் அங்குள்ள இறைவனையும் புகழ் பொருந்திய 
ஞானசம்பந்தன் பண் அமைதியோடு அமைந்த தமிழ்மாலையாக இப்பதிகத்தைப் பாடினார். 
இவர் பாடிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர்கள் புண்ணியராய்த் 
தேவர்களோடு வானுலகத்தில் உறைவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தன் பாடிய கழுக்குன்றப் பதிகத்தைப் பண்ணியல்பால் பாடிய பத்தும் வல்லவர் 
புண்ணியராய்த் தேவரோடு உடன் உறைவர் என்கின்றது. 
The illustrious and reputed Gnaanasambandan has sung in proper musical notes on the shrine of Thiru-k-kazhu-k-kundram which is dear to Lord Civan, who sports a third eye in His forehead. Those who can sing in melodious musical note these ten verses - a garland of Tamil - will enter heaven in holy communion along with the Devaas.

திருச்சிற்றம்பலம்

103ஆம் பதிகம் முற்றிற்று.

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

104. திருப்புகலி

முதல் திருப்பதிகம் பார்க்கவும். 
104. THIRU-P-PUKALI

HISTORY OF THE PLACE
See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

Thiru-p-pukali is one of the twelve names of Seekaazhi. See more details in first hymn.

திருச்சிற்றம்பலம் 
104. திருப்புகலி 
பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

ஆடலர வசைத்தான ருமாமறை தான்விரித் தான்கொன்றை 
சூடியசெஞ் சடையான்சுடு காடமர்ந்த பிரான் 
ஏடவிழ் மாமலை யாளொருபாக மமர்ந்தடி யாரேத்த 
ஆடியஎம் மிறையூர்புகலிப் பதியாமே. 1

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை 
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான், 
ஏடு அவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த 
ஆடிய எம் இறை, ஊர் - புகலிப்பதிஆமே.

பொருள்: சிவபெருமான் படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியிருப்பவன். 
அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவன். கொன்றை மலர் மாலையைச் சூடிய 
செஞ்சடை முடியை உடையவன். சுடுகாட்டில் நடனம் செய்பவன். இதழ் அவிழும் மலர்கள் 
பூத்த பெரிய இமய மலை அரசனின் புதல்வியாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி 
ஏற்றிருப்பவன். அடியவர் போற்ற நடனம் ஆடுபவன். எம் இறைவனான இப்பெருமான் 
உறையும் ஊர் புகலிப்பதி என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை: அரவணிந்து, வேதம் விரித்து, கொன்றை சூடி, சுடுகாட்டில் அமர்ந்த பிரான் உமையொரு 
பாகத்திருக்க ஆடிய இறைவன் ஊர் புகலிப்பதியாம் என்கின்றது. அசைத்தான் - கட்டியவன். ஏடு - 
இதழ். புகலி - சீகாழி. 
Lord Civan wears in His waist a serpent that spreads its hood and dances; He authored and expounded the rare and renowned Vedas; He wears on His ruddy matted hair garlands fabricated of cassia flowers; He is the Lord who inhabits in the cremation ground as and when He desires. He affectionately accommodates His consort Paarvathi Devi on the left part of His body. She is the daughter of the king of Himaalayaas where huge quantities of different kinds of flowers blossom. He dances in the cremation grounds when His devotees admire and hail Him. He is our Lord who is enshrined in the temple situated in Thiru-p-pukali town.

Note: Pukali is one of the twelve names of Seekaazhi.

ஏலமலி குழலாரிசை பாடியெழுந்தரு ளாற்சென்று 
சோலைமலி சுனையிற்குடைந் தாடித்துதிசெய்ய 
ஆலைமலி புகைபோயண்டர் வானத்தை மூடிநின்றுநல்ல 
மாலையது செய்யும்புகலிப் பதியாமே. 2

ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று, 
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய, 
ஆலை மலி புகை போய் அண்டர்வானத்தை மூடி நின்று நல்ல 
மாலைஆது செய்யும் - புகலிப்பதிஆமே.

பொருள்: மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய பெண்கள் காலைப் பொழுதில் 
எழுகின்றனர். இறையருள் பெறும் விருப்பத்துடன் இசைபாடிக் கொண்டு சுனையை 
நோக்கிச் செல்கின்றனர். சோலையினுள் விளங்கும் சுனையின் நீரில் மூழ்கி நீராடித் துதி 
செய்கின்றனர். கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை மேலெழுந்து சென்று தேவர்கள் 
உறையும் வானகத்தை மூடி நிற்கிறது. இதனால் நல்ல காலைப் பொழுதுதான் மாலைப் 
பொழுது போன்று தெரியும் பதி புகலிப்பதி என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை: மகளிர் விடியலில் இசைபாடிக் கொண்டே எழுந்து சுனையில் நீராடித் தோத்திரிக்க, 
ஆலைப்புகைபோய் ஆகாயத்தை மறைத்து மாலைக்காலத்தைச் செய்யும் புகலி என்கின்றது. ஏலம் - 
மயிர்ச்சாந்து. அண்டர் - தேவர். 
The hair of women-folk in Thiru-p-pukali are perfumed by unguent which emits a fragrant smell all around. They awake in the early morning, get out of bed and singing divine songs with a deep desire to get benediction from Lord Civan, move towards the water tank. There they joyously plunge, play inside the water and finish their bath by singing divine songs. The smoke emanating from the sugarcane press in the city of Thiru-p-pukali soars up and covers the entire sky of the celestials. The morning sky then appears as though it was evening time. Both these events take place in Thiru-p-pukali.

Note: The message is that the happiness of a place depends upon the happiness of its female population.

ஆறணி செஞ்சடை யானழகார் புரமூன்று மன்றுவேவ 
நீறணி யாகவைத்த நிமிர்புன் சடையெம் மிறைவன் 
பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந் துநின்று 
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.  3

ஆறு அணி செஞ்சடையான் அழகுஆர் புரம் மூன்றும் அன்று வேவ, 
நீறு அணிஆக வைத்த நிமிர்புன்சடை எம் இறைவன்; 
பாறு அணி வெண்தலையில் பகலே ‘பலி’ என்று வந்து நின்று 
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் - புகலிஅதே.

பொருள்: சிவபெருமான் கங்கை சூடிய செஞ்சடையினை உடையவன். அசுரர்களின் வலிய 
முப்புரங்களைத் தீயால் வெந்து போகுமாறு செய்தவன். திருநீற்றைத் தன் திருமேனியில் 
அழகாகப் பூசியிருப்பவன். மேல்நோக்கிய சிவந்த சடையை உடையவன். பருந்து சூழும்
வெள்ளிய தலையோட்டை கையில் ஏந்திப் பகலில் ‘பலி இடுக’ என்று வந்து நிற்பவன். 
வேறுபாடு உடைய கோலத்தினனாகிய எம்பெருமான் விரும்பும் தலம் புகலிப் பதி என்னும் 
சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை: திரிபுரம் வேவ, திருநீற்றை அணியாகப்பூசிய இறைவன் விரும்பும் இடம் புகலி என்கின்றது. 
அணியாக - ஆபரணமாக, பாறு - பருந்து. 
Lord Civan has a ruddy matted hair which stands upward, wherein He holds the river Ganges. He burnt the three beautiful and strong citadels of the Asuraas by fire. He smears His body with holy ashes in an attractive manner. He goes about in the daytime holding a white human skull, which is surrounded by falcons, and demands alms. He assumes various different frames according to the situation. Thiru-p-pukali is indeed His sacred place where He is enshrined in the temple.

Note: The form of Civa is entirely different from all the forms known to us. Civa is unique (Formless Lord).

வெள்ள மதுசடை மேற்கரந் தான்விர வார்புரங் கள்மூன்றுங் 
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் 
அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரை மேலன்னப் 
புள்ளினம் வைகியெழும் புகலிப்பதி தானே. 4

வெள்ளம்அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள்மூன்றும் 
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில் - 
அள்ளல் விளை கழனி அழகுஆர் விரைத் தாமரை மேல் அன்னப்- 
புள்இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

பொருள்: சிவபெருமான், பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தன் சடைமேல் 
தாங்கியிருப்பவர். பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரியும்படி 
செய்தவர். இப்பெருமான் குறைவில்லாத நிறைவோடு உறைந்திருக்கும் கோயில் புகலிப்பதுி 
என்னும் சீகாழியாகும். இங்குள்ள சேறு நிறைந்த வயல்களில் முளைத்திருக்கும் அழகிய 
மணம் கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் தங்கிச் செல்கின்றன.

குறிப்புரை: கங்கையைச் சடையிற்கரந்தவன் திரிபுரம் தீமடுத்தவன் உறையும் கோயில் 
புகலிப்பதி என்கின்றது. விரவார் - பகைவர். அள்ளல் - சேறு. தாமரைமேல் அன்னமும் பறவைக் கூட்டங்களும் 
தங்கி எழும் புகலி என்க. 
Lord Civan concealed the floodwaters of the river Ganges in His ruddy matted hair. He gutted with fire the three citadels of the hostile Asuraas. He is enshrined in the temple where there is no deficiency. This temple is situated in Thiru-p-pukali town rich in fertile fields full of mire. Here grows the fragrant and wondrous lotus flowers in plenty on which swans and other birds rest for a while and then fly away.

Note: Blessed indeed are the fauna and flora of Pukali.

சூடுமதிச் சடைமேற் சுரும்பார் மலர்க்கொன் றைதுன்றநட்டம் 
ஆடுமமரர் பிரானழகா ருமையோடுமுடன் 
வேடுபட நடந்தவிகிர் தன்குணம் பரவித்தொண்டர் 
பாடஇனி துறையும்புகலிப் பதியாமே. 5

சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்; 
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் 
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர் 
பாட, இனிது உறையும் புகலிப்பதியாமே.

பொருள்: சிவபெருமான் பிறைமதி சூடிய சடையினை உடையவர். அதன்மீது வண்டுகள் 
மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடுபவர். அந்தத்
தேவர்பிரான் உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு தோன்றி 
அருச்சுனனுக்கு அருள் புரிந்த விகிர்தர். தொண்டர்கள் இவரது குணங்களைப் புகழ்ந்து 
போற்றிப் பாட, இப்பெருமான் இனிதாக உறைந்திருக்கும் பதி புகலிப்பதியாகும்.

குறிப்புரை: மதிசூடிய சடைமேல் கொன்றை நெருங்க நடனம் ஆடும் பெருமானும், உமையோடும் 
வேடனாகி நடந்த இறைவனும் ஆகிய இவர் புகழைத் தொண்டர்கள் புகழ்ந்து பாட இனிதுறையும் பதி 
புகலியாம் என்கின்றது. 
Lord Civan, god of the supernal, dances wearing along with the moon in His matted hair, a lot of cassia flowers buzzed by bees. He is the pre-eminent Supreme Lord. He assumes a completely different body frame as a forest hunter and accompanied by His beautiful consort Umaa Devi, also dressed as huntress. The servitors of Lord Civan, hail Him adoring His virtues who pleasantly abides in the temple in Thiru-p-pukali.

மைந்தணி சோலையின் வாய் மதுப்பாய்வரி வண்டினங் கள்வந்து 
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் 
அந்திசெய் மந்திரத்தா லடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப்பதி தானே. 6

மைந்து அணி சோலையின்வாய் மதுப் பாய் வரிவண்டு இனங்கள் வந்து 
நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம் 
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும் 
புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

பொருள்: இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையினுள், வரி வண்டுகள், 
மலர்ந்த பூக்களில் உள்ள தேனில் பரவி வந்து, வளரும் இசையைப் பாட, நம்பெருமான் 
நடனம் புரியும் இடம் புகலிப்பதி என்னும் சீகாழி ஆகும்.  இப்பதியில், நான்கு வேதங்களில் 
வல்ல சான்றோர்கள், அந்திக் காலத்தில் சந்தியா வந்தன மந்திரங்களைத் தமது மனதில் 
விருப்பத்தோடு நினைத்து வணங்கி இறைவழிபாடு செய்து வாழ்கின்றனர்.

குறிப்புரை: சோலையில் வண்டினங்கள் இசைபாட நடம்புரியும் நம்பன் இடம் புகலி என்கின்றது. மைந்து 
- இளமை. நந்து இசை - வளரும் இசைகளை அந்திசெய் மந்திரம் - சந்தியா மந்திரம். பரவி - வணங்கி. 
அந்தி - காலை அந்தி. நண்பகல் அந்தி, மாலை அந்தி என்பன. 
In the city of Pukali, evergreen flower bearing trees grow in plenty. The striped honey quaffing bees swarm near the fully blossomed flowers and hum melodiously as in musical note. By hearing this humming sound Lord Civan dances suitably, as though He learns dancing. The devotees who are well-versed in the four Vedas hail Lord Civan in His shrine situated in Pukali town by observing the respective evening rituals and contemplating on Him in their minds.

மங்கை யோர்கூறு கந்தமழுவா ளன்வார்சடை மேற்றிங்கள் 
கங்கை தனைக்கரந் தகறைக்கண் டன்கருதுமிடஞ் 
செங்க யல்வார்கழ னிதிகழும்பு கலிதனைச் சென்றுதம் 
அங்கை யினாற்றொழு வாரவல மறியாரே. 7

மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள் 
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம் - 
செங்கயல் வார் கழனி திகழும் - புகலிதனைச் சென்று, தம் 
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

பொருள்: சிவபெருமான் உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு 
மகிழ்ந்திருப்பவன். மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியிருப்பவன். நீண்ட சடைமேல்
திங்களையும் கங்கையையும் அணிந்திருப்பவன். விடக்கறை பொருந்திய கழுத்தை 
உடையவன். இப்பெருமான் விரும்பி உறைந்திருக்கும் இடம் திருப்புகலி ஆகும். சிவந்த 
கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று, தம் அழகிய 
கைகளைக் குவித்து வணங்குபவர் தம் துன்பங்களை நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: உமாதேவியை ஒருபால் விரும்பிய மழுவாளனும், கங்கையை சடைமேல் மறைத்து வைத்த
நீலகண்டனுமாகிய இறைவன் விரும்பிய புகலியைத் தொழுவார்கள் துன்பம் அறியார்கள் என்கின்றது. 
அவலம் - துன்பம். 
Lord Civan enjoys accommodating His consort Umaa Devi on the left portion of His body. He holds a battle-axe in one of His hands. He conceals in His long matted hair the river Ganges and the crescent moon. His neck is dark blue in colour because He positioned the poison in His throat. The town Pukali is ever in His thought. He is entempled in the shrine of this town, where the red carp fishes play in the extensive fields that abound all around the city. Those devotees who reach this temple and worship Him folding their blessed hands will get rid of their sufferings for ever. Note: A visit to Pukali is a must. It is the town of refuge. It annuls all ills.

வல்லிய நுண்ணிடையா ளுமையாள்விருப் பனவனண்ணும் 
நல்லிட மென்றறியா னலியும்விற லரக்கன் 
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் 
ஒல்லை யருள்புரிந்தா னுறையும் புகலியதே.  8

வல் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் 
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் 
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே கை வாள் 
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் - புகலிஅதே.

பொருள்: ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையம்மையிடம் 
பெருவிருப்பத்தோடு சிவபெருமான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் திருக்கயிலை 
மலையாகும். இராவணன் இக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சி செய்தான் 
அந்த வலிய அரக்கனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு சிவன் தன் கால்விரலை ஊன்றி 
அவனை அடர்த்தான். அவன் தன் தவறான செயலுக்கு வருந்தி இப்பெருமானைப் புகழ்ந்து 
சாம வேதம் பாடினான். அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவன், கையில் ஏந்திப் போர் 
செய்யக் கூடிய வாள் ஒன்றை இராவணனுக்கு அருளி அவனை ஆசீர்வதித்தான். இந்தச் 
சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலி ஆகும்.

குறிப்புரை: இறைவன் உமாதேவியோடு எழுந்தருளியிருக்கின்ற இடம் இது என்று அறியாதவனாய்த் 
தூக்கிய இராவணனை அடர்த்து அருள்புரிந்தான் உறையும் இடம் புகலி என்கின்றது. வில்லிய - ஒளி 
பொருந்திய. பாடலும் - சாமவேதத்தைப் பாடலும். ஒல்லை - விரைவு. 
Lord Civan in great affection towards His consort Umaa Devi of bright willowy waist, abides in the sacred mount Kailaas. Raavanan, the king of Sri Lanka, the mighty evil genius without realising this fact due to his egoism, tried to uproot the above mountain. Lord Civan pressed the mountain with His toe slightly; and lo! Raavanan got his shoulders and teeth crushed. Raavanan realised his fault, begged for pardon and began singing in praise of Lord Civan very melodiously in a particular note, 'Saama Geetham'. Lord Civan was delighted in his music and forgave him. He gave him a divine sword for his self-defence in times of war and blessed him with more boons. This Lord Civan abides in Pukali.

தாதலர் தாமரை மேலயனுந் திருமாலுந்தேடி 
ஓதியுங் காண்பரிய வுமைகோனு றையுமிடம் 
மாதவி வான்வகுள மலர்ந்தெங் கும்விரை தோயவாய்ந்த 
போதலா் சோலைகள்சூழ் புகலிப்பதி தானே. 9

தாதுஅலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி 
ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம் - 
மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த 
போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

பொருள்: மகரந்தம் விரிந்த தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் 
புகழ்ந்தும், காண்பதற்கு இயலாதவனாக நின்ற உமையம்மையின் மணவாளனான 
சிவபெருமான் உறையும் இடம் திருப்புகலியாகும். இப்பதியை வானளாவ உயர்ந்து வளர்ந்த 
குருக்கத்தி மரங்களும், மகிழ மரங்களும் உள்ளன். வண்ணச் சோலைகள் சூழ்ந்துள்ளன. 
இந்த மரங்களில் உள்ள மலர்கள் மலர்ந்து மணத்தை அள்ளி நாலாபக்கமும் வீசிக் 
கொண்டிருக்கின்றன.

குறிப்புரை: அயனும் மாலும் தேடியும், ஓதியும் காணுதற்கரிய உமாபதி உறையும் இடம் புகலி என்கின்றது. 
தாது - மகரந்தம். மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ். 
Brahma whose seat is the burgeoning and pollen laden lotus flower, as also Vishnu hailed Lord Civan and tried in vain to see His divine form. This Lord Civan, consort of Umaa Devi, abides in Pukali city. A good many kinds of grass exist all around this bright city. Here grow a large number of flower bearing trees such as the 'common delight of the woods and the tall pointed leaved ape flower trees (Minusaps elangi). From the flowers from these trees, fragrant smell diffuses and spreads around the city. In such a delightful city of Pukali, Lord Civan is enshrined in the famous temple therein.

Note: The fragrance that pervades Pukali is at once physical and spiritual.

வெந்து வர்மேனியினார் விரிகோவண நீத்தார்சொல்லும் 
அந்தர ஞானமெல்லா மவையோர் பொருளென்னேல் 
வந்தெ திரும்புர மூன்றெரித் தானுறைகோயில் வாய்ந்த 
புந்தியி னார்பயிலும் புகலிப்பதி தானே. 10

வெந் துவர் மேனியினார், விரி கோவண நீத்தார், சொல்லும் 
அந்தரஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்! 
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் - வாய்ந்த 
புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

பொருள்: போலியாகத் திரியும் புத்தமதத் துறவிகள் கொடிய மருதநிற துவராடையை 
மேனியில் உடுத்துள்ளனர். வெளி வேஷக் காரர்களாகத் திரியும் சமணர்கள் கோவணம் 
உடுப்பதையும் துறந்து திகம்பரராகத் திரிகின்றனர். இவர்கள் சொல்லும் அழிவுதரும் 
ஞானங்களை, ஒரு பொருட்டாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். பொருந்திய அறிவு உடைய 
சான்றோர்கள் வாழும் புகலிப்பதியில் முப்புரங்களையும் எரித்தவனாகிய சிவபெருமானும் 
உறைகின்றார். அதனை அடைந்து தொழுங்கள்.

குறிப்புரை: புத்தரும் சமணரும் கூறும் ஞானத்தை ஒரு பொருளாகக் கொள்ளேல்: திரிபுரம் எரித்தான் 
உறையும் கோயில் புகலியாம் என்கின்றது. வெம் துவர் - கொடிய துவராடை. கோவணம் நீத்தார் - 
கோவணத்தையும் துறந்தவர்கள். அந்தர ஞானம் - இடையீடு உற்ற ஞானம். 
Ye companions! Accept not the barbarian words of the Buddhists whose clothings are dyed in the high potency ochre-dye, and those Digambara Jains who do not even wear the fore-lap cloth to hide the genital organ. Lord Civan abiding in Pukalur temple burnt the three citadels of the Asuraas who confronted Him. He abides in the temple in Pukali, where highly knowledgeable scholars reside and offer worship to Lord Civan. Ye companions go to this town and worship Lord Civan therein.

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகுவாசப் 
போதனைப் போல்மறை யோர்பயிலும் புகலிதன்னுள் 
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் 
ஓதவல் லாருலகி லுறுநோய் களைவாரே. 11

வேத ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்- 
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள் 
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் 
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

பொருள்: திருப்புகலி என்னும் சீகாழிப் பதியினுள் உறையும் சிவபெருமானை வேத 
கீதங்களை உணர்ந்து வாழ்பவர்கள் தொழுது போற்றுகின்றனர். மிகுந்த மணமுடைய 
தாமரை மலர்மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் சான்றோர்களும் போற்றித் 
துதிக்கின்றனர். இப்பதியினுள் உறையும் சிவபெருமானை ஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் 
போற்றி இப்பதிகத்தைப் பாடினார். இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி வழிபட 
வல்லவர்கள் இவ்வுலகில் பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

குறிப்புரை: வேதகீதம் உணர்ந்தவர்களாய்ப் பிரமனைப் போன்ற பிராமணர்கள் வாழ்கின்ற புகலியில் 
இருக்கும் சிவபெருமானைக் குறித்து, ஞானசம்பந்தன் சொன்ன மாலை ஓதவல்லார் நோய் நீங்குவார்கள் 
என்கின்றது. உணர்வாணர் - உணர்தலால் வாழ்பவர். வாசப் போதனை - வாசனை பொருந்திய 
தாமரைப் பூவில் இருக்கின்ற பிரமனை. உறுநோய் - மிக்க நோய். 
Those devotees who are adept in Vedic hymns adore and worship Lord Civan in Pukali. Also, Vedic scholars who are conspicuously like Brahma seated on fragrant lotus flower, and reside in Pukali adore Lord Civan therein. Sambandan of vast wisdom also hailing from Pukali, has composed this hymn on Lord Civan as a garland of Tamil verse. Those who are well versed in chanting them by their tongues will surely get rid of their clinging ills.

Note: Truly speaking, Pukali is Vedapuram and the verses of our saint are verily Vedic hymns.

திருச்சிற்றம்பலம் 
104ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
105. திருஆரூர்
திருத்தல வரலாறு:

91ஆம் திருப்பதிகம் பார்க்கவும்.

பதிக வரலாறு:

அப்பரடிகளால் ஆதிரைத் திருநாள் மகிமையைக் கேட்டுத் திருவாரூருக்கு 
எழுந்தருள்கின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார், சலந்தரனை வென்ற தலமாகிய விற்குடியை 
வணங்கிக் கொண்டு, அடியார்கள் புடைசூழ வருகின்றவர்கள், இப்பதிகத்தைப் பாடிக்கொண்டே 
எழுந்தருள்கின்றார்கள். 
105. THIRU-AAROOR

HISTORY OF THE PLACE
        See 91st Hymn.

INTRODUCTION TO THE HYMN

Hearing the greatness of Thiru-aaroor and its Aadirai festival from the sacred lips of St. Appar, our saint desired to visit Thiru-aaroor. He left Pukalur and reached Virkudi. Adoring Civa, accompanied by devotees, he proceeded to Aaroor. As he approached the shrine at Aaroor, he sang the following hymn:


திருச்சிற்றம்பலம்

105. திருஆரூர்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

பாடலன் நான்மறை யன்படிபட்ட கோலத்தன் திங்கள் 
சூடலன் மூவிலைய சூலம்வல னேந்திக் 
கூடலா் மூவெயிலும் மெரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி 
ஆடலனா திரையனாரூ ரமர்ந்தானே. 1

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள் 
சூடலன்; மூஇலையசூலம் வலன் ஏந்தி; 
கூடலர் மூஎயிலும்(ம்) எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி 
ஆடலன்; ஆதிரையன் - ஆரூர் அமர்ந்தானே.

பொருள்: திருவாரூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனான சிவபெருமான் நான்கு 
வேதங்களை அருளியவன். எஞ்ஞான்றும் எவ்வகையிலும் ஒப்பற்ற தோற்றத்தை 
உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை, வலது 
கரத்தில் ஏந்தித் தன் பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். 
மிகுந்த நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடனம் ஆடுபவன். திருவாதிரை நாளை 
உகந்தவன்.(மார்கழித் இருவாதிரை நாள் மற்றும் பங்குனி உத்திரத் திருநாள் இரண்டும்) 
தியாகேசப் பெருமானுடை!! திருவடிக் காட்சி எய்தும் நாள் - அப்பர் தேவாரம் - 4-21-1,

குறிப்புரை: இப்பாட்டு, தியாகேசப் பெருமானது உரை, கோலம், அணி, வீரம் முதலியவற்றை விளக்கி 
அருளுகின்றது. பாடலன் நான் மறையன் - பாடப்பெறுகின்ற நான்கு வேதங்களை உடையவன். 
அன்தவிர்வழிவந்த சாரியை. அன்றிப் பாடலன் நான் மறையன் எனப் பிரித்துத் தோத்திரத் தமிழ் 
பாடல்களையும் நான்மறைகளையும் உடையன் எனலுமாம். படிபட்ட கோலத்தன். எஞ்ஞான்றும் 
எவ்வகையிலும் ஒப்பில்லையாம்படியுயர்ந்த திருமேனியழகினை உடையான். சூடலன் - சூடுதலை 
உடையவன், கூடலர் - பகைவர்; திரிபுராரிகள். கூர் எரி - மிக்க எரி. எல்லி - இரவு. ஆதிரையன் 
என்பது அப்பர் அடிகள் தெரிவித்த சிறப்பு திருவுள்ளத்து நிற்றலான் எழுந்தது. ஆரூரமர்ந்தான். பாடலன் 
முதல் ஆதிரையன் என்பது இறுதியாகக் கூட்டி முடிவு காண்க. 
Civan is the causative Lord of divine songs in Tamil language as well the four Vedas. His is the form peerless and splendorous. He accommodates the crescent moon in His matted hair. He wields in one of His right hand the three pronged trident in the shape of a leaf. He burnt the three citadels of the hostile Asuraas by a sharp dart. He dances during the night holding a devastating fire in His hand. He feels happy as the presiding deity of the sixth star known as ‘Thiruvaathirai' (Part of Orion). He is, therefore, known as 'Aathirayaan'. This Lord is entempled in Thiru-aaroor.

சோலையில் வண்டினங் கள்சுரும்போடி சைமுரலச் சூழ்ந்த 
ஆலையின் வெம்புகை போய்முகில் தோயுமாரூரில் 
பாலொடு நெய்தயிரும் பயின்றாடுபர மேட்டிபாதம் 
காலையு மாலையும் போய்ப்பணிதல் கருமமே. 2

சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த 
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆருரில், 
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம், 
காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

பொருள்: திருவாரூரில் உள்ள சோலைகளில் வண்டினங்கள் தங்களின் ஆண் வண்டுகளோடு
(சுரும்போடு) சேர்ந்து இசை பாடுகின்றன. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள கரும்பு ஆலைகளில் 
இருந்து வரும் வாசனை உடைய புகை மேல் நோக்கிச் சென்று வானத்தில் உள்ள 
மேகங்களில் தோய்கின்றன. இத்திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி 
ஆடும் மேலான இறைவனான சிவபெருமானின் திருவடிகளைக் காலையிலும் மாலையிலும் 
சென்று பணிந்து போற்றுவது நாம் செய்யத்தக்க கடமை ஆகும்.

குறிப்புரை: இப்பாட்டு இறைவனை இருபோதும் வணங்கல் கடமை என்று அறிவிக்கின்றது.
வண்டினங்கள் கரும்போடிசை முரல - வண்டின்சாதி நான்கில் வண்டும் சுரும்பும் தம்மினத்தோடு 
மாறியொலிக்க. வண்டுஞ் சுரும்பும் இசை முரல ஆலையின் வெம்புகை வானத்து முகில்தோயும் ஆரூர் 
என்றது பரமேட்டி பாதம் பணிவார் மங்கள வாத்தியம் ஒலிக்க இன்ப உலகடைவார் இது உறுதி என்ற 
உள்ளுறை தோன்ற நிற்கின்றது. கருமம் - கடமை. பயின்று - விரும்பி. பாலொடு நெய் தயிரும் எனப் 
பஞ்சகவ்வியத்துள் மூன்றே கூறினார்கள்... இறைவன் ஆடுதற்குரியன இவையேயாதலின். கோசல 
கோமயம் நீக்கி மோரும் வெண்ணையும் கொள்வார் இனம்பற்றி அவ்விரண்டும் கொள்க.
In the flower gardens of Thiru-aaroor bees and beetles swarm and hum melodiously. In the surrounding sugarcane presses, the desirable smoke soars up and rests on the clouds. Lord Civan of Thiru-aaroor delights to get bathed in milk, ghee and curd. We all should recognise that it is our bounden duty to bow in obeisance during morning and evening, adoring the holy feet of the Supreme Being Lord Civan enshrined in Thiru-aaroor.

Note: It is punchakavya that is used for the ablution of Civa. No wonder the milky- cow is held sacred by the Hindus. The Supreme Being - Lord Civan.

உள்ள மோரிச்சை யினாலுகந் தேத்தித்தொழு மின்தொண்டீர் மெய்யே 
கள்ள மொழிந்திடு மின்கரவாதிரு பொழுதும் 
வெள்ள மோர்வார் சடைமேற் கரந்திட்ட வெள்ளேற் றான்மேய 
அள்ளல கன்கழனியாரூ ரடைவோமே. 3

உள்ள ஓர் இச்சை யினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே 
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இருபொழுதும், 
வெள்ளம் ஓர் வார்சடைமேல் கரந்திட்ட வெள்ஏற்றான் மேய, 
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

பொருள்: தொண்டர்களே! சிவபெருமானை நீவீர் உள்ளத்தில் பெருவிருப்போடு மகிழ்ந்து 
போற்றித் தொழுவீர்களாக. உம் நெஞ்சத்தில் உள்ள கள்ளங்களை மறைக்காமல் 
உண்மையாகவே ஒழித்து விடுவீர்களாக. காலை மாலை இருபொழுதும் மறவாமல் 
திருவாரூரை வழிபடுதற் பொருட்டு அங்கு செல்வோமாக. சிவபெருமான் கங்கை 
வெள்ளத்தைத் தன் ஒப்பற்ற நீண்ட சடைமேல் மறையும்படி செய்தவன். அவன் 
வெண்மையான ஆனேற்றை உடையவன். இப்பெருமான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க 
அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபட நாம் செல்வோம்.

குறிப்புரை: சென்ற திருப்பாட்டில் பணிதல் கருமமே எனப் படர்க்கையாக உணர்த்தியவர்கள் 
இத்திருப்பாட்டில் தன்மையில் வைத்து இருபொழுதும் அடைவோம் என்கின்றார்கள். உள்ளமோர் 
இச்சையினால் - மனத்தான் ஒர்ந்து இதுவே உறுதியெனக் கடைப்பிடிக்கப் பெற்ற இச்சையால்; அன்றி 
மந்ததர பக்குவர்க்காயின், ஏதோ ஒரு விருப்பத்தால் மகிழ்ந்து எனக் கொள்க. ஓர்; அசையுமாம். வெள்ளம் 
ஓர் வார்சடைமேல் கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கிடமாதல் தகாது எனத் தருக்கி வந்த 
கங்கையை ஒரு சடைக்கும் காணாது என்னும்படித் தருக்கடக்கி, இருக்குமிடமும் தெரியாதபடி மறைத்த. 
கரந்திட்ட என்றது - மறைத்தவன் வேண்டும்போது வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது 
தோன்ற நின்றது. வெள்ளேற்றான் - அறவடிவான வெள்ளிய இடபமுடையவன். தருக்கடக்கிய 
தோடன்றித் தண்ணருளும் வழங்க இருக்கின்றான் என்பது சிந்தை கொள்ளக் கரந்திட்ட 
என்பதனையடுத்து வெள்ளேற்றான் என்பதனைத் தெரித்தார்கள். 
Ye servitors! Do hail and adore Lord Civan willingly during both the divisions of the day; do stand before Him duly rid of any deception in your mind. He is the one who conceals the raging river Ganges in His long matted hair and rides on a white bull. He is enshrined at the temple in Thiru-aaroor, which is rich in miry fields. Let us all reach this town to worship Him.

Note: Force plays no role in the adoration of Civa. It is willingness - full and free – that counts in adoration.

வெந்துறு வெண்மழு வாட்படை யான்மணி மிடற்றா னரையின் 
ஐந்தலை யாடரவமசைத் தானணியாரூர்ப் 
பைந்தளிர் க்கொன்றை யந்தார்ப்பர மன்னடிபர வப்பாவம் 
நைந்தறும் வந்தணையு நாடொறும் நல்லனவே, 4

வெந்து உறு வெண்மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின் 
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப் 
பைந்தளிர்க் கொன் றைஅம்தார்ப் பரமன் (ன்) அடி பரவப் பாவம் 
நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.

பொருள்: சிவபெருமான் அடியார்களின் வினைகள் வெந்து அழிந்து போகுமாறு செய்யும் 
வெண்மையான மழுவைக் கையில் ஏந்தியிருப்பவன். நீல மணி போன்ற கண்டத்தை 
உடையவன். ஐந்து தலைகளை உடைய ஆடுகின்ற பாம்பை இடையில் கட்டியிருப்பவன். 
அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு சேர்த்துக் கட்டிய கொன்றை மாலையை 
அணிந்தவனாக எழுந்தருளி உள்ளவன். இப்பரமனுடைய திருவடிகளைப் போற்ற நம் 
பாவங்கள் நைந்து அறுந்துவிடும். நமக்கு வருகின்ற எல்லா நாட்களும் நல்லனவைகளாக 
மாறும்.

குறிப்புரை: கீழைத் திருப்பாட்டில் தொண்டர்க்கு உகந்தேத்தப் பணித்த பிள்ளையார், இத்திருப்பாட்டில் 
அடைந்தார் அல்லல் களைய ஆயுதந்தாங்கி இருக்கின்றார் என்பதையும், அடைந்தாரைப் பாதுகாத்த 
அடையாளமாகக் கண்டத்துக் கறையுடையவர் என்பதையும் விளக்குகின்றார்கள். வெந்துறு வெண்மழு - 
அடியார்கள் வினை வெந்து போதற்குக் காரணமாகிய கறையற்ற மழு. மழுவும், வாளும் அடைந்தரைக் 
காக்க ஏந்திய ஆயுதங்கள். மணிமிடற்றான். _ நீலகண்டன்; இது கலங்கிய தேவரைக் காத்த அடையாளம். 
அடியார்களுடைய ஐம்பொறிகளையும் தத்தம் புலன்களில் செல்லவிடாது தடுத்தாட் கொள்ளும் 
தன்மையைப் போல, ஆடுந்தன்மை வாய்ந்த ஐந்தலைப் பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் 
கட்டினான் என்பது. பாவம் நைந்தறும் - தீவினைகள் நைந்து இல்லையாம். அடிபரவுவார் சிந்தை 
தீவினையை மிகுவிக்காமையின் நல்லனவே வரும் என்பதாம். 
Lord Civan holds in His hand the white battle axe and uses it as a sword with which to burn and destroy the sins of His devotees. His neck is dark blue in colour like that of sapphire due to the positioning of the sea poison in His throat. He ties up His waist dress with a five headed dancing serpent. He puts on a garland strung loosely by fresh cassia shoots as well as by its flowers. If we can prostrate before the holy feet of this Lord enshrined in Thiru-aaroor, our sins will be crushed and will perish; every day all good things alone will accrue to us.

வீடுபிறப் பெளிதாம தனைவினவு திரேல்வெய்ய 
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி 
ஆடும விர்சடையா னவன்மேய ஆரூரைச் சென்று 
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 5

வீடு பிறப்பு எளிதுஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய 
காடு இடம்ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி 
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று 
பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.

பொருள்: வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் 
கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை 
ஏந்தியவயராகக் கைகளை வீசிக் கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை 
உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய திருவாரூரைச் சென்று அடையுங்கள். 
அங்குச் சென்று பாடுங்கள்! கைகளால் தொழுங்கள். பெருமானைப் பணியுங்கள். 
இவற்றைச் செய்வதே அதற்குரிய வழிகளாகும்.

குறிப்புரை: முற்கூறியவாறு வினைகளும் நைந்து நல்லன வந்து அடைந்தவிடத்து வீடடைதல் எளிதாம் 
என்கின்றது இத்திருப்பாடல். வீடு பிறப்பு - வீட்டின்கண் பிறத்தல்; என்றது வீடடைதல் என்னுமளவிற்று. 
அதனை - உபாயத்தை. வெய்ய காட்டை இடமாகக் கொண்டு. வெய்ய கனலைக் கையேந்தி 
ஆடுவானாதலின். பாடுவார் தன்மை நோக்காது. கரும நோக்கிக் கருணை செய்வான் என்பதாம். 
It is easy for us to get final emancipation and to attain salvation. If you ask the means to attain salvation, I will advise you thus. Lord Civan is enshrined in Thiru- aaroor. His avocation is to dance in the fierce burning ground which He considers as His personal place. His matted hair will be dazzling. He holds fire in His palm and swinging His hands He dances. You should reach Thiru-aaroor where He is enshrined. Sing in praise of Him; adore Him with folded hands and pay reverence to Him. These are the simple ways for you to reach salvation.

Note: Liberation is easy. If one sets one's mind on it, one will gain it, sooner or later, by the grace of Civa.

கங்கை யோர்வார் சடைமேற் கரந்தான்கிளி மழலைக் கேடில் 
மங்கை யோர்கூறு டையான்மறை யான்மழு வேந்தும் 
அங்கை யினானடி யேபரவிய வன்மேய ஆரூர் 
தங்கை யினாற்றொழு வார்தடுமாற் றறுப்பாரே. 6

கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடுஇல் 
மங்கை ஓர்கூறு உடையான், மறையான், மழு ஏந்தும் 
அம்கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர் 
தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான் கங்கையைத் தனது ஒப்பற்ற நீண்ட சடைமுடிமேல் மறைத்தவன்.
கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடு இல்லாத உமையம்மையை ஒரு பாகமாக 
வைத்தவன். வேதங்களை உடையவன். மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவன். 
இத்தகைய இறைவனான சிவபெருமான் திருவடிகளையே பரவி, அப்பெருமான் 
எழுந்தருளியுள்ள திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர்கள் வாழ்க்கையின் 
தடுமாற்றங்களைத் தவிர்த்து விடுவர்.

குறிப்புரை: இவ்வண்ணம் கடமைகளை விடாது செய்தவர் வீடு எய்துவார் ஆதலின், பிறவிக்கடலில் 
வினைச்சுழலில் தடுமாறார் என இப்பாடல் தெரிவிக்கின்றது. கிளி மழலை மங்கை - கிளி போன்ற 
மழலைச் சொல்லினை உடைய உமாதேவி, கங்கை கரந்தான், மங்கையோர் கூறுடையான் என்றது தருக்கி 
வந்த தாழ்குழலை மறைத்தடக்கி, அநுக்கிரக சக்தியைத் தன் இடப்பாகமாகக் கொண்டு இருக்கின்ற 
அருமைப்பாடு அறிவிக்கின்றது. மறையான் - விதிமுறையானும் விலக்குமுறையானும் அறிவுறுக்கும் 
ஆணை மொழியாகிய வேதங்களை உடையவன். பரவித் தொழுவார் தடுமாற்று - துணிவு பெறாத
தொல்லை. 
Lord Civan concealed the river Ganges in His matchless long matted hair. He accommodates on the left side of His body His imperishable consort Umaa Devi who speaks very softly like a parrot. He holds the battle axe in one of His wondrous hands. He is the author of the four Vedas. Those who hail both the holy feet of Lord Civan and the town Thiru-aaroor, where He is entempled, with folded hands, will renounce their bewilderment.

நீறணி மேனியனாய் நிரம்பாமதி சூடிநீண்ட 
ஆறணி வார்சடை யானாரூரி னிதமர்ந்தான் 
சேறணி மாமலர்மேற் பிரமன்சிர மரிந்தசெங்கண் 
ஏறணி வெல்கொடி யானவனெம் பெருமானே. 7

நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட 
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான் - 
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண் 
ஏறு அணி வெல் கொடியான் அவன் - எம் பெருமானே.

பொருள்: சிவபெருமான் திருநீறு அணிந்த திருமேனியன். திருமுடியில் இளம்பிறையைச் 
சூடியவன். கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவன். திருவாரூரின்௧ண்
மகிழ்வோடு எழுந்தருளி இருப்பவன். சேற்றின்கண் அழகியதாய் தோன்றி மலர்ந்த தாமரை 
மலர்மேல் விளங்கும் பிரமனுடைய சுரங்களில் ஒன்றைக் கொய்தான். சிவந்த கண்களை  
உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்ட இப்பெருமானே எம் தலைவன் 
ஆவான்.

குறிப்புரை: இங்ஙனம், ஆன்மாக்களின் தடுமாற்றறுப்பவரே தலைவர்; அவருடைய திருமேனியும் இடமும் 
இத்தகைய என்பன முதலியவற்றை இப்பாடலில் அறிவிக்கின்றார். நிரம்பாமதி - இறைவன்
முடியிலிருந்தும் நிரம்பாத பிள்ளைமதி. நிரம்பா மதிசூடி, நீண்ட ஆறு அணிசடையன் என்றது குறைப் 
பொருளையும் நிறைப் பொருளையும் ஒப்ப நோக்குவான் என்பது விளக்கிற்று. சேறணி மாமலர் - சேற்றிற் 
பிறந்து அழகு செய்யும் தாமரை. சேறணி மாமலர்மேற் பிரமன் என, பிரமன உந்தியந் தாமரையிலிருந்தும் | 
கூறியது. தாமரை என்ற பொதுமை நோக்கி, ‘புற்றில் வாளரவன்’ (திருக்கோவை.) என்று மணிவாசகர் 
கூறியருளியது போல, பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் என்றது 
மகன்றலையறுக்கவும், ஒரு கரத்துக் கொடியாக இருந்த இடபவடிவினனாகிய திருமால், பார்த்துக் 
கொண்டே இருப்பதைத் தவிரத் தவிர்க்க முடியாத வண்ணம் தலைமை படைத்தவன்; அவனே எம்
தலைவன் எனத் தலைவனின் தனிச்சிறப்பினை விளக்கியவாறு.
Lord Civan smears His sacred body with holy ashes. He wears the ever young crescent moon in His divine hair. The river Ganges shines in His attractive long matted hair. He is happily entempled in Thiru-aaroor. He clipped one of the five heads of Brahma who is seated on the pretty fully blossomed lotus flower, which is rooted in mire. His insigne in His ever-victorious flag is the red eyed bull. This Lord Civan is our Supreme Head.

8. Not Available

வல்லியந் தோலுடை யான்வளர் திங்கட்கண் ணியினான் வாய்த்த 
நல்லிய னான்முகத் தோன்தலை யின்னற வேற்றான் 
அல்லியங் கோதைதன் னையாகத் தமர்ந்தருளி ஆரூர்ப் 
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. 9

வல்லியந்தோல் உடையான், வளர்திங்கள்கண்ணியினான், வாய்த்த 
நல்இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான், 
அல்லி அம்கோதைதன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப் 
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

பொருள்: சிவபெருமான் வலிமையான புலியினது தோலை உடுத்தவன். வளர்தற்குரிய 
பிறைமதியைத் தன் தலையில் கண்ணியாகச் சூடியவன். நல்லியல்புகள் கொண்ட 
பிரமனுடைய தலையில் பலியேற்று உண்பவன். அல்லியங்கோதை என்ற பெயருடைய 
அம்மையைத் தனது திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்தருனி இருப்பவன். 
திருவாரூரில் பொருந்திய புண்ணியன். இவனைத் தொழுபவர்களும் புண்ணியம் 
செய்தவர்களே!

குறிப்புரை: அத்தலைவன், அடைவார் எளிதில் அடைந்துய்ய அல்லியங் கோதையுடன் அருள்மூர்த்தியாய் 
ஆரூரில் அமர்ந்திருக்கின்றான் என இப்பாடலில் இடம் குறிக்கின்றார். வல்லியம் - புலி. நல்லியல் 
வாய்த்த நான்முகத்தோன் - தான் பிரமம் என்ற தன்மை யொழிந்து தலைவனை உணர்தலாகிய நல்லியல்பு
வாய்க்கப் பெற்ற பிரமன். நல்லியல்பு வாய்க்கப் பெற்றமையாலேயே கபாலம் இறைவன் கரத்து ஏற்குங் 
கலமாக விளங்கிற்று. நறவு - அமுதம். விஷ்ணு மார்பில் உள்ளது. அல்லியங்கோதை - பூங்கோயில் 
பக்கத்துக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் நீலோத்பலாம்பிகை. ஆகம் - திருமேனி. 
Lord Civan is clad in fierce tiger-skin. He wears as a flower bud the ever-young crescent moon, which normally grows day by day. He goes about and accepts alms in the skull of Brahma who turned a good mannered creator after he met with punishment from Lord Civan. He concorporates in His body frame goddess Uma Devi. She is known in this temple as Alliyang-kothai. This Lord Civan who is entempled in Thiru-aaroor is the holiest one; those who adore and worship Him are also holy ones.

செந்துவரா டையினாருடை விட்டுநின் றுழல்வார் சொன்ன 
இந்திர ஞாலமொழிந் தின்புறவே ண்டுதிரேல் 
அந்தர மூவெயிலும் அரணம்மெரி யூட்டி ஆரூர்த் 
தந்திர மாவுடை யானவனெந் தலைமையனே. 10

செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன 
இந்திரஞாலம் ஒழிந்து, இன்புஉற வேண்டுதிரேல், 
அந்தர மூஎயிலும்(ம்) அரணம் எரி யூட்டி, ஆரூர்த் 
தம் திரமா உடையான் அவன் - எம் தலைமையனே.

பொருள்: செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்து,.உண்மைத் துறவிகள்போல் பாசாங்கு 
செய்யும் புத்தர்கள், மற்றும் ஆடையின்றித் திரியும் போலித் துறவிகளான சமணர்கள் 
ஆகியோரின் மாயப் பேச்சுக்களைக் கேளாதீர்கள். நீங்கள் இன்புற்று வாழ 
விரும்புவீர்களாயின், வானத்தில் திரியும் மூவெயில்களாகிய அசுரர்களின் கோட்டைகளை 
எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய 
சிவபெருமானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை: புண்ணியனைத் தொழும் புண்ணியம் பெற்ற நீங்கள். புறச் சமயிகள் கூறும் இந்திர ஞாலம் 
நீங்கி, இன்பம் பெற வேண்டின், ஆரூருடையானைத் தலைவனாக அறியுங்கள் என்று அறிவித்து 
அருள்கின்றார். செந்துவர் ஆடை - காவியாடை, சைன சந்நியாசிகளில் காவி ஆடை உடுத்தியவரும், 
திகம்பர சந்நியாசிகளும் என இருவகையார். இந்திரஞாலம் - இந்திரஞாலமான மாயப் பேச்சுக்கள். 
அந்தரம் - ஆகாயம். அரணம் - கோட்டை. ஆரூர் தம் திரமாவுடையான் - ஆரூரைத தமது 
நிலைக்களனாகக் கொண்டவன். திரம் ஸ்திரம் என்பதன் திரிபு. சிவபூஜா துரந்தரர்களாகிய திரிபுராதிகள் 
தம் நிலை கெட்டது புத்தாவதாரங்கொண்ட திருமாலின் இந்திர ஜாலப் பேச்சால். திருமால் உபதேசம் 
மனத்தைக் கெடுத்தமையும். அதனால் அசுரர்கள் அழிந்தமையும் ஆகிய வரலாற்றை நினைப்பூட்டுவது 
இப்பகுதி. 
Oh! Ye devotees! Do not listen to the illusory words of those who are clad in red- ochre hued garments and also those who roam about nakedly. If you would like to lead a life of happiness, be a firm believer in your mind that Lord Civan is our Supreme God and offer worship to Him. He is the one who burnt and destroyed the three citadels of the hostile Asuraas roaming about in the sky. He is happily entempled in Thiru-aaroor as His sacred place of living.

நல்லபுனற் புகலித்தமிழ் ஞானசம்பந் தன்நல்ல 
அல்லிமலர் க்கழனி ஆரூரமர்ந்தானை 
வல்லதோரிச் சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் 
சொல்லுதல் கேட்டல்வல் லார்துன் பந்துடைப்பாரே. 11

நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல 
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை, 
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச் 
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

பொருள்: தமிழ் ஞானசம்பந்தன் தூய்மையான நீர்வளத்தை உடைய புகலி என்னும் 
சீகாழியில் தோன்றியவர். இவர் நல்ல அல்லி மலர்கள் பூத்திருக்கும் வயல்களால் சூழப்பட்ட 
திருவாரூரில் எழுந்தருளிய சிவபெருமானைத் தனது வல்லமையான அன்போடு 
இப்பதிகத்தை வழிபாட்டுப் பாடல்களாகப் பாடினார். இந்த ஒன்பது பாடல்களையும் 
பொருளுணர்ந்து சொல்லுபவர்களும், கேட்கும் திறனுடைய வல்லவர்களும் தங்களுடைய 
துன்பங்களைச் சுவடும் தெரியாதபடி துடைத்து விடுவர்.

குறிப்புரை: அத்தகைய தலைவனாகிய ஆரூரமர்ந்தானை மனங்கொண்ட மகிழ்ச்சியால் எழுந்த
பாடல்கள் ஒன்பதினையும் பாடுவாரும் கேட்பாரும் துன்ப நீக்கம் பெறுவர் என்றுணா்த்துகிறது 
திருக்கடைக்காப்பாகிய இறுதிப் பாடல். நல்லபுனல் - கழுமலவள நதி. வழிபாடு பத்தும் - இப்பத்துப் 
பாடல்களுமே வழிபாடு ஆகும் என்பதாம். வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் - சொல்லும் வாயும், கேட்கும் 
செவியும், இவற்றை இயக்கும் உள்ளமும் பிறவழி போகாது பொருந்தச் சொல்லுதலும், கேட்டலும் துன்பந் 
துடைப்பார் - ஈரந் துடைப்பார் என்பது போலத் துன்பம் இருந்த சுவடுந் தெரியாதபடித் துடைப்பார் 
என்பதாம். 
Gnaanasambandan is well versed in Tamil. He hails from Pukali which is renowned for its abundant water supply at all times. He has sung these ten verses with deep respect and high dedication, on Lord Civan of Thiru-aaroor. This place is surrounded by fields full of water, where lotus and other similar flowers grow well with their outer petals fully blossomed and fully grown. Those who explain these verses with deep knowledge and those who patiently and sincerely hear such deep explanation will sweep their misery away from them for ever.

திருச்சிற்றம்பலம்

105ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

106. திருவூறல்

திருத்தல வரலாறு:

தொண்டை நாட்டுத் தலமாக விளங்குவது திருவூறல் என்ற திருத்தலமாகும். இத்தலம்
தக்கோலம் என வழங்கப் பெறுகிறது. இரயில் நிலையம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 
பேருந்துகள் உள்ளன. நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது 
திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று. சம்வர்த்த முனிவர் பூசித்துப் 
பேறு பெற்ற தலம். இக்கோயிலை அடுத்து மதிலோரத்தின் கிழக்கே உள்ள கங்காதரர் சந்நிதியில் 
மேற்குப் பிராகாரத்தில் விருஷப வாயிலிருந்து அகோராத்ரம் தீர்த்தம் வருவது ஸ்தல மகிமையை 
விளக்கும். இறைவன் உமாபத்சுவரா, ஜலநாதேசுவரர். இறைவி உமையம்மை. தீர்த்தம் பார்வதி 
தீர்த்தம். விசயநகர அரசர்களால் நந்திதீர்த்தம் என்றழைக்கப்பட்டது. தக்கோலம் இரயில் 
நிலையத்தில் இருந்து கிழக்கே 1.5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

கல்வெட்டு:

கல்வெட்டில் ஜலநந்தீசுவரர் என்று வழங்கப் பெறும். இராஜகேசரி வர்மன் ஆட்சியில் 
கங்கமன்னன் பிருதிவி பதியால் வெள்ளிப்பாத்திரம் தானம் செய்யப்பட்டது. அவன் மனைவி 
அருள்மொழி நங்கையால் கோதானம் செய்யப்பட்டது. கோபார்த்தி வேந்திரவர்மன் ஆட்சியில் 
துர்க்கைச் சிலைக்கு விளக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன. திரிபுவனச் சக்கரவர்த்தி 
குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்தி தேவன் என்கிற யாதவனால் நிலம் தானம் செய்யப் 
பெற்றுள்ளது. மற்றவை விளக்கிற்கும், மற்றச் செலவுகளுக்கும் பொன், பணம், நிலம், ஆடுகள், 
நெல் முதலியன வழங்கியதைத் தெரிவிக்கின்றன.

பதிக வரலாறு:

தக்கோலத்தை வணங்கி, தமிழ்மாலை சாத்திய ஆளுடைய பிள்ளையார் திருவூறலை 
அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள, இறைவனைப் பலமுறை வணங்கி, ‘மாறிலவுணர் அரணம்’ 
என்னும் பழுதில் செந்தமிழ்ப்பாமாலை பாடினார். 
106. THIRU-OORAL

HISTORY OF THE PLACE

This sacred place is in Thondai Naadu and is known as Thakkolam. It can be reached by bus from Kaanchipuram. It is 1.5 km to the east of the Thakkolam railway station. The name Ooral is derived either from the water spring at the feet of the Lord or from the flow of water (saliva) from the mouth of Nandhidhevar. Next to this temple wall towards its east is a shrine for Gangaadharar. In the western ambulatory of this shrine there is a bull out of whose mouth flows holy water known as Agoraathram Theerththam. This shows the greatness of this temple.

The Lord is known as Umaapatheesuvarar or Jalanaathesuvarar. The Goddess is known as Umaiyammai. The sacred ford is Paarvathi Theerththam, called Nandhi Theerththam by Vijayanagar kings. Sage Samvarththa Munivar worshipped and attained salvation here.

Some inscriptions refer to the God as Jalanandheesuvarar. The Ganga king Piruthivipathi gifted silver utensils and his queen Arulmozhinangai gave away cows for the temple. Other inscriptions speak of the gift of gold, cash, land, paddy and sheep for lamps and other temple expenses.

INTRODUCTION TO THE HYMN

From Virkolam our saint arrived at Takkolam and hailed Lord Civan in the local shrine known as Ooral.

திருச்சிற்றம்பலம்

106. திருவூறல் 
பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

மாறில வுணரரணம் மவைமாய வோர்வெங் கணையாலன்று 
நீறெழ வெய்தவெங் கள்நிமல னிடம்வினவில் 
தேறலி ரும்பொழி லுந்திகழ் செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த 
ஊறல மா்ந்தபிரா னொலியார் கழலுள் குதுமே. 1

மாறு இல் அவுணர் அரணம்(ம்) அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, 
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் - 
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த 
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

பொருள்: தமக்கு நிகரில்லாத வலிய அசுரர்களின் கோட்டைகளாக விளங்கிய முப்புரங்களும் 
சாம்பலாகிப் போகுமாறு, முற்காலத்தில் ஒருவெங்கணையால் அழித்த நிமலன், எங்கள் 
சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளிய இடம் யாது என வினவினால், அது, 
தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல் மீன்கள் பாயும் வயல்களும் 
சூழ்ந்த திரு ஊறல் ஆகும். இப்பெருமானின் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை நாம் 
நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: திரிபுரம் எரித்த சிவபெருமான் இடம் யாதென்று வினவினால், அது திருஊறலாம். அங்கு 
எழுந்தருளியுள்ள இறைவன் கழலைத் தியானிப்போம் என்கின்றது. அரணம் - கோட்டை. தேறல் - தேன். 
Oh! Ye devotees! If you seek to identify the place of residence of our Lord Civan, the Supreme, who is pure, it is Thiru-ooral. In the days of yore, He smote with a single fierce arrow, on the walled citadels of the uncomparable recalcitrant Asuraas and reduced them to cinders. The city is surrounded by thick vegetation full of honey and fields teaming with red carp fishes. Let us contemplate on the holy feet of Lord Civan of this place who is decked with resounding anklets and get His grace.

மத்தம தக்கரியை மலையான் மகளஞ்ச வன்றுகையால் 
மெத்த வுரித்தவெங் கள்விமலன் விரும்புமிடம் 
தொத்த லரும்பொழில் சூழ்வயல் சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம் 
ஒத்த லருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.

மத்தமதக்கரியை, மலையான்மகள், அஞ்ச, அன்று, கையால் 
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் - 
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர், நீலம் நாளும் நயனம் 
ஒத்து அலரும் கழனி - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: மதம் பொருந்திய பெரிய தலையை உடைய யானையைக் கண்டு மலைமகள் 
அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் முழுமையாக உரித்த நிமலன், எங்கள் 
சிவபெருமானாகும். இப்பெருமான் விரும்பும் இடம் யாது என வினவினால், அது, 
பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து 
ஒளிரும் நீல மலர்கள், மங்கையரின் கண்களை ஒத்திருக்கும் வயல் வளங்களை உடைய 
திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: யானையை உரித்த இறைவன் விரும்பும் இடம் திருவூறல். அதனை உள்குவோம் 
என்கின்றது. மெத்த - மிக. தொத்து - கொத்து. நயனம் - கண். 
A wild elephant once came rushing towards Umaa Devi consort of Lord Civan and daughter of the mountain king, who got frightened at the very sight of the elephant. Lord Civan killed the elephant, and stripped off its skin by His very hands and covered His body with that skin. This Lord Civan loves to be entempled in Thiru- ooral. This city is surrounded by natural gardens full of well blossomed flowering trees and plants. Also rich fields are in plenty here in this city area, where the blue lilies blossom daily in large numbers. These flowers resemble the beautiful eyes of damsels living in this city. Let us remember and reach this town daily and offer our worship to Lord Civan entempled therein.

ஏனமருப் பினொடுமெழி லாமையும் பூண்டழகார் நன்றும் 
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம் 
வானமதி தடவும்வளர் சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை 
ஊனமறுத் தபிரான்திரு வூறலையுள் குதுமே. 3

ஏனமருப்பினொடும், எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும் 
கான் அமர் மான்மறிக் கைக்கடவுள், கருதும் இடம் - 
வானமதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகுஆர், நம்மை 
ஊனம் அறுத்த பிரான் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, 
நல்ல காட்டில் வாழும் மான் கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுள் எங்கள் 
சிவபெருமானாகும். இப்பெருமான் விரும்பும் இடமானது, வானத்தில் உள்ள மதி தோயுமாறு 
வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க 
வல்லவனாக எழுந்தருளியிருக்கும் திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் நாள்தோறும் 
தியானிப்போமாக.

குறிப்புரை: பன்றிக் கொம்பு, ஆமையோடு இவற்றை அணிந்து மான் ஏந்திய கடவுள் இடம் திருவூறல். 
அதனைத் தியானிப்போம் என்கின்றது. ஏனம் - பன்றி. எழில் - அழகு. மான்மறி - மான்குட்டி. ஊனம் - 
குறை. 
Lord Civan wears the tusk of the hog, and the shell of tortoise as His ornaments creating a gorgeous look. He also carries in one of His hands the young deer which normally lives in the forest. This Lord Civan loves to be entempled in Thiru-ooral. Here thick well developed and good looking groves with tall trees are in plenty. And the moon apparently floats high in the skies here. Let us go daily to this town and offer our worship to Lord Civan entempled there who will eradicate our birth and death karma.

நெய்யணி மூவிலை வேல்நிறை வெண்மழுவும் மனலுமன்று 
கையணி கொள்கையி னான்கடவுள்ளிடம் வினவில் 
மையணி கண்மடவார் பலர்வந்திறைஞ் சமன்னி நம்மை 
உய்யும் வகைபுரிந் தான்திரு வூறலை யுள்குதுமே. 4

நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும்(ம்), அனலும், அன்று 
கை அணி கொள்கையினான் கடவுள்(ள்) இடம் வினவில் - 
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை 
உய்யும் வகை புரிந்தான் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளி நிறைந்த வெண்மையான மழு, அனல் 
ஆகியவற்றைத் தன் கைகளில் உடைமையாகக் கொண்டுள்ள கொள்கை உடைய கடவுள் 
எங்கள் சிவபெருமான் ஆகும். இப்பெருமான் விரும்பும் இடம் யாது என வினவினால், அது, 
மை பூசப்பெற்ற கண்களை உடைய பெண்கள் பலர் வந்து வணங்குகின்றதும், நாம் உய்யும் 
வகையில் எழுந்தருளி நிலைபெற்றிருக்கும் திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் 
நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: திரிசூலம், மழு, அனல் இவற்றைக் கையில் ஏந்திய கடவுள் இடம் திருஊறல் என்கின்றது. 
நெய்யணி - நெய் பூசப்பெற்ற. ஆயுதங்கள் துருப்பிடிக்காவாறு நெய் பூசி வைத்தல் மரபு. உய்யும் வகை - 
துன்பத்தினின்று ஈடேறும் வகை. 
Lord Civan holds in His hands the trident well smeared with melted butter (Ghee) and also the bright white battle axe as well the hot burning fire. If you ask where this Lord Civan loves to be enshrined, it is the town Thiru-ooral. Here Lord Civan is entempled permanently to enable devotee damsels who have tainted their eyes with black paste, to come in large numbers to the temple daily to offer worship. Let us also remember this temple and go there daily and offer our worship to Lord Civa.

எண்டி சையோர் மகிழஎழில் மாலையும்போ னகமும்பண்டு 
சண்டி தொழஅளித் தானவன்தாழு மிடம்வினவில் 
கொண் டல்கள்தங்கு பொழிற்குளிர் பொய்கைகள் சூழ்ந்துநஞ்சை 
உண்ட பிரானமருந் திருவூறலை.யுள்குதுமே. 5

எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு, 
சண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் - 
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை 
உண்ட பிரான் அமரும் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் கண்டு மகிழுமாறு, தன்னைத் தொழுத விசார 
- சருமற்கு (சண்டீசர்) தான் அணிந்த அழகிய மாலை, தான் உண்டு எஞ்சிய உணவு 
ஆகியனவற்றை முற்காலத்தே அளித்து அருளியவன். கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு 
தேவர்களைக் காத்தவனும் எங்கள் சிவபெருமானாகும். இப்பெருமான் விரும்பி உறையும் 
இடம் யாது என வினவினால், அது, மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த 
பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் நாள்தோறும் 
தியானிப்போமாக.

குறிப்புரை: தான் சாத்திய மாலையும் உண்ட உணவும், சண்டேசுரர்க்கு அருள் செய்தவன் இடம் 
திருஊறல் என்கின்றது போனகம் - உணவு. சண்டி - சண்டேசுரர். கொண்டல்கள் - மேகங்கள்.
Sage Visara Sarumar used to worship Lord Civan daily, performing oblations as depicted in the Aagamaas. One day Lord Civan appeared before him and blessed him, for his deep devotion and granted him boons such as a position in His abode called Chandeesar, good garlands and divine food after His use (The name of the position given to this sage itself became later his own name as Chandeeswarar). The entire humanity in all the eight directions of this world, was greatly in joy due to this act of Benediction by Lord Civan to this sage. This Lord Civan positioned the poison that came out of the sea, in His throat permanently and saved the life of Devaas and others. If you ask where this Lord Civan is entempled, it is the town known as Thiru-ooral. In this city, clouds passing through the sky, stay over the thick vegetation area where tall trees are in plenty and also where cool tanks full of water are to be found everywhere. Let us remember this place daily and go there and offer worship to Lord Civa entempled therein.

Note: Chandi is Chandeesua Naayanaar. He has a sub-shrine in every temple of Civa.

6 & 7 Not available
கறுத்தம னத்தினொடுங் கடுங்காலன் வந்தெய்து தலுங்கலங்கி 
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் 
செறுத்தெ ழுவாளரக்கன் சிரந்தோளுமெய் யுந்நெரியஅன்று 
ஒறுத்த ருள்செய்தபி ரான்திரு வூறலையுள் குதுமே. 8

கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி 
மறுக்குஉறும் மாணிக்கு அருள மகிழ்த்தான்..இடம் வினவில் - 
செறுத்து எழுவாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று 
ஒறுத்து, அருள்செய்த பிரான் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் பிரம்மசாரியாகிய 
மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கவர வந்தான். அது கண்டு, மனம் கலங்கி மயங்கிய 
மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவன் சிவபெருமான். தன்னை மதியாது சினந்து வந்த, 
வாட்போரில் வல்லவனான இராவணனின் தலை, தோள், உடல் ஆகியவைகளை 
முன்னொரு காலத்தில் சிவபெருமான் நெரித்தான். பின்பு, அவன் வருந்தி மன்னிப்பு வேண்ட 
அவனுக்கு அருள் செய்த கடவுளும் எங்கள் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் விரும்பி 
உறையும் இடம் யாதென வினவினால், அது திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் 
நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: மார்க்கண்டேயற்கு அருள்செய்த இறைவன் இடம் திருஊறல் என்கின்றது. கறுத்த - 
கோபித்த. மறுக்குறும் - மயங்கிய. மாணி - பிரமசாரியாகிய மாக்கண்டன். வாள் அரக்கன் - கொடிய 
அரக்கன். செறுத்து - கோபித்து அரக்கன் என்றது இராவணனை. ஒறுத்து - தண்டித்து.
The fierce and wrathful Yama approached the Brahmachari (Bachelor Saint) Maarkandēyar to snatch away his life, even as he was worshipping the Civalingam with proper ceremonies. Maarkandēya got frightened and bewildered at this. At this moment, Lord Civa kicked Yama to death and saved Maarkandēya and blessed him to live for ever without ageing. Once before, king Raavanan unaware of the prowess of Lord Civa, tried to lift and put aside Mount Kailash, His abode. Civan crushed his head, shoulders and body etc. Later when Raavanan rued and repented for his folly and begged for pardon, Lord Civan forgave him and graced him with a few boons. If you seek to identify the abode of this Lord Civan, it is Thiru-ooral. Let us meditate on that place in our mind daily, go there and offer worship to Lord Civan enshrined therein.


நீரின்மி சைத்துயின் றோன்நிறை நான்முகனும் மறியாதன்று 
தேரும் வகைநிமிர்ந் தானவன்சேரு மிடம்வினவில் 
பாரின் மிசையடியார் பலர்வந்திறைஞ் சமகிழ்ந்தாகம் 
ஊருமர வசைத்தான் திருவூறலை யுள்குதுமே. 9

நீரின்மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று, 
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும்இடம் வினவில் - 
பாரின்மிசை அடியார்பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம் 
ஊரும் அரவு அசைத்தான் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: கடல் நீரின் மேல் துயில் கொள்ளும் திருமாலும் ஞானத்தில் நிறைந்த நான்முகனும் 
அறிய முடியாமல், தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவன் சிவபெருமான். மண்ணுலகில் 
அடியவர் பலரும் வந்து வணங்க, மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியிருக்கும் 
கடவுளும் எங்கள் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளிய இடம் யாது என 
வினவினால், அது திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: அயனம் மாலும் அறியாதவண்ணம் அக்கினி மாலையாய் நிமிர்ந்தவன் இடம் திருஊறல் 
என்கின்றது. நீரின் மிசைத்துயின்றோன் - திருமால். தேரும் வகை - ஆராயும் வகை. 
Thirumaal who rests on the snake bed on sea and Brahma who is a scholar in divine knowledge - both could not have darshan (vision) of Lord Civan in spite of their serious search for Him who then soared up high in the sky as a big pillar of fire. Snakes normally crawl in the ground happily. Civa got hold of the snake and tied round His waist as a belt. If you ask where this Civa is enshrined, it is Thiru-ooral, because He wants His devotees to come to His place in large numbers and to offer worship to Him. Let us also follow suit, like the devotees, go to the temple and offer our worship to Lord Civan entempled therein in Thiru-ooral town.

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டை யர்மோட்ட மணர்குண்டர் 
என்னுமிவர்க் கருளாவீச னிடம்வினவில் 
தென்னெ னவண்டி னங்கள் செறி யார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை 
உன்னவினை கெடுப்பான் திருவூறலை யுள்குதுமே. 10

பொன்இயல் சீவரத்தார் புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர், 
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் - 
தென்னென வண்டுஇனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகுஆர், தன்னை 
உன்ன வினை கெடுப்பான் - திரு ஊறலை உள்குதுமே.

பொருள்: பொன் போன்ற மஞ்சள் நிற காவி உடை அணிந்து போலித் துறவிகளாகத் திரியும் 
புத்தர்களுக்கும், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்ணும் வெளி வேஷக் 
காரர்களாகத் திரியும் தடித்த உடம்பை உடைய சமணர்களுக்கும் சிவன் அருள் புரியாதவன். 
தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினைகளை நீக்குபவனான கடவுள் எங்கள் 
சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளிய இடம் யாது என வினவினால், அது, 
‘தென்’ என்ற ஓசை உண்டாகும்படியாக ரீங்காரமிடும் வண்டினங்கள் நிறைந்த பொழில்கள் 
சூழ்ந்துள்ள அழகிய திருஊறல் ஆகும். இத்தலத்தை நாம் நாள்தோறும் தியானிப்போமாக.

குறிப்புரை: புத்தருக்கும் சமணருக்கும் அருள் புரியாத ஈசன் இடம் திருகஊறல் என்கின்றது. 
பொன்னியல் சீவரத்தார் - பொன்போன்ற நிறத்தினை உடைய உடை அணிந்தவர்கள். புளித்தட்டையர் - 
புளித்த நீரோடு கூடிய பழஞ்சோற்றைத் தட்டில் இட்டு உண்பவர்; தென் என; ஒலிக்குறிப்பு. தன்னை 
உன்ன வினைகெடுப்பான் - தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினையைக் கெடுப்பவன்.
Buddhists wear golden hued yellow robes; while the Samanars eat the sour gruel from flat plates. The Lord never graces these two who lack in specific knowledge, whereas He annuls the karma of His devotees who contemplate on and adore Him. If you ask where this Lord Civan is enshrined, it is in the beautiful Thiru-vural which is girt with groves where bees in their strength swarm about buzzing and humming melodious notes. Let us also contemplate on Lord Civan of this place and adore Him.

கோடலி ரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர் மன்மெச்ச 
ஓடுபுனற் சடைமேற் கரந்தான் றிருவூறல் 
நாடலரும் புகழான்மிகு ஞானசம்பந்தன் சொன்னநல்ல 
பாடல்கள் பத்தும்வல் லார்பரலோகத் திருப்பாரே. 11

கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச 
ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல், 
நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல 
பாடல்கள்பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.

பொருள்: செங்காந்தள் செடிகள் நிறைந்த பெரிய காடுகளை உடையதும், கொடிகள் 
கட்டப்பட்ட மாடவீதிகளைக் கொண்டதுமான பதி கொச்சையம்பதி என்ற சீகாழி ஆகும். 
பிறரால் தேடற்கரிய புகழ் மிகுந்த ஞானசம்பந்தன் இப்பதிக்குத் தலைவன் ஆவார். இவர், 
பெருகி வரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனான சிவபெருமான் உறையும் 
திருஊறலைப் புகழ்ந்து இப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகப் பாடல் பத்தையும் 
பொருளுணர்ந்து பாட வல்லவர்கள் பரலோகத்தில் இன்பமாகத் திளைத்திருப்பார்கள்.

குறிப்புரை: திருஊறலைப் பற்றிய பாடல் பத்தையும் வல்லவர் பரலோகத்து இருப்பார் என்கின்றது. 
கோடல் - செங்காந்தள். இரும்புறவில் - பெரிய காடுகளை உடைய. நாடல் அரும் - பிறரால் தேடற்கரிய. 
The rare Gnaanasambandan of renown par excellence, is the prince of Pukali rich in storeyed mansions, with flags fluttering from poles. Also big bushes full of red Malabar glory lily plants have grown in plenty. Gnaanasambandan has sung on Thiru-vural's Lord Civan who has concealed in His matted hair the celebrated and flowing river Ganges. Those who are well versed in these ten verses will abide in the supernal world.

திருச்சிற்றம்பலம் 

106ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
107. திருக்கொடிமாடச்செங்குன்றார் (திருச்செங்கோடு)

திருத்தல வரலாறு:

கொங்கு நாட்டுத் தலங்களில் முக்கியமான ஒன்று. திருக்கொடிமாடச்செங்குன்றூர் 
அல்லது திருச்செங்கோடு என்று வழங்கப்படும். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்தில் 
இருந்து கிழக்கே 9 கி.மீ: தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டில் இருந்து நாமக்கல், சேலம் ஆகிய 
ஊர்களில் இருந்தும் பேருந்துகள் மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் 
வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் எனவும் வழங்கப் பெறும். 
மேலவீதியில் இருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப் பெற்றது. 
சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் 
சந்நிதி கிழக்குப் பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக்குள்ளேயே தனியே இருக்கிறது. சுவாமி 
அர்த்த நாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்: அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் 
என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட 
நாயனாருடைய அவதார ஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன.

கல்வெட்டு:

பரகேசரி வர்மனான முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற்பரகேசரி வர்மன், சுந்தர 
பாண்டிய தேவன், சொக்கப்ப நாயக்கன், சொக்கலிங்க நாயக்கன், மைசூர் கிருஷ்ண ராஜ 
உடையார் முதலிய அரசர்களின் கல்வெட்டுக்கள் இங்குக் காணப் படுகின்றன. அவற்றால் 
அறியப்படுவன பெரும்பாலானவை அந்தணர்களுக்கு அன்னமும், யாத்தீரிகர்களுக்கு உணவும், 
விளக்கிற்கு நெய்யும் அளிக்கப் பெற்ற நிவந்தங்களே ஆகும். 192 முதல் 194 வரையில் உள்ள 
கல்வெட்டுக்கள் சுப்பிரமணியப் பிள்ளயார் கோயிலைப் பற்றி அறிவிக்கின்றன. கி.பி. 1660 முதல் 
1662 வரை அரசாண்ட விஸ்வநாத சொக்க லிங்கர் காசி விசுவேசர் கோயிலையும் கோபுரத்தையும் 
கட்டினார்.

பதிக வரலாறு:

இவ்வூர் பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் திருத்தலமாக விளங்குகிறது. இதனை 
அருணகிரிநாதர் கந்தா் அலங்காரத்தில் அருளிச் செய்த 72-ஆவது பாட்டு கீழ் வருமாறு:

“சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டுவெற்பனைச் செஞ்சுடர் வேல் 
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி 
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச் 
சாந்துணைப் போதும் மறவாதவற்கு ஒரு தாழ்வில்லையே”

திருவீங்கோய்மலையை வழிபட்ட சிவஞானப் பிள்ளையார் திருக்கொடி மாடச் 
செங்குன்றூரை அடைந்தார். அந்நகரில், வாழ்கின்ற மக்களும் சிவனடியார்களும், மகரதோரணம் 
முதலியவற்றால் நகரை அலங்கரித்து, வாத்தியங்கள் முழங்க, எதிர்கொண்டு அழைத்தனர். 
சினவிடையார் திருக்கோயிலுக்கு வரவேண்டினர். அங்ஙனமே, ஆளுடைய பிள்ளையார் 
எழுந்தருளி, நம்பர் அவர் திருமுன்பு தாழ்ந்தெழுந்து .நலஞ்சிறக்க மண்ணவரும் விண்ணவரும் 
போற்ற இன்னிசை வண்டமிழாகிய ‘வெந்த வெண்ணீறு’ என்னும் இப்பதிகத்தை அருளினார். 
இத்திருப்பதிகத்தின் பல பாடல்கள் இத்தலத்தில் பெருமான் - அர்த்தநாரீசுரராக விளங்குதலைக் 
குறிக்கின்றன. 
107. THIRU-K-KODI-MAADA-CH-CHENG-KUNDOOR

HISTORY OF THE PLACE

This sacred place is in Kongu Naadu, 9 km east of Sankagiridhurgam railway station. It can be reached by bus from Erode, Naamakkal, and Salem. Buses ply to the temple atop the hill. It is known by the names, Thiruchchengkodu, Thiruchcheng- kunroor, and Naagaachalam. The hill is called Naagagiri as it resembles a serpent,
viewed from the west street.

The name of the God is Ardhanaareesuvarar and the Goddess is known by the names of Paagampiriyaal and Ardhanaareesuvari. There is a small spring at the feet of Ardhanaareesuvarar. There are separate shrines for Subramania Swaami and Vishnu, known as Aadhikesavapperumaal. The shrine of the Lord faces west and that of Murugan faces East. There are 16 sacred fords such as Biramatheerththam.
There are inscriptions of Chola, Paandiya, Naayakka and Mysore Udaiyaar kings in this temple. They note the grants made for feeding pilgrims, and of rice for Andhanars, and ghee for lamps. Some of the inscriptions give information about the shrine for Subbiramaniap Pillaiyaar, Visvanaatha Chokkalingar had the temple and gopuram for Kaasi Visuvesar built.

INTRODUCTION TO THE HYMN

Our saint departed from Eengoimalai having duly hailed its Lord. Adoring Civa in many shrines he eventually arrived at Thiru-k-kodi-maada-ch-cheng-kundoor from where he composed the following hymn:

திருச்சிற்றம்பலம்

107. திருக்கொடிமாடச்செங்குன்றூர் 

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்திகழ் மார்பினல்ல 
பந்தணவும் விரலாளொரு பாகமமர்ந் தருளிக் 
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன் றூர்நின்ற 
அந்தண னைத்தொழு வாரவல மறுப்பாரே. 1

வெந்தவெண் நீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல 
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்துஅருளி, 
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற 
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான் விரிக்கப் பெற்ற பூணூல் திகழ்கின்ற மார்பில் திருவெண்ணீற்றை 
அணிந்திருப்பவன். பந்து பொருந்தும் கைவிரல்களை உடைய உமையம்மையை தனது 
திருமேனியில் ஒரு பாகத்தில் அமர்ந்திருக்கும்படி அருளியவன். பூங்கொத்துக்கள் நிறைந்த 
பொழில் சூழந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளி இருப்பவன். இத்தகைய 
இறைவனைத் தொழுபவர்கள் தங்கள் துன்பங்களை நீக்கப் பெறுவர்.

குறிப்புரை: பூணுநூல் திகழ்கின்ற திருமார்பில் வெண்ணீறணிந்து உமையொரு பாகமாகக் கொடிமாடச் 
செங்குன்றூரில் விளங்கும் இறைவனைத் தொழுவார் அவலம் அறுப்பார் என்கின்றது. அணவும் - 
கலக்கும். கொந்து - கொத்து. 
Lord Civan wears on His splendorous body the big three-ply sacred thread. He smears His body with well-burnt holy ashes. He accommodates His consort Umaa Devi on the left half of His body frame, whose fingers sport with goodly ball. This Lord Civan is entempled in Thiru-k-kodi-maada-ch-cheng-kunroor, which is girt with thick natural vegetation having a lot of fully blossomed flower trees and plants. Those who worship this Lord Civan (Lord of Dharmic Scholars) enshrined in Thiru-k-kodi-maada- ch-cheng-kundoor will snap all their miseries.

அலைமலி தண்புனலோ டரவஞ்சடைக் கணிந்தாகம் 
மலைம கள்கூறுடை யான்மலையா ளிவாழைக் 
குலைமலி தண்பொழில் சூம்கொடி மாடச்செங்குன் றூர்நின்ற 
தலைமக னைத்தொழு வார்தடுமாற் றறுப்பாரே. 2

அலை மலி தண்புனலோடு அர வம் சடைக்கு அணிந்து, ஆகம் 
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக் 
குலை மலி தண்பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற 
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு, பாம்பினையும் 
சடையின்கண் அணிந்திருப்பவன். தனது திருமேனியில் மலைமகளை ஒரு பாகமாகக் 
கொண்டிருப்பவன். மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை 
உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்துள்ள கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளி
இருப்பவன். இத்தகைய தலைமகனான சிவபெருமானைத் தொழுபவர்கள் தங்கள் 
வாழ்க்கையின் தடுமாற்றத்தைத் தவிர்த்து விடுவர்.

குறிப்புரை: கங்கை, பாம்பு இவற்றைச் சடைக்கணிந்து மலைமகள் கூறுடையனாக 
எழுந்தருளியிருக்கின்ற செங்குன்றூர்த் தலைவனைத் தொழுவார் தடுமாற்றம் தகர்ப்பார் என்கின்றது. 
அரவம் - பாம்பு 
Lord Civan supports the cool river Ganges full of waves, together with a serpent in His matted hair. He accommodates His consorɩ Umaa Devi daughter of the mountain king on the left half of His body. This Lord Civan is enshrined in Thiru-k- kodi-maada-ch-cheng-kundoor girt with groves of tender plantain trees of mountain variety having fully grown bunches. Those who worship Lord Civan, the primal god of this place will do away with their bewilderment.

பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக் கைநல்ல 
ஏலமலர்க் குழலாளொரு பாகமமர்ந் தருளிக் 
கோலமலர்ப் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் 
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 3

பால் அன நீறு புனை திகழ் மார்பில், பல்வளைக்கை நல்ல 
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி, 
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும் 
நீலநல்மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே.

பொருள்: சிவபெருமான் பால்போன்ற வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கும் 
மார்பினன். பலவகை வளையல்களைக் கையில் நல்லமுறையில் அணிந்தும் மணம் கமழும் 
நறுமலர்களைக் கூந்தலில் சூடியும் உள்ள உமையம்மையை ஒரு பாகமாக
அமர்ந்திருக்கும்படி அருளிய கோலத்தையும் உடையவன். தேவர்க்கு நன்மைகள் பல 
செய்த நீகலகண்டன்; அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் 
செங்குன்றூரில் எழுந்தருளி இருப்பவன். இப்பெருமானின் கழலணிந்த திருவடிகளைத்
துதிப்பதே நீதியாகும்.

குறிப்புரை: நீறுபூசிய திருமேனியோடு மலைமகள் ஒருபாகமாக எழுந்தருளிய செங்குன்றூர் நீலகண்டன் 
திருவடியைத் தொழுதலே நீதி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. நீலநன்மாமிடற்றான் - நீலகண்டன். 
நன்மிடறு என்றது தேவர்க்கு நன்மை செய்தலின். 
Lord Civan smears His shining body with holy ashes as white as milk. He accommodates His consort Umaa Devi on the left half of His body. Umaa Devi is good looking, well ornamented and has decked her hair with sweet smelling and fair flowers. With this attractive appearance Lord Civan is enshrined in Thiru-k-kodi-maada-ch- cheng-kundoor girt with groves full of delightful and pretty flowers. Virtuous deed is verily indeed to adore and offer worship at the ankleted holy feet of Lord Civan of this place whose neck is attractive and of dark blue in colour like that of sapphire gem.

வாருறுகொங் கைநல்ல மடவாள்திகழ் மார்பில்நண்ணும் 
காருறுகொன் றையொடுங்கத நாகம்பூண் டருளிச் 
சீருறுமந்த ணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
நீருறுசெஞ் சடையான்கழ லேத்தல்நீதியே. 4

வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும் 
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளிச், 
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற 
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

பொருள்: சிவபெருமான், அழகிய கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மை விளங்கும் 
திருமார்பினன். கார்காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய 
பாம்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளவன். கங்கையை முடியில் கொண்டுள்ள 
செஞ்சடையன். சிறப்புடைய சான்றோர்கள் வாழும் கொடிமாடச் செகங்குன்றூரில் 
எழுந்தருளி இருப்பவன். இப்பெருமானின் கழலணிந்த திருவடிகளைத் துதிப்பதே 
நீதியாகும்.

குறிப்புரை: உமாதேவி விளங்குகின்ற, திருமார்பில் கொன்றை மாலையையும் பாம்பு அணியையும் பூண்டு 
வீற்றிருக்கும் செங்குன்றூர் நாதன் சேவடியைத் துதித்தல் நீதியாம் என்கின்றது. வார் - கச்சு. கதம் - 
கோபம். சீர் - புகழ். 
In the attractive and lovely frame of Lord Civan, His consort appears conspicuously beautiful, who wears a corset over her breasts. He graciously adorns His chest with garlands made up of cassia flowers which blossom in the rainy season and shine along with a wrathful snake as His jewellery. This Lord Civan is enshrined in Thiru-k-kodi-maada-ch-cheng-kundoor where noble folks live and do dwell in large numbers. He shines by supporting the river Ganges in His matted hair. It will be a virtuous deed indeed to adore and worship the ankleted holy feet of Lord Civan of this place.


பொன் றிகழலாமை யொடுபுரி நூல்திகழ் மார்பில்நல்ல 
பன்றி யின்கொம் பணிந்துபணைத் தோளியோர் பாகமாகக் 
குன்ற னமாளிகை சூழ்கொடி மாடச்செங் குன்றூர்வானில் 
மின்றி கழ்செஞ்சடை யான்கழலேத் தல்மெய்ப் பொருளே. 5

பொன் திகழ் ஆமையொடு, புரி நூல் திகழ் மார்பில், நல்ல 
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆகக், 
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர், வானில் 
மின் திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.

பொருள்: சிவபெருமான் ஆமையின் ஓட்டினோடு முப்புரி நூலையும் தனது மார்பில் 
அணிந்துள்ளான். நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற 
தோள்களை உடைய உமையம்மையை தனது திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு 
விளங்குபவன். வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையை உடையவன்.
குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளி 
இருப்பவன். இப்பெருமானின் கழலணிந்த திருவடிகளைத் துதிப்பதே மெய்ப்பொருளாகும்.

குறிப்புரை: ஆமையோடும் பூணூலும் விளங்கும் மார்பில், பன்றிக் கொம்பையும் அணிந்த மாதொரு 
பாதியனான செங்குன்றூர் நாதன் கழலேத்துதலே மெய்ப்பொருள் என்கின்றது. பொன் திகழ் ஆமை ஓடு 
- திருமகள் விளங்குகின்ற திருமாலாகிய ஆமையின் ஓடு. பணை - மூங்கில்.
Lord Civan adorns His chest with the shell of tortoise. This shell, once upon a time was nothing but Vishnu in his Koorma-avataar. His consort goddess Lakshmi, therefore, dwelled in the shell, which was then glittering like gold. He was also wearing the three-ply sacred thread in His body along with the tusk of a hog. He happily accommodates His consort Umaa Devi on the left half of His body; whose shoulders resemble bamboo stem. This Lord Civan is enshrined in Thiru-k-kodi- maada-ch-cheng-kundoor where all the mansions look like hillocks. His ruddy matted hair shines like the lightning in the sky. It is verily a sound doctrine of divine knowledge and worship to adore the holy feet of Lord Civan of this place.

ஓங்கிய மூவிலைநற் சூலமொரு கையன்சென்னி 
தாங்கிய கங்கையொடு மதியஞ்சடைக் கணிந்து 
கோங்க ணவும்பொழில் சூழ்கொடி மாடச்செங்குன் றூர்வாய்ந்த 
பாங்கன தாள்தொழு வார்வினை யாயபற்றறுமே. 6

ஓங்கிய மூ௫லைநல்சூலம் ஒரு கையன், சென்னி 
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து 
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த 
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

பொருள்: பெருமான், ஆற்றல் மிக்க மூவிலை வடிவமான நல்ல சூலத்தை ஒரு கையில் 
ஏந்தியிருப்பவன். திருமுடியில் கங்கையைத் தாங்கியிருப்பதோடு பிறையையும் அணிந்து 
இருப்பவன். கோங்கு மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கொடிமாடச் 
செங்குன்றூரில் எழுந்தருளி இருப்பவன். பொருந்திய தோழனாக விளங்குபவன். 
இப்பெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் தங்கள் வினைப்பற்றுகளை வேரோடு 
அறுத்துவிடுவர்.

குறிப்புரை: சூலமேந்திய கையனும், கங்கையும் மதியமும் சூடியவனும் ஆகிய செங்குன்றூர் நாதன் தாள் 
தொழுவாரது வினைப்பற்று நீங்கும் என்கின்றது. ஓங்கிய - சிறந்த கோங்கு அணவும் - கோங்கு 
மரங்கள் கலந்த. பாங்கன தாள் - தோழமை பூண்ட இறைவனுடைய தாள்கள். 
Lord Civan holds in one of His hands a very strong and sharp three leaved trident. He bedecks the crescent moon in His matted hair and supports the river Ganges also along with it. This Lord Civan is entempled in Thiru-k-kodi-maada-ch- cheng-kundoor which is girt with natural groves full of Kōngu trees. Those who adore this friendly Civan and worship His holy feet will get rid of their karmic attachment completely from its root.

நீடலர் கொன்றை யொடுநிமிர் புன்சடைதாழ வெள்ளை 
வாடலு டைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் 
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற 
சேடன தாள்தொழு வார்வினை யாயதேயுமே. 7

நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன்சடை தாழ, வெள்ளை. 
வாடல் உடைதலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க், 
கோடல் வளம் புறவில் கொடி மாடச்செங்குன்றூர் நின்ற 
சேடன தாள் தொழுவார் வினைஆய தேயுமே.

பொருள்: சிவபெருமான், கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களைத் தன் 
சடையில் அணிந்துள்ளவன். நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்குமாறு 
விளங்குபவன். வெண்மையான புலால் நீங்க தலையோட்டில் பலி ஏற்று உண்ணும் 
வாழ்க்கையை உடையவன். வெண் காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை 
நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளி இருப்பவன். 
இப்பெரியோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்து ஒழியும்.

குறிப்புரை: கொன்றை மாலையோடு சடைதாழ, உலர்ந்த தலையிற் பலிகொள்ளும் செங்குன்றூர் நாதன் 
தாள் தொழுவாரது வினைதேயும் என்கின்றது. நீடு அலர் கொன்றை - மாலையாக நீண்டு மலர்கின்ற 
கொன்றை. வாடல் - உலர்தல். கோடல் - செங்காந்தள். சேடன் - பெருமை உடையவன்.
Lord Civan bedecks His majestic, ruddy and hanging matted hair with cassia flowers that blossom in long rows, He pursues a mendicant's life holding a dry and white human skull as His begging bowl. This Lord Civan is entempled in Thiru-k-kodi- maada-ch-cheng-kundoor. This city is girt with rich sylvan tracts where thick bushes having fully blossomed white malabar glory lily flowers could be seen in plenty. Those who can reach this place, adore Lord Civan and worship the holy feet of the glorious one, par excellence, will get their karma rubbed away.

மத்தநன் மாமலரும்மதி யும்வளர்கொன் றையுடன்துன்று 
தொத்தலர் செஞ்சடைமேல் துதையவுடன்சூடிக் 
கொத்தலர் தண்பொழில் சூழ்கொடி மாடச்செங்குன் றூர்மேய 
தத்துவனைத் தொழுவார் தடுமாற்ற றுப்பாரே.  8

மத்தநல்மாமலரும் மதியும் வளர் கொன்றைஉடன் துன்று 
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன்சூடிக், 
கொத்துஅலர் தண்பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய 
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான் தமது செஞ்சடைமீது நல்ல ஊமத்தமலரையும் இளமதியையும் 
கொத்தாக மலரும் கொன்றை மலருடன் ஒருசேர நெருங்கச் சூடியிருப்பவன். 
பூங்கொத்துக்கள் மலர்ந்திருக்கும் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்துள்ள கொடிமாடச் 
செங்குன்றூரில் விரும்பி எழுந்தருளி இருப்பவன். இத்தகைய மெய்ப்பொருளான 
பெருமானைத் தொழுபவர்கள் தடுமாற்றங்கள் இல்லாதவர்கள் ஆவர்.

குறிப்புரை: ஊமத்தம் பூவும், பிறையும், கொன்றையும் செஞ்சடை மேற்சூடிய தத்துவனைத் தொழுவார் 
தடுமாற்றம் அறுப்பார் என்கின்றது. துன்று - நெருங்கிய தொத்து - கொத்து. துதைய - செறிய. 
தத்துவன் - மெய்ப்பொருள் ஆனவன். 
Lord Civan bedecks His ruddy matted hair with datura flowers and blossoming cassia flowers. Also He supports the young crescent moon along with these flowers This Lord Civan is enshrined in Thiru-k-kodi-maada-ch-cheng- jointly together. kundoor which is girt with cool groves where bunches of flowers blossom in large quantities. Those who adore and worship this Lord Civan, the Lord of all powers, will have their bewilderment cut short.

செம்பொ னின்மேனி யனாம்பிர மன்றிருமாலுந் தேடநின்ற 
அம்பவ ளத்திரள்போ லொளியாய ஆதிபிரான் 
கொம்ப ணவும்பொழில் சூழ்கொடி மாடச்செங் குன்றூர்மேய 
நம்பன தாள்தொழு வார்வினை யாயநாசமே. 9

செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற 
அம் பவளத்திரள் போல் ஒளிஆய ஆதிபிரான், 
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய 
நம்பன தாள் தொழுவார் வினைஆய நாசமே.

பொருள்: சிவபெருமானார், சிவந்த பொன் நிறமான பிரமனும், திருமாலும் தேடியும் காண 
முடியாதவாறு, பவளத் திரள் போன்ற ஒளி வடிவினனாக ஓங்கி நின்ற ஆதி பிரான் ஆவார். 
கொம்புகளாக நெருங்கி வளர்ந்த மரங்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் 
செங்குன்றூரில் விரும்பி எழுந்தருளி இருப்பவன். கடவுளான இப்பெருமானின் 
திருவடிகளைத் தொழுபவர்கள் தங்களின் வினைகள் யாவையும் நாசம் செய்து விடுவர்.

குறிப்புரை: அயனும் மாலும் தேடச் செம்பவளத் திரள் போல தீவடிவாய ஆதிப் பிரானது தாள் தொழுவார் 
வினைகள் யாவும் நாசமாம் என்கின்றது. கொம்பு அணவும் பொழில் - கொம்புகள் செறிந்த சோலை. 
Brahma with a ruddy and golden hued frame as well as Thirumaal, went in quest of Lord Civan in vain. Lord Civan, the primordial god, then stood as a bright dazzling fire column like a rotund coralline column. This Lord Civan is enshrined in Thiru-k-kodi-maada-ch-cheng-kundoor which is girt with thick groves full of densely grown trees with a good number of branches. Those who adore the supremely desirable Lord Civan's holy feet, will get their karma perish totally.

போதியர் பிண்டியரென் றிவர்கள்புறங் கூறும்பொய்ந்நூல் 
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர்வரிக் குயில்கள் 
கோதிய தண்பொழில் சூழ்கொடி மாடச்செங் குன்றூர்நின்ற 
வேதிய னைத்தொழ நும்வினை யானவீடுமே. 10

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் 
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள் 
கோதிய தண்பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற 
வேதியனைத் தொழ, நும் வினைஆன வீடுமே.

பொருள்: போதி மரத்தை வழிபடுவதாகக் கூறி போலி புத்தத் துறவிகள் திரிகின்றனர். 
அசோக மரத்தை வழிபடுவதாகக் கூறி வெளி வேஷக்காரர்களாகச் சமணத் துறவிகள் 
திரிகின்றனர். அவர்கள் உண்மைக்கு மாறான நூல்களில் இருந்து மேற்கோள்களைக் 
கூறுகின்றனர். அவைகளை உண்மை என்று நம்பி ஏமாந்து உழல்பவர்கனளே! இசைபாடும் 
குயில்கள் மகிழ்ச்சியுடன் வாழும் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் 
சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். வேதங்களை அருளிய இப்பெருமானைத் 
தொழுங்கள்! உங்கள் வினைகள் யாவும் அழிந்துவிடும்.

குறிப்புரை: புத்தர் சமணர் இவர்களுடைய புறவுரை கேட்டு உழலுகின்ற மக்களே! செங்குன்றூர் 
வேதியனைத் தொழ உங்கள் வினையாயின அழியும் என்கின்றது. 
Oh! Ye devotees! You confuse yourselves by considering the false and slanderous words of Buddhists who worship the peepul tree and those of Samanars who worship the Ashoka tree. Lord Civan is enshrined in Thiru-k-kodi-maada-ch-cheng-kundoor. This city is surrounded by cool groves where the Indian cuckoos eat tender shoots and sing musical notes. The trees with such tender leaves expose a very attractive appearance. You go to this city and offer your worship to Lord Civan who has authored the Vedas. Your karma will disappear.
அலைமலி தண்புனல் சூழ்ந்தழகார் புகலிந்நகர் பேணும் 
தலைமகனா கிநின்றதமிழ் ஞானசம்பந்தன் 
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூரேத்தும் 
நலமலிபாடல் வல்லார்வினை யானநாசமே. 11

அலை மலி தண்புனல் சூழ்ந்து அழகுஆர் புகலி(ந்)நகர் பேணும் 
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் 
கொலை மலி மூஇலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் 
நலமலி பாடல் வல்லார் வினைஆன நாசமே.

பொருள்: அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட நகர், புகலி என்னும் அழகிய 
சீகாழியாகும். இந்நகரை விரும்பும் தலைமகனாக நிற்பவர் தமிழ் ஞானசம்பந்தன் ஆகும். 
கொல்லும் தொழிலில் வல்ல மூவிலைச் சூலத்தை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியுள்ள 
கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடினார். இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாட 
வல்லவர்களின் வினைகள் யாவும் நாசமாகிவிடும்.

குறிப்புரை: ஞானசம்பந்தப் பெருமான் செங்குன்றூர் நாதரை ஏத்திய நலமிகுந்த பாடல் வல்லார். 
வினைகள் நாசமாம் எனப் பயன் கூறுகின்றது. புகலி - சீகாழி. கொலைமலி மூவிலையான் - 
கொலைபுரியும் முத்தலைச் சூலம் ஏந்தியவன் (மூவிலைச்சூலம்). 
Gnaanasambandan who is the prince of Pukali is an adept in Tamil language. With reverence he is fostered at Pukali which is girt with cool and billowy waters. He hailed Lord Civan of Thiru-k-kodi-maada-ch-cheng-kundoor and sang these good Tamil songs which will confer happiness on to the singer and the hearer. This Lord Civan wields a formidable three leaved trident. The karma of those who are well versed in these hymns will perish for sure.
திருச்சிற்றம்பலம்

107ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
108. திருப்பாதாளீச்சரம்

திருத்தல வரலாறு:

திருப்பாதாளீச்சரம் என்ற திருத்தலம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் 
ஒன்றாகும். மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. பாமணி, பாம்பணி என வழங்கப்படுகிறது. 
சர்ப்பபுரம் எனவும் பெயர் உண்டு. தனஞ்சயன் என்னும் பாம்பு பூசித்து பேறு பெற்ற தலம். 
அம்முனிவருடைய திருவுருவம் கோயிலில் உள்ளது. இறைவன் பெயர் நாகநாதர், சர்ப்பபுரீசுவரர். 
இறைவியின் பெயர் அமிர்த நாயகி. தீர்த்தம் நாகதீர்த்தம்.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியதாக 6 கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தலத்து இறைவன் 
திருப்பாதாளீச்சரம் உடையார். செல்வத் திருவாரூர் வாகீசப் பெருமான் வடகீழ்மடத்து முதலியார் 
பிள்ளையின் நிலங்கள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இதில் ஆலால சுந்தரர் திருமடமும் 
குறிக்கப்படுகின்றது. இத்தலம் கற்றவேலி வளநாட்டுப் பாம்பணி கூற்றத்துப் பாமணி என 
இராஜராஜன் காலத்து அழைக்கப்படுகின்றது. இவையன்றி ஸ்ர்பூதிவிண்ணகர ஆழ்வார்க்கு
விளக்கிற்காகவும், வழிபட வருவார்க்கு உணவிற்காகவும் பொன்னும் ஆடுகளும் வழங்கப் 
பெற்றன.

பதிக வரலாறு:

பிள்ளையார் பொன்னி வளந்தரு நாடாகிய சோழ நாட்டில் திருக்களரை வழிபட்டு, 
பாதாளீச்சரத்தை அடைந்து, கண்டங் கறையணிந்தார் கழலைப் போற்றினார். ‘மின்னியல் 
செஞ்சடைமேல்’ என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். 
108. THIRU-P-PAATHAALEE-CH-CHARAM

HISTORY OF THE PLACE

This sacred place, near Mannaarkudi, is to the south of river Cauvery in Chola Naadu. It has other names such as Paamani, Paambani, and Sarppapuram.
The names of the Lord are Naaganaathar and Sarppapureesuvarar and those of the Goddess, Amirthanaayaki. The sacred ford is Naaga Theerththam.

A serpent sage named Dhananjchayan offered worship here and attained salvation. The sage's image is installed in the temple.

INTRODUCTION TO THE HYMN

Having adored Civa at Thiru-k-kalar, our saint arrived at Thiru-p-paathaalee-ch- charam and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

108. திருப்பாதாளீச்சரம் 
பண் - வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல 
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப்பொற் பமரும் 
அன்னமன நடையாளொரு பாகத்தமர்ந் தருளிநாளும் 
பன்னியபாட லினானுறை கோயில் பாதாளே. 1

மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல 
பொன் இயல் கொன்றையினான்; புனல்சூடிப்; பொற்பு அமரும் 
- அன்னம் அன நடையாள் ஒருபாகத்து அமர்ந்து அருளி, நாளும் 
- புன்னிய பாடலினான்; உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான் தனது மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் 
பிறைமதியையும் ஊமத்தம் மலர் மற்றும் பொன் போன்ற நிறமுடைய கொன்றை மலரையும்
அணிந்திருப்பவன். கங்கை நதியைச் சூடியிருப்பவன். அழகுடைய அன்னத்தைப் போன்ற
நடையை உடைய உமையம்மையை தனது உடம்பில் ஒரு பாகத்தில் அமர்ந்திருக்க 
அருளியவன். நாள்தோறும் வேத தீதங்களைப் பாடியவனாய் இப்பெருமான் 
உறைந்திருக்கும் கோயில் திருப்பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: இப்பதிகம் முழுவதும் செஞ்சடை மேல், பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றை அணிந்தவனும் 
கங்கை அணிந்து உமையை ஒருபாகத்தில் இருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறைகோயில் 
திருப்பாதாளீச்சரம் என்கின்றது. ஒவ்வொரு பாடலிலும் தலத்தின் திருப்பெயருக்கு ஏற்பப் பாம்பணிந்தமை 
பேசப்படுதல் காண்க. விளங்கும் மதி - இறைவன் திருமுடிமேல் இருத்தலின் விளக்கம் பெற்ற பிறை. 
‘அன்னம் அனநடையாள்’ அன்ன என்பது அன எனல் தொகுத்தல் விகாரம். 
Lord Civan supports the crescent moon in His matted hair which dazzles like lightning. He wears datura flowers as well as the golden coloured cassia flowers in His head. He also accommodates the river Ganges in His head along with the above. His consort Umaa Devi who walks as majestically as the swan conspicuously shines in the left half of His body. Singing the Vedas daily, He stays enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

நீடலர் கொன்றையொடு நிரம்பாமதி சூடிவெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான்சுடு நீற்றான் 
ஆடரவம் பெருகஅன லேந்திக்கைவீசி வேதம் 
பாடலி னாலினியானு றைகோயில் பாதாளே.  2

நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்  
தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடுநீற்றான்;. 
ஆடுஅரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம் 
பாடலினால் இனியான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான் தனது திருமுடியில் கொத்தாக நீண்டு மலர்ந்துள்ள கொன்றை 
மலர்களோடு பிறைமதியையும் சூடி இருப்பவன். ஒரு-காதில்  வெண்மையான தோட்டையும், 
மறுகாதில் நல்ல குழையையும் அணிந்திருப்பவனாக விளங்குபவன். சுடப்பட்ட திருநீற்றைப் 
பூசியிருப்பவன், ஆடும் பாம்பை அணிகலனாக அணிந்து அனல் ஏந்திய கையை வீசிக் 
கொண்டு இருப்பவனாக விளங்குபவன். வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் 
விளங்கும் இப்பெருமான் உறைந்திருக்கும் கோயில் பாதாளீச்சரம் ஆகும். 

குறிப்புரை: நிரம்பா மதி - குறைப் பிறை. வெள்ளைத்தோடு - முத்துத் தோடு. குழை - காதணியாகிய 
குண்டலம். 
Lord Civan wears fully blossomed long and fascinating cassia flowers in His matted hair. He supports the crescent moon in His head. He shines majestically by wearing an ola roll in His left ear and a round ear ring in His right ear. He puts on His body, the dancing snake as His ornament which conspicuously shines forth. He swings one of His hands in which he holds fire and sweetly sings the Vedic hymns. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடை யான்சாமம் 
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித் துகந்தான் 
தோகை நன்மாமயில் போல்வளர்சாயல் தூமொழியைக் கூடப் 
பாகமும் வைத்துகந்தானு றைகோயில் பாதாளே. 3

நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம் 
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான், 
தோகை நல்மாமயில் போல் வளர் சாயல் - தூமொழியைக் கூடப் 
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான் நாகப்பாம்பையும், வானில் விளங்கும் மதியையும் தனது அழகுமிக்க 
செஞ்சடையில் சூடியிருப்பவன். உரிய காலம் கழிந்தவுடன் நல்ல மேருமலையின் 
வில்லினால் முப்புரங்களை எரித்து மகிழ்ந்தவன். நல்ல ஆண் மயில்மீது வளர்கின்ற அழகிய 
தோகையைப் போன்ற மென்மையும், தூய மொழி பேசும் உமையம்மையை தன்னோடு 
உடனாக இடப்பாகத்தில் வைத்து மகழ்ந்திருப்பவன். இந்தச் சிவபெருமான் உறையும்
கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: வான்மதி - வானிலுள்ள பிறை. சாமம் போக - உரிய காலங்கழிய. தோகை மா மயில் - 
ஆண் மயில். 
Lord Civan holds a serpent and the crescent moon which shines in the sky in His good looking ruddy matted hair. After waiting for some time till the arrival of the ordained hour, He by using the strong mountain Meru as His bow burnt down the three citadels of the Asuraas. He happily concorporates His consort Umaa Devi on the left half of His body, who appears as beautiful as the good looking male pea fowl which has a crested head and a large fan shaped attractive plumage. She always speaks pure divine words. This Lord Civan, gracefully is enshrined in Thiru-p-paathaalee-ch- charam.

அங்கமு நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் 
மங்கை யோர்கூறு டையான்மறை யோனுறை கோயில் 
செங்க யல்நின்றுகளுஞ் செறுவில்திகழ் கின்றசோதிப் 
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 4

அங்கமும் நால்மறையும் அருள் செய்து, அழகு ஆர்ந்த அம் சொல் 
மங்கை ஓர் கூறு உடையான், மறையோன் உறை கோயில் - 
செங்கயல் நின்று உகளும் செறுவில் - திகழ்கின்ற சோதிப் 
பங்கயம் நின்ற அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.

பொருள்: சிவபெருமான் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் 
செய்தவன். அழகிய இனிய சொற்களைப் பேசும் உமையம்மையை ஒரு பாகமாக 
உடையவன். வேதங்களைப் பாடி மகிழ்பவனுமாகிய பெருமான் உறையும் கோயிலானது 
செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால் தாமரை மலர்கள் மலருகின்ற 
வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: செங்கயல்மீன்கள் புரளும் வயலில் தாமரை மலரும் பாதாளம் என்கின்றது. செறு - வயல். 
Lord Civan authored the four Vedas and the six subsidiaries (Angaas). He happily accommodates on the left half of His body, His consort, whose speech is divinely foremost. He enjoys singing the Vedas. This Lord Civan is entempled in Thiru-p-paathaalee-ch-charam, where the red carp fishes roll in large numbers in the fields creating brightness, by which the lotus flowers blossom.


பேய்பலவுந் நிலவப்பெருங் காடரங்காக வுன்னிநின்று 
தீயொடு மான்மறியும் மழுவுந்தி கழ்வித்துத் 
தேய்பிறை யும்மரவும் பொலிகொன் றைச்சடைதன் மேற்சேரப் 
பாய்புன லும்முடையா னுறைகோயில் பாதாளே. 5

பேய்பலவும் நிலவப் பெருங்காடு அரங்குஆக உன்னி நின்று, 
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத், 
தேய்பிறையும்(ம்) அரவும் பொலி கொன்றைச் சடைதன்மேல் சேரப், 
பாய்புனலும்(ம்) உடையான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான், பலவிதமான பேய்கள் நிறைந்துள்ள பெரிய சுடுகாட்டைத் தனது 
நாடக மேடையாக எண்ணி நடனமாடுபவன். கைகளில் தீயையும், மான் மற்றும் மழுவையும் 
வைத்திருப்பவனாக விளங்குபவன். தன் சடைமேல் தேய்ந்த பிறையும், பாம்பும், 
செழிப்புள்ள கொன்றை மலர்களோடு பாய்ந்துவரும் கங்கையையும் உடையவன். 
இச்சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: பேய்கள் உடன்விளங்க, இடுகாட்டை நாடகமேடையாக எண்ணி, மான், மழு முதலியன 
தாங்கி ஆடும் பெருமான் உறைவிடம் பாதாளீச்சரம் என்கின்றது. உன்னி நின்று, திகழ்வித்து, சேர 
உடையான் உறைகோயில் பாதாள் எனக்கூட்டுக. 
Lord Civan looks upon the crematory as His theatre and dances surrounded by several ghouls. He holds fire, the young deer and the battle-axe in His hands. He keeps the snake and the waning crescent moon and cassia flowers in His matted hair, where the gushing river Ganges also flows. With all these, Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மேல் நின்றும் 
விண்ணி யல்மாமதியும் முடன்வைத் தவன்விரும்பும் 
ண்ண மர்மேனியினான் பெருங்காடரங் காகஆடும் 
பண்ணியல் பாடலினா னுறைகோயில் பாதாளே. 6

கண் அமர் நெற்றியினான், கமழ்கொன்றைச் சடைதன்மேல் நின்றும் 
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும் 
பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்குஆக ஆடும் 
பண் இயல் பாடலினான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான் மூன்றாவது ஒரு கண் பொருந்திய நெற்றியை உடையவன். 
சடைமுடிமீது மணம் கமழும் கொன்றை மலரோடு, விண்ணில் உலாவும் சிறந்த 
பிறைமதியையும் உடனாக வைத்திருப்பவன். தன்னால் விரும்பப் பெற்ற உமையம்மை 
பொருந்திய திருமேனியன். பெரிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டவன். பண் 
இசையோடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறைந்திருக்கும் கோயில்
பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: கண்ணமர்நெற்றி - கண்ணோடு விளங்குகின்ற நெற்றியை உடையவன். நன்று விண் இயல் 
மாமதி - நன்றாக விண்ணில் இயங்குகின்ற பெரிய பிறைச்சந்திரன். 
Lord Civan has a third eye in His forehead. He wears the fragrant smelling cassia flowers in His matted hair, where He supports the crescent moon also which crawls in the sky gracefully. He joyfully incorporates on the left half of His attractive body, His consort whom He adores very much. He considers the crematory as His theatre and dances singing songs to coordinate with the harmonious musical mode of the ghols. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ் 
வண்டலர் கொன்றைநகு மதிபுல்குவார் சடையான் 
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை வேதநான் கும்மவை 
பண்டிசை பாடலினா னுறைகோயில் பாதாளே. 7

விண்டு அலர் மத்தமொடு மிளிரும்(ம்) இள நாகம், வன்னி, திகழ் 
வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்; 
விண்டவர்தம் புரம்மூன்று எரிசெய்து உரை வேதம் நான்கும்(ம்) அவை 
பண்டு இசைபாடலினான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: சிவபெருமான் தனது நீண்ட சடையில் தளை அவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, 
புரண்டு கொண்டிருக்கும் இள நாகம், வன்னி இலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் 
கொன்றை, பிறைமதி ஆகியவை பொருந்தியிருப்பவனாக விளங்குபவன். பகைவரான 
அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவன். நான்கு வேதங்களையும் உரைத்தவன்.
அவற்றைப் பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறைந்திருக்கும் 
கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: விண்டு - முறுக்கவிழ்ந்து. வன்னி - வன்னியிலை. நகும் - மலரும். விண்டவர் - பகைவர். 
Lord Civan keeps the young dazzling snake which rolls over the well blossomed datura flowers that adorn in His long matted hair. He wears therein the leaves of Indian mesquit trees also and the cassia flowers blooming bees. He supports the crescent moon also in His hair. He burnt into ashes the three citadels of the haughty Asuraas. He not only professed the four Vedas, but also feels happy in singing them according to the ancient harmonious mode. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

மல்கியநுண் ணிடையாளு மைநங்கைம றுகஅன்று கையால் 
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான் 
கொல்லை விடையுகந் தான்குளிர் திங்கள்சடைக் கணிந்தோன் 
பல்லிசை பாடலினா னுறைகோயில் பாதாளே. 8

மல்கிய நுண் இடையாள் உமைநங்கை மறுக, அன்று, கையால்- 
தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்; 
கொல்லை விடை உகந்தான்; குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்; 
பல்இசை பாடலினான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: நெருங்கியதும் நுண்மையானதுமான இடையினை உடைய உமையம்மை 
அஞ்சும்படி, பழமையான கயிலை மலையை முன்னொரு காலத்தில் இராவணன் பெயர்க்க 
முயற்சித்தான். அப்போது, சிவபெருமான் அவனுடைய தலைகளையும் தோள்களையும் 
நெரித்தவர். இவர் முல்லை நிலத்து தெய்வமான திருமாலாகிய இடபத்தை விரும்புபவர்.
குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்திருப்பவர். பல்வகையான இசைப்பாடல்களைப் 
பாடுபவனுமாகிய இச்சிவபெருமான் உறைந்திருக்கும் கோயில் திருப்பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: இராவணன் தோள் நெரித்தது; இறைவற்கு எழுந்த சீற்றம் காரணம் அன்று; உமாதேவி 
நடுங்க, அந்நடுக்கந்தீரவே விரலூன்றி மலையை நிலைக்கச் செய்தார். அது, இராவணற்கு 
இன்னலாயிற்று என்ற கருத்து ஓர்க. கொல்லை விடை - முல்லை நிலத்து இடபம். 
King Raavanan tried by his hand to lift the ancient mount Kailash and keep it aside. The mountain, the abode of Lord Civan started shaking. Umaa Devi, who has a compact but slender waist felt fear at the shaking of her mountain. To alleviate her fear Lord Civan pressed the mountain by His toe. Lo! Raavanaa's ten heads and twenty shoulders got crushed under the mountain. Lord Civan was once happy to take as his vehicle, Thirumaal, god of woodland areas who took the form of a bull and volunteered to transport Him. He supports the cool crescent moon in His head. He likes to sing different kinds of musical notes in their respective harmonious modes. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam.

தாமரை மேலயனும் மரியுந்தமதாள் வினையால்தேடிக் 
காமனை வீடுவித்தான் கழல்காண் பிலாராயகன்றார் 
பூமருவுங் குழலாளுமை நங்கைபொருந் தியிட்டநல்ல 
பாமருவுங் குணத்தா னுறைகோயில் பாதாளே. 9

தாமரை மேல் அயனும்(ம்) அரியும் தமது ஆள்வினையால்-தேடிக், 
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலாராய் அகன்றார்; 
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல 
பா மருவும் குணத்தான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: மன்மதனை எரித்த சிவபெருமானின் திருவடிகளைத் தமது முயற்சியால் தேடியும் 
காண இயலாதவர்களைத் தாமரை மலர்மேல் உறையும் அயனும் திருமாலும் அகன்று 
விட்டனர். இப்பெருமான் மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமை நங்கையை தனது 
உடலில் ஒரு பாகமாகப் பொருந்தி இருப்பவர். வேதப் பாடல்களைப் பாடும் நல்ல 
குணத்தினனும் ஆகிய இப்பெருமான் உறைந்திருக்கும் கோயில் திருப்பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: ஆள்வினையால் - முயற்சியால். செயலற்ற தன்மையில் சிந்திக்க வேண்டிய சிவத்தைச் 
செய்வினையாற் காணமுற்பட்ட அறிவீனத்தை விளக்கியவாறு. காமனை வீடுவித்தான் கழல் - காமனை 
எரித்த பெருமான் திருவடி. காமனும் தருக்கி வருவானாயினும் அவன் காண இருந்தமையும் அயனும் 
மாலும் காணாதிருந்தமைக்கும் ஏது ஒன்று உண்டு. இவர்கள் தாம் பெரியர் என்னுந் தருக்கால் முனைத்து 
வந்தவர்கள். காமன் தேவ காரியம் என்றும், இந்திரன் சாபத்தால் இறப்பதைக் காட்டிலும், சிவன் 
கோபத்தால் இறப்பதுமேல் என்றும் வந்தவன்; ஆதலால் இவனுக்குக் கட்புலனானார் என்பது 
சிந்தனைக்குரியது. 
Brahma who is seated in the Lotus flower as well Thirumaal - both had egoistic feelings that they are superior to each other, and also to Lord Civan. With this feeling they personally exerted themselves hard to reach and have darshan of the divine face of Lord Civan and His holy feet. They both failed in their attempt to reach the holy feet and head of Lord Civan who once upon a time burnt Kaaman, the god of love for his misdeed. Lord Civan accommodates His consort Umaa Devi on the left half of His body, His consort who wears fresh and fragrant flowers in her head. Lord Civan (the most virtuous one) loves and sings Vedic hymns. This Lord Civan is enshrined at the temple in Thiru-p-paathaalee-ch-charam (It is implied that those who reach this temple with sincere devotion could have darshan of His holy feet).

காலை யிலுண்பவருஞ் சமண்கை யருங்கட்டு ரைவிட்டன் 
றாலவிட நுகரந்தான வன்றன்னடி யேபரவி 
மாலை யில்வண்டி னங்கள்மது வுண்டிசை முரலவாய்த்த 
பாலை யாழ்ப்பாட் டுகந்தானுறை கோயில் பாதாளே. 10

காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று 
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி, 
மாலையில் வண்டுஇனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த 
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் - பாதாளே.

பொருள்: காலையில் சோறுண்ணும் புத்தர்களும் சமணர்களும் கூறும் பொய்யுரைகளைக் 
கேட்காதீர்கள். ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்த சிவபெருமானின் திருவடிகளைப் 
போற்றுங்கள். மாலைக் காலத்தில் வண்டினங்கள் தேனை உண்டு இசை பாடுகின்றன. 
இந்த இசையானது பாலைப் பண்ணில் பாடும் யாழ் இசை போல் ஒலிக்கின்றன. இந்த 
இசையில் மகிழ்ந்திருப்பவனுமான இப்பெருமான் உறைந்திருக்கும் கோயில் 
திருப்பாதாளீச்சரம் ஆகும்.

குறிப்புரை: பாலை யாழ்ப் பாட்டு உகந்தான் - பாலைப் பண்ணில் விருப்புடையான்.
Oh! Ye devotees! Ignore the tidings which appear as true, but are really utterly false messages, tidings, put out by the Buddhists (who eat in the morning hours) and by the base Samanars. Adore the holy feet of Lord Civan who saved the celestials by positioning the poison that came out of the sea known as 'Aala Kaala' poison in His throat. He enjoys hearing the divine music sung in the lute in the particular mode called 'Paalai-p-pann'. This music correlates with the humming sound of the bees that buz around after they suck the honey from the flowers during the evening hours. This Lord Civan is enshrined at the temple of Thiru-p- paathaalee-ch-charam.

பன்மலர் வைகுபொழில் புடை சூழ்ந்த பாதாளைச்சேரப் 
பொன்னி யன்மாடமல்கு புகலிந்நகர் மன்னன் 
தன்னொ ளிமிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன 
இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே. 11

பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேரப், 
பொன்இயல் மாடம் மல்கு புகலி(ந்) நகர் மன்னன் - 
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் - சொன்ன 
இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

பொருள்: பொன்னால் இயன்ற மாடவீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தனது புகழ் 
உலகு எங்கும் பரவி உயர்ந்து விளங்கும் புதல்வனுமாகியவன் தமிழ் ஞானசம்பந்தன். 
பலவகையான மலர்கள் பூத்துள்ள பொழில்களால் சூழப்பட்ட திருப்பாதாளீச்சரத்தை நாம் 
சென்று தரிசிக்குமாறு இவர் இப்பதிகத்தைப் பாடினார். இன்னிசையோடு கூடிய இப்பதிகப் 
பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் வாணுலகத்தின்கண் இருப்பார்கள்.

குறிப்புரை: இப்பதிகம் வல்லார் தேவராய் வானத்திருப்பார் என்கின்றது. 
Gnaanasambandan is the king of Pukali where mansions built out of gold are in plenty. He is well versed in the classical Tamil language and his fame pervades the whole world. He sang this hymn full of sweet music on Lord Civan of Thiru-p- paathaalee-ch-charam, which is girt with groves full of different kinds of flowers. Those who are well versed in these sweet hymns will eventually abide in the celestial world. Ye! Devotees, go over to this place and offer worship to Lord Civan enshrined here.
திருச்சிற்றம்பலம்

108ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
109. திருச்சிரபுரம்

திருத்தல வரலாறு:

முதல் திருப்பதிகம் காண்க. 
109. THIRU-CH-CHIRA-PURAM

HISTORY OF THE PLACE

See First Hymn.


திருச்சிற்றம்பலம்

109. திருச்சிரபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

வாரு றுவனமுலை மங்கை பங்கன் 
நீருறு சடைமுடிநிம லனிடங் 
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார் 
சீருறு வளவயற் சிரபுரமே. 1

வார் உறு வனமுலை மங்கை பங்கன், 
நீர் உறு சடைமுடி நிமலன், இடம் - 
கார் உறு கடிபொழில் சூழ்ந்து அழகு ஆர் 
சீர் உறு வளவயல் சிரபுரமே.

பொருள்: சிவபெருமான் கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு 
பாகம் கொண்டவர் ஆவார். கங்கை நதியைச் சடைமுடியில் அணிந்திருக்கும் நிமலர். 
இப்பெருமான் விரும்பி உறையும் இடமானது, மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் 
கமழும் பொழில் சூழ்ந்துள்ளதும், அழகிய சிறப்புள்ளதும், வளமையான வயல்வெளிகளை 
உடையதுமான சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: இப்பதிகம் பெரிய நாயகியுடன் எழுந்தருளி இருக்கும் பெருமான் நகரம் சிரபுரமாகிய சீகாழி 
என்கின்றது. வார் - கச்சு. 
The pure Supreme Being Lord Civan holds His consort of fair chest, in the part of His body. He accommodates the river Ganges in His matted hair. His consort Umaa Devi wears a corset over her attractive big breasts. This Lord Civan (free of all blemish) loves to reside in Thiru-ch-chira-puram. This city is surrounded by groves full of tall trees reaching the sky. Fragrance encircles this place. The clouds glide over these tall trees. Also beautiful lush and rich fields could be seen all around the groves.

அங்க மொடருமறை யருள்புரிந்தான் 
திங்க ளொடரவணி திகழ்முடியன் 
மங்கை யொடினிதுறை வளநகரஞ் 
செங்க யல்மிளிர்வயற் சிரபுரமே. 2

அங்கமொடு அருமறை அருள்புரிந்தான், 
திங்களொடு அரவு அணி திகழ் முடியன், 
மங்கையொடு இனிது உறை வள நகரம் - 
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

பொருள்: சிவபெருமான், ஆறு அங்கங்களோடு கூடிய அரிய வேதங்கள் நான்கையும் 
அருளிச் செய்தவர். திங்கள், பாம்பு ஆகியவற்றைத் திருமுடியில் அணிந்தவராக 
விளங்குபவர். இப்பெருமான் உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவராக விளங்கும் 
நகரமானது, செங்கயல் மீன்கள் துள்ளி விளையாடும் வயல்களைச் சூழ்ந்துள்ள சிரபுரம் 
ஆகும். 
குறிப்புரை: அருமறை - எக்காலத்தும் உணரும் அருமைப் பாட்டினை உடைய வேதம். 
Lord Civan composed the four Vedas and the six subsidiaries (Angaas). He wears a crescent moon on His bright matted hair allowing a serpent also to remain near by. This Lord Civan happily resides in this affluent city Thiru-ch-chira-puram along with His consort Umaa Devi. This city is surrounded by fields in which several red carp fish jump here and there and play.


பரிந்த வன்பன்முடி யமரர்க்காகித் 
திரிந்த வர்புரமவை தீயின்வேவ 
வரிந்த வெஞ்சிலை பிடித்தடுசரத்தைத் 
தெரிந்த வன்வளநகர் சிரபுரமே. 3

பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித் 
திரிந்தவர் புரம்அவை தீயின் வேவ 
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத் 
தெரிந்தவன், வள நகர் - சிரபுரமே.

பொருள்: சிவபெருமான், பலவகையான கிரீடங்களை அணிந்த வானோர்களிடம் மிக்க 
பரிவுடையவர். வானவெளியில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களும் தீயில் வெந்து 
போகுமாறு, வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்து, கொல்லும் அம்பினை ஆராய்ந்து 
தொடுத்தவர். இப்பெருமான் உறையும் நகரமானது வளமான சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: பரிந்தவன் - அன்பு கூர்ந்தவன். வரிந்த - கட்டிய. அடுசரத்தை - கொல்லும் பாணத்தை. 
தெரிந்தவன் - ஆராய்ந்தவன். 
Lord Civan has great compassion for the Devaas who wear several sorts of crowns. By holding the dreadful and well-tightened bow, Lord Civan selected and exercised the killing arrows after scrutiny, and burnt down the three citadels of the hostile Asuraas wandering in the sky. This Lord's place is the fertile Thiru-ch-chira- puram.

நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையின னணியிழையோர் 
கூறணி ந்தினிதுறை குளிர்நகரஞ் 
சேறணி வளவயற் சிரபுரமே. 4

நீறு அணி மேனியன், நீள் மதியோடு 
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர் - 
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் - 
சேறு அணி வள வயல், சிரபுரமே.

பொருள்: சிவபெருமான், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். வளைவாக நீண்ட 
பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினர். அழகிய அணிகலன்களை ஆபரணமாக 
அணிந்த உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர், இப்பெருமான் இனிதாக உறையும் 
குளிர்ச்சியான நகரமானது, சேற்று மண்ணால் வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்

குறிப்புரை: அணியிழை - அணிந்த இழையினை உடையாளாகிய உமை. 
Lord Civan has smeared holy ashes on His holy body. He is bedecked with an elongated curved crescent moon on His matted hair along with the river Ganges near by. He accommodates His consort Umaa Devi wearing beautiful ornaments in one side of His body. He pleasantly resides in the cool town of Thiru-ch-chira-puram which is surrounded by fertile fields of rich soil.

அருந்திறல வுணா்கள ரணழியச் 
சரந்துர ந்தெரிசெய்த சங்கரனூர் 
குருந் தொடுகொடி விடுமாதவிகள் 
திருந் தியபுறவணி சிரபுரமே.

அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் 
சரம் துரந்து எரிசெய்த சங்கரன் ஊர் - 
குருந்தொடு கொடிவிடு மாதவிகள் 
திருந்திய புறவு அணி சிரபுரமே.

பொருள்: வெல்லுவதற்கு அரிய வலிமையை உடைய அசுரர்களின் முப்புரங்களும் 
அழியுமாறு தனது கணையைத் தொடுத்து எரித்த சங்கரனான சிவபெருமானுடைய ஊர் 
சிரபுரம் ஆகும். இது, குருந்த மரத்தில் கொடிகளாகப் படரும் மாதவி என்னும் குருக்கத்தி 
செடிகள் நிறைந்த அழகிய புதர்களால் சூழப்பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

குறிப்புரை: அருந்திறல் - பிறரால் வெல்லுதற்கு அரிய வலிமை. சரம் துரந்து - அம்பைச் செலுத்தி. 
சங்கரன் - சுகத்தைச் செய்பவன். குருந்து - குருந்தமரம். மாதவி - குருக்கத்தி. புறவு - காடு. 
Lord Civan who is also known as Sankaran destroyed the three fortresses of the Asuraas, who had rare valour; He reduced the citadels to ashes by using His arrows. He is entempled in Thiru-ch-chira-puram which is surrounded by thick elegant bushes of Maadhavi alias Kurukkathi - common delight of the woods (Hiptage madabloia) which spreads as creepers over the wild lime trees.

கலைய வன்மறைய வன்காற்றொடுதீ 
மலைய வன்விண்ணொடு மண்ணுமவன் 
கொலைய வன்கொடிமதில் கூட்டழித்த 
சிலைய வன்வளநகர் சிரபுரமே. 6

கலை அவன், மறை அவன், காற்றொடு தீ 
மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன், 
கொலைய வன் கொடிமதில் கூட்டுஅழித்த 
சிலை அவன், வளநகர் - சிரபுரமே.

பொருள்: சிவபெருமான் கலைகளாக விளங்குபவர். வேதங்களை அருளியவர். காற்று, தீ, 
மலை, விண், மண் ஆகியவற்றில் ஊடுருவி இருப்பவர். கொடிகள் கட்டப்பட்ட அசுரர்களின் 
முப்புரங்களை மதில்களோடு கூட்டாக அழிக்க, மேரு மலையை வில்லாக ஏந்திய, 
கொலையாளன். இப்பெருமான் உறையும் வளமான நகர் சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: கலையவன் - கல்வியினால் எய்தும் பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த 
கொலையவன் எனக் கூட்டுக. 
Lord Civan is an embodiment of spiritual wisdom. He is the author of the Vedas. He is wind, fire and mountain. He is heaven and also earth. He is the killer bowman who destroyed simultaneously the three citadels along with their walls where flags were flying, by holding the Meru mountain in His hand using it as His bow. His place is the affluent Thiru-ch-chira-puram.


வானமர் மதியொடு மத்தஞ்சூடித் 
தானவர் புரமெய்த சைவனிடங் 
கானமா மடமயில் பெடைபயிலுந் 
தேனமர் பொழிலணி சிரபுரமே.

வான் அமர் மதியொடு மத்தம் சூடித் 
தானவர் புரம் எய்த சைவன் இடம் - 
கான் அமர் மடமயில் பெடை பயிலும் 
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

பொருள்: சிவபெருமான் வானத்தில் உலவும் பிறைமதியோடு ஊமத்தம் மலரையும் தனது 
முடியில் சூடியிருப்பவர். அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்த, சிவன் இவர் ஆவார். 
இப்பெருமான் உறையும் இடமானது, காடுகளில் வாழும் ஆண் மயில்கள் பெண் 
மயில்களோடு கூடி மகிழும் இனிமையும், அழகும் உடைய பொழில்கள் நிறைந்த சிரபுரம் 
ஆகும்.

குறிப்புரை: தானவர் - அசுரர். கான் - காடு. 
Lord Civan wears the crescent moon, on His matter hair which apparently glides in the sky, along with datura flowers. He destroyed the three citadels of the Asuraas. His place is the affluent city Thiru-ch-chira-puram where the young peacocks living in forests join the peahens and play happily. This town is filled with all pleasant groves.

மறுத்த வர்திரிபுர மாய்ந்தழியக் 
கறுத்த வன்காரரக் கன்முடிதோள் 
இறுத்த வனிருஞ்சினக் காலனைமுன் 
செறுத்த வன்வளநகர் சிரபுரமே. 8

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக் 
கறுத்தவன், கார்அரக்கன் முடிதோள் 
இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன் 
செறுத்தவன், வள நகர் - சிரபுரமே.

பொருள்: சிவபெருமான், தன்னோடு உடன்படாமல் மறுத்த அசுரர்களின் முப்புரங்களும் 
ஒருசேரக் கெட்டு அழியுமாறு சினந்தவர். அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் 
ஆகியவற்றை நெரித்தவர். மிக்க சினமுடைய இயமனை அழித்தவர். இப்பெருமான் 
உறையும் வளமையான நகரமானது சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: மறுத்தவர் - பகைவர். கறுத்தவன் - சினந்தவன். 
Lord Civan got angry with the Asuraas who disagreed with Him and were also hostile to Him, and destroyed their three citadels. He crushed the heads and shoulders of the black Asuraa Raavanan. He also kicked to death the immensely irate Yama. This affluent city of Thiru-ch-chira-puram is the place of Lord Civan.

வண்ண நன்மலருறை மறையவனுங் 
கண்ண னுங்கழல்தொழக் கனலுருவாய் 
விண்ணு றவோங்கிய விமலனிடந் 
திண்ண நன்மதிலணி சிரபுரமே. 9

வண்ண நல்மலர் உறை மறையவனும் 
கண்ணனும் கழல் தொழ, கனல் உருஆய் 
விண் உற ஓங்கிய விமலன் இடம் - 
திண்ண நல்மதில் அணி சிரபுரமே.

பொருள்: தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தனது திருவடிகளைத் 
தொழுது நிற்குமாறு கனல் உருவமாக விண்ணுற ஓங்கி நின்றவர் சிவபெருமான் ஆவார்.
விமலனான இப்பெருமான் உறைந்திருக்கும் இடமானது, உறுதியான நல்ல மதில்களால் 
அழகுற அமைந்த சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: வண்ணநன்மலர் - தாமரைமலர். திண்ணநன்மதில் - உறுதியாகிய மதில். 
The immaculate Lord Civan soared up in the sky as a big tall flame of fire when Brahma who resides in the attractive red lotus and Thirumaal were out to see and worship His holy feet. This Lord Civan's place is the affluent and good looking Thiru- ch-chira-puram which is encircled by strongly built high and thick walls.

வெற்றரை யுழல்பவர்விரி துகிலார் 
கற்றிலார றவுரைபுற னுரைக்கப் 
பற்றலர்திரி புரமூன்றும் வேவச் 
செற்றவன் வளநகர் சிரபுரமே. 10

வெற்று அரை உழல்பவர், விரி துகிலார், 
கற்றிலார் அறஉரை புறன் உரைக்கப், 
பற்றலர் திரி புரம்முன்றும் வேவச் 
செற்றவன் வள நகர் - சிரபுரமே.

பொருள்: ஆடையில்லாது திரிந்து உழல்பவர்கள் சமணர்கள். விரிவான ஆடையைப் 
போர்வையாகப் போர்த்து இருப்பவர்கள் புத்தர்கள். இவர்களுடைய மெய்யறிவற்ற 
உரைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அசுரர்களின் முப்புரங்களைத் தீயில் வேகுமாறு 
அழித்தவர் நம் சிவபெருமான் என்பதை உணருங்கள். இப்பெருமான் எழுந்தருளிய 
வளமான நகர் சிரபுரம் ஆகும்.

குறிப்புரை: வெற்று அரை உழல்பவர் - ஆடையில்லாத இடையோடு திரிகின்றவர்கள். அறவுரை கற்றிலா் 
என மாறுக. புறன் உரைக்க - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்ல. பற்றலர் - பகைவர். 
The Samanars roam naked without any dress in their waist; the Buddhists cover their body using the wide cloth as a cloak. They have not learnt any books on the ultimate truth. They speak falsehood contrary to Dharma. Without minding these people, Lord Civan is enshirned in the fertile town of Thiru-ch-chira-puram, - He once destroyed by fire, the three fortresses of the hostile Asuraas.

அருமறை ஞானசம்பந் தனந்தண் 
சிரபுர நகருறை சிவனடியைப் 
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார் 
திருவொடு புகழ்மல்கு தேசினரே. 11

அருமறை ஞானசம்பந்தன், அம்தண் 
சிரபுரநகர் உறை சிவன் அடியைப் 
பரவிய செந்தமிழ்பத்தும் வல்லார் 
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

பொருள்: அரிய வேதங்களின் பொருளை நன்கு உணர்ந்தவர் ஞானசம்பந்தன். அவர் அழகிய 
குளுமையான சிரபுரம் நகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடியைப் போற்றிச் 
செந்தமிழால் இப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் 
பொருளுணர்ந்து ஓதவல்லவர்கள், செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வார்கள்.

குறிப்புரை: தேசினர் - ஒளியை உடையவர்கள். 
Gnaanasambandan has imbibed all the rare Vedas (without being taught by a third scholar). He has sung these ten verses in praise of Lord Civan's holy feet enshrined in the affluent and elegant Thiru-ch-chira-puram. Those who can sing these ten verses will flourish in splendour with wealth and glory.

திருச்சிற்றம்பலம்

109ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
110. திரு இடை மருதூர்

திருத்தல வரலாறு:

32ஆம் பதிகம் பார்க்க. 
110. THIRU-IDAI-MARUTHOOR

HISTORY OF THE PLACE

See 32nd Hymn


திருச்சிற்றம்பலம்

110. திரு இடை மருதூர்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

மருந்தவன்வானவர்தானவர்க்கும் 
பெருந்தகைபிறவினொடிறவுமானான் 
அருந்தவமுனிவரொடால்நீழற்கீழ் 
இருந்தவன்வளநகரிடைமருதே. 1

மருந்து அவன், வானவர் தானவர்க்கும் 
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான், 
அருந்தவ முனிவரொடு ஆல்நீழல்கீழ் 
இருந்தவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமானார் பிறப்பு என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகின்றவர். 
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவர். உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் 
காரணமானவர். உயர்ந்த தவம் புரியும் சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் 
எழுந்தருளி அறம் உரைத்தவர். இப்பெருமானார் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் 
இடைமருதார் ஆகும்.

குறிப்புரை: இப்பதிகம் முழுவதும் இறைவன் திருநகர் இடைமருதே என்கின்றது. மருந்தவன் - மருந்து 
போல்வன். மருந்து, நோய் நீக்கவும், நோய் வாராமல் தடுக்கவும், உடலை வளர்க்கவும் உண்ணப்படுமாறு 
போல இறைவனும் அநாதியே பந்தித்த மலப்பிணியினீக்கவும், வினை ஏறாமல் காக்கவும், கைவந்த 
சிவஞானங் கழன்றுபோம் வண்ணம் வாசனை தாக்காமல் வளர்க்கவும் உபகாரப்படுதலின் மருந்தவன் 
என்றருளினார். அமுதமாயினான் எனலுமாம். தானவர் - அசுரர். பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. ‘வு’ 
விகுதி பெற்ற தொழிற்பெயர். மிக அருமையான பிரயோகம். முனிவரோடு ஆலநிழல் கீழ் இருந்தவன் 
எனப்பிரிக்க. 
Lord Civan is medicine as also medical man that cures the disease of birth and death. He is the Lord of the Devaas and the Asuraas. He is the sole cause of birth and death of all beings. He sat with and headed the noble Sanagaathi sages in the shade of the stone banyan tree [is a kind of Banyan tree which has no drop down shoots for support unlike other Banyan trees. Named 'Kallaalam', it has wide expansive shade below]. Here He preached the laws of virtue and dharma. His fertile town is Thiru-idai-maruthoor.

தோற்றவன்கேடவன்துணை முலையாள் 
கூற்றவன்கொல்புலித்தோலசைத்த 
நீற்றவன்நிறைபுனல்நீள்சடைமேல் 
ஏற்றவன்வளநகரிடைமருதே. 2

தோற்று அவன் கேடு அவன், துணை முலையாள் 
கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த 
நீற்றவன், நிறைபுனல் நீள்சடைமேல் 
ஏற்றவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமானார் உயிர்களின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் காரணமாக இருப்பவர். 
இணையான இரு தனங்களை உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாகக் 
கொண்டிருப்பவர். கொல்லும் தொழிலில் வல்ல புலியினுடைய தோலை இடையில் 
கட்டியிருப்பவர். உடம்பெங்கும் திருநீற்றை அணிந்திருப்பவர். பெருகி வந்த கங்கையை 
நீண்ட சடைமுடிமேல் ஏற்றி இருப்பவர். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமான 
நகரம் இடைமருதூர் ஆகும்.

குறிப்புரை: தோற்றவன் - பிறப்பை அருளியவன். கேடவன் - அழித்தவன். ' கூற்றவன் - 
பாகமதுடையான். 
Lord Civan is the sole cause of the origin of life and its disappearance from the body. Umaa Devi with attractive twin breasts occupies the left side of His body. He wears in His waist the hides of tigers known for ferocious killing. He smears His body with the holy ashes. He accommodated the flooding river Ganges on His matted hair and saved all people in the world from death. This Civan's favourite residing place is Thiru-idai-maruthoor.

படையுடைமழுவினன்பால்வெண்ணீற்றன் 
நடைநவிலேற்றினன்ஞாலமெல்லாம் 
உடைதலையிடுபலிகொண்டுழல்வான் 
இடைமருதினிதுறையெம்மிறையே. 3

படை உடை மழுவினன், பால்வெண்நீற்றன், 
நடை நவில் ஏற்றினன், ஞாலம்எல்லாம் 
உடைதலை இடு பலி கொண்டு உழல்வான் - 
இடைமருது இனிது உறை எம் இறையே.

பொருள்: சிவபெருமான் தனக்குரிய ஆயுதமாக மழுவைக் கொண்டிருப்பவர். பால்போன்ற 
வெள்ளிய திருநீற்றை உடல் முழுவதும் பூசியிருப்பவர். இனிய நடையைப் பழகுகின்ற 
விடை ஏற்றை உடையவர். உடைந்த தலையோட்டில் பலிகொண்டு உலகமெங்கும் திரிந்து 
உழல்பவர். எமது இறைவராகிய இப்பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்கும் நகரம் 
இடைமருதூர் ஆகும்.

குறிப்புரை: நடைநவில் - நடைபழகுகின்ற. உடைதலை - உடைந்த கபாலம். 
Lord Civan holds the battle axe as His war weapon. He has smeared on His body, milk white holy ashes. He has the bull with majestic strides as His vehicle. He accepts alms in a broken human skull, wandering all over the world. This our Lord is enshrined pleasingly in Thiru-idai-maruthoor.

பணைமுலையுமையொருபங்கனொன்னார் 
துணைமதிள்மூன்றையுஞ்சுடரின்மூழ்கக் 
கணைதுரந்தடுதிறற்காலற்செற்ற 
இணையிலிவளநகரிடைமருதே. 4

பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார் 
துணை மதிள்மூன்றையும் சுடரில் மூழ்கக் 
கணை துரந்து அடுதிறல் காலற் செற்றக் 
இணை இலி, வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் தனது ஒரு பாகத்தில் பருத்த தனங்களை உடைய 
உமையம்மையைக் கொண்டிருப்பவர். பகைவராகிய அசுரர்களுக்குத் துணையாக இருந்த 
மூன்று மதில்களையும் தீச்சுடரில் மூழ்கி அழியுமாறு வலிய அம்பைச் செலுத்தியவர். 
காலனை அழித்த ஒப்பில்லாத இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் 
இடைமருதார் ஆகும்.

குறிப்புரை: பணைமுலை - பருத்த முலை. ஒன்னார் - பகைவர். துணை மதிள் - திரிபுராதிகள் செய்யும் 
தீமைக்கெல்லாம் அரணாயிருந்து துணைபுரிந்த மதிள். கணை - அம்பு. அடுதிறல் - கொல்லும் வன்மை. 
Lord Civan accommodates His consort Umaa Devi who has very attractive bulging breasts on the left side of His body. The three hostile Asuraas owned, for their protection, three forts. Lord Civan shot an arrow and burnt the three citadels and destroyed them completely by using His powerful arrow. He is an incomparable Lord kicked Kaalan (Yama the God of Death) to death. This Lord Civan's favourite place is Thiru-idai-maruthoor.

பொழிலவன்புயலவன்புயலியக்குந் 
தொழிலவன் துயரவன்துயரகற்றுங் 
கழலவன்கரியுரிபோர்த்துகந்த 
எழிலவன்வளநகரிடைமருதே. 5

பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும் 
தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும் 
கழலவன், கரிஉரி போர்த்து உகந்த 
எழிலவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் இயற்கையாக வளர்ந்த காடுகளாய் இருப்பவன். மேகங்களாகவும் 
அதனை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும் 
அவனே. அவரவர் செய்த தீவினைக்கு ஈடான துன்பங்களை அந்தந்த ஆன்மாக்களின் 
நிலைக்கு ஏற்ப சிறிது சிறிதாக அனுபவிக்க மறுபிறப்புத் தருபவனும் அவனே. கழலணிந்த 
திருவடிகளை உடைய அவனே அத்துயரைப் போக்க வல்லவனும் ஆவான் (அவனது 
திருவருளையே திருவடிகள் என உணர்த்தப் பெறுவன் என்ற கருத்தினை இங்கு ஓர்க). 
யானையின் கரிய தோலைப் போர்த்திருந்தும் அவனே மிகுந்த அழகனாக விளங்குகின்றான். 
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: புயலவன் - மேகமாயுள்ளவன்: புயலவனாய், அதனையியக்கும் தொழிலவனாய், துயரவனாய், 
துயரை அகற்றும் கழலவனாய், என்பன பொருளாயும், அதனையியக்கும் கருத்தனாயும் இருப்பவன் 
இறைவனே என்பதை விளக்கிற்று. கரியுரிபோர்த்துகந்த எழிலவன் என்றது செய்ய திருமேனி மேல் கரிய 
தோலைப் போர்த்தியதும் அழகாயிற்று என்பதாம். 
Lord Civan Himself is the natural trees in the forests. He is the clouds; and Himself is the agent that performs the work of acting on the clouds and causing rains. He is the cause as well as remedy for all misery of all souls. He is the possessor of ankleted holy feet that annuls those miseries. He is the handsome one who skinned the elephant and covered His body happily with its skin. This Lord Civan's favourable place is Thiru-idai-maruthoor.

Note: He looks elegant even after wearing the dark skin of the elephant.

நிறையவன்புனலொடுமதியும்வைத்த 
பொறையவன்புகழவன்புகழநின்ற 
மறையவன்மறிகடல்நஞ்சையுண்ட 
இறையவன்வளநகரிடைமருதே. 6

நிறை அவன், புனலொடு மதியும் வைத்த 
பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற 
மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட 
இறையவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் எவ்விதத்திலும் குறையில்லாமல் முழுமையான நிறையுள்ளவனாக 
விளங்குபவன். கங்கையோடு பிறை மதியையும் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை 
உடையவன். எல்லாராலும் புகழப்படுகின்ற வேதங்களாக விளங்குபவன். சுருண்டு விழும் 
அலைகளை உடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட இறைவனும் இவனே. 
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: பொறையவன் - சுமையை உடையவன். 
Civan is the Supreme Lord perfect and flawless. He carries the weight of the river Ganges and also the crescent moon in His holy head. He is an embodiment of glory. He Himself is the Vedas praised by one and all. He positioned the poison that appeared in the sea full of rolling waves, in His throat. This Civan's favourite place is Thiru-idai-maruthoor.

நனிவளர்மதியொடுநாகம்வைத்த 
பனிமலர்க்கொன்றையம்படர்சடையன் 
முனிவரொடமரர்கள்முறைவணங்க 
இனிதுறைவளநகரிடைமருதே. 7

நனி வளர் மதியொடு நாகம் வைத்த 
பனிமலர்க்கொன்றை அம் படர் சடையன், 
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க, 
இனிது உறை வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் தனது திருமுடியில் நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளரும் 
பிறைமதியோடு பாம்பையும் வைத்திருப்பவன். குளிர்ந்த கொன்றை மலர் மாலை சூடிய 
விரிந்த சடையை உடையவன். இப்பெருமான், முனிவர்களும் தேவர்களும் முறையாக 
வணங்க இனிதாக எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: பனிமலர் - குளிர்ந்த மலர், முனிவர் முன்னும், தேவர் பின்னுமாக வணங்குதல் 
முறையாதலின் முறை வணங்க என்றார். முனிவர்கள் வணக்கம்; உலகம் உய்யவந்த நிஷ்காமிய 
வணக்கம்; தேவர்கள் வணக்கம்; அசுரர் அழியத் தாம் வாழ வேண்டும் என்னும் காமிய வணக்கம்: 
ஆதலின் அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் முறையே வணங்க என்றது. 
Lord Civan accommodates in His widespread matted hair the serpent as well the growing crescent moon (i.e. waxing daily) phase by phase. He decorates His hair with the cool cassia flower garland. He is worshipped by sages and Devaas in an orderly way. This Lord Civan is happily enshrined in Thiru-idai-maruthoor.

தருக்கின அரக்கனதாளுந்தோளும் 
நெரித்தவன்நெடுங்கைமாமதகரியன் 
றுரித்தவனொன்னலர்புரங்கள்மூன்றும் 
எரித்தவன்வளநகரிடைமருதே. 8

தருக்கினஅரக்கன தாளும் தோளும் 
நெரித்தவன், நெடுங்கைமாமதகரி அன்று 
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும் 
எரித்தவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: மிகுந்த ஆணவம் நிறைந்த அரக்கனான இராவணனின் கால்களையும் 
தோள்களையும் நெரித்தவர் சிவபெருமானாகும். நீண்ட கையை உடைய பெரிய மத 
யானையின் தோலை உரித்தவர். பகைவர்களாகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் 
எரித்தவர். இப்பெருமானார் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: அரக்கன் - இராவணன். ஒன்னலர் - பகைவர். 
Lord Civan smashed the feet and shoulders of the arrogant Raavanan. Once before, He peeled the hide of the frenzied big elephant having a long hand, and covered His body with that skin. He burnt down the three fortresses of the hostile Asuraas. Lord Civan of such action lives in Thiru-idai-maruthoor.

பெரியவன்பெண்ணினொடாணுமானான் 
வரியரவணைமறிகடல்துயின்ற 
கரியவனலரவன்காண்பரிய 
எரியவன்வளநகரிடைமருதே. 9

பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான், 
வரிஅரவுஅணை மறிகடல்-துயின்ற 
கரியவன், அலரவன் காண்புஅரிய 
எரியவன், வள நகர் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் எல்லாரிலும் பெரியவர். பெண்ணும் ஆணுமான வடிவாக 
விளங்குபவர். வரிகளை உடைய பாம்பை தலையணையாகக் கொண்டு கடலிடையே 
துயிலும் கரிய நிறமுள்ள திருமாலும், தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் 
காண்பதற்கு இயலாத எரி உருவமாக ஓங்கி நின்றவர். இப்பெருமான் எழுந்தருளி இருக்கும் 
வளமான நகரம் இடைமருதூர் ஆகும்.

குறிப்புரை: அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. கரியவன் - திருமால். அலரவன் - பிரமன். 
Lord Civan is the Supreme Being, above all others. He has the form of a woman and a man. He is beyond the reach and recognition of both Thirumaal who rests on a striped serpent on the seas and by Brahma who is seated in the lotus, by stretching Himself as a big and tall column of fire. This Civan's favourite place is Thiru-idai- maruthoor.

சிந்தையில்சமணொடுதேரர்சொன்ன 
புந்தியிலுரையவைபொருள்கொளாதே 
அந்தணரோத்தினோடரவமோவா 
எந்தைதன்வளநகரிடைமருதே. 10

சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன 
புந்தி இல் உரைஅவை பொருள் கொளாதே 
அந்தணர் ஓத்தினோடு அரவம் ஓவா, 
எந்தைதன் வள நகர் - இடைமருதே.

பொருள்: சுயமாக சிந்திக்கும் திறமை இல்லாத சமணருடன் புத்தர்களும் சொல்லுகின்ற 
அறிவற்ற உரைகளை உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டாம். அறவோர்களின் நித்திய 
வேத ஒலியுடன் விழாக்களின் ஒலியும் தொடர்ந்து ஒலிக்கும் வளமான நகரம் இடைமருதூர் 
ஆகும். அந்நகரம் எம் தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாகும். 
அதனை அறிந்து அங்கு சென்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை: சிந்தை இல் சமண் - சிந்தனை என்பதொன்றற்ற சமணர். தேரர் - புத்தர். புந்தி இல் உரை 
- புத்தியற்ற வார்த்தை. ஓத்து - வேதம். அரவம் - ஒலி. 
Oh! Ye Folks! Do not consider as meaningful the ignorant speeches of the Jains who are incapable of deep thinking and that of the brainless Buddhists. Please realise that Thiru-idai-maruthoor is the best place where our father Civan resides, where all the sounds of festivities and those of Vedic scholars are ever heard continuously. Understand this well, go to Thiru-idai-maruthoor and worship Lord Civan therein.


இலைமலிபொழிலிடைமருதிறையை 
நலமிகுஞானசம்பந்தன்சொன்ன 
பலமிகுதமிழிவைபத்தும்வல்லார் 
உலகுறுபுகழினோடோங்குவரே. 11

இலை மலி பொழில் இடைமருது இறையை 
நலம் மிகு ஞானம்பந்தன் சொன்ன 
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார் 
உலகு உறு புகழினோடு ஓங்குவரே.

பொருள்: இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் 
சிவபெருமானாரை; அருள் நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றி இப்பதிகத்தைப் 
பாடினார். பயன் மிகுந்த தமிழ்ப் பாடல்களாகிய இப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் 
டாட வல்லவர்கள், உலகில் நிறைந்து விளங்கும் புகழுடன் ஓங்கி உயர்ந்து வாழ்வார்கள்.

குறிப்புரை: இடைமருதூர்ப் பதிகமாகிய இப்பத்தையும் பாட வல்லவர். உலகிற் புகழோடு ஓங்கி வாழ்வர் 
என்கின்றது. பலமிகு தமிழ் - பயன் மிகுந்த தமிழ். தெய்வபலமிகுந்த தமிழ் என்றுமாம். புகழ் இம்மைப் 
பயனே என்பார் உலகு உறு புகழ் என்று அருளினர். நலம்- திருவருட்டிறம்.

Lord Civan is enshrined in Thiru-idai-maruthoor encircled by groves full of green leaves. Gnaanasambandan who was graced fully by Lord Civan, hailed this Lord of Thiru-idai-maruthoor and sang these ten fruit valuable Tamil verses. Those who are well versed in chanting these ten verses will attain all glory and live long in the world.
- திருச்சிற்றம்பலம்

110ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

111. திருக்கடை முடி

திருத்தல வரலாறு:

இத்திருத்தலம் கீழுர் எனப்பெயர் பெறும். சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலமாய்க் 
காவிரியின் கடைமுடியாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி 
உள்ளது. பிரமன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சுவாமி பெயர் கடைமுடி நாதர். அம்மையின் பெயர் 
அபிராமியம்மை. தீர்த்தம் கருணா தீர்த்தம்.

கல்வெட்டு:

கடைமுடி என்பது கீழுராயின் கல்வெட்டு ஒன்றுமில்லை. சேது சமஸ்தான வித்துவான் மு. 
இராகவ ஐயங்கார் அவர்கள் தமது ஆராய்ச்சித் தொகுதியில் சிறந்ததோர் கருத்தை 
வெளியிட்டுள்ளார்கள். அதன் சுருக்கமாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவிலடி என வழங்கும். 
பேரூருக்குப் பக்கத்தில் கிழக்கே 2.5 கி.மீ. தூரத்தில் திருச் சின்னம்பூண்டி என்ற கிராமம் உள்ளது. 
அங்கே உள்ள இறைவன் சடையை உடையர், சடேசுவரர் என்று வழங்கப்படுகிறார். அங்கேயுள்ள 
சாசனங்கள் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வாமன், அவன் மகன் கோ விஜய திரு பதுங்க 
வர்மன், முதல் பராந்தகன் இவர்கள் காலத்தன. அவற்றுள் முதல் பராந்தகன் காலத்துக் 
கல்வெட்டுக்களில் ஒன்றே ஒன்று திருச்சடைமுடி மகாதேவர் எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனைய 
இறைவன் பெயரை, திருக்கடைமுடி மகாதேவர் என்றே குறிப்பிடுகின்றன. ஒன்பது, பத்தாம் 
நூற்றாண்டுகளில் அதாவது ஏழாம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தர் காலத்திற்கு
அணிமையில் திருக்கடைமுடி இப்பொழுது வழங்கும் சென்னப்பூண்டி என்றே விளங்கினமை
அறியலாம். திருச்சடைமுடி என்பது திருப்பேராகிய கோவிலடிக்கு வழங்கிய பெயராதலைப் பிற 
கல்வெட்டுக்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலால் கீழுர் கடைமுடியன்று என்பர். 
சென்னம்பூண்டி கடைமுடியைப் பற்றியனவாக 22 கல்வெட்டுக்கள் உள்ளன. தென்கரை 
இடையாற்று நாட்டு திருக்கடை முடி எனக் குறிக்கப் பெற்றுள்ளது. நிருபதுங்கவர்மன் காலத்து 
அரசி ஒருத்தி விளக்கிற்காகப் பொன் அளித்தாள். முதல் பராந்தகன் பணிகள் யாவும் 
விளக்கிற்காக ஆடுகள் அளித்தமையே. வீரநாராயண மூவேந்த வேளான் முதலான அரசியல் 
தலைவர்களும் நிவந்தங்கள் அளித்துள்ளார்கள். 
111. THIRU-K-KADAI-MUDI

HISTORY OF THE PLACE

This sacred place is to the north of river Cauvery in Chola Naadu and is also known as Keezhoor. It is known as Kadaimudi as it is located at the tail end of the river Cauvery. Buses ply from Mayilaaduthurai to this place.

The name of God is Kadaimudinaathar and that of Goddess is Abiraamiyammai. The sacred ford is Karunaa Theerththam. Biraman offered worship here to attain salvation.

There are no inscriptions in Keezhoor, which lead to research on the true location of Kadaimudi (confer scholar M. Raaghava Iyengar, the Sethusamasthaana Vidhvaan). He concludes Keezhoor is not Kadaimudi and Chennappoondi or Thiru-ch-chinnam- poondi near Koviladi village (known in the literature as) is actually Kadaimudi. Inscriptions there name the Lord as Thiruchchadaimudi Mahaadhevar or Thirukkadaimudi Mahaadhevar.  There are 22 inscriptions about Kadaimudi at Chennampoondi. They speak of grants of gold, sheep etc., by royal personages.

திருச்சிற்றம்பலம்

111. திருக்கடைமுடி

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

அருத்தனையறவனையமுதனைநீர் 
விருத்தனைப்பாலனைவினவுதிரேல் 
ஒருத்தனையல்லதிங்குலகமேத்தும் 
கருத்தவன்வளநகர்கடைமுடியே. 1

அருத்தனை, அறவனை, அமுதனை - நீர்- 
விருத்தனைப், பாலனை, வினவுதிரேல் 
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும் 
கருத்தவன், வள் நகர் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமான் வேதத்தின் பொருளாய் விளங்குபவன். அறத்தின் வடிவு 
உடையவன். அமுதமாக இனியவன். உலகத்தின் மூத்தவனும் இளையவனும் அவனே. 
உலக மக்கள் யாவரும் இவன் ஒருவனையே போற்றித் தியானித்து வழிபடுகின்றனர். 
இப்பெருமான் எங்கு இருக்கின்றான் என நீர் வினவினால், அவன் தியானிப்பவரின் 
உள்ளத்திலும், வளமான நகரமாகிய கடைமுடியிலும் எழுந்தருளியுள்ளான். அங்கு சென்று 
வழிபடுவீர்களாக!

குறிப்புரை: நீர் பொருளாயுள்ளவனும், அறவடிவானவனும், அமுதனுமாகிய இறைவன் இடம் 
வினவுவீராயின், அது கடைமுடி என்கின்றது. அருத்தன் - பொருள் வடிவானவன். விருத்தன் - 
மூத்தவன். அருத்தனை . . . . உலகம் ஏத்தும் ஒருத்தனை வினவுதிரேல் கருத்தவன் அல்லது வளநகர் 
கடைமுடியே எனக் கூட்டுக. இதன் கருத்து அத்தகைய ஒருவனை வினவுதிராயின் அவன் தியானிப்பார் 
கருத்தினை இடமாகக் கொண்டவன். அன்றியும், கடைமுடியும் இடமாக்கியவன் என்பதாம். 
Lord Civa is

1) the significance of all words especially the Vedas
2) an embodiment of virtue
3) sweet like ambrosia
4) the oldest
5) the youngest

All people in the world declare that there exists no other saviour for them except Lord Civa, who is the final object; saying this they adore and offer worship to Him, with sincere and deep devotion. If you raise a question where such a Lord is entempled, the answer is that He is enshrined in the fertile city of Thiru-k-kadai-mudi. Ye devotees! Go to this place, adore Him and offer worship to His Holy Feet.

திரைபொருதிருமுடிதிங்கள்விம்மும் 
அரைபொருபுலியதளடிகளிடம் 
திரையொடுநுரைபொருதெண்சுனைநீர் 
கரைபொருவளநகர்கடைமுடியே. 2

திரை பொரு திருமுடி திங்கள் விம்மும் 
அரை பொரு புலிஅதள் அடிகள் இடம், 
திரையொடு நுரை பொரு தெண்சுனைநீர் 
கரை பொரு வள நகர் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமான் தனது! திருமுடியில் ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதியையும், 
அலைகளால் மோதும் கங்கையையும் கொண்டிருப்பவர். புலித்தோலை தனது இடையில் 
அணிந்திருப்பவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள தலமானது அலைகளுடன் நுரைகள் 
பொருந்திய தெளிந்த சுனைநீர் ௧ரைகளில் வந்து மோதும் வளமுடைய நகரமான கடைமுடியாகும்.

குறிப்புரை: கங்கையையும் பிறையையும் அணிந்த திருமுடியையும், புலித்தோலை உடுத்த அரையையும் 
உடைய அடிகளிடம் கடைமுடி என்கின்றது. திரை - அலை: ஆகுபெயரால் கங்கையை உணர்த்தியது. 
அதள் - தோல். 
Lord Civan accommodates on His holy matted hair the crescent moon, which appears bulged because of its brightness. Along with the moon, the river Ganges also finds a place in His head where waves dash against each other. He has gracefully worn the tiger skin on His waist. He is enshrined in Thiru-k-kadai-mudi, His favourite place, where the waters of the spring, with foamy waves dash against the banks.

ஆலிளமதியினொடரவுகங்கை 
கோல வெண்நீற்றனைத்தொழுதிறைஞ்சி 
ஏலநன்மலரொடுவிரைகமழும் 
காலனவளநகர்கடைமுடியே. 3

ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை, 
கோல வெண்நீற்றனைத் தொழுது இறைஞ்சி: 
ஏலநல்மலரொடு விரை கமழும் 
காலன வள நகர் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமான் கல்லால மரநிழலில் இளமையான மதி, அரவு, கங்கை 
ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியுடன் விளங்குகின்றார். அழகிய திருவெண்ணீறை உடல்
முழுதும் பூசி உள்ளார். நல்ல மணங்கமமும் மாலைகளையும் மார்பில் அணிந்துள்ளார். 
மணம் கமழும் திருவடியை உடையவர். இப்பெருமானுடைய தொழுது வணங்குதற்குரிய 
வளமுடைய நகரம் கடைமுடியாகும்.

குறிப்புரை: இளம்பிறை முதலியவற்றையுடைய இறைவனைத் தொழ, மலர் மணங்கமழும் திருவடியை 
உடையவன் நகர் கடைமுடி (அடைவோம்) என்கின்றது. இறைஞ்சி என்ற செய்தி என் வினையெச்சத்தைச் 
செயவென் எச்சமாக மாற்றுக. இறைஞ்சக் கமழும் காலன நகர் எனமுடிக்க. 
Lord Civa is adorned on His matted hair with a serpent and the river Ganges. He smears His brilliant body with holy ashes. His feet are fragrant because of sweet smelling flowers strewn at His feet. To pay obeisance and to worship this Lord Civan, ye! devotees understand that He resides in the fertile town of Thiru-k-kadai-mudi. You go to this place and adore Him.

கொய்யணிநறுமலர்க்கொன்றையந்தார் 
மையணிமிடறுடைமறையவனூர் 
பையணியரவொடுமான்மழுவாள் 
கையணிபவனிடங்கடைமுடியே. 4

கொய் அணி நறுமலர்க்கொன்றைஅம்தார் 
மை அணி மிடறு உடை மறையவன்ஊர், 
பை அணி அரவொடு மான் மழுவாள் 
கை அணிபவன் இடம் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமான் தேர்ந்து எடுக்கப்பட்ட அழகிய மணம் கமழும் கொன்றை மலர்
மாலையை அணிந்திருப்பவர். விடம் பொருந்திய கண்டத்தை உடையவர். படம் 
பொருந்திய பாம்பையும், மான், மழு, வாள் ஆகியனவற்றையும் கையில் ஏந்திருப்பவர். 
விளக்கமாய் உள்ள வேதங்களும் முதல்வனாய் உள்ள இப்பெருமானின் ஊரும் இடமும்
கடைமுடியாகும்.

குறிப்புரை: கொன்றையை அணிந்த நீலகண்டனும், அரவையும், மானையும், மழுவையும் கையில் 
அணிந்தவனும் ஆகிய இறைவன் இடம் கடைமுடி என்கின்றது. கொய் - கொய்யப் பெற்ற, மை - விடம். 
பை - படம். 
Lord Civan is decked with a lovely garland woven of fragrant cassia flowers, plucked with care. His neck is dark blue with the hue of venom. He holds in His hands a snake with poisonous sacs, a deer, and a bright battle axe. The town of this primordial Lord of the Vedas is Thiru-k-kadai-mudi.

மறையவனுலகவன்மாயமவன் 
பிறையவன்புனலவனனலுமவன் 
இறையவனெனவுலகேத்துங்கண்டம் 
கறையவன்வளநகா்கடைமுடியே. 5

“மறை அவன், உலகு அவன், மாயம் அவன், 
பிறையவன், புனல் அவன், அனலும் அவன், 
இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்- 
கறையவன் வள நகர் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமான் ஒலி வடிவானவன். பொருட்பிரபஞ்ச வடிவானவன். 
இவையிரண்டிற்கும் அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையும் அவன். உலகம்
முழுவதிலும் ஊடுருவி இருப்பவன். சடைமுடியில் பிறையை அணிந்திருப்பவன். கையில் 
தீயை ஏந்தியிருப்பவன். விடம் பொருந்திய நீல கண்டன். உலகமெல்லாம் இவனே 
இறைவன் என்று போற்றப்படுபவனாக எழுந்தருளியுள்ள வளமான நகரம் கடைமுடியாகும்.

குறிப்புரை: 'எல்லாமாயிருப்பவன் இறையவன்’ என உலகேத்துங் கண்டங்கரியவன் இடம் கடைமுடி 
என்கின்றது. மறையவன் - ஒலி வடிவானவன். உலகவன் - பொருட் பிரபஞ்ச வடிவானவன். மாயம் 
அவன் - இவையிரண்டிற்கும் அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையும் அவன். இறையவன் - 
எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுந் தங்குதலை உடையவன். கறை - விடம். 
Lord Civan composed the Vedas. He is the cosmos. He is one whose actions are full of wonders. He keeps on His matted hair the crescent moon and the river Ganges. He holds fire in His hand. He is hailed by all the people in the world as 'Neela Kantan' (His neck is dark blue in colour). This Civan's favourite place is Thiru-k-kadai-mudi.

படவரவேரல்குற்பல்வளைக்கை 
மடவரலாளையொர்பாகம்வைத்துக் 
குடதிசைமதியதுசூடுசென்னிக் 
கடவுள்தன்வளநகர்கடைமுடியே. 6

படஅரவு ஏர் அல்குல் பல்வளைக்கை 
மடவரலாளை ஓர்பாகம் வைத்துக், 
குடதிசை மதிஅது சூடு சென்னிக் 
கடவுள்தன் வள நகர் - கடைமுடியே.

பொருள்: பாம்பின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையான வளையல்களையும் 
அணிந்த கைகளை உடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்திருப்பவர் சிவபெருமான் 
மேற்குத் இசையில் தோன்றும் பிறைமதியைச் சடைமுடியில் சூடியிருப்பவர். இக்கடவுளின் 
வளமான நகரம் கடைமுடியாகும்.

குறிப்புரை: உமாதேவியை ஒரு பாகம் வைத்து, பிறையை சூடும் முடியை உடைய கடவுள் நகர் இது 
என்கின்றது. பட அரவு ஏர் - அரவின் படத்தையொத்த. மடவரலாள் - உமாதேவி, குடதிசைமதி - 
இளம்பிறை. பிறை மேற்கின்கண்ணே தோன்றுமாதலின் இங்ஙனம் கூறினார். 
Lord Civan accommodates His consort Umaa Devi on the left portion of His body whose forelap is as beautiful as the hood of cobra. She wears different kinds of bangles in her hands. He keeps the crescent moon appearing in the western sky, in His matted hair. This Lord's favourite place is Thiru-k-kadai-mudi.

பொடிபுல்குமார்பினிற்புரிபுல்குநூல் 
அடிபுல்குபைங்கழலடிகளிடம் 
கொடிபுல்குமலரொடுகுளிர்சுனைநீர் 
கடிபுல்குவளநகர்கடைமுடி யே. 7

பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல், 
அடி புல்கு பைங்கழல் அடிகள் இடம்; 
கொடி புல்கு மலரொடு குளிர்சுனைநீர் 
கடி புல்கு வள நகர் - கடைமுடியே.

பொருள்: சிவபெருமானார் தனது திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை 
அணிந்திருப்பவர். திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவர். 
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமானது குளிர்ந்த சுனை நீரில் படர்ந்திருக்கும் 
கொடிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களின் மணம் கமழும் வளமான நகரமான 
கடைமுடியாகும்.

குறிப்புரை: மார்பில் பூணூலையும், திருவடியில் கழலையும் பூண்ட அடிகளிடம் இது என்கின்றது. பொடி - 
விபூதி. கொடிபுல்கு மலர் - முல்லைக் கொடியில் பொருந்தியுள்ள மலர். கடி - காவல். 
Lord Civan smears His chest with the holy ashes; and also wears the twisted strands of the sacred thread. His divine feet are fastened with well-befitting anklets. This Lord Civan is enshrined in Thiru-k-kadai-mudi, which is a fertile town filled with the fragrance of blossomed flowers from the creepers as well from the cool waters of the spring.

நோதல்செய்தரக்கனை நோக்கழியச் 
சாதல்செய்தவனடிசரணெனலும் 
ஆதரவருள்செய்தஅடிகளவர் 
காதல்செய்வளநகர்கடைமுடியே. 8

நோதல்செய்து அரக்கனை, நோக்கு அழியச் 
சாதல்செய்து, அவன், ‘அடி சரண்!’ எனலும், 
ஆதரவு அருள்செய்த அடிகள்அவர் 
காதல்செய் வள நகர் - கடைமுடியே.

பொருள்: இராவணனுக்கு முதலில் கருணை செய்யாமல் துன்புறச் செய்தவர். பின்பு அவன் 
சிவன் திருவடியே சரணம் என்று கூறிய அளவில் ஆதரவு காட்டி அருள் செய்தவர். 
இப்பெருமானான சிவபெருமான் பேரன்புடன் விரும்பி எழுந்தருளியிருக்கும் வளமான 
நகரம் கடைமுடியாகும்.

குறிப்புரை: இராவணன் வலியடக்கி ஆட்கொண்ட இறைவன் இடம் இது என்கின்றது. நோதல் செய்து 
- வருத்தி. நோக்கு அழிய - திருவருட் பார்வைகெட. சாதல் செய்தவன் - அழிந்து பட்டவனாகிய 
இராவணன். 
Our Lord harassed Raavanan in the beginning for his misdeeds. Later He blessed Raavanan when he repented for his misdeed and sought refuge in his Holy Feet. This Lord Civan loves to reside in the fertile town of Thiru-k-kadai-mudi.

அடி. முடிகாண்கிலரோரிருவா் 
புடைபுல்கியருளென்றுபோற்றிசைப்பச் 
சடையிடைப்புனல்வைத்தசதுரனிடம் 
கடைமுடியதனயல்காவிரியே. 9

அடி முடி காண்கிலர் ஓர்இருவர் 
புடை புல்கி, ‘அருள்!’ என்று போற்றி இசைப்பச், 
சடைஇடைப் புனல் வைத்த சதுரன் இடம் - 
கடைமுடி; அதன அயல் காவிரியே.

பொருள்: திருமாலும் பிரமனும் சிவபெருமானது அடிமுடியைக் காணாதவராக அவரை 
அணுகி, “அருள் செய்க” என்று போற்றி வழிபட்டனர். அவர் தனது சடைமுடியில் 
கங்கையை அணிந்த பேராற்றல் மிக்கவர். அவருடைய தலமாக விளங்குவது, காவிரியின் 
அருகில் உள்ள கடைமுடியாகும்.

குறிப்புரை: அடிமுடி அறியாத அயனும் மாலும் அருள் என்று போற்றிசைப்ப. கங்கை சூடிய பெருமானிடம் 
இது என்கின்றது. புடைபுல்கி - அணுகி. 
Brahma and Thirumaal could not see Lord Civan's holy head and feet and failed in their search. Later they realised their folly, and adored Him and worshipped Him and pleaded for His grace. This Lord Civan wearing the river Ganges on His matted hair chose to reside in Thiru-k-kadai-mudi near where the river Cauvery flows.

மண்ணுதல்பறித்தலுமாயமிவை 
எண்ணியகாலவையின்பமல்ல 
ஒண்ணுதலுமையையொர்பாகம்வைத்த 
கண்ணுதல்வளநகர்கடைமுடியே. 10

மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை; 
எண்ணியகால், அவை இன்பம் அல்ல; 
ஒண்நுதல் உமையை ஓர்பாகம் வைத்த 
கண்ணுதல் வள நகர் - கடைமுடியே.

பொருள்: நீரில் பலகாலம் மூழ்குதலும், தங்களது முடியைப் பறித்தலுமாகிய புத்த, சமண 
விரதங்கள் பொய்யானவை. ஆராய்ந்து பார்க்கையில் இவை இன்பத்தைத் தரா. ஒளி 
பொருந்திய நெற்றியை உடைய உமாதேவியை ஒருபாகமாக வைத்துள்ள 
கண்ணுதலோனின் (சிவபெருமானின்) வளமான நகரம் கடைமுடியாகும்.

குறிப்புரை: முழுகுதலும், மயிர் பறித்தலும் ஆகிய இந்த விரத ஒழுக்கங்கள் யாவும் வெறும் மாயம்; 
எண்ணும் பொழுது இவை இன்பமாகா. உமாதேவியைப் பாகம் வைத்த பெருமானது இடம் இது
என்கின்றது. ஒள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றி. 
The rituals of Buddhists to take bath several times in the water and that of Samanars plucking the hair from their head are all dishonest practices. When these actions are analysed, they will bring no happiness. Ye devotees! realise that Lord Civan who has a third eye on His forehead and who is concorporate with His consort Umaa Devi whose visage is splendorous has chosen to live in the city Thiru-k-kadai-mudi (To this city, please go and offer worship).

பொன்திகழ்காவிரிப்பொருபுனல்சீர் 
சென்றடைகடைமுடிச்சிவனடியை 
நன்றுணர்ஞானசம்பந்தன்சொன்ன 
இன்தமிழிவைசொலஇன்பமாமே. 11

பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர் 
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை 
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன 
இன்தமிழ் இவை சொல, இன்பம்ஆமே.

பொருள்: அழகு பொருந்திய காவிரி ஆற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் 
தலம் கடைமுடியாகும். இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் திருவடிப்
பெருமைகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார். இனிய 
தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடுவோர்க்கு இன்பம் பிறக்கும்.

குறிப்புரை: காவிரியின் நீர்வளம் மிகுந்த கடைமுடியின்கண் எழுந்தருளியுள்ள சிவனடியைப்பற்றித் 
திருஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழைச் சொல்ல இன்பமாம் என்கின்றது. பொருபுனல் - கரையை 
மோதுகின்ற நீர், பொன்திகழ் காவிரி - பொன்னியெனப் பெயா் தாங்கித் திகழ்கின்ற காவிரி. பொன் - 
அழகுமாம். சீர் சென்றடை சிவன் எனக் கூட்டுக. உரைப்பார் உரைக்கும் புகழ்களை உடையான் 
இவனென உணராதே உரைப்பினும், சென்றடைவது சிவனையே என்பதாம். சீர் சென்றடை கடைமுடி 
எனலுமாம். 
Gnaanasambandan who has well recognised the greatness of Lord Civan has sung these ten sweet Tamil verses on His Holy Feet. He is enshrined in Thiru-k-kadai- mudi, where the water waves of river Cauvery reach regularly carrying sands mixed with fine particles of gold. Reciting these verses one will get supreme bliss in one's life.

திருச்சிற்றம்பலம்

111ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

112. திருச் சிவபுரம்

திருத்தல வரலாறு

21-ஆம் திருப்பதிகம் பார்க்க.

பதிக வரலாறு

21-ஆம் திருப்பதிகம் பார்க்க. 
112. THIRU-CH-CHIVA-PURAM

HISTORY OF THE PLACE

See 21st Hymn.

INTRODUCTION TO THE HYMN

See 21st Hymn.

திருச்சிற்றம்பலம்

112. திருச் சிவபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

இன்குரலிசைகெழும்யாழ்முரலத் 
தன்கரமருவியசதுரன்நகா் 
பொன்கரைபொருபழங்காவிரியின் 
தென்கரைமருவியசிவபுரமே. 1

இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் 
தன் கரம் மருவிய சதுரன் நகர் - 
பொன் கரை பொரு பழங்காவிரியின் 
தென்கரை மருவிய சிவபுரமே.

பொருள்: சிவபுரம் என்ற நகரமானது, இனிய ஒலியும், இசையும் பொருந்திய யாழ் இசை 
ஒலிக்குமாறு அதனைத் தனது கரத்தில் ஏந்தியவாறு விளங்கும் சமர்த்தரான 
சிவபெருமானின் நகரமாகும். இந்த நகரம் பழமையான காவிரி ஆற்றின் நீர் வந்து அழகிய 
கரையினை மோதுமாறு அமைந்த, அதன் தென்கரையில் அமைந்துள்ளது.

குறிப்புரை: யாழேந்திய கரத்தன் நகர் சிவபுரம் என்கின்றது. முரல் - ஒலிக்க.
Lord Civan, the most ingenious one shines by holding in His hands the lute in the proper way enabling the strings to produce sweet harmonious musical sound with a suitable background noise. His place is called Thiru-ch-chiva-puram which is on the southern bank of the ancient Cauvery river whose waters splash against its beautiful banks.

அன்றடற்காலனைப்பாலனுக்காய்ப் 
பொன்றிடவுதைசெய்தபுனிதன்நகர் 
வென்றிகொளெயிற்றுவெண்பன்றிமுன்னாள் 
சென்றடிவீழ்தருசிவபுரமே. 2

அன்று அடல் காலனைப் பாலனுக்குஆய்ப் 
பொன்றிட உதைசெய்த புனிதன் நகர் - 
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள் : 
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

பொருள்: சிவபுரம் என்ற நகரமானது, முற்காலத்தில் மார்க்கண்டேயன் என்ற பாலனுக்காக, 
யமன் அழியுமாறு அவனை காலால் உதைத்தருளிய புனிதரான சிவபெருமானின் நகரமாகும்.
இந்த நகரம், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும், வெள்ளைப் பன்றியாக அவதரித்த 
திருமால், முற்காலத்தில் சிவன் திருவடியைப் பணிந்து வழிபட்ட நகரமாகும்.

குறிப்புரை: மார்க்கண்டற்காகக் காலனை உதைத்தவன் நகர் இது என்கின்றது. அடல் - வலிமை. 
பொன்றிட - அழிய. எயிறு - கொம்பு, வெண்பன்றி - திருமாலாகிய சுவேதவராகம். இது 
இத்தலவரலாற்றுக் குறிப்பை அருளியது. 
Once in the ancient days, Lord Civan, the pure and holy one, kicked the dreadful Kaalan, to death, in order to save His devotee Maarkkandēyan, the brahmachari sixteen years of age. This Lord Civan's place is Thiru-ch-chiva-puram. In the past Thirumaal incarnated as a white hog having sharp teeth for attaining victory, came to this place, prostrated before the holy feet of Lord Civan and worshipped Him.

மலைமகள்மறுகிடமதகரியைக் 
கொலைமல்கவுரிசெய்தகுழகன்நகா் 
அலைமல்குமரிசிலினதனயலே 
சிலைமல்குமதிளணிசிவபுரமே. 3

மலைமகள் மறுகிட, மதகரியைக் 
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் - 
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே 
சிலை மல்கு மதிள் அணி சிவபுரமே.

பொருள்: சிவபுரம் என்ற நகரமானது, மலைமகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம் 
பொருந்திய யானை ஒன்று அவள் எதிரே ஓடி வந்தது. உடனே சிவபெருமான் அதன் எதிரே 
சென்று அதனைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட அழகிய 
சிவபெருமானின் நகரமாகும். இந்நகரம் அலைகள் நிறைந்த அரிசிலாற்றின் கரை அருகே 
மலைபோன்ற மதில்களை உடையதுமாக விளங்குகின்றது.

குறிப்புரை: மலைமகள் அஞ்ச யானையை உரித்த இறைவன் நகர் இது என்கின்றது. மறுகிட - கலங்க. 
உரிசெய்த - உரித்த. குழகன் - இளமையை உடையவன். சிலை மல்கும் - மலைபோல் விளங்கும். 
Goddess Paarvathi Devi got scared at the sight of an exhilarated elephant approaching her. Lord Civan the ever young one faced and killed the elephant and stripped off its skin and covered His body with that skin. This Lord Civan resides in Thiru-ch-chiva-puram. This town is situated on the banks of river 'Arisilaaru' and has mountain like big forts.

மண்புனலனலொடுமாருதமும் 
விண்புனையருவியவிகிர்தன்நகர் 
பண்புனைகுரல்வழிவண்டுகிண்டிச் 
செண்பகமலர்பொழிற்சிவபுரமே. 4

மண், புனல், அனலொடு, மாருதமும், 
விண், புனை மருவிய விகிர்தன் நகர் - 
பண் புனை குரல்வழி வண்டு கிண்டிச் 
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.

பொருள்: சிவபுரம் என்ற நகரமானது, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக 
பொருந்தி விளங்கும் விகிர்தனான சிவபெருமானின் நகரமாகும். இந்நகரம், பண் இசை 
பொருந்திய குரலோடு வண்டுகள் தோண்ட, செண்பகப் பூக்கள் மலரும் பொழில்களால் 
சூழப்பட்டுள்ளது.

குறிப்புரை: ஐம்பூதமாகிய விகிர்தனது நகர் இதுவாம் என்கின்றது. மாருதம் - காற்று. பண்புனை குரல் 
- பண்ணைச் செய்கின்ற குரல். 
The pre-eminent Supreme Lord Civan manifests Himself as the earth, water, fire, air and ether. He is enshrined in Thiru-ch-chiva-puram. This city is surrounded by groves full of champak flower plants (Michelia). The flowers in these plants blossom due to the bees humming melodiously in musical mode and kindling the buds.

வீறுநன்குடையவள்மேனிபாகம் 
கூறுநன்குடையவன்குளிர்நகா்தான் 
நாறுநன்குரவிரிவண்டுகிண்டித் 
தேறலுண்டெழுதருசிவபுரமே. 5

வீறு நன்கு உடையவள் மேனி பாகம் 
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் - 
நாறு நன் குர விரி வண்டு கிண்டித் 
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.

பொருள்: ஒப்பற்ற அழகால் தனித்தன்மை பெற்ற உமையம்மையைத் தனது திருமேனியில் 
ஒருபாகமாக உடையவனாகிய சிவபெருமான் விரும்பும் குளிர்ச்சியான நகரம் சிவபுரம்
ஆகும். இச்சிவபுரம், மணம் வீசுகின்ற நல்ல குராமலரை, வண்டுகள் கிண்டி அதன் தேனை 
உண்டு மகிழ்ந்து விளங்கும் பொழில்களால் சூழப்பட்டுள்ள நகரம் ஆகும்.

குறிப்புரை: உமாதேவியை ஒரு பாகங்கொண்டவன் நகர் இதுவாம் என்கின்றது. வீறு - தனிப்பெருமை. 
நாறு நல்குரவிரி - மணம் வீசுகின்ற நல்லகுராமலர். விரி - மலர். முதனிலைத் தொழிலாகு பெயர். தேறல் 
- தேன். 
Lord Civan accommodates His consort Umaa Devi on the left half of His body whose beauty without equal. This Lord is enshrined in the cool Thiru-ch-chiva- puram, which is girt with groves where bees kindle the fragrant common battle flowers and suck the honey and fly about in delight.

மாறெதிர்வருதிரிபுரமெரித்து 
நீறதுவாக்கியநிமலன்நகர் 
நாறுடைநடுபவருழவரொடும் 
சேறுடைவயலணிசிவபுரமே. 6

மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, 
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் - 
நாறு உடை நடுபவர் உழவரொடும் 
சேறு உடை வயல் அணி சிவபுரமே.

பொருள்: பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்து வந்த அசுரர்களின் 
- முப்புரங்களை எரித்து நீறாக்கிய பரிசுத்தனான சிவபெருமானின் நகரம் சிவபுரம் ஆகும். 
இது, உழவர்களோடு நாற்று நடும் மகளிர் பலரைக் கொண்ட, சேற்று வளம் மிக்க 
வயல்களால் அழகு பெறும் நகரமாகும்.

குறிப்புரை: திரிபுரங்களை நீறாக்கிய நிமலன் நகர் இதுவாம் என்கின்றது. மாறு - பகையாக. நாறு - 
நாற்று,

The pure Supreme Being Lord Civan burnt the three citadels of the Asuraas who encountered Him with different hostile feelings. He is enshrined in Thiru- ch-chiva-puram which is surrounded by lush miry fields where a good number of folks (maids) plant seedlings along with the farmers. Such is the beautiful landscape of Thiru-ch-chiva-puram.

ஆவிலைந்தமர்ந்தவனரிவையொடு 
மேவிநன்கிருந்ததொர்வியன்நகர்தான் 
பூவில்வண்டமர்தருபொய்கையன்னச் 
சேவல்தன் பெடைபுல்குசிவபுரமே. 7

ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு 
மேவி நன்கு இருந்தது ஒர் வியல்நகர்தான் - 
பூவில் வண்டு அமர்தரு பொய்கைஅன்னச் - 
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

பொருள்: பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர் முதலிய ஐந்து பொருள்களை விரும்பும் 
சிவபெருமான் உமையம்மையோடு கூடி மகிழ்ந்து இருக்கும் பெரிய நகரம் சிவபுரம் ஆகும். 
இந்நகரம், தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கும் மலர்களை உடைய 
பொய்கைகளில், அன்னச் சேவல் தன் பெடையை புல்லி மகிழும் அழகுடைய நகரம் 
ஆகும்.

குறிப்புரை: ஆனைந்தாடும் பரமன் அம்மையோடும் எழுந்தருளி இருந்த இடமாம் என்கின்றது. ஆவில் 
ஐந்து - பஞ்சகவ்யம். அரிவை - உமாதேவி. பூவில் வண்டு கண்ணயர்ந்திருக்கும் பொய்கையிலே, 
அன்னச் சேவல் தன் பெடையைப் புல்லும் சிவபுரம் என்பதாம். 
Thiru-ch-chiva-puram is the big town where Lord Civan joyfully resides with His consort Umaa Devi. This Lord Civan loves very much to use the five products of the cow i.e. milk, curd, ghee, etc., all known as Panchakavyam. This town is filled with many ponds, where bees hum around flowers in search of honey. Here the swans, male and female embrace each other joyfully. Such is the beauty of Thiru- ch-chiva-puram.

எழில்மலையெடுத்தவல்லிராவணன்றன் 
முழுவலியடக்கியமுதல்வன்நகர் 
விழவினிலெடுத்தவெண்கொடிமிடைந்து 
செழுமுகிலடுக்கும்வண்சிவபுரமே. 8

எழில் மலை எடுத்த வல்இராவணன்தன் 
முழுவலி அடக்கிய முதல்வன் நகர் - 
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து, 
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.

பொருள்: அழகிய கயிலை மலையைப் பெயர்க்க முயற்சி செய்த வலிமை மிகுந்த 
இராவணனின் முழுவலிமையையும் அடக்கிய முதல்வனாகிய சிவபெருமான் விரும்பித் 
தங்கும் ஊர் சிவபுரம் ஆகும். இந்நகரில், விழாக்காலங்களில் உயர்த்திய வெண்மையான 
கொடிகள் வானில் நிறைந்து, மேகத்தை அணுகும். அவைகள் கரிய மேகங்களோடு கலந்து 
நிற்கும் வளமை மிகுந்த நகரமாகும்.

குறிப்புரை: இராவணனின் வலியடக்கிய முதல்வன் நகர் இது என்கின்றது. எழில்மலை - அழகிய 
கயிலை. உற்சவத்தில் உயர்த்திய கொடிகள் மேகத்தை அணுகும் சிவபுரம் என விழாச் சிறப்பும், கொடியின் 
உயரமும் உரைத்தவாறு. 
Raavanan the mighty warrior tried to lift the lovely mount Kailash, the abode of Civa. Lord Civan the Supreme subdued the full might of Raavanan. This Civan is enshrined in the imposing Thiru-ch-chiva-puram, where numberless white temple flags flutter against the back drop of the black clouds during the festival period.

சங்களவியகையன்சதுர்முகனும் 
அங்களவறிவரியவன்நகர்தான் 
கங்குலும்பறவைகள்கமுகுதொறும் 
செங்கனிநுகர்தருசிவபுரமே. 9

சங்கு அளவிய கையன், சதுர்முகனும், 
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் - 
கங்குலும் பறவைகள் கமுகுதொறும் 
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

பொருள்: சங்கு ஏந்திய கையினை உடைய திருமாலும், நான்முகனும் அடிமுடியைத் 
தேடியும் அறியப் பெறாத சிவபெருமானின் நகரம் சிவபுரம் ஆகும். இந்நகரத்தில் இரவிலும் 
பறவைகள் கமுக மரங்களில் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளமை மிக்க நகரமாகும்

குறிப்புரை: அயனும் மாலும் அறியப் பெறாதவன் நகர் இதுவாம் என்கின்றது. சங்கு அளவிய கையன் - 
பாஞ்சசன்யம் என்னும் சங்கு கலந்த கையை உடையவன். அளவு - உயரமும், ஆழமும் ஆகிய புற அளவு 
இரவிலுங்கூடப் பறவைகள் கமுகுதோறும் பழநுகரும் நகர் என் று இருபோதும் பறவைக்கு உபகாரப்படுவது 
உரைக்கப் பெற்றது. 
Thirumaal holds the divine chank - Paancha-chanyam in His hands. He and Brahma in the olden days could not succeed in their efforts to see the holy feet and head of Lord Civan. This Lord Civan is enshrined in Thiru-ch-chiva- puram where birds during night hours fly, settle in the areca nut trees and enjoy eating the red fruits therein. Thiru-ch-chiva-puram is such an affluent city.

மண்டையிற்குண்டிகைமாசுதரும் 
மிண்டரைவிலக்கியவிமலன்நகர் 
பண்டமர்தருபழங்காவிரியின் 
தெண்டிரைபொருதெழுசிவபுரமே. 10

மண்டையின், குண்டிகை, மாசு தரும், 
மிண்டரை விலக்கிய விமலன் நகர் - 
பண்டு அமர்தரு பழங்காவிரியின் 
தெண்திரை பொருது எழு சிவபுரமே.

பொருள்: உண்கலம், கமண்டலம் ஆகியவற்றை கையில் ஏந்தி, அழுக்குடைய உடம்போடு 
அறிவற்ற பிறச் சமயத்தினரை விலக்கும் சிவபெருமானின் நகரம் சிவபுரம் ஆகும். இந்நகரம் 
பழமையான காலத்திலிருந்தே காவிரி நீரால் வளமை சேர்க்கப்பட்ட நகரம் ஆகும்.

குறிப்புரை: புறச்சமயிகளை விலக்கிய விமலன் நகரிதுவாம் என்கின்றது. மண்டை - உண்கலம். மாசு - 
அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும் பழங்காவிரி எனப் பழமைக்கு எல்லை 
கூறியவாறு.
Samanars carry begging bowls and water jugs and roam about in arrogance with dirty bodies. Lord Civan discarded these people. He is enshrined in Thiru-ch-chiva- puram where since ancient times, the waves in the fast running Cauvery river have been dashing against the banks.

சிவனுறைதருசிவபுரநகரைக் 
கவுணியர்குலபதிகாழியர்கோன் 
தவமல்குதமிழிவைசொல்லவல்லார் 
நவமொடுசிவகதிநண்ணுவரே. 11

சிவன் உறைதரு சிவபுரநகரைக் 
கவுணியர்குலபதி - காழியர்கோன் - 
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் 
நவமொடு சிவகதி நண்ணுவரே.

பொருள்: சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிவபுரம் ந கரைப் போற்றி, கவுணிய 
குலப்பதியாகிய காழியர் தலைவன் ஞான சம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார். தவத்தைத் 
தரும் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி 
சேர்வர்.

குறிப்புரை: சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதி சேர்வர் எனப் பயன் 
கூறியது. நவம் - புதுவை. திருச்சிவபுரம் வேறு; திருச்சிரபுரம் வேறு என்பதறிக.
The Chief of the Kauniyan clan - the prince of Seekaazhi has hailed, in Austerity, these '(Tapas) - conferring hymns', in Tamil, on Lord Civan of Thiru-ch-chiva-puram. Those who are well versed in these hymns, and chant them will flourish in ever new splendour and will gain the final bliss.

திருச்சிற்றம்பலம்

112ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
113. திருவல்லம்

திருத்தல வரலாறு:

திருவல்லம் தொண்டை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று. வேலூர் ஆர்க்காட்டில் இருந்து 
பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் இப்பொழுது திருவலம் என வழங்கப் பெறுகிறது. 
வில்வாரண்ய தலம், தீக்காலி என்பான் பூசித்துப் பேறு பெற்றமையான் தீக்காலி வல்லம் எனவும் 
வழங்கும். நவக்கிரகங்களும், வல்லாளனும் பூசித்துப் பேறு பெற்றனா். சுவாமி வல்ல நாதர். 
இறைவி வல்லாம்பிகை. தீர்த்தம் கெளரி தீர்த்தம்.

கல்வெட்டு:

கோப்பர கேசரியான இராஜேந்திர சோழன் (கி.பி. 1050-62) 3ஆம் ஆண்டில் 
உத்தியோகஸ்தன் ஒருவனிடம் இருந்து 25 கழஞ்சு பொன் வாங்கித் தீட்சிதரிடம் கொடுத்தான். 
அதே ஆண்டில் வாணபுரத்தில் உள்ள பேரவையோர் சங்கரதேவன் மகனான வைதும்ப 
சோமநாதனுக்கு 1000 குழி நிலம் விற்றதையும் அவர்கள் அதைத் திருவைய ஈசுவரருக்கு 
உரிமையாக்கியதையும் குறிக்கிறது. 4ஆம் ஆண்டில் முதல் இராஜராஜன் உத்தியோகத்தனான 
ஈராயிரவன் பல்லவராயனால் இராஜராஜேஸ்வரர் கருப்பக்கிரகம் கட்டப் பெற்றது. 2 விளக்கிற்காக 
2000 குழி நிலமும் அளிக்கப் பெற்றது.

கோராஜகேசரி வர்மனான இராஜமகேந்திரன் காலத்து 2ஆம் ஆண்டில் படைத்தலைவன் 
ஒருவன் திருவல்லம் பேரவையில் இருந்து 800 குழி நிலம் பெற்று அதைக் கோயிலுக்குக் 
கொடுத்தான். அதன் விலை 64 காசு (22 கழஞ்சு 8 மஞ்சாடி). குலோத்துங்கன் 23ஆம் ஆண்டில் 
ஒரு சுங்கத்தலைவனால் வீரசோழன் மனைவியான தன்னுடைய மகளுக்கு நன்றுண்டாக விளக்குப் 
போடப்பெற்றது. மூன்றாம் குலோத்துங்கன் 8ஆம் ஆண்டில் திரிசூலக்காசு கோயிலுக்கு அளிக்கப் 
பெற்றது. 34ஆம் ஆண்டில் கங்க அரசியான அரியபிள்ளையால் இரண்டு விளக்கு தானம் செய்யப்
பெற்றன. முதல் கோராஜகேசரி வர்மன், 7ஆம் ஆண்டில் இறைவித் திருவுருவம் செய்யவும் ஒரு 
விளக்குக்கும் ஒரு பிராமணனால் 1700 குழி நிலமும் தூய்நாட்டில் மந்திரம் பேரவையினின்றும், 1700 
குழி நிலமும் வாங்கப் பெற்றன. 26ஆம் ஆண்டில் 4ஆம் விக்கிரமாதித்தனிடமும் 3ஆம் 
ஜயசிம்மனிடமும் வெற்றி பெற்றமையும் கோயிலுக்கு விளக்கு பொருத்தியமையும் தெரிகிறது. 
7ஆம் ஆண்டில் மதுராந்தக கண்டராதித்தன் கோயிலுக்கு வந்தமையும் 1000 குடங்களால் 
அபிஷேகித்தமையும், வருமானத்தை ஆராய்ந்தமையும் குறிக்கப் பெற்றுள்ளன.

முதலாம் கோராஜஇராஜகேசரிவர்மன் 16ஆம் ஆண்டில் 700 குழி நிலம் சங்கர தேவனுக்கு 
விற்றமையும் அவன் அதைத் திருவைய ஈசுவரருக்கு அளித்தமையும் தெரிகிறது. 
கோராசகேசரிவர்மன் இராஜராஜதேவன் 20ஆம் ஆண்டில் 90 ஆடுகள் தானம் செய்தான். 3ஆம் 
ஆண்டில் தூய்நாட்டில் உள்ள குக்கனூர் கிராமத்தின் வருவாய்களைத் திருவல்லம் கோயிலுக்குக் 
கொடுத்தான். - மகாவலி வாணராயனது பொன்படு குட்டத்தில் உள்ள சில நிலங்களை ஒருவன் 
வாங்கி விளக்கிற்காகவும் படையலுக்காகவும் கொடுத்தான். வாண வித்தியாதரன் காலத்து 
விளக்கெரிக்க 20 கழஞ்சு பொன் கொடுக்கப் பெற்றது.

முதலாம் விக்கிரமாதித்தன் வேண்டுகோளின்படி மூன்று கிராமங்கள் (விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம்)
தானம் செய்யப்பட்டன. வாணராயரது சகம் 810ல் எட்கூரில் உள்ள ஒரு பார்ப்பனனால் கார நாட்டில்
உள்ள வன்னிப்பேடு கிராமத்தாரிடம் 25 கழஞ்சு பொன் கொடுக்கப் பெற்று அதன் வட்டியில் இருந்து 
விளக்கு போடப்பட்டது. சோழ பூபன் மகனான வீரசம்பன் சகம் 1236ல் அர்த்த மண்டபம் ஞானமூர்த்தி
என்ற பெயருடைய துறவியாலும் பிருதா அரசனாலும் கட்டப்பெற்றது.

மேலும் கருப்பக்கிருகமும் கட்டப் பெற்றது. வீரசம்பன் படைத்தலைவனா ? ஒரு நாயகனா ? என்று 
ஊகிக்க வேண்டியுள்ளது. வாண வித்தியாதர ராஜன் என்கிற வாணராயன் விளக்கிற்கு நெய்யிட 
25 கழஞ்சு பொன் வழங்கினான். விசய கண்ட கோபால தேவன் மூன்றாம் ஆண்டில் அழகிய 
பல்லவன் காலத்து 3ஆம் இராஜராஜன் நிலமணியக் காரர் 1.16 பாக வரியையும் 15 பாக வரியையும் 
தள்ளியமை தெரிகிறது. முதலாம் ராஷ்டிரகுப்த அமோகவர்ஷணன் மருமகன் காலத்து 
பொற்கொல்லன் ஒருவன் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான்.

பதிக வரலாறு:

திருமாற்பேறு உடையவர்தம் திருவருள் பெற்றுத் திருவல்லத்தை அடைந்த சிவஞானச்
செம்மலார், அங்குள்ள பெருமானுக்கு ‘எரித்தவன் முப்புரம்’ என்னும் திருப்பதிகப் 
பெரும்பிணையலை அணிவித்தார். 
113. THIRU-VALLAM

HISTORY OF THE PLACE

This sacred place is in Thondai Naadu and can be reached by bus from Veloor Aarkkaadu. The place is now known as Thiruvalam. It is also known as Theekkaali Vallam, after Theekkaali who offered worship here.

The Lord's name is Vallanaathar and the Goddess is called Vallaambikai. The sacred ford is Gouritheerththam. It is in a forest of Vilvam trees. The 'Navagrahas' and one Vallaalan worshipped here and attained salvation.

Of the voluminous information revealed by the inscriptions Here, most of which refer to the numerous grants of lands and other gifts, the most interesting items are as follows: An official of Raajaraajan I had the sanctum of Raajaraajesuvarar shrine built and endowed it with 2000 'kuzhi' land for 2 lamps. The king Madhuraanthaka Kandaraadhiththan came to the temple in his 7th year of reign to perform an ablution with 1000 pots of water, and he also inspected the temple accounts during his visit.

INTRODUCTION TO THE HYMN

Having adored the Lord at Thiru-maar-pēru, our saint arrived at Thiru-vallam and hailed Him in the following hymn:

திருச்சிற்றம்பலம்

113. திருவல்லம்

பண்: வியாழக்குறிஞ்சி 
ராகம்: சௌராஷ்டிரம்

எரித்தவன் முப்புரமெரியின்மூழ்கத்
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவனுறைவிடந்திருவல்லமே.1

எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்கத்; 
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்; 
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு 
தெரித்தவன்; உறைவுஇடம் - திருவல்லமே.

பொருள்: சிவபெருமான் அசுரர்களின் கோட்டையான முப்புரங்களையும் தீயில் மூழ்குமாறு
செய்து அழித்தவன். தனது தாழ்ந்து தொங்கும் சடையின்மீது கங்கையைத் தரித்தவன்.
வேதங்களை அருளிச் செய்தவன். அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன்
தெளிவாக உணர்த்தியவன். இப்பெருமான் உறைந்திருக்கும் இடம் திருவல்லமாகும்.

குறிப்புரை: முப்புரம் எரித்தவன். சடையில் கங்கையைத் தரித்தவன்.வேதங்களை விரித்தவன்.
வேறு வேறு தெரித்தவன் இடம் திருவல்லம் எங்கின்றது. விரித்தவன் – பரப்பியவன், தெரித்தவன் -
பொருளுணர்த்தியவன். 
Lord Civan destroyed the three citadels of the Asuras and completely burnt them in fire. In His hanging matted hair He holds the river Ganges. He formulated the four Vedas. Thereafter He elaborately explained them in six subsidiaries known as six Angaas. Lord Civan who is the father of all these activities is enshrined in Thiru- vallam.

தாயவனுலகுக்குத்தன்னொப்பிலாத் 
தூயவன் தூமதிசூடியெல்லாம் 
ஆயவனமரர்க்கும்முனிவர்கட்கும் 
சேயவனுறைவிடந்திருவல்லமே. 2

தாயவன் உலகுக்குத் தன்ஒப்புஇலாத் 
தூயவன், தூ மதிசூடி, எல்லாம் 
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும் 
சேயவன், உறைவுஇடழ் - திருவல்லமே.

பொருள்: சிவபெருமான் உலக உயிர்களுக்குத் தாய் போன்று இருப்பவன் தனக்கு 
யாரையும் உவமை சொல்ல முடியாத பரிசுத்தன். தூய மதியை முடியில் சூடியிருப்பவன். 
எல்லாப். பொருளுமாக ஆனவன். ஞானம் கைவரப் பெறாத போகிகள் ஆன 
தேவர்களுக்கும்  மானசீலராக முனிவர் முதலானோர்க்குத் தொலையாக இருப்பவன் 
இப்பெருமான் உறைந்திருக்கும் இடம் திருவல்லம் ஆகும்.  

குறிப்புரை: உலகுக்குத் தாயானவன், ஒப்பில்லாத் தூயவன். தேவர்கட்கும் முனிவர்கட்கும் சேயவன் 
திருத்தலம் திருவல்லம் என்கின்றது. அமரர் முனிவர் இருவரும் போகிகளாயும், மனைசீலர்களாயும்
இருத்தலின் அவர்களுக்குச் சேயவனானான் என்று அருளினர். இவர்களுக்குச் சேயவன் எனவே  
ஞானிகட்கு மிக அண்ணியன் என்பதாம். 
Lord Civan is the mother of the entire cosmos. He is the matchless embodiment of purity. He accommodates the pure crescent moon on His head. He manifests Himself in all matters in the world. He is inaccessible even to the Devas who enjoy worldly life and to the sages whose faith is only on their minds. Such great Lord Civan is enshrined in Thiru-vallam.

பார்த்தவன்காமனைப்பண்பழியப் 
போர்த்தவன்போதகத்தின்னுரிவை 
ஆர்த்தவன்நான்முகன் தலையையன்று 
சேர்த்தவனுறைவிடந்திருவல்லமே  3

பார்த்தவன், காமனைப் பண்பு அழியப் 
போர்த்தவன், போதகத்தின் உரிவை 
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று 
சேர்த்தவன் உறைவு இடம் திருவல்லமே

பொருள்: சிவபெருமான் மன்மதனின் அழகு கெடுமாறு அவனை நெற்றிக் கண்ணால் பார்த்து
எரித்து அழித்தவன். யானையின் தோலை உரித்துப் போர்த்தவன். ஆணவத்தால்
ஆர்ப்பரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றை முன்னொரு காலத்தில் பறித்து 
அத்தலையின் ஓட்டைக் கையில் உண்கலனாகச் சேர்த்தவன். இப்பெருமான்
உறைந்திருக்கும் இடம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: காமனை எரித்தவன், யானையை உரித்தவன், பிரமனைச் சிரம் கொய்தவன் இடம் இது 
என்கின்றது. பண்பு - அழகு. போதகம் - யானைக் கன்று. உரிவை - தோல். ஆர்த்தவன் - ஆரவாரம் 
செய்த பிரமன். 
Lord Civan frowned upon Manmathan (God of Love) destroyed his beauty and burnt him by opening His third eye in the forehead. He peeled the skin of the elephant and covered His body with that skin. He plucked one of the five heads of the ego-centered pompous Brahma and used it as His begging bowl. This Lord abides in Thiru-vallam.

கொய்தவம்மலரடி கூடுவார்தம் 
மைதவழ்திருமகள்வணங்கவைத்துப் 
பெய்தவன்பெருமழையுலகமுய்யச் 
செய்தவனுறைவிடந்திருவல்லமே, 4

கொய்த அம் மலர் அடி கூடுவார்தம் - 
மை, தவழ் திருமகள் வணங்க வைத்துப், 
பெய்தவன், பெருமழை; உலகம் உய்யச் 
செய்தவன்; உறைவு இடம் - திருவல்லமே.

பொருள்: கொய்த அழகிய மலரை கொண்டு, மனம் ஒருமித்து தூவி போர்றி
வழிபடுபவர்களுக்கு திருமகள் செல்வச் செழிப்பினை இணங்கி அருளுமாறு செய்ய
வைத்தும், உலகம் உய்யபெருமழை பெய்யுமாறு  செய்து பஞ்சத்தைப் போக்கும் ஈசன் 
உறையும் இடம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: தம் அடியை வணங்குவாரைத் திருமகள் வணங்க வைத்து, உலகம் உய்யப் பெருமழை 
பெய்யச் செய்தவன் உறைவிடம் வல்லம் என்கின்றது. கொய்த அம் மலரடி - கொய்த அழகிய மலரை 
அணிந்த திருவடி. கூடுவார்தம்மை - தியானிப்பவர்களை. தவழ்திருமகள் - நிலையாமல் தவழ்ந்து 
கொண்டே இருக்கின்ற இலட்சுமியை. 
Lord Civan bids Thirumagal, the goddess of wealth to bestow all richness to those devotees who pluck selected well fragrant flowers and places them at His feet with devoted single mindedness. He also causes the great and timely rain to pour and thus saves the world from famine.

சார்ந்தவர்க்கின்பங்கள்தழைக்கும்வண்ணம் 
நேர்ந்தவன்நேரிழையோடுங்கூடித் 
தேர்ந்தவர்தேடுவார்தேடச்செய்தே 
சேர்ந்தவனுறைவிடந்திருவல்லமே.  5

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் 
நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடித், 
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே 
சேர்ந்தவன்; உறைவு இடம் திருவல்லமே

பொருள்: சிவபெருமானது திருவடியே சரணம் என்று சார்ந்து உள்ள அடியவர்களுக்கு 
எல்லாவிதமான இன்பங்களும் தழைக்கும் வண்ணம் செய்கின்றான். உமையம்மையோடு
கூடி அருள் வழங்குபவன்: தேர்ந்த ஞானியரையும் தேடுபவர்களையும் தொடர்ந்து 
இடைவிடாமல் தேடச் செய்து, அவர்களுக்கு உள்நின்று அருள் செய்பவன். இப்பெருமான்
உறைந்திருக்கும் இடம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: சார்ந்தவர்க்கு இன்பம் நல்கி, பார்வதியோடும் இருப்பவனும், தெளிந்தாரும் தேடுவாரும் 
தேடச் செய்தே அவர்களிடம் சேர்ந்திருப்பவனும் ஆகிய சிவன் இடம் இது என்கின்றது. சார்ந்தவர்க்கு - 
திருவடியே சரண் என்று சார்ந்த ஞானிகட்கு. நேர்ந்தவன் - திருவுளம் பற்றியவன். தேர்ந்த 
ஞானியரையும் தேடச் செய்து அவர்கட்குப் பாலினெய் போலவும் தேடுவாரைத் தேடச் செய்து விறகின் 
தீப்போலவும் தோன்றி நிற்பவன். 
Lord Civan joins His consort Umaa Devi, who wears fine jewellery. He graces with happiness those devotees, who surrender to His holy feet. He causes His chosen ones and others who quest after Him, to continue their quest, but remains with them inside their heart and graces them.

பதைத்தெழுகாலனைப்பாதமொன்றால் 
உதைத்தெழுமாமுனிக்குண்மைநின்று 
விதிர்த்தெழுதக்கன்றன்வேள்வியன்று 
சிதைத்தவனுறைவிடந்திருவல்லமே, 6

பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால் 
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று, 
விதிர்த்து எழு தக்கன்தன் வேள்வி அன்று 
சிதைத்தவன் உறைவு இடம் - திருவல்லமே.

பொருள்: தன்னைச்சினந்து வந்த யமனை இடக்காலால் உதைத்தவன் தன்னை வணங்கி
எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர் நின்று உணர்த்தி அருள் 
செய்தவன். நன்னெறியிலிருந்து பிறழ்ந்து தடுமாறிய தக்கன் செய்த வேள்வியை முன்னொரு 
காலத்தில் சிதைக்க வீரபத்திரனை ஏவியவன் சிவபெருமான் இப்பெருமான் 
உறைந்திருக்கும் இடம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: காலனை உதைத்தும், மார்க்கண்டர்க்கு உண்மைப் பொருளை எதிர் நின்றும், தக்கன்
யாகத்தினை தகர்த்தும் நின்ற இறைவன் இடம் இது எங்கின்றது. மாமுனி-மார்க்கண்டர், விதிர்த்து-
நடுங்கி
Lord Civan kicked down with His left foot, Yama, the god of death, who came in great fury to take away the life of His devotee, the great Muni Maarkandēyan. When Maarkanteyan got up and prostrated before Lord Civan, He exposed His Real form and graced him. Dhakshan arranged a big sacrifice with an evil motive of insult. Lord Civan laid to waste the sacrifice and punished most of those assembled there through Veerabhadra. This Lord Civan is enshrined in Thiru-vallam.

7. This verse was not available.

இகழ்ந்தருவரையினையெடுக்கலுற்றாங் 
ககழ்ந்தவல்லரக்கனையடர்த்தபாதம் 
நிகழ்ந்தவர்நேடுவார்நேடச்செய்தே 
திகழ்ந்தவனுறைவிடந்திருவல்லமே. 8

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல்உற்று, ஆங்கு 
அகழ்ந்த வல்அரக்கனை அடர்த்த பாதம் 
நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே 
திகழ்ந்தவன் உறைவு இடம் - திருவல்லமே.

பொருள்: தனது வலிமைக்கு இது எம்மாத்திரம் என்று இகழ்ந்து, அரிய கயிலை மலையை 
எடுத்து அப்புறப்படுத்தும் பொருட்டு முயற்சி செய்த இராவணனை நெரித்த திருவடியை 
உடையவன். அந்தத் திருவடியையே எப்பொழுதும் சரணடைந்து தேடுபவர்களுக்கு 
அவர்கள் உள்ளத்திலேயே ஒளியாக விளங்குபவன். இப்பெருமான் உறைந்திருக்கும் இடம் 
திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: இராவணன் வலியடக்கிய பாதத்தைத் தேடுவார் தேடச்செய்தே எமக்கு எளிமையாகத் 
திகழ்ந்தவன் நகர் இது என்கின்றது.  இகழ்ந்து அருவரையினை - இது என் வலிக்கு எம் மாத்திரம் என்று 
இகழ்ந்து அரிய கயிலையை. நிகழ்ந்தவர் - பாதத்தை நிகழ் பொருளாகக் கண்டவர்கள். நேடுவார் - 
தேடுபவர்கள். 
The egoistic Raavanan who ignored the greatness of Civa and His abode, tried to lift the mount Kailash and keep it apart. Lord Civan by pressing the mountain by His holy feet crushed him. Whereas Lord Civan graces and abides in the hearts of those sincere devotees who consider the Lord's feet as the permanent goal of their life and offer worship at His feet. This Lord Civan resides at Thiru-vallam.

பெரியவன்சிறியவர்சிந்தைசெய்ய 
அரியவனருமறையங்கமானான் 
கரியவன்நான்முகன்காணவொண்ணாத் 
தெரியவன்வளநகர்திருவல்லமே. 9

பெரியவன்; சிறியவர் சிந்தை செய்ய 
அரியவன்; அருமறை அங்கம் ஆனான்; 
கரியவன், நான்முகன், காண ஒண்ணாத் 
தெரியவன்; வள நகர் - திருவல்லமே.

பொருள்: சிவபெருமான், யாவற்றுக்கும் முதல் பொருளாய் இருத்தல் போன்று யாவர்க்கும் 
பெரியவனாய் விளங்குபவர். அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு இயலாதவன். 
அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவன். திருமாலாலும், பிரம்மாவாலும்
காண இயலாதவன். முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன். இப்பெருமான்
எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: பெரியவன், சிறியவர்கள் தியானித்தற்கு அரியவன். வேதமும் அங்கமும் ஆனான்,  அயனும்
மாலுங்காண ஒண்ணாத தெரியவன் நகர் இது ௭ன்கின்றது. தெரியவன் - தெரிய நிற்பவன்.
முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன் என்பதாம். 
Lord Civan is greater than all others. He cannot, therefore, be thought of by those in their minds who are ignorant. He is the rare Vedas and their six subsidiaries (Angaas), He is invisible to Thirumaal and Brahma; whereas He is visible to those who are great in their love to humanity and never think of any evil to others. This Lord Civan is enshrined in Thiru-vallam.

அன்றியஅமணா்கள்சாக்கியர்கள் 
குன்றிய அறவுரைகூறாவண்ணம் 
வென்றவன்புலனைந்தும்விளங்கஎங்கும் 
சென்றவனுறைவிடந்திருவல்லமே. 10

அன்றிய அமணர்கள், சாக்கியர்கள், 
குன்றிய அறஉரை கூறா வண்ணம் 
வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும் 
சென்றவன்; உறைவு இடம் - திருவல்லமே.

பொருள்: சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறுகின்றனர். 
ஐம்புலன்களை வென்ற சான்றோர்களுக்கு எங்கும் விளங்கித் தோன்றுபவனாகிய 
சிவபெருமானின் உறைவிடம் திருவல்லம் ஆகும்.

குறிப்புரை: சமணரும், புத்தரும் அறமிலா உரை பேசாவண்ணம் ஐம்புலன்களையும் வென்றவன் நகர் 
வல்லம் என்கின்றது. அன்றிய - மாறுபட்ட. அறம் குன்றிய உரை என் மாறுக. 
The Jains and the Buddhists who foster doctrinal differences among themselves, preach unrighteous sermons. Lord Civan triumphed over them; He is ever the conqueror of the five senses. He pervades everywhere splendidly. This Lord Civan abides in Thiru-vallam.

கற்றவர் திருவல்லங்கண்டுசென்று 
நற்றமிழ் ஞானசம்பந்தன்சொன்ன 
குற்றமில் செந்தமிழ்கூறவல்லார் 
பற்றுவரீசன் பொற்பாதங்களே 11

கற்றவர் திருவல்லம் கண்டுசென்று 
நல்-தமிழ் ஞானசம்பந்தன்சொன்ன 
குற்றம் இல் செந்தமிழ்கூறவல்லார் 
பற்றுவர் ஈசன் பொன்பாதங்களே

பொருள்: சிறந்த அறிவுடையவர் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று, நற்றமிழில் 
வல்ல ஞானசம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார். குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் 
பாடவல்லவர்கள் சிவபெருமானின் அழகிய திருவடிகளை அடைவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தப் பெருமான் திருவல்லத்தைக் கண்டு சொன்ன குற்றம்இல் செந்தமிழ்ப் 
பாடலாகிய இவற்றைக் கூறவல்லவர் ஈசன் பாதங்களைப் பற்றுவர் என்கின்றது. கண்டு சென்று சொன்ன 
என்பதால் இப்பதிகம் திருவல்லத்தை வழிபட்டுப்போன பின்பு சிவானந்தாநுபவம் சிந்தையில் நிறைய 
ஆக்கப்பெற்றதாகும் என்பது அறியப்பெறும். 
Thiru-vallam is the town where great scholars abide in large numbers and cultivate dedication to Lord Civan. Those who visit this place and hail Him with these flawless Tamil hymns sung by Gnaanasambandan, (the great scholar in Tamil) will gain the golden feet of Lord Civan.

திருச்சிற்றம்பலம்

113ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

114. திருமாற்பேறு

திருத்தல வரலாறு

55ஆம் பதிகம் பார்க்க.

பதிக வரலாறு

55 ஆம் பதிகம் பார்க்க. 
114. THIRU-MAAR-PĒRU

HISTORY OF THE PLACE

See 55th Hymn.

INTRODUCTION TO THE HYMN

See 55th Hymn.

திருச்சிற்றம்பலம்

114. திருமாற்பேறு

பண்: வியாழக்குறிஞ்சி 
ராகம்: சௌராஷ்டிரம்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணுமவனாணுமவன்
கருந்தடமலர்க்கண்ணி காதல் செய்யும் 
மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1

குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், 
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், 
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் 
மருந்தவன், வள நகர் - மாற்பேறே.

பொருள்: சிவபெருமான் குருந்த மரத்தடியில் குருவாக நின்றவன். எப்போதும் இளமையாக 
இருப்பவன். பேரறிவுடையவன். பெருந்தன்மை உடையவன். பெண் மற்றும் ஆண் 
வடிவோடு விளங்குபவன். தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய 
உமையம்மையால் விரும்பப்படுபவன். பிறவிப் பிணியைப் போக்கும் அரிய மருந்தாக
விளங்குபவன். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: இப்பதிகம், மருந்தாய், மாறிலியாய், உமாபதியாய், கயிலாய பதியாய், காலகாலனாய், 
முனிவரும் தேவரும் மக்களும் ஒருசேர வணங்கத்தகும் எளிமையனாய் மாதுடையனாய், பிறை முதலிய 
சூடியவனாய், எந்தையாய் இருப்பவன் நகர் மாற்பேறு என்கின்றது. குருந்தவன் - குருந்த மரத்தடியிற் 
குருவானவன். இவ்வுரை மாணிக்கவாசகர் காலத்துக்கு ஞானசம்பந்தப் பெருமான் பின்னவராயிருந்தவர் 
எனக் கொள்ளலாம். குருந்து - குருத்து எனலும் ஆம். 
குருகவன் - வயிர வகைகளில் ஒன்றானவன். மருந்து - அமுதம். 
Lord Civan is the spiritual teacher who gave initiation Maanikkavaachakar sitting under the Kurunta Tree in Thiru-p-perun-thurai to Saint; He is diamond (one of the varieties of diamond); He is an embodiment of sharp intellect. He is one of great dignity. He appears as the male and the female. He is like nectar and the love lord of Umaa Devi whose eyes are beautiful like the blue lily flowers that blossom in the pool such is Thiru-maar-pēru where this Lord abides.

பாறணிவெண்டலைகையிலேந்தி 
வேறணிபலிகொளும்வேட்கையனாய் 
நீறணிந்துமையொருபாகம்வைத்த 
மாறிலிவளநகர்மாற்பேறே. 2

பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி 
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய், 
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த 
மாறுஇலி வள நகர் - மாற்பேறே,

பொருள்: சிவபெருமான் தனது கையில் பருந்தால் புலால் நீக்கப்பட்ட வெள்ளிய 
தலையோட்டை ஏந்தியுள்ளான். உலகம் முழுவதும் வேறுபட்ட அழகுடன் சென்று 
பலியேற்கும் பற்றுள்ளம் கொண்டவன். திருமேனி முழுவதும் திருநீறு பூசியிருப்பவன். 
உமையம்மையை ஒருபாகமாக வைத்திருப்பவன். தனக்கு ஓப்புவமை இல்லாத 
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: பாறு - பருந்து. மாறிலி - மாறுபாடில்லாதவன். 
Lord Civan holds in His hand a white human skull from which the flush pieces have been eaten away by the kites. With a longing to beg, He goes about with a beautiful appearance different from the normal worldly beautiful people. He smears His body with holy ashes. He concorporates His consort in one part of His body. This peerless Lord Civan has chosen to reside in the fertile Thiru-maar-pēru.

கருவுடையாருலகங்கள்வேவச் 
செருவிடையேறியுஞ்சென்றுநின் 
றுருவுடையாளுமையாளுந்தானும் 
மருவியவளநகர்மாற்பேறே. 3

கரு உடையார் உலகங்கள் வேவச்
செரு விடை ஏறிமுன் சென்று நின்று 
உரு உடையாள் உமையாளும் தானும் 
மருவிய வளநகர் மாற்பேறே.

பொருள்: சிவபெருமான் ஊழிக்காலத்தில் கருவில் பிறந்த ஆன்மாக்களுக்காக 
படைக்கப்பட்ட உலகங்களை அழியுமாறு செய்பவன். போரில் வல்ல விடைமீது ஏறி 
வருபவன்: இப்பெருமான் அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று 
எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: கருவுடையார் உலகங்கள் வேவ பிறப்புடைய ஆன்மாக்களின் போக நுகா்ச்சிக்காகப் 
படைக்கப் பெற்ற உலகங்கள் அழிய. உரு - அழகிய. 
Lord Civan created this world for the benefit of all souls to enjoy life. At the time of deluge He destroys the entire cosmos as well this earth. He travels all around mounting on the warring bull. He and His consort, the slender waist Umaa Devi reached the fertile Thiru-maar-pēru and are enshrined there conspicuously gracing the devotees.

தலையவன்தலையணிமாலைபூண்டு 
கொலைநவில்கூற்றினைக்கொன்றுகந்தான் 
கலைநவின்றான் கயிலாயமென்னும் 
மலையவன்வளநகர்மாற்பேறே. 4

தலையவன், தலைஅணிமாலை பூண்டு 
கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான், 
கலை நவின்றான், கயிலாயம் என்னும் 
மலையவன், வள நகர் - மாற்பேறே.

பொருள்: சிவபெருமான் எல்லாருக்கும் தலைமையானவன். அழகிய தலைமாலையை 
அணிந்திருப்பவன். உயிரைக் கொல்ல விருப்பத்தோடு வந்த கூற்றுவனைக் கொன்று 
மகிழ்ந்தவன். எல்லாக் கலைகளையும் உலகற்கு அருளியவன். கயிலை மலை என்னும் 
மலையில் வீற்றிருக்கும் இப்பெருமானின் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: தலையணி மாலை - கபால மாலை. நவில் - விரும்பும். 
Lord Civan is the Chief of the cosmos and all everywhere. He is decked with a garland of skulls in His head. He killed the killer god of death and stood happily. He expounded the sixty-four arts and sciences. He belongs to mount Kailas. He is enshrined in the fertile Thiru-maar-pēru.

துறையவன்தொழிலவன்தொல்லுயிர்க்கும் 
பிறையணிசடைமுடிப்பெண்ணொர்பாகன் 
கறையணிமிடற்றண்ணல்காலற்செற்ற 
மறையவன்வளநகர்மாற்பேறே. 5

துறை அவன், தொழிலவன், தொல்உயிர்க்கும் 
பிறை அணி சடைமுடிப் பெண்ஓர்பாகன், 
கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற 
மறையவன், வள நகர் - மாற்பேறே.

பொருள்: சிவபெருமான் பல்வேறு நீதிநெறிகளாய் இருப்பவன். பழமையாக வரும் 
உயிர்களுக்கு ஐந்தொழில்களைப் புரிபவன். பிறையணிந்த சடைமுடியை உடையவன். 
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவன். விடக்கறை பொருந்திய 
கண்டத்தினை உடையவன். எல்லாருக்கும் தலைமையானவன். காலனை அழித்த 
இரகசியப் பொருளானவன். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் 
திருமாற்பேறாகும்.

குறிப்புரை: துறையவன் - பல நெறிகளாய் இருப்பவன். தொழிலவன் - ஐந்து தொழிலை உடையவன். 
கறை - விடம். 
Lord Civan is the embodiment of all virtue and moral ways. He performs the five fold acts such as creation, sustenance, dissolution, obscuration, and blissful absorption for the salvation of souls. His matted hair is adorned with a crescent moon. He has accommodated His consort Umaa Devi on the left half of His body. He is the Supreme Lord whose neck is dark blue in colour because of the poison positioned in His throat. He is the originator of the Vedas. He kicked Kaalan to death. This Lord Civan happily resides in the fertile Thiru-maar-pēru.

பெண்ணினல்லாளையொர்பாகம்வைத்துக் 
கண்ணினாற்காமனைக்காய்ந்தவன்றன் 
விண்ணவர்தானவர்முனிவரொடு 
மண்ணவர்வணங்குநன்மாற்பேறே. 6

பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் 
கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன், 
விண்ணவர் தானவர் முனிவரொடு 
மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.

பொருள்: சிவபெருமான் பெண்களில் பேரழகுடைய உமையம்மையை ஒரு பாகமாக
வைத்திருந்தும், காமனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து அழித்தவன். தேவர்கள்,
அசுரர்கள், முனிவர்கள், மற்றும் மண்ணுலக மக்கள் ஆகியோர்களால் வணங்கப் பெறுபவன்.
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: உமையையொருபாகம் வைத்தும் மன்மதனைக் கண்ணாற் காய்ந்தவன் என்பதில் நயம் ஓர்க. 
விண்ணவர் முதலானோர் ஒப்ப வணங்கத் தகும் எளிமையில் இருப்பவன் என இறைவனுடைய
ஒப்பநோக்கும் பேரருள் உரைக்கப்பட்டது. 
The most handsome among women Umaa Devi occupies Civa's left portion of His body; yet Civan burnt Kaaman by His third eye (in His forehead). He is adored by the celestial, the asuraas, sages and by earthly people. He resides in this fertile town Thiru-maar-pēru.

7. Verse not available.

தீதிலாமலையெடுத்தவ்வரக்கன் 
நீதியால்வேதகீதங்கள்பாட 
ஆதியானாகியஅண்ணலெங்கள் 
மாதிதன்வளநகர்மாற்பேறே. 8

தீது இலா மலை எடுத்த(வ்) அரக்கன் 
நீதியால் வேதகீதங்கள் பாட, 
ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள் 
மாதிதன் வள நகர் - மாற்பேறே.

பொருள்: குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனான இராவணனைக் கால் 
விரலால் நெரித்தவர் சிவபெருமானாகும். அவன் தனது பிழையை உணர்ந்து, முறையாக 
வேத கீதங்கள் பாடியவுடன் அவனுக்கு அருள் புரிந்தவரும் இவரே. ஆதி முதல்வனான
எங்கள் தலைவர். ஒரு பெண்ணை பாகமாகக் கொண்டுள்ளார். இப்பெருமானார் 
எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: மாதி - மாதினை உடையவன். 
Lord Civan crushed the Raakshasa Raavanan by His toe, when he tried to uproot the flawless and sacred mount Kailas, in the first instance. Later when Raavanan repented and begged for pardon by singing Vedic hymns, He forgave and blessed him. He is our primordial god who is concorporate with His consort by accommodating her on the left half of His body. This Lord Civan's fertile place is Thiru-maar-pēru.

செய்யதண்டாமரைக்கண்ணணொடும் 
கொய்யணிநறுமலர்மேலயனும் 
ஐயனன்சேவடியதனையுள்க 
மையல்செய்வளநகர்மாற்பேறே.  9

செய்யதண்தாமரைக்கண்ணனொடும் 
கொய் அணி நறுமலர்மேல் அயனும் 
ஐயன் நன்சேவடி அதனை உள்க, 
மையல் செய் வள நகர் - மாற்பேறே.

பொருள்: திருமால் குளிர்ச்சியான சிவந்த தாமரை மலர் போன்ற கண்களை உடையவன். 
பிரமன், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்குபவன். இவர்கள் இருவரும், 
பெருவிருப்பத்துடன், தலைவனான சிவபெருமானை நினைத்து வழிபடும் வளமையான 
நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: ஐயன்நன் சேவடி - தலைவனுடைய நல்ல சேவடியை. மையல் - விருப்பம். 
Thirumaal's eyes are like ruddy lotus. Brahma is seated on the fragrant lotus flower which is plucked for adornment.These two sincerely contemplated and worshipped Lord Civan's holy red feet and got His grace. This Lord Civan is enshrined in the flourishing Thiru-maar-pēru.

குளித்துணா அமணர்குண்டாக்கரென்றும் 
களித்துநன்கழலடிகாணலுற்றார் 
முளைத்தவெண்மதியினொடரவஞ்சென்னி 
வளைத்தவன்வளநகா்மாற்பேறே. 10

குளித்து உணா அமணர், குண்டுஆக்கர், என்றும் 
களித்து நன் கழல் அடி காணல் உற்றார்; 
முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி 
வளைத்தவன் வள நகர் - மாற்பேறே.

பொருள்: குளிக்காமல் உணவு உண்ணும் சமணர்களும் உடல் பருத்துள்ள புத்தர்களும் 
ஆனந்தப்படும்படி அவர்கள் சிவபெருமானின் திருவடிகளைக் காணமாட்டார்கள். 
ஒருகலைப் பிறையான வெள்ளிய மதியையும் பாம்பினையும் திருமுடிமீது சூடியிருக்கும் 
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் வளமையான நகரம் திருமாற்பேறாகும்.

குறிப்புரை: ‘கூழாயினுங் குளித்துக் குடி' என்பது உலக வாய்மொழியாகவும் குளித்து உண்ணாத 
அமணர்கள் என அவர்கள் இயல்பு கூறியது. குண்டு ஆக்கர் - பரு உடலராகிய புத்தர்.
The Jains who eat food before bathing; and the fat bodied Buddhists do not willingly seek to have darshan of Civan's holy feet. Lord Civa accommodated on His matted hair the white single phased moon along with a serpent. This Lord Civan is enshrined in the fertile Thiru-maar-pēru.

அந்தமில்ஞானசம்பந்தன்நல்ல 
செந்திசைபாடல்செய்மாற்பேற்றைச் 
சந்தமின்றமிழ்கள்கொண்டேத்தவல்லார் 
எந்தைதன் கழலடி யெய்துவரே. 11

அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல 
செந்துஇசை பாடல்செய் மாற்பேற்றைச் 
சந்தம்இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் 
எந்தைதன் கழல்அடி எய்துவரே.

பொருள்: என்றும் புகழுடன் இருக்கும் ஞானசம்பந்தன் அழகிய இசையையுடைய 
பாடல்களால் திருமாற்பேற்று சிவபெருமானைப் போற்றி இப்பதிகத்தைப் பாடினார். 
இசையோடு கூடிய இனிய இத்தமிழ்ப் பாடல்களைக் கொண்டு துதித்துப் பாட வல்லவர்கள் 
எம் தந்தையாகிய சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை அடைவர்.

குறிப்புரை: அந்தம்: இல் - அழிவற்ற, அழிவில்லாத, என்றும் நிலைத்திருக்கும். சந்தம் இன்தமிழ் - 
இசையோடு கூடிய இனிய தமிழ். இப்பதிகம் பாடினவர்க்குப் பயன் திருவடிப்பேறு எனச் 
சொல்லப்படுகின்றது. செந்து இசை பாடல் - செவ்விய இசையை உடைய பாடல். து- சாரியை. 
Gnaanasambandan of endless gnosis has sung on Lord Civan who is enshrined in the prosperous Thiru-maar-pēru. Those who hail and worship Civan with those verses - sweet and rhythmic - of this endless Tamil, will reach the ankleted holy feet of our Father Lord Civan.

திருச்சிற்றம்பலம்

114ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
115. திருஇராமனதீச்சரம்

திருத்தல வரலாறு:

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்று திருஇராமனதீச்சரம். இடம் 
திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் 
இத்தலத்தை அடையலாம். இராமன் பூசித்துப் பேறு பெற்றனராதலின் இப்பெயர் எய்தியது. 
இறைவன் பெயர் இராமநாதர். இறைவியின் பெயர் சரிவார்க்குழலி. தீர்த்தம் இராமதீர்த்தம்.

கல்வெட்டு:

இத்தலம் திருக்கண்ணபுரம் கல்வெட்டுக்களிற் சேர்ந்தே அரசியலாரால் படியெடுக்கப் 
பெற்றுள்ளது. ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் இராமனதீச் சரமுடையார் என வழங்கப் 
பெறுவர். குலோத்துங்க சோழன் இக்கோயில் பூசைக்காகவும், அமுதுபடிக்காகவும் நிலம் 
அளித்தான். இந்நிலம் பின்னா் சிவபாதசேகரமங்கலம் என்று வழங்கப்பெற்றது. கோயிலைத் 
திருப்பணி செய்தவனும் இவனே. பின்னர், திருமலை தேவ மகாராயரின் (சகம் 1397) 
விக்ரமாதித்தன் என்னும் அரசகாரியம் பார்ப்பவன் கோயிலைப் பழுது பார்த்து இருக்கிறான். 
பூசைக்கும், அமுதுக்கும் நிலம் அளித்து இருக்கிறான். கோனேரின்மை கண்டான் (யார் என்று 
அறியக்கூட வில்லை) காலத்தில் அருச்சகருக்குள் உரிமைப் போர் நிகழ்ந்திருக்கின்றது. அதனை 
நீக்கி, திருமன்னுசோழ பிரமராயனுக்கும், மானவரையனுக்கும் பூசை உரிமைகள் வழங்கப் பெற்றன. 
தனியூரான தில்லையிலிருந்த மாகேசுவரர்களால் இக்கோயில் நிலம் பஞ்சத்தால் விளையாது போக, 
இராஜராஜ பாண்டி மண்டலம், வீரசோழ மண்டலம், நடுவில் நாடு, ஜெயங்கொண்ட சோழ மண்டலம் 
முதலியவற்றில் உள்ள கோயில்களிலிருந்து நெல்லும் பொன்னும் கொடுத்துதவும்படி உத்தரவிட்டு 
இருக்கின்றனர். இது கோயில் நிர்வாகத்தின் தனிச்சிறப்பைக் குறிப்பதாகும்.

பதிக வரலாறு:

திருப்பனையூரை வணங்கி வருகின்ற சிரபுரச் செல்வர் திருஇராமனதீச்சரத்தை அடைந்து 
'சங்கொளிர்' என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார். 
115. THIRU-RAAMANA-THEECH-CHARAM

HISTORY OF THE PLACE

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It can be reached from Thiru-p-pugaloor by crossing the river Mudikondaan, and going east from Kannapuram. God's name here is Raamanaathar and the Goddess is known as Sarivaar-k-kuzhali. The sacred ford is Raama Theerththam.

There are five inscriptions about this temple. Kulo-th-thunga Cholan and renovated this temple and made grants for worship services and food offering. One Vikkiramaadhiththiyan, officer of the King Thirumalaidhevamahaarayar, also performed similar services. There is a reference to the conflict among the priests as to rights at the temple during the reign of one Konerinmaikondaan and its resolution by the appointment of two persons with rights to perform worship services. When the crops in the temple lands failed as a result of draught, the Maahesuvarars of Thillai ordered paddy and gold be given to this temple from the resources of other temples in nearby regions.

INTRODUCTION TO THE HYMN

Having hailed Civa at Thiru-p-panaiyür, our saint arrived at Thiru-raamana- theech-charam and sang on Him in the following hymn:

திருச்சிற்றம்பலம் 
115. திருஇராமனதீச்சரம்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

சங்கொளிர்முன்கையர்தம்மிடையே 
அங்கிடுபலிகொளுமவன்கோபப் 
பொங்கரவாடலோன்புவனியோங்க 
எங்குமனிராமனதீச்சரமே. 1

சங்கு ஒளிர் முன்கையர் தம்இடையே 
அங்கு இடு பலி கொளுமவன், கோபப் 
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஒங்க 
எங்கும் மன், - இராமனதீச்சரமே.

பொருள்: ஒளிவீசும் சங்கு வளையல்களை முன் கைகளில் அணிந்துள்ள முனிபன்னியர்
வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு ஏற்றுக் 
கொள்பவன். சினம் பொங்கும் பாம்பைப் பிடித்து ஆடுபவன். உலக மக்கள் உயர்வு பெற 
எங்கும் நிறைந்திருப்பவனான சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: முனிபன்னியர் இடும்பலியை ஏற்பவனும், அரவு அணிந்தவனும், உலகமெலாம் உயர எங்கும் 
மன்னியிருப்பவனும் ஆகிய சிவனிடம் இராமனதீச்சரம் என்கின்றது. சங்கு - வளையல். அங்கு - அசை. 
புவனி - பூமி. 
Lord Civan goes to the streets where the wives of the Rishis live, who wear in their fore arms bangles made of shells, and accepts happily the alms they give. He catches the serpent of spiralling wrath and causes it to dance. For the upliftment of the entire people of the world He pervades everywhere. This Lord Civan's place is Thiru-raamana-theech-charam.

சந்தநன்மலரணிதாழ்சடையன் 
தந்தமதத்தவன்றாதையோதான் 
அந்தமில்பாடலோனழகனல்ல 
எந்தவனிராமனதீச்சரமே. 2

சந்த நல்மலர் அணி தாழ்சடையன், 
தந்த மதத்தவன் தாதையோ தான், 
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல 
எம் தவன், - இராமன தீச்சரமே.

பொருள்: அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவன். 
தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தை. இவன் முடிவற்ற 
இசைப்பாடல்களைப் பாடுபவன். பேரழகன். மிக நல்லவன். எங்கள் தவப்பேறாய் 
விளங்கும் சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: தாழ்சடையன், விநாயகப் பெருமான் தாதை, பாடலன், அழகன் நகர் இது என்கின்றது. 
சந்தம் - அழகு. தந்தமதத்தவன் - தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமான். அந்தம் இல் 
- எல்லையில்லாத. 
Lord Civan's dangling and descending matted hair is decorated with pretty fragrant flowers. He is the father of the tusked and musty elephant headed 'Vinaayaka'. He sings endless rhythmic songs. He is absolute beauty. He is verily the reward of our penance. This Lord Civan abides in Thiru-raamana-theech-charam.

தழைமயிலேறவன்றாதையோதான் 
மழைபொழிசடையவன்மன்னுகாதில் 
குழையதுஇலங்கியகோலமார்பின் 
இழையவனிராமனதீச்சரமே.  3

தழைமயில்ஏறவன் தாதையோ தான், 
மழை பொழி சடையவன், மன்னு காதில் 
குழைஅது விலங்கிய கோல மார்பின் 
இழையவன் - இராமனதீச்சரமே.

பொருள்: அழகிய தோகையோடு கூடிய ஆண் மயில்மீது ஏறிவரும் முருகப் பெருமானின்
தந்தை சிவபெருமான். அவன் உலகிற்கு நீர் வளம் தரும் கங்கையைச் சடையில் 
அணிந்திருப்பவன். தனது காதில் நிலை பெற்று விளங்கும் குழையை அணிந்திருப்பவன். 
அழகிய திருமார்பில் முப்புரிநூலை அணிந்தவனான சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் 
ஆகும். 
குறிப்புரை: முருகன் தாதை, மார்பில் பூணூலன் நகர் இதுவே என்கின்றது. தழை மயில் - பீலியோடு 
கூடிய மயில். ஏறவன் - ஏறுதலை உடையவன். மழை - நீர்த்துளி. குழை - காதணி. கோலம் - அழகு. 
இழை - பூணூல். ஆபரணமும் ஆகும். 
Lord Civan is the father of Murugan who moves on his peacock vehicle whose spreaded plumage is a sight to see and enjoy. The river Ganges that provides prosperity to the world finds a place in Civan's matted hair. An ear ring permanently shines in His right ear. The three ply sacred thread lies across His splendorous chest. This Lord Civan's place of residence is Thiru-raamana-theech-charam.

சத்தியுளாதியோர்தையல்பங்கன் 
முத்தியதாகியமூர்த்தியோதான் 
அத்தியகையினிலழகுசூலம் 
வைத்தவனிராமனதீச்சரமே. 4

சத்தியுள்ஆதிஒர்தையல் பங்கன், 
முத்திஅதுஆகிய மூர்த்தியோ தான், 
அத்திய கையினில் அழகு சூலம் 
வைத்தவன், - இராமனதீச்சரமே.

பொருள்: சக்திகளின் முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக் 
கொண்டவன் சிவபெருமான். அவன் எல்லா உயிர்களுக்கும் முக்திப் பேறான கடவுளாக
விளங்குபவன். தீயேந்திய கையை உடையவன். சங்கார கிருத்தியஞ் செய்யும் தீ ஏந்திய 
திருக்கரத்தில் அழகுக்காகக் சூலத்தைத் தாங்கி இருப்பவனான சிவபெருமானின் தலம்
இராமனததீச்சரம் ஆகும்.

குறிப்புரை: ஆதி சத்தியின் தலைவன், முத்திதரு முதல்வன் நகர் இது என்கின்றது. அத்தியகையினில் 
அழகு சூலம் வைத்தவன் - சங்கார கிருத்தியஞ்செய்யும் தீயேந்திய திருக்கரத்தில் அழகுக்காகச் சூலத்தை 
ஏந்தியவன். இதன் நயம் ஓர்க. 
Of the different goddesses of energy Umaa Devi is the chief, who occupies half of Lord Civan's body. Lord Civan is the only God to give final salvation to all souls. He holds the sharp and strong trident in his hand in which He also keeps fire for final delusion. This Lord Civan's shrine is Thiru-raamana-theech-charam.

தாழ்ந்தகுழற்சடைமுடியதன்மேல் 
தோய்ந்தஇளம்பிறைதுளங்குசென்னிப் 
பாய்ந்தகங்கையொடுபடவரவம் 
ஏய்ந்தவனிராமனதீச்சரமே. 5

தாழ்ந்த குழல்சடைமுடி அதன்மேல்- 
தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப் 
பாய்ந்த கங்கையொடு படஅரவம் 
ஏய்ந்தவன் - இராமனதீச்சரமே.

பொருள்: சிவபெருமான், தனது தாழ்ந்த கூந்தலில் உள்ள சடைமுடியின்மேல் அழகு 
தோய்ந்த இளம்பிறையை அணிந்திருப்பவன். திருமுடியில் பாய்ந்து வரும் கங்கை, படம் 
பொருந்திய பாம்பு ஆகியவற்றையும் சூடிய சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: பிறையணிந்த சென்னியோடு கங்கை பாம்பு அணிந்தவன் நகர் இது என்கின்றது. 
ஏய்ந்தவன் - பொருந்தியவன். 
In the descending matted bunches made up of His tresses Lord Civan keeps the good looking young crescent moon along with the gurgling river Ganges and a hooded snake. This Lord Civan's shrine is Thiru-raamana-theech-charam.

சரிகுழலிலங்கியதையல்காணும்
பெரியவன்காளிதன்பெரியகூத்தை 
அரியவனாடலோனங்கையேந்தும் 
எரியவனிராமனதீச்சரமே. 6

சரிகுழல் இலங்கியதையல் காணும் 
பெரியவன், காளிதன் பெரிய கூத்தை 
அரியவன் ஆடலோன், அங்கை ஏந்தும் 
எரியவன் - இராமனதீச்சரமே.

பொருள்: பிடரியின் மேல் விளங்கும் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தன் 
நடனத்தை கண்டு அனுபவிக்கத் தன் அருகில் வைத்து அருள் செய்த பெரியன் 
சிவபெருமான். இவன் காளியின் பெரிய கூத்திற்கு போட்டியிட்டும் அவளால் அறிதற்கு 
அரியவனாய் நடனமாடுபவன். அழகிய திருக்கையில் எரி ஏந்தி விளங்குபவனாகிய 
சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: பராசக்தி காணும் பெரியவன், காளியின் கூத்திற்கு அரியவன், ஆனந்தக் கூத்தன் நகர் இது 
என்கின்றது. சரிகுழல் - பிடரிமீது சரிந்த கூந்தல். இத்தலத்து இறைவி நாமம் சரியார் குழலி. 
Lord Civan is the great one who allowed His consort Umaa Devi to stay on seated nearby, (in whose nape of the neck appears her beautiful curling hair), to witness His dance. With a view to suppress the egoism of one of the junior deities, the famous Kaali, dark black in appearance and a fierce look, Lord Civan contested against her in a dance and subdued her. He holds in one of His divine hands the flaming fire. This Lord Civan abides in Thiru-raamana-theech-charam.

மாறிலாமாதொருபங்கன் மேனி 
நீறதுவாடலோனீள்சடைமேல் 
ஆறதுசூடுவானழகன்விடை 
ஏறவனிராமனதீச்சரமே. 7

மாறு இலா மாது ஒருபங்கன், மேனி 
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல் 
ஆறுஅது சூடுவான், அழகன், விடை 
ஏறவன், - இராமனதீச்சரமே.

பொருள்: தனது அழகிற்கு ஒப்பிடுமாறு யாரும் இல்லாத உமையம்மையை ஒரு பாகமாகக் 
கொண்டிருப்பவன் சிவபெருமான். அவன் தன் திருமேனியில் திருநீற்றை அணிந்திருப்பவன். 
நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியிருப்பவன். பேரழகன். விடைமீது 
ஏறிவருபவன். இவன் விரும்பி இருக்கும் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: மாதொருபங்கன், நீறாடி, ஆறுசூடி, அழகன் நகர் இது என்கின்றது. மாறு இலா மாது - 
அன்னையாகிய பராசக்தி. நீறு அது ஆடலோன் - நீறாடியவன். 
Lord Civan accommodates His consort Umaa Devi in the left half of His body (Umaa Devi is the most and peerless beautiful woman). He smears His body with holy ashes. He keeps the river Ganges in His long matted hair. He is beauty Himself. He goes round mounted on His bull vehicle. This Lord Civan's place is Thiru-raamana- theech-charam.

தடவரையரக்கனைத்தலைநெரித்தோன் 
படவரவாட்டியபடர்ரசடையன் 
நடமதுவாடலானான்மறைக்கும் 
இடமவனிராமனதீச்சரமே. 8

தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன், 
படஅரவு ஆட்டிய படர்சடையன், 
நடம்அது ஆடலான், நால்மறைக்கும் 
இடமவன், - இராமனதீச்சரமே.

பொருள்: பெரிய கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலையை நெரித்தவன். 
படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவன். விரிந்த சடைமுடியை உடையவன். 
திருநடனம் ஆடுபவன். வேதங்களான நான்மறைக்கும் இடமாக ஆயவன் சிவபெருமான். 
இவன் விரும்பி எழுந்தருளிய தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: இராவணனை நெரித்தவன், அரவாட்டிய சடையன், நடனம் ஆடுதலை உடையவன் நகர் இது 
என்கின்றது. நான்மறைக்கும் இடம் அவன் - வேதங்கள் நான்கிற்கும் இடம் ஆயவன். 
Lord Civan crushed the heads of the Raakshasaa Raavanan by slightly pressing the mount Kailas; He takes pleasure in swinging the hooded cobra. He has wide matted hair. He is a cosmic dancer. He is the source and content of the four Vedas. This Lord Civan's place is Thiru-raamana-theech-charam.

தனமணிதையல்தன்பாகன்றன்னை 
அனமணியயனணிமுடியுங்காணான் 
பனமணிஅரவரிபாதங்காணான் 
இனமணியிராமனதீச்சரமே. 9

தனம் அணி தையல்தன் பாகன்தன்னை. 
அனம் அணி அயன் அணிமுடியும் காணான்; 
பனமணிஅரவு அரி பாதம் காணான்; - 
இனமணி இராமனதீச்சரமே.

பொருள்: அழகே தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் சிவபெருமான் 
அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்ட பிரமனாலும், திருமுடியைக் கண்டு பிடிக்க 
முடியாதவன். பாம்பின் படத்தில் மணிகளை உடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் 
திருமாலாலும், திருவடியைக் கண்டுபிடிக்க முடியாதவன். இவர்கள் இருவரும் வணங்க 
அருள் புரிந்தவனாகிய சிவபெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை: உமைபாகனை அயன்முடிகாணான், அரி அடி காணான். அத்தகைய இறைவன் நகர் இது 
என்கின்றது. அனம் அணி அயன் - அன்னமாகத் தன்னைப்புனைந்து கொண்ட பிரமன். பன மணி வரவு 
அரி - படங்களில் மணிகளை உடைய ஆதிசேடன் மேல் வருதலை உடைய மால். பண என்பது எதுகை 
நோக்கிப் பன என ஆயிற்று. நான்கு தலைகளை உடைய பிரமன் ஒரு முடியைக் காணாமையும், ஏனமாய் 
நான்கு கால்களை உடைய திருமால் இணையடி காணாமையும் வியப்பு என நயம் தோன்ற நின்றது. 
Lord Civan is the consort of Umaa Devi of shapely frame. Brahma took the form of a swan soared up and up, but could not behold Lord Civan's crest. Vishnu who sleeps on a bed of serpent, the hoods of which contain gems, also could not behold Lord Civan's holy feet. Howoever, Lord Civan graced these two when they worshipped Him. This Lord Civan resides in Thiru-raamana-theech-charam, filled with cluster of several gems.

தறிபோலாஞ்சமணார்சாக்கியர்சொற்கொளேல் 
அறிவோரரனாமமறிந்துரைபமின் 
மறிகையோன்றன்முடிமணியார் கங்கை 
எறிபவனிராமனதீச்சரமே. 10

தறி போல் ஆம் சமணர்சாக்கியர் சொல் கொளேல்! 
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்! 
மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை 
எறிபவன் - இராமனதீச்சரமே

பொருள்: மரத்தால் செய்யப்பட்ட தடிபோன்று, அறிவற்ற சமண புத்தர்களின் 
பேச்சுக்களைக்  கேளாதீர்கள். மெய்ஞ்ஞானியர்கள் மூலமாக இறைவனின் திருப்பெயரை 
அறிந்து கொண்டு வாயால் சொல்வீர்களாக. இளமான் கன்றை கையில் ஏந்தியும், தனது 
முடியில் மணிகளோடு கூடிய கங்கை நதி அலைமோதுபவனாய் எழுந்தருளி இருக்கும் 
பெருமானின் தலம் இராமனதீச்சரம் ஆகும். அங்கு சென்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை: அறிவால் அறியப் பெறாதவன், மான்கையன். கங்கையன் நகர் இது என்கின்றது. தறி - 
கம்பம். அறிவு - பசு. பாச ஞானம். பாச ஞானத்தாலும் படர் பகஞானத்தாலும் ஈசனையறிய 
வொண்ணாது ஆதலின் இங்ஙனம் கூறினார். மறி - மான்குட்டி. 
Ye folks! do not listen to the words of Samanars and Saakkiyars who are like mere logs of wood. Learn the name of Lord Civan from the truly wise. Know how to chant His name. He holds a young deer in His palm. His crest is adorned with the billowy and gem filled Ganges river.

தேன்மலர்க்கொன்றையோன்****
********************************************
********************************************
*******************முந்தமகூனமன்றே.

தேன்மலர்க்கொன்றையோன்****
********************************************
********************************************
*******************முந்தமகூனமன்றே.

பொருள்: தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியிருப்பவன்

குறிப்புரை: இந்தப் 11ஆம் பாட்டில் முதல் இரண்டு வார்த்தைகளே கிடைத்துள்ளன. 
In this verse two words were only available.
Lord Civan wears cassia flowers in His crest.
திருச்சிற்றம்பலம்

115ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
116. பொது- திரு நீலகண்டம்

பதிக வரலாறு:

கொடிமாடச் செங்குன்றூரில் சிவஞானச் செம்மலார், அடியார்களுடன் தங்கியிருந்த 
காலத்துப் பனிக்காலம் வந்து விட்டது. அதனால் அடியார்கள் நளிர் சுரத்தினால் வருந்தினார்கள். 
பிள்ளையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். “இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு 
இயல்பாயினும் நமக்கு இந்தநோய் எய்தப்பெறா, நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும் 
அருந்துணை” என்று எண்ணி, “அவ்வினைக் கிவ்வினை” என்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, 
ஒவ்வொரு திருப்பாடல் இறுதியிலும் ‘செய்வினை தீண்டா திருநீலகண்டம்’ என ஆணைவைத்து 
அருளிச் செய்தார்கள். உடனே அடியார்களுக்கு மட்டுமன்றி அந்நாட்டிலேயே சுர நோய் 
தொலைந்தது. 
INTRODUCTION TO THE HYMN

116. COMMON

திருச்சிற்றம்பலம்

116. பொது - திருநீல்கண்டம்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

அவ்வினைக்கிவ்வினையாமென்றுசொல்லுமஃதறிவீர் 
உய்வினைநாடாதிருப்பதுமுந்தமக்கூனமன்றே 
கைவினைசெய்தெம்பிரான் கழல்போற்றுதும்நாமடியோம் 
செய்வினைவந்தெமைத்தீண்டப்பெறாதிருநீலகண்டம். 1

‘அவ் வினைக்கு இவ் வினை ஆம்’ என்று சொல்லும் அஃது அறிவீர்! 
உய்வினை நாடாது இருப்பது உம்தமக்கு ஊனம் அன்றே? 
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம்அடியோம்; 
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; - திருநீலகண்டம்!

பொருள்: ‘நாம் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்ம வினைகளுக்கு ஈடாகவே 
இப்பிறவியில் பிறந்து பிராரர்த்த வினையின்படி இன்பத்தையும் துன்பத்தையும் 
அனுபவிக்கின்றோம்' என்று சொல்லப்படுவதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? 
இவ்வினைகளில் இருந்து விடுதலை பெறும் வழியை நீங்கள் முயற்சி செய்து தேடாமல்
இருப்பது உங்களுடைய பெருங்குறை அல்லவா? நாம் அனைவரும் எவ்வித 
பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சிவப்பணிகளையும், திருத்தொண்டுகளையும் செய்து, 
சிவபெருமானின் திருவடியைப் போற்றுவோம். அப்படிச் செய்தால் சஞ்சித வினைகள்
அழிந்து விடும். இனிவரும் ஆகாமிய வினைகளும் நம்மை வந்து அணுகா. இது 
நீலகண்டனான சிவபெருமான்மீது கூறும் ஆணையாகும். (பிராரர்த்த வினையை இந்தப் 
பிறவியில் அவரவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அதை நீக்கமாட்டார்.

குறிப்புரை: நாம் முன் பல பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரர்த்தம் வந்தூட்ட 
இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத் தேடாதிருப்பது 
ஊனமல்லவா? கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம். நாம் செய்தவினை நம்மைத் தீண்டா: 
திருநீலகண்டம் என்கின்றது. அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது 
சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை -தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய 
சிவப்பணி. 
Oh you devotees! You yourself know well that your actions of former births are considered as the latent cause of the joys and sorrows. Then is it not your short comings for not to seek ways to get rid of the present suffering? Now I will advise you what to do. All of us are servitors of Lord Civan. Contemplate on Him; perform the four fold means to attain salvation such as Chariyai, Kiriyai etc., i.e., worship Lord Civa in the temple; do the rites, rituals and ceremonies as prescribed in the Aagamaas (Scriptures). Then perform service to Lord Civan as a selfless (abstemious) mendicant and worship His Holy Feet. If you do all these, with sincere devotion, I declare on oath on Civan, the holy dark blue-necked Lord, that our past karma will not affect us much.

காவினையிட்டுங்குளம்பலதொட்டுங்கனிமனத்தால் 
ஏவினையாலெயில்மூன்றெரித்தீரென்றிருபொழுதும் 
பூவினைக்கொய்துமலரடி போற்றுதும்நாமடியோம்  
தீவினைவந்தெமைத்தீண்டப்பெறாதிருநீலகண்டம். 2

காவினை இட்டும், குளம்பல தொட்டும். கனி மனத்தால், 
“ஏ வினையால் எயில்மூன்று எரித்தீர்" என்று, இருபொழுதும், 
பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும், நாம்அடியோம்; 
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; - திருநீலகண்டம்!

பொருள்: நாம் நந்தவனம், சோலை முதலியவற்றை வளர்ப்போம். குளங்கள் பலவற்றைத் 
தோண்டுவோம்.நல்லறங்கள் பலவற்றைச் செய்வோம். காலை மாலை இருபொழுதும் 
பூக்களைக் கொய்து, சிவபெருமானின் மலர்போன்ற திருவடிகளில் சாத்தி, கனிந்த 
அன்புள்ள மனதுடன், ‘கணை ஒன்றால் முப்புரங்களை எரித்தீரே' என்று போற்றுவோம். 
அவ்வாறு செய்து வந்தால் சிவனடியார்கள் ஆகிவிடுவோம். பழைய வினையான சஞ்சித
கர்மம் நம்மைத் துன்புறுத்தாது. இது நீலகண்டத்தின்மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த பெருமானே! நந்தவனம் வைத்தும், குளந்தோண்டியும், பூவெடுத்துக் கட்டி 
அணிவித்தும் போற்றுவோம். ஆதலால் தீவினை எம்மைவந்து தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. 
கா - சோலை. தொட்டும்- தோண்டியும். ஏ வினையாம் - அம்பின் தொழிலால். 
Oh ye devotees! Listen to me. We are all servitors of Lord Civan. Let us develop flower gardens and all kinds of flowering trees. Let us dig as many ponds as we can (for storage of rainwater). Let us devote ourselves to doing as many virtuous deeds as we can. Let us proclaim both in the morning and evening with sincere devotion “Oh Civa! You are the most skilful Lord with no parallel; You destroyed the three citadels of the Asuraas by one single shot". Let us pluck different kinds of fragrant flowers, and offer them at His flower like Holy Feet and worship Him. If you do this, I declare on oath on Civa, the holy dark blue-necked Lord, that our past karma will not affect us.

முலைத்தடமூழ்கியபோகங்களுமற்றெவையுமெல்லாம் 
விலைத்தலையாவணங்கொண்டெமையாண்டவிரிசடையீர் 
இலைத்தலைச்சூலமுந்தண்டுமழுவுமிவையுடையீர் 
சிலைத்தெமைத்தீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம். 3

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம், 
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்) 
இலைத்தலைச்சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் 
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா, - திருநீலகண்டம்!

பொருள்: பெண்ணாசை என்ற போகங்களிலும் மற்றும் பலவித ஆசைகளிலும் மூழ்கி 
அலைக்கழிக்கப்பட்டுப் போகாமல் எங்களைத் தடுத்து ஆட்கொண்ட விரிந்த
சடைப்பெருமானே! இலைவடிவான சூலம், தண்டாயுதம்,மழு ஆகியவற்றைப்
படைக்கலன்களாக உடையவரே! என்று சிவபெருமானைப் போற்றுவோம். ஆர்ப்பரித்து
வரும் பழைய வினையான சஞ்சித கர்மம் நம்மை துன்புறுத்தாது. இது 
நீலகண்டத்தின்மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: போகங்கள் எம்மைப் பற்றாவண்ணம் தடுத்தாண்ட பெருந்தகையீர்! சூலம் மழு 
இவற்றையுடையீர்! எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. விலைத்து அலையா வண்ணம்:
அடியேனை விலகச்செய்து அலையாவண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். விலைத்து - ஒலித்து 
விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம். 
Oh! Lord Civa! You are our revered Supreme Being, having expansive matted hair. You protected us from indulging in carnal and such other pleasures in worldly life; also you saved us from forgetfulness of Your Holy Feet and graced us. You are holding a trident and a battle-axe in your hands. Chanting thus, let us adore Him. Now I declare on oath that Thiru-neela-kandam (Lord Civan Himself) will protect us from the bad effects of our mountain like past karma.

விண்ணுலகாள்கின்றவிச்சாதரர்களும்வேதியரும் 
புண்ணிரென்றிருபோதுந்தொழப்படும்புண்ணியரே 
கண்ணிமையாதனமூன்றுடையீருங்கழலடைந்தோம் 
திண்ணியதீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம். 4

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், 
‘புண்ணியர்’ என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே! 
கண் இமையா தனமூன்றுஉடையீர்! உம் கழல் அடைந்தோம்: 
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; - திருநீலகண்டம்!

பொருள்: விண்ணுலகை ஆளுகின்ற வானோர்களும் வேதவிற்பன்னர்களும் ‘புண்ணிய 
வடிவமானவர்’ என்று இருவேளைகளிலும் உம்மைத் துதித்துத் தொழப்படும் புண்ணியரே! 
இமைத்தல் புரியாத முக்கண்களை உடையவரே! உமது திருவடிகளில் புகல் அடைந்தோம்!
எனப் போற்றுவோம். இப்படிச் செய்து வந்தால் வலிமையான சஞ்சித கர்மம் என்ற தீவினை 
நம்மைத் துன்புறுத்தாது. இது நீலகண்டத்தின்மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: வேதியரும், வித்தியாதரர்களும் புண்ணியர் என்று தொழும் புண்ணியரே! உம் கழல் 
அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்கின்றது. திண்ணிய தீவினை தீண்டப்பெறா 
என்றது இதுவரை நுகர்ந்த அளவிலேயே அமைவதாக, திருவருள் நோக்கத்தால் அவை மென்மையாயின 
ஆதலின் இங்ஙனம் கூறினார். 
A class of demigods who rule the world of the celestials. The illustrious Vedic scholars contemplate on you, and adore you both in the morning and in the evening and proclaim "Oh! You are the embodiment of virtue". We worship you. You have a third eye in you forehead which never flickers. We have surrendered at your Holy Feet, which is our refuge. If we adore the Lord in this way, the past strong bad karma will not approach us. This I declare on oath on Thiru-neela-kandam (Lord Civan).

மற்றிணையில்லாமலைதிரண்டன்னதிண்டோளுடையீர் 
கிற்றெமையாட்கொண்டுகேளாதொழிவதுந்தன்மைகொல்லோ 
சொற்றுணைவாழ்க்கைதுறந்துந்திருவடியேயடைந்தோம் 
செற்றெமைத்தீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம். 5

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! 
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? 
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; 
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா, - திருநீலகண்டம்!

பொருள்: எவர்க்கும் இணையில்லாத ஒப்பற்ற மலைபோலத் திரண்ட வலிமையான
தோள்களை உடைய பெருமானே! வலிமையுடன் உறுதியாக எம்மை ஆட்கொண்ட
பின்னரும், எமது குறையைக் கேளாது இருப்பது உமக்குப் பெருமை தருமோ? வெறும்
வாய்ச்சொற்கள் வாயிலாகத் 'துணை' என்று சொல்லப்படுகின்ற இல்லற வாழ்க்கைக்குச்  
சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் துறந்து,உம்முடைய திருவடிகளையே சரண் 
அடைந்தோம்.ஆகையால் பெரும் வருத்தத்தைத் தருகின்ற சஞ்சித கர்மம் என்ற 
தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது
நீலகண்டத்தின்மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: ஒப்பற்ற மலைபோல் திரண்ட தோளுடையீர்! எம்மையாட்கொண்டும் எம்குறையைக் 
கேளாதொழிவது பெருமையோ? எல்லாத் துணையையும்விட்டு உமது திருவடி அடைந்தோம். ஆதலால், 
எம்மைத் தீவினை தீண்டப்பெறா. திருநீலகண்டம் ஆணை என்கின்றது. மற்று - வேறு. இணை - ஒப்பு, 
கிற்று - வலிபடைத்து. சொல் துணை வாழ்க்கை - சொல்லப்படுகின்ற துணைகள் பலவற்றோடும் கூடிய 
வாழ்க்கை. செற்று - வருத்தி. எமது வினைகளை வெருட்டும் வலியுடையீர் என்று குறிக்க 
இணையில்லாத மலை திரண்டன்ன தோளுடையீர் என்று குறிப்பித்தது. எமக்கும் தேவரீர்க்கும் உள்ள 
தொடர்பு ஆட்கொள்ளப்பட்டதால் உண்டான ஆண்டானும் அடிமையுமான தொடர்பு அங்ஙனமிருந்தும் 
எமது குறையை நீரேயறிந்து நீக்க வேண்டியிருக்க, சொல்லியும் கேளாது ஒழிவதும் தன்மையோ என்றார். 
துணையென்று சொல்லப்படுகின்ற வாழ்க்கைகளைத் துறந்து உம் திருவடி அடைந்தோம் என்றது 
அகப்பற்றும் புறப்பற்றும் விட்டு உம்மைப் பற்றினோம் என்றது. தீவினை செற்றுத் தீண்டப்பெறா என்றது 
தீவினைகள் தீண்டுபவற்றைத் தடுத்தலாகாது ஆயினும் அவை வலியிழந்தனவாகத் தீண்டா என்று 
விளக்கியவாறு. கிற்று - கற்றல் பொருந்திய. 
Oh! Lord Civa! Your shoulders are strong and unparallelled like piled up consolidated mountain! With all Your might, You allowed us in Your midst and graced us. In spite of this, is it not inappropriate to Your dignity, not to listen to our pleadings. We quit all the assistance that are considered necessary to family life, and surrendered to Your Holy Feet, our refuge. If we adore Him like this the bad karma done by us in our past births will not come and affect us. This I declare on oath on Thiru-neela- kandam.

மறக்குமனத்தினைமாற்றியெம்மாவியைவற்பறுத்திப் 
பிறப்பில்பெருமான்றிருந்தடிக்கீழ்ப்பிழையாத வண்ணம் 
பறித்தமலர்கொடுவந்துமையேத்தும்பணியடியோம் 
சிறப்பிலித்தீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம். 6

மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்திப், 
பிறப்பு இல் பெருமான் திருந்து! அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், 
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; 
சிறப்புஇலித் தீவினை தீண்டப்பெறா; - திருநீலகண்டம்!

பொருள்: எமது மனமானது, உலக மாயையால் எம்மோடு ஒத்து வராமல், உம்மை மறக்கும் 
தன்மை வாய்ந்தது. மலமறப்பால் தடுமாறும் இந்த மனதை வைராக்கிய பயிற்சியால் மாற்றி, 
ஆன்மாவை ஒருமுகப்படுத்தி நெஞ்சில் மாசற்ற தன்மையை அடைந்தோம். பிறப்பற்ற 
தேவரீரின் திருவடிக்குப் பிழை ஏற்படாத வண்ணம், புதிதாகப் பறித்த மலர்களைக் கொண்டு 
உம்மைப் போற்றிப் பணி செய்து அடியவர்கள் ஆகிவிட்டோம். ஆகையால் சிறப்பற்ற 
சஞ்சித வினை என்ற தீவினை எங்களைத் தீண்டமாட்டா. இது நீலகண்டத்தின்மேல் கூறும் 
ஆணையாகும்.

குறிப்புரை: எம்மோடு ஒன்றி வராமல் மறுக்கும் தன்மைவாய்ந்த மனத்தையும் மாற்றி, உயிரை 
வற்புறுத்தித் தேவரீர் திருவடிக்குப் பிழை ஏற்படாத வண்ணம் மலர் கொண்டேத்தும் அடியோங்களைச் 
சிறப்பு இல்லாத இத்தீவினைகள் தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. மனத்திற்கு இயற்கை, 
பற்றியதை விட்டுப் பின் வேறொன்றைப் பற்றி, அதன் மயமாய், பற்றியதையும் மறந்துவிடுதல், அந்த 
நிலையை மாற்றி என்றார். வற்புறுத்தி - திருவடியையே பற்றிவிடாது நிற்றலின் வினையின் வழிநின்று 
மலமறைப்பால் தடுமாறும் ஆன்மாவை வற்புறுத்தி. சிறப்பில் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத் தீவினை. 
Are we not servitors of Lord Civan! Due to the illusion of this visible world, our minds forget virtuous deeds of contemplating on God; but He altered this way of our mind and directed it on the right path; the birthless noble God also changed the illusion caused to the perplexed soul by the three inherent evil passions and made us worship His Holy Feet. Then we adored and worshipped Him by offering Him freshly plucked flowers. Oh Lord! We declare that as Your servitors we did all these virtuous deeds. Hence, the evil karma done by us in our past births will not affect us. I declare this on oath on Thiru-neela-kandam.
7. Note: The seventh verse was not available.

கருவைக்கழித்திட்டுவாழ்க்கைகடிந்துங்கழலடிக்கே 
உருகிமலர்கொடுவந்துமையேத்து துநாமடியோம் 
செருவிலரக்கனைச்சீரிலடர்த்தருள்செய்தவரே  
திருவிலித்தீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம். 8

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே 
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்; 
செருஇல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே! 
திருஇலித் தீவினை தீண்டப்பெறா,; - திருநீலகண்டம்!

பொருள்: இனி வருகின்ற பிறவியை அறுத்து, உலக வாழ்க்கையை வெறுத்து, உமது 
திருவடியில் மனம் கரைந்து, நல்ல மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து போற்றி, உமது 
அடியவர்கள் ஆகிவிட்டோம். ஆணவத்தால் செருக்குற்ற அரக்கனான இராவணனை 
நெருக்கி, பின்னர் அவனுக்கு அருள்செய்த சிவபெருமானாரே! முற்பிறவிகளில் உம்மை 
வழிபாடு செய்யாததால் வந்த தீவினை எங்களைத் துன்புறுத்தக் கூடாது. இது 
திருநீலகண்டத்தின்மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் திருவடியை உருகிவழிபடும் எம்மைத் 
தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. ௧ரு - பிறவிமுதல். செருஇல் அரக்கன் - 
போரில்லாத இராவணன். திக்குவிஜயம் பண்ணிப் போரில்லாமையால் தருக்கிக் கயிலையை 
எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார். திருஇல் - சிவனடி வழிபடும் செல்வத்தையில்லாத. 
In this birth we renounced the worldly life; offered fresh fragrant flowers and surrendered at Your Holy Feet and became eligible for not to be born again in this world. Raavanan was a great warrior; there were none to oppose him; also all people praised him for his valour and other abilities. Oh Lord Civaa! You oppressed him for his folly and later when he repented, graced him. If we adore Lord Civan in this manner and melt, at heart, then the bad old karma of our past births which prevent our virtuous action of worshipping Lord Civan, will not affect us. This oath I declare on Thiru-neela-kantam.

நாற்றமலர்மிசைநான் முகன்நாரண ன்வாதுசெய்து 
தோற்றமுடைய அடியுமுடியந்தொடர்வரியா, | 
தோற்றினுந்தோற்றுந்தொழுதுவணங்குதும்நாமடியோம் 
சீற்றமதாம்வினைதீண்டப்பெறாதிருநீலகண்டம் 9

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து, 
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! 
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்; 
சீற்றம் அதுஆம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!

பொருள்: மணம் மிக்க தாமரை மலரில் விளங்கும் நான்முகனும் திருமாலும் தங்களுக்குள் 
தர்க்கம் செய்து, உமது அடியும் முடியும் அறியப்படாத தன்மையுடைய சிவபெருமானாரே! 
நீர் காணப்பெறினும் பெறுவீர்! உம்மைத் தொழுது வணங்கி உமது அடியவர்கள் 
ஆகிவிட்டோம். ஆகையால் கோபமுடைய சஞ்சித வினை என்ற தீவினை நம்மைத் 
துன்புறுத்தாது. இது நீலகண்டத்தின்மேல் கூறும் அணையாகும்.

குறிப்புரை: மலர்மேயவனும் திருமாலும் தங்களுக்குள் வாது செய்து, அடியும் முடியும் அறிய மாட்டாத 
தன்மையை உடையவரே! காணப்பெறினும் பெறுவீர், உம்மைத் தொழுது வணங்குவோம்; சீற்றமாகிய 
வினை எம்மைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம் என்கின்றது. நாற்றம் - மணம். தோற்றமுடைய - 
கட்புலனாகிய. சீற்றம் - கோபம். 
Are we not servitors of Lord Civa? Brahma seated in the fragrant lotus flower and Thirumaal argued with each other regarding as to who is superior in worldly greatness among them. They failed in their attempt to find out Your head and feet, though You then stood before them as a big column of fire. However You gave us your darshan. Oh! Devotees! Let us adore Him by recounting all these happenings and worship Him. If we do this, the dreadful past karma will not affect us. This oath I declare on Thiru-neela-kandam.

சாக்கியப்பட்டுஞ்சமணுருவாகியுடையொழிந்தும் 
பாக்கியமின்றியிருதலைப்போகமும்பற்றும்விட்டார் 
பூக்கமழ்கொன்றைப்புரிசடையீரடி போற்றுகின்றோம் 
தீக்குழித்தீவினைதீண்டப்பெறாதிருநீலகண்டம், 10

சாக்கியப்பட்டும், சமன் உருஆகி உடை ஒழிந்தும், 
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார். 
பூக்கமழ்கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; 
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா, - திருநீலகண்டம்

பொருள்: புத்தர்களும் ஆடையின்றித் திரியும் சமணர்களும் பாக்கியம் இல்லாதவர்கள். 
அவர்கள் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் கிடைக்கப்பெறாதவர்கள். நாம் 
சிவபெருமானாரை நோக்கி, மணமுள்ள பூக்களையும் கொன்றையையும் அணிந்த விரிசடை 
உடையவரே! உமது திருவடிகளைப் போற்றுகின்றோம், என்று கூறுவோம். அப்படிச் 
செய்து வந்தால் தீக்குழியைப் போன்று சுடுகின்ற சஞ்சித வினை என்ற தீவினை நம்மைத் 
துன்புறுத்தாது. இது நீலகண்டனின் மேல் கூறும் ஆணையாகும்.

குறிப்புரை: சாக்கியராயும் சமணராகியும் இருமையின்பமும் ஒழிந்தார்கள்; நாங்கள் நும் திருவடி 
போற்றுகின்றோம்; எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. இருதலைப் போகம் - இம்மை 
மறுமையின்பம். தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை. 
Are we not servitors of Lord Civa? Samanars who roam about naked and the Buddhists are not blessed people, to worship Lord Civan. They were also inefficient and unable to enjoy the blissfulness of this life or in the other life. Still worse is that they were unable to understand the ways and means to achieve blissfulness. Let us contemplate on and adore Him declaring "Oh Lord! You are having the most attractive matted hair adorned with fragrant cassia flowers! We adore Your Holy Feet". If you declare like this sincerely, your past bad karma burning like fire in a pit will not affect us. This oath I declare on Thiru-neela-kandam.

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன்கழலடைவான் 
இறந்த பிறவியுண்டாகிலிமையவர்கோனடிக்கண் 
திறம்பயில்ஞானசம்பந்தனசெந்தமிழ்பத்தும்வல்லார் 
நிறைந்த உலகினில்வானவர்கோனொடுங் கூடுவரே. 11

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், 
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் 
திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ்பத்தும் வல்லார் 
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

பொருள்: நாம் பிறப்பெடுத்த இந்தப் பிறவியிலேயே எமது செல்வராகிய சிவபெருமானின் 
திருவடிகளை வாணங்கி வழிபட்டு முத்திப்பேற்றை அடையலாம். ஒருவேளை பழவினைகள் 
அழியாமல் மீண்டும் பிறவி எடுத்திருந்தால், தேவர்களின் அரசனான சிவபெருமானின் 
பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் 
ஓதுவோம்.  இத்திருப்பதிகத்தைப் பொருளுணர்ந்து ஓத வல்லவர்கள் விண்ணுலகில் 
தேவர்களின் அரசனுடன் கூடி மகழ்ந்திருப்பார்கள்.

குறிப்புரை: எமது இறைவன் கழலடையப் பிறந்த இப்பிறவியில் சிவபெருமான் திருவடியைப் பேணி, 
மீட்டும் பிறவியுளதாயின், இம்மொழி பத்தும் வல்லார்கள் வானவர் கோளொடுங் கூடுவர் என்கின்றது. 
அடைவான் பேணி, வல்லார், பிறவியுண்டாகில் கோனொடுங் கூடுவர் என முடிக்க. 
Oh! Ye devotees! You are born as humans in this life. If you worship with devotion the Holy Feet of Lord Civa, you can obtain bliss. Or if it so happens that you are to be born again due to your karma, chant these ten verses of Gnaanasambandan who is a fully realised soul, about the divinity of the Holy Feet of Lord Civan who is the Chief of the Devaas. If you succeed in chanting these ten verses, you will join the head of the celestial and enjoy eternal bliss.

திருச்சிற்றம்பலம்

116ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
117. திருப்பிரமபுரம்

திருத்தல வரலாறு:

முதலாம் திருப்பதிகம் பார்க்கவும்.

பதிக வரலாறு:

வாக்கின் மன்னரை வழியனுப்பியபின் காழித்திருஞான சம்பந்தப் பிள்ளையார் மீண்டும் 
சீகாழியிற் புகுந்து, வேதவடிவாகிய திருத்தோணியில் வீற்றிருந்த விண்ணவர் பெருமானைப் 
பாடிப்பணிந்து, அங்கு எழுந்தருளியிருக்கின்ற நாளில், செந்தமிழ்ப் பாமாலையின் விகற்பங்களாகிய 
மொழிமாற்று, மாலைமாற்று, திருவியமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை 
முதலானவற்றை அருளிச் செய்து, திருப்பாணனாரும் இசைவடிவான மதங்கசூளாமணியாரும் 
இப்பதிகங்களை ஏழிசைபற்றிப் பாடச் சீகாழியில் எழுந்தருளியிருந்தார்கள். 
117. THIRU-P-PIRAMA-PURAM

HISTORY OF THE PLACE
            See First Hymn.

INTRODUCTION TO THE HYMN
            See Hymns 1, 6 & 90.

திருச்சிற்றம்பலம் 
117: திருப்பிரமபுரம்

பண் :  வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்  

காடதணிகலங்காரரவம்பதிகாலதனில் 
தோடதணிகுவர்சுந்தரக்காதினிற்றூச்சிலம்பர் 
வேடதணிவர்விசயற்குருவம்வில்லுங்கொடுப்பர் 
பீடதணிமணிமாடப்பிரமபுரத்தாரே. 1

காடுஅது, அணிகலம் கார்அரவம், பதி; கால்அதனில், - 
தோடுஅது அணிகுவர் சுந்தரக்காதினில், - தூச் சிலம்பர்; 
வேடுஅது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்; - 
பீடுஅது அணி மணி மாடப் பிரமபுரத்தாரே.

பொருள்: அழகு மிகுந்த மாடவீடுகளைக் கொண்ட பெருமை மிக்க பிரமபுரத்தில்
சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் கொடிய விடம் கொண்ட அரவத்தை 
ஆபரணமாகக் கொண்டவர். சுடுகாட்டை இருப்பிடமாக உடையவர். அழகிய காதில் தோடு
அணிந்தவர். திருப்பாதத்தில் சிலம்பு அணிந்தவர். வேடுவர் உருவம் கொண்டு
அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அளித்தவர். இப்பெருமானைப் போற்றித் 
தொழுவோமாக.

குறிப்புரை: மொழிமாற்று என்பது பொருள்கோள்வகையுள் ஒன்று. பொருளுக்கு ஏற்பச் சொல்லைப் 
பிரித்து முன்பின் கூட்டிக் கொள்வது. பிரமபுரத்தவர் காட்டைப் பதியாகக் கொள்ளுவர். அரவத்தை 
அணிவர். அழகிய காதில் தோடு அணிவர். காலில் சிலம்பணிவர். வேடுருவந்தாங்கி விசயற்குப் 
பாசுபதாஸ்திரம் அளிப்பர் என்கின்றது. காடது பதி. அணிகலம் காரரவம். காலதனில் தூச்சிலம்பர் 
சுந்தரக் காதினில் தோடது அணிகுவர் எனப் பிரித்துக் கூட்டுக. பீடம் - மேடை 
Lord Civan is enshrined in Thiru-p-pirama-puram (another name of Seekaazhi) where residential mansions are superb and embedded with many valuable gems. This Lord prefers to occupy the cremation ground also. He wears the black serpent as His jewellery. In His leg He wears the pure and sonorous ankle rings. In His elegant ear He wears the ola roll. He took the form of a hunter and gifted the divine bow and arrow weapon called Paasupatham to Arjun. Worship this Lord.

கற்றைச்சடையதுகங்கணமுன்கையிற்றிங்கள்கங்கை 
பற்றித்துமுப்புரம்பார்படைத்தோன்றலைசுட்டதுபண் 
டெற்றித்துப்பாம்பையணிந்ததுகூற்றையெழில்விளங்கும் 
வெற்றிச்சிலைமதில்வேணுபுரத்தெங்கள்வேதியரே. 2

கற்றைச்சடையது, கங்கணம் முன்கையில் - திங்கள் கங்கை; 
பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்; 
எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; - எழில் விளங்கும் 
வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.

பொருள்: கருங்கல்லால் எழில் மிகுந்த வெற்றித் திருமதில்களை உடைய வேணுபுரம் 
என்னும் சீகாழியில் வேதநாயகரான எங்கள். சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 
இப்பெருமான் சடைமுடியில் சந்திரனையும் கங்கையையும் தரித்தவர். முன்கையில் பாம்பை
கைவளையலாக அணிந்தவர்.முப்புரங்களை எரித்தவர். உலகத்தைப் படைக்கும் 
தொழிலை உடைய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தவர். முற்காலத்தில் 
மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனைக் காலால் உதைத்தவர். 
இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக,

குறிப்புரை: வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும், முன்கையிற் கங்கணமாக
அணிந்தது பாம்பு கையில் பற்றியது பிரமன் தலை. சுட்டது முப்புரம் என்கின்றது. பண்டு கூற்றை 
எற்றித்து என மொழிமாற்றிக் காண்க. பற்றித்து எற்றித்து என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரு. 
எற்றித்து - உதைத்து: 
Our Lord Civan founder of Vedas is enshrined at the temple inside the This city is encircled by victorious and imposing holy walls Venupuram city. In His thick collection of matted hair, He constructed with black granite stones. accommodates the crescent moon and the river Ganges. In His fore-arm He wears the serpent as bracelet. He holds in one of His hands the skull of Brahma who is the creator of this world, and uses it as His begging bowl. He burnt down the three citadels of Asuraas. Long ago He kicked Yaman to death to save Maarkandēyan. He wears a snake as jewellery in His body. Worship this Lord.

கூவிளங்கையதுபேரிசடைமுடிக்கூட்டத்தது 
தூவிளங்கும்பொடிப்பூண்டதுபூசிற்றுத்துத்திநாகம் 
ஏவிளங்குந்நுதலாளையும்பாகழுரித்தனரின் 
பூவிளஞ்சோலைப்புகலியுள்மேவியபுண்ணியரே.  3

கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது; 
தூ விளங்கும் பொடிப், பூண்டது, பூசிற்று, துத்திநாகம்; 
ஏ விளங்கும் நுதலாளையும், பாகம் உரித்தனர்; - இன் 
பூ இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

பொருள்: இனிய பூக்கள் நிறைந்த இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலி என்னும் 
சீகாழியில் புண்ணியரான சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் 
சடைமுடியில் வில்வத்தை அணிந்துள்ளார். கையில் பேரி என்னும் தோற்பறையைக் 
கொண்டுள்ளார். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியுள்ளார். படப் 
பொறிகளோடுகூடிய நாகத்தை அணிகலனாகப் பூண்டுள்ளார். வில்போன்று வளைந்த 
நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டுள்ளார். யானைத்தோலை 
உரித்துப் பூண்டுள்ளார். இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது. பேரி கையது. தூவிளங்கும் பொடி பூசிற்று. துத்தி நாகம் 
பூண்டது என மொழிமாற்றிப் பொருள் கொள்க. கூவிளம் - வில்வம். பேரி - உடுக்கை. தூ - தூய்மை. 
பொடி - விபூதி. துத்தி - படப்பொறி. ஏவிளங்குதல் - வில்போல் விளங்கும் நெற்றியை உடையாள் 
என்றது உமாதேவியை, ஏ என்றது ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று. உரித்தனர் - தோலைத் 
தனியாக உரித்துப் பூண்டனர். புகலி - சீகாழி. 
The righteous Lord Civan wearing Bael leaves in His thick matted hair is enshrined at the temple inside the Pukali town. This town is encircled by blooming man made groves full of attractive flowers. He holds in one of His hands the battle drum made of leather. He smeared His body with immaculate holy ashes. He wears the hooded serpent as His jewellery. He accommodates His consort Umaa Devi on the left half of His body whose forehead is charming like a bent bow with an arrow. Worship this Lord.


உரித்ததுபாம்பையுடல்மிசையிட்டதோரொண்களிற்றை 
எரித்ததொராமையையின்புறப்பூண்டதுமுப்புரத்தைச் 
செருத்ததுசூலத்தையேந்திற்றுத்தக்கனைவேள்விபன்னூல் 
விரித்தவர்வாழ்தருவெங்குருவில்வீற்றிருந்தவரே. 4

உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை; 
எரித்தது, ஒர் ஆமையை இன்புஉறப் பூண்டது, முப்புரத்தைச்; 
செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; - பல்-நூல் 
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே.

பொருள்: பலவேத நூல்களைக் கற்றுணர்ந்த சான்றோர்கள் வாழ்கின்றதும் மரங்கள் 
சூழ்ந்ததுமான வெங்குரு என்னும் சீகாழியில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். 
இப்பெருமான் ஒப்பற்ற யானையின் தோலை உரித்தவர். பாம்பைத் தன் திருமேனியில்
அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கன் 
வேள்வியில் வெகுண்டவர். சூலத்தை கையில் ஏந்தியவர். இப்பெருமானைப் போற்றித் 
தொழுவோமாக.

குறிப்புரை: பாம்பை உடல்மிசையிட்டது. ஓர் ஒண் களிற்றை உரித்து. ஆமையை இன்புறப் பூண்டது. 
முப்புரத்தை எரித்தது. சூலத்தை ஏந்திற்று. தக்கனை வேள்வி செருத்தது எனக் கூட்டுக. களிறு - 
யானை. செருத்தது - வருத்தியது. பன்னூல் விரித்தவர் - பல நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர். 
Lord Civan is enshrined in Venguru (One of the names of Seekaazhi) where Vedic scholars who have deeply learned the Vedas and other scriptures do live in this city in large numbers. He skinned the exhilarated elephant. He decorates His body with serpent; He burnt the three citadels of Asuraas. He feels happy to wear tortoise skull on His body. He got wild with Thakkan for performing an undesirable ritual sacrifice. He holds the trident in one of His hands. Let us go and worship this Lord.

கொட்டுவரக்கரையார்ப்பதுதக்கைகுறுந்தாளன 
விட்டுவர்பூதங்கலப்பிலரின்புகழென்புலவின் 
மட்டுவருந்தழல்சூடுவர்மத்தமுமேந்துவர்வான் 
தொட்டுவருங்கொடித்தோணிபுரத்துறைசுந்தரரே. 5

கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன 
இட்டுவர் பூதம், கலப்புஇலர், இன்புகழ், என்பு; உலவின் 
மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும் ஏந்துவர்; - வான் 
தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.

பொருள்: வானத்தைத் தொடுமாறு உயர்ந்த கொடித் தோரணங்களை உடைய தோணிபுரம் 
என்ற காழியில் சுந்தரரான சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இப்பெருமான் தக்கை 
என்னும் பறையைக் கொட்டுபவர். சங்கு மணியை அரையில் கட்டியிருப்பவர். குறுகிய 
பாதங்களை உடைய பூதகணங்களின் இனிய புகழை ஏற்பவர். கலப்பில்லாத 
வெண்மையான உடம்பினர். ஊமத்தம் பூவையும் சூடுபவர். உலகத்தை அழிக்குமாறு வரும் 
அக்கனியைக் கையில் ஏந்தியிருப்பவர். இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: வான்தொட்டு வருங்கொடித் தோணிபுரத்துறை சுந்தரர் மத்தம் சூடுவர். அக்கு 
அரையார்ப்பது; தக்கை கொட்டுவர். குறுந்தாளன பூதம் இன்புகழ் விட்டுவர். என்பு கலப்பிலர்.
உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர் எனக்கூட்டிப் பொருள் காண்க. அக்கு - சங்கு மணி. தக்கை - ஒரு 
வாத்தியம். உலவின் மட்டு வருந்தழல் - உலகத்தை அழிக்குமளவு வரும் காலாக்கினி. 
Lord Civa, our handsome god is enshrined in Thonipuram (One of the names of Seekaazhi) where the tall flags fixed on the mansions reach upto the sky. He beats the drum called tabour. He wears around His waist an ornament of small conches. He has an army of dwarfs with narrow feet from whom He accepts praise on Him. In His matted hair He wears the datura flowers along with the garland of skulls. He holds in one of His hands the destructive fire that prevails at the dissolution of the universe (Kaalaakkini; Kaalath-thee). Ye devotees!go and worship this Lord Civan.

சாத்துவர்பாசந்தடக்கையிலேந்துவர்கோவணந்தங் 
கூத்தவர்கச்சுக்குலவிநின்றாடுவர்கொக்கிறகும் 
பேர்த்தவர்பல்படைபேயவைசூடுவர்பேரெழிலார் 
பூத்தவர்கைதொழுபூந்தராய்மேவியபுண்ணியரே. 6

சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம் 
கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்குஇறகும், 
பேர்த்தவர் பல்படை பேய்அவை, சூடுவர்; பேர் எழிலார் - 
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

பொருள்: தவமுனிவர்கள் பூக்களைத் தூவி கையால் தொழும் பூந்தராய் என்னும் சீகாழியில் 
புண்ணியரான சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் கோவணம் உடுத்தவர்.
இடுப்பில் கச்ச (உடை) அணிந்து ஆடுபவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். 
பெரிய படைக்கலனை கையில் ஏந்தியிருப்பவர். வெண்மையான கொக்கிறகையும்
சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடிபெயர்த்து ஆடல் செய்தவர்.
பேரழகினை உடையவர். இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: தவர் பூ கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியர் பாசம் தடக்கையில் ஏந்துவர்; கோவணம் 
சாத்துவர்; தம்கூத்தவர்;கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்; பல்படைபேய் போர்த்தவர்;
பேர் எழிலார் எனக் கூட்டுக. கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில் கச்சு விளங்க நின்றாடுவர். குலவி; 
குலவ எனத் திரிக்க. போர்த்தவர் - அடி பெயர்த்தாடல் செய்தவர். 
Lord Civa, the righteous Supreme is enshrined in Poontha-rai (One of the names of Seekaazhi) where ascetics strew flowers at the Holy Feet of Lord Civan and worship Him with their hands folded. He wears the fore-lap cloth. In His long hand He holds the noose. He dances in His own special dance pose, wearing the girdle around His waist. He adorns His head with the white flower known as Kokku- irahu or Kokkumantharai. He decrees His army of various types of goblins to dance in precise movements. Ye! Devotees go and worship this most handsome Lord.

காலதுகங்கைகற்றைச்சடையுள்ளாற்கழற்சிலம்பு 
மாலதுவேந்தல்மழுவதுபாகம்வளர்கொழுங்கோட் 
டாலதுவூர்வரடலேற்றிருப்பரணிமணிநீர்ச் 
சேலதுகண்ணியொர்பங்காசிரபுரமேயவரே. 7

காலது, கங்கை கற்றைச்சடையுள்ளால், கழல் சிலம்பு; 
மாலது, ஏந்தல் மழுஅது, பாகம்; வளர் கொழுங் கோட்டு 
ஆல்அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; - அணி மணிநீர்ச் 
சேல்அதுகண்ணி ஓர்பங்கர் சிரபுரம் மேயவரே.

பொருள்: அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல் மீன் போன்ற கண்களையும் உடைய 
உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய் சிவபெருமான் சிரபுரம் என்னும் காழியில் 
விரும்பி எழுந்தருளி உள்ளார். இப்பெருமான் கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். 
அடர்த்தியான சடையில் கங்கையைக் கொண்டிருப்பவர். திருமாலைப் பாகமாகக் 
கொண்டிருப்பவர். கையில் மழு ஏந்தியிருப்பவர். வளர்ந்த செழுமையான கிளைகளைக் 
கொண்ட ஆலமரத்தின் கீழ் வீற்றிருப்பவர். இடபத்தில்ஏறி ஊர்ந்து செல்பவர். 
இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: அணிமணி நீர்ச்சேலது கண்ணி ஓர் பங்கர் சிரபுரம் மேயவர் காலது கழல் சிலம்பு. கற்றைச் 
சடை உள்ளால் கங்கை. மாலது பாகம். ஏந்தல் மழுவது, வளர் கொழுங் கோட்டு ஆலது இருப்பர். அடல் 
ஏறு ஊர்வர் என மொழி மாற்றுக. கோடு - மேருமலைத் தென்சிகரம் ஆலது, சேலது என்பனவற்றுள் அது 
பகுதிப் பொருள் விகுதி. 
Lord Civan concorporates His consort Umaa Devi on the left half of His body, whose eyes are good looking and bears the colour of sapphire gem and quakes like carp fish and enshrined in Chirapuram (One of the names of Seekaazhi). He wears in His left leg the tinkling anklet and the warrior's ankle ring in His right leg. He accommodates the river Ganges in His matted hair. At the request of  Thirumaal He agreed to accommodate Him in half of His body occasionally whenever He goes out to fight. He carries the battle axe in one of His hands. He sits under the banyan tree having dense branches (while instructing disciples). He moves about in His vehicle the victorious bull. Go and worship this Lord.

நெருப்புருவெள்விடைமேனியரேறுவர்நெற்றியின்கண் 
மருப்புறுவன்கண்ணாதாதையைக்காட்டுவர்மாமுருகன் 
விருப்புறுபாம்புக்குமெய்த்தந்தையார்விறல்மாதவர்வாழ் 
பொருப்புறுமாளிகைத்தென்புறவத்தணிபுண்ணியரே. 8

நெருப்புஉரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின்கண், 
மருப்புஉருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர், மா முருகன் 
விருப்புஉறு, பாம்புக்கு மெய், தந்தையார்; - விறல் மா தவர் வாழ் 
பொருப்பு உறு மாளிகைத் தென்புறவத்து அணி புண்ணியரே.

பொருள்: பெருமை மிக்க சிறந்த தவமுனிவர்கள் வாழ்வதும், மலை போன்ற உயர்ந்த 
மாளிகைகள் உடையதுமான அழகிய புறவம் என்னும் சீகாழி நகருக்கு அணிசேர்க்கும் 
புண்ணியராக சிவபெருமான் விளங்குகின்றார். இப்பெருமான் நெருப்புப் போன்ற சிவந்த 
மேனியர். வெண்மையான விடைமீது ஏறிவருபவர். நெற்றியில் மூன்றாவது கண் ஒன்று 
உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்கு தந்தையார் ஆவர். பாம்பிற்கு தன்
மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக்குரிய முருகப் பெருமானுக்கு உகப்பான 
தந்தையார் ஆவர். இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: விறல் மாதவர் வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புறவத்து அணி புண்ணியர், நெருப்புரு 
மேனியர், வெள்விடை ஏறுவர். நெற்றியின் கண்ணார், மருப்புருவன் தாதை, மா முருகன் விருப்புறு 
தந்தையார், பாம்புக்கு மெய்(யைக்) காட்டுவர் எனக் கூட்டுக. மருப்பு உருவன் - கொம்பினை உடைய 
விநாயகப் பெருமான், தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை 
எனப் பொருள் கொள்க. இது உருபு பிரித்துக் கூட்டல். 
The magnanimous ascetic saints who perform many religious austerities live in Puravam in large numbers (One of the names of Seekaazhi) where the mansions are so tall and big that they look like mountain. For this beautiful city of Puravam, Civan, our Lord of benediction adds more glory by His presence there. His body appears red as fire. He rides on His White Bull and moves about. He has a third eye on His forehead. He is the father of elephant headed god Vinaayakar who has two tusks as his teeth. He gives room in His body to the snake and wears it. He is the joyful father of the pre-eminent god Murugan. Go and worship this Lord Civan.

இலங்கைத்தலைவனையேந்திற்றிறுத்ததிரலையின்னாள் 
கலங்கியகூற்றுயிர்பெற்றதுமாணிகுமைபெற்றது 
கலங்கிளர்மொந்தையினாடுவர்கொட்டுவர்காட்டகத்துச் 
சலங்கிளர்வாழ்வயற்சண்பையுள் மேவியதத்துவரே. 9

இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள், 
கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமைபெற்றது; 
கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டுஅகத்து; - 
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

பொருள்: நீர் வளம் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பை என்னும் சீகாழிப் 
பதியில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் இலங்கைத் தலைவனான 
இராவணனை நெரித்து வலியிழக்கச் செய்தவர். கையில் மானை ஏந்தியவர். கலக்கத்தோடு 
வந்த யமனின் உயிரைக் கவர்ந்தவர். வாழ்நாள் முடிவுற்றதைக் குறித்துக் கலங்கிய 
மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வு அருளியவர். வாத்தியமாக இலங்கும் 
மொந்தை என்னும் தோல் கருவியைக் கொட்டுபவர். சுடுகாட்டில் ஆடுபவர். 
இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் மேவிய தத்துவர் இலங்கைத் தலைவனை இறுத்தது; 
இரலை ஏந்திற்று; கலங்கிய கூற்று குமை பெற்றது; இல் நாள் மாணி உயிர்பெற்றது. கலங்கிளர் 
மொந்தையின் கொட்டுவர்; காட்டகத்து ஆடுவர் எனக் கூட்டுக. இரலை - மான். இல்நாள்மாணி - 
வாழ்நாள் உலந்த மார்க்கண்டன், குமை பெற்றது - அளிந்தழிந்தது. 
Lord Civan is entempled in Chanbai city (One of the names of Seekaazhi) which abounds in rich fields full of water. He subdued king Raavanan of Sri Lanka by crushing him under His mount Kailas. He holds in one of His hands the young deer. He kicked Yama, the god of death to perish, who approached Maarkandeyan with a troubled mind. Though the life time was over for Maarkandēyan, Lord Civan blessed him and gave a further lease of life - Maarkandēya lead a new life, thereafter for an indefinite period. He beats the leather drum that opens at one end called Monthai . He used to dance in the burial ground. Ye devotees! go and worship Him.

அடியிணைகண்டிலன்தாமரையோன்மால்முடிகண்டிலன் 
கொடியணியும்புலியேறுகந்தேறுவர்தோலுடுப்பர் 
பிடியணியுந்டையாள்வெற்பிருப்பதோர்கூறுடையர் 
கடியணியும்பொழிற்காழியுள் மேயகறைக்கண்டரே. 10

அடிஇணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்; 
கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்; 
பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்; - 
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

பொருள்: நறுமணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிபுரம் என்னும் சீகாழிப் பதியுள் 
கறை பொருந்திய கண்டத்தை உடையவராகச் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். 
இப்பெருமானின் அடிமுடிகளைத் திருமாலும் தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமனும் 
கண்டிலர். இவரது கொடிமிசை இலச்சினையாகத் திகழும் இடபத்தை வாகனமாகக் 
கொண்டு அதன்மீது ஏறுபவர். புலித்தோலை உடுப்பவர். பெண் யானை போன்ற 
நடையினை உடைய உமையம்மையைத் தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டவர். 
இவரின் இருப்பிடமோ கயிலை மலையாகும். இப்பெருமானைப் போற்றித் 
தொழுவோமாக.

குறிப்புரை: கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டர் அடியினை மால் கண்டிலன்; 
தாமரையோன் முடிகண்டிலன்; கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர்; புலித்தோல் உடுப்பர்; பிடியணியும் 
நடையாள் கூறுடையர்; வெற்பு இருப்பது எனக் கூட்டுக. கடி - மணம். கொடியணியும் - கொடியை 
அலங்கரிக்கும். பிடி அணியும் நடையாள் - பெண் யானையை ஒத்த நடையினையுடைய பார்வதி. வெற்பு - 
கைலை. 
Lord Civan whose neck appears in dark blue colour like that of sapphire gem is entempled in Kaazhi Puram (one of the names of Seekaazhi) girt with fragrant flower filled natural groves. Thirumaal could not see the Holy Feet of this Lord Civan. Brahma who is seated in the lotus could not see His head and face. He desires to ride on His bull, with His flag whose insigne is also the bull. He wears the tiger skin in His waist. He embeds His consort Umaa Devi on the left half of His body frame, who walks majestically like a female elephant. His permanent place of residence is mount Kailas. Go and worship Him.

கையதுவெண்குழைகாததுசூலமமணர்புத்தர் 
எய்துவர்தம்மையடியவரெய்தாரொரேனக்கொம்பு 
மெய்திகழ்கோவணம்பூண்பதுடுப்பதுமேதகைய 
கொய்தலாபூம்பொழிற்கொச்சையுள்மேவியகொற்றவரே. 11

கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர்புத்தர், 
எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு, 
மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; - மேதகைய 
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

பொருள்: சிறந்தனவாகவும் கொய்யக் கொய்ய மீண்டும் மீண்டும் மலரும் அழகிய 
பொழில்களோடு சூழப்பட்டனவாயும் உன்ள கொச்சைவயம் என்னும் சீகாழி நகரின் 
பேரரசனாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் கையில் சூலமும் 
வலக்காதில் வெண்குழையும் உன்ளன. இப்பெருமானைச் சமணரும் புத்தர்களும் 
அடையமாட்டார்கள். ஆனால், எளிமையான அடியவர்கள் இவரை அடைவார்கள். 
பன்றியின் கொம்பை அவர் திருமேனியில் விளங்கப் பூண்பவர். அவர் கோவணம் உடுத்தவர். 
இப்பெருமானைப் போற்றித் தொழுவோமாக.

குறிப்புரை: கொய்து .அலர்பூம்பொழில் மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் கையது சூலம்; 
காதது வெண்குழை; அமணர் புத்தர் தம்மை எய்தார்; அடியவர் எய்துவர்; ஓர் ஏனக் கொம்பு மெய்திகழ் 
பூண்பது; கோவணம் உடுப்பது எனக் கூட்டுக. 
Our valiant Lord Civan is enshrined in Kochai Vayam (One of the names of Seekaazhi). This town is girt with natural groves, which yield fragrant and good-looking flowers, and keep on yielding them after repeated plucking. He holds the trident in one of His hands. He wears in His right ear the round ear ring. The Samanars and the Buddhists could not approach Him. But His devotees can reach Him easily. He wears on His body very conspicuously the tusk of the hog. He wears the fore-lap cloth on His loins. Go and worship this Lord Civan.

கல்லுயர்கழுமலவிஞ்சியுள்மேவியகடவுள்தன்னை 
நல்லுரைஞானசம்பந்தன்ஞானத்தமிழ்நன்குணரச் 
சொல்லிடல்கேட்டல்வல்லோர்தொல்லைவானவர்தங்களொடுஞ் 
செல்குவர்சீரருளாற்பெறலாஞ்சிவலோகமதே. 12

கல் உயர் கழுமலம் விஞ்சியுள் மேவிய கடவுள் தன்னை 
நல்உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச் 
சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லைவானவர்தங்களொடும் 
செல்குவர்; சீர் அருளால் பெறல்ஆம் சிவலோகம்அதே.

பொருள்: கல்லால் ஆன உயர்ந்த மதில்களை உடைய கழுமலம் என்னும் சீகாழியில் 
எழுந்தருளிய சிவபெருமானை, ஞானசம்பந்தன் நல்லுரைகளால் போற்றிப் பாடினார். 
கடவுள் ஞானத்தை உணர்த்தும் தமிழால் நன்கு உணரச் சொல்லிய இத்திருப்பதிகத்தைச் 
சொல்லவும் கேட்கவும் வல்லவர்கள். தொன்மையாக விளங்கும் தேவர்களுடன் அமருலகம் 
சென்று லோகத்தைப் பெறுவர்.

குறிப்புரை: கழுமலநகர்க் கடவுளை ஞானசம்பந்தன் சொன்ன ஞானத்தமிழ் நல்லுரைகளைச் சொல்லவும் 
கேட்கவும் வல்லார் தேவரோடு சிவலோகம் பெறுவர் என்கின்றது. புண்ணியஞ் செய்வது தேவராய்ப் 
பதவியில் நிற்பாரை விலக்கத் தொல்லை வானவர் என்றருளினார். இப்பதிகம் கட்டளைக் 
கலித்துறையாதலின் இப்பாடல் முதலடி, ‘கல்லுயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுடன்னை' என்றிருந்து 
சிதைத்திருக்கலாம் என்பர் தி. வே. கோ.

திருஞானசம்பந்தருடைய பதிகங்களில், அனேகமாக 8, 9, 10ஆம் பாட்டுக்களில் முறையே 
இராவணனையும், திருமால் - பிரமனையும், சமணர் - புத்தர்களையும் குறிப்பிட்டுள்ளார். 11ஆவது பாட்டு 
திருக்கடைக்காப்பு என்று சொல்லப்படும் பதிகத்தின் பலனைக் குறிக்கும். ஆக மொத்தம் ஒவ்வொரு 
பதிகத்திலும் 11 பாட்டுக்களே இருக்கும். ஆனால் இந்த 117ஆவது திருப்பிரமபுரம் என்னும் பதிகத்தில் 
மேலே சொல்லப்பட்ட அமைப்பு இல்லை. மொத்தம் கூடுதலாக 12ஆவது பாட்டும் அமைந்துள்ளது. 
Lord Civan is enshrined in the temple having tall walls. Gnaanasambandan sang these divine verses in wisdomful Tamil on Lord Civan of this place. Those efficient scholars who can understand well these verses and recite and/or hear them will accompany the good old Devas to the place of the celestial and finally reach the world of Lord Civa.

Note: This hymn has got 12 verses as against the normal 11 verses which may be taken note of.

திருச்சிற்றம்பலம்

117ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
118. திருப்பருப்பதம்

திருத்தல வரலாறு:

திருப்பருப்பதம் என்ற திருத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. வடநாட்டுத் தலம் 
ஐந்தனுள் ஒன்று. சென்னையில் இருந்து நந்தியால் வரை புகைவண்டியில் சென்று ஆத்மகூர் 
வழியாகப் பேருந்தில் செல்லலாம். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலப் பேருந்து நேரே 
ஸ்ரீசைலம் (திருப்-பருப்-பதம்) செல்கிறது. இத்தலம் பன்னிரு சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. 
மல்லிகார்ச்சுனம் எனப் பெயர் பெறுவது. இத்தலம் திருப்பருப்பதம் எனவும், ஸ்ரீசைலம் எனவும் 
வழங்கும். அருச்சுன க்ஷேத்திரங்கள் மூன்றனுள் இது ஒன்று. திருநந்திதேவர் இறைவனைத் 
தாங்க மலையுருவாகத் தவஞ்செய்த தலம். இத்தலத்திற்குச் செல்லும் வழி மிகக் கடினமானது. 
இதனைச் சுந்தரமூர்த்தி தேவாரம் ‘செல்லல் உறவரிய சீபருப்பதமலை’ என்று எடுத்துக் 
காட்டுகிறது. சுவாமி பருப்பத நாயகர். இறைவி பருப்பத நாயகி. தீர்த்தம் பர்வதீர்த்தம்.

கல்வெட்டு:

விஜய நகர அரசனான வீரப்பிரதாப வீரநரசிங்கராயன் இங்கு வந்து வழிபட்டு இருக்கிறான். 
ஒரு பருவதையன் என்பானும் அவன் மனைவியும் இங்கு வந்து ‘சித்தபுரம்’ என்னுமிடத்தில் ஒரு 
குளம் வெட்டி நந்தவனம் அமைத்தனர். கிருஷ்ண தேவராயனுடைய மந்திரியான சந்திரசேகர 
அமாத்யா என்பவன் கல்யாண மண்டபத்தைக் கட்டிப் பொற்கலசம் ஸ்தாபித்தான். மல்லிகார்ச்சுன 
கோயிலுக்கு முன்புறத்தில் ஒருமண்டபங் கட்டினான். நந்தீசுவரத்திற்கும், பிருங்கீசுவரத்திற்கும் 
பொன்னாலேயே திருவுரு அமைத்துக் கொடுத்தான். அந்த மண்டபத்தில் தமராசா என்பவன் 
கிருஷ்ண தேவராயர் சந்திரசேகர அமாத்யா இவர்களுடைய கற்சிலைகளை அமைத்தான். 
கோயில் செலவுகளுக்காகச் சிவபுரம் என்னும் ஊரைத் தானமாக வழங்கினான். 
பொற்கிண்ணமும், வெள்ளிப்பிடமும் அளித்தான். நந்தியைப் பிரதிட்டை செய்து அதற்கு 
முன்பக்கத்தில் பொற்றூண் ஒன்றை நிறுவினான். வீரப்பிரதாப அச்சுதராயன் காலத்தில் மல்லப்ப 
நாயுடு என்பவன் பிரமராம்பா அம்மைக்கு ஒரு மணியும் சரிகையாடையும் அளித்தான். விஜயராய 
மகாராயன் மகளும், பாண்டிய பெருமாள் தேவனின் மனைவியுமாகிய லெட்சம்மாள்ஜி ஆயி 
என்பவள் தினசரி ஐந்து ஜங்கமர்களுக்கு உணவளிக்க நிலம் வழங்கினாள். சாளுவ அரசனான 
பதமல்லப்பன் ஒரு குளம் வெட்டியிருக்கிறான். காகதீய அரசனான பிரதாப ருத்திர தேவ மகாராஜ் 
காலத்தில் அவனுடைய முதல் மந்திரி உச்சிக்கால வழிபாட்டிற்காக கமநாட்டில் நிலம் வழங்கி 
இருக்கிறார். ஜனமாதா மண்டபத்திற்கு அருகில் ஒரு கோயிலையும் கட்டி இருக்கிறார். அன்னப்ப 
ஐயன் என்பவன் மல்லிகார்ச்சுன தேவர்க்கும் பிரமராம்பா தேவிக்கும் நைவேத்திய நிவந்தங்களை 
அளித்ததோடு முகமண்டபங் கட்டுவித்தான். தென்னண்டை மதில் பிராகாரத்தைப் 
பழுதுபார்த்தான். இரும்புத் தூண்களை நிறுத்தித் தெற்குக் கோபுரத்தையும் பழுதுபார்த்தான். 
பயிராகிஸந்தகி என்பவன் தன் மனைவியின் பெயரால் பூந்தோட்டத்திற்கு நிலம் அளித்துள்ளான். 
இவை யன்றி நந்திநாதா், பிருங்கிநாதர் முதலியவர்களை வழிபடுகிறவர்களுக்கு வீடுகள் கட்டி 
அளித்த செய்தியும், செங்கையன் என்பார் சந்தனக்கல் வைத்ததும் அறியப் பெறுகின்றன. பிரதான 
கங்கைக்கு இரண்டாம் விதரிசுரனின் மனைவியான கடம்ப வித்தலம்பா படிக்கட்டு கட்டினாள். 
வித்தலேசுவரருக்கு ஒரு உருவச்சிலை வழங்கினாள். இந்தத் தருமங்களைச் செய்ய இறைவன் 
அவளுக்கு கனவில் வந்து அருளியதாகக் குறிப்பிடுகிறாள். மேலும் சந்திரசேகரன் வீரபத்திர 
தேவர் கோபுரத்தையும், தூண்களையும், பொற் கலசங்களையும் அமைத்திருக்கிறான். உதயகிரி 
அப்பனையங்காரு நந்தித் தூணில் இருந்து துர்க்காதேவி கோயில் வரையில் படிக்கட்டுக்களைக் 
கட்டுவித்தான். கொண்டபட்டி என்பவன் கோயில் முழுமையும் புதுப்பித்திருக்கிறான். 
இவையன்றிப் பல அன்பர்கள் பொற்றூண்கள் அமைத்தும் படிக்கட்டமைத்தும், முகமண்டபம் 
கட்டியும் பணி செய்தார்கள் என்று தெரிகிறது.

பதிக வரலாறு:

திருப்பருப்பதம் என்னும் திருத்தலமானது வடஇந்தியாவில் அமைந்துள்ள தலம் ஆகும். 
ஸ்ரீசைலம் என்று வழங்கப்படுகிறது. சக்தி மடமாக உள்ளது. பூகயிலாயம்: எனவும் 
வழங்கப்பெறுகின்றது. மருத மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று. அவற்றுள் 
இத்தலம் மல்லிகார்ச்சுனம் எனப்படும். மற்ற இரண்டும்,

1. திருவிடை மருதூர் - மத்தியார்ச்சுனம்

2. திருப்புடை மருதூர் - புடார்ச்சுனம்.

இது சிலாத முனிவர் தவம் செய்த திருத்தலம். நந்தி தேவர் தவம் செய்து வாகனப் பேறு 
பெற்றார். அவரே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்பது வரலாறு. 
பன்னிரு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று இத்திருத்தலம். ஏனைய 11 ஜோதி லிங்கங்கள் கீழே 
கொடுக்கப்பட்டுள்ளன.

1. சோமநாதம் - குஜராத் மாநிலம்

2. உச்சயினி - . மத்தியப் பிரதேசம் 
3. ஓங்காரம் - மத்தியப் பிரதேசம் 
4. வைத்தியநாதம் - மகாராட்டிரம்

5. பிமசங்கரம் - மகாராட்டிரம்

6. இராமேஸ்வரம் - தமிழ்நாடு

7. விஸ்வேசம் (காசி) - உத்தரப்பிரதேசம்

8. திரயம்பகம் - மகாராட்டிர மாநிலம் 
9. கேதாரம் - உத்தரப்பிரதேசம் 
10. குஸ்மேசம் - மகாராட்டிர மாநிலம் 
11. நாகேசம் - மகாராட்டிர மாநிலம்

இத்தலத்தில் உள்ள சுவாமி பருப்பத நாயகர்; மலைமீது வீற்றிருக்கின்றார். இவருக்கு 
மல்லிகார்ச்சுனர் என்ற வேறொரு பெயரும் உண்டு. அம்பாள் பெயர் பருப்பத நாயகி மற்றும் 
பிரமராம்பிகை ஆகும். இத்தலத்தின் தல மரம் மருதமரம் மற்றும் திரிபலா ஆகும். பர்வத தீர்த்தம் 
இங்குள்ள தீர்த்தம் ஆகும்.

திருஞானசம்பந்தர், திருக்காளத்தி மேவி ஈசனைப் பாடிப்பரவி மகிழ்ந்து, ஆங்கிருந்தவாறே, 
திங்கள் புனை முடியார் தம், தலம்தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போலக் குலவு 
திருப்பருப்பதத்தின் கொள்கை பாடினார் என்பது சேக்கிழார் வாக்கு.

கூற்றுதைத்தார் வீற்றிருக்கும் திருக்கோகரணம் பாடி எழுந்தருளிய பிள்ளையார்
திருப்பருப்பதத்தை அடைந்து ‘சுடுமணி யுமிழ் நாகம்’ என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடிப் பர்வத 
நாயகரைப் பரவினர். 
HISTORY OF THE PLACE

118. THIRU-P-PARU-P-PATHAM

This sacred place is in the Andhra Pradesh state and is one of the five in the Northern Country. It can be reached either directly by the Andhra Pradesh State buses from Chennai, or by taking the train from Chennai to Nandyaal from where buses ply via Aathmakoor. The place is known as Sreesailam and also as Mallikaarch-chunam.
God is known as Paruppadhanaayakar and Goddess as Paruppadhanaayaki. The sacred ford is Parvatha Theerththam..

This is one of the twelve 'Jyothirlinga' temples as well as one of the three 'Aruchchuna' temples. Thiru Nandhi Thevar performed thavam in order to get the form of a mountain for the privilege of supporting the Lord. The path leading to this temple used to be difficult in those days. Now buses are plying upto the temple.

The information gathered from the inscriptions is as follows: The Vijayanagaram king Veerappirathaapa Veeranarasinga Raayan has offered worship here. One Paruvadhaiyan and his wife dug a pond and set up a flower garden here. A minister of Krishnadheva Raaya, Chandhirasekara Amaathyaa, built a Kalyaana Mandapam with golden finials and another Mandapam in front of the main shrine. He also had icons made in gold for Nandheesuvarar and Birungeesuvarar. One Thamaraasaa had stone portraits of Krishnadheva Raayaa and Chandhirasekara Amaathyaa sculpted in the mandapam. He also gifted a village, Sivapuram, for temple expenses, besides the grant of a golden bowl and silver seat. He also installed a Nandhi and erected a golder pillar in front of that. During the reign of Veerappirathaapa Achchutha Raayan, one Mallappa Nayudu gifted a bell and a zari cloth for Goddess Biramaraambaa. Letchammaalji Aayi, wife of Paandiya Perumal Thevan and daughter of Vijyaraayamahaaraayan, made a land grant for feeding five Jangamars everyday. A Saaluva king, Padhamallappan also had dug a pond. The chief minister of the
Kaakatheeya king Pirathaapa rudhradheva Mahaaraajar had gifted land in Kamanaadu for the mid-day worship service. He also had built a shrine near the Janamaathaa Mandapam. One Annappa Iyan had made grants for food offerings to the God and Goddess, in addition to having built a Mukha Mandapam, renovated the south ambulatory walls, and repaired the south gopuram by reinforcing it with iron pillars. One Bairaagi Sandhagi had give land in the name of his wife for setting up a flower garden. He also had houses built for the priests of Nandhinaathar and Bringinaathar. A Sengkaiyan installaed a grinding stone for preparing sandal paste. Kadambaviththaalaa, wife of Vidharikaran II, had steps built at the Piradhaana Gangkai ford and also installed an icon for Viththalesuvarar. She has noted that the God appeared to her in a dream and asked her to make these gifts. One Chandhirasekaran has built the gopuram for Veerabadra Thevar along with pillars and golden finials. Appanaiyangaaru of Udhayagiri built steps going from the Nandhi pillar to the Dhurgaadhevi shrine. One Kondapatti had renovated the whole temple. Besides the above, many devotees had erected golden pillars, built steps, and constructed mandapams in service of this temple.

 

திருச்சிற்றம்பலம்

118. திருப்பருப்பதம் 
பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

சுடுமணியுமிழ்நாகஞ்சூழ்தரவரைக்கசைத்தான் 
இடுமணியெழிலானையேறலனெருதேறி 
விடமணிமிடறுடையான்மேவியநெடுங்கோட்டுப் 
படுமணிவிடுசுடரார்பருப்பதம்பரவுதுமே. 1

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்; 
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருதுஏறி; 
விடம் அணி மிடறு உடையான்; மேவிய - நெடுங்கோட்டுப் 
படு மணிவிடு சுடர் ஆர் - பருப்பதம் பரவுதுமே.

பொருள்: பிரகாசிக்கும் ஒளியை உடைய மாணிக்க மணியை உமிழும் நாகத்தைச் 
சிவபெருமான் தனது அரையில் பொருந்தக் கட்டியுள்ளார். இவர், இருபுறங்களிலும் 
மணிகள் தொங்குகின்ற யானையின்மீது ஏறாமல், இடபத்தின்மீது ஏறி வருபவர். நஞ்சை 
உண்ட கண்டத்தை உடையவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள உயர்ந்த சிகரங்களை 
உடையதும், ஆங்காங்கே மணிகள் போலத் தோன்றும் ஒளியினை உடையதுமான 
திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை: திருவரையில் நாகத்தைக் கட்டியவர்; யானையேறாது ஆனேறு ஏறியவர். நீலகண்டர் 
எழுந்தருளிய சீபருப்பதத்தைப் பரவுவோம் என்கின்றது. சுடுமணி - ஒளிவிடுகின்ற மாணிக்கம். 
அசைத்தான் - கட்டியவன். இடுமணி எழில் ஆனை - இருமருங்கும் இடப்பெற்ற மணிகளைஉடைய 
யானையை. 
Lord Civan is entempled in Thiru-p-paru-p-patham hemmed in by long and high hills. The area all around this place is bright with light radiating gems scattered all over the place. He dons around His waist the snake which emits the shining ruby gem. Instead of maintaining and riding on the majestic elephant as His vehicle on whose body two ringing bells hang, He rides on His bull vehicle and moves around. His neck appears dark blue in colour because He has positioned the poison in His throat. Let us go over to this city and worship Him there.
நோய்புல்குதோல்திரையநரைவருநுகருடம்பில் 
நீபுல்குதோற்றமெல்லாநினையுள்குமடநெஞ்சே 
வாய்புல்குதோத்திரத்தால்வலஞ்செய்துதலைவணங்கிப் 
பாய்புலித்தோலுடையான்பருப்பதம்பரவுதுமே. 2

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் 
நீ புல்கு தோற்றம்எல்லாம் நினை-உள்கு, மடநெஞ்சே! 
வாய் புல்கு தோத்திரத்தால் வலம் செய்து, தலைவணங்கிப், 
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்: அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சே! நீ, இந்த நிலையற்ற உடம்பில் 
நோய்கள் தழுவியும் தோல் சுருங்கியும், நரை தோன்றும் நிலையையும் நினைந்து 
சிந்திப்பாயாக. வயது முதிர்ந்து வருவதற்கு முன்பே, வாய் நிறைந்த தோத்திரத்தால் பாடி, 
வலஞ்செய்து தலையால் வணங்கி, பாய்கின்ற புலியின் தோலை உடுத்தியுள்ள சிவபெருமான் 
எழுந்தருளியுள்ள திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருவாயாக!

குறிப்புரை: நெஞ்சே! தோல் திரங்கி, நரைத்துப் போகும் உனது தோற்றம் எல்லாவற்றையும் கொஞ்சம் 
நினைத்துப் பார், வாய் நிறைந்த தோத்திரத்தால் வலஞ்செய்து வணங்கிச் சீபருப்பதத்தைப் பரவுவோம் வா 
என்கின்றது. புல்கு - தழுவிய. திரைய - சுருங்க. நினை உள்கு - நினைத்துப்பார் சிந்தித்துப்பார். புல்கு 
- நிறைந்த. 
Oh mind! what a pity! you involve yourself in ignorance deeply and get perplexed in your life. Please think of your life from younger days. You got yourself involved in sexual life. You embroiled yourself in the ever-changing worldly life resulting in all sort of diseases, skins wrinkling, hair becoming grey and all other inconvenience. Before reaching old age, let us go to Thiru-p-paru-p-patham where Lord Civan wearing the skin of leaping tiger is enshrined, go round the temple, and offer our worship to Him. Kindly do come.

துணியுறுதுயர்தீரத்தோன்றியோர்நல்வினையால் 
இனியுறுபயனாதலிரண்டுறமனம்வையேல் 
கனியுறுமரமேறிக்கருமுசுக்கழையுகளும் 
பனியுறுகதிர்மதியான்பருப்பதம்பரவுதுமே.

துணி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால் 
இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்! 
கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும் 
பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

பொருள்: நெஞ்சே! வருத்தத்தைத் தரும் இந்தப் பிறவித் துயர் நீங்கி, பேரின்பம் பெறவே 
இவ்வுலகத்தில் நீ பிறந்திருக்கின்றாய். ஆகையால் நல்வினைகள் செய்து அப்புண்ணியத்தால் 
கிடைக்கும் தேவலோக இன்பத்தை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் 
ஆகிய இரண்டிலும் பற்று வைக்காதே. கரிய குரங்குகள் கனிகள் நிறைந்த மரத்தில் ஏறி 
அதனை நுகராமல், கனிகள் அற்ற மூங்கில் மரங்களில் தாவி மகிழும். அம்மாதிரி நடந்து 
கொள்ளாதே. குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெருமான் 
எழுந்தருளியுள்ள திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம். (மனித மனம் ஒன்றைவிட்டு 
ஒன்றைப் பற்றும் நிலையை இப்பாடல் தெரிவிக்கின்றது.)

குறிப்புரை: பிறவித் துன்பம் நீங்கப் பிறந்த நீ, செய்த நல்வினையால் எய்தப்போகும் இன்பப் பிறவியை 
எண்ணி இரண்டுபட்ட மனம் எய்தாதே; திருமலையைப் பரவுவோம் வா என்கின்றது. துனி - வருத்தம். 
கோடி செல்வம் பெற முயன்றார் பிடி செல்வம் பெற்று மகிழார்கள். அதுபோல நீ பேரின்பம் பெறப் பிறந்தது 
புண்ணிய வசத்தால் வரும் தேவலோக இன்பம் முதலியவற்றைச் சிந்தியாதே உறுதியாக இரு என்பதாம். 
முசு - குரங்கு. 
Oh! Ye devotees! You are born in this world as human beings, the purpose of which is to get rid of birth and death cycle. The black monkeys climb on trees full of ripped fruits; but without eating them, leave the trees, and jump on the nearby bamboo tree with a lust for tender shoots therein. Like these black monkeys do not change your mind, now and then, and get perplexed. Do not think about the Bliss you are going to enjoy by your virtuous deeds. Be firm in your minds. Let us go to Thiru-p-paru-p- patham and offer worship to Lord Civan enshrined therein who decorates in His matted hair the cool bright crescent moon.

கொங்கணிநறுங்கொன்றைத்தொங்கலன்குளிர்சடையான் 
எங்கள்நோயகலநின்றானெனவருளீசனிடம் 
ஐங்கணைவரிசிலையானநங்கனையழகழித்த 
பைங்கண்வெள்ளேறுடையான்பருப்பதம்பரவுதுமே. 4

“கொங்கு அணி நறுங்கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான், 
எங்கள் நோய் அகல நின்றான்" என, அருள் ஈசன் இடம் - 
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த 
பைங்கண் வெள்ஏறு உடையான் - பருப்பதம் பரவுதுமே.

பொருள்: சிவபெருமான் தேன் நிறைந்ததும் மணம் கமழுவதுமான கொன்றை மலர் 
மாலையைச் சூடியிருப்பவர். குளிர்ந்த சடைமுடியை உடையவர். எங்கள் பிறவித் 
துன்பத்தைப் போக்க எழுந்தருளியுள்ளார் என்று அடியவர்கள் போற்ற அவர்களுக்கு அருள் 
செய்யும் தலம் இது. ஐவகை மலர்களையும் வரிந்த கரும்பு வில்லையும் உடைய மன்மதனின் 
அழகை அழித்து எரித்தவர் இவர். குளிர்ந்த கண்களை உடைய வெண்மையான இடபத்தை 
தனது ஊர்தியாக உடையவர். இவர் எழுந்தருளியிருக்கும் இருப்பருப்பதத்தை நாம் 
வணங்குவோம்.

குறிப்புரை: எங்கள் பிறவி நோய் போக்க அருள் செய்யும் ஈசன் இடம் திருமலை என்கின்றது. கொங்கு - 
தேன். தொங்கலன் - மாலையை உடையவன். அநங்கன் - மன்மதன். 
"Oh! Lord Civa! You have worn in Your matted hair, garlands woven out of cassia flowers full of honey. Your matted hair is always cool. You are enshrined here to dispel our sufferings". The devotees declare thus and adore Him. To grace the devotees Lord Civan is enshrined in Thiru-p-paru-p-patham. He destroyed the beauty and burnt the handsome Manmathan, god of love, who holds fine flowers as arrows and a striped sugarcane as his bow. He owns the white bull as vehicle whose eyes are very attractive. Let us go to Thiru-p-paru-p-patham and worship Lord Civan therein.

துறைபலசுனைமூழ்கித்தூமலர்சுமந்தோடி 
மறையொலிவாய்மொழியால்வானவர்மகிழ்ந்தேத்தச் 
சிறையொலிகிளிபயிலுந்தேனினமொலியோவாப் 
பறைபடுவிளங்கருவிப்பருப்பதம்பரவுதுமே. 5

துறைபல சுனை மூழ்கித், தூ மலர் சுமந்து ஓடி, 
மறைஒலி வாய்மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்தச், 
சிறை ஒலி கிளி பயிலும் தேன்இனம் ஒலி ஓவா, 
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்: கிளிகளின் சிறகுகளில் இருந்து எழும்பும் ஒலியுடன், அவைகள் வாயால் எழுப்பும் 
இனிய ஒலியும், வண்டுகளின் இனிய ரீங்கார ஒலியும், பறைபோல் ஒலிக்கும் அருவிகளின் 
ஓசையும் இடைவிடாது கேட்கும் தலம் திருப்பருப்பதமாகும். இங்கு, வானோர்கள் 
புண்ணியத் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கி உடம்பைத் தூய்மைப்படுத்தி 
தூய மலர்களை விரைவாக சுமந்து வந்து, வேத கீதங்களை வாய்மொழியாக மகிழ்ந்து பாடித் 
துதிக்கின்றனர். நாமும் இத்திருப்பருப்பதத்தை வணங்குவோம்.

குறிப்புரை: வானவர்கள் சுனைநீராடித் தொழும் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சிறை - சிறகுகள். 
தேனினம் - வண்டுக்கூட்டம். பறை படும் - முழவுபோல ஒலிக்கும். 
Devas take bath in the holy springs by getting through one of many steps available there. Then they pluck and carry fragrant and pure flowers, rush to the temple and chant the musical Vedas. With all happiness and with sincere devotion they worship Lord Civan enshrined in Thiru-p-paru-p-patham. The sounds raised by the flapping of the wings of parrots combined with the soft voice made by their mouth while calling each other, fills the atmosphere all around Thiru-p-paru-p-patham. Also the ceaseless humming noise of the beetles and the sound heard in the waterfalls area which resembles the beating of the drum are all heard all around Thiru-p-paru-p- patham. Lord Civan is entempled in this city where to, we all will proceed and worship.

சீர்கெழுசிறப்போவாச்செய்தவநெறிவேண்டில் 
ஏர்கெழுமடநெஞ்சேயிரண்டுறமனம்வையேல் 
கார்கெழுநறுங்கொன்றைக்கடவுளதிடம்வகையால் 
பார்கெழுபுகழோவாப்பருப்பதம்பரவுதுமே. 6

சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில், 
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்! 
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால் 
பார் கெழு புகழ் ஓவாப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்: மிகுந்த பெருமை உள்ளதும் சிறப்பு நிறைந்துள்ளதுமான தவநெறி வாழ்க்கையை நீ 
பின்பற்ற விரும்பினால், அழகிய மடநெஞ்சே, நீ, இரண்டுபட்ட மனத்துடன் இராதே! உனது 
மனதை ஒருமுகப்படுத்தி, உறுதியாக நின்று, கார்காலத்தே மலரும் மணம் மிகுந்த கொன்றை 
மலர் மாலையைச் சூடிய சிவபெருமானை நினை. இப்பெருமான் எழுந்தருளியுள்ள 
உலகப்புகழ் பெற்ற தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் போற்றி வணங்குக.

குறிப்புரை: நெஞ்சே! சிறப்பகலாத செய்தவம் வேண்டில் இரண்டுபட எண்ணாதே; புகழ் நீங்காப் 
பொருப்பைப் பரவுதும் என்கின்றது. ஏர் - எழுச்சி. 
Oh! My foolish and yet very useful mind! Do not vacillate between two different ideas to follow or to not follow the virtuous way of life. If you take a decision to pursue the ever pure, glorious, and changeless eminent way of life, you follow the way of penance and prayer to Lord Civan. He wears the garland woven out of very fragrant cassia flowers which blossoms in the rainy season. He is enshrined in Thiru-p-paru-p- patham which is a well renowned town by all the world. Let us go to Thiru-p-paru-p- patham and offer worship to Lord Civan enshrined therein.

புடைபுல்குபடர்கமலம்புகையொடுவிரைகமழத் 
தொடைபுல்குநறுமாலைதிருமுடிமிசையேற 
விடைபுல்குகொடியேந்திவெந்தவெண்ணீறணிவான் 
படைபுல்குமழுவாளன்பருப்பதம்பரவுதுமே. 7

புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழத், 
தொடை புல்கு நறுமாலை திருமுடிமிசை ஏற, 
விடை புல்கு கொடி ஏந்தி, வெந்தவெண்நீறு அணிவான் - 
படை புல்கு மழுவாளன் - பருப்பதம் பரவுதுமே.

பொருள்: எப்பக்கம் நிறைந்து வளர்ந்துள்ள தாமரை மலர்களின் நறுமணமும், 
வேள்வியினால் எழும் புகையின் நறுமணமும் ஒன்று சேர்ந்து மணம் கமழுமாறு 
தொடுக்கப்பட்ட நறுமண மாலையை சிவபெருமான் திருமுடியின்மேல் அணிந்துள்ளார். 
இவர் விடைக் கொடியைக் கையில் ஏந்தி உள்ளார். தனது திருமேனியில் வெந்த 
வெண்ணீற்றைப் பூசியுள்ளார். கையில் மழுப்படையை ஏந்தியவராக விளங்கும் 
இப்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை: விடைக்கொடியை ஏந்தி நீறணியும் நிமலன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. புடை - பக்கம். 
புகை - யாகப்புகை. விரை - மணம். தொடைபுல்கு - தொடுத்தலைப் பொருந்திய. விடை - இடபம். 
Lord Civan wears garland woven out of fragrant lotus flowers that blossoms in multitude in the streams of Thiru-p-paru-p-patham. These flowers are doubly fragrant, because of the fragrant smoke that arose from the sacrifices performed by the priests mixes with the fragrance of lotus flowers. With such a garland in His holy matted hair He is enshrined in Thiru-p-paru-p-patham. The figure of bull is the insigne of Lord Civan's flag which He holds in hand. He smears His body with holy ashes. He holds in one of His hands the battle-axe. Let us go to this Thiru-p-paru-p-patham town and adore Lord Civan entempled therein.

நினைப்பெனுநெடுங்கிணற்றைநின்றுநின்றயராதே 
மனத்தினைவலித்தொழிந்தேனவலம்வந்தடையாமைக் 
கனைத்தெழுதிரள்கங்கைகமழ்சடைக்கரந்தான்றன் 
பனைத்திரள்பாயருவிப்பருப்பதம்பரவுதுமே. 8

நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்றுநின்று அயராதே 
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமைக், 
கனைத்து எழு திரள் கங்கை கமழ்சடைக் கரந்தான் தன் - 
பனைத்திரள் பாய் அருவிப் - பருப்பதம் பரவுதுமே.

பொருள்: நமது மனதின் நினைப்பு என்பது, அளப்பற்ற ஆழமான கிணற்றைப் போன்றது. 
பலதரப்பட்ட எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று தோன்றி நம்மை மயக்கி, பெரும் துன்பத்தைத் 
தோற்றுவிக்கன்றன. ஆகையால் மனதை வைராக்கியப் பயிற்சியால் அடக்கிக், 
கட்டுப்படுத்தி, தீய எண்ணங்களை ஒழித்துத், துன்பங்கள் என்னை வந்தடையாமல் 
தப்பித்தேன். துன்பங்கள் நம்மை வந்தடையாமல் காத்துக் கொள்ளும் வழியைக் 
கூறுகின்றேன். ஆரவாரித்து வெள்ளமாக எழுந்த கங்கை நீரைச் சிவபெருமான் தமது மணம் 
கமழும் சடையில் தாங்கி மறையைச் செய்தவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ளதும் 
பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவிநீரை உடையதுமான திருப்பருப்பதத்தை
நாம் வணங்குவோம்.

குறிப்புரை: நினைப்பாகிய கிணற்றைப் பார்த்து நின்று நின்று மயங்காமல், மனத்தை வலிய 
அடிப்படுத்தினேன். ஆதலால் அவலம் அடையா வண்ணம் பருப்பதம் பரவுதும் என்கின்றது. அயராது - 
மயங்காமல். வலித்து - இழுத்து. நினைப்பை ஆழமான கிணறாகவும், மனத்தைக் கயிறாகவும் 
உருவகித்தார். இது மனத்தினை வலித்து என்பதனால் உணரப் பெறுகின்றது. 
The allegory in this verse is as under:

a) A deep well with water in it is compared to our worrying thoughts.
b) A rope used to draw water is compared to our mind.
I stood near the well for long without any languishment. Then I drew the rope and brought the water out. I got exhausted.

Exposition of the Allegory: I was very much worried on my varying thoughts and the resultant sufferings for long. I applied my mind to get rid of my bad thoughts and sufferings. Even then I could not succeed. To dispel such thoughts and sufferings from our life, Gnaanasambandan says that there is only one open path. Let us go to Thiru-p- paru-p-patham and worship with deep devotion - Lord Civan enshrined therein. He has concealed the surging river Ganges which came rushing like a fierce flood, in His matted fragrant hair. This town is enriched with plenty of water available from the waterfalls, which resembles the palmyrah trunks stout, tall and round. Worshipping the Lord of this place is the only source of salvation.

மருவியவல்வினைநோயவலம்வந்தடையாமல் 
திருவுருவமர்ந்தானுந்திசைமுகமுடையானும் 
இருவருமறியாமையெழுந்ததோரெரிநடுவே 
பருவரையுறநிமிர்ந்தான்பருப்பதம்பரவதுமே  9

மருவிய வல்வினைநோய் அவலம் வந்து அடையாமல், - 
திருஉரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும், 
இருவரும் அறியாமை எழுந்தது ஓர் எரி நடுவே 
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்: பல பிறவிகள் காரணமாக நம்மைத் தொடருகின்ற வலிய வினைகளினால் வரும் 
துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்க நல்வழியைக் கூறுகின்றேன். திருமகளைத் 
தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு, 
சிவபெருமான் பெருஞ்சோதியின் நடுவே பெரிய மலையாக ஓங்கி நின்றார். இப்பெருமான் 
எழுந்தருளியுள்ள திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை: அயனும் மாலும் அறியாவண்ணம் எரிநடுவே மலையாய் எழுந்தானது பருப்பதம் பரவுதும் 
என்கின்றது. வல்வினை நோய் - பரிபாகமுற்ற வினையால் வரும் துன்பம். அவலம் - அதனால் விளைந்த 
செயலறிவு. திருஉரு அமர்ந்தான் - திருமகளைத் தன் மார்பில் வைத்த திருமால். பருவரை உற - பெரிய 
மலையைப் போல. 
'Thirumaal' who entertains His consort Thirumagal in his chest, along with the four headed Brahma - both of them made an attempt to comprehend Lord Civa but in vain. Lord Civan rose like a tall and big effulgence and in the center of the fire He towered like a mountain. This Lord Civan is entempled in Thiru-p-paru-p-patham. We have accumulated a lot of strong karma in our past several births. We, naturally, wish to prevent those karma reaching us in this birth. The only way to succeed in our wish, is to go to Thiru-p-paru-p-patham and worship Lord Civan enshrined therein.

சடங்கொண்டசாத்திரத்தார்சாக்கியர்சமண்குண்டர் 
மடங்கொண்டவிரும்பியராய்மயங்கியோர்பேய்த்தேர்ப்பின் 
குடங்கொண்டுநீர்க்குச்செல்வார்போதுமின்குஞ்சரத்தின் 
படங்கொண்டபோர்வையினான்பருப்பதம்பரவுதுமே, 10

சடம் கொண்ட சாத்திரத்தார் - சாக்கியர். சமண்குண்டர் - 
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஓர் பேய்த்தேர்ப் பின் 
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்- 
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்: அறியாமையால் ஆட்கொள்ளப்பட்டு சாத்திரங்களைக் கூறும் புத்தர்களும் பருத்த 
உடம்பினராகிய சமணர்களும் கூறும் மடமையை விரும்பி சிலர் மயங்குகின்றனர். அவர்கள் 
கானல் நீரை உண்மை என்று நம்பிக் குடத்தை எடுத்துச் செல்வோரைப் போன்றவர்கள்.
அவ்வாறு செல்லுபவர்கள் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாக போர்த்த 
சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை: சமணா் புத்தர்கட்குப்பின் பேய்த்தேர்முன் குடங்கொண்டு தண்ணீர்க்குப் போவார்போல 
போவார்போக, யானையுரி போர்த்த இறைவன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சடம் - அறியாமை. மடம் 
- அறியாமை. பேய்த்தேர் - கானல்நீர். குஞ்சரத்தின் படம் - யானைத்தோலாகிய ஆடை. 
Some people are fascinated by the ignorant preachings of the Buddhists and the crooked preachings of the obese Jains and lose their consciousness. They resemble the people who proceed towards the mirage, carrying pots in their hands, to bring water. Let them go as they decide. We will ignore such people. Lord Civan is enshrined in Thiru-p-paru-p-patham covering His body with the elephant's skin. Let us go to Thiru- p-paru-p-patham and worship Him.

வெண்செநெல்விளைகழனிவிழவொலிகழுமலத்தான் 
பண்செலப்பலபாடலிசைமுரல்பருப்பதத்தை 
நன்சொலினாற்பரவுஞானசம்பந்தன்நல்ல 
ஒண்சொலினிவைமாலையுருவெணத்தவமாமே  11

வெண்செ(ந்)நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான், 
பண் செலப் பலபாடல் இசை முரல் பருப்பதத்தை, 
நன் சொலினால் பரவு ஞானசம்பந்தன், நல்ல 
ஒண் சொலின் இவைமாலை உரு எணத், தவம் ஆமே.

பொருள்: வெண்மையான நெல்லும் சிவந்த நெல்லும் விளையும் வயல்களை உடையதும், 
திருவிழாக்களின் ஒலிகள் நிறைந்ததுமான கழுமலம் என்ற சீகாழியில் அவதரித்தவர் 
ஞானசம்பந்தன் ஆகும். இவர் பண் இசையோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் 
திருப்பருப்பதத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடினார். 
நல்ல சொற்களால் அமைந்த பாடல்களால் பாடிய ஓலி பொருந்திய இத்திருப்பாமாலையை 
பலகாலும் நினைந்தும், மனனம் செய்தும் பாடினால் அதுவே பெரும் தவமாகும்.

குறிப்புரை: சீபருப்பதத்தைத் திருஞானசம்பந்தர் சொன்ன இம்மாலையை உருவெண்ணத்தவமாம் 
என்கின்றது. வெண் செந்நெல்; உம்மைத்தொகை, எண்ண என்பது எண எனத் தொகுத்தல் விகாரம். 
Gnaanasambandan hails from Kazhumalam which is surrounded by fertile fields of paddy rich in variety - the white and reddish one. This town was always filled with the loud noise arising out of pompous festivals. Gnaanasambandan of Kaazhi extols Civan by singing many songs at many places. He has now sung on Lord Civan in Thiru-p-paru-p-patham in chaste Tamil words. If we recite these brilliant songs of this hymn repeatedly, that itself becomes our penance and will lead us to salvation.

திருச்சிற்றம்பலம்

118ஆம் பதிகம் முற்றிற்று

௨ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

119. திருக்கள்ளில்

திருத்தல வரலாறு:

திருக்கள்ளில் தொண்டை நாட்டுத் தலம். சென்னை - வெங்கலூர் பேருந்து வழியில்
உள்ளது. திருக்கள்ளம் எனவும் பெயர் பெறும். பிருகு முனிவர் பூசித்துப் பேறு பெற்றார். சுவாமியின் 
பெயர் சிவாநந்தர். அம்மையின் பெயா் ஆனந்தவல்லி. தீர்த்தம் ஸ்ரீநந்தி தீர்த்தம்.

பதிக வரலாறு:

இது தொண்டை நாட்டுத் திருத்தலம். சென்னை - வெங்கலூர் பேருந்து வழியில் உள்ளது. 
திருக்கள்ளம் எனவும் பெயர் பெறும். பிருகு முனிவர் பூசித்துப் பேறு பெற்ற தலம். 
119. THIRU-K-KALLIL

HISTORY OF THE PLACE

This sacred place is in Thondai Naadu and is on the bus route from Chennai to Venkaloor. It is also known as Thiru-k-kallam.

The name of the Lord is Sivaanandhar and that of the Goddess is Aanandhavalli. The sacred ford is Sree Nandhi Theerththam. Sage Birugu attained salvation by worshipping the Lord here.

திருச்சிற்றம்பலம்

119. திருக்கள்ளில் 
பண்: வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

முள்ளின்மேல்முதுகூகைமுரலுஞ்சோலை 
வெள்ளின்மேல்விடுகூறைக்கொடிவிளைந்த 
கள்ளில்மேயஅண்ணல்கழல்கள்நாளும் 
உள்ளுமேலுயர்வெய்தலொருதலையே. 1

முள்ளின்மேல் முது கூகை முரலும் சோலை, 
வெள்ளில்மேல் விடு கூறைக்கொடி விளைந்த 
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் 
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

பொருள்: முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள்
சூழ்ந்ததும், விளா மரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய 
கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும்
நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.

குறிப்புரை: கள்ளில் மேவிய கடவுளின் கழல்களைத் தியானிக்க உயர்வெய்தல் துணிவு என்கின்றது. 
முள்ளின்மேல் - முள்மரத்தின்மேல். வெள்ளில்மேல் _ விளாவின்மேல். உள்ளுமேல் - தியானிக்குமாயின். 
ஒருதலை - துணிவு. 
Lord Civan is enshrined in Thiru-k-kallil whih is girt with man made groves all around. Aged rock horned owls sit here on the branches of thorny trees. Creepers called Koorai-k-kodi twining on wood apple tree are fully grown. If we daily worship the Holy Feet of Lord Civan entempled in this city, redemption is certain.

ஆடலான்பாடலானரவங்கள்பூண்டான் 
ஓடலாற்கலனில்லானுறைபதியால் 
காடலாற்கருதாதகள்ளில்மேயான் 
பாடெலாம்பெரியார்கள்பரசுவாரே. 2

ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான். 
ஓடுஅலால் கலன் இல்லான் - உறைபதியாக் 
காடுஅலால் கருதாத கள்ளில் மேயான்; 
பாடுஎலாம் பெரியார்கள் பரசுவாரே,

பொருள்: சிவபெருமான் ஆடல் பாடல்களில் வல்லவர். பாம்புகள் பலவற்றை அணிந்தவர். 
தலையோட்டைத் தவிர வேறு உண்கலம் இல்லாதவர். சுடுகாட்டைத் தவிர வேறு 
இடத்தைத் தனது இடமாகக் கருதாதவர். மேன்மையுடைய பெரியயோர்கள் அருகிலிருந்து 
இப்பெருமானை பெருமையோடு போற்றித் துதிக்க கள்ளில் என்னும் தலத்தில் விரும்பி 
எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: ஆடல்பாடல் உடையவன் உறைபதி கள்ளில், அதன்கண் மேயானுடைய பெருமைகளைப்
பெரியார்கள் பேசுவார்கள் என்கின்றது. அரவம் - பாம்பு கலன் - உண்கலன். பாடு - பெருமை 
Lord Civan is an adept in dancing and singing. He wears several snakes on His body. He has no other bowl than the skull which He uses as His food bowl. He has not accepted any other place except the burning ghat as His own. This Lord Civan, adored by scholars has chosen to reside in Thiru-k-kallil.

எண்ணார்மும்மதிலெய்தவிமையாமுக்கண் 
பண்ணார்நான்மறைபாடும்பரமயோகி 
கண்ணார் நீறணிமார்பன்கள்ளில்மேயான் 
பெண்ணாணாம்பெருமானெம்பிஞ்ஞகனே. 3

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் 
பண்ஆர் நால்மறை பாடும் பரமயோகி, 
கண்ஆர் நீறு அணி மார்பன் - கள்ளில் மேயான், 
பெண்ஆண்ஆம்பெருமான், எம் பிஞ்ஞகனே.

பொருள்: பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவர். இமையாத 
மூன்று கண்களை உடையவர். இசையமைப்போடு கூடிய நான் மறைகளைப் பாடி மகிழும் 
மேலான யோகியர். கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார்பினர், பெண் 
ஆண் என இருபாலாகக் கருதும் உமை பாகனான எம் சிவபெருமான் கள்ளில் 
என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த பரமயோகி கள்ளில் மேயவன். அவனே பெண் ஆண் ஆனான் என்கின்றது. 
எண்ணார் - பகைவர், கண் - அழகு. பிஞ்ஞகன் - அழகிய சிவன் (தலைக் கோலம் உடையவன்) 
Lord Civan destroyed the three fortresses of the hostile Asuraas exercising His bow and arrows. All His three eyes never wink. He is a perfect yogi who enjoys singing musical Vedic hymns. His chest is very captivating. He smears His body with holy ashes. He is considered both as male and female. He accommodates His consort Umaa Devi on the left half of His body. Go and worship this Lord Civan entempled in Thiru-k-kallil.

பிறைபெற்றசடையண்ணல்பெடைவண்டாலும் 
நறைபெற்றவிரிகொன்றைத்தார்நயந்த 
கறைபெற்றமிடற்றண்ணல்கள்ளில்மேயான் 
நிறைபெற்றஅடியார்கள்நெஞ்சுளானே.  4

பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும் 
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த 
கறை பெற்ற மிடற்று அண்ணல் - கள்ளில் மேயான் 
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சுஉள்ளானே.

பொருள்: சிவபெருமான் பிறைசூடிய சடையை உடைய எமது அண்ணல் ஆவார். பெண் 
வண்டுகளோடு ஆண்வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை
விரும்பிச் சூடியிருப்பவர். நஞ்சுக் கறை பொருந்திய கண்டத்தை உடையவர். மனநிறைவு 
பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவர். இப்பெருமான் கள்ளில் என்னும் 
தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: கள்ளில் மேயான் என் நெஞ்சுளான் என்கின்றது. ஆலும் - ஒலிக்கும். நறை - தேன். கறை 
- விடம். நிறைபெற்ற அடியார்கள். மனநிறைவுற்ற அடியார்கள். 
Our exalted Lord Civan has the crescent moon in His matted hair. He yearns to wear the garland woven out of cassia flowers full of honey for which the female bees are humming. His neck is dark blue in colour due to the poison, He positioned it in His throat. He is fully resides in the hearts of His devotees who are well content in their minds. This Lord Civan is enshrined in Thiru-k-kallil where you proceed and worship.

விரையாலுமலராலும்விழுமைகுன்றா 
உரையாலுமெதிர்கொள்ளவூராரம்மாக் 
கரையார்பொன்புனல்வேலிக்கள்ளில்மேயான் 
அரையார்வெண்கோவணத்தவண்ணல்தானே. 5

விரையாலும் மலராலும் விழுமை குன்றா 
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக் 
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான் 
அரை ஆர் வெண்கோவணத்த அண்ணல்தானே.

பொருள்: சிவபெருமானை மணம் கமழும் ஐவகை மணப்பொருள்களாலும் மலர்களாலும் 
சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர்மக்கள் எதிர்கொண்டு வணங்குவர். இப்பெருமான் 
வெண்ணிறமான கோவணத்தை இடையில் உடுத்தியிருப்பவர். அழகியதும் பரந்ததுமான 
கரைகளை உடைய பொன்னி நதியின் கிளை ஆறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் தலத்தில் 
இவர் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: கள்ளில் மேயான் மணப் பொருள்களாலும், மலராலும் தோத்திரப் பாக்களாலும் ஊரார் 
எதிர்கொள்ளும் அண்ணலாக இருக்கின்றான் என்கின்றது. விரை - மணம். ஐந்து வகை விரைகள் சங்க 
இலக்கியங்களிற் கூறப்பெற்றுள்ளன (கோட்டம், துடுக்கம், தகரம், அகில், சந்தனம்). விழுமை - பெருமை. 
உரை - புகழ். 
Lord Civan wears the white fore-lap cloth in His loins. The devotees with flawless words of praise adore Him and offer worship carrying five kinds of fragrant materials and sweet smelling flowers. A tributary of Ponni river with strong and wide banks flows through the town Thiru-k-kallil. Go and worship Lord Civan enshrined therein.

நலனாயபலிகொள்கைநம்பான்நல்ல 
வலனாயமமழுவாளும்வேலும்வல்லான் 
கலனாயதலையோட்டான்கள்ளில்மேயான் 
மலனாயதீர்த்தெய்துமாதவத்தோர்க்கே. 6

நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல 
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான், 
கலன் ஆய தலைஓட்டான் - கள்ளில் மேயான் 
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

பொருள்: சிவபெருமான் மக்களுக்கு நன்மைகள் உண்டாவதற்காகத் தானே பலியேற்கும்
கொள்கையை உடைய கடவுளாவார். நல்ல வெற்றியைத் தரும் மழு, வாள், வேல் 
ஆகியவற்றில் வல்லவர். உண்கலனாக தலையோட்டை உடையவர். சிறப்புள்ள தவத்தைச் 
செய்து தன்னை வந்தடைபவர்களின் மும்மலங்களையும் தீர்த்து அருளுபவர். 
இப்பெருமான் கள்ளில் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: கள்ளில் மேயான் மாதவத்தோர்க்கு மூலமலத்தைத் தீர்த்து அவரைப் பொருந்துவன் 
என்கின்றது. நலன் ஆயபலி - இடுவார்க்கு நன்மையமைத்த பிச்சை. வலன் ஆய மழுவாளும் வேலும் 
வல்லான் - வெற்றியைத் தருவதாய மழு முதலிய படைகளை வல்லவன். மலன் ஆய தீர்த்து - மலங்களைப் 
போக்கி, தீர்த்து என்பது உபசார வழக்கு. வலியை வாட்டி என்பது கருத்து. 
Our supremely desirable Lord Civan has the practice of accepting arms with the purpose of promoting the welfare of His devotees. He is an adept at wielding the battle axe, sword and spear that bring victory. He uses the skull as His food bowl. To those devotees who surrender to Him and adore Him, He dispels all their blemish caused by three evil passions of the soul Malas  and bestows grace on them. Go and worship this Lord Civan enshrined in Thiru-k-kallil.

பொடியார்மெய்பூசினும்புறவின்நறவம் 
குடியாவூர்திரியினுங்கூப்பிடினும் 
கடியார்பூம்பொழிற்சோலைக்கள்ளில்மேயான் 
அடியார்பண்பிகழ்வார்களாதர்களே. 7

பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம் 
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும், 
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்- 
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

பொருள்: மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழ்ந்த கள்ளில் என்னும் 
தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் அடியவர்கள் 
திருவெண்ணீற்றுப் பொடியை உடலில் பூசியிருந்தாலும், நற்கோலத்தில் காட்சி தந்தாலும், 
சோலைகளில் எடுத்த தேனை உண்டு ஊரில் திரிந்தாலும், பலவாறு பிதற்றினாலும், அவர்கள் 
மனம் இறைவன் திருவருளிலேயே அழுந்தி இருக்கும். இவ்வடியார்களின் குணம் 
செயல்களை இகழ்பவர்கள் கீழ்மக்கள் ஆவார்கள்.

குறிப்புரை: கள்ளில் மேயான் அடியார்கள் நீறணியினும், தேனைக் குடித்து ஊர்திரியிலும், கூப்பிடினும் 
அவர்களை இகழ்வார்கள் கீழ் மக்கள் என்கின்றது. 'எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப் பட்டாலும் 
முத்தர் மனம் மோனத்தே' இருக்குமாதலின் அவர்களை இகழ்வார் ஆதர் என்றவாறு. 
They are fools low level folks who spread slander on the devotees of our Lord at Thiru-k-kallil, where flowery gardens spread fragrance everywhere. They are the real devotees smearing the holy ashes in their body, going from one temple to another, offering worship with their folded hands.

திருநீலமலரொண்கண்தேவிபாகம் 
புரிநூலுந்திருநீறும்புல்குமார்பில் 
கருநீலமலாவிம்முகள்ளிலென்றும் 
பெருநீலமிடற்றண்ணல்பேணுவதே. 8

திருநீலமலர்ஒண்கண் தேவி பாகம் 
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில், 
கருநீலமலர் விம்மு கள்ளில், என்றும் 
பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.

பொருள்: அழகிய ஒளிமிக்க நீலமலர் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒரு 
பாகமாகக் கொண்டவர் சிவபெருமான்.இவர் முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய 
மார்பினர். கருநீல மலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலத்தில் கரிய விடம் 
பொருந்திய மிடற்று அண்ணலாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கிறார்.

குறிப்புரை: கள்ளிலே இறைவன் என்றும் பேணுவது என்கின்றது. பேணுவது -- விரும்புவது. 
Lord Civan accommodates His consort Umaa Devi on the left part of His body. Her eyes are attractive, sparkling and resemble the blue lily flower. He wears on His chest the three-ply sacred thread. He smears His body with the holy ashes and comes into view with radiance. His neck is of dark blue in colour. It is our duty to worship always our god Lord Civa who is enshrined in Thiru-k-kallil, where blue lilies bloom in abundance.

வரியாயமலரானும்வையந்தன்னை 
உரிதாயஅளந்தானுமுள்ளுதற்கங் 
கரியானுமறியாதகள்ளில்மேயான் 
பெரியானென்றறிவார்கள்பேசுவாரே. 9

“வரிஆய மலரானும் வையம் தன்னை 
உரிதுஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு 
அரியானும் - அறியாத கள்ளில் மேயான் 
பெரியான்” என்று, அறிவார்கள் பேசுவாரே.

பொருள்: சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், 
உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும் நினைத்தற்கும் அரியவனாக 
விளங்கும் பெரியோன் சிவபெருமானாகும். இப்பெருமான் அரியதலமாய் விளங்கும் 
கள்ளியில் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானையே பெரியோன் என அறிஞர்கள் 
போற்றிப் புகழ்வர்.

குறிப்புரை: 'கள்ளின் மேயான் பெரியான்' என்று அறிவார்கள் இவனைப் பற்றிப் புகழ்வார்கள் 
என்கின்றது. அறியாத ஒன்று பேசவாராதாகலின் பெரியோன் என்று அறிவார்களே பேசுவர் என்றார்கள். 
வரி - செவ்வரி வையந்தன்னை உரிய ஆய அளந்தான் - உலகத்தை உரித்தாக்க அளந்த திருமால். 
Lord Civan is beyond the comprehension of Brahma, residing in the red lined lotus, and for Thirumaal who measured the entire world by his feet in order to possess them. He is enshrined in the fascinating Thiru-k-kallil as the Supreme Being. Those who realise His supremacy, praise Him saying that He is our great god, and adore Him and worship Him will got salvation.

ஆச்சியப்பேய்களோடமணர்குண்டர் 
பேச்சிவைநெறியல்லபேணுமின்கள் 
மாச்செய்தவளவயல்மல்குகள்ளில் 
தீச்செய்தசடையண்ணல்திருந்தடியே. 10

ஆச்சியப் பேய்களோடு அமணர்குண்டர் 
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள், 
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் 
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே.

பொருள்: நகைப்பிற்கு இடமளிக்கும் அமணர்களும் புத்தர்களும் கூறும் உரைகள்
நெறியற்றவையாகும். எனவே அவற்றைக் கேளாதீர்கள். வளம் மிக்க வயல்கள் நிறைந்த 
கள்ளில் என்னும் தலத்தில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய 
அண்ணலாகிய சிவபெருமானின் அழகிய திருவடியைப் பேணித் துதிப்பீர்களாக.

குறிப்புரை: புறச்சமயிகள் பேச்சு நெறியற்றன; கள்ளில் இறைவன் திருவடியைச் சிந்தியுங்கள் 
என்கின்றது. ஆச்சியப் பேய்கள் - பரிகசிக்கத்தக்க பேய்கள். ஆச்சியம் ஹாஸ்யம் என்பதன் திரிபு. மா - 
பெருமை. 
The speeches of Buddhists and Jains are laughable and do not preach the truth to the people. Therefore shun them and discard their words. Instead, worship the Holy Feet of Lord Civan who is enshrined in Thiru-k-kallil surrounded by fertile fields. Let us hail only Lord Civan's Holy Feet. He is our Lord With fiery matted hair.

திகைநான்கும்புகழ்காழிச்செல்வமல்கு 
பகல்போலும்பேரொளியான்பந்தன்நல்ல 
முகைமேவுமுதிர்சடையான்கள்ளிலேத்தப் 
புகழோடும்பேரின்பம்புகுதுமன்றே. 11

திகைநான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு 
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல 
முகை மேவு முதிர்சடையான் கள்ளில் ஏத்தப், 
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.

பொருள்: நான்கு திசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப் பதியில் செல்வ வளம் நிறைந்த 
சூரியனைப் போலப் பேரொளி படைத்தவராக ஞானசம்பந்தர் விளங்குகின்றார். இவர், 
நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த முதிர்ந்த சடைமுடி உடைய சிவபெருமான் 
எழுந்தருளியுள்ள கள்ளிலைப் போற்றிப் பாடினார். இத்திருப்பதிகத்தைப் பாடிப்போற்ற 
வல்லவர்கள் புகழோடு பேரின்பமும் அடைவார்கள்.

குறிப்புரை: நாற்றிசையும் புகழ்பெற்ற ஞானசம்பந்த சுவாமிகள் பதிகத்தைக் கொண்டு கள்ளில் ஏத்தப் 
புகழோடு பேரின்பமும் பொருந்தும் என்கின்றது. திகை - திசை. பகல் - சூரியன். பந்தன் - நாம 
ஏகதேசம். 
Gnaanasambandan of Seekaazhi, a flourishing and shining scholar bright like a sun, praised by all people of the four directions. He has sung about the Lord of Thiru- k-kallil, who has matted hair decorated with fragrant flowers. If we sing these verses and adore Lord Civan, fame and eternal bliss could be attained by us.

திருச்சிற்றம்பலம்

119ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

120. திருவையாறு

திருத்தல வரலாறு:

36ஆம் திருப்பதிகம் பார்க்கவும்.

120. THIRU-VAI-YAARU

HISTORY OF THE PLACE

See 36th Hymn.

திருச்சிற்றம்பலம்

120. திருவையாறு

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

பணிந்தவரருவினைபற்றறுத்தருள்செயத் 
துணிந்தவன்றோலொடுநூல்துதைமார்பினில் 
பிணிந்தவனரவொடுபேரெழிலாமைகொண் 
டணிந்தவன்வளநகரந்தணையாறே. 1

பணிந்தவன், அருவினை பற்று அறுத்து அருள்செயத் 
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில் 
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு 
அணிந்தவன், வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கும் அடியவர்களின் நீங்குவதற்கு 
அரிய வினைகளை அவர் அடியோடு அழித்து அருள் வழங்கத் துணிந்திருப்பவர். மான்
தோலோடு விளங்கும் முப்புரிநூலைத் திருமார்பில் அணிந்திருப்பவர். அரவத்துடன் பேரழகு 
வாய்ந்த ஆமையோட்டை அணிந்திருப்பவர். இப்பெருமான் எழுந்தருளிய வளமையான 
நகரம் குளிர்ச்சியான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: அடியார்களுடைய அருவினைகளை அறுத்து, அருள் செய்யத் துணிந்தவன்; தோல் சேர்ந்த 
நூல் செறிந்த மார்பினை உடையவன். அரவோடு :ஆமை ஓட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு 
என்கின்றது. பணிந்தவர் - தாழ்வெனும் தன்மையோடு அடிபணிந்த அடியார்கள். அருவினை - 
திருவருளன்றி வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை. பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கி 
பிணிந்தவன் என மெலிந்தது. 
Lord Civa is determined to completely eliminate such of those karmas as can be removed, from His devotees who worship Him sincerely and also come forward to grace them. He wears on His body frame the three-ply sacred thread with a bit of deer skin attached to it. Also He bedecks His body with a snake along with a large and good-looking tortoise shell. This Lord's beloved prosperous fertile city is the most famed cool Thiru-vai-yaaru. Go and worship Him there.

கீர்த்திமிக்கவனகாகிளரொளியுடனடப் 
பார்த்தவன்பனிமதிபடர்சடைவைத்துப் 
போர்த்தவன்கரியுரிபுலியதளரவரை 
ஆர்த்தவன்வளநகரந்தணையாறே. 2

கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளிஉடன் அடப் 
பார்த்தவன்; பனிமதி படர்சடை வைத்துப், 
போர்த்தவன் கரிஉரி; புலிஅதள், அரவு, அரை 
ஆர்த்தவன்; வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமான் புகழ்மிக்கவரும், அசுரர்களின் நகரமான முப்புரத்தைத் தனது 
நெற்றிக் கண்ணில் இருந்து கிளர்ந்து எழுந்த பேரொளியால் அழியுமாறு பார்த்தவரும் ஆவர். 
குளிர்ந்த தங்களை விரிந்த சடைமுடிமீது வைத்திருப்பவர். யானையின் தோலை உரித்துப் 
போர்த்தியிருப்பவர். புலித்தோல் ஆடையின் மேல் பாம்பை இடையில் கட்டியிருப்பவர். 
இப்பெருமான் எழுந்தருளியுள்ள வளமையான நகரம் அழகிய குளிர்ச்சியான திருவையாறு 
ஆகும்.

குறிப்புரை: திரிபுரம் எரித்தவன்; யானையை உரித்துப் போர்த்தியவன், புலித்தோல் பாம்பு இவற்றை 
அரையிற் கட்டியவன் நகர் ஐயாறு என்கின்றது. கீர்த்தி மிக்கவன் நகர் - திரிபுரம். திரிபுராதிகளுக்கு 
உண்டான கீர்த்தி அவர்கள் அழிவிற்குக் காரணமாயிற்று எனக் குறித்தவாறு. அடப்பார்த்தவன் - அழிய 
விழித்தவன். திரிபுரத்தை விழித்தெரித்ததாக ஒரு வரலாறு தேவாரத்துப் பல இடங்களிலும் வருதல் 
காண்க. அதள் - தோல். ஆர்த்தவன் - கட்டியவன். 
Lord Civa, the most renowned, Supreme Being opened His third eye in His forehead. The great light that emanated from the eye burnt and destroyed the three citadels of the opponent Asuraas. He accommodates the cool moon in His broad matted hair. He stripped an elephant's skin and covered His body with it. He covers His waist with the skin of tiger and tightens it with a snake. This Lord Civan's beloved prosperous city is, the famed cool Thiru-vai-yaaru. Go and worship Him there.

வரிந்தவெஞ்சிலைபிடித்தவுணா்தம்வளநகர் 
எரிந்தறவெய்தவனெழில்திகழ்மலர்மேல் 
இருந்தவன்சிரமதுஇமையவர்குறைகொள 
அரிந்தவன்வளநகர்ந்தணையாறே. 3

வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர் தம் வள நகர் 
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர் மேல் 
இருந்தவன் சிரம்அது, இமையவர் குறைகொள, 
அரிந்தவன்; வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானார், இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் 
பிடித்து அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கனை எய்தவர்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அழகிய தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் 
பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள வளமையான 
நகரம் குளிர்ச்சியான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: வில்லேந்தி அவுணர் முப்புரங்களும் எரிய எய்தவனும், பிரமனுடைய சிரத்தைத் தேவர்கள்
வேண்ட .அரிந்தவனும் ஆகிய இறைவன் நகர் இது என்கின்றது. வரிந்த - கணுக்கள் தோறும் 
கட்டப்பெற்ற. பிரமன் சிரங்கொய்தது தம்மைப் போல ஐந்தலை படைத்திருந்தமையால் அன்று; தேவர்கள் 
வேண்டிக் கொள்ள அவர்கள்மீது வைத்த கருணையினாலேயே என்பது விளக்கியவாறு. 
By holding the two ends of the high powered bow tightly, Lord Civa sent the arrow and burnt and destroyed the three prosperous citadels of the opponent Asuraas. As per the complaint of Devaas Lord Civan plucked one of the five heads of Brahma who is seated in the attractive lotus flower. This Lord Civan's favourite prosperous city is Thiru-vai-yaaru. Go and worship Him there.

வாய்ந்தவல்லவுணர்தம்வளநகரெரியிடை 
மாய்ந்தறவெய்தவன்வளர்பிறைவிரிபுனல் 
தோய்ந்தெழுசடையினன்றொன்மறையாறங்கம் 
ஆய்ந்தவன்வளநகரந்தணையாறே. 4

வாய்ந்த வல்அவுணர் தம் வள நகர் எரிஇடை 
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல் 
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறுஅங்கம் 
ஆய்ந்தவன், வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானார், வலிமை மிகுந்த அசுரர்களின் வளமையான முப்புரங்களும் 
தீயால் அழிந்து ஒழிந்து போகுமாறு கணை எய்தவர். வளர்கின்ற பிறையையும், விரிந்த 
கங்கையையும் பொருந்திய சடையினர். பழமையான நான்கு வேதங்களாலும் ஆறு 
அங்கங்களாலும் ஆராயப் பெற்றவன் சிவபெருமான். இப்பெருமான் எழுந்தருளியுள்ள
வளமையான நகரம் அழகும் குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும் (மறைகளால் ஆயப்
பெற்றவன் எனலும் கூடும்).

குறிப்புரை: திரிபுரம் எரித்தவன், பிறையும் நீரும் பொருந்திய சடையினன், வேதம் அங்கம் இவற்றை 
ஆய்ந்தவன் நகர் ஐயாறு என்கின்றது. வாய்ந்த - வரங்களின் வன்மை வாய்ந்த, ஆய்ந்தவன் - ஆராயப் 
பெற்றவன். வேதங்களை ஆய வேண்டிய இன்றியமையாமை இறைவற்குக் கிடையாது. ஆதலால் 
வேதங்களால் ஆராயப் பெற்றவன் என்பதே பொருந்துவதாம். 
Lord Civan shot an arrow and burnt down the three prosperous fortresses of the valiant Asuraas and destroyed them. The growing moon and the wide river Ganges glide over His matted hair. The four ancient Vedas and their subsidiaries, the six Angaas did their best in their attempt to understand the intrinsic and ingenious nature of Lord Civan. This Lord Civan's beloved, cool and pleasant city is Thiru-vai-yaaru. Ye! devotees go there and worship Him.

வானமர்மதிபுல்குசடையிடையரவொடு 
தேனமர்கொன்றையன்திகழ்தருமார்பினன் 
மானனமென்விழிமங்கையொர்பாகமும் 
ஆனவன்வளநகரந்தணையாறே. 5

வான் அமர் மதி புல்கு சடைஇடை அரவொடு 
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன், 
மான் அன மென் விழி மங்கை ஒர்பாகமும் 
ஆனவன், வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானார், வானில் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் 
பாம்பையும் தேன்நிறைந்த கொன்றை மாலையையும் அணிந்திருப்பவர். சிறப்பு மிக்க அழகு 
விளங்கும் திருமார்பினை உடையவர். மான்போன்ற மென்மையான விழிகளை உடைய 
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். இப்பெருமான் எழுந்தருளிய நகரம், அழகும் 
குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: பிறையணிந்த சடையில் பாம்பையும், கொன்றையையும் சூடியவன், விளங்கும் மார்பினை 
உடையவன், உமையொரு பாதியன் வளநகர் ஐயாறு என்கின்றது. வானமர் பதி என்றது மதியென்ற 
பொதுமைநோக்கி. ஒர் பாகம் ஆனவன் என்பதற்கு இடப்பாகம் கொண்டவன் என்றுரைப்பினும் அமையும். 
Lord Civan wears in His matted hair the garland woven out of cassia flowers full of honey. Along with this, He retains in His head the crescent moon that shines brightly in the sky and also a snake. His elegant chest is very attractive. He holds His consort Umaa Devi, whose eyes are fascinating like those of deer, on the left half of His body. This Lord's beloved, cool and pleasant city is Thiru-vai-yaaru. Ye devotees! Go there and adore Lord Civan therein.

முன்பனைமுனிவரோடமரர்கள்தொழுதெழும் 
இன்பனையிணையிலவிறைவனையெழில்திகழ் 
என்பொனையேதமில்வேதியர்தாந்தொழும் 
அன்பனவளநகரந்தணையாறே. 6

முன்பனை, முனிவரோடு அமரர்கள் தொழுது எழும் 
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ் 
என் பொனை, ஏதம் இல் வேதியர்தாம் தொழும் 
அன்பன வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானார் ஒப்பற்ற முன்னவராகவும் வலிமை உடையவராகவும் 
விளங்குபவர். முனிவர்களும், தேவர்களும் தொழுகின்ற திருவடியை உடைய இன்ப
வடிவினர். அழகுடன் விளங்கும் என் பொன்னாக இருப்பவர். குற்றமற்ற சான்றோர்களால் 
தொழப்படுகின்ற அன்பராவர். இப்பெருமான் எழுந்தருளிய நகரம் அழகும் 
குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: வலியுடையனை, முனிவரும் தேவரும் வணங்கும் இன்ப வடிவனை, என் பொன் 
போன்றவனை, அந்தணர் வணங்கும் அன்பனை உரிமையாக உடைய தலம் ஐயாறு என்கின்றது. முன்பு - 
வலிமை. இணையில இறைவனை - ஒப்பற்ற முதல்வனை; எழில் - அழகு. அன்பன - அன்பனுடையதான. 
Civa is the most valiant Lord of the universe. He has a very delightful personality having divine feet worshipped by sages and celestials. He is unique and has no equal. He is my most attractive Lord glittering like gold. The flawless Vedic scholars worship Him as their Supreme Being. This Lord Civan's beloved, cool and pleasant city is Thiru-vai-yaaru. Ye devotees! Go there and worship Him.

வன்றிறலவுணர்தம்வளநகரெரியிடை 
வெந்தறவெய்தவன்விளங்கியமார்பினில் 
பந்தமரமெல்விரல்பாகமதாகிதன் 
அந்தமில்வளநகரந்தணையாறே. 7

வன்திறல் அவுணர்தம் வளநகர் எரிஇடை 
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில் 
பந்து அமர்மெல்விரல் பாகம்அதுஆகி, தன் 
அந்தம் இல் வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானார், பெரும் வலிமை படைத்த அசுரர்களின் வளமையான 
முப்புரங்களும் தீயால் வெந்து அழியுமாறு கணை எய்தவர். சிறப்பு மிக்க அழகு விளங்கிய 
திருமார்பினில் பந்து தங்கும் மெல்லிய விரலை உடைய உமையம்மையைப் பாகமாகக் 
கொண்டிருப்பவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள வளமையான நகரம் அழகும் 
குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: திரிபுரங்கள் தீயிடை வேவ எய்தவன், பந்தணை விரலியைப் பாகங் கொண்டவன் வளநகர் 
ஐயாறு என்கின்றது. அந்தம் இல் - அழிவில்லாத. 
Civan is the Lord Supreme who shot His arrow on the three flourishing citadels of the most valiant Asuraas and destroyed them completely in fire. He embeds on the left half of His body, His consort Umaa Devi whose soft fingers grasp the play balls. This Lord Civan resides in the eternal flourishing city Thiru-vai-yaaru,which is a cool and famed city. Ye devotees! go there and adore Him.

விடைத்தவல்லரக்கனல்வெற்பினையெடுத்தலும் 
அடித்தலத்தாலிறையூன்றிமற்றவனது 
முடித்தலைதோளவைநெரிதரமுறைமுறை 
அடர்த்தவன்வளநகரந்தணையாறே. 8

விடைத்த வல்அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும், 
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது 
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை 
அடர்த்தவன் வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: செருக்குடன் வந்த வீரம்மிக்க இராவணன் வலிய கயிலை மலையைப் பெயர்த்து 
எடுக்க முயற்சித்த அளவில், தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றியவர் சிவபெருமான் ஆவர். 
இராவணனின் கிரீடம் அணிந்த தலைகளையும் தோள்களையும் நெரித்தவர். இப்பெருமான் 
எழுந்தருளிய வளமையான நகரம், அழகும் குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: இராவணனை அடித்தலத்தால் அடர்த்தவன் நகர் ஐயாறு என்கின்றது. விடைத்த - 
செருக்கிய. நல்வெற்பு - கயிலை. இறை - சிறிது. இறையூன்றியது கருணையின் மிகுதியால். 
The valiant Raavanan approached with haughtiness and tried to move aside mount Kailas, the strong abode of Lord Civa. Civan pressed the mountain slightly by the bottom of His feet. And lo! Raavanan's head full of hair and his shoulders got crushed one after another. This Lord Civan's flourishing city Thiru-vai-yaaru is cool and is a famed city. Ye devotees! go there and adore Him.

விண்ணவார்தம்மொடுவெங்கதிரோனல் 
எண்ணிலிதேவர்களிந்திரன்வழிபடக் 
கண்ணனும்பிரமனுங்காண்பரிதாகிய 
அண்ணல்தன்வளநகரந்தணையாறே. 9

விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன், அனல், 
எண்இலி தேவர்கள், இந்திரன், வழிபடக், 
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய 
அண்ணல்தன் வள நகர் - அம் தண் ஐயாறே.

பொருள்: சிவபெருமானாரை வானகத்தில் வாழ்பவர்களும், சூரியன், அக்கினி மற்றும் 
எண்ணற்ற தேவர்கள் இந்திரன் ஆகியோர் வழிபட்டனர். ஆனால் திருமால், பிரமர் 
இருவருக்கும் காண்பதற்கு அரியவராக நின்ற தலைவன் ஆவார் இப்பெருமான் 
எழுந்தருளியுள்ள வளமையான நகரம், அழகும் குளிர்ச்சியானதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை: இந்திரன், அக்கினி எண்ணற்ற தேவர்கள், இவர்கள் வழிபட,  காண்டற்கரிய 
கடவுள் நகர் ஐயாறு என்கின்றது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்
All celestial beings along with the sun god, and the god of fire, numerous devaas and also Indran and his companions - all these adore and worship Lord Civan. However, He stood invisible to Thirumaal and Brahma. This Master Civan's fertile city is Thiru-vai-yaaru which is a very cool and famed one. Ye devotees go to this place and offer worship to Him.

மருளுடைமனத்துவன்சமணர்கள்மாசறா 
இருளுடையிணைத்துவர்ப்போர்வையினார்களும் 
தெருளுடைமனத்தவர்தேறுமின்திண்ணமா 
அருளுடையடிகள்தமந்தணையாறே. 10

மருள் உடை மனத்து வன்சமணர்கள் மாசு அறா 
இருள் உடை இணைத்துவர்ப்போர்வையினார்களும், 
தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா 
அருள் உடை அடிகள்தம் அம் தண் ஐயாறே.

பொருள்: தெளிந்த மனத்தினை உடையவர்களே! வலிய சமணர்கள் மருட்சியை உடைய 
மனத்தை உடையவர்கள். புத்தர்கள் குற்றம் நீங்காத துவர்நிற ஆடையைப் போர்த்தி
இருப்பவர்கள். இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள். சிவபிரானாரை உறுதியாகப் பற்றிக் 
கொண்டு தெளிந்த மனத்துடையவர்களாக மாறுங்கள். பெருங் கருணையாளனாக 
விளங்கும் இப்பெருமான் எழுந்தருளிய வளமான நகரம் அழகும், குளிர்ச்சியானதுமான 
திருவையாறு ஆகும்.

குறிப்புரை: மருண்ட மனத்துச் சமணர்கள் முதலாயினார்களிடம் பொருந்தாது, தெளிந்த மனத்தவர்களே! 
உறுதியாகத் தெளிவுறுங்கள்; அருள் உடைய அடிகள் இடம் ஐயாறே என்கின்றது. மருள், இருள் - 
அறியாமை. இணை துவர் போர்வையினார் - இரண்டான காவிப் போர்வையுடையவர்கள். 
Ye companions! You have clarity in your minds. Be very careful not to give any importance to the speeches of the aggressive Jains who are confused in their minds; similarly do not listen to the words of Buddhists who wear clothes of ochre colour and who are not flawless people. But you should be firm in your minds and realise the greatness of Lord Civa who is ever merciful. This Lord Civan's flourishing city is Thiru-vai-yaaru which is very cool and a famed one. Ye devotees go to this place and offer worship to Him.

நலமலிஞானசம்பந்தனதின்றமிழ் 
அலைமலிபுனல்மல்குமந்தணையாற்றினைக் 
கலைமலிதமிழிவைகற்றுவல்லார்மிக 
நலமலிபுகழ்மிகுநன்மையர்தாமே. 11

நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் 
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக் 
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக 
நலம் மலி புகழ் மிகு நன்மையர் தாமே.

பொருள்: அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட திருவையாறில் 
எழுந்தருளிய சிவபெருமானாரை, நன்மைகளால் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் 
பாடினார். இனிய தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைத் திறம்படக் 
கற்று வல்லவர்கள் ஆனால் நன்மை மிக்க புகழ் அவர்களை வந்தடையும்.

குறிப்புரை: ஐயாற்றைப்பற்றித் திருஞானசம்பந்தர் சொல்லிய கலைமலிதமிழிவை வல்லார் புகழ்மிகுந்த 
நன்மையர் ஆவர் எனப்பயன் கூறுகின்றது. 
Thiru-vai-yaaru is girt with water reserves such as the wave filled river, lakes etc. Lord Civan is entempled in this city. Gnaanasambandan abounding in virtuous deeds, adored Lord Civan of this place and sang this hymn in sweet Tamil, full of artistic words. Those who learn and master these verses will gain much fame and reputation in this life.

திருச்சிற்றம்பலம்

120ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம்

121. திருஇடைமருதூர்

திருத்தல வரலாறு:

32ஆம் திருப்பதிகம் பார்க்க. 
121. THIRU-IDAI-MARU-THOOR

HISTORY OF THE PLACE

See 32nd Hymn.

பதிக வரலாறு:

திருநாகேச்சரத்தை வணங்கிப் பதிகம் பாடித் தொழுது, இடைமருதுக்கு எழுந்தருளிய 
பிள்ளையாரை, அடியார்கள் எதிர் கொண்டு அழைத்தனர். பிள்ளையார் முதலில் பரம் 
பொருளானார் முதற்கோயிலைச் சென்று வழிபட்டனர். தமது கண்களில் ஆனந்தபாஷ்பம் வழிய 
அவனிமீது விழுந்தெழுந்து, ‘நடைமரு திரிபுரம்’ முதலிய பல பதிகங்களை அருளிச் செய்தனர்.

திருச்சிற்றம்பலம்

121. திருஇடைமருதூர்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

நடைமரு திரிபுரமெரி யுணநகைசெய்த 
படைமரு தழலெழமழு வலபகவன் 
புடைமரு திளமுகில்வள மமர்பொதுளிய 
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே. 1

நடை மரு திரிபுரம் எரியுண நகைசெய்த 
படை மரு தழல் எழ மழு வல பகவன், 
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய, 
இடைமருது அடைய நம்(ம்) இடர் கெடல் எளிதே.

பொருள்: எப்பொழுதும் அசைவுகளை உடைய திரிபுரங்கள் எரிந்து அழிந்து போகுமாறு 
புன்சிரிப்பு அருளித் தனது படைக்கலத்தால் தீ எழும்பும்படி செய்தருளிய மழு ஏந்திய 
வெற்றி வீரர் சிவபெருமானாராகும். இப்பெருமான் எழுந்தருளியுள்ளதும், அருகில் 
வளர்ந்துள்ள மருத மரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை தருவதுமான திரு 
இடை மருதூரை அடைந்தால் நம் துயர் கெடுவது எளிதாகும்.

குறிப்புரை: திரிபுரம் தீயெழச் சிரித்த மழுவேந்தியவனது இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிது 
என்கின்றது. நடை மரு திரிபுரம் - இயங்குதலை மருவிய முப்புரம். படை மரு தழல் எழ - படைக்கலமாகப் 
பொருந்தித் தீயெழ. புடைமருது - பக்கங்களிலுள்ள மருத மரங்கள். பொதுளிய - செறிந்த. 
The Originator primordial Lord (of auspicious trails like wealth, valour, etc.) Civan, carrying the victorious battle axe, laughed and burnt the three moving citadels and created fire by His weaponry and completely destroyed them. This our Lord Civan is enshrined in Thiru-vidai-maru-thoor which is girt with tall Arjun trees. Young clouds crawl over these trees and bring abundant rainfall, creating fertility and increasing productivity of the place. To those who reach this Thiru-idai-maru-thoor, and worship Lord Civan, therein, the removal of sufferings will become easy.

மழைநுழை மதியமொடழி தலைமடமஞ்ஞை 
கழைநுழை புனல்பெய்த கமழ்சடைமுடியன் 
குழைநுழை திகழ்செவியழ கொடுமிளிர்வதொர் 
இழைநுழை புரியணலிட மிடைமருதே. 2

மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை 
கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்; 
குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர் 
இழை நுழை புரி அணல்; இடம் - இடைமருதே.

பொருள்: சிவபெருமானார் மேகங்களின் ஊடே செல்லும் பிறைமதியையும் தசைவற்றிய 
மனிதத் தலை ஓட்டையும் மட மயில்கள் மூங்கில்களின் இடையில் நுழைந்து செல்லும் 
மலையில் தோன்றிய கங்கையையும் தனது சடைமுடியில் சூடியிருப்பவர். குழை நுழைந்து 
விளங்கும் செவி அழகர். இழையாகத் திரண்ட முப்புரி நூலை விரும்பி அணியும் அண்ணல். 
இப்பெருமான் எழுந்தருளிய இடம் திரு இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: மதியத்தையும் கபாலத்தையும் கங்கையையும் தாங்கிய சடையன். குழைக்காதோடு 
விளங்கும் பூணூலை அணிந்த அண்ணல் இடம் இது என்கின்றது. மழை நுழை மதியம் - மேகத்தினூடே 
நுழையும் பிறை. அழிதலை - தசைநார் அழிந்த பிரமகபாலம். மடமஞ்ஞை கழை நுழை புனல் - இளைய 
மயில்கள் மூங்கிலிடையே நுழைகின்ற தேவகங்கை. இழை நுழைபுரி அணல் - இழையாகத் திரண்ட 
முப்புரிநூலை அணிந்த பெருமையிற் சிறந்தவன். 
Lord Civan has positioned in His fragrant matted hair the crescent moon that travels through the clouds. In addition He adorns in His head the human skull to the dried skin is still sticking to the bone. He also supports in His head the celestial river Ganges running from the mountain where peacocks (women much like in some of its qualities) get going in between the bamboo trees. He wears a round ear ring in His right charming ear. He glufully wears on His chest well twisted three ply sacred thread. This Lord Civan is entempled in Thiru-idai-maru-thoor.

அருமையனெளி மையனழல் விடமிடறினன் 
கருமையினொளி பெறுகமழ் சடைமுடியன் 
பெருமையன்சிறு மையன்பிணைபெணொ டொருமையின் 
இருமையுமுடையணலிடமிடைமருதே. 3

அருமையன், எளிமையன், அழல்விடமிடறினன், 
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன், 
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின் 
இருமையும் உடை அணல், இடம் - இடைமருதே.

பொருள்: சிவபெருமானார் அன்பில்லாதவருக்குத் தூரமானவராகவும், அன்புடைய 
அடியவருக்கு அருகிலும் இருக்கும் எளியவர். அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு 
நிறுத்திய கண்டத்தினர். பெருமையான ஒளிமிகுந்த சடை முடியை உடையவர்.
பெரியவற்றுக்கு எல்லாம் பெரியவர். சிறியன யாவற்றிற்கும் சிறியவர். தன்னோடு
பிணைந்துள்ள உமையம்மையோடு ஒரு உருவில் இருவடிவாகத் தோன்றுபவர். 
இச்சிவபெருமான் எழுந்தருளிய இடம் திரு இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: அரியனாக, எளியனாக, நீலகண்டனாக, சடைமுடியனாக, ஓருருவிலேயே சிவமும் 
சக்தியுமாகிய ஈருருவத்தை உடையவனாக இருக்கும் அண்ணல் இடம் இடைமருது என்கின்றது. 
அருமையன் - அணுகியடி வணங்காத புறச்சமயிகட்கும், ஆணவ பரிபாகமுறாத பதவி 
மோகமுடையார்க்கும் அரியன். எளிமையன் - அடியார்க்கு எளியன். பெருமையன் - பெரியவற்றிற்கு 
எல்லாம் பெரிய பெருமையுடையவன். சிறுமையன் - சிறியவற்றிற்கெல்லாம் சிறியவன். பிணை 
பெண்ணோடு - பிணைந்துள்ள உமாதேவியோடு. ஒருமையின் - ஒரு திருமேனியிலேயே. இருமையும் 
உடைய - சிவமும் சத்தியுமாகிய இரண்டன் தன்மையும் உடைய. 
Lord Civan is unattainable for those who are without any love to Him nor they do have any mercy towards other souls; whereas He is easily accessible to His pious devotees who realise the existence of god in all souls and show mercy to them. Without swallowing the 'fire like' poison, He positioned it in His throat; He is the greatest of all that is great and at the same time He is the smallest of all that is very small. Sharing His body with His consort Umaa Devi, He is monistic in dualism (one body with two forms). This Lord Civan's abode is Thiru-idai-maru-thoor.

பொரிபடுமுதுகுறமுளிகளிபுடைபுமல்கு 
நரிவளர்சுடலையுள்நடமெனநவில்வோன் 
வரிவளர்குளிர்மதியொளிபெறமிளிர்வதொர் 
எரிவளர்சடையணலிடமிடைமருதே. 4

பொரி படு முதுகு உற முளி களி புடைபு மல்கு 
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன், 
வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஓர் 
எரி வளர்சடை அணல், இடம் - இடைமருதே.

பொருள்: சிவபெருமானார், நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள், களிப்புடன் 
நிறைந்து தோன்றும் சுடுகாட்டில், நடனம் ஆடுபவர். அழகிய கலைகளை கோடாகத் 
தோன்றி பின் வளரும் தன்மையை உடைய குளிர்ந்த பிறை மதியை ஒளிபெற அணிந்த 
எரிபோன்று வளரும் சடைமுடியை உடைய தலைமையாளர். இச்சிவபெருமான் 
எழுந்தருளிய இடம் திருஇடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: இடுகாட்டுள் நடமாடுவோன், மதி புனைந்த சடையண்ணல் இடம் இது என்கின்றது. பொரி 
படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி - பொரிந்த முதுகிற் பொருந்தக் காய்ந்த களிப்போடுகூடிய நரி. 
வரி - கோட்டு அளவாக அதாவது கீற்றாக. 
Lord Civan dances in the burning ghat where a number of foxes with dried and parched backs happily appear near Him. On His 'fire like' matted hair He bedecks the shining cool crescent moon, which looks like a thin line in the beginning, but starts growing day by day. This pre-eminent Lord Civan is entempled in Thiru-idai-maru- thoor.

வருநலமயிலனமடநடைமலைமகள் 
பெருநலமுலையிணைபிணைசெய்தபெருமான் 
செருநலமதிலெய்தசிவனுறைசெழுநகர் 
இருநலபுகழ்மல்குமிடமிடைமருதே. 5

வரு நல மயில் அன மடநடை மலைமகள் 
பெருநலமுலைஇணை பிணைசெய்த பெருமான், 
செரு நல மதில் எய்த சிவன், உறை செழுநகர் 
இரு நல புகழ் மல்கும் இடம் - இடைமருதே.

பொருள்: சிவபெருமான் அழகோடு அசைந்து வரும் மட நடையினளாகிய மலையரையனின் 
மகளும், பெருநல முலையாள் என்ற திருப்பெயரையும் உடையவளுமாகிய அம்மையின் 
இரு தனபாரங்களைக் கூடி இருப்பவர். போர் செய்தற்கு உரிய தகுதியோடு விளங்கிய 
அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவர். இச்சிவபெருமான் உறையும் செழுமையான 
நகரம் விரிந்த புகழால் நிறைந்த திரு இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: பெருநலமுலையம்மையோடு கூடிய பெருமான் நகர் இடைமருது என்கின்றது. வருநல மயில் 
அன மடநடை மலைமகள் - வருகின்ற மயிலன்ன சாயலையும் அன்னம் போன்ற மடநடையையும் உடைய 
மலைமகள், பெருநலமுலையாள் இத்தலத்து இறைவியின் திருநாமம். செருநலமதில் - போர் நலம் வாய்ந்த 
முப்புரம். 
Lord Civan is affiliated with Umaa Devi, the daughter of mountain king. She resembles in her features, a peacock and walks like a swan. One of her holy names is Peru-nala-mulaiyaal (This is the name of the goddess of Thiru-idai- maru-thoor) with whose breasts Lord Civan is united. He destroyed the war like efficient three fortresses of Asuraas by discharging an arrow. This Lord Civan is entempled in Thiru-idai-maru-thoor which is a fertile city having wide spread reputation.

கலையுடைவிரிதுகில்கமழ்குழலகில்புகை 
மலையுடைமடமகள்தனையிடமுடையோன் 
விலையுடையணிகலனிலனெனமழுவினோ 
டிலையுடைபடையவனிடமிடைமருதே. 6

கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை, 
மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்; 
விலை உடை அணிகலன் இலன் என மழுவினோடு 
இலைஉடைபடையவன்; இடம் - இடைமருதே.

பொருள்: மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையை தன் இடுப்பில் அணிந்தவளும், அகிலின் புகை 
கமழும் கூந்தலை உடையவளுமான மலை அரசனின் மடமகளாகிய பார்வதி தேவியை 
சிவபெருமானார் தனது இடப்பாகத்தில் வைத்திருப்பவர். விலைமதிப்புள்ள அணிகலன்கள் 
எவையும் இல்லாதவர் என்று சொல்லுமாறு, மழு, எலும்பு முதலியன பூண்டு இலை வடிவான 
சூலப்படையையும் வைத்திருப்பவர். இச்சிவபெருமான் எழுந்தருளிய இடம் திருஇடை 
மருதூர் ஆகும்.

குறிப்புரை: உமாதேவியை இடப்பாகம் உடையோன். மழு சூலம் இவற்றை உடையவன் இடம் இது 
என்கின்றது. துகிலையும், அகில் புகை கமழ் குழலையும் உடைய மடமகள் எனக் கூட்டுக. விலையுடை 
அணிகலன் இலன் என - விலைமதிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் இல்லாதவன் என. இலையுடை 
படையவன் - இலைவடிவாகிய சூலப்படையை உடையவன். 
The sincere and simple Paarvathi Devi, daughter of mountain king, whose hair is Lord Civan fragrant with the smoke of Eaglewood, wears a wide waist corset. accommodates her on the left portion of His body. He wears skulls, tortoise shells etc., as if He has no costly ornaments to wear. He holds the battle axe and the trident in His hands as war weapons. This Lord Civan's place of residence is Thiru-idai-maru-thoor.

வளமெனவளர்வனவரிமுரல்பறவைகள் 
இளமணலணைகரையிசைசெயுமிடைமரு 
துளமெனநினைபவரொலிகழலிணையடி 
குளமணலுறமூழ்கிவழிபடல்குணமே. 7

வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் 
இளமணல் அணை கரை இசைசெயும் இடைமருது 
உளம் என நினைபவர் ஒலிகழல் இணைஅடி, 
குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.

பொருள்: இடைமருதூர் என்னும் திருத்தலமானது வளமுடைய இடமாகும். நாம் 
வாழ்வதற்கு ஏற்ற இடமாகும் என்று எண்ணி அழகிய பறவைகளும் வண்டுகளும் இணைந்து, 
இளமையான மணல் அணைந்த கரையில் இசை செய்யும் இடமாகும். இத்தகைய 
இடைமருதை மனமார நினைப்பவர் அந்நகரை அடைந்து, அங்குள்ள தீர்த்தத்தில் 
கழுத்தளவிருந்து மூழ்கி வீரக்கழல் அணிந்த மருதவாணனை வழிபடுவதைப் பண்பாகக் 
கொள்க.

குறிப்புரை: வண்டுகள் இசைமுரலும் இடைமருதுறைபவன் இணையடியைக் குளத்தில் மூழ்கி வழிபடல் 
குணமாம் என்கின்றது. வளம் என வளர்வன - இது வளமான இடம் என்று வளர்வனவாகிய. வரி முரல் 
பறவைகள் - வரிகளோடு ஒலிக்கின்ற வண்டுகள். மனம் நினைத்த பொருள் வடிவாக அமையும் 
இயல்பிற்றாதலின் "இடைமருது உளமென நினைபவர்” என்றார். குளம் அணல் உற மூழ்கி - குளத்தில் 
கழுத்தளவிருந்து மூழ்கி. அணல் - தாடி. 
The birds and beetles feel that Thiru-idai-maru-thoor is a fertile place and so fit for their settlement. With this idea, they gather here and make humming sound and other noise which resembles the musical note called Vari-p-paadal. People happily think that they do live in such a good place. They contemplate on and praise in the minds the heroic ankleted Holy Feet of Lord Civan. It is a deed of virtuous to take bath in the holy tank, where the depth is up to the neck level and offer worship to Lord Civan, who is enshrined in this city.

மறையவனுலகவன்மதியவன்மதிபுல்கு 
துறையவனெனவலவடியவர்துயரிலர் 
கறையவன்மிடறதுகனல்செய்தகமழ்சடை 
இறையவனுறைதருமிடமிடைமருதே.

“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு 
துறையவன்” என வல அடியவர் துயர் இலர்; 
கறையவன் மிடறுஅது, கனல்செய்த கமழ் சடை 
இறையவன் உறை தரும் இடம் - இடைமருதே.

பொருள்: வேதங்களை அருளியவர். அனைத்து உலகங்களாக விளங்குபவர். திங்களாய்த் 
திகழ்பவர். அறிவோடு பட்ட கலைத்துறைகளாக விளங்குபவர். நீலகண்டத்தை உடையவர் 
கனல் போன்று விளங்கும் சடையை உடையவர். எல்லோருக்கும் தலைவனாக இருப்பவர். 
இப்பெருமான் சிவபெருமானே என்று போற்ற வல்ல அடியவர்கள் துன்பம்
இல்லாதவர்களாக ஆகுவர். இப்பெருமான் எழுந்தருளிய இடம் திருஇடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: வேதியன். உலகெலா மாயவன் என்றெல்லாம் சொல்ல வல்ல அடியவர்கள் துயரிலர் 
என்கின்றது. செந்தீக் கொழுந்துபோலச் சுடர்விடும் சடையவன் என்க. மிடறது கறையவன் என மாறிக் 
கூட்டுக. 
Devotees of Lord Civan extol Him by declaring: “Oh Lord, You gave out the four Vedas! You are the entire universe! You are the moon! You are wisdom and the repository of all its associated learning". These devotees adoring Him as above will have no sorrows in their life. He shines with His dark blue coloured neck and fiery matted hair. He is the master of all. This Lord Civan is entempled in Thiru-idai-maru- thoor.

மருதிடைநடவியமணிவணர்பிரமரும் 
இருதுறையகலமொடிகலினரினதெனக் 
கருதிடலரியதொருருவொடுபெரியதொர் 
எருதுடையடிகள்தமிடமிடைமருதே. 9

மருது இடை நடவிய மணிவணர், பிரமரும், 
இருது உறை அகலமொடு இகலினர், இனது எனக் 
கருதிடல் அரியது ஓர் உருவொடு பெரியது ஓர் 
எருது உடை அடிகள்தம் இடம் - இடைமருதே.

பொருள்: மருத மரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணி போன்ற நிறத்தை 
உடைய திருமாலும், பிரமனும் தம்முள் மிக்க பெருமை உடையவர் யார் என 
மாறுபட்டவராய் நிற்க இன்னது என்று கருதுவதற்கு இயலாத பெரிய ஒளி உருவோடு 
நின்றவர் சிவபெருமானாகும். இச்சிவபெருமான் இடப வாகனத்துடன் எழுந்தருளிய இடம் 
இடை மருதூர் ஆகும்.

குறிப்புரை: திருமாலும் பிரமனும் மாறுபட இன்னதென அறிய முடியா வடிவத்தோடு எழுந்த பெருமானிடம் 
இது என்கின்றது. மருதிடை நடவிய மணிவணர் - மருதமரங்களினிடையே கட்டிய உரலோடு புகுந்த 
கண்ணன், இனது எனக் கருதிடல் அரியது - இன்னது என்னக் கருதமுடியாத. எருது - இடபம். 
Thirumaal in one of his avataars as Kannan (Krishnan) used to crawl in his childhood days all around and in between two Arjun trees (u) with a wooden mortar attached to his waist by a rope. The body of Thirumaal reflects dark blue colour like that of sapphire gem. He and Brahma had difference of opinion on the subject as to who is the more widely reputed. Then Lord Civan stood before them as a tall and big column of fire, whose nature they could not discern. This Lord Civan who rides on a big bull is entempled in Thiru-idai-maru-thoor.

துவருறுவிரிதுகிலுடையருமமணரும் 
அவருறுசிறுசொலைநயவன்மினிடுமணல் 
கவருறுபுனலிடைமருதுகைதொழுதெழும் 
அவருறுவினைகெடலணுகுதல்குணமே. 10

துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும் 
அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல் 
கவாஉறு புனல் இடைமருது கைதொழுது எழும்- 
அவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.

பொருள்: நீண்ட துவர் ஆடையை உடுத்தும் புத்தரும், சமணரும் கூறும் சிறுமையான 
சொற்களை விரும்பாதீர்கள். காவிரி நதி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் 
வாய்க்கால்களை உடைய இடைமருதூரைக் கைகளால் வணங்குபவர்களுக்கு வினைகள் 
கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

குறிப்புரை: புறச்சமயிகள் பேச்சை விரும்பாதீர்கள். இடைமருதினைக் கைதொழும்; அவர்களின் வினை 
கேட்டையணுகுதல் குணம் என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர், 
Ye devotees! Do not desire to heed to the meaningless words of Samanars and the words of the Buddhists who wear and cover their body with the wide cloth dyed in red ochre. Please go to Thiru-idai-maru-thoor where the Cauvery river divides itself and runs into several canals and reaches this place. You worship Lord Civan enshrined therein with both of your hands. Your bad karma will vanish and you will attain all virtue.

தடமலிபுகலியர்தமிழ்கெழுவிரகினன் 
இடமலிபொழிலிடைமருதினையிசைசெய்த 
படமலிதமிழிவைபரவவல்லவர்வினை 
கெடமலிபுகழொடுகிளரொளியினரே 11

தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் 
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த, 
படம் மலி, தமிழ்இவை பரவ வல்லவர் வினை 
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

பொருள்: நீர் நிலைகள் பலவற்றை உடைய புகலிப்பதியில் தோன்றிய தமிழ் வல்லுனர்
ஞானசம்பந்தன் ஆகும். இவர் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடை மருதூரில்
எழுந்தருளிய இடைமருதீசனை இசையால் பரவிய, சொல் ஓவியமாக இத்திருப்பதித்
தமிழைப் பாடிப்பரவ வல்லவர்களின் வினைகள் அழிந்துவிடும். அவர்கள் புகழோடு
ஒளிமிகுந்து விளங்குபவர்.

குறிப்புரை: தமிமிழ் விரகினனாய ஞானசம்பந்தப் பெருமான், இடைமருதைப் பற்றி இயம்பிய தமிழை 
வல்லவர் வினைகெடப் புகழோடு ஒளியுமிக விளங்குவர் என்கின்றது. படம் மலி தமிழ் - 
பட மெடுத்தாற்போலச் சிறந்த தமிழ். கிளர் - மிகுகின்ற. 
Gnaanasambandan is a versatile Tamil scholar. He hails from Pukali town which is rich in water resources. With wordy pictures he has sung this rhythmic verse on Lord Civan of Thiru-idai-maru-thoor. Those who sing these verses and hail the Lord will find their karma perish. They will lead lives of fame and prosperity.

திருச்சிற்றம்பலம்

121ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

122. திருஇடைமருதூர்

திருத்தல வரலாறு

32ஆம் திருப்பதிகம் பார்க்க. 
122. THIRU-IDAI-MARU-THOOR

HISTORY OF THE PLACE

See 32nd Hymn.

திருச்சிற்றம்பலம்

122. திருஇடைமருதூர்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளராஷ்டிரம்

விரிதரு புலியுரிவிர வியஅரையினர் 
திரிதரு மெயிலவைபுனை கணையினிலெய்த 
எரிதரு சடையினரிடை மருதடைவுனல் 
புரிதரு மனனவர்புகழ் மிகவுளதே. 1

விரிதரு புலிஉரி விரவிய அரையினர், 
திரிதரும் எயில்அவை புனை கணையினில் எய்த 
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல் 
புரிதரும் மனன் அவர் புகழ் மிக உளதே.

பொருள்: சிவபெருமான் விரிந்த புலித்தோலை ஆடையாக இடையில் கொண்டிருப்பவர். 
வானில் திரிந்துகொண்டு துன்பம் செய்த முப்புரங்கள் எரிந்து அழியுமாறு தனது ஆற்றல் 
மிகுந்த கணையை எய்தவர். நெருப்புப் போன்ற சிவந்த சடை முடியை உடையவர். 
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடை மருதூரை அடைய வேண்டும் என்று நினைக்கும் 
மனத்தினை உடையவர்களுக்கு மிகுந்த புகழ் உண்டாகும்.

குறிப்புரை: புலித்தோல் அரையினராகிய இறைவனது திருஇடைமருதினை அடைய விரும்பிய
மனத்தவர்க்குப் புகழ் மிகவுளது என்கின்றது. திரிதரும் எயில் - திரிபுரம் 
Lord Civan wears tiger skin at waist as garment. He is the one who destroyed the three fortresses with powerful arrow. His matted hair is reddish like fire. He is enshrined in Thiru-idai-maru-thoor. Those who deeply feel in their minds a desire to go to Thiru-idai-maru-thoor and worship Lord Civan therein, will become famous.

மறிதிரை படுகடல்விட மடைமிடறினா் 
எறிதிரை தரைபொருமிடை மருதெனுமவர் 
செறிதிரை நரையொடுசெல விலருலகினில் 
பிறிதிரை பெறுமுடல் பெறுகுவதரிதே. 2

“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர் 
எறிதிரை கரை பொரும் இடைமருது" எனும் அவர் 
செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்; 
பிறிது இரை பெறும் உடல் பெறுகுவது அரிதே.

பொருள்: சிவபெருமான் பெரிய அலைகள் சுருண்டு வீசுகின்ற திருப்பாற்கடலில் தோன்றிய 
விடத்தை விழுங்கி கண்டத்தில் தடுத்து நிறுத்தியவர். இப்பெருமான், காவிரி ஆற்றின் 
அலைகள் கரைகளை முட்டுகின்ற இடைமருதூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார் 
இத்தலத்தின் பெயரைச் சொல்லுபவர்களை மூப்பினை உணர்த்தும் தோல் சுருக்கம் 
நரைமயிர் ஆகியன அணுகாது. மீண்டும் உலகில் பிறந்து உணவை உண்டு உடலை 
வளர்க்கும் பிறவியை எடுக்கமாட்டார்கள் (பிறவாமை எய்துவர்).

குறிப்புரை- நீலகண்டர் எழுந்தருளிய இடைமருது என்று கூறுபவர் நரைதிரை எய்தார். மீட்டும்
இவ்வுடலையும் எய்தார் என்கின்றது. பிறிது இரை பெறும் உடல் பெறுகுவது அரிது. வேறு 
உணவை உட்கொளும் இந்த அன்னமயகோசத்தை அடைவது அரிது. பிறவியில்லை என்பதாம் 
Lord Civan is the one who, without swallowing the poison which arose in the ocean of milk, where the rolling waves dash against the shores, has positioned it in His throat. The surging waves of river Cauvery dash against the banks in Thiru-idai-maru- thoor. Those who recite the very name of this place will be freed from physical deformities that appear like waves brought by age shrinking of the skin, greying of hair and such others. They also will never be born in this world with physical body which has to eat food for survival.

சலசலசொரி புனல்சடை யினர்மலைமகள் 
நிலவியவுடலி னர்நிறைமறை மொழியினர் 
இலரெனவிடு பலியவரி டைமருதினை 
வலமிடவுடல் நலிவில துளவினையே. 3

சலசல சொரி புனல் சடையினர், மலைமகள் 
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர், 
இலர் என இடு பலியவர், இடைமருதினை 
வலம்இட, உடல் நலிவு இலது உள வினையே.

பொருள்: சிவபெருமான் சல சல என்று சொரியும் கங்கையைச் சடையில் அணிந்தருப்பவர். த 
மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவர்.நிறைவான வேதங்களை அருளி 
மொழிபவர். உணவின்மையால் பசியோடு உள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவர். 
இப்பெருமான் எழுந்தருளியுள்ள இடைமருதூரை வலம் வர, வினைகளால் வரும் உடல் 
நலிவு இல்லாமற் போகும்.

குறிப்புரை: இடைமருதை வலம் வர வினைகளால் உடல் நலிவு இல்லையாம் என்கின்றது புனல் - 
கங்கை. நிலவிய - விளங்கிய. உளவினையால் உடல் நலிவு இலது என இயைக்க. 
Lord Civan is the one who holds in His matted hair, the river Ganges which revolves and flows with heavy tinkling noise. He embeds the daughter of mountain king on the left half of His body. He pronounces the perfect Vedas. He accepts food offered by women who feel that He is hungry without food. This Lord Civan is enshrined at the temple in Thiru-idai-maru-thoor and those who circumambulate this temple will have no physical ailments caused by their past karma.

விடையினர் வெளியதொர் தலைகலனெனநனி 
கடைகடை தொறுபலியிடு கெனமுடுகுவர் 
இடைவிட லரியவரிடை மருதெனுநகா் 
உடையவரடி பிணைதொழுவ தெம்முயர்வே.  4

விடையினர், வெளியதுஓர் தலை கலன் என நனி 
கடைகடைதொறு, “பலி இடுக”! என முடுகுவர், 
இடைவிடல் அரியவர் - இடைமருது எனும் நகர் 
உடையவர்; அடிஇணை தொழுவது எம் உயர்வே.

பொருள்: சிவபெருமான் விடையூர்தியை உடையவர். வெண்மையான தலையோட்டை 
உண்கலனாகக் கொண்டு பலகாலம் வீடுகள் தோறும் சென்று, “பலி இடுக” என விரைந்து
செல்பவர். மண்ணுயிர்களால் இடைவிடாது தியானிக்கப்படுபவர். இப்பெருமான்
இடைமருதூர் என்னும் நகருக்கு உரியவர். இப்பெருமானின் திருவடிகளைத் தொழுவதே 
எமக்கு உயர்வைத் தருவதாகும்.

குறிப்புரை: இடைமருதினை உடையவர் அடியிணை தொழுவது எம்முயர்வுக்கு வழியாம் என்கின்றது. 
வெளியது ஓர் தலை பிரம கபாலம். கலன் - உண்கலன். முடுகுவர் - விரைவர். இடைவிடல் அரியவர் - 
ஆன்மாக்களால் இடைவிடாது எண்ணுதற்கு உரியவர் என்பது கருத்து.
Lord Civa owns a bull for His movements. He carries the skull of Brahma as His eating bowl and goes very often to a number of houses and begs for alms. He is the one who is the most desirable and the most benevolent Lord to think and adore, for ever, by all souls without any break. This Lord Civan belongs to Thiru-idai-maru-thoor city. To worship His Holy Feet will give us redemption.

உரையருமுரு வினருணா்வரு வகையினர் 
அரைபொரு புலியதளுடை யினரதன்மிசை 
இரைமருமர வினரிடைமரு தெனவுளம் 
உரைகளது துடையவர் புகழ்மிகவுளதே. 5

“உரை அரும் உருவினர், உணர்வுஅரு வகையினர், 
அரை பொரு புலிஅதள் உடையினர், அதன்மிசை 
இரை மரும் அரவினர் இடைமருது" என உளம் 
உரைகள் அது! உடையவர் புகழ் மிக உளதே.

பொருள்: சிவபெருமானார் வார்த்தைகளால் விவரிக்க இயலாத உருவத்தை உடையவர். 
மனத்தால் உணர்ந்து கொள்வதற்கு அரியவர். இடையில் பொருந்திய புலித்தோல் 
ஆடையினர். அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பை கச்சையாகக் கட்டி இருப்பவர்.
இப்பெருமான் எழுந்தருளியுள்ள இடைமருதூரை உள்ளத்தில் நினைந்து 
தியானிப்பவர்களுக்கு மிகந்த புகழ் உளதாகும்.

குறிப்புரை: சொல்லுதற்கரிய உருவினரும், உணர்தற்கரிய தன்மைகளை உடையுவரும் 
புலித்தோலாடையினரும் ஆன இறைவனது இடைமருதென நினைக்கவும் பேசவும் வல்லவர்கட்குப் புகழ் 
மிக உளதாம் என்கின்றது. இரை மரும் அரவினர் - உணவை உட்கொள்ளும் பாம்பினை உடையவர் 
உளம் உடையவர். உரைகளது உடையவர் (க்குப்) புகழ் உளது என முடிக்க, 
Lord Civan's beauty is indescribable. It is very difficult to make out His nature. He wears the tiger skin as His waist dress. And a serpent over that as a waist band. This Lord Civan is entempled in Thiru-idai-maru-thoor. Those who adore and worship many times Lord Civan and the temple city Thiru-idai-maru-thoor in which He is enshrined will get endless fame.

ஒழுகிய புனல்மதியர வமொடுறைதரும் 
அழகிய முடியுடையடி களதறைகழல் 
எழிலின ருறையிடைமரு தினைமலர்கொடு 
தொழுதல் செய்தெழுமவர் துயருறவிலரே. 6

ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் 
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல் 
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு 
தொழுதல்செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

பொருள்: சிவபெருமானின் அழகிய சடைமுடியில், வழிந்து ஒழுகும் கங்கைநதி, இளம்பிறை 
பாம்பு ஆகியன உறைகின்றன. ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்துள்ள அழகர் அவர். 
இப்பெருமான் உறைகின்ற இடைமருதூரை மலர் கொண்டு தொழுது போற்றுபவர்களின்
மனதில் துன்பம் இல்லாதது ஆகும்.

குறிப்புரை: இடைமருதை மலர்கொண்டு தொழுவார் துயருறுதல் இலர் என்கின்றது. அடிகளது 
இடைமருது, அறைகழல் எழிலினர் உறையிடைமருது எனத் தனித்தனி இயைக்க. 
Lord Civan has a very attractive matted hair wherein the over flowing river Ganges, the crescent moon and the snake rest. He is the handsome Lord wearing the tinkling warrior's anklet on His Feet. Those who approach this Civan in Thiru-idai- maru-thoor and hail Him with flowers and prostrate before Him will have no sufferings.

கலைமலி விரலினர்கடிய தொர்மழுவொடும்
நிலையினர் சலமகளுலவிய சடையினர் 
மலைமகள் முலையிணை மருவியவடிவினர் 
இலைமலி படையவரிட மிடைமருதே  7

கலை மலி விரலினர், கடியது ஓர் மழுவொடும் 
நிலையினர், சலமகள் உலவிய சடையினர், 
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்
இலைமலிபடையவர் இடம் இடைமருதே

பொருள்: சிவபெருமான் இன்னிசைக் கலையை எழுப்பும் வீணையை மீட்டுகின்ற விரலை
உடையவர்.அழிக்கும் தன்மையை உடைய மழு ஆயுதத்தோடு விளங்குபவர்.கங்கை 
உலாவும் சடைமுடியை உடையவர். மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவத்தை
உடையவர். இலைவடிவான் சூலத்தை  ஏந்தியிருப்பவர். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும்
தலம் இடைமருதூர் ஆகும்.

குறிப்புரை:  கங்கையுலாவிய சடையையும், உமாதேவியார் முலைத்தழும்பு சேர்ந்த வடிவினையும்
உடையவர் இடம் இடைமருது என்கின்றது. வீணை வாயிலாக இசைக்கலையை வெளிப்படுத்துதலின் 
கலைமலி விரலினர் எனக்கூறப்பெற்றார்.
To make the knowledge of musical art excel, Lord Civan has skilled fingers with which to play on the Indian lute. He appears with a fierce battle axe in one of His hands. His matted hair is the living space of the river Ganges. He embraces His consort Umaa Devi, daughter of the mountain king in affection. He appears holding a trident, battle weapon, in one of His hands. This Lord Civan is entempled in Thiru-idai-maru- thoor.

செருவடை யிலவலசெயல் செயத்திறலொடும் 
அருவரை யினிலொருபது முடிநெரிதர 
இருவகை விரனிறிய வரிடைமருதது 
பரவுவரரு வினையொரு வுதல்பெரிதே. 8

செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும் 
அரு வரையினில் ஒருபதுமுடி நெரிதர, 
இருவகை விரல் நிறியவர் இடைமருதுஅது 
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே

பொருள்: இராவணன் முறையற்ற வலிய செயல்களைப் போரில் செய்பவன். அத்தகைய 
வலிமையுடன் அவன் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தான்.
அவனின் உடல் வலிமையும் உள்ளத்தின் செருக்கும் கெடுமாறு சினம், கருணை ஆகிய 
உள்ளக் குறிப்போடு, சிவபபெருமான் அவனுடைய பத்துத் தலைகளையும் விரலை ஊன்றி 
நெரித்தவர். இப்பெருமான் எழுந்தருளியுள்ள இடைமருதூரை போற்றித் துதிப்பவர்களின் 
அருவினைகள் நீங்குதல் பெரிதாகுமோ? வினை எளிதில் நீங்கிவிடும் என்பது குறிப்பு.

குறிப்புரை: இடைமருதைப் பரவுவார் வினை நீங்குதல் பெரிதாமோ என்கின்றது. செருவு அடையில வல 
செயல் செய் அத்திறலொடும் - போரில் முறையற்ற வலிய செயல்களைச் செய்யும் அத்தகைய 
வலிமையோடும். இருவகை விரல் நிறியவர் - அவன் வலிமையும் முடியும் ஆகிய இரண்டும் 
நெரியும்படியான இருவகைத் திருவுள்ளக்குறிப்போடு விரலை ஊன்றியவர். அதாவது அவன் 
அழியப்படாது அடங்க வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்புடன் என்பது கருத்து. 
Raavanan, of disorderly way in the battle field, tried to move aside mount Kailas, the abode of Lord Civan. Without having any intention to annihilate Raavanan, Lord Civan slightly pressed the mountain by His toe and extinguished his valour. This Lord Civan is entempled in Thiru-idai-maru-thoor. Those who hail Thiru-idai-maru-thoor and adore Lord Civan therein will get rid of their karma.

அரியொடு மலரவனென விவரடிமுடி 
தெரிவகை யரியவர்திருவடி தொழுதெழ 
எரிதரு முருவர்தமிடை மருதடைவுறல் 
புரிதரு மனனவர்புகழ் மிகவுளதே. 9

அரியொடு மலரவன் என இவர் அடி முடி 
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ, 
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவுஉறல் 
புரிதரும் மனன்அவர் புகழ் மிக உளதே.

பொருள்: திருமாலுடன் பிரமனும் அடிமுடியைக் காண முயன்றபோது, அவர்களுக்குத் 
தெரிய முடியாதவாறு அரியவராக நின்றவர். அவர்கள் பணிந்து தொழுது எழுந்தபோது 
சோதிவடிவாகக் காட்சி தந்தவர். இப்பெருமான் எழுந்தருளிய இடைமருதூரை அடைய 
வேண்டும் என்ற உறுதியான மனம் உடையவர்களுக்கு மிகுந்த புகழ் உண்டு.

குறிப்புரை: இடைமருதை எய்த வேண்டும் என்ற சித்தம் உடையாரக்குப் புகழ் உண்டாம் என்கின்றது. 
தெரிவகை - ஆராய்ந்து அறிவதற்கு. 
Both Thirumaal and Brahma attempted to see the Holy Feet of Lord Civan and failed, even as He was standing before them as a big column of fire. Later when they both repented for their haughtiness and worshipped Him, Civa graced them. Those who desire to reach Thiru-idai-maru-thoor offer worship to Lord Civan therein will get great fame.

குடைமயி லினதழை மருவிய வுருவினர் 
உடைமரு துவரினார் பலசொல வுறவிலை 
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் 
இடைமரு தெனமனம் நினைவது மெழிலே. 10

குடை மயிலினதழை மருவிய உருவினர், 
உடை மரு துவரினர், பல சொல உறவுஇலை; 
அடை மரு திருவினர் தொழுது எழு கழலவர் 
இடைமருது என மனம் நினைவதும் எழிலே.

பொருள்: சமணர்கள் குடையையும், மயில் தோகையையும் கையில் வைத்திருப்பவர்கள். 
புத்தர்கள் காவி உடைய அணிந்திருப்பவர்கள். அவர்களின் பொருளற்ற சொற்களிடம் 
நமக்கு உறவு இல்லை என ஒதுக்கி விடுங்கள். இறை அருளை முழுமையாகப் பெற்ற 
அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடையது, சிவபெருமான் எழுந்தருளியுள்ள 
இடைமருதூர் ஆகும் என மனதில் நினைப்பது அழகைத் தரும்.

குறிப்புரை: புறச்சமயிகள் பலபேச அவற்றோடு நமக்கு உறவே இல்லை என்று அடைகின்ற சில 
புண்ணியசீலர்கள் வணங்குகின்ற திருவடியை உடையார் இடைமருது என எண்ணுவதே அழகு 
என்கின்றது. குடை மயிலினதழை மருவிய உருவினர் - குடையையும் மயில்பீலியையும் தழுவிய 
வடிவத்தை உடையவர்களாகிய சமணர்கள். துவர் - காவி. பல சொல என்றது அவற்றில் பொருளற்ற 
தன்மையையும் பொருந்தாக்கோளையும் புலப்படுத்த. 
Samanars carry an umbrella and peacock feathers while the Buddhists wear cloth dyed in red ochre. They speak several diverse insignificant sayings. Eh virtuous devotees, please neglect their company. They possess natural resources because of the grace of Lord Civan. Please come and offer worship on the Holy Feet of Lord Civan of Thiru-idai-maru-thoor. To think and hail in your mind that Thiru-idai-maru-thoor is the famed town of Lord Civan will itself give you a radiant look and good appearance.

பொருகட லடைதருபுக லியர்தமிழொடு 
விரகினன் விரிதருபொழி லிடைமருதினைப் 
பரவிய வொருபதுப யிலவல்லவரிடா் 
விரவிலர் வினையொடு வியனுலகுறவே. 11

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு 
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப் 
பரவிய ஒருபது பயிலவல்லவர் இடர் 
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.

பொருள்: கரையைப் பொருதுகின்ற கடலை அணித்தாக உள்ள புகலிப்பதியில் 
தோன்றியவர். தமிழ் விரகனான ஞானசம்பந்தன் ஆகும். இவர் விரிந்த பொழில்களால்
சூழப்பட்ட இடைமருதூரில் எழுந்தருளிய சிவபெருமானைப் போற்றிப் பாடினார். 
இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்களுக்குத் துன்பம் வராது, 
வினையும் இராது. அவர்களுக்கு அகன்ற தேவர் உலகம் வாய்க்கப் பெறும்.

குறிப்புரை: திருஞானசம்பந்தப் பெருமான் இடைமருதைப் பரவிய இப்பாடல் பத்தும் பயிலவல்லார் 
வினையும் இலர்; அவற்றால் வரும் துன்பமும் இலர் எனப் பயன் விளக்கிற்று. வியன் உலகு - அகன்ற 
சுவர்க்கபூமி. 
Pukali is the town where the waves of the seas nearly dash against the shores. Here the Tamil scholar Gnaanasambandan was born. He has sung this hymn on the Lord enshrined in Thiru-idai-maru-thoor which is surrounded by groves grown naturally. Those who can chant these ten verses will have no karma and sufferings. Also the broad eternal world will be theirs.
திருச்சிற்றம்பலம்

122ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
123. திருவலிவலம்

திருத்தல வரலாறு: 
50ஆம் பதிகம் பார்க்க.

பதிக வரலாறு: 
திருவாரூரை அடைந்த பிள்ளையார் புற்றிடங்கொண்ட புனிதரை வழிபட்டு, பற்றும் 
அன்பொடு பணிந்து இசைப்பதிகங்கள் பாடி, அடியார் கூட்டத்தோடும் அங்கிருந்தும் புறப்பட்டு,

வளம் நிறைந்த வலிவலத்தை அடைந்து, மனத்துணை நாதரை வழிபட்டனர். பூவியல் புரிகுழல்' 
என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தனர். 
123. THIRU-VALI-VALAM

HISTORY OF THE PLACE

See 50th Hymn.

திருச்சிற்றம்பலம்

123. திருவலிவலம்

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம் : செளரா ஷ்டிரம்

பூவியல் புரிகுழல்வரி சிலைநிகர்நுதல் 
ஏவியல் கணைபிணை யெதிர்விழி யுமையவள் 
மேவிய திருவுருவுடை யவன்விரைமலார் 
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்; 
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள் 
மேவிய திருஉரு உடையவன் - விரைமலர் 
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

பொருள்: உமையம்மை மலர்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவன். வரிந்து 
கட்டப்பெற்ற வில்லைப் போன்ற நெற்றியை உடையவள். செலுத்துதற்கு உரிய அம்பினைப்
போலவும், மருட்சியை உடைய மானைப் போலவும் கண்களைப் பெற்றவள் உமையம்மை. 
இவ்வம்மையோடு கூடிய திருமேனியை உடையவர் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் 
மணம் கமழும் மலர்களையும் அவற்றில் தேன் உண்ணும் வண்டுகளையும் உடைய பொழில் 
சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்றார்.

குறிப்புரை; உமாதேவி விரும்பி எழுந்தருளிய திருமேனி உடையவன், வலிவம் உறை இறைவன் ஆவான் 
என்கின்றது. பூ இயல் புரி குழல் - பூக்களை அணிந்த பின்னப் பெற்ற கூந்தலையும், வரி சிலை நிகர் 
நுதல் - கட்டுக்களோடு கூடிய வில்லையொத்த நெற்றியையும் உடைய உமையவள் எனத் தனித்தனி 
கொண்டு இயைக்க. ஏவு இயல் கணை - செலுத்தப் பெற்ற பாணம். இதனைக் கண்ணுக்கு ஒப்பாகியது 
சென்று தைத்திடும் இயல்பு பற்றி. பிணை - பெண் மான் நோக்கு, ஆகு பெயர்; இதனைக் கூறியது 
மருட்சி பற்றி. மா இயல் பொழில் - மாமரங்கள் செறிந்த சோலை. வண்டு நிறைந்த சோலையுமாம். 
Umaa Devi, consort of Lord Civan desires and enjoys to be embedded on the left half of His body. This Lora Civan is enshrined at the temple in Thiru-vali-valam, which is surrounded by groves, full of rich mango trees and/or beetles. Umaa Devi wears fragrant flowers in her curling braided hair; her forehead resembles a bow. Her eyes are similar to the arrows which are ready to be shot. They look like the eyes of a deer.

இட்டமத மர்பொடியிசை தலினசைபெறு 
பட்டவிர் பவளநன்மணி யென அணிபெறு 
விட்டொ ளிர்திருவுருவுடை யவன்விரைமலர் 
மட்டமர் பொழில்வலி வலமுறையிறையே. 2

இட்டம்அது அமர் பொடி இசைதலின், நசை பெறு 
பட்டு அவிர் பவள நல்மணி எனஅணி பெறு 
விட்டுஒளிர் திருஉரு உடையவன் - விரைமலர் 
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

பொருள்: சிவபெருமான் தனது திருமேனியில் விருப்பத்துடன் திருநீற்றை அணிந்துள்ளார். 
விரும்பி அணிகின்ற பட்டோடு, விளங்குகின்ற பவள மணி போன்று ஒளிவிடும் அழகிய 
ஒளிவீசுகின்ற திருமேனியை உடையவர். இப்பெருமான் மணம் கமழும் மலர்களில் 
தேனுடன் விளங்கும் பொழில் சூழ்ந்த திருவலிவலத்தில் உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: செம்மேனியில் திருநீறு அணியப் பெற்றமையால் பட்டோடு விளங்குகின்ற பவளமணிபோல 
ஒளிவிடுகின்ற திருவுருவுடையவர் இந்நகர் இறை என்கின்றது. இட்டம் - விருப்பம். நசை - விருப்பம். 
பட்டு அவிர் பவள நன்மணி என - பட்டோடு விளங்குகின்ற பவளமணி என்று சொல்ல. 
Lord Civan resides in Thiru-vali-valam, which is surrounded by fragrant and nectar filled flower groves. With much desire He smears the holy ashes all over His reddish body. This gives an appearance to His body as though He has worn silk dress over which coral gems have been embedded.

உருமலி கடல்கடைவுழி யுலகமருயிர் 
வெருவுறு வகையெழுவிடம் வெளிமலையணி 
கருமணி நிகர்களமுடை யவன்மிடைதரு 
மருமலி பொழில்வலிவல முறையிறையே. 3

உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் 
வெருஉறு வகை எழு விடம், வெளிமலை அணி 
கருமணி நிகர் களம் உடையவன் - மிடைதரு 
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

பொருள்: திருப்பாற்கடலைக் கடைந்தபோது, தேவர்களும் உலக உயிர்களும் அஞ்சுமாறு 
கடலிலிருந்து விடம் எழுந்தது. அந்த விடத்தை சிவபெருமான் விழுங்கினான். அதனால் 
அவனது கண்டம் நீலநிறமாக மாறியது. அவர் தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசி 
உள்ளதால் பட்டோடு விளங்கும் பவள மணி போல ஒளிவீசும் திருமேனியை 
உடையவனாகத் தோன்றுகின்றான்.இவர் மணம் கமழும் பொழில்கள் நிறைந்துள்ள 
திருவலிவலத்தில் உறைந்திருக்கின்றார். வெள்ளிமலை நீறு தோய்ந்த திருமேனிக்கும் 
நீலமணி அவன் கழுத்தில் விளங்கும் கறைக்கும் உவமையாக அமைந்துள்ளது.

குறிப்புரை: பாற்கடலைக் கடைந்த காலத்து, உலகத்து உயிர்கள் யாவும் அஞ்சும்படித் தோன்றிய 
விடத்தை அமுது செய்தமையால் வெள்ளி மலையணிந்த நீலமணியை ஒத்த கழுத்தை உடையவன் இந்நகர் 
இறை என்கின்றது. வெள்ளிமலை நீறு தோய்ந்த இறைவன் திருமேனிக்கும் நீலமணி அவன் கழுத்தில் 
விளங்கும் கறைக்கும் உவமை. மிடைதரு - நெருங்கிய. மரு - மணம். 
Lord Civan resides in Thiru-vali-valam which is surrounded by much fragrant smelling groves. He smears His body with holy ashes giving an appearance, as through He is a silver mountain. When the Devaas churried the ocean of milk there arose a very cruel and oppressive poison which made all the souls in the world tremble and fear death. At that, Lord Civan (without swallowing the poison) put it in His mouth and positioned it in His throat. This caused His neck to appear always in dark blue colour - the same as that of sapphire gem. Lord Civan now appeared as though He is a silver mountain wherein a blue sapphire gem has been fixed firmly in position in the neck area.

அனல்நிகர் சடையழலவியுற வெனவரு 
புனல்நிகழ் வதுமதிநனையபொறி யரவமும் 
எனநினை வொடுவருமிது மெலமுடிமிசை 
மனமுடை யவர்வலிவல முறையிறையே. 4

அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு 
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும் 
என நினைவொடு வரும்இதும், மெல முடிமிசை 
மனம் உடையவர் - வலிவலம் உறை இறையே.

பொருள்: செந்தழல் போன்ற சடையின் தீயை அவிக்க வருவது போன்ற தோற்றமுடைய 
கங்கையைக் கொண்டிருப்பவர் சிவபெருமான். அக்கங்கையில் நனைந்த புள்ளிகளை 
உடைய அரவமானது, பிறை மதியை விழுங்குவது போன்ற நினைப்புடன் உள்ளது. இந்தக் 
கோலத்துடன் விளங்கும் திருமுடியை உடையவர் சிவபெருமானே ஆகும் என்ற 
நினைப்புடன் அடியவர்கள் வாழும் சிறப்பினை உடையது திருவலிவலம் என்ற தலம்.

குறிப்புரை: முடிமீது மனமுடையவர் வலிவலமுறை இறைவர் என்கின்றது. அதற்குரிய ஏது கங்கையோ 
செந்தழல்போன்ற சடையின் தீயை அவிக்க வருவதுபோலப் பெருகிக் கொண்டிருக்கிறது. அக்கங்கையில் 
நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்க மதி என நினைவொடும் வருகின்றது. ஆதலால் இவை 
தருக்கும் பகையுமாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேற் சிந்தையராக 
இருக்கின்றார் என்ற நயந்தோன்றக் கூறியது, அனல் நிகர் சடை அழல் அவியுற - நெருப்பை ஒத்த 
சடையின் தீயானது தணிய. நனை பொறி அரவம் - நனைந்த படப்புள்ளிகளோடு கூடிய பாம்பு. நனை - 
கூரிய என்றுமாம். 
Lord Civan's matted hair looks like fire. Therefore the river Ganges flows into His head with intention to douse the fire. Dots like flower buds fill the hood of the snake which is fully drenched in the Ganges river, moves about to find and devour the moon. However the river and the snake remain calm and unmoved because of Lord Civan's grace. The sincere devotees who have in their minds these facts do live in large numbers in Thiru-vali-valam.

பிடியதனு ருவுமைகொள மிகுகரியது 
வடிகொடு தனதடிவழிபடு மவரிடர் 
கடிகணப திவரவருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலிவல முறையிறையே. 5

பிடிஅதன்உரு உமை கொள, மிகு கரி அது 
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர் 
கடி, கணபதி வர அருளினன் - மிகு கொடை 
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

பொருள்: உமாதேவி, பெண் யானை உருவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானை உருவம் 
கொண்டார். இவர்களுக்குத் தம்மை வழிபடும் அடியவர்களின் துன்பத்தைப் 
போக்குவதற்கென்றே தெய்வத்தன்மை உடைய கணபதியைத் தோற்றுவித்து அருளினர். 
மிகுந்த வள்ளல் தன்மையே நமக்கு அழகைத் தரும் என நினைக்கும் வள்ளற் பெருமக்கள் 
வாழும் திருவலிவலத்தில் இப்பெருமான் உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: உமாதேவி பெண் யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் 
தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் 
என்கின்றது. பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடித்தைக் கொண்டு. கடி கணபதி 
- தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளற் பெருமக்கள். 
To alleviate the sufferings of His devotees Lord Civan decided to create Lord Ganesa. With that intention, Umaa Devi converted herself into a female elephant and Lord Civa took the form of a male elephant. With this union, Lord Ganesa got incarnated. This Lord Civan resides in Thiru-vali-valam. In this city, virtuous philanthropists do live in large numbers who are firm in their conviction that charity will give them all happiness in their life without any sufferings.

தரைமுதலு லகினிலுயிர் புணர்தகைமிக 
விரைமலி குழலுமையொடு விரவதுசெய்து 
நரைதிரை கெடுதகையது அருளினனெழில் 
வரைதிகழ் மதில்வலிவல முறையிறையே. 6

தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக, 
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து, 
நரைதிரை கெடு தகைஅது அருளினன் - எழில் 
வரைதிகழ் மதில் வலிவலம் உறை இறையே.

பொருள்: மண் முதல் அனைத்து அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் ஆணும் 
பெண்ணுமாய்க்கூடி போகம் நுகரத் தாம் போகியாய் இருந்து மணம் மிக்க கூந்தலை
உடைய உமாதேவியோடு பொருந்துகின்றான் சிவபெருமான். தன்னை வழிபடும் 
அடியவர்களுக்கு நரை, திரை, மூப்பு வராதவாறு என்றும் இளமையோடு இருக்க 
அருளுகின்றார். இப்பெருமான் அழகிய மலை போன்றுத் திகழும் மதில் சூழ்ந்த 
திருவலிவலத்தில் உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகரத் 
தாம் போகியாயிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற 
திருப்பாடலில் உமை பெண் யானையாக, இவர் ஆண்யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் 
அகற்றியது. புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தலை. தன்னை 
வழிபடுகின்ற அடியார்களுக்கு நரைதிரை முதலியனகெட என்றும் இளமையோடிருக்க அருளினன் 
என்பதாம். 
With the sole intention that all souls in the cosmos including this earth should enjoy fruition, Lord Civan conspicuously united with Umaa Devi, who has a very fragrant hair. This Lord Civan resides in Thiru-vali-valam, where the walls around the city are so tall as to resemble an attractive mountain. Those who offer worship to this Lord Civan enshrined in Thiru-vali-valam will be graced by Him. Their grey hair and skin wrinkling will perish from their body. They will be ever young.

நலிதரு தரைவரநடை வருமிடையவர் 
பொலிதரு மடவரலியர் மனையதுபுகு 
பலிகொள வருபவனெழில் மிகுதொழில்வளர் 
வலிவரு மதில்வலிவல முறையிறையே.  7

நலிதரு தரை வர நடை வரும் இடையவர் 
பொலிதரு மடவரலியர் மனைஅது புகு 
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர் 
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

பொருள்: தரையில் நடந்து செல்வதற்கே அஞ்சுகின்ற மென்மையான பாதங்களையும், 
அசைகின்ற இடையையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் வீடுகள் தோறும் 
சென்று பலியேற்க பிட்சாடனராய் வருபவர் சிவபெருமான் ஆகும். இப்பெருமான் எழில் 
மிகுந்ததும், கலை முதலான தொழில்கள் வளர்வதும், வலிமை மிகுந்ததுமான மதில்களால் 
சூழப்பட்டதுமான வலிவலத்தில் உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: பூமியை மிதிப்பதற்கு அஞ்சும் மெல்லிய பாதமுடைய முனிபன்னியர் வீடுகள்தோறும் சென்று 
பலியேற்க வருபவன் வலிவலம் உறை இறை என்கின்றது. தரைவர நலிதரும் நடைவரும் இடையவர் எனக் 
கொண்டு கூட்டுக. மடவரலியர் - பெண்கள். 
Lord Civan is enshrined in Thiru-vali-valam. The walls all around this city are very strong and impregnable. Inside the city all kinds of creative and graceful art, science and skilled industry flourish, which gives the highest degree of aesthetic pleasure to the senses. Lord Civan of this place goes out as mendicant to the houses of Darukaa forest sages and begs for alms from their ladies. The wives of these sages are very handsome. Their swinging waist is so slender that their soft feet seem to be afraid even of treading on the ground (lest they should hurt).

இரவண னிருபதுகர மெழில்மலைதனின் 
இரவண நினைதரவ வன்முடிபொடிசெய்து 
இரவண மமர்பெயரருளின னகநெதி 
இரவண நிகர்வலிவல முறையிறையே. 8

இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின் 
இர வணம் நினைதர அவன் முடி பொடிசெய்து, 
இரவணம் அமர் பெயர் அருளினன் - நகநெதி 
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

பொருள்: இராவணன் தனது இருபது கரங்களைக் கொண்டு எழில் மிகுந்த கயிலை 
மலையை நகர்த்தி வைக்க எண்ணி, அதனைப் பெயர்த்தான். அவனுடைய இருபது 
கரங்களும் பத்துத் தலைகளும் பொடியாகுமாறு சிவபெருமான் அவனை நெரித்தார். அவன் 
பணிந்து இரந்து வேண்டி நின்றபோது, அவனுக்கு அருள் செய்து, இராவணன் என்ற 
பெயரையும் அருளிச் செய்தார். இப்பெருமான் தன்னைப் பணிந்து வழிபட்டு இரந்து நிற்கும் 
அடியவர்களுக்குக் கருணையாளனாக அருள் செய்ய, திருவலிவலத்தில் 
உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: இராவணன் செருக்கடங்க, விரல் நுதியை யூன்றி அவன் இரக்க. மீட்டும் அருள் செய்தவன் 
இவன் என்கின்றது. இரவணன் - இராவணன்; எதுகை நோக்கி இடைகுறுகிற்று. இராவண்ணம் - 
இருக்காத வண்ணம். இரவணம் அமர் - அவன் அழுதலைப் பொருந்த. இரவு அண்ண நிகர் . . .. இறை 
- அடியார்கள் தத்தம் குறைகளைச் சொல்லி யாசிக்க அருளும் இறைவன். 
Whenever His devotees worship Him and communicate their deficiency (shortcomings) to Lord Civan and solicit His grace, He readily removes their sufferings and graces them. This Lord Civan is entempled in Thiru-vali-valam. He crushed Raavanan's twenty hands and ten heads and held him immovable under His beautiful mount Kailaas. Later when Raavanan repented and begged for pardon, Lord Civan graced him, granted him boons and conferred on him a new name Raavanan (He that cried out).

தேனமர் தருமலரணை பவன்வலிமிகும் 
ஏனமதாய் நிலமகழரி யடி முடி 
தானணை யாவுருவுடை யவன்மிடைகொடி 
வானணை மதில்வலிவல முறையிறையே. 9

தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும் 
ஏனம் அதுஆய் நிலம் அகழ் அரி, அடிமுடி 
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி 
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

பொருள்: தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறைபவர் நான்முகன். வலிமை மிக்க பன்றி 
உருவினனாக நிலத்தை ஆழ்ந்து அகழ்ந்தவன் திருமால். இவர்கள் இருவரும் முடியையும் 
அடியையும் காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருஉருவை உடையவர் சிவபெருமான் 
ஆகும். இப்பெருமான் வானத்தைச் சென்றடையுமாறு, நெருக்கிக் கட்டப்பட்ட கொடிகளை
உடைய மதில்களால் சூழப்பட்ட திருவலிவலத்தில் உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: அயனும் மாலும் அறியாத வடிவுடையான் வலிவல நாதன் என்கின்றது. ஏனம் - பன்றி, 
மிடை - நெருங்கிய. 
Though Brahma seated in the honey bearing lotus flower and Thirumaal who took the form of a very valiant boar and went on digging the earth, they both could not observe the head and feet of Lord Civan. This Civan is the one who then took the form of a big column of total fire. He is entempled in Thiru-vali-valam, where a good number of flags have been closely fixed on the walls all around the city; the flags appear as though they are touching the sky.

இலைமலி தரமிகுதுவரு டையவர்களும் 
நிலைமையிலு ணலுடையவர்களு நினைவது 
தொலைவலி நெடுமறைதொ டர்வகையுருவினன் 
மலைமலி மதில்வலிவல முறையிறையே. 10

இலை மலிதர மிகு துவர்உடையவர்களும், 
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது 
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன் - 
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

பொருள்: வாயில் வெற்றிலை மிகுந்து, துவர் ஆடையை உடுத்த புத்தர்களும், நின்று கொண்டு 
உண்ணும் சமணர்களும் நினைக்கும் நினைப்புக்கள் அழிந்துவிடுமாறு செய்தவர் 
சிவபெருமான். பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளிய 
உருவினனான சிவபெருமான் மலைபோன்ற மதில்களால் சூழப்பட்ட திருவலிவலத்தில் 
உறைந்திருக்கின்றார்.

குறிப்புரை: சமணர் புத்தர்களுடைய நினைப்புத் தொலைய. வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் 
என்கின்றது. இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக. காவியுடுத்த புத்தர்கள். 
நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் தேரர்கள். 
Lord Civan is the one who quelled the bad thoughts and impressions of Buddhists who wore clothes dyed and squeezed in red ochre and that of Samanars who are in the habit of eating their food in a standing posture. But He is the one who made the famed Vedas follow His footsteps.

மன்னியவலி வலநகருறை யிறைவனை 
இன்னியல்கழு மலநகரிறை யெழில்மறை 
தன்னியல்கலை வலதமிழ் விரகனதுரை 
உன்னியவொரு பதுமுயர் பொருள்தருமே. 11

மன்னிய வலிவலநகர் உறை இறைவனை, 
இன் இயல் கழுமலநகர் இறை-எழில் மறை 
தன் இயல் கலை வல தமிழ் விரகனது-உரை 
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

பொருள்: அழிய வேதங்களையும், எல்லாவித கலைகளையும் திருவருளால் 
தன்னியலாலேயே உணர்ந்த தமிழ் விரகன், கழுமல நாதனான ஞானசம்பந்தன் ஆகும். இவர் 
நிலைபேறுடைய வலிவலம் நகரில் உறையும் சிவபெருமானை எண்ணிப் பாடிய 
இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும், உயர்வான வீடுபேறாகிய செல்வத்தைத் தரும்.

குறிப்புரை: வலிவல நாதனைக் கழுமல நாதனாகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்தப் பத்து உரைகளும் 
உயர்ந்த பொருளைத் தரும் என்கின்றது. எழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விரகன் - அழகிய 
வேதத்தையும், கலைகளையும் ஓதாதே தன்னியலாலலேயே திருவருள் துணைகொண்டு உணர்ந்த தமிழ் 
விரகன். உன்னிய - எண்ணிச் சொன்ன. உயர்பொருள் - வீடு, 
Gnaanasambandan is a person of good conduct with agreeable nature, and is a skilled chief of Kazhumalam. By divine grace he became knowledgeable on all the famous four Vedas and other divine revelations without being consecrated by any outsider. He is a talented Tamil scholar. He sang this high divine hymns on Lord Civan of the eternal Thiru-vali-valam which will lead to ultimate salvation.

திருச்சிற்றம்பலம்

123ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
124. திருவீழிமிழலை

திருத்தல வரலாறு: 
4ஆம் பதிகம் பார்க்க. 
124. THIRU-VEEZHI-MIZHALAI

HISTORY OF THE PLACE

See 4th Hymn.

திருச்சிற்றம்பலம் 
124. திருவீழிமிழலை

பண் : வியாழக்குறிஞ்சி 
ராகம்: செளராஷ்டிரம்

அலர்மகள் மலிதரஅவனி யில்நிகழ்பவர் 
மலர்மலி குழலுமைதனை யிடமகிழ்பவா் 
நலமலி யுருவுடையவர் நகர்மிகுபுகழ் 
நிலமலி மிழலையை நினையவலவரே. 1

அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் - 
மலர்மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர், 
நலமலி உருவு உடையவர், நகர் மிகு புகழ் 
நிலமலி மிழலையை நினைய வலவரே.

பொருள்: அழகு மிகுந்த வடிவினராகிய சிவபெருமான், மலர் நிறைந்த கூந்தலை உடைய  
உமையம்மையை தனது இடது பக்கத்தில் கொண்டு மகழ்ந்திருப்பவர். இப்பெருமான்
எழுந்தரு னியுள்ள நகரமானது, பூமியில் மிகுந்த புகழுடைய திருவீழிமிழலை ஆகும். 
இத்தலத்தை நினைந்து வணங்க வல்லவர்கள், மலர்மீது வீற்றிருக்கும் திருமகள் அம்சமாக, 
உலகில் செல்வம் மிகுந்து விளங்குவார்கள்.

குறிப்புரை: திருவீழிமிழலையை நினையவல்லவரே சீதேவி சிறக்க இப்பூமியில் வாழ்பவராவர் 
என்கின்றது. அலர்மகள் - லஷ்மி. அவனி - பூமி. இடம் - இடப்பாகம். நலம் - அழகு. உமைதனை இடம் 
மகிழ்பவர் உருவுடையவர் நகராகிய வீழிமிழலையை நினைபவர் அலர் மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் 
எனக்கூட்டிப் பொருள் காண்க. 
Lord Civan with His handsome sacred body is very happy to accommodate His consort Umaa Devi on the left half of His body. Her hair is fully decorated with myriads of fragrant blooming flowers. He is housed in Thiru-veezhi-mizhalai, the most famous city of this world. Those who contemplate in their minds about Thiru-veezhi-mizhalai and hail the Lord therein will acquire plenty of personal riches by the grace of Lakshmi, the goddess of wealth.

இருநில மிதன்மிசையெழில் பெறுமுருவினா் 
கருமலி தருமிகுபுவி முதலுலகினில் 
இருளறு மதியினரிமை யவர்தொழுதெழு 
நிருபமன் மிழலையை நினையவலவரே. 2

இரு நிலம் இதன்மிசை எழில் பெறும் உருவினர் - 
௧ரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் 
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு 
நிருபமன், மிழலையை நினைய வலவரே.

பொருள்: எண்ணற்ற பிறப்புக்கள் கொண்ட இந்தப் பூமியிலும், மற்ற அண்டங்களில் உள்ள 
உலகங்களிலும், ஆணவத்தால் வரும் மல இருளைச், சந்திரனின் ஒளியைப்போல் மல நீக்கம் 
செய்பவர் சிவபெருமான் ஆகும். ஒப்பற்ற இப்பெருமானை ஆணவ மலம் நீக்கப் பெற்ற
ஞானிகளும் தேவர்களும் தொழுது எழுகின்றனர். இப்பெருமான் எழுந்தருளி இருக்கும் 
திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள் பரந்த இவ்வுலகில் அழகிய 
உருவத்துடன் விளங்குவார்கள். 
குறிப்புரை: மண் முதலாகிய அண்டத்தில் மயக்கமலமற்ற உண்மை ஞானிகளும் 
தேவர்களும் தொழும் உவமனிலியாகிய இறைவன்மிழலையை நினைய 
வல்லவர்களே இவ்வுலகத்து அழகான உருவுடையர்கள் என்கின்றது.
எழில்-அழகு கரு மலி தரு மிகு புவி- பிறவி மிக்க இப்பூமி இருள்-ஆணவம்
நிருபமன் - உவமம் இல்லாதவர், ஒப்பிலி என்பதாம்.

Venerable sages are free from the impurities of their souls; and have clarity of mental vision. These sages of this world as well as sages from other cosmos and the Devaas, worship the incomparable Lord Civan enshrined in Thiru-veezhi-mizhalai. Those devotees who are capable to contemplate in their minds on Thiru-veezhi- mizhalai and hail the Lord therein will be the best looking persons in the entire cosmos.

கலைமகள் தலைமகனி வனெனவருபவர் 
அலைமலி தருபுனலர வொடுநகுதலை 
இலைமலி யிதழியுமிசை தருசடையினர் 
நிலைமலி மிழலையை நினையவலவரே. 3

“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர் - 
அலை மலிதரு புனல், அரவொட, நகுதலை, 
இலைமலி இதழியும் இசை தருசடையினர் 
நிலை மலி மிழலையை நினைய வலவரே.

பொருள்: அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, ஒளிவிடும் மண்டை ஓடு, வில்வ இலை 
மிகுதியான கொன்றை மலர் ஆகியன பொருந்திய சடையை உடையவர் சிவபெருமானாகும். 
இப்பெருமான் நிலை பெற்று விளங்கும் திருவீழிமிழலைய நினைந்து வணங்க வல்லவர்கள் 
கல்விநலம் சிறப்பாக வாய்க்கப் பெற்று, “கலைமகளின் தலைமகன் இவன்” என்று
ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியைப் பெறுவர்.

குறிப்புரை: மிழலையை நினைவார் கலைமகள் கணவனாவார் என்கின்றது. நகுதலை - கபாலம். 
இலைமலி இதழி - இலைகளோடு நிறைந்த கொன்றை. இலை - இதமழுமாம். நிலை - நிலைபேறு; 
அழியாமை. 
Lord Civan bedecks His matted hair with river Ganges full of waves, snake, skull, bael leaves and myriads of cassia flowers and is entempled in the eternal city of Thiru-veezhi-mizhalai. Those devotees who are able to contemplate in their minds on the permanency of Thiru-veezhi-mizhalai and hail the Lord therein, will be praised by one and all as the Chief follower of Saraswathi, the goddess of all knowledge; they will become erudite scholars in all branches of learning.

மாடமர்சன மகிழ்தருமன முடையவர் 
காடமர்கழு துகளவைமுழ வொடுமிசை 
பாடலின்நவில் பவர்மிகுதரு முலகினில் 
நீடமர்மிழ லையைநினைய வலவரே. 4

மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் - 
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை 
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் 
நீடு அமர் மிழலையை நினைய வலவரே.

பொருள்: சுடுகாட்டில், பேய்கள் இரைச்சலிடவும், முழவு முதலிய கருவிகள் 
ஒலிக்கவும் இசை பாடி, நடனம் ஆடுவதை விரும்புகின்றவர் சிவபெருமான் ஆகும். 
இனிமையாக எழுந்தருளியிருப்பதும், இவ்வுலகில் பெருமையோடு நீண்ட காலமாக 
விளங்கும் தலம் திருவீழிமிழலை ஆகும். இதனை நினைந்து வணங்க வல்லவர்கள்
அன்புடைய மனமுடையவர்களாகவும், அருகில் விரும்பி உறையும்மகிழும் மனம் 
உடையவராகவும், சுற்றத்தாருடன் நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ்வர்.

குறிப்புரை: பேயோடாடும் பெம்மான், இவ்வுலகில் இனிதமரும் மிழலையை நினைபவர் சுற்றம் மகிழ 
இருப்பர் என்கின்றது. மாடு - பக்கம். மாடமர்சனம் - கற்றல். காடு - சுடுகாடு. கழுது - பேய், 
Lord Civan performs dance with songs in the burning ground; the ghouls living therein make heavy noise; the large loud drums and such sound instruments roar. This Lord Civan is attracted by and is entempled in the city of Thiru-veezhi-mizhalai, which is remaining as a famous and stable city (for long in this world). Those relative who willingly live nearly will be delegated to come to know about the devotees, who are capable of contemplating in their minds about the famous city of Thiru-veezhi-mizhalai and hail the Lord therein.

புகழ்மகள் துணையினா்புரி குழலுமைதனை 
இகழ்வுசெய் தவனுடையெழின் மறைவழிவளர் 
முகமதுசிதை தரமுனிவுசெய் தவன்மிகு 
நிகழ்தரு மிழலையை நினையவலவரே.  5

புகழ்மகள் துணையினர் - புரிகுழல் உமைதனை 
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர் 
முகம்அது சிதைதர முனிவு செய்தவன் மிகு 
நிகழ்தரு மிழலையை நினைய வலவரே.

பொருள்: சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையைப் பிரமன் இகழ்வு செய்தான். அழகிய
வேதஞ் சொல்லும் வாயை உடைய பிரமனுடைய தலையைச் சதைக்கச் செய்தவர் 
சிவபெருமானாகும். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவீழிமிழலையை நினைந்து 
வணங்க வல்லவர்கள், புகழ் பெற்ற மகளைப் பொருந்துவர்.

குறிப்புரை : உமாதேவியை இகழ்ந்த பிரமனது சிரத்தைக் கொய்த சிவபெருமான் எழுந்தருளிய 
இத்தலத்தை நினையவல்லவர் கீர்த்தி மாதைப் பொருந்துவர் என்கின்றது. இகழ்வு செய்தவன் உடை 
எழில் மறைவழி வளர்முகம் - இகழ்ந்த பிரமனது அழகிய வேதநெறி வளரும் முகத்தை; என்றது 
வேதஞ்சொல்லும் வாயையுடைய தலையை என்பதாம். 
Umaa Devi, the illustrious daughter of Himaalayan King is the Consort of Lord Civan. Her curved hair gives an extraordinary beauty of her stature. Brahma, the creator of the world, despised Umaa Devi due to his egoism and forgot that he is only a tutelage of Lord Civa. Lord Civa could not bear this insult to His Consort. He, therefore, wanted to teach him a lesson and correct Him. He, therefore, plucked one of his five heads from his body and used it as his begging bowl. Brahma lost his head and face which was till then chanting the Vedaas. He lost everything of his goodhood. He realized his mistake and apologised. He is, thereafter called four headed creator. Those who praise this city of Thiru-veezhi-mizhalai and offer worship to Lord Civan entempled therein will lead a noble life having a virtuous consort of divine knowledge.

அன்றினரரி யெனவருப வரரிதினில் 
ஒன்றியதிரி புரமொருநொடி யினிலெரி 
சென்றுகொள் வகைசிறுமுறுவல் கொடொளிபெற 
நின்றவன் மிழலையை நினையவலவரே. 6

அன்றினர் அரி என வருபவர்-அரிதினில் 
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி 
சென்று கொள் வகை சிறுமுறுவல்கொடு ஒளி பெற 
நின்றவன் மிழலையை நினைய வலவரே.

பொருள்: தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்றுபட்ட முப்புரங்களைத் தேவர்களின்
வேண்டுகோளின்படி, ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகிப் போகுமாறு, புன்முறுவல் செய்து, 
ஒளி பெற நின்று புகழ் பெற்றவர் சிவபெருமான் ஆகும். இப்பெருமான் எழுந்தருளியுள்ள 
திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள், பகைவர்களாகிய யானைகட்குச் 
சிங்கம் போன்று கம்பீரமாக வலிமையோடு விளங்குவர்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய இந்நகரை நினைய வல்லவர் பகைவர்களாகிய 
யானைகட்குச் சிங்கம் போல்பவர் என்கின்றது. அன்றினர் - பகைவர், அரி - சிங்கம். சிறுமுறுவல் -
புன்னகை. 
The hostile Asuraas by performing a lot of penance and prayer obtained the rare three citadels coupled with one another. They were then doing a lot of havoc to Devaas. Therefore, the Devaas solicited protection against these Asuraas, by praying to Lord Civan. Lord Civan just saw the citadels and laughed. Within a matter of a second, they were burnt and completely destroyed. This famous Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. Those devotees who are capable of contemplating in their minds about the fame of the Thiru-veezhi-mizhalai city and hail Lord Civan therein, will become skilled and powerful persons to their enemies much like a male lion.

கரம்பயில் கொடையினா் கடிமலரயனதொர் 
சிரம்பயில் அறவெறிசிவ னுறைசெழுநகர் 
வரம்பயில்கலை பலமறைமுறை யறநெறி 
நிரம்பினார் மிழலையை நினையவலவரே. 7

கரம் பயில் கொடையினர்-கடிமலர் அயனது ஓர் 
சிரம் பயில் அற எறி சிவன் உறை செழு நகர், 
வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி 
நிரம்பினர், மிழலையை நினைய வலவரே.

பொருள்: மலர்மேல். வீற்றிருக்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அவனது உடலில் 
பொருந்தாவண்ணம் கொய்தவர் சிவபெருமான் ஆகும். இப்பெருமான் எழுந்தருளி
இருக்கும் வளமையான நகரம் திருவீழிமிழலை ஆகும். இங்கு, மேன்மை மிக்கக் கலைகள்
பலவற்றோடு, வேதநெறிகளையும், அறநெறிகளையும் முறையாகப் பயின்ற சான்றோர்கள்
நிரம்பி உள்ளனர். இத்தலத்தை நினைந்து வணங்க வல்லவர்கள், பலகாலம் இடைவிடாது 
கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய உள்ளத்தைப் பெறுவர்.

குறிப்புரை: மிழலை நினைவார் வள்ளலாவார் என்கிறது. கரம் பயில் கொடையினர் - கை பலகாலும் 
பயின்ற வள்ளன்மையை உடையவர் ஆவர். கடிமலர் - மணமுள்ள மலர். பயில்வு அற எறி சிவன் எனப் 
பிரிக்க. வரம் - மேன்மை. 
Lord Civan once chopped off and completely severed one head of Brahma who is seated in fragrant blooming lotus flower, and annulled his ego. This Lord Civan is entempled in the fertile and flourishing city Thiru-veezhi-mizhalai. Scholars who are well versed in all famous treatises and in the rules of Vedas and who follow the path of virtue and righteousness do live here in large numbers. Those devotees who are capable of contemplating in their minds on all good things about Thiru-veezhi-mizhalai and adore Lord Civan therein, will become very munificent in their heart and practise charity all the time.

ஒருக்கியவுணர் வினோடொளி நெறிசெலுமவர் 
அரக்கனன்மணி முடியொரு பதுமிருபது 
கரக்கனநெரி தரமலரடி விரல்கொடு 
நெருக்கினன் மிழலையை நினையவலவரே. 8

ஒருக்கிய உணர்வினோடு ஒளிநெறி செலுமவர் - 
அரக்கன் நல்மணிமுடி ஒருபதும் இருபது- 
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல்கொடு 
நெருக்கினன் மிழலையை நினைய வலவரே.

பொருள்: அரக்கனான இராவணனின் கிரீடம் அணிந்த பத்துத் தலைகளும், இருபது 
தோள்களும் நெரியுமாறு, தனது மலர் போன்ற திருவடி விரலால் ஊன்றியவர் சிவபெருமான் 
ஆகும். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவீழிமிழலையை நினைந்து வணங்க 
வல்லவர்கள் ஒன்றுபட்ட சிந்தனை உடையவர்களாய் ஒளி நெறியாகிய ஞான மார்க்கத்துல்
திகழ்பவர் ஆவார்கள்.

குறிப்புரை: மிழலையை நினைவார் ஒன்றுபட்ட உணர்வோடு ஞானமார்க்கத்தை நாடுவர் என்கின்றது. 
ஒருக்கிய - ஒன்றுபட்ட ஒளிநெறி - சிவஞானமார்க்க. கரக்கனம் - கைகளாகிய கூட்டம்.
Lord Civan slightly pressed His mount Kailas by His tender flower like toe and crushed Raavanan's ten heads crowned with gems and his twenty hands. This Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. Those devotees who are capable of contemplating on this, and praising in their minds on this famed city Thiru-veezhi- mizhalai, and adore Lord Civan entempled therein will proceed unitedly with single minded consciousness through the bright religious course, to acquire the knowledge of god.

அடியவர்குழு மிட அவனியில் நிகழ்பவர் 
கடிமலரய னரிகருதரு வகைதழல் 
வடிவுருவியல் பினொடுலகுகள் நிறைதரு 
நெடியவன் மிழலையை நினையவலவரே.

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் - 
கடி மலர் அயன் அரி கருது அருவகை தழல்- 
வடிவு உருஇயல்பினொடு உலகுகள் நிறைதரு 
நெடியவன் மிழலையை நினைய வலவரே.

பொருள்:மணம் மிக்க தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் நினைதற்கு 
அரியா வகையில், சிவபெருமான் சோதி வடிவினராக அனைத்து உலகமும் நிறைந்தருளிய 
பெரியோனாக விளங்கினார். இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவீழிமிழலையை 
நினைந்து வணங்க வல்லவர்கள், சிவனடியார்கள் பலர், தங்களைச் சூழ உலகில் இனிது 
வாழ்வர்.

குறிப்புரை: இந்நகரை நினைவார் அடியார் கூட்டத்தோடு அவனியில் நிகழ்பவர் என்கின்றது. குழுமிட -
கூட. கருதருவகை - தியானிக்க முடியாத வண்ணம். உலகுகள் நிறைதரு நெடியவன் என்றது 
நெடியவனாயினும் அவன் நின்ற இடமும் காலமும் நீங்க ஏனைய இடத்தும் எக்காலத்தும் நிறைந்தான் 
அல்லன்; சிவன் என்றும் எங்கும் பேரொளியாய் நிறைந்தான் என்பது விளக்க வந்தது. 
The Supreme Lord Civan pervaded all the worlds in the form of a big blaze. Brahma residing in fragrant lotus flower and Thirumaal were unable to comprehend and reach at Him. This Lord Civan abides in Thiru-veezhi-mizhalai. Those devotees who are capable of contemplating on this city and praising in their minds about this famed Thiru-veezhi-mizhalai and adore Lord Civan entempled therein will lead an affluent and blessed life surrounded by many servitors.

மன்மதனென வொளிபெறுமவர் மருதமர் 
வன்மலா்துவ ருடையவர் களுமதியிலர் 
துன்மதியம ணர்கள்தொடர் வருமிகுபுகழ் 
நின்மலன் மிழலையை நினையவலவரே. 10

மன்மதன் என ஒளி பெறுமவர்-மருது அமர் 
வன் மலர் துவர்உடையவர்களும், மதிஇலர் 
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ் 
நின்மலன் மிழலையை நினைய வலவரே.

பொருள்: மருத மரத்தின் வலிய மலரால் ஊட்டப் பெற்ற காவி ஆடை உடுத்திய புத்தர்கள்
மதியற்றவர்கள். சமணர்கள் துன்மதியாளர்கள். இவர்களால் தொடர்பு கொள்ள முடியாத 
அரியவர் சிவபெருமான் ஆகும். மிகுந்த புகழுடைய இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் 
திருவீழிமிழலையை நினைந்து வணங்க வல்லவர்கள் மன்மதனைப் போன்று ஒளிவீசுகின்ற 
அழகினைப் பெறுவார்கள்.

குறிப்புரை: புத்தர்கள் மதியிலிகள்; சமணர்களோ துன்மதிகள்; இந்த இருவகையாராலும் தொடர்பரிய 
புகழுடைய இறைவன் மிழலையை நினையவல்லவர் மன்மதன்போல அழகு பெறுவர் என்கின்றது. மருது 
அமர் வன்மலர் துவர் உடையவர் - மருத மலரால் ஊட்டிய காவியாடையை உடையவர்கள். 
Buddhists wearing the ruddy ochre hued robe are senseless folks. Jains are unintelligent. Lord Civan, the most famous Supreme Being, is well beyond the comprehension of these two. This Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. Those devotees who are capable of contemplating on this city, extolling it in their minds and adore Lord Civan entempled therein will shine brightly like Manmathan, the god of love (cupid).

நித்திலன் மிழலையை நிகரிலிபுகலியுள் 
வித்தகமறைமலி தமிழ்விர கனமொழி 
பத்தியில்வரு வனபத்திவை பயில்வொடு 
கற்றுவல் லவருலகினி லடியவரே. 11

நித்திலன் மிழலையை, நிகர்இலி புகலியுள் 
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி 
பத்தியில் வருவன பத்துஇவை பயில்வொடு 
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.

பொருள்: நிகரற்ற புகலிப் பதியில் வேதங்களிலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும்
வல்ல தமிழ் விரகனான ஞான சம்பந்தன், முத்தைப் போன்று ஒளிவீசும் சிவபெருமான் 
எழுந்தருளியிருக்கும் திருவீழிமிழலையைப் போற்றிப் பாடினார். பேரன்பு நிறைந்து 
பக்தியுடன் அருளிய இத்திருப்பதிகத்தை மனதில் பதித்து ஓதவல்லவர்கள் உலகத்தில் 
சிவனடியார்கள் ஆவார்கள்.

குறிப்புரை: அன்பால் விளைந்த இப்பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகில் சிறந்த அடியாராவர் 
என்கின்றது. நித்திலன் - முத்துப் போன்றவன். பத்தியில் வருவன என்பது பிறப்பால் விளைந்தன அன்று 
அன்பால் வருவன என்றதாம். அடியவராதலைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லாமையால் ஒவ்வொரு 
பாடல் தோறும் ஒவ்வொரு பயன் கூறிவந்த சுவாமிகள் இப்பதிகப் பயனாக அடியராவார் என்றார்கள் 
இதனைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லை என்பதனைத் தெரிவிக்க. 
Lord Civan shines bright like a pearl (gem). He resides in Thiru-veezhi-mizhalai This Lord is celebrated by Gnaanasambandan who hails from the incomparable Pukali city. He is an adept in the four Vedas, in Tamil literature and in Tamil grammar. With sincere devotion he sang this hymn on Lord Civan of Thiru-veezhi-mizhalai. Those who can study and practise these ten verses will become the most blessed devotees of Lord Civan.

திருச்சிற்றம்பலம்

124ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

125. திருச்சிவபுரம்

திருத்தல வரலாறு:

21ஆம் பதிகம் பார்க்க. 
125. THIRU-CH-CHIVA-PURAM

HISTORY OF THE PLACE

See 21st Hymn.

திருச்சிற்றம்பலம்

125. திருச்சிவபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி - திருவிராகம் 
ராகம் : செளராஷ்டிரம்

கலைமலியக லல்குலரிவை தனுருவினன் 
முலைமலிதரு திருவுருவ மதுடையவன் 
சிலைமலிமதில் பொதிசிவபுர நகார்தொழ 
இலைநலிவினை யிருமையு மிடர்கெடுமே. 1

கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன் 
முலை மலிதரு திருஉருவம்அது உடையவன், 
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ, 
இலை, நலி வினை: இருமையும் இடர் கெடுமே.

பொருள்: மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடையவள் உமையம்மை. இறைவன் 
அவளை இடப்பாகமாக பொருந்திய திருவினன். அதனால் ஒரு கூறில் நகில் தோன்றும் 
திருவுருவை உடையவன். அச்சிவபிரான் கருங்கற்களால் இயன்ற மதில்களால் 
பொதியப்பட்டுள்ள சிவபுரநகரில் எழுந்தருளியுள்ளான். அந்நகரைத் தொழுதால் நம்மை 
நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர் கெடும்.

குறிப்புரை: தனது திருமேனியிலேயே உமையையும் உடையவன்; அதனால் ஒருபாகத்தை முலை 
விளங்கும் உருவம் உடையவன். அவனது சிவபுரநகரைத் தொழ வருத்தும் வினை இல்லை. இருமையும் 
இடர்கெடும் என்கின்றது. கலை - ஆடை. அரிவை - உமாதேவி. நலிவினை இலை இடர் இருமையும் 
கெடும் எனக் கூட்டுக. 
Lord Civan holds on the left half of His body, His consort Umaa Devi whose waist covered over with jewels. Therefore on His body at one side He has the breast of a woman. This Lord is enshrined in Thiru-ch-chiva-puram, encircled by fort walls constructed by black granite boulders. If we hail this city and adore Lord Civan therein, we will not be tortured by our karma. In both our births our hardships will cease.

படரொளிசடை யினன்விடையி னன்மதிலவை 
சுடரெரிகொளு வியசிவனவ னுறைபதி 
திடலிடுபுனல் வயல்சிவபுர மடையநம் 
இடர்கெடு முயர்கதிபெ றுவதுதிடனே.  2

படர் ஒளி சடையினன், விடையினன், மதில்அவை 
சுடர் எரி கொளுவிய சிவன்அவன், உறை பதி 
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம் 
இடர் கெடும்: உயர்கதி பெறுவது திடனே. 

பொருள்: சிவபிரான் ஒளி விரிந்த சடையினன். விடை ஊர்தியன். அசுரர்களின் 
மும்மதில்களை எரிகொள்ளுமாறு. செய்தழித்தவன்: அவன் உறையும் பதியானது 
இடையிடையே திடலைக் கொண்டதும், நீர் சூழ்ந்த வயல்களை உடையதும் ஆகிய 
சிவபுரமாகும். அதனை அடைந்து தொழுதால் நம் இடர் கெடும். உயர்கதி பெறுவது உறுதி,

குறிப்புரை: ஒளி பொருந்திய சடையினன். இடபத்தை உடையவன். திரிபுரமெரித்த வீரன் உறைபதி 
சிவபுரம். அதனை அடைய நம் துன்பம் தொலையும். உயர்கதி பெறுவது உறுதி என்கின்றது. திடல் - 
மேடு. 
Lord Civan has bright and expansive matted hair. The bull is His vehicle. He destroyed the three forts of the (adversary) Asuraas in fire. This Lord Civan is entempled in Thiru-ch-chiva-puram. This city has a number of fertile and water filled fields. In between the fields mounds are there. If we reach this city and hail Lord Civan entempled therein, we will be freed from any hardship. It is definite we will reach salvation.

வரைதிரிதர வரவகடழ லெழவரு 
நுரைதருகடல் விடநுகர்பவ னெழில்திகழ் 
திரைபொருபுன லரிசில தடைசிவபுரம் 
உரைதரு மடியவருயர் கதியினரே. 3

வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு 
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் - எழில் திகழ் 
திரை பொரு புனல் அரிசிலது அடை - சிவபுரம் 
உரைதரும் அடியவர் உயர்கதியினரே.

பொருள்: மந்தரமலை மத்தாகச் சுழன்றது. அதில் கயிறாகச் சுற்றியது வாசுகி என்னும் பாம்பு. 
அதன் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி நுரையுடன் வெளிப்பட்டது விடம். ஆலகாலம் 
என்னும் அந்நஞ்சினை உண்டவன் சிவபெருமான். அவன் விளங்கும் தலம் சிவபுரம் ஆகும். 
அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்குவது. 
சிவபுரம் ஆகும். அதன் பெயரைக் கூறுபவர் உயர்கதிகளைப் பெறுவர்.

குறிப்புரை: மந்தர மலை சுற்ற, வாசுகியின் உடல் அழலெழ வந்த நுரையோடு கூடிய விடத்தை 
நுகர்ந்தவனது சிவபுரத்தைப் புகழ்பவர் உயர்கதியினர் என்கின்றது. வரை - மந்தரமலை, வரைதிரிதர 
அரவு அகடு அழல் எழ வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எனவும், எழில் திகழ் திரைபொரு புனல் 
அரிசிலது அடை சிவபுரம் எனவும் பிரித்துப் பொருள் கொள்க, 
Asuraas and Devas went on churning the ocean of milk, using the mount Mēru as the churning staff and the snake called Vaasuki as the rope with which to churn the ocean. The pain experienced by the snake in its body caused it to vomit foam containing poison that looked like fire. This poison combined with the poison that come out of the ocean called Aalakaala poison posed a view as though it will destroy the whole world. The Asuraas and Devas ran helter-skelter on all directions and prostrated before Civan and prayed to save them.
Lord Civan then asked Sundarar to bring the poison and placed it in His mouth, and without swallowing, He positioned it in His throat. Every body was saved from death. This Lord Civan is entempled in Thiru-ch-chiva-puram, where the river Arisilaaru is flowing always with full of water. The waves of the river dash against the banks giving beautiful scenery to the entire area. Those who utter the name of this city and offer worship to Lord Civan therein will attain final beatitude.

துணிவுடைய வர்சுடுபொடியி னருடலடு 
பிணியடைவி லர்பிறவியு மறவிசிறுவர் 
தணிவுடைய வர்பயில்சிவ புரமருவிய 
மணிமிடன தடியிணை தொழுமவரே. 4

துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு 
பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர் -
தணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய 
மணிமிடனது அடி இணை தொழும் அவரே.
 

பொருள்: அடக்கமுடைய மக்கள் வாழுமிடம் சிவபுரம் ஆகும். அங்கு எழுந்தருளியவன் 
நீல மணி போலும் மிடற்றினை உடைய சிவபிரான். அவன் திருவடிகளை வணங்குவோர் 
துணிபுடையவர் ஆவார். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை
அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: அடங்கிய மனத்து அடியவர்கள் பயில்கின்ற சிவபுரஞ் சேர்ந்த நீலகண்டப் பெருமானது 
திருவடியைத் தொழுபவர்கள் துணிவு உடையவர்;  நீற்றினர்; பிணியிலர்; பிறவியும் அறப்பெறுவர் 
என்கின்றது: உடல் அடு பிணி – உடலில் வருத்துகின்ற நோய். விசிறுவர்-வீசுவர். தணிவு-பணிவு 
மணி - நீலம். 
Devotees well known for humility reside in Thiru-ch-chiva-puram. They are courageous too. They smear the holy ashes on all the specified sixteen places in their body. They will have no disease that hurts the body. They will have no next births. They will have high status in their life. They are people who worship the Holy Feet of the dark blue throated Lord Civan.

மறையவன்மதி யவன்மலைய வன்நிலையவன் 
நிறையவனுமை யவள்மகிழ் நடநவில்பவன் 
இறையவனி மையவர்பணி கொடுசிவபுரம் 
உறைவெனவுடை யவனெமையு டையவனே. 5

மறையவன், மதியவன், மலையவன், நிலையவன், 
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன், 
இறையவன் - இமையவர் பணிகொடு சிவபுரம் 
உறைவு என உடையவன், எமை உடையவனே.

பொருள்: தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றவன் சிவபிரான். சிவபுரத்தைத் தனது 
உறைவிடமாகக் கொண்டு, எம்மை அடிமையாகக் கொண்டவன். அவன் வேதங்களை 
அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். 
நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் 
புரிபவன். எல்லோருக்கும் தலைவன் ஆவான்.

குறிப்புரை: சிவபுரம் உறைபவன் எம்மையும் ஆளாக உடையவன் என்கின்றது. நிலை - அழியாமை.
உறைவு - உறையும் இடம். 
Lord Civan who is entempled in Thiru-ch-chiva-puram accepts the services of Devas. He took us as His servitors. He was the one who composed the Vedas. He wears the crescent moon on His matted hair. He has the mount Kailas as His abode. He is omnipotent and omnipresent in His nature. He performs the cosmic dance while Umaa Devi looks on and enjoys it with happiness. He is our Lord Supreme.

முதிர்சடையிள மதிநதிபுனல் பதிவுசெய் 
ததிர்கழலொலி செயவருநட நவில்பவன் 
எதிர்பவர்புர மெய்தஇணையி லியணைபதி 
சதிர்பெறு முளமுடையவர் சிவபுரமே. 6

முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து, 
அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்; 
எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி - ' 
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே,

பொருள்: சிவபெருமான் தனது முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை; கங்கை நதி 
ஆகியவற்றைப் பொருந்த அணிந்தவன். காலில் அசையும் கழல்களை அணிந்தவன். அவை 
ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவன். தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்து 
அழித்த ஒப்பற்றவன். இந்தச் சிவபிரான் எழுந்தருளிய தலம், திறமையான மனம் உடைய 
அடியவர்கள் வாழும் சிவபுரம் ஆகும்.

குறிப்புரை: முதிர் சடையிலே மதியையும் கங்கையையும் பதியச் செய்து நடம் செய்பவன். திரிபுரம் எரித்த 
சிவன்; அவன் உறைபதி சிவபுரம் என்கின்றது. எதிர்பவர் - பகைவர். இணையிலி - ஒப்பற்றவன். சதிர் - 
சாமர்த்தியம். 
Lord Civan bedecks His hoary matted hair with the young crescent moon as well as the river Ganges. He performs the rare cosmic dance with resounding anklets on His Holy Feet. He is the peerless Lord who destroyed the three citadels of the hostile Asuraas with His arrow. He is enshrined in Thiru-ch-chiva-puram where accomplished devotees do live in large numbers.

வடிவுடைமலை மகள்சலமக ளுடனமர் 
பொடிபடுமுழை யதள்பொலி திருவுருவினன் 
செடிபடுபலி திரிசிவனுறை சிவபுரம் , 
அடைதரு மடியவரரு வினையிலரே. 7

வடிவு உடை மலைமகள் சலமகள்உடன் அமர் -
பொடிபடும் உழை அதள் பொலி - திருஉருவினன், 
செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம் 
அடைதரும் அடியவர் அருவினை இலரே.

பொருள்: அழகிய வடிவினைக் கொண்டவள் மலை மகன். அவளுடன் நீர்மகளாகிய 
கங்கையையும் உடனாகக் கொண்டவன். புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் 
அழகிய வடிவினை உடையவன். முடை நாற்றம் வீசம் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத்
திரிபவன். அத்தகைய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர்கள் 
நீங்குதற்குரிய வினைகள் இலர் ஆவர்.

குறிப்புரை: மலைமகளும் அலைமகளும் உடனுறையும் உருவுடையவன். பலிக்குத்திரிபவன் உறைபதி 
சிவபுரம் அதனை அடைபவர் வினையிலர் ஆவர் என்கின்றது. சலமகள் - கங்கை. உழை அதள் - 
மான்தோல். செடிபடு பலி - முடைநாற்றம் கமழும் பிச்சை. செடி - ஆகு பெயராய்த் தலைஒட்டைக் 
குறித்தது. 
Lord Civan wearing the skin of a dotted deer appears very handsome especially when He is joined with the good-looking daughter of the mountain and Ganga Devi (River Ganges). He goes round and accepts alms in the human skull which emits stench. This Lord Civan resides in Thiru-ch-chiva-puram. Those devotees who reach this place and worship Him will not be affected by their bad karma, the effect of which does not easily leave one otherwise (ordinarily).

கரமிருபதுமுடி யொருபது முடையவன் 
உரநெரிதர வரையடர்வு செய்தவனுறை 
பரனென அடியவர்பணி தருசிவபுர 
நகரதுபுகு தல்நம்மு யர்கதியதுவே. 8

கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன் 
உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை 
பரன் என அடியவர் பணிதரு, சிவபுர- 
நகர்அது புகுதல் நம் உயர்கதி அதுவே.

பொருள்: இருபது கரங்களையும், பத்துத் தலைகளையும் உடையவன் இராவணன். அவன் 
மார்பு நெரியுமாறு கயிலை மலையில் அடர்த்தருளியவன் சிவபிரான். அவன் உறைவது 
சிவபுரம். “மேலான பரம்பொருள் இவனே ஆவான்” என அடியவர் வழிபாடு செய்வதும் 
இவனே ஆவான். அச்சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர்கதியைத் தரும்.

குறிப்புரை: சிவபுரம் புகுதலே நமக்கு உயர்கதியாம் என்கின்றது. உரம் - மார்பு, அடர்வு - நெருக்குதல். 
சிவபுரநகர் அது புகுதல் நம் உயர் கதியதுவே எனப்பிரிக்க. 
Lord Civan slightly pressed His mount Kailas by His toe. The ten headed and twenty handed Raavanan who was then lifting the mountain got his chest squeezed and crushed. Devotees of Lord Civan hail Him declaring that He is the only one who is the highest (Supreme) Being, and offer worship to Him. This Lord Civan resides in Thiru- ch-chiva-puram. Reaching this place and adoring Him will give us the highest state of salvation.

அன்றியலுருவு கொளரியய னெனுமவர் 
சென்றளவிட லரியவனுறை சிவபுரம் 
என்றிருபொழு துமுன்வழிபடு மவர்துயர் 
ஒன்றிலர்பு கழொடுமுடை யரிவ்வுலகே. 9

“அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் 
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்” 
என்று இருபொழுது முன் வழிபடுமவர் துயர் 
ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே. .

பொருள்: தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையோடு கூடிய பன்றி, அன்னம் ஆகிய 
வடிவங்களைக் கொண்டனர் திருமால் மற்றும் பிரமன் ஆகியோர். அவர்கள் சென்று
அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்றவன் சிவபிரான். அவன் உறையுமிடம் சிவபுரம் என்று 
இரு பொழுதுகளிலும் நினைந்து வழிபடும் அடியவர்கள் ஒரு துன்பமும் இலராவர். 
இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.

குறிப்புரை: சிவபுரத்தை இருவேளையிலும் வழிபடுவார் துன்பஞ்சேரார். இவ்வுலகிற் புகழொடும் 
பொருந்துவர் என்கின்றது. அன்று இயல் உருவு - கோபித்த இயல்பினை உடை வடிவம், சென்று 
அளவிடல் அரியவன் உறை சிவபுரம் எனப் பிரிக்க. 
Contrary to their normal nature, Thirumaal and Brahma took the forms of a hog and swan with anguished minds and went out in search of Lord Civan's feet and head. They both were unable to comprehend Civapiraan who stretched Himself into an indefinable heights. Those who think, both in the morning and in the evening, that Thiru-ch-chiva-puram is the place where Lord Civan is enshrined and offer worship to Him will have no sufferings at all. They will also earn good fame in this world.

புத்தரொட மணர்களறவு ரைபுறவுரை 
வித்தகமொழி கிலவிடையுடை யடிகள்தம் 
இத்தவமுயல்வு றிலிறைவன சிவபுரம் 
மெய்த்தகவழி படல்விழு மியகுணமே. 10

புத்தரொடு அமணர்கள் அறஉரை புறஉரை 
வித்தகம் ஒழிகில; விடை உடையடிகள்தம் 
இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம் 
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

பொருள்: புத்தர்களும், சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும். 
அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுக. விடையூர்தியை உடைய 
தலைவன் சிவபெருமான்.அவனை நோக்கச் செய்யும் தவத்தை முயற்சியோடு 
மேற்கொள்ளுங்கள். அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த  
குணங்களை உங்கட்குத் தரும்.

குறிப்புரை: புறச் சமயிகளுடைய புறவுரைகள் வித்தகம் ஒழியா: ஆதலால் சிவபுரத்தைத் தொழுதல் 
உங்கட்குச் சிறந்த குணமாம் என்கின்றது. அவர்களது அறவுரையாகத் தோன்றுவன யாவும் புறம்பான 
உரைகளாம். அதுவேயும் அன்றிச் சதுரப்பாடு உடையனவும் அல்ல. மெய்த்தக - உண்மையாக. 
The Buddhists and the Jains speak words which are negative to religious and moral instructions. Their preachings are not conducive to virtue. Do not listen to the words of those people. Shun them. Then if you take up the efforts to do penance and prayer on Civan who is our Lord having the bull as His vehicle, thereafter you go to Thiru-ch-chiva-puram where He is enshrined and worship Him. This will give you very much help and good admirable character in your life.

புந்தியர்மறை நவில்புகலி மன்ஞானசம் 
பந்தனதமிழ் கொடுசிவ புரநகருறை 
எந்தையையுரை செய்தவிசை மொழிபவர்வினை 
சிந்திமுனுறவு யர்கதி பெறுவர்களே. 11

புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்- 
பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை 
எந்தையை உரை செய்த இசை மொழிபவர், வினை 
சிந்தி முன் உற உயர்கதி பெறுவர்களே.

பொருள்: அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னன் 
ஞானசம்பந்தன். இவன் தமிழைக் கொண்டு சிவபுர நகரில் உறையும் எந்தையைப் போற்றி 
உரைசெய்த இசைமாலையாகும். இதுவே இப்பதிகத்தை இசையோடு ஓதி வழிபடுபவர் 
வினைகள் நீங்கும். உயர்கதுியும் பெறுவார்கள்.

குறிப்புரை: திருஞானசம்பந்தப் பெருமான் சிவபுர நகருறை எந்தையைச் சொன்ன இப்பதிகத்தை
இசையோடு மொழிபவர்கள் வினையைக் கெடுத்து உயர்கதி அடைவார்கள் என்கின்றது. புந்தியர் - 
புத்தியை உடையவர்கள். சிந்தி - கெடுத்து. 
Divine scholars in Pukali city chant the Vedas every day. This same Vedas was well known to Gnaanasambandan who also sang this during long periods. Now Gnaanasambandan hailed Lord Civan of Thiru-ch-chiva-puram and sang this holy hymn on Him in Tamil in the proper musical note. Those who recite this garland of verses will find their karma dissipating and they will attain the eternal salvation.

திருச்சிற்றம்பலம் 

125ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
126. திருக்கழுமலம்

திருத்தல வரலாறு: 
1ஆம் பதிகம் பார்க்க. 
126. THIRU-K-KAZHU-MALAM

HISTORY OF THE PLACE

See 1st Hymn.


திருச்சிற்றம்பலம்

126. திருக்கழுமலம் 
பண் : வியாழக்குறிஞ்சி - திருத்தாளச்சதி 
ராகம் : செளராஷ்டிரம்

பந்தத்தால்வந் தெப்பால்பயின்று நின்றவும்பரப் 
பாலேசேர்வாயேனோர் கான்பயில்கண முநிவர்களுஞ் 
சிந்தித்தேவந்திப் பச்சிலம்பின்மங் கைதன்னொடுஞ் 
சேர்வார்நாள் நாள்நீள்கயிலைத் திகழ்தருபரிசதெலாஞ் 
சந்தித்தேயிந்தப் பார்சனங்கள் நின்றுதங்கணாற் 
றாமேகாணாவாழ் வாரத்தகவு செய்தவனதிடங் 
கந்தத்தாலெண்டிக் குங்கமழ்ந்தி லங்குசந்தனக் 
காடார்பூவார் சீர்மேவுங்கழு மலவளநகரே. 1

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் 
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான் பயில் கணமுனிவர்களும், 
சிந்தித்தே வந்திப்பச், சிலம்பின்மங்கைதன்னொடும் 
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசுஅதுஎலாம் 
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்- 
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம் - 
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் - 
காடு ஆர், பூ ஆர், சீர் மேவும் கழுமல வள நகரே.

பொருள்: வினைவயத்தால் பந்தப்பட்டு மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி, 
அவ்விடமே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், காடுகளில் வாழும் முனிவர்களும் 
தங்கள் மனத்தால், சிவபெருமானாரை ஆழ்ந்து தியானிக்கின்றனர். இப்பெருமான் 
சிலம்பினை அணிந்துள்ள உமையம்மையுடன் நாளும் நாளும் நீண்டு உயர்ந்த திருக்கயிலை 
மலையில் எழுந்தருளுகின்றார். இந்தத் திருக்கோலக் காட்சிகளைப் பெருங்கருணையோடு 
இப்பெருமான் அருளுவது எதற்கு என்றால், இவ்வுலகத்து மக்கள் தங்கள் கண்களால் 
நேரிலேயே தம்மைக் காணும் சிறப்பினைப் பெறுவதற்காகவே! இந்தக் காட்சியைக் கண்டு 
தாம் எடுத்தப் பிறவியின் பயனை அடைந்து தகவினைப் புரியும் இறைவனது இடம் எது 
என்றால், அது, வளமையான கழுமலம் என்ற சீகாழிப்பதி ஆகும். இந்த நகரம் எட்டுத் 
திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களை உடைய சந்தனக் காடுகள் நிறைந்து 
செழிக்கும் புகழ் பெற்ற நகரமாகும்.

குறிப்புரை: தேவர்களும் முனிவர்களும் தியானிக்க உமையோடு பொருந்தி, கயிலையில் 
எழுந்தருளியிருக்கின்ற காட்சியை இந்த மண்ணுலகத்தவர்களும் தம் கண்ணாலே கண்டு வாழ 
அருளியவனது இடம் கழுமல வளநகர் என்கின்றது. பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் 
என்றது ஆணவமலக் கட்டினால் வந்து எவ்விடத்தும் உறைகின்ற தேவர்கள் வினையால் பந்திக்கப் பெற்ற 
இந்திரன் பிரமன் முதலியோர் கழுமலம் வந்து பூசித்தமை போல்வன. அப்பாலே சேர்வாய் ஏனோர் - 
அப்பாலும் அடிசேர்ந்தார்களாய சிவஞானிகள். புறம்பான நெறிகளிற் சேர்ந்த பிறர் என்றுமாம். கான் 
பயில் கண முனிவர்கள் - காட்டுறை வாழ்க்கையை உடைய கூட்டமான முனிவர்கள். சிலம்பு - மலை. 
ஈண்டு இமயம். நாள்நாள் நீள் கயிலைத் திகழ்தரு பரிசது எலாம் - நாள்தோறும் திருக்கயிலை மலையில் 
வீற்றிருக்கும் திருவோலக்கச் சிறப்பெல்லாவற்றையும். பார் - பூமி. தாமே காணா - தாங்களே கண்டு; 
என்றது அவ்வளவு எளிமை காட்டி நின்றது. கந்தம் - மணம். 
Devaas descend down to the earth because of their past bad karma and loiter around many places and finally settle down in certain cities as their abode. The other
saints living in forest area join hands with these Devas and contemplate in their minds on Lord Civan and worship Him. This Lord Civan's permanent abode is mount Kailas where He is enshrined along with His consort, the ankleted Paarvathi Devi, daughter of the mountain king and holds a durbar daily to enable the celestial devotees to worship Him in an orderly manner. In a compassionate ground Lord Civan decided that all the divine celebrations of His durbar should also be seen and enjoyed and worshipped by the people on this earth, by themselves and by their own eyes. With such a merciful decision He came to the earth and gracefully enshrined in the Thiru-k-kazhu-malam city. This highly fertile and developing city is surrounded by groves full of a variety of fragrant flower plants and trees. The forest groves full of sandalwood trees also flourish in the adjacent areas of this city. The fragrance arising from these groves spread out in all the eight directions of this city.

Note: Thiru-volak-kam = Durbar; the assembly of devotees in rows before a deity.

பிச்சைக்கேயிச் சித்துப்பிசைந் தணிந்தவெண்பொடிப் 
பீடார்நீடார் மாடாரும்பிறை நுதலரிவையொடும் 
உச்சத்தானச்சிப் போல்தொடர்ந்த டர்ந்தவெங்கணே 
றூராவூராநீள் வீதிப்பயில்வொடு மொலிசெயிசை 
வச்சத்தானச்சுச் சேர்வடங்கொள் கொங்கைமங்கைமார் 
வாராநேரேமாலா கும்வசிவல வவனதிடங் 
கச்சத்தான்மெச் சிப்பூக்கலந்திலங்கு வண்டினங் 
காரார்காரார் நீள்சோலைக் கழுமலவளநகரே. 2

பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப் 
பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறைநுதல் அரிவையொடும், 
உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு 
ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை 
வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் 
வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம் - 
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டுஇனம் 
கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.

பொருள்: சிவபெருமான் பிச்சை ஏற்பதை விரும்புகின்றவர். திருவெண்ணீற்றை நீரில் 
குழைத்துப் பூசியிருப்பவர். மிகுந்த பெருமை பொருந்தியவர். புகழால் விரிந்திருப்பவர். 
பிறை போன்ற நெற்றியை உடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருப்பவர். 
உச்சப் பொழுதினை விரும்பி விடையேற்றின்மீது அமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து, சிவந்த 
கண்களுடன் ஊர்களில் உள்ள நீண்ட வீதிகளில் இசை பாடிக்கொண்டு திரிபவர். இவ்விதம் 
செய்வதால், நச்சுதலுக்குரியனவும் முத்து வடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை 
உடைய மகளிர் விருப்பத்தோடு அந்த இசையைக் கேட்டு வந்து, தமக்கு முன்னே விரக 
மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபெருமான் எழுந்தருளி 
இருக்கும் இடமானது, மேலைக் காற்றினால் பூக்களோடு கலந்து விளங்கும் 
வண்டினங்களோடு கருமை நிறம் படிந்த மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளால் நிறைந்த 
வளமையான கழுமலம் என்ற சீகாழி நகரமாகும்.

குறிப்புரை: பிச்சையை விரும்பி, நீரிற்குழைத்த நீற்றையணிந்து, உமாதேவியோடும் உச்சிப்போதில் 
விடையேறி, வீதியில் பாடிச் செல்லும் தமது இசையைக் கேட்ட மகளிர் மால் கொள்ளச் செய்பவனது இடம் 
கழுமலம் என்கின்றது. பீடு - பெருமை. நீடு ஆர் - புகழான் நீடுதலைப் பொருந்தும். மாடு ஆரும் - 
இடப்பக்கத்து இருக்கும். உச்சத்தான் நச்சி - உச்சிப் போதினனாக விரும்பி. போல்; அசை. ஊரா - 
ஊர்ந்து. ஊர் ஆம் நீள் விதி - ஊரின் கண்ணதாகிய நீண்ட திருவீதியில் ஒலி செய் இசை வச்சத்தால் - 
பாடலை வைத்ததால், மங்கைமார் - முனிபன்னியர். வாரா - வந்து. மாலாகும் - மயக்கமுறும் வண்ணம் 
வசிவலஅவன் - வசீகரிக்கும் வன்மை உடையவன். கார்ஆர்கார்ஆர் - கருமை நிறம் பொருந்திய 
மேகங்கள் படிந்த. 
Lord Civan mixes the holy ash in water and then smears His body with this paste. He desires to beg for alms. This glorious and wide famed Lord Civan with His consort Umaa Devi whose forehead is like the crescent moon, and whom He holds on the left portion of His body, desired to move about during midday. The bull He uses for His transport has very fearsome eyes. This valiant bull has power enough to run with and follow, and kill its enemy. Lord Civan rides on this bull and moves slowly and slowly through the long streets, where, with a desire, He goes on singing songs very harmoniously. Hearing His sweet music, women-folk wearing pearl bracelets over their breasts come near Lord Civan. By the hypnotic power of Civa the women-folk instantly become unconscious. This Lord Civan resides in the fertile Thiru-k-kazhu- malam which is surrounded by long groves where dark blue coloured clouds pushed by westerly winds or by the bees jointly humming in large numbers around the flowers in the groves.

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங் குமத்தையின் 
சேரேசேரேநீராகச் செறிதரு சுரநதியோ 
டங்கைச்சேர்வின்றிக் கேயடைந்துடைந் தவெண்டலைப் 
பாலேமேலேமாலே யப்படர்வு றுமவனிறகும் 
பொங்கப்பேர்நஞ்சைச் சேர்புயங்கமங்கள் கொன்றையின் 
போதார்தாரே தாமேவிப் புரிதருசடையனிடங் 
கங்கைக்கேயும் பொற்பார்கலந்து வந்தபொன்னியின் 
காலேவாரா மேலேபாய்கழு மலவளநகரே. 3

திங்கட்கே-தும்பைக்கே-திகழ்ந்து- இலங்கு மத்தையின் 
சேரேசேரே, நீர்ஆகச் செறிதரு சுர நதியோடு, 
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப் 
பாலே மேலே மால் ஏயப் படர்வுஉறும் அவன் இறகும், 
பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின் 
போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம் - 
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் 
காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.

பொருள்: சிவபெருமான், பிறைச்சந்திரன், தும்பை, விளங்கும் ஊமத்தம்பூ ஆகியவற்றுடன், 
தெளிந்த நீரை உடைய கங்கை நதியையும் தமது திருக்கரத்தில் ஏந்தாமல், தமது 
திருமுடியில் சூடியுள்ளார். அத்துடன் உடைந்த கபாலத்தின் பக்கத்தில், பிரமன் தனது 
அஞ்ஞான மயக்கத்தால் எடுத்த அன்னத்தின் இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை 
மலர் மாலை ஆகியன அணிந்து விளங்கும் சடையையும் உடையவர். இப்பெருமான் 
எழுந்தருளியிருக்கும் இடமானது, கங்கைக்கு நிகரான புனிதத்துடன், அழகுடன் கலந்து 
வந்த பொன்னியாகிய காவிரி நதியின் வாய்க்கால்கள் வழியாகப் பாயும் நீரினால், வளம் 
சேர்க்கும் கழுமலம் என்ற நகரமாகும்.

குறிப்புரை: பிறை, தும்பை, ஊமத்தை இவைகள் சேர்ந்து சேர்ந்து, தேவ கங்கையோடு, 
திருக்கரத்திற்சேராதே திருமுடியிற்சூடப் பெற்ற உடைந்த கபாலத்தின்பக்கல். அன்னத்தின் இறகையும், 
பாம்பையும், கொன்றை மாலையையும் அணிந்த புரிசடைப் பெருமானிடம் கழுமலம் என்கின்றது. திங்கட்கு 
தும்பைக்கு என்ற நான்கன் உருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன. திங்களிலும் தும்பையிலும் 
ஊமத்தத்திலும் சேர்ந்து சேர்ந்து புனலாகப் பொருந்திய சுரநதி எனப் பொருள் முடிபு காண்க. மேலே மால் 
ஏயப் படர்வுறும் அவன் இறகும் - மேலே மயக்கம் பொருந்தப் பறந்து செல்லும் மகாசூரனுடைய இறகும். 
புயங்கமங்கள் - பாம்புகள். தார் - மாலை. கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னி - 
கங்கைக்குப் பொருந்திய புனிதமாகிய அழகைப் பொருந்திக் கலந்து ஒழுகும் காவிரி. கால் - வாய்க்கால். 
Lord Civan bedecks His matted hair with the following and circumscribe it around the crescent moon; Thumbai flower (White dead mettle leucas); fully blossomed datura flowers; all the three joined together and got united with the river Ganges; broken skull different from the one He holds in His fair hand; The mentally deluded Brahma took the form of a swan and flew over the cosmos to reach and see Lord Civan's head but in vain. The wing of this swan also finds a place in Civa's head; the snake with the bubbling poison; garland woven out of cassia flowers. This Lord Civan is entempled in Thiru-k-kazhu-malam. Here the canals of the imposing Ponni river similar to river Ganges flow and make the city fertile.

அண்டத்தாலெண்டிக் குமமைந்தடங் குமண்டலத் 
தாறேவேறேவா னாள்வாரவரவ ரிடமதெலாம் 
மண்டிப்போய்வென் றிப்போர்மலைந் தலைந்தவும்பரு 
மாறேலாதார் தாமேவும் வலிமிகுபுரமெரிய 
முண்டத்தே வெந்திட்டேமுடிந் திடிந்தஇஞ்சிசூழ் 
மூவாமூதூர்மூதூ ராமுனிவுசெய் தவனதிடங் 
கண்டிட்டேசெஞ் சொற்சேர்கவின் சிறந்தமந்திரக் 
காலேயோவா தார்மேவுங் கழுமலவளநகரே. 4

அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து 
ஆறே, வேறே வான்ஆள்வார் அவர்அவர் இடம்அதுஎலாம் 
மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும் 
மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய, 
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் 
மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் 
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக் 
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

பொருள்: முப்புரத்தில் உள்ள அசுரர்கள், இம்மண்ணுலகில் இருந்து கொண்டே 
எண்திசைகளையும் உள்ளடக்கி அனைத்து உலகங்களுக்கும் சென்று, அவைகளையும் 
வெற்றி கொண்டனர். வான் உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப் 
போர் செய்தனர். அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாத இந்த அசுரர்களின் பலம் மிகுந்த 
முப்புரத்தைத் தனது நெற்றிக் கண்ணால் வெந்து இடிந்து, அழிந்து போகுமாறு செய்தவர் 
சிவபெருமானாகும். இப்பெருமான் முதுமை உடைய வில் அழியுமாறு சினந்தவர். அந்த 
இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் இவர் எழுந்தருளி இருக்கும் 
இடமானது மதில்கள் சூழ்ந்ததும், என்றும் முதுமை அடையாததும், இன்றும் 
முதுமையாகாமல் இருக்கும் கழுமலம் என்ற சீகாழி ஆகும். இந்த நகரமானது, செம்மையான 
சொற்களைக் கொண்டு, தேர்ந்து தொடுத்த மந்திரங்களை மூச்சுக்காற்றாகக் கொண்டு 
உருவேற்றி வாழும் சான்றோர்களைக் கொண்டுள்ள வளமையான நகரமாகும்.

குறிப்புரை: இம்மண்ணுலகிலிருந்து வானாள்வார் இடம் எல்லாம் போய்ச் சண்டை செய்த தேவர்களும் 
மாறு ஏற்றுப் பொருதலாகாத திரிபுராதிகள் மேவிய முப்புரம் எரிய நெற்றிக் கண்ணால் எரித்து, மூதூர் 
மூதூராகா வண்ணம் முடிவு செய்தவன் இடம் கழுமலம் என்கின்றது. அண்டத்தால் எண்திக்கும் 
அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே - இவ்வண்டத்தில் எட்டுத் திக்கும் பொருந்திய அடங்கிய 
பூமியின் வழியாக. வேறேவான் ஆள்வராது இடம் எலாம் - தனித்த தேவர்களிடம் எல்லாவற்றையும். 
மண்டிப் போய் - நெருங்கிச் சென்று. உம்பரும் மாறு ஏலாதார் - தேவர்களாலும் எதிர்க்க இயலாத 
அசுரர்கள். வலிமிகுபுரம் - வரபலமிக்க முப்புரம். முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த - நெற்றியால் 
வெந்து அழிந்த இடிந்த. முண்டம் ஆகுபெயராக நெற்றிக் கண்ணை உணர்த்தியது. இஞ்சி - மதிள். 
மூவர் மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் - மூப்பை அடையாத தொன்மையான நகர். இன்றும் 
தொன்மையானதாகா வண்ணம் கோபித்தவனது இடம். செஞ்சொல் - நேரே பொருள் பயக்கும் சொல். 
The Devaas staying in this earthly region invaded the many cities that were under the control of the eight directions and came out victorious and are ruling the upper world. But the valiant Asuraas fought against these brave Devas and defeated them. The Devaas could not resist the attack of Asuraas, and succumbed. These Asuraas always fly in the air living in their three very strong citadels and do a lot of havoc to Devas. These three citadels fortified by strong walls all around were completely destroyed by fire that emanated from Lord Civan's third eye in His forehead. These three fortresses are very ancient and old and invincible. But now, they were totally destroyed by Lord Civan who is enshrined in the fertile city Thiru-k-kazhu- malam. Scholars who live in this city select apt divine incantations from the scriptures and sum up them all, and inhale them as breathing air. They rehearse this by repeating them frequently.

திக்கிற்றேவற் றற்றேதிகழ்ந்தி லங்குமண்டலச் 
சீறார்வீறார் போரார்தாருகனு டலவனெதிரே 
புக்கிட்டேவெட் டிட்டேபுகைந்தெ முந்தசண்டத்தீப் 
போலேபூநீர்தீகான் மீப்புணா்தரு முயிர்கள்ளதிறஞ் 
சொக்கத்தேநிர்த் தத்தேதொடர்ந்த மங்கைசெங்கதத் 
தோடேயாமே மாலோகத்துயர் களைபவனதிடங் 
கைக்கப்போயுக் கத்தேகனன்று மிண்டுதண்டலைக் 
காடேயோடா வூரேசேர்கழு மலவளநகரே. 5

திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச் 
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன்உடல் அவன் எதிரே 
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப் 
போலே, பூ, நீர், தீ, கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் 
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்- 
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம் - 
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக் 
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.

பொருள்: எட்டுத் திசைகளுக்கும், காவலர்களாகிய அட்டதிக்குப் பாலகர்கள் ஆங்காங்கே 
இருந்து இம்மண்ணுலகைக் காவல் செய்கின்றனர். இந்த மண்ணுலகை அழிப்பதற்குத் 
தாருகன் சீற்றமுடனும், வீறு கொள்ளும் எழுச்சியுடனும் போர்த்தன்மையுடனும் வந்தான். 
அந்தத் தாருகனை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தியவர் சிவபெருமானாகும். 
அப்பொழுது, புதைந்து எழுந்த ஊழித் தீப்போல் காளி தோன்றினாள். ஐம்பூதங்களான 
மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்க 
நிருத்தத்தில் நடனம் ஆடி வந்த காளியின் கோபத்தை இப்பெருமான் அவளோடு எதிர்
நடனம் ஆடி, அவளை வென்று இவ்வுலகத்தின் துயரங்களைத் துடைத்தார். இப்பெருமான் 
எழுந்தருளி இருக்கும் இடமானது, பெரிய ஊழிக் காலத்தில் எரிவதற்கு வந்த தீயிலும் 
அழியாமல் பிழைத்ததும், குளிர்ந்த காடுகள் நிறைந்துள்ளதுமான வளமையான கழுமலம் 
என்ற சீகாழி நகரமாகும்.

குறிப்புரை: திக்குப் பாலகர்கள் ஆங்காங்கே விளங்க, இவ்வுலகத்துச் சீறி வந்த தாரகன் உடலை 
அவனெதிரிலேயே வெட்டி, விளைந்த ஊழித்தீயைப் போன்ற காளியின் கோபமானது ஐம்பூதச் 
சேர்க்கையாலான உலகத்துற்ற உயிர்களுக்குப் பொருந்தாதபடி உலகத்துயரைக் களைபவனது இடம் 
கழுமலநகர் என்கின்றது. திக்கில தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலம் - திக்குப் பாலகர்கள் 
ஆங்காங்கே அத்தன்மையோடு விளங்குகின்ற உலகம். சீறு ஆர் - கோபித்தலைப் பொருந்திய. சீறு ஆர் 
முதலியவற்றைத் தனித்தனி தாரகனோடு ஒட்டுக. வீறு - தனித்திருத்தல். சண்டத்தீப் போலத் தொடர்ந்த 
மங்கையினது எனக்கூட்டுக. உயிர்கள் திறம் ஏயாமே துயர் களைபவன் என இயைக்க. சொக்கத்தே; 
சொக்கம் என்ற நிருத்தம். நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை - சொக்க நிருத்தத்தில் தோற்றுத் தொடர்ந்த 
காளி. செம்கதத்தோடு ஏயாமே - சிவந்த கோபத்தோடு பொருந்தாதபடி. கைக்க - வெறுக்க. 
பேர்யுக்கத்தே கனன்றும் - பெரிய ஊழித்தீயில் கனன்றும். மிண்டு தண்டலைக் காடே ஓடா - அழியாது 
மிண்டிய குளிர்ந்த காடுகள் அகலாத. இது நெருப்பூழியிலும் நிலைத்த நகரம் என்பதறிவித்தது. 
This earthy world is guarded on all the eight directions by the respective presiding deities. The valiant Thaarukaa Asuran a very brave warrior, approached this earth very angrily with intent to destroy it. He could not be killed by any man. Lord Civan, therefore, asked His consort, the embodiment of energy to create a woman, form out of her different energies to kill this Asuran. This creation called Kaali the most courageous woman, a demy goddess, approached the Asura face to face, fought with him and chopped off his body and killed him. By killing this Asura, she became very furious and looked like submarine fire in the shape of a mare's head that came out of earth at the end of a yuga, to consume the entire world at the end of a yuga. With this ferocious red appearance, she was dancing the fearful Chokkaa
dance and it looked as though she is going to devour the entire souls on earth formed out of earth, water, fire, wind and sky. Lord Civan appeared before her and dancing a better typical dance suppressed her anger and made her calm down. Thereby Lord Civan saved all the souls on earth from destruction. This Lord Civan is enshrined in Thiru-k-kazhu-malam. Even during the great deluge, when every one in the universe got terrified by seeing the mass destruction of the entire world, this city Thiru-k-kazhu-malam with its dense forests and other groves stood very firm without any destruction.

செற்றிட்டேவெற்றிச் சேர்திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் 
சேரேவாராநீள் கோதைத்தெரி யிழைபிடியதுவாய் 
ஒற்றைச்சேர் முற்றற்கொம்புடைத் தடக்கைமுக்கணமிக் 
கோவாதேபாய் மாதானத்துறுபுகர் முகவிறையைப் 
பெற்றிட்டேமற் றிப்பார்பெருத்து மிக்கதுக்கமும் 
பேராநோய்தாமேயா மைப்பிரிவுசெய் தவனதிடங் 
கற்றிட்டேயெட் டெட்டுக்கலைத் துறைக்கரைச்செலக் 
காணாதாரேசேரா மெய்க்கழுமல வளநகரே. 6

செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்புஉறும் 
சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது வாய், 
ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு 
ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப் 
பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும் 
பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம் - 
கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக் 
காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.

பொருள்: அசுரர்களாகிய சலந்தரன், திரிபுராதிகள் ஆகியவர்களைக் கொன்று வெற்றி 
அடைந்த சிவபெருமான், ஆண் யானை வடிவங் கொண்டார். நீண்ட மாலை அணிந்த 
உமாதேவியார் தன்னைச் சேரும் பொருட்டு பெண் யானை வடிவம் கொண்டார். அதன் 
விளைவாக ஒற்றைக் கொம்பினை உடைய துதிக்கையும், மூன்று கண்களையும் 
இடைவிடாது மிகுந்து பொழியும் மத நீரையும், புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய 
வினாயகப் பெருமான் தோன்றினார். அதனால், இவ்வுலகில் வாழும் மக்களுக்குப் பெரும் 
துன்பங்களும் நீங்காத நோய்களும் வராமல் காக்கப்பட்டது. இதனை நல்கிய பெருமான் 
எழுந்தருளி இருக்கும் இடமானது, அறுபத்தி நான்கு கலைகள் முற்றும் முடியக் கற்று 
விளங்கவும், கற்றவர்கள் கற்றபடி நின்று ஒழுகி, சேர்ந்து உறைவதும், அவ்வாறு 
செய்யாதவர்கள் அடைய முடியாததுமான வளமையான கழுமலம் என்ற நகரமாகும்.

குறிப்புரை: உமாதேவி பெண் யானையின் வடிவாய், அசுரர்களைக் கொன்று வெற்றி சேர்ந்த ஆண் 
யானையிது தோள்களைச் சேர்ந்து ஒற்றைக் கொம்புடைய யானைமுகக் கடவுளைப் பெற்று இவ்வுலகம் 
துன்பம் எய்தாவகை பிரிவு செய்தவனது இடம் கழுமல வளநகர் என்கின்றது. செற்றிட்டே வெற்றிச் சேர் 
திகழ்ந்த தும்பி - சலந்தரன். திரிபுராதிகள் முதலிய அசுரர்களைக் கொன்று வெற்றியடைந்து விளங்கிய 
ஆண் யானையினது, மொய்ம்புறும் சேரே வாரா - தோளைப் பொருந்தும் புணர்ச்சியில் வந்து; நீள் 
கோதைத் தெரியிழை - நீண்ட மாலையணிந்த உமாதேவியார். பிடியது வாய் - பெண் யானையின் 
வடிவாய. ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத்தடக்கை - ஒற்றையாகச் சேர்ந்த முற்றிய கொம்பினை 
உடைய துதிக்கையையும், மிக்கு ஒவாதேபாய் மாதானத்து உறு புகர் முக இறையைப் பெற்றிட்டு - மிகுந்து 
இடைவிடாது பாய்கின்ற பெரிய மதநீரோடு கூடிய யானைமுகக் கடவுளைப் பெற்று. இப்பார் பெருத்து 
மிக்க துக்கமும் - இவ்வுலகம் மிகப் பெரிய துக்கத்தையும், பேரா நோய் தாம் ஏயாமை - நீங்காத 
நோயையும் பொருந்தாதபடி. எட்டெட்டுக் கலைத்துறை கரை செலக்கற்றிட்டு - அறுபத்து நான்கு 
கலைகளையும் முடிவு போகக் கற்று. காணாதார் - கரை காணாதார். சேரா - அடையாத. 
Lord Civan killed Chalantharan and Thiru-puraantha-asurar. He became victorious and took the form of a male elephant. His consort Umaa Devi then wanted to have union with Him. She, therefore, wearing a long flower garland took the form of a female elephant and approached Him. Out of their union Lord Vinaayakar was born, with many peculiar features. He has a single and well developed tusk, a very long trunk (hand), three eyes, Must flowing in large quantities without any stoppage, from three spots of his body and the face has three dots. Civan and Umaa Devi gave birth to Vinaayaka with the sole intention to protect the people of this world from getting any disease and miseries. This Lord Civan is enshrined in Thiru-k-kazhu-malam. Here live scholars who have mastered the sixty four arts and follow them in their life. Those who do not follow these principles cannot reach Thiru-k-kazhu-malam.

பத்திப்பேர்வித் திட்டேபரந்தஐம் புலன்கள்வாய்ப் 
பாலேபோகாமே காவாப்பகையறும் வகைநினையா 
முத்திக்கேவிக் கத்தேமுடிக்குமுக் குணங்கள்வாய் 
மூடாவூடாநாலந் தக்கரணமு மொருநெறியாய்ச் 
சித்திக்கேயுய்த் திட்டுத்திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் 
சேர்வார்தாமே தானாகச்செயு மவனுறையுமிடங் 
கத்திட்டோர்சட்டங் கங்கலந்திலங்கு நற்பொருள் 
காலேயோவா தார்மேவுங்கழு மலவளநகரே. 7

பத்திப்போர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாயப் 
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா, 
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் 
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறிஆய், 
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் 
சேர்வார்தாமே தான்ஆகச் செயுமவன் உறையும் இடம் - 
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள் 
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

பொருள்: பெருமையுடைய முத்தி நெறியை அடைய விரும்புபவர்கள், அன்பாகிய விதையை 
மனதில் ஊன்ற வேண்டும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் வழி 
ஒழுகாது தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். காமம், குரோதம், உலோபம், மோகம், 
மதம், மாச்சரியம் என்ற ஆறுவகை உட்பகை நீங்கும்படி செய்ய வேண்டும். முத்திக்கு 
இடையூறாக இருக்கும் முக்குணங்களான சத்துவம், ராஜசம், தாமசம் ஆகியவற்றின் வழி 
ஒழுகாது. நான்கு அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றை 
ஒருநெறிப்படுத்திச் சிந்தனையில் விளங்கும் மெய்ப்பரம் பொருளாகிய தன்னையே 
எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம் எது என்றால், அது, 
ஆறு வேதங்களையும் ஓதி உணர்ந்தவர்கள் எக்காலத்திலும் சிவம் என்ற நற்பொருளைத் 
தியானிக்கும் கழுமலம் என்ற வளமையான நகரம் ஆகும்.

குறிப்புரை: அன்பாகிற விதையை இட்டு, புலன்வழி பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முத்திக்கு 
இடையூறாகிய சாத்வீக, இராஜஸ, தாமஸங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு 
நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் 
உறையும் இடம் கழுமல வளநகர் என்கின்றது. பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகா மேகாவா - எங்கும் 
பரவியுள்ள சுவை முதலாகிய ஐம்புலன்களிடம் சென்று பற்றாதபடி காத்து, பகை அறும் வகை நினையா - 
காமமாகிய உட்பகை ஆறையும் நீங்கும் வகை நினைத்து. முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் 
வாய்மூடாவூடா - முத்திக்கு இடையூறாக முடிக்கும் முக்குணங்களின் வழியை மூடிப் பிணங்கி. நால் 
அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டு - மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் 
அந்தக் கரணங்கள் நான்கையும் ஒருநெறிப் படுத்திச் சிந்தனையில் செலுத்தி. திகழ்ந்த மெய்ப்பொருள் 
சேர்வார் - விளங்கிய சிவபரம் பொருளைத் தியானிப்பவர்கள். தாமே தானாகச் செயுமவன் - அவர்கள் 
அனைவரையும் சிவமாகச் செய்யும் இறைவன். சட்டங்கம் கத்திட்டோர் கலந்திலங்கும் காலே ஓவாதார் - 
ஆறு வேதாங்கங்களையும் ஓதி உணார்ந்தோர்கள் ஒன்றி விளங்கும் சிவமாய நற்பொருளின் திருவடியை 
இடைவிடாது தியானிப்பவர்கள். 
The sages who are followers of Civa always

1) sow the seed of Love

2) defend themselves firmly against being carried away by the various wide ways of sensation of the five sensory organs

a) Taste or flavour 
b) Light or brightness 
c) Sense of touch 
d) Sound and
e) Smell or odour

3) renounce the hateful six traits such as

a) sexual pleasure 
b) anger, hate, dislike  (pugnacity)
c) mental delusion, stupor, bewilderment 
d) arrogance 
e) malice 
f) stinginess

4) do not follow the ways of the three fundamental qualities such as

a) Absolute goodness or virtue 
b) Passion and
c) Lust 
because they hinder the pathway to salvation.

5) regulate and command the four inner seats in our body such as

a) mind; will 
b) reasoning 
c) determinative faculty and
d) egotism

and become fully absorbed in the contemplation of Civanï the truest and the eternal. Then they are graced by Civan to so realise that He indwells in their self itself as to merge morally in Him.

This gracious Lord Civan is enshrined in Thiru-k-kazhu-malam. Here many scholars live, who have studied, mastered and understood the six subsidiaries of the four Vedas. They pray to and worship without any break, the holy feet of Lord Civan who also shines along with them in their body. Ye! Devotees - all of you go to Thiru-k-kazhu-malam, offer worship to Lord Civa therein and get His grace.

Note: This hymn will appear a difficult one to chant and understand the meaning, as it was sung in a particular time measure. Verse number seven is more difficult in this hymn than other verses. We have, therefore, tried our best and have given a more elaborate transcreation and we do hope readers will enjoy and understand it well.

செம்பைச்சேரிஞ் சிச்சூழ்செறிந்தி லங்குபைம்பொழிற் 
சேரேவாராவாரீ சத்திரையெறி நகரிறைவன் 
இம்பர்க்கேதஞ் செய்திட்டி ருந் தரன்பயின்றவெற்
பேரார்பூநேரோர் பாதத்தெழில் விரலவணிறுவிட் 
டம்பொற்பூண்வென்றித் தோளழிந்துவந்த னஞ்செய்தாற் 
காரார்கூர்வாள் வாணாளன்றருள் புரிபவனதிடங் 
கம்பத்தார்தும்பித் திண்கவுட்சொ ரிந்தமும்மதக் 
காராரசேறார் மாவீதிக்கழு மலவளநகரே. 8

செம்பைச்சேர இஞ்சிச் சூழ்செறிந்து இலங்குபைம்பொழில் 
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன் 
இம்பர்க்கு ஏதஞ் செய்திட்டு இருந்து அரன்பயின்றவெற்பு 
ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு 
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்துவந்தனம் செய்தாற்கு 
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள் புரிபவனது இடம் 
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்தமும்மதக் 
கார் ஆர் சேறு ஆர் மாவீதிக்கழு மலவளநகரே.

பொருள்: செம்புத் தகடுகள் வேய்ந்த மதில்கள் சூழ்ந்ததும், பொழில்கள் சேர்ந்ததும்,
பசுமையான நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி 
இறைவனாகியவன் இராவணன் ஆவான். இவன், இவ்வுலக மனிதர்களுக்கு தீங்கு செய்தது 
மட்டுமன்றி, சிவபெருமான் உறையும் கயிலை மலையையும் பெயர்க்க முற்பட்டான். 
அப்பொழுது சிவபெருமான் தமது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி, 
அழகிய பொன் அணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள் வலிமையை 
அழித்தார். அவன் தனது பிழையை உணர்ந்து பணிந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு 
அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள்புரிந்தார். 
இப்பெருமான் உறையும் இடமானது, கம்பத்தில் கட்டப்பெற்ற யானைகளின் வலிய
கன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம், கரிய சேற்றுடன் விளங்கும் சிறந்த 
வீதிகளை உடைய கழுமலம் என்ற வளமையான நகரம் ஆகும்.

குறிப்புரை: செம்பினால் இயன்ற மதில் சூழ்ந்த, மிகச் செறிவாக விளங்கும் பசிய பொழில் சேர்ந்து வரும் 
கடற்றிரைவந்து மோதும் நகருக்குத் தலைவனாகிய இராவணன்; இவ்வுலக மக்களுக்குத் துன்பம்
விளைத்ததோடு மட்டுமன்றி, சிவனுறையும் கயிலை மலையையும் எடுத்தலைச் செய்ய, மலர்போன்ற 
திருவடியின் விரல் ஒன்றால் ஊன்றி, பொன்னணிகள் பூண்ட தோளை நெரியச் செய்து, அவன் வணங்க 
வாளும் வாழ்நாளும் அருள்செய்தவனது இடம் கழுமலம் என்கின்றது. செம்பைச் சேர் இஞ்சி - செப்புத் 
தகடு வேய்ந்த முகட்டினை உடைய மதில். வாரிசம் - கடல். இம்பர் - இவ்வுலகத்தவா். ஏர் ஆர் - 
எழுச்சியை அடையச் செய்து; அதாவது எடுக்க என்பதாகும். வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் 
வாழ்நாள் அன்று அருள்புரிபவர் எனப் பிரிக்க. கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மதக் 
கார் ஆர் சேறு ஆர் மாவீதி- கம்பத்திற்கட்டிய யானையினது திண்ணிய கன்னத்தினின்று சொரிந்த 
மும்மதத்தாலாகிய கரிய சேறு பொருந்திய பெரிய வீதி. 
Raavanan was the king of Sri Lanka, a very fertile country encircled by very strongly built walls, constructed out of copper metal. This land has many green lush groves. The nearby sea shores are very long and are washed by sea waves. Raavanan, besides causing suffering to his subjects, also attempted to lift the mount Kailas, the abode of Lord Civan. The Lord at once pressed the mountain by His beautiful flower like toe and destroyed the strength of the valiant Raavanan and crushed his gold jewelled shoulders. Raavanan regretted over his folly and prayed to Civa to forgive him. Lord Civa took pity on him, and granted him may boons and also a rare sharp sword. He also graced him to live long. This Civan dwells in Thiru-k-kazhu-malam. In this town, the soil in certain areas became blackish mud because of the Must oozing out from the check and other parts of the elephant that are tied to the elephant pillars. Such is the richness of the place in which our Lord Civan is enshrined. Ye devotees go to this place, worship Lord Civan therein and get His grace.

பன்றிக்கோலங் கொண்டப்படித் தடம்பயின்றிடப் 
பானாமால்தானா மேயப்பறவையி னுருவுகொள 
ஒன்றிட்டேயம்புச் சேருயர்ந்த பங்கயத்தவ 
னோதானோதா னஃதுணராதுரு வினதடிமுடியுஞ் 
சென்றிட்டேவந்திப் பத்திருக்களங் கொள்பைங்கணின் 
றேசால்வேறோறாரா காரந்தெரிவு செய்தவனதிடங் 
கன்றுக்கேமுன் றிற்கேகலந்தி லந்நிறைக்கவுங் 
காலேவாரா மேலேபாய்கழு மலவளநகரே. 9

பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப்- 
பான் ஆம்மால் ஆனாமே, அப்பறவையின் உருவு கொள 
ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ 
தானோ ஓதான், அஃது உணராது, உருவினது அடி முடியும் 
சென்றிட்டே வந்திப்பத், திருக்களம் கொள் பைங்கணின் 
தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் - 
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும், 
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

பொருள்: திருமால் பன்றி உருவம் எடுத்துப் பூமியைத் தோண்டிப் பாதாளம் வரைத் 
தேடினான். நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை 
ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப் பறவை வடிவம் 
எடுத்து வானவெளியில் பறந்து சென்று தேடியும் எதிரே தோன்றிய சிவபெருமானின் 
அடியையும் முடியையும் காண முடியாமல் அயர்ந்து சென்று பணிந்து வணங்கினர். 
அவர்களின் அழகிய பசுமையான கண்களுக்கு, அழகிய நீலகண்டத்தோடு தனது 
வல்லமையால் வேறொரு உருவத்தைக் காட்டிய இறைவன் சிவபெருமானாகும். 
இப்பெருமான் உறையும் இடம் எது என்றால், அது இல்லங்களில் முன்றிலில் ஆண் 
கன்றுகள் நிறைந்து கலந்து நின்று நிலைக்கும், வயல்களில் வாய்க்கால்களின் வழியாக 
பாய்கின்ற நீர் மேல் ஏறிப் பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வள நகரம் ஆகும்.

குறிப்புரை: திருமால் பன்றி உருவெடுத்துப் பூமியைத் தோண்டியும், பங்கயத்தவன் அன்னமாய்ப் பறந்தும் 
அடிமுடி தேடியும் அறியாதே வணங்க, அக்கினிப் பிழம்பாகிய வேறோர் வடிவம் காட்டிய இறைவனிடம் 
கழுமலம் என்கின்றது. மால் தான் பன்றிக் கோலம் கொண்டு, இப்படித்தடம் பயின்று இடப்பான் ஆம் 
அம்புசேர் உயர்ந்த பங்கயத்தவனோ தான் மேய பறவையின் உருவுகொள ஒன்றிட்டு உருவினது 
அடிமுடியும் அஃது உணராது சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கண் நின்று ஏசால், வேறு ஓர் 
ஆகாரம் தெரிவு செய்தவனிடம் எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க. படித்தடம் - பூமி. இடப்பானாம் 
- தோண்டுவானாம். மால் - திருமால். தான்மேய பறவை - தான் ஊர்தியாக விரும்பிய பறவை. அம்பு - 
நீர். தான் ஓதான் - தான் வேதங்களை ஓதியவனாக இருந்தும் அடிமுடியும் உணராது எனக் கூட்டுக. 
ஏசால் - வல்லமையால். ஆகாரம் - வடிவம். முன்றிற்கே கன்றுக்கே கலந்து இல்லம் நிறைக்கவும் - 
முன்றிலில் கன்று கலந்து வீட்டை வளத்தால் நிறைக்கவும், காலே வாரா மேலே பாய் - வாய்க்கால் வந்து 
மேலேறிப் பாயும் கழுமலம் என்க. 
Thirumaal took the form of a hog, started splitting the earth and plunged deep into the underworld in order to find the holy feet of Lord Civan, but in vain. He became weary, being unable to see the Lord's Holy Feet. The four faced Brahma who resides in the Lotus flower which comes into view in water pools, is in the habit of chanting the Vedas. However, he did not understand its real message. He took the form of a swan and flew into the sky for long, but could not see the head of Lord Civan who appeared just before him in a different form (as fire). He became exhausted and they both prayed to Lord Civa and begged for pardon for their egoism. Then Lord Civa by His omnipotent quality, took another form, and appeared before them having a beautiful dark blue coloured neck. They both were then able to see this form by their cool natural eyes. This Lord Civan is enshrined in Thiru-k-kazhu-malam. In this city calves gather in large numbers and fill up the residential houses in the front yard. The heavy inflow of water in the canals over flows the banks and creates fertility to the entire city. Ye devotees! go to Thiru-k-kazhu-malam and offer worship to Lord Civan enshrined therein.

தட்டிட்டேமுட்டிக் கைத்தடுக்கி டுக்கிநின்றுணாத் 
தாமேபேணாதே நாளுஞ்சமணோடு முழல்பவரும் 
இட்டத்தாலத்தந் தானிதன்ற தென்றுநின்றவர்க் 
கேயாமேவா யேதுச்சொலிலை மலிமருதம்பூப் 
புட்டத்தேயட்டிட்டுப் புதைக்குமெய்க் கொள்புத்தரும் 
போல்வார்தாமோ ராமேபோய்ப்புணர்வு செய்தவனதிடங் 
கட்டிக்கால்வெட் டித்தீங்கரும்பு தந்தபைம்புனற் 
காலேவாரா மேலேபாய்கழு மலவளநகரே. 10

தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணாத், 
தாமே பேணாதே நாளும் சமணோடும் உழல்பவரும்; 
இட்டத்தால், “அத்தம்தான் இது அன்று; அது’ என்று நின்றவர்க்கு 
ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப் 
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்; 
போல்வார் தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம் - 
கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல் 
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

பொருள்: மண்டை என்ற உணவு உண்ணும் தட்டை கையில் ஏந்தியும், வளைந்த கையில் 
தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆசைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தி 
நிந்திப்பவர்கள் சமணர்கள். புத்தர்கள் தங்களின் விருப்பத்தின்படி, கேட்பவர்களுக்குத் 
தெளிவு ஏற்படாதவாறு, இதனுடைய பொருள் இது அல்ல, அது என பொருந்தாதபடி 
வாயில் வந்தபடி கூறுகின்றனர். இலைகள் நெருங்கிய மருத மரத்தின் பூவை அரைத்துச் 
சாயம் ஊட்டிய ஆடையைத் தம் உடலில் சுற்றிக் கொண்டு உடலை மறைப்பவர்கள் இந்த 
புத்தர்கள். இவர்களால் உணர முடியாதவர் சிவபெருமான் ஆவார். வெல்லக் கட்டிகளைத் 
தரும் இனிய கரும்பை வெட்டுகின்ற காலத்து, அதிலிருந்து வடிகின்ற சாறானது, வாய்க்கால் 
வழியே வந்து மேல்ஏறிப் பாயும் வளமுடைய கழுமல வளநகர் இச்சிவபெருமானது இடம் 
ஆகும்.

குறிப்புரை: சமணரும், புத்தரும், போல்வார் தம்மை அறியா வண்ணம் மறைப்பித்த இறைவனிடம் இது 
என்கின்றது. தட்டு இட்டே, முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் 
சமணொடும் உழல்பவரும் - மண்டையை ஏந்தி கைமுட்டியில் தடுக்கை இடுக்கிக் கொண்டு, 
நின்றுகொண்டு உண்டு, தாம் ஒன்றையும் பேணாதவர்கள்போல நாளும் சமண் கொள்கையோடு 
சுற்றுபவர்களும், இட்டத்தால் அத்தம் தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் 
- விருப்பப்படி பொருள் இது அன்று அதுதான் என்று கேட்பவர்க்குப் பொருந்தாமல் வாயில் வந்தபடி 
காரணம் சொல்லும் (புத்தர்). இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டு இட்டு புதைக்கும் மெய் கொள் புத்தர் 
- மருதமரப் பூவை அரைத்து பின்பக்கத்துப் பூசி உடலை மறைக்கும் புத்தர்கள். ஓராமே - ஆராயாமல். 
புணர்வு - சூழ்ச்சி. கால் வெட்டி கட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல் காலேவாரா மேலேயாய் - அடியை 
வெட்டிக் கட்டி இனிய கரும்புகள் தந்த சுவைநீர் கால்வழி வந்து மேலேறிப் பாயும் நகர் என்க. 
The Samanars eat food from plates, in standing posture, by holding their mat in their armpit and daily wander about all places in the city without any purpose. Then some members of the public, approach them and request them to clear their doubts. Unable to clear their doubts, they simply tell them whatever comes in their mouth - that this is not the meaning and that is not and so on aimlessly. The Buddhists dress themselves from their back and cover their body. They dye their cloth in the essence of the red ochre on one side of their cloth. Lord Civan reached the fertile Thiru-k-kazhu- malam and got enshrined there. He was obscure and could not be seen by the Samanars and Buddhists. In this city the sugarcane candy manufacturers cut the sugarcane stalks into prices for further processing. While they do so, the cane juice that drops on to ground, gathers and flows into the canal. As the quantity is heavy, the juice overflows on all directions and makes the land fertile. Ye devotees! reach this fertile city Thiru-k-kazhu-malam and worship Lord Civan therein and get His grace.

கஞ்சத்தேனுண் டிட்டேகளித்து வண்டுசண்பகக் 
கானேதேனே போராருங்கழு மலநகரிறையைத் 
தஞ்சைசார்சண்பைக் கோன்சமைத்த நற்கலைத்துறை 
தாமேபோல்வார் தேனேரார்தமிழ் விரகனமொழிகள் 
எஞ்சத்தேய்வின்றிக் கேயிமைத்திசைத் தமைத்தகொண் 
டேழேயேழேநாலே மூன்றியலிசை யிசையியல்பா 
வஞ்கத்தேய்வின்றிக் கேமனங்கொளப் யிற்றுவோர் 
மார்பேசேர்வாள் வானோர்சீர்மதி நுதல்மடவரலே. 11

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்- 
கானே தேனே போர் ஆரும் கழுமலநகர் இறையைத் 
தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, 
தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ்விரகன மொழிகள். 
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, 
ஏழேஏழேநாலேமூன்றுஇயல்இசை இசை இயல்பா. 
வஞ்கத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் 
மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.,

பொருள்: தாமரை மலரில் உள்ள தேனை குடித்துக் களித்த வண்டுகள் சண்பக மரச்
சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் தன்மையை உடையது கழுலம் என்ற
நகராகும். இங்கு வீற்றிருக்கும் இறைவரான சிவபெருமானை அடைக்கலமாகக் கொண்டு
இருப்பவர் சண்பை நகரின் தலைவனும், தமிழ் விரகனுமாகய ஞான சம்பந்தன். 
இறைவனைப் பாடி அமைந்த தேனுக்கு நிகரான, பாடல்களைக் கொண்டது இப்பதிகம். 
தாமே இறைவன் என்றதைப் போன்ற நன்மைகைளைத் தருவதாகும். இப்பாடல்களின் 
மொழிகள் வார்க்கும் தேன்போன்று எக்காலத்திலும் குறைவின்றி எஞ்சி நிற்கக் கூடியதாக 
விளங்கும்.இப்பதிகப் பாடல்களை, நல்ல கலைகளில் துறையபோய்த் தமக்குத் தாமே
நிகராய் பண் முறையினால், இயல்பான வஞ்சனை இன்றி அமைந்துள்ள இப்பதிகத்தை
மனதில் பெருவிருப்பம் கொண்டு இசைப்பவர்களிடம், தேவர்களின் சிறப்பைக் கொண்ட 
பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் என்றும் வாசம் செய்வாள்.

குறிப்புரை: கழுமல நகரிறையைத் திருஞான சம்பந்தன் சொன்ன மொழிகளை இசையோடு குறையின்றி 
மனங்கொளப் பயிற்றுவோர் மார்பைத் திருமகள் சேர்வாள் எனப் பயன்கூறியது. கஞ்சத்தேன் உண்டிட்டு - 
தாமரையில் உள்ள தேனைக் குடித்து, சண்பகக் கானே தேனே போராரும் - சண்பகக் காட்டில் உள்ள 
வண்டோடு பொரும். தஞ்சை சார் - அடைக்கலமாகச் சாருகின்ற தேன் நேர் ஆர் தமிழ் விரகன 
மொழிகள் - தேனுக்கு ஒப்பான தமிழ் விரகருடைய சொற்கள். எஞ்ச தேய்வு இன்றி - குறைவின்றி. ஏழே 
ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா - இருபத்தோரு பண் முறையால் வானோர் சீர்மதி நுதல் 
மடவரல் - தேவர்களது சிறப்போடுகூடிய மதிபோன்ற நெற்றியினை உடைய திருமகள். 
In Thiru-k-kazhu-malam honey bees after happily drinking the nectar of the lotus flowers, fly and reach the champak groves, and fight against the honeybees that are humming there. Gnaanasambandan, the chief of Chanbai city, a great Tamil scholar sang flawlessly on Lord Civa of Thiru-k-kazhu-malam. This hymn is equal to honey. Those scholars, who are adept in divine scriptures and who are incomparable to any one other than to themselves, who sing these songs wholeheartedly in the twenty one different modes will have Thiru-magal rest in their hearts. This Thiru-magal is hailed by Devaas and she is known for her beauty. Her forehead resembles the crescent moon.

திருச்சிற்றம்பலம்

126ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
127. திருப்பிரமபுரம்

திருத்தல வரலாறு:

முதலாம் பதிகம் பார்க்க. 
127. THIRU-P-PIRAMA-PURAM

HISTORY OF THE PLACE

See First Hymn.

திருச்சிற்றம்பலம்

127. திருப்பிரமபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி - ஏகபாதம் 
ராகம் : செளராஷ்டிரம்

பிரமபுரத்துறை பெம்மானெம்மான் 
பிரமபுரத்துறை பெம்மானெம்மான் 
பிரமபுரத்துறை பெம்மானெம்மான் 
பிரமபுரத்துறை பெம்மானெம்மான். 1

பிரம புரத்துறை பெம்மான் எம்மான் 
பிரம புரத்துறை பெம்மான் எம்மான் 
பிரம புரத்துறை பெம்மான் எம்மான் 
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்.

பொருள்: ஞானமயமாக விளங்கும் பராசக்தியான பரிபூரணத்தை மிக வியந்து, அந்தப் 
பராசக்திக்கும் பரமானந்த வடிவினனாக இருப்பவன் சிவபெருமான் ஆவான். அவன் முதல், 
நடு, இறுது காண இயலாத பெரியோன் ஆவான். இப்பெருமான், மேல் நிலமாகிய 
ஆகாயத்தின்௧ண் ஓடும் கங்காதேவியை விரும்பித் திருமுடியில் வைத்திருப்பவன். மேலும் 
அவன் எம்மைவிட்டு நீங்காத நிலைமையை உடைய எமது உயிரில் பிரம்ம ரூபத்தில் 
எண்ணப்பட்ட என்னை முத்து விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவன். என்னை ஓக்க 
வந்தவன். அவனே பிரமபுரம் என்ற சீகாழிப் பதியில் வீற்றிருக்கும் கர்த்தாவான எனது 
சுவாமி ஆவார். 
a) He pervades everywhere in the cosmos with complete fullness of His wisdom and
supreme energy. We admire this; "over and above" fullness He is the embodiment of bliss. Also He shines as the greatest merciful Supreme Being having no beginning, middle or end.

b) He lodges the personified lady of river Ganges in His head, which flows abundantly in the upper world. He is the Supreme Soul who never depends from us.
c) To remove my bodily attachment, He contacted me as a human being like me and graced me to enjoy the Supreme Bliss known as Brahma's bliss. (If you ask who such a person is?)
d) He is Lord Civan the Supreme Being who is entempled in the holy city of Thiru-p- pirama-puram.

Note: The first line of each stanza of this Decad is repeated in the remaining three stanzas of the Decad. Such composition is known as Aeha Paadham It probably because, there is but one line (a single line) which repeats itself in the rest of the verse. However, the full meaning in each line is somewhat obscure. Hence, an insight can be had from the paraphrase and notes furnished by Mahavidwan Dandapani Desikar of Thiruvaavaduthurai Aadheenam.

விண்டலர்பொழிலணி வேணுபுரத்தான் 
விண்டலா்பொழிலணி வேணுபுரத்தான் 
விண்டலாபொழிலணி வேணுபுரத்தான் 
விண்டலாபொழிலணி வேணுபுரத்தான் 2

விண்டலர் பொழிலணி வேணு புரத்தான் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தான் 
விண்டலர் பொழிலணி வேணு புரத்தான்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தான்

பொருள்: எட்டுத் திக்குகளிலும் உள்ள பர்வதங்களுள் ஒலிசிறந்த தரிசனை மணியாகவும், 
அகில உலகங்களையும் தன்னுள் அகப்படுத்தும் தன்மையுள்ளதும்,பெரிதாகவும் உள்ள 
திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன் சிவபெருமான் ஆவான். இப்பெருமான் திருமாலின் 
சிவதூஷணத்தைக் கேட்ட அசுரர்களின் முப்புரங்களைச் சங்கரித்தவன். கற்பகப் 
பூஞ்சோலை மலர் கொண்டு தேவர்களது அர்ச்சனை செய்யும் சோலைகள் சூழ்ந்ததும், 
தேவேந்திரன் மூங்கில் வழியாக வந்து பூசித்ததால் வேணுபுரம் என்ற பெயரை 
உடையதுமான சீகாழியில் வீற்றிருக்கும் இறைவர் சிவபெருமான் ஆவான். 
a) He wears an anklet in which eight gems representing the eight mountains are
embedded (The eight mountains are

1. Neela

2. Nishatha

3. Vindhya

4. Maalayavaan

5. Malaya

6. Kanthamaathana

7. Hēma Kooda

8. Himaya

b) The three Asuraas listened and gave attention to the advice imparted by Puth-than
who is an incarnation of Thirumaal and created hostility towards Civan, who destroyed by fire their three impregnable fortresses.

c) Indiran, the chief of Devas wears the ceremonious flower known as Karpagam that grows in the world of celestials. Afraid of the onslaught of Asuraas, Indra ran away and hid himself in the bamboo trees that grow in Venupuram groves and worshipped Lord Civan in that city.

d) It is venupuram (another name of Seekaazhi) where Civan desires to be
entempled with a great liking, where flowers blossom in large numbers in the flower gardens of this place.

புண்டரிகத்தவன்மேவிய புகலியே 
புண்டரிகத்தவன்மேவிய புகலியே 
புண்டரிகத்தவன் மேவிய புகலியே 
புண்டரிகத்தவன்மேவிய புகலியே. 3

புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே 
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

பொருள்: என் இதயக் கமலத்தில் வீற்றிருந்து இடைவிடாத ஆனந்தம் அருளி என்னை 
மலபோகத்தில் தள்ளாமல் காத்தருளி எனக்கு அடைக்கலம் தருபவன். அவனே 
ஆன்மாக்களை காக்கும் திருநீற்றை அணிந்திருப்பவன். மிகுந்த கருணையான அவன் யான்
பாடிய பாடல்களை உவந்து ஏற்றுக் கொள்பவன். புலிக்காலும் புலிக்கையும் கொண்ட
வியாக்கிரபாத முனிவருக்கு ஞான ஆனந்த நடனத்தைக் கனக சபையில் ஆடும் 
வித்தையைக் கற்றவன். இந்த அற்புதங்களைச். செய்யும் சிவபெருமான் பெரும் 
விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள தலமானது, பிரமன் பூசித்த புகலி என்ற சீகாழியாகும். 
a)To remove my perturbation of mind, He revealed His appearance in my heart. Thereby I enjoyed His bliss uninterruptedly. He became my refuge.

b) He smears His body with holy ashes. He is the embodiment of grace. He is delighted to hear my divine musical songs.

c) He is an adept in acting and dancing according to Bharata Saastra. He graced the tiger footed sage to worship and to take divine pleasure in witnessing His dance which He performed in the golden hall of the temple in Chidambaram.

d) With these aspects, our Chief Lord is entempled in the holy city of Pukali. Pukali is the city where the four faced Brahma once adored and worshipped Lord Civan with all his wisdom.

விளங்கொளிதிகழ்தருவெங்குருமேவினன் 
விளங்கொளிதிகழ்தருவெங்குருமேவினன் 
விளங்கொளிதிகழ்தருவெங்குருமேவினன் 
விளங்கொளிதிகழ்தருவெங்குருமேவினன். 4

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

பொருள்: கன்றாகவும், விளாமரமும் ஆக நின்ற அரக்கர்களை கன்றால் விளாமரத்தை எறிந்து 
அந்த அரக்கர்களை அழித்தவன் திருமால். அந்த மாலை மேனியில் ஒரு பாகத்தில் 
வைத்தவன். உருமு என்னும் இடியாக வந்து உலகை ஆள்பவன். தனது பரிபூரணத்தில் 
இருந்து தன்னை இழந்து வேறுபட்டு நிற்கின்ற கீழாயினவனான எனக்கும் குருமூர்த்தியாக 
வந்து எனது பிறவியை ஒழித்தவன். தனது பரிபூரணமான பேரின்பத்தில் எனது அடிமை 
குலையாமல் இரண்டறக் கலக்க வைத்தவன். இப்பெருமான் எத்தன்மையானவன் என்றால், 
எங்கும் பிரகாசமாக நிற்கும் கீர்த்தியை உடையவன். இயமனால் பூசிக்கப்பட்ட வெங்குரு 
என்னும் சீகாழிப் பதியை விரும்பி, அங்கு எழுந்தருளியிருப்பவன். 
a) Thirumaal in one of his incarnation as Krishna faced an Asura, who came near him in disguise as a calf to kill Krishna. Krishna was able to recognise and identify the calf as Asuraa. Immediately he lifted the calf, and using it as a cudgel dashed it against the wood apple tree and killed the calf (Asura). Then he picked up the wood apple fruits that fell down from the tree and distributed them to his gopi devotees. This Thirumaal is embedded by Lord Civan in one half portion of His huge, pure and supreme body.

b) Lord Civan commanded the thunder to fall on the heads of Buddhists and killed them even as they were arguing and quarreling with His devotees.

c) Accursed as I am, Lord Civan came to me as my preceptor and helped me join in His pervasion and to enjoy "His Supreme Bliss".

d) Yaman once came to this city and worshipped Lord Civan therein. This bright city is the one very much liked by Lord Civan.

சுடர்மணிமாளிகைத்தோணிபுரத்தவன் 
சுடர்மணிமாளிகைத்தோணிபுரத்தவன் 
சுடர்மணிமாளிகைத்தோணிபுரத்தவன் 
சுடர்மணிமாளிகைத்தோணிபுரத்தவன். 5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

பொருள்: சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக் கொண்டவன். முப்புரங்களைப்
புன்சிரிப்பால் சுட்டு வெற்றியை அடைந்து தும்பை மாலையை அணிந்தவன். என் உச்சிக்குச் 
சூடாமணியாய் இருப்பவன். ஆன்மாக்களை ஈடேற்றும் பித்துக் கொண்டவன். யாகத்தில் 
வந்த துதிக்கையினை உடைய யானையின் தோலை உரித்து வடிவிழக்கச் செய்தவன். 
சூரியனுடைய களங்கத்தைக் கழுவும் கடல்போன்ற பிறவியில் விழுந்த ஆன்மாக்களுக்குக் 
கரையேறக்கூடிய தெப்பமாக இருப்பது பிரணவ மந்திரம். அந்தப் பிரணவ மந்திரத்தைச்
செவியில் உண்டாக்குபவன். ஒளி பொருந்திய நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட 
மாளிகைகள் சூழ்ந்துள்ள திருத்தோணிபுரம் என்ற சீகாழியில் வீற்றிருக்கும் சிவபெருமான் 
இத்தகைய பெருமைகள் உடையவன் ஆவான். 
The burning burial ground is the place for His dance. He wears the garland woven out of white dead nettle flowers (Leucas) before proceeding to wage war against the Asuraas to destroy their three citadels. He is like the celestial gem for me that I wish to wear on my head. He has developed a great fascination of love for me. He skinned the elephant that came out of the sacrificial fire performed by the sages of Darukaa Vanam and covered His body with that skin. He is the Chief Lord who imparts the incantation - the single mystical word 'Om' to enable the souls to cross the ocean of birth and death cycle. This Lord Civan desires to be entempled in Thonipuram where He is the Chief Lord. This city has many mansions implanted with all kinds of gems.

பூசுரா்சேர்பூந்தராயவன்பொன்னடி 
பூசுரர்சேர்பூந்தராயவன்பொன்னடி 
பூசுரர்சேர்பூந்தராயவன்பொன்னடி 
பூசுரர்சேர்பூந்தராயவன்பொன்னடி. 6

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி 
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி 
பூசுரா சேர் பூந்தராய் அவன் பொன்னடி 
பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி.

பொருள்: பூமியில் உள்ளாரையும் வானுலகத்தில் உள்ளாரையும் தனது நாபிக் கமலத்தில் 
இருந்து பிரமன் தோற்றுவித்தான்.  இந்தப் பிரமன், திருமாலின் ஞானத்தில் கண்ணாடியும்
நிழலும் போல் பிரதிபலிக்கும் பிம்பமாக இருப்பவன். மும்மலங்களையும் கழுவிய 
சிவஞானிகள் பொலிவு பெறுமாறு, அழகுடைய ஆனந்த நடனம் செய்பவன் சிவபெருமான் 
ஆகும். இப்பெருமான் திருநீறு பூசும் மார்புடைய சிவஞானிகளுக்கும், புண்ணியம் பாவம் 
என்ற இருவினைகளை அறுத்த சிறப்பினை டையவர்களுக்கும் மூலமாய் உள்ளவன். 
குற்றமற்ற சான்றோர்கள் வாழும் பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருக்கும்
சிவபெருனமானின் அழகிய திருவடி தாமரை என்னை ஆண்டுகொள்ளுவதாக.
Brahma is the creator of both the people in the earth and the Devas in the celestial world. This Brahma and Thirumaal are only the mirrored images of Lord Civan seen in the mirror formed out of the benevolent energy. Civa is the original form. The other two are mirrored images. He performs the ecstatic divine dance for the benefit of saiva saints. Civa is the beautiful primal Being shining in the experiences of sages, who have smeared their body with holy ashes. Flawless Vedic scholars live in large numbers in Poontharaai (another name of Seekaazhi). Lord Civan, the Divine Being is entempled in such a famous city. Let His fascinating and holy feet accept me as His slave and admit me into His pervasion to enjoy the benefit of His good grace.

செருக்குவாய்ப்புடையான்சிரபுரமென்னில் 
செருக்குவாய்ப்புடையான்சிரபுரமென்னில் 
செருக்குவாய்ப்புடையான்சிரபுரமென்னில் 
செருக்குவாய்ப்புடையான்சிரபுரமென்னில். 7

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் 
செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் 
செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் 
செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில். 

பொருள்: தமது திருவருள் ஞானம் வாய்க்கப் பெறாதார்க்கு மலத்தைக் கெடச் செய்யாத 
சிவபெருமானுக்கு இருப்பிடம் எனது அறிவே. ஐம்பூதங்களால் உருவான உலகத்தை உண்ட 
திருமாலின் எலும்பினைத் தன் திருமேனியில் தரித்திருப்பவன் சிவபெருமானாகும்.
இப்பெருமான் ‘யான்’ ‘எனது’ என்னும் செருக்கு அறுமாறு செய்பவன். செருக்கினால் 
ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிகரத்தை அறுத்தவன். மண்ணுயிர்கள் செருக்குற்று 
நலியாதவாறு, அவர் தம் சிரசில் பதித்து காத்தருளுபவன். ஆத்தும விசாரமாகிய கர்மத்தில் 
ஐந்து இந்திரியங்களில் இச்சைகளை அவித்து அழித்தால் சிவபெருமானின் இருப்பிடமான 
சிவபுரத்தை அடையலாம். 
He is the one who does not exterminate the haughtiness of those who do not adore His Holy Feet; But I adore and worship His holy feet; therefore He has selected my soul as His permanent place of residence. He wears a garland made up of bones of Thirumaal who once swallowed the earth during his incarnation as Krishna. For those who do penance and prayer and wish to enjoy the pleasures of the celestial world, He is capable of satisfying their wish. Those devotee who never follow but fight against the ways of the five senses and chant the word 'Chira-puram' once (one of the twelve names of Seekaazhi). To them, Lord Civan comes forward, and nullifies the ways of the five sense and showers grace on them to be in unison with His Holy Feet.

பொன்னடிமாதவர்சேர்புறவத்தவன் 
பொன்னடிமாதவர்சேர்புறவத்தவன் 
பொன்னடிமாதவாசேர்புறவத்தவன் 
பொன்னடிமாதவர்சேர்புறவத்தவன். 8

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

பொருள்: அழகுடன் மாய நடனம் புரியும் பத்திர காளியும் பூத பிசாசுகளும் நிறைந்த 
மயானத்தைத் திருக்கோயிலாகக் கொண்டவன் சிவபெருமானாகும். இப்பெருமான் 
மகாரிஷிகள் தவம் செய்யும் ஆரணியக் காட்டில் தனித்துத் தவம் புரியும் முனிவன் இவன். 
அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இலக்குமியைப் போன்ற அழகுடைய இருடி 
பத்தினிகள் பிச்சையிட வந்து அணைந்தபோது பெருமானின் அழகில் மயங்கி தங்கள் 
கற்பைக் குலைத்தனர். பொன்னால் செய்யப்பட்ட கால் சிலம்புகளை பாதங்களில் 
அணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவம் என்னும் சீகாழிப் பதியில் வாழ்கின்ற 
பெருமான் இவன் ஆவான். 
Lord Civan keeps the burning ground as His place of temple where the courageous Kaali with her blooming countenance, and a host of ghouls doth live. The holy saints who adhere to disciplined way of life do penance in the forest area, where Lord Civan also does His special acts of divinity. The wives of sages who live in the Daarukaa forest area wearing jewelry similar to that of goddess (Lakshmi) (of wealth), come forward to give alms to the mendicant Lord Civan. When He reveals His perfect beatitude and showers His grace on them. This Lord Civan is entempled in the sacred city of Puravam (one of the twelve names of Seekaazhi), where damsels wearing golden jewelry join together and play and enjoy their life.

தசமுகனெரிதரவூன்றுசண்பையான் 
தசமுகனெரிதரவூன்றுசண்பையான் 
தசமுகனெரிதரவூன்றுசண்பையான் 
தசமுகனெரிதரவூன்றுசண்பையான். 9

தசமுகன் எரிதர ஊன்று சண்பையான் 
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான் 
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான் 
தசமுகன் எரிதர ஊன்று சண்பையான்.

பொருள்: உயிர்களிடம் தயவுடையவன் அரையிலே அக்கினி வீசுகின்ற விரிந்த படத்தினை 
உடைய பாம்பை அரைஞானாகக் கட்டி இருப்பவன். சிவஞானிகளின் கூட்டத்திற்கு ‘அது’ 
என்ற மெய்ப்பொருளைத் தோற்றுவிப்பவன். புலியின் ஊன்பொருந்திய தோல் ஆடையை 
அரையிலே உடுத்தி இருப்பவன். ஆத்தும அறிவிற்கு எதிரியான அகங்காரம் அழியும்படி
எனது அறிவில் எதிர்ப்பட்டவன். கயிலாய மலையில் எழுந்தருளி இருந்து ஆத்துமாக்களை 
இரட்சிப்பவன். ‘விசேடத்தை உடையது’ என்று போற்றும் எல்லாச் சமயங்களுக்கும், 
அதற்கு ஏற்றபடி அருளுபவன். பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரியும்படி 
திருவிரலால் அடர்த்தவன் யாரென்றால் சண்பை என்னும் சீகாழியில் வீற்றிருக்கும் 
சிவபெருமானே அவன். 
He is the compassionate Lord on all souls. He has tied around His waist the most ferocious hooded snake which emits fire. He wears the tiger skin as His loin cloth. He imparted virtuous knowledge in my mind by which my haughtiness disappeared under his benign grace. He created mount Kailas. Entempled there, He has the special energy of wisdom which has the virtue of liberating the souls from the bondage of karma and establishing them in bliss. For the followers of all the six different religions, He is the renowned Supreme Being, and shines separately in their six respective faiths. He is the one who pressed slightly the top of mount Kailas by His soft toe, when the ten headed Raavanan got crushed under the mountain. This our Lord Civan is entempled in the holy city of Chanbai (one of the twelve names of Seekaazhi).

காழியானயனுள்ளவாகாண்பரே 
காழியானயனுள்ளவாகாண்பரே 
காழியானயனுள்ளவாகாண்பரே 
காழியானயனுள்ளவாகாண்பரே. 10

காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே 
காழி யானய னுள்ளவா காண்பரே.

பொருள்: நிலைபெற்ற நிர்மலமான சத்தத்தை உடைய பக்தர்களுக்கு சத்தியப் பொருள் 
விளையும் பொருட்டு அருட்கண்ணால் நோக்குபவர் சிவபெருமான் ஆவார். நீலகண்டனின் 
கருணையை நினைத்து ஞானமார்க்கத்தை விரும்பும் சிவஞானிகள், “தங்களின் ஆணவ 
மலம் அழிக்கப்படுவதே சிவபெருமானின் விருப்பம்” என்பதை தங்களின் அறிவிலே 
கருதுவார்கள். திருமாலும் பிரம்மாவும் திருவடியும் திருமுடியும் காணும் பொருட்டு வராக 
உருவமும் அன்னத்தின் உருவமாகவும் வடிவு கொண்டனர். அவர்கள் கருதியபடி 
சிவபெருமானைக் காண முடியவில்லை. அன்னியமே கண்டனர். என் பொருட்டு காழி 
என்னும் திருப்பதியைப் படைத்தவனை என் ஐயனை, எனது ஆசையை, அவர்கள் 
இருவரும் தேடி மறத்தல் ஒழிந்து எவ்வாறு காண்பர்? 
To those devotees who have firm conviction about Divinity, He desires to impart Reality in their minds. With this view, He graces them through His divine eye. He is our God. His sacred dark blue throat shines because of His benignity. By witnessing and adoring His throat, devotees were able to destroy their haughtiness and long for reaching His Holy Feet. Thirumaal and Brahma could not see the Holy Feet and head of our Divine Being; but saw only that which is transience. He created the city of Seekaazhi for my sake. He is my preceptor. Those who are spiritually ignorant search for Him in vain. He is an invisible Supreme Being. Then how could Brahma and Thirumaal see this Lord of mine?

கொச்சையண்ணலைக்கூடகிலாருடன்மூடரே 
கொச்சையண்ணலைக்கூடகிலாருடன்மூடரே 
கொச்சையண்ணலைக்கூடகிலாருடன்மூடரே 
கொச்சையண்ணலைக்கூடகிலாருடன்மூடரே. 11

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

பொருள்: ஆணவ மலத்தோடு கூடிய மயக்கத்தை வென்றவர்கள் பிறவி பெறமாட்டார்கள். 
புலால் நாற்றமுடைய அழுக்கு உடம்பை பொய் என்று கருதாமல் அதுவே தமது நிலைபெற்ற 
உருவம் என்று எண்ணி துவர் ஆடையால் மூடும் உடம்பை பெளத்தர்களும், மூடாத 
சமணர்களும் சிவபெருமானை அணுகார். பேதைத் தன்மை உடையதும், மீன் நாற்றமும் 
உடைய மச்சகந்தியின் உடம்பை விரும்பி, அவளுடைய சரீரத்தைச் சுகந்த மணம் வீசும்படி 
செய்து, பராசரன் அவளைப் பொருந்தினான். பராசர முனிவரால் பூசிக்கப்பட்டதால் 
கொச்சை என்ற பெயரைக் கொண்ட சீகாழிப் பதியில் எழுந்தருளியிருப்பவர் சிவபெருமான் 
ஆவான். இந்தத் தலைமையான பெருமானை உள்ளபடி தரிசனம் செய்து வழிபட 
மாட்டார்கள். நினைவு எவ்வாறு இருக்கும் எனில் அது, மழைக்காலத்து இருளையும் 
வெளிச்சம் என்று மயங்கி நிற்கும் இருண்ட மயக்கத்தை உடைய நினைவாக இருக்கும்.
Those souls who are full of Ego are veiled by their physical body and/or subtle body. Due to attachment to their physical body, the Buddhists have a mental delusion that the pungent smell of raw meat and/or fish emitting from their physical body is natural and permanent. Therefore, they wear salmon coloured cloth over their body. The body Mach-cha-gandhi daughter of the headman of fishermen community. She emits a very pungent bad smell of dead fish from her body. Sage Paraasaran came to Seekaazhi and prayed to Lord Civa therein to bless her, so that she may hereafter emit fragrant odor from her body. Since sage Paraasaran prayed thus in Seekaazhi, this city came to be called as 'Kochai-nagar (one of the twelve names of Seekaazhi). Those who do not offer worship to the Supreme Being of this holy town will not recover from the delusion of the three bondages of the soul.

கழுமலமுதுபதிக்கவுணியன்கட்டுரை 
கழுமலமுதுபதிக்கவுணியன்கட்டுரை 
கழுமலமுதுபதிக்கவுணியன்கட்டுரை 
கழுமலமுதுபதிக்கவுணியன்கட்டுரை. 12

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

பொருள்: மிகுதிப்பட்ட தோஷமாக உள்ள சுக்கிலம் மற்றும் சுரோணிதம் என்ற நீரினால் 
பூமியில் உன்ள எல்லா உயிர்களும், பிறந்து, வளர்ந்து பின்பு தேய்ந்து மரிக்கின்றன. இந்தப் 
பிறப்புக்களைக் கொண்ட ஜென்மங்களை மலம் அறுத்து, கழுவி அருள்பவர் சிவபெருமான் 
ஆவான். இப்பெருமான் தனது பாதியாகிய திருவருளால் என்னைச் சுவீகரித்து, அந்த 
அருள்வழியாக என்னில் இடையறாது வாழ்கின்றனர். தம்மை எனக்குத் தந்த அடிமை 
குலையாமலும் என்னை விட்டு விலகாத கருத்தரும் அவரே. மாயா மயக்கத்தில் மூழ்கி, 
பந்தம் எது, முத்தி எது என்று இரண்டுமே தெரியாமல் திண்டாடும் உயிர்களுக்கு அமுதம் 
போன்று அரியவனாக இருக்கின்றான். பொன்னைப் போன்ற ஒளி உருவினனாக 
சிருஷ்டிக்குக் கருத்தாவான பிரம்மனின் கபாலத்தில் பிச்சை கொண்டு நுகரும் 
கருணையாளன் அவன். திருக்கழுமலம் என்ற பழமையானதும் பன்னிரு பெயர் 
கொண்டதுமான அனாதிமூலமாகிய பதி சீகாழி. இதில் கவுணிய கோத்திரத்தில் தோன்றிய 
ஞானசம்பந்தன் கடவுளுக்குப் படைக்கும் அமுதமாக வெளிப்படுத்திய இப்பதிகப் 
பாடல்களை மலத்தில் அழுந்தாத ஒருவராகிலும், பலராகிலும் உரை செய்பவர்கள் உயர்ந்த 
நிலையை அடைவது உறுதி. ஆதலால் இடைவிடாது உரை செய்வீர்களாக. 
He ended my cycle of births and deaths. He also uprooted the three evil passions of my soul. By His grace, He gave Himself to me and accepted me as His servitor. He is very rare to those who do not have any spiritual wisdom. His body frame is dazzling like gold. He accepts alms in the dried skull bone of Brahma. Myself was born in this sacred city of Thiru-k-kazhu-malam in the lineage known as Kaunya gothram. This city is called by twelve different names. On Lord Civa enshrined in the temple in this city, I sang this 'E-ke-paatham' holy hymn with utmost devotion. If any devotee individually or in a gathering collectively can chant this holy hymn with sincere devotion he will shine bright and effulgent in spiritual wisdom. Therefore chant this hymn uninterruptedly.

திருச்சிற்றம்பலம்

127ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

128. திருப்பிரமபுரம்

திருத்தல வரலாறு:

முதலாம் பதிகம் பார்க்க. 
128. THIRU-P-PIRAMA-PURAM

HISTORY OF THE PLACE

See First Hymn.


திருச்சிற்றும்பலம்

128. திருப்பிரமபுரம்

பண் : வியாழக்குறிஞ்சி திருவெழுகூற்றிருக்கை 
ராகம் : செளராஷ்டிரம்

ஒருருவாயினைமானாங்காரத் 
தீரியல்பாயொருவிண்முதல்பூதலம் 
ஒன்றியவிருசுடரும்பர்கள்பிறவும் 
படைத்தளித்தழிப்பமும்மூர்த்திகளாயினை 
இருவரோடொருவனாகிநின்றனை 5

ஓரால்நீழலுன்கழலிரண்டும் 
முப்பொழுதேத்தியநால்வர்க்கொளிநெறி 
காட்டினைநாட்டமூன்றாகக்கோட்டினை 
இருநதிஅரவமோடொருமதிசூடினை  
ஒருதாளீரயின்மூவிலைச்சூலம்

நாற்கால்மான்மறிஐந்தலையரவம் 
ஏந்தினைகாய்ந்தநால்வாய்மும்மதத் 
திருகோட்டொருகரியீடழித்துரித்தனை 
ஒருதனுவிருகால்வளையவாங்கி  
முப்புரத்தோடுநானிலமஞ்சக்

கொன்றுதலத்துற அவுணரையறுத்தனை 
ஐம்புலன்நாலாம்அந்தக்கரணம் 
முக்குணமிருவளியொருங்கியவானோர் 
ஏத்தநின்றனையொருங்கியமனத்தோ 
டிருபிறப்போர்ந்துமுப்பொழுதுகுறைமுடித்து

நான்மறையோதிஐவகைவேள்வி 
அமைத்தாறங்கமுதலெழுத்தோதி 
வரன்முறைபயின்றெழுவான்றனைவளர்க்கும் 
பிரமபுரம்பேணினை 
அறுபதமுரலும்வேணுபுரம்விரும்பினை

இகலியமைந்துணர்புகலியமர்ந்தனை 
பொங்குநாற்கடல்சூழ்வெங்குருவிளங்கினை 
பாணிமூவுலகும்புதையமேல்மிதந்த 
தோணிபுரத்துறைந்தனைதொலையாவிருநிதி 
வாய்ந்தபூந்தராயேய்ந்தனை

வரபுரமென்றுணர்ச்சிரபுரத்துறைந்தனை 
ஒருமலையெடுத்தவிருதிறலரக்கன் 
விறல்கெடுத்தருளினைபுறவம்புரிந்தனை 
முந்நீர்த்துயின்றோன்நான்முகனறியாப்
பண்பொடுநின்றனைசண்பையமர்ந்தனை

ஐயுறுமமணருமறுவகைத்தேரரும் 
ஊழியுமுணராக்காழியமர்ந்தனை 
எச்சனேழிசையோன்கொச்சையைமெச்சினை 
ஆறுபதமுமைந்தமர்கல்வியும் 
மறைமுதல்நான்கும்

மூன்றுகாலமுந்தோன்றநின்றனை 
இருமையின்ஒருமையும்ஒருமையின்பெருமையும் 
மறுவிலாமறையோர் 
கழும்லமுதுபதிக்கவுணியன்கட்டுரை 
கழுமலமுதுபதிக்கவுணியனறியும்

அனையதன்மையையாதலின்நின்னை 
நினையவல்லவரில்லைந்ணிலத்தே.

ஓர்உரு ஆயினை; மான் ஆங்காரத்து 
ஈர் இயல்புஆய்; ஒரு விண் முதல் பூதலம் 
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் 
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை 
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நிழல், ஒண் கழல் இரண்டும் 
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி 
காட்டினை; நாட்டம் மூன்றுஆகக் கோட்டினை; 
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை; 
ஒருதாள் ஈர் அயில் மூஇலைச்சூலம்,

நால்கால், மான்மறி, ஐந்தலை அரவம், 
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும்மதத்து 
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; 
ஒருதனு இருகால் வளைய வாங்கி, 
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; 
ஐம்புலன், நால்ஆம் அந்தக்கரணம், 
முக்குணம் இருவளி, ஒருங்கிய வானோர் 
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு 
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி 
அமைத்து, ஆறுஅங்கம் முதல் எழுத்து ஓதி, 
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் 
பிரமபுரம் பேணினை; 
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; 
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; 
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த 
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி 
வாயந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; 
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் 
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; 
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் 
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் 
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; 
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; 
ஆறுபதமும் ஐந்து அமர் கல்வியும், 
மறை முதல் நான்கும்,

மூன்றுகாலமும், தோன்ற நின்றனை; 
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், 
மறு இலா மறையோர் 
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை 
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை 
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

வரிகள் 1-5

சிவபெருமான் எல்லாத் தத்துவங்களையும் கடந்து நிற்பவன். மனம் மெய் வாக்குகளுக்கு 
எட்டாதவன். ஏகரூபமாக இருப்பவன். அவன் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி சிவம், 
சக்தி என்ற இரண்டுவித உருவாகின்றவன். விண்ணில் தொடங்கி பூமி ஈறாக உள்ள பஞ்ச 
பூதங்களையும் இருசுடர்களாகிய சூரியன் சந்திரனையும் மற்றும் தேவர்களையும் வலு 
நுகர்ச்சிப் பொருள்களையும் படைத்து, அவர்களை காக்கவும் அழிக்கவும் வல்ல, பிரம்மா, 
விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகவும் ஆகின்றவன். பிரம்மாவையும், 
விஷ்ணுவையும் உடனாக்கிச் சேர்த்து, உருத்திரத் தன்மையைத் தன்பால் தேக்கி, ஒப்பற்ற 
ஒருவனாய் நிற்பவன்.

வரிகள் 6-8 
மரங்களுக்கு எல்லாம் தலைமையாக இருக்கும் ஆலமரத்தின் நிழலிலே எழுந்தருளியிருந்து, 
அவனது அழகிய பாதங்களை, உதயம், மத்தியானம், அஸ்தமனம் என்கின்ற மூன்று 
காலங்களிலும் தோத்திரம் செய்த, சனகர், சனந்தனர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினி 
என்னும் நால்வர்க்கு உயர்ந்த உண்மை நெறியைச் சின்முத்திரையால் உணர்த்தி அருளியவர். 
பிரம்மா முதல் ஆத்மாக்கள் தங்களின் காட்சி என்ற புலனால் எல்லாவற்றையும் காண 
முடியாததால், சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவர்களையும் முக்கண்களாகக் 
கொண்டருளி அந்தகாரமாகிய இருளைப் போக்கியவர்.

வரிகள் 9 - 16

பெரிதாகிய கங்கை நதியையும், ஒப்பில்லாத பாம்பினையும், ஒருகாலத்திலும் முதிர்ச்சி 
அடையாத பிறைச் சந்திரனையும் சூடியிருப்பவன். பிரணவமாய் இருந்துள்ள ஒரு 
காம்பினையும் ஈர்க்கும் கூர்மையினையும், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற மூன்று 
இலைகளை உடைய சூலத்தையும், நான்கு வேதங்களையும் நான்கு கால்களை உடைய 
மான் மன்றினையும், பஞ்சாட்சரமாகிய ஐந்து தலைகளை உடைய அரவத்தையும் கைகளில் 
தரித்திருப்பவன். நீர் வற்றித் தொங்கும் வாயை உடையதும் மதம் பொருந்திய இரண்டு 
தந்தங்களை உடையதுமான ஒப்பற்ற யானையின் பெருமையை அழித்து அதன் தோலை 
உரித்தவன். ஒப்பில்லாத மேருமலையாகிய வில்லை இருதலையும் வளைய வாங்கி 
நானிலத்தோர் அஞ்சி வியக்குமாறு முப்புரத்தையும் அழித்து அதில் இருந்த அசுரர்களையும் 
அறுத்தனை.

வரிகள் 17 - 20

ஐம்புலன்களான சத்த, பரிச, ரூப, ரச, கந்த ஆகிய வகைகளையும், அந்தக்கரணங்களான 
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கினையும், முக்குணங்களான சாத்வீகம், 
ராஜசம், தாமசம் ஆகிய மூன்றினையும், இரு காற்றுக்களான பிராணன், அபானன் 
ஆகியவற்றினையும் மூலாதாரத்தில் ஒடுக்கிய தேவர்கள் ஏத்த நின்றனை. ஒருமைப்பட்ட 
மனத்துடன் சிவபெருமானின் பாதங்களை நினைந்து, உபநயத்தில் முன்பிருந்த பிறப்பையும் 
அதன்பின் உண்டான பிறப்பையும் உணர்ந்து, மூன்று வேளைகளிலும் செய்யப்படும் செபம், 
அனுட்டானம், ஓமங்கள் ஆகியவற்றைச் செய்து,

வரிகள் 21- 24

நான்கு வேதங்களையும் ஓதி, ஐந்து வகை வேள்விகளான சிவபூசை, குருபூசை, மாகேசுர 
பூசை, சான்றோர் உபசரிப்பு, அதிதி உபசரிப்பு ஆகியவற்றை முடித்து, ஆறு அங்கங்களான 
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவற்றை நடத்தி, 
இவைகளுக்கு ஆதாரமான பிரணவத்தையும் உச்சரித்து, ஒழுங்குமுறைப்படி பயின்று, 
தேவர்களுக்குக் கொடுக்கும் அவிர்பாகத்தைக் கொடுத்து, மழைபெய்விக்கும் 
சான்றோர்களால் பூசிக்கப்பட்ட பிரமபுரம் என்ற திருப்பதியில் விரும்பி எழுந்தருளி 
இருப்பவன்.

வரி 25

ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரம் என்னும் 
திருப்பதியில் எழுந்தருளி இருப்பவன். வேணுபுரம் என்ற பெயர் வரக் காரணமாவது: 
வேணு என்பவன் ஒரு இந்திரன். அவனுடன் கெஜமுகன் என்ற அசுரன் போர் செய்ய 
அசுரனிடம் தோற்றுவிடுகிறான். அதனால் அவன் பிரமபுரத்தில் எழுந்தருளி உள்ள 
சிவபெருமானிடம் விண்ணப்பம் செய்தான். சிவபெருமான் விநாயகப் பெருமானை நோக்க, 
“நீ, யானை உருவம் கொண்டு உனது வலது கொம்பை முறித்தெறிந்து கசமுகாசுரனைக் 
கொன்று, வேணு என்கின்ற இந்திரனைச் சுவர்க்க லோகத்தில் குடிபுக விட்டுவா’ என்று 
திருவுளம்பற்ற, கணேச மூர்த்தியும் அவ்வாறே செய்தார். அதனால் வேணுபுரம் என்ற பெயர் 
உண்டாயிற்று.

வரி 26

தேவர்கள் முன்பு புகலிடம் என்று புகுந்ததால் திருப்புகலி என்னும் பெயர் பெற்ற பதியில் 
எழுந்தருளி இருப்பவன். புகலி என்னும் பெயர் வரக்காரணமாவது: தேவலோகமான 
அமராபதியைச் சூரபத்மன் என்ற அசுரன் சங்காரம் செய்தான். அந்த அசுரனுடன் 
தேவேந்திரன் முதலான தேவர்கள் யுத்தம் செய்தும் அவனை வெல்ல முடியாமல் 
வேணுபுரத்திற்கு வந்து சிவபெருமானைச் சரணடைந்தார்கள். சிவபெருமான் கருணை 
கூர்ந்து சுப்பிரமணியப் பெருமானை வரவழைத்து, “நீ ஆறுமுகமும் பன்னிரண்டு 
கைகளுமாய் போய் சூரபத்மனை செயித்து, தேவலோகத்தில் தேவர்களை குடிபுகவிட்டு 
வர திருவாய் மலர்ந்தருள, முருகப் பெருமானும் அவ்வாறு செய்ததால் புகலி என்னும் 
பெயர் உண்டாயிற்று.

வரி 27

மிகவும் கோபிக்கப்பட்ட கடல்சூழ்ந்த வெங்குரு என்னும் திருப்பதியில் எழுந்தருளி 
இருப்பவன். வெங்குரு என்னும் பெயர் வரக்காரணமாவது: தேவகுருவான பிரகஸ்பதி 
தன்னைவிட வேறு கர்த்தா எவரும் இல்லை என கர்வம் அடைந்தான். சிவபெருமான் 
இவனது கர்வத்தை அடக்க வேண்டி, இவனுடைய அதிகாரங்களை மாற்றி அமைத்தார். 
பிரகஸ்பதி பயத்துடன் புகலி என்னும் திருப்பதியில் சிவபெருமானைச் சரணடைந்தார். 
சிவபெருமான் கருணை கூர்ந்து அவனை மன்னித்து திரும்பவும் அவனுக்கு தேவர்களின் 
குருவாகிய அதிகாரத்தைக் கொடுத்தார். இதனால் வெங்குரு என்னும் பெயர் உண்டாயிற்று.

வரிகள் 28-29

பாணி என்ற பிரளய வெள்ள நீரானது, பூமி, அந்தரம், சுவர்க்கம் என்கின்ற மூவுலகையும் 
மூழ்கடித்த போது, அந்த பிரளய நீரைச் சங்காரம் பண்ணி அருளை அதன்மேலே தோணி 
போல் மிதந்த வெங்குருவாகிய தோணிபுரம் என்ற திருப்பதியில் எழுந்தருளி இருப்பவன்.

வரி 30

வேண்டினார் வேண்டியதை அவர்கள் வேண்டியபடியே கொடுக்கும்வண்ணம் சங்கநிதி, 
பதுமநிதி என்ற இரண்டு நிதிகளும் பூவும் தராயுமாக எம்பெருமானைப் பூசித்தமையால் 
பூந்தராய் எனப்பட்டது. இத்திருப்பதியில் எழுந்தருளி இருப்பவன். பூந்தராய் என்னும் 
பெயர் வரக்காரணமாவது: ஒரு காலத்தில் ‘தொலையாத வரம்' வேண்டி 
திருத்தோணிபுரத்தில் சிவபெருமானை இரண்டு நிதிகளும் பூசித்தனர். சிவபெருமானும்
அவ்வரத்தைக் கொடுத்து அருளி மகா சங்காரத்தில் தம்முடைய திருக்கைகளில் 
தரித்தருளும் வரமும் கொடுத்ததால் பூந்தராய் என்னும் பெயர் உண்டாயிற்று.

வரி 31

வரத்தைத் தருவதான புரம் என்று உணரத்தக்க சிரபுரம் என்னும் திருப்பதியில் எழுந்தருளி 
இருப்பவன். சிரபுரம் என்ற பெயர் வரக் காரணமாவது: தேவர்களும் பிரம்ம விஷ்ணுவும் 
கூடி, கிடைத்த அமிர்தத்தை பங்கிடும் முகமாக தேவர்களை வரிசையாக இருத்தினார். 
அமிர்தம் படைத்துக் கொண்டு வரும்போது, இராகுவும் கேதுவும் அந்தப் பந்தியில் 
கள்ளத்தனமாய் இருப்பதைக் கண்டு, விஷ்ணுவானவர் பரிமாறும் சட்டுவத்தை வைத்து 
அவர்களின் தலைகளை வெட்டிவிட்டார். உடலை இழந்த பாம்புகள் இரண்டும் பூந்தராயில், 
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைச் சரணடைந்து, தங்களின் வெட்டுண்ட இரண்டு 
சிரங்களுடன் பூசித்தனர். இதனால் சிரபுரம் என்ற பெயர் உண்டாயிற்று.

வரிகள் 32 - 33 
பெருமையுடைய கயிலாயம் என்ற சிவபெருமானின் ஆலயமான கயிலைமலையை 
புஜபலத்தால் எடுத்த இராவணனின் கர்வத்தை அடக்கியவன்.

வரி 33

பிரஜாபதி என்ற பிரம்மரிஷி, கெளதம ரிஷியை நோக்கி, “நீ காம இச்சையை இன்னும் 
வெற்றி கொள்ளவில்லையே’ என்று ஏளனம் செய்தார். இவர் பிரம்மமிஷியை நோக்கி ‘நீ
புறா வடிவம் எடுத்து நரமாமிசம் புசிப்பாய்’ என்று சபித்தார். ஒரு நாள்  பிரஜாபதி
புறா வடிவத்தில் மாமிசம் தேடி சோழ வம்சத்தின் அரசன் ஒருவனிடம் சென்று
தனக்கு மாமிசம் தரும்படி கேட்டார். அரசனும், தன் உடலையே மாமிசமாக கொடுத்து
சோர்ந்து விழுந்தான். பிரஜாபதியான புறா , ராசா சரீரம் பெரும்படியும், தன் சாப தோஷம்
நீங்கவும், சிரபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைச் சரணடைந்தார். சிவபெருமான் 
கருணை கூர்ந்து புறாவுக்கு சாப விமோசனம் கொடுத்து அரசனையும் உயிர்ப்பித்தார்.
இதனால் புறவம் என்ற பெயர் உண்டாயிற்று.

வரிகள் 34 - 35

ஆற்று நீர், வேற்று நீர், ஊற்று நீர் என்று சொல்லப்படுகின்ற முந்நீர் ஆகிய சமுத்திரத்தில்
துயில்கின்ற நாராயணனும், நான்முகனாகிய பிரம்மாவும் அடியும் முடியும் தேடியும் காண
முடியாத பண்பினனாய் இருந்தனை.

வரி 35

சண்பை என்ற பெயர் வரக்காரணமாவது: துர்வாச முனிவரின் அசிரமத்தில் கிருஷ்ணர்
அவதாரத்தில் உள்ள கோபால பிள்ளைகளை தங்களின் ஒருவளை கர்பிணியாக
பாவனை செய்வித்து, அவள் பெற்றெடுப்பது ஆண்பிள்ளையா அல்லது பெண்பிள்ளையா
என்று வேடிக்கையாக துர்வாச முனிவரைக் கேட்டனர். முனிவர் கோபமடைந்து ‘இவள்
உங்கள் வம்சத்தை சங்கரிக்கும் இரும்பு உலக்கையைப் பெறுவாள்’ என்று சபித்தார்.
அவ்வாறே உலக்கை வெளிவந்தது.  கிருஷ்ணர் அந்த செய்தியைக் கேட்டு அந்த இரும்பு
உலக்கையை பொடியாகும்படி செய்து அவற்றை சமுத்திரத்தில் போட்டுவிட்டார்.
அந்த பொடியில் ஒரு வேப்பம் விதை அளவுள்ள ஒரு இரும்புத்துண்டை ஒரு மீன்
விழுங்கியது. அந்த மீனைப்பிடித்த மீன் வேடன் ஒருவன், அந்த இரும்புத்துண்டை தனது 
அம்பில் பொருத்தினான். மற்ற இரும்புத்துண்டுகள் கடல் அலையால் ஒதுக்கப்பட்டு
சண்பைக் கதிர்களாக முளைத்தன. கோபாலப்பிள்ளைகள் அந்தக் கதிர்களை
விளையாட்டாக பிடுங்கியபோது, அதனால் அவர்கள் காயப்பட்டு இறந்தார்கள். கிருஷ்ணர் 
இதைக் கேள்விப்பட்டு ஆலமரத்தின் ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை 
மடித்து மற்றொரு காலை தூக்கி அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் வேடனுக்கு அந்தப் 
பாதம் ஒரு செம்பருந்துபோல் தோற்றமளித்ததால் அதன்மேல் அம்பை எய்தான். அதனால் 
கிருஷ்ணரும் பரமபதத்தை அடைந்தார். இந்தச் சாபம் துர்வாச முனிவரை சென்றடைந்தது. 
சாப விமோசனம் பெற முனிவர் புறவம் என்ற திருப்பதியில் எழுந்தருளிய சிவபெருமானிடம் 
சரணடைந்தார். சிவபெருமான் கருணைகூர்ந்து சண்பை சாபத்தை நீக்கி, சண்பை முனி 
என்ற பெயரையும் தந்தருளினார். இதனால் சண்பை என்ற பெயர் உண்டாயிற்று.

வரிகள் 36 - 37

வேதாகம புராணங்களிலும் சாத்திரங்களிலும் உள்ள உண்மைகளைப் பற்றி 
ஐயமுற்றிருக்கின்ற அமரர்களும் அறுவகைச் ச௬ுவைகளான கைப்பு, புளிப்பு, கார்ப்பு,
உவர்ப்பு, துவர்ப்பு,தித்திப்பு என்னும் ௬வைகளை உச்சக் காலத்திற்கு முன்னரே புசிக்கும் 
புத்தர்களும், ஊழிக்காலத்தும் சிவபெருமானை உணராமல் இருக்கின்றனர். மிகவும் 
விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசித்ததால் சீகாழி என்னும் பெயரை உடைய 
திருப்பதியில் எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்றான்.

வரி 38

ஏழிசை என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியன. குரல் 
என்பது சங்கின் ஒலி, துத்தம் என்பது ஆண்மீனின் பிளிறு, கைக்கிளி என்பது குதிரையின் 
குரல். இளி என்பது மயிலின் குரல். விளரி என்பது கடலின் ஓசை. தாரம் என்பது காடை
என்ற பட்சியின் குரல்.இந்த ஏழுவித நாதங்களையும் புகழ்ந்தனை. கொச்சை என்ற 
திருப்பதியில் எழுந்தருளினை. கொச்சை என்ற பெயர் வரக் காரணமாவது: பராசரர் என்ற 
பிரம்மரிஷி,மற்ற ரிஷிகளை நோக்கி, “நீங்கள் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்காமல் குடும்ப 
வாழ்க்கை அனுசரிக்கின்றீர்கள்’ என்று தூஷித்தார். மற்ற முனிவர்கள், “நீ மச்ச கந்தியைப் 
புணர்ந்து மச்சகந்தம் நீக்க முடியாமல் அது உன்னைப் பற்றுவதாக' என்று பராசர ரிஷியை
சபித்தனர். அதன்படியே மச்ச கந்தியைப் புணர்ந்து, துர்க்கந்தத்தால் வருந்தினார். இந்தச் 
சாபத்தை நீக்க வல்லவர் சண்பைத் திருப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே என்று 
உணர்ந்து அப்பெருமானைச் சரணடைந்தார். பெருமான் கருணை கூர்ந்து துர்க்கந்தத்தை 
நீக்கி, கொச்சை முனி என்கின்ற சந்தான நாமத்தையும் தந்தருளினார். இதனால் கொச்சை 
என்ற பெயர் உண்டாயிற்று. 

வரிகள் 39 - 41

அறுபதங்களான, பிரத்தி - பிரத்தியாகாரம், துல்லியம் - துல்லியாதீதம், வித்தை - அவித்தை
என்கின்ற பதங்களிலும், கல்வியான ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம், விரையம் என்கின்ற 
ஐந்திலும், நான்கு வேதங்களான இருக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்பதிலும், 
இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்கின்ற மூன்று காலங்களிலும் தோன்றி நிற்கின்ற 
திரிமூர்த்தி ஆயினை.

வரி 42

சக்தி சிவம் என்ற இரண்டும் ஒன்றாகிய அர்த்த நாரீசுவரர் வடிவமும், தானே ஒரு 
எல்லையில்லாத சிவமாயிருந்த பெருமையும்,

வரிகள் 43 - 45

மறுபிறப்பு இல்லாத பிரம்ம வம்சத்தில் தோன்றி, தீக்கைகளால் மும்மலங்களும் கழுவப்பட்ட 
கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவர் ஞானசம்பந்தன். அவர் அருளிய இப்பதிகத்தை
கழுமலம் என்ற முதுபதியிலே எழுந்தருளியுள்ள பிரமனது மண்டை ஓட்டில் உண்ணும் 
பெருமானே அறிவார்.

வரி 46

அத்தன்மையான இயல்புடையது ஆதலின்

வரி 47

நின்னை நினைக்க வல்லவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை.

சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை 
நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை. 
உன் சக்தியைக் கொண்டு அந்த ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக் குறிப்போடு சக்தி
சிவம் என்னும் இரு உருவாயினை. விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும்
தேவர்கள் மக்கள் முதலியோர்களையும் படைத்து காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும்
மும்மூர்திகள் ஆயினை. திருமால், பிரமன்ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும்
அடக்கி ஏகமூர்த்தியாய் நின்றாய்.

ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய 
சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளிநெறியைக் காட்டினாய். சூரியன் சந்திரன், 
அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை 
ஓட்டினாய். கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய். ஒரு 
தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு 
கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய். 
சினந்து வந்த; தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை 
அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய். ஒப்பற்ற வில்லின் 
இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் 
அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய். ஐம்புலன்கள் 
நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இருவாயுக்கள் ஆகியவற்றை ஓடுக்கியவர்களாய 
தேவர்கள் ஏத்த நின்றாய்.

ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத் தக்க 
கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு 
அங்கங்களையும் ஓதி பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை 
பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய். ஆறுகால்களை உடைய 
வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய். தேவர்கள் புகலிடம்
என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் 
தலத்தை விரும்பினாய். மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த
தோணிபுரத்தில் தங்கினாய். வழங்கக் குறையாத செல்வ வளம் மிக்க பூந்தராயில் 
எழுந்தருளினாய். வரத்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய். ஒப்பற்ற கயிலை மலையைப் 
பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய். புறவம் என்னும்
தலத்தை விரும்பினாய். கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய 
முடியாத பண்பினை உடையாய். சண்பையை விரும்பினாய். ஐயுறும் சமணரும் 
அறுவகையான பிரிவுகளை உடைய புத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் 
பாழ்போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.

வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி 
வாழ்கின்றாய். ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால்வேதம், மூன்று காலம், ஆகியன 
தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய். சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் 
தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் 
உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய
கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் 
மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை 
உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப் பிறத்தல் இலர்.

குருவருள்: ஞானசம்பந்தர் அருளிய சித்திரக் கவிகளுள் ஒன்றாகிய திருவெழுகூற்றிருக்கை 
ஒன்றை மட்டுமே பாராயணம் செய்பவருக்கும், அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் 
அனைத்தையும் ஓதிய பயன் இட்டும் என்பது மரபு. சிவபாத இருதயர், திருஞான சம்பந்தர் 
ஓதி வரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் 
கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார்
இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி
இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்படுகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக்
கூறினார் என்பர்.
Civan is 'Pure Intelligence'. He is beyond our thought and word - Beyond the Evolution (Tatvas). Civan's consort is addressed in many names, the most important being (1) Paarvathi and (2) Umaa Devi. She is 'Pure Energy' or 'Sakthi'. We have used the words 'Civan' and 'Sakthi' in this hymn to represent the Supreme Being.

Civan's body itself is made up of Sakthi. Having this energy in HIS body, HE has ONE physical frame only.

Whenever necessary the energy takes a separate form. Then Civan and Sakthi shine as TWO separate entities.

For the three fold activities such as creation, sustenance and dissolution of the incomparable five elements such as Earth, Water, Fire, Air and Sky as well the Sun, Moon, Devas and all others in the cosmos HE took the three forms known as "Ayan, Ari and Aran", i.e., Brahma, Vishnu and Guna Rudran. Therefore, HE is THREE.

         Lord! YOU concealed the TWO, Brahma and Vishnu in YOURSELF and stood in ONE Single form - (i.e.) two. Two forms merged in One.
Under ONE Banyan Tree YOUR TWO Holy Feet were worshipped
THREE times a day by FOUR saints known as Sanakar, Sananthanar, Sanaathanar and Sanarkumaarar. To them YOU imparted divine wisdom.

         The three lights such as the Sun, Moon and Fire were allowed to be bedecked in YOUR body frame THREE eyes of YOURS.

        Along with the big river Ganges YOU have accommodated TWO more entities - i.e., the snake and the crescent moon in YOUR matted hair.

        YOU are holding in one of YOUR hands the trident. It has ONE stem. This stem is the incomparable principal incantation formed out of the mystic word 'OM'. You hold the trident symbolic of the three entities - Brahma, Vishnu and Rudra. You revealed Thy form to the four saints. You hold the five headed snake.

        YOU annihilated the valour of the incomparable ONE elephant, peeled its skin and covered YOUR body with that skin.

       This elephant has TWO tuskers. This rutting elephant has THREE places in its body wherefrom its must water flows (Check, Temple
and Penis). This elephant has a long trunk - long and dangling mouth. Civan's raised fort in

       YOU held in YOUR hand the incomparable, huge mount Mēru as ONE bow and bent its TWO ends and then fixed the arrow and shot at the THREE citadels and destroyed all the Asuraas who lived therein.
Devaas who have subdued their FIVE sensory organs, FOUR organs of consciousness (internal organs), the THREE fundamental qualities (temperaments) and compressed the TWO breathing air in the bottom portion of their body known as Moolaathaaram (The nerve plexus in the body described as a four petalled lotus situate between the base of the sexual organ and the anus is called Moolathaaram).

Note: Five sensory organs are taste, sight, sensation, sound and smell

Four organs of consciousness are the intellectual faculties embracing 1.The mind or organ of thought; 2.Reason, the organ of consciousness or apprehension; 3. Energy, any one of the passions; 4. Will, resolution, desire.

Three fundamental qualities are 1.Wisdom 2. Mental exertion; 3. Rioting, banquating.

Vedic scholars do live in large numbers in Piramapuram who offer worship daily to the Lord in the temple. They also perform the sacrificial fire without any alteration tot he traditional caste conventions. They drop food in the sacrificial fire to be forwarded to the Devas for their happy life in their upper world. These Vedic scholars do observe and adhere to the following:

a) They concentrate with ONE mindedness on Lord Civan.

b) They carry on research work on the TWO types of births.

c) THREE times per day they carry out the due observance of the very important religious duties and rites.

d) They chant the FOUR Vedas daily.

e) They perform the FIVE different kinds of sacrificial fire daily.

f) They chant the SIX Angas of the Vedas also daily.

Oh! Lord Civa! YOU are enshrined in such a famous city Piramapuram!

P 1689

Oh! Lord Civan YOU desired to be entempled in the city of Venupuram where the SIX legged bees are humming.

           The Devas fought against the Asura Soora-Panman and his army, but got defeated in the battle. They had to leave and run away from their own upper world and extended into the city Pukali as refugees. Oh! Lord Civa! YOU loved to be enshrined in this Pukali city.

At the time of great final deluge, the entire world got drowned under the water of the FOUR seas. But the city Venkuru alone did not get submerged under water. Oh! Lord Civa! YOU glimmered in the temple in this famous city Venkuru.

At the time of final great deluge, all the THREE worlds Went under the sea. However, the town Thonipuram alone did not get submerged. It floated as a boat. Therefore, it earned the name as Thonipuram. Oh! Lord Civa! YOU have dwelled at the temple in the holy city Thonipuram.

The town Poontharai is a very rich place where wealth known as Sanga Nithi and paduma Nithi. Oh! Lord Civa! YOU have selected this city as YOUR abode.

The natural resources of this ONE Puram called as Cirapuram is so plentiful that it will bestow anything wanted by anybody. Oh! Lord Civa! YOU have reached such a famed city.

Note: Once Thirumaal was apportioning nectar to all Devas. At that moment one Asura incognito entered the crowd and stretched his hand to receive the nectar. But Thirumaal identified him and threw the ladle he had in his hand with violence over his head. The head was cut off. The beheaded came to Seekaazhi and prayed to restore his life. Lord Civa of Seekaazhi granted him this boon the ascending and descending modes of the moon called Raahu and Kethu. These two are among the nine planets. This mythological story is related to this town 'Chirapuram'.
Raavanan once tried to uproot the incomparable mount Kailas but in vain. Lord Civa destroyed his energy and nullified his TWO fold valiant effects. Later HE graced and gave him the divine sword besides other boons.

      A sage by name Gouthamar took the form of a dove and came to Seekaazhi and did penance for long. Lord Civan was pleased with his penance and pitied on him and graced him by giving boons that he desired. Hence the city came to be called Puravam.

      Thirumaal who abides, takes rest and sleeps in the THREE oceans of milk and the FOUR faced Brahma tried their best to see YOUR holy feet, but failed. YOU stood as a tall and big flame of fire which they could not identify.

The sage Durvaasa Maharishi once pronounced a curse on the family members of Krishna. By the result, Krishna and his entire family members died. To obliterate the curse, he came to Seekaazhi and worshipped Lord Civan therein. Lord Civa graced him and released the effect of the curse and also renamed was called 'Shanbai', where Lord Civan was enshrined.

      The skeptic Samanars do not believe in god and in Vedas - FIVE. The Buddhists eat food in SIXTH different tastes and become obese. Even during the time of the great deluge the poisonous snake called KAALI survived and worshipped Lord Civan therein. Therefore the city is called Seekaazhi.

The Paraasara Rishi performs the sacrificial fire ritual regularly. He is an adept in the SEVEN kinds of musical mode. He was cursed by all other Rishis by which his body was emitting a very bad smell permanently for a long distance around him. To obliterate this curse, he came to Seekaazhi and worshipped Lord Civan therein and prayer for HIS grace. Civan removed the curse and named him as Koch- chai muni. Thereafter the city came to be called as 'Koch-chai-vayam' in which Lord Civa is entempled.

      YOU have authored and graciously favoured the SIX kinds of musical composition, FIVE different kinds of erudition the FOUR Vedas, and the THREE divisions of time such as present, past and future.
YOU are considered as TWO separate entities such as Sakthi and Civan; but YOU also stood united in ONE form as Artha Naareeswarar. YOU are an indivisible ONE omnipotent being as Civan.

       I (Gnaanasambandan) was born in the family of flawless Vedic scholars in the very ancient and permanent city of Kazhu-malam in the ancestry known as Kaunya Gothram. I have enjoyed fully the grace of Lord Civan. I sang on Lord Civan, the Chief of this ancient city who begs for alms in Brahma's skull and eats it; HE knows my adoration on HIM through this hymn.

Oh! Noble Lord of Kazhumala – You are the supreme being with self-dependency in all these distinguishing features.

Those devotees who perform religious meditation with uninterrupted contemplation on YOU, will never be born again in this vast world.

Note: Of the many exploits referred to here, there could be some that can admit of a different interpretation. Therefore, readers and research scholars may contemplate on the inner meaning of these lines, and the context in which they were said.


திருச்சிற்றம்பலம்

128ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
129. திருக்கழுமலம்

திருத்தல வரலாறு: 
முதலாம் பதிகம் பார்க்க. 
129. THIRU-KAZHU-MALAM

HISTORY OF THE PLACE

See First Hymn.

திருச்சிற்றம்பலம்

129. திருக்கழுமலம் 
பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

சேவுயருந்திண் கொடியான்திருவடி யேசரணென்று சிறந்தஅன்பால் 
நாவியலுமங்கை யொடுநான்முகன் றான்வழிபட்ட நலங்கொள்கோயில் 
வாவிதொறும் வண்கமலமுகங் காட்டசெங்குமுதம் வாய்கள்காட்டக் 
காவியிருங்கருங் குவளைகருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே. 1

“சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்’ என்று சிறந்த அன்பால் 
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலம் கொள் கோயில்   
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவி இருங்கருங்குவளை கருநெய்தல் கண் காட்டும் கழுமலமே

பொருள்: விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய 
சிவபெருமானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று தன் நாவினில் பொருந்திய 
கலைமகளுடன் இணைந்து நான்முகனான பிரமன் சிறந்த அன்போடு வழிபட்ட கோயில் 
திருக்கழுமலம் ஆகும். இங்குள்ள வாவிகளில் மலரும் தாமரை மலர்கள் மகளிர்தம்
முகங்களைப் போலவும், செம்மையான குமுத மலர்கள் அவர்களின் வாய்களைப் போலவும் 
காவி மலர்கள், கருங்குவளை மலர்கள் மற்றும் கரிய நெய்தல் மலர்கள் ஆகிய இவைகள் 
அவர்களின் கண்களைப் போலவும் தோன்றி மலரும் வளத்தை உடையது கழுமலம் ஆகும்.

குறிப்புரை: விடையுயர்ந்த பெருமான் திருவடியே சரண் என்று பிரமன் வழிபட்ட கோயில், நீர்ப்பூக்கள் 
நேரிழையார் அவயவங்களைக் காட்டும் கழுமலம் என்கின்றது. சே - இடபம். நா இயலும் மங்கை - 
சரஸ்வதி. 
The four faced Brahma along with his consort Saraswathi abiding in his tongue went to the famous temple of Kazhu-malam and worshipped Lord Civan therein with deep devotion. He knew well that only the holy feet of this Lord, raising His power packed flag bearing the bull's figure as the insigne, could redeem him. Thiru-kazhu- malam is a very fertile, arable and flowering place. Here a number of water storage tanks flourish where lotus flowers having a long stalk resembling damsel's faces, red lilies resembling their mouths, and ochre coloured flowers as well the black Indian lily flowers resembling their eyes bloom. Such is the fertile and famed city Thiru-kazhu-malam.

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடையமலைச் செல்விபிரியாமேனி 
அருந்தகையசுண் ணவெண்ணீறலங் கரித்தானமரர் தொழஅமருங்கோயில் 
தருந்தடக்கை முத்தழலோர்மனை கள்தொறுமிறைவ னதுதன்மைபாடிக் 
கருந்தடங்கண் ணார்கழல்பந்தம் மானைப்பாட்ட யருங்கழுமலமே. 2

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச்செல்வி பிரியா மேனி 
அருந்தகைய சுண்ணவெண்ணீறு அலங்கரித்தான், அமரர் தொழ, அமரும் கோயில் - 
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மை பாடி, 
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்பாட்டு அயரும் கழுமலமே.

பொருள் : அகன்ற விழிகளையும், பவளம் போன்ற சிவந்த வாயையும் உடைய பெருமைமிக்க
மலைமகளாகிய உமையம்மையைப் பிரியாத திருமேனியை உடையவன் சிவபெருமான். 
அவன் அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசியவன். தேவர்கள் 
தன்னை வணங்க அவன் எழுந்தருளிய கோயில் உள்ள இடம் திருக்கழுமலம் ஆகும். இங்கு 
வள்ளல் தன்மை மிகுந்த விசாலமான கைகளை உடைய அந்தணர்கள், மூன்று விதமான 
அக்கினியை வளர்க்கின்றனர். அத்தகைய வீடுகள்தோறும் கரிய பெரிய கண்களை உடைய 
மகளிர் தாங்கள் கழற்சிக் காய் அம்மானை பந்து போன்ற விளையாட்டுக்களை 
ஆடும்போதும் இறைவனின் பெருமைகளைப் பாடியே ஆடி மகிழ்கின்றனர்.

குறிப்புரை: பெரியநாயகி பிரியாத மேனியில் திருநீற்றால் அலங்கரித்தான் கோயில் இது என்கின்றது. 
துவர் - பவளம். பீடு - பெருமை. தரும் தடக்கை - வழங்கும் விசாலமான கை. முத்தழலோர் - முத்தழல் 
ஓம்பும் அந்தணர். அந்தணர் வீட்டில் மகளிர் இறைவன் புகழைப்பாடி அம்மானை பந்து கழங்கு 
ஆடுகின்றார்கள் என்பதாம். 
Umaa Devi, daughter of the famous Himaalayan mountain king having large broad eyes and coral-like mouth is incorporated in Civan's body and is inseparable from Him. In that body frame, Lord Civan smears holy ashes and appears very attractive. He is entempled in the holy temple in Thiru-kazhu-malam. Devas reach this place and offer worship to Lord Civan therein in the temple. In this city philanthropic Vedic scholars having broad hands do live in large numbers and perform rituals of fire daily. In their houses young girls having large and black eyes gather and plays indoor games with balls and Molucca beans called Ammaanai. While playing they chant hymns and sing in praise of the nature of Lord Civan and enjoy life.

அலங்கல்மலிவானவருந்தானவருமலைகடலைக்கடையப்பூதங் 
கலங்கஎழுகடுவிடமுண்டிருண்டமணிகண்டத்தோன்கருதுங்கோயில் 
விலங்கலமர்புயன்மறந்துமீன்சனிபுக்கூன்சலிக்குங்காலாந்தானுங் 
கலங்கலிலாமனப்பெருவண்கையுடையமெய்யர்வாழ்கழுமலமே, 3

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத் தோன் கருதும் கோயில் -
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும் காலாந்தானும் 
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே.

பொருள்: மலர் மாலைகள் அணிந்த தேவர்களும், அசுரர்களும் அலைகள் பொருந்திய
திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது பஞ்ச பூதங்களும் கலங்குமாறு எழுந்த 
கொடிய நஞ்சை சிவபெருமான் வாயில் போட்டுக் கொண்டார். இதனால் கரிய மணி 
போன்ற கண்டத்தை உடையவரானார். தனது உறைவிடம் என்று மகிழ்வோடு கருதுகின்ற 
கோயில் உள்ள இடம் திருக்கழுமலம் ஆகும். மகர இராசியில் சனிக்கோள் புகுதலால் 
மலையின்மேல் தவழும் மேகங்கள் மழை பொழிதலை மறக்க உணவு கிடைக்காமல் மக்கள் 
பஞ்ச காலத்தில் உடல் இளைப்பர். இப்படி ஒரு நிலைமை வந்தாலும், மனம் கலங்காது 
பெரிய வள்ளல் தன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழ்கின்ற ஊர் 
இக்கழுமலம் ஆகும்.

குறிப்புரை: தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய எழுந்த விடத்தை வாயில் போட்டு கறுத்த கண்டன் 
உறைகோயில் இது என்கின்றது. அலங்கல் - மாலை. விலங்கல் - மலை. புயல் - மேகம். மீன்சனி புக்கு 
- மகர ராசியில் சனி புகுந்து: உளன் சலிக்கும் காலத்தாலும் - உடல் வாடிய காலத்திலும், பஞ்சகாலத்தும் 
கலங்காத வள்ளல்கள் வாழும் நகர் என்க. 
The Devas and Asuraas wearing flower garlands started churning the ocean of milk to get nectar. But the deadly poison that foamed on the top of the ocean created a great terror on all, everywhere in the universe including the goblins of Lord Civan. Being the repository of mercy, grace and love, Lord Civan came forward to save one and all in the universe (the entire humanity in the universe) from death. He, therefore, without swallowing the poison, put it in His mouth and positioned it in His throat permanently; His neck therefore is always in dark blue colour, similar to that of sapphire gem. In certain seasons of the year the planet Saturn enters into the tenth zodiac known as Capricorn and stays there for some period. During this period rain bearing clouds could not gather on mountaintop and shower rain. As there was no rainfall in the city, the country got afflicted with famine for want of food materials. Even in such times of draught and famine, the philanthropic and virtuous people of the city in large numbers came forward and helped the people and saved them from the devastating effect of the famine. Lord Civan is happily entempled in this famed city of Thiru-kazhu-malam.

பாரிதனைநலிந்தமரர்பயமெய்தச்சயமெய்தும்பரிசுவெம்மைப் 
போரிசையும்புரமூன்றும்பொன்றவொருசிலைவளைத்தோன்பொருந்துங்கோயில் 
வாரிசைமென்முலைமடவார்மாளிகையின்சூளிகைமேல்மகப்பாராட்டக் 
காரிசையும்விசும்பியங்குங்கணங்கேட்டுமகிழ்வெய்துங்கழுமலமே. 4

பார்இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு வெம்மைப் 
போர் இசையும் புரம்முன்றும் பொன்ற ஒருசிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் - 
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப் பாராட்டக், 
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே.

பொருள்: அன்று மண்ணுலக மக்கள் வருந்துமாறும், தேவர்கள் அச்சம் கொள்ளுமாறும், 
வெற்றி. பெறும் இயல்பினராய் முப்புர அசுரர்கள் கொடிய போரை நிகழ்த்தினர். அவர்களின் 
முப்புரங்களும் அழிந்து போகுமாறு, ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபெருமான் உறையும் 
கோயில் உள்ள இடம் கழுமலம் ஆகும். இங்கு கச்சணிந்த மென்மையான தனங்களை 
உடைய மகளிர் தங்கள் மாளிகைகளின் மேல்தளத்தில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் 
பாராட்டுகின்றனர். அந்த இசையை மேகங்கள் தவழும் வான் வெளியில் உலாவுகின்ற 
கந்தர்வர்கள் கேட்டு மகிழ்கின்றனர்.

குறிப்புரை: உலகை வருத்தி, தேவர் அஞ்ச, வெல்லும் வகை வில்லை வளைத்து புரம் எரித்த இறைவன் 
கோயில் இது என்கின்றது. பார் - பூமி. நலிந்து - வருத்தி. வார் - கச்சு. சூளிகை - உச்சி மகளிர் 
மாளிகையின்மேல் குழந்தைகளைத் தாலாட்ட அதனைத் தேவர் கேட்டு மகிழும் கழுமலம் என்க. 
The Asuraas tortured the people on earth and threatened the Devas also by waging war against them. It is Lord Civan who bent His unique bow and destroyed their three fortresses and killed all of them. This Lord Civan is entempled in Thiru- kazhu-malam city. In this city lovely young women wear corset over their soft breasts. In the evening hours they gracefully reach the top of their mansions carrying their child and start singing melodiously from their terrace. Their music is very superb enough to attract the celestials who pass through in the sky. They immediately stop in the sky and enjoy the melodious music. In such a famed city Lord Civan is entempled.

ஊர்கின்றஅரவமொளிவிடுதிங்களோடுவன்னிமத்தமன்னும் 
நீர்நின்றகங்கைநகுவெண்டலைசேர்செஞ்சடையான்நிகழுங்கோயில் 
ஏர்தங்கிமலர்நிலவியிசைவெள்ளிமலையென்னநிலவிநின்ற 
கார்வண்டின்கணங்களாற்கவின்பெருகுசுதைமாடக்கழுமலமே. 5

ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களோடு, வன்னி மத்தம், மன்னும் 
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர் செஞ்சடையான் நிகழும் கோயில் - 
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற, 
கார்வண்டின் கணங்களால், கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே.

பொருள்: ஊர்ந்து செல்லும் அரவு ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்தமலர், நீர்நிறைந்த 
கங்கை, சிரிக்கும் கபாலம் ஆகியன சேர்ந்து இருக்கும் செஞ்சடையை உடைய 
சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் உள்ள ஊர் திருக்கழுமலம் ஆகும். இங்கு 
வெண்மையான சுதையால் அமைந்த மாடவீடுகள் அழகு பொருந்திய வெள்ளி மலைகள் 
போன்று விளங்குகின்றன. அந்த வீடுகளை அலங்கரிக்கும் மலர்களின்மேல் கரிய வண்டுகள் 
மொய்க்கின்றன. இத்தகு அழகுடன் திகழ்வது கழுமலம் ஆகும்.

குறிப்புரை: அரவம், மதி, வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் இவை பொருந்திய செஞ்சடையான் 
கோயில் கழுமலம் என்கின்றது. ஏர் - அழகு. 
Lord Civan's red matted hair is decorated with the following: The crawling snake, the crescent moon shedding its brightness, the suma leaves, the datura flowers, the river Ganges with plenty of water, the white human skull having a grinning look. Decorated with these, Lord Civan is entempled in Thiru-kazhu-malam. This city has a number of tall storied mansions built out of pure white Chunnam (Calcium) and resemble like imposing silver mountains. These mansions are decorated with a number of stringed flowers all over the building. The black honey bees, in large numbers, are humming around these flower strings. Thiru-kazhu-malam is such an aesthetic and good looking city where Lord Civan is entempled.

தருஞ்சரதந்தந்தருளென்றடிநினைந்துதழலணைந்துதவங்கள்செய்த 
பெருஞ்சதுரா்பெயலர்க்கும்பீடார்தோழமையளித்தபெருமான்கோயில் 
அரிந்தவயலரவிந்தம்மதுவுகுப்ப அதுகுடித்துக்களித்துவாளை 
கருஞ்சகடமபிளகவளர்கரும்பிரிய அகம்பாயுங்கழுமலமே. 6

“தரும் சரதம் தந்தருள்!" என்று அடி நினைந்து, தழல் அணைந்து, தவங்கள் செய்த 
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் - 
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப, அது குடித்துக் களித்து வாளை, 
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய, அகம் பாயும் கழுமலமே.

பொருள்: எம்பெருமானின் திருவடிகளை நினைந்து தீ நடுவில் நின்றும், மழைநீரில் நின்றும் 
தவம் செய்பவர்கள் பெரிய சதுரப்பாடு உடையவர்கள். அவர்கள் ‘மெய்ஞ்ஞானத்தை 
எங்களுக்கும் தந்தருளுக’ என்று வேண்டி நிற்கின்றனர். அவர்களுக்குப் பெருமை மிக்க தன் 
தோழமையை வழங்கி அருள்கின்றான் எம்பெருமான். அவன் உறையும் கோயில் 
கழுமலத்தில் உள்ளது. நெல் அறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் 
தேனைச் சொரிகின்றன. வாளைமீன்கள் அதனைக் குடித்துக் களிக்கின்றன. அந்தக் 
களிப்பால் வயற்கரைகளில் நிற்கும் கரும்புகள் ஏற்றப்பட்ட பெரிய வண்டிகள் மீது துள்ளிப் 
பாயவும், அவைகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடிகின்றன. இத்தகு வளத்தினை உடையது 
கழுமலம் ஆகும்.

குறிப்புரை: அருளுக என்று அடிநினைந்து, தீ நடுவில் தவஞ்செய்யும் சதுரர்க்கும் தோழமை தந்த 
பெருமான் கோயில் இது என்கின்றது. சரதம் - துணிவு. பீடு - பெருமை, அரிந்த வயல் - அறுத்த 
வயலிலே. அரவிந்தம் - தாமரை. -வாளைமீன் தாமரைத் தேனைக் குடித்துப் பெரிய வண்டி இளக, 
கருப்பங்காடு விலகப் பாயும் கழுமலம் என்க. 
Very able and clever people stand over fire and perform penance with single mindedness on Civan's holy feet praying for grant them also, the real divine wisdom that is also granted to persons possessing true spiritual wisdom. For these people as well to those who perform penance by standing in the open under showering rain, Lord Civan imparts gracefully the well renowned
companionship.This Lord Civan is entempled in Thiru-kazhu-malam. In the harvested fields of this city, lotus flowers have bloomed in large numbers. The sword fishes in large numbers drink the honey dripping from these flowers. Then, they jump and dance all around the fields. They also dash against the sugarcane loaded wagons that are waiting near the ridge of the fields and topple them down breaking the sugarcane. Such is the fertility of Thiru-kazhu-malam where Lord Civan is enshrined.

புவிமுதலைம்பூதமாய்ப்புலனைந்தாய்நிலனைந்தாய்க்கரணநான்காய் 
அவையவைசேர்பயனுருவாயல்லவுருவாய்நின்றானமருங்கோயில் 
தவழுயல்வோர்மலர்பறிப்பத்தாழவிடுகொம்புதைப்பக்கொக்கின்காய்கள் 
கவணெறிகற்போற்சுனையிற்கரைசேரப்புள்ளிரியுங்கழுமலமே. 7

புவி முதல் ஐம்பூதம்ஆய், புலன் ஐந்துஆய், நிலன்ஐந்துஆய், கரணம் நான்குஆய், 
அவைஅவை சேர் பயன்உருஆய், அல்ல உருஆய், நின்றான் அமரும் கோயில் - 
தவம்முயல்வோர் மலர் பறிப்பத் தாழவிடு கொம்பு உதைப்ப, கொக்கின் காய்கள் 
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேரப், புள் இரியும் கழுமலமே.

பொருள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன ஐந்து பூதங்களாகும். சுவை, ஒளி, 
ஊறு, ஓசை, நாற்றம் என்பன ஐந்தும் புலன்களாகும். அவற்றுக்கு இடமான மெய், வாய், 
கண், மூக்கு, செவி என்பன ஐந்து அறிவுப் பொறிகளாகும். நாக்கு, கால், கை, கருவாய், 
எருவாய் என்பன ஐந்தும் செயல் கருவிகளாகும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன 
உட்கருவிகள் ஆகும். இந்த இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களாகவும், அவற்றின் 
பயனாகவும், உருவமாகவும், அருவமாகவும் நிற்கின்றவரான சிவபெருமான் எழுந்தருளிய 
கோயில் உள்ள இடம் திருக்கழுமலம் ஆகும். இங்கு தவம் செய்ய முயல்வோர் இறைவனை 
அர்ச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறிக்கின்றனர். அதனால் விடுபட்ட கிளைகள் 
வேகமாக நிமிர்ந்து அருகில் உள்ள மாமரத்தைத் தாக்குகின்றன. மாமரத்தின்மீது விண்டு 
கவணிலிருந்து வீசும் கற்களைப் போன்று அங்கு காய்ந்த காய்கள் சுனைகளில் விழுகின்றன. 
இதனால் அங்கு வீற்றிருக்கும் பறவைகள் அஞ்சி அகலுகின்றன. இத்தகைய வளத்தை 
உடையது கழுமலம் ஆகும்.

குறிப்புரை: ஐம்பூதமாய், ஐம்புலனாய், ஐம்பொறியாய், நாற்கரணமாய், அவற்றின்பயனாய், உருவாய், 
அருவாய் நின்றான் அமரும் கோயில் இது என்கின்றது. நிலன் ஐந்து - புலன்கள் தோன்றுதற்கு இடமாய 
ஐம்பொறிகள். கரணம் நான்கு - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. அவை அவை சேர்பயன் 
உருவாய் - பூத முதலியவற்றைச் சேர்ந்த பயனே வடிவாய்; என்றது பூதப்பயனாய சுவை முதலியதன் 
மாத்திரை ஐந்தும், புலனைந்தின் பயனாய பொறியின்பம் ஐந்தும், நிலனைந்தின் பயனாய புணர்தல் பிரிதல் 
இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஒழுக்கம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய நினைத்தலும், புத்தி 
பண்ணலும் சிந்தித்தலும் இது செய்வேன் என அகங்கரித்து எழுதலுமாகிய நான்கும் கொள்ளப்பெறும். 
அல்லவுருவாய் - இவையல்லாத அருவாய ஞானமாய். பூப்பறிப்போர் விட்ட பூங்கொம்புகள் சென்று தாக்க. 
மாங்காய்கள் கவண்கல்லைப் போலச் சுனைக் கரையில் விழப் பறவைகள் அஞ்சியகலும் நகர் என்க. 
Lord Civan manifests

a) In the FIVE elements (Earth, Water, Fire, Air and Sky).

b) In the sensation of the five sensory organs (Taste, Sight, Sensation, Sound and Smell).

c) In the relative places for the five sensory organs (Body, Mouth, Eye, Nose and Ear).

d) Organs of action (Mouth, Leg, Hand)

e) In the respective four inner seats such as Thought, Mind, Feeling and Volition.

f) In the significance of all these above five.

g) In a visible form.

h) In a state of formlessness - i.e., state of wisdom.

The devotees who desire to do penance and offer worship by doing the relative Archana to this Lord in Thiru-kazhu-malam; reach the flower garden and bend the big branch of a flower tree. They pluck all the flowers in that branch and release it. The released big and heavy branch suddenly rises up and dashes against another branch close by. That one is a mango branch with full of mango fruits. Instantaneously like stone discharged from catapult, a good number of mango fruits fall down into the tank below where a number of birds are nesting. The birds immediately fly away, from the tanks. Such is the fertility of the city Thiru-kazhu-malam, where our Lord Civan is entempled.


அடல்வந்தவானவரையழித்துலகுதெழித்துழலும் அரக்கர்கோமான் 
மிடல்வந்தஇருபதுதோள்நெரியவிரற்பணிகொண்டோன்மேவுங்கோயில் 
நடவந்தவுழவரிதுநடவொணாவகைபரலாய்த்தென்றுதுன்று 
கடல்வந்தசங்கீன்றமுத்துவயற்கரைகுவிக்குங்கழுமலமே. 8

அடல் வந்த வானவரை அழித்து, உலகு தெழித்து உழலும் அரக்கர் கோமான் 
மிடல் வந்த இருபதுதோள் நெரிய, விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் - 
நட வந்த உழவர், “இது நடவு ஒணா வகை பரலாய்த்து'' என்று துன்று 
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.

பொருள்: வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்தவன் 
அரக்கர் தலைவனான இராவணன் ஆவான். இவனின் வலிமை மிக்க இருபது 
தோள்களையும் தமது கால் விரலால் நெரிய ஊன்றி, பணி கொண்டார் சிவபெருமான். 
இப்பெருமான் எழுந்தருளியுள்ள கோயில் திருக்கழுமலம் ஆகும். நாற்று நட வந்த 
உழவர்கள் ‘இவை நாற்று நடுவதற்கு இடையூறாக கற்கள் போலத் தோன்றுகின்றனவே' 
என்று கூறுகின்ற அளவுக்கு கடலில் இருந்து வந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று 
குவிக்கின்ற வளத்தை உடையது இக்கழுமலம் ஆகும்.

குறிப்புரை: தேவர்களை அழித்து உலகை வருத்தி உழலும் இராவணனது இருபது தோள்களும் நெரிய 
விரலூன்றிய சிவபெருமான் உறையுங்கோயில் நாற்று நடவந்த உழவர்கள் பருக்கைக் கல்லாக 
இருக்கிறதென்று எண்ணி முத்துக்களை வரப்பில் குவிக்கும் கழுமலம் என்கின்றது. அடல் - 
வலிமையோடு. ஒழித்து - கொன்று. மிடல் - வலிமை. பரல் ஆய்த்து - பருக்கைக் கல்லாயிற்று. துன்று - 
நெருங்கிய. இது நெய்தலோடு தழீஇய மருதம் என்பதை விளக்கிற்று. 
Raavanan, the Chief of Asuraas was a terror to the people of this earth. He killed a good number of Devaas and did havoc to one and all. Lord Civan of Thiru-kazhu-malam crushed his mighty twenty shoulders by slightly pressing the top of mount Kailas by His toe and made him to realise his fault. This Lord Civan is entempled in Thiru-kazhu-malam temple. In this city the farmers who came for transplanting the seedlings in their fields saw a large quantity of conches and pearls inside their fields. Thinking that all these pearls are all just pebbles of no use, and will be a hindrance for their transplanting work, they gather them and throw them away in the ridges of their fields. Whereas these conches and pearls were washed ashore by the waves of the sea near by and collect in the fields. Such is the prosperity of Thiru-kazhu-malam where our Lord Civan is entempled.

பூமகள்தன்கோனயனும்புள்ளினோடுகேழலுருவாகிப்புக்கிட் 
டாமளவுஞ்சென்றுமுடியடிகாணாவகைநின்றானமருங்கோயில் 
பாமருவுங்கலைப்புலவோர்பன்மலர்கள்கொண்டணிந்துபரிசினாலே 
காமனைகள்பூரித்துக்களிகூர்ந்துநின்றேத்துங்கழுமலமே. 9

பூமகள்தன் கோன், அயனும், புள்ளினோடு கேழல் உருஆகிப் புக்கிட்டு, 
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் - 
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள் கொண்டு அணிந்து, பரிசினாலே 
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று, ஏத்தும் கழுமலமே.

பொருள்: திருமகளின் தலைவனான திருமாலும், பிரமனும் முறையே பன்றியும் அன்னப் 
பறவையும் ஆகி தங்களால் முடிந்த அளவு சென்றும் சிவபெருமானின் அடியும் முடியும் 
காண முடியாதவராகத் தோல்வியுற்று நின்றனர். இத்தகைய பெருமை கொண்ட 
சிவபெருமான் அமர்ந்திருக்கும் கோயில் இருப்பது திருக்கழுமலம் ஆகும். இங்கு பல்வேறு 
பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகள் அறிந்த புலவர்கள் பலவிதமான மலர்களைக் 
கொண்டு அர்ச்சனை செய்து சிவபெருமானிடம் பரவுகின்றனர். அவர்களின் முறையான 
விருப்பங்கள் நிறைவேறுவதைக் கண்டு மேலும் களிகூர்ந்து அவர்கள் பெருமானைப்
போற்றுகின்றனர். இத்தகையோர் வாழும் இடம் கழுமலம் ஆகும்.

குறிப்புரை: பிரமனும் திருமாலும் அன்னமாயும், பன்றியாயும் அடிமுடிகாணப் பெறாதான் அமருங்கோயில் 
புலவர்கள் பூக்கொண்டு அணிந்து இஷ்டத்தை நிறைவேற்ற வழிபாடு செய்யும் கழுமலம் என்கின்றது. பூ 
மகள் தன் கோன் - இலக்குமி நாயகனாகிய திருமால். புள் - பறவையாகிய அன்னம். கேழல் - பன்றி. 
ஆம் அளவும் - ஆணவத்தால் விளைந்த தற்போதம் கெடுமளவும். காமனை - விருப்பம்.
Thirumagal's consort Thirumaal and the four faced Brahma took the form of a hog and swan respectively and did their best to reach and see the holy feet and the head of Lord Civan and got disappointed, though Lord Civa stood before them in a huge and tall flame of fire. This Lord Civan is entempled in Thiru-kazhu-malam. Poets of outstanding knowledge in the rare arts of different spiritual songs do the virtual chanting of mystical words with all kinds of fragrant flowers. All their wishes successfully ended in the desired way. They adore Lord Civan in Thiru-kazhu-malam happily.

Note: This and many other exploits are repeated in puraanaas and epics / chronicles again and again. They stress on the glories of Lord Civa.

குணமின்றிப்புத்தர்களும்பொய்த்தவத்தைமெய்த்தவமாய்நின்றுகையில் 
உணல்மருவுஞ்சமணர்களுமுணராதவகைநின்றானுறையுங்கோயில் 
மணமருவும்வதுவையொலிவிழவினொலியிவையிசையமண்மேற்றேவர் 
கணமருவுமறையினொலிகீழ்ப்படுக்கமேற்படுக்குங்கழுமலமே. 10

குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம்ஆய் நின்று கையில் 
உணல் மருவும் சமணர்களும், உணராத வகை நின்றான் உறையும் கோயில் - 
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி, இவை இசைய மண்மேல்-தேவர் 
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க, மேற்படுக்கும் கழுமலமே.

பொருள்: அறிவுத் தெளிவு இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாக எண்ணி, 
கையில் உணவு ஏற்று உண்ணும் சமணர்களும் அறியவும் உணரவும் முடியாதவாறு நின்ற 
சிவபெருமான் உறையும் கோயில் உள்ள இடம் திருக்கழுமலம் ஆகும். இங்கு திருமண 
விழாவின் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஒலியும், பூவுலகில் தேவர்கணங்கள் ஓதும் 
வேத ஒலியை மிஞ்சுமாறு ஒலிக்கின்றன.

குறிப்புரை: கழுமலத்தீசன் திருவடிமேல், கற்றவர் நற்றுணையாகிய ஞானசம்பந்தன் சொன்ன 
திருப்பாடல் பத்தும் வல்லார் திருமகள் துணையுடன் உலகமுழுதாண்டு சிவபெருமான் திருவடிசேர 
முயல்கின்றார் என்கின்றது. சொல்துணை - ஒதுவார்க்குத் துணையான சொல். 
Buddhists are lacking in virtue. Jains mistake their false penance as though it is true one and accept alms in their hands and eat it for their livelihood. These two groups were unable to recognise Lord Civan who is enshrined in Thiru-kazhu-malam. In this city very heavy noise is produced when marriages take place between men and women because of the heavy crowd of people gathered there. Also the noise heard during temple festivals is also very high. These two noises deaden the sound of the Vedic recitation that arise on the arrival of Devas to this town. The earlier two noises are more conspicuous than the last one in the city of Thiru-kazhu-malam.

Note: This shows the 'intensity' of population ever in those days. Saivism has always been the most prominent theology.

கற்றவர்கள்பணிந்தேத்துங்கழுமலத்துளீசன்றன்கழல்மேல்நல்லோர் 
நற்றுணையாம்பெருந்தன்மைஞானசம்பந்தன்றான்நயந்துசொன்ன 
சொற்றுணையோரைந்தினொடைந்திவைவல்லார்தூமலராள்துணைவராகி 
முற்றுலகமது ஆண்டுமுக்கணானடி சேரமுயல்கின்றாரே. 11

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல், நல்லோர் 
நல்-துணைஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து சொன்ன 
சொல்-துணை ஓாஐந்தினொடு ஐந்துஇவை வல்லார், தூ மலராள் துணைவர் ஆகி, 
முற்று உலகம்அது ஆண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.

பொருள்: கற்றுணர்ந்தவர்கள் பணிந்து போற்றுகின்ற கழுமலத்துள் விளங்குகின்றான்
சிவபெருமான். அவனுடைய திருவடிகளை விரும்பி, நல்லோர்க்கு நல்துணையாகும் 
பெருந்தன்மையுடைய ஞானசம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார். ஓதுவார்களுக்குத் 
துணையாய் அமைந்த சொற்றொடர்கள் உடையது இப்பாடல்கள். உலகம் முழுவதையும் 
அரசாளும், முக்கண்களை உடைய சிவனடியைச் சேர முயற்சிப்பவர்கள் திருமகளின் துணை 
கொண்டு இப்பாடல்களைப் பாடுவார்கள்.

குறிப்புரை: கழுமலத்தீசன் திருவடிமேல், கற்றவர் நற்றுணையாகிய ஞானசம்பந்தன் சொன்ன 
திருப்பாடல் பத்தும் வல்லார் திருமகள் துணை கொண்டு உலகமுழுதாண்டு சிவபெருமான் திருவடி சேர 
முயல்கின்றார் என்கின்றது. சொல்துணை - ஒதுவார்க்குத் துணையான சொல். 
Great learned scholars worship the holy feet of Lord Civan enshrined in Thiru- kazhu-malam with humility in their hearts. Gnaanasambandan of Seekaazhi with his noble character is a companion to virtuous scholars. He adored the holy feet of Lord Civan in Thiru-kazhu-malam and recited this hymn. This hymn consists of easy and helpful words for recitation by saiva scholars, appointed to recite sacred Tamil hymns in saiva temples and monasteries. Those who are capable of singing these ten verses of this hymn will rule over all the worlds. They will receive the blessings of goddess Lakshmi also. They will also become eligible to perform the sacred and ritual efforts to reach the holy feet of Lord Civa to achieve final salvation.

திருச்சிற்றம்பலம்

129ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
130. திருவையாறு

திருத்தல வரலாறு: 
36ஆம் பதிகம் பார்க்க. 
130. THIRU-VAI-YAARU

HISTORY OF THE PLACE

See 36th Hymn.

திருச்சிற்றம்பலம்

130. திருவையாறு

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

புலனைந்தும்பொறிகலங்கி நெறிமயங்கியறிவழிந்திட்டைம்மேலுந்தி 
அலமந்தபோதாகஅஞ்சேலென்றருள்செய்வானமருங்கோயில் 
வலம்வந்தமடவார்கள்நடமாடமுழவதிரமழையென்றஞ்சிச் 
சிலமந்தியலமந்துமரமேறிமுகில்பார்க்குந்திருவையாறே. 1

புலன்ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி, 
அலமந்தபோதுஆக, ‘அஞ்சேல்’ என்று அருள்செய்வான் அமரும் கோயில் - 
வலம்வந்த மடவார்கள் நடம்ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி, 
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

பொருள்: ஐம்புலன்களும் தமது பொறிகளின் இயல்பில் இருந்து வழிமாறி, அதற்குரிய 
அறிவையும் இழந்து, பித்தம், வாயு, சிலேத்துமம் என்ற நாளங்களின் மாறுபாட்டால் ௧பம் 
பெருகி, மனம் நிலையற்று வருந்தும் மரண காலத்திலும் ‘அஞ்சேல்’ என்று அருள் 
செய்பவன் சிவபெருமான் ஆவான். இப்பெருமான் அமர்ந்திருக்கும் கோயில் திருவையாறு 
ஆகும். நடனக்கலையில் வல்ல பெண்கள் நடனம் ஆடுகின்றனர். அவ்வாடலுக்கு ஏற்றவாறு  
முழவுகள் அதிர்கின்றன. அவற்றைக் கேட்ட சில மந்திகள் அதை இடிமுழக்கம் என அஞ்சி, 
மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கின்றன. இத்தகைய வளம் பொருந்தியது 
திருவையாறாகும்.

குறிப்புரை: ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வருந்தும் 
காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், வலம் வரும் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் 
பக்கவாத்தியமாக முழவு அதிர, அவ்வொலியை மேகத்திடியோசையென மயங்கி, மந்திகள் மரம் ஏறி முகில் 
பார்க்கும் ஐயாறு என்கின்றது. ஐ - கபம். அலமந்து - சுழன்று. முகில் - மேகம்.
When a person is overwhelmed by many ailments during his final days of life, he will fee£ perturbed and agitated mentally. His five senses will get confounded; mind will get confused; memory will fail; and phlegm will also originate. At this stage, Lord Civan provides consolation and graces him. This Lord Civan abides in Thiru-vai-yaaru temple. Young girls of this town, eminent in Bharatha Naattiyam are dancing and circumambulating the temple from left to right. Drums play as an accompaniment and in tune with beats of dances. By hearing the heavy noise of drums, some monkeys that are moving near by get scared and imagine that the noise is that of thunder and that rain might follow. Therefore, the monkeys soon climb to the top of near by tall trees and look up and down the sky to find out if any dark rain bearing clouds are approaching. Such is this heavenly glorious city Thiru-vai-yaaru.

விடலேறுபடநாகமரைக்கசைத்துவெற்பரையன்பாவையோடும் 
அடலேறொன்றதுவேறியஞ்சொலீர்பலியென்னுமடிகள்கோயில் 
கடலேறித்திரைமோதிக்காவிரியினுடன்வந்துகங்குல்வைகித் 
திடலேறிச்சுரிசங்கஞ்செழுமுத்தங்கீன்றலைக்குந்திருவையாறே. 2

விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்புஅரையன்பாவையோடும் 
அடல் ஏறுஒன்றுஅது ஏறி, “அம் சொலீர் பலி!' என்னும் அடிகள் கோயில் - 
கடல் ஏறித் திரை மோ திக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி, 
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.

பொருள்: கொல்லும் தன்மை வாய்ந்த படத்தினை உடைய நாகத்தை அரையினில் 
கட்டியிருப்பவரும், மலையரசன் மகளான பார்வதிதேவியோடு வலிமையான விடையின்மீது 
ஏறியிருப்பவரும், சிவபெருமான் ஆவார். அவர் ‘அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! 
பிச்சையிடுங்கள்!' என்று பலி கேட்பவர். இப்பெருமானின் கோயிலை உடையது 
திருவையாறாகும். இத்தலத்தில், வளைந்த மூக்கினை உடைய கடல் சங்குகள் அலைகள் 
வாயிலாக காவிரி ஆற்றுடன் வருகின்றன. அவைகள் இரவு நேரத்தில் மேடுகளில் ஏறி, 
செழுமையான முத்துக்களை ஈனுகின்றன.

குறிப்புரை: பாம்பைத் திருவரையிற்கட்டி, மலையரசன் மகளோடும் விடையேறி, அம்மா பிச்சையிடுங்கள் 
என்னும் அடிகள் கோயில், கடற்சங்கம் காவிரியோடு மேல் ஏறி வந்து முத்தம் என்றழைக்கும் ஐயாறு 
என்கின்றது. விடல் - வலிமை. வீடல் என்பதன் விகாரம் எனக்கொள்ளினும் அமையும். அஞ்சொலீர் - 
அழகிய சொற்களை உடையவர்களே. கங்குல் - இரவு. திடல் - மேடு. சுரி சங்கம் - சுரிந்த மூங்கிலை 
உடைய சங்குகள். 
Lord Civa has fastened to His waist, a murderous, hooded cobra. He sits mounted on the sturdy bull along with His consort Paarvathi Devi, daughter of the Himaalayan mountain (King) and moves around the residential area and yelling like thus "Oh! Ye! Beautiful maidens - you speak pleasing words in sweet sounding voice! Give me alms!" This Lord Civan is entempled in the city of Thiru-vai-yaaru. A special type of conch shell of the sea having curved black tips are carried by the waves in large numbers enters into the Cauvery river through its estuary. They are carried forward by the ebb, and reaches the river banks in Thiru-vai-yaaru town. These shells are thus spread all over during night hours and bring forth splendid pearls in large numbers to that area and shining bright. Such is the prosperity of the city Thiru-vai-yaaru.

கங்காளர்கயிலாயமலையாளர்கானப்பேராளாமங்கை 
பங்காளர்திரிசூலப்படையாளர்விடையாளர்பயிலுங்கோயில் 
கொங்காளப்பொழில்நுழைந்துகூர்வாயாலிறகுலாத்திக்கூதனீங்கிச் 
செங்கானல்வெண்குருகுபைங்கானலிரைதேருந்திருவையாறே. 3

கங்காளர், கயிலாயமலையாளார், கானப்பேராளர், மங்கை- 
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும்கோயில் - 
கொங்கு ஆள் அப்பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கிச், 
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

பொருள்: சிவபெருமான், மண்டை ஓட்டை மாலையாக அணிந்திருப்பவர். கயிலை 
மலையில் உறைபவர். திருக்கானப்பேர் என்னும் தலத்தில் உறைபவர். உமை பங்காளர். 
முத்தலைச் சூலப்படையை ஏந்தியிருப்பவர். விடை ஊர்தியை உடையவர். இத்தகைய 
பெருமான் எழுந்தருளிய கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் சிவந்த கால்களை 
உடைய வெண்ணிறக் குருகுப் பறவைகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைகின்றன. 
தமது கூரிய அலகுகளால் இறகுகளைக் கோதி குளிரை நீக்குகின்றன. அந்தப் பசுமையான
சோலைகளில் தமக்கு வேண்டிய இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

குறிப்புரை: கங்காளர் மங்கை பங்காளர் பயிலுங் கோயில், வெண்குரு பொழிலில் நுழைந்து அலகால் 
சிறகைக் கோதி, உலர்த்தி, குளிர்நீங்கி இரைதேடும் ஐயாறு என்கின்றது. கொங்கு ஆள் அப்பொழில் - 
தேன் நிறைந்த அச்சோலை. கூதல் - குளிர் செங்கால் நல் வெண் குருகு எனப் பிரிக்க. கானல் - 
கடற்கரைச் சோலை. இது திணை மயக்கம் கூறியது. 
Lord Civan wears the skull; His permanent abode is mount Kailas. He is entempled in the town called Kaanepрër; He shares His body with His consort Umaa Devi; He holds the weapon trident in one of His hands; He has a bull as His vehicle. This Lord is enshrined in Thiru-vai-yaaru. In this town, white herons having red claw fly to the posh groves where bee hives are in good number. The herons dry their wet feathers by their sharp break and get rid of their coldness. Thereafter they seek the food they like in that grove and enjoy. Such fertile place is Thiru-vai-yaaru.

ஊன்பாயுமுடைதலைகொண்டூரூரின்பலிக்குழல்வாருமையாள்பங்கர்
தான்பாயும்விடையேறுஞ்சங்கரனார்தழலுருவர்தங்குங்கோயில் 
மான்பாயவயலருகேமரமேறிமந்திபாய்மடுக்கள்தோறும் 
தேன்பாயமீன்பாயச்செழுங்கமலமொட்டலருந்திருவையாறே. 4

ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர்ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர், 
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல்உருவர், தங்கும் கோயில் - 
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்தோறும் 
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

பொருள்: ஊன் பொருந்தியதும் முடைநாற்றம் உடையதுமான தலை ஓட்டைக் கைகளில் 
ஏந்தி ஊர்கள்தோறும் சென்று பலியேற்று உழல்பவர். உமை பங்கர். பாய்ந்து செல்லும் 
விடையேற்றை உடையவர். நன்மைகளைச் செய்வதனால் சங்கரன் என்னும் பெயரை 
உடையவர். தழல் உருவினர். இத்தகையப் பெருமைகளை உடைய சிவபெருமான் 
தங்கியிருக்கும் கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் மான்கள் துள்ளிப் பாய வயலின் 
அருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய, அதில் இருக்கும் தேன் கூடுகளில் இருந்து 
தேன் ஆற்றில் பாய, அதனால் மீன்கள் துள்ளி தாமரை மொட்டை, மலர வைக்கின்றன. 
இத்தகைய இயற்கை வளத்தை உடையது திருவையாறு ஆகும்.

குறிப்புரை: பிரம கபாலத்தை ஏந்தி ஊர்தோறும் பலிக்கு உழல்வாராகிய தழல் உருவர் தங்கும் கோயில். 
மான்பாய, வயலருகேயுள்ள மரத்தில் ஏறி மந்திகள் மடுக்கள் தோறும் பாய்வதால் தேன்பாய, மீன்பாய, 
தாமரைகள் மலரும் ஐயாறு என்கின்றது. மான் - முல்லைக் கருப்பொருள். 
The skull of Brahma stinks, because small quantities of rotten flesh still stick to the bone. Lord Civan carries this skull in His hand as His begging bowl and moves from one town to another and accepts the alms and roams about here and there. He is concorporated with His consort Umaa Devi and moves about riding on His bull which runs fast. He is the dispenser of happiness; therefore He is called 'Sankaran'. His ruddy fame glows like that of fire. This Civan is enshrined in Thiru-vai-yaaru. In this city of Thiru-vai-yaaru lush groves are there in large numbers. In these groves, deer in large numbers jumps about happily. By seeing the jumping deer, the monkeys rush towards the trees near the fields and climb to the top. While climbing they dash against the honeycombs in the trees and damage them. Honey starts dripping and falls into the pool near the trees. As the honey drips, the fishes in the pool are terrified and jump here and there. While jumping they dash against the tender lotus flower-bud, and make them blossom. Such is the beauty and fertility of Thiru-vai-yaaru.

நீரோடுகூவிளமும்நிலாமதியும்வெள்ளெருக்கும்நிறைந்தகொன்றைத் 
தாரோடுதண்கரந்தைசடைக்கணிந்ததத்துவனார்தங்குங்கோயில் 
காரோடிவிசும்பளந்துகடிநாறும்பொழிலணைந்தகமழ்தார்வீதித் 
தேரோடுமரங்கேறிச்சேயிழையார்நடம்பயிலுந்திருவையாறே. 5

நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள்எருக்கும், நிறைந்த கொன்றைத் 
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் - . 
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித் | 
தேர் ஒடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

பொருள்: கங்கை நதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர்கள் நிறைந்த 
மாலை, குளிர்ச்சியான கரந்த மலர்: ஆகியவற்றை அணிந்திருக்கும் தத்துவனானவன் 
சிவபெருமான் ஆவான். இப்பெருமான் தங்கியிருக்கும் கோயில், திருவையாறு 
ஆகும். இத்தலத்தில் நிறைந்துள்ள பொழில்களின் நறுமணம், மேக மண்டலம் வரை 
உயர்ந்து வானத்தை அளந்து பரவிநிற்கின்றது. தேர் ஓடும் வீதிகளில் மணம் கமழும் வீடுகள் 
உள்ளன. வீதிகளில் உள்ள அரங்குகளில் அணிகலன்களை அணிந்த இளம் பெண்கள் 
நடனம் ஆடுகின்றனர். இத்தகு மகிழ்ச்சியான மக்கள் வாழும் தலம் திருவையாறாகும்.

குறிப்புரை: கங்கையோடு வில்வம் எருக்கம்பூ முதலியவற்றைச் சடையில் அணிந்த தத்துவனார் தங்கும் 
கோயில், மேக மண்டலத்தை அளாவி, விண்ணை அளந்த பொழில்கள் சேர்ந்துள்ள தேரோடும் வீதியிலே 
உள்ள அரங்குகளில் மகளிர் நடமாடும் ஐயாறு என்கின்றது. கூவிளம் - வில்வம். கார் ஓடி - மேகம் 
பரந்து. 
Lord Civan retains the crescent moon in His matted hair. He also supports the river Ganges on His head. He wears the garland made up of cassia flowers, Bael leaves, white madar flowers and the cool and fragrant Basil leaves (Ocinum basilicum). This Civan, Lord of all powers is enshrined at the temple in the city of Thiru-vai-yaaru. In the natural gardens of this city very tall and sweet smelling flower trees are many in number. They grow very tall so as to reach and measure the sky where the clouds are moving and spread their fragrance up in the air. Fragrance from flower and other things also spreads from the mansions into the streets where the temple chariot runs on. Young girls wearing all sorts of jewellery climb up the dancing halls located in these streets and perform beautiful dance, in the stage to the enjoyment of every one assembled there. Such is the fame of this town Thiru-vai-yaaru.

வேந்தாகிவிண்ணவர்க்கும்மண்ணவர்க்கும்நெறிகாட்டும்விகிர்தனாகிப் 
பூந்தாமநறுங்கொன்றைசடைக்கணிந்தபுண்ணியனார்நண்ணுங்கோயில் 
காந்தாரமிசையமைத்துக்காரிகையார்பண்பாடக்கவினார்வீதித் 
தேந்தாமென்றரங்கேறிச்சேயிழையார்நடமாடுந்திருவையாறே. 6

வேந்துஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகிப், 
பூந்தாமநறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் - 
காந்தாரம் இசைஅமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீ தித், 
“தேம்தாம்’ என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம்ஆடும் திரு ஐயாறே.

பொருள்: அனைத்து உலகங்களுக்கும் அரசன் ஆனவன். விண்ணவர்களுக்கும் 
மண்ணவர்களுக்கும் நல்ல நெறியைக் காட்டும் வள்ளல் சிவபெருமான். மணம் கமழும் 
கொன்றை மாலையைச் சடையில் அணிந்த புண்ணிய வடிவினன். இத்தகையப் 
பெருமைகளை உடையவன் சிவபெருமான் ஆவான். இப்பெருமான் எழுந்தருளி இருக்கும் 
கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் பெண்கள் காந்தாரப் பண் அமைந்த 
இசையைப் பாடுகின்றனர். வீதிகளில் அமைந்திருக்கும் அழகிய அரங்களில் ஏறி, 
அணிகலன்களை அணிந்திருக்கும் இளம் பெண்கள், “தேம், தாம்” என்ற ஒலிக்குறிப்போடு 
இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகின்றனர்.

குறிப்புரை: அரசாகி, வழிகாட்டும் வள்ளலாகிய பூங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியர் கோயில் 
காந்தாரப் பண்ணமைத்து மகளிர் இசைபாட, சேயிழையார் சிலர் அரங்கேறி நடமாடும் ஐயாறு என்கின்றது. 
தாமம் - மாலை. 
Civan is the Supreme Lord of all the universe. He is the pre-eminent Supreme Head, who reveals virtuous deeds to celestial folk as well to the people on earth. He is righteous Lord who wears the sweet smelling cassia flowers on His matted hair. This Civan is entempled in the city of Thiru-vai-yaaru. In this city young and good looking girls wearing all sorts of ornaments get into the dancing stage fixed in the sightly streets and dance to the tune of 'Them'-'thaam' sung by the songster women who sing songs in the third metre of the gamut to the enjoyment of the audience. Such glorious is the town Thiru-vai-yaaru.

Note: Kaanthaara-p-pann - An ancient secondary melody-type of the Paalai class.

நின்றுலாநெடுவிசும்பினெருக்கிவருபுரமூன்றும்நீள்வாயம்பு 
சென்றுலாம்படிதொட்டசிலையாளிமலையாளிசேருங்கோயில் 
குன்றெலாங்குயில்கூவக்கொழும்பிரசமலர்பாய்ந்துவாசமல்கு 
தென்றலாரடிவருடச்செழுங்கரும்புகண்வளருந்திருவையாறே.  7

நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம்முன்றும் நீள்வாய்அம்பு 
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில் - 
குன்றுஎலாம் குயில் கூவக், கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு 
தென்றலார் அடி வருடச், செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

பொருள்: நீண்ட வான வெளியில் நின்று உலாவி தேவர்களை துன்புறுத்திய அசுரர்களின் 
முப்புரங்களை, நீண்டதும் கூரியதுமான அம்பு சென்று தைக்குமாறு கணை தொடுத்த 
வில்லாளன். கயிலை மலையை உடையவன். இத்தகு பெருமைகளை உடைய 
சிவபெருமான் சேர்ந்து இருக்கும் கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் உள்ள 
குன்றுகளில் குயில்கள் கூவுகின்றன. தென்றல் காற்று தேன் நிறைந்து மலர்களைத் தீண்டி 
வருவதால் மணம் நிறைந்து வீசுகின்றது. அத்தென்றல் அடிவருட அவற்றால் செழுமையான 
கரும்புகள் கண் வளரும் வளமுடையது திருவையாறாகும்.

குறிப்புரை: வானவீதியில் நெருங்கி வரும் முப்புரங்களையும் அம்புதைக்கும் வண்ணம் வளைத்த 
வில்லாளி, மலையில் குயில் கூவத்தேன்பாய்ந்து மணம் நிறைந்த தென்றற்காற்று அடிவருடக் கரும்பு 
தூங்கும் ஐயாறு என்கின்றது. பிரசம் - தேன். இதனால் தென்றற்காற்றின் செளரப்யம், மாந்தியம் என்ற 
இருகுணங்களும் கூறப்பட்டன. கண் வளரும் - கணுக்கள் வளரும் என்றுமாம். 
Civan is the greatest archer who shot a long and sharp arrow on the three fortresses of the Asuraas who were wandering in the sky, destroying the living places of Devas and doing all havoc to them. He is the ruler and controller of the great Himaalayan mountain. He prefers to be entempled in Thiru-vai-yaaru city. In the small hills of this city the Indian cuckoos create cooing noise and flies all around happily. The southerly wind passes on its way through flower gardens full of good quality honey, and carries the fragrance of the flowers. When this wind passes through the Thiru-vai-yaaru city it gives pleasantness to one and all of this place. This southerly wind also passes through sugarcane fields in this city, back up the growth of the sturdy sugarcane and make them to blossom. Such a fertile and enchanting city is Thiru-vai-yaaru.

அஞ்சாதேகயிலாயமலையெடுத்த அரக்கர்கோன்தலைகள்பத்தும் 
மஞ்சாடுதோள்நெரியஅடர்த்தவனுக்கருள்புரிந்தமைந்தர்கோயில் 
இஞ்சாயலிளந்தெங்கின்பழம்வீழஇள மேதியிரிந்தங்கோடிசச் 
செஞ்சாலிக்கதிருழக்கிச்செழுங்கமலவயல்படியுந்திருவையாறே. 8

அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும், 
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் - 
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடிச், 
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

பொருள்: கயிலை மலையை சிறிதும் பயம் இன்றி அரக்கர் தலைவனான இராவணன் 
எடுத்தான். அவனுடைய பத்துத் தலைகளையும் வலிமையான தோள்களோடு நெரியுமாறு 
அடர்த்தவர் சிவபெருமான் ஆவார். பின்னர் அவனுக்கு அருள் புரிந்தவரும் அவரே. 
இப்பெருமான் எழுந்தருளிய கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் இனிய நிழலைத் 
தரும் தென்னை மரத்தில் இருந்து காய்ந்த நெற்று கீழே விழுகின்றது. அதனைக் கண்டு 
பயந்த எருமையின் கன்று, ஓடிச் சென்று செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் 
செழுமையான தாமரை மலர்கள் களையாகப் பூத்திருக்கும் வயல்களைச் சென்றடைகின்றது. 
இத்தகு இயற்கை வளமுடையது திருவையாறு ஆகும்.

குறிப்புரை: சிறிதும் அஞ்சாது கயிலையைத் தூக்கிய இராவணன் தலைகள் பத்தையும் நெரித்து 
அவனுக்கு அருள்செய்த மைந்தர் கோயில், தேங்காய் நெற்று வீழ, எருமைக் கன்று பயந்தோடி நெல் 
வயலை மிதித்துத் தாமரை முளைத்திருக்கின்ற வயலிலே படியும் ஐயாறு என்கின்றது. மஞ்சு - வலிமை. 
மைந்து என்பதன் திரிபு இன்சாயல் - இனிய நிழல். இஞ்சாயல் என ஆயிற்று எதுகை நோக்கி. இளமேதி 
- ஈனாக்கன்றாகிய எருமை. செஞ்சாலி - செந்நெல். 
The Asuraa king Raavanan, without fear tried to lift and move aside mount Kailas, the abode of Lord Civan. But Civan slightly pressed the mountain top by His toe and lo! Raavanan's ten heads and strong shoulders got crushed. Raavanan repented and begged for pardon. Civan pardoned him and granted him boons. This Civan is entempled in Thiru-vai-yaaru town. In this town, elegant coconut trees shed ripe fruits on to the ground. Young calves of buffaloes grazing nearby, get frightened of the falling fruits, run into the red paddy fields, smashing the panicles and rest there where lotus flowers also grow as weeds.

மேலோடிவிசும்பணவிவியன்நிலத்தைமிக அகழ்ந்துமிக்குநாடும் 
மாலோடுநான்முகனுமறியாதவகைநின்றான்மன்னுங்கோயில் 
கோலோடக்கோல்வளையார்கூத்தாடக்குவிமுலையார்முகத்தினின்று 
சேலோடச்சிலையாடச்சேயிழையார்நடமாடுந்திருவையாறே. 9

மேல் ஓடி விசும்பு அணவி, வியன்நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும் 
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் - 
கோல் ஓடக், கோல்வளையார் கூத்தாடக், குவிமுலையார் முகத்தில் நின்று 
சேல் ஓடச், சிலை ஆடச், சேயிழையார் நடம்ஆடும் திரு ஐயாறே.

பொருள்: நான்முகனும், திருமாலும் முறையே அன்னமாய் மேலே பறந்து வானத்தில் கலந்தும், 
அகன்ற நிலத்தைப் பன்றியாக ஆழமாக அகழ்ந்தும் மிகுந்த முயற்சியோடு தேடியும் 
அறியமுடியாதபடி ஓங்கி நின்றவர் சிவபெருமான் ஆவான். இப்பெருமான் நிலைபெற்று 
இருக்கும் கோயில் திருவையாறு ஆகும். இத்தலத்தில் தங்கள் கைகளில் அபிநயக்
கோலுடன் கூத்தர்கள் நிற்க, திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாடுகின்றனர். 
திரண்ட தனங்களை உடைய அம்மகளிர்களின் கண்கள் சேல்மீன்களைப் போல் 
அசைந்தாடுகின்றன. அவர்களின் வில் போன்ற புருவங்கள் மேலும் கீழுமாக அசைகின்றன. 
இவ்வாறு கலைகள் மலிந்த ஊர் திருவையாறு ஆகும்.

குறிப்புரை: மேலே பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தேடிய அயனும் மாலும் அறியாத வண்ணம் 
அழலுருவானான் அமருங் கோயில். ஐயாறு என்கின்றது. அணவி - கலந்து. கோல் - கூத்தர் கையிற் 
கொள்ளும் அவிநயக் கோல். கோல் வளை - திரண்ட வளை. 
Brahma took the form of a swan and flew high in the sky to reach Civa's head. Thirumaal took the form of a hog and dug the earth deeply to find out the holy feet of Civan. Both could not succeed, while Civa was standing very tall before them as a column of fire. This Civan is enshrined in the temple at Thiru-vai-yaaru. In this city, young damsels wearing heavy bangles dance to match the gesticulative movements of the rod held by the dance master. The eyes of these richly adorned fair girls have the resemblance of carp fish. While dancing they rotate the apple of their eyes. Their eyebrows resemble like the bow. They move their eyebrows up and down. Thus they make their audience to enjoy their superb dancing. Such famous dancers do live in Thiru-vai-yaaru town in large numbers.

குண்டாடுகுற்றுடுக்கைச்சமணரொடுசாக்கியருங்குணமொன்றில்லா 
மிண்டாடுமிண்டருரைகேளாதேயாளாமின்மேவித்தொண்டீர் 
எண்டோளர்முக்கண்ணரெம்மீசரிறைவரினிதமருங்கோயில் 
செண்டாடுபுனற்பொன்னிச்செழுமணிகள்வந்தலைக்குந்திருவையாறே. 10

குண்டாடு குற்றுஉடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா 
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள்ஆமின், மேவித் தொண்டீர்! 
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில் - 
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

பொருள்: இழி செயல்களில் ஈடுபடுவோராய், சிறிய ஆடையுடன் திரியும் சமணர்களும், 
புத்தர்களும் சொல்கின்ற நன்மைகள் இல்லாத சொற்களையும், வஞ்சனை உடைய 
உரைகளையும் கேளாதீர்கள். தொண்டர்களே! நீவிர் எம்பெருமானுக்கு ஆட்படுவீர்களாக. 
எண் தோள்களையும் முக்கண்களையும் உடைய எம் ஈசனாகிய சிவபெருமான் இனிதாக 
எழுந்தருளி இருக்கும் கோயில் திருவையாறாகும். இத்தலத்தில் பூக்களைச் 
செண்டுகள்போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர்நிறைந்த காவிரி ஆறு, செழுமையான 
மணிகளையும் கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றது.

குறிப்புரை: தொண்டர்களே! புறச் சமயிகளின் மொழிகளைக் கேளாதே ஆட்படுங்கள்; எம் இறைவர் 
அமருங்கோயில் காவிரி மணிகளைக் கொணர்ந்து எற்றும் திருவையாறு என்கின்றது. குற்றுடுக்கை - 
சிற்றாடை. மிண்டு - குறும்பான உரை. மேவி - விரும்பி. செண்டு - பூ உருண்டை. 
Oh! Ye Devotees! Do not listen to the worthless words, and deceitful speech of the Jains and Buddhists who are scantily dressed and who involve themselves in base acts. But reach the Holy Feet of Civan and become His servitors. This Civan is the Lord of the universe. He has eight shoulders and three eyes (The third eye is in His fore head). He is joyously enshrined at the temple in Thiru-vai-yaaru town. The river Cauvery having plenty of water carries bunches of flowers looking like a bouquet and rolls down moving and waving and swinging. The river also carries abundant gems and deposits them on the banks of the river which flows through this city Thiru-vai-yaaru.

அன்னமலிபொழில்புடைசூழையாற்றெம்பெருமானையந்தண்காழி
மன்னியசீர்மறைநாவன்வளர்ஞானசம்பந்தமருவுபாடல 
இன்னிசையாலிவைபத்துமிசையுங்காலீசனடியேத்துவார்கள் 
தன்னிசையோடமருலகில்தவநெறிசென்றெய்துவார்தாழாதன்றே. 11

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி 
மன்னிய சீர் மறைநாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல் 
இன் இசையால் இவையபத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் 
தன் இனிசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

பொருள்: அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் 
பெருமானை, அழகிய குளிர்ந்த சீகாழிப் பதியில் வாழ்பவனும், சிறப்பு மிக்க வேதங்களில் 
சிறந்து விளங்குபவனுமான ஞான சம்பந்தன் போற்றிப் பாடிய இனிமையான இசையால் 
அமைந்துள்ள இந்தப் பத்துப் பாடல்களை ஓதி, ஈசனைப் போற்றிப் பாடுபவர்கள் தவ 
நெறியின் பயனாக அமரர் உலகத்தைத் தாமதியாது புகழுடன் எய்துவர்.

குறிப்புரை: ஐயாற்றெம்பெருமானைச் சம்பந்த சுவாமிகள் பாடல்களால் தோத்திரிப்பவர்கள் புகழோடு 
தேவருலகிற் செல்வார்கள் என்கின்றது. இசையோடு அமர் உலகு - தேவருலகு. தாழாது - தாமதியாது. 
Thiru-vai-yaaru city is surrounded by large and lush gardens full of trees and flower plants. Here a large number of swans joyfully move about and seek their prey. In this city Lord Civan is entempled. Gnaanasambandan hails from Seekaazhi. His fame is growing day-by-day. The scholars who are chanting the very famous Vedas by their tongue do live in this city in large numbers. Gnaanasambandan adored and worshipped the noblest and greatest Lord Civan of Thiru-vai-yaaru and sang this hymn in melodious tone. Those devotees who can sing these ten verses of this hymn in good musical tone and adore Civan, the Lord of the Universe enshrined in Thiru-vai-yaaru will achieve all fame in their life. They will also reach the world of Devas without any delay. The Devas were able to live and enjoy life in Deva Loka after doing virtuous penance for long in their life.

திருச்சிற்றம்பலம்

திருமுறை 131. திரு முதுகுன்றம்

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
131. திரு முதுகுன்றம்

திருத்தல வரவாறு: 
12ஆம் பதிகம் பார்க்க. 
131. THIRU-MUTHU-KUNDRAM

HISTORY OF THE PLACE

See 12th Hymn.

திருச்சிற்றம்பலம் 
131. திரு முதுகுன்றம்

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

மெய்த்தாறுசுவையுமேழிசையுமெண்குணங்களும்விரும்புநால்வே 
தத்தாலுமறிவொண்ணாநடைதெளியப்பளிங்கேபோலரிவைபாகம் 
ஒத்தாறுசமயங்கட்கொருதலைவன்கருதுமூருலவுதெண்ணீர் 
முத்தாறுவெதிருதிரநித்திலம்வாரிக்கொழிக்கும்முதுகுன்றமே. 1

மெய்த்து ஆறுசுவையும், ஏழ்இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- 
தத்தாலும் அறி ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் 
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் - உலவு தெண்நீர் 
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே.

பொருள்: சிவபெருமானை, நமது மெய்யினால் அறியப்படும் அறு சுவைகளாலும், 
ஏழிசைகளாலும், எண் குணங்களினாலும், எல்லோராலும் விரும்பப் பெறும் நான்கு 
வேதங்களாலும் அறிய இயலாது. அவன் தெளிவான மனத்தால் அறியப்படும் பளிங்கு 
போன்றவன். அவன் உமையம்மையை பாகமாக உடையவனும் ஆறு சமயத்தினராலும் 
மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பெறும் ஒரே தலைவன் ஆவான். அப்பெருமான் விரும்பி 
அமர்ந்திருக்கும் ஊர் திருமுதுகுன்றம் ஆகும். இத்தலத்தில் தெளிந்த நீர் நிறைந்த 
மணிமுத்தாறு நதியானது, மலையில் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை 
வாரிக்கொண்டு வந்து கரையில் குவிக்கின்றது.

குறிப்புரை: சுவைகளும், இசையும், எண்குணங்களும், வேதமும் அறியவொண்ணாத தலைவன், 
அகச்சமயமாறுக்கும் ஒரே தலைவன் திருவுளங்கொண்ட ஊர், மணிமுத்தாறு மூங்கில் உதிர்த்த
முத்துக்களைக் கொழிக்கும் திருமுதுகுன்றமே என்கின்றது. மெய்த்து ஆறு சுவை - உடற்கண்ணதாகிய 
உப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு என்னும் ஆறுசுவைகள். சுவை, இசை, வேதம் முதலியன 
மாயா காரியங்கள் ஆதலின் அவற்றால் அறியப் பெறாதவன் ஆயினன் இறைவன். பளிங்கே போல் - 
வெண்பளிங்கு போல், “சுத்த ஸ்படிக சங்காசம்’ என்று இறைவனுக்கு நிறம் கூறுகின்றது சிவாகமம். 
வெதிர் - மூங்கில். 
Lord Civan cannot be comprehended by any of the following four which are felt by parts of human body.

a) The six tastes such as salty, sour, spicy hot, bitter, sweet and astringent

b) The seven notes of the diatonic scale

c) The eight attributes of the soul in bonded stage.

d) Even the most respected Vedas such as Rig, Yajur, Saama and Atharvana cannot comprehend Lord Civan, as they are all of illusionary things.

However, He could be comprehended by those virtuous people who show love to God and fellow beings. He is transparent as crystal quartz. He accommodates His consort Umaa Devi on the left half of His body. He is the only Supreme Being accepted without any controversy by all the six Vedic religious systems (Saivam, Vainavam, Saaktham, Souram, Ganapathyam and Kaumaaram). This Lord Civan's favourite resort is Thiru-muthu-kundram. In this city, the river Mani-muthaaru while flowing through the mountains collects the pearls falling from the bamboo trees and drops them on the banks of the river in Thiru-muthu-kundram city.

வேரிமிகுகுழலியொடுவேடுவனாய்வெங்கானில்விசயன் மேவு 
போரின்மிகுபொறையளந்துபாசுபதம்புரிந்தளித்தபுராணர்கோயில் 
காரின்மலிகடிபொழில்கள்கனிகள்பலமலருதிர்த்துக்கயமுயங்கி 
மூரிவளங்கிளர்தென்றல்திருமுன்றிற்புகுந்துலவும்முதுகுன்றமே. 2

வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு 
போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் - 
காரின் மலி கடிபொழில்கள் கனிகள்பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி, 
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவும் முதுகுன்றமே.

பொருள்: தேன் மணம் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையுடன் வேடன் உருவத்தை 
எடுத்து, அருச்சுனன் தவம் புரியும் கொடிய காட்டிற்குச் சென்று, அவனுடன் போர் செய்து, 
அவனுடைய பொறுமையை அளந்து பின்னர் அவனுக்குப் பாசுபதத்தை விரும்பி அளித்த 
பழையோன் சிவபெருமான் ஆவான். இப்பெருமானின் கோயில் திருமுதுகுன்றம் ஆகும்.
இத்தலத்தில் மழையினால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளும் பலவித 
மலர்களும் உதிர்கின்றன. நீர் நிலைகளைப் பொருந்தி குளிர்ச்சியானதும் 
வலிமையானதுமான தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் இயற்கை 
வளம் உடையது திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: விசயனது பொறுமையை அளந்து பாகபதம் அருளிய பரமன் கோயில், தென்றற்காற்று 
பொழிலில் கனியுதிர்த்து, மலர் சிந்தி, முன்றிலில் உலாவும் முதுகுன்றம் என்கின்றது. வேரி - தேன். மலர் 
உதிர்த்து என்றது தென்றலின் மணமுடைமையையும், கயம் முயங்கி என்பது குளிர்மையையும் உணர்த்தின. 
கயம் - குளம். மூரி - வலிமை. 
Lord Civan took the form of a hunter and accompanied by His consort Umaa Devi went into the dense forest area where Arjuna was doing penance. Civa started purposely an imaginary quarrel with Arjuna and fought against him and defeated him, for testing his endurance. Lord Civan then showed His real form and Arjuna worshipped Him and begged for pardon. The ever first Supreme Being Lord Civan graced him and gave him the mystical divine arrow known as Paasupatham. This Lord Civan is entempled in Thiru-muthu-kundram. In this city the strong and lush southerly wind sweeps through the sweet smelling gardens, enriched by good rain and casts off the flowers and fruits in the garden. Then the wind flows through water expanse areas and thereafter reaches the big and good looking mansions of Thiru- muthu-kundram providing cool and fragrant air to all the residents.

தக்கனதுபெருவேள்விச்சந்திரனிந்திரனெச்சனருக்கனங்கி 
மிக்கவிதாதாவினொடும்விதிவழியேதண்டி த்தவிமலர்கோயில் 
கொக்கினியகொழும்வருக்கைகதலிகமுகுயர்தெங்கின்குவைகொள்சோலை 
முக்கனியின்சாறொழுகிச்சேறுலராநீள்வயல்சூழ்முதுகுன்றமே. 3

தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன். அருக்கன், அங்கி, 
மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில் _ 
கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குவை கொள் சோலை, 
முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.

பொருள்: தக்கன் செய்த பெரிய வேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அக்கினி, 
பிரமன் ஆகியவர்களை முறைப்படி வீரபத்திரனைக் கொண்டு தண்டனை கொடுத்த விமலன் 
சிவபெருமான் ஆவான். இப்பெருமானின் கோயில் திருமுதுகுன்றம் ஆகும். இத்தலத்தில் 
முக்கனிகளான இனிய மாங்கனிகள் வளமான பலாக்கனிகள் வாழைக்களனிகள் 
ஆகியவற்றின் சாறு நீண்ட வயல்களில் ஒழுகி விழுகின்றன. அதனால் வயல்கள் அவைகளின் 
சேறு உலராதவைகளாக இருக்கின்றன. இங்குள்ள சோலைகளில் உள்ள கமுக மரங்களிலும் 
தென்னை மரங்களிலும் குலைகள் நிறைந்துள்ளன. இத்தகைய செழுமை நிறைந்த ஊர் 
திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: சிவத் துரோகியான தக்கன் யாகத்திற்குச் சென்ற குற்றத்திற்காகச் சந்திரன் முதலியோரை 
முறைப்படி தண்டித்த இறைவன் கோயில், முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா வயல்சூழ்ந்த முதுகுன்றம் 
என்கின்றது. எச்சன் - யாகபுருஷன். அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. விதாதா - பிரமன். 
கொக்கு - மாமரம். வருக்கை - பலா. கதலி - வாழை. 
Thakkan (Dakshan) was immaculate offspring of Brahma. He performed great penance and got Umaa Devi to be as his immaculate daughter and gave her to Lord Civa as His consort. She is known as Dakshaayini. Dakshan developed some animosity towards Lord Civan and did not invite him to a very large sacrifice he had planned. Also he ill-treated his own daughter Dakshaayini who came to the sacrificial ceremony though uninvited. She felt very bad and went He created one Aide known as back and reported the matter to Lord Civan. Veerabadran and commanded him to go to the sacrificial hall of Dakhan Veerabadran carried out Lord Civan's orders and punished and to punish him. everybody assembled in the sacrificial hall of Dakshan. This flawless holy God Lord Civan is entempled in Thiru-muthu-kundram. This Thiru-muthu-kundram city is surrounded by large fields where the soil never become dry and is always (loamy) muddy, because of juices dripping from sweet mango fruits, very rich Jack fruits and from well ripped banana fruits - all these three fruits are called as Muk-kani. Also the city has a large number of garden groves having areca nut trees with big bunches of fruits and a large number of lush coconut trees. Such fertile city is Thiru- muthu-kundram.

வெல்மைமிகுபுரவாணர்மிகைசெய்யவிறலழிந்துவிண்ணுளோர்கள் 
செய்மலரோனிந்திரன்மால்சென்றிரப்பத்தேவர்களேதேரதாக 
மைம்மருவுமேருவிலுமாசுணநாணரியெரிகால்வாளியாக 
மும்மதிலும்நொடியளவிற்பொடி செய்தமுதல்வனிடம்முதுகுன்றமே 4

வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண்உளோர்கள், 
செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்பத்; தேவர்களே தேர் அதுஆக, 
மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரிஎரிகால் வாளிஆக, 
மும்மதிலும் நொடிஅளவில் பொடிசெய்த முதல்வன் இடம் - முதுகுன்றமே.

பொருள்: கொடுமை மிகுந்த முப்புரங்களில் வாழும் அசுரர்கள் செய்யும் தீமைகளால், 
தங்களின் வலிமை இழந்தனர் தேவர்கள். பிரமனும், இந்திரனும், திருமாலும் மற்றுமுள்ள 
தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காத்தருள வேண்டினர். இப்பெருமான், 
தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் 
பாம்பை நாணாகவும், திருமால், அக்கினி, வாயு ஆகியோரை அம்பாகவும் கொண்டு 
அசுரர்களின் மும்மதில்களை ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்தார். எல்லோருக்கும் 
தலைவனான இப்பெருமானின் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: முப்புராதிகள் தீங்கு செய்ய, தேவர்கள் வேண்டுகோளின் வண்ணம், அவர்களைத் தேர் 
முதலிய சாதனங்களாகக் கொண்டு எரித்த முதல்வனிடம் முதுகுன்றம் என்கின்றது. விறல் - வலிமை. 
மாசுணம் - வாசுகியென்னும் பாம்பு. அரி, எரி, கால், வாளியாக - திருமாலும், அங்கியும், காற்றுமாகிய 
முத்தேவர்களும் அம்பாக. 
A section of cruel Asuraas built three aerial cities in gold, silver and iron and lived there, wandering in the sky. They were highly tyrannical towards Devas and caused all havoc to them. The Devas lost their valour and suffered a lot. Therefore the Devas, Brahma, Indira and Thirumaal - all approached Lord Civa and entreated Him to save them from the cruelty of Asuraas. Lord Civa agreed and utilising the Devas as His chariot, the Meru mountain as His bow, the famous snake Vaasuki as the bow-string and the three Devas viz., Thirumaal, Fire-god and Wind-god as the arrow, He shot with bow and arrow and in a second crushed the three fortresses into pieces. This Master Lord Civan abides in Thiru-muthu-kundram.

இழைமேவுகலையல்குலேந்திழையாளொருபாலாயொருபாலெள்கா 
துழைமேவுமுரியுடுத்தவொருவனிருப்பிட மென்பரும்பரோங்கு 
கழைமேவுமடமந்திமழைகண்டுமகவினொடும்புகவொண்கல்லின் 
முழைமேவும்மால்யானையிரைதேரும்வளர்சாரல்முதுகுன்றமே. 5

இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால்ஆய், ஒருபால் எள்காது 
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்புஇடம் என்பர்-உம்பர் ஓங்கு 
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின் 
முழை மேவும் மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

பொருள்: மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும் முத்துவடம் முதலியவை 
அணிந்த மேனியை உடையவளான உமையம்மையை ஒருபாகமாகவும், தனது பாகத்தில் 
மானின் தோலை இகழாது உடுத்தியிருக்கும் ஒப்பற்ற சிவபெருமானின் இருப்பிடம் 
திருமுதுகுன்றம் ஆகும். இத்தலத்தில் ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில் மேல் அமர்ந்திருக்கும் 
பெண் குரங்கானது மழை வருகின்றதைக் கண்டு பயந்து தன் குட்டியுடன் மலைக் குகையில் 
ஒதுங்குகின்றது. வளமையான மலைச் சாரலில் பெரிய யானைகள் இரை தேடித் 
திரிகன்றன. இவ்வாறு மழை வளமும், மலை வளமும் உடையது திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: ஒருபால் உமை விளங்க, ஒருபால் மான்தோலை உடுத்திய ஒருவன் இருப்பிடம் மந்தி 
மழையைக் கண்டு குட்டியோடு குகையை உடைய, யானை இரைதேடும் முதுகுன்றம் என்கின்றது. இழை 
- அணி. எள்காது - இகழாது. உழை மேவும் உரி - மானினது தோல். கழை - மூங்கில். மந்தி - பெண் 
குரங்கு. முழை - குகை. 
Goddess Umaa Devi wearing the jewelled girdle around her waist and an attractive pearl chain and other ornaments in her body is accommodated on the left half of Civan's body. Whereas Civa wears without negligence the deer skin on His part of the body. This incomparable Civa's place of abode is Thiru-muthu-kundram. In the central place of this city, the female monkey sitting on the top of tall bamboo trees noticed the incoming rain and got frightened. Immediately, along with her young ones she ran to the safe mountain caves and took rest there. Large sized elephants roam about searching for food on the slopes of the mountain where drizzling rain from clouds gather on hilltops. Such a lush city is Thiru-muthu-kundram.

நகையார்வெண்டலைமாலைமுடிக்கணிந்தநாதனிடநன்முத்தாறு 
வகையாரும்வரைப்பண்டங்கொண்டிரண்டுகரையருகுமறியமோதித் 
தகையாரும்வரம்பிடறிச்சாலிகழுநீர்குவளைசாயப்பாய்ந்து 
முகையார்செந்தாமரைகள்முகமலரவயல்தழுவுழுதுகுன்றமே. 6

நகை ஆர் வெண்தலைமாலைமுடிக்கு அணிந்த நாதன் இடம்-நல் முத்தாறு 
வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி, 
தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து, 
முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.

பொருள்: சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலைமாலை அணிந்த நாதனாகிய 
சிவபெருமானின் இருப்பிடம் திருமுதுகுன்றம் ஆகும். இத்தலத்தில் மணிமுத்தாறு 
நதியானது மலையில் விளையும் பொருட்களை வாரிக் கொண்டும் தனது இருகரைகளையும்
உடைத்துக் கொண்டும் வருகின்றது. அது நெற்கதிர்களும், கழுநீர் மலர்களும், குவளை 
மலர்களும் சாய்ந்து போகுமாறு வேகமாகப் பாய்ந்து தாமரைகள் மலர்ந்த வயலைத் தழுவும். 
இத்தகு நீர்வளமும் நிலவளமும் உடையது திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: தலை மாலை அணிந்த தலைவனிடம், மணிமுத்தாறு மலைப்பண்டங்களைக் கொண்டு 
இருகரையிலும் எடுத்து ௭றிந்து கரையை உடைத்துக் கொண்டு, நெல்லும் கழுநீரும் குவளையும் சாயப் 
பாய்ந்து, தாமரை மலர வயலைத் தழுவும் முதுகுன்றம் என்கின்றது. நகை - பல். வரைப்பண்டம் - 
மலைபடுதிரவியம். 
Civan, wearing on His head, the garland of skulls with seeming smiles is enshrined in Thiru-muthu-kundram. This place is very fertile because of the profuse waters of the river Mani-muthaaru which flows sweepingly carrying may different kinds of mountain products and dashes against the paddy plants, sweet smelling red water lily, the blue Indian water lily and such other things making them to bend and turn down. They proceed and also dashes against the lotus bud and make them to blossom. Such is the fertility of Thiru-muthu-kundram.

Note: Saint Gnaanasambandar's verses are always replete with descriptions of the environment and this verse is a typical example.

அறங்கிளரும்நால்வேதமாலின்கீழிருந்தருளியமரர்வேண்ட 
நிறங்கிளர்செந்தாமரையோன்சிரமைந்தினொன்றறுத்தநிமலர்கோயில் 
திறங்கொள்மணித்தரளங்கள்வரத்திரண்டங்கெழிற்குறவர்சிறுமிமார்கள் 
முறங்களினாற்கொழித்துமணிசெலவிலக்கிமுத்துலைப்பெய்முதுகுன்றமே. 7

அறம் கிளரும் நால்வேதம் ஆலின்கீழ் இருந்துஅருளி, அமரர் வேண்ட, 
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம்ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் - 
திறம் கொள் மணித்தரளங்கள் வரத், திரண்டு அங்கு எழில் குறவர்சிறுமிமார்கள் 
முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய் முதுகுன்றமே.

பொருள்: ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்து, அறநெறிகள் விளங்கும் நான்கு வேதங்களையும் 
சனகாதியருக்கு அருளியவர் சிவபெருமான் ஆவான். தேவர்களின் வேண்டுகோளுக்கு 
இணங்கி சிவந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் 
கொய்த நிமலனான சிவபெருமான் உறையும் கோயில் திருமுதுகுன்றம் ஆகும். இத்தலத்தில் 
குறவர் குடிச் சிறுமியர்கள் ஆற்றில் மாணிக்கங்களும் முத்துக்களும் வருவதைக் 
காணுகின்றனர். அவற்றை முறங்களால் வாரி எடுக்கின்றனர். மணிகளைப் புடைத்து விலக்கி 
முத்துக்களைச் சிறு உலைகளில் கொட்டி சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் ஊராகும்.

குறிப்புரை: ஆலின் கீழிருந்து சனகாதியர்க்கு வேதப் பொருளை அருளிச் செய்து, தேவர் 
வேண்டுகோட்கிரங்கிப் பிரமன் சிரங்கொய்த நிமலர் கோயில், குறச்சிறுமியர் முறத்தால் முத்தைக் 
கொழித்துச் சிற்றுலையிற் கொட்டும் முதுகுன்றம் என்கின்றது. தரளம் - முத்து. மணி - மாணிக்கங்கள். 
The four Vedas express the divine knowledge explicitly. Lord Civan sitting under a banyan tree expounded the inner meaning to the four saints known as Sanakaathiars. Civa the pure Supreme Being chopped off at the Devas request one of the five heads of Brahma who is seated on a red lotus flower. This Lord Civan is entempled in Thiru-muthu-kundram. In this town the young and good looking kurava girls in groups collect the well developed ruby gem stones along with the pearls that are coming down the river. They collect this in winnows and sift them to remove the gems. They then gather the pearls and drop them in the pot kept in the oven and boil them as rice. This is child's play to build toy house out of sand (imaginary) cooking called Cittil enacting a vicarious play playful act of cooking.

கதிரொளியநெடுமுடிபத்துடையகடலிலங்கையர்கோன்கண்ணும்வாயும் 
பிதிரொளியகனல்பிறங்கப்பெருங்கயிலைமலையைநிலைபெயர்த்தஞான்று
மதிலளகைக்கிறைமுரலமலரடி யொன்றூன்றிமறைபாட ஆங்கே 
முதிரொளியசுடர்நெடுவாள்முன்னீந்தான்வாய்ந்தபதிமுதுகுன்றமே. 8

கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும் 
பிதிர் ஒளிய கனல் பிறங்கப், பெருங்கயிலைமலையை நிலைபெயர்த்தஞான்று, 
மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடிஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே 
முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி - முதுகுன்றமே.

பொருள்: கதிரவன் போன்ற ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தனது பத்துத் 
தலைகளில் சூடியிருப்பவன் இராவணன் ஆவான். இவன் தனது கண்களும், வாயும் 
தீக்கனலை கக்குவதுபோல் சினம் கொண்டு பெரிய கயிலை மலை நிலை பெயருமாறு 
பெயர்த்தான். அப்போது மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்குத் தலைவனான குபேரன் 
மகிழுமாறு, சிவபெருமான் தமது மலர்போன்ற மென்மையான திருவடியை ஊன்றி 
இராவணனைத் தண்டித்தார். பின்னர் அவன் மறைபாடித் துதித்தான். அவனுக்கு 
சிவபெருமான் ஒளிமிகுந்த வாளை முன்னின்று தந்தார். இப்பெருமான் எழுந்தருளி 
இருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: இராவணனுக்கு மறக்கருணையும் அறக்கருணையும் காட்டியாட் கொண்டவனிடம் 
முதுகுன்றம் என்கின்றது. அளகைக்கு இறை முரல - குபேரன் தன் பகைவனாகிப் புஷ்பக விமானத்தைக் 
கவர்ந்த இராவணன் ஒழிந்தான் என்று மகிழ்ச்சி ஒலிக்க. 
Raavanan had impressive crowns on his ten heads, which were dazzling like the rays of the sun. Once, while he was traveling by air, he faced the big mount Kailas, abode of Lord Civan on his straight pathway. He could not proceed on his journey further. Therefore, he became furious and started fuming through his mouth and eyes as in bright fire. He got down from his Pushpa Vimaanam (Flower Plane) and started lifting the mount by his hands and shoulders to keep it at a farther place so that he can continue his journey on his straight pathway. Alas! the moment he tried to lift it Lord Civan pressed the top of the mountain by the toe of his flowery feet and punished him by crushing him under the mountain. By witnessing this incident Kuberan the god of wealth who was the king of the city of Alagapuri having arcade walls all around, became joyous. Raavanan realised his fault and begged for pardon by singing Lord Civan's praise, in a melodious tone - Civa was pleased, forgave him and gave him a long dazzling divine mystic sword for his self-defence. This Lord Civan is entempled in Thiru-muthu-kundram.

Note: The king of Alagapuri was enemy of Ravana and so was overjoyed at this sight of Ravana being perished.

பூவார்பொற்றவிசின்மிசையிருந்தவனும்பூந்துழாய்புனைந்தமாலும் 
ஓவாதுகழுகேனமாயுயர்ந்தாழ்ந்துறநாடியுண்மைகாணத் 
தேவாருந்திருவுருவன்சேருமலைசெழுநிலத்தைமூடவந்த 
மூவாதமுழங்கொலிநீர்கீழ்தாழமேலுயர்ந்தமுதுகுன்றமே. 9

பூ ஆர் பொன்-தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், 
ஓவாது கழுகு ஏனம்ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணத் 
தே ஆரும் திருஉருவன் சேரும் மலை - செழு நிலத்தை மூட வந்த 
மூவாத முழங்கு ஒலிநீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

பொருள்: தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டவன் பிரமன் ஆவான். திருமால் 
அழகிய துளசி மாலையை அணிந்தவன். இவர்கள் அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி, 
உயர்ந்த வானத்திலும் தாழ்ந்த பூமியிலும் தேடியும் காண இயலாத தெய்வ ஒளி பொருந்திய 
திருஉருவை உடையவர் சிவபெருமான். இப்பெருமான் எழுந்தருளிய மலை திருமுதுகுன்றம் 
ஆகும். இத்தலமானது, ஊழிக் காலத்தில் உலகத்தை மூடுமாறு ஆரவாரத்துடன் வந்த கடல் 
நீரானது, கீழே தாழ்ந்து போகுமாறும் தான் மேலே உயர்ந்து நின்றதுமான திருத்தலம் ஆகும்.

குறிப்புரை: அயனும், மாலும் ஆழ்ந்தும் உயர்ந்தும் தேடியும் அறிய முடியாத இறைவனிடம், ஊழியில் 
உயர்ந்த முதுகுன்றம் என்கின்றது. தவிசு - ஆசனம், துழாய் - துளசி. ஓவாது - இடைவிடாது. கழுகு - 
பறவையின் பொதுப் பெயராய் அன்னத்தை உணர்த்தியது. ஏனம் - பன்றி. 
Brahma seated on the beautiful throne of Lotus flower. Thirumaal wearing an attractive garland made of sacred basil leaves. Brahma took the form of a swan and flew up and up in the sky for long. Thirumaal went on digging the earth down and down for long. However, they both could not witness the reality for which they tried hard. Lord Civan was then in the form of a divine light which they both could not recognise. This Lord Civan is enshrined at the temple on top of the mountain in Thiru- muthu-kundram. This temple was visibly seen even during the time of the great deluge when everything went under water.

மேனியிற்சீவரத்தாரும்விரிதருதட்டுடையாரும்விரவலாகா 
ஊனிகளாயுள்ளார்சொற்கொள்ளாதுமுள்ளுணர்ந்தங்குய்மின்தொண்டீர் 
ஞானிகளாயுள்ளார்கள்நான்மறையைமுழுதுணர்ந்தைம்புலன்கள்செற்று 
மோனிகளாய்முனிச்செல்வர்தனித்திருந்துதவம்புரியும்முதுகுன்றமே, 10

மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டுஉடையாரும், விரவல் ஆகா 
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின், தொண்டீர்! 
ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று, 
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.

பொருள்: உடம்பில் துவர் ஆடை அணிந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை 
உடையாகக் கொண்ட சமணர்களும் தங்களின் உடலை மட்டுமே பேணுபவர்கள் ஆவர். 
நட்பு கொள்ள இயலாதவரான அவர்களின் சொற்களைக் கேளாதீர்கள். தொண்டர்களே! 
நீங்கள் ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறையை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை 
வென்ற மெளனிகளும், முனிவர்களான செல்வர்களும் தனித்திருந்து தவம் புரியும் 
திருமுதுகுன்றத்தை உள்ளத்தில் உணர்ந்து உய்வீர்களாக!

குறிப்புரை: தொண்டர்களே! புத்தரும் சமணருமாகிய ஊனிகளின் சொற்கொள்ளாது உள்ளுணர்ந்து 
உய்யுங்கள். ஞானிகள் வேதத்தை உணர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி, மோனிகளாய்த் தனித்திருந்து 
தவம் புரியும் இடம் முதுகுன்றம் என்கின்றது. ஞானி - அறிவை வளர்ப்பவன். ஊனி - உடம்பை 
வளர்ப்பவன். 
The Buddhists wearing a red ochre cloth on their body, and the Samanar wearing mats made of palmyrah leaf. These people were unable to comprehend on our Lord Civan. Their only aim is about the growth of their physical body. Ye servitors! Do not listen to the words of these people. But get yourselves redeemed from all your troubles by adoring and listening to saints, Vedic scholars, those who control their five senses, and sages with perfect behaviour observing penance and solely contemplating on the greatness of Thiru-muthu-kundram in their mind.

முழங்கொலிநீர்முத்தாறுவலஞ்செய்யுமுதுகுன்றத்திறையைமூவாப் 
பழங்கிழமைப்பன்னிருபேர்படைத்துடையகழுமலமேபதியாக்கொண்டு 
தழங்கெரிமூன்றோம்புதொழில்தமிழ்ஞானசம்பந்தன்சமைத்தபாடல்
வழங்குமிசைகூடும்வகைபாடுமவர்நீடுலகமாள்வர்தாமே. 11

முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் 
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, 
தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில் - தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் 
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர் தாமே.

பொருள்: ஆரவாரத்துடனும் நீர் நிறைந்தும் வருகின்ற மணிமுத்தாறு வலம் வந்து வணங்கும் 
திருமுதுகுன்றத்தின் இறைவனான சிவபெருமானை, என்றுமே மூப்பு அடையாததும், 
பன்னிரண்டு பெயர்களை உடையதுமான கழுமலப் பதியில் முத்து வேட்கும் தொழிலை 
உடைய தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடினார். இப்பதிகப் பாடல்களை அதற்குப்
பொருந்தும் இசையுடன் இயன்ற அளவு பாடி வழிபட வல்லவர், நீடுலகத்தை ஆட்சி 
செய்வார்.

குறிப்புரை: முதுகுன்ற நாதனைப் பன்னிருநாமம் படைத்த பழம் பதியாகிய காழியை இடமாகக் கொண்ட, 
தழலோம்பு தொழிலை உடைய தமிழ் ஞானசம்பந்தன் அமைத்த பாடல்களை, இசைகூடும் வகை 
பாடுபவர்கள் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர் என்கின்றது. தழங்கு - ஒலிக்கின்ற. எரிமூன்று - 
ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்பன. 
The tumultuous river Mani-muthaaru encircles the temple in Thiru-muthu- kundram from the right hand side. Gnaanasambandan belongs to the city Kazhumalam which carries twelve names such as Seekaazhi, Piramapuram etc. These twelve names are not new ones. They exist from ancient times. In this city, Tamil Gnaanasambandan performed the three sacrificial ritual fires. He sang this hymn on Lord Civan of Thiru- muthu-kundram. Those who can sing these ten verses in the proper musical note and offer worship to Lord Civan of Thiru-muthu-kundram will rule over the world for long.

திருச்சிற்றம்பலம்

131ஆம் பதிகம் முற்றிற்று 

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
132. திருவீழிமிழலை  

திருத்தல வரலாறு

4ஆம் பதிகம் பார்க்கவும். 
132. THIRU-VEEZHI-MIZHALAI

HISTORY OF THE PLACE

See 4th Hymn.

திருச்சிற்றம்பலம்

132. திருவீழிமிழலை

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

ஏரிசையும்வடவாலின்கீழிருந்தங் 
கீரிருவர்க்கிரங்கிநின்று 
நேரியநான்மறைப்பொருளையுரைத்தொளிசேர் 
நெறியளித்தோன்நின்றகோயில் 
பாரிசையும்பண்டிதர்கள்பன்னாளும் 
பயின்றோதுமோசைகேட்டு 
வேரிமலிபொழிற்கிள்ளைவேதங்கள் 
பொருட்சொல்லும்மிழலையாமே. 1

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு  
ஈர்-இருவர்கு இரங்கி நின்று, 
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் 
நெறி அளித்தோன் நின்ற கோயில் - 
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் 
பயின்று ஓதும் ஓசை கேட்டு, 
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் 
பொருள் சொல்லும் மிழலைஆமே.

பொருள்: அழகிய கல்லால மரத்தின்கீழ் இருந்து, சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் 
கருணையோடு, நான்கு வேதங்களின் உண்மைப் பொருளை உரைத்தும், ஒளிசேரும் 
மெய்ந்நெறியையும் அருளியவர் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் எழுந்தருளி 
இருக்கும் கோயில் திருவீழிமிழலை ஆகும். நிலவுலகில் வாழும் வேதப் பண்டிதர்கள் 
பலநாட்களாகத் தொடர்ந்து வேதத்தை ஓதும் ஓசையை நன்கு கேட்டுத், தேன்நிறைந்த 
பொழில்களில் வாழும் கிளிகளும், அவற்றின் பொருளைச் சொல்லுகின்ற சிறப்பினை 
உடையது திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை: வடவால மரத்தின்கீழ் நால்வர்க்கு அறம் உரைத்து ஒளிநெறியளித்த இறைவன் கோயில், 
பண்டிதர்கள் பலகாற் பயிலும் ஓசையைக் கேட்டு, கிளிகள் வேதப் பொருள் சொல்லும் திருவீழிமிழலையாம் 
என்கின்றது. ஏர் - அழகு, எழுச்சியுமாம். ஈரிருவர் - சனகர் முதலிய தேவமுனிவா் நால்வர். ‘நேரிய 
நான்மறைப் பொருள்’ எனவே இங்ஙனம் இறைவன்முன் உணராத பரம்பரையினர் தற்போத முனைப்பால் 
நேர்மையற்ற பொருளும் கொள்வர் என்பது அமைந்து கிடந்தது. ஒளிசேர்நெறி - சிவஞான நெறி. வேரி - 
தேன். 
Lord Civan sitting under a big shady and cool stone banyan tree unravelled all the complex, baffling and intricate elements of the four Vedas to the four saints who approached Civan and solicited Him to clear their doubts. He also explained to them the pathway to obtain divine beatitude. This Civan is entempled in the town Thiru-veezhi-mizhalai. In this city Vedic scholars teach their students all about Vedas and their meaning for long periods. By hearing very often the words of Vedic scholars, parrots living in the nearby lush gardens full of honeycombs, also were able to repeat the explanation of the Vedas. This is the speciality of this town.

பொறியரவமதுசுற்றிப்பொருப்பேமத்தாகப் 
புத்தேளிர்கூடி 
மறிகடலைக்கடைந்திட்டவிடமுண்ட 
கண்டத்தோன்மன்னுங்கோயில் 
செறியிதழ்த்தாமரைத்தவிசில்திகழ்ந்தோங்கு 
மிலைக்குடைக்கீழ்ச்செய்யார்செந்நெல் 
வெறிகதிர்ச்சாமரையிரட்டஇளவன்னம் 
வீற்றிருக்கும்மிழலையாமே. 2

பொறிஅரவம்அதுசுற்றி, பொருப்பே மத்து ஆகப், 
புத்தேளிர் கூடி, 
மறிகடலைக் கடைந்திட்ட விடம் உண்ட 
கண்டத்தோன் மன்னும் கோயில் - 
செறி இதழ்த் தாமரைத்தவிசில் - திகழ்ந்து ஓங்கும் 
இலைக்குடைக்கீழ், செய்ஆர் செந்நெல் 
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம் 
வீற்றிருக்கும் மிழலை ஆமே.

பொருள்: தேவர்கள் அனைவரும் கூடி, மந்தர மலையை மத்தாக நாட்டி, புள்ளிகளை 
உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி, அலைகள் மிகுந்த பாற்கடலைக் 
கடைந்தனர். அப்பொழுது எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவர் சிவபெருமான் 
ஆவார். இப்பெருமான் நிலைபெற்று இருக்கும் கோயில் திருவீழிமிழலை ஆகும். 
இத்தலத்தில் நெருங்கிய இதழ்களை உடைய தாமரை மலரைத் தனது இருப்பிடமாகவும், 
தாமரை இலையைக் குடையாகவும் கொண்டு இள அன்னங்கள், நெற்கதிர்கள் சாமரம் வீச 
வீற்றிருக்கின்றன.

குறிப்புரை: வாசுகியை கடைகயிறாகச் சுற்றி, மந்தரமே மத்தாக, தேவர்கள்கூடி பாற்கடலைக் கடைந்த 
காலத்து எழுந்த விடத்தை உண்ட கண்டன் மன்னுங்கோயில், தாமரை ஆசனத்தில் இலை குடையாக. 
செந்நெற்கற்றை சாமரையாக, இள அன்னம் வீற்றிருக்கும் மிழலையாம் என்கின்றது. பொறியரவம் - படப் 
பொறிகளோடு கூடிய வாசுகி என்னும் பாம்பு. மறி கடல் - அலைகள் மறிகின்ற கடல். செய் - வயல். 
வெறி - மணம். 
All the Devas joined together and brought the Mēru mountain to use it as a churning rod to churn the sea and get nectar out of it. They also took the spotted Vaasuki snake and used it as the rope with which to churn. When they started churning the sea full of rolling waves, a very strong poison came out of the sea, the aroma of which threatened to kill all the Devas and Asuraas and every one else in the universe. Lord Civan entempled in Thiru-veezhi-mizhalai being the repository of mercy, grace and love came forward to save one and all. He without swallowing the poison, put it in His mouth and positioned it firmly in His throat; this resulted in His neck appearing always in dark blue colour similar to that of sapphire gem. Thus He saved the Devas and all others from death. In the lotus ponds of this town, young baby swans sit on the lotus flowers. The lotus leaf grown over the flower appeared as though it gives protection for the swans much like to an umbrella. At the same time the grass of red paddy in the adjoining fields moves up and down in the wind. This appears as though it fans the young swans seated in the lotus flower to get a steady and light current of air.

Note: Saamaram = Lush tail of the yak, used as a fly flapper for deities or as a royal insignia.

எழுந்துலகைநலிந்துழலுமவுணர்கள்தம் 
புரமூன்றுமெழிற்கணாடி 
உழுந்துருளுமளவையினொள்ளெரிகொள 
வெஞ்சிலைவளைத்தோணுறையுங்கோயில் 
கொழுந்தரளம்நகைகாட்டக்கோகநதம் 
முகங்காட்டக்குதித்துநீர்மேல் 
விழுந்தகயல்விழிகாட்டவிற்பவளம் 
வாய்காட்டும்மிழலையாமே. 3

எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள்தம் 
புரம்மூன்றும், எழில் கணாடி 
உழுந்து உருளும் அளவையின், ஒள்எரி கொள, 
வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில் 
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம் 
முகம் காட்டக், குதித்து நீர்மேல் 
விழுந்த கயல் விழிகாட்ட, வில் பவளம் 
வாய் காட்டும் மிழலைஆமே.

பொருள்: வானத்தில் பறந்து, திரிந்து உலக மக்களை நலிவுறச் செய்பவர்கள் முப்புர 
அசுரர்கள் ஆவர். அவர்கள் வாழும் முப்புரங்களை, அழகிய கண்ணாடியில் உளுந்து உருளக் 
கூடிய நொடிப் பொழுதில், ஒளிமிகுந்த தீயினால் எரிந்து போகுமாறு, கொடிய வில்லை 
வளைத்தவர் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் உறைந்திருக்கும் கோயில் 
திருவீழிமிழலை ஆகும். இத்தலத்தில் செழுமையான முத்துக்கள் பெண்களின் 
வெண்மையான பற்களைப் போலவும், தாமரை மலர்கள் அவர்களின் மலர்ச்சியான முகம் 
போலவும், நீர் நிலைகளின் மேல் குதித்து விளையாடும் கயல் மீன்கள் அவர்களின் 
கண்விழிகளைப் போலவும், சிவந்த பவளங்கள் அவர்களின் சிவந்த உதடுகள் போன்றும் 
தோற்றமளிக்கின்றன.

குறிப்புரை: உலகை வருத்தும் அவுணர்தம் புரத்தைக் கண்ணாடியில் உழுந்துருளும் காலத்தில் எரித்த 
இறைவன்கோயில், முத்து, மகளிர் பல்காட்ட, தாமரை, முகங்காட்ட துள்ளுங்கயல், விழிகாட்ட, பவளம் 
வாய்காட்டும் வீழிமிழலையாம் என்கின்றது. நலிந்து - வருத்தி. உழுந்து உருளும் அளவை - ஓர் உளுந்து 
உருளக்கூடிய காலச் சிறுமையில். தரளம் - முத்து. கோகநகம் - தாமரை. வில் - ஒளி. 
The Asuraas had built three very strong fortresses in the sky and roam about all over the sky. Every now and then they attack the Devas and the worldly people also and crush them and make them suffer hardship. Lord Civan bent the strong bright bow and burnt the three fortresses and turned them into ashes just in a very short span of time - just in the time taken for a piece of black gram to roll down upon a good looking mirror. This Lord Civan abides in the temple in Thiru-veezhi-mizhalai city. Young maidens living in this city are so very beautiful that their body parts appear as under: 
a) Their teeth - appear like well grown pearls.
b) Their face - appears as lotus flowers.
c) Their eyes - appear as carp fish jumping and playing in the watershed.
d) Their mouth - appears as bright red coral gems.
Such is the greatness of this city.

உரைசேருமெண்பத்துநான்குநூறாயிரமாம் 
யோனிபேதம் 
நிரைசேரப்படைத்தவற்றினுயிர்க்குயிரா 
யங்கங்கேநின்றான் கோயில் 
வரைசேரும்முகில்முழவமயில்கள்பல 
நடமாடவண்டுபாட 
விரைசேரபொன்னிதழிதரமென்காந்தள் 
கையேற்கும்மிழலையாமே. 4

உரை சேரும் எண்பத்துநான்குநூறுஆயிரம் ஆம் 
யோனி பேதம் : 
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர்ஆய், 
அங்குஅங்கே நின்றான் கோயில் - 
வரை சேரும் முகில் முழவ, மயில்கள்பல 
நடம்ஆட, வண்டு பாட, 
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் 
கை ஏற்கும் மிழலைஆமே.

பொருள்: நூல்களில் உரைக்கப்படுகின்ற எண்பத்தி நான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளை 
நேர்த்தியாகப் படைத்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் உயிருக்கு உயிராய் உள்நிற்கின்றவர் 
சிவபெருமான் ஆவார். இப்பெருமான் உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். 
இத்தலத்தில், மலைகளில் தங்கியிருக்கும் மேகங்கள் மேலே எழும்பி, முழவின் ஒலிபோல் 
அதிர்கின்றன. அதனைக் கேட்கும் ஆண் மயில்கள் மழை வருவதை எதிர்பார்த்து நடனம் 
ஆடுகின்றன. வண்டுகள் இசை பாடுகின்றன. மணம் நிறைந்த கொன்றை மலர் இதழ்களாகிய 
பொன்னைத் தர, காந்தள் மலர்கள் கையேந்தி வாங்குவது போன்று தோன்றும் வளம் 
நிறைந்த தலம் திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை: எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்களையும் படைத்து, அவற்றின் உயிர்க்குயிராக 
நிற்கும் இறைவன் கோயில் முகிலாகிய முழவம் ஒலிக்க, மயில் நடமாட, வண்டு பாட, கொன்றை மரம் 
பொற்பரிசில் வழங்க, காந்தள் கையேற்று வாங்கும் மிழலையாம் என்கின்றது. உரைசேரும் - நூல்களில் 
உரைக்கப் பெறுகின்ற. முகில் - மேகம். விரை - மணம். இதழி கொன்றை. 
The scriptures declare that there exists in the universe eighty four lakhs different forms of life. Lord Civan creates all these forms of life in an orderly manner. Also He becomes a part of each and every life. He is also immanent everywhere. This Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. In the mountain tops of the city clouds gather, and create thunderous noise, similar to the large and loud sounding drums. By hearing this noise, the male peacocks start dancing, the beetles start humming; the cassia tree showers its fragrant golden flowers; the malabar glory lily flowers open their petals and appear as though they open their hands to receive the golden cassia flowers.

காணுமாறரியபெருமானாகிக் 
காலமாய்க்குணங்கள்மூன்றாய்ப் 
பேணுமூன்றுருவாகிப்பேருலகம் 
படைத்தளிக்கும்பெருமான்கோயில் 
தாணுவாய்நின்றபரதத்துவனை 
யுத்தமனையிறைஞ்சீரெ ன்று 
வேணுவார்கொடிவிண்ணோர்தமைவிளிப் 
போலோங்குமிழலையாமே. 5

காணும்ஆறு அரிய பெருமான் ஆகி, 
காலம்ஆய், குணங்கள்மூன்றுஆய், 
பேணு மூன்று உருஆகி, பேர்உலகம் 
படைத்து அளிக்கும் பெருமான் கோயில் - 
“தாணுஆய் நின்ற பரதத்துவனை, 
உத்தமனை, இறைஞ்சீர்” என்று 
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப 
போல் ஓங்கு மிழலைஆமே.

பொருள்: காண்பதற்கு அரிய கடவுளாக, மூன்று காலங்களாகவும், மூன்று குணங்களாகவும் 
ஆகி, உலகைப் படைத்தும், காத்தும், அழித்தும், மூன்று உருவும் உடையாராகி, 
அண்டசராசரங்கள் யாவற்றையும் படைத்து அளிப்பவர் சிவபெருமான் ஆவார். 
இப்பெருமானின் கோயில் திருவீழிமிழலை ஆகும். என்றும் நிலைத்திருக்கும் 
பொருளாகவும், பரதத்துவன் ஆகவும், உத்தமன் ஆகவும் இருப்பவன் சிவபெருமான். 
இத்தகையவனை நீங்கள் வணங்குங்கள் என்று உயர்ந்து ஓங்கிய மூங்கில் கொடிகள் 
தேவர்களை அழைப்பது போல் அசையும் காட்சிகளை உடையது திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை: காணுதற்கரிய கடவுளாகி, காலம் குணம் இவையுமாகி, எல்லாராலும் போற்றப் பெறும் பிரம 
விஷ்ணு ருத்ரனாகி, பெரிய உலகத்தைப் படைத்தும் அளிக்கும் பெருமான் கோயில், இறைவனை 
வணங்குங்கள் என்று கொடிகள் தேவரை அழைக்கும் வீழிமிழலை என்கின்றது. காலமாய் - இறப்பு, 
நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலமாய்: என்றது எல்லாவற்றையும் அடக்கித் தம் எல்லைக்குள் 
இன்பத்துன்பங்களை எய்தி நடக்கச் செய்தலின், குணங்கள் மூன்றாய் - சாத்வீகம் முதலிய குணங்கள் 
மூன்றாய், பேணும் - போற்றப் பெறுகின்ற, படைத்து அளித்த எனவே அழித்தலாகிய இவர் தொழில் 
சொல்லாமலே பெறப்பட்டது. தாணு - நிலைத்த பொருள். தூண் வடிவு என்றுமாம். வேணுவார்கொடி - 
மூங்கிற்றண்டில் கோக்கப்பெற்ற நீளமான கொடிகள். விண்ணோர்கள் போகத்தால் மோகித்து 
மறந்திருத்தலின் கொடிகள் நினைவூட்டி அழைக்க வேண்டியதாயிற்று. 
It is very difficult to see Lord Civan with our eyes; or comprehend Him by any body. He is the three parts of period - past, present and future; He is the three dominant qualities saatvikam etc. He is all the three - Ari - Ayan - Aran - i.e., Brahma, Vishnu and Guna Rudran praised and adored by one and all. He does the three important functions creation, sustenance and dissolution in this great universe. This Lord Civan is entempled in Thiru-veezhi- mizhalai. In this town the flags fixed on long bamboo poles oscillate in the wind. They do this as though they invite the Devas to come down to earth and offer worship to the Supreme and permanently lasting Being and who is the preserver of everyone.

அகனமர்ந்தஅன்பினராயறுபகைசெற் 
றைம்புலனுமடக்கிஞானம் 
புகலுடையோர்தம்முள்ளப்புண்டரிகத்துள் 
ளிருக்கும்புராணர்கோயில் 
தகவுடைநீர்மணித்தலத்துச்சங்குளவர்க்கந் 
திகழச்சலசத்தியுள் 
மிகவுடையபுன்குமலர்ப்பொரியட்ட 
மணஞ்செய்யும்மிழலையாமே. 6

அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, 
ஐம்புலனும் அடக்கி, ஞானம் 
புகல் உடையோர்தம் உள்ளப்புண்டரிகத்துள் 
இருக்கும் புராணர் கோயில் - 
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் 
திகழ, சலசத்தியுள், 
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, 
மணம் செய்யும் மிழலைஆமே.

பொருள்: உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராகவும், ஆறுவித அகப்பகைகளை நீக்க, 
ஐம்புலன்களை அடக்க, சிவஞானத்தில் திளைத்திருக்கும் துறவிகளின் இதயத் தாமரையில் 
எழுந்தருளி விளங்குபவர் பழையோனான சிவபெருமான் ஆவான். அவன் உறைந்திருக்கும்
கோயில் திருவீழிமிழலை ஆகும். இத்தலத்தில் உள்ள தூய நீர் நிலைகளில் மணிகளும், 
சங்குகளும் விதவிதமான இனங்களும் சுற்றத்தார்போல சூழ்ந்திருக்க நீர்நிலைகளில் சிவந்த 
தாமரை மலர்கள் அக்கினி போன்று தோன்ற அடர்த்தியாக வளர்ந்த புங்க மரங்கள் 
மலர்களாகிய பொரியை அத்தீயில் தூவுகின்றன. இவ்வாறு திருமண நிகழ்வினை 
நினைவுறுத்தும் இயற்கை வளம் நிரம்பியது திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை: உள்ளம்புடையாராக அரிஷட்வர்க்கங்களை அழித்து, ஐம்புலன்களையும் அடக்கிய சிவஞானச் 
சேர்க்கையுடையோர்களின் இதயத் தாமரையில் எழுந்தருளி இருக்கும் இறைவன் கோயில் அழகிய 
இடத்தில் சங்குகளாகிற சுற்றம் விளங்க தாமரையாகிய தீயில் புன்கம் பொரிதூவி மணங்களைச் செய்யும் 
மிழலை என்கின்றது. உள்ளப் புண்டரிகம் - இதய தாமரை. தகவு - தகுதி. நீர் மணித்தலத்து - 
நீரோட்டத்தோடு கூடிய இரத்தினங்கள் அழுத்தப்பெற்ற இடத்து. சங்கு உளவர்க்கம் திகழ - 
சங்குகளாகிய உள்ள சுற்றம் விளங்க. சலசத்தீயில் - தாமரைப்பூவாகிய தீயில். மலர்ந்த தாமரையைத் 
தீக்கு ஒப்பிடுவது மரபு. 
The ascetics are those who renounced all the worldly pleasure and who have divine love in their minds; who have subjugated the five senses and all desires; who have controlled the five sensory organs and those who contemplate on the knowledge of god. Civan the most ancient, attaches Himself with the lotus heart of these ascetics. This Civan is entempled in Thiru-veezhi-mizhalai. In the pure watersheds of this town gems and chank shells flourish. In these watersheds lotus flowers blossom in good number and they look like fire. Along the banks of these watersheds old tall Alexandria laurel trees have grown. These trees shed their white flowers on the lotus flowers. These white flowers look like parched rice. Lotus flower looks like fire. Therefore rice falling over fire reminds one about the marriage ceremony where parched rice grains are dropped in the sacrificial fire to the chanting of mantras.

ஆறாடுசேடைமுடியனனலாடு 
மலர்க்கையனிமயப்பாவை 
கூறாடுதிருவுருவன்கூத்தாடுங் 
குணமுடையோன்குளிருங்கோயில் 
சேறாடுசெங்கமழுநீர்த்தாதாடி 
மதுவுண்டுசிவந்தவண்டு 
வேறாயவுருவாகிச்செவ்வழிநற்பண் 
பாடும்மிழலையாமே. 7

ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு 
மலர்க்கையன், இமயப்பாவை 
கூறு ஆடு திருஉருவன், கூத்துஆடும் 
குணம் உடையோன் குளிரும் கோயில் - 
சேறு ஆடு செங்கழுநீர்த் தாதுஆடி, 
மது உண்டு, சிவந்த வண்டு 
வேறு ஆய உருஆகி, செவ்வழிநல்பண் 
பாடும் மிழலைஆமே.

பொருள்: கங்கையை அணிந்த சடைமுடியை உடையவன். மலர் போன்ற கரத்தில் அனலை 
ஏந்தியிருப்பவன். இமவான் மகளாகிய பார்வதி தேவியை ஒரு கூறாக உடையவன். 
கூத்தாடும் குணம் உடையவன்! இத்தகைய பெருமைகளை உடைய சிவபெருமான் மனம் 
குளிர்ந்து எழுந்தருளி இருக்கும் கோவில் திருவீழிமிழலை ஆகும். இத்தலத்தில் சேற்றில் 
முளைத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள மகரந்தப் பொடியில் விளையாடி, சிவந்த நிறத்தை 
அடைகின்றன வண்டுகள். தேனைக் குடித்த இந்த வண்டுகள் செவ்வழிப் பண் இசையைப்
பாடிக் களிக்கின்ற தலம் திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை: ஆறுசேர் முடியன், அனல்சேர் கையன், உமையொரு கூறன், கூத்தன்கோயில், செங்கழுநீர்ப் 
பூவின் மகரந்தத்தில் ஆடி, தேன்குடித்துச் சிவந்த வண்டு வேற்றுவடிவு கொண்டு செவ்வழிப் பண்ணைப் 
பாடும் மிழலையாம் என்கின்றது. தாது - மகரந்தம். 
Lord Civan entertains the river Ganges in His matted hair. He holds fire in His soft flowery hand. He concorporates His consort Paarvathi Devi daughter of Himaalayan King on His body which shines bright giving a splendorous appearance. He is in the habit of dancing. This Civan is wholeheartedly entempled in Thiru-veezhi- mizhalai. In the watershed areas of this town, the sweet smelling red water lily flourishes in large numbers. Black beetles fly to these flowers and suck the honey and get smeared by the red pollen grains all over their body and look like red coloured beetles. Their humming noise resembles singing in the primary melody type of the Mullai class.

கருப்பமிகுமுடலடர்த்துக்காலூன்றிக்கை 
மறித்துக்கயிலையென்னும் 
பொருப்பெடுக்கலுறுமரக்கன்பொன்முடி தோள் 
நெரித்தவிரற்புனிதர்கோயில் 
தருப்பமிகுசலந்தரன்றனுடல்தடிந்த 
சக்கரத்தைவேண்டியீண்டு 
விருப்பொடுமால்வழிபாடுசெய்யவிழி 
விமானஞ்சேர்மிழலையாமே. 8

கருப்பம் மிகும் உடல் அடர்த்துக், கால் ஊன்றிக், 
கை மறித்துக், கயிலை என்னும் 
பொருப்பு எடுக்கல்உறும் அரக்கன் பொன்முடி தோள் 
நெரித்த விரல் புனிதர் கோயில் - 
தருப்பம் மிகு சலந்தரன்தன் உடல் தடிந்த 
சக்கரத்தை வேண்டி, ஈண்டு 
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி 
விமானம் சேர் மிழலைஆமே.

பொருள்: கர்வம் மிகுந்த உடலை வருத்திக், காலை ஊன்றி, கைகளை வளைத்துக், கயிலை 
என்னும் மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கன் இராவணன் ஆவான். இந்த 
அரக்கனின் பொற்கிரீடம் அணிந்த தலைகளையும், தோள்களையும் நெரித்த கால்விரலை 
உடைய புனிதரான சிவபெருமானின் கோயில் திருவீழிமிழலை ஆகும். இத்தலம், செருக்கு 
மிக்க சலந்தரன் என்னும் அசுரனின் உடலைப் பிளந்த, “சக்கரம்” என்ற ஆயுதத்தைப் பெறத் 
திருமால் பெருவிருப்பத்துடன் வழிபட்ட தலமாகும். அதற்காகவே, இத்தலத்தில் விண்ணில் 
இருந்து இறக்கப்பட்ட விமானம் உள்ளது.

குறிப்புரை: கயிலையை எடுக்கலுற்ற இராவணனை நெரித்த விரலை உடைய பெருமான் கோயில், 
சலந்தரன் உடலை அழித்த சக்கரத்தைத் திருமால் வழிபட்டுப் பெற்ற திருவீழிமிழலை என்கின்றது. 
கருப்பமிகும் உடல் - கருவம் மிகுந்த உடல் என்றது அப்பிராயகிருதமான கயிலையைத் தீண்டும் 
உரிமையுங்கூட, பிராகிருதமேனி தாங்கிய இவற்கில்லை என்பது, உணர்த்தியவாறு. தருப்பம் - செருக்கு. 
மால் வழிபாடு செய்த வரலாறு இத்தலத்து நிகழ்ச்சி. இழிவிமானம் - விண்ணிழி விமானம். இது 
இத்தலத்து விமானம். 
Full of pride, Raavanan the Asura King exerted his body and went very near mount Kailas, the abode of Civan. He placed his feet firmed on the ground and by twisting his hands tried to lift mount Kailas to keep it aside. The pure and holy Civan pressed down on the mountain top by his toe and crushed his golden crowned heads and shoulders. Such Supreme Civan is entempled in Thiru-veezhi-mizhalai. Thirumaal desired to acquire the divine wheel weapon known as Chakraayutham from Lord Civan. Once Lord Civan split the body of Chalandaran an Asuraa and killed him by this weapon, and safely kept the weapon with him. Therefore, Thirumaal came to this town Thiru-veezhi-mizhalai and with extreme liking worshipped Lord Civan and requested him to give the wheel weapon (He got it finally). Also the turret of this temple is the one which came from Deva Loka through the sky and installed by Maha Vishnu.

Note: Turret. This is the dome like structure built over the sanctum sanctorum of temples. Tower is different from turret. Towers are built over the compound walls of the temples.

செந்தளிர்மாமலரோனுந்திருமாலு 
மேனமோடன்னமாகி 
அந்தமடிகாணாதேயவரேத்த 
வெளிப்பட்டோனமருங்கோயில் 
புந்தியினால்மறைவழியேபுற்பரப்பி 
நெய்சமிதைகையிற்கொண்டு 
வெந்தழிலின்வேட்டுலகின்மிகஅளிப்போர் 
சேருமூர்மிழலையாமே. 9

செந்தளிர் மா மலரோனும் திருமாலும், 
ஏனமோடு அன்னம் ஆகி, 
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, 
வெளிப்பட்டோன் அமரும் கோயில் - 
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, 
நெய் சமிதை கையில் கொண்டு, 
வெந்தழலின் வேட்டு, உலகின் மிக அளிப்போர் 
சேரும் ஊர் மிழலைஆமே.

பொருள்: சிவந்த இதழ்களை உடைய பெரிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் 
திருமாலும் முறையே அன்னமும் பன்றியாகவும் மாறி சிவபெருமானின் முடியையும் 
அடியையும் தேடினர். தேடியும், காணமுடியாமல் பணிந்து வழிபட்டனர். அவர்களுக்கு 
காட்சி அளித்த பெருமான் அமர்ந்திருக்கும் கோயில் திருவீழிமிழலை ஆகும். தாங்கள் 
பெற்ற அறிவில் வேதவிதுப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி, நெய், சமித்து ஆகியவற்றைக் 
கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்பவர்கள் அந்தணர்கள், உலகைக் 
காப்பவர்களாகிய அந்த அந்தணர்கள் சேரும் ஊர் திருவீழிமிழலை ஆகும்

குறிப்புரை: அயனும் மாலும், அன்னமும் ஏனமுமாகித் தேடியறிய முடியாது வணங்க வெளிப்பட்ட 
இறைவன்கோயில், வேதவிதிப்படி தருப்பையைப் பரப்பி, நெய் சமித்து இவைகளைக் கொண்டு வேள்வி 
செய்து, உலகைக் காக்கும் அந்தணர் வாழும் மிழலையாம் என்கின்றது. அந்தம் - முடி. புத்தியினர் - 
அறிவால். வேட்டு - வேள்வி செய்து. 
Brahma seated in the big red petalled lotus flower and Thirumaal took the form of a swan and hog respectively and started searching for the holy head and feet of Lord Civan. They failed in their attempt. Then they shed their arrogance and prayed to Lord Civan to forgive them. Thereafter Civa gave darshan to both of them. This Civan is entempled in Thiru-veezhi-mizhalai. In this city, Vedic scholars who always wish to help the world, do live in large numbers. They perform the sacrificial fire ritual as per the rules and regulations of the Vedas. They spread the sacred grass called Kaus, carry in their hand ghee and sacrificial fuel start the fire, and perform the five kinds of sacrificial fire which a households is required to perform daily.

எண்ணிறந்தஅமணர்களுமிழிதொழில்சேர் 
சாக்கியருமென்றுந்தன்னை 
நண்ணரியவகைமபயக்கித்தன்னடியார்க் 
கருள்புரியும்நாதன்கோயில் 
பண்ணமரும்மென்மொழியார்பாலகரைப் 
பாராட்டுமோசைகேட்டு 
விண்ணவர்கள்வியப்பெய்திவிமானத்தோடும் 
மிழியும்மிழலையாமே. 10

எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் 
சாக்கியரும், என்றும் தன்னை 
நண்ண (அ)ரிய வகை மயக்கித், தன் அடியார்க்கு 
அருள்புரியும் நாதன் கோயில் - 
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் 
பாராட்டும் ஓசை கேட்டு, 
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமான த்தோடும்(ம்) 
இழியும் மிழலை ஆமே.

பொருள்: எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் செய்யும் சாக்கியரும், எக்காலத்திலும் 
தம்மை நெருங்க இயலாதபடி, அவர்களின் அறிவை மயக்கி, தமது அடியார்களுக்கு அருள் 
செய்யும், பெருமான் எழுந்தருளி இருக்கும் கோயில் திருவீழிமிழலை ஆகும். 
இத்தலத்தில பண் இசைபோன்று மென்மையான மொழிபேசும் பாவையர்கள் தாங்கள்
பெற்ற புதல்வர்களை தாலாட்டுப் பாடிப் பாராட்டுகின்றனர். இந்தத் தாலாட்டு இசையைத் 
தேவர்கள் கேட்டு வியந்து, தங்கள் விமானங்களுடன் இங்கு வந்து இறங்குகின்றனர்.

குறிப்புரை: புத்தரும் சமணரும் தம்மை அறியா வகையாக அவர்களை மயக்கித் தன் 
அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில், பண் மொழிப் பாவைமார்கள் பாலகரைப் பாராட்டும் 
ஒசை கேட்டு விண்ணவர்கள் விமானத்தோடு வந்திறங்கும் வீழிமிழலை என்கின்றது. 
Numerous Samanars and Buddhists are engaged in mean jobs. Lord Civan denied them knowledge and made Himself ever beyond their reach. However, He graced His sincere devotees. This Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. The maidens of this town while lulling their babies to sleep in cradles, used to go on singing many melodious songs in a harmonious musical mode for their children. The Devas heard these sweet music and were amazed curious about wherefrom they were hearing such good music. They realised that these songs are emanating from Thiru- veezhi-mizhalai. Immediately they left their homes and came down to earth in their aerial car and landed in Thiru-veezhi-mizhalai and went on enjoying the music of the maidens of this town. Such an attractive and famous town is Thiru-veezhi-mizhalai.

மின்னியலும்மணிமாடமிடைவீழி 
மிழலையான்விரையார்பாதம் 
சென்னிமிசைக்கொண்டொமழுகுஞ்சிரபுரக்கோன் 
செழுமறைகள்பயிலுநாவன் 
பன்னியசீர்மிகுஞானசம்பந்தன் 
பரிந்துரைத்தபத்துமேத்தி 
இன்னிசையாற்பாடவல்லாரிருநிலத்தி 
லீசனெனுமியல்பினோரே. 11

மின்இயலும் மணிமாடம் மிடை வீழி- 
மிழலையான் விரை ஆர் பாதம் 
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்- 
செழுமறைகள் பயிலும் நாவன் 
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்- 
பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி, 
இன்இசையால் பாடவல்லார், இருநிலத்தில் 
ஈசன் எனும் இயல்பினோரே.

பொருள்: மின்னல் போன்ற ஒளியுடைய மணிகள் இசைத்த மாடவீடுகள் நிறைந்த 
திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர் சிவபெருமான் ஆவார். இப்பெருமானின் மணம்
கமழுகின்ற திருவடிகளைச் சென்னியில் கொண்டு ஒழுகுகின்ற இயல்புடையவர் சிரபுரத்தின் 
தலைவராகிய ஞானசம்பந்தன் ஆவார். இவர் மறைகள் பயின்ற நாவினையும், பலர் 
போற்றும் சிறப்புகளையும் உடையவர். இத்தகு ஞானசம்பந்தன் இறைவனை அன்புடன் 
போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், இனிய இசையுடன் பாட வல்லவர்கள், 
பெரிதான இந்நில உலகத்தில் ஈசன் என்று போற்றப்பபடும் இயல்புடையவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை: வீழிநாதன் திருவடியைச் சிரமேற்கொண்டு ஒழுகும் திருஞானசம்பந்தர் பரிந்துரைத்த பாடல் 
வல்லார் பெரியபூமியில் ஈசன் எனும் இயல்புடையோர் ஆவர் என்கின்றது. பரிந்து - அன்புகொண்டு. 
கோ (ஈசன்). 
Gnaanasambandan is ingenious lord of Chirapuram habitually holds at heart, the Holy Feet of the Lord of Thiru-veezhi-mizhalai (This means that he will be adoring the Lord always in his mind). He has mastered all the rich four Vedas. He was praised by one and all and became very famous. This Gnaanasambandan sang this hymn with all sincerity on the Lord of Thiru-veezhi-mizhalai. In this town closely well built mansions are many. They will be dazzling like lightning by virtue of the various gems set in their walls. Those who cherish and glorify this hymn and chant these ten verses in sweet music, will become great so as to be praised by one and all as the Lord of this earth.

திருச்சிற்றம்பலம்

132ஆம் பதிகம் முற்றிற்று -

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
133. திருக்கச்சியேகம்பம்

திருத்தல வரலாறு:

திருக்கச்சியேகம்பம் தொண்டை நாட்டுத் தலங்களில் முதலாவதாக விளங்கும் பெருநகர். 
சென்னை செங்கல்பட்டு முதலிய பல நகரங்களில் இருந்தும் பேருந்துகளில் வரலாம்.
கயிலாயத்தினின்றும் இறைவனது ஆணையால் இங்கு எழுந்தருளிய இறைவி, இறைவனை 
மீண்டும் அடைதற்பொருட்டுத் தவம் செய்தனர். எண்ணான்கு அறங்களையும் வழுவாது
இயற்றினர். கம்பையாற்றங்கரையில் ஒற்றை மாமரத்தடியில், மணலால் சிவலிங்கம் செய்து 
வழிபட்டனர். இறைவன் ஆணையால் கம்பையாற்றில் திடீரென பெருவெள்ளம் பெருக்கெடுத்து 
வந்தது. அம்மையைச் சூழ்ந்தது. இறைவி தான் வழிபட்டு வந்த மணலால் ஆன சிவலிங்கத்தைத் 
தழுவுவதைத் தவிர வேறு தப்பிக்க வழி இல்லாது போயிற்று. அவ்வாறு தழுவிய காரணத்தால் 
இறைவனது திருமேனியில் வளைத்தமும்பும், முலைத்தழும்பும் ஏற்பட்டன என்பது புராண வரலாறு. 
பஞ்சபூத தலங்களுள் ஒன்றாகிய மண் - பூமி (பிருதிவித்தலங்களுள் ஒன்று). முத்தி தரும் நகர் 
ஏழனுள் ‘முக்கியமாம் முதற்காஞ்சி’ என்றதற்கேற்ப முத்தி தரும் நகருள் முதன்மை பெற்றது. 
இத்தலத்து அமைந்துள்ள சிவ, விஷ்ணு, தேவி, கணபதி, முருகன் ஆலயங்கள் அளவிடற்கரிய 
புகழுடையன. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆட்சி செய்த தலம். சுந்தரர் இடக்கண் பெற்ற 
தலம். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய இவர்கள் முத்தி பெற்ற தலம். 
இறைவன் ஏகாம்பர நாதர். பெரிய கம்பர். இறைவி காமாட்சியம்மை, ஏலவார் குழலி, விநாயகர் 
விகடசக்கர விநாயகர். முருகன் மாவடிக் கந்தர். தலவிருட்சம் மாமரம். தீர்த்தம் சிவகங்கை, 
கம்பாநதி, ஸர்வதீர்த்தம். இடம் காஞ்சிபுரம் இரயில் நிலையித்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தூரத்தில் 
உள்ளது.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் பலவாயினும் ஏகாம்பர நாதர் கோயிலைப் பற்றியன 
சிலவே. இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளவர்கள் முறையே திரிபுவனச் சக்கரவர்த்தி 
இராஜராஜன், கோப்பரகேசரி இராஜராஜன், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கன், 
இராஜகேசரி குலோத்துங்கன், கோராஜகேசரி குலோத்துங்கன், பரகேசரி உத்தம சோழன் ஆகிய 
இவர்களும், புவனேகவீரனும், விஜயநகர சதாசிவதேவன், வீரமல்லிகார்ச்சுனன், புக்கராயன் ஆகிய 
இவர்களும் காகதீய அரசன் கணபதியும், சண்ட கோபாலனுமாகிய இவர்களும் ஆவார்கள். 
முதலாம் இராஜராஜதேவன் 27ஆம் ஆண்டில் ஒரு மாறன் தேவடிகளால் 5 கழஞ்சு பொன் 
படையலுக்காகக் கோயில் பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டது. புவநேகவீரன் என்ற சமரலோகன். 
சகம் 1391இல் பாண்டிய நாட்டில் உள்ள இரண்டு கிராமங்களை ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் 
காமாட்சியம்மன் கோயிலுக்கும் கொடுத்தமை குறிக்கப் பட்டுள்ளது. காகதீய அரசன் கணபதி 
காலத்து (சகம் 1172) மந்திரியாக ஆண்ட சாமந்தக போஜனால் ஒரு கிராமம் கொடுக்கப்பட்டது. 
133. THIRU-K-KACHCHI-ĒKAMBAM

HISTORY OF THE PLACE

           This sacred place is the foremost among the temples of Thondai Naadu. It is a big town and can be reached by bus from Chennai, Chengalpattu etc. The temple is located 2 km west of the railway station.

God is here known by the names of Ekaambaranaathar and Periya Kambar. The Goddes has the names of Kaamakshi Ammai and Elavaarkuzhali. Vinaayakar is Vikatachakkara Vinaayakar. Murugan is known as Maavadik Kandhar. The sacred tree is the mango tree. Sacred fords are Sivagangai, Kampaanadhi and Sarva Theerththam.

           According to the legends of the Puraana, the Goddess came down from Kayilaayam to this place to get rid of a curse by Lord and performed 'thavam' for attaining the Lord. She followed the 84 virtues without fail. Making a Sivalingam out of sand in the river bed of Kambai. She worshipped it. God's grace caused a flood to arise and she held fast to the Lord. Thus, the Lord bears on his holy body the mark of the Goddesses breasts and bangles.

The word Kambam means trembling and Ekaam(ba)ram means a single mango tree. Of the five sacred temples representing the five elements, this one stands for the Earth. This town is celebrated as the foremost of the seven towns which are capable of granting salvation. The number of temples dedicated to Civa, Vishnu, Dhevi, Ganapathi and Murugan are immensely famous. The Saint Iyadikal Kaadvar Kone ruled from here. Saint Sundarar got back vision to his left eye here. Saints Thiru-k- kuriputh Thondanaayanar and Saakkiya Naayanaar attained salvation here.

           Although there are many inscriptions about this town, only a few pertain to this temple. Many Chola monarchs, from Raajaraajan I to Kuloththungan III; some of the Viyayanagaram and Kaakatheeya Kings are referred to in the inscriptions. Gifts of villages, land and gold for the temple are noted.

திருச்சிற்றம்பலம்

133. திருக் கச்சி யேகம்பம்

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

வெந்தவெண்பொடிப்பூ சுமார்பின்விரிநூலொருபால்பொருந்தக் 
கந்தமல்குகுழலியோடுங்கடி பொழிற்கச்சிதன்னுள் 
அந்தமில்குணத்தாரவர்போற்ற அணங்கினொடாடல்புரி 
எந்தைமேவியஏகம்பந்தொழுதேத்தஇடர்கெடுமே. 1

வெந்தவெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்தக், 
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சிதன்னுள், 
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி 
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

பொருள்: நன்றாக வெந்ததும், வெண்மையானதுமான திருநீற்றுப் பொடியைப் 
பூசியிருப்பவர்; திருமார்பில் விரிந்த பூணூல் ஒரு பாகத்தில் விளங்குமாறு தோற்றம் 
அளிப்பவர்; மணம் கமழும் கூந்தலை உடைய உமையம்மையோடு இருப்பவர். விளங்கும் 
பொழில்களால் சூழப்பட்ட திருக்கச்சி என்னும் தலத்தில் எல்லையற்ற நற்குணங்களை
உடைய அடியவர்கள் போற்றி வணங்குமாறு நடனம் செய்யும் இவர், எம் தந்தையாகிய 
சிவபெருமான் ஆவார். இப்பெருமான் விருப்பத்துடன் எழுந்தருளி உள்ள ஏகம்பம் என்னும் 
திருக்கோயிலைத் தொழுது போற்றினால் நமது துன்பங்கள் இல்லாமல்யோய்விடும்.

குறிப்புரை: திருநீறு பூசிய திருமார்பிற் பூணூல் கிடந்திலங்க, உமாதேவியோடு எழுந்தருளிய கச்சியுள் 
எல்லையற்ற குணங்களை உடைய அடியார்கள் போற்ற எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த இடர்கெடும் 
என்கின்றது. அந்தம் - முடிவு. அணங்கினொடு - பார்வதியோடு. 
Lord Civan smears His chest with the holy ashes very well burnt in the fire. On one side of His body shines the bright sacred thread. Along with His consort Umaa Devi, whose hair is ever smelling sweet, He is enshrined in the temple known as Ēkambam in the city of Kachchi. This city is surrounded by plenty of natural gardens on all sides. Here live devotees with good virtuous character. They always adore our Lord who is dancing in this temple and worship Him. Our worldly attachments will vanish if we worship this Lord in all sincerity.

வரந்திகழுமவுணர்மாநகர்மூன்றுடன்மாய்ந்தவியச் 
சரந்துரந்தெரிசெய்ததாழ்சடைச்சங்கரன்மேயஇடம்
குருந்தமல்லிகைகோங்குமாதவிநல்லகுராமரவம் 
திருந்துபைம்பொழிற்கச்சியேகம்பஞ்சேரஇடர்கெடுமே. 2

வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன்மாய்ந்து அவியச் 
சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம் - 
குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம், 
திருந்து பைம்பொழல் - கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

பொருள்: வரம் பெற்ற அசுரர்களின் பெரிய நகரங்களான முப்புரங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து 
அழிந்து போகுமாறு சரம் தொடுத்து எரித்த நீண்ட சடைகளை உடைய சங்கரன் 
சிவபெருமான் ஆவார். இப்பெருமான் விரும்பி எழுந்தருளிய இடம் திருக்கச்சி ஏகம்பம் 
ஆகும். குருந்த மரம், மல்லிகை மலர், கோங்கு மரம், குருக்கத்தி மரம், நல்ல குரா மரம், 
கடம்ப மரம் ஆகியவற்றால் அழகுடன் விளங்கும் பசுமையான பொழில்கள் சூழ்ந்துள்ள 
கச்சி மாநகரில் உள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நமது துன்பங்கள் இல்லாமல் 
போய்விடும்.

குறிப்புரை: திரிபுரம் எரியச் சரம்விட்ட சங்கரன் மேவிய இடமாகிய பொழில் சூழ்ந்த ஏகம்பம்சேர 
இடர்கெடும் என்கின்றது. துரந்து - செலுத்தி. மாதவி - குருக்கத்தி, மரவம் - வெண்கடம்பு. 
The Asuraas did a lot of penance and got boons by which they built and owned three big cities in the sky and were moving about all over the universe. Lord Civan (Sankaran) with his dangling matted hair which hangs on the back side of His head, shot an arrow and burnt all the three fortresses at one stroke and they were all completely destroyed. This Lord Civan is entempled in the temple known as Ēkambam in the city of Kachchi. This city is well renowned and surrounded by lush cool natural gardens full of flower plants and trees such as:

Kuruntham  - Wild lime plant
Malligai  - Himalayan heart leaved smooth Jasmine
Kōngu   - Silk cotton tree
Maadhavi  - Common delight of the wood
Kadambam  - The seaside Indian oak
Nalkura  - Common bottle flower

If we reach this temple in the city of Kachchi and offer worship, our afflictions will all vanish.

வண்ணவெண்டபொடிப்பூசுமார்பின்வரியரவம்புனைந்து 
பெண்ணமர்ந்தெரியாடல்பேணியபிஞ்ஞகன்மேயவிடம் 
விண்ணமர்நெடுமாடமோங்கிவிளங்கியகச்சிதன்னுள் 
திண்ணமாம்பொழில்சூழ்ந்தஏகம்பஞ்சேரஇடர்கெடுமே. 3

வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரிஅரவம் புனைந்து, 
பெண் அமர்ந்து, எரிஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம், 
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்- 
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

பொருள்: வெண்மை நிறம் உடைய திருநீற்றை மார்பில் பூசியிருப்பவன். உடலில் வரிகளை 
உடைய பாம்பை அணிந்திருப்பவன். உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பி 
ஏற்றியிருப்பவன். சுடுகாட்டில் எரிஆடல் புரியும் தலைக்கோலம் உடையவன். இத்தகைய 
பெருமைகளை உடைய சிவபெருமான் விரும்பிய இடம் திருக்கச்சியேகம்பம் ஆகும். அது 
விண்ணைத் தொடும் மாடவீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலைபெற்ற 
பொழில்களால் சூழப்பட்டதும் ஆகும். இத்திருக்கச்சி ஏகம்பத்தை அடைந்து விட்டால் 
நமது துன்பங்கள் இல்லாமல் போய்விடும்.

குறிப்புரை: திருநீறணிந்த மார்பில் அரவம் அணிந்து, பெண்ணை ஒருபால் விரும்பி, எரிக்கண் 
திருநடனத்தை விரும்பிய பிஞ்ஞகன் இடம். விண்ணளாவிய மாடமோங்கிய கச்சியுள் ஏகம்பம் ஆம்; 
அதனைச்சேர இடர்கெடும் என்கின்றது. பிஞ்ஞகன் - மயிற்பீலியை உடையான். 
Lord Civa smears His body with pure white coloured holy ashes. He has worn on His body a fair snake also. With much affection He has joined hands with Umaa Devi. He dances in the burning ghat. He is bedecked with head ornament. This Lord Civan is entempled in the Ēkambam temple situated in the town Kachchi. This city has many tall mansions which stand out prominently and impressively there. The city is Those who reach the also surrounded by very old natural gardens full of trees. Ēkambam temple and offer worship will get all their afflictions washed off.

தோலுநூலுந்துதைந்தவரைமார்பிற்சுடலைவெண்ணிறணிந்து 
காலன்மாள்வுறக்காலாற்காய்ந்தகடவுள்கருதுமிடம் 
மாலைவெண்மதிதோயுமாமதிற்கச்சிமாநகருள் 
ஏலநாறியசோலைசூழேகம்பமேத்தஇடர்கெடுமே. 4

தோலும் நூலும் துதைந்த வரைமார்பில் சுடலை வெண்நீறு அணிந்து, 
காலன் மாள்உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம், 
மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள், 
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் ஏத்த, இடர் கெடுமே.

பொருள்: மான்தோலும், பூணூலும் பொருந்திய மலை போன்ற திருமார்பில் சுடலையில் 
எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்திருப்பவன் சிவபெருமான். காலனான எமனை 
மார்க்கண்டேயருக்காக தமது திருக்காலால் உதைத்த கடவுளான சிவபெருமான் விரும்பி
இருக்கும் இடம் திருக்கச்சி ஏகம்பம் ஆகும். மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான 
மதியை மறைக்கும்படி உயர்ந்த பெரிய மதில்களை உடைய கச்சி மாநகரில், மணம் வீசும் 
சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலைப் போற்றி வழிபட்டால் நமது 
துன்பங்கள் இல்லாமல் போய்விடும்.

குறிப்புரை: கருமான்தோலும் பூணூலும் நெருங்கிய மார்பில் நீறணிந்து காலனைக் காய்ந்த கடவுள் 
கருதுமிடம். கச்சியுள் ஏகம்பம்; அதனை ஏத்த இடர்கெடும் என்கின்றது. 
Lord Civan wears in His hill like chest the skin of the deer and also the sacred thread. He smears His body with holy ashes removed from the burning ground. To save His devotee Maarkandeya, He kicked down the god of death (Kaalan) to death. This Civan desires to be enshrined in the Ēkambam temple situated in Kachchi town. The fortification wall of this city is so tall that the white crescent moon which appears in the sky during evening hours, seems to rest on these walls. This city is surrounded by fragrant smelling natural gardens. If we can reach this temple our afflictions will vanish.

தோடணிம்மலர்க்கொன்றைசேர்சடைத்தூமதியம்புனைந்து 
பாடல்நான்மறையாகப்பல்கணப்பேய்களவைசூழ 
வாடல்வெண்டலையோடனலேந்திமகிழ்ந்துடனாடல்புரி 
சேடர்சேர்கலிக்கச்சியேகம்பஞ்சேரஇடர்கெடுமே. 5

தோடு அணி(ம்) மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து, 
பாடல் நால்மறைஆகப், பல்கணப்பேய்கள் அவை சூழ, 
வாடல்வெண்தலைலஓடு, அனல் ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி 
சேடர்சேர் - கலிக் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே.

பொருள்: அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய 
மதியை அணிந்திருப்பவன். நான்மறைகளைப் பாடல்களாகக் கொண்டிருப்பவன். பேய்க் 
கணங்கள் பலசூழ வீற்றிருப்பவன். புலால் வற்றிய வெண்மையான தலையோட்டையும் 
அனலையும் கையில் ஏந்தியிருப்பவன். மகிழ்வுடன் உமையம்மையுடன் ஆடல் புரிபவன். 
இத்தகைய பெருமைகளைக் கொண்டு உலகம் அழிய தான்மட்டும் எஞ்சி நிற்கும் 
பெரியோனாகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும், ஆரவாரம் மிகுந்த கச்சியில் 
விளங்கும் திருஏகம்பத்தைத் தியானித்தால் நமது துன்பங்கள் இல்லாமல் போய்விடும்.

குறிப்புரை: இதழோடு கூடிய அழகிய கொன்றை மலரை அணிந்த சடையிலே பிறைமதியைச் சூடி, 
நான்மறை பாடலாக, பேய்க்கணம் புடைசூழ, அனலேந்தி ஆடும் பெரியோன் சேரும் இடம் கச்சியுள் 
ஏகம்பம் என்கின்றது. சேடர் - உலகம் அழியத் தான் எஞ்சி நிற்பவர். சேர - தியானிக்க. 
Lord Civan wears on His matted hair a garland made up of cassia flowers with full of attractive petals. He sustains the crescent moon also in His matted hair. Accompanied by His retinue of goblins, He carries the white human skull in which dried raw meat is sticking; in another hand He carries the fire. With all this paraphernalia, Civan the great, happily dances along with His retinue. This Civan is entempled in the bustling temple of Ēkambam in the city of Kachchi. If we contemplate on the Lord at Ēkambam and adore Him, all our afflictions will vanish.

சாகம்பொன்வரையாகத்தானவர்மும்மதில்சாயவெய்து 
ஆகம்பெண்ணொருபாகமாகஅரவொடுநூலணிந்து 
மாகந்தோய்மணிமாடமாமதிற்கச்சிமாநகருள் 
ஏகம்பத்துறையீசன்சேவடியேத்தஇடர்கெடுமே. 6.7

சாகம் பொன்வரைஆகத் தானவர் மும்மதில் சாய எய்து 
ஆகம் பெண் ஒருபாகம்ஆக, அரவொடு நூல் ஆணிந்து 
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள், 
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

பொருள்: மேருமலையை வில்லாகக் கொண்டு, அசுரர்களின் மூன்று மதில்களும் அழிந்து 
போகுமாறு கனை தொடுத்தவர். தமது திருமேனியில் உமையம்மையை ஒருபாகமாகக் 
கொண்டிருப்பவர். தமது திருமார்பில் பாம்பையும் முப்புரிநூலையும் அணிந்திருப்பவர். 
இத்தகைய பெருமைகளைக் கொண்ட சிவபெருமான், விண்ணை முட்டும் 
மணிமாடங்களையும், உயர்ந்த மதில்களையும் உடைய கச்சி மாநகரில் உள்ள 
திருஏகம்பத்தில் உறைகின்றார். இப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுதால் 
நமது துன்பங்கள் விலகிவிடும்.

குறிப்புரை: மேருமலை வில்லாக முப்புரம் எரித்து, உடலில் ஒரு பாகம் பெண்ணாக ஏற்று, அரவையும் 
நூலையும் அணிந்து கச்சியேகம்பத்துள் அமர்ந்த ஈசன் திருவடி ஏத்த இடர்கெடும் என்கின்றது. சாகம் - 
வில். சாபம் எதுகை நோக்கிச் சாகம் ஆயிற்று. தானவர் - அசுரர். ஆகம் - உடல். மாகம் - ஆகாயம். 
Lord Civan has His consort Umaa Devi on the left half of His holy body. He wears in His chest the snake and the three ply sacred thread. Holding Mēru mountain as His bow, He shot an arrow and destroyed the three fortresses of the Asuraas. This Civan abides in the sacred temple at Ēkambam in the city of Kachchi, where the fortification walls and many sky tall good looking mansions are to be found everywhere. If we adore the Holy Feet of this Lord of the Universe our affliction will vanish.

வாணிலாமதிபுல்குசெஞ்சடைவாளரவம்மணிந்து 
நாணிடத்தினில்வாழ்க்கைபேணிநகுதலையிற்பலிதேர்ந் 
தேணிலா அரக்கன்றன்நீள் முடிபத்துமிறுத்தவனூர் 
சேணுலாம்பொழிற்கச்சியேகம்பஞ்சேரஇடர்கெடுமே. 8

வாள்நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து, 
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து, 
ஏண் இலா அரக்கன்தன் நீள் முடிபத்தும் இறுத்தவன் ஊர், 
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

பொருள்: பிறையை அணிந்த செஞ்சடையில் அரவத்தை அணிந்திருப்பவர் சிவபெருமான்: 
இடப்பாகத்தில் நாணோடு கூடியவளும் இல்வாழ்க்கைக்கு உரியவளுமான 
உமையம்மையை விரும்பி ஏற்றிருப்பவர். சிரிப்பது போன்று தோற்றமளிக்கும் 
தலையோட்டில் பிச்சை ஏற்பவர். மன உறுதி இல்லாத அரக்கனான இராவணனின் நீண்ட 
கிரீடம் தரித்த பத்துத் தலைகளையும் நெரித்தவர். இத்தகைய பெருமைகளை உடைய 
சிவபெருமானின் ஊர் திருக்கச்சி ஏகம்பம் ஆகும். வானளாவி ஓங்கி உயர்ந்த பொழில்களை 
உடைய கச்சி மாநகரில் உள்ள திருஏகம்பத்தை அடைந்துவிட்டால் நமது துன்பங்கள் 
நீங்கிவிடும்.

குறிப்புரை: பிறை அணிந்த செஞ்சடையில் அரவத்தையும் அணிந்து, இடப்பாகத்து நாணோடு கூடிய 
இல்வாழ்க்கைக்குரிய உமாதேவியை வைத்து, மண்டையோட்டில் பிச்சை ஏற்று, இராவணன் சிரம் பத்தும் 
இறுத்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. வாள் நிலா - ஒளி பொருந்திய நிலா. புல்கு - தழுவிய. 
இல்வாழ்க்கை - மனையில் வாழ்தலை உடையாளாகிய உமாதேவி; தொழிலாகுபெயர். ஏண் - உறுதி. 
சேண் - ஆகாயம். 
Lord Civan wears a bright crescent moon in His ruddy matted hair wherein He holds a dazzling snake also. With much desire, He happily concorporated His consort Umaa Devi on the left side of His body frame. He accepts alms in a skull that appears smiling ever. He crushed the ten large heads of the firm minded Raavanan. His place of residence is Ēkambam where natural gardens flourish, full of sky tall trees. If we reach this Ēkambam and offer worship to Lord Civan therein our afflictions will vanish.

பிரமனுந்திருமாலுங்கைதொழப்பேரழலாயபெம்மான் 
அரவஞ்சேர்சடையந்தணனணங்கினொடமருமிடம்
கரவில்வண்கையினார்கள்வாழ்கலிக்கச்சிமாநகருள் 
மரவஞ்சூழ்பொழிலேகம்பந்தொழவல்வினைபாய்ந்தறுமே. 9

பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான், 
அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம், 
கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள், 
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வல்வினை மாய்ந்து அறுமே.

பொருள்: பிரமனும் திருமாலும் கைகூப்பி பணிந்து தொழுதபோது பெரிய அனல் உருவாக 
நின்ற பெருமான் சிவபெருமான் ஆவான். பாம்பை அணிந்த சடையை உடைய அந்தணனும் 
ஆகிய இப்பெருமான் தன் தேவியோடு அமர்ந்திருக்கும் இடம் திருக்கச்சி ஏகம்பம் ஆகும். 
உள்ளத்தில் வஞ்சகம் இல்லாத வள்ளல் தன்மை உடைய கைகளும் உள்ள சான்றோர்கள் 
வாழ்கின்ற ஆரவாரமுடைய மாநகர் கச்சி ஆகும். இங்குள்ள குங்கும மரங்கள் சூழ்ந்த 
பொழில்களை உடைய இந்த ஏகம்பத்தைத் தொழுதால் நம்மைத் துன்புறுத்தும் கொடிய 
வினைகள் மாய்ந்து அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: அயனும் மாலும் அடிவணங்க அழல் வண்ணமாகிய பெருமான் உமாதேவியோடு உறையுமிடம், 
வள்ளல்கள் வாழ்கின்ற கச்சியில் ஏகம்பமாம். அதனைத் தொழ வல்வினையறும் என்கின்றது. கரவு - 
உள்ளதை மறைக்கும் வஞ்சகம். மரவம் - மல்லிகை. 
When Civan stood as a tall and big ball of fire, Brahma and Thirumaal worshipped Him with their hands. Civa the gracious one, has worn a snake in His matted hair. This Civan is enshrined along with His consort in the Ēkambam temple situated in the city of Kachchi. In this bustling city of Kachchi munificent people having good philanthropic hands do live in large numbers. These people have no slyness in their minds. This city is surrounded by natural gardens full of lush green trees of a special fragrant species (Crocus sativus). If we go to the Ēkambam temple of Kachchi city and worship Lord Civan therein, all our afflictions will vanish.

குண்டுபட்டமணாயவரொ டுங்கூறைதம்மெய்போர்க்கும் 
மிண்டர்கட்டியகட்டுரையவைகொண்டுவிரும்பேன்மின் 
விண்டவர்புரமூன்றும்வெங்கணையொன்றினாலவியக் 
கண்டவன்கலிக்கச்சியேகம்பங்காணஇடர்கெடுமே, 10

குண்டுபட்ட அமணஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும் 
மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்! 
விண்டவர் புரம்மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக் 
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண. இடர் கெடுமே.

பொருள்: தடித்த உடலமைப்பும், ஆடையில்லாமல் திரியும் சமணர்களும், ஆடையை 
உடலில் போர்த்து வலியவராகத் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளை 
விரும்பாதீர்கள். பகைவர்களான அசுரர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை 
ஒன்றால் எரித்து அழித்த சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் ௧ச்சி நகரில் உள்ள 
ஏகம்பத்தைச் சென்று அடைந்தால் நமது துன்பங்கள் இல்லாமற்போகும்.

குறிப்புரை: புறச் சமயிகள் கூறும் கட்டுரைகளை நம்பாதீர்கள்; அவை அவர்கள் கட்டிய கட்டுக்கள்:
பகைவரது முப்புரங்களும் ஓரம்பினால் உடையச் செய்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. குண்டுபட்டு - 
உடல்பருத்து. கூறை - ஆடை. விண்டவர் - பகைவர். 
The Samanars with their obese and naked body roam about all places. The strong and street Buddhists cover their body with one piece of cloth and move all around. These two groups proclaim rhetoric messages. Do not believe their words. Do not consider their words as virtuous, but ignore them. It is Lord Civan, who shot a fierceful arrow and destroyed the three fortresses of the hostile Asuraas. He is enshrined in the Ēkambam temple in the city of Kachchi. Proceed to this temple and offer worship to Lord Civan therein, your affliction will get destroyed.

ஏரினார்பொழில்சூழ்ந்தகச்சியேகம்பமேயவனைக் 
காரினார்மணிமாடமோங்குகழுமலநன்னகருள் 
பாரினார்தமிழ்ஞானசம்பந்தன்பரவியபத்தும்வல்லார் 
சிரினார்புகழோங்கிவிண்ணவரோடுஞ்சேர்பவரே. 11

ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனைக், 
காரின் ஆர் மணி மாடம் ஒங்கு கழுமல நன்நகருள், 
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார், 
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

பொருள்: அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்துள் விளங்கும் சிவபெருமானை, 
மேகங்கள் தவழும் அழகிய மணிமாடங்கள் ஓங்கிய கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்
வல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடினார். இவர் துதித்துப் போற்றிய இந்தப் பத்துப் 
பாடல்களையும் ஓதவல்லவர்கள் இவ்வுலகில் சிறந்த புகழுடையவராக ஓங்கி இருப்பார்கள். 
பின்னர் வானவர்களோடு சேர்ந்து வாழ்வார்கள்.

குறிப்புரை: இப்பதிகம் வல்லவர்கள் புகழ் ஓங்கித் தேவர்களோடும் சேர்வர் என்கின்றது. ஏரின் ஆர் 
பொழில் - அழகு நிறைந்த சோலை. காரின் ஆர் - மேகங்கள் கவிந்த. 
The city Kachchi is surrounded by lush natural gardens full of trees. Lord Civan is enshrined in the Ēkambam temple situated in this city. Gnaanasambandan hails from the famous Kazhumala-valanagar (also known as Seekaazhi) where the clouds crawl on the top of the very tall and attractive mansions. Gnaanasambandan is an adept in Tamil language extolled and adored Lord Civan of this temple with this hymn of ten verses. Those who are capable of chanting these ten verses with all sincerity and worship Lord Civan of this temple will become great with all fame in this world and later will live along with the celestials in their world.
திருச்சிற்றம்பலம்

133ஆம் பதிகம் முற்றிற்று

௨ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
134. திருப்பறியலூர் வீரட்டம்

திருத்தல வரலாறு:

திருப்பறியலூர் வீரட்டம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். மயிலாடுதுறை 
(செம்பொனார் கோயில் வழி) சங்கரன்பந்தல் செல்லும் பேருந்துகளில் பறியலூர் செல்லலாம். 
இப்பொழுது பரசலூர் என வழங்கும். அட்டவீரட்டத்தில் ஒன்று. தக்கன் செய்த யாகத்திற்குப் 
போந்த மாயன் முதலிய விண்ணவர்களின் வேதனையைத் தீர்த்த தலம். இறைவன் பெயர்
வீரட்டேசுரர். இறைவியின் பெயர் இளம் கொம்பனையாள். தீர்த்தம் சிவகங்கை. தருமை ஆதீன 
அருளாட்சியில் உள்ளது.

கல்வெட்டு:

இத்தலம் சுந்தர பாண்டியன் 5ஆம் ஆட்சி ஆண்டில் ஜெயங்கொண்ட சோழவள நாட்டு 
வீழை நாட்டு ராஜநாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் என வழங்கப் படுகிறது. இறைவன் 
தட்சேசுவரமுடையார் எனவும், திருவீரட்டானமுடையார் எனவும் வழங்கப்படுகிறார். கிருஷ்ணப்ப 
தேவமகாராயரால் குறிப்பிட்ட சில கிராமங்கள் (பறியலூர் உட்பட) சூலவரி வசூலிக்கப் பெற்றுச் சிவ 
விஷ்ணு கோயிலுக்கு அளிக்கப்பட்டது. இதில் யாத்ரீகர்களுக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்யப் 
பெற்றது. பூங்காக் குடியான பரராஜ பயங்கர நல்லூரில் 30 வேலி நிலத்தை இறையிலி 
செய்தளிக்கப்பட்டது. இங்கே ஏழுலக முழுதுடைய சதுர்வேதி மங்கலத்து ஒரு அக்ரகாரம் அமைக்க 
நிலம் ஒதுக்கப்பட்டது.

பதிக வரலாறு:

திருச்செம்பொன்பள்ளி திருவிளநகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, 
பிள்ளையார் பரமர்தம் திருப்பறியலூரைப் பரவி, இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.
134. THIRU-P-PARIYALOOR-VEERATTAM

HISTORY OF THE PLACE

           This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It is known now-a-days as Parasaloor. It can be reached by buses going to Mayilaaduthurai (via Semponaarkoyil) and Sankaranpandhal.

The Lord is known as Veerattesurar and the Goddess as Ilamkombanaiyaal). The sacred ford is Sivagangai. This is one of the eight Veerattam temples. It is here that the celestial gods, Mayan and others, who attended the sacrifice of Thakkan, had their suffering relieved. The temple is under the spiritual administration of Dharumai Aadheenam.

The inscriptions here speak of grants for feeding pilgrims and of the gift of tax free land. Land was also allotted here to build an agrahaaram.

திருச்சிற்றம்பலம் 

134. திருப்பறியலூர் வீரட்டம்

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

கருத்தன்கடவுள்கனலேந்தியாடும் 
நிருத்தன்சடைமேல்நிரம்பாமதியன் 
திருத்தமுடையார்திருப்பறியலூரில் 
விருத்தனெனத்தகும்வீரட்ட த்தானே.  1

கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும் 
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன் - 
திருத்தம் உடையார் திருப் பறியலூரில், 
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

பொருள்: திருந்திய மனத்தை உடைய சான்றோர்கள் வாழும் திருப்பறியலூரில் 
தொன்மையானவனாக விளங்கும் வீரட்டானத்து இறைவன் சிவபெருமான் - ஆவான். 
இப்பெருமான் எல்லா உயிர்களுக்குத் தலைவனாகவும் கடவுளாகவும் இருப்பவன். கையில் 
கனல் ஏந்தி நடனம் ஆடுபவன். சடைமுடிமீது இளம்பிறையை அணிந்திருப்பவன்.

குறிப்புரை: இப்பதிகம் முழுவதும் எல்லாவுயிர்கட்கும் கருத்தனாய், கடவுளாய், விருத்தனாய் இருப்பவன் 
திருப்பறியலூர் வீரட்டத்தான் என இறைவனியல்பு அறிவிக்கின்றது. திருத்தம் உடையார் - பிழையோடு 
பொருந்தாதே திருந்திய மனமுடைய அடியார். விருத்தன் - தொன்மையானவன். 
Flawless, well reformed and virtuous minded people live in large numbers in Thiru-p-pariyaloor-veerattam. In this Veerattanam city the (Time Honoured) Lord Civan is enshrined. He is the Supreme Lord of the entire universe. He dances holding fire in His hand. He sustains the young crescent moon on His matted hair. Go and worship Him.

Note: - The Lord is young and is also old as desired by Himself on occasions

மருந்தமுதன்மயானத்துள்மைந்தன் 
பெருந்தண்புனற்சென்னிவைத்தபெருமான் 
திருந்துமறையோதிருப்பறியலூரில் 
விரிந்தமலர்ச்சோலைவீரட்டத்தானே. 2

மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன், 
பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான் - 
திருந்து மறையோர் திருப் பறியலூரில், 
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.

பொருள்: ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளை உடைய 
திருப்பறியலூரில் விளங்குபவன் வீரட்டானத்து இறைவனான சிவபெருமான். 
இப்பெருமான் பிறப்பு என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவன். உயிர் காக்கும் அமுதமாக 
இருப்பவன். மயானத்துள் நின்று ஆடும் வலியவன். மிகப் பெரியதாகப் பரந்து வந்த 
குளிர்ச்சியான கங்கையைத் தன் சென்னியில் வைத்துள்ள பெருமான் ஆவான். 
குறிப்புரை: மருந்தன் - பிணி தீர்க்கும் மருந்தானவன். 
Thiru-p-pariyaloor-veerattam is encircled by green, cool and flower rich gardens. In this city, very well disciplined Vedic scholars, do live in large numbers. Lord Civan entempled in this Thiru-p-pariyaloor-veerattam town is the remover of all diseases. He is the nectar that saves every one's life from death and birth. He is the powerful dancer in the burning ground. He is the noble one that entertains the cool, broad and big river Ganges in His head. Go and worship Him.

குளிர்ந்தார்சடையன்கொடுஞ்சிலைவிற்காமன் 
விளிந்தானடங்கவீந்தெய்தச்செற்றான் 
தெளிந்தார்மறையோர்திருப்பறியலூரில் 
மிளிர்ந்தார்மலர்ச்சோலைவீரட்டத்தானே. 3

குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன் 
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான் - 
தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில், 
மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

பொருள்: அறிவில் தெளிந்த அந்தணர்கள் சான்றோர்கள் வாழும் மலர்ச் சோலைகளால் 
சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் சிவபெருமான் ஆவான். 
இப்பெருமான் குளிர்ச்சியான சடைமுடியை உடையவர். மன்மதன் தனது மலர் வில்லை 
வளைத்து சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தபோது அவனை எரித்து இறந்து 
போகச் செய்தவர். பின்னர் இரதிதேவி வேண்டுதல் செய்ய அவனை அவள் கண்ணிற்கு 
மட்டும் காணும்படியாகத் தோற்றுவித்தவர்.

குறிப்புரை: கொடுஞ்சிலை - வளைந்த வில். விளிந்தான் - இறந்தான். வீந்து எய்த - இறந்து 
பின்னரும் வர. செற்றான் - கொன்றவன். 
Highly knowledgeable Vedic scholars do live here in large numbers, where lush flower gardens encircle the city. Here the Lord of Veerattanam resides, whose hair is cool and matted. He burnt to death Manmathan, the god of love (cupid) who bent the (awesome) bow and shot an arrow carrying flower against Him. Later at the request of his wife Rathi Devi, got back his life visible only to his wife. Such is the greatness of the Lord who resides in this town.

பிறப்பாதியில்லான்பிறப்பார்பிறப்புச் 
செறப்பாதியந்தஞ்செலச்செய்யுதேசன் 
சிறப்பாடுடையார்திருப்பறியலூரில் 
விறற்பாரிடஞ்சூழவீரட்டத்தானே. 4

பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச் 
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன் - 
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில் 
விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.

பொருள்: சிறப்புடைய பெருமக்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய
பூதகணங்கள் சூழ வீரட்டானத்து இறைவனான சிவபெருமான் விளங்குகின்றார். 
இப்பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர். இப்பெருமான் இவ்வுலகில் பிறவி எடுக்கும் 
உயிர்கள் அடையும் பிறப்புக்கும், பின் முத்திப்பேறு என்ற இறப்புக்கும் முதலும் முடிவும் 
காணச் செய்யும் ஒளிவடிவினனாக விளங்குகின்றார்.

குறிப்புரை: பிறப்பாதி எனவே இறப்புமில்லான் என்பதுணர்த்தியவாறு. பிறப்பார் பிறப்பு செறுப்பு ஆதி 
அந்தம் செலச் செய்யுந்தேசன் - பிறவியெடுக்கும் உயிர்கள் எய்தும் பிறப்பிற்கும் சிறப்பிற்கும் முதலும் 
முடிவும் அடையச் செய்யும் ஒளிவடிவானவன். சிறப்பாடு - சிறப்பு, பாடு தொழிற்பெயர் விகுதி. விறல் 
பாரிடம் - வலிய பூதகணம். 
In the city of Thiru-p-pariyaloor-veerattam very famous virtuous people do live in large numbers. Here the mighty hosts of goblins form a guard around Lord Civan, who is the Lord of Veerattanam. He has no birth and death. He is the cause for the birth and sustenance of all the souls in this world. In the form of Light He graces the beginning and end of all souls.

கரிந்தாரிடுகாட்டிலாடுங்கபாலி 
புரிந்தார்படுதம்புறங்காட்டிலாடும் 
தெரிந்தார்மறையோர்திருப்பறியலூரில் 
விரிந்தார்மலர்ச்சோலைவீரட்டத்தானே. 5

கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, 
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் - 
தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில், 
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

பொருள்: வேதங்களையும் அதன் உட்பொருளையும் ஆராய்ந்து அறிந்த மறையவர்கள் 
வாழும் விரிந்த மலர்ச் சோலைகள் உள்ள திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து 
இறைவன் சிவபெருமான் ஆகும். இப்பெருமான் இறந்தவர்களைக் கரிந்தவர்களாக 
எரிக்கும் இடுகாட்டில் கபாலத்தைக் கையில் ஏந்தி ஆடுபவர்.

குறிப்புரை: கரிந்தார் - இறந்தவர். புரிந்தார் - வினைகளைப் புரிந்தவர். படுதம் - கூத்துவகை. 
அக்கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி ஆடுபவன். புறங்காடு - சுடுகாடு. தெரிந்து ஆர் மறையோர் - 
ஆராய்ந்தறிந்த அந்தணர். 
Scholars who have studied and mastered all the four Vedas do live in large numbers of Thiru-p-pariyaloor-veerattam. Fully blossomed flowers are many in the groves which encircle the city. This mighty Lord Civa who did one of His eight exploits in this town carries a skull in His hand and dances in the burning ground where the dead are burnt to convert them into ashes.

அரவுற்றநாணாஅனலம்பதாகச் 
செருவுற்றவர்புரந்தீயெழச்செற்றான் 
தெருவிற்கொடி சூழ்திருப்பறியலூரில் 
வெருவுற்றவர்தொழும்வீரட்டத்தானே. 6

அரவு உற்ற நாணா, அனல் அம்புஅது ஆக, 
செருஉற்றவர் புரம் தீ எழச் செற்றான் - 
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில், 
வெருஉற்றவர் தொழும் வீரட்டத்தானே.

பொருள்: தெருக்களில் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் 
வீரட்டானத்து இறைவன் சிவபெருமான் ஆவான். இப்பெருமானைப் பிறவிப் பிணிக்கு 
அஞ்சுபவர்கள் தொழுகின்றனர். இப்பெருமான் வாசுகி என்னும் பாம்பை நாணாக 
இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னுடன் போர்புரிந்த முப்புரத்து அசுரர்களைத்
தீ எழுமாறு செய்து அழித்தவன்.

குறிப்புரை: அரவு உற்ற நாணா(க) அனல் அம்பு அது ஆக செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான் 
எனப்பிரிக்க. செரு - போர். வெருவுற்றவர் - அஞ்சியவர். 
Flag posts are fixed all over the city of Thiru-p-pariyaloor-veerattam. Into this city, devotees who are afraid of their ailments go and worship Lord Civan enshrined in the temple of this town. Holding the Mēru mountain as His bow, Civa used the snake Vaasuki as the bowstring, and Agni, i.e., fire as its arrow, shot at the three fortresses and destroyed them by fire, which belonged to the hostile Asuraas who fought against Him.

நரையார்விடையான்நலங்கொள்பெருமான் 
அரையாரரவமழகாஅசைத்தான் 
திரையார்புனல்சூழ்திருப்பறியலூரில் 
விரையார்மலாச்சோலைவீரட்டத்தானே.  7

நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான், 
அரைஆர் அரவம் அழகா அசைத்தான் - 
திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில், 
விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

பொருள்: அலைகளை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதும் மணம் பொருந்திய மலர்ச் 
சோலைகளை உடையதுமான திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், 
சிவபெருமான் ஆவான். இப்பெருமான் வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை 
உடையவன். அடியவர்களுக்கு நலன்களையே அருள்புரியும் பெருமான். அரவத்தை 
அரையில் அழகாகக் கட்டியிருப்பவன்.

குறிப்புரை: நரை - வெண்மை. 
The city of Thiru-p-pariyaloor-veerattam has many watersheds where waves are roaring loud. Also the city is enclosed by groves full of fragrant flowers. This Civan owns a white coloured bull as His transport vehicle. He is the Lord of all good deeds. He wears a snake in His waist as His corset which looks good and impressive.

வளைக்கும்மெயிற்றின்னரக்கன்வரைக்கீழ் 
இளைக்கும்படிதானிருந்தேழையன்னம் 
திளைக்கும்படுகர்த்திருப்பறியலூரில் 
விளைக்கும்வயல்சூழ்ந்தவீரட்டத்தானே. 8

வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் 
இளைக்கும்படி தான் இருந்து, ஏழைஅன்னம் 
திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில் 
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.

பொருள்: பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித் திளைக்கும் ஆழமான ஆற்றுப் 
படுக்கைகளை உடையதும், மிகுதியான நெல் விளைச்சலைத் தரும் வயல்களால் சூழப்பட்டு 
விளங்குவதுமான வீரட்டானத்து இறைவன் சிவபெருமான். இப்பெருமான் வளைந்ததும் 
கூரியதுமான பற்களை உடைய இராவணனைக் கயிலை மலையின் கீழ் அகப்படுத்தி அவன் 
தன் வலிமை குன்றிப் போகுமாறு தமது கால்விரலால் அடர்த்தவர்.

குறிப்புரை: வளைக்கும் எயிறு - கோரப்பல். அரக்கன் என்றது இராவணனை, ஏழை அன்னம் 
திளைக்கும் படுகர் - பெண்ணன்னம் புணரும் ஆற்றுப்படுகர். 
In the city of Thiru-p-pariyaloor-veerattam very deep ponds exist, where the female swans join with their male ones and enjoy life. Rich paddy fields having a very high yield of paddy are to be found all over the city. Lord Civan of this town (one of His eight exploits took in this town) crushed Raavanan who was lying beneath mount Kailas, by pressing the top of this mountain with His toe. His curved tooth was crushed and his valour reduced. Such is the greatness (wise) of Lord Civan of this place.

வளங்கொள்மலர்மேலயன் ஓதவண்ணன் 
துளங்கும்மனத்தார்தொழத்தழலாய்நின்றான் 
இளங்கொம்பனாளோடிணைந்தும்பிணைந்தும் 
விளங்குந்திருப்பறியல்வீரட்டத்தானே. 9

வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன், 
துளங்கும் மனத்தார் தொழ, தழல்ஆய் நின்றான் - 
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் 
விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.

பொருள்: இளம்பூங்கொம்பு அனையாள் என்னும் திருநாமம் தாங்கிய உமையம்மையுடன்
இணைந்தும், கூறுடைய அர்த்த நாரியாய்ப் பிணைந்தும் திருப்பறியலூரில் விளங்கும் 
வீரட்டானத்து இறைவன் சிவபெருமான் ஆவான். இப்பெருமான், ஒளிவிளங்கும் தாமரை 
மலர்மேல் உறையும் பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கும் 
மனத்தை உடையவராகத் தம்மைப் பணிந்து தொழுதபோது தழல் உருவாக ஓங்கி நின்றான்.

குறிப்புரை: விளங்கு ஒண்மலர் - விளங்குகின்ற ஒளிபொருந்திய தாமரை மலர், ஓதவண்ணன் - 
கடல்வண்ணனாகிய திருமால். துளங்கும் - நடுங்கும். மனத்தார் என்றது அயனையும் மாலையும் 
இணைந்து - ஒரு திருமேனிக் கண்ணே ஒன்றாய், பிணைந்து - இடப்பாகத்து உடனாய்க்கூடி. 
Young flowering creeper like Umaa Devi, consort of Civan joined hands with Him and got seated on the left half of His body. Brahma seated on the bright shining lotus flower, and Thirumaal in his reclining posture on the sea - both were terrified and with shivering mind worshipped Civan even as He stood as a big and tall flame of fire.

சடையன்பிறையன்சமண்சாக்கியரோ 
டடையன்பிலாதானடியார்பெருமான் 
உடையன்புலியினுரிதோலரைமேல் 
விடையன்திருப்பறியல்வீரட்டத்தானே. 10

சடையன்; பிறையன்; சமண்சாக்கியரோடு 
அடை அன்பு இலாதான்; அடியார்பெருமான்; 
உடையன்; புலியின்உரி-தோல் அரைமேல்; 
விடையன் - திருப் பறியல்வீரட்டத்தானே.

பொருள்: புலியின் தோலை அரையில் உடையாகக் கொண்டவன். . விடையேற்றை 
உடையவன். சடையில் பிறை அணிந்தவன். இப்பெருமான் திருப்பறியலூரில் விளங்கும் 
வீரட்டானத்து சிவபெருமான் ஆவான். சமணர், சாக்கியர் ஆகியோருக்கு அருள்புரிதற்குரிய 
அன்பிலாதவன் தம்மை அன்புடன் வணங்கும் அடியவர்களுக்கு அருள் புரிபவன்.

குறிப்புரை: சமண் சாக்கியரோடு அடைதற்கு அன்பிலாதான் என்க. பெருமான் - பெருமகன் என்பதன் 
திரிபு. புலியின் உரிதோல் அரைமேல் உடையன் எனக்கூட்டுக. 
Civan residing in Thiru-p-pariyaloor-veerattam sustains the crescent moon in His matted hair. He has no love for the Samanars and Buddhists for they fail to glorify Him. He wears the tiger skin hide on His waist. He uses the bull for His travels.

நறுநீருகுங்காழிஞானசம்பந்தன் 
வெறிநீர்த்திருப்பறியல்வீரட்டத்தானைப் 
பொறிநீடரவன்புனைபாடல்வல்லார்க் 
கறுநீடவலமறும்பிறப்புத்தானே. 11

நறு நீர் உகும் காழி ஞானசசம்ப்ந்தன், 
வெறிநீர்த் திருப் பறியல்வீ ரட்டத்தானைப், 
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு 
அறும், நீடு அவலம்; அறும் பிறப்புத்தானே.

பொருள்: நல்ல நீர் பாய்கின்ற சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் மணம் மிகுந்த 
நீர்வளம் உடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவனான, அரவம் தரித்த 
சிவபெருமானைப் போற்றிப் பாடினார். இவர் புனைந்து பாடிய இப்பதிகப் பாடல்கள் 
பத்தையும் பாட வல்லவர்க்கு பெரிய துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும். பிறப்பற்ற 
நிலையையும் எய்திவிடுவர்.

குறிப்புரை: நறுநீர் - நல்லநீர். வெறிநீர் - மணம் பொருந்திய தேன். நீடவல்ல மறுபிறப்பும் அறும் 
எனக்கூட்டுக. 
Gnaanasambandan was born in Seekaazhi where pure and clear water flows everywhere in plenty. He sang on Lord Civan of Thiru-p-pariyaloor-veerattam where watersheds full of fragrant flowers flourish. Civan of this town wears the long dotted snake in His body. Those who can sing this hymn as composed by Gnaanasambandan adoring Lord Civan of Thiru-p-pariyaloor-veerattam will get rid of their afflictions. Also their cycle of rebirth will come to an end.

திருச்சிற்றம்பலம்

134ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
135. திருப் பராய்த் துறை

திருத்தல வரலாறு:

திருப்பராய்த்துறை சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். திருச்சிராப்பள்ளியில் 
இருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், 
சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப் பெற்றது. அகண்ட காவிரித் துறையில் உள்ளது. இதனை 
அப்பர் சுவாமிகள் ‘பரக்குநீர்ப் பொன்னி மன்னுபராய்த்துறை’ என்று அருளுவார்கள். இறைவன் 
பெயர் பராய்த்துறை நாதர். தேவியார் பெயர் மயிலம்மையார். தீர்த்தம் காவிரி. விருட்சம் பராய் 
(௭ 1186). விருட்சத்தினால் இத்தலத்திற்குப் இப்பெயராயிற்று. திருச்சி - ஈரோடு இரயில் 
பாதையில் இரயில் நிலையம் உள்ளது.

கல்வெட்டு:

மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மரான முதற்பராந்தகன் காலத்திய கல்வெட்டுக்கள் 
மிகுதியாக உள்ளன. இன்னாரது என்றறிய முடியாத இராஜகேசரி வர்மன் காலத்திய 
கல்வெட்டுக்களும் சில உள்ளன. அவையன்றிச் சுந்தரபாண்டியத் தேவர், கோநேரின்மை 
கொண்டான், கிருஷ்ணதேவ மகாராயா் கல்வெட்டுக்களும் இன்னாரென்று அறியமுடியாத சில 
கல்வெட்டுக்களும் உள்ளன. எல்லாமாக அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 83. அவற்றால் 
அறியப்படும் கோயிலைப் பற்றிய உண்மைகள். கோயிலுக்கு விளக்கு எரிக்க ஆடும், பொன்னும், 
நிலமும் அளித்த செய்திகளாகும். சுந்தர பாண்டியத் தேவன் தன்னுடைய ஆட்சி ஒன்பதாம் 
ஆண்டில் தங்க ஆபரணங்கள் அளித்தான். குலோத்துங்கன் கருப்பக்கிருகத்துக்குப் பொன் 
வேய்ந்தான். சோமாஸ்கந்தர் கோயில் முன் மண்டபம், சிறைமீட்டான் திரிவிக்ரம உதயனால் 
கட்டப்பெற்றது. தல விநாயகருக்கு ஏகாம்பர உதயன் ஆட்சியில் நிலம் வழங்கப்பட்டது. இறைவன் 
திருப்பராய்த் துறை மகாதேவர், பராய்த்துறை பரமேசுவரன் என்று வழங்கப் பெறுகிறார். இத்தலம் 
உத்தமசீலிச்சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராயத்துறை என்று குறிக்கப்படுகிறது. இங்கே 
தக்ஷிணாயன புண்ணிய காலத்திலும் சங்கராந்தியிலும் நீராட்டு விழா நடைபெற்றதாகத் 
தெரிகின்றது.

பதிக வரலாறு:

திருக்கருவூர் ஆனிலையைப் போற்றி, திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருப்பராய்த் 
துறையை அடைந்தார்கள். அங்கே நெற்றித் தனிக்கண்ணர் கோயிலை நண்ணிக் கும்பிட்டுக் 
கோதில் தமிழ்ச்சொல் மாலையாகிய நீறு சேர்வதோர் என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். 
135. TIRU-P-PARAAI-TH-THURAI

HISTORY OF THE PLACE

      This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It is on the bus route from Thiruchchirappalli to Kuliththalai. There is also a railway station for this place on the Thiruchchi - Erode railway line. It is on the banks of the undivided expanse of the Cauvery river. Saint Appar Suvaami has called this place, 'parakku neerp ponni mannu parAittuRai' (Paraaiththurai on the enduring river Cauvery of expanse of waters).

      God is known as Paraaiththurainaathar and the Goddess as Mayilammaiyaar. The sacred ford is river Cauvery. The sacred tree is Paraai (Paper Tree), after which the place is named. Indhiran, Kuberan and Seven Sages offered worship here.

      There are 83 inscriptions here pertaining to kings of the Chola and Paandiya dynasties as also from Krishnadheva Maharaayar. Most of them give information on grants of sheep, gold and land for lamps.

      Sundhara Paandiya Thevan donated gold ornaments, Kuloththungkan had the roof paved with gold. Siraimeettaan Thirivikkirama Udhayan built the mandapam in front of the Somaskandhar shrine. During the reign of Ekaambara Udhayan, land was gifted for the Vinaayaka shrine of the temple. It appears that bathing festivals were held here on two occasions: one at Sankaraanthi and the other at Dakshinaayana Punniya Kaalam.

திருச்சிற்றம்பலம்

135. திருப்பராய்த்துறை

பண் : மேகராகக்குறிஞ்சி 
ராகம் : நீலாம்பரி

நீறுசேர்வதொர்மேனியர்நேரிழை 
கூறுசேர்வதொர்கோலமாய்ப் 
பாறுசேர்தலைக்கையர்பராய்த்துறை 
ஆறுசேர்சடைஅண்ணலே. 1

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை 
கூறு சேர்வது ஒர் கோலம்ஆய்ப், 
பாறு சேர் தலைக் கையர் - பராய்த்துறை 
ஆறு சேர் சடை அண்ணலே.

பொருள்: சிவபெருமான் கங்கையை சடையில் அணிந்தவராகவும், திருநீற்றை அணிந்த 
திருமேனியராகவும், உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், திருப்பராய்த் 
துறையில் விளங்குகின்றார். இப்பெருமான் தமது கையில் பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் 
புலால் நாற்றம் கொண்ட பிரமனது தலையோட்டை வைத்திருக்கின்றார்.

குறிப்புரை: இப்பதிகம், திருப்பராய்த்துறைசேர் அண்ணல் நீறணிந்தவர், நேரிழை வைத்தவர், கொன்றை 
அணிந்தவர், வேதர், வேதம் விரித்தவர் என அவரது பல இயல்புகளை எடுத்து விளங்குவது. கூறு - 
மேனியில் ஒருபாதி. பாறு - பருந்து. 
Lord Civan who is entempled in Tiru-p-paraai-th-thurai entertains the river Ganges on His matted hair. He smears His body with holy ashes. His appearance is unique with Umaa Devi on His left. He holds in His hand Brahma's skull which attracts kites due to the smell of flesh sticking on to the skull.

கந்தமாமலர்க்கொன்றைகமழ்சடை 
வந்தபூம்புனல்வைத்தவர் 
பைந்தண்மாதவிசூழ்ந்தபராய்த்துறை 
அந்தமில்லஅடிகளே. 2

கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை, 
வந்த பூம்புனல், வைத்தவர் - 
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை 
அந்தம் இல்ல அடிகளே.

பொருள்: பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் 
விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் 
மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.

குறிப்புரை: அந்தமில்ல அடிகள் - தாம் எல்லாவற்றிற்கும் அந்த மாதலேயன்றித் தமக்கு அந்தம் இல்லாத 
அடிகள். 
Lord Civan of endless existence resides in Tiru-p-paraai-th-thurai. This town is encircled by green cool creepers known as common delight of the woods. He wears in His matted hair many kinds of excellent and fragrant flowers as well cassia flowers. In the same hair He sustains the river Ganges which was gushing down in torrential flow.

வேதர்வேதமெல்லாமுறையால்விரித் 
தோதநின்றவொருவனார் 
பாதிபெண்ணுருவாவர்பராய்த்துறை 
ஆதியாயஅடிகளே. 3

வேதர் வேதம்எல்லாம் முறையால் விரித்து 
ஓத நின்ற ஒருவனார்; 
பாதி பெண்உரு ஆவர் - பராய்த்துறை 
ஆதி ஆய அடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய்
எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச் செய்தவர். எல்லா வேதங்களையும் 
முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப் 
பெண்ணுருவாக விளங்குபவர்.

குறிப்புரை: முறையால் விரித்து - இன்னவேதத்தின்பின் இன்னது என முறைப்படி விரித்து. 
Lord Civan is enshrined in Tiru-p-paraai-th-thurai and is the origin of all the world. He composed all the four Vedas. Also He is the unique God who explained the right commentary to all the above Vedas. He appears with His consort Umaa Devi on the left half of His body.

தோலுந்தம்மரையாடைசுடர்விடு 
நூலுந்தாமணிமார்பினா் 
பாலுநெய்பயின்றாடுபராய்த்துறை 
ஆலநீழலடிகளே. 4

தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு 
நூலும் தாம் அணி மார்பினர் - 
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை 
ஆலநீழல் அடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை 
விரும்பி ஆடும் இறைவர், புவித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி 
பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.

குறிப்புரை: தோல் - புலித்தோல். 
Lord Civan is seated in the shadow of a big banyan tree in Tiru-p-paraai-th-thurai. He likes to be anointed with milk and ghee besides the usual water. He wears the tiger hide in His waist as His apparel. He wears the bright sacred thread on His chest.

விரவிநீறுமெய்பூசுவர்மேனிமேல் 
இரவில்நின்றெரியாடுவர் 
பரவினாரவர்வேதம்பராய்த்துறை 
அரவமார்த்தஅடிகளே. 5

விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்; 
இரவில் நின்று எரிஆடுவர்; 
பரவினார்அவர் வேதம் - பராய்த்துறை 
அரவம் ஆர்த்த அடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர். 
திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். 
வேதங்களால் பரவப் பெற்றவர்.

குறிப்புரை: அவர் வேதம் பரவினார் - அவர் வேதங்களாற் பரவப் பெற்றவர். 
Lord Civan is enshrined in Tiru-p-paraai-th-thurai and wears a snake in His waist to tighten His dress. He smears His body with holy ashes all over. In the midnight He dances in the burning ground holding fire in His head. He is worshipped by all the four Vedas.

மறையுமோதுவர்மான்மறிக்கையினார் 
கறைகொள்கண்டமுடையவர் 
பறையுஞ்சங்குமொலிசெய்பராய்த்துறை 
அறையநின்றஅடிகளே. 6

மறையும் ஒதுவர்; மான்மறிக் கையினர்: 
கறை கொள் கண்டம் உடையவர் - 
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை 
அறைய நின்ற அடிகளே.

பொருள்: பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் 
எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர், மான் 
கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தை உடையவர்.

குறிப்புரை: மறி - குட்டி. கறை - விடம். 
Lord Civan who is entempled in Tiru-p-paraai-th-thurai is adorned, praised and worshipped by all people in this town. He chants the Vedas. He holds in one of His hands a young deer. His neck looks dark blue in colour because of the venom He positioned in His throat.

விடையுமேறுவர்வெண்பொடிப்பூ சுவர் 
சடையிற்கங்கைதரித்தவா் 
படைகொள்வெண்மழுவாளர்பராய்த்துறை 
அடையநின்றஅடிகளே. 7

விடையும் ஏறுவர்; வெண்டொடிப் பூசுவர்; 
சடையில் கங்கை தரித்தவர்; 
படை கொள் வெண்மழுவாளர் - பராய்த்துறை 
அடைய நின்றஅடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து 
வருபவர். வெண்மையான இருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். 
வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.

குறிப்புரை: அடைய - எங்குமாய். பொருந்த என்றும் ஆம். 
Lord Civan who is enshrined in the temple of Tiru-p-paraai-th-thurai moves about in His bull vehicle. He smears His body with holy ashes. He sustains the river Ganges in His matted hair. He holds in one of His hands the battle axe as His war weapon.

தருக்கின்மிக்கதசக்கிரிவன்றனை 
நெருக்கினார்விரலொன்றினால் 
பருக்கினாரவர்போலும்பராய்த்துறை 
அரக்கன்றன்னை அடிகளே. 8

தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை 
நெருக்கினார், விரல்ஒன்றினால்; 
பருக்கினார்அவர்போலும் - பராய்த்துறை - 
அரக்கன்தன்னை, அடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை 
உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் 
கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

குறிப்புரை: தசக்கிரிவன் - இராவணன். 
Lord Civan entempled in Tiru-p-paraai-th-thurai crushed the valorous Raavanan's ten heads by one of the fingers of his leg (toe). In Thakkan's sacrificial ceremony He got the teeth of the sun god broken through His commander Veerabadran.

Note: Lord Civan did not break the teeth of the sun god. Under His command His aide Verabadra went to Thakkan's sacrificial hall and destroyed many things. At that time Veerabadra broke the teeth of the sun god.


நாற்றமாமலரானொடுமாலுமாய்த் 
தோற்றமும்மறியாதவர் 
பாற்றினார்வினையானபராய்த்துறை 
ஆற்றல்மிக்க அடிகளே. 9

நாற்றமாமலரானொடு மாலும்ஆய்த் 
தோற்றமும் அறியாதவர்; 
பாற்றினார், வினை ஆன; - பராய்த்துறை 
ஆற்றல் மிக்க அடிகளே.

பொருள்: திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் 
பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் 
பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் 
போக்குபவர்.

குறிப்புரை: நாற்றம் - மணம். பாற்றினார் - சிதற அடித்தார். 
Lord Civan the hero who is enshrined in Tiru-p-paraai-th-thurai took a special post of a tall flame of fire. Brahma who is seated in the fragrant smelling lotus flower and Thirumaal could not discern the head and foot of Him in the special pose. Civa of this town annuls the karma of His devotees.

Note: Karma is the accumulated result of deeds done in former births. There are two kinds of karma - one is bad action and the other is good action.
திருவிலிச்சிலதேரமணாதர்கள் 
உருவிலாவுரைகொள்ளேலும் 
பருவிலாலெயிலெய்துபராய்த்துறை 
மருவினான்றனைவாழ்த்துமே. 10

திருஇலிச் சிலதேர், அமண் ஆதர்கள், 
உரு இலா உரை கொள்ளேலும்! 
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை 
மருவினான்தனை வாழ்த்துமே!

பொருள்: புண்ணியமில்லாத திலராகிய புத்தர்களும், சமணர்களாகிய கீழ்மக்களும், கூறும் 
பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை 
எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளி இருக்கும் இறைவனை 
வாழ்த்துவீர்களாக.

குறிப்புரை: திரு - சிவஞானம். தேரர் - புத்த சமயத்தினர். ஆதர் - கீழ்மக்கள். பருவில் - 
(மலையாகிய) பெருத்த வில். எயில் - திரிபுரம். வாழ்த்தும் - வாழ்த்துங்கள். 
Buddhists are non-virtuous. The Samanars are base people. Do not listen to the meaningless moral speeches of these two groups of people. You adore, praise and worship Lord Civan enshrined in this town who by using the big Mēru mountain as His bow, shot an arrow and destroyed the three fortresses of the Asuraas and saved the world.

செல்வமல்கியசெல்வர்பராய்த்துறைச் 
செல்வமேற்சிதையாதன 
செல்வன்ஞானசம்பந்தனசெந்தமிழ் 
செல்வமாமிவைசெப்பவே. 11

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் 
செல்வமேல், சிதையாதன 
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், 
செல்வம்ஆம், இவை செப்பவே.

பொருள்: செல்வங்கள் நிறைந்து விளங்கும் திருப்பராய்த் துறையில் சிவஞானச் செல்வர்கள் 
நிறைந்து வாழ்கின்றனர். இத்தலத்தில் வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் சிவபெருமான் 
எழுந்தருளி உள்ளார். இந்தச் செல்வப் பெருமானைப் போற்றி அருட்செல்வரான 
ஞானசம்பந்தன் பாடி அருளிய அழிவற்ற இந்தச் செந்தமிழ்ப் பாடல்களைப் பொருள் 
உணர்ந்து பாட வல்லவர்க்கு எல்லாச் செல்வங்களும் தாமாகவே வந்தடையும்.

குறிப்புரை: சிதையாதன செந்தமிழ் இவை செப்பச் செல்வமாம் எனக்கூட்டுக. 
Scholars having spiritual wisdom as also material wealth do live in Tiru-p- paraai-th-thurai in good number. Lord Civan enshrined in this town is the repository of the ultimate salvation of all the souls. Gnaanasambandan who owns a wealth of divine grace, sang this hymn on the Lord of Tiru-p-paraai-th-thurai. Those who can recite this everlasting pure Tamil hymn will enjoy all material wealth in this world and divine grace as well.

திருச்சிற்றம்பலம்

135ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
136. திருத் தரும புரம்

திருத்தல வரலாறு:

திருத்தருமபுரம் என்ற திருத்தலமானது சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம் ஆகும். 
காரைக்கால் - திருநள்ளாறு பேருந்து வழியில் உள்ளது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு 
பெற்றமையின் இப்பெயர் எய்தியது. பிரமதேவரும் பூசித்துப் பேறு பெற்றுள்ளார். திருநீலகண்ட 
யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு ௭ழுந்தருளியபோது, 
பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிக்காவிடில் திருஞான சம்பந்தர் பாடல் 
சிறக்காது என்றனர். கேட்ட பாணர் வருந்தித் திருஞான சம்பந்தரிடம் முறையிட்டனர். அவரும் 
“மாதர் மடப்பிடி” என்னும் பதிகத்தை ஓதினர். பாணனார் யாழிலிட்டு வாசிக்க இயலாமையை 
உறவினர்க்கு உணர்த்தினர். யாழையும் உடைக்கச் சென்றனர். திருஞான சம்பந்தர் தடுத்து, 
இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவன் பெயர் யாழ்மூரி நாதர். இறைவியின் பெயா் 
மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி, சதாமதுராம்பிகை. தீர்த்தம் தர்மதீர்த்தம். தருமை ஆதீன 
அருளாட்சியில் விளங்குவது. இடம் காரைக்காலில் இருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
மயிலாடுதுறைக்கு அருகாமையில் உள்ள தருமை ஆதீன மடத்தின் தலைமடமும், ஞானபுரீசுவரர் 
திருக்கோவிலும் உள்ள ‘தருமபுரம்’ என்கிற தலம் வேறு. திருநள்ளாறு - காரைக்கால் பேருந்து 
வழியில் உள்ள திருத்தருமபுரம் என்ற ஊர் முற்றிலும் வேறு என்று உணர்க. இந்த திருத்தருமபுரம் 
என்ற ஊர் தான் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர் என்பதை அறிக.

பதிக வரலாறு:

திருவேட்டக்குடியை வணங்கிய ஆளுடைய பிள்ளையார் திருத்தருமபுரத்தை 
அடைந்தபோது, திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாய்வழிச் சுற்றத்தார் அனைவரும் அவரை 
எதிர்கொண்டு வணங்கினார்கள். பாணனார், சுவாமிகள் திருப்பாடல்களை யாழிலிட்டு வாசிக்கும் 
புண்ணியப்பேறு பொருந்தினேன் என்று புகன்றார். அவர்கள், நீர் யாழில் இட்டு வாசிப்பதால்தான் 
அப்பாடலின் சிறப்பு உலகத்தில் பரவுவதாயிற்று என்றார்கள். இதனைக் கேட்ட பாணர் மனம் 
நடுநடுங்கி அவர்கள் உண்மை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற திருவுள்ளத்தால் சம்பந்த 
சுவாமிகளின் திருவடியை வணங்கி, யாழில் அடங்காத திருப்பதிகம் ஒன்று அருளிச் செய்ய 
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிள்ளையார் மக்களது கண்டத்திலும் யாழிலும் இசைநூலில் சொல்லப்பட்ட எல்லா 
முயற்சியிலும் அடங்காத 'மாதர் மடப்பிடி’ என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார். பாணர் 
இதனை யாழிலிட்டு வாசிக்கத் தொடங்கி முடியாமை கண்டு, மனம் உளைந்து, இக்கருவியன்றோ 
இவர்களுக்கு இத்தகைய எண்ணத்தை அளித்து என்னையும் ஈடழித்தது என, அதனை 
உடைக்கப்புக்கார்.

பிள்ளையார் அதனைத் தடுத்து, ‘ஐயரே! சிவசக்தியின் திருவிளையாட்டெல்லாம் 
இக்கருவியில் அமையுமோ ? முடிந்த அளவு முயறலே முறை’ என்று அமைதிகூறி, யாழை அவர் 
கையில் தந்தார். அதனால் இப்பதிகம் யாழ்மூரியாயிற்று (மூரி - வலிமை. யாழ்மூரி யாழைக் 
காட்டிலும் இசை வன்மை வாய்ந்தது என்பது பொருள்). 
136. THIRU-TH-DARUMA-PURAM

HISTORY OF THE PLACE

      This sacred place is to the south of river Cauvery in Chola Naadu and is on the bus route connecting Kaaraikkaal and Thirunallaaru. It is one km west of Kaaraikkaal. It got its name as Tharuman of the Paandavars offered worship here. Biraman also had offered worship here.

      God is known as Yaazhmoorinaathar and the Goddess exists with the names Madhuraminnammai, Thenamirthavalli and Sadhaamadhuraambikai. The sacred ford is Tharuma Theerththam.

      This is the birthplace of Thiruneelakanda Yaazh-p-paanar's mother. When the saint Thiru-Gnaana-Sambandar came here, relatives of Paanar made claims that the saint's hymns will not be musically sweet unless Paanar plays the verses of Thiru- Gnaanasambandar in his instrument - Yaazh. Paanar mentally pained to hear such a statement from his relatives. He, therefore, appealed to Sambandar about the wrong misunderstanding for which he regretted. He, therefore, requested Sambandar to sing a special hymn, which could not be played in his Yaazh. Saint Thiru-Gnaana-Sambandar then sang the hymn beginning with, 'Maatar Madappidi'. Paanar demonstrated to his relatives his inability to accompany the singing with his yaazh and was about to smash his instrument. Saint Thiru-Gnaana-Sambandar stopped Paanar from breaking his Yaazh and asked him to play it to the best of his ability.

This temple is under the spiritual administration of the holy Dharumai Aadheenam.

திருச்சிற்றம்பலம்

136. திருத்தருமபுரம்  
பண் : யாழ்மூரி 
ராகம் :

மாதர்மடப்பிடியும்மடஅன்னமுமன்னதோர் 
நடையுடைம்மலைமகள்துணையெனமகிழ்வர் 
பூதஇனப்படைநின்றிசைபாடவுமாடுவர்  
அவர்படர்சடைந்நெடுமுடியதொர்புனலர் 
வேதமொடேழிசைபாடுவராழ்கடல்வெண்டிரை 
யிரைந்நுரைகரைபொருதுவிம்மிநின்றயலே 
தாதவிழ்புன்னைதயங்குமலர்ச்சிறைவண்டறை 
யெழில்பொழில்குயில்பயில்தருமபுரம்பதியே. 1

மாதர் மடப்பிடியும் மடஅன்னமும் அன்னது ஓர் 
நடை உடை(ம்) மலைமகள் துணை என மகிழ்வர், 
பூதஇனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர், 
அவர் படர்சடை(ந்) நெடுமுடியது ஓர் புனலர், 
வேதமொடு ஏழ்இசை பாடுவர் - ஆழ்கடல் வெண்திரை 
இரை(ந்) நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே 
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை 
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

பொருள்: திருத்தருமபுரத்தைத் தமது பதியாகக் கொண்டு வீற்றிருக்கும் சிவபெருமான், 
இளம் பெண் யானையையும் இள அன்னத்தையும் போன்ற பெருமித, மென்மையான 
நடையினை உடைய மலைமகளான உமையம்மையைத் தமது துணைவியாகக் கொண்டு 
மகிழ்ந்திருப்பவர். இவர் பூதப் படைகள் நின்று இசைபாட திருநடனம் ஆடுபவர். விரிந்த 
சடைகளை உடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்திருப்பவர். வேதகீதங்களையும் 
ஏழிசைகளையும் பாடுபவர். இந்தப் பதியில் ஆழ்கடலில் வெண்மையான அலைகள் 
ஆரவாரத்துடன் நுரைகளோடு கரையில் மோதுகின்றன. அந்தக் கடற்கரையில் வளர்ந்து 
நிற்கும் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் பாடுகின்றன. 
அழகிய பொழில்களில் குயில்கள் கூவுகின்றன.

குறிப்புரை: மலைலகளைத் துணையாகக்கொண்டு மகிழ்ந்தவரும், பூதப்படை இடைபாட ஆடுபவரும்
கங்கைச் சடையரும், வேதத்தையும், கீதத்தையும் பாடுபவரும் ஆகிய இறைவர் இடம் தருமபுரம் 
என்கின்றது. பிடி- பெண் யானை. உமாதேவியின் பெருமித  நடைக்குப் பெண்யானையும், நடையின்
மென்மைக்கு அன்னமும் உவமமாயிற்று. தருமபுரம் நெய்தலைச் சார்புடையதாதலின் புன்னை 
கூறப்பட்டது. 
Lord Civan rejoices in having Paarvathi Devi as His helpmate consort. Her walking steps coincide with the step of a young and alluring female elephant as well that of young swan. He dances while His goblin hosts stand around and recite musical songs. He sustains in His long and broad matted hair the river Ganges. He Himself sings the Vedas in seven different modes. This Civan's place of residence is Thiru-th- daruma-puram. Here the white waves in the nearby deep sea, are roaring and dash against the shores with all the foam. In the surrounding place the Alexandrian laurel trees flourish with full blossomed flowers with pollen grains, are flourishing honeybees humming and flying, reach these flowers. The attractive Indian cuckoos are cooing in the groves. These two alluring notes are heard all around, to the enjoyment of the people in this city. Such fertile and famed city is Thiru-th-daruma-puram.

Note: The comparison of elephant's walking is to reveal her greatness; while that of swan is for her softness in nature.

பொங்குநடைப்புகலில்விடையாமவர்ஊர்திவெண் 
பொடியணிதடங்கொள்மார்புபூணநூல்புரள 
மங்குலிடைத்தவழும்மதிசூடுவராடுவர் 
வளங்கிளா்புனலரவம்வைகியசடையர் 
சங்குகடற்றிரையாலுதையுண்டுசரிந்திரிந் 
தொசிந்தசைந்திசைந்துசேரும்வெண்மணற்குவைமேல் 
தங்குகதிர்ம்மணிநித்திலமெல்லிருளொல்கநின் 
றிலங்கொளிந்நலங்கெழில்தருமபுரம்பதியே. 2

பொங்கும் நடைப் புகல் இல் விடைஆம் அவர் ஊர்தி, வெண்- 
பொடி அணி தடம் கொள் மார்பு பூணநூால் புரள, 
மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர், 
வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர் - 
சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து 
ஒசிந்த அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல்குவைமேல் 
தங்கு கதிர்(ம்) மணிநித்திலம் மெல்இருள் ஒல்க நின்று, 
இலங்கு ஒளி(ந்) நலங்கு எழில்-தருமபுரம்பதியே.

பொருள்: சிவபெருமானார் தமது ஊர்தியாக,சினம் பொங்கிய நடையும் உவமை சொல்ல 
முடியாததாயும் உள்ள விடையை வைத்திருப்பவர். திருநீறு அணிந்த அகன்ற மார்பில் 
பூணுநூல் துலங்க, ஆகாயத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவர். வளமை தரும் 
கங்கையும் கிளர்ந்து எழும் அரவமும் தங்கும் சடையை உடையவர். இப்பெருமான் 
எழுந்தருளி இருக்கும் பதியானது திருத்தருமபுரம் ஆகும். இப்பதியில், கடல் அலைகளால் 
அலைக்கப்பட்ட சங்குகள், சரிந்தும், இரிந்தும், ஒருந்தும், அசைந்தும், இசைந்துமாக 
வெண்மையான மணல் குவியல்கள் மேல் தங்குகின்றன. அங்கு அவை ஒளிமிகுந்த 
முத்துக்களை ஈனுகின்றன. அந்த ஒளியால் மெல்லிய இருள் அகன்று, இந்தப் பதியானது 
ஒளியால் மிளிர்கின்றது.

குறிப்புரை: ஊர்தி விடையாம் நீறணிந்த மார்பில் பூணுநூல் புரள மதிசூடுவர், ஆடுவர், கங்கையும் 
அரவும் தங்கிய சடையர் பதி தருமபுரம் என்கின்றது. பொங்கிய நடையோடு, வேறு அடைக்கலத் 
தானமில்லாத விடையாம் அவர் வாகனம் என்பதாம். மங்குல் - ஆகாயம். சங்கு கடல் அலையால் 
மோதப்பெற்று மணற் குவியல்மேல் தங்கியதால் ‘ஈனப்பெற்ற முத்துக்கள் இருளோட்டி விளங்கும் 
நலங்கெழுமும் தருமபுரம்' என்க. சங்கு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் மணல் எனக் 
கூட்டுக. இது மணல் மேட்டின்மேல் சங்கு ஏறிய அருமைப்பாட்டை அறிவிக்கின்றது. 
Lord Civan owns a peerless bull for His transport, a bull that in all fury moves in majestic steps. In His broad chest He smears the holy ashes, over which the sacred thread rolls as waves. The crescent moon normally crawls in the sky. Civan dances sustaining this moon on His head. Along with the snake, He entertains in His matted hair the river Ganges which confers prosperity on all. This Civan's resting place is Thiru-th-daruma-puram. In the sea adjoining this town the chanks (Shells) brought by the waves, dashes against the sand dunes and drops a good number of chanks. These chanks move here and there creating a sound and start shaking; then they crack and finally they break and deliver the pure white pearls over the sand dunes. The dazzling brightness of these pearls drives away the darkness. Bright light spreads all over the area.

விண்ணுறுமால்வரைபோல்விடையேறுவராறுசூ 
டுவாவிரிசுரியொளிகொள்தோடுநின்றிலங்கக் 
கண்ணுறநின்றொளிருங்கதிர்வெண்மதிக்கண்ணியர் 
கழிந்தவரிழிந்திடும்முடைதலைகலனாப் 
பெண்ணுறநின்றவர்தம்முருவம்மயன்மால்தொழவ் 
வரிவையைப்பிணைந்திணைந்தணைந்ததும்பிரியார் 
தண்ணிதழ்முல்லையொடெண்ணிதழ்மெளவல்மருங்கலர் 
கருங்கழிந்நெருங்குநல்தருமபுரம்பதியே. 3

விண்உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு 
சூடுவர், விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக் 
கண்உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர், 
கழிந்தவர் இழிந்திடும் முடைதலை கலனாப் 
பெண் உற நின்றவர், தம் உருவம்(ம்) அயன் மால் தொழ(வ்) 
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் - 
தண்இதழ் முல்லையொடு, எண் இதழ் மெளவல், மருங்கு அலர் 
கருங்கழி(ந்) நெருங்கு நல் - தருமபுரம்பதியே.

பொருள்: சிவபெருமான் வானளாவி நிற்கும் பெரிய மலை போன்ற விடை ஊர்தியில் 
ஏறிவருபவர். கங்கையை அணிந்தவர். விரிந்தும் மிளிர்ந்தும் சுருண்டும் ஒளியால் விளங்கும் 
தோடு காதில் திகழ, கண்ணைக் கவரும் வெண்மையாக ஒளிரும் பிறைமதியைத் தலையில் 
சூடியிருப்பவர். முடைநாற்றம் நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டிருப்பவர்.
பிரமனும் திருமாலும் தொழுமாறு விளங்குபவர். உமையம்மையைக் கூடிப் பிணைந்தும், 
இணைந்தும், அணைத்தும் தம்திருமேனியின் ஒருகூறாகவும் கொண்டிருப்பவர். 
இப்பெருமான் எழுந்தருளி இருக்கும் பதியானது திருத்தருமபுரம் ஆகும். இத்தலத்தில் கரிய 
உப்பங்கழிகள் நிறைந்து இருக்கின்றன. குளிர்ந்த இதழ்களை உடைய முல்லை மலர்களும், 
எட்டு இதழ்களை உடைய மல்லிகை மலர்களும் மணம் வீசுகின்றன.

குறிப்புரை: விண்ணளாவிய மலைபோன்ற விடையை ஊர்தியாக ஏறுவர்; கங்கையைச் சூடுவர்; தோடு 
விளங்க, பிறைக்கண்ணி சூடுவர்; பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு, பெண் பாதியாக நின்றவர்; 
தம் வடிவத்தை அயனும் மாலும் தொழ நின்றவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. மால்வரை - பெரிய 
மலை. கண்ணியர் - தலை மாலையை உடையவர். கழிந்தவர் - இறந்தவர். மெளவல் - மல்லிகை. 
மல்லிகைக்கு எட்டிதழ் உண்மை உணர்த்தப் பெறுகின்றது. 
Lord Civan rides on His bull vehicle and moves around. This bull is sky tall and appears like a big mountain. He entertains the river Ganges on His matted hair. His expanded ear-ring is round and conspicuously dazzling in His ear lobe. He sustains the crescent moon on His matted hair. This moon is bright and dazzling so as to attract the eyes. He holds the skull as His food bowl which stenches. He embraces His consort Umaa Devi, gets united with her, and keeps her on the left half of His body and never parts with her. He exposed His visible form to enable Brahma and Vishnu to worship Him. This Civan is entempled in the famed city of Thiru-th-daruma-puram. In this town the Arabian jasmine having cool petals as well as the Himalayan heart leaved smooth jasmine flowers having eight petals blossom and spread their fragrance all around. There are plenty of saltpans in this town. Such a famed town is Thiru-th- daruma-puram.

வாருறுமென்முலைநன்னுதலேழையொடாடுவர் 
வளங்கிளர்விளங்குதிங்கள்வைகியசடையர் 
காருறநின்றலரும்மலர்க்கொன்றையங்கண்ணியர் 
கடுவ்விடைகொடிவெடிகொள்காடுறைபதியர் 
பாருறவிண்ணுலகம்பரவப்படுவோரவர் 
படுதலைப்பலிகொளல்பரிபவந்நினையார் 
தாருறுநல்லரவம்மலர்துன்னியதாதுதிர் 
தழைபொழில்மழைந்நுழைதருமபுரம்பதியே. 4

வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர், 
வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர், 
கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றைஅம்கண்ணியர், 
கடு(வ்) விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர், 
பார் உற விண்ணுலகம் பரவப்படுவோர், அவர் 
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார் - 
தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் 
தழை பொழில் மழை(ந்) நுழை தருமபுரம்பதியே.

மொருள்: சிவபெருமான் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையுடன் 
திருநடனம் ஆடுபவர். வளமையைக் கொடுக்கும் ஒளியை உடைய பிறைமதியைச் 
சூடி யிருப்பவர். கார்காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவர். விரைந்து 
செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டிருப்பவர். அச்சந்தரும் இடுகாட்டைத் தமது 
இருப்பிடமாகக் கொண்டிருப்பவர். மண்ணுலகத்தாராலும் விண்ணுலகத்தாராலும் 
வணங்கப்படுபவர். கபாலத்தில் பலிகொள்வதைக் கீழ்மையாகக் கருதாதவர். பாம்பை
மாலையாக அணிந்திருப்பவர்.இப்பெருமான் எழுந்தருளி இருக்கும் பதியானது, 
மகரந்தங்களை மென்மையாக உதிர்க்கும் மலர்கள் நிறைந்த தழைகள் செறிந்த மேகங்கள் 
தவழும் பொழில்கள் சூழ்ந்த இருத்தருமபுரம் எனும் நகரமாகும்.

குறிப்புரை: பெண்ணோடு ஆடுவர், பிறை விளங்கு சடையர், கொன்றை மாலை அணிந்தவர், 
விடைக்கொடி ஏந்தி இடுகாட்டைப் பதியாகக் கொண்டவர். விண்ணும் மண்ணும் துதிக்கப்படுபவர். 
மண்டையோட்டில் பிச்சையேற்றலை அவமானமாகக் கருதாதவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. வார் 
- கச்சு, பதி - இடம். பரிபவம் - அவமானம். 
Lord Civan dances along with His consort Umaa Devi who has worn a corset on her soft breasts. He sustains the crescent moon in His matted hair, which emits bright light for the prosperity of this earth. He wears the garland of cassia flowers which blossom in the rainy season. The insigne of His flag is the fast running bull. He recognises the fearful burning ground as His rightful dancing place. He is adored both by the celestial folks and by the people of this earth. He accepts alms in the decayed human skull without considering it a disgrace. He wears the snake in His body as garland. This Lord Civan is entempled in Thiru-th-daruma-puram. In the natural gardens that surround this city, clouds appear crawling over the tall trees. Plenty of leaves and flowers are held in the trees. These flowers shed their pollen grains on to the ground and give a grand appearance. Such a famed city is Thiru-th-daruma-puram.

நேருமவர்க்குணரப்புகிலில்லைநெடுஞ்சடைக் 
கடும்புனல்படர்ந்திடம்படுவ்வதொர்நிலையா் 
பேருமவர்க்கெனையாயிரமுன்னைப்பிறப்பிறப் 
பிலாதவருடல்தடர்த்தபெற்றியாரறிவார் 
ஆரமவர்க்கழல்வாயதொர்நாகமழஃகுறவ் 
வெழுஃகொழும்மலர்கொள்பொன்னிதழிநல்லலங்கல் 
தாரமவர்க்கிமவான்மகளூர்வதுபோர்விடை 
கடிபடுசெடிபொழில்தருமபுரம்பதியே. 5

நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக் 
கடும்புனல் படர்ந்து இடம் படு(வ்)வது ஒர் நிலையர்; 
பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு 
இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்? 
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழ(ஃ)கு உற(வ்) 
எழு(ஃ) கொழு(ம்)மலர் கொள் பொன் இதழிநல்அலங்கல்
தாரம் அவர்க்கு இமவான் மகள்; ஊர்வது போர் விடை - 
கடி படு செடி பொழில் - தருமபுரம்பதியே.

பொருள்: ஆராயுமிடத்து, சிவபெருமானுக்கு உவமையாகச் சொல்லத்தக்கவர் எவருமே 
இல்லை. விரைவாக ஓடும் கங்கைக்கு தமது நீண்ட சடையை இருப்பிடமாகக் கொடுத்த 
நிலையினர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். அவருக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் 
இல்லை. தம்மை எதிர்ப்பவர்களைச் சினந்து அழிக்கும் அவரின் பெரு வலிமையை எவர்
அறிவார்? தீயைப் போன்ற நஞ்சினை உடைய நாகமே அவருடைய ஆபரணம்! அழகுற 
விளங்கும் பொன்நிறக் கொன்றையே அவரது பூமாலை. இமவான் மகளான பார்வதி 
தேவியே அவரது மனைவி. அவர் ஊர்ந்து செல்வதோ போர்ப் பயிற்சியுடைய இடபம். 
மணம் நிறைந்த ஒளிமிளிரும் பொழில்களால் சூழப்பட்ட திருத்தருமபுரமே அவரது பதி.

குறிப்புரை: அவருக்கு ஒப்பு ஆராயப்புகில் யாரும் இல்லை. கங்கை புகுந்தும் இடம்படும் சடையை 
உடையவர். அவர்க்குப் பேரும் ஆயிரம். பிறப்பு இறப்பு இல்லாதவர். இவரது மாறுபட்ட பகைவரைக் 
கொல்லும் வெற்றியை அறிவார் யார்? அவர்க்கு ஆரம் பாம்பு. அழகுற எழுந்த கொழுமலராகிய 
கொன்றையே மாலை. மனைவி மலை மகள். வாகனம் இடபம். தருமபுரம் பதி என்கின்றது. நேர் - ஒப்பு. 
இதழி - கொன்றை. அலங்கல் - மாலை. தாரம் - மனைவி. கடி - மணம். 
If you deeply ponder, there is no one equal to Him anywhere in the cosmos. He allowed and gave room to the fast flowing river Ganges in His long matted hair. He has a thousand names. From the very beginning, He is without birth and death. Who knows the depth of His valour in putting an end of those who opposed Him. His garland is the snake that has fire-like poison. Richly grown gold-like cassia flowers are used for His garland. Paarvathi Devi, daughter of the Himaalayan king is His consort. His vehicle is the 'war experienced' bull. Such is Thiru-th-daruma-puram, where Lord Civan has His abode. This place is encircled by natural gardens full of bright fragrant flowers. Such famed city is this.

கூழையங்கோதைகுலாயவள்தம்பிணைபுல்கமல் 
குமென்முலைப்பொறிகொள்பொற்கொடியிடைத்துவர்வாய் 
மாழையொண்கண்மடவாளையொர்பாகமகிழ்ந்தவர் 
வலம்மலிபடைவிடைகொடிகொடும்மழுவ்வாள் 
யாழையும்மெள்கிடவேழிசைவண்டுமுரன்றினந் 
துவன்றிமென்சிறஃகறையுறந்நறவ்விரியுந்நல் 
தாழையுஞாழலுந்நீடியகானலினள்ளலி 
சைபுள்ளினந்துயில்பயில்தருமபுரம்பதியே. 6

கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க, மல்கு 
மென்முலை, - பொறி கொள் பொன்-கொடி இடைத், துவர்வாய், 
மாழைஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்; 
வலம் மலி படை, விடை கொடி கொடு(ம்)மழு(வ்)வாள் - 
யாழையும் எள்கிட ஏழ்இசை வண்டு முரன்று, இனம் 
துவன்றி, மென்சிற(ஃ)கு அறை உற(ந்)நற(வ்) விரியும் நல்- 
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை 
புள்இனம் துயில் பயில் தருமபுரம்பதியே.

பொருள்: மலர் மாலை சூடிய கூந்தலும், தழுவப்பெறும் மெல்லிய தனங்களும், 
மினுமினுக்கும் மேனியும், கொடிபோன்ற இடையும், பவளம் போன்ற சிவந்த வாயும், ஒளி 
மிளிரும் கண்களையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு 
மகிழ்ந்திருப்பவர் சிவபெருமான் ஆவார். இப்பெருமான் வெற்றியைத் தரும் மழுவைத் தமது 
படைக்கலமாக வைத்திருப்பவர். விடையைக் கொடியாகக் கொண்டிருப்பவர். இவர் 
உறையும் பதியானது திருத்தருமபுரம் ஆகும். இப்பதியில் யாழ் இசையையும் வெல்லுமாறு 
வண்டுகள் ஏழிசையும் பாடி தமது மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் கடற்கரைச் 
சோலைகளில் தேன் நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் 
நிறைந்துள்ளன. இச்சோலைகளில் உள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவைகள் 
துயில் கொள்ளுகின்றன. இத்தகைய தலம் தருமபுரம் ஆகும்.

குறிப்புரை: உமையாளை ஓர் பாகம் மகிழ்ந்தவர். அவர்க்குப் படைமழுவும் வாளும்; கொடி விடை; பதி 
தருமபுரம் என்கின்றது. கூழை - கூந்தல். துவர் வாய் - சிவந்த வாய். மாழை - மாவடு, படை கொடு மழு 
வாள் எனவும் விடை கொடி எனவும் இயைக்க. என்கிட - இகழ. நற - மணம் ஞாழல் - புலிநகக் 
கொன்றை. அள்ளல் - சேறு. 
Lord Civan rejoices in having His consort Umaa Devi on the left half of His body. She wears stringed flowers in her long bunch of hair. With breasts so soft and waist so thin as a creeper, the colour of her lips matches the colour of coral gem, and her eyes so bright much like the tender unripped bursted mango. Civan holds in one of His hands the battle axe as His victorious war weapon. This Lord Civan is entempled in Thiru-th- daruma-puram. This city is full of fragrant screw pine groves, the flowers of which are rich with honey. The humming honey bees fly towards these flowers. Their humming noise suppresses the music of the lute and make for a seven mode music. They were able to produce this sound by the very fast movement of their thin wings. In these gardens Fetid cassia flowers also blossom in large numbers. In the muddy groves adjoining the seashore, musical birds take rest during night hours. Such is the famed city Thiru-th-daruma-puram.

தேமருவார்குழலன்னநடைப்பெடைமான்விழித் 
திருந்திழைபொருந்துமேனிசெங்கதிர்விரியத் 
தூமருசெஞ்ச டையில்துதைவெண்மதிதுன்றுகொன் 
றைதொல்புனல்சிரங்கரந்துரித்ததோலுடையர் 
காமருதண்கழிநீடியகானலகண்டகங் 
கடல்லடைகழியிழியமுண்டகத்தயலே 
தாமரைசேர்குவளைப்படுகிற்கழுநீர்மலர் 
வெறிகமழ்செறிவ்வயல்தருமபுரம்பதியே, 7

தே மரு வார்குழல் அன்ன நடைப் பெடை மான்விழித் 
திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய, 
தூமரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை 
தொ ல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல்உடையர் - 
கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம் 
கடல்(ல்) அடை கழி இழிய, முண்டகத்து அயலே 
தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர்மலர் 
வெறி கமழ் செறி(வ்) வயல் __ தருமபுரம்பதியே.

பொருள்: இனிமையும் மணமும் உள்ள நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண் மான் 
போன்ற விழி, ஒளிரும் அணிகலன்கள் ஆயன பொருந்தும் உமையம்மையை  ஒரு 
பாகமாகக் கொண்டிருப்பவர் சிவபெருமான் ஆவான். இப்பெருமான், சிவந்ததும், ஒளியால் 
விரிந்தும் இருக்கும் தூய சடையில், வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், 
பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடியிருப்பவர். தமது 
உடையாக உரித்த புலி, மான் ஆகியவைகளின் தோல்களை உடுத்தியிருப்பவர். 
இப்பெருமான் உறைந்திருக்கும் பதி திருத்தருமபுரம் ஆகும். இப்பதியில் அழகியதும், 
குளிர்ந்ததுமான உப்பங்கழிகள் உள்ளன. அவற்றில் நீர் முள்ளிகள் உள்ளன. இதனை
அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில், தாழை மரங்களும் நிறைந்துள்ளன. இங்குள்ள 
நீர்நிலைகளில் உள்ள தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகிய மலர்கள் நறுமணத்தைப் 
பரப்புகின்றன. இத்தகைய வளமும், வயல்களும் செறிந்தது தருமபுரம் ஆகும்.

குறிப்புரை: உமையுடன் கூடிய மேனி ஒளி விரிய, செஞ்சடையில் மதி கொன்றை கங்கை சிரம் இவற்றை 
மறைத்து, தோலை உடுத்தவரான இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. தேமரு - மணம் பொருந்திய, 
குழலையும் நடையையும் விழியையும் உடைய திருந்திழை என்க. துதை - செறிந்த. கரந்து - மறைய 
அணிந்து. கானல கண்டகம் - கடற்கரைச் சோலையில் உள்ள தாழை. முண்டகம் - கடல் முள்ளி. படுகு 
- மடு. 
Lord Civan concorporates Umaa Devi on the left half of His body. Umaa's long flowering tresses emit always sweet smell. Her mode of walking resembles that of a swimming swan. Her eyeball is like that of a female deer. She wears on her body perfectly shaped, very attractive ornaments. On Civan's red matted hair radiating red bright light, He sustains the white crescent moon. He decorates His head with a big bunch of cassia flowers. He entertains the age old river Ganges also in His head. He wears the circlet made up of leaves in His head which conceals all other things in the head. He wears in His body the stripped hide of the deer and tiger as His dress. This Civan is entempled in Thiru-th-daruma-puram. In this city rich paddy fields are in plenty. A large number of screw pine trees grow in the seaside gardens which are next to the cool and attractive backwater area. Also in the backwater area where the seawater gushes, the holly leaved bear's breech (Acanthus illicifolius) and in the watershed area flowers of lotus, blue Indian water lily, the sweet smelling red water lily - they all spread sweet smell all around the area. Such a famed city is Thiru-th- daruma-puram.

தூவணநீறகலம்பொலியவ்விரைபுல்கமல் 
குமென்மலர்வரைபுரைதிரள்புயம்மணிவர் 
கோவணமும்முழையின்னதளும்முடையாடையர் 
கொலைம்மலிபடையொர்சூலமேந்தியகுழகர் 
பாவணமாவலறத்தலைபத்துடையவ்வரக் 
கனவ்வலியொர்கவ்வைசெய்தருள்புரிதலைவர் 
தாவணஏறுடையெம்மடி கட்கிடம்வன்தடங் 
கடல்லிடுந்தடங்கரைத்தருமபுரம்பதியே. 8

தூ வணநீறு அகலம் பொலிய(வ்), விரை புல்க மல்கு 
மென்மலர் வரை புரை திரள்புயம்(ம்) அணிவர்; 
கோவணமும்(ம்) உழையின்(ன்) அதளும்(ம்) உடை ஆடையர்; 
கொலைம(ம்) மலி படை ஓர் சூலம் ஏந்திய குழகர்; 
பா வணமா அலறத் தலைபத்து உடை அவ்(வ்) அரக்கன(வ்) 
வலி ஓர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் 
தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்-வன் தடங்- 
கடல்(ல்) இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே.

பொருள்: சிவபெருமான், தூய வெண்ணிறத் திருநீறு துலங்கும் மார்பினர். மலை போன்று 
திரண்ட தோள்களில் மணம் நிறைந்த மலர் மாலையை அணிந்தவர். கோவணத்தையும் 
மான் தோலையும் ஆடையாக உடையவர். அழிக்கும் தொழிலில் வல்ல ஆயுதமான 
சூலத்தை ஏந்திய அழகர். பத்துத் தலைகளை உடைய அரக்கனான இராவணன் 
சாமகீதங்கள் பாடி அலறுமாறு அவனுடைய வலிமையை அழித்தவர். பின்னர் அவனுக்கு 
அருள்புரிந்த தலைவனும் இவரே. தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தமது 
ஊர்தியாக உடையவர். இப்பெருமைகளைக் கொண்ட எம் அடிகளின் இடமானது, 
வலிமையான பெரிய கடல் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் 
திருத்தருமபுரம் ஆகும்.

குறிப்புரை: வெண்ணிறத் திருநீறு மார்பில் விளங்க, மணம் பொருந்திய. மலரைப் புயத்து அணிவர்; 
கோவணமும், மான்தோலும் உடுப்பவர்; சூலமேந்திய இளையர்; இராவணற்குத் துன்பஞ் செய்து, பின் 
அருளும்செய் தலைவர்; தாவும் ,நிறம் பொருந்திய இடபத்தையுடைய எம்மடிகட்கு இடம் தருமபுரம் 
என்கின்றது. அகலம் - மார்பு உழை - மான். அதள் - தோல். அரக்கன் வலி ஓர் கவ்வை செய்து 
(அவன்) பாவண்ணமா அலற அருள்புரி தலைவர் எனக் கூட்டுக. பாவண்ணமா - சாமகீதமாக. கவ்வை - 
துன்பம். தா வண்ண ஏறு - தாவிச் செல்லும் நிறம் பொருந்திய இடபம். 
Lord Civan's chest, comes into view with radiance. He has smeared therein pure white holy ashes. He has worn on His mountain like strong shoulders a thick and fragrant garland made up of soft flowers. He wears a fore lap cloth on His loins. He wears the deer hide as His waist-cloth. This beautiful Civan holds in one of His hands the trident which is the best weapon in killing enemies. Raavanan the king of Asuraas with ten heads got crushed under mount Kailas and could not get out of it. He then started singing hymns in praise of Lord Civan. Though initially Civa reduced his valour and made him weep; He later graced him and gave him boons. He owns the bull as His vehicle which is capable of galloping fast. This Lord Civan is entempled in Thiru-th-daruma-puram. This city is situated by the side of the sea where fierce big waves dash against the sand, to form a huge high level sand beach where the city has developed.

வார்மலிமென்முலைமாதொருபாகமதாகுவர் 
வளங்கிளர்மதியரவம்வைகியசடையா் 
கூர்மலிசூலமும்வெண்மழுவும்மவர்வெல்படை 
குனிசிலைதனிம்மலையதேந்தியகுழகர் 
ஆர்மலியாழிகொள்செல்வனுமல்லிகொள்தாமரைம் 
மிசையவன்னடிம்முடியளவுதாமறியார் 
தார்மலிகொன்றையலங்கலுகந்தவர்தங்கிடந் 
தடங்கடல்லிடுந்திரைத்தருமபுரம்பதியே. 9

வார் மலி மென்முலை மாது ஒருபாகம்அது ஆகுவர்; 
வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்; 
கூர் மலி சூலமும், வெண்மழுவும்(ம்), அவர் வெல் படை; 
குனிசிலை தனி(ம்) மலைஅது ஏந்திய குழகர்; 
ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை(ம்)- 
மிசைஅவன்(ன்), அடி(ம்) முடி அளவு தாம் அறியார்; 
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம் - 
தடங்கடல்(ல்) இடும் திரைத் தருமபுரம்பதியே.

பொருள்: சிவபெருமான் கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் 
கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூர்மையான சூலமும், 
வெண்மையான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலன்கள். ஒப்பற்ற மேரு 
மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், 
அக இதழ்களை உடைய தாமரையில் உறையும் பிரம்மாவும், அடிமுடிகளைக் காணாதவாறு 
அயரச் செய்தவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலர் மாலையை விரும்புபவர். 
இப்பெருமான் தங்கியிருக்கும் இடம் எதுவென்றால், அது, பெரிய கடலின் அலைகள் வந்து 
தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை: மென்முலை மாதை ஓர் பாகங்கொண்டவர்; மதியும் அரவும் வைகிய சடையர்; மழுவும் சூலமும் 
அவர் படை; அவர் வில்மலை. அயனாலும் மாலாலும் அறிய முடியாதவர். கொன்றை மாலையை 
விரும்பியவர்; இவர் தங்குமிடம் தருமபுரம் என்கின்றது. தனிமலை - ஒப்பற்ற மேருமலை. ஆர் மலி ஆழி - 
ஆரக்கால் நிறைந்த சக்கரம் ஆழிகொள் செல்வன் - திருமால். அல்லி - அகவிதழ். தார்மலி கொன்றை - 
மாலையாகப் பூக்கும் கொன்றை. அலங்கல் - மாலை. 
Lord Civan holds Umaa Devi, His consort on the left half of His body. She wears a corset over her soft breast. In His matted hair the crescent moon and the snake are abiding peacefully. Civa holds the sharp trident and the white battle axe representing war weapons for His victory. He is the youth to hold the incomparable Mēru mountain, bend it and use it as His bow. He was incomprehensible to both Thirumaal who holds the spiked discus as his war weapon and to Brahma who is seated inside the petalled lotus flower. These two became weary and failed in their attempts to see the crown and feet of our Lord which is immeasurable and finally fainted. Civan desires to wear the garland made up of cassia flowers which blossom in big bunches. This Civan is entempled in Thiru-th-daruma-puram which is washed by the waves of the sea.

புத்தர்கடத்துவர்மொய்த்துறிபுல்கியகையர்பொய்ம் 
மொழிந்தழிவில்பெற்றியுற்றநற்றவர்புலவோர் 
பத்தர்களத்தவமெய்ப்பயனாகவுகந்தவர் 
நிகழ்ந்தவர்சிவந்தவர்சுடலைப்பொடியணிவர் 
முத்தனவெண்ணகையொண்மலைமாதுமைபொன்னணி 
புணர்ம்முலையிணைதுணையணைவதும்பிரியார் 
தத்தருவித்திரளுந்தியமால்கடலோதம்வந் 
தடர்ந்திடுந்தடம்பொழில்தருமபுரம்பதியே. 10

புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய்ம் 
மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர், 
பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன்ஆக உகந்தவர்; 
நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்; 
முத்து அன வெண்நகைஒண் மலைமாது உமை பொன் அணி 
புணர்(ம்) முலைஇணை துணை அணைவதும் பிரியார் - 
தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து 
அடர்ந்திடும் தடம் பொழில் - தருமபுரம்பதியே.

பொருள்: புத்தர்களாகிய தத்துவவாதிகளும், உறிகளைக் கைகளில் ஏந்தித் திரியும் 
சமணர்களும் கூறுகின்ற பொய்யான உரைகளை நீக்கிய, நல்ல தவத்தை உடையவர்களும், 
புலவர்கள், பக்தர்கள் ஆகியவர்களின் மெய்த்தவத்தை விரும்புபவர் சிவபெருமான் ஆவான், 
இப்பெருமான்அன்புக்கு நெகிழ்பவர். வன்புக்கு சினப்பவர். சுடலைப் பொடியை 
அணிபவர். முத்துப் போன்ற பற்களை உடையவளும், ஒளி பொருந்திய மலைமகளான 
உமையம்மையின் தனங்களைத் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாமல் இருப்பவர்.
இப்பெருமான் உறைந்திருக்கும் பதியானது, கடலின் பெரிய அலைகள் வந்து மோதுகின்ற 
பொழில்கள் உடைய திருத்தருமபுரம் ஆகும்.

குறிப்புரை: புத்தரும் சமணரும் கூறும் பொய்யினின்றும் நீங்கி, அழிவில்லாத தன்மைபெற்ற புலவர்கள் 
பத்தர்கள் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், சுடலைப்பொடி அணிபவரும், உமையைக்கூடி, பிரிதலைச் 
செய்யாதவரும் ஆகிய இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. கடதுவர் மொய்த்து - கடுவிதையால் 
உண்டாக்கப் பெற்ற துவர் நெருங்கி. உறி புல்கிய கையர் - உறி தூக்கிய கையை உடைய சமணர். 
உகந்தவர் - மகிழ்ந்தவர். தத்து அருவி - தாவிக் குதிக்கின்ற அருவி. மால்கடல் - பெரிய கடல். 
கருங்கடலுமாம். 
Buddhists profess that nature only is god. This is their philosophy. They do not accept that Civan is the Supreme Being. The Samanars roam about holding the hoop (or net work of rope) in their hands. Lord Civan realises and graces:
a) Those devotees who do not listen to the false propaganda of these two groups of people.
b) Those who perform good penance.
c) Those poets and other devotees who do penance and consider it as true
divine duty.
He relents on those who shows love to god and to others. He gets angry with those who are hard at heart. He smears His body with holy ashes available in the burial ground. He never separates Himself from His consort Paarvathi Devi. Paarvathi Devi, the queen of the Hills, is the fairest woman whose white teeth resemble those of pearl gem. This Civan is entempled in Thiru-th-daruma-puram. Here the sea waves dash against the shores of the city.

பொன்னெடுநன்மணிமாளிகைசூழ்விழவம்மலீ 
பொரூஉபுனல்திருஉவமர்புகல்லியென்றுலகில் 
தன்னொடுநேர்பிறவில்பதிஞானசம்பந்தனஃ 
துசெந்தமிழ்த்தடங்கடல்தருமபுரம்பதியைப் 
பின்னெடுவார்சடையிற்பிறையும்மரவும்முடை 
யவன்பிணைதுணைகழல்கள்பேணுதலுரியார் 
இன்னெடுநன்னுலகெய்துவரெய்தியேபோகமும் 
உறுவர்கள்ளிடர்பிணிதுயரணைவ்விலரே. 11

‘பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ 
பொரூஉ புனல் திருஉ அமர் புக(ல்) லி’ என்று உலகில் 
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன(ஃ)து 
செந்தமிழ்த் தடங்கடல் - தருமபுரம்பதியைப் 
பின்நெடுவார்சடையில் பிறையும்(ம்) அரவும்(ம்) உடையவன் 
பிணைதுணைகழல்கள் பேணுதல் உரியார், 
இன்நெடுநன் உலகு எய்துவர்; எய்தியே போகமும் 
உறுவர்கள்(ள்); இடர், பிணி, துயர், அணை(வ்) இலரே.

பொருள்: பொன்னால் ஆன நல்ல மணிகளால் இழைத்ததுமான உயர்ந்த மாளிகைகளால் 
சூழ்ந்ததும், திருவிழாக்கள் நிறைந்ததும், கரைகளில் மோதும் நீர்நிலைகள் நிறைந்ததும், 
திருமகள் உறைவதும், தனக்கு உவமை சொல்ல இயலாததுமான நகர் புகலி என்னும் 
நகரமாகும். இப்பதியின் மன்னன் ஞானசம்பந்தன் ஆவார். அவர் பாடிய கடல் போன்று 
பரந்து விரிந்த செந்தமிழ்ப் பாடல்களால், பின்னியுள்ள நீண்ட சடைமுடியில் பிறையையும் 
பாம்பையும் உடைய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாட வல்லவர்கள் பெரிய 
நல் உலகை எய்துவர். நல் போகங்களைப் பெறுவர். இடர் செய்யும் பிணிதுயர் நீங்கப் 
பெறுவர். என்றும் இன்பம் உறுவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தப் பெருமான் செந்தமிழால் திருத்தருமபுரப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற 
இறைவன் கழல்களைப் பேணுதல் உரியார் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; இடரும் பிணியும் எய்தப் 
பெறார் என்கின்றது. விழவம் மலீ - விழாக்கள் நிறைந்த, பொருஉ புனல் - கரையை மோதுகின்ற நீர், 
திருஉருஉ ஆயிற்றுச் சந்தம் நோக்கி, புகல்லி - புகலி; விரித்தல் விகாரம். தன்னோடு நேர்பிற இல்பதி - 
தனக்குச் சமம் வேறில்லாத நகரம்; என்றது சீகாழியை. பேணுதல் - தியானித்தல். இப்பதிகத்தைச் 
சொல்லி இறைவனைத் தியானிப்பவர்கள் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; அவர்களைப் பிணியும் 
துயரும் பொருந்தா; என்றும் இன்பம் பெறுவர். 
Gnaanasambandan is the lord of the incomparable Pukali city. This city has many well built mansions all around. The walls in these mansions are inlaid with precious gold and gems of high quality. Here the temple festivals take place very often. There are a good number of watersheds in and around the city. In these pools, water is always full and therefore it dashes against the banks always. The goddess of wealth - Thiru-magal - always resides in this city - this means that this is a wealthy city. Lord Civan is enshrined in this city. Gnaanasambandan has sung this hymn - a garland of verses in pure Tamil language. The elaboration of this poem on a very large scale as big as the sea, and its propagation is always on the increase. Lord Civan's long matted hair is in many strands twining with one another. He keeps the crescent moon and the snake together on His matted hair. Those who adore the two Holy Feet of Civa and worship Him will get salvation and reach the big and enjoyable Swarga Loka. They will enjoy life with good prosperity. The afflictions that cause disease and agony will vanish. They will be ever happy in this life.

திருச்சிற்றம்பலம்

136ஆம் பதிகம் முற்றிற்று 
முதல் திருமுறை முற்றிற்று 
சிவமயம்

திருச்சிற்றம்பலம்

 

Related Content

திருப்பதிகக் கோவை

அகத்தியர் தேவாரத் திரட்டு

திருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்

உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த "திருப்பதிகக் கோவை"

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng