logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை English Translation Part 3

தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 
 

Thirugyanasambandhar Thevaram - First Thirumurai - Part 3

 English Translation and Tamil Explanation

(Copyright Courtesy: Socio Religious Guild, Tirunelveli)

 

பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 4

 

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த முதல் திருமுறை - பகுதி 3
தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 

Thirugyanasambandhar Thevaram - First Thirumurai - Part 2
English Translation and Tamil Explanation
(Copyright Courtesy: Socio Religious Guild, Tirunelveli)

பகுதி - 1
65. காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லவனீச்சரம்

பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

அடையார் தம்புரங்கள் மூன்று மாரழலிலழுந்த' 
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடங் 
கடையார் மாடநீடி யெங்குங்கங்குல் புறந்தடவப் 
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. 1

அடை ஆர் தம் புரங்கள் முன்றும் ஆர் அழலில் அழுந்த, 
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் - 
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவப், 
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சரமே.

பொருள்: காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரம் என்னும் தலம், 
வானவெளியைத் தொடும் மதில்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு, வாயில்களோடு கூடிய 
உயர்ந்த மாடவீடுகள் எங்கும் உள்ளன. இத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். 
இப்பெருமான், பகைவர்களாகிய அசுரர்களின் மூன்று நகரங்களையும் பெருந்தீயில் அழுந்தி 
அழிக்க இடப வாகனத்தில் ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகர் ஆவார்.

குறிப்புரை: திரிபுரங்கள் தீயில் அழுந்தச் சீறும் வித்தகர் இடம் பல்லவனீச்சரம் என்கின்றது. அடையார் - 
பகைவர். விடையார் மேனியர் - இடபத்தில் ஆரோகணித்த திருமேனியார். கங்குல் - ஆகாயம். படை - 
ஆயுதம் பல அடுக்கு. 
Lord Civan, the knower of every thing got wild with the Asura foes. 
He came riding on HIS bull, majestically and destroyed the three citadels in an uncontrollable fire. HE abides in Thiru-p-pallava-neech-charam which has tall thresholded mansions surrounded by strong fort walls which brush through the skies above. 
Note: Pukaar was a commercial mart for many nations. It was the summer capital of the Cholas. In the shrine Civa is entempled majestically.
எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறு மெந்தை பிரானிமையோர் 
கண்ணா யுலகங்காக்க நின்றகண் ணுதனண்ணுமிடம் 
மண்ணார் சோலைக்கோல வண்டு வைகலுந் தேனருந்திப் 
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. _- 2

எண்ணார் எயில்கள்மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர் 
கண் ஆய உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்- 
மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி, 
பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

பொருள்: எம் தந்தையாகிய சிவபெருமான், பகைவர்களாகிய அசுரர்களின் திரிபுரங்களையும் 
சினந்து அழித்தவர் ஆவார். இவர் தேவர்களுக்குக் கண்களாக விளங்குபவர். இவ்வுலகைக் 
காக்கின்ற சிவபெருமான், விரும்பி அமர்ந்திருக்கின்ற தலம் காவிரிப் பூம்பட்டினத்துப் 
பல்லவனீச்சரம் ஆகும். இத்தலத்தில் நன்கு அமைக்கப்பட்ட சோலைகள் உண்டு. இந்தச் 
சோலைகளில் நாள்தோறும் அழகிய வண்டுகள் தேனை உண்டு இசைபாடுகின்றன.

குறிப்புரை: முப்புரஞ்சீறிய முதல்வன் தேவர்கட்குக் கண்ணாய் உலகம் காக்கும் கண்ணுதலும் ஆவான்; 
அவனது இடம் இது என்கின்றது. எண்ணார் - பகைவர். கண்ணுதல் - சிவன். மண் - பூமி. மண்ணுதல் 
- உண்டாக்குதல். பண்ஆர் செய்யும் - பாடும். 
Lord Civan, our Father, got wild with the hostile Asuraas and destroyed their three fortresses. HE protects and bestows HIS grace on Devaas and therefore is known as Eye of Devaas. Also HE sustains this earth through HIS third eye in HIS forehead. This Lord Civan abides in Thiru-p-pallava-neech-charam, wherein well-formed gardens flourish. Here the bees daily suck honey from the flowers and create music by their humming noise. 
Note: Verse one speaks of Civa as Vittakan the One altogether different from any other. HIS third eye in the forehead is symbolic of HIS peculiar uniqueness.

மங்கையங் கோர்பாகமாக வாணிலவார் சடைமேற் 
கங்கையங் கேவாழவைத்த கள்வனிருந்தவிடம் 
பொங்கையஞ் சேர்புணரியோத மீதுயாரபொய் கையின்மேற் 
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 3)

மங்கை அங்கு ஓர்பாகம் ஆக, வாள்நிலவு ஆர் சடை மேல் 
கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம் - 
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின்மேல் 
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

பொருள்: பள்ளங்கள் நிறைந்த ஆழமான கடலின் வெள்ள நீரால், அண்மையில் உள்ள 
நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளன. அந்த நீர் நிலைகளில் தாமரை 
மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இத்தகைய செழிப்பான தலம் காவிரிப் பூம்பட்டினத்துப் 
பல்லவனீச்சரம் ஆகும். இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் உமையம்மையை 
ஒருபாகமாகக் கொண்டுள்ளார். ஒளிபொருந்திய பிறையைத் தன் சடையில் 
சூடியிருக்கின்றார். கங்கை நதி என்ற நங்கையையும் தன் சடையின்மேல் வாழ வைத்துள்ள 
கள்வர் இவர்.

குறிப்புரை: மங்கை ஓர் பாகத்து இருக்கவும் சடைமேற் கங்கையையும் வைத்த கள்வனிடம் இது 
என்கின்றது. வாள் நிலவு - ஒளி பொருந்திய நிலவு. பொங்கு அயஞ்சேர் புணரி - மிகுந்த பள்ளம் 
பொருந்திய கடல். அயம் - பள்ளம். அயமிழியருவி' என்னும் கலியிலும் இப்பொருட்டாதல் தெளிக. 
பங்கயம் - தாமரை. 
Lord Civa allows lady Ganga also to thrive in HIS bright matted hair along with the crescent moon, despite the fact that HIS consort Umaa Devi also forms part of HIS body. This Lord Civan abides in Thiru-p-pallava-neech-charam where natural pool waters rise with the level of the sea due to the floodwaters of the sea. In these pools lotus flowers are in full bloom.

தாரார் கொன்றை பொன்றயங் கச்சாத்திய மார்பகலம் 
நீரார் நீறுசாந்தம் வைத்த நின்மலன் மன்னுமிடம் 
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினாற் 
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே. 4

தார் ஆர் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பு-அகலம் 
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் - 
போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் 
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீ ச்சரமே.

பொருள்: மாலையாகவே பூக்கும் கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு 
சிவபெருமான் தன் திருமார்பில் சூடியுள்ளார். திருமார்பின் பரப்பில் நீரில் குழைத்த 
சாம்பலை சந்தனத்தைப் போல பூசியுள்ளார். இந்தக் குற்றமற்ற சிவபெருமான் எழுந்தருளிய 
இடம் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம். இங்கு போரில் பொருந்திய கூரிய வேல் 
போன்ற கண்களை உடைய மாதர்களும் இளைஞர்களும் சேர்ந்து இசை பாடுகின்றனர். 
அதனைக் கேட்க மக்கள் வெள்ளம் போல் திரண்டுள்ள தலமாகும்.

குறிப்புரை: கொன்றை சாத்திய மார்பில் நீறும் சாந்தும் சாத்திய நிமலனிடம், மாதரும் மைந்தரும் 
பாடலினால் பூமிக்கண் இன்பம் நுகரும் தலமாகியது இது என்கின்றது. தாரார் கொன்றை - 
மாலையாகவே பூக்கும் கொன்றை. போரார் வேற்கண் - போரில் பொருந்திய வேல் போலும் கண். 
Lord Civan, the flawless Supreme Being wears in HIS chest garlands made of cassia flowers that glitter like gold. HE smears HIS chest with holy ashes mixed with water forming sandalwood like paste. HE abides in Thiru-p-pallava-neech-charam where young girls whose eyes are sharp like martial spears, and valiant lads assemble and sing the divine songs tunefully. People gather in strength to hear the concert. 
Note: Pukaar is a place of festivity. Singing and dancing characterise the material and spiritual prosperity of this divine places.

மைசேர் கண்டரண்ட வாணா்வான வருந்துதிப்ப 
மெய்சேர் பொடியரடி யாரேத்த மேவியிருந்தவிடங் 
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே 
பைசேரர வாரல்குலார் சேர்பல்லவ னீச்சரமே. 5

மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப, 
மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம் - 
கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே, 
பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சரமே.

பொருள்: கருமை நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர். மண்ணின் மக்களும் 
விண்ணின் தேவர்களும் துதிக்கத் தக்கவர். மேனிமிசைத் திருநீறு பூசிய நிமலன். 
அடியார்கள் புகழ விரும்பி எழுந்தருளிய இடம் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் 
ஆகும். பாம்பின் படம்போன்ற அல்குலை உடைய இளமகளிர் கைகளில் நிறைய 
வளையல்களை அணிந்து ஆசையோடும் காதலோடும் சிவபெருமானின் திருவடிகளைச் சேர 
இங்கு வந்து கூடுகிறார்கள்.

குறிப்புரை: நீலகண்டரும், நீறு பூசியவருமாகிய சிவபெருமான் அடியார்கள் ஏத்த அமர்ந்திருந்த இடம் 
இத்தலம் என்கின்றது. மை - விடம். மேவி - விரும்பி. கைசேர் வளையாராகிய அல்குலார், 
ஆசையோடும் காதலோடும் கழலைச்சேரும் பல்லவனீச்சரம் எனக்கூட்டிப் பொருள் காண்க. விழைவு - 
பற்று. காதல் - பற்றுமுற்றி இன்றியமையாத தன்மையால் எழுந்த விருப்புள்ளம். பை - புடம். 
The neck of Lord Civa, the pure Supreme Being, is dark blue in colour. To enable the devotees on earth as well the heavenly Devaas to offer worship and to adore Him, HF has smeared HIS body with holy ashes, and is enshrined in Thiru-p-pallava-neech- charam. Here in this city, young girls whose fore lap is like that of the hood of cobra and who have worn a good number of bangles in their hands, gather to offer worship to Lord Civan's Holy Feet with warm attachment and intense desire. 
Note: This verse gives an inkling of the Kundalini yoga rife in Pukaar.

குழலினோ சைவீணை மொந்தை கொட்ட முழவதிரக் 
கழலினோ சையார்க்க ஆடுங்கட வுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோ தந்தெண்டி ரைமொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.  6

குழலின் ஒசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, 
கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் - 
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, 
-. பழிஇலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சரமே.

பொருள்: குழலோசைக்கு ஏற்ப வீணை ஒலிக்கின்றது. மொந்தை கொட்டுகிறது. முழவு 
ஒலிக்கிறது. காலில் அணிந்துள்ள வீரக்கழல், நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல் 
இசைக்கிறது. இத்தகைய இசை ஒலிகளோடு ஆடும் கடவுளாகிய சிவபெருமான் 
எழுந்தருளிய இடம் புகார் நகரில் உள்ள பல்லவனீச்சரம் ஆகும். இங்கு சுழிகள் நிறைந்த 
கடலில், காவிரி ஆற்றின் வெள்ள நீர் தெளிந்த நீரை முகர்ந்து எறிகின்றது. இந்நகரில் 
பழியற்ற நன்மக்கள் வாழ்கின்றனர்.

குறிப்புரை: குழல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க ஆடும் கடவுள் அமர்ந்த இடம் இத்தலம் என்கின்றது. 
மொந்தை என்பது ஒருவகைப் பறையாதலின் கொட்ட என்றார். பயில்புகார் - பழகுகின்ற 
காவிரிப்பூம்பட்டினம். 
In tune with the music of the flute, the Veena, the one sided drum (open at one end) and similar instruments resound. Also the general drum roars; the .warrior's anklets on the legs with small bells, resound in tune with the dance. With all these different musical notes 'Lord Civa enshrined in Thiru-p-pallava-neech- charam dances merrily. In this town, efficient well-versed people, all of them above board, live. The crystal clear waters of the river Cauvery out of the floodwater, gush into the whirling sea of this town. 
Note: Veena is a stringed instrument dear to Lord Civa. Monthai and drum are percussion instruments.

வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச்சாடி விண்ணோர் 
வந்தெலா முன்பேண நின்றமைந்தன் மகிழ்ந்த இடம் 
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின் 
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.  7

வெந்தல்ஆய வேந்தன் வேள்வி வேர்அறச் சாடி, விண்ணோர் 
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் - 
மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின் 
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீ ச்சரமே.

பொருள்: தகுதியில்லாத கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை
அழித்தவர். அதன்பின் தேவர்கள் எல்லோரும் தன்னை விரும்பி வழிபட நின்ற 
பெருவீரனாகிய சிவபெருமானது இடம் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் ஆகும். 
இங்கு மென்மையான மல்லிகைக் கொடி, வளர்ந்து பரவியுள்ள புன்னை, குராமரம் 
ஆகியவற்றின்மீது படர்ந்துள்ளது.

குறிப்புரை: தக்கன் யாகத்தை அழித்துத் தேவரெல்லாரும் வழிபட நின்ற இறைவனது இடம் இத்தலம் 
என்கின்றது. மந்தல் - மென்மை. 
King Dhakkan once arranged for a big oblation and invited a large number of undesirable celestial folks to partake in it (As Civa's consort Daakshaayani was dishonoured in this sacrifice). Civa commandeered HIS aide Veerabadrar to destroy the sacrifice. Arising out of this calamity, all the Devaas came very eagerly to Lord Civa and offered worship in Thiru-p-pallava-neech-charam where HE is entempled. In this town the tender jasmine vine spreads all over the Punnai tree as well in the shrubs that are found in barren lands . 
Note: The devastation of Daksha's sacrifice affirms the supremacy of Civa. Saivism frowns at pride and haughtiness. Devastation was actually carried out by Veerabadra as per orders of Civa.

தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக் கவவன் 
தாரரக்குந் திண்முடிகளூன் றியசங்கரனூர் 
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப் 
பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 8

தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன் 
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் - 
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர, 
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சரமே.

பொருள்: சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப் 
பின்னி அகழ்ந்து எடுக்க முயன்றான். அவனது மாலைகள் அழுத்தும் வலிமையான பத்துத் 
தலைகளையும் தனது கால் விரலால் ஊன்றி நெரித்தவர் சங்கரன் என்று சொல்லப்படும் 
சிவபெருமான். இவரது ஊர் புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரம் ஆகும். இங்கு 
மேகங்கள் வந்து அழுந்துவதால், மேலெழுந்து வரும் கடல்நீரால் எக்காலத்திலும் அழியாது 
உணரப்படும் சிறப்புடையது இத்தலம். மக்கள் அக்கு மணி மாலை பூண்டு போற்றி வாழும் 
பெருமையை உடையது இத்தலம்.

குறிப்புரை: இராவணன் முடிகள் நெரியத் தாளூன்றிய சங்கரன் ஊர் இத்தலம் என்கின்றது. தெற்றி 
எடுக்க - கைகளைப் பின்னி எடுக்க. தார் அரக்கும் - மாலைகள் அழுத்துகின்ற. அரக்குதல் - பதித்தல். 
கார் அரக்கும் - மேகங்கள் முகக்கும். பாரர் அக்கம் பயில் புகார் - மக்கள் உருத்திராக்கங்களைப் 
பயில்கின்ற காவிரிப்பூம்பட்டினம். 
Raavanan who was riding on his elegant chariot once tried to lift by his hands, the highly famed mount Kailas. Lord Sankaran (Civan) pressed HIS toe and crushed his ten mighty heads, adorned with weighty wreaths. This Lord Sankaran (Civan) abides in Thiru-p-pallava-neech-charam. This city thrives without any destruction even when the sea from which clouds suck water, rising up and raging fiercely. Devotees in this town wear the necklace of sacred beads (அக்குமணிமாலை or உருத்திராக்க மாலை- Eloeocarpus ganitrus tree), dwell here and hail Lord Civan therein. 

Note: Civa metes out punishment when necessary and it is but an act of HIS grace.

அங்கமாறும் வேதநான்குமோ துமயன்நெடுமால் 
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்றங்குமிடம் 
வங்கமாரு முத்தமிப்பிவார் கடலூடலைப்பப் 
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 9

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால், - 
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் - 
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார்கடல்ஊடு அலைப்ப, 
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சரமே.

பொருள்: ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் முறையே ஓதும் பிரமனும் 
திருமாலும் தம் கண்களால் தேடுமாறு உயர்ந்து நின்றவர் சங்கரன் என்று சொல்லப்படும் 
சிவபெருமான். இவர் தங்கும் இடம் புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும். இங்கு 
மரக்கலங்கள் வந்து போய்க் கொண்டிருக்கும் கடலானது முத்துக்களையும் சங்குகளையும் 
அலைகளால் அலைத்துத் தருகின்றது. இங்கு குற்றமற்ற சான்றோர்கள் வாழ்கின்றனர்.

குறிப்புரை: வேதனும் நெடுமாலும் கண்ணால் தேட நின்ற பெருமான் உறையுமிடம் இது என்கின்றது. 
கண்ணாலும் என்ற உம்மை கருத்தால் தேட வேண்டியதை அவர்கள் அறியாமையால் கண்ணால் தேட 
அதற்கும் வெளிப்பட்டு நின்ற இறைவன் என உயர்வைச் சிறப்பித்து நின்றது. வங்கம் - கப்பல். 
Lord Sankaran (Civan) is enshrined in Kaaviri-p-poom-pattinaththu Thiru-p- pallava-neech-charam whose inhabitants are blameless people. Brahma and Thirumaal recite regularly the four Vedas and the six auxiliaries of Vedas. Even this Brahma and Thirumaal could not find out and see Lord Civan, in spite of search with their own eyes, though Civa was standing near to them as a tall and big flame of fire. Ships are plying now and then in the nearby sea. The sea waves carry pearls and shells and deposit them on the shores. 
Note: Pukaar is the habitat of the blemishless. Here flourish devotees flawlessly.

உண்டு டுக்கையின்றியே நின்றூர்நக வேதிரிவார் 
கண்டு டுக்கைமெய்யிற் போர்த்தார் கண்டறியாதவிடந் 
தண்டு டுக்கைதாளந் தக்கைசார நடம்பயில்வார் 
பண்டி டுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 10

உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார், 
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம் - 
தண்டு உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார் 
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சரமே.

பொருள்: சமணர்கள் அளவுக்குமீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரிகின்றனர். 
புத்தர்கள் அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்துக் 
கொண்டு உழலுகின்றனர். இவர்கள் கண்டு அறியாத இடம் பல்லவனீச்சரம் ஆகும். இங்கு 
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை போன்ற வாத்தியங்கள் முழங்க நடனம் புரிபவர் 
சிவபெருமான். இவர் அடியவர்களின் துன்பங்களைப் பண்டு முதல் தீர்த்து அருளுபவர்.

குறிப்புரை: நிறையத் தின்று ஆடையின்றியே திரியும் சமணரும், ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும் 
கண்டறியாத இடம் இது என்கின்றது. முன்னிரண்டடியிலுள்ள உடுக்கை என்பது ஆடை என்ற
பொருளிலும், மூன்றாமடியில் உள்ள உடுக்கை என்பது வாத்தியம் என்னும் பொருளிலும் வந்துள்ளன. 
இடுக்கன் - துன்பம். 
The Samanars over eat and roam about nacked, derided by the citizens. Though the Buddhists observe the behaviour of these Samanars, they cover their body with some clothes but wander in the streets aimlessly. Both of them could not observe and realise the greatness of the city Thiru-p-pallava-neech-charam. Here in this town Lord Civan has been wiping out the inconvenience of HIS devotees since long. HE is ever dancing here to the orchestration of four musical instruments viz., 
1. The Indian Lute (Thandu ) 
2. A Kind of Tambourine (Udukkai) 
3. Cymbal (Thaalam) and 
4. Tabour (Thakkai ).

பத்தரேத் தும்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் 
அத்தன் றன்னை யணிகொள் காழிஞான சம்பந்தன்சொல் 
சித்தஞ் சேரச்செப்பு மாந்தா தீவினைநோயிலராய் 
ஒத்த மைந்தவும் பர்வானிலுயர் வினொடோங்குவரே. 11

பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்து எம் 
அத்தன் தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் 
சித்தம் சேரச்செப்பும் மாந்தர் தீவினைநோய் இலராய், 
ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

பொருள்: பக்தர்கள் போற்றும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் எம் 
தலைவனாகிய சிவபெருமான் விளங்குகின்றார். இப்பெருமானை, அழகிய சீகாழிப் பதியில் 
தோன்றிய ஞானசம்பந்தன் போற்றி இப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்தை மனம் 
ஒன்றிச் சொல்லும் மக்கள், தீவினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த 
ஒப்புடையவர்கள் ஆவார்கள். இவர்கள் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை: ஒத்தமைந்த - தம் இயல்புகளுக்கு ஏற்ப அமைந்த. சம்பந்தன் பல்லவனீச்சரத்துப் பல்லவன 
நாதரைத் தோத்திரித்த இப்பாடல் பத்தையும் மனம் ஊன்றிச் சொல்லும் மக்கள் தீவினையும் நோயும் 
இலராய் வானுலகில் வாழ்வார் என்கின்றது. 
Lord Civan, our Chief of Thiru-p-pallava-neech-charam is ever adorned by HIS devotees. Gnaanasambandan hailing from the famed city of Seekaazhi sang this hymn on this Lord in chaste Tamil. Those who can offer worship to this Lord by chanting this hymn with sincere devotion will get rid of their evil karma, will have good health without any ailment and will live with fame and respect in the world of the Devaas.


திருச்சிற்றம்பலம்

65ஆம் பதிகம் முற்றிற்று


சிவமயம்

66. திருச்சண்பைநகர்

திருத்தலவரலாறு:

முதலாம் பதிகம் பார்க்க.

திருச்சிற்றம்பலம்

66. திருச்சண்பைநகர் 
பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

பங்கமேறு மதிசேர் சடையார் விடையார்பல வேதம் 
அங்கமாறு மறைநான் கவையு மானார் மீனாரும் 
வங்கமேவு கடல்வாழ் பரதர் மனைக்கே நுனைமூக்கின் 
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1

பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம் 
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் - மீன் ஆரும் 
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனைமூக்கின் 
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பைநகராரே.

பொருள்: கடற்கரை ஊராகிய சண்பை நகரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவர் 
கலைகுறைந்த பிறைமதி சேர்ந்த சடையையும், விடை ஊர்தியை உடையவராகவும் 
விளங்குகின்றார். அவரே பலவாக விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் 
விளங்குபவர். இங்கு, மீன்களும் தோணிகளும் நிறைந்த கடலருகே பரதவர்கள் 
வாழுகின்றனர். அவர்களின் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள்
முத்துக்களை ஈனும்.

குறிப்புரை: கூன்பிறை அணிந்த சடையாரும், விடையாரும், வேதம் அங்கம் ஆனாரும் சண்பை நகரார் 
என்கின்றது. பங்கம் - கூனல்; குற்றம் என்பாரும் உளர். சிவன் சடை சேரத்தகும் பிறைக்குக் 
குற்றமின்மை தெளிவு. வங்கம் - தோணி. பரதர் - செம்படவர். நுனை மூக்கின் சங்கம் - கூரிய 
மூக்கினை உடைய சங்குகள். கடல் வாழ் சங்கு பரதர் மனையேறி முத்தமீனும் என்றது பிறவிக் கடலில் 
ஆழ்வாரும் வினை நீங்கும் காலம் வரின் சண்பை நகர் சார்ந்து பேரின்பம் எய்துவர் என்று 
குறிப்பித்தவாறு. 
Lord Civan has the crescent moon in His matted hair. The Bull is His vehicle for transport. He is indeed the author of the four Vedas and its six subsidiaries which diverged further into several chapters. This Lord Civan abides in Tiru-ch-chanbai- nagar where, in the nearby sea, ships are plying now and then. Fishes thrive here in plenty. Fishermen live near the seashore. The sharp nosed shells carried by the waves dash into the front yard of these fishermen and burst, dropping pearls. 
Note: Civa is the live-form of the four Vedas and the six angas. Cultivation of these is indeed adoration of Lord Civa.

சூதகஞ்சேர் கொங்கையா ளோர்பங்கர் சுடர்க்கமலப் 
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர் 
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த 
சாதகஞ்சேர் பாளைநீர் சேர்சண்பை நகராரே. 2

சூது அகம் சேர் கொங்கையாள் ஓர் பங்கர், சுடர்க் கமலப்- 
போது அகம் சோ புண்ணியனார், பூதகண நாதர் - 
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த 
சாதகம் சேர், பாளை நீர் சேர் சண்பைநகராரே.

பொருள்: சண்பை நகர் இறைவராகிய சிவபெருமான், சூது ஆடும் காயைப் போன்ற 
தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டிருக்கிறார். அவர், 
ஒளிபொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களுக்குத் 
தலைவர். இங்கு, வானகத்தே பறந்து திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணும் 
பொருட்டு, மேன்மை பொருந்திய மேகங்கள் மழைநீரைப் பெய்விக்கும். அழகிய குளிர்ந்த 
சோலைகளில் உள்ள தென்னை மற்றும் கமுகு மரங்களின் பாளைகளில் தேன் சேரும்.

குறிப்புரை: உமையொரு பாகர், செங்கமலப் போதில் வீற்றிருக்கும் புண்ணியனார் சண்பையார் 
என்கின்றது. சூதகம் சேர் - சூதாடும் காயை ஒத்த. பங்கர் - பாகத்தை உடையவர். சுடர் கமலப் போது 
அகஞ்சேர் - ஒளிவிடுகின்ற செந்தாமரையில் எழுந்தருளியுள்ள. மேதகம் - மேன்மை. விண்ணார்ந்த - 
மேகநீரை உண்ட. சாதகம் - சாதகப்புள். பாளை நீர்சேர் - தென்னை கமுகு முதலியவற்றின் பாளைகளில் 
தேன் சேர்ந்த. 
Lord Civan of Tiru-ch-chanbai-nagar abides in the dazzling lotus flower as an embodiment of virtue. He keeps His consort in the left half of His body whose breasts are similar to the gambling dice. He is the Chief of goblin hosts. For the chakara birds to subsist the rain falls from the selfless clouds (These birds subsist only on rain water and absorb it direct from the sky and they were always flying above the mid ocean area. Whenever ships pass by, they settle down in the deck for sometime). There are cool shady groves near the seacoast. Honey accumulates in the spathe of areca and coconut trees tht flourish in the beautiful and cool groves. 
Note: In classical Tamil, the breasts of a woman are compared to a dice. We do not know how the dice looked like in those days. The Chakara, it is said, subsisted on raindrops before they reached the land or sea. Lord Civan abiding in the Lotus - Note a similar description in திருக்குறள் - மலர்மிசை ஏகினான்.

மகரத்தாடு கொடியோ னுடலம் பொடிசெய் தவனுடைய 
நிகரொப்பி ல்லாத்தேவிக் கருள்செய் நீலகண்டனார் 
பகரத்தாரா வன்னம்பகன் றில்பாதம் பணிந்தேத்தத் 
தகரப்புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே. 3

மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய 
நிகர் ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீலகண்டனார் - 
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த, 
தகரப் புன்னை தாழைப் பொழில் சேர் சண்பைநகராரே.

பொருள்: தகரம், புன்னை, தாழை முதலிய மரங்கள் உள்ள பொழில்களால் சூழப்பட்ட 
சண்பை நகரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவரது திருவடிகளை நாரை, அன்னம், 
அன்றில் போன்ற பறவைகள் பணிந்து போற்றுகின்றன. இவர், மகர மீன் வரையப்பட்ட 
ஆடும் கொடியை உடைய மன்மதனின் உடலை எரித்து அழித்தவர். தனக்கு ஒப்பில்லாத 
அழகுடைய, மன்மதனின் மனைவியான இரதிதேவிக்கு, அருள் செய்த நீலகண்டரும் இவரே 
ஆவார்.

குறிப்புரை: மன்மதனை எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் செய்தவன் சண்பையான் 
என்கின்றது:' மகரத்து ஆடு கொடியோன் - மகரமீன் எழுதிய வெற்றி பொருந்திய கொடியுடையோன். 
நிகர் ஒப்பு; ஒருபொருட் பன்மொழி, தேவி என்றது இரதியை. அவளுக்கு மட்டும் மன்மதனை எழுப்பித் 
தந்ததை உணர்த்துவது. தாரா - சிறுநாரை. பகன்றில் - அன்றில். தகரப்புன்னை - தகரழும் 
புன்னையும். 
Lord Civan, 'Neela Kandar' (one whose neck is dark blue in colour) is entempled in Tiru-ch-chanbai-nagar where birds such as heron, swan and the nightingale of India worship Lord Civan's Holy Feet to the astonishment of everyone. The city is full of thick groves where fragrant and flowering trees such as wax flower dog-bane (Tabernae montana), mastwood also known as Alexandrian barrel (Calophyllum inophyllum) and screw pine (wild plant pandanas oderatissoma) flourish. Lord Civan once burnt the body of the god of love called Kaaman or Manmathan (comparable to Cupid, the Roman God of Love, son of Venus; also comparable to Eros, the Greek God of Love) whose ever flying flag has the shark fish as insignia of his flag. His wife Rathi Devi of incomparable beauty prayed to Lord Civan to restore life to her husband. Civan graced her request partially ordering that her husband will be visible only to her and not to anyone else.

மொய்வல் லசுரர்தேவர் கடைந்த முழுநஞ்சதுவுண்ட 
தெய்வர் செய்வுருவர் கரியகண்டர் திகழ்சுத்திக் 
கையர் கட்டங்கத்தர் கரியினுரியார் காதலாற் 
சைவர் பாசுபதாகள் வணங்குஞ் சண்பை நகராரே. 4

மொய் வலஅசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட 
தெய் வர், செய்யஉருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக் 
கையர், கட்டங்கத்தர், கரியின்உரியர் - காதலால் 
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பைநகராரே.

பொருள்: சைவர்களும், பாசுபதர்களும் அன்போடு வழிபடுகின்ற இறைவர் சண்பை நகர்ச் 
சிவபெருமான் ஆவார். இவர், வலிமை பொருந்திய அசுரர்களும், தேவர்களும், கடலைக் 
கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டு அருளிய தெய்வம் ஆவார். இவர் சிவந்த 
திருமேனியை உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தை உடையவர். திருநீறு 
கொண்டுள்ள சிப்பியைக் கையில் வைத்திருப்பவர். மழுப்படையை உடையவர். யானைத்
தோலைப் போர்த்தி இருப்பவர்.

குறிப்புரை: நஞ்சமது செய்த தெய்வர், செய்யர், கண்டங்கரியர், சுத்திக்கையர், மழுப்படையர் சண்பை 
நகரார் என அடையாளம் அறிவிக்கின்றது. கட்டங்கம் - மழு. சுத்தி - திருநீறு கொடுப்பதற்குத் 
தலையோட்டினால் இப்பி (Pearl Oyster Shell- சிப்பி) வடிவமாகச் செய்யப்பட்டது. 
Lord Civan is the Supreme Lord who swallowed the entire poison that came out of the sea when the mighty Asuras and Devas churned it. The complexion of Civan's holy body frame is crimson. His neck is of dark blue colour. In one of His hands He holds the Suththi (a small shell shaped container made of human skull, to keep holy ashes, in). In another hand He holds the battle-axe. He covers His body with the skin of an elephant. 
Note: Kattangkam: Civa's battle-axe.

கலமார் கடலுள் விடமுண்ட மரர்க்கமுத மருள்செய்த 
குலமார் கயிலைக்குன்ற துடையகொல்லை யெருதேறி 
நலமார் வெள்ளை நாளிகேரம் விரியாநறும்பாளை 
சலமார் கரியின் மருப்புக் காட்டுஞ் சண்பை நகராரே. 5

கலம் ஆர் கடலுள் விடம் உண்ட அமரர்க்கு அமுதம் அருள் செய்த 
குலம் ஆர் கயிலைக்குன்றுஅது உடையர், கொல்லை எருது ஏறி - 
நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை 
சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பைநகராரே.

பொருள்: மக்களுக்கு நன்மை தரும் மரம் தென்னையாகும். இதில் இருந்து மணம் மிக்கதும் 
வெண்மை நிறத்தோடு கூடியதுமான பாளை வெளிவரும். இந்தப் பாளை வஞ்சனைமிக்க 
யானையின் தந்தத்தைப் போலத் தோன்றும். இத்தகைய சோலை வளம் மிகுந்த சண்பை 
நகர் இறைவன், சிவபெருமான் ஆவார். இவர் மரக்கலங்கள் நிறைந்த கடலினுள் தோன்றிய 
விடத்தை உண்டு, அமரர்களுக்கு அருள் செய்தவர். எல்லா மலைகளுக்கும் மேம்பட்ட 
கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து இடபத்தில் ஊர்ந்து வருபவர்.

குறிப்புரை: தான் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்தவர் சண்பையார் என்கின்றது. கொல்லை 
எருது - முல்லை நிலத்து இடபம். நாளிகேரம் - தென்னை. நாளிகேரம் வெள்ளை விரியா நறும் பாளை 
கரியின் மருப்புக் காட்டும் எனக் கூட்டுக. கரியின் மருப்பு - யானைக் கொம்பு. சலம் - வஞ்சனை. 
யானைக்கபடம் என்பது வழக்காதலின் சலமார் யானை என்றார். 
Lord Civan of Tiru-ch-chanbai-nagar swallowed the poison that surged out of the sea, but gave the nectar to the Devas and graced them. In this sea a good number of ships ply now and then. Civa is the Lord of Mount Kailas which is the most renowned of all the mountains. He rides on a Bull. In this city of Tiru-ch-chanbai-nagar, a number of dense gardens flourish having coconut trees in plenty which are a munificent gift to humanity. From these coconut trees spinout white and fragrant spatha that bear a likeness to the tusk of deceptive elephant.

மாகரஞ் சேரத்தியின் தோல்போர்த்து மெய்ம்மாலான 
சூகரஞ் சேரெயிறு பூண்ட சோதியன் மேதக்க 
ஆகரஞ் சேரிப்பிமுத் தையந்தண் வயலுக்கே 
சாகரஞ் சேர்திரைக ளுந்துஞ்சண்பை நகராரே. 6, 7

மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன 
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் - மேதக்க 
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண்வயலுக்கே 
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

பொருள்: கடலில் வாழும் சிப்பிகள்' முத்துக்களைத் தருகின்றன. இந்த முத்துக்களை, 
அழகிய குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் நகர்த்திக் கொண்டு .வருகின்றன.
இத்தகைய செழிப்புள்ள சண்பை நகர் இறைவன், சிவபெருமான் ஆவார். இவர் நீண்ட 
கையினை உடைய யானையின் தோலை உரித்து தம் திருமேனியில் போர்த்தி உள்ளார். 
திருமாலின் பத்து அவதாரங்களின் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்டவர்.
இவர் ஒளிவடிவினர் ஆவார்.

குறிப்புரை: யானைத் தோலைப் போர்த்துப் பன்றிக் கொம்பை அணிந்த சோதியான் சண்பையான் 
என்கின்றது. மாகரம் - பெரிய கை. அத்தி - யானை. சூகரம் - பன்றி. ஆகரம் - கடல். திரைகள் 
முத்தை வயலுக்கே உந்தும் சண்பை என்க. 
Lord Civan who is enshrined in Tiru-ch-chanbai-nagar cloaked His divine body with the skin of an elephant that has a long trunk. Thirumaal, in one of his ten Avataars took the form of a hog. Civa adorns His divine dazzling body with the tusk of this hog. The waves of the sea near this town carry shells with embedded pearls splash on the shores and reach the cool fields nearby. In these fields shells open up and drop their pearls. 
Note: Pearl-diving is undertaken in many places. Kaazhi is a holy place towards which pearls are sent by the sea-waves.

இருளைப் புரையுநிறத் திலரக்கன் றனையீ டழிவித்து 
அருளைச் செய்யுமம் மான்னேரா ரந்தண் கந்தத்தின் 
மருளைச் சுரும்புபாடி யளக்கர் வரையார் திரைக்கையால் 
தரளத்தோ டுபவளமீ னுஞ்சண்பை நகராரே. 8

இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து, 
அருளைச் செய்யும் அம்மான் - ஏ ர் ஆர் அம் தண்கந்தத்தின் 
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்- 
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பைநகராரே.

பொருள்: மலை போன்றத் தோற்றமுடைய கடல் அலைகள், தன் கைகளால், 
முத்துக்களையும் பவளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் சண்பை நகரின் இறைவன், 
சிவபெருமானாகும். இங்கு, அழகிய குளிர்ச்சி தரும் வாசனையோடு மருள் என்னும் 
பண்ணை வண்டுகள் பாடுகின்றன. இந்தப் பெருமான், இருளைப் போன்ற கரிய நிறத்தை 
உடைய இராவணனின் வீரத்தை அழித்தவர் ஆவார். அதன்பின் அவன் வருந்திய போது, 
அவனுக்கு அருள் செய்த அம்மானும் தலைவனும் இவரே ஆவார்.

குறிப்புரை: இராவணனை ஈடழித்து, ஈடேற்றும் அம்மான் இவர் என்கின்றது. ஈடு - பெருமை. ஏரார் - 
அழகிய. மருளைச் சுரும்பு பாடி - மருள் என்னும் பண்ணை வண்டு பாடி. அளக்கர் - கடல். வரை ஆர் 
திரை - மலையொத்த அலை. தரளம் - முத்து. 
Lord Civan is enshrined in Tiru-ch-chanbai-nagar. In this city honey bees are humming in the gardens that are full of flowers creating a pleasant aroma all around. The humming noise of the bees is similar to the musical melody called Marul (a secondary melody type of the Kurinji class; one of eight Kurinji-yaal-thiram; ). The mountain like waves of the sea bring corals and pearls and splash them on the shores. Lord Civan of this town annihilated the might of Raavanan who is as black as darkness. Later when he repented and begged for pardon, Civan graced him with boons. 
Note: The pann Marul chases away irul (darkness) which is Anava mala.

மண்டான் முழுதுமுண்ட மாலுமலர் மிசைமேலயனும் 
எண்டா னறியாவண் ணநின்ற இறைவன் மறையோதி 
தண்டார குவளைக்கள் ளருந்தித்தாம ரைத்தாதின்மேற் 
பண்டான் கொண்டு வண்டு பாடுஞ்சண்பை நகராரே. 9

மண் தான முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும், 
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி - 
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல் 
பண்தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

பொருள்: தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு, தாமரை மலர்களில் 
நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி, பண் பாடுகின்ற வண்டுகள் நிறைந்த சண்பை நகரின் 
இறைவன், சிவபெருமான் ஆவார். இவர், உலகங்கள் முழுதும் உண்ட திருமால், தாமரை 
மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன் ஆகியோரின் மனத்தாலும் அறியாவண்ணமாக நின்ற 
இறைவனாவார். வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவரும் இவரே ஆவார்.

குறிப்புரை: மண்ணுண்ட மாலும் மலரோனும் அறியா வண்ணம் நின்ற இறையோன் சண்பை நகரார் 
என்கின்றது. எண் தான் அறியான் எள்ளளவும் அறியாத. வண்டு குவளைத் தேனை அருந்தித் 
தாமரையின் மகரந்தத்தை உண்டு பாடும் சண்பை நகர் என்க. 
Lord Civan of Tiru-ch-chanbai-nagar stood beyond the ken of the mental perception of Vishnu who once swallowed the whole earth and of Brahma seated in the Lotus. Civa is the author and reciter of the Vedas. Lord Civa presides over Tiru-ch- chanbai-nagar city where bees suck honey from the lily flowers that stem out of long stalks, rests in the pollen filled bed of lotus flowers and tunefully hum melodies that reverberate all around.

போதியா ரும்பிண்டியா ரும்புகழல சொன்னாலும் 
நீதியா கக்கொண்டங் கருளுநிமல னிருநான்கின் 
மாதி சித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர் 
சாதி கீதவர்த்த மானார் சண்பை நகராரே. 10

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும், 
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்- 
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொன்-நூலர், 
சாதி கீத வர்த்தமானர் - சண்பைநகராரே.

பொருள்: சண்பை நகரார் ஆன சிவபெருமான் அணிமா முதலிய எண்வகை சித்திகளில் வல்ல 
சித்தராவார். பழமையான நூல்களாகிய வேதங்களின் பொருளாக நிலைத்து நிற்பவர். 
சாகரம் முதலாகப் பாடப்படுகின்ற பாட்டுகளில் நிலைத்திருப்பவர். புத்தர்களும் 
சமணர்களும் புகழ் இல்லாதவைகளைக் கூறினாலும், அவைகளைப் புகழ் மொழிகளாகக் 
கொண்டருளும் மாசற்றவர் இவர்.

குறிப்புரை: புறச் சமயிகள் இகழ்ந்து பேசினாலும் அவற்றைப் புகழாகக் கொண்டருளும் சண்பை நகரார் 
இவர் என்கின்றது. போதியார் - புத்தர். பிண்டியார் - சமணர். மாதி சித்தர் - அணிமாதி சித்திகளை 
உடையவர். சாதி கீத வர்த்தமானர் - சகாரம் முதலாகப் பாடப்படுகின்ற பாட்டில் நிலைத்திருப்பவர். 
'எரிவினாற் சொற்றாரேனும் எம்பிராற்கு ஆகும்' என்னும் அப்பர் வரிகளும் நோக்கற்பாலன. 
Lord Civan is pure Supreme Being (NImalan ). Though Buddhists and Samanars abuse Him, He ignores their evil comments and takes it in a good spirit. He is a Super Siddhar (சித்தர் - அட்டமாசித்திகளை ஆக்கி நடத்துபவர் - An authoritarian of the eight super natural powers). He is the author of the age old Vedas. He is the Supreme God absorbed in the music of divine songs especially those songs which commence from the letter 'Sa' . 
Note: Civan cannot be spoken of lightly. Even stones became flowers in Civa-puja.  'Sa' is the first of the seven svaras.

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச் 
சந்திபோதிற் சமாதி செய்யுஞ் சண்பை நகர்மேய 
அந்திவண்ணன் தன்னை யழகார் ஞானசம்பந் தன்சொற் 
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே. 11

வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி, 
சந்திபோதில் சமாதிசெய்யும் சண்பைநகர் மேய 
அந்தி வண்ணன்தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் 
சிந்தைசெய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.

பொருள்: அடியவர்கள், வந்தனையோடு பூசை செய்யும் காலங்களைத் தவிர்த்த மற்ற 
நேரங்களில், வேதப் பொருட்களை விசாரனை செய்கின்றனர். மாலைக் காலம் போன்ற 
செம்மேனியனை, சண்பை நகர் மேவிய சிவபெருமானை, சந்தியா காலங்களில் அடியவர்கள் 
தியானம், சமாதி நிலைகளில் நின்று வழிபடுகின்றனர். ஞானசம்பந்தன் அருளிய அழகிய . 
இப்பதிகத்தின் பொருளை, மனதில் நிறுத்திப் பாட வல்லவர்கள், சிவகதியைச் சேர்வார்கள்.

குறிப்புரை: சண்பை நகர்ச் சிவபெருமானைப்பற்றிச் சொன்ன ஞான சம்பந்தனது சொல்லைத் 
தியானத்தோடு பாடவல்லவர்கள் சிவகதி சேர்வர் என்கின்றது. வந்தி - வந்தித்தல். வந்தி - 
அடியவருடைய வந்தித்தல். முதல் நிலைத் தொழிற்பெயர். மறை - இரகசியம். சந்தி - காலை மாலை. 
இறைவன் பூசைக்காலம் அல்லாத காலங்களில் அம்மையோடு வேத விசாரணை செய்து சந்தியா 
காலங்களில் சமாதி செய்கின்றார் என்ற அனுபவம் அறிவிக்கப்படுகிறது. 
Gnaanasambandan hails from Tiru-ch-chanbai-nagar. Here devotees offer sincere worship to Lord Civan regularly and at the appropriate time. In their spare time they discuss about the greatness of the Vedas. During the three divisions of the day - viz., sunrise midday sunset - they perform the rituals such as meditation (Diyaanam - fixed and undivided attention to an object), Samaathi (the last of the eight stages of yoga and modes of silent contemplative worship). Lord Civan of this famed city has the complexion of the evening twilight (crimson colour). Gnaanasambandan hymned this impressive and appealing poem on Lord Civan of this place. Those who can perceive the meaning of this hymn and sing them will get deliverance from the cycle of birth and death. 
Note: Civa-gati: Deliverance.

66ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

67. திருப்பழனம்

திருத்தலவரலாறு:

திருப்பழனம் என்ற திருத்தலமானது சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.
கும்பகோணம் - திருவையாறு பேருந்துச் சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. இது 
திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய 
திங்களுர் இதற்கு அண்மையில் இருப்பதால் இங்கு வழிபட வந்த அப்பர் சுவாமிகள் இத்தலப் 
பதிகத்து அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்துத் திருப்பதிகம் அருளிச்செய்தார்கள். 
விடந்தீரத்த பதிகமாகிய “ஒன்று கொலாம்” என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் இது. 
இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் காவிரி.

கல்வெட்டு-

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன் காலம் 
முதல் கொண்டே தொடங்குகின்றன. இவற்றால் அரசர்களும் அரசியர்களும் அவர்களது 
தோழிமார்களும் தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும், பொன்னும் வழங்கியமை 
அறியலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில் உள்ள நிலங்களை 
15500 காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று காணி ஒரு 
முந்திரி நிலம் அளித்தான் என்பதால் அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது. 
கோஇராஜகேசரிவாமன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்தான்.

பதிக வரலாறு:

திருவடகுரங்காடுதுறையில் வாலியார் வழிபட்ட அருமையை அமைத்துப் பாடிப்பரவி, பிற 
தலங்களையும் வழிபட எழுந்தருளிய காழிவேந்தர், முத்தலைச் சூலம் எந்திய முதல்வர் 
எழுந்தருளிய திருப்பழனத்தைச் சோந்தார். கோயிலைக் குறுகி உருகிய மனத்துடன் 
திருப்பபனநாதரை வணங்கி “வேதமோதி” என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார். இதனை 
“விழைசொற் பதிகம்” என விசேடிப்பா் சேக்கிழார் பெருமானார்.

THE HISTORY OF THE PLACE 
67. THIRU-P-PAZHANAM 
The sacred city of Thiru-p-pazhanam is to the north of river Cauvery in Chola Naadu. It is near Thiruvaiyaaru on the Kumbakonam - Thiruvaiyaaru bus route. 
The Lord's name is Aabathsahaayar and that of the Goddess is Periyanaayaki. The sacred ford is the river Cauvery. This is one of the seven 'sapthasthaanam' temples of Thiruvaiyaaru. Thingkaloor, the birthplace of Appoothi Adigal is near here. For that reason, Saint Appar, who came here for worship, introduced the name of Appoothi Naayanaar in everyone of the ten verses he composed for this temple. This place was also the scene of the episode of the cure from snake poison (the theme of the hymn that begins with 'onRu kolAm' - the hymn sung by St. Appar).
There are 29 inscriptions regarding this temple, starting from the time of Paraanthakan I. Grants by various kings, queens and their friends, and officials of the land and gifts of gold for lamps, are described. Kuloththungkan III sold a land for 15500 'kaasu' and donated the money to the temple. Raajaraajan gifted land, for three 'kaanis'; and one 'mundhiri' in area. A farmer had a stone mandapam built during the reign of Koraajakesarivarman.


திருச்சிற்றம்பலம்

67. திருப்பழனம் 
பண் : பழந்தக்கராகம் 
ராகம் : ஆரபி

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை யெருதேறிப் 
பூதஞ்சூழப் பொலியவரு வார்புலியி னுரிதோலார் 
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று 
பாதந் தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. 1


வேதம் ஒதி வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி, 
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்; 
“நாதா!’ எனவும் ‘நக்கா!’ எனவும், “நம்பா!’ என நின்று, 
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் - பழனநகராரே.

பொருள்: திருப்பழனத்து இறைவரான சிவபெருமான் வேதங்களை உண்டாக்கியவர். 
மார்பில் வெண்மையான பூணூலை அணிந்து இருப்பவர். வெண்மையான எருதின்மீது ஏறிப்
பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவு பெற வருபவர். 
இப்பெருமானை முழுமுதற்பொருள் (நாதனே) எனவும், இரவலனே (நக்கனே) எனவும், 
நம்பப்படத்தக்கவனே (நம்பனே) எனவும், போற்றி நின்று திருவடிகளைத் தொழுகின்ற 
அடியவர்களின் பாவங்களைத் தீர்த்து அருளுவார்.

குறிப்புரை: நாதா நக்கா எனத் தோத்திரிப்பவர்களின் பாவந்தீர்ப்பவர் பழன நகரார் என்கின்றது. நக்கன் 
- நிரீவாணி. நம்பன் - நம்பப்படத் தக்கவன். 
Lord Civan of Thiru-p-pazhanam will appear in a celebrated manner, clad in a tiger skin, wearing in His chest the white sacred thread, riding on the White Bull, followed by His goblin hosts. All the while He chants the four Vedas. He annuls the sins of those who adore His Holy Feet hailing Him as "Oh! You are our Supreme Being! Oh! You are the divine mendicant asking us to shed ignorance!  Oh! You are our Supreme Being! Kindly shower Your grace upon us".

கண்மேற் கண்ணுஞ் சடைமேற்பிறை யுமுடையார்காலனைப் 
புண்ணாறு திரமெதிராறோடப் பொன்றப் புறந்தாளால் 
எண்ணா துதைத்த எந்தைபெரு மானிமவான் மகளோடும் 
பண்ணார் களிவண்டறை பூஞ்சோலைப் பழன நகராரே.

கண்மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப் 
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால் 
எண்ணாது உதைத்த எந்தைபெருமான் - இமவான்மகளோடும், 
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழனநகராரே.

பொருள்: தேனை உண்ட வண்டுகள் பண்ணின் இசைபோன்று ஒலி செய்யும் அழகிய 
சோலைகள் சூழ்ந்த தலம் திருப்பழன நகராகும். இந்நகரில் இமவான் மகளான பார்வதி 
தேவியோடு சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவர் இயல்பாக உள்ள இரண்டு 
கண்களுக்கு மேலாக நெற்றியில் மூன்றாவது ஒரு கண்ணையும் உடையவர். 
சடைமுடியின்மேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் 
தோன்றிய புண்களில் இருந்து இரத்த வெள்ளம் ஆறாக ஓடும்படி செய்தவர். அவனை ஒரு
பொருளாக மதியாது தோல்வி அடைந்து அழிய உதைத்த எந்தை பெருமானார் இவர் 
ஆவார்.

குறிப்புரை: காலனை இரத்த ஆறு பெருக்கெடுத்தோடப் புறந்தாளால் உதைத்த பெருமான் பழனநகரார் 
என்கின்றது. இதுவும் ஆபத்சகாயர் என்ற இத்தலத்திறைவனுக்கு ஏற்ற செயலாதல் அறிக. 
கண்மேல்கண் - நெற்றிக்கண். புண்ணார் உதிரம் - புண்ணை வழியாகக் கொண்டு வெளிப்படுகின்ற 
இரத்தம். பொன்ற - இறக்க. எண்ணாது - அவனை ஒரு பொருளாக மனத்து எண்ணாது. 
Lord Civan has a third eye in His forehead in addition to His two normal eyes. He has the crescent moon in His matted hair. Without having any consideration to Yama (Kaalan), He nonchalantly kicked and routed him out. From the wound created by His kicking, blood gushed out and was running like a red river. This our Lord Civan is happily enshrined in the town Thiru-p-pazhanam along with His consort, the daughter of the Himaalayan king. This town is girt with many flowering gardens. Here the bees having over sucked the honey, get intoxicated and hum tunefully in delight. Note: Civa is the Lord of trinocular vision. Yama, the mighty, was powerless in the presence of Civa.

பிறையும்பு னலுஞ்சடை மேலுடையார் பறைபோல் விழிகட்பேய் 
உறையுமயா னமிடமாவுடையா ருலகர் தலைமகன் 
அறையுமலர் கொண்டடியார் பரவியாடல் பாடல்செய் 
பறையுஞ்சங் கும்பலியுமோ வாப்பழன நகராரே.

பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய் 
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன் - 
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய் 
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

பொருள்: திருப்பழன நகர் இறைவர் சிவபெருமான் ஆவார். இவரை, அடியவர்கள் உயர்ந்த 
நறுமண மலர்களால் அருச்சித்துத் துதிக்கின்றனர். ஆடல் பாடல்களைச் செய்தும், பறையும் 
சங்கும் ஆகிய வாத்தியங்களை முழக்கியும், பணிந்தும், இடைவிடாது வழிபடுகின்றனர். 
இவ்விறைவர் தன் சடைமேல் பிறையையும், கங்கையையும் சூடியிருக்கிறார். பறையின் 
வாய் போன்ற வட்டமான விழிகளை உடைய, பேய்கள் வாழும் மயானத்தைத் தமக்கு 
இடமாகக் கொண்டிருக்கிறார். இவர் அனைத்து மக்கட்கும் தலைவர் ஆவார்.

குறிம்புரை: கங்கையும் பிறையும் சூடியவர், மயனாத்துறைபவர் பழனத்தார் என்கின்றது. அறையும் - 
ஒலிக்கின்ற. அடியார் பரவி, பாடல் செய் ஓவாப்பழனம் எனக் கூட்டுக. 
Lord Civan presides over Thiru-p-pazhanam. Devotees adorn Him with choice elegant flowers. They dance, sing divine songs before Him. They beat the drums, blow the chanks and with humility they worship Him always without any break. He has in His matted hair the crescent moon as well as the Ganges river. He prefers to have the 'burning ghať' also, as His dwelling place where ghouls with eyes like the round drum also do live. He is the Chief Universal Lord for one and all. 
Note: Civa indeed is the cosmic Lord.

உரமன் னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில் 
இரவிற் பூதம்பாட ஆடியெழி லாரலர் மேலைப் 
பிரமன் றலையின றவமேற்ற பெம்மானெமையாளும் 
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே. 4

உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில், 
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப் 
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும் 
பரமன்; பகவன்; பரமேச்சுவரன் - பழனநகராரே.

பொருள்: திருப்பழன நகர் இறைவர் சிவபெருமான் ஆவார். இவர், நள்ளிரவில் வலிமையான 
உயர்ந்த வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து, ஆந்தை அலறும் மயானத்தில், பூதகணங்கள் 
பாட நடனம் ஆடுகின்றார். அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில்
பலியேற்பதுமான திருவிளையாடல்களைப் புரிகின்றார். இப்பெருமான் எம்மை ஆளும் 
பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் போன்ற பெயர்களையும் உடையவர்.

குறிப்புரை: மயானத்துப் பூதம் பாட, நள்ளிருளில் நடனமாடுபவர் இந்நாதர் என்கின்றது. உரம் - வலிமை. 
உலறு கோட்டு - வற்றிய கிளைகளில், கூகை - கோட்டான். அலர் மேலைப் பிரமன் - தாமரை மலர்மேல் 
உள்ள பிரமன். நறவம் - கள், தேன்; என்றது உணவு என்னும் பொதுமையில் நின்றது. பரமன் - 
உயர்ந்தவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன். பகவன் - ஆறு குணங்களை உடையவன். 
Lord Civan sings and dances in the dead of night in the burning ground where owls perched on sturdy, lofty and leafless dried branches screech and make heavy noise; where the goblins also sing and dance. He receives alms in the skull of Brahma who is seated in the elegant lotus flower. He engages Himself in such divine sports. This Lord is our Chief Ruler. He is known by different names such as Bhaghavan, Parameswaran  and other names. 
Note: Paraman: The loftiest of the lofty. 
Bhaghavan: The Originator. 
Parameswaran: The God of gods.

குலவெஞ் சிலையான் மதில்மூன் றெரித்தகொல் லேறுடையண்ணல் 
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி 
நலமஞ்சுடைய நறுமாங் கனிகள்குதி கொண்டெதிருந்திப் 
பலவின்கனிகள் திரைமுன் சேர்க்கும் பழன நகராரே. 5

குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் - 
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி 
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி, 
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.

பொருள்: திருப்பழன நகரில் தோகைகளை உடைய மயில்களும் குயில்களும் வாழுகின்றன. 
காவிரி ஆறு கடல்போல் பரந்தும் விரிந்தும் இருக்கின்றது. இந்த ஆற்றின் அலைகள் 
மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையில் 
சேர்க்கின்றன. இத்தகைய வளமான திருப்பழன நகரின் இறைவர் சிவபெருமான் ஆவார். 
இவர், உயர்ந்த மலைவில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் 
கொல்லும் இடபத்தை வாகனமாக உடைய அண்ணலும் இவரே ஆவார்.

குறிப்புரை: வில்லால் திரிபுரமெரித்த சிவன் பழனத்தான் என்கின்றது. பின்னிரண்டடிகளில் 
கடல்போன்ற காவிரியின் அலைகள் மாங்கனிகளையும் பலாக்கனிகளையும் எதிர் உந்திச் சேர்க்கும் பழமை 
என வளம் கூறப்பெற்றுள்ளது. கடல்போற் காவிரி என்றது வற்றாமையும் பரப்பும்பற்றி. கலவம் - தோகை. 
Lord Civan of Thiru-p-pazhanam burnt the three citadels of Asuraas by His fierce mountain bow. He is the great one who rides on the murderous bull. He presides over Thiru-p-pazhanam where flourish the fantailed peacocks and the Indian cuckoos; here the Cauvery river vast and wide like the sea, carries sweet mango fruit and jack fruits; water leaps ahead and washes ashore the fruits on the banks of this river. 
Note: Peacocks dance. Kuyils sing. In Pazhanam dancing and singing take place for ever in honour of Civa.

வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவினொலியோவா 
மூளைத்தலை கொண்டடியா ரேத்தப்பொடி யாமதிளெய்தார் 
ஈளைப்படுகில் இலை யார்தெங்கிற் குலையார் வாழையின் 
பாளைக்கமுகின் பழம்வீழ் சோலைப் பழன நகராரே. 6

வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின்(ன்) ஒலி ஓவா, 
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார் - 
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின், 
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

பொருள்: ஈரத் தன்மை உடைய ஆற்றுப் படுகைகளில், பசுமையான மட்டைகளோடுகூடிய 
தென்னை மரங்களின் குலைகளில் தேங்காய்கள் விளைந்துள்ளன. வாழை மரத்தில் பழுத்த 
வாழைப் பழங்கள் உள்ளன. பாளைகளை உடைய கமுகு மரங்களில் இருந்து பழுத்த 
பாக்குப் பழங்கள் கீழே விழுகின்றன. இத்தகைய செழிப்பான சோலைகளால் சூழப்பட்ட 
திருப்பழன நகரின் இறைவர் சிவபெருமான் ஆவார். இவர், அழைக்கும் சீழ்க்கை ஒலியும், 
சங்கொலியும், விளையாட்டின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று, மூளை 
பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர் ஆவார். அடியவர்கள் போற்றி வாழ்த்த 
முப்புரங்களையும் அழித்தவர் ஆவார்.

குறிப்புரை: கையில் கபாலம் கொண்டு அடியார்கள் வழிபட நின்ற இறைவன் இந்நகரார் என்கின்றது. 
வீளைக்குரல் - அழைக்கும் குரல். மூளைத் தலை கொண்டு மூளையோடு கூடிய பிரமகபாலத்தைக் 
கொண்டு. ஈளைப் படுகு - உலராத சேற்றோடு கூடிய ஆற்றுப்படுகை. படுகையில் தென்னை, வாழை, 
கமுகு இவற்றின் பழம் விழுகின்ற பழனம் என வளம் கூறியது. 
Fully ripe coconut fruit bunches and their spathes of well grown and green coconut trees, fully ripe banana fruits of the plantain trees and ripe areca-nuts - all grown in the wet fertile river bed gardens, full of mire, are falling down in the ground now and then. Thiru-p-pazhanam is such a fertile town where our Lord Civa is enshrined. In this town the summoning noise of the whistle and chanks and the noise of festivities never ceases. Lord Civa roams about in this town, to get alms, by holding in His hand Brahma's skull with its brain muscles still sticking. Devotees praise and adore Him for His help in destroying the three citadels of Asuraas along with the inhabitants.
பொய்யா மொழியார் முறையா லேத்திப்புகழ்வார் திருமேனி 
செய்யார் கரியமிடற்றார் வெண்ணூல் சேர்ந்த அகலத்தார் 
கையாட லினார்புன லான்மல்கு சடைமேற் பிறையோடும் 
பையாட ரவமுடனே வைத்தார் பழனநகராரே. 7

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி 
செய்யார்; கரிய மிடற்றார்; வெண்நூல் சேர்ந்த அகலத்தார்; 
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும் 
பைஆடு அரவம் உடனே வைத்தார் - பழனநகராரே.

பொருள்: திருப்பழனத்து இறைவரான சிவபெருமானை பொய் கூறாத உண்மை 
அடியவர்கள் முறைப்படித் துதித்துப் புகழ்வார்கள். இவர் சிவந்த திருமேனி உடையவர். 
கரிய கண்டத்தை உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பை உடையவர். கைகளைவீசி 
ஆடல் புரிபவர். கங்கை கூடிய சடைமுடிமீது பிறையையும், படப் பாம்பையும் ஒரு சேர 
வைத்தவர்.

குறிப்புரை: உண்மை அடியார்களால் வணங்கி வாழ்த்தப்படுமவர் பழனத்தார் என்கின்றது. 
பொய்யாமொழியார் - உண்மையே பேசும் அடியார்கள். மிடற்றார் - கழுத்தினை உடையவர். அகலத்தார் - 
மார்பினை உடையவா். பை - படம். 
Lord Civan of Thiru-p-pazhanam is duly and gloriously hailed and praised by devotees who never utter any falsehood in their lifetime. His body is ruddy; His neck is of dark blue colour. His chest is adorned with a white sacred thread. He dances by swaying His hands. He keeps in His matted hair the river Ganges, the crescent moon as well the hooded snake (all juxtaposed to each other).

மஞ்சோங் குயரமுடையான் மலையை மாறாயெடுத்தான்தோள் 
அஞ்சோடஞ் சுமாறுநான்கு மடர வூன்றினார் 
நஞ்சார் சுடலைப் பொடிந் றணிந்த நம்பான் வம்பாரும் 
பைந்தா மரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே. 8

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறுஆய் எடுத்தான் தோள்- 5 
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்; 
நஞ்சார் ௬டலைப் பொடி - நீறு அணிந்த நம்பான் - வம்பு ஆரும் 
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

பொருள்: மணம் கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட 
திருப்பழன நகரின் இறைவர் சிவபெருமான் ஆவார். ஆகாயம் அளவு உயர்ந்த தோற்றம்
உடைய இராவணன், தனது பயணத்திற்கு இடையூறாக இருந்த கயிலை மலையைப் 
பெயர்த்த போது, இவர் அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு தனது கால்விரலை 
ஊன்றியவர் ஆவார். சுடலையில் எரிந்த நச்சுத் தன்மை பொருந்திய சாம்பலை அணிந்த 
சிவபெருமான் இவரே ஆவார்.

குறிப்புரை: இராவணனுடைய இருபது தோள்களும் வருந்த ஊன்றியவர் இவர் என்கின்றது. மஞ்சோங்கு 
உயரம் உடையான் - ஆகாயம் அளாவிய உயரம் உடையவன். மாறாய் - விரோதித்து அஞ்சோடு அஞ்சும் 
ஆறும் நான்கும் - இருபது. அடர - நெருங்க. 
Lord Civan is entempled in Thiru-p-pazhanam which is encircled by fertile fields and pools where sweet smelling fresh lotus flowers blossom. Raavanan's stature is so tall and gigantic as to make it appear that his hand touches the clouds in the sky. Once he tried to uproot mount Kailas that was on his way. Lord Civa pressed the mountain by His toe whereby Raavanan's twenty shoulders were crushed. He smears His body with the poisonous ashes of the cremation ground.

கடியார் கொன்றைச் சுரும்பின் மாலைகமழ் புன்சடை யார்விண் 
முடியாப் படிமூவடியா லுலகமுழு துந்தாவிய 
நெடியான் நீள்தாமரை மேலயனும் நேடிக்காணாத 
படியார் பொடியாட கலமுடையார் பழன நகராரே.

கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன்சடையார்; விண் 
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய 
நெடியான்; நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காணாத 
படியார். பொடி ஆடு அகலம் உடையார் - பழனநகராரே.

பொருள்: திருப்பழன நகர் இறைவர் சிவபெருமான் ஆவார். இவர் மணம் கமழ்வதும், 
வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலையை மணம் கமழும் சிவந்த சடைமுடியில் 
அணிந்திருக்கின்றார். விண்ணை முடிவாகக் கொண்ட இவ்வுலகம் முழுவதையும் மூவடியில் 
அளந்த திருமாலும், நீண்ட தண்டின் மேல் வளர்ந்த தாமரை மலர் மேல் விளங்கும் 
நான்முகனும் தேடிக் காண முடியாத தன்மையை உடையவர் சிவபெருமான் ஆவார். 
திருநீற்றுப்பொடி அணிந்த மார்பினை உடையவர்.

குறிப்புரை: உலகத்தை மூவடியால் அளந்த திருமாலும் அயனும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத 
திருநீற்றழகர் இவர் என்கின்றது. கடி - மணம். கரும்பு - வண்டு. விண்முடியாப்படி - விண்ணை 
முடிவாகக் கொண்ட பூமி. நெடியான் - திருவிக்கிரமனாகிய திருமால். நேடி - தேடி. காணாதபடி ஆர் 
பொடி ஆடு அகலமுடையார் எனப் பிரித்து அவர்கள் காணாதவண்ணம் நிறைந்த திருநீற்றோடு அளாவிய 
மார்பை உடையவர் எனப் பொருள் காண்க. 
Lord Civan of Thiru-p-pazhanam wears on His ruddy and fragrant matted hair the odorous cassia flower garlands buzzed by bees. Thirumaal once measured by his three steps the entire world for which the sky is the top. Brahma seated in the lotus flower which has bloomed on the top of long tubular stalk, and Thirumaal could not trace Lord Civa in spite of their serious search for Him. He smears His chest with holy ashes.

கண்டான் கழுவாமுன் னேயோடிக் கலவைக்கஞ்சியை 
உண்டாங் கவர்களுரைக்குஞ் சிறுசொல்லோரார் பாராட்ட 
வண்டா மரையின் மலர்மேல் நறவமது வாய்மிகவுண்டு 
பண்டான் கெழும வண்டி யாழ்செய்யும் பழனநகராரே. 10

கண் தான் கழுவாமுன்னே ஓடிக் கலவைக்கஞ்சியை 
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறுசொல் ஓரார், பாராட்ட, 
வண்தாமரை இன்மலர்மேல் நறவம் அது வாய் மிக உண்டு, 
பண்தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

பொருள்: வளமையான தாமரை மலர்மேல் சொரியும் தேனை வண்டுகள் வாயால் மிகுதியாக
உண்ணுகின்றன. அவை பண்பொருந்த யாழ்ஒலி போன்று ஓசை எழுப்புகின்றன.. 
இத்தகைய வளமான கழனிகளை உடைய திருப்பழன நகரில் சிவபெருமான் எழுந்தருளி 
உள்ளார். சமணர்கள், தங்களின் கண்களைக்கூடக் கழுவாமல், முந்திச் சென்று, கலவைக் 
கஞ்சியை உண்பவர்கள். இவர்கள் உரைக்கும் சிறுசொல்லைக் கேட்காத சான்றோர்கள் 
இங்குள்ள சிவபெருமானைப் பாராட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.

குறிப்புரை: கண்களைக் கூடக் கழுவாது கஞ்சி குடிக்கும் புறச்சமயிகளுடைய சிறுசொல்லை ஓராத 
அடியார்கள் பாராட்ட இருப்பவன் பழனத்தான் என்கின்றது. கலவைக் கஞ்சி - கலந்த கஞ்சி. வண்டு 
நறவமது உண்டு பண்கெழும யாழ்செய்யும் பழனம் எனக் கொண்டு கூட்டுக. 
Lord Civan is entempled in Thiru-p-pazhanam. This city has fertile fields and pools where elegant lotus flowers blossom. Bees suck much honey from these flowers by their mouth, and hum their tunes. The humming noise of the bees is similar to the tuneful music of the lute. The Samanars without washing their eyes and face in the morning hours rush to and drink the mixed gruel. Devotees without listening to the baseless talk of Samanars, praise and worship Lord Civan always. 
Note: The precepts of the Jains and the Buddhists are baseless words that convey no meaning.

வேய்முத் தோங்கிவிரை முன்பரக்கும் வேணுபுரந் தன்னுள் 
நாவுய்த் தனையதிற லால்மிக்க ஞானசம்பந்தன் 
பேசற்கினிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை 
வாயிற் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே. 11

வேய் முத்து ஒங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் 
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன், 
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை 
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

பொருள்: வேணுபுர நகரில் மூங்கில் மரங்கள் ஓங்கி வளர்ந்து முத்துக்களை ஈன்று மணம் 
பரப்புகின்றன. இந்நகரில் உள்ளவர் ஞானசம்பந்தன். வல்ல திறன்மிக்க நாவினர். இவர் தன் 
வாயால், பேசுவதற்கு இனிமையான பாடல்களால், திருப்பழனப் பெருமான்மீது 
இப்பதிகத்தைப் பாடினார். பாமாலையாகிய இப்பதிகப் பத்துப்பாட்டையும் இசையுடன் 
பாடவல்லவர்கள் நல்லவர் ஆவார்கள்.

குறிப்புரை: பேசற்கு இனிய இப்பாடல் பத்தையும் வல்லார் நல்லார் என்கின்றது. வேய்முத்து - மூங்கிலில் 
தோன்றிய முத்து. விரை - மணம். 
In the city of Venupuram, bamboo trees grow very tall and yield pearls in their knuckles, spreading their aroma all around. Gnaanasambandan is an adept in singing divine music with his tongue. He has sung by his mouth these superb-songs on Lord Civa of Thiru-p-pazhanam. Those who can tunefully sing this garland of ten musical verses are indeed noble folks.

67ஆம் பதிகம் முற்றிற்று

 

சிவமயம்

68. திருக்கயிலாயம் 
திருத்தலவரலாறு:

திருக்கயிலாயம் என்ற திருத்தலமானது வட நாட்டுத் தலம் ஆகும். இந்திய அரசு 
ஆண்டுதோறும் கயிலாய தரிசனம் விரும்பும் அன்பர்களைக் கட்டணத்துடன் தேர்வு செய்து 
அழைத்துச் சென்று இந்திய எல்லையில் கொண்டு வந்து சேர்க்கிறது. நேபாளம் திபெத்து வழியும் 
பயணம் செய்யலாம். சுந்தரர் வெள்ளை யானையின் மேல் ஏறி கயிலை சென்றதும் அப்பர் 
சுவாமிகள் உடலுறுப்புக்கள் தேய்ந்தொழியும் அளவு மன உறுதியோடு கயிலாய யாத்திரை 
புரிந்ததும் புராண வரலாறுகளிலே இடம் பெற்றுள்ளன. ஸ்ரீகயிலாயம் இமய மலையின் வடசாரலில் 
மேற்குத் திபெத்தில் அமைந்துள்ளது. அம்மலையின் தென்பகுதியில் திருக்கேதாரம் போன்ற 
தலங்கள் அமைந்துள்ளன. தேவாரம் பாடிய மூன்று சமயாசாரியர்களுள் சுந்தரா சுவாமிகள் 
கயிலைக்கு இறுதியாக வெள்ளையானை மீது ஏறிச் சென்றார். அப்பர் சுவாமிகள் வடதிசைப் 
பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களை தரிசித்துக்கொண்டு 
தெலுங்கு, கன்னடம், மாளுவம், இலாடதேசம், மத்தியப்பிரதேசங்களைக் கடந்து காசியை அடைந்து 
விசுவேசனைத் தரிசித்து இன்புற்றார். திருநாவுக்கரசர் அடியார்களைக் காசியில் தங்க 
வைத்துவிட்டு தனியே இரவுபகலாய் காடுமேடு மலை மணற்பரப்புகளில் நடந்து சென்றார். 
இரவுபகலாய் நடந்து சென்றதால் நாவுக்கரசரின் திருவடிகள் பரடு வரை தேய்ந்தன. கால்களால் 
நடக்கலாற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேயந்தன. 
மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முரிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு 
இன்புறவேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புகள் முழுதும் தேய்ந்து 
ஓரிடத்தில் செயலற்று தங்கிக் கிடந்தார்.

பெருமான் திருநாவுக்கரசரை இன்னும் சிலகாலம் இவ்வுலகில் தீந்தமிழ்ப் பாமாலை 
பாடவேண்டும் என்று திருவுளங்கொண்டு அவர் கிடந்த இடத்தின் அருகே தடாகம் ஒன்று 
தோற்றுவித்து தாம் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று நோக்கினார். ‘அங்கம் சிதைய 
இவ்வருங்கானில் வந்தது என்கருதி'' என்று முனிவர் கேட்க, அப்பரும் இறைவனை 
திருக்கயிலையில் கண்டு தரிசித்து: இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால் வந்ததைக் கூறினார். 
முனிவர் வடிவில் வந்த சிவபெருமான் ‘திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ ? 
திரும்பிச் செல்லும்; இதுவே தக்கது’ என்று கூற, அப்பர், “என்னை ஆளும் நாயகன் கயிலையில் 
இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’. என்று உறுதி மொழிந்தார். 
முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் ‘நாவினுக்கரசனே ! எழுந்திரு’ என்று கூறினன். 
அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து ‘அண்ணலே கயிலையில் நின் 
திருக்கோலம் நண்ணி நான் தொழ நயந்தருள் புரி’ எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் 
அசரீரியாய் ‘இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் 
வீற்றிருக்கும் காட்சியைக் காண்க’ என்று கூறினான். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை 
ஒதிக் கொண்டே அத்தடாகத்தில் மூழ்கினார். 
இமயத்தில் உள்ள தடாகத்தில் மூழ்கியவர் திருவையாற்றில் உள்ள தடாகத்தில் எழுந்தார். 
உலகம் வியப்பக் கரையேறி ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப்
புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. 
அப்பெருங்கோயில் கயிலையங்கிரியாகக் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் 
முதலானோர் போற்ற வேதம் முழங்க விண்ணவர், சித்தர், வித்யாதரார்களுடன் மாதவர் முனிவர் 
போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் 
கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். 
பெருமான் கயிலைக்காட்சியை மறைத்தருளினான். திருநாவுக்கரசர் திகைத்து இதுவும் 
இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து ‘மாதர் பிறைக்கண்ணியானை’ என்ற 
திருப்பதிகம் பாடித்தொழுதார். பின்னும் பல பதிகங்கள் பாடித் திருவையாற்றில் பலநாள் தங்கி 
உழவாரப்பனி புரிந்து இன்புற்று இருந்தார். 
திருஞானசம்பந்தா திருக்காளத்தி மலையில் இருந்தே திருக்கேதாரத்தையும், 
திருக்கயிலாயத்தையும் பாடியதாகச் சேக்கிழார் சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

கயிலையின் அமைப்பு:

இமய உச்சியின் வடபாகத்தில் சமுத்திர மட்டத்திற்கு 22,980 அடி உயரத்தில், தென் 
திசையை நோக்கியதாகக் கயிலை அமைந்து உள்ளது. வெள்ளியங்கிரி என்றதற்கேற்ப அம்மலை 
பனிபடர் மலையாகக் காணப்பெறுகின்றது. 47 கி.மீ. சுற்றளவு உடையதாய்ச் சமதளமாய் அமைந்து 
உள்ளது. பிராகாரம் போன்ற மலைச் சுவர்கள் செங்குத்தாக உள்ளன. அம்மலையில், சதுரம், 
முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைப்பாடுடைய மேடைகளும் கைபுனைந்தியற்றாக் 
கவின்பெறு வனப்புடையனவாய்க் காட்சியளிக்கின்றன. இந்தியாவில் தென்குமரி முதல் இமயம் 
வரையுள்ள கோபுரங்கள் எத்தனை வகையுண்டோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் கயிலையில் 
காணக்கிடக்கின்றன.. இறைவன் அம்மையப்பராய், தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளிய 
திருக்கோலங்களும் இருக்கின்றன. தீர்த்தங்கள்: கெளரி குளம், மானசரோவர் போன்ற 
தீர்த்தங்களும் உள்ளன.

பதிக வரலாறு:

திருக்காளத்தியைத் தொழுது பாடிய காழிப்பிள்ளையார், அதற்கு அப்பால் வடக்கிலும் 
மேற்கிலும் தமிழ் வழங்கும் நாடின்மையால், காளத்தியிலிருந்தபடியே தேவர் வழிபாடு செய்யும் 
திருக்கயிலையை நினைந்து “பொடிகொள் உருவர்் என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தா. 
THE HISTORY OF THE PLACE 
68. THIRU-K-KAILAAYAM

This sacred place is located on the northern slope of the Himalayas in western Tibet. Every year, Government of India select pilgrims interested in visiting this place and conducts them to the border of India. One can take the route via Nepal and Tibet. In the southern reaches of the mountain are such temples as Thiruk Kethaaram etc. 
Kayilai is at one of the peaks of the Himalayas at an elevation of 22980 ft. It faces the south, being located on the northern part of the mountain. Befitting its name, the silver mountain, the peak is laden with snow. It is in a plateau and has a circumference of 47 km. Around it are rocky mountain walls giving the impression of an ambulatory. In this mountain natural formations appear like square, triangular or circular platforms and give the impression of all kinds of gopurams (Temple Towers) found all over India. Formations resembling the Ammaiyappar image and the Dhakshinaa-murthi image could be seen.
According to legends, Saint Sundharar rode a white elephant to Kayilai. Of the three great Thevaaram hymnists, he was the only one who reached it directly. Saint Appar attempted to reach it even as his body wore out, as he crawled towards it with great determination. But the Lord gave Appar the vision of Kayilai in Thiruvaiyaaru. The poet-saint Sekkizhaar states that Saint Thirujnaanasambandhar sang about Thirukethaaram and Thiruk Kayilaayam, while being in Thiruk Kaalaththi hill. The sacred fords here include Gowrikulam and Manasarovar.

திருச்சிற்றம்பலம்

68. திருக்கயிலாயம்

பண் : தக்கேசி

ராகம் : காம்போதி

பொடிகொளுருவர் புலியினதளர்புரி நூல்திகழ்மார்பில் 
கடிகொள் கொன்றை கலந்தநீற் றர்கறை சேர்கண்டத்தர் 
இடியகுர லாலிரியு மடங்கல் தொடங்கு முனைச்சாரல் 
கடியவிடை மேற்கொடியொ ன்றுடையார் கயிலைமலையாரே. 1

பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரி நூல் திகழ் மார்பில் 
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர், 
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல் - 
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் - கயிலைமலையாரே.

பொருள்: சிங்கங்கள் மேகங்களின் இடிக்குரல் கேட்டு பயந்து, நிலைகெட்டு ஓடத் 
தொடங்கும் சாரலை.உடையது கயிலை மலை. இக்கயிலை மலையைத் தன் இருப்பிடமாகக் 
கொண்டு வாழுகின்றார் இறைவனாகிய சிவபெருமான். இவர் திருநீறு பூசிய திருமேனியை 
உடையவர். புலியின் தோலை உடுத்தியிருப்பவர். முப்புரி நூல் விளங்கும் மார்பில் மணம் 
கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்திருப்பவர். விடக்கறை பொருந்திய 
கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி, அவ்விடை எழுதிய கொடி 
ஒன்றையே தம் கொடியாகவும் கொண்டிருப்பவர்.

குறிப்புரை: கயிலைநாதனின் திருமேனிப்பூச்சு, உடை, ஆடை, அணி, ஊர்தி முதலியவற்றைக் 
கூறுகின்றது. பொடி - விபூதி. அதள் - தோல். பொடிகொள் உருவர் என்றது திருமேனி முழுதும் 
பூசப்பட்டதைக் குறித்தது. நீற்றர் என்பது. மார்பில் அணிந்ததைக் குறித்தது. கறை - விடம். இடிய 
குரலால் - இடிக்குரலால். இரியும் - நிலைகெட்டு ஓடுகின்ற. மடங்கல் - சிங்கம். கடிய விடை - 
வேகமான இடபம். 
Lord Civan's abode is mount Kailas (Thiru-k-kailaayam) in the Himalayan range. Here the lions run helter-skelter in the sides and foot of the mountain on hearing the heavy noise of thunder. He smears His entire body with holy ashes. He is clad in a tiger skin. In His 'holy ash smeared' chest the triple sacred thread is seen along with the fragrant cassia flower garland. His neck is dark blue in colour. He rides on the fast running bull while the same bull figure is the insignia of His flag. 
Note: Kailas is of two types. It is Bhu Kailas which is in the Himalayas. Sri Kailas is invisible to mortals.

புரிகொள் சடையாரடி யர்க்கெளியார் கிளிசேர்மொழி மங்கை 
தெரியவுரு வில்வைத் துகந்த தேவர் பெருமானார் 
பரியகளிற் றையரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த 
கரியமிடற் றர்செய்ய மேனிக்கயிலை மலையாரே. 2

புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை 
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர்பெருமானார்; - 
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த - 
கரிய மிடற்றர், செய்யமேனி; - கயிலைமலையாரே.

பொருள்: பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறைகின்ற இருள் மிகுந்த இடம் 
கயிலை மலை. இங்கு விடம் உண்ட கரிய கண்டத்தை உடையவராகவும், சிவந்த 
திருமேனியராயும் சிவபெருமான் விளங்குகின்றார். இவர், வளைத்துக் கட்டிய சடைமுடியை 
உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளிபோன்ற மெல்லிய மொழி பேசும் உமை 
மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒருபாகமாகக் கொண்டு மகழ்ந்திருப்பவர். இவர் 
தேவர்களுக்குத் தலைவராவார். ்

குறிப்புரை: இதுவும் அது. கிளிசேர்மொழி மங்கை - கிளியையொத்த மொழியினை உடைய உமாதேவி. 
தெரிய - விளங்க. பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கயிலை - பெரிய யானையை 
மலைப்பாம்பு விழுங்கி மறைய இருள்மிகுந்த கயிலை. 
Lord Civan abides in mount Kailas in the deep darkened Himalayan range Darkness, as brought about by the mountain snake swallowing a huge elephant. His neck is of dark blue colour while His body frame is ruddy. He ties round on His head, His matted hair. He is easily accessible to His devotees. He is the Supreme Lord of Devas. He is happily and visibly concorporate with His consort Umaa Devi who speaks with a melodious voice like that of a parrot. 
Note: On either side of the main entrance of the Big Temple in Thanjavur is an immense icon of Dvaarapaalakaa. The one on the right has a huge python. A close scrutiny of this python will reveal its act of swallowing alive, a huge elephant. 
மாவினுரி வைமங்கை வெருவமூடி முடிதன்மேல் 
மேவுமதி யுநதியும் வைத்த இறைவர் கழலுன்னும் 
தேவா்தே வர்திரிசூலத் தர்திரங்கன் முகவன்சேர் 
கரவும்பொ ழிலுங்கடுங்கற் சுனைசூழ் கயிலைமலையாரே. 3

மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன்மேல் 
மேவும் மதியும் நதியும் வைத்த இறைவர்; கழல் உன்னும் 
தேவர்தேவர்; திரிசூலத்தர் - திரங்கல் முகவன் சேர் 
கரவும் பொழிலும் கடுங்கல்சுனை சூழ் கயிலைமலையாரே.

பொருள்: குரங்குகள் வாழும் காடுகளும், பொழில்களும் மலைகளுக்கு இடையே 
இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த தலம் கயிலை மலையாகும். இங்கு, 
சிவபெருமானார், உமையம்மை அஞ்ச, யானையின் தோலை உரித்துப் 
போர்த்தியிருக்கின்றார். திருமுடியின்மீது பிறை, கங்கை ஆகியவற்றைக் கொண்டு 
இருக்கின்றார். திரிசூலத்தை உடையவர். தம் திருவடிகளை நினைந்து போற்றும் 
தேவர்கட் குத் தலையாய தேவராவார்.

குறிப்புரை: இதுவும் அது. மங்கை வெருவ மாவின் உரிவை மூடி - உமாதேவியார் அஞ்ச யானைத் 
தோலைப் போர்த்து. கழல் உண்ணும் - திருவடியைத் தியானிக்கின்ற. திரங்கல் முகவன் - குரங்குகள். 
Lord Civan abides in mount Kailas holding a trident in one of His hands. Here in the woods, and groves and near the natural springs monkeys having puckered face have a meaningful existence. Umaa Devi was terrified to see an elephant approaching her; Civa killed it and wrapped His body with its skin. He retains the crescent moon as well the river Ganges on His matted hair. He is the Supreme Lord of all Devas who hail and adore His Holy Feet.

முந்நீர்சூழ் ந்தநஞ்சமுண் டமுதல்வர்ம தனன்றன் 
தென்னீரு ருவமழியத் திருக்கண் சிவந்த நுதலினார் 
மன்னீர்மடு வும்படுகல்ல றையினுழுவைசினங் கொண்டு 
கன்னீர்வரை மேலிரைமுன் தேடுங்கயிலை மலையாரே. 4

முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன் 
தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார் - 
மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு 
கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலைமலையாரே.

பொருள்: இயற்கையாகத் தோன்றிய கயிலை மலைக் குகைகளில் புலிகள் வாழுகின்றன. 
இவைகள் பசியினால் சினமடைந்து, கல்லால் இயன்ற மலைமேல் இரையையும், 
அருந்துவதற்கு நிலைபெற்ற நீரினை உடைய சுனைகளையும் தேடுகின்றன. இந்தக் கயிலை 
மலையில் நம் தலைவராகிய சிவபெருமானார் உறைகின்றார். இவர் கடலில் பரவித் 
தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர். மன்மதனின் அழகிய உருவம் அழிய, நெற்றியில் 
சிவந்த கண்ணை உடையவர்.

குறிப்புரை: தென்நீர் உருவம் - அழகிய நீர்மையோடு கூடிய வடிவம். சிவந்த - கோபத்தாற் சிவந்த. 
மன்னீர் மடு - நிலைபெற்ற நீரினையுடைய சுனை. கல்லறை - குகை. உழுவை - புலி. 
Lord Civan abides in mount Kailas where dwell tigers in the natural caves. They become angry because of hunger and roam all round the rocky range in search of prey and of springs to quench their thirst. The Lord once collected the pervasive poison that came out of the sea and swallowed it. He burnt the fair looking god of love Manmathan  by fire that came out of His reddish third eye in His forehead. 
Note: Manmatha is symbolic of Kaaman which is desire. Desire breeds births. Valluvar proclaimed thus "Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire". The only One who is without desire is Civa.

ஒன்றும் பலவுமாய வேடத் தொருவர்கழல் சேர்வார் 
நன்று நினைந்து நாடற்குரியார் கூடித்திரண் டெங்கும் 
தென்றி யிருளில் திகைத்த கரிதண்சாரல் நெறியோடிக் 
கன்றும் பிடியுமடி வாரஞ்சேர் கயிலை மலையாரே. 5

ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார் 
நன்று நினைந்து நாடற்கு உரியார் - கூடித் திரண்டு எங்கும் 
தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடிக் 
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலைமலையாரே.

பொருள்: யானைகள், இரவில் எங்கும் திரண்டு கூடிச் சிதறித் திகைக்கின்றன. இவைகள் 
குளிர்ந்த மலைச்சாரல் வழியே விரைந்து சென்று கயிலை மலையின் அடிவாரத்தில் கன்றும், 
பெண் யானையுமாக ஒன்று “சேருகின்றன. இந்தக் கயிலை மலைக்கு உரிய இறைவர் 
சிவபெருமானாவார். இவர், ஒருவராக இருந்தே, ஒன்றாயும், பற்பலவாககிய வடிவங்களைக் 
கொண்டவருமான ஒப்பற்ற பரம்பொருளாவார். பேரின்பத்தை நாடுதற்கிடமான 
சிவபெருமானை, விரும்பித் தியானிப்பவர்கள், அவர் திருவடியைச் சேர்வார்கள்.

குறிப்புரை: ஒன்றும் பலவும் ஆய வேடத்தார் - ஒன்றாயும் விரிந்து பலவாயும் ஆகிய வேடத்தை 
உடையவர். கழல் சேர்வார் - திருவடியைத் தியானிப்பவர்கள். நன்று நினைந்து - பேரின்பத்தை விரும்பி. 
தென்றி - சிதறி. திகைத்த யானை மலைச்சாரல் வழியாக ஓடி, கன்றும் பிடியுமாக அடிவாரத்துச் சேரும் 
கயிலை என இயற்கை எடுத்துக் காட்டப் பெறுகிறது. 
The Supreme Lord Civa who has no parallel abides in mount Kailas. Though He is a single supreme entity He takes many different forms as He desires, as and when necessitated. To those who sincerely adore and worship (His Holy Feet with a view to enjoy eternal Bliss), Civa is the only Supreme Being to approach for total redemption. In the Kailas mountain, female and calf elephants got separated from their male elephant and go astray in the dark night hours. Knowing this, male elephants rush through the cool mountain ranges searching for them and finally succeed and get united. Such is the scenarieo at the foot hills of Kailai. 
Note: Civa assumes many forms. He does so to help souls.

தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் 
போதார் பாகமாக வைத்த புனிதர் பனிமல்கும் 
மூதாருலகின் முனிவருடனாயற நான்கருள்செய்த 
காதார் குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே. 6, 7.

தாதுஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப் 
போதுஆர் பாகமாக வைத்த புனிதர், பனி மல்கும் 
மூதார் உலகில் முனிவர் உடன்ஆய் அறம் நான்கு அருள் செய்த 
காதுஆர் குழையர், வேதத் திரளர் - கயிலைமலையாரே.

பொருள்: கயிலை மலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றை மாலை விளங்கும் 
முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக 
ஏற்ற தூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு 
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக்காதில் குழை 
அணிந்தவர். வேத வடிவாய் விளங்குபவர்.

குறிப்புரை: தாது - மகரந்தம். போதார் பாகம் - மெல்லிய இடப் பாகம். உலகின் மூதார் முனிவர் - 
உலகத்தில் மிக வயது முதிர்ந்த முனிவராகிய சனகாதியர். 
The Lord of mount Kailas wears on His crest the garland of cassia flowers full of pollen grains. He is the pure and holy one who has accommodated in His soft left half of His body, His consort Umaa Devi who hugged Him. He imparted the divine knowledge of 'virtue', 'wealth', 'happiness', final emancipation from mortal existence and the attainment of eternal beatitude to the aged saint Janakar  and his three associates. He wears in His right ear the ear jewel (He is an embodiment of Vedas). 
Note: Saiva Siddhantha declares that Civa assumes a human form for transmitting the shastra to humanity. Civa is the Guru of all the gurus.

தொடுத்தார் புரமூன்றெரியச் சிலைமேலெரி யொண்பகழியார் 
எடுத்தான் திரள்தோள் முடிகள் பத்துமிடிய விரல்வைத்தார் 
கொடுத்தார் படைகள் கொண்டாரா ளாக்குறுகி வருங்கூற்றைக் 
கடுத்தாங் கவனைக்கழலா லுதைத்தார் கயிலைமலையாரே. 8

தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரிஒண்பகழியார்; 
எடுத்தான் திரள்தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்; 
கொடுத்தார் படைகள்; கொண்டார், ஆளா, குறுகி வரும் கூற்றைக் 
கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் - கயிலைமலையாரே.

பொருள்: கயிலை மலை இறைவர் முப்புரங்களை மேருவில்லை வளைத்து எரியாகிய ஒளி 
பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த 
இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை 
ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வான் முதலிய 
படைகள் கொடுத்தவர். மார்க்கண்டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த
எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.

குறிப்புரை: இராவணனை அடக்கி, வாள் கொடுத்தாண்டார் என்ற வரலாறு காட்டப்படுகிறது. எரிய, 
சிலைமேல், ஒண்பகழியார் தொடுத்தார் எனக் கூட்டுக. படை - வாள். ஆளாக்கொண்டார் - அடிமையாக 
ஆட்கொண்டார். கடுத்து - கோபித்து. 
Lord Civan of mount Kailas fixed in His mountain bow the bright red dart of fire and burnt the three citadels of hostile Asuraas. He crushed the ten mighty shoulders and the ten heads of Raavanan who tried to uproot mount Kailas by pressing His toe on the mountain.  When Raavanan realised his fault and begged for pardon, Civan enslaved him and gifted to him the divine sword and other missiles. Civa got enraged when Yama went near His devotee Maarkandeya to snatch away his life, and kicked him down with His ankleted foot. 
Note: During Tripura Samhara Vishnu became this dart and Agni its tip.

ஊணாப் பலிகொண் டுலகிலேற் றாரிலகுமணி நாகம் 
பூணா ணாரமாகப் பூண்டார் புகழுமிருவர்தாம் 
பேணா வோடிநேட எங்கும் பிறங்கு மெரியாகிக் 
காணா வண்ணமு யர்ந்தார்போலுங் கயிலைமலையாரே. 9

ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணிநாகம் 
பூண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம் 
பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி, 
காணா வண்ணம் உயர்ந்தார்போலும் - கயிலைமலையாரே.

பொருள்: கயிலை மலை இறைவரான சிவபெருமானார், உலகில் மகளிர் இடும் பலியை 
உணவாகக் கொண்டு அதனை ஏற்பவர். விளங்கும் மணிகளைக் கொண்டுள்ள நாகங்களை 
அணிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் ஆகிய
இருவரும் அடிமுடி காண விரும்பிச் சென்று தேடியும், அவர்கள் காண முடியாதபடி, எங்கும் 
விளங்கும் எரிஉருவோடு உயர்ந்து நின்றவர் இவர்.

குறிப்புரை: உலகில் பலி ஊணாக் கொண்டு ஏற்றார் எனக் கூட்டுக. பூண் நாண் ஆரமாக - 
பூணத்தகும் மாலையாக இருவர் - பிரம விஷ்ணுக்கள். 
Lord Civa, of mount Kailas accepts and receives the alms given by worldly folks as His food. He adorns Himself with serpents endowed with gems, as His jewels. When Thirumaal and Brahma (the two praised by all the world) went out searching for Him, He stood as a tall and mighty column of fire beyond their comprehension.

விருதுபகரும் வெஞ்சொற் சமணர்வஞ் சச்சாக்கியா் 
பொருதுபகரு மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய் 
எருதொன்று கைத்திங்கிடுவார் தம்பாலிரந் துண்டி கழ்வார்கள் 
கருதும் வண்ணமு டையார்போலுங் கயிலைமலையாரே. 10

விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர், 
பொருது பகரு மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய், 
எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள் 
கருதும் வண்ணம் உடையார் போலும் - கயிலைமலையாரே.

பொருள்: சமணர்கள் கொடுஞ்சொல் பேசுபவர்கள். தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் 
சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்பு உடையவர்கள். சாக்கியர் என்னும் பெளத்தர்கள் 
வஞ்சனையான மனமுடையவர்கள். இவர்கள் பிறசமயத்தாரிடம் சண்டையிடும் குணம் 
உடையவர்கள். அவர்கள் கூறும் நற்சொற்களைக் கேளாத குணமுடையவர்கள். கயிலை 
மலை இறைவரான சிவபெருமானார், தம்மைப் புகழ்ந்து போற்றித் துதிப்பவர்களுக்குச் 
சமீபமாக இருப்பவர். விடை ஒன்றைச் செலுத்துபவர். உணவிடுவார்பால் இரந்து உண்பவர். 
இகழ்பவரும் தம் பெருமையை நினைந்து போற்றும் இயல்பினை உடையவராய் 
விளங்குபவர்.

குறிப்புரை: விருது - பட்டங்கள். பொருது - மோதுதல் காரணமாக. எருது ஒன்று உகைத்து - ஓர் 
இடபத்தில் ஏறிச் செலுத்தி. 
Jain folks are ever prone to boast about their accomplishments and broadcast their achievements to everyone. The cunning minded Buddhists quarrel against other religionists using harsh words. Lord Civa ignores these two sects, and comes closer to grace those who hail Him in all sincerity. He rides on His bull and accepts the alms given by willing persons and eats it. He is the Lord of mount Kailas with such a glorious nature that even those who tend to side line Him are forced to give proper consideration to Him. 
Note: Lord Civa cannot be ignored. He is above praise and abuse.

போரார் கடலிற்புனல் சூழ்காழிப் புகழார்சம்பந்தன் 
காரார் மேகங்குடி கொள்சாரற கயிலைமலையார்மேல் 
தேராவு ரைத்தசெஞ் சொன்மாலை செப்புமடியார்மேல் 
வாரா பிணிகள் வானோருலகின் மருவுமனத்தாரே. 11

போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன், 
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலைமலையார்மேல், - 
தேரா உரைத்த செஞ்சொல்மாலை செப்பும் அடியார்மேல் 
வாரா, பிணிகள்; வானோர் உலகின் மருவும் மனத்தாரே.

பொருள்: கரையோடு போர் செய்வது போன்ற தோற்றத்தை உடைய கடல் நீரால் சூழப்பட்ட
தலம் சீகாழிப் பதி. இப்பதியில் தோன்றியவர் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன். இவர், 
கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள கயிலைமலை இறைவர்மேல், 
இத்திருப்பதிகத்தைத் தெளிந்து உரைத்தார். இச்செஞ்சொல் மாலையை ஓதும் 
அடியவர்க்குப் பிணிகள் வாரா. அவர்கள் வானோர் உலகத்தில் கலந்துவிடும் மனதை 
உடையவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை: கபிலைமலையாரைச் சொன்ன செஞ்சொல் மாலை வல்லார்மேல் பிணிகள் வாரா; வானோர் 
உலகத்தில் மருவுவர் என்கின்றது. தேரா - தெளிந்து. 
The far-famed and pre-eminent Gnaanasambandan of Seekaazhi, which is close to the sea that besieges its shores, has sung these lucid hymn on the Lord of mount Kailas. Here in the Himalayan ranges thick clouds rest permanently, making the area dark, on the slopes of the range. Diseases will not affect those who can recite this garland of elegant verses. Their minds are set towards joining the world of the supernal. 
Note: The hymns of our saint are in themselves living and vivifying benediction.

திருச்சிற்றம்பலம்

68ஆம் பதிகம் முற்றிற்று 
உ 
சிவமயம் 
69. திரு அண்ணாமலை 
திருத்தலவரலாறு: 
பத்தாம் பதிகம் பார்க்க. 
பதிக வரலாறு:

திரு அறையணி நல்லூரை வழிபட்ட புகலிப் பிள்ளையார் தேவரும் முனிவரும் வணங்கும் 
திருவண்ணாமலையை அன்பர்கள் காட்டக் கண்டார். அண்ணாமலை, சிவனுருவாகக் காட்சி 
வழங்குதலும், தமது கண்களால் அக்காட்சியைப் பருகி, பெருமானை வழிபட்டு இப்பதிகத்தைப் 
பாடினார்கள். 
THE HISTORY OF THE PLACE 
See Tenth Hymn.

INTRODUCTION TO THE HYMN 
69. THIRU-ANNAAMALAI 
The godly child adored the Lord-God at Araianinallur from where Thiruvannaamalai was visible. When devotees brought this to his notice our saint beheld it as the very form of Civa. Then he sang the following hymn in adoration of the holy mountain.

திருச்சிற்றம்பலம்


69. திருவண்ணாமலை 
பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் 
மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள்செய்தார் 
தூமா மழைநின் றதிர வெருவித் தொறுவின் னிரையோடும் 
ஆமாம் பிணைவந் தணையுஞ் சார லண்ணா மலையாரே. 1

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார், புகழ்வார், வானோர்கள்; 
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் - 
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும் 
ஆமாம்பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கம் 
செய்கின்றன. அதனைக் கேட்டு அஞ்சிய ஆட்டு மந்தைகளும் காட்டுப் பசுக்களும் 
வரிசையாக வந்து திருவண்ணாமலையின் . அடிவாரத்தில் ஒதுங்குகின்றன. 
இத்திருவண்ணாமலையின் இறைவரான சிவபெருமானை, அடியவர்கள் பொலிவு மிக்க 
நறுமலர்களைத் தூவி வழிபடுகின்றனர். வானோர்கள் புகழ்ந்து போற்றுகின்றனர். 
அழியாவரம் பெற்ற , அசுரர்களின் முப்புரங்களையும் எரித்து அழித்தவர் இவர். 
அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் இப்பெருமான் வழங்கியவர்.

குறிப்புரை: அடியார்கள் மலர்கொண்டு அடிவணங்குவார்கள்; - தேவர்கள் தோத்தரிப்பார்கள்; 
இங்ஙனமாகத் திரிபுரம் எரித்த பெருமான் அண்ணாமலையார் ஆவர் என்கின்றது. பூஆர் மலர் - போதும் 
விரிந்த பூவூம். மூவார் - அழியாதவர்கள். மூவர் - திரிபுராதிகள். தொறுவின் நிரையோடும் - ஆட்டு 
மந்தை வரிசையோடும். ஆமாம் பிணை - காட்டுப் பசுக்கள். 
The black clouds over Thiru-annaa-malai hills create thunder and precipitate water particles from the sky. By hearing this thunderous noise, rows of sheep and forest cows move on and reach the foothill of this mountain. Lord Civa who is entempled in this place is worshipped devotees by offering elegant and aromatic flowers. The Devaas praise and adore Him. This Lord Civa destroyed the three citadels of hostile Asuraas, who once before had received the boon of deathlessness from Him. However, Civa saved and graced three Asuraas among the group who were sincere to Him and gave them protection under His custody. 
Note: Even today Annaamalai is rich in pastures.

மஞ்சைப் போழ்ந்த மதியஞ் சூடும் வானோர் பெருமானார் 
நஞ்சைக் கண்டத் தடக்கு மதுவும் நன்மைப் பொருள்போலும் 
வெஞ்சொற் பேசும் வேடர் மடவா ரிதண மதுவேறி 
அஞ்சொற் கிளிக ளாயோ வென்னு மண்ணா மலையாரே. 2

மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் - 
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும் - 
வெஞ்சொல் பேசும் வேடர்மடவார் இதணம்அதுஏறி, 
அம்சொல் கிளிகள், “ஆயோ!' என்னும் அண்ணாமலையாரே.

பொருள்: வேடர்கள் கொடிய சொற்களான, “வெட்டு, குத்து, கொல்லு‘ என்பனவற்றையே 
பேசுவர். அவர்களின் பெண் மகளிர், தினைப்புனங்களில் பரண்மீது ஏறி இருப்பர். 
அங்கிருந்து தினைகளை உண்பதற்கு வருகின்றதும், அழகிய சொற்களைப் பேசுவதுமாகிய 
கிளிகளை ’ஆயோ‘ என ஓலி எழுப்பி விரட்டுவர். இப்படிப்பட்ட அழகிய நிலத்தை உடைய 
திருவண்ணாமலையின் இறைவர் சிவபெருமானார் ஆவார். இவர், மேகங்களைக் கிழித்துச் 
செல்லும் பிறைமதியைச் சூடியிருப்பவர். வானோர்களின் தலைவரும் இவரே. கடலிடைத் 
தோன்றிய நஞ்சை உண்டு அதைக் கண்டத்தில் அடக்கியவர். உலகத்தை அழியாது காக்கும் 
நன்மை கருதிச் செய்தவர் ஆவார்.

குறிப்புரை: அண்ணாமலையாராகிய பிறைசூடிய பெருமான் நஞ்சையுண்டதும் நன்மை கருதியேயாம் 
என்கின்றது. மஞ்சு - மேகம். வெஞ்சொல் பேசும் வேடர் - பிடி எறி குத்து கொல்லு என்ற கொடிய 
சொற்களையே பேசுகிற வேடர்கள். மடவார் - வேட்டுவத்தி. இதணம் - பரண். ஆயோ என்பது கிளி 
ஓட்டும் ஒலிக் குறிப்பு. 
In Thiru-annaa-malai area millet (Panicum italicum) fields are in plenty. The young girls of hunters who own these fields, look after the gardens mainly to drive away the parrots that make pleasant sounds resembling like human voice. The parrots come to these fields to eat the grains. The girls sitting on the raised platform in the centre of the fields and shout, making a sound Aayoo  to chase the parrots, that fly away then. Normally the hunter speak using cruel words such as 'stab', 'kill', etc., but their girls do not. Lord Civan of this place - the Chief of Devaas - retains in view in His matted hair, the crescent moon that passes through cleaving the clouds. He swallowed the poison that came out of the sea and retained it in His throat. Lo! He did this to save the world from total annihilation. 
Note: In olden days the crops of millet-fields were tended with care by lasses.

ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் 
ஊனத் திரளை நீக்கு மதுவு முண்மைப் பொருள்போலும் 
ஏனத் திரளோ டினமான் கரடி யிழியு மிரவின்கண் 
ஆனைத் திரள்வந் தணையுஞ் சாரலண்ணா மலையாரே. 3

ஞானத்திரள்ஆய் நின்ற பெருமான் - நல்ல அடியார்மேல் 
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும் - 
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண் 
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: இரவில், பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், யானைகளின் 
கூட்டமும், மலைச்சாரலில் ஒருங்கே இறங்கி வருகின்றன. இந்தத் திருவண்ணாமலையின் 
இறைவர், ஞானப்பிழம்பாய் நிற்கும் சிவபெருமானார் ஆவார். நன்மைகளையே கருதும் 
அடியவர்களின் ஊனுடலோடு பிறக்கும் பிறவித் தளைகளை நீக்குபவர். இவ்வருட்செயல், 
வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

குறிப்புரை: ஞானப் பிழம்பாய் நிற்கும் அண்ணாமலையார் நல்ல அடியார்மேல் வருங்குற்றங்களை 
நீக்குவதும் உண்மையே போலும் என்கின்றது. திரள் - பிழம்பு ஊனத்திரள் - குறைகளின் குவியல். 
உடம்பு என்றுமாம். உண்மைப்பொருள் - சத்தியம் போலும் என்பது ஒப்பில் போலி. ஏனத்திரள் - பன்றிக் 
கூட்டம். ஆனை - யானை. 
Lord Civan entempled in Thiru-annaa-malai is an embodiment of wisdom. For those sincere devotees who always think good and adore Him, grants relief from the cycle of birth and death. This divine act is praised in the Vedas and Aagamaas, for which He is the author. In this town Thiru-annaa-malai, during night hours herds of hogs, deer and bear descend down from the top of the hill to the slopes where the elephants also come and join these animals. 
Note: The mountain of Annaamalai was once a jungle where wild animals flourished in large numbers.

இழைத்த இடையா ளுமையாள் பங்க ரிமையோர் பெருமானார் 
தழைத்த சடையார் விடையொன் றேறித் தரியார் புரமெய்தார் 
பிழைத்த பிடியைக் காணா தோடிப் பெருங்கை மதவேழம் 
அழைத்துத் திரிந்தங் குறங்குஞ் சார லண்ணா மலையாரே. 4

இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர்பெருமானார், 
தழைத்த சடையார், விடைலஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார் - 
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம் 
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே,.

பொருள்: பெரிய தும்பிக்கையை உடைய மதம் பொருந்திய ஆண் யாணை, தன்னை விட்டுப் 
பிரிந்த பெண் யானையைக் காணாது, குரல் கொடுத்து அழைக்கிறது. தேடித் திரிந்து, 
அலுப்படைந்து மலைச் சாரலில் உறங்குகின்றது. இந்தத் திருவண்ணாமலை இறைவர் 
சிவபெருமானார் ஆவார். இவர், நூல் போன்ற நுண்ணிய இடையினை உடைய 
“உமையம்மையை ஒரு பாகமாக உடையவர். தேவர்களுக்கு தேவரானவர். தழைத்த 
சடையினை உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை: உமைபங்கர், தேவதேவர், தாழ்சடையார், விடையேறி, திரிபுரம் எய்தவர் இவர் என்கின்றது. 
இழைத்த - நூலிழையின் தன்மையையுடைய, தரியார் - பகைவர். பிழைத்த - தவறிய, பெரிய களிறு 
தன்னை விட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாமல் அழைத்துச் சுற்றி அலுத்துப்போய் உறங்கும் சாரல் 
என மலையியற்கை கூறியவாறு. 
In the hills of Thiru-annaa-malai, the rutting male elephant  with long trunk trumpets aloud to find out the whereabouts of its mate which has gone astray. It roams all over the hills unsuccessfully, becomes tired and falls down to sleep in the slopes of the mountain. Lord Civan of this place concorporates on the left side of His body, His consort Umaa Devi whose waist is as narrow as a thread. He has luxuriant matted hair. He is the Supreme Lord of all the celestials. Riding on His bull, Civa went and destroyed the three citadels of the hostile Asuraas. 
Note: The love of the male elephant for its mate is proverbial. The bull on which Civa went and destroyed the citadels in this case is Thirumaal.

உருவிற் றிகழு முமையாள் பங்க ரிமையோர் பெருமானார் 
செருவில் லொருகால் வளைய வூன்றிச் செந்தீ யெழுவித்தார் 
பருவிற் குறவர் புனத்திற் குவித்த பருமா மணிமுத்தம் 
அருவித் திரளோ டிழியுஞ் சார லண்ணா மலையாரே. 5

உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர்பெருமானார், 
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார் - 
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் 
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: குறவர்கள் பெரிய வில்லை ஏந்தியிருக்கின்றனர். அவர்களின் விளைநிலங்களின் 
வரப்புக்களின்மேல் குவித்து வைத்திருக்கும் பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித் 
திரளோடு மலைச்சாரலில் இறங்குகின்றன. இந்தத் திருவண்ணாமலையின் இறைவர் 
சிவபெருமானார் ஆவார். இவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் 
கொண்டவர்.  இமையவர்களுக்குத் தலைவர். பெரிய போர் வில்லை ஒரு காலால் . 
வளைத்துக் கணை எய்து, முப்புரங்களையும் செந்தீயால் எரித்து அழித்தவர். '

குறிப்புரை: ஒரே உருவில் விளங்கும் உமையொருபாகர், வில் வளைத்துத் திரிபுரத்தைச் செந்தீயாட்டியவர் 
இவர் என்கின்றது. செரு - போர். வில் ஒருகால் வளைய ஊன்றி - வில்லினது ஒரு தலையை 
வளைவதற்காகக் காலிற் பெருவிரலால் ஊன்றி. பருவில் குறவர் - பருத்த வில்லையுடைய குறவர்கள். 
குறவர் குவித்த முத்தங்கள் அருவியோடு இழியும் சாரல் அண்ணாமலை என்க. 
The Kuravars (குறவர்கள் - mountain tribes who live by hunting) carry big bows in their hands. They heap on the ridges of their farmland big pearls and ruby gems. These gems are washed away by the waterfalls and reach the plains in Thiru-annaa- malai. Such indeed is the fertile land where Lord Civa is entempled. He is concorporate here with His radiant consort Umaa Devi. He is the Chief of the celestial. By pressing His foot on the big martial bow and causing it to bend, He shot the arrow emitting fire, destroying the three citadels of hostile Asuraas. 
Note: Pearl-yielding bamboos flourished here in the past.

எனைத் தோரூழி யடியா ரேத்த இமையோர் பெருமானார் 
நினைத்துத் தொழுவார் பாவந் தீர்க்கும் நிமல உறைகோயில் 
கனைத்த மேதி காணா தாயன் கைம்மேற் குழலூத 
அனைத்து ஞ்சென்று திரளுஞ் சார லண்ணா மலையாரே. 6

எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார், 
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில் - 
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத, 
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: மலைச்சாரலில் புல் மேயச் சென்ற எருமைகளைக் காணாததால், ஆயன் தன் 
கையிலிருந்த குழலினை ஊதுகிறான். அந்த ஒலியைக் கேட்டவுடன் அனைத்து 
எருமைகளும் வீடுதிரும்பும் விருப்பத்துடன் மலையடி வாரத்தில் ஒன்று சேருகிறது. இந்தத் 
திருவண்ணாமலை இறைவர் சிவபெருமானார் ஆவார். இவர் பல ‘ஊழிக்காலங்களைக் 
கண்ட பழையோன்’ ஆவார். அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய் 
விளங்குகின்றார். தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் 
தீர்த்தருளுகின்ற நிமலன் இவர். இந்த நிமலர் உறையும் கோயில் திருவண்ணாமலை ஆகும்.

குறிப்புரை: நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில் அண்ணாமலையார் 
என்கின்றது. எனைத்து ஓர் ஊழி - எத்தகையதோர் ஊழியிலும், கனைத்த - ஒலித்த. மேதிகளைக் 
காணாத ஆயன் குழலூத அவைகள் எல்லாம் திரளும் சாரல் என்க. மேதி - எருமை. 
The cowherd who took his buffaloes to the mountain area (Annaamalai) for grazing, could not locate them at the end of the day, though they were roaring and grazing all through the day. He, therefore, played music in his flute. By hearing the musical tone, all the buffaloes moved towards the foot of the hills with a desire to return home. Such indeed is Thiru-annaa-malai where Lord Civan who is ever pure and Supreme is enshrined. He is the Chief of all celestials. Devotees adore and worship Him. He is for ever in existence for aeons without any beginning or end. He annihilates the sins of His devotees who merely think and adore Him in their minds. The huge temple in Thiru-annaa-malai is the place where this Lord Civa is enshrined showering graces on all. 
Note: The power of the music in the flute of the cowherd is beautifully described in this verse. Mere thinking on Thiru-annaa-malai and Lord Civa therein, will give one final emancipation from mortal existence and the attainment of eternal beatitude (நினைத்தால் முத்தி தரும் தலம் திருஅண்ணாமலை). This fact is brought out in this verse.

குருவருள்: ‘எனைத்தோ ரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் நினைத்துத் தொழுவார் பாவம்
தீர்க்கும் நிமலர் உறை கோயில்’ என்ற தொடரில் நினைத்தால் முத்தி தரும் தலம் திருவண்ணாமலை என்ற 
குறிப்பு காணப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ‘அண்ணாமலையார் துணை' என்றே 
கையெழுத்திடுவர் கடிதங்களில். அதுபற்றி விசாரித்தபொழுது, நினைத்தால் முத்தி தரும் தலம்
அண்ணாமலை என்பதால், ‘அண்ணாமலையார் துணை' என்று போடுகிறார்கள் என்று ஒரு நகரத்தார், 
கருப்பன் செட்டியார் என்பவர் குறிப்பிட்டார். இது இப்பாடல் கருத்திற்கு அரணாகவே உள்ளமை காண்க.

வந்தித் திருக்கு மடியார் தங்கள் வருமேல் வினையோடு 
பந்தித் திருந்த பாவந் தீர்க்கும் பரம னுறைகோயில் 
முந்தி யெழுந்த முழவி னோசை முதுகல் வரைகள்மேல் 
அந்திப் பிறைவந் தணையுஞ் சார லண்ணா மலையாரே. 7

வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல்வினையோடு 
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் - 
முந்தி எழுந்த முழவின் ஓசை முதுகல்வரைகள் மேல் 
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்து எழும் முழவின் ஓசை இடைவிடாமல் 
கேட்கும் தலம் இது. பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே, அந்திக் காலத்துப் 
பிறை வந்து அணையும் மலை இதுவாகும். இத்திருவண்ணாமலை இறைவர் சிவபெருமான் 
ஆவார். தன்னை வழிபட்டு வேறு எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் அடியவர்களின் 
ஆகாமிய வினைகளையும், அவர்களைப் பந்தித்திருக்கும் சஞ்சித வினைகளையும் போக்கி 
அருளும் பரமனாவார். அவரது கோயில் திருவண்ணாமலை ஆகும்.

குறிப்புரை: தொழும் அடியார்களின் ஆகாமிய சஞ்சித வினைகளைத் தீர்க்கும் பரமன் உறை கோயில் 
அண்ணாமலை என்கின்றது. வந்தித்து இருக்கும் - வழிபட்டுச் சோகம் பாவனையில் இருக்கும். பந்தித் 
திருந்த - ஆன்மாவின் அறிவை மறைத்திருந்த பெரிய பாறைகளில் அந்திப் பிறை அணையும் சாரல் 
என்பது அண்ணாமலையே பிறை சூடிய பெருமானாகக் காட்சியளிப்பதைக் கருதி. 
In the Thiru-annaa-malai town the loud proclamation about the on coming festivals by beats of drums never ceases. The crescent moon makes its appearance in the cleft of the hoary rocky mountain at dusk (The hidden meaning of this line is that the mountain represents Lord Civa while the crescent moon at dusk is the one He wears in His matted hair). Lord Civa is the Supreme who annuls annihilates the two kinds of sins of His devotees one, accumulated in all the previous births minus that which is being undergone, called Sanchitham ; and the second is the present sin committed during the present birth called Aahaamiyam . This Lord Civan's temple is in Thiru-annaa-malai town.

மறந்தான் கருதி வலியை நினைந்து மாறாயெடுத் தான்றோள் 
நிறந்தான் முரிய நெரிய வூன்றி நிறைய வருள்செய்தார் 
திறந்தான் காட்டி யருளா யென்று தேவ ரவர்வேண்ட 
அறந்தான் காட்டி யருளிச் செய்தா ரண்ணா மலையாரே. - 8

மறம்தான் கருதி, வலியை நினைந்து, மாறுஆய் எடுத்தான் தோள் 
நிறம்தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார் - 
“திறம் தான் காட்டி அருளாய்! என்று தேவர்அவர் வேண்ட, 
அறம்தான் காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

பொருள்: திருவண்ணாமலை இறைவர் சிவபெருமான் ஆவார். தேவர்கள், இவரைத் தனது 
வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு வேண்டினர். 
தீயவர்களை ஒறுப்பது அறச்செயல் என்று உணர்த்த, அசுரர்களை அழித்துத் தேவர்களுக்கு 
அருள் செய்த பெருமான் இவர். இராவணன் தனது வலிமையையும், வெற்றிகளையும் 
பெரிதாக எண்ணி, சிவன் உறையும் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தான். அவனது 
மார்பு, தோள் ஆகியன நெரியுமாறு தன் காலை ஊன்றினார். பின்பு, இராவணன் பணிந்து 
வேண்ட, அவனுக்கு அருள் செய்த பெருமானும் இவரே.

குறிப்புரை: இலங்கை மன்னனது தோள் நெரிய, விரல் ஊன்றிய இறைவன் அண்ணாமலையான் 
என்கின்றது. மறம் - வீரம். நிறம் - மார்பு. தேவர் திறங்காட்டியருளாய் என்று வேண்ட, அறங்காட்டி 
அருள் செய்தார் என முடிக்க. 
The Devaas prayed to Lord Civa to protect them from the havoc inflicted on them by the Asuraas by revealing His might. To establish the truth of the principle that punishing the wrong doers is not a sin, but a virtue, Lord Civa destroyed in toto the three citadels of the hostile Asuraas and thereby showered His grace on the Devaas to a fearless in future life. The egoistic Raavanan had owing to his physical strength, and valorous accomplishments in various walks of his life, prompted him uproot mount made Kailas, the abode of Lord Civa; but Raavanan got his chest and shoulders crushed when Lord Civa who pressed the mountain by His toe. Raavanan repented and begged pardon for his misdeed. Lord Civa pardoned him and graced him by a few boons. He is indeed that Lord now abiding in Thiru-annaa-malai. 
Note: Doing away with hostile forces leads to the restoration of dharma. This is done by Civa alone.
தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை 
மூடி யோங்கி முதுவே யுகுத்த முத்தம் பலகொண்டு 
கூடிக் குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மினென் 
றாடிப் பாடி யளக்குஞ் சார லண்ணா மலையாரே. 9

தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர்பெருமானை; 
மூடி ஒங்கி முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு, 
கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்! என்று 
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்: பழமையான மூங்கில் மரங்கள் மலையை மூடி இருக்கும்படியான அளவுக்கு ஓங்கி 
வளர்ந்துள்ளன. அவைகளில் இருந்து உதிர்ந்த முத்துக்களை குறவர் குலப்பெண்கள் 
ஓரிடத்தில் குவித்து வைக்கின்றனர். அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து, 
ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து கொடுக்கின்றனர். இந்தத் திருவண்ணாமலைத் தேவர்
பெருமானான, சிவபெருமானைத் திருமால் பிரமன் தேடியும் காணாதவர் ஆயினர்.

குறிப்புரை: மாலும் அயனும் பெருமானைத் தேடிக் காணாராயிருக்கக் குறத்தியர் மூங்கில் முத்துக்களைக் 
குவித்து, வாங்கிக் கொள்ள வாருங்கள் என்றழைக்கும் அண்ணாமலை என்கின்றது. வேய் உகுத்த 
முத்தம் - மூங்கிலில் பிறந்த முத்துக்கள். 
In the foothill vegetation of Thiru-annaa-malai, there are plenty of very old bamboo trees. They are so thick and tall as to cover the mountain from one's view. The Kurava girls (mai îà Au...) collect the pearls dropping from the age-old trees and heap them in the market place. They sing and dance and invite the passers by to come and buy their pearls, they sell them not in numbers but in measures by measuring the quantity as needed by the buyers. Such a fertile place is Thiru-annaa-malai where our Supreme Lord Civa who could not be found by Thirumaal and Brahma in spite of their serious search for Him abides.

தட்டையி டுக்கித்தலை யைப்பறித்துச் சமணேநின் றுண்ணும் 
பிட்டர்சொ ல்லுக்கொள்ள வேண்டாபே ணித்தொழுமின்கள் 
வட்டமுலை யாளுமையாள் பங்காமன்னி யுறைகோயில் 
அட்டமாளித் திரள்வந்த ணையுமண்ணா மலையாரே.  10

தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும் 
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்! - 
வட்டமுலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில, 
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணா மலையாரே.

பொருள்: சமணர்கள், தங்களின் தடுக்குகளை, அக்குளில் இடுக்கிக் கொண்டிருக்கின்றனர். 
தங்களது தலை மயிரை ஒவ்வொன்றாகப் பறித்து நீக்கிய மொட்டைத் தலையர்கள். 
ஆடையின்றி இருப்பவர்கள். நின்று கொண்டு உண்ணுபவர்கள். இந்தப் பிரட்டர்களின்
சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டாம். மலைச் சாரலில் சிங்கக் கூட்டங்கள்
வந்து ஒன்று சேரும் தலம் திருவண்ணாமலை. இத்திருவண்ணாமலையில் சிவபெருமான், 
வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டு வீற்றிருந்து 
அருளுகின்றார். இப்பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயில் இதுவே. 
இக்கோயிலை விரும்பித் தொழுவீராக.

குறிப்புரை: சமணர் புத்தர் சொல்லைக் கேளாதே. இறைவனைத் தொழுங்கள். அவ்விறைவன் 
உறையுங்கோயில் அண்ணாமலையாகும் என்கின்றது. தட்டு - அடுக்கு. பிட்டர் - பிரட்டர்கள். அட்டம் - 
குறுக்கு. தக்க - உரை. 
Samanars hold their mats on their arm pits. They pluck out their hair one by one and make their heads bald. They eat in standing posture. Ye companions! do not listen to the words of these mad Samanars. Worship Lord Civa with all sincerity who is concorporate with His young and lovely consort Umaa Devi and who is enshrined for ever at the temple in Thiru-annaa-malai where, in the slopes of the mountain lions roam in full strength. 
Note: Samanars, like the Buddhists, are intrasignant, recalcitrant folks.

அல்லா டரவ மியங்குஞ் சார லண்ணா மலையாரை 
நல்லார் பரவப் படுவான் காழி ஞான சம்பந்தன் 
சொல்லான் மலிந்த பாட லான பத்து மிவைகற்று 
வல்லா ரெல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே. 11

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை 
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் 
சொல்லால் மலிந்த பாடல்ஆன பத்தும்இவை கற்று 
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னிவாழ்வாரே.

பொருள்: இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடையது 
திருவண்ணாமலை. இத்திருவண்ணாமலையில் சிவபெருமான் உறைகின்றார். 
இப்பெருமானை நல்லவர்களால் போற்றப்படும் சீகாழிப்பதி ஞானசம்பந்தன் போற்றிப்
பாடினார். இப்பதிகப் பாடல்களுள் அருள்சொல் அமைப்புக்கள் நிறைந்துள்ளன. 
இப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் கற்ற, வல்லவர்கள் எல்லாரும், வானோர் வணங்க 
நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை: அண்ணாமலையாரை ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் வல்லார் தேவர் வணங்க 
வாழ்வார்கள் என்கின்றது. அல் - இரவு. மன்னி - நிலைபெற்று. 
The hooded snakes roam about during night hours in the slopes of the Annaamalai hills. Gnaanasambandan of Seekaazhi - praised by the righteous ones of this place has sung in praise of Lord Civa of Thiru-annaa-malai ten verses in these rare chaste words. All those who master these ten verses will be hailed by celestials and will shine happily for ever. 
Note: The divine hymns of our saint assuredly confer divinity on them who recite them.

திருச்சிற்றம்பலம் 
69ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

70. திருவீங்கோய்மலை 
திருத்தலவரலாறு:

திருவீங்கோய்மலை என்ற திருத்தலமானது சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். 
திருச்சிராப்பள்ளி - நாமக்கல் பேருந்து வழியில் அகண்ட காவிரியின் வடகரையில் உள்ளது. 
தற்காலம் திருவிங்கநாத மலை என மருவி வழங்குகின்றது. அகத்தியர் ஈஉருவாய்ப் பூசித்துப் பேறு 
பெற்றமையின் இப்பெயர் எய்தியது. காவிரி தென்கரையில் உள்ள கடம்பந்துறையைக் 
காலையிலும், திருவாட் போக்கியை நண்பகலிலும் இத்தலத்தை மாலையிலும், ஒரே நாளில் 
வழிபடுதல் மிக்க பயனைத் தரும். ‘காலைக் கடம்பர் மத்தியானச் சொக்கர் மாலைத் திருவிங்க 
நாதர்’ என்பது பழமொழி. கோயில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இறைவன் மரகதாசலர். 
இறைவி மரகதவல்லி. தீர்த்தம் அமிர்த தீர்த்தம்.

கல்வெட்டு:

திரிபுவனச் சக்கரவர்த்தி வீரதேவனது 36ஆம் ஆண்டில் இராஜராஜ வளநாட்டுத் 
திருவாலிநாட்டுத் திருவீங்கோய்மலை என வழங்கப்பட்டது. இறைவன் பெயர் திருவீங்கோய் 
ஊருடையார் என்று கல்வெட்டு கூறும். இக்கோயிலில் ஆளுடைய பிள்ளையார்க்கும், 
திருநாவுக்கரசு தேவர்க்கும், ஆலால சுந்தரப் பெருமானுக்கும், நக்கீர தேவர்க்கும், திருப்படி 
மாற்றுக்கும், வியஞ்சநத்துக்கும் வடகரை இராஜராஜ வளநாட்டு மலை ஸ்ரீஜயங்கொண்ட சோழ 
சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குடி மகாசபையார் நிலம் விற்றுக் கொடுத்தார்.

பதிக வரலாறு:

திருப்பைஞ்ஞீலியை வணங்கி மண்பரவுந் தமிழ்மாலைகளைப் பாடிப் பிறதலங்களையும் 
வழிபட எண்ணிய சண்பை நாடர், திருவீங்கோய்மலையை அடைந்தார். அங்கு, கங்கைச் சடையர் 
கழல்பணிந்து, ‘வானத்துயர் தண்’ என்னும் இசைப் பதிகம் பாடினார். 
THE HISTORY OF THE PLACE 
70. THIRU-EENGOI-MALAI 
The sacred city of Thiru-eengoi-malai is on the north bank of river Cauvery in Chola Naadu. It is on the bus route from Thiruch-chiraappalli to Naamakkal. Since sage Agaththiyar worshipped the Lord here, taking the form of a fly ('ee') the place got the above name. Nowadays, the name got corrupted to Thiruvinganaathamalai. The temple is located atop a small hill. 
The God's name is Marakathaachalar and the Goddess's name is Marakathavalli. The sacred ford is Amirtha Theerththam. 
It is considered meritorious to offer worship at Kadambanthurai (on the south shore of Cauvery) in the morning, at Thiruvaatpokki at midday, and here in the evening on the same day.
According to inscriptions, the village assembly of Sree Jayangkonda Chola Chathurvedhimangalam, sold some land to make a gift for the shrines of saints Aaludaiya Pillaiyaar, Thirunaavukkarasar, Aalaalasundharapperumaan, Nakeera- dhevar and for 'Thiruppadimaarru' and condiments (viyanjchanam). 
INTRODUCTION TO THE HYMN 
It is from Thiruppaigngneeli that our saint arrived at Thiruveengkoimalai and sang the following hymn. 
Note: It is unfortunate that the Emerald Lingam in the shrine of Eengoi-malai and worth five hundred crores of rupees, is missing. Let us pray for the recovery and reinstallation of this rare Lingam!

திருச்சிற்றம்பலம்

70. திருவீங்கோய்மலை

பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

வானத் துயர்தண் மதிதோய் சடைமேல் மத்த மலர்சூடித் 
தேனொத் தனமென் மொழிமான் விழியாள் தேவி பாகமாக் 
கானத் திரவி லெரி கொண் டாடுங் கடவு ளுலகேத்த 
ஏனத் திரள்வந் திழியுஞ் சார லீங்கோய் மலையாரே. 1

வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி, 
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா, 
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் - உலகு ஏத்த, 
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே.

பொருள்: பன்றிகள் கூட்டமாக இறங்கி வரும் சாரலை உடைய திருஈங்கோய் மலையில் 
சிவபெருமான் உலக மக்கள் உணர்ந்து போற்றுமாறு எழுந்தருளி உள்ளார். இவர், 
வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் உறையும் சடைமுடியில் ஊமத்தம் 
மலர்களைச் சூடி இருக்கின்றார். தேன் போன்ற இனிய மொழிகளையும் மான்விழி போன்ற 
கண்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு இருக்கின்றார். இவர், 
இடுகாட்டில் இரவில் எரியேந்தி ஆடும் இறைவர் ஆவார்.

குறிப்புரை: பிறை, மத்தம் இவற்றைச்சூடி, தேவியைப் பாகமாகக் கொண்டு, நள்ளிரவில் நடமாடும் 
பெருமான் ஈங்கோய் மலையார் என்கின்றது. கான் - சுடுகாடு. ஏனத்திரள் - பன்றியின் கூட்டம். 
Lord Civan retains in His matted hair the cool crescent moon, shining bright in the sky. Along with it, He wears the datura flowers also in His matted hair. He is concorporate with His consort Umaa Devi whose voice is as sweet as honey and her eyes are like the long and lovely eyes of deer. He dances in the burning ground during night hours. He is adored by people all over the world. This Lord Civa is enshrined in Thiru-eengoi-malai where herds of hogs descend on the slopes of the mountain. Note: In the past Eengoi-malai was the habitat of wild animals. Nakkirar's Eengoi Ezhupathu forms part of the Eleventh Thirumurai.
சூலப் படையொன் றேந்தி யிரவிற் சுடுகா டிடமாகக் 
கோலச் சடைகள் தாழக் குழல்யாழ் மொந்தை கொட்டவே 
பாலொத் தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் 
ஏலத் தொடு நல் லிலவங் கமழு மீங்கோய் மலையாரே. 2

சூலப்படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம்ஆக, 
கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே, 
பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார் - 
ஏலத்தொடு நல்இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே.

பொருள்: மணம் கமழும் பொருட்களான ஏலம், நல்ல இலவங்கம் ஆகியன நிரம்பியுள்ள 
திருஈங்கோய் மலையில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். இவர் முத்தலை ஆயுதமான 
சூலம் ஒன்றைத் தமது படைக்கலனாக ஏந்தியுள்ளார். இரவில் சுடுகாட்டைத் தம் இடமாகக் 
கொண்டு உள்ளார். அவரது அழகிய சடைகள் தாழ்ந்து தொங்குகின்றன. குழல், யாழ், 
மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்க, பால் போன்ற இனிய மொழியினை உடைய 
பார்வதி தேவி காண நடனமாடும் பரமனார் இவர்.

குறிப்புரை: சுடுகாட்டில் குழலும் யாழும் முழவும் கொட்ட, பாகம் பிரியாள் காண ஆடும் பெருமான் இவர் 
என்கின்றது. கோலச்சடை - அழகியசடை. குழல், யாழ், மொந்தையைக் கொட்ட என்றாலும், குழலை 
ஊத, யாழை வாசிக்க, மொந்தையைக் கொட்ட எனக் கருவிகளுக்கேற்பப் பொருள் கொள்க. 
Lord Civa holds in one of His hands the trident as His war weapon. His beautiful matted hair dangles. In this posture He dances in the burning ground during night hours in the presence of His consort Paarvathi Devi whose voice is as sweet as milk, to the accompaniment of music from the musical instruments such as flute, lute, and the drum (drum open at one end). This Lord Civa is enshrined in Thiru-eengoi- malai where the aroma of cardamom seed and the flower bud of clove plant fills the air all around. 
Note: This shrine, once not easy of access, was a place of festivity.
கண்கொள் நுதலார் கறைகொள் மிடற்றார் கரியி னுரிதோலார் 
விண்கொள் மதிசேர் சடையார் விடையார் கொடியார் வெண்ணீறு 
பெண் கொள் திருமார் பதனிற் பூசும் பெம்மா னெமையாள்வார் 
எண்கும ரியுந் திரியுஞ் சார லீங்கோய் மலையாரே. 3

கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார், 
விண் கொள் மதி சேர் சடையார், விடைஆர் கொடியார், வெண்நீறு 
பெண்கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார் - 
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.

பொருள்: எமை ஆள்பவரான சிவபெருமானார், கரடிகளும், சிங்கங்களும் அலைகின்ற 
சாரலை உடைய திருஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ளார். இவர் மூன்றாவது ஒரு 
நெற்றிக் கண்ணை உடையவர். விடக்கறை பொருந்திய கண்டத்தினர். யானையின் தோலை 
உரித்துப் போர்த்தியவர். வானில் விளங்கும் மதியைச் சூடிய சடையினர். விடைக் 
கொடியை  உடையவர். உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். தனது 
திருமார்பகத்தே திருவெண்ணீற்றை அணிந்தவர்.

குறிப்புரை: இறைவருடைய உடையும் அணியும் பூச்சும் இவை என்கின்றது. நுதல் - நெற்றி. கறை - 
விடம். மிடறு - கழுத்து. எண்கு - கரடி. அரி - சிங்கம். 
Lord Civan has a third eye in His forehead. His neck is dark blue in colour due to the poison He swallowed. He stripped the skin of an elephant and covered His body with it. He retains in His matted hair the crescent moon of the sky. The figure of bull is the insignia of His flag. He is concorporate with His consort Umaa Devi. He smears on the chest of His holy body holy ashes. He is our Lord who governs us. This Lord Civa is enshrined in Thiru-eengoi-malai where bears and lions roam about in the slopes of the mountain. 
Note: Eengoi-malai is as great as Mount Kailas.

மறையின் னிசையார் நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும் 
குறைவெண் பிறையும் புனலுந் நிலவுங் குளிர்புன் சடைதாழப் 
பறையுங் குழலுங் கழலு மார்ப்பப் படுகாட் டெரியாடும் 
இறைவா சிறைவண் டறைபூஞ் சார லீங்கோய் மலையாரே. 4

மறையின்(ன்) இசையார், நெறிமென்கூந்தல் மலையான்மகளோடும், 
குறைவெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ, 
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படுகாட்டு எரிஆடும் 
இறைவர் - சிறைவண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

பொருள்: சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருஈங்கோய் 
மலையின் இறைவர் சிவபெருமானார் ஆவார். இவர் இனிய இசையோடு பாடும் 
வேதங்களைத் தோற்றுவித்தவர். வளைவுகளோடு கூடிய மெல்லிய கூந்தலை உடைய மலை 
அரசன் மகளாகிய பார்வதி தேவியோடு இருப்பவர். தனது சடைமுடியில் கலைகள் குறைந்த 
வெண்மையான பிறையோடும் கங்கையோடும் விளங்குபவர். குளிர்ந்த மென்மையான 
சடைகள் தாழ இருப்பவர். பறை, குழல் இவற்றோடு காலில் உன்ள சிலம்பும் ஆரவாரிக்கும். 
சுடுகாட்டுள் இவர் எரிஏந்தி ஆடுபவர் ஆவார்.

குறிப்புரை: இடுகாட்டில் மலையான் மகளோடு ஆடும் இறைவன் இவர் என்கின்றது. நெறி மென் 
கூந்தல் - நெறித்துச் சுருண்ட மெல்லிய கூந்தல். குறை வெண் பிறை - சாபத்தால் குறைந்த 
வெண்மையான பிறைச் சந்திரன். படுகாடு - சுடுகாடு. சிறை வண்டு - சிறகோடு கூடிய வண்டுகள். 
Lord Civan of Thiru-eengoi-malai sings the Vedas tunefully. In the lush slopes of the hill in this place, winged bees are humming. He is concorporate with His consort Paarvathi Devi, daughter of the mountain king, whose soft hair is curly. The curved white crescent moon is retained in His cool and soft matted hair, which is dangling in space. Holding fire in one of His hands, He dances in the cremation ground to the accompaniment of music from the drum and flute whilst His anklet resounds in unison. 
Note: This verse celebrates a yogic vision.

நொந்த சுடலைப் பொடிநீ றணிவார் நுதல்சேர் கண்ணினார் 
கந்த மலர்கள் பலவுந் நிலவு கமழ்புன் சடைதாழப் 
பந்தண் விரலாள் பாக மாகப் படுகாட் டெரியாடும் 
எந்தம் மடிகள் கடிகொள் சார லீங்கோய் மலையாரே. 5

நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார், 
கந்தமலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ, 
பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரிஆடும் 
எம்தம்(ம்) அடிகள் - கடிகொள் சாரல் ஈங்கோய்மலையாரே.

பொருள்: நல்ல மணம் கமழும் பூக்கள் நிறைந்த சாரலை உடைய திருஈங்கோய் மலையில் 
சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். இவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் 
விளைந்த சாம்பல் பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியில் மூன்றாவது ஒரு 
கண்ணை உடையவர். இவரது தாழ்ந்து தொங்கும் மணம் கமழும் செஞ்சடைகளில், மணம் 
பொருந்திய மலர்கள் பலவும் விளங்குகின்றன. பந்து சேரும் மெல்லிய கைவிரல்களை 
உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு உள்ளார். சுடுகாட்டில் எரியாடுபவர் 
இவர்.

குறிப்புரை: இதுவும் அது. நொந்த - தன் அழிந்த. பந்து அண் விரலாள் - பந்து அணுகும் மெல்லிய 
விரலை உடையாள். கடி கொள் சாரல் - தெய்வ மணம் கமழும் சாரல். 
Lord Civa is entempled in Thiru-eengoi-malai. Here in the slopes of the hill fragrant smell of the flowers always fills the air. He smears His body with the ashes of the burning ghat. He has a third eye in His forehead. Elegant flowers of different kinds with pleasant smell stay in His dangling ruddy matted hair with spreading pleasing fragrance. He shared the left portion of His body with His consort Umaa Devi, whose fingers are slender and soft touching like flower balls. He dances in the blazing fire of the burning ghat. 
Note: The shrine is pervaded by spiritual fragrance.
நீறா ரகல முடையார் நிரையார் கொன்றை யரவோடும் 
ஆறார் சடையா ரயில்வெங் கணையா லவுணர் புரமூன்றும் 
சீறா வெரிசெய் தேவர் பெருமான் செங்கண் டல்வெள்ளை 
ஏறார் கொடியா ருமையா ளோடு மீங்கோய் மலையாரே. 6

நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும் 
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும் 
சீறா எரிசெய் தேவர்பெருமான், செங்கண் அடல் வெள்ளை- 
ஏறு ஆர் கொடியார் - உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

பொருள்: சிவபெருமானார் திருஈங்கோய் மலையில் உமையம்மையோடு எழுந்தருளி 
உள்ளார். இவர் திருநீறு அணிந்த மார்பினை உடையவர். சரஞ்சரமாக வரிசையாக மலரும் 
கொன்றை மாலை மற்றும் பாம்பு, கங்கை இவைகளை சடைமுடியில் அணிந்துள்ளார். 
கூரிய கொடிய கணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்களின் 
தலைவர் இவர். சிவந்த கண்களையும், வலிமையையும், வெண்மையையும் உடைய 
விடையைத் தனது கொடியின் சின்னமாக உடையவர்.

குறிப்புரை: கொன்றை, அரவு, கங்கை இவற்றைச் சடையில் உடையவரும், திரிபுரங்களை எரித்தவரும் 
ஈங்கோய் மலையார் என்கின்றது. அகலம் - மார்பு, அயில் - கூர்மை. அடல் - வலிமை. 
Lord Civan is entempled in Thiru-eengoi-malai along with His consort Umaa Devi; He smears His chest with holy ashes. He wears on His matted hair the wreath of cassia flowers, which grow in long rows. Along with this, He retains in His matted hair, the river Ganga as well as a snake. He is the Chief of Devaas. He once got wild with the Asuraas and destroyed their three citadels with a sharp and fierce dart. The insignia of His flag is the figure of the white, valiant and red-eyed bull. 
Note: Kondrai flowers, dear to Civa, abound in Eengoimalai.

வினையா யினதீர்த் தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை 
நனையார் முடிமேல் மதியஞ் சூடும் நம்பா நலமல்கு 
தனையார் கமல மலர்மே லுறைவான் தலையோ டனலேந்தும் 
எனையா ளுடையா னுமை யாளோடு மீங்கோய் மலையாரே. 7

வினைஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை 
நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு ' 
தனை ஆர் கமலமலர்மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும் 
எனை ஆள் உடையான் - உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

பொருள்: என்னை ஆளுகின்ற பிரானான சிவபெருமான், உமையம்மையோடு திருஈங்கோய் 
மலையில் எழுந்தருளி உள்ளார். இவர், வினைகள் அனைத்தையும் தீர்த்து, பேரருளையே 
கொடுக்கும் விகிர்தர். விரிந்ததும் கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது, பிறைமதியையும் 
சூடுகின்ற கடவுள் ஆவார். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல்
உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி இருப்பவர். என்னை 
அடிமையாகக் கொண்டு அருளுபவரும் இவரே.

குறிப்புரை: வினைதீர்க்கும் விகிர்தனாய் என்னை ஆளுடைய பிரான் இவர் என்கின்றது. நனை - 
அரும்பு தனையார் கமலம் - தலைமை பொருந்திய தாமரை. 
Lord Civan who governs me as His devotee is entempled in Thiru-eengoi-malai along with His consort Umaa Devi. He is the preeminent Supreme Lord who annuls the bad effects of karma and ever graces His devotees. He is the supremely desirable one  who wears the crescent moon along with the blossomed elegant cassia buds in His matted hair. He holds the skull of Brahma who is seated in the elegant and lofty lotus flower, as well as the fire in His hands. 
Note: The Lord-God is a Vikirtan, the One different from all other gods.

பரக்கும் பெருமை இலங்கை யென்னும் பதியிற் பொலிவாய 
அரக்கர் கிறைவன் முடியுந் தோளு மணியார் விரல்தன்னால் 
நெருக்கி யடாத்து நிமலா போற்றி யென்று நின்றேத்த 
இரக்கம் புரிந்தா ருமையாளோடு மீங்கோய் மலையாரே. 9

பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய 
அரக்கா்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் 
நெருக்கி அடர்த்து, “நிமலா, போற்றி! என்று நின்று ஏத்த, 
இரக்கம் புரிந்தார் - உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

பொருள்: திருஈங்கோய் மலை இறைவரான சிவபெருமானார் அங்கு உமையம்மையோடு 
எழுந்தருளி உள்ளார். இராவணன் அரக்கர்களின் தலைவன் ஆவான். அவன் எங்கும் பரவிய 
பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கியவன். சிவபெருமான் 
அவனது தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால் விரலால் நெருக்கி 
அடர்த்தினார். பின்பு, அவன், “நிமலா போற்றி’ என்று துதித்தபோது அவனுக்கு இரக்கம் 
காட்டி அருள்புரிந்தவரும் இவரே. 
குறிப்புரை: இராவணனை விரலால் அடர்க்க, அவன் நிமலா போற்றி என வணக்கம் செய்ய, இரக்கம் 
காட்டிய பெருமான் இவர் என்கின்றது. பரக்கும் - பரந்த. அணி - காலாழி. 
Lord Civan is entempled in Thiru-eengoi-malai along with His consort Umaa Devi. Over the glorious country Sri Lanka of spreading fame, Raavanan, the Lord of Raakshaasas was ruling supreme. Because of his later misdeed, Lord Civa using His ringed toe  crushed Raavanaa's head and shoulders. Later he repented and begged pardon for his wrong doing and hailed Civa by chanting thus "O! ever pure one - the Supreme Being! Glory be to You). Civa then showed mercy and graced him. 
Note: Civa is merciful, though a strict disciplinarian.

வரியார் புலியி னுரிதோ லுடையான் மலையான் மகளோடும் 
பிரியா துடனா யாடல் பேணும் பெம்மான் றிருமேனி 
அரியோ டயனு மறியா வண்ண மளவில் பெருமையோ 
டெரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமா னீங்கோய் மலையாரே. 9

வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான்மகளோடும் 
பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி 
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவுஇல் பெருமையோடு 
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் - ஈங்கோய்மலையாரே.

பொருள்: எங்கள் பெருமானான சிவபெருமான் திருஈங்கோய் மலை இறைவர் ஆவார். 
இவர், வரிகளோடு கூடிய புலித்தோலை உடையாகக் கட்டியிருக்கின்றார். மலை அரசன் 
மகளான பார்வதி தேவியோடு பிரியாது உடனாய் இருக்கின்றார். இவர் ஆடுதலை விரும்பும் 
பெரியோனான கடவுளாவார். தம் திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் 
காண முடியாதபடி அளவற்ற பெருமை உடைய எரி உருவத்தோடு.ஓங்கி நின்றவரும் இவரே.

குறிப்புரை: உமையொரு பாதியனாய், அயனும் மாலும் அறியாமல் எரியாய் நிமிர்ந்த பெருமான் இவர் 
என்கின்றது. வரி - கோடு. எரியாய் - அக்கினிவடிவான அண்ணாமலையாய். 
Lord Civan, clad in the striped skin of a tiger is entempled in Thiru-eengoi-malai. He is the Supreme Being  who never parts with His consort Paarvathi Devi, daughter of the mountain king and likes to dance for ever. He is our noble Divine Being who once rose up aloft, straight as a big and tall column of fire of boundless glory, unknowable to Brahma and Vishnu. Both of them made a Himalayan search to reach the head and feet of His holy body frame but in vain.

பிண்டி யேன்றுபெயரா நிற்கும்பிணங் குசமணரும் 
மண்டை கலனாக்கொண் டுதிரியும்ம தியில்தேரரும் 
உண்டி வயிறாருரைகள் கொள்ளா துமையோடுடனாகி 
இண்டைச் சடையானி மையோர் பெருமானீங்கோய் மலையாரே. 10

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும், 
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதிஇல் தேரரும், 
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன்ஆகி, 
இண்டைச் சடையான் இமையோர் பெருமான் - ஈங்கோய்மலையாரே.

பொருள்: சமணர்கள் மாறுபட்ட சமய நெறியில் நிற்கின்றவர்கள். அவர்கள், அசோக 
மரத்தில் அருகதேவன் வீற்றிருக்கிறான் என்று அம்மரத்தின் பெருமையைக் கூறுகின்றனர். 
புத்தர்கள் அறிவற்றவர்களாக, மண்டை ஓட்டை உண்ணும் கலமாகக் கையில் ஏந்தித் 
திரிகின்றனர். இவர்கள் பெருந்தீனி தின்று பருத்த வயிற்றை உடையவர்கள். இவர்கள் 
கூறும் சொற்களை உண்மை என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள். உமையோடு உடனாய், 
இண்டை சூடிய சடைமுடியினராய் இமையோர் தலைவராய், திருஈங்கோய் மலையில் 
எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபடுவீர்களாக.

குறிப்புரை: சமணரும் புத்தருமாகிய இவர்களின் உரையைக் கொள்ளாத இமையோர் பெருமான் இவர் 
என்கின்றது. பிண்டி - அசோகந்தளிர். ஏன்று - தாங்கி. மண்டை - பிச்சை ஏற்கும் திரம். தேரர் - 
புத்தர். உண்டி வயிறார் - உண்டு பருத்த வயிறை உடையவர்கள். இண்டை - திருமுடியிற் சூடப்படும் 
வட்டமாகக் கட்டப்பெற்ற மாலை. 
The insincere samana ascetics  adore and hail the glory of Asoka trees where they say their Lord Aruga Devan is seated. They follow contradicting religious faiths that have no reason or logic. The insincere Buddhist monks are a set of ignorant folks who carry the skull for getting alms in. They over eat and become obese people. Ye companions! do not listen to their preaching. Proceed to Thiru-eengoi-malai and worship our noble Lord Civa who is entempled there along with His consort Umaa Devi. He is the Chief of the celestial and wears a circlet in His matted hair – (a circular garland made up of leaves and/or flowers). 
Note: Civa ignores the denigrating words of the Samanars and the Buddhists who are ignoramuses.

விழவா ரொலியு முழவு மோவா வேணுபுரந் தன்னுள் 
அழலார் வண்ணத் தடிக ளருள்சே ரணிகொள் சம்பந்தன் 
எழிலார் சுனையும் பொழிலும் புடைசூ ழீங்கோய் மலையீசன் 
கழல்சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே. 11

விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள், 
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன், 
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் 
கழல் சேர் பாடல்பத்தும் வல்லார் கவலை களைவாரே.

பொருள்: வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியில் திருவிழாக்களின் ஓசையும் முழவின் 
ஓசையும் என்றும் நீங்காது ஒலிக்கின்றன. ஒளி வண்ணனான சிவபெருமானின் அருள் சேரப் 
பெற்ற அழகிய ஞான சம்பந்தன் இப்பதியிற் போந்தவர். இவர் எழிலார்ந்த சுனையும், 
பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருஈங்கோய் மலை ஈசனின் திருவடிகளைப் போற்றிப் 
பாடிய இப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களின் கவலைகள், அவர்களைவிட்டு 
நீங்கிவிடும். 
குறிப்புரை: சம்பந்தன் சொன்ன ஈங்கோய் மலைப் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவார் என்கின்றது. 
வேணுபுரம் என்பது சீகாழிக்கு மறுபெயர். எழில் - அழகு. 
Gnaanasambandan belongs to Venupuram (another name of Seekaazhi) where the noise of temple festivals and noise of the drums never cease. Gnaanasambandan is endowed fully with the blessings of Lord Civa of this place whose complexion is fire like. He has sung these ten verses adoring the Holy Feet of Lord Civa of Thiru-eengoi- malai which is encircled by attractive springs and gardens. Those who can recite these ten verses with sincere devotion will get rid of their sorrows. 
Note: Sorrows cease to be if the hymns of our saint are recited in all sincerity.

திருச்சிற்றம்பலம்

70ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

71. திருநறையூர்ச் சித்தீச்சரம்

திருத்தல வரலாறு:

பதிகம் 29ஐப் பார்க்கவும்.

பதிக வரலாறு:

குடவாயிலில் வணங்கிப் பதிகம்பாடிய பிள்ளையார் ‘ஊருலாவு’ என்னும் நீடு 
தமிழ்த்தொடை புனைந்து கொண்டே வழிநடந்து திருநறையூரை அடைந்தார்கள். இதில் ‘நறையூர்’ 
என்பது தலத்தின் பெயராகவும், ‘சித்தீச்சரம்’ என்பது கோயிலின் பெயராகவும் குறிக்கப்படுகிறது. 
‘சித்தன் சித்தீச்சரம்’ என இறைவன் திருநாமம் ‘சித்தன்’ எனக் குறிக்கப்படுகிறது. 
THE HISTORY OF THE PLACE 
See 29th Hymn.

INTRODUCTION TO THE HYMN 
Having adored Lord Civa at Kudavaayil, our saint arrived at Thirunaraiyoor Siddheechcharam temple, and sang the following hymn. The name of the town is 'Narayoor' and the temple is called 'Siddheechcharam'.

திருச்சிற்றம்பலம்


71. திருநறையூர்ச் சித்தீச்சரம்

பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர் 
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர் 
மறைகொள்கீதம் பாடச்சேடா் மனையின் மகிழ்வெய்திச் 
சிறைகொள்வண்டு தேனாரநறையூச் சித்தீச் சரத்தாரே. 1

பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்; 
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர் - 
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி, 
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: திருநறையூரில் பெருமை உடைய மறையவர்கள் தங்கள் இல்லங்களில் வேதப்
பொருட்களை உள்ளடக்கிய இசைப்பாடல்களைப் பாடுகின்றனர். அதனைக் கேட்டுச் 
சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப் பாடித் தேனை உண்ணுகின்றன. 
இவ்வூரில் சித்தீச்சரத்து இறைவராக விளங்கும் சிவபெருமான் பிறைசூடிய சடையர்; 
புலித்தோலை உடுத்தியவர்; பிளந்த வாயினை உடைய பாம்பை அணிந்தவர்; விடக்கறை 
பொருந்திய கழுத்தினை உடையவர்; பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை 
உடையவர்; எலும்புகளால் கோர்க்கப்பட்ட மாலையினை அணிந்த கங்காளர் ஆவார்.

குறிப்புரை: நறையூர்ச் சித்தீச்சரத்தார் பிறைச்சடையர், புலித்தோலர், அரவார்த்தவர், நீலகண்டர், கபாலி, 
கங்காளர் என்கின்றது. பேழ்வாய் - பிளந்த வாய். கங்காளம் - முழு எலும்பு. சேடர் - பெருமை 
உடையவர். 
Glorious Vedic scholars sing songs in their houses, which spell out the deep meaning of the Vedas. By hearing this musical tone, winged bees feel delighted, hum in joy and sip the honey from the flowers that grow in plenty in Thiru-naraiyoor-ch- chiddheech-charam temple gardens. In this temple Lord Civan is enshrined. He retains the crescent moon in His matted hair. He is clad in a tiger skin. He is adorned with the snake whose mouth is wide open. His neck is dark blue in colour. He holds in one of His hands the skull of Brahma. He wears a garland of bones; He is therefore known as Kangaalar (கங்காளர்). 
Note: Kangaalar: Civa who wears on His body the skeletons of Vishnu and Brahma after the Great Deluge.

பொங்கார்சடையர் புனலரனலர் பூதம் பாடவே 
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக் 
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச் 
செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் சித்தீச் சரத்தாரே. 2

பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் - பூதம் பாடவே, 
தம் காதலியும் தாமும் உடன்ஆய்த் தனி ஓர் விடை ஏறி, 
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச் 
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சரத்தாரே.

பொருள்: குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய அன்னம் தன் பெடையுடன்
சேர்ந்து விளங்கும் சித்தீச்சரத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார் . இவர், நீண்டு 
வளர்ந்த சடையினர். கங்கையை அணிந்தவர். அனல் ஏந்தியவர். பூதகணங்கள் பாடத் தம் 
காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்ற விடைமீது ஏறிவருபவர். இவர் 
தேன் நிறைந்த கொன்றைமலர், வன்னிஇலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக் 
கொண்டிருப்பவர் ஆவார்.

குறிப்புரை: இதுவும் அவர் புனலர், அனலர், விடையேறியவர் என்கின்றது. பொங்கு - வளர்ச்சி. 
கொங்கு - தேன். இறைவன் தம் காதலியும் தானும் விடையேறியிருப்பதால், பொய்கைகளில் 
அன்னங்களும் பெடையோடு சேர்ந்திருக்கின்றன என்று போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை 
நல்கும் தன்மை விளக்கியவாறு. 
In His luxurious matted hair Lord Civan displays the river Ganges. His palm holds the fire. Along with His beloved consort Umaa Devi He rides on the matchless bull, and is enshrined in Thiru-naraiyoor-ch-chiddheech-charam. His giant hosts (bhuta hosts) accompany Him singing. He wears in His head honey filled cassia flowers, leaves of mesquit  and datura flowers. In the cool ponds of this town ruddy footed female swans and their mates join together and play joyfully. 
Note: In the past, cobs and pens (male and female swans) along with their young ones throve well in Tamilnadu.
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவா மேனிமேல் 
பொடிகொணூலர் புலியினதளர் புரிபுன் சடைதாழக் 
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக் 
கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 3

முடி கொள் சடையர்; முளைவெண்மதியர்; மூவா மேனிமேல் 
பொடி கொள் நூலர்; புலியின் அதளர் - புரிபுன்சடை தாழ, 
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல்ஆர் இனம் பாயக் 
கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்து விளங்கும் திருநறையூரில் உள்ள 
நீர்நிலைகளில் கயல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்றன. இங்கு கொடிகள் கட்டிய 
மாடவீடுகள் நிறைந்து இருக்கின்றன. இத்திருத்தலத்தில் உள்ள சித்தீச்சரம் என்ற கோவிலில் 
சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவர் சடையினை உடைய முடியினர். ஒரு கலையோடு 
தோன்றும் வெண்மையான மதியை அணிந்துள்ளார். மூப்படையாத தம் திருமேனியில் 
திருநீற்றையும் முப்புரி நூலையும் அணிந்துள்ளார். புலித்தோலை உடுத்தி உள்ளார். இவரது 
முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்கும்படியாக இவர் விளங்குகின்றார்.

குறிப்புரை: இதுவும், அவர் சடைமுடியர், வெண்ணீற்றர், புலித்தோலர் என்கின்றது. மூவா மேனி - 
மூப்படையாத, என்றும் இளைய திருமேனி. அதளர் - தோலை உடையாக உடையவர். 
The city of Naraiyoor is full of gardens where fragrant air fills all places around. In the ponds surrounded by fields the carps leap and play happily. The mansions are many here where the flags are flying majestically. In this glorious town, Lord Civan is enshrined in the Siddhee-ch-charam temple. In the bunches of His matted hair He retains the single phased white crescent moon. In His ever young and never ageing holy body frame, He smears the holy ashes and wears the three-ply sacred thread. He is clad in tiger skin. His twisted matted hair dangles behind His head.

பின்றாழ்சடைமே னகுவெண்டலையர் பிரமன் றலையேந்தி 
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரு மொருகாதர் 
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகம் 
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 4

பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன்தலை ஏந்தி, 
மின்தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் - 
பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து செண்பகம், 
சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: பூசைக்கு உகந்த பொன்போன்ற கொன்றை, செருந்தி, புன்னை வளமான 
செண்பகம் ஆகியன வானுற வளரும் செல்வச் செழிப்புள்ள தலம் நறையூர் ஆகும். இங்கு 
சித்தீச்சரம் கோவிலில் சிவபெருமான் விளங்குகின்றார். இவர், தனது பின்புறமாக தாழ்ந்து 
தொங்கும் சடைமுடிமேல் பிரகாசத்தை உடைய வெண்ணிறமுள்ள தலை மாலையை 
அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி இருப்பவர். மின்னலையும் மங்கச் 
செய்யும் ஒளி உருவினர். அவர் தனது வலது காதில் சங்கினால் ஆன குழை அணிந்தவர்.

குறிப்புரை: இதுவும் அவர் தலைமாலை அணிந்தவர், கபாலி, சங்கக் குண்டலர் என்கின்றது. சங்கு ஆர் 
குழை - சங்கினால் இயன்ற காதணி. திருவார் நறையூர் - திருநறையூர். ‘ பின்தாழ் சடை’ 
In the glorious Naraiyoor town thick vegetation grows all around. Therein cassia plant with golden yellow flowers useful for divine worship, panicled golden-blossomed pear tree, and the chambak tree (Nichelia champaca) are all grown very tall as to touch the sky. In such a fertile and economically prosperous town, Lord Civan is enshrined in Siddheechcharam temple. In His dangling matted hair which hangs on the backside of His head, He wears the gleaming white circlet made up of leaves and/or flowers. He holds in His hand Brahma's skull and gleams bright so as to nullify the brightness of lightning. He wears an ear ring made of chank in His right ear. 
Note: Civa is a wearer of two types of ear-rings known as todu and kuzhai - because of 
His consort having occupied the left portion of His body.

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகணி றைநாவர் 
பாரார் புகழாற் பத்தர் சித்தர் பாடி யாடவே 
தேரார்வீதி முழவார்விழவி னொலியுந் திசைசெல்லச் 
சீரார்கோலம் பொலியுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 5

நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர் - 
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே, 
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல, 
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.


பொருள்: திருநறையூரில், உலகம் முழுவதும் பரவிய சிவபெருமானது புகழ் மொழிகளைப் 
பக்தர்களும் சித்தர்களும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கின்றனர். தேர் 
ஓடுகின்ற வீதிகளில் முழவின் ஒலி, விழாக்களின் ஒலியோடு பெருகி எண்திசையும் 
பரவுகின்றது. இந்தப் புகழ் பொருந்திய அழகோடு கூடிய நறையூர்ச் சித்தீச்சரத்தில் 
சிவபெருமான் உறைகின்றார். இவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கருநீலம் 
கொண்ட கண்டத்தை உடையவர். வேதங்கள் உற்பவிக்கும் நாவினர்.

குறிப்புரை: சித்தீச்சரத்தார் கங்கைமுடியர், நீலகண்டர், மறைநாவர் என்கின்றது. பாரார் புகழ் - உலகம் 
முழுவதும் வியாபித்த புகழ். 
Devotees and mystics who have acquired supernatural powers praise Lord Civa, and dance and sing on His glory that has spread all over the world. In the big streets where Lord's chariots ply, the noise of the drums mixed with the noise of festival activities pervades in all the eight directions. In such a glorious and famed city of Thiru-naraiyoor-ch-chiddheech-charam Civa is entempled. He retains the river Ganges in His matted hair. His neck is dark blue in colour. He is the creator of the four sacred Vedas. 
Note: Singing and dancing are indulged in by devotees when they feel the presence of Civa in their mind.

நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொண் மலர்மாலை 
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந் 
தீண்டுமாட மெழிலார்சோலை யிலங்கு கோபுரந் 
தீண்டுமதியந் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 6

நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை 
தூண்டு சுடர் பொன்ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் - வந்து 
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம், 
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: ஒன்றோடு ஒன்று நெருங்கி நிற்கும் மாடவீடுகளையும், அழகிய சோலைகளையும், 
மதியைத் தொடுகின்றவாறு உயர்ந்து விளங்கும் கோபுரங்களையும் உடைய தலம் 
திருநறையூர். இங்குள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் நீண்ட
சடைமுடியை உடையவராக விளங்குகின்றார். சரமாகப் பூத்த மணம் நிறைந்த கொன்றை 
மலரால் தொடுத்த மாலையை அணிந்துள்ளார். பொன் போன்று ஒளிரும் திருமேனியைக் 
கொண்டவர். சிவந்த பவளம் போன்ற எழில் மிக்கவர்.

குறிப்புரை: இதுவும் அது. நிரை கொள் கொன்றை - சரமாகப் பூத்த கொன்றை. தூண்டு சுடர் - ஒரு 
காலைக்கொருகால் மிகுந்து தோன்றும் ஒளி. பவளத்தெழிலார் - பவளம் போன்ற அழகினை உடையவர். 
In the city of Thiru-naraiyoor-ch-chiddheech-charam the mansions are built very close to one another with many floors lush gardens exist all around the tall temple towers seem to reach the moon. Lord Civan of this city has long matted hair. He wears the garland of rows and rows of long cassia flowers. His entire body frame shines like golden flame. He has the graceful ruddy colour of corals.
குழலார்சடையர் கொக்கினிறகர் கோல நிறமத்தம் 
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோ வணக்கீளா் 
எழிலார்நாகம் புலியினுடைமே லிசைத்து விடையேறிக் 
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே.

குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம் 
தழல் ஆர் மேனித் தவளநீற்றர்; சரி கோவணக்கீளர் - 
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து, விடை ஏறி, 
கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சரத்தாரே.

பொருள்: நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரான சிவபெருமான் அழகு பொருந்திய 
நாகத்தைப் புலித்தோல் ஆடைமேல் பொருந்தக் கட்டி உள்ளார். விடைமீது ஏறி, கழலும், 
சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவர். மாதொரு பாகராதலின் கூந்தலும், சடையும் உடைய 
திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலரைச் 
சூடியவர். தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிந்தவர். 
கோவண ஆடை அணிந்தவர்.

குறிப்புரை: அவர் கூந்தலையும் சடையையும் உடையவர், கொக்கின் இறகை அணிந்தவர், கோவண 
ஆடையர் என்கின்றது. குழல் - கூந்தல். கோலம் - அழகு. தவளம் - வெண்மை. கீள் - கிழித்த ஆடை. 
புலம்ப - ஒலிக்க. 
Lord Civan is clad in tiger skin. He tightens it with a dainty snake. He rides on the bull while the anklet and the string of little bells in His leg tinkle. As He is concorporate with His consort, His crest is half matted and half plain hair. He wears the feather of heron and the pleasing coloured datura flowers on His head. In His 'flame like' ruddy frame, He has smeared His body with white holy ashes. He is enshrined in Thiru-naraiyoor-ch-chiddheech-charam. 
Note: The left half of Lord Civa's hair displays lovely locks while His right half displays matted hair.
கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் கயிலை மலைதன்னை 
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி 
உரையார்கீதம் பாட நல்லவுலப்பி லருள்செய்தார் 
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 8

கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலைதன்னை 
வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரித்து மனம் ஒன்றி 
உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார் - 
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வ வளம் மிக்க திருத்தலம் 
நறையூர் ஆகும். இங்குள்ள சித்தீச்சரத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். கரைகளை 
வந்து பொருந்தும் கடலால் நாற்புரமும் சூழ்ந்துள்ள இலங்கையின் மன்னன் இராவணன். 
இவன் கயிலை மலையை மலை போன்ற தன் தோள்களால் நகர்த்த முற்பட்டான். 
சிவபெருமான், அவனது தலைகளைத் தன் கால்விரலால் நெரிக்க, தன் பிழையை 
உணர்ந்தான். அதன்பின் மனம் ஒன்றி சாமகானம் இசைத்துப் போற்றினான். இறைவர்
அவனுக்கு இரங்கி அளவிட முடியாத நல் அருளை வழங்கினார்.

குறிப்புரை: இராவணனை அடர்த்து, அவன் சாமகானம் பாட அருள் செய்தவர் இவர் என்கின்றது. 
வரையார் தோளார் - மலையையொத்த தோள்களால். உலப்பில் - வற்றாத. 
King Raavanan resides in Sri Lanka that is surrounded by the roaring sea in all its four directions. Once he tried to lift and move mount Kailash, the abode of Civan, by his mountain like shoulders, when Lord Civan pressed His toe on the top of the mountain. Lo! Raavana's head and shoulders were crushed. Raavanan realised his folly, begged pardon and sang in the tune called 'Saama Ghaaanam'  which is dear to Lord Civa; Lord Civa pardoned and blessed him with unlimited boons. This Lord Civan is enshrined at the Siddheechcharam temple in Thiru-naraiyoor. This city is surrounded by ponds where the waves are dashing against its banks. It is a very flourishing town.

நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய் 
அடியாரவரு மருமாமறையு மண்டத் தமரரும் 
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா அருளென்னச் 
செடியார்செந்நெல் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 9

நெடியான் பிரமன் நேடிக் காணார் - நினைப்பார் மனத்தாராய், 
அடியார் அவரும் அருமாமறையும் அண்டத்து அமரரும் 
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, “முதல்வா, அருள்! என்ன 
செடி ஆர் செந்நெல்-திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாதவராக விளங்கிய சிவபெருமான், 
தம்மை நினைப்பவர் மனத்தில் எளிதில் விளங்கித் தோன்றுகிறார். அடியவரும், அரிய 
புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் அவரை 
வணங்குகின்றனர். அவரது குணங்களைப் போற்றுகின்றனர். ‘முதல்வா! அருள்’ என்று கூறி 
வழிபடுகின்றனர். இவ்வாறு போற்றப்படும் சிவபெருமான், செந்நெல் பயிர்கள் புதர்களாகச் 
செழித்துத் திகழும், திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: அடியாரும் அமரரும் 'முதல்வா! அருள்' என்று தோத்தரிக்க, இத்தலத்து 
எழுந்தருளியிருக்கின்றார் என்கின்றது. நெடியான் - திருமால். நேடி - தேடி. பதவிகளில் இருப்பார் தேடிக் 
காணாத பெருமான், தியானிப்பவர்கள் மனத்தில் இருக்கின்றார் என எளிமை கூறியவாறு. செடி - புதர்.
The tall Vishnu and Brahma went out in search of the holy feet and head of Lord Civa in vain, whereas He is conspicuous in the minds of those who adore Him even mentally. Devotees, the sacred Vedas and the Devaas who live in the upper world – all of them bow their heads, and worship Him and pray thus: "O! Primal Lord, be pleased to bless us!" This Lord Civan is enshrined at the Siddheechcharam temple in Thiru- naraiyoor where the red variety of paddy thrives in plenty, like thick bushes.
நின்றுண்சமண ரிருந்துண்டேரர் நீண்டபோர்வையார் 
ஒன்றுமுணரா வூமர்வாயி லுரைகேட் டுழல்வீர்காள் 
கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச் 
சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 10

நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார், 
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்! 
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் பொழிய, 
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

பொருள்: சமணர்கள் நின்று கொண்டே உண்ணுகின்றனர். நீண்ட போர்வையைப் போர்த்த 
புத்தர்கள் இருந்துகொண்டு உண்ணுகின்றனர். அவர்கள் ஒன்றும் அறியாத ஊமர்கள்.
அவர்கள் கூறும் சொற்களைக் கேட்டு உழல்பவர்களே! பசுவின் கன்று விரும்பிப் பால் 
குடிக்க, பசுவின் ஏனைய முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரம் நிரம்பி வெளியிலும்
பொழிகின்றது. மீண்டும் அக்கன்று தன் தாயிடம் சென்று பாலுண்டு மகிழும் வளமுடைய 
திருநறையூர் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தொழுவீர்களாக.

குறிப்புரை: ஒன்றுமறியாத புத்தர் சமணர்களின் உரைகளைக் கேட்டுழலும் மக்களே! இத்தலத்தைத் 
சேரும் என்கின்றது. கன்று உண்பயப்பால் உண்ண - கன்று உண்ணும் விருப்பால் உண்ண. முலையில் - 
முலையிலிருந்து. கபாலம் அயல் பொழிய - கறவைப் பாத்திரம் நிறைந்து வழிய, சென்று உண்டு ஆர்ந்து 
சேரும் - மீளவும் கன்று போய் உண்டு நிறைந்து சேரும் என்க. 
Those disgraceful Jain ascetics, among the good many, take their food standing and have no knowledge about the renowned philosophy of Saiva religion. It is the same with the false Buddhist monks also who are many in number. Ye companions! You remain confused by hearing the false preaching of other faiths. In the town of Thiru-naraiyoor, calves, joyfully suck milk from their mother cows. Then the milkman draws the milk from the other udder of the cow. His container vessel gets filled and the milk overflows. He stops milking and allows the calves to suck milk for a second time. They suck to their stomach full and retire to their cowshed. Such a fertile place is Thiru-naraiyoor, where Lord Civa is entempled.

குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை 
செயிலார்பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை 
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன் 
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே. ்

குயில் ஆர் கோல மாதவிகள், குளிர்பூஞ்சுரபுன்னை, 
செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரை 
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் 
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே.

பொருள்: குயில்கள் அழகிய குருக்கத்தி மரங்களில் வாழுகின்றன. குளிர்ச்சியான அழகிய 
சுரபுன்னைகளும், வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்துள்ள திருத்தலம் 
திருநறையூர். இங்குள்ள சித்தீச்சரத்து இறைவரான சிவபெருமானை, மயில்கள் வாழும் 
சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, 
பயில்வார்க்கு இனிமையாக இருக்கின்ற, இப்பதிகப் பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓத 
வல்லவர்களின் பாவங்கள் அழிந்து போகுமே!

குறிப்புரை: இப்பாடல் பாடுவார்க்கு பாவம் நாசம் ஆம் என்கின்றது. மாதவி - குருக்கத்தி. 
Gnaanasambandan hails from Seekaazhi that is rich in gardens where peacocks flourish. He has sung on Lord Civan of Thiru-naraiyoor-ch-chiddheech-charam, where natural pools carry water to the fields. The vegetation all around Thiru-naraiyoor is full of lush trees such as 'common delight of woods ; also the cool and pretty, long leaved trees ; where the Indian cuckoos flock in large numbers. Those who can recite in full awareness of the meaning of this hymn which Gnaanasambandan has sung adoring Lord Civan, will get rid of their sins.

திருச்சிற்றம்பலம் 
 

71ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

72. திருக்குடந்தைக் காரோணம் (கும்பகோணம்)

திருத்தல வரலாறு:

தற்காலத்தில் கும்பகோணம் என்று வழங்கும் இத்திருத்தலமாகிய திருக்குடந்தைக்
காரோணம், சோழ நாட்டில் காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான பெரிய நகரமாகும். 
மயிலாடுதுறை - திருச்சி இரயில் வழியில் உள்ள இரயில் வண்டி நிலையம். அனைத்து நகரங்களில் 
இருந்தும் கும்பகோணம் வரப் பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் தேவாரங்களில் குடமூக்கு என வழங்கப் பெறும். பஞ்சக்குரோசத் தலங்கள் 
சூழ்ந்தது. கங்கை யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து வழிபடும் பெருமை உடையது. 
பதினான்கு கோயில்களையும் பதினான்கு தீர்த்தங்களையும் உடையது. ஒன்பதாம் நூற்றாண்டு 
முதல் சோழ அரசர்கள் இதனைத் தலைநகராகக் கொண்டனர். சோழர்கள் இருந்த இடமாகிய 
சோழ மாளிகையும், இடிந்து போன பழங் கோயில்களும் இதன் பழமைக்கு அறிகுறியென்பார் 
பெர்கூசன் என்னும் அறிஞர். ஏழாம் நூற்றாண்டில் மூலைக்கூற்றம் என வழங்கப்பட்டது என்பார் 
பர்னல் துரை. இத்தலத்தில் (குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் காலமான) 12 வருஷத்திற்கு 
ஒருமுறை மகாமக தீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர். இங்கேயுள்ள பாடல் 
பெற்ற சிவத்தலங்கள் திருக்குடமூக்கு, குடந்தைக் கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம் என்பன. 
குடமூக்கு கும்பேசுவர சுவாமி கோயில், கீழ்க்கோட்டம் நாகேசுவரன் கோயில், காரோணம் காசி 
விசுவநாதர் கோயில். இவையன்றிச் சோமேசம் முதலிய பல கோயில்கள் உள்ளன. இத்தலம் 
மூர்க்க நாயனார் வாழ்ந்த தலம்.

இறைவன் பெயர் கும்பேசர், அமுத கும்பேசர், ஆதி கும்பேசர். அம்மையின் பெயா் 
மங்களாம்பிகை. பிரமன், அகத்தியர், கிருத வீரியன், வீரவர்மன், இந்திரன், மாந்தாதா (சந்திரனின் 
பெயரன்) முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

கல்வெட்டு-

இத்தலம் உய்யக்கொண்டான் வளநாட்டு வடகரையம்பூர் நாட்டுத் திருக்குடந்தை என 
வழங்கும். கல்வெட்டுக்கள் பெரும்பாலும் நாகேச்சரமாகிய கீழ்க்கோட்டத்தைப் பற்றியனவே. 
குடமூக்கு என்னும் இத்தலத்தைப் பற்றியன அல்லவாதலின் அவை ஈண்டுத் தரப்படவில்லை.

பதிக வரலாறு:

உலகத்து உயிர்கள் அனைத்தையும் உடம்பொடு கூட்டித் தோற்றுவித்த கடவுளாகிய பிரமன் 
வழிபட்டு உய்ந்த சீகாழிப் பதிச் செம்மலாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபுரத்தைத் 
தொழுது பதிகம்பாடி, அண்மையில் உள்ள விடையேறும் பெருமான் திருவடியையும் போற்றத் 
திருவுளங் கொண்டு, திருக்குடமூக்கு என்னும் கும்பகோணத் தலத்தை அடைந்தார். அதனை 
உணர்ந்த அவ்வூர் அந்தணர்கள் வேத ஒலி விம்ம, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்ப்புறத்தே 
வந்து எதிர் கொண்டு அழைத்துச் சென்றார்கள். குடமூக்காலயத்தைக் குறுகினார்கள். 
பிள்ளையார் ‘குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை' என்று பெருகிய இசையாற் பதிகம் 
பாடினார்கள். பின்னா் குடந்தைக் கீழ்க்கோட்டம் வணங்கிக் கொண்டு குடந்தைக் காரோணம் 
சென்றார்கள். அங்கே கங்கை முதலாகிய புனித தீர்த்தங்கள் மகாமகத்தில் நீராடுவதற்கு வரும் 
அக்கோயிலை வணங்கினார்கள். மன்மதனை எரித்த பெருமானது மலரடியைக் கண்டார்கள். 
கண்டு களித்தார்கள். ‘வாரார் கொங்கை’ என்னும் பண்ணார்ந்த திருப்பதிகம் பாடினார்கள். 
72. THIRU-K-KUDANTHAI KAARÕNAM (KUMBAKONAM) 
THE HISTORY OF THE PLACE

This sacred place presently known as Kumbakōnam is to the north of river Cauvery in Chola Naadu and is a big town. It has a railway station on the Mayilaaduthurai - Thiru-ch-chirappalli train route. The town can be reached by bus from almost all the towns. The temple is referred to as Kudamooku in the Thevaaram. There are two other Civa temples, known as Kudanthai-k-Keezh-k-kottam (Naagesuvaran Koyil), and Kudanthai-k-Kaaronam (Kaasi Visuvanaathar Koyil), that have been sung by the hymnists. Besides these, there are other Civa temples such as Somesam etc., in this town. 
The names of the God here are Kumbesar, Amudha-kumbesar and Aadhi Kumbesar. The Goddess is known as Mangalaambikai. Those who attained salvation by offering worship here are: Brahman, Agath-thiyar, Kirutha-veeriyan, Veera-varman, Indhiran and Maan-dhaa-thaa (Grandson of Moon) and many others. 
This place has many distinctions. It is surrounded by five other temples known as 'Panchaak Kurosath Thalam'. According to Legend, Nine rivers including the Ganges and the Yamunai come here to offer worship. The town has fourteen temples and fourteen sacred fords. It was used as the capital of Chola empire from the 9th century CE. The site where the Chola palaces once stood is called Chola Maaligai. This and the ruins of ancient temples speak of the antiquity of this place, according to Ferguson. Once in 12 years, on the occasion when the eighth planet Jupiter (Guru) enters the fifth sign of the zodiac house of Simma-raasi, very many number of people from all over South India come here and take bath in the sacred ford. The festival is known as Mahaa-magham. This is also the place where the Saint Moorkka Naayanaar lived. 
The inscriptions here are mostly about another temple, Keezhkottam and not about this.

INTRODUCTION TO THE HYMN 
Our saint proceeded from Civapuram to Kudanthai at the outskirts of which he was received by the Vedic Brahmins. He adored the Lord at Kudanthai and proceeded to Kudanthai-k-keezhkōttam and thereafter he arrived in Kaarōnam and sang the following hymn. It was here where the Mahaamagam festival is celebrated, once in twelve years.

திருச்சிற்றம்பலம்

72. திருக்குடந்தைக் காரோணம்

பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

வாரார் கொங்கைமாதோர் பாகமாக வார்சடை 
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண் 
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில் 
காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே. 1

வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக, வார்சடை, 
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றிஒற்றைக்கண், 
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன் - குடமூக்கில், 
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

பொருள்: திருக்குடமூக்குக் காரோணத்தில் எழுந்தருளியுள்ள எந்தையராகிய சிவபெருமான். 
கார் மேகம் போன்ற கருமை பொருந்திய கண்டத்தினராய், எட்டுத் தோள்களோடு 
விளங்குகின்றார். இவர் அருள் செய்யும் இளமைக் கோலத்தில் விளங்குகின்றார். கச்சணிந்த 
கொங்கைகளையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்டுள்ளார். நீண்ட 
சடைமுடியில் நீர் மயமான கங்கையையும் பிறையையும் சூடியுள்ளார். இயல்பான 
இருவிழிகளோடு நெற்றியில் மூன்றாவது கண்ணுடையவர். கூரிய மழு என்னும் ஓர் 
ஆயுதத்தை ஏந்தியுள்ளார்.

குறிப்புரை: குடந்தைக் காரோணத்தார் உமையொரு பாகமாக, சடையில் கங்கையையும் திங்களையும் 
சூடி, மழுவேந்திய குழகன் ஆவார் என்கின்றது. வார் - கச்சு, குழகன் - இளமை உடையவன். 
Lord Civan, who is our father conspicuously enshrined at Kaarōnam temple in Kudamookku town, has eight shoulders and a dark blue neck. He is concorporate with His consort Paarvathi Devi who has put on the corset in her breasts (Indian women's breast band). In His long and dangling matted hair, He keeps the river Ganges full of eye in water and the crescent moon. Apart from the two normal eyes, He has a third His forehead. He holds the sharp battle-axe in one of His hands. He is the ever-young beautiful person renowned for bestowing grace on His devotees.
முடியார்மன்னா் மடமான்விழியார் மூவுல கும்மேத்தும் 
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந் தேத்தக் 
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங் 
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே. 2

முடி ஆர் மன்னர் மடமான்விழியார், மூஉலகும்(ம்) ஏத்தும் 
படியார்; பவளவாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்த, 
கொடி ஆர் விடையார் - மாட வீதிக் குடந்தை, குழகு ஆரும் 
கடி ஆர் சோலைக் கலவமயில் ஆர் காரோணத்தாரே.

பொருள்: குடந்தை என்னும் தலத்தில் மாடவீதிகளும், மணம் கமழும் சோலைகளும் 
உள்ளன. இச்சோலைகளில் தோகையோடு கூடிய மயில்கள் உலாவுகின்றன. இங்குள்ள 
காரோணத்தில் இறைவரான சிவபெருமான், கொடியில் பொருந்திய இடபத்தோடும்,
இளமைக் கோலத்தோடும் விளங்குகின்றார். இவரை, மணிமுடி சூடிய மன்னர்கள், 
இளமான் கண்கள் போன்ற விழியினை உடைய பெண்கள், மூவுலகத்திலும் உள்ள மக்கள், 
தேவர்கள், முனிகணங்கள், பவளத்தைப் போன்ற வாயினை உடைய அரம்பையர்கள் 
முதலான பலரும் போற்றித் துதித்து வணங்குகின்றனர்.

குறிப்புரை: இவர் முடி மன்னர், மான்விழியார், மூவுலகேத்தும் முதல்வர் என்றது. கொடியார் விடை - 
கொடியில் பொருந்திய இடபம். கடியார் சோலை - மணம் பொருந்திய சோலை. 
In the holy city of Kudanthai the Kaarōnam temple exists surrounded by the main streets called Maada Veethi . A pleasant smell, always fills the air in the gardens, where fan tailed peacocks flourish. The ever-young Lord Civan is enshrined in this temple. He is hailed, adored and worshipped by emperors, kings, damsels having eyes like that of deer, devotees from all the three worlds (Upper, middle and under worlds), the Devaas, the ascetic groups, the courtesans in the world of demigods known as Arambayer  whose lips are ruddy like coral gem and by many others. The insignia of His flag is the figure of bull inscribed on it.

மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும் 
குலையார்தெங்கு குளிர்கொள் வாழை யழகார் குடமூக்கில் 
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார் 
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே. 3

மலையார் மங்கை பங்கர், அங்கை அனலர் - மடல் ஆரும் 
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை, அழகு ஆர் குடமூக்கில் - 
முலையார் அணி பொன், முளை வெண்நகையார், மூவா மதியினார், 
கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.

பொருள்: குடமூக்கு என்னும் திருத்தலத்தைக் குளிர்ச்சி தரும் குலைகளோடு கூடிய வாழை 
மரங்களும் மட்டைகளுடன் கூடிய தென்னை மரங்களும் சூழ்ந்து அழகு செய்கின்றன. 
இங்குள்ள சிவபெருமான் காரோணத்தில் மலைமங்கை பங்கராக, கையில் 
அனலேந்தியவராக எழுந்தருளி உள்ளார். இப்பெருமான் பொன் அணிகளோடு விளங்கும் 
தனங்களையும், மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும், இளம்பிறை போன்ற 
நெற்றியையும் இசை போன்ற மொழியையும் உடைய பார்வதி தேவியால் விரும்பப்படும் 
இறைவன் ஆவார்.

குறிப்புரை: உமையொருபாகர், அனலேந்தியவர், காரோணத்து இறைவன் மலைமங்கை பங்கர் இவர் 
என்கின்றது. மடல் - மட்டை. மூவா மதியினார் - இளம்பிறை போன்ற நெற்றியினை உடையவர். 
Lord Civan of Thiru-k-kudanthai-k-kaarōnam shares His body with the daughter of the mountain king. He holds the fire in His beautiful palm. This beautiful city of Thiru-k-kudanthai-k-kaarōnam is surrounded by cocoanut groves and plantain gardens. The thick leaf stalks and bunches of fruits in these trees exhibit the richness of the place. The girls of this town wear golden jewellery in their bosom; their teeth are as white as the bamboo sprout; their forehead is like the crescent moon; their speech is like musical tone all these damsels hail and adore Lord Civan of Thiru-k-kudanthai-k- kaarōnam.
போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாரும் 
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கில் 
மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார் 
காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே. 4

போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய(வ்) அழகு ஆரும் 
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குடமூக்கில் - 
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார், 
காது ஆர் குழையர், காளகண்டர் - காரோணத்தாரே.

பொருள்: அழகிய குளிர்ச்சியான குடமூக்கு என்னும் தலம், நிரம்பப் பெற்ற மணம் மிக்க 
பூக்கள் மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழிலார்ந்த காடுகளாலும் சூழப்பட்டு 
இருக்கின்றன. இக்காடுகளின் நீர்நிலைகளில் உள்ள தாமரை, கழுநீர், குவளை முதலிய 
பூக்களின் நறுமணம் முற்பட்டு வந்து பொலிவெய்துகிறது. . இத்தலத்தில் விளங்கும் 
காரோணம் எனப் பெயர் பெறும் திருக்கோவிலில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். 
இவர், காதல் நிறைந்த உமையம்மையை தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு உள்ளார். 
மனைகள்தோறும் சென்று பலிஏற்கிறார். காதில் குழை அணிந்துள்ளார். காளம் என்னும் 
நஞ்சைக் கண்டத்தே கொண்டவர்.  

குறிப்புரை: பலிதேர்வார், குழைக்காதர், காளகண்டர் இவர் என்கின்றது. போது - தாமரை முதலிய 
பூக்கள். தாது - மகரந்தம். எழில் - அழகு. புறவு - காடு. மாதார் மங்கை - காதல் நிறைந்த உமா தேவி. 
The Kaarōnam temple which is in the cool town of Kumbakonam, is encircled by sylvan surroundings, and beautiful gardens full of pollen grains in the abundant flowers therein. In the ponds all around flourish lotus flowers, the red water lily, the water lily - the fragrance of all these flowers fills the air in all these gardens and forests. Lord Civan is enshrined in the temple called Kaarōnam along with His loving consort Umaa Devi. He seeks alms from every house. He wears the ear ring in His right ear. By not swallowing the poison known as Kaalam He has positioned it in His throat. 
Note: The alms sought by Civa is that of sincere and un-alloyed devotion and/or ignorance from His devotees.

பூவார்பொய்கை யலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாம் 
தேவார்சிந்தை யந்தணாளர் சீரா லடிபோற்றக் 
கூவார்குயில்க ளாலும்மயில்க ளின்சொற் கிளிப்பிள்ளை 
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே. 5

பூ ஆர் பொய்கை அலர் தாமரை, செங்கழுநீர், புறவு எல்லாம் 
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற, 
கூ ஆர் குயில்கள், ஆலும் மயில்கள், இன்சொல் கிளிப்பிள்ளை, 
கா ஆர் பொழில் சூழ் ந்து அழகு ஆர் குடந்தைக்காரோணத்தாரே.

பொருள்: தெய்வச் சிந்தனை நிறைந்த மனத்தினராகிய அந்தணர்கள் இறைவனது 
புகழைக்கூறித் திருவடிகளைப் போற்றி வாழ்கின்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் 
சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். இத்தலம், தாமரை, அல்லி, செங்கழுநீர் போன்ற 
நீர்ப்பூக்கள் நிறைந்த பொய்கைகளாலும், கூவும் சூயில்களும், ஆடும் மயில்களும், 
இன்சொல் பேசும் கிளிப்பிள்ளைகளும் நிறைந்துள்ள முல்லைவனச் சோலைகளாலும் 
சூழப்பெற்றதாகும்.

குறிப்புரை: தாமரை செங்கழுநீர் முதலிய பூக்களைக் கொண்டு தெய்வத் தன்மை கொண்ட 
அந்தணர்கள் அடிபோற்ற இருப்பவர் காரோணத்தார் என்கின்றது. பூவார் பொய்கை - கொட்டி அல்லி 
தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்த பொய்கை. அவற்றுள் தாமரையும், கழுநீரும் இறைவன் 
வழிபாட்டிற்கு ஏற்றன ஆதலின், பின்னர் விதந்து கூறப்பட்டன. புறவு - முல்லை. தேஆர் சிந்தை - 
தெய்வத் தன்மை நிறைந்த மனம், சீரால் - இறைவன் புகழால். ஆலும் - அகவும். அந்தணாளர் 
அடிபோற்றப் பொழில் சூழ்ந்து அழகார் காரோணதார் என முடிக்க. 
The holy and sacred minded priests praise and adore the holy feet of Lord Civan of Thiru-k-kudanthai-k-kaarōnam, offering lotus flowers obtained from cool beautiful ponds, and also the red coloured water lily. They also collect flowers from the sylvan tracts of the country, the fragrant jasmine, and the Mullai flower  – and offer all these at the holy feet of Lord Civan. In the gardens all around the city, the Indian cuckoos coo; the peacocks cry and dance ( ஆடிக்கொண்டு அகவுகின்றன); the parrots lisp the pleasing words of others (இன்சொல் ) - and such birds flourish in the city, which is well guarded by security men. In such a famed and renowned city Lord Civan is entempled. 

Note: The presence of joyous birds is an indication of peace and prosperity. Desolation prevails, according to Keats, where no birds sing.

மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே யனல்வாளி 
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில் 
தீர்ப்பாருடலி லடுநோயவலம் வினைகள் நலியாமைக் 
காப்பார்கால னடையாவண்ணங் காரோ ணத்தாரே. 6

மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல்வாளி 
கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில் - 
தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியா மை; 
காப்பார், காலன் அடையா வண்ணம்: - காரோணத்தாரே.

பொருள்: சிவனடியார்களுக்கு மூப்பு ஊர்ந்து வந்து நலியுங்காலத்து நியதி தத்துவத்தின் 
வழியே நெறியாய் நின்று அவர்களைக் காப்பவர் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர். 
முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோர்த்து முப்புரங்களை அழித்தவரும் அவரே. 
அருச்சுனன் செய்த தவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதாத்திரம் என்ற ஓப்பற்ற தெய்வீக 
அம்பை வழங்கி அருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய 
வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையா 
வண்ணம் காப்பவர் - எல்லாம் அவரேயாவார்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த காலத்து அம்பைக் கோப்பவரும் விசயன் நிலை கண்டு அருள் 
செய்தவருமாகிய குழகரது குடமூக்கில் அடியார்களைக் காலன் குறுகாதவாறு காப்பவர் காரோணத்தார் 
என்கின்றது. மூப்பு ஊர் நலிய - முதுமை ஊர்ந்து வருத்த. நெதியார் விதியாய் - நியதியின் வழியே 
When old age creeps in and causes grief, Lord Civa protects us according to fate and reasoned doctrine. In the days of yore He fixed fire in the tip of His dart and burnt the citadels of the Asuraas. He is the ever young one who took note of the penance done by Arjunan, and blessed him by giving the invincible missile. He annuls the physical ailments, the evil effects of karma, and the mental miseries of His devotees. He forefends the advent of Kaalan the regent of death. This Lord Civan is entempled in Thiru-k-kudanthai-k-kaarōnam.
Note: 'Niyati' is the second item of  Asuddha Maya tatvas. When one undergoes hardships as a result of karma one should feel happy that one's debts are being discharged. At the hour of death, one will be greeted by an emissary of Civa. St. Appar warns Yama not to approach a Civa bhaktha.

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை 
மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை 
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கில் 
கானார்நட்ட முடையார்செல்வக் காரோ ணத்தாரே. 7

ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை, 
மான் ஆர் தோலார்; புலியின் உடையார்; கரியின்உரி போர்வை - 
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில், 
கான் ஆர் நட்டம் உடையார், செல்வக் காரோணத்தாரே.

பொருள்: விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் 
பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுவதும் திரிந்து பலி ஏற்று உழலும் 
வாழ்க்கையர், மான் தோலைப் பூணூலில் அணிந்தவர். புலித்தோலை ஆடையாக 
அணிந்தவர்; யானைத்தோலால் உடம்பைப் போர்த்தவர். சுடுகாட்டில் நடம் புரிகிறவர். 
அவர் தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து உறைபவர்.

குறிப்புரை: கபாலம் ஏந்திப் பலி ஏற்று உழலும் இறைவன் காரோணத்தார் என்கின்றது. கரியின் 
உரிபோர்வை - யானைத் தோலால் ஆகிய போர்வையை உடையவர், திளைத்து - கூடி, தேனார் 
மொழியாள் என்பது இத்தலத்து அம்மையின் திருநாமம். 
In the famed city of Kumbakonam Lord Civan is enshrined in the Kaarōnam temple. His economic resources are unlimited. Yet, He leads the life of a mendicant roaming about all over the world, holding in His hand a skull which He uses as His begging bowl to which the flesh is still sticking. A small piece of deerskin is fastened to His sacred thread. He is clad in the skin of a tiger. He covers His body with the skin of an elephant, which he killed. He is happily enshrined with His consort named here as "Then Mozhi Ammai" . He dances in the burning ghat. 
Note: To the sacred thread of a Brahmacchaari, the deer-skin is fastened.

வரையார்திரள்தோள் மதவாளரக்க னெடுப்ப மலைசேரும் 
விரையார்பாத நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும் 
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும் 
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோ ணத்தாரே. 8.

வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும் 
விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம்பத்தும், 
உரை ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும் - 
கரை ஆர் பொன்னி சூழ் தண் குட ந்தைக்காரோணத்தாரே.

பொருள்: கரைகளோடு கூடிய காவிரி ஆற்று நீர் சூழ்ந்த குளிர்ச்சியான நகர் குடந்தை ஆகும். 
இங்குள்ள காரோணத்து இறைவர் சிவபெருமானார் ஆவார். இராவணன் மலைபோன்ற 
திரண்ட தோள்களை உடையவன். மதம் மிக்க வாள்போரில் வல்லவன். அவன் கயிலை 
மலையைப் பெயர்க்க எத்தனித்தபோதே, அவ்வளவில் மணம் கமழும் தம் திருவடியின் 
நுனிவிரலால் அம்மலையின் உச்சியில் ஊன்றினார். இராவணனின் பத்துத் தலைகளும் 
நெரிந்தன. இராவணன், பணிந்து, புகழ்மிக்க சாமகீதம் பாடினான். அப்பாட்டைக் கேட்டு 
மகிழ்ந்து, அப்பொழுதே அவனுக்கு ஒளி பொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் 
கொடுத்து அருளியவர் இவரே.

குறிப்புரை: இராவணன் கயிலையை எடுக்கப் பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும், 
சாமகானங்கேட்டு அருள் செய்தவர் இவர் என்கின்றது. இவன் மதத்தால் இருக்கிறான், ஆதலால் 
அடக்குண்டான் என்பார், மதவாள் அரக்கன் என்று உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் 
நிறைந்த சாமகீதம். 
Raavanan, the king of Sri Lanka was a valiant monarch adept in fierce sword fights. His ten shoulders were as broad and strong as that of a hill. He once tried to lift and keep aside mount Kailash, the abode of Lord Civan. At that moment Civan pressed the mountain by the toe of His fragrant holy feet, by which Raavana's ten heads were crushed. Raavanan repented for his folly, begged for pardon, and sang the very renowned musical note known as 'Saama Ghaanam'. By hearing this superb music Lord Civa pardoned him, and then and there, graced him by giving him a dazzling divine sword known as 'Chandrahaasam' . It is this Lord Civan who is enshrined at Kaarōnam temple in Kudanthai town on the banks of river Ponni (Cauvery). 
Note: The Ponni is another name of Cauvery river.
கரியமாலுஞ் செய்யபூமே லயனுங் கழறிப்போய் 
அரிய வண்டந் தேடிப் புக்கு மளக்க வொண்கிலார் 
தெரிய அரிய தேவர் செல்வந் திகழுங் குடமூக்கில் 
கரிய கண்டர் கால காலர் காரோ ணத்தாரே. 9

கரிய மாலும் செய்யபூமேல் அயனும் கழறிப் போய், 
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார், 
தெரிய அரிய தேவர் - செல்வம் திகழும் குடமூக்கில், 
கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.

பொருள்: செல்வ வளம் மிக்க குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் சிவபெருமான்
ஆவார். அவர் கருநிறம் பொருந்திய கண்டத்தினர். காலனை அழித்த காலகாலர். கரிய 
திருமாலும், சிவந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு 
வாதாடி இருவரும் அண்டங்கள் அனைத்திலும் அடிமுடிகளைக் காணத் தேடிச் சென்றும் 
இயலாத வண்ணம் ஓங்கி உயர்ந்து நின்ற பெருமான். தான் என்ற முனைப்பு 
உடையவர்களால் அவர் காணுதற்கு அரியவர் ஆவார்.

குறிப்புரை: அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. 
கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி. 
The dark-blue hued Thirumaal and Brahma seated on the red lotus flower, raised dispute with each other over their superiority. As decided, they both went out all over the world to reach first the holy feet and head of Lord Civan but in vain. He is the Maha Deva who stood as a tall big flame of fire. He could not be known / seen easily by any one especially by those egocentric persons. His neck is dark blue in colour. He is the one who kicked away and destroyed Kaalan  the regent of death and hence is known as 'Kaala Kaalar' . It is this Lord Civan who is entempled in the prosperous Kudamooku town. 
Note: Mahadeva means the God of gods - God Supreme.
நாணா ரமணர் நல்ல தறியார் நாளுங் குரத்திகள் 
பேணார் தூய்மை மாசு கழியார் பேசே லவரோடுஞ் 
சேணார் மதிதோய் மாட மல்கு செல்வ நெடுவீதிக் 
கோணா கரமொன் றுடையார் குடந்தைக் காரோ ணத்தாரே. 10

நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள், 
பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்! 
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக் 
கோணாகரம் ஒன்று உடையார் - குடந்தைக்காரோணத்தாரே.

பொருள்: சமணர்கள் நாணம் இல்லாதவர்கள், நல்லதை அறியாதவர்கள். பெண்பால் சமணக் 
குருமார்களும் பரிசுத்தத்தைப் போற்றாதவர்கள். அவர்கள் தங்கள் உடலில் இருக்கும் 
அழுக்கை நீக்கிக் கொள்ளுவதற்கு நாள்தோறும் குளிக்க மாட்டார்கள். அவர்களோடு 
பேசாதீர்கள். மதி தோயும் வான் அளாவிய மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை 
உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். 
அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை: கோணமாகிய இருப்பிடத்தை உடையவர் இவர் என்கின்றது. குரத்திகள் - பெண்பால் 
துறவிகள் ஆரியாங்கனைகள். தூய்மை பேணார் - பரிசுத்தத்தைப் போற்றாதவர்கள். சேண் - ஆகாயம். 
The Samanars are shameless people. They know not what is good. Their woman preceptors do not foster purity daily. They do not bathe daily to remove the dirt in their body. Ye companions! Do not speak to them at all. The affluent people live in big and tall mansions in the opulent streets of Kudanthai. Their storied mansions seem to reach the moon that moves in the sky. Reach this place and worship Lord Civan enshrined in the Kaarōnam temple.
கருவார் பொழில்சூழ்ந் தழகார் செல்வக் காரோ ணத்தாரைத் 
திருவார் செல்வ மல்கு சண்பைத் திகழுஞ் சம்பந்தன் 
உருவார் செஞ்சொல் மாலை யிவைபத் துரைப்பா ருலகத்துக் 
கருவாரி டும்பைப் பிறப்ப தறுத்துக் கவலைகழிவாரே. 11

கரு ஆர் பொழில் சூழ்ந்த அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை, 
திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன் 
உரு ஆர் செஞ்சொல்மாலை இவையபத்து உரைப்பார், உலகத்துக் 
௧ரு ஆர் இடும்பைப் பிறப்புஅது அறுத்து, கவலை கழிவாரே.

பொருள்: கருநிறம் பெற்ற அடர்த்தியான சோலைகள் சூழ்ந்த அழகிய செல்வக் காரோணத்து 
இறைவர் சிவபெருமானார் ஆவார். இப்பெருமானைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் 
நிறைந்த சண்பை என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய 
இப்பதிகம் ஓர் செஞ்சொல் மாலையாகும். இப்பாடல்கள் பத்தையும் பொருளுணர்ந்து 
உரைப்பவர், இவ்வுலகில் மீண்டும் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் 
நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: குடந்தைக் காரோணத்தாரைச் சண்பை ஞானசம்பந்தன் சொன்ன இம்மாலையைச்
சொல்பவர்கள் பிறப்பறுத்துக் கவலையிலிருந்து நீங்குவார்கள் என்கின்றது. கருவார் பொழில் - கரிய 
சோலை. ௧ரு ஆர் இடும்பைப் பிறப்பு - கருப்பையில் படும் துன்பம் நிறைந்த பிறப்பு. 
By the grace of god the town Shanbai ( - another name of Seekaazhi) became very prosperous, wherefrom hailed Gnaanasambandan. He sang this garland of verses in chaste Tamil words, on Lord Civan of beautiful opulent Kaarōnam temple which is surrounded by dense dark forests. Those who can chant these ten verses will be relieved of the cycle of birth and death in the world and get freed of all their worries.

திருச்சிற்றம்பலம்


72ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
73. திருக்கானூர்

திருத்தலவரலாறு: 
இத்திருத்தலமாகிய திருக்கானூர் சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலமாகும். இது
பூதலூர் இரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்தில் வருவோர் 
திருக்காட்டுப்பள்ளியை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும். உமாதேவியார் சிவயோகத்து 
எழுந்தருளி யிருந்தபோது இறைவன் செந்தீவண்ணராகத் திருவுருவங்காட்டிய தலம். இதனை 
அப்பர் சுவாமிகள் ‘கானூரில் பரமனாய பரஞ்சுடர் காண்மினே’ என்பார்கள். சுவாமி 
செம்மேனிநாதர். அம்மை சிவயோக நாயகி. தீர்த்தம் கொள்ளிட நதி.

பதிக வரலாறு:

திருமழபாடியை வணங்கிப் பதிகம் பாடி அங்கு எழுந்தருளிய பிள்ளையார், திருக்கானூரை 
அடைந்தார்கள். ‘வானார் சோதி’ என்னும் இந்த வளமார் பதிகத்தைப் பாடி வணங்கினார்கள். 
THE HISTORY OF THE PLACE 
73. THIRU-K-KAANOOR

This sacred place lies to the north of the river Cauvery and is at a distance of 3 km to the east of the Boodhaloor railway station. To get here by bus, one needs to go to Thiru-k-kaattu-p-palli first and take the bus from there. 
The Lord's name is Semmeni-naathar and the Goddess is known as Sivayoga- naayaki. The Lord showed Himself in the form of a blazing red flame to the Goddess. This performance has been sung by Saint Appar Swaamigal as 'Kanooril paramanaaya paranjchudar kaanmine'. The sacred ford is river Kollidam.

INTRODUCTION TO THE HYMN 
Having praised Civa at Thirumazhapaadi our saint arrived at Thiru-k-kaanoor where he sang this following hymn.
The shrine here was completely covered with sand when once the Kollidam was in spate. It was only about a hundred years ago that the sand was removed and the shrine was recovered.

திருச்சிற்றம்பலம் 
73. திருக்கானூர் 
பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

வானார் சோதிமன்னு சென்னிவன்னி புனங்கொன்றைத் 
தேனார் போதுதானார் கங்கை திங்களொடுசூடி 
மானேர் நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார் 
கானூர் மேயகண்ணார் நெற்றியானூர் செல்வரே. 1

வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனங்கொன்றைத் 
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி, 
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார் - 
கானூர் மேய கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

பொருள்: திருக்கானூரில் அமர்ந்திருக்கும் சிவபெருமான் நெற்றிக் கண்ணை உடையவர். 
இடபத்தில் ஊர்ந்து வரும் செல்வர். வானில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற 
ஒளி பொருந்திய திருமுடியை உடையவர். திருமுடியில் வன்னிக் காடுகளில் பூத்த தேன் 
நிரம்பிய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, பிறைச் சந்திரன் ஆகியவற்றைச் சூடி 
இருப்பவர். மான் போன்ற மருண்ட கண்களை உடைய உமையம்மை கண்டு மகிழ, மாலைக் 
காலத்தில் நடனம் புரிபவர் ஆவார்.

குறிப்புரை: கானூர் மேவிய செல்வர், சென்னியிலே வன்னி, கொன்றை, திங்கள், கங்கை சூடி அம்மை 
காண ஆடுவார் என்கின்றது. வானார் சோதி - வானில் உள்ள ஒளிப் பொருளாகிய சூரியனும் சந்திரனும். 
சென்னி - திருமுடி. வன்னி - வன்னிப் பத்திரம். மானேர் நோக்கி - மானை ஒத்த கண்களை உடைய 
பார்வதி. ஆன் ஊர் செல்வர் - இடபத்தை ஊர்ந்த செல்வர். 
Lord Civan of Thiru-k-kaanoor has a third eye in His forehead. He is our greatest asset who rides on the bull. His head is dazzling like the sun and the moon that shine in the sky. He wears in His matted hair Suma leaves and the cool and melliferous cassia flowers that blossom in the forest. He also retains in His head, river Ganga that came down by herself and also the crescent moon. He dances in the evening hours, happily witnessed by His consort Umaa Devi whose eyes are like those of a gazelle (a small graceful swift antelope).
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர் 
ஏய்ந்தகோ ணற்பிறை யோடரவுகொன் றையெழிலாரப் 
போந்தமென் சொலின்பம் பயந்தமைந்த ரவர்போலாங் 
காந்தள்விம் முகானூர்மேய சாந்தநீற்றாரே.

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன்மேல், ஓர் 
ஏய்ந்த கோணல்பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர, 
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் - 
காந்தள் விம்மு கானூர் மேய சாந்தநீற்றாரே.

பொருள்: திருக்கானூரில் காந்தன் செடிகள் செழிப்பாக நிறைந்து வளர்ந்தும், பூத்தும், மணம் 
பரப்பியும் உள்ளன. இங்கு சிவபெருமான் சந்தனமும், திருநீறும் பூசிய இறைவராக உறைகின்றார்.
தடுக்க முடியாதபடி வேகத்தோடு வந்த கங்கையின் வெள்ளம் மூழ்கி மறைந்து போன சடைமுடியை உடையவர். 
தனது சடைமுடிமேல் ஒரு வளைந்த பிறைச்சந்திரனை பொருந்தியிருப்பவர். அத்துடன், பாம்பு, கொன்றை மலர் ஆகியன சூடி 
அழகு தர வீதியுலா வருபவர். தன் வாயினின்று வந்த அழகிய மெல்லிய சொற்களால் இன்பம் தரும் மைந்தரும் இவரே ஆவார்.

குறிப்புரை: கானூர் மேவிய செல்வர், கங்கையினை உடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் 
பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர் போலாம் என்கின்றது. நீந்தலாகா வெள்ளம் 
மூழ்கும் நீள் சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்து போன 
சடை, ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; 
என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த 
தலைமகன் காலம் நீட்டிக்க. கவன்ற தலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி 
நைகின்ற நிலையை அறிவிக்கின்றது. 
Lord Civa of Thiru-k-kaanoor smears His body with holy ashes and sandal paste. In this town the Malabar glory lily, the flowering plant, grows abundantly spreading its fragrance all around the area. The river Ganges that descended with uncontrollable swiftness defying the surroundings was made calm by Lord Civan in His matted hair. He retains in His head the curved crescent moon and the snake; decked with cassia flowers also in His head He moves in the streets majestically diffusing joy by soft and sweet words.

சிறையார் வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க் கொன்றை 
மறையார் பாடலாட லோடுமால் விடைமேல் வருவார் 
இறையார் வந்தெனில்புகு ந்தென்னெழில் நலமுங்கொண்டார் 
கறையார் சோலைக் கானூர் மேயபிறையார் சடையாரே. 3

சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை, 
மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்; 
இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார் - 
கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

பொருள்: இருண்ட சோலைகள் சூழ்ந்த கானூரில் சிவபெருமான் பிறை பொருந்திய 
சடையினராக எழுந்தருளியுள்ளார். சிறகுகளோடு கூடிய வண்டுகளும், அவைகள் உண்ணும் 
தேன் நிறைந்ததும், சிவந்ததுமான கொன்றை மலர்களைச் சூடி உன்ளனார். வேதப் 
பாடல்களைப் பாடி ஆடி, பெரிய விடைமேல் வருபவர். இந்த இறைவரான சிவபெருமான், 
என் இல்லத்தில் புகுந்து, என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார். இது முறையோ?

குறிப்புரை: கானூர் மேவிய பிறையார், சடையார், விடைமேல் வருவாராய் என் வீட்டில் புகுந்து என் 
நலத்தைக் கொண்டார் என்று தலைவி அறத்தொடு நிற்பதாக எழுந்தது. சிறை - சிறகு. மறை ஆர் பாடல் 
- வேதப் பாடல். மால்விடை - பெரிய இடபம். இறையார் - சிவன். எழில்நலம் என்பது எழிலும் நலமும் 
என உம்மைத் தொகை. கறை யார் சோலை - இருள் சூழ்ந்த சோலை. 
Thick dark gardens encircle Thiru-k-kaanoor town, where Lord Civan is enshrined. He wears in His head fully blown cassia flowers where to winged bees come and buss around sipping the honey that drips out of the flowers. He dances singing Vedic hymns. He rides on His big bull. This Lord appears in this stature enters into my house and snatches away my beauty and virtue (goodness). Is it proper for His dignity? (Note the Sanmargham concept - the Lord and His consort).
விண்ணார் திங்கட்கண் ணிவெள்ளைமா லையதுசூடித் 
தண்ணாரக் கோடாமைபூண் டுதழைபுன் சடைதாழ 
எண்ணாவந் தெனில்புகுந் தங்கெவ்வ நோய்செய்தான் 
கண்ணார் சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே. 4

விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளைமாலைஆது சூடி, 
தண்ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ, 
எண்ணா வந்து என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான் - 
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர்பெருமானே.

பொருள்: விண்ணோர் தலைவரான சிவபெருமான் விசாலமான இடத்தை உடைய 
சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் எழுந்தருளி உள்ளார். இவர் ஆகாயத்தில் பொருந்திய 
வெண்ணிறமான பிறைமதியைத் தலைமாலையாக அணிந்து உள்ளார். குளிர்ச்சி பொருந்திய 
எலும்பு மாலையையும் ஆமை ஓட்டையும் அணிந்து உள்ளார். செழித்துள்ள சிவந்த 
சடைகள் தாழ்ந்து தொங்குகின்றன. அப்பெருமான் என்னை அடைய எண்ணி என் இல்லம் 
புகுந்து, எனக்கு மிக்க விரக நோயைத் தந்து சென்றார். இது முறையோ?

குறிப்புரை: வீட்டில் கன்னம் வைத்துப் புகுந்த கள்வனின் அடையாளம் கூறுவார்போலத் தலைவி, 
இல்புகுந்து எவ்வஞ்செய்த தலைவனின் கண்ணி அணி அடையாளங்கள் இவற்றைக் கூறுகின்றாள். 
விண் - ஆகாயம். கண்ணி - தலைமாலை. தண் ஆர் அக்கு - குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை. 
எண்ணாவந்து என்இல் புகுந்து எவ்வ நோய் செய்தான் - யான் அறியாமையால் எண்ணாதிருந்த 
போதிலும், வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்த மிக்க துன்பத்தைச் செய்தான்; என்றது ஆன்மா 
தலைவனை, தானே சென்று அடைதற்கும், கலத்தற்கும், பிரிதற்கும் என்றும் சுதந்திரமில்லாதன என்று 
அறிவித்தவாறு. கண் - இடம். 
Lord Civan, the Chief of the Supernal, abides in Thiru-k-kaanoor where spacious gardens flourish all around. He puts on in His matted hair the crescent moon as His chaplet. He also wears many garlands made up of white flowers, cool bones and carapace. His ruddy matted hair dangles freely in the air. With these embellishments He entered into my house, provoked lasciviousness in me and returned. Is it proper for His dignity? 
Note: The carapace: Vishnu incarnated as a very big tortoise. When he grew haughty, Civa tore away his carapace and wore it on His person.
தார்கொள் கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி 
சீர்கொள் பாடலாட லோடுசேட ராய்வந்து 
ஊர்கள் தோறுமைய மேற்றென்னுள் வெந்நோய் செய்தார் 
கார்கொள் சோலைக்கானூர் மேயகறைக் கண்டத்தாரே. 5

தார் கொள் கொன்றைக்கண்ணியோடும் தண்மதியம் சூடி, 
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து, 
ஊர்கள் தோறும் ஐயம்(ம்) ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார் - 
கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

பொருள்: கறைக் கண்டரான சிவபெருமான், இருள் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த 
திருக்கானூரில் எழுந்தருளி உள்ளார். கொன்றை மலர்களால் ஆன மாலையைத் 
தலையிலும் மார்பிலும் அணிந்து உள்ளார். தலையில் குளிர்ந்த பிறைமதியைச் சூடியுள்ளார். 
சிறப்பு மிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்கு உரியவராய் வந்து, ஊர்கள் தோறும் 
சென்று பலியேற்கிறார். என் மனத்தகத்தே கொடிய விரக வேதனையைத் தந்து சென்றார்
இவர்.

குறிப்புரை: பிச்சை ஏற்பார்போல் வந்து என் மனத்திற்குப் பெரு நோய் செய்தார் என்கின்றது. இதுவும் 
தலைவி கூற்று. தார் - மார்பின் மாலை. கண்ணி - தலையிற் சூடப்படும் மாலை. சேடர் - காதலால் தூது 
செல்லும் தோழர். உள் - மனம். 
Lord Civan whose throat has a pretty shade of dark blue, is enshrined in Thiru-k- kaanoor which is encircled by gardens that are always dark, due to closeness of big tall trees. He wears a garland of cassia flowers on His chest and also in His head as a wreath. He retains the cool crescent moon in His matted hair. With these glorious embellishments He roams about in many towns dancing and singing splendid songs and accept alms. He came to my house and kindled flames of love in me and returned.

முளிவெள் ளெலும்புநீறு நூலுமூழ் குமார்பராய் 
எளிவந் தார்போலைய மென்றெனில்லே புகுந்துள்ளத் 
தெளிவு நாணுங்கொண் டகள்வர் தேறலார்பூவில் 
களிவண் டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண் பிறையாரே.

முளிவெள்எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய், 
எளிவந்தார் போல், ‘ஐயம்’ என்று, என் இல்லே புகுந்து, உள்ளத் 
தெளிவும் நாணும் கொண்ட கள்வர்-தேறல் ஆர் பூவில் 
களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண்பிறையாரே.

பொருள்: தேன் நிறைந்த மலர்களில் வண்டுகள் தேனை உண்டு மகிழ்ந்து, யாழ்போல் 
திருக்கானூரில் ஓலி எழுப்புகின்றன. இங்கு ஒளி பொருந்திய வெண் பிறையை 
முடியிற்சூடிய இறைவராக சிவபெருமான் விளங்குகின்றார். காய்ந்த வெண்மையான 
எலும்பும், திருநீறும், முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வருபவர்போல 
வருகிறார். வந்து, 'ஐயம் இடுக’ என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து, எனது 
உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் இவர் ஆவார்.

குறிப்புரை: இதுவும்; பிச்சை என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும் 
நாணத்தையும் கொண்ட கள்வர் இவர் என்கின்றது. முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் 
தக்கவர்போல். உள்ளத் தெளிவும் நாணும் கொண்ட கள்வர் என்றது தன்னுடைய நிறையும் நாணும் 
அகன்றன என்பதை விளக்கியது. தேறல் - தேன். 
Lord Civan is enshrined in Thiru-k-kaanoor, where the bees suck honey from the flowers and hum. The humming which is like the tune of a lute, pervades all around Thiru-k-kaanoor. He retains the bright moon in His matted hair. He smears His body with white holy ashes. 'Three ply' sacred thread and bones are seen on His chest. He enters into my house as a humble mendicant saying "Give alms please". Lo! He snatched away my resolute firmness and bashful modesty much as a thief and disappeared.
மூவா வண்ணார் முளைவெண் பிறையர்முறுவல் செய்திங்கே 
பூவார் கொன்றை புனைந்துவந் தார்பொக் கம்பலபேசிப் 
போவார் போலமால் செய்துள்ளம் புக்கபுரிநூலர் 
தேவார் சோலைக் கானூர்மேய தேவதேவரே. 7

மூவா வண்ணர், முளைவெண்பிறையர், முறுவல்செய்து இங்கே 
பூஆர்கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப் 
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர் - 
தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

பொருள்: தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற திருக்கானூரில் தேவ தேவரான 
சிவபிரானார் எழுந்தருளி உள்ளார். இவர், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு 
முளைத்த வெண்பிறையை அணிந்தவர். கொன்றை மாலையைச் சூடியவர். காமக் குறிப்புத் 
தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்தார். பொய் கலந்த வார்த்தைகளைப் 
பேசிக் கொண்டிருந்து, திரும்பிப் போவார்போல் ஆசை காட்டி என்னை மயக்கினார். என் 
உள்ளத்தில் புகுந்து கொண்ட இவர் முப்புரிநூல் அணிந்தவர் ஆவார்.

குறிப்புரை: இவர் வரும்போது பிறைசூடி, கொன்றை மாலை அணிந்து, புன்சிரிப்புச் செய்து கொண்டே 
வந்தார்; பல பொய்யைப் பேசிக் கொண்டே போவார்போல என் மனத்தை மயக்கிப் புகுந்து கொண்டார் 
என்கின்றது. மூவா வண்ணார் - மூப்படையாத அழகை உடையவர். முறுவல் - காமக்குறிப்புத் தோன்றும் 
சிரிப்பு பொக்கம் - பொய். உள்ளம் புக்க புரிநூலர் என்றது புரிநூல் அணிந்ததற்கேலாத செயல் செய்தார் 
என்னுங்குறிப்பு. தேவு - தெய்வத்தன்மை. 
Civan, the Supreme Lord of the Devaas presides over Thiru-k-kaanoor, which is girt with flower gardens where the honey flows all around. He is handsome who never becomes aged. He retains the white single phase moon in His head. Wearing garlands of cassia flowers and twisted sacred thread on His chest, He enters into my house smiling gently and making amorous gestures. He starts talking all sorts of fibs and pretends to depart; but all of a sudden He goes out of my sight, and hides Himself in my heart. 
Note: Civa is described as a trickster and a fibster by her who feels the pangs of His separation.

தமிழின்நீர் மைப்பேசித்தாளம் வீணைபண்ணி நல்ல 
முழவமொ ந்தைமல்கு பாடல்செய் கையிடமோவார் 
குமிழின் மேனிதந் துகோலநீர் மையதுகொண்டார் 
கமழுஞ் சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.

தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல 
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார், 
குமிழின் மேனி தந்து, கோலநீர்மை அது கொண்டார் - 
கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

பொருள்: பவளம் போன்ற நிறத்தினை உடைய சிவபெருமானார் மணம் கமழும் சோலைகள் 
சூழ்ந்த திருக்கானூரில் எழுந்தருளி உள்ளார்.இனிமையான வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம்,
மொந்தை போன்ற வாத்தியங்களோடு பாடல்களைப் பாடி என் இல்லத்தை அடைந்தார். என் இல்லத்தை விட்டு நீங்காதவராக 
எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தைத் தந்து, என் அழகைக் கவர்ந்து சென்றார்.

குறிப்புரை: இவர் பல வாத்தியங்கள் முழங்கப் பாடிக் கொண்டும் இனிமையாகப் பேசிக் கொண்டும் 
வந்தார்; வந்தவர் இடம் விட்டுப் பெயராதவராய் என்னுடைய அழகைக் கவர்ந்து கொண்டு குமிழம்பூ 
நிறத்தைக் கொடுத்துவிட்டார் என்கின்றது. தமிழின் நீர்மை - இனிமை. கோலம் - அழகு. 
பவளவண்ணரே என்றாள். அவர் மேனியின் நிறத்தில் ஈடுபட்டு. 
Lord Civan whose body hue is like that of a coral, presides over Kaanoor. This town is surrounded by flower gardens that diffuse a pleasant smell all around. He speaks chaste Tamil language and sings divine songs to the accompaniment of musical instruments such as cymbals , lute , large, loud sounding drum  and another one that opens at one end and reaches my house. Initially it appeared that He did not want to part from my presence; but His presence created shallowness in my body resembling that of the flower of the small cashmere tree (Gmelina asiatica ). All of a sudden He left my house snatching away my beauty. 

Note: The phrase "Tamizhin neermai"  is untranslatable. 
Neermai sums up all glorious virtues. It is characterised by redeeming mercy. Neermai is the peculiar grace word of Tamil.

அந்தமாதி யயனுமாலு மார்க்குமறி வரியான் . 
சிந்தையுள் ளுநாவின்மேலுஞ் சென்னியு மன்னினான் 
வந்தென் னுள்ளம்புகுந் துமாலைகா லையாடுவான் 
கந்தமல் குகானூர் மேயஎந்தை பெம்மானே. 9

அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான், 
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான், 
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான் - 
கந்தம் மல்கு கானூர் மேய எந்தைபெம்மானே.

பொருள்: மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந்தையராகிய பெருமானார், 
அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய 
அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலை பெற்று 
இருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து 
மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்து அருளுகின்றார்.

குறிப்புரை: அயனுக்கும் மாலுக்கும் அறியப்படாத இறைவன் எனது சிந்தையிலும், நாவிலும், 
சென்னியிலும் திகழ்கின்றான்; என் மனத்திற் புகுந்து காலையும் மாலையும் உலாவுகின்றான் என்கின்றது. 
அந்தம் ஆதி - முடிவும் முதலும். 
Lord Civan, my father, who is the creator and dissolver of all souls, presides over Thiru-k-kaanoor, where the atmosphere is always fully charged with pleasing fragrance. He is a rarity for one and all inclusive of Thirumaal and Brahma. But He always makes me feel His presence in my heart; mind and in my tongue. Though He is such a great person, He appears before me, visible to my eyes, enters into my mind and makes me realise His presence therein, both in the morning and in the evening.

ஆமையரவோ டேனவெண் கொம்பக் குமாலைபூண் 
டாமோர்கள் வர்வெள்ளர் போலஉள்வெந் நோய்செய்தார் 
ஓமவே தநான்முக னுங்கோணா கணையானுஞ் 
சேமமாய செல்வர் கானூர்மேய சேடரே.

ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு, 
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார் - 
ஓம வேத நான்முகனும் கோள் நாக(அ)அணையானும் 
சேமம்ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

பொருள்: திருக்கானூரில் எழுந்தருளிய கடவுள் சிவபெருமான் ஆவார். இவரை, 
வேதங்களை ஒதும் நான்முகனும், வளைந்த பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் 
தங்களைப் பாதுகாத்து அருளும் செல்வராகக் கருதுகின்றனர். இவர், ஆமை, அரவு, 
பன்றியின் வெண்மையான கொம்பு, எலும்பு மாலை ஆகியவற்றை அணிந்தவர். ஒரு 
கள்வராய், வெள்ளை உள்ளம் படைத்தவர் போல வந்து எனக்கு மன வேதனையைத் 
தந்தவர்.

குறிப்புரை: எலும்பு முதலியவற்றை அணிந்து வெள்ளை உள்ளம் படைத்தவர்போல வந்து கள்வராய் 
மனவேதனையைத் தந்தார் என்கின்றது. அவர் கொண்ட வேடத்திற்கும் செயலுக்கும் பொருத்தமில்லை 
என்றபடி. ஓமம் - ஆகுதி. கோண் நாகணையான் - வளைந்த பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன். 
சேமம் - பாதுகாப்பு. சேடர் - கடவுள். 
Brahma who chants the Vedas which prescribe the rules and regulations to be observed while conducting the sacrificial fire and Thirumaal who reclines on a coiling snake regard Lord Civan as their protector. This Lord Civan presides over Thiru-k- kaanoor. He adorns Himself with shell of tortoise, snake, the white tusk of the hog and garland of bones. He called on me as an innocuous person appearing to be a pure hearted One, but actually with a furtive mind. He left me in a distressed condition of mind.

கழுது துஞ்சுங்கங் குலாடுங்கானூர் மேயானைப் 
பழுதில் ஞானசம்பந்தன் சொற்பத்தும் பாடியே 
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின் 
றழுதுநக் குமன்பு செய்வா ரல்லலறுப்பாரே. 11

கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை, 
பழுதுஇல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே, 
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று, 
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

பொருள்: திருக்கானூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பேய்களும் தூங்கும் நள்ளிரவில் 
நடனம் ஆடுபவர். இப்பெருமானைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் சொல் மாலையான 
இப்பதிகத்தால் போற்றிப் பாடினார். இப்பதிகப் பாடல்கள் பத்தையும் முப்பொழுதும் 
பாடித் தொழுங்கள். இந்தத் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் 
அன்பு செய்யுங்கள். அப்படிச் செய்பவர்களின் துன்பங்கள் அறுந்துவிடும்.

குறிப்புரை: இத்தோத்திரங்களைச் சொல்லித் துதித்து ஆனந்தத்தால் அழுதும் சிரித்தும் நிற்பவர்கள் 
துன்பம் அறுப்பார் என்கின்றது. கழுது - பேய். பொழுது - முப்பொழுதிலும். 
Flawless Gnaanasambandan has sung on Lord Civan of Thiru-k-kaanoor. This Lord dances during midnight when even the ghouls slumber. Those who can sing this garland of words comprising the ten verses of this hymn and worship Lord Civan at all times - morning - noon - and in the evening, and weep tearfully in love and laugh in joy will get their troubles snapped altogether. 
Note: One should recite the hymns of our saint poised in sincere devotion. Only then will one be blessed with abiding welfare and well being.

திருச்சிற்றம்பலம்


73ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
74. திருப்புறவம் 
திருத்தல வரலாறு:

முதல் பதிகம் காண்க.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தர் அவதரித்த ஊராகிய சீகாழியின் பன்னிரண்டு பெயர்களில் ‘புறவம்’ 
என்பதும் ஒன்றாகும். இவர் இத்திருக்கோவில் சென்று அங்குள்ள இறைவன் மீது பாடிய 
இரண்டாவது பதிகம் இதுவாகும். 
74. THIRU-P-PURAVAM

HYSTORY OF THE PLACE 
See First Hymn.

INTRODUCTION 
Thiru-p-puravam is one of twelve names of the birth place of Thiru- Gnaanasambandar, and is commonly called Seekaazhi. This is the second hymn sung by him in the temple at his birth place.

திருச்சிற்றம்பலம்

74. திருப்புறவம் 
பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

நறவநிறை வண்டறை தார்க்கொன்றை நயந்துநயனத்தாற் 
சுறவஞ்செறி வண்கொடி யோனுடலம் பொடியாவிழிசெய்தான் 
புறவமுறை வண்பதியா மதியார்புர மூன்றெரிசெய்த 
இறைவன றவனிமையோ ரேத்தஉமையோ டிருந்தானே. 1

நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் 
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், 
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரிசெய்த 
இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பி 
அணிந்தவராகச் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இவர், தன்னை மதியாத அசுரர்களின் 
முப்புரங்களை எரித்து அழித்தவர். சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய மன்மதனின்
உடல் பொடியாகும்படி தன் நெற்றிக் கண்ணால் விழித்து அழித்தவர். இந்த இறைவர், 
சான்றோர்களும், வானோர்களும் போற்றித் துதிக்க உமையம்மையாரோடு புறவம் என்னும் 
சீகாழிப் பதியில் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

குறிப்புரை: மகரக் கொடியோனாகிய மன்மதனது உடலத்தைப் பொடி செய்தவரும், திரிபுரம் எரித்தவரும் 
ஆகிய உமாபதி நகர் புறவம் என்னும் சீகாழியாம் என்கின்றது. நறவம் - தேன். அறை - ஒலிக்கின்ற, 
நயந்து - விரும்பி. நயனத்தால் - கண்ணால். கறவம் செறி வண் கொடியோன் - சுறாமீன் எழுதப்பட்ட 
கொடியை உடையவனாகிய மன்மதன். நயனத்தால் விழித்தலைச் செய்தான் என்க. மதியார் - பகைவர்.

குருவருள்: நறவம் நிறை வண்டறை தார் என்ற பதிகம் ஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ 
பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் 
'மடையில் வாளை' என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது 
என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.

"அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே 
மண்மிசை நின்ற மலைச்சிறு போதகம் அண்ணாரும் 
கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப் 
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்்

'பொங்கொளி மால்விடைமீது புகுந்தணி பொற்றோணி 
தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே 
இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான் என்று 
அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்'

இப்பதிகத்துள் பாடல் தோறும் "இமையோர் ஏத்த உமையோடிருந்தானே' என்பதால் இதுவே இரண்டாம் 
பதிகம் என்பதை திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தம் பெரிய புராணப் பேருரைக் குறிப்பில் 
அறிவித்துள்ளார்கள். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம். 
Lord Civan desires and wears garland of cassia flowers, full of honey and in which the bees are humming around. God of love and munificent Manmathan  showers all pleasures to all souls. The figure of shark fish is the insigne of his flag. Lord Civan opened His third eye in His forehead and burnt Manmathan into ashes for his folly. Civan also burnt the three citadels of Asuraas who showed disrespect to Him. The Devaas adore and worship Him. This Lord Civan is enshrined along with His consort Umaa Devi in Thiru-p-puravam showering His grace to His devotees.

உரவன் புலியினுரி தோலாடையுடை மேற்படநாகம் 
விரவி விரிபூங்கச்சா அசைத்தவிகிர் தனுகிர்தன்னாற் 
பொரு வெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக 
இரவும் பகலுமிமையோ ரேத்தஉமையோ டிருந்தானே. 2

உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் படநாகம் 
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர் தன்னால் 
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதிஆக, 
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதியைச் சிவபெருமான் தன் பதியாகக் கொண்டுள்ளார். 
இவர் மிகுந்த வலிமை உடையவர். புலித்தோல் ஆடையின் மேல், படம் பொருந்திய 
நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தர். போர் செய்யும் யானை பிளிற, அதன் தோலைத் தன் 
கைவிரல் நகத்தால் உரித்துப் போர்த்தியவர். இப்பதியில் இரவும் பகலும் தேவர்கள் 
போற்றித் துதிக்க உமையம்மையாரோடு எழுந்தருளி அருள் புரிந்து வருகின்றார்.

குறிப்புரை: புலித்தோல் ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக உடுத்து, யானையை உரித்துப் போர்த்து, 
புறவம் பதியாக உமையோடு இருந்தான் என்கின்றது. உரவன் - வன்மை உடையோன். 
Civan, the Lord Hero, clad in tiger skin and over that He binds and tightens it with a snake using it as a corset. He is our preeminent Supreme Lord  who stripped the skin of the trumpeting, exhilarated, and fierce was elephant, by His nail and covered His body with that skin. This Lord Civan is enshrined along with His consort Umaa Devi in Seekaazhi also called as Thiru-p-puravam, where all the celestials arrive here both day and night and worshipping Him. 
Note: The skinning of a wild elephant mentioned here is one of the eight celebrated exploits of Lord Shiva.

பந்தமு டையபூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் 
கந்தமல் குகுழலிகாணக் கரிகாட்டெரியாடி 
- அந்தண் கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி 
எந்தம் பெருமானிமை யோரேத்த உமையோ டிருந்தானே. 3

பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க, 
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரிஆடி, 
அம் தண்கடல் சூழ்ந்த அழகுஆர் புறவம் பதியா அமர்வு எய்தி, 
எம் தம்பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப்பதி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில் மிகுந்த 
பதியாகும். இப்பதியைச் சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இவர், 
உதரபந்தம் என்னும் அணியை அணிந்துள்ள பூதங்கள் பாட, பாதங்களில் சிலம்பு ஒலிக்க, 
மணம் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மை காண, சுடுகாட்டில் எரியேந்தி ஆடுபவர். 
எம்முடைய தலைவரான இவர்; வானோர்கள் போற்றித் துதிக்க உமையம்மையாரோடு 
இப்பதியில் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: பூதம் பாட, சிலம்பொலிக்க, உமை காண இடுகாட்டில் நடமாடி இந்நகரை இடமாகக் 
கொண்டிருந்தான் என்கின்றது. பந்தம் உடைய பூதம் - உதர பந்தம் என்னும் அணியை அணிந்த பூதம். 
கந்தம் - மணம். கரிகாடு - இடுகாடு. அமர்வெய்தி - விரும்பியிருந்து. 
Our Chief Lord Civan dances in the crematory carrying fire in His hand witnessed by Umaa Devi whose mattress diffuse fragrance profusely. His anklets tinkle while the goblin hosts decked with waist bands  sing. He abides in the beauteous Puravam ( another name for Seekaazhi) along with His consort Umaa Devi and graces His devotees, while the celestials come down to this place and adore Him. This delightful Puravam is bordered by the beautiful cool sea.

நினைவார் நினையஇனி யான்பனியார் மலர்தூய்நித்தலுங் 
கனையார் விடையொன் றுடையான் கங்கைதிங் கள்கமழ்கொன்றை 
புனைவார் சடையின்முடி யான்கடல்சூழ் புறவம்பதியாக 
எனையாளு டையானிமையோரேத்த உமையோ டிருந்தானே.

நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்; 
கனை ஆர் விடைஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை, 
புனை வார்சடையின்முடியான்; கடல் சூழ் புறவம் பதிஆக, 
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதி, கடலால் சூழப்பட்டுள்ள பதியாகும். இப்பதியைச் 
சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். தினந்தோறும் குளிர்ந்த மலர்களைத் 
தூவித் தன்னை நினைக்கும் அடியவர்களின் நினைப்பிற்கு இவர் இனியவராக இருப்பவர். 
கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவர். கங்கை, திங்கள், மணம் கமழும் 
கொன்றை ஆகியவற்றை அணிந்தவர். அழகிய நீண்ட சடை முடியை உடையவர். என்னை 
ஆளுபவரான இவ்விறைவர், வானோர்கள் போற்றித் துதிக்க உமையம்மையாரோடு 
இத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: என்னை ஆளாக உடையவன் நினைத்ததற்கினியனாய் விடையேறி, கங்கை முதலியவற்றைச் 
சூடி, புறவம்பதியாக உமையோடு இமையோர் ஏத்த இருந்தான் என்கின்றது. பனியார் மலர் தூய், 
நினைவார் நித்தலும் நினைய இனியான் எனக் கூட்டுக. கனை - ஒலி. 
Lord Civan who has me as His devotee abides in Seekaazhi town called Puravam 
is which bordered by sea. He sweetens the thought of His devotees who adore Him in their minds daily offering cool flowers. He has a bellowing bull as His vehicle to move about. He displays the Ganges river, the moon and the pleasant smelling cassia flowers in His good looking long matted hair. Abiding in Puravam along with Umaa Devi He graces His devotees while the Devaas come down here and worship Him. 
Note: The sprinkling of flowers is done by the devotees when they perform their Aathmaarttha Puja (private worship done in one's house). Gnaanasambandar declares that Lord Civa holds him as His servitor. Our saint, be it known, is hailed as Aaludaiya Pillaiyaar (ஆளுடைய பிள்ளையார்).

செங்கணர வும்நகுவெண் டலையும்முகிழ் வெண்டிங்களுந் 
தங்குசடை யன்விடைய னுடையன்சரி கோவண ஆடை 
பொங்குதி ரைவண்கடல் சூழ்ந்தழகார் புறவம்பதியாக 
எங்கும்பர வியிமையோரேத்த உமையோ டிருந்தானே. 5

செங்கண் அரவும் நகுவெண் தலையும், முகிழ்வெண் திங்களும், 
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை; 
பொங்கு திரை வண்கடல் சூழ்ந்த அழகுஆர் புறவம் பதிஆக, 
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: சிவபிரானுடைய சடை முடியில், சிவந்த கண்களை உடைய பாம்பும், சிரிப்பது 
போல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் 
தங்கியுள்ளன. விடையை ஊர்தியாகக் கொண்டவன். கோவண ஆடையை அணிந்தவன். 
அப்பெருமான் பொங்கி எழும் அலைகளை உடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட 
அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் 
பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்து அருன் பாலிக்கின்றான்.

குறிப்புரை: அரவு முதலியவற்றை அணிந்து விடையேறி, கோவணம் உடுத்தி, இந்நகரை இடமாகக் 
கொண்டு இமையோர் ஏத்த உமையோடு இருந்தான் என்கின்றது. முகிழ் - இளைய. சரி - 
தொங்குகின்ற. திரை - அலை. 
Lord Civan holds in His matted hair, a ruddy eyed snake, a white skull with its mouth open, exhibiting the teeth, which gives an appearance as though the skull is laughing, and a young silvery white crescent moon. He has the bull as His vehicle to move around. He wears a hanging forelap cloth in His loins. This Lord Civan abides along with His consort Umaa in the famed Puravam bordered by swelling and billowing sea, while He was hailed by supernal. 
Note: Kovanam: Forelap cloth worn on one's loins to protect the sexual organ.

பின்னுசடை கள்தாழக்கேழ லெயிறுபிறழப்போய் 
அன்னநடை யார்மனைகள் தோறுமழகாற் பலிதோந்து 
புன்னைமட லின்பொழில்சூழ் ந்தழகார் புறவம்பதியாக 
என்னை யுடையானிமை யோரேத்தஉமை யோடிருந்தானே. 6

பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய், 
அன்னநடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து, 
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதிஆக, 
என்னை உடையான், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதியானது, புன்னை தாமரை முதலியன நிறைந்த 
பொழில்களால் சூழப்பட்ட அழகிய நகராகும். சிவபெருமான், இப்பதியைத் தனது 
இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றார். இவரது முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து 
தொங்குகின்றன. மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் இவரது மார்பில் 
விளங்குகின்றது, அன்னம் போன்ற நடையினை உடைய மகளிரின் இல்லங்கள் தோறும் 
இவர் சென்று மன நிறைவோடு அவர்கள் தரும் பலியை ஏற்கின்றார். என்னை அடிமையாக
உடைய இப்பெருமான், வானோர்கள் துதிக்க இத்தலத்தில் உமையம்மையோடு வீற்றிருந்து 
அருள்புரிகின்றார்.

குறிப்புரை: என்னை உடையான் சடைதாழ, பன்றிக் கொம்பு மார்பில் விளங்க, பெண்கள் மனைதோறும் 
சென்று பிச்சை எடுத்துப் புறவம் பதியாக இருந்தான் என்கின்றது. கேழல் எயிறு - பன்றிப்பல். 
Lord Civan considers me as His own and protects me. The twisted strands of His matted hair are dangling. The garland of hog's tusk conspicuously sways in His chest. He goes to many houses and accepts gladly the alms given by women whose charming walks are like the movement of swan. He abides along with His consort Umaa Devi in the city of Seekaazhi also known as Puravam and graces His devotees. This city is bordered with gardens full of Alexandrian laural trees , fragrant screw pine plants  and such other trees and make the city fertile and attractive. 
Note: Civa, the Mendicant, is an enchanter. His exploits in the Taarukaavanam bear eloquent testimony to this:
St. Maanickavaachakar says that on this advent, "Damsels like unto flowery lianas, forfeited of their Buddhi stood like trees, their senses rapt, and wholly obvious of themselves." - Verse 9, Thiruppaandippathikam.

உண்ணற் கரியநஞ்சை யுண்டொரு தோழந்தேவர் 
விண்ணிற் பொலியஅமு தமளித்தவிடை சேர்கொடியண்ணல் 
பண்ணிற் சிறைவண்ட றைபூஞ்சோலைப் புறவம்பதியாக 
எண்ணிற் சிறந்தஇமை யோரேத்த உமையோடி ருந்தானே. 7

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒருதோழம்தேவர் 
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல், 
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதிஆக, 
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப்பதியில், சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணோடு 
ஒலிக்கும் பூஞ்சோலைகள் மிகுதியாக உள்ளன. இப்பதியைச் சிவபெருமான் தன் 
இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இவர், யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தானே 
உண்டவர். ஒரு தோழம் என்ற எண்ணில் அடங்காத தேவர்கள், விண்ணில் மகிழ்வுடன் வாழ, 
அவர்களுக்கு அமுதை அளித்தவர். விடை எழுதிய கொடியை உடைய தலைவர். 
எண்ணிக்கையில் மிகுந்த வானோர்கள் துதிக்க உமையம்மையாரோடு இப்பதியில் 
வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: நஞ்சை உண்டு முப்பத்துமுக்கோடி தேவர்கட்கு அமுது அளித்து வாழவைத்த அண்ணல் 
இந்நகரை இடமாகக் கொண்டிருந்தான் என்கின்றது. உண்ணற்கரிய - பிறரால் உண்ண முடியாத. ஒரு 
தோழம் தேவர் - ஒரு பேரெண்ணினையுடைய தேவர்கள், தோழம் பேரெண். ஒரு தோழம் தொண்டருளன் 
(திருவாசகம்) விண்ணிற் பொலிய - விண்ணுலகை இடமாகக் கொண்டு போகத்தில் மூழ்கி விளங்க. 
பண்ணில் அறை - பண்ணோடு ஒலிக்கின்ற. எண்ணில் சிறந்த - எண்ணிக்கையில் மிகுந்த. 
Lord Civan distributed Amrita that came out of the sea to innumerable ( Zillion) devaas and made them to live happily forever without death. But He swallowed the poison which no one else can consume. The figure of bull is the insigne of Lord Civan's flag who is noble and merciful. Hailed by countless devaas Lord Civan is entempled in Puravam along with Umaa Devi and graces His devotees. This city is bounded by flower gardens where winged bombinate tunefully. 
Note: The word 'thozham' represents a great unlimited number.
விண்டான திரவியனார் கயிலைவே ரோடெடுத்தான்றன் 
திண்டோ ளுடலுமுடியு நெரியச்சிறி தேயூன்றிய _- 
புண்டா னொழிய அருள்செய் பெருமான் புறவம்பதியாக 
எண்டோ ளுடையானிமை யோரேத்த உமையோடிருந்தானே. 8

விண்தான் அதிர வியனார் கயிலை வேரோடு எடுத்தான்தன் 
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய 
புண் தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதிஆக, 
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

பொருள்: எட்டுத் தோள்களை உடைய சிவபெருமான், புறவம் என்னும் சீகாழிப் பதியைத் 
தனக்குரிய பதியாகக் கொண்டுள்ளார். விண்ணுலகம் அதிரும்படி இராவணன் கயிலை 
மலையை அடியோடு பெயர்த்து எடுக்க முயற்சித்தான். அவனுடைய வலிமையான 
தோள்களும், உடலும் தலையும் நெரியுமாறு, தன் கால்விரலால் சிறிதே ஊன்றினார். 
பின்னர், அவன் தன் செயலுக்கு வருந்தி மன்னித்து அருள வேண்டியதும் அவன் உடலில் 
தோன்றிய புண்கள் நீங்க அவனுக்கு அருள் செய்து வரங்கள் பலவற்றைக் கொடுத்த 
பெருமானாவார். அந்த இறைவர் வானோர்கள் போற்றித் துதிக்க உமையம்மையாரோடு 
வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

குறிப்புரை: இராவணனை நெரித்த புண் நீங்க. அருள் செய்த பெருமான் இவன் என்கின்றது. வியன் 
ஆர் கயிலை - இடமகன்ற கைலை. சிறிதே ஊன்றிய - மிகச் சிறிதாக ஊன்றிய. புண் - உடற்புண்ணும், 
உள்ளப்புண்ணும். எண்தோள் உடையான் - எட்டுத் திக்குகளாகிய தோள்களை உடையவன்.
Raavanan tried to uproot and keep aside mount Kailash, when a great uproar was caused in the sky. The eight shouldered Lord Civan slightly pressed the mountain by His toe, by which Raavanan's mighty shoulders his head and body - all got crushed. Raavanan regretted for his folly and begged pardon. Lord Civan showed compassion and got his bodily wounds cured; He also gave him all boons that he requested. Hailed by Devaas, this Lord Civan is enshrined in Puravam along with Umaa Devi gracing His devotees. 
Note: In this verse, as in all the other verses of this hymn, the abidance of Civa with Umaa is stressed.

நெடியான்நீள் தாமரைமேல யனுநேடிக்காண் கில்லாப் 
படியாமேனி யுடையான் பவளவரை போல்திருமார்பிற் 
பொடியார் கோலமுடையான் கடல்சூழ் புறவம்பதியாக 
இடியார் முழவாரிமை யோரேத்தஉமை யோடி ருந்தானே. 9

நெடியான் நீள் தாமரைமேல் அயனும் நேடிக் காண்கில்லாப் 
படிஆம் மேனிஉடையான், பவளவரை போல்-திருமார்பில் 
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதிஆக, 
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதி, கடல்நீரால் சூழப்பட்டு உள்ளது. இப்பதியில் 
இடியபோன்ற முழக்கத்தை உடைய முழா என்னும் இசைக் கருவி தொடர்ந்து ஒலித்துக் 
கொண்டே இருக்கின்றது. இப்பதியைச் சிவபெருமான் தனது இடமாகக் கொண்டுள்ளார். 
இவர், திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் இவரைத் 
தேடிக் காண இயலாத தன்மை உடைய திருமேனியர். பவள மலை போன்ற 
திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினை உடையவர். இவர் வானோர் போற்றித் துதிக்க 
உமையம்மையோடு இத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரிகன்றார்.

குறிப்புரை: அயனும் மாலும் தேடிக் காண முடியாத திருமேனியை உடையவன், திருநீற்றழகன் இவன் 
என்கின்றது. நெடியான் - திருமால். படியாமேனி உடையான் - அடங்காத அழல் உருவாகிய மேனியை 
உடையவன். பொடி - விபூதி. 
The tall Thirumaal and Brahma seated in the long stalked lotus could not see the divine form of Lord Civan, in spite of their serious search. This comely Civan has smeared the holy ashes in His coral hill like divine chest. Hailed by Devaas this Lord Civan abides along with Umaa Devi in his much desired Puravam (Seekaazhi) and graces His devotees. This city is bordered by sea. The noise of the large loud sounding drum similar to the noise of thunder is always heard in this city.

ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் 
கோலும்மொழி களொழியக்குழு வுந்தழலு மெழில்வானும் 
போலும்வடி வுமுடையான் கடல்சூழ்புற வம்பதியாக 
ஏலும்வகை யாலிமையோரேத்த உமையோடிருந்தானே. 10

ஆலும் மயிலின் பீலி அமணர்; அறிவு இல் சிறுதேரர், 
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும் 
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதிஆக, 
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப்பதி கடல் நீரால் சூழப்பட்டது. இப்பதியைச் 
செவ்வண்ணம் உடைய சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். சமணர்கள் 
ஆடுகின்ற மயிலின் தோகையைத் தங்கள் கையில் ஏந்தி இருக்கின்றார்கள். புத்தர்கள் 
அறிவில் குறைந்தவர்கள். சிவபெருமான், இவர்கள் புனைந்து பேசும் மொழிகளைத் தாழ்ந்து 
போகுமாறு செய்கின்றார். இவர், கூடி எரியும் தீயையும், அழகிய வானமும் போன்ற 
வடிவுடையவர். வானோர்கள் பொருந்தும் வகையால் போற்றித் துதிக்க உமையம்மையோடு 
இத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரிகன்றார்.

குறிப்புரை: புத்தரும் சமணரும் கூறும் மொழிகளைக் கடந்து, விண்ணையும் தீயையும் ஒத்த 
வடிவமுடையவனாக இருப்பவன் இவன் என்கின்றது. கோலும் மொழிகள் ஒழிய - கோலிச் சொல்லும் 
மொழிகள் பிற்பட. குழுவும் - கூடி எரிகின்ற. ஏலும் வகையால் - பொருந்தும் வகை. ஆலும் மயில் - 
உயிர் உள் வழி அடை. 
Lord Civan sets at nothing the exaggerated words. of Samanars, who hold in their hands the feathers of dancing peacocks and those of addle-brained Buddhists. His hue is ruddy similar to the blazing fire and the red sky. Hailed by Devaas in the proper manner, He is enshrined in Puravam along with Umaa Devi and graces His devotees.

பொன்னார் மாடநீடுஞ் செல்வப் புறவம்பதியாக 
மின்னாரி டையாளுமை யாளோடுமிருந்த விமலனைத் 
தன்னார் வஞ்செய்தமிழின் விரகனுரைத்த தமிழ்மாலை 
பன்னாள் பாடியாடப் பிரியார் பரலோகந்தானே. 11

பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதிஆக 
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை, 
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை 
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

பொருள்: புறவம் என்னும் சீகாழிப் பதி, பொன் போன்ற அழகுடைய உயர்ந்த 
மாடவீடுகளைக் கொண்டுள்ளது. செல்வச் செழுமையும் வாய்ந்தது. இங்கு குற்றமற்ற 
இறைவரான சிவபெருமான், மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையாரோடு 
எழுந்தருளி உள்ளார். இந்த இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் 
போற்றிப் பாடினார். இத்தமிழ் மாலையைப் பலநாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் 
பிரியாது உறைவார்கள்.

குறிப்புரை: புறவம்பதியாக இறைவியோடு இருக்கின்ற விமலனை அன்பு செய்து, தமிழாற் சொன்ன 
இப்பாடலைப் பாடியாடுவார் பரலோகம் பிரியார் எனப் பயன் கூறுகிறது. ஆர்வம் - அன்பு. 
Gnaanasambandan - the adept in Tamil language has sung in deep devotion on the immaculate holy Civan who abides in Puravam along with Umaa Devi whose waist is very slender similar to lightning. This opulent city has many tall and good-looking mansions. Those who can sing and dance this garland of Tamil verses for days will eventually reach the upper world and be there for ever. 
Note: Devotion and consistency in the cultivation of our saint's hymns are insisted by our saint.

திருச்சிற்றம்பலம்

74ஆம் பதிகம் முற்றிற்று

உ. 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
75. திருவெங்குரு

திருத்தல வரலாறு: 
முதல் பதிகம் பார்க்க.

திருச்சிற்றம்பலம் 
75. திருவெங்குரு

பண் : தக்கேசி 
ராகம் : காம்போதி

காலைநன் மாமலர்கொண்ட டிபரவிக் 
கை தொழுமாமணியைக் கறுத்தவெங்காலன் 
ஓலமதிடமுன் னுபிரொடுமாள 
வுதைத்தவ னுமையவள் விருப்பனெம்பெருமான் 
மாலைவந் தணுகஓதம் வந்துலவி 
மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி 
வேலைவந் தணையுஞ்சோலை கள்சூழ்ந்த 
வெங் குருமேவியுள் வீற்றிருந்தாரே. 1

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, 
கைதொழு மாமணியைக் கறுத்த வெங்காலன் 
ஓலம்அதுஇட, முன் உயிரொடு மாள 
உதைத்தவன்; உமையவள்விருப்பன்; எம்பெருமான் - 
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, 
மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி, 
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. 

பொருள்: சிவபெருமானின் பக்தனான மார்க்கண்டேயன், வைகறைப் பொழுதில் இறந்ததும் 
நல்லதுமான மலர்களைக் கொண்டு நாள்தோறும் இறைவனின் திருவடிகளில் பரவி 
கைகளால் தொழுபவன். இந்த பக்தனின் உயிரைக் கவர, சினந்து வந்தான் யமன். அந்த 
யமனை, ஓலமிட்டு அலறுமாறு செய்து, தன்முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தவர் 
எம்பெருமானார் சிவபெருமான். இவர் உமையம்மைக்கு விருப்பமானவர். வெங்குரு 
என்னும் சீகாழிப் பதியில் மாலை நேரத்தில் கடல் அலைகள் சுருளாகக் கரையை அணுகி 
சங்கையும் பவளங்களையும் தள்ளிக் கொணர்ந்து வந்து கரையிற் _சேர்க்கும். கரைகளில் 
சோலைகள் வளமாக உன்ளன. இத்தகைய வளம் மிக்க வெங்குருவினுள் சிவபெருமான் 
வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

குறிப்புரை: நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க்கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் 
வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். 
கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் 
கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல் வளம் கூறப்பெற்றது. 
One of the prime devotees of Civan is the bachelor saint Maar-k-kandēyan . Every early morning he goes out to the flower gardens, collects the best of elegant flowers, adorns Lord Civan and worships His holy feet with both his hands. As usual one day Maarkkandēyan was worshipping Civan with both his hands. At this moment, with great anger, the ferocious Yama, the regent of death, approached this young lad of sixteen years Maarkkandēyan, to snatch away his life. Civan kicked Yama with His foot. Lo! Yama yelled and fell down dead in His very presence. 
In the city of Venguru  - another name of Seekaazhi - during evening hours the billowy waves of the sea, carrying chanks and coral beads dash against the shores and even reach the gardens nearby along the coast. In such an affluent city of Venguru, is our Lord Civan deeply loved by His consort Umaa Devi. He kicked Yama to death and showers His grace on His devotees.

பெண்ணினைப் பாகமமர்ந்துசெஞ் சடைமேற் 
பிறையொடு மரவினை யணிந்தழகாகப் 
பண்ணினைப் பாடியாடிமுன் பலிகொள் 
பரமரெம் மடிகளார் பரிசுகள்பேணி 
மண்ணினை மூடிவான்முகடேறி 
மறிதிரை கடல்முகந்தெடுப்ப மற்றுயர்ந்து 
விண்ணள வோங்கிவந்திழி கோயில் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே. 2

பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் 
பிறையொடும் அரவினை அணிந்து, அழகுஆகப் 
பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் 
பரமர் எம் அடிகளார் - பரிசுகள் பேணி, 
மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, 
மறிதிரை கடல் முகந்து எடுப்ப, மற்று உயர்ந்து 
விண் அளவு ஒங்கி வந்து இழி கோயில் 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: சிவபெருமான் உமையம்மையை இடப்பாகத்தே விரும்பி ஏற்கின்றார். செஞ்சடை
மேல் பிறையோடு பாம்பினையும் அணிந்துள்ளார். இனிமையாகப் பண்வகைகளைப் 
பாடியும் ஆடியும் மகளிர் முன் சென்று பலி ஏற்கிறார். பரமராகிய எம் அடிகளார் தன் 
தன்மைகளைப் பேணி வீற்றிருந்தார். ஊழிக்காலத்தில் வான்முகம் மறையுமாறு பொங்கி 
வந்த கடல் அலைகள், விண்ணளாவ வந்து உலகை மூடியது. அந்தக் கடல் வெள்ளத்தில் 
மோது மிதந்தவாறு வான்வரை உயர்ந்து, மீண்டும் நில உலகத்திற்கு தாழ்ந்து இறங்கிய 
கோயில் வெங்குருவாகும். இந்த வெங்குரு என்னும் சீகாழிப் பதியினுள் சிவபெருமான் 
வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: கடல்கொண்ட ஞான்று உயர்ந்தோங்கிய கோயிலில் உமாதேவியை ஒருபாகத்தில் இருத்தி, 
பிறைசூடி, பண்ணைப்பாடி, தன் தன்மைகளைப் பேணி வீற்றிருந்தார் என்கின்றது. அமர்ந்து - விரும்பி, 
பரிசுகள் பேணி - தன் தன்மையவாகிய கருணையைக் காட்டி. கடல் மோதி, ஏறி - முகந்து எடுப்ப, 
உயர்ந்து, ஓங்கி, இழி கோயிலாகிய வெங்குருவில் வீற்றிருந்தார் என முடிக்க. 
Lord Civan concorporates with His consort Umaa Devi on the left part of His body. In His matted hair He wears a snake and a crescent moon. He dances and sings melodiously in different tunes. He is our great Lord who goes to household ladies and accepts the alms they give and bestows His grace, which is His inherent quality. At the time of final deluge the seawater envelops and swallows the whole world. The billowy waves of the sea reach the top of the sky and fall down. In such a condition, the temple in Venguru floated reaching the top of the sky and then came down to the earth and refixed itself. In this temple Lord Civan is enshrined and He bestows His grace on His devotees.

ஓரியல் பில்லாவுரு வமதாகியொண் 
டிறல்வேடன துருவது கொண்டு 
காரிகை காணத்தனஞ் சயன்றன்னைக் 
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான் 
நேரிசை யாகஅறுபத முரன்றுநிரை 
மலர்த்தாது கள்மூச விண்டுதிர்ந்து 
வேரிக ளெங்கும்விம் மியசோலை 
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே. 3

ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, 
ஒண் திறல் வேடனது ௨ரு அது கொண்டு, 
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் 
கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல்செய் பெருமான் - 
நேரிசைஆக அறுபதம் முரன்று, 
நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து, 
வேரிகள் எங்கும் விம்மிய சோலை 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: சிவபெருமான் தன் இயல்பிற்குப் பொருத்தமற்ற எந்த ஒரு உருவத்தையும்
மேற்கொள்ளும் தன்மை உடையவர். தன் இயல்புக்கு மாறாக, மிகுந்த வலிமையுடைய 
வேடர் உருத்தாங்க, உமையம்மை காண, அருச்சுனனோடு ஒரு போலிக் காரணம் காட்டி 
சண்டையிட்டவர். பின்பு, அவனுக்கு வேண்டிய வரங்களை அருளி அன்பு செய்த பெருமான் 
இவர். வண்டுகள் நேரிசைப் பண் போன்ற ஒலிகளை எழுப்பி வரிசையாக மலர்ந்த 
மலர்களின்மேல் புரளுவதால், மகரந்தம் கண்களில் படிந்து, கண்களை மூடச் செய்கின்றன. 
அதனால் மலர்கள் விரிந்து தேனைச் சொரிகின்றன. அப்படிப்பட்ட தேன் எங்கும் 
நிறைந்துள்ள சோலைகள் சூழ்ந்த, வெங்குரு என்னும் சீகாழிப் பதியினுள் சிவபெருமான் 
வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: விசயனைக் கோபித்தது போல் பாவனை செய்து அருளுஞ்செய்த பெருமான் இவர் 
என்கின்றது. ஒர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒரு தன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. 
காரிகை - உமாதேவியார். தனஞ்செயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. 
நேரிசை; ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. 
வேரிகள் - தேன்கள். 
Lord Civan assumed the form of a mighty hunter that did not become Him. Projecting a false protest, He fought against Arjunan in the presence of Umaa Devi and defeated him. Thereafter He showed His real form to Arjunan and bestowed his grace on him and also gave him the invincible war weapon, requested by Arjunan. The city of Venguru is bordered by a large number of lush gardens full of flowers. The humming bees their voice resembling the musical tone called Nerisai - reach all the blossomed flowers one by one and roll on the pollen grains. The pollen dust covers the eyes of the bees. Plenty of honey drips from the flowers all over the garden. In such a fertile town of Thiru-venguru, Lord Civan abides majestically and blesses His devotees.

வண்டணை கொன்றைவன் னியுமத்த 
மருவிய கூவிளமெருக் கொடுமிக்க 
கொண்டணி சடையர்விடை யினா்பூதங் 
கொடு கொட்டிகுட முழாக்கூடியமுழவப் 
பண்டிகழ்வா கப்பாடியொர் வேதம்பயில் 
வர்முன்பாய்புனற் கங்கையைச் சடைமேல் 
வெண்பிறை சூடியுமை யவளோடும் 
வெங்குருமே வியுள்வீற்றிருந்தாரே. 4

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் 
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க 
கொண்டு அணி சடையர்; விடையினர்; பூதம் 
கொடுகொட்டி குடமுழாக் கூடிய, முழவப் - 
பண் திகழ்வு ஆகப் பாடி, ஓர் வேதம் 
பயில்வர் - முன் பாய் புனல் கங்கையைச் சடை மேல் 
வெண்பிறை சூடி, உமையவளோடும் 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், 
எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை 
ஊர்தியரும், பூத கணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் 
விளங்க, ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த 
கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் 
உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்து அடியார்களுக்கு 
அருள் பாலித்து வருகிறார்.

குறிப்புரை: கொன்றை முதலியவற்றை அணிந்த சடையராய், குடமுழா முதலியவற்றைப் பூதங்கள் 
வாசிக்க. இசையோடு வேதத்தைப் பாடுகிறவர் இவர் என்கின்றது. கூவிளம் - வில்வம். கொடுகொட்டி - 
ஒருவகை வாத்தியம். இது இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது. பண்திகழ்வாக - ஒரே ஸ்வரத்தில். 
Lord Civan wears in His matted hair plenty of cassia flowers  swarmed by bees, leaves of Indian mesquit, datura flowers, bael leaves and madar flowers ( Calotropis gigantea). He rides on a bull as His vehicle. He used to sing tunefully in a single mode the peerless Vedas to the accompaniment of His goblin hosts who play many different kinds of drums known as Kodukotti , Kudamuzhaa  and Muzhavam . He keeps in His matted hair the Ganges river that descended from heaven gushing towards Him and also the crescent moon. This Lord Civan is majestically entempled in Thiru-venguru along with Umaa Devi and showers grace on His deovotees.

சடையினர் மேனிநீறதுபூசித் தக்கை 
கொள்பொக் கணமிட்டுடனாகக் 
கடைதொறும் வந்துபலியது கொண்டு 
கண் டவர்மனமவை கவர்ந்தழகாகப் 
படையதுவேந் திப்பங்கயக்கண்ணி 
யுமையவள்பாக முமமர்ந்தருள்செய்து 
விடையொடு பூதஞ்சூழ்தரச் சென்று 
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே. 5

சடையினர், மேனி நீறு அது பூசி, 
தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன்ஆகக் 
கடைதொறும் வந்து பலிஅது கொண்டு, 
கண்டவர் மனம்அவை கவர்ந்து, அழகுஆகப் 
படை அது ஏந்தி, பைங்கயல்கண்ணி 
உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து, 
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: சிவபெருமான் சடைமுடியை உடையவர். திருமேனியில் வெண்ணீறு 
பூசியிருப்பவர். தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள துணி- 
மூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருப்பவர். வீடுகள் தோறும் வந்து பலி 
ஏற்பவர். தம்மைக் கண்ட மகளிர் மனங்களைக் கவர்ந்து செல்பவர். அழகிய மழுப்-
படையைக் கையில் ஏந்தியிருப்பவர். குளிர்ந்த கயல்மீன் போன்ற கண்களை உடைய 
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். விடையில் ஏறி பூதகணங்கள் சூழ வருபவர்.
இவர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியினுள் உமையம்மையாரோடு வீற்றிருந்து 
அருள்புரிகின்றார்.

குறிப்புரை: வீடுகள்தோறும் வந்து பிச்சை ஏற்று, கண்டவர் மனத்தைக் கவர்ந்து உமையவளை 
ஒருபாகத்திருத்தியவர் இவர் என்கின்றது. தக்கைகொள்பொக்கணம் - தக்கை என்னும் வாத்தியத்தை 
வைத்து மறைத்த துணி மூட்டை. இட்டு - புறத்தோளில் தொங்கவிட்டு. 
Lord Civan's hair is matted. He smears His body with holy ashes. He carries a cloth bundle on His shoulders in which He keeps a drum called Thakkai . He holds in one of His hands the battle-axe. Having an attractive appearance and a beautiful look He visits many houses and accepts the alms they give; He captures the minds of the people who face Him. He concorporates His consort Umaa Devi whose eyes are cool and are beautiful as the carp fish. With the intention of showering His grace on devotees, He rides on His bull, followed by His goblin hosts; He reaches Thiru- venguru and is enshrined therein.

கரைபொரு கடலிலதிரை யதுமோதக் 
கங்குலவந்தேறிய சங்கமுமிப்பி 
உரையுடை முத்தமணலி டைவைகி 
ஓங்கு வானிருளறத்துரப்ப வெண்டிசையும் 
புரைமலி வேதம்போற்று பூசுரர்கள் 
புரிந்தவர் நலங்கொளா குதியினில்நிறைந்த 
விரைமலி தூபம்விசும்பினை மறைக்கும் 
வெங் குருமேவியுள் வீற்றிருந்தாரே. 6

கரை பொரு கடலில்-திரை அது மோத, 
கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி 
உரைஉடை முத்தம் மணல் இடை வைகி, 
ஓங்கு வான் இருள் அறத் துரப்ப, எண்திசையும் 
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் 
புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினில் நிறைந்த 
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: வெங்குரு என்னும் சீகாழியில், கடலின் அலைகள் கரையைத் தாக்குவது போல 
வந்து மோதுகின்றன. இரவு நேரத்தில் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் 
முத்துக்களை ஈனுகின்றன. புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணலில் இடைகளில் தங்க, 
உயர்ந்த வானத்தின் இருளை முற்றிலும் நீக்கி ஒளிமயமாக்குகின்றன. எண்திசைகளிலும் 
மெய்ப்பொருள் உணர்ந்து வேதங்களைப் போற்றும் அறவோர்கள் நன்மைகளைத் தரும் 
வேள்விகளைப் புரிகின்றனர். அந்த வேள்வித் தீயில் நெய் விடுவதால் எழுகின்ற மணம் 
மிகுந்த புகை, வானத்தை மறைக்கின்றது. வானம் மறைக்கப்படுகின்ற வெங்குரு என்னும் 
சீகாழிப் பதியினுள் சிவபெருமான் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: கடல் ஓரத்தில் கரையேறிச் சங்குகளும் இப்பிகளும் முத்துக்களை ஈன, அவை இருளை ஓட்ட, 
அந்தணர்கள் செய்யும் யாகப்புகை ஆகாயத்தை மறைக்கின்ற வெங்குரு என்கின்றது. இருளை 
ஒளியாக்குவன சங்கும் சிப்பியும் ஈன்ற முத்துக்கள். ஒளியான விசும்பை மறைப்பன யாகப்புகை என்பது 
கருத்து. பூசுரர் - அந்தணர். புரை - உயர்வு. 
On the seashore of Thiru-venguru the waves of the sea dash against the shores during night hours dropping shanks and pearl shells on the sandy beds. The shells open up and the pearls shed their dazzling light all over. They are so bright that the darkness of the sky disappears. Scholars who are well versed in the Vedas, foster and spread them in all directions of the world. They offer in the sacrificial fire the oblations as prescribed and perform rituals for the good of humanity. The fragrant smoke rising from the sacrificial fire envelops the sky above the Venguru city. In this famed city Lord Civan is enshrined along with Umaa Devi and showers His grace on the devotees.

வல்லிநுண்ணி டையாளுமையவள் தன்னை 
மறுகிட வருமதகளிற்றி னைமயங்க 
ஒல்லையிற்பிடி த்தங்குரித்தவள் வெருவல் 
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிருவாலில் 
நல்லறமுரைத்து ஞானமோ டிருப்ப 
நலிந்திட லுற்றுவந்த வக்கருப்பு 
வில்லியைப் பொடிபடவிழித்தவர் விரும்பி 
வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே.

வல்லிநுண் இடையாள் உமையவள் தன்னை 
மறுகிட வரு மதகளிற்றினை மயங்க 
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் 
கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் 
நல்அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, 
நலிந்திடல்உற்று வந்த அக் கருப்பு- 
வில்லியைப் பொடிபட விழித்தவர்-விரும்பி 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த 
மதயானையை, அது மயங்குமாறு, விரைந்து பிடித்தவர் சிவபெருமான். அந்த யானையின் 
தோலை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவர். விரிந்த பொழிலிடையே அமைந்த 
அழகிய கல் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர் முதலிய நால்வருக்கு நல்
அறங்களை சின் முத்திரையின் மூலமாக உணர்த்திவிட்டு யோக நிலையில் ஞான 
மாத்திரராய் வீற்றிருந்தார். திருமாலும், பிரம்மனும் மன்மதனைக் கடுஞ்சொற்களால் 
கட்டாயப்படுத்த, கரும்பு வில்லை உடைய அவன் சிவபெருமான்மீது மலர்க்கணை விடுத்து 
அவரது யோக நிலையைக் கலைத்தான். அதனால் சிவபெருமானின் கோபத்திற்கு 
ஆளாகினான். சிவபெருமானார் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து . 
பொடியாக்கியவர். இந்தச் சிவபெருமான் வெங்குரு என்னும் சீகாழிப் பதியினுள் விரும்பி 
வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: உமையவள் அஞ்ச, யானையை உரித்து அவள் அச்சத்தைப் போக்கியவரும், ஆலின்கீழ் 
நால்வருக்கு அறம் உரைத்திருந்தபோது வருத்தவந்த மன்மதனை எரித்தவரும் ஆகிய இறைவன் 
இந்நகரில் இருந்தார் என்கின்றது. வல்லி - கொடி. மறுகிட - மயங்க. ஒல்லை - விரைவாக. வெருவுதல் 
- அஞ்சுதல். திருஆல் - கல்லால விருட்சம். நலிந்திடலுற்று - வருந்தி. கருப்பு வில்லி - தரும்பை 
வில்லாக உடைய மன்மதன். 
Umaa Devi, whose waist is as slender as the flexible stem of a vine, got frightened to see a rutting male elephant approaching her. Lord Civan dashed towards the elephant, got hold of it and skinned it thus removed the fear of Umaa Devi. Civan sat down under a stone banyan tree of the extensive grove and imparted the knowledge of spiritual truth (gnosis) to the group of four saints Sanakar, Sananthanar, Sanaathanar and Sanarkumaarar (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்). Thereafter, poised in the spiritual perception, He sat in an upright posture for silent meditation (யோக நிலையில் ஞான மாத்திரராய் வீற்றிருந்தார்). Brahma and Vishnu rebuked Manmathan, the god of love for his inactiveness. Manmathan got distressed over the rebuke and decided to get rather the displeasure of Lord Civan than that of Brahma and Vishnu. As desired by these two demigods, he shot his flower arrow towards Lord Civan and disturbed His meditation. Lord Civan opened His third eye. Lo! Manmathan (also known as Kaaman ) was burnt to death. That Lord Civan, with all eagerness is enshrined in Thiru-venguru.
பாங்கிலா வரக்கன்கயிலை யன்றெடுப்பப் 
பலதலை முடியொடு தோளவைநெரிய 
ஓங்கிய விரலாலூன் றியன்றவற்கே 
ஒளிதிகழ்வாள துகொடுத்தழகாய 
கோங்கொடு செருந்திகூவிள மத்தங் 
கொன்றை யுங்குலாவிய செஞ்சடைச் செல்வார் 
வேங்கை பொன்மலரார் விரைதருகோயில் 
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 8

பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, 
பலதலை முடியொடு தோள்அவை நெரிய, 
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே 
ஒளி திகழ் வாள்அது கொடுத்து, அழகுஆய 
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், 
கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர் - 
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: இராவணன் வீரம் நிறைந்த அரக்கர் குல அரசன். அவன் கயிலை மலையை 
பெயர்த்து எடுத்த போது, அவனது கிரீடங்கள் அணிந்த பத்து தலைகளையும், : . 
தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்தவர் சிவபெருமான். அவன், தன் பிழையை 
உணர்ந்து சாம கானம் பாடிய அளவிலே, ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளை 
வழங்கி அருளியவர். அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்தம் மலர், கொன்றை 
ஆகியன விளங்கும் செஞ்சடைச் செல்வர். இந்தச் சிவபிரானார் வேங்கை மரங்களின்
பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலினுள் 
வீற்றிருந்து அருள் புரிகின்றார். 
குறிப்புரை: இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என்கின்றது. 
Raavanan, the mighty king, due to his vanity, tried to uproot and put aside Mount Kailash, abode of Lord Civan. Civan pressed the mountain with His toe. Raavanan's ten heads and shoulders got crushed. He realised his folly and begged his pardon and sang Saama gaanam. Civan was pleased to hear his song and pardoned him. He also gave him a dazzling divine sword for self-defence. Civan wears in His ruddy matted hair various elegant flowers of red cotton tree (Bambae gossypinum) and panickled golden blossomed pear tree (Ochna squarrosa). Also He wears datura flowers, cassia flowers and Bael leaves and such other things. He is entempled in the shrine of Thiru-venguru where the pleasant aroma of the gold-like flower of East Indian Kino tree (Pterocarpus marsupium) fills the air all around,
ஆறுடைச் சடையெம்மடி களைக்காண 
அரியொடுபிரம னுமளப்பதற்காகிச் 
சேறிடைத் திகழ்வானத் திடைபுக்குஞ்: 
செலவறத்தவிர்ந் தனரெழிலுடைத் திகழ்வெண் 
ணீறுடைக் கோலமேனியர் நெற்றிக் 
கண்ணினர் விண்ணவர் கைதொழுதேத்த 
வேறெமை யாளவிரும்பிய விகிர்தர் 
வெங்குருமேவி யுள்வீற்றிருந்தாரே. 9

ஆறுஉடைச் சடை எம் அடிகளைக் காண 
அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி, 
சேறுஇடை, திகழ் வானத்துஇடை, புக்கும் 
செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்- 
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்- 
கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த, 
வேறுஎமை ஆள விரும்பிய விகிர்தர்- 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: எம் தலைவராகிய சிவபிரானார் கங்கை நதியைச் சடையில் சூடியவர். அழகுடன் 
விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியர். நெற்றிக் கண்ணர். அவரது திருவடியை அளந்து 
காணுதற்கு திருமால் சேற்று நிலத்தை பன்றியாய் அகழ்ந்து சென்றான். திருமுடியைக் 
காணுதற்கு பிரமன் வானத்திற்கு அன்னமாய்ப் பறந்து சென்றான். இருவரும் 
அடிமுடிகளைக் காணாமல் தம் செயலில் அழிந்தனர். தேவர்கள் கைகளால் தொழுது ஏத்த; 
அவர்களை விடுத்து, எம்மைச் சிறப்பாக ஆள விரும்பிய விகிர்தர் இவர். இப்பெருமான் 
வெங்குரு என்னும் சீகாழிப் பதியினுள் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: அயனும் மாலும், விண்ணிலும் மண்ணிலும் தேடச் சென்றும் காணாது போக்கொழிந்தனர். 
அத்தகைய நீறுபூசிய மேனியை உடையவர் இவர் என்கின்றது. சேறு இடைபுக்கும், 
திகழ்வானத்திடைபுக்கும் எனப் பிரித்துக் கூட்டுக. எழில் - அழகு. விண்ணவர் கைதொழுதேத்த எமை 
வேறு ஆள விரும்பிய இறைவன்; என்றது, தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமைகுறித்து 
வணங்குவர். ஆதலால் அவர்க்கு எளிதில் அருள் வழங்காது, எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார் 
என்ற நயப்பொருள் தோன்ற நின்றது. 
Our Lord Civan holds in His matted hair the river Ganges. He has smeared His body with holy ashes. He has a third eye on His forehead. Thirumaal and Brahma desired to explore on Lord Civan. Thirumaal took the form of a hog and burrowed the miry earth; while Brahma took the form of a swan and flew up into the sky. Both failed in their attempts. The celestial gods adore Civan by raising both their hands above their heads. Ignoring even these gods, the pre-eminent Supreme Lord Civan  set His heart lovingly on us bestowing His grace. This Lord Civan is enshrined in Thiru- venguru.

பாடுடைக் குண்டர்சாக்கியர் சமணர் 
பயில் தருமறவுரைவிட்டழகாக 
ஏடுடை மலராள்பொ ருட்டுவன்தக்கன் 
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள்செய்து 
காடிடைக் கடிநாய்கலந்து டன்சூழக் 
கண்டவர் வெருவுறவிளித்து வெய்தாய 
வேடுடைக் கோலம்விரும்பி யவிகிர்தா் 
வெங்குரு மேவியுள்வீற்றிருந்தாரே. 10

பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், 
பயில்தரும் மறஉரை விட்டு, அழகுஆக 
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் 
எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள் செய்து, 
காடுஇடைக் கடி நாய் கலந்து உடன்சூழ, 
கண்டவர் வெருஉற விளித்து, வெய்துஆய 
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் - 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

பொருள்: சமணர்கள் பெருந்தீனி தின்று உடல் பருத்தவர்கள். புத்தர்கள் துன்பத்தை 
தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதுபவர்கள். இவர்கள் கூறும் கருணையற்ற 
வார்த்தைகளை ஏற்காதீர்கள். தாட்சாயணியாகிய உமாதேவி அழகிய இதழ்களோடு கூடிய 
தாமரை மலரைப் போன்றவள். அவளின் பொருட்டு வலிமையுள்ள தக்கன் இயற்றிய 
எல்லை இல்லாத பெரிய வேள்வியை வீரபத்திரரைக் கொண்டு அழிக்கச் செய்தவர். பின்னர் 
தக்கனுக்கு அருள் செய்தவர். காட்டில் காவல்புரியும் கடிநாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் 
அஞ்சவும், வேடவர் பயிலும் சொற்களால் விலங்குகளை அழைத்து வேடுவர் போன்ற 
வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர். இந்த சிவபெருமான் வெங்குரு என்னும் 
சீகாழிப் பதியினுள் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

குறிப்புரை: புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற்பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, 
வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது. பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - 
சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு, ஏடு உடைய 
மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து. 
The Jains and Buddhists proclaim that to bear with patience sufferings in life is the symbol of penance. Ye companions! Do not listen to the merciless advice of these people. On behalf of Dakshaayini (another name of goddess Umaa Devi) who is as charming a lady as petelled lotus flower, Lord Civan instructed Veerabadran  to go and destroy the vast and extraordinary sized sacrificial hall built by the mighty Thakkan . He carried out Civan's command and did a great havoc. Later Civan pardoned and blessed Thakkan. Surrounded by watch dogs of the forest, Lord Civan voluntarily took the form of a fierceful hunter and appeared before Arjunan calling the animals in the hunter's language. This preeminent Supreme Lord Civan is enshrined in Seekaazhi also called Thiru-venguru.

விண்ணியல் விமானம்விரும் பியபெருமான் 
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை 
நண்ணிய நூலன்ஞான சம்பந்தன் 
நவின்றஇவ் வாய்மொழி நலமிகுபத்தும் 
பண்ணியல் பாகப்பத்திமை யாலே 
பாடியு மாடியும்பயில் வல்லார்கள் 
விண்ணவர் விமானங்கொடு வரஏறி 
வியனுல காண்டுவீற்றிருப்பவர்தாமே. 1

விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் 
வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை, 
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் 
நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும் 
பண் இயல்புஆகப் பத்திமையாலே 
பாடியும் ஆடியும் பயில் வல்லார்கள், 
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி 
வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர்தாமே.

பொருள்: சிவபெருமான் வானளாவிய விமானத்தை உடைய கோயிலை விரும்பி, வெங்குரு 
என்னும் சீகாழிப் பதியினுள் வீற்றிருந்து அருள்புரிகின்றார். அறம், பொருள், இன்பம், வீடு 
என்ற உறுதிப் பொருளைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்தவர் ஞானசம்பந்தர். இவர் 
அருளிய இந்த உண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இந்தப் பதிகத்தின் பத்துப்
பாடல்களையும் பண் இசையோடும், பக்திப் பெருக்கோடும், பாடியும், ஆடியும், பிறருக்கு 
சொல்லவும் வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர. அதில் ஏறிச் சென்று அகன்ற 
தேவருலகை அரசாண்டு அதில் வீற்றிருப்பார்.

குறிப்புரை: வெங்குரு மேவிய பெருமானைச் சொன்ன இந்த நலமிகு பத்துப் பாடல்களையும் பத்தியோடு 
பாடியும் ஆடியும் பயில வல்லார், விண்ணவர்கள் விமானங்கொண்டு வர அதில் ஏறிச் சென்று 
விண்ணரசராய் வீற்றிருப்பார் என்கின்றது. விண்ணியல் விமானம் - ஆகாயத்தை அளாவிய விமானம். 
நண்ணிய நூலன் - தானாகவே அடைந்த வேதத்தை உடையவன். வாய்மொழி - உண்மை உரை. 
வியனுலகு - அகன்ற உலகம். 
Gnaanasambandan, well-versed in all the scriptures, has praised in Vedic verses, the Supreme God who likes to abide majestically, under the -vaulting tower of the shrine at Venguru. Those who practise perfectly singing these ten verses in musical tone and dancing in ecstasy, will reach the eternal world, ascending the heavenly car, brought by Devaas and stay there in majestic splendour. 
Note: Our saint announces that his verses are 'Vaimozhi'. The Vedas are known as Vaimozhi in Tamil. A section of Nammāzhwar's verses goes by the name "Thiru-vai-mozhi".

75ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
76. திரு இலம்பையங் கோட்௫ர்

திருத்தல வரலாறு:

தொண்டை நாட்டுத் தலம். கூவத்துக்குத் தென்மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 
சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் - ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. 
இங்கு அரம்பையாதியர் பூசித்துப் பேறு பெற்றனர். அரம்பையங்கோட்டூர் என்பது 
இலம்பையங்கோட்டூர் என மருவியது. இறைவன் சந்திரசேகரர். இறைவி கோடேந்து முலையம்மை. 
தீர்த்தம் சந்திர தீர்த்தம். இத்தலம் திருவிற்கோலத்தினின்றும் தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் 
உள்ளது.

கல்வெட்டு:

பாண்டியன் கோநேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி ஜடாவர்மன் 
சுந்தரபாண்டியன் ஆட்சியில் மணவிற் கோட்டத்தின் பகுதியான கான்றூர் நாட்டில் உள்ள 
இலம்பையங்கோட்டூர் என வழங்கப் பெறும். திரிபுவனச் சக்கரவர்த்தி திரிபுவன வீர தேவனது 
ஆட்சியில் கான்றூர் நாட்டிலுள்ள சதுர்வேதி மங்கலம் இலம்பையங்கோட்டூர் எனவும் வழங்கப் 
பெறும். இறைவன் பெயர் இலம்பையங்கோட்டூர் உடைய நாயனார் என்பது. 
இராஜாதிராஜதேவன் காலத்தில் தேவநாயக சுவாமி கோயில் சிவபாத சேகர மூவேந்த 
வேளாளனால் கட்டப்பட்டு உள்ளது. ஏனையவை விளக்கிற்கு நெல், பொன். ஆடுகள், நிலங்கள் 
முதலியன தானம் கொடுக்கப்பட்டதை அறிவிக்கின்றன.

பதிக வரலாறு:

திருமாற்பேற்றை வணங்கிச் சிவபெருமான் திருவருள் பெற்ற சீகாழிச் செம்மலார், 
திருவல்லம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு பாலாற்றுப் பக்கத்தில் வடகரையில் உள்ள 
தலங்களையும் வணங்கத் திருவுளங்கொண்டு திரு இலம்பையங் கோட்டூரை அடைந்து வணங்கி, 
‘மலையினார் பருப்பதம்’ ௭ன்னும் இப்பதிகத்தைப் பாடியருளினார்கள். 
HISTORY OF THE PLACE 
76. THIRU-ILAM-PAYANG-KOTTOOR

This sacred place is in Thondai Naadu and is 2 km southeast of Koovam. Buses to this place ply from Chennai, Kaanchipuram and Arakkonam. It is 5 km to the southwest of Thiruvirkolam. The name Ilambaiyangkottoor is the corrupted form of Arambaiyangkottoor. 
The name of God, here, is Chandhirasekarar and that of the Goddess is Kodenthu Mulaiyammai. The sacred ford is Chandhira Theerththam. Celestial women such as Arambai and others offered worship here and obtained their wishes. 
Inscriptions here give the history of the change of the name of the larger administrative division of the land with different kings. Note is made of the building of a shrine for Dhevanaayakaswami by one Sivapaadhasekara Moovendha Velalan. Most of the inscriptions pertain to gift of paddy, gold, sheep and land for lamps.

INTRODUCTION TO THE HYMN 
Having hailed Civa at Thirumārperu, our saint proceeded further on his pilgrimage. Having adored the Lord-God at Thiruvallam, he arrived at Thiru-ilam- payang-kottoor and sang the following peerless hymn: 
Note: The main message of this hymn is this. Our saint affirms that his utterances are This is also the affirmation of the Vaishnava saint 
not, but Civas. 
Nammaazhwar. 
c.f. (i) "My radiant one, the first one, 
My Lord, sings of himself, 
Through me, in sweet Tamil"
Thiruvaimozhi, 7-9-1.
(ii) "He makes my words, the sweet words I say, 
seem as if they were mine; 
(but) the wondrous one praises himself 
through his own words" 
Ibid, 7-9-2.

(iii) "Would I forget any day 
the father who, through my mouth, 
spoke about himself, 
to the foremost, pure devotees 
in fine sweet verse?" 
Ibid, 7-9-3.

(iv) "Will I ever forget my father, 
who became me and speaks of himself in faultless verse?" 
Ibid, 7-9-4.

(v) "Making me one with Him, 
the great one sang about Himself, through one, 
sweet verses that this earth celebrates" 
Ibid, 7-9-5. 
The above translation is by John Carman and Vasudha Narayanan.
திருச்சிற்றம்பலம்

76. திருஇலம்பையங்கோட்டூர்.

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு 
மாசிலாச்சீர் மறைக்காடு நெய்த்தானம் 
நிலையினா னெனதுரைதன துரையாக 
நீறணிந்தேறு கந்தேறியநிமலன் 
கலையினார் மடப்பிணைதுணை யொடுந்துயிலக் 
கானலம்பெடை புல்கிக்கண மயிலாலும் 
இலையினார் பைம்பொழிலிலம் பையங்கோட்டூ 
ரிருக்கையாப்பேணி யென்னெழில்கொள்வதியல்பே. 1

மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு 
மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த்தானம், 
நிலையினான், எனது உரை தனது உரைஆக, 
நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் - 
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, 
கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும் 
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமான் கயிலாய மலையைத் தனது இடமாகக் கொண்டு உறையும் 
இறைவன் ஆவார். சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, 
நெய்த்தானம் ஆகிய தலங்களிலும் நிலையாக எழுந்தருளி இருப்பவர். தனது உரைகளை 
எனது உரையாக வெளிப்படுத்தி அருள்புரிபவர். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு 
ஏறிவரும் நிமலன் இவர். ஆண் மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்கின்றன. 
சோலைகளில் கூட்டமாக வாழும் ஆண் மயில்கள் தங்கள் தங்கள் பெடைகளைத் தழுவி
களிப்புறுகின்றன. அழகிய இலைகள் நிறைந்த பசுமையான பொழில்கள் சூழ்ந்த, 
இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கொண்டு உன்ளார். இந்தத் 
தகுதிகளை உடையவர், என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை மட்டும் 
கவர்ந்து செல்வது இவருக்கு :இயல்பாகுமா? (பிரிவினால் வருந்தும் தலைவியின் நிலையை 
அநுபவித்துக் கூறுகின்றார்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையவர்கள்).

குறிப்புரை: சீபருப்பதம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனாகிய சிவன், என்னுடைய உரைகள் 
எல்லாவற்றையும் தனது வாக்காகக் கொண்ட விடையேறிய விமலன் ஆவார். இவர் 
இலம்பையங்கோட்டூரை இடமாகக் கொண்டு என்னலங்கொள்வதழகா? என்று பிரிவினால் வருந்தும் 
தலைவியின் நிலையை அநுபவித்துப் பேசுகின்றார்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையார். துருத்தி - 
திருத்துருத்தி, திருப்பூந்துருத்தி முதலிய தலங்கள். மாசிலாச்சீர் மறைக்காடு என்றது வேதத்தால் வழிபடப் 
பெற்றமையானும், கதவந்திறக்கவும் அடைக்கவுமாகப் பாடல் பெற்ற சிறப்புடைமையானும் இவ்வடைமொழி 
வந்தது. நிலையினான் - பிரியாதே பெயராதே உறைபவன். நித்யவாஸம் செய்பவன் என்பர் வடநூலார். 
'எனதுரை தனதுரையாகன' ஆன்ம போதங்கழன்று, சிவபோதத்தில் நிற்பார் சொல்லுவனயாவும் 
சிவத்துரையேயாதலின் இங்ஙனம் கூறினார். கலையின் ஆர் மடப்பிணை - கலைமானோடுகூடிய இளைய 
பெண்மான். துணையொடு - தன் துணையாகிய முற்கூறிய ஆண்மானோடு. கானல் - சோலை. 
கணமயில் - கூட்டமாகிய ஆண் மயில். ஆலும் - அகவும். இருக்கை - இருப்பிடம். என் எழில் கொள்வது 
இயல்பே - என்னழகைக் கவர்வது இத்தகையீர்க்கு இயல்பாமோ என்றாள். மயிலும், மானும் 
துணையொடும் பேடையோடும் வதிய, நீர்மட்டும் தனித்திருந்து, காதலித்த அடியாளையும் தனித்திருக்கச் 
செய்து, அழகைக் கவர்வது அழகா? என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடையறாமல் 
இருத்தலாகிய அத்துவித பாவனையிற் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்துண்டாகிய 
சிவானந்தாநுபவத்தாலுண்டான ஒளி குறைய, அதனை எண்ணி, ஆன்ம நாயகியை வந்தேற்றுக் கொண்ட 
தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருளும் 
தோன்றுதல் காண்க. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்கட்கும் கொள்க. 
Lord Civan's abode is mount Kailash. However, He also abides in many other shrines such as Parup-patham , Thuruth-thi , Maar-pēru  flawless and glorious Marai-k-kaadu and Neith-thaanam. He blesses all my recitation as though they have been His own revelations. He has smeared His body with holy ashes. He that is pure the Supreme Being  happily rides on His mount Bull and moves about. The Lord of this nature is enshrined in Thiru-ilam-payang-kottoor which is surrounded by lush gardens full of green foliage. Here in these gardens male deer, sleep with their younger female ones; a good number of peacocks hug their peahens and roam about making their peculiar crying noise joyously. Is it proper course of conduct for such a good natured person to snatch away my beauty and virtue? (Note the Sanmargam concept of 'Lord and His Consort').

திருமலர்க் கொன்றையான் நின்றியூர்மேயான் 
தேவர்கள்தலை மகன்திருக்கழிப்பாலை 
நிருமலனெ னதுரைதனது ரையாக 
நீறணிந் தேறுகந்தேறிய நிமலன் 
கருமலர்க் கமழ்சுனைநீள் மலர்க்குவளை 
கதிர்முலையிளை யவர்மதிமுகத்துலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூ 
ரிருக்கை யாப்பேணி யென்னெழில் கொள்வதியல்பே. 2

திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், 
தேவர்கள் தலைமகன், திருக் கழிப்பாலை 
நிருமலன், எனது உரை தனது! உரைஆக, 
நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் - 
கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை 
கதிர் முலை இளையவர் மதிமுகத்து உலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமானார் அழகிய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். திருநின்றியூரில் 
எழுந்தருளி இருப்பவர். தேவர்களுக்குத் தலைவன் ஆவார். திருக்கழிப்பாலையில்
குற்றமற்றவனாக உறைபவர். திருஞானசம்பந்தர் தன்னுடைய உரைகளை சிவனது 
உரைகளாகக் கூறுபவர். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன் 
ஆவார். பெரிய தாமரை மலர்களால், சுனைகளில் மணம் நிரம்பியிருக்கின்றது. நீண்ட 
குவளை மலர்கள் பூத்திருக்கின்றன. இந்த மலர்கள் இளம் பெண்களின் மதிபோன்ற 
முகத்தில் உலாவும் குளிர்ச்சியான இரு கண்களுக்கு நிகராக இருக்கின்றன. இத்தகைய 
அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். 
இந்தத் தகுதிகளை உடையவர்க்கு என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் 
அழகை மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா? 
குறிப்புரை: இதுவும் அதுபோலத் தலைவி கூற்று. திருமலர் என்றது மற்றைய மலர்கட்கு இல்லாத 
பிரணவ வடிவம் இதற்கு இருத்தலின். கருமலர் - கருநெய்தற்பூ குவளை இளையவர் மதிமுகத்துலவும் - 
குவளை போன்ற கண்கள் முழுமதிபோன்ற முகத்து உலாவுகின்றன என்பதாம். கதிர்முலை - வளர்முலை. 
இருமலர் - பெரிய மலர் போன்ற கண்கள். 
Lord Civan wears the divine garland of cassia flowers. He abides in Thiru- nintri-oor. He is the Supreme Head of Devaas. He is the God of Faultless Perfection free from any blemishes . He abides in Thiru-k-kali-p-paalai . He blesses all my recitation as though they have been His own revelations. He who is pure the Supreme Being adorns Himself with holy ashes and happily mounts on His bull, and moves about. This Lord Civan abides in Thiru-ilam-payang-kottoor that is rich in pools full of fragrant lotus flowers. Alongside the lotus flowers the long Indian water lily flowers also thrive (dark blue in colour). These flowers resemble the great flower like eyes of young girls, having growing breasts, and whose eyes roll in their moon-like visages. Is it proper course of conduct for such a person to snatch away my comeliness?

பாலனாம் விருத்தனாம்பசுபதி தானாம் 
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க்கருளும் 
காலனா மெனதுரைதன துரையாகக் _ 
கனலெரி யங்கை யிலேந்தியகடவுள் 
நீலமா மலா்ச்சுனை வண்டுபண்செய்ய 
நீர் மலர்க்குவளை கள்தாதுவிண்டோங்கும் 
ஏலநா றும்பொழிலி லம்பையங்கோட்டூ 
ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே. 3

பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், 
பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் 
காலன் ஆம், எனது உரை தனது உரைஆக, 
கனல் எரிஅங்கையில் ஏந்திய கடவுள் - 
நீலமாமலர்ச் சுனை வண்டு பண்செய்ய 
நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும் 
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமானார் பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் 
பெயர் பெறுபவர். முன்னொரு காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து, 
மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலனார். எனது உரைகளை, தனது உரைகளாக 
வெளிப்படுத்தி அருளுபவர். எரிகின்ற தயைத் தனது கையில் ஏந்திய கடவுளாவார். நீலநிறம் 
கொண்ட சிறந்த மலர்கள் சுனையில் பூத்திருக்கன்றன. அந்த பூக்களின்மேல் சென்று
வண்டுகள் பாடுகின்றன. நீரில் பூக்கும் குவளை மலர்களில் மகரந்தம் விண்ணில்
பறந்துசென்று மணம் பரப்புகின்றது. பொழில்களில் ஏலக்காயின் மணம் நிறைந்துள்ளது. 
இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமானார் தனது இருப்பிடமாகக் 
கொண்டுள்ளார். இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் 
செல்லாமல் என் அழகை மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: பாலன், விருத்தன், பசுபதி, காலகாலன், அனலேந்தி எல்லாமவன்; அவன் என் எழில் 
கொள்வதியல்பே என்கின்றது வழிபடும் அடியார்கள் பரிபக்குவத்திற்கு ஏற்ப இத்தகைய வடிவங்களைத் 
தான் விரும்பியவாறு பெறுகின்றான் என்பதாம். வண்டுபாடக் குவளைகள் மலர்ந்து ஏல முதலியன நாறும் 
பொழில்சூழ் கோட்டூர் என்றது, தலைவியின் பிரிவாற்றாமையில் இருக்கும் சாதனங்கள் நிரம்பியுள்ளமை 
குறித்தவாறு. 
Lord Civan is known as 'Pasu Pathi', i.e., Lord (god head) of all souls. Such a great person takes the form of an infant as well as the form of an old man according to the needs of the time. During the days of long time past, He kicked the regent of "the death god" known as Kaalan and graced His devotee Maarkkandēyan. Thereby He came to be known as Kaala-kaalan. He benedicts all my recitation as though they have been His own revelations. He is the god who holds fire in His palm. This Lord Civan is enshrined in Thiru-ilam-payang-kottoor. In the pools of this place blue flowers blossom over in which bees hum their tune. The blue Indian water lily flowers blossom and spill the pollen grains causing a pleasant fragrance all around. The air in the gardens of this place carries the fragrance of cardamom that grows in plenty there. Is it proper course of conduct for Lord Civan who is entempled in such an elegant place, to snatch away my comeliness, when I had been to His temple to worship Him?

உளங்கொள் வாருச்சியார் கச்சியேகம்பன் 
ஒற்றியூருறையு மண்ணாமலை யண்ணல் 
விளம்புவா னெனதுரைதனது ரையாக 
வெள்ள நீர்விரிசடைத் தாங்கிய விமலன் 
குளம்புறக் கலைதுளமலை களுஞ்சிலம்பக் 
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள 
இளம்பிறை தவழ்பொழிலிலம் பையங்கோட்டூ 
ரிருக்கையாப்பேணி யென்னெழில்கொள் வதியல்பே. 4

உளம்கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், 
ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல், 
விளம்புவான் எனது உரை தனது உரைஆக, 
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் - 
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, 
கொழுங்கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள, 
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: கச்சியேகம்பனான சிவபெருமானைத் தனது உள்ளத்தில் தியானிப்பவர்களின் 
தலைஉச்சியில் சிவபெருமான் வீற்றிருப்பவர். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய 
திருத்தலங்களில் விளங்கும் தலைவர் இவர். தன்னுடைய உரைகளை என்னுடைய 
உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடையில் 
தாங்கிய விமலன் இவர். இவர் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் 
கொண்டவர். இவ்வூரில் கலைமான்களின் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை 
அழுத்தித் துள்ளுகின்றன. மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிர் 
ஒலிக்கின்றன. வளமையான கொடிகள் வில்வ மரங்கள் முழுவதும் படர்ந்து 
பரவியிருக்கின்றன. இளம் பிறையை பிரதிபலிக்கும் குளங்கள் சூழ்ந்திருக்கின்றன. 
இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமானார் தனது இருப்பிடமாகக் 
கொண்டுள்ளார். இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் 
செல்லாமல் என் அழகை மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: தியானிப்பவர்களின் உச்சியில் உள்ள சகஸ்ர கமலத்தில் இருப்பவன் என்பது முதல் கங்கை 
தாங்கிய விமலன் என்பது வரை கூறப்பெற்ற சிறப்பியல்புடையவன் இவன் என்று கூறி, இத்தகையவன் 
என் எழில் கொள்ளலாமா என்கின்றாள். உளங்கொள்வார் - தியானிப்பவர். கலை குளம்பு உறத்துள - 
கலைமான் குளம்பு பதியத்துள்ள, சிலம்ப - ஒலிக்க. கூவிளங் கொள்ள - வில்வமரத்தின்மேல் படிய. 
Lord Civan also known as 'Katchi-Ēkamban' comes in view with radiance above the head of His devotees who contemplate on Him in their minds with dedication. He is the merciful god who abides also in the temples in 'Otrioor  and in 'Thiru-annaamalai' . He benedicts all my recitation as though they have been His own revelations. He is immaculate  and holds the river Ganges in His spreading matted hair. He is enshrined in Thiru-ilam-payang-kottoor, where stags well press the earth by their hoofs while jumping and running; the mountains reverberate with the sounds arising there; the luxuriant vines wind round the entire bael trees growing in the groves. The thick vegetation encircling this town, is full of tall trees which brush the sky where the young moon crawls. Lord Civan who is enshrined in such a lovely city snatched away my comeliness when I went to His temple to worship Him. Is it proper course of conduct for His status?

தேனுமா யமுதுமாய்த்தெய் வமுந்தானாய்த் 
தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில் 
வானுமா மெனதுரைதன துரையாக 
வரியரா அரைக்கசைத் துழிதருமைந்தன் 
கானமான் வெருவுறக்கரு விரலூகங் 
கடுவனோடு களுமூர்கற் கடுஞ்சாரல் 
ஏனமா னுழிதருமிலம் பையங்கோட்டூரி 
ருக்கையாப்பேணி யென்னெழில்கொள் வதியல்பே. 5

தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான்ஆய்த் 
தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் 
வானும் ஆம் எனது உரை தனது உரைஆக, 
வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் - 
கானமான் வெருஉறக் கருவிரல்ஊகம் 
கடுவனோடு உகளும் ஊர் கல்கடுஞ்சாரல் 
ஏனம் ஆன் உழி தரும் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமானார் தேனைப் போலவும் அமுதைப் போலவும் இனிமையானவர். 
தெய்வம் தானே ஆனவர். தீ, நீர், வாயு, வான், மண் ஆகிய ஐம்பூத வடிவினர். தன்னுடைய 
உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர். வரிகளை உடலில் 
கொண்ட பாம்பைத் தனது இடையிலே கட்டிக் கொண்டு திரிபவர். காடுகளில் உள்ள 
மான்கள் அஞ்சும்படி, கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்குகள் ஆண் 
குரங்குகளோடு குதிக்கன்றன. பாறைகளைக் கொண்ட கடுமையான மலைச்சாரலில் 
பன்றிகளும், காட்டுப் பசுக்களும் திரிகின்றன. இத்தகைய சிறப்புள்ள அழகிய 
இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமானார் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இந்தத் 
தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை மட்டும் 
கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: தேன் முதலிய இனிய பொருள்களாய், ஐம்பூதமாய், அராப்பூண்டு அலையும் மைந்தன் என் 
அழகைக் கொள்வது இயல்பாகுமா என்கிறாள். தேன், இதயத்திற்கு வலிவூட்டி உடல் வளர்க்கும் இனித்த 
மருந்தாவது. அமுதம், அழியாமை நல்கும் மருந்து. இவையிரண்டும் எடுத்த பிறவிக்கு மட்டுமே இன்பம் 
அளிப்பன. தெய்வம் எடுத்த எடுக்கப் போகின்ற: பிறவிகட்கும், பிறவியற்ற பேரின்ப நிலைக்கும் இன்பம் 
அளிப்பது ஆதலால் தேனுமாய், அமுதமுமாய் என்றருளிய பிள்ளையார் அடுத்து தெய்வ முந்தானாய் 
என்கிறார்கள். தீயொடு . . . வானுமாம் என்றதால் பூமி யொழிந்த ஏனைய நாற்பூதங்களைக் 
குறித்தார்கள். பாரிசேடத்தால் பூமியும் கொள்க. கானமான் வெருவுற - காட்டு மான் அஞ்ச. கருவிரல் 
ஊகம் - கரிய விரலை உடைய பெண் குரங்கு. கடுவன் - ஆண்குரங்கு உகளும் - தாவும். ஏனம் ஆன் 
உழிதரும் - பன்றியும் காட்டுப்பசுவும் திரியும். 
Lord Civan is Supreme by Himself. He gives happiness to the souls similar to honey and elixir to the body. He is the five elements such as fire, water, earth, air and space. He benedicts all my recitations as though they have been His own revelation. He ties round His waist the striped snake and roams all around. He is also enshrined in Thiru-ilam-payang-kottoor encircled by thick forests. Here the dreadful black fingered female monkeys are jumping and playing with their male counterparts causing a fearful scene to the deer gracing nearby. In the hard rocky mountain slopes hogs and jungle cows roam at will. Lord Civan, who is enshrined in such a lush city snatched away my comeliness while I had been to His place to offer worship to Him. Is it a proper course of conduct for His status to indulge in such an act?
மனமுலா மடியவர்க்கருள் புரிகின்ற 
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர் 
தனமிலா னெனதுரைதன துரையாகத் 
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன் 
புனமெலா மருவிகளிருவி சேர்முத்தம் 
பொன்னொடுமணி கொழித்தீண்டி வந்தெங்கும் 
இனவெலா மடைகரை இலம்பையங் கோட்டூ 
ரிருக்கை யாப்பேணியென் னெழில்கொள் வதியல்பே. 6

மனம் உலாம் அடியவர்க்கு அருள்புரிகின்ற 
வகைஅலால் பலி திரிந்து உண்பு இலான், மற்று ஓர் 
தனம்இலான் எனது உரை தனது உரைஆக, 
தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன் - 
புனம்எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் 
பொன்னொடு மணி கொழித்து, ஈண்டி வந்து எங்கும் 
இனம்எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமானைத் தங்கள் மனங்களில் உலாவச் செய்கின்ற அடியவர்களுக்கு
அருள்புரிபவர். அடியவர்களுக்கு அருள்புரியும் பொருட்டே பலியேற்றுத் திரிபவர். தான் 
உண்ணும் பொருட்டு பலி ஏற்காதவர். வீடு பேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் 
இல்லாதவர். தள்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர். 
தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம்பிறையைத் தாங்கியுள்ள தலைவர். தினைப்புனங்களில் 
அருவிகள் பாய்ந்து வருகின்றன. அந்த அருவிகளில் அரிந்த தினைத்தாள்களில் 
முத்துக்களும், பொன்னும், மணியும் ஒதுங்குகின்றன. இவைகள் வயல்களில் கரையெங்கும் 
சேர்கின்றன. இத்தகைய வளமையான அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமானார் 
தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் 
தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு 
இயல்பாகுமா?

குறிப்புரை: மனத்தின்கண் இறைவனை உலாவச் செய்கின்ற அடியவர்க்கு அருளும் வகையன்றி, 
பிச்சையேற்றுத் தான் உண்ணாதவன்; வேறு செல்வமில்லாதவன்; என்னுரையைத் தன்னுரையாகக் 
கொண்டு, பிறைமதி தாங்கிய சடையன்; இத்தகைய இறைவன் இந்த நகரை இருக்கையாகக் கொண்டு 
என் எழில் கொள்ளுவது இயல்பா என்கின்றாள். மனம் உலாம் அடியவர் - இறைவனிடம் மனத்தை 
உலாவச் செய்கின்ற அடியார்கள். பலி - பிச்சை. இறைவன் தான் பலி ஏற்பதும் தன் பொருட்டன்று 
அடியார்க்காகவே என்பதாம். இருவி - தினை கொய்த்தாள். இனம் எலாம் - இடமாகிய இடங்களில் 
எல்லாம். 
Lord Civan goes around begging alms not for the sake of consuming them; but for the sake of gracing His devotees who always contemplate in their minds paying obeisance mentally with sincere dedication. He has no visible assets other than His grace and the final beatitude in absorption of the souls. He benedicts all my recitations as though they have been His own revelations. He is the Lord Chief who bears in His dangling matted hair the young moon. Such a Supreme Personality is entempled in Thiru-ilam-payang-kottoor rich in millet fields. The rainwater coming from the mountain falls, flows through the fields carrying the millet foliage in which pearls, gold and other gems are embedded. These are shored up all over the ridges of the millet fields. This Lord Civan snatched away my comeliness when I went to worship Him. Is it a proper course of conduct for His status?

நீருளான் தீயுளானந்த ரத்துள்ளான் 
நினைப்பவர்மனத் துளான்நித்தமா ஏத்தும் 
ஊருளா னெனதுரை தனதுரையாக 
ஒற்றைவெள்ளே றுகந்தேறிய வொருவன் 
பாருளார் பாடலோ டாடலறாத 
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும் 
ஏருளார் பைம்பொழிலி லம்பையங்கோட்டூ 
ரிருக்கையாப்பேணி யென்னெழில் கொள்வதியல்பே. 7

நீர்உளான், தீஉளான், அந்தரத்து உள்ளான், 
நினைப்பவர் மனத்து உளான், நித்தமா ஏத்தும் 
ஊர் உளான், எனது உரை தனது உரைஆக, 
ஒற்றை வெள்ஏறு உகந்து ஏறிய ஒருவன் - 
பார்உளார் பாடலோடு ஆடல் அறாத 
பண் முரன்று அஞ்சிறை வண்டுஇனம் பாடும் 
ஏர்உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமான் நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவர். தன்னை நினைப்பவர் 
மனத்தில் உறைபவர். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களைத் தனது 
இடமாகக் கொண்டவர். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி 
அருளுபவர். தனித்த ஒரு வெள்ளேற்றில் விரும்பி ஏறி வருபவர். அத்தகையோன் மண்ணக 
மக்களின் பாடல்களும் ஆடல்களும் இடைவிடாது நிகழுகின்ற இலம்பையங்கோட்டூரைத் 
தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளவர். இங்கு அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் 
பண்ணிசை போல ஒலிசெய்து பாடுகின்றன. அழகிய பொழில்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் 
தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை மட்டும் 
கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: நீர், தீ, ஆகாயம், நினைப்பவர் மனம், ஊர் இவை இறைவன் வசிக்கும் இடங்கள். 
இங்கெல்லாம் உள்ளவன் விடையேறி இவ்வூரை இருக்கையாக்கொண்டு என் எழில் கொள்வது இயல்பா, 
என்கின்றாள், அந்தரம் - ஆகாயம். நித்தமா ஏத்தும் - நித்திய வழிபாடு செய்யும் மண்ணவர் பாட்டும் 
ஆட்டும் இடையறாத பொழில். முரன்று வண்டினம் பாடும் பொழில் எனக் கூட்டுக. 
Lord Civan is in water, fire and in the sky. He also abides in the minds of those devotees who contemplate on Him. He dwells in the shrines where His devotees gather and adore Him daily. He benedicts all my recitation as though they have been His own revelations. He rides in joy on a white and peerless bull. Such a person is entempled in Thiru-ilam-payang-kottoor where all earthlings sing and dance continuously. In the lush fields here beautiful winged bees hum their tunes. This Lord Civan snatched away my comeliness when I went to His temple to worship Him. Is it proper course of conduct for His status?
வேருலா மாழ்கடல்வரு திரையிலங்கை 
வேந்தனதடக்கை களடர்த்தவனுலகில் 
ஆருலா மெனதுரைதனது ரையாக 
ஆகமோரா வணிந்துழி தருமண்ணல் 
வாருலா நல்லனமாக்களுஞ் சார 
வாரணமுழி தருமல்லலங்கானல் 
ஏருலாம் பொழிலணிஇலம்பை யங்கோட்டூ 
ரிருக்கை யாப்பேணியென் னெழில்கொள் வதியல்பே. 8

வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை 
வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில் 
ஆர் உலாம் எனது உரை தனது உரைஆக, 
ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் - 
வார் உலாம் நல்லன மாக்களும் சார, 
வாரணம் உழி தரும் மல்லல் அம் கானல், 
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சிவபெருமான், பூமியின் அடிவரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் 
தவழ்கின்ற இலங்கை வேந்தனான இராவணனின் இருபது கைகளையும் நெரித்தவன். 
உலகில் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக 
வெளிப்படுத்தி அருளுபவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து 
திரியும் தலைவன். இலம்யையங்கோட்டூர் காடுகளில், கழுத்தில் வார்கள் கட்டப்பட்டுள்ள 
நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரிகின்றன. இத்தகைய அழகிய பொழில்கள் 
சூழ்ந்துள்ள இலம்பையங் கோட்டூரைச் சிவபெருமான் தனது இடமாகக் கொண்டுள்ளார்.
இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை 
மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: இராவணனை அடர்த்தவன். இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து 
திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக் கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறாள். வேர் உலாம் 
- பூமியின் அடிவரை உலாவுகின்ற. ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு வாரணம் - யானை. 
மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள். 
Lord Civan crushed the twenty long arms of Raavanan, the king of Sri Lanka upon the sea, the waters of which reach the utmost bottom of the earth. He benedicts all my recitations as though they have been His own revelations. He is the Lord Master who goes about decked with a great snake over His chest. He is enshrined in Thiru- ilam-payang-kottoor, which is rich in lush gardens and luxurious forests, where leather collared and domesticated animals and elephants roam about. This Lord Civan snatched away my comeliness when I went to worship Him. Is it proper course of conduct for His status? 
Note: He owns my utterances that pervade everywhere as His own: 
c.f. Nammäzhwar 
"Making me one with him, 
the great one sang about himself, through me, 
sweet verses that this earth celebrates" 
Thiruvaimozhi 7-9-5.

கிளர்மழை தாங்கினான் நான்முகமுடை யோன் 
கீழடிமேல்முடி தேர்ந்தளக்கில்லா 
உளமழை யெனதுரைதன துரையாக 
வொள்ளழலங்கை யிலேந்திய வொருவன் 
வளமழை யெனக்கழை வளர்துளிசோர 
மாசுணமுழிதரு மணியணிமாலை 
இளமழை தவழ்பொழிலிலம்பை யங்கோட்டூ 
ரிருக்கை யாப்பேணியென்னெழில் கொள்வதியல்பே. 9

கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், 
கீழ்அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா, 
உளம் அழை எனது உரை தனது உரைஆக, 
ஒள்அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் - 
வள மழை எனக் கழை வளர் துளி சோர, 
மாசுணம் உழி தரு மணி அணி மாலை, 
இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: இந்திரன் ஆயர்பாடியை அழிக்க மழையை ஏவினான். திருமால் கோவர்த்தனம் 
என்னும் மலையைக் குடையாகத் தூக்கி மழையைத் தடுத்தான். இந்தத் திருமாலும்
நான்முகனும் தனது அடிமுடியை அளந்து அறியமுடியாதபடி அழல் உருவாக ஓங்கி 
நின்றவர் சிவபெருமான். மனத்தால் அழைத்தற்கு உரியவராக அமைந்த சிவபெருமான் 
எனது உரைகளை தனது உரைகளாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி 
பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். வளமான மூங்கில் இலைமேல் மழையைப் 
போல பனிநீர் விழுகின்றது. மலைப் பாம்புகள் ஊர்ந்து வருகின்றன. அழகிய மணிகள்
மாலைபோல நிறைந்து தோன்றுகின்றன. மேகக் கூட்டங்கள் தவழ்ந்து வருகின்ற 
பொழில்கள் சூழ்ந்துள்ளன. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமான் 
தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் 
தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு 
இயல்பாகுமா?

குறிப்புரை: மாலும் அயனும் அடிமுடியறியப் பெறாத அழலேந்திய ஒருவன். இவ்வூரை இருக்கையாகக் 
கொண்டு. இவ்வண்ணம் செய்வதா? என்கின்றாள். கிளர்மழை தாங்கினான் - இந்திரனால் ஏவப்பட்ட 
மழையைக் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கித் தடுத்தவனாகிய திருமால். உளம் அழை - 
மனத்தால் அழைக்கின்ற. மழையைப் போல் மூங்கிலிலைமேல் துளிவிழ. மலைப்பாம்பு திரிகின்ற கோட்டூர் 
என்க. மாசுணம் - மலைப்பாம்பு 
The place where live the cowherd community is called 'Aayar Paadi' ; Indira, the king of devaas and lord of clouds, rain, seasons, crops etc., wanted to destroy the 'Aayar Paadi'. He, therefore, commanded the rain bearing clouds to move and destroy the place. Lord Krishna (One of the incarnations of Thirumaal) prevented the torrential cloud burst falling on this place by holding the mountain called 'Kōvardanam'  as an umbrella and protected the entire place. Such a mighty Thirumaal as well the four-headed Brahma tried hard to reach the holy feet and head of Lord Civan in vain, where Lord Civan stood straight as a tall and big column of flame. He benedicts all my recitations as though they have been His own revelations. He is the unique one who holds the blazing fire in one of His palms. He is entempled in Thiru-ilam-payang-kottoor girt with groves full of tall trees over which the clouds crawl. The dew settled on the bamboo leaves are so plenty, that it looks like a heavy rain when it drops by strong winds. In the hills of Thiru-ilam-payang-kottoor, a large number of mountain snakes are on the move. Plenty of precious gems are scattered all over the place that gives it an appearance like a garland of flowers in different colours. Lord Civan of this lovely place snatched away my comeliness, when I had been to His temple to offer worship to Him. Is it a proper course of conduct for His status?

உரிஞ்சன கூறைகள்உடம் பினராகி 
உழிதரு சமணருஞ் சாக்கியப்பேய்கள் 
பெருஞ்செல் வனெனதுரைதன துரையாகப் 
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான் 
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடைவேங்கை 
களிமுகவண் டொடுதேனினமுரலும் 
இருஞ்சுனை மல்கியஇலம்பையங் கோட்டூ 
ரிருக்கை யாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 10

உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி 
உழி தரு சமணரும் சாக்கியப்பேய்கள் 
பெருஞ்செல்வன், எனது உரை தனது உரைஆக, 
பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் - 
கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் 
களி முக வண்டொடு தேன் இனம் முரலும், 
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் 
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

பொருள்: சமணர்கள் ஆடைகளை உரிந்துவிட்டது போன்ற அம்மண உடம்பினராகத் 
திரிகின்றனர். புத்தர்கள் பேய்களைப் போன்றவர்கள். இவர்கள் அறியாத பெரும் 
செல்வந்தர் சிவபெருமானார். என்னுடைய உரைகளை தன்னுடைய உரைகளாக 
வெளிப்படுத்தி அருளுபவர். பெரியவர்க்கெல்லாம் தலைவராகிய இப்பெருமானார், ஊரார் 
இடும் பலியை ஏற்பதற்காகத் திரிபவர். இலம்பையங்கோட்டூர் வளாகத்தில் முல்லை
மலர்கள் பெரிதான அரும்புகளை உடையதாக விளங்குகின்றன. வேங்கையின் மலர்கள் 
பொன்போல விளங்குகின்றது. வண்டுகள் மகழ்ச்சி நிறைந்த முகத்தோடு காணப்படுகின்றன. 
தேனீக்களும், முரல் மீன்களும் பெரிய சுனைகளும் நிறைந்து இருக்கின்றன. இத்தகைய 
அழகிய இலம்பையங்கோட்டூரைச் சிவபெருமான் தனது இடமாகக் கொண்டுள்ளார். 
இந்தத் தகுதிகளை உடையவர் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் என் அழகை 
மட்டும் கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

குறிப்புரை: புறச்சமயிகள் பெறுதற்கரிய பெருஞ்செல்வம் போன்றவன். பலிக்கென்று உழல் பெரியவர் 
பெருமான், இவ்வூரை இருக்கையாகப் பேணி என் எழில்கொள்வதியல்பா என்கிறாள். உரிஞ்சன 
கூறைகள் - உரிந்தாற்போன்ற ஆடைகள். உழிதரு - திரிகின்ற. கருஞ்சினை - பெரிய
அரும்போடுகூடிய. பொன் அடை வேங்கை - பொன் போன்ற பூக்களை உடைய வேங்கை. இரும்சுனை - 
பெரிய நீர்ச்சுனை. 
The Samanars are naked like the disrobed ones and the Saakkiyars (Buddhists) behave like devils - these two are unable to realise the greatness of Lord Civan who is a great treasure store for all souls. He benedicts all my recitations as though they have been His own revelations. He roams about like a mendicant seeking alms from the public. He is the head of all great virtuous people. Such a great personality selected Thiru-ilam-payang-kottoor as one of His abodes to reside in. Here big Arabian jasmine buds  are a sight to see. The flowers of golden coloured Kino tree (Pterocarpus bilobus) are in plenty. With a joyous mood the honeybees are humming. Lord Civan who is entempled in such a luxurious town, snatched away my comeliness when I went there to worship Him. Is it a proper course of conduct for such a great personality?
கந்தனைமலி கனைகடலொ லியோதங் 
கானலங்கழி வளர்கழு மலமென்னும் 
நந்தியாருறை பதிநான் மறைநாவன் 
நற்றமிழ்க் கின்றுணைஞான சம்பந்தன் 
எந்தையார் வளநகரிலம்பை யங்கோட்டூ 
ரிசையொடு கூடியபத்தும் வல்லார்போய் 
வெந்துயர் கெடுகிடவிண் ணவரோடும் 
வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே. 11

கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் 
கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் 
நந்தியார் உறை பதி நால்மறை நாவன் - 
நல்தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன் - 
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் 
இசையொடு கூடிய பத்தும் வல்லார், போய் 
வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் 
வீடு பெற்று, இம்மையின் வீடு எளிது ஆமே.

பொருள்: கழுமலம் என்னும் பதி சிவபெருமான் உறையும் சீகாழியாகும். இங்குள்ள 
மலர்களால் எங்கும் மணம் நிறைந்துள்ளது. கடலில் இருந்து தோன்றுகின்ற ஒலி வேதம் 
ஓதுவது போன்று ஒலிக்கின்றது. கடலில் இருந்து வருகின்ற வெள்ளநீர், கடற்கரையில் 
உள்ள சோலைகளிலும், உப்பங்கழிகளிலும் நிரம்புகின்றது. இந்தச் சீகாழிப் பதியில் 
தோன்றியவர் ஞானசம்பந்தன். இவர் நான்மறை ஓதும் நாவினர். நற்றமிழுக்கு உற்ற
துணையாக இருப்பவர். இவர், வளமான நகரமாகிய இலம்பையங்கோட்டூரில் உறையும் 
எமது தந்தையாகிய சிவபெருமானார்மீது இப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்தின் 
பத்துப் பாடல்களையும் இசையோடு கூடி, பாடவல்லவர்களின் கொடிய துயரங்கள் 
விரைவாகக் கெட்டு அழிந்து விடும். அவர்கள் விண்ணவரோடு வீற்றிருப்பர். பின்பு, 
விண்ணிலிருந்து விடுபட்டு வீடுபேற்றையும், இந்தப் பிறவியிலேயே எளிதாகப் 
பெற்றுவிடுவார்கள்.

குறிப்புரை: இலம்பையங்கோட்டூரைப் பற்றிய இப்பாடல் பத்தையும் இசையொடு ஓதவல்லவர், துன்பம் 
நீங்கித் தேவரொடும் உறைந்து, அதினின்றும் விடுதலை பெற்று வீட்டின்பத்தையும் எய்துவர் என்கின்றது. 
கந்தனை - மணம். நந்தியார் - சிவன். கெடுகிட - கெட. 
Lord Civan is enshrined at the temple in Seekaazhi also known as 'Kazhu- malam' . Pleasant fragrance pervades the air in the town. The roaring sea- waves, fully fill up the seashore groves as well as the saltpans with sea water. From this, Seekaazhi town hails Gnaanasambandan. He is the one who chants all the four Vedas. He is an adept in chaste Tamil language. He sang in the musical mode on our father Lord Civan who is entempled Thiru-ilam-payang-kottoor. Those who can sing these ten verses harmoniously will get rid of their sins and enjoy life in the world of Devaas. Also finally they will get salvation in this birth itself, on return from the Deva Lokha.

திருச்சிற்றம்பலம்

76ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
77. திரு அச்சிறு பாக்கம்

திருத்தல வரலாறு:

தொண்டை நாட்டுத் தலம். மயிலாடுதுறை - சென்னை பாதையில் இரயில் நிலையம். 
திண்டிவனம் செங்கல்பட்டுப் பேருந்து வழியில் உள்ளது. இறைவரின் தேர் அச்சு இற்ற 
காரணத்தால் இப்பெயர் எய்தியது. சிவபெருமான் திரிபுரதகனம் செய்யும் பொருட்டுத் தேவர்கள் 
அமைத்த தேரில் எழுந்தருளும்போது, தேவர்கள் விநாயகரை வணங்காமையின் அச்சு முறிந்தது 
என்பதும், பாண்டியன் ஒருவன் கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும்போது இத்தலத்திற்கு 
வந்ததும் வண்டி மேற்கொண்டும் செல்லாமையின் ஊக்கிச் செலுத்த அச்சு முறிந்தது என்பதும் 
அவன் அசரீரியினால் செய்தியறிந்து ஆலயத் திருப்பணி செய்தான் என்பதும் வரலாறு. 
கண்ணுவர், கெளதமர் பூசித்துப் பேறு பெற்ற தலம். இறைவன் பாக்கபுரேசுரர். இறைவி சுந்தரநாயகி. 
தீர்த்தம் வேததீர்த்தம். விருட்சம் கொன்றை.

கல்வெட்டு:

இத்தலம் இராஜேந்திர சோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக்
கல்வெட்டுக் கூறுகிறது. இத்தலத்து இறைவன் அக்ஷேசுவரர், கல்வெட்டுக் களில் அச்சுக் 
கொண்டருளிய தேவர் என வழங்கப்படுகிறார். திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை
கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒரு சிலை தயாரிக்கப்பட்டது. இது 
இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை. இராஜகேசரி வர்மன் முதலாம் குலோத்துங்கன் 
5-ஆம் ஆட்சியாண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்து வைக்கப் பெற்றது. ஏனைய 
கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும் 
விட்ட செய்தியை அறிவிப்பன. மூன்றாம் குலோத்துங்க சோழன் 12ஆம் ஆட்சியாண்டில் பாண்டிய 
நாட்டைக் கைக்கொண்ட சேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். கங்கன் 
என்பவனால் அர்ச்சனா போகமாக நிலம் அளிக்கப் பெற்றுள்ளது.

பதிக வரலாறு: 
திருக்கழுக்குன்றத்தை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் என்பு அணியும் பரமன் 
இனிதே ஆட்சிசெய்யும் அச்சிறுபாக்கம் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள 
ஆதிமுதல்வரை வணங்கினார். ‘அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே’ என்னும் இறுதியான் 
முடியும் ‘பொன் திரண்டன்ன’ என்னும் இப்பதிகத்தைப் பாடினார். 
HYSTORY OF THE PLACE 
77. THIRU-ACH-CHIRU-PAAKKAM

This sacred place is in Thondai Naadu. It has a railway station in the 'Mayilaaduthurai - Chennai' train route, and lies on the 'Thindivanam - Chengalpattu’ bus route. The name of the place derives from an episode of chariot axle (achchu) breaking up (iru) here. There are two different versions of this episode. One is that when Lord Civa rode on the chariot made by the celestials (Dhevaas) for burning down the demonic Thiri-puram, the axle of the chariot broke here because the celestial had failed to worship Vinaayaka. The other is that a Paandiyan king was transporting sand from the river Ganges and that as the cart with the sand was passing through here, its axle broke, even as he tried to drive with some force through the sandy terrain. The king, after being directed by a voice from heaven, built the temple here. 
The name of God is Paakkapurēsurar and that of the Goddess is Sundharanaayaki. The sacred ford is Vēdha-theerththam. The sacred tree is Konrai. Sages Kannuvar and Gouthamar offered worship here and got salvation.
The inscriptions here are from the time of Kuloth-thungkan I and other chola kings. During the 5th regal year of Kuloththungkan, an image of his was installed here. During the 12th regal year of Kuloth-thungkan III, a conqueror of Paandiya Naadu, Sengkani Ammaiyappan, gifted dimanonds. One Gangkan donated lands for temple worship services. Other inscriptions talk about the gift of sheep and gold, for lamps, and land for food offering.

INTRODUCTION TO THE HYMN 
From Thiru-k-kazhu-k-kundram our saint arrived at Thiru-ach-chiru-paakkam where he sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

77. திருஅச்சிறுபாக்கம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

பொன்றிரண் டன்னபுரிசடை புரளப் 
பொருகடற் பவளமொடழல் நிறம்புரையக் 
குன்றிரண் டன்னதோளுடைய கலங் 
குலாய வெண்ணூலொடு கொழும்பொடியணிவா் 
மின்றிரண் டன்னநுண்ணிடை யரிவை 
மெல்லியலாளையோர் பாகமாப்பேணி 
அன்றிரண் டுருவமாயவெம் மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 1

பொன் திரண்டன்ன புரிசடை புரள, 
பொருகடல் பவளமொடு அழல்நிறம் புரைய, 
குன்றுஇரண்டு அன்ன தோள் உடை அகலம் 
குலாய வெண்நூலொடு கொழும்பொடி அணிவர்; 
மின் திரண்டன்ன நுண்இடை அரிவை 
மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி, 
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் - 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: சிவபெருமானார் அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள 
இறைவராவார். தமது முறுக்கேறிய பொன் திரண்டாற்போன்ற சடையானது, பெருங்கடலின் 
அலைகளைப் போலவும், பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்திருந்தாற் போன்று 
புரளுகிறது. குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பில் வெண்மையான 
முப்புரிநூல் விளங்குகின்றது. வளமையான திருநீற்றையும் அணிந்துள்ளார். மின்னல் போன்ற 
நுண்ணிய இடையினை உடைய மென்மைத் தன்மை வாய்ந்த உமையம்மையை 
ஒருபாகமாக விரும்பி ஏற்றிருப்பவர். ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகள் ஆவார்.

குறிப்புரை: அச்சிறுபாக்கத்தை ஆட்சி கொண்ட சிவன், சடை, பவளக்கொடியையும் தீவண்ணத்தையும் 
ஒத்துப்புரள, மலை திரண்டால் ஒத்த மார்பில், பூணூலும் பொடியும் அணிந்து, உமாதேவியை ஒருபாகத்துக் 
கொண்டு, ஆணுருவும் பெண்ணுருவும் வேறாயுள்ள அடிகள் ஆவார் என்கின்றது. குறை இரண்டு அன்ன 
தோள் எனவும், அன்று இரண்டுருவம் ஆய எனவும் பிரிக்க. கொழும் பொடி - வளப்பமான விபூதி. 
Lord Civan's twisted strands of golden matted hair dangle down in space. Its hue is like that of coral gems of the billowy sea and ruddy flame. Along the side of the two hill-like shoulders, the chest is adorned with the white three ply sacred thread smeared with holy ashes. He is concorporate with His young celestial consort Paarvathi Devi in half of His body. Her soft waist is as narrow and thin as lightning. This Lord Civan is displayed in this single manifestation a dual form in Thiru-ach-chiru-paakkam, governs over and graces all His devotees. 
Note: The form of the Lord of Achchirupaakkam is the form of 'Ammai-appar'. This form is referred to in the second verse as 'as a splendid and triumphant form'. It is interesting to note that all the verses in this hymn are set to resonate in classical Akaval metre, even though there are eight seers in each line of this விருத்தப்பா (எண்சீர் ஆசிரியம்) - அகவல் இசையான அகவல்.

தேனினுமினியர் பாலனநீற்றர் 
தீங்கரும்பனை யர்தந்திரு வடிதொழுவார் 
ஊன்நயந் துருகஉவகைகள் 
தருவாருச்சிமேலுறை பவரொன்றலாதூரார் 
வானகமி றந்துவையகம் வணங்கவயங் 
கொளநிற்பதோர் வடிவினையுடையார் 
ஆனையி னுரிவைபோர்த்த வெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 2

தேனினும் இனியர், பால் அன நீற்றர், 
தீங்கரும்பு அனையார், தம் திருவடி தொழுவார் 
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், 
உச்சிமேலஉறைபவர், ஒன்றுஅலாது ஊரார், 
வானகம் இறந்து வையகம் வணங்க 
வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார், 
ஆனையின்உரிவை போர்த்த எம் அடிகள் - 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சி புரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், 
தேனினும் இனியவர். பால்போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் 
திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் 
தலைமேல் விளங்குபவர். இடப வாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் 
கடந்து மண்ணுலகை அடைந்து, அங்கு தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை 
வெற்றி பெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். 
அவர் எம் தலைவர் ஆவார்.

குறிப்புரை: அவர் திருமுடி தொழுவார்க்குத் தேனினும் இனியர், கரும்பனையர், உவகைகள் தருவார், 
விண்ணுலகினைக் கடந்தும், வையகம் வணங்க நிற்பவர் என்கின்றது. தேனினும் இனியர் - எக்காலத்தும் 
அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக இருத்தலின் நாப்புலனோடு ஒன்றிய கணத்து இனித்துப் பின் 
புளிப்பதாய தேனினும் இனியராயினர். பால் அன்ன நீறு - பால் உண்டார்க்குப் பித்த நோய் தணிக்குமா 
போல நீறு கண்டார்க்கும், பூசினார்க்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம் கூறினார். தீங்கருப்பனையர் 
- கரும்பு பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப நுகரும் முறையில் இனிப்பைக் கொடுக்கும்; இவரும் 
ஆன்மாக்களின் பரிபக்குவ நிலைக்கு ஏற்ப இனிப்பர். ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் - 
சடமாகிய மாயா காரியமாகிய உடல், உயிர் பெறும் இவ்வின்பத்தைப் பெற்றிலமே என்று விரும்பி உருக 
ஆன்மாவிற்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். ஒன்று - இடபம். வானகம் இறந்து - போகபூமியாகிய 
வானகத்துப் பொருந்தலாகாமையின் அவர்களும் போகிகளாய் இருத்தலின் அவர்களும் அதனைக் கடந்து 
பொருத்தமாட்டாதவர்களாய் இருப்பர். 
Lord Civan who is entempled in Thiru-ach-chiru-paakkam, governs all. He is more sweet than honey in all their hearts. He smears His body with the milk white holy ashes. He is like the sweet sugarcane. He confers manifold joys on His devotees whose heart would melt while worshipping His holy feet. He is ever manifest over their heads. He moves about on His bull vehicle. His devotees from upper worlds cross all the distance and reach the earth in order to adore and worship Him. He is of such a divine stature that He bestows grace and makes them all happy by fulfilling their wishes. He has covered His body with the skin of an elephant. He is our prime supreme Lord Chief.
காரிருளுரு வமால்வரை புரையக் 
களிற் றினதுரிவைகொண் டரிவைமேலோடி 
நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி 
நீறணிந்தேறு கந்தேறியநிமலர் 
பேரருளாளர் பிறவியிற் சேரார் 
பிணியிலர் கேடிலா்பேய்க் கணஞ்சூழ 
ஆரிருண் மாலையாடுமெம் மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே.  3

கார் இருள் உருவ மால்வரை புரையக் 
களிற்றினது உரிவை கொண்டு அரிவைமேல் ஓடி, 
நீர்உருமகளை நிமிர்சடைத் தாங்கி, 
நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்; 
பேர்அருளாளர்; பிறவியில் சேரார்; 
பிணிஇலர் கேடுஇலர் . பேய்க்கணம் சூழ 
ஆர்இருள் மாலை ஆடு எம் அடிகள் - 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், 
உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத் தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற 
ஆண் யானை வடிவம் தாங்கி அவள் பின்னால் ஓடியவர். நீர் வடிவமான கங்கையை 
மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறு பூசி, விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் 
புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள்
சூழச் சுடுகாட்டில், இருண்ட மாலை யாமத்தில், எம் அடிகள் நடனம் புரிபவர் ஆவார்.

குறிப்புரை: அவர், உமை பெண் யானையின் வடிவங்கொள்ள, ஆண் யானையாய்த் தொடர்ந்து சென்றும், 
நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலா. பேரருளாளர். 
பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது. கார் இருள் உருவம் மால் வரை புரைய - 
கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரிய மலையையும் ஒத்த. அரிவை - பெண் யானையாகிய 
உமாதேவி. இது ‘பிடியதன் உரு உமைகொளமிகு கரியது வடிகொடு' நடந்தமையைக் காட்டுவது. நீர் 
உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே 
மேற்கொள்ளுதலன்றி. வினைவயத்தான் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த 
இருட்கூட்டம். 
Lord Civan's consort Umaa Devi once in the days of yore, took the form of a female elephant (Pidi), while Civan took the form of a dense dark and 'big hill like' male elephant (Kaliru) and ran behind her. He holds the flooding river Ganges in His raised matted hair. He smears His body with holy ashes and joyfully rides on His bull vehicle. He is a pure, holy, as well as a most gracious One. He does not belong to the cycle of birth and death. He is free from any malady. He is the most perfect One. He dances in the cremation ground before midnight, surrounded by His demon hosts. He is our ascetic who is entempled in Thiru-ach-chiru-paakkam and governs one and all there.

மைம்மலர்க் கோதைமார் பினரெனவு 
மலைமகளவளொடுமரு வினரெனவுஞ் 
செம்மலர்ப் பிறையுஞ்சிறை யணிபுனலுஞ் 
சென்னிமேலுடைய ரெஞ்சென்னிமே லுறைவார் 
தம்மலரடி யொன்றடியவர்பரவத் 
தமிழ்சொலும் வடசொலுந் தாள்நிழற்சேர 
அம்மலர்க் கொன்றையணிந் தவெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 4

‘மைம்மலர்க் கோதை மார்பினர்’ எனவும், 
‘மலை மகள் அவளொடு மருவினர்’ எனவும், 
‘செம்மலர்ப் பிறையும் சிறை அணி புனலும் 
சென்னிமேல் உடையர், எம் சென்னி மேல் உறைவார்’ 
தம் மலர்அடி ஒன்று அடியவர் பரவ, 
தமிழ்சொலும் வடசொலும் தாள்நிழல் சேர, 
அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான், குவளை 
மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை மார்பில் சூடியவர். அழகிய கொன்றை மலர் 
மாலையை அணிந்தவர். மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் 
கொண்டுள்ளவர். சிவந்த மலர் போன்ற பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் 
சடைமுடிமேல் உடையவர். எம் தலை உச்சியில் உறைபவர். மலர் போன்ற மென்மையான 
தம் திருவடிகளை, மனம் ஒன்றி, அடியவர்கள், தமிழ்ச் சொற்களாலும், வடமொழிச் 
சொற்களாலும் துதிக்கும் தோத்திரங்கள், அவரது திருவடிகளையே சேருகின்றன.

குறிப்புரை: அவர், அடியவர்கள் மாலை மார்பர் எனவும், மலை மகளை மருவினர் எனவும் கங்கையும் 
பிறையும் சூடிய சென்னியர் எனவும், எம் சென்னிமேல் உறைவார் எனவும் தோத்திரிக்க. தமிழ்ச் சொல்லும் 
வடசொல்லும் தம் திருவடியைச்சார இருக்கும் அடிகளாவர் என்கின்றது. மை மலர் - நீல மலர். கோதை - 
மாலை. செம்மலர்ப் பிறை - சிவந்த மலா்போலும் பிறை. தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தாள் நிழல்சேர 
என்றது ஒலிவடிவாய சொற்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியனவாதலின் அடையுமிடமும் 
அவனடியேயாயிற்று என்பதாம். 
Lord Civan's devotees pay obeisance to Him and adore Him by saying: 
He is the One whose chest is adorned with blue water lily flower. He is the One who is concorporate with the daughter of the mountain king Paarvathi Devi on the left portion of His body. He is the One who holds the ruddy flower like crescent moon and the river Ganges in His matted hair. 
He is the one who manifests Himself over my head and graces me by placing His holy feet on my head. His devotees adore His flowery holy feet with sincere devotion and with oneness of mind and by chanting the devotional songs both in Tamil and Sanskrit. The sound waves of these songs reach the holy feet of Lord Civan. He wears the good-looking garland made out of cassia flowers. This Lord Civan, our noble One, is entempled in and rules over all from, Thiru-ach-chiru-paakkam.

விண்ணுலா மதியஞ்சூடினரெனவும் 
விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும் 
பண்ணுலா மறைகள்பாடின ரெனவும் 
பலபுகழ ல்லதுபழியிலரெனவும் 
எண்ணலா காதஇமையவர் நாளுமேத்த 
ரவங் களோடெழில்பெறநின்ற 
அண்ணலா னூர்தியேறுமெம் மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 5

“விண் உலாம் மதியம் சூடினர்' எனவும், 
“விரிசடை உள்ளது, வெள்ளநீர்’ எனவும், 
“புண் உலா மறைகள் பாடினர்’ எனவும், 
“பல புகழ் அல்லது பழிஇலர்’ எனவும், 
எண்ணல் ஆகாத இமையவர், நாளும் 
ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற 
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான், வானிலே 
உலவும் திங்களைச் சூடியவர். அவரது விரிந்த சடைமுடியில் கங்கை நீரின் வெள்ளம் 
தங்கியுள்ளது. இசை அமைதியோடு கூடிய நான்மறைகளைத் தோற்றுவித்தவர். 
பலவகையான புகழையே உடையவர். பழியே இல்லாதவர். எண்ணற்ற தேவர்களால் 
நாள்தோறும் தோத்திரிக்கப்படுபவர். அரவு ஆபரணங்களோடு மிக்க அழகுபெற இருப்பவர்.
எல்லாருக்கும் தலைமையானவர். இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மீது ஏறி 
வருபவரும் இவரே எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை: அவர் பிறைசூடினர் எனவும், கங்கை அவர் சடைக்கண்ணதெனவும், மறைபாடினர் எனவும் 
பழியிலர் எனவும் தேவர்கள் நாளும் ஏத்த இருப்பவர் என்கின்றது. எண்ணலாகாத இமையவர் - தாம் 
நுகரும் போக உள்ளத்தில் மயங்கி இறைவனைத் தியானிக்காத தேவர்களும் கணக்கற்றவர்களாய் உளர் 
Lord Civan wears the crescent moon that strolls in the sky. The waters of the river Ganges are held in His spreading matted hair. He sings the four Vedas tunefully according to the mode. He is the most famous person. He has no aspersions cast on Him. Numberless Devaas adore Him daily. He is our Chief Lord of unmatchful beauty and rides on His bull vehicle. This Lord Civan is the monarch of Thiru-ach-chiru- paakkam and governs everyone from there.
நீடிருஞ்சடை மேலிளம்பிறை துளங்க 
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய்பூசித் 
தோடொரு காதினிற்பெய்து வெய்தாய 
சுடலையிலாடுவர் தோலுடையாகக் 
காடரங்கா கக்கங்குலும் பகலுங் 
கழுதொடு பாரிடங்கை தொழுதேத்த 
ஆடரவாட ஆடுமெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 6

நீடுஇருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க 
நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி, 
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்துஆய, 
சுடலையில் ஆடுவர்; தோல் உடைஆகக் 
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், 
கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த, 
ஆடு அரவு ஆட, ஆடும் எம் அடிகள் - 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமானின் நீண்ட
பெரிய சடைமேல் இளம்பிறை விளங்குகின்றது. ஒளி பொருந்திய மழுவோடும், திருநீற்றை 
மேனியில் பூசியும், ஒருகாதில் தோடணிந்தும், கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர் இவர். 
புலித்தோலை உடையாக அணிந்தவர். இரவும், பகலும் பேய்க்கணங்களும், 
பூதகணங்களும் தங்களது கைகளால் தொழுதேத்தப்படுபவர். படமெடுத்தாடும் பாம்புகள் 
தம்மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் அடிகள் 
இவர் ஆவர்.

குறிப்புரை: அவர் சடைமேல் பிறைவிளங்க, நீறுபூசி ஒருகாதில் தோடணிந்து, பேயும் பூதமும் 
கைதொழுதேத்த, சுடலையில் ஆடுவர் என்கின்றது. நீடு இரும் சடை - நீண்ட பெரிய சடை. அரங்கு - 
கூத்தாடுமிடம். கங்குல் - இரவு. கழுது - பேய். பாரிடம் - பூதம். 
Lord Civan holds the young crescent moon to shine in His long and dense matted hair. He holds the shining battle-axe in one of His hands. He smears His body with holy ashes. He wears an ola-role in His left ear. He dances in the dreadful burning ghat. He wears the tiger skin as His waist-cloth. The theatre for His dance is the burning ghat. Ghouls and goblin hosts hail Him both day and night with folded hands. Decked with hooded and dancing snakes, He dances in the burning ghat. This Lord Civan is our noble One and rules over all people from Thiru-ach-chiru-paakkam.
ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி 
யிளங்கிளை யரிவை யொடொ ருங்குடனாகிக் 
கூறுமொன்ற ர௬ுளிக்கொன்றை யந்தாருங் 
குளிரிள மதியமுங் கூவிளமலரும் 
நாறுமல்லி கையுமெருக்கொடு முருக்கு 
மகிழிள வன்னியுமிவை நலம்பகர 
ஆறுமொர் சடைமேலணிந்த வெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 7

ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, 
இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன்ஆகிக் 
கூறும் ஒன்று அருளி, கொன்றைஅம்தாரும் 
குளிர்இளமதியமும் கூவிளமலரும் 
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர, 
ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம்அடிகள் 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான் இடபம் 
ஒன்றில் ஏறி வருபவர். தம் திருமேனியில் நீறுபூசியவர். இளைய கிளி போன்ற அழகிய 
பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் ஒருகூறு அருளியவர். இருவரும் ஒருவராய் இணைந்து 
இருப்பவர். தம் திருமுடிமேல் கொன்றை மாலையையும் இளமதியையும் அணிந்தவர். 
வில்வப்பூ, மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழம்பூ, இள வன்னி இலை ஆயன 
திருமுடியில் மணம் பரப்புகின்றன. கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் 
அடிகளும் இவரே ஆவார்.

குறிப்புரை: அவர் எருதேறி, நீறுபூசி, பசுங்கிளி ஏந்திய பாவையோடு, கொன்றை, மதியம், வில்வம், 
மல்லிகை முதலியவற்றைப் புனைந்தவர் என்கின்றது. இளங்கிளை அரிவை - இளைய கிளியை ஏந்திய 
உமாதேவி. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமே யன்றிப் பூவும் சூடப்பெறும் என்பதறிவிக்கப்பட்டது. மகிழ் 
- மகிழம்பூ. 
Lord Civan rides on His bull vehicle. He smears His body with holy ashes. He shares a portion of His body with the young parrot like comely Paarvathi Devi. They are both bodily joined together as one entity (concorporated). In His holy matted hair He wears cassia garland, cool young crescent moon, Bael leaves and many other ideal flowers such as the sweet smelling jasmine, yadar, flower of the East Indian coral tree, ape flower and tender sume leaves. The aroma of all these flowers and leaves diffuses alround. Along with all these, He holds the Ganges river also in His matted hair. This Lord Civan rules over Thiru-ach-chiru- paakkam. 
Note: Kuvilam: Vilvam / Bael 
Mallikai: Jasmine
Erukku: Madar 
Murukku: Palas-tree 
Makizha: Vaxulum: Ape-flower tree (Mimysopus elegni)

கச்சுமொள் வாளுங்கட்டிய வுடையர் 
கதிர்முடி சுடர்விடக்கவரி யுங்குடையும் 
பிச்சமும் பிறவும்பெண்ணணங் காய 
பிறைநுதலவர் தமைப்பெரிய வர்பேணப் 
பச்சமும் வலியுங்கருதிய அரக்கன் 
பருவரையெடுத்த திண்டோள்களை யடர்வித் 
தச்சமும ருளுங்கொடுத் தவெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 8

கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், 
கதிர் முடி சுடர் விடக் கவரியும் குடையும் 
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய 
பிறை நுதலவர், தமைப் பெரியவர் பேண, 
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் 
பருவரை எடுத்த திண்தோள்களை அடர்வித்து, 
அச்சமும் அருளும் கொடுத்த எம்அடிகள் 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் 
கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி 
சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறைமதியை 
முடியிற் சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் 
அன்பு, வலிமை ஆகியவற்றைக் கருதித் தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை 
மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் 
அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை: அவர், இராவணனுக்கு அச்சமும் அருளும் அளித்தவா் என்கின்றது. இராவணனுக்கு வந்த 
ஏற்றமெல்லாம் கச்சையும் வாளையுங்கட்டி, கவரி, குடை, பிச்சம் முதலியவற்றைத் தாங்கிய பெண்கள் 
இவனைப் பெரியவன் என்று பேணியதே ஆகும். அதனால் இவனுக்கு ஆணவம் மிகுந்தது என்ற கருத்து 
விளக்கப் படுதல் காண்க. அதனாலேயே ஏமாந்து இறைவனின் கயிலையை எடுக்கத் தொடங்கினான் 
என்பதாம். 
The girl retinue of Raavanan dress themselves in a comely manner tucking a glittering sword in their corset. Their dazzling hair dangles in the air. They adore Raavanan by fly-flapping the bushy tail of the yak. They hold an ornamental umbrella above his head as a mark of honour. They fan him with a bunch of peacock's feather. With all this fan fare, they praise Raavanan as a very great one and a matchless mighty man. Such adulation made Raavanan think about himself as an all powerful and irresistible man in the world. With this egoistic mind he tried to uproot mount Kailash, the abode of Lord Civan, in vain. He got crushed under the mountain. Then he repented and begged for pardon. Lord Civan forgave him and granted him boons. This Lord Civan governs everybody in Thiru-ach-chiru-paakkam.

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் 
நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக் 
கூற்றலாரேனுமின் னவாறென்று 
மெய்தலாகாத்தொரி யல்பினையுடையார் 
தோற்றலார் மாலுநான்முக முடைய 
தோன்றலு மடியொடு முடியுறத்தங்கள் 
ஆற்றலாற் காணாராய வெம்மடிக 
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே. 9

நோற்றலாரேனும், வேட்டலாரேனும், 
நுகர் புகர் சாந்தமொடு ஏந்திய மாலைக் 
கூற்றலாரேனும், இன்னஆறு என்றும் 
எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; 
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய 
தோன்றலும், அடியொடு முடி உற, தங்கள் 
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் - 
அச்சிறு பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: தவம் செய்யாதவர்களாலும் அன்பு செய்யாதவர்களாலும், நுகரத்தக்க 
நெய்வேத்தியம், சந்தனம் கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு 
செய்யாதவர்களாலும், அடைய முடியாதவராய் அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள . 
இறைவரான சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இத்தகையவர் என்று அறியமுடியாத 
தன்மையும், அடையமுடியாத அருமையும் உடைய இயல்பினர் என்பதறிந்தும் திருமாலும் 
நான்முகனும் பன்றியும் அன்னமுமாய் மாறி அடியையும் முடியையும் காண முயற்சித்துத் 
தோற்றனர். அவர்களால் காண இயலாதவராக உயர்ந்து நின்ற எம் அடிகள் இவர் ஆவார்.
எனவே, தவம் செய்பவர்களுக்கும், அன்பு செய்பவர்களுக்கும் வழிபடுவோர்களுக்கும் 
எளியவராய் இருப்பவர் சிவபெருமான்.

குறிப்புரை: அவர் தவஞ்செய்யாராயினும் சாந்தும் மாலையுங் கொண்டு தொழாராயினும், என்றைக்கும் 
இப்படி அடையலாமென்று முயன்றும் அடைய முடியாத தன்மையை உடையவர் இவர் என்கின்றது. 
நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள். புகர் - உணவு. ஈண்டு - 
நைவேத்தியம். தோற்றலார் மால் - பிறத்தலை உடைய திருமால். 
Lord Civan is not accessible to (a) those who had not performed any penance. (b) those who had not done the rituals in the sacrificial fire. (c) those who had not worshipped Him in the proper manner by carrying garlands, sandal paste and other offerings such as food etc. 
He is of that category that no one knows by what means He could be reached. Thirumaal who belongs to the birth and death cycle, as well as the four-faced Brahman were unable to reach Him by their efforts. Lord Civan of such a nature is enshrined here and governs all from Thiru-ach-chiru-paakkam.

வாதுசெய் சமணுஞ்சாக்கியப் பேய்கள் 
நல்வினை நீக்கியவல் வினையாளா் 
ஓதியுங்கே ட்டுமுணர்வினை யிலாதா 
ருள்கலாகாத தோரியல் பினையுடையார் 
வேதமும் வேதநெறிகளு மாகி 
விமலவேடத்தொடு கமலமா மதிபோல் 
ஆதியுமீறு மாயவெம்மடிக 
ளச்சிறுபாக்கமதாட்சி கொண்டாரே. 10

வாதுசெய் சமணும், சாக்கியப்பேய்கள், - 
நல்வினை நீக்கிய வல்வினையாளர், 
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார்- 
உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்; 
வேதமும் வேதநெறிகளும் ஆகி, 
விமலவேட த்தொடு கமல மா மதி போல் 
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் - 
அச்சிறு.பாக்கம்அது ஆட்சி கொண்டாரே.

பொருள்: அச்சிறுபாக்கத்தில் எம் அடிகளான சிவபெருமான் ஆட்சி கொண்டுள்ளார். 
சமணர்களும், சாக்கியப் பேய்களும், நல்வினை செய்யாது வல்வினைகள் புரிபவர்கள். 
ஓதியும், கேட்டும், திருந்தாத உணர்வு உடையவர்கள். வீணாகத் தர்க்க வாதம் புரிபவர்கள். 
அவர்கள் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர் சிவபெருமான். வேதமும், 
வேதநெறிகளும் ஆகியவர் தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர்.
தாமரை மலரும், திங்களும் போன்ற அழகும், தன்மையும் உடையவர். பிரபஞ்சத்தின் 
ஆதியும், அந்தமுமாய் இருப்பவர்.

குறிப்புரை: அவர் புறச்சமயிகளுடைய நல்வினையைப் போக்கியவர், படித்துங் கேட்டும் 
உணர்ச்சியற்றவர்களால் தியானிக்கப்படாதவர். வேதமும் அவைகூறும் நெறிகளுமாகி, பரிசுத்த 
வேடத்தோடு, ஆதியும் ஈறுமாய அடிகள் இவர் என்கின்றது. வாதுசெய் சமண் - விதண்டாவாதமே செய்து 
பொழுதுபோக்கும் சமணர். அவர்களுக்குத் துணை இருப்பது உலக போகத்திற்குரிய நல்வினை யாதலின் 
உண்மை உணராது வாதமே செய்து காலம் கழிக்கின்றனர் என்பதாம். ஆதலால் அவர்களுடைய 
நல்வினையை நீக்க வேண்டியது இவர் அருளித் திறமாயிற்று. 
The Samanars are in the habit of arguing for anything and everything. The ghoul like Buddhists perform evil deeds and do no good to any. They are devoid of understanding despite their direct learning and learning through listening. Lord Civan Himself is manifest as the Vedas and their rules and systems. He is the immaculate holy god. He is a very handsome person like the lotus flower and the cool moon. He is the beginning and end of this world. This great Lord Civan is the sovereign of Thiru- ach-chiru-paakkam.

மைச்செறிகு வளைதவளை வாய்நிறைய 
மதுமலர்ப்பொய் கையிற்புது மலர்கிழியப் 
பச்சிறவெறி வயல்வெறி கமழ்காழிப் 
பதியவரதி பதிகவுணியர் பெருமான் 
கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் 
கருத்துடைஞான சம்பந்தன் தமிழ்கொண் 
டச்சிறுபாக்கத் தடிகளையேத்து 
மன்புடையடியவரருவினையிலாரே. 11

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய 
மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் 
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்- 
பதியவர் அதிபதி - கவுணியர்பெருமான், 
கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் 
கருத்து உடை ஞானசம்பந்தன் - தமிழ் கொண்டு 
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் 
அன்புடை அடியவர் அருவினை இலாரே.

பொருள்: கருநிறம் பொருந்திய குவளை மலர்களால் பொய்கைகள் நிரம்பியுள்ளன. அந்த 
மலர்கள் தவளைகளின் வாய்நிறையுமாறு தேனைப் பொழிகின்றன. பசிய இரால் மீன்கள்
துள்ளி விழுவதால் பொய்கைகளில் உள்ள புதுமலர்களின் இதழ்கள் கிழிகின்றன. இந்தப் 
பொய்கைகளை அடுத்து வயல்கள் உள்ள மணம் கமழும் பதி சீகாழியாகும். இந்தச் சீகாழிப்
பதியினர்க்கு அதிபதியாக இருப்பவர், கவுணியக் குலத்தலைவரான ஞானசம்பந்தன். இவர், 
கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவபெருமானின் திருவடிகளையன்றிப், பிறவற்றைக் 
கருதாத கருத்தினை உடையவர். இவர் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு, 
அச்சிறுபாக்கத்துப் பெருமானைப் போற்றும், அன்புடைய அடியவர்களின் வினைகள் நீங்கி 
இல்லாமற் போகும்.

குறிப்புரை: இது, இறைவன் திருவடியன்றி வேறொன்றையும் பேணாத ஞானசம்பந்தர் தமிழைக் 
கொண்டது. இத்தலத்து இறைவனை ஏத்தும் அடியார்கள் வினையிலர் என்கின்றது. குவளைப் பூக்கள் 
தவளையினுடைய வாய்நிரம்ப மதுவைப் பொழிகின்ற பொய்கை என்க. பச்சு இறவு புதுமலர் கிழிய எறி 
வயல் - பசிய இறால்மீன் புதுமலர் கிழியத் துள்ளும் வயல். மறி - மான். 
Gnaanasambandan, the lord of the Kauniyas sect and the chief of Seekaazhi town never thinks of hailing any other god except Lord Civan who holds a small deer in one of His hands. Seekaazhi is rich in melliferous pools where dark blue Indian lily flowers grow in abundance. These flowers drain their honey into the mouth of frogs that gather near the flowers. Over the newly blossomed flowers the shrimp and prawn fishes leap and play and tear the petals. Adjoining these ponds lush fields are in plenty. The loving and devoted servitors who hail the great Lord Civan of Thiru-ach-chiru- paakkam with the verses sung by Gnaanasambandan in this hymn, will stand freed of the effect of their bad actions of the past.

திருச்சிற்றம்பலம்


77ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

78. திரு இடைச் சுரம்

திருத்தல வரலாறு: 
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருவடிச்சூலம் என வழங்கப்படுகிறது. 
செங்கற்பட்டில் இருந்து திருப்போரூர் செல்லும் பேருந்தில் திருவடிச்சூலம் செல்லலாம். பேருந்து 
நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது. 
இத்தலம் மலைகளின் இடையில் கற்சுரத்தில் அமைந்தமையின் இப்பெயர் எய்தியது.
சனற்குமார முனிவர் பூசித்துப் பேறு பெற்ற தலம். மூல லிங்கம் தீப ஒளி பிரதிபலிக்கக் கூடிய மரகத 
லிங்கம். சம்பந்த சுவாமிகள் தூரத்தே எழுந்தருளும்போது திருமேனிச் செம்மை கண்டு ‘இடைச்சுர 
மேவிய இவர் வணம் என்னே’ என்று வியந்துள்ளார். இறைவன் இடைச்சுர நாதர், ஞானபாரீசார். 
இறைவி இமய மடக்கொடியம்மை.

கல்வெட்டு:

சோழ அரசன் குலோத்துங்க சோழ தேவன் ஆட்சியில் ஐயங்கொண்ட சோழ மண்டலத்தில் 
உள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டில் உள்ள திருவிடைச்சுரம் என்று 
குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார், திருவிடைச்சுரம் 
உடையார் என்றும் வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரா் கோயில் ஒன்று உள்ளது. மேலும் 
கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, 
பெருந்தண்டிலத்தில் உள்ள கருப்பக்கிருகம் கட்டப் பட்டதையும் கூறுகிறது. இந்த இறைவி 
கருப்பக்கிருகத்திற்கு விளக்குப் போட, ஆவன செய்யப்பட்டு உள்ளது. மகாமண்டலேசுவர குமார 
ஜலகராஜ திருமலைய தேவ மகாராயரால் விளக்குக்காகவும், படையலுக்காகவும் நிலம் 
கொடுக்கப்பட்டது. பிள்ளையார் நீலங்க நாயனாரைப் பற்றி விவரிக்கின்றது. 
ஏனையவை விளக்கிற்காகவும், பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் 
அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.

பதிக வரலாறு: 
திருவான்மியூரில் சிலநாள் தங்கியிருந்த புகலிப் பிள்ளையார் பல பதிகளை வணங்கத் 
திருவுளத் தெண்ணி விடையூரும் வித்தகரின் இடைச்சுரத்தைச் சேர்வுற்றார். அங்கே அடியார்கள் 
எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். கோபுரத்தை வணங்கினார். உட்புகுந்தார். நற்கோயிலை 
வலங்கொண்டார். இறைவன் திருமுன்பு அடைந்தார். கண்டார். கண்டபொழுதே அன்புமீதூரக் 
கை தலைமேற்குவிய, நிலத்திடை நீள்மரம்போல் விழுந்து நமஸ்கரித்து எழுந்து அளவற்ற 
மகிழ்ச்சியுடன் பெருமான் திருமேனி வண்ணங் கண்டு அதிசயித்தார். ‘இடைச்சுரம் மேவிய இவர் 
வணம் என்னே’ என்று அருந்தமிழ்த் திருப்பதிகமாகிய 'வரிவளரவிரொளி’ என்னும் இதனை 
அருளிச் செய்தார்கள். 
HISTORY OF THE PLACE 
78. THIRU-IDAI-CH-CHURAM

This sacred place is in Thondai Naadu and is known as Thiruvadisoolam in common parlance. The village lies in the bus route from Chengalpattu to Thiru-poroor. The temple is at a distance of 1 km from the bus stop. The place is called churam as the area around is in a desert tract and rocky. 
The Lord is known as Idai-ch-churanaathar or Jnaanapureesurar and the Goddess is Imaya Mada-k-kodiyammai. The lingam in the inner sanctury is made of emerald that amplifies lamplight by reflection. This is the reason for Saint Thiru- gnaanasambandar to exclaim "iDaichchurameviya ivar vaNam ennE!" (how amazing is the splendour of the Lord of Idaichchuram) when he had the vision of the dazzling lingam from a distance.
The inscriptions here include those from the reign of Kuloththungka Cholan. There is a note of a Jananapureesuvarar temple here. One inscription speaks of the building of the sancturu at Perunthandilam for Goddess Periya Naach-chiyaar. Necessary grants were made for lamps at this shrine. Another inscription describes the Pillaiyaar Neelangkanaayanaar. The rest describe gift of gold, land, sheep, and cows for lamps and other temple expenses.

INTRODUCTION TO THE HYMN 
It is from Thiru-vaanmiyoor our saint arrived at Thiru-idai-ch-churam, well received by servitors, where he sang the following hymn in ecstasy.

திருச்சிற்றம்பலம்

78. திரு இடைச் சுரம்

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

வரிவளரவி ரொளியர வரைதாழ 
வார்சடை முடிமிசைவளர் மதிசூடிக் 
கரிவளர்தரு கழல்கால்வல னேந்திக் 
கனலெரி யாடுவர் காடரங்காக 
விரிவளர்தரு பொழிலிள மயிலால 
வெண்ணிறத் தருவிகள்திண் ணெனவீழும் 
எரிவளரின மணிபுனமணி சாரலிடைச் 
சுரமேவிய இவர்வணமென்னே. 1

வரி வளர் அவிர்ஒளி அரவு அரை தாழ, 
வார்சடைமுடிமிசை வளர்மதி சூடி, 
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, 
கனல்எரி ஆடுவர், காடு அரங்கு ஆக; 
விரி வளர்தரு பொழில் இளமயில் ஆல, 
வெண்நிறத்து அருவிகள் திண்ணென வீழும், 
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: மரங்கள் வளர்ந்த விரிந்த பரப்புடைய பொழில்களில் இளமயில்கள் ஆடுகின்றன. 
வெண்மையான நிறத்துடன், அருவிகள் திண்ணென்ற ஒலியுடன் விழுகின்றன. எரி போன்று 
ஒளிருகின்ற, ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவமாய். மலைச்சாரலை 
உடைய தலம் திருஇடைச்சுரமாகும். சிவபெருமான் வரிகளையும் ஒளியையும் உடைய 
பாம்பை இடையிலே கட்டியிருக்கின்றார். நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் 
சூடியுள்ளார். அத்தியாளியின் உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச் 
சூடியுள்ளார். கனலை ஏந்தி சுடுகாட்டைத் தனது அரங்காகக் கொண்டு ஆடுகின்றார். 
இத்தகைய இறைவரது இயல்புதான் என்னே?

குறிப்புரை: இப்பதிகம் இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் 
மேவிய இவர் வண்ணம் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது. வரிவளர் அவிர் ஒளி அரவு - 
வரிகளோடுகூடி விளங்குகின்ற ஒளியினை உடைய பாம்பு. அரைதாழ - திருவரையில் தங்க. கரிவளர் 
தருகழல் - அத்தியாளியின் உருவம் எழுதப்பெற்ற வீரக்கழல் இவர் இயல்புகளை எத்துணை அறியினும், 
அறிந்தவற்றிற்கும் அப்பால் பல இயல்புகள் இருத்தலின் இவர்வண்ணம் என்னே எனச் செயலறவு 
அருளினாராயிற்று. 
Lord Civan tightens His waist dress by a striped and bright serpent that hangs down from the waist. He wears the waxing moon on His long matted hair. He wears on His right knee an anklet of heroism inscribed with the sign of 'Aththi Yaazhi' ( a mythological animal having a lion's body with a trunk like that of an elephant). Using the cremation ground as the stage He dances there (eternally). What natural quality of Lord Civan who abides in Thiru-idai-ch-churam adorning and behaving as above? In the city of Thiru-idai-ch-churam extensive gardens full of stately trees abound. In these gardens peacocks dance and enjoy themselves. Water falls descend creating a dazzling white colour and making a heavy rumbling noise. In the jungles bright gems are scattered all around giving an attractive sight to see. 
Note: Yaali: A mythological beast, which is lion-like and is endowed with a trunk, like that of an elephant.

ஆற்றையுமேற்ற தோரவிர் சடையுடையா 
ழகினை யருளுவர் குழகலதறியார் 
கூற்றுயிர்செகுப் பதோர்கொடுமை யையுடையர் 
நடு விருளாடுவர் கொன்றையந் தாரார் 
சேற்றயல்மிளிர் வனகயலிளவாளை 
செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி 
ஏற்றையொடுழி தருமெழில்திகழ்சார 
லிடைச் சுரமேவியஇவர் வணமென்னே. 2

ஆற்றையும் ஏற்றது ஒர் அவிர்சடை உடையார்; 
அழகினை அருளுவர்; குழகுஅலதுஅறியார்; 
கூற்று உயிர் செகுப்பது ஒர் கொடுமையை உடையர்; 
நடுஇருள் ஆடுவர்; கொன்றைஅம்தாரார்; 
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை 
செருச் செய ஓர்ப்பன செம்முக மந்தி 
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: வயல்களில் உள்ள சேற்றில் வாழும் கயல்மீன்களும் இளவாளை மீன்களும்
ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. இதைக் கூர்ந்து நோக்கும் பெண் குரங்கோடு, ஆண் 
குரங்கு கூடித் திரிகின்றன. இத்தகைய அழகிய மலைச் சாரலை உடைய தலம் திரு 
இடைச்சுரம் ஆகும். இத்தலத்தில், சிவபெருமான் கங்கை நதியைத் தனது விரிந்த சடையில் 
ஏற்றருளியிருக்கின்றார். அழகும், இளமையும் மாறாதவராய் இருக்கின்றார். இவர் கூற்றுவன் 
உயிரை மாய்க்கும் கொடுமையை உடையார். நடு இரவில் திருநடனம் புரிபவராக 
இருக்கின்றார். கொன்றை மலர் மாலையைச் சூடியுள்ளார். இத்தகைய இறைவரது 
இயல்புதான் என்னே?

குறிப்புரை: ஆறு - கங்கை. குழகு - இளமை. கயல்மீனும் இளவாளைமீனும் போர்செய்ய அதனைப் 
பெண் குரங்குகள் கூர்ந்து நோக்குகின்றன. செம்முக மந்தி - பெண் குரங்கு. ஏற்றை - ஆண் குரங்கு. 
Lord Civan received the roaring descent of the Ganges river in His spreading matted hair. He is the most handsome one and is ever young. He is a most powerful one who in the days of yore, kicked Yama to death. He dances during midnight. He wears the garland made of cassia flowers. He is entempled in Thiru-idai-ch-churam. In the beauteous mountain slopes of this place red faced female monkeys watch intensely the fight between bright carp fish and the swordfish . Thereafter, the female monkeys join hands with the male ones and roam about.  Is it not a perplexing one to understand the real nature of Lord Civan? 
Note: Kayal and Vaalai are fish varieties.

கானமுஞ்சுடலை யுங்கற்படுநிலனுங் 
காதலர்தீதிலா் கனல்மழுவாளா் 
வானமுநிலமையு மிருமையுமானார் 
வணங்கவுமிணங் கவும்வாழ்த்தவும் படுவார் 
நானமும்புகையொ ளிவிரையொடுகமழ 
நளிர்பொழி லிளமஞ்ஞைமன் னியபாங்கர் 
ஏனமும்பிணை யலுமெழில்திகழ்சார 
லிடைச்சுர மேவியஇவர் வணமென்னே.  3

கானமும், சுடலையும், கல்படு நிலனும், 
காதலர்; தீதுஇலர்; கனல் மழுவாளர்; 
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; 
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்; 
நானமும் புகைஒளி விரையொடு கமழ, 
நளிர் பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர், 
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: மணமுள்ள கஸ்தூரி, சந்தனம், அகில் முதலியவை எரிவதால் அவற்றின் புகையும் 
ஒளியும் மிளிர்கன்றன. மணம் கமழும் பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்து 
வாழ்கின்றன. இவற்றின் அருகில் பன்றிகளும் பெண் மான்களும் வாழ்கின்றன. இத்தகைய 
அழகிய மலைச்சாரலை அடுத்துள்ள தலம் திருஇடைச்சுரம் ஆகும். இத்தலத்தில் 
சிவபெருமான், காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் 
விரும்பியவராக வீற்றிருக்கின்றார். இவர் தீமை இல்லாதவர். அழல் போன்ற வெம்மையான 
மழுவாயுதத்தை ஏந்தியிருப்பவர். இம்மை, மறுமை ஆகிய இருமை இன்பங்களையும் 
தருபவர். வணங்கப்படுபவர். இணங்கப்படுபவர். வாழ்த்தப்படுபவர். இத்தகைய 
இறைவரின் இயல்புதான் என்னே?

குறிப்புரை: கானம் - காடும். கற்படுநிலன் - மலை காதலர் - இவற்றை இடமாகக் கொள்ளும் 
விருப்பினர். வானம் - மறுமை. நிலமை - இம்மை. இருமையும் - இவ்விரண்டின் தன்மையும். நானம் - 
கஸ்தூரி. ஏனம் - பன்றி. பிணையல் - பெண்மான். 
Lord Civan loves to abide in Thiru-idai-ch-churam where forests, burning ground and the rocky-mountains are His favourite spots. His radiant shrine here is fragrant with the smoke of musk  and incense. The area is bright due to fire caused by burning the above materials. In the dense gardens on the slopes of the mountain, flourish young peacocks and peahens. Nearby is the habitat of hogs and deers. Lord Civan of this place has no evil in His mind. He wields in one of His hands a fierce battle-axe blazing like fire. In the present birth and in the next birth, He is the only person who can bestow bliss on us. His devotees hail, adore and have familiarity with Him. With all these factors, His nature is still a mystery indeed!

கடமணிமார் பினர்கடல்தனி லுறைவார் 
காதலர்தீதிலா் கனல்மழுவாளர் 
விடமணிமிட றினர்மிளிர்வதோரரவர் 
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர் 
வடமுலைய யலனகருங்குருந்தேறி 
வாழையின் தீங்கனிவார்ந்து தேனட்டும் 
இடமுலை யரிவைய ரெழில்திகழ்சார 
லிடைச் சுரமேவிய இவர்வணமென்னே. 4

கட மணி மார்பினர்; கடல்தனில் உறைவார் 
காதலர் தீதுஇலர்; கனல் மழுவாளர்; 
விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; 
வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்; 
வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, 
வாழையின் தீங்கனி வார்ந்து தேன் அட்டும் 
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: ஓங்கி வளர்ந்துள்ள பல மரங்களை உடைய அடர்த்தியான அழகிய 
மலைச்சாரலை உடைய தலம் திருஇடைச் சுரம் ஆகும். இங்குள்ள மலைச்சாரலில் பெரிய 
ஆலமரங்கள் காற்றினால் அசைந்து ஆடிக்கொண்டிருக்கின்றன. அதன் அருகே கரிய 
குருந்த மரங்கள் ஓங்கி வளர்ந்து விளங்குகின்றன. இந்த மரங்களை ஒட்டினாற்போல 
வாழைத்தோட்டங்கள் உள்ளன. அவைகள் மிகச் செழிப்புடன் வளர்ந்துள்ளன. 
அவைகளில் மிகப்பெரிய தார்கள் தொங்கிக் கொண்டும், குருந்தமரத்தின் மீது சாய்ந்தும், 
அமர்ந்தும் மிக நன்றாகப் படுத்துக் கொண்டும் விளங்குகின்றன. மலைச்சாரலில் வாழ்ந்து 
தோட்டங்களைக் காத்து வரும் பெண்கள் மிகுந்த ஆரோக்கியமாகவும், செழிப்பான, பருத்த 
தனங்களை உடையவர்களாகவும் உள்ளனர். அவர்கள் குருந்தமரத்தில் உள்ள தேன் 
அடைகளை எடுத்து வாழைக்கனிகளின் மீது பிழிந்து, பழத்தை உண்டு களித்து இன்பம் 
பெருக வாழ்ந்து வருகிறார்கள். இத்தலத்தில் உன்ள மலைச்சாரலில் விளைந்த மணிகள் 
சிவனது மார்பில் அணியப்பட்டுள்ளன. அவர் கடலில் உறைபவராக இருக்கின்றார். 
அன்புடையவராகத் திகழ்கின்றார். தீமையற்றவராக இருக்கின்றார். கனலும் மழுவும் 
ஏந்தியிருக்கின்றார். ஆலகால விடத்தை தொண்டைக்குள் அடக்கியதால் நீலமணியின் 
நிறத்தைப் போன்ற கழுத்தை உடையவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர். வேறு 
வேறான ஒழுக்க நெறிகளை உடையவராய் உள்ளார். பல்வேறு தோற்றங்களை உடைய 
வேடத்தவர். இத்தகைய இறைவரின் இயல்புதான் என்னே?

குறிப்புரை: கடமணி - மலைச்சாரலில் விளைந்த மணி. சரிதை - ஒழுக்கம். வடமுலை அயலன -- 
அசையும் ஆலக்குப் பக்கத்தனவாகிய. கருங்குருந்து - பெரிய குருந்தமரத்தில், வார்ந்து - ஒழுகி. தேன் 
அட்டும் - தேனை எடுக்கின்ற இடமுலை அரிவையர் - இடங் கொண்டு வளர்ந்த முலையினை உடைய 
பெண்கள். 
Lord Civan's chest is adorned with gems obtained from the mountain slopes. He abides in the sea. He loves His devotees. He is ever free from any evil. He wields a fiery battle-axe in one of His hands. Not swallowing the ocean raised poison, Lord Civan has positioned it in His throat, resulting in His neck appearing always dark blue in colour like that of sapphire. He wears on His body, snake as jewelry. He conforms to different kinds of virtuous deeds. He appears in various different forms. He is entempled in Thiru-idai-ch-churam. In the beauteous slopes of the mountain of this place shapely women do live. They climb on the wild lime tree (Kuruntha tree), which grows near the waving banyan tree and cleave the honeycomb closely and drops the honey over the banana fruits. Then all the girls gather eat the fruits and enjoy them. What is the real nature of such Civan who is enshrined in Thiru-idai-ch-churam?
கார்கொண்ட கடிகமழ்விரிமலர் கொன்றைக் 
கண்ணியர் வளர்மதிகதிர் விடக்கங்கை 
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் 
நிழல் திகழ்மழுவின ரழல்திகழ்நிறத்தர் 
சீர்கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் 
செழும்புனலலனை யனசெங்குலை வாழை 
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ்சார 
லிடைச்சுர மேவியஇவர் வணமென்னே. 5

கார் கொண்ட கடி கமழ் விரிமலர் கொன்றைக்- 
கண்ணியர்: வளர்மதி கதிர்விட, கங்கை- 
நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; 
நிழல் திகழ் மழுவினர்; அழல்திகழ் நிறத்தர்; 
சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் 
செழும் புனல் அனையன செங்குலை வாழை 
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: சிறப்பு மிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் பண்ணோடு இசை 
பாடுகின்றன. செழிப்பான நீர்நிலைகளுள்ள நிலத்தில் செவ்வாழைக் குலைகளும் அழகுமிக்க 
பலாக்கனிகளோடு விளங்குகின்றன. இத்தகைய அழகுமிக்க மலைச்சாரலை உடைய தலம் 
திருஇடைச்சுரம் ஆகும். இத்தலத்தில், சிவபெருமான், கார்காலத்தில் வளர்ந்த மணம் கமழும் 
விரிந்த கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளார். வளரும் பிறை மதி ஒளி வீசவும் 
கங்கை நீர் கொண்ட சடையினருமாக விளங்குகின்றார். விடை எழுதிய உயர்ந்த கொடியை 
உடையவர். ஒளி விளங்கும் மழுப்படையை ஏந்தியிருக்கின்றார். அழல் போன்ற சிவந்த 
நிறத்தினர். இத்தகைய இறைவரது இயல்புதான் என்னே? |

குறிப்புரை: கார்கொண்ட - கார்காலத்து உண்டான. கடி - மணம். வாழைகள் பலாவினோடு அழகைச் 
செய்கின்ற சாரல் எனக் கூட்டுக. 
Lord Civan wears the garland of well-blown and fragrant cassia flowers, which bloom during the rainy season. On His matted hair shines a waxing and bright crescent moon spreading its rays. The Ganges river also rests there. The bull is the insignia in His flag. He holds the bright battle-axe in one of His hands. His hue is that of the blazing fire. He is entempled in the beautiful Thiru-idai-ch-churam where in the slopes of the mountain, lovely and soft winged bees are humming in musical mode. Here flourish red plantain trees, with bunches of ruddy fruits; also jack trees yielding abundant jack fruits. How great indeed is the wonder of His splendour! 
Note: The banana trees referred to in this verse are called sevvazhai. They grow in hilly regions.

தோடணி குழையினர் சுண்ணவெண் 
ணீற்றர்சுடலையி னாடுவர்தோலுடையாகப் 
பீடுயர்செய் ததோர்பெருமை யையுடையர் 
பேயுடனாடுவர் பெரியவர் பெருமான் 
கோடல்களொ ழுகுவமுழுகுவதும் 
பிகுரவமுமரவ முமன்னியபாங்கர் 
ஏடவிழ்புது மலர்கடிகமழ் சாரலிடைச் 
சுரமேவிய இவர்வண மென்னே. 6

தோடு அணி குழையினர்; சுண்ணவெண் நீற்றர்; 
சுடலையின் ஆடுவர்; தோல்உடைஆகப் 
பீடு உயர்செய்தது ஒர் பெருமையை உடையர்; 
பேய்உடன் ஆடுவர்; பெரியவர் பெருமான்; 
கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, 
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர், 
ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: செங்காந்தள் பூக்கள் தேனைச் சொரிகின்றன. அந்தத் தேனில் வண்டுகள்
முழுகுகின்றன. குரவ மரம், கடம்ப மரம் ஆகியன சோலைகளில் நிறைந்துள்ளன. இந்தச் 
சோலைகளில் பூத்த புது மலர்களின் மணம் வீசுகின்ற சாரலை உடைய தலம் 
திருஇடைச்சுரம் ஆகும். இத்தலத்தில் சிவபெருமான், தோடணிந்த காதுடையவராகவும், 
திருவெண்ணீறாகிய சுண்ணப் பொடி பூசியவராகவும் விளங்குகின்றார். யானையின் 
தோலை ஆடையாகப் போர்த்திருக்கின்றார். சுடுகாட்டில் நடனம் ஆடுபவராக 
இருக்கின்றார். பீடு என்ற சொல் பெருமை பெறுமாறு மிக்க பெருமையை உடையவர். 
பேய்க் கணங்களோடு ஆடுபவர். பெரியவர் எனப் போற்றத் தக்கவர்க்கு தலைவன் ஆனவர். 
இத்தகைய இறைவரது இயல்புதான் என்னே?

குறிப்புரை: குழை - காது. பீடு - பெருமை. கோடல்கள் ஒழுகுவ - செங்காந்தட்பூக்கள் தேனைச் 
சொரிவன. அதில், தும்பி முழுகுகின்றன. தும்பி - வண்டு, 
Lord Civan wears an ola-roll in His left ear, and an ear ring in His right ear. He smears His body with powdery ashes. Wearing a skin on His waist He dances in the cremation ground. Glory itself stands glorified by reason of His glory. He dances with the ghouls. He is the noble chief for all those who are considered as great virtuous men. He is entempled in Thiru-idai-ch-churam. Here in the slopes of the mountain range fragrant smell emitted by fresh-blown flowers is felt always. Here honey drips from the red November flower (Gloriosa superba செங்காந்தள்) in which the bees immerse themselves and enjoy sipping the honey. The date tree , the seaside Indian oak  and other trees flourish in the gardens. What indeed is the real nature of Lord Civan who is enshrined in such a city?

கழல்மல்கு காலினர்வேலினர் நூலார் 
கவர்தலை யரவொடுகண் டியும்பூண்பர் 
அழல்மல்கு மெரியொடுமணி மழுவேந்தி 
யாடுவர் பாடுவரா ரணங்குடையர் 
பொழில்மல்கு நீடியஅரவமு மரவ 
மன்னியக வட்டிடைப்புணர் குயிலாலும் 
எழில்மல்கு சோலையில்வண் டிசைபாடு 
மிடைச்சுரமேவிய இவாவணமென்னே. 7

கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; 
கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்; 
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி 
ஆடுவர்; பாடுவர்; ஆர் அணங்கு உடையர்; 
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் 
மன்னிய கவட்டுஇடைப் புணர் குயில் ஆலும் 
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: திருஇடைச்சுரம் ஊரைச் சுற்றிலும் இயற்கையாகவே வளர்ந்த காடுகளும் 
(பொழில்களும்) செயற்கையாக வைத்து வளர்க்கப்பட்ட பூங்காக்களும் (சோலைகளும்) 
மிகுதியாக உள்ளன. இவைகளில் மிக உயரமான மராமரங்களும் (ஆச்சா மரமும், அரச 
மரமும்) பிற பூக்கள் நிறைந்த மரங்களும் செழிப்பாக வளர்ந்து 
உள்ளன. இம்மரங்களின் நெருக்கமான கிளைகளில் ஆண் பெண் குயில்கள் இணைந்து 
பாடுகின்றன. அழகிய சோலைகளில் வண்டுகள் இசைபாடுகின்றன. இத்தகைய அழகிய 
மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில் சிவபெருமான் வீரக்கழல் அணிந்த 
திருவடியினராகவும், கையில் வேலை ஏந்தியவராகவும் முப்புரிநூலை அணிந்தவராகவும் 
விளங்குகின்றார். ஐந்தாகப் பிரிந்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க 
மாலையையும் அணிந்துள்ளார். ஒரு கையில் சுவாலையோடு கூடிய தீயையும், மற்றுமொரு 
கையில் அழகிய மழுவையும் ஏந்தியுள்ளார். ஆடுபவராகவும், பாடுபவராகவும், பிறரால் 
வசீகரிக்கப்படும் அழகுடையவராகவும் திகழ்கின்றார். இத்தகைய இறைவரது இயல்புதான் 
என்னே?

குறிப்புரை: கழல் - வீரக்கழல். வேல் - சூலம். கவர் தலை அரவு - ஐந்தலை நாகம். கண்டி - 
உருத்திராக்கம். அணங்கு - தெய்வத்தன்மை. மரவம் - மராமரம். கவடு - கிளை. 
Lord Civan wears on His holy feet the warrior's trinket which has a string of little bells . He wears on His chest the three ply sacred thread . He wears garland made of claeocarpus seeds  along with the five headed and hooded serpent. He sings and dances holding the blazing fire in one of His hands and wielding the good-looking battle-axe in another hand. Every one gets afflicted by His matchless beauty. In the forests of the mountain slopes a good number of tall sal and papal trees flourish. In the branches of these trees the male and female Indian cuckoos jointly sing. In the lush gardens bees are humming in large numbers creating a musical note. What indeed is the real nature of Lord Civan who is enshrined in this admirable city?

தேங்கமழ்கொன் றையந்திருமலர் புனைவார் 
திகழ்தருசடை மிசைத்திங்களுஞ்சூடி 
வீந்தவர்சடலை வெண்ணீறுமெய்பூசி 
_  வேறுமோர் சரிதையர்வேடமு முடையா 
சாந்தமுமகிலொ டுமுகில்பொதிந் தலம்பித் 
தவழ்கனமணி யொடுமிகு பளிங்கிடறி 
ஏந்துவெள்ளரு விகளெழில்திகழ்சார 
லிடைச் சுரமேவிய இவர்வணமென்னே. 8

தேம் கமழ் கொன்றை அம்திருமலர் புனைவார்; 
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி, 
வீந்தவர் சுடலை வெண்நீறு மெய்பூசி, 
வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்; 
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, 
தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி, 
ஏந்து வெள்அருவிகள் எழில் திகழ் சாரல் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: சந்தனம், அகில் ஆகியவற்றின் .மணம் கலந்து மேகங்களில் இருந்து, இடிமுழங்கி 
மழை பொழிகின்றது. அந்த மழை வெள்ளத்தில் பெரிய மணிகளும், பளிங்குகளும் அடித்து 
உருண்டு வருகின்றன. அவைகள் வெண்மையான உயர்ந்த அருவிகளின் வழியே கீழே 
விழுகின்றன. இத்தகைய அழகிய மலைச்சாரலை உடைய தலம் திருஇடைச்சுரம் ஆகும். 
இத்தலத்தில் சிவபெருமான், தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் 
சூடியுள்ளார். விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச் சூடியிருக்கின்றார். இறந்தவர்களை 
எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனியில் பூசியுள்ளார். வேறுபடும் பல புராண 
வரலாறுகளை உடையவராக இருக்கின்றார். அவ்வாறே வேறுபடும் பலப்பல 
வேடங்களுடன் காட்சி தருபவருமாய் இருக்கின்றார். இத்தகைய இறைவரது இயல்புதான்
என்னே?

குறிப்புரை: வீந்தவா் - இறந்தவர். சாந்தம் - சந்தனம். கனமணி - கூட்டமாகிய இரத்தினங்கள். ஏந்து 
- தாங்கிய. தேம் - தேன். 
Lord Civan wears the elegant garlands of honey fragrant cassia flowers. He wears on His matted hair the crescent moon. He smears on His holy body the ashes of the burning ground where corpses are burnt. His beginningless ancient history is of widely varying nature. Similarly He comes into view in various forms according to the circumstances. The lofty white water falls carry large big gems and crystals. The water is also fragrant with the smell of eaglewood and sandalwood that are broken by the waterfalls due to heavy rain. What indeed is the real nature of Lord Civan who is enshrined in such a famous city?
பலஇலமிடு பலிகையிலொன் றேற்பர் 
பலபுகழலல துபழி யிலர்தாமும் 
தலையிலங் கவிரொளிநெடு முடியரக்கன் 
தடக்கைகளடா்த் ததோர்தன் மையையுடையர் 
மலையிலங் கருவிகள்மணமுழவதிர 
மழைத வழிளமஞ்ஞை மலகியசாரல் 
இலைஇல வங்கமுமேலமுங்கமழு 
மிடைச்சுர மேவியஇவர் வணமென்னே. 9

பலஇலம் இடுபலி கையில் ஒன்று ஏற்பர்; 
பல புகழ்அல்லது பழி இலர், தாமும்; 
தலை இலங்கு அவிர்ஒளி நெடுமுடி அரக்கன் 
தடக்கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர்; 
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, 
மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல், 
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: மலையிலிருந்து அருவிகள் திருமண வாத்தியம் போன்று அதிருமாறு 
ஒலிக்கின்றன. இங்குள்ள இளமயில்கள் மேகத்தின் இனிமை கண்டு தோகை விரித்து 
ஆடுகின்றன. இலைகள் நிறைந்த இலவங்க மரங்களும் ஏலக்காய்களின் மணமும் எங்கும்
நிறைந்துள்ளது. இத்தகைய அழகிய மலைச்சாரலை உடைய தலம் திருஇடைச்சுரம் ஆகும். 
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் 
இடும் பலியை ஒரு கையில் ஏற்பவராக இருக்கின்றார். பலவகைப்பட்ட புகழே அல்லாது
எவ்வகையான பழியும் இல்லாதவராக இருக்கின்றார். தலையில் ஒளியோடு விளங்கும் நீண்ட 
மகுடங்களைத் தரித்த இராவணனின் பத்து தலைகளையும் நீண்ட கைகளையும் நெரித்த 
வலிமையைச் செய்த தன்மை உடையவராக இருக்கின்றார். இத்தகைய இறைவரது 
இயல்புதான் என்னே?

குறிப்புரை: பல இலம் இடு பலி - பலவீடுகளில் இட்ட பிச்சை. தலை இலங்கு நெடு முடி எனக் கூட்டுக. 
இலை இலவங்கம் - இலைகளோடு கூடிய இலவங்க மரம். 
Lord Civan visits many houses and receives alms in His hand. His glory is widespread. He is utterly blameless. He crushed the long arms of the ten-headed Raavanan, decked with long and bright crowns. Such is His prowess. He is entempled in Thiru-idai-ch-churam. In the mountain slopes waterfalls descend down with a din, akin to the sound of wedding drums. Also here young peacocks are in good number. The clouds crawl over the mountain slopes. The air is fragrant with the leaves of cinnamon and cardamom. What indeed is the nature of Lord Civan of this place?

பெருமைகள் தருக்கியோர்பே துறுகின்ற 
பெருங்கடல் வண்ணனும் பிரமனுமோரா 
அருமைய ரடிநிழல்பரவி நின்றேத்து 
மன்புடை யடியவர்க் கணியருமாவர் 
கருமைகொள் வடிவொடுசுனை வளர் குவளைக் 
கயலினம்வய லிளவாளை களிரிய 
எருமைகள் படிதரஇள அனமாலு 
மிடைச்சுரமேவியஇவர் வணமென்னே. 10

பெருமைகள் தருக்கி ஒர் பேது உறுகின்ற 
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா 
அருமையர்; அடிநிழல் பரவி நின்று ஏத்தும் 
அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர்; 
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் 
கயல் இனம் வயல் இளவாளைகள் இரிய, 
எருமைகள் படிதர, இள அனம் ஆலும் 
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்: நீலவண்ணக் குவளை மலர்கள் நீர்ச் சுனைகளில் வளர்ந்திருக்கின்றன. வயல்களில் 
வாளை மீன்களும் கயல்மீன்களும் அஞ்சுமாறு எருமைகள் இறங்குகின்றன. அதனைக் 
கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட தலம் 
திருஇடைச்சுரம் ஆகும். இத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். தன்
பெருமைகளை நினைத்துத் தருக்கப் பேசி மயக்கத்தில் ஆழ்ந்த கடல்நிற வண்ணனாகிய 
திருமாலும், பிரமனும் ஓர்ந்து காண முடியாத அருமையை உடையவர். ஆனால், தம் திருவடி 
நிழலில் நின்று போற்றித் துதிக்கும் அன்புடைய அடியவர்க்கு சமீபமாய் இருப்பவர். 
இத்தகைய இறைவரது இயல்புதான் என்னே?

குறிப்புரை: பெருமைகள் தருக்கி - பெருமைகளால் செருக்குற்று பேதுறுகின்ற - மயங்கிய ஓரா 
அருமையர் - அறியமுடியாத அருமைப்பாட்டினை உடையவர். எருமைகள் குவளை கயலினம் 
இளவாளைகள் இரிய படிதர இள அன்னம் ஆலும் இடைச்சுரம் எனக் கூட்டுக. இரிய - விலக. படிதர - 
தோய. ஆலும் - ஒலிக்கும். 
Lord Civan is the rare one who is beyond the comprehension of the ocean-hued Vishnu who became proud by reason of His glory, and also to Brahma. He is of easy access to His loving devotees who hail and adore the salvific shade of His holy feet. He is entempled in Thiru-idai-ch-churam in the pools of which blue lilies bloom and flourish. Here when black buffaloes begin to settle in water, the carp fish  and the trichiurus lepturus fish leap about scared; then the young swans raise uproar. What indeed is the real nature of Lord Civan who is enshrined in such a fertile place?

மடைச்சுர மறிவனவாளை யுங்கயலும் 
மருவிய வயல்தனில் வருபுனற்காழிச் 
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடையண்ணல் 
சரிதை கள்பரவி நின்றுருகு சம்பந்தன் 
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ்சாரற் 
புணர்மடநடை யவர்புடையி டையார்ந்த 
இடைச்சுர மேத்தியஇசை யொடுபாட 
லிவைசொலவல்ல வர்பிணியிலர் தாமே. 11

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் 
மருவிய வயல்தனில் வருபுனல் காழிச் 
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் 
சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன், 
புடைச்சுரத்து அருவரைப் பூக் கமழ் சாரல் 
புணர் மடநடையவர் புடைஇடை ஆர்ந்த 
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் 
இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே.

பொருள்: வயல்களில் இருந்து வரும் நீர்மடைகளில் வாளை மீன்களும் கயல்மீன்களும் 
துள்ளுகின்றன. இத்தகைய நீர்வளம் மிக்கது காழிநகராகும். இங்கு, ஞானசம்பந்தன், தனது 
விரிந்த சடையில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளை மனம் 
கரைந்து போற்றிப் பாடுகின்றார். பூக்களின் மணம் கமழும் சாரலை உடைய மலையில் 
அருகருகே வெற்றிடங்கள் உள்ளன. இங்கு அழகிய மட நடையினை உடைய மகளிர் பல 
இடங்களில் தங்குகின்றனர். அவர்கள் தங்கி அழகு செய்யும் திருஇடைச்சுரத்தை 
இப்பதிகத்தில் போற்றிப் பாடினார். இப்பதிகப் பாடலை இசையோடு பாட வல்லவர்கள்
பிணிகள் இன்றி வாழ்வார்கள்.

குறிப்புரை: ஞானசம்பந்தன், இடைச்சுரத்தைத் துதித்த பாடலை, இசையோடு சொல்ல வல்லவர் 
பிணியிலர் என்கின்றது. மடைச்சுரம் - நீர்மடைகளின் வழி. மறிவன - மடங்கித் துள்ளுவன. 
சடைச்சுரத்து - சடைக்காட்டில். 
Gnaanasambandan of Kaazhi which abounds in fields fed by the waters of sluices where leap about, carp fish and trichiurus lepturus fish, melts in love when he sings of the annals of the noble Lord who wears on His crest, the crescent moon. In the interspaces of flowery and fragrant gardens of this town, fair and bashful damsels, foregather and enjoy themselves. Those who can sing tunefully this hymn on the Lord of Idaichchuram will, forever, be freed of maladies.
திருச்சிற்றம்பலம்

78ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
79. திருக் கழுமலம் 
திருத்தல வரலாறு:

முதல் பதிகம் பார்க்க. 
HISTORY OF THE PLACE 
See First Hymn.

INTRODUCTION TO THE HYMN 
79. THIRU-K-KAZHU-MALAM

Thiru-k-kazhu-malam is one of the twelve names of Seekaazhi where our saint 
Thiru-Gnaanasambandar was born.

திருச்சிற்றம்பலம் 
79. திருக் கழுமலம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

அயிலுறு படையினர்விடை யினர்முடிமே 
லரவமும்மதி யமும்விரவிய அழகர் 
மயிலுறு சாயலவனமு லையொருபால் 
மகிழ்பவர்வானி டைமுகில்புல் குமிடறர் 
பயில்வுறு சரிதையரெரு துகந்தேறிப் 
பாடியுமாடி யும்பலிகொள் வர்வலிசேர் 
கயிலை யும்பொதியிலுமி டமென வுடையார் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 1

அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் 
அரவமும் மதியமும் விரவிய அழகர்; 
மயில் உறு சாயல வனமுலை ஒருபால் 
மகிழ்பவர் வான்இடை முகில் புல்கு மிடறர்; 
பயில்வுஉறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் 
பாடியும் ஆடியும் பலிகொள்வர்; வலி சேர் 
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் - 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமான் கூர்மை பொருந்திய சூலப்படையை உடையவர். விடை 
ஊர்தியினர். திருமுடிமேல் அரவையும், பிறைமதியையும் சூடிய அழகினர். மயில் போன்ற 
சாயலையும் இளமையான தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் 
கொண்டு மகிழ்பவர். மேகத்தை யொத்த கண்டத்தினர். எல்லாராலும் போற்றப்படும் 
புராண வரலாறுகளை உடையவர். இடபத்தில் மகிழ்ந்து ஏறி பாடியும் ஆடியும் சென்று 
பலியேற்பவர். வலிமை மிகுந்த கயிலை, பொதிகை போன்ற அழகிய மலைகள் 
இவைகளைத் தம் இடங்களாக உடையவர். இந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள 
கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்கினால், நம் வினைத் தீமைகள் 
அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: இப்பதிகம் இறைவனது கழுமலத்தை நினைக்க, நமது வினையின் தீமை அறும் என்கின்றது. 
அயில் - கூர்மை. மயில் உரு சாயல் - மயில்போன்ற சாயலை உடைய. வனமுலை - இளைய முலையினை 
உடையாளாகிய உமாதேவி. முகில்புல்கும் மிடறர் - மேகத்தையொத்த கண்டத்தை உடையவர். கரிசு - 
தீமை. 
Lord Civan wields a sharp trident in His hand. He is the handsome One on whose crest rests a serpent as well as the crescent moon. He joyfully concorporates with His consort Umaa Devi who shines like a peacock, having a tender body with charming breasts. His neck is of dark blue in colour like the clouds in the sky. He is adored by one and all as prescribed in the ancient texts (Puraanaas). Singing and dancing, He seeks alms riding on His bull. He loves the strong mount Kailash and the beautiful Pothigai mountain as His abiding places. This Lord Civan is enshrined in Kazhumalam. Those who adore this city and the Lord therein will get their bad karma snapped.

கொண்டலு நீலமும்புரை திருமிடறர் 
கொடுமுடி யுறைபவர் படுதலைக்கையர் 
பண்டல ரயன்சிரமரிந் தவர்பொருந்தும் 
படர்சடை யடிகளார் பதியதனயலே 
வண்டலும் வங்கமுஞ்சங் கமுஞ்சுறவும் 
மறிகடல்திரை கொணர்ந்தெற் றியகரைமேற் 
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 2

கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; 
கொடுமுடி உறைபவர்; படுதலைக் கையர்; 
பண்டு அலர்அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் 
படர்சடை அடிகளார் - பதி அதன் அயலே 
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் 
மறிகடல்-திரை கொணர்ந்து எற்றிய கரைமேல் 
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமான் மேகம் மற்றும் நீலமலர் போன்ற கருநீல நிறத்தை ஒத்த அழகிய 
கழுத்தினை உடையவர். கயிலை மலையில் உறைபவர். உயிரற்ற தலைஓட்டைக் கையில் 
ஏந்தியவர். முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் 
கொய்தவர். அழகுறப் பொருந்தும் சடைமுடியை உடையவர். இந்தச் சிவபிரானது பதி 
கழுமலம் ஆகும். இந்தப் பதியின் அருகில் கடலின் அலைகள், வண்டல் மண், தோணி, 
சங்கு, சுறா ஆகியவற்றைக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும். கடற்கரைமேல் நீர்முள்ளி, 
தாளை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும். இந்த அழகிய கழுமலப் பதியை நினைக்க, நம் 
வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: கொண்டல் - மேகம். மேகம் மிடற்றிற்கு உவமையானது தேவர்களைக் காத்தமையால். நீலம் 
ஒப்பானது கண்ணுக்கு இனிமையாய் இருத்தலின். படுதலை - கபாலம். வண்டல் - ஒதுக்கிய மண். 
வங்கம் - தோணி. கண்டல் - நீர்முள்ளி. கைதை - தாழை. நெய்தல் - நெய்தற்பூ. 
Lord Civan has a beautiful neck which resembles in colour like the blue cloud and the blue lily flower. He abides in mount Kailash. He holds in His hand a dried up skull. In the days of yore, He chopped off one of the five heads of Brahma who is normally seated in the Lotus flower. His spreading matted hair is very attractive. He is enshrined in Thiru-k-kazhu-malam. Here in the seashore the round waves of the seawater throw on the shore the fertile soil (வண்டல் மண்) wild cinnamon (இலவங்கம்) seashells etc. On the foreshore gardens of this city flourish the flowers of barberia longifolia (நீர்முள்ளி), screw pine (தாழை), nymphaea alba (நெய்தல் ஆம்பல் a class of water flower) etc. Those who can contemplate on this city and adore Lord Civan enshrined therein will get their bad karma snapped. 
Note: Human matted hair is ghastly, but Civa's is beautiful and bewitching. 
Kandal: A species of fragrant-screw-pine. 
Kaitai: Fragrant screw-pine. 
Neithal: White, Indian water lily.

எண்ணிடை யொன்றினர்இரண் டினருருவ 
மெரியிடை மூன்றினா் நான்மறையாளர் 
மண்ணிடை ஐந்தினராறி னரங்கம் 
வகுத்தன ரேழிசை யெட்டிருங் கலைசேர் 
பண்ணிடை யொன்பதுமுணர்ந் தவர்பத்தர் 
பாடி நின்றடிதொழ மதனனை வெகுண்ட 
கண்ணிடைக் கனலினா்கரு தியகோயில் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 3

எண்இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; 
எரிஇடை மூன்றினர்; நால்மறையாளர்; 
மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; 
வகுத்தனர் ஏழ்இசை; எட்டு இருங்கலை சேர் 
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் 
பாடி நின்று அடிதொழ, மதனனை வெகுண்ட 
கண் இடைக் கனலினர் - கருதிய கோயில் 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமானார் எண்ணத்தில் அருவாயிருந்த பொழுது ஒன்றாய் இருப்பவர்.
சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாக இருப்பவர். நெருப்பில் மூன்றாக இருப்பவர். 
நான்மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து 
தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். 
எண்வகைக் கலைகளில் ஒன்றான இசைத் துறையில் ஒன்பது கலைகளையும் உணர்ந்தவர்.
பக்தர்கள் பாடிநின்று திருவடிகளை வணங்குமாறு வீற்றிருப்பவர். மன்மதனைக் 
கண்ணினின்று தோன்றிய கனலால் எரித்தவர். இப்பெருமான் விரும்பி உறையும் கோயில் 
கழுமலம் ஆகும். இக்கோயிலை நினைத்து, அங்குள்ள இறைவனை வணங்கினால் நம் 
வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: எண்ணிடை ஒன்றினர் - எண்ணத்தில் அருவாயிருக்கும் பொழுது ஒன்றாய் இருப்பவர். 
உருவம் இரண்டினர் - சிவமும் சத்தியுமாகி உருவத் திருமேனி கொள்ளுங்காலத்து இரண்டாய் இருப்பவர். 
எரியிடை மூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் 
இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றலுமாம். மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் 
சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, 
பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையாய் இருப்பவர் எனலுமாம் ஏழிசை - குரல். கைக்கிளை, 
துத்தம், இழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு. எட்டிருங்கலை - அஷ்டவித்தை. 
Lord Civan is One single entity when He is in the state of formlessness (- Civan and Sakthi devoid of shape). His form is two when He is with His consort (energy). In Agni He is three fold. He is the author of the four Vedas. He is the five parts (evolutes) that pervade the earth. He is the six auxiliaries of the four Vedas (Sciences subordinate to the Vedas). He is seven fold music. He is the eight sacred sciences . He is the master of nine musical nodes. His feet are hailed and adored by devotees. He smote Manmathan (God of Love) with the fire of His forehead eye. If we contemplate on the temple of Thiru-k-kazhu-malam where He is enshrined, and worship Him there, our evil karma will snap in full. 
Note: This hymn is an enn-alangaaram . Numbers 1 to 9 are employed in this hymn in an ascending order. It is not easy to comprehend this hymn.
எரியொரு கரத்தினரிமை யவர்க்கிறைவ 
ரேறுகந்தேறுவர்நீறு மெய்பூசித் 
திரிதரு மியல்பினரய லவர்புரங்கள் 
தீயெழ விழித்தனர் வேய்புரைதோளி 
வரிதரு கண்ணிணை மடவரலஞ் 
சமஞ்சுறநிமிந்த தோர்வடிவொடும்வந்த 
கரியுரிமரு வியஅடிகளுக் கிடமாங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 4

எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; 
ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித் 
திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் 
தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி, 
வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, 
மஞ்சு உற நிமிர்ந்தது ஒர் வடிவொடும் வந்த 
கரிஉரி மருவிய அடிகளுக்கு இடம்ஆம் 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமானார் தனது ஒரு கரத்தில் எரியை ஏந்தி இருப்பவர். தேவர்களுக்கு 
தலைவன் ஆனவர். விடைமேல் விரும்பி திருநீற்றை மெய்யில் பூசித் திரியும் இயல்பினர். 
பகைவரான அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற 
திரண்ட தோள்களையும் வரிபரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் 
இரண்டு நிமிர்ந்து வந்தாற்போல, கரிய வடிவோடு தம்பால் வந்தது ஓர் யானை. அந்த 
யானையின் தோலை உரித்து தன் முதுகில் அதனை போர்த்தியவர். அந்தப் பெருமான்
வீற்றிருக்கும் இடமாக விளங்குவது கழுமலம் ஆகும். அந்தக் கழுமலத்தை நினைத்து, 
அங்குள்ள இறைவனை வணங்க நம் வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: எரி - மழு. அயலவர் - பகைவர். தீயெழ விழித்தனர் என முப்புரங்களை விழித்து 
எரித்ததாகக் கூறப்படுகின்றது. வேய் - மூங்கில். வரி - செவ்வரி. மடவரல் - உமாதேவி. மஞ்சு - 
ஆகாயம். கரியுரி - யானைத்தோல். 
Lord Civan holds fire in one of His hands. He is the Chief God for all the celestials. He rides happily on His bull. He is in the habit of roaming here and there by smearing His body with holy ashes. He so stared at the three hostile citadels when they were gutted by fire. His consort Umaa Devi who has bamboos like shoulders and red streaked eyes got frightened on seeing a black elephant looking like the globular cloud approaching her; Lord Civan faced the elephant, skinned it and covered His body with its hide. This Lord Civan is enshrined in Thiru-k-kazhu-malam. If we contemplate on the temple in this Thiru-k-kazhu-malam town in our minds and worship Lord Civan therein, the evil effects of our bad karma will cease to affect on us.

ஊரெதிர்ந் திடுபலிதலை கலனாக 
வுண்பவர்விண்பொலிந் திலங்கியவுருவர் 
பாரெதிர்ந் தடிதொழவிரை தருமார்பிற் 
படஅரவாமையக்கணிந் தவர்க்கிடமாம் 
நீரெதிர்ந் திழிமணிநித் திலமுத்தம் 
நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக் 
காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 5

ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக 
உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்; 
பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் 
படஅரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம்ஆம் - 
நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில-முத்தம் 
நிரை சுரிசங்கமொடு, ஒண்மணி வரன்றி, 
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு ஏற்றும் - 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமானார், ஊர் மக்கள் இடும் பலியைத் தனது உண்ணும் பாத்திரமான 
தலையோட்டில் ஏற்று உண்பவர். மண்ணுலகத்தினர் தம் திருவடிகளைத் தொழுமாறு, 
தனது மணம் கமழும் மார்பில், படத்தை உடைய பாம்பு, ஆமை ஓடு, உருத்திராக்கம் 
முதலியவைகளை  அணிந்தவராகவும், திருக்கழுமலத்தைத் தனது இடமாகவும் 
கொண்டுள்ளார். கருமையான மேகங்கள் தாழ்ந்து கடலில் படிகின்றன. கடலில் 
வலிமையான அலைகள் தோன்றுகின்றன. அந்தக் கடல் அலைகளில் நீரில் படிந்து, 
மணிகள், முத்துக்கள், வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவள மணிகள் ஆகியவை 
இழுத்து வரப்பட்டு கரையில் சேருகின்றன. இத்தகைய அழகுடைய கழுமலத்தை நினைத்து 
அங்குள்ள இறவனை வணங்க நம் வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: ஊர் எதிர்ந்திடு பலி - ஊரவர் இடுகின்ற பிச்சை. கலன் - உண்ணும் பாத்திரம். படஅரவு, 
ஆமை, அக்கு அணிந்தவர்க்கு இடமாம் எனப் பிரிக்க. அக்கு - உருத்திராக்கம். அக்குமணியுமாம் 
வன்திரை மணி நித்திலம் முத்தம் சுரிசங்கம் ஒண்மணி வரன்றி கரைக்கு என்றும் கழுமலம் எனக் கூட்டுக. 
சுரிசங்கம் - மூக்குச் சுரிந்திருக்கின்ற சங்குகள். 
The city folks welcome Lord Civan and offer Him food in the skull bowl, carried by Him. He consumes that food. He comes into view in the sky with radiance. To enable the people on this earth to come and adore His holy feet, He wears on His fragrant chest the hooded snake, tortoise shell and the seed of Claeocarpus . He is enshrined in Thiru-k-kazhu-malam near the sea, over which clouds gather and the waves surcharged with abundant waters roll and shore up attractive pearls, rows of curved shells, bright red coral beads, and all kinds of gems. If we contemplate on the temple in Thiru-k-kazhu-malam and adore Lord Civan enshrined therein, the evil effects of our bad karma will leave us. 
Note: Civa's ornaments are objects of our constant adoration.

முன்னுயிர்த் தோற்றமுமிறுதியுமாகி 
முடியுடை யமரர்களடி பணிந்தேத்தப் 
பின்னியசடை மிசைப்பிறை நிறைவித்த 
பேரருளாளனார் பேணியகோயில் 
பொன்னியல் நறுமலர் புனலொடுதூபஞ் 
சாந்தமுமேந்திய கையினராகிக் 
கன்னியர் நாள்தொறும் வேடமேபரவுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 6

முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, 
முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த, 
பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த 
பேர்அருளாளனார் பேணிய கோயில் - 
பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் 
சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி, 
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் - 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமானார் முதலில் உயிர்த் தோற்றத்தையும் பின்னர் இறுதியில்
முக்தியையும் வழங்குபவர். முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து 
போற்ற, முறுக்கிய சடையின்மேல் பிறையை நிறைந்து சூடிய பேரருளாராகத் திகழ்கின்றார். 
இப்பெருமான் விரும்பிப் போற்றிய கோயில் திருக்கழுமலம் ஆகும். பொன் போன்ற மணம் 
பொருந்திய மலர்களும், புனல், தூபம், சந்தனம் முதலியன ஏந்திய கையினராய் 
விளங்குகின்றார். கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய 
வடிவங்களைப் போற்றி வழிபடுகின்றனர். அவர்கள் கழுமலத்தை நினைத்து அங்குள்ள 
இறைவனை வணங்க, அவர்கள் வினைத் தீமைகள் அறுபட்டுப் போகின்றன.

குறிப்புரை: முன் - சர்வ சங்காரகாலத்து. உயிர்த்தோற்றமும் இறுதியும் ஆகி - உயிர்களை உடம்போடு 
புணர்த்துகின்ற பிறப்பும் அவற்றைப் பிரிக்கின்ற இறுதியும் ஆகிய இரண்டிற்கும் காரணமாகி, கன்னியர் 
மலர் தூபம் சாந்தம் ஏந்திய கையினராகிப் பரவும் கழுமலம் எனக் கூட்டுக. 
Lord Civan evolves human body and also dissolves them; His feet are hailed by the crowned Devaas. He is the immensely merciful One who sports on His plaited matted hair the crescent moon. His cherished shrine is Thiru-k-kazhu-malam, where His Civa form is daily worshipped by virgins who carry in their hands fragrant golden coloured flowers, holy water, sandal paste and articles needed for holy fumigation (burning incense). If we contemplate on the temple in Thiru-k-kazhu-malam and worship Lord Civan therein the bad effects of our evil karma will vanish. 
Note: Tonipuram: The Ark-shaped shrine in Thiru-k-kazhu-malam.

கொலைக்கணித்.தாவருகூற்று தைசெய்தார் 
குரைகழல்பணிந் தவர்க்கருளி யபொருளின் 
நிலைக்கணித் தாவரநினைய வல்லார்தந் 
நெடுந்துயர்தவிர்த் தஎந்நிமலருக் கிடமாம் 
மலைக்கணித் தாவரவன்றிரை முரல 
மதுவிரிபுன்னைகள் முத்தென அரும்பக் 
கலைக்கணங் கானலின்நீழ லில்வாழுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 7

கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் 
குரைகழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் 
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் 
நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம்ஆம் - 
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, 
மது விரி புன்னைகள் முத்து என அரும்ப, 
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும்- 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சிவபெருமானார், தனது பக்தனான மார்க்கண்டேயரைக் கொலை செய்ய வந்த 
கூற்றுவனான யமனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் 
பணிந்தவர்களுக்கு உரியதான, நிலைத்த வீட்டின்பத்தை அருளுபவர். தம்மை நினைய 
வல்லவர்களுக்கு பிறப்பு இறப்பு என்னும் நெடுந்துயரத்தை தவிர்ப்பவர். இந்த மாசற்ற 
இறைவர் திருக்கழுமலத்தைத் தம் இடமாகக் கொண்டுள்ளார். மலைகளுக்கு அணிகலனாக
விளங்கும் தோணிமலைக்கு அருகில் வலிய அலைகள் ஒலிக்கின்றன. தேன் நிறைந்த 
புன்னைகள் முத்தென அரும்புகின்றன. கடற்கரைச் சோலைகளின் நிழல்களில் மான் 
இனங்கள் வாழுகின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை 
வணங்க நம் வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: கொலைக்கு அணித்தாவருகூற்று - கொலையை அணிய தாக்க வருகின்ற யமன். 
குரைகழல் - ஒலிக்குங்கழல். பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு - வணங்கிய 
அடியார்களுக்கு அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலைக்கு. அணித்தாவர - அணுகிவர. மலைக்கு - 
தோணிமலைக்கு. வன்திரை அணித்தாவர முரல - வலிய அலைகள் அணுகி வரவும் ஒலிக்கவும். மது - 
தேன். கலைக்கணம் - மான் கூட்டம். கானல் - கடற்கரைச் சோலை. 
Lord Civan kicked Yaman to death - Yaman, the messenger of Death who came close to His devotee Maarkandeyan to snatch away His life. He is the Supreme Being ever pure; He is keen to end the miseries of all those who adore His feet - decked with resounding anklets - and granting unto them the gift of eternal beatitude for which they are eligible. He is enshrined in Thiru-k-kazhu-malam where (during the great dissolution days) big waves roar and dash against Thonimalai (hillock temple of this town) making a loud thunderous noise. In the coastal gardens of this town the flowers of Alexandrian laurel  bloom like pearls and herds of deer thrive. If we contemplate on the temple in Thiru-k-kazhu-malam and adore Lord Civan therein, the bad effects of our evil karma will vanish.

புயம்பல வுடையதென் னிலங்கையர் வேந்தன் 
பொருவரை யெடுத்தவன் பொன்முடிதிண்டோள் 
பயம்பல படஅடர்த்தரு ளியபெருமான் 
பரிவொடுமினி துறைகோயி லதாகும் 
வியன்பல விண்ணினும் மண்ணினுமெங்கும் 
வேறுவேறு கங்களிற்பெய ருளதென்னக் 
கயம்பல படக்கடற்றி ரைகரைக் கெற்றுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 8

புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், 
பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள் 
பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் 
பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் - 
வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் 
வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன, 
கயம்பல படக் கடல்-திரை கரைக்கு ஏற்றும்- 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: தென் இலங்கை மன்னனான இராவணன் தோள்கள் பலவற்றை உடையவன். 
கயிலை மலையைப் பெயர்க்கத் துணிந்தவன். அவனது பொன் மயமான கிரீடங்களையும், 
வலிமையான தோள்களையும் பலவகைகளில் அச்சப்படுமாறு அடர்த்து அருளிய பெருமான் 
சிவபெருமானாகும். இப்பெருமான் பேரன்போடும் பெரு மகிழ்ச்சியோடும் உறையும் 
கோயில் திருக்கழுமலம் ஆகும். அகன்ற பல ஆகாயத்திலும், மண்ணுலகு எங்கிலும், வேறு 
வேறு யுகங்களிலும், இக்கோயில் வேறு வேறு பெயருடையதாக விளங்குகின்றது. 
நீர்த்துளிகள் பலவாகத் தோன்றவும், கடலின் அலைகள் தொடர்ந்து வந்து மோதுவதுமாக 
இருக்கின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்க நம் 
வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: புயம் பல உடைய - இருபது தோள்களை உடைய. பயம் பலபட - பல வகையில் அச்சப்பட. 
பரிவொடும் - விருப்பத்தோடும். வியன் பல விண்ணினும் - அகன்ற பலவாகிய ஆகாயத்தினும் வேறு 
வேறு உகங்களில் பெயர் உளது என்ன - ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரை உடையதென்று. 
கயம் - யானை. நீர் எனினும் ஆம். 
The king of southern Sri Lanka who had many heads and shoulders, once tried to lift the mount Kailash, the abode of Lord Civan. Our Lord pressed the mountain by His toe and crushed His golden crowns and mighty shoulders. The king was seized with considerable dread and repented. Eventually Lord Civan blessed him. This Lord Civan desired to be entempled in Thiru-k-kazhu-malam gladly. In all the four ages of the world this town is known by different names both in this earth and in the expansive eternal world. Because of heavy rain, the waves of the sea continuously dash against the shores. If we contemplate on the temple in Thiru-k- kazhu-malam and adore Lord Civan therein, the bad effects of our evil karma will vanish.

விலங்கலொன் றேந்திவன்மழை தடுத்தோனும் 
வெறிகமழ்தா மரையோனு மென்றிவர்தம் 
பலங்களால்நே டியுமறிவரிதாய 
பரிசினன் மருவி நின்றினிது றைகோயில் 
மலங்கிவன்றி ரைவரையெனப் பரந்தெங்கும் 
மறிகடலோங்கி வெள்ளிப்பியுஞ் சுமந்து 
கலங்கடன்சரக் கொடுநிரக்கவந் தேறுங் 
கழுமலநினைய நம்வினை கரிசறுமே. 9

விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், 
வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம் 
பலங்களால் நேடியும் அறிவு அரிதுஆய 
பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் - 
மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் 
மறி கடல் ஒங்கி, வெள்இப்பியும் சுமந்து, 
கலங்கள் தன் சரக்கொடு நிரக்க வந்து ஏறும்- 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: திருமால், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தவன். 
பிரமன், மணம் கமழும் தாமரையில் தோன்றியவன். இவர்கள் இருவரும் தமது உடல் 
பலத்தால் தேடியும் அறிய முடியாத வடிவை உடைய சிறப்பினர் சிவபெருமானார். 
இப்பெருமானார் விரும்பி வந்து, இன்பம் தருமாறு உறையும் கோயில் திருக்கழுமலம் ஆகும். 
வலிமையான கடல் அலைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கலங்கி மலைகளைப் போல 
எங்கும் பரவி, கரையில் மோதி மீளுகின்றன. கடலில் மரக்கலங்கள் வெள்ளிய முத்துச் 
சிப்பிகளைச் சுமந்து, தன்னிடத்தில் ஏற்றப்பட்ட சரக்கோடு, வரிசையாக கரையை நோக்கி 
வருகின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வழிபட நம் 
வினைத் தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: விலங்கல் - கோவர்த்தன கிரி. தம் பலங்களால் - தமது உடற்பலத்தால். மலங்கி - கலங்கி. 
வரையென - மலையைப் போல. கலங்கள் தன்சரக்கொடு நிரக்க - கப்பல்கள் தன்னிடத்து 
ஏற்றப்பட்டுள்ள சரக்கோடு வரிசையாக. 
In one of the avatars of Thirumaal as Krishna, he lifted up a celebrated hill called as Goverthana Giri . He holded it up in the shy and sheltered the cows and cowherds from a rain storm sent by Indra. Brahma is normally seated over the fragrant Lotus flower. These two with all their might quested after Lord Civan in vain; such is Lord Civan's stature. With love and joy He abides in Thiru-k-kazhu-malam close to which is the sea. The white waves rising aloft everywhere like a mountain- range, dash against the shore and return back to the sea. Barges carrying goods together with white pearl shells drive in rows towards the shore. If we contemplate on the temple in Thiru-k-kazhu-malam and adore Lord Civan therein, the bad effects of our evil karma will vanish.

ஆம்பலதவ முயன்றறவுரை சொல்லு 
மறிவிலாச் சமணருந் தேரருங்கணிசேர் 
நோம்பலதவ மறியாதவர் நொடிந்த 
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச் 
சாம்பலும்பூசி வெண்டலை கலனாகத் 
தையலாரிடுபலி வையகத்தேற்றுக் 
காம்பனதோளி யொடினிதுறை கோயில் 
கழுமல நினைய நம்வினை கரிசறுமே. 10

ஆம் பலதவம் முயன்ற அறஉரை சொல்லும் 
அறிவு இலாச் சமணரும், தேரரும், கணி சேர் 
நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த 
மூதுரை கொள்கிலா முதல்வர் - தம் மேனிச் 
சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் 
தையலார் இடு பலி வையகத்து ஏற்று, - 
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் 
கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

பொருள்: சமணரும் புத்தரும் அவர்களால் இயன்ற அளவு பல தலங்கள் தோறும் சென்று, 
அறிவற்ற அறவுரைகளை மக்களிடையே பரப்பி வருகின்றனர். அவர்கள், மெய்யான தவம் 
பலவற்றின் உண்மையான கருத்துக்களைப் புரிந்து கொள்ளாதவர்கள். ஆதலால் அவர்கள் 
கூறிவரும் நகைப்புக்கிடமான உரைகளை ஏற்று அருளாதவர் நம் சிவபெருமான். நம் 
முதல்வரான சிவபெருமான் தம் மேனியில் திருநீற்றைப் பூசியிருப்பவர். வெண்டலையை 
உண்கலனாகக் கொண்டு மகளிர் இடும் பலியை ஏற்பவர். மூங்கில் போன்ற தோள்களை 
உடைய உமையம்மையோடு மகிழ்ச்சியாக உறையும் கோயில் திருக்கழுமலம் ஆகும். இந்த
அழிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்கினால் நம் 
வினைத்தீமைகள் அறுபட்டுப் போகும்.

குறிப்புரை: ஆம்பலதவம் முயன்று - ஆகிய பலவிதமான தவங்களைச் செய்து. தேரர் - புத்தர். 
கணிசேர் - எண்ணத்தக்க. நோம்பல தவம் - துன்பத்தைத் தரும் பல தவங்களை. அறியாதவர் - 
அறியாதவர்களாய். நொடிந்த - சொன்ன. தையலார் - பெண்கள். காம்பு அனதோளியோடு - 
மூங்கிலையொத்த.தோளை உடைய உமாதேவியோடு. 
Lord Civan is the One who never concedes with the pseudo words of wisdom uttered by the brainless Samanars who undertake different kinds of austerities and come forward to advise others. Also the Buddhists who are unacquainted with the many forms of taxing austerities, come forward to tell us all sorts of meaningless adages. Lord Civan will not pay heed to any of their sayings. He smears His body with holy ashes, carries a white human skull as His begging bowl and receives alms from women. He is entempled in Thiru-k-kazhu-malam happily with His consort Umaa 
Devi whose shoulders are like bamboo. If we contemplate on the temple in Thiru-k- kazhu-malam and adore Lord Civan therein, the bad effects of our evil karma will vanish.

கலிகெழு பாரிடையூரென வுளதாங் 
கழுமலம்விரும்பியகோயில் கொண்டவர்மேல் 
வலிகெழு மனமிகவைத் தவன்மறைசேர் 
வருங்கலைஞான சம்பந்தனதமிழின் 
ஒலிகெழு மாலையென்று ரைசெய்தபத்து 
முண்மையினால் நினைந்தேத்த வல்லார்மேல் 
மெலிகெழு துயரடையா வினைசிந்தும் ' 
விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே. 11

கலி கெழு பார் இடை ஊர் என உளதுஆம் 
கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல், 
வலி கெழு மனம் மிகவைத்தவன் மறைசேர்- 
வரும் கலை ஞானசம்பந்தன தமிழின் 
ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் 
உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல் 
மெலி கெழு துயர் அடையா; வினை சிந்தும்; 
விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே.

பொருள்: ஆரவாரம் மிக்க இந்த உலகத்தில், ஊர் எனப் போற்றப் பெறும் தலம் 
திருக்கழுமலம் ஆகும். இந்தக் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டவர் சிவபெருமான். 
இப்பெருமான் மேல் உறுதியோடு தன் மனத்தை வைத்திருப்பவர் ஞானசம்பந்தன். இவர் 
வேதங்களிலும் கலைகளிலும் வல்லவர். தமிழ் மொழியின் இசையோடு இப்பதிகத்தை 
மாலையாகப் பாடினார். இந்தப் பத்துப் பாடல்களின் உண்மைப் பொருளை உணர்ந்து
துதித்துப் பாட வல்லவர்கள், மெலிவைத் தரும் துன்பங்களை அடைய மாட்டார்கள். 
அவர்களுடைய வினைகளும் நீங்கிவிடும். அவர்கள் விண்ணவரிலும் மேம்பட்ட ஆற்றலைப் 
பெறுவார்கள்.

குறிப்புரை: கலிகெழுபார் - ஒலிமிக்க உலகம். வலிகெழு மனம் - உறுதியான மனம். ஒலிகெழு மாலை - 
இசையோடு கூடிய மாலை. மெலிகெழு துயர் - மெலிவைச் சேர்க்கும் துன்பம். 
The mind of Gnaanasambandan is firmly fixed on to Lord Civan who willingly abides in Thiru-k-kazhu-malam - the town of towns in the bustling world. He is an adept in Vedas and in all scriptures. He has sung in tuneful music this hymn in Tamil, a garland of ten verses. Those who can understand and adore Lord Civan with deep devotion singing these ten verses will be relieved of excruciating misery; their bad karma will cease to be and they will achieve valour far greater than that of celestial beings.

திருச்சிற்றம்பலம்

79ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
80. கோயில் (தில்லை - சிதம்பரம்)

திருத்தல வரலாறு:

இத்தலம் சிதம்பரம் என வழங்கப்படுகின்றது. சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலம். 
சென்னை - திருச்சி நேர்வழி இருப்புப்பாதையில் சிதம்பரம் இரயில் நிலையம் உள்ளது. 
தமிழகத்தின் அனைத்து நகர்களில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. தில்லை, சிதாகாச 
க்ஷேத்திரம், பெரும்பற்றப்புலியூர் என்பன இதன் மறுபெயர்கள். மைத்ரேய உபநிஷதம் ‘இருதயாகாச 
மயம் கோசம் ஆனந்தம் பரமாலயம்’ எனக் குறிப்பிடுகின்றது. திருமந்திரத்தில் திருவம்பலச் 
சக்கரம், திருக்கூத்து, சிதம்பரம் முதலியன குறிப்பிடப் படுவதால் இதன் தொன்மை விளங்கும். 
கீஸ்ட் லிச் பேராசிரியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் 10, 11 வரையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் 
இங்கு இருக்கின்றன என்கிறார். இத்தலத்தின் கிழக்கே, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 
அமைந்துள்ளது. திருவேட்களம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலமும் அண்ணாமலைப் பல்கலைக் 
கழக வளாகத்தினுள் உள்ளது.

மூர்த்திகள்:

திருமூலட்டானேசுரா், உமையம்மை, முக்குறுணி விநாயகர், கற்பக விநாயகர், பாண்டிய 
நாயகம், அம்மன், நவலிங்கம், துர்க்கை முதலியன மிக விளக்கம் வாய்ந்தவை. வைஷ்ணவத்தில் 
திருச்சித்திரகூடம் என வழங்கும், பெருமாள் தில்லைக் கோவிந்தராசர், தாயார் புண்டரீக வல்லித் 
தாயார். ஐந்து சபைகளுள் இது கனகசபை. இத்தலத்திலேயே ஐந்து சபைகள் உள்ளன. அவை
சிற்சபை (இது நடராசப் பெருமான் இருக்குமிடம். கனகசபை (சிற்சபைக்கு முன்னால் உள்ள 
பகுதி), ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்), நிருத்த சபை (நடராசப் பெருமானின் கொடி மரத்திற்கு 
அருகில் உள்ளது, தேவசபை (உற்சவமுர்த்திகள் தங்குமிடம்) என்பன. இத்தலத்துச் சிறப்புடைக் 
கடவுள் ஆனந்த நடராசர். அவருடைய திருமேனி முழுவதும் பஞ்சாக்கர வடிவம். அவருடைய 
திருக்கூத்து ஒரே காலத்தில் ஐந்து தொழிலையும் குறிப்பிப்பது.

திருமுறை 80. கோயில் (தில்லை சிதம்பரம்) 
தீர்த்தங்கள்:

சிவகங்கை, பரமானந்தகூபம், புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம், ஆனந்தத் தீர்த்தம், 
நாகசேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல் முதலியன. நடராசப் பெருமானோடு 
உடனாடிய காளிதேவி அவன் ஆடும் ஆட்டத்தையே தானும் ஆடிக்கொண்டிருந்தாள்; இறைவன் 
ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது சமயம் தரையில் விழுந்த காதணியைத் தன் கால் 
விரல்களால் பற்றிக் கொண்டு, அந்தக் காலைத் தன் இடுப்பிலிருந்து தூக்கிக் காதணியைக் காதில் 
மாட்டி நடனத்தை விடாது செய்து வந்தார். காளிதேவி, பெண்மையின் நாணத்தால் அவ்வாறு
காலைத் தூக்கி ஆடமுடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனுக்கு முன் தன் 
ஆணவம் செல்லாது என்பதை உணர்ந்து, வருந்தி, வணங்கி நின்றாள். அந்தக் காளியின் கோயில் 
இந்தச் சிவப்பிரியைத் தீர்த்தத்தின் கீழ்க்கரையில், சிதம்பரத்தின் வட எல்லையில் இருக்கிறது. 
தலவிருட்சம் ஆல். இது இன்று இல்லை. தில்லை வனம் என்ற பெயரால் தலவிருட்சம் தில்லை 
என்பாரும் உளர்.

கல்வெட்டு:

சிதம்பரம் ஒரு தனி ஊராக அரசன் நேர் பார்வையில் இருந்து வந்தது. இதனைச் சூழப் 
பதினான்கு சிற்றூர்கள் இருந்தனவாகக் குறிக்கப்பட்டு உள்ளன. இத்தலத்தின் பழைய பெயர் 
சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர், பொற்புலியூர், தில்லை, தில்லையூர், கோயில் என்று 
கல்வெட்டுக்களில் வழங்கப்படுகிறது. தில்லையின் தேவ காரியக் கண்காணிப்பாளர்களே 
சோழநாடு முழுமைக்கும் தேவாலயக் கண்காணிப்பாளராக இருந்து வந்தனர். சோழ 
மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை தில்லை தேவகாரியக் குழுவினர்க்கே இருந்தது. 
கல்வெட்டுக்களில் மிகப் பழமையானதாகிய இராஜேந்திர சோழ தேவனுடைய 24 ஆம் 
ஆண்டுக் கல்வெட்டும், குலோத்துங்க சோழ தேவனுடைய 47ஆம் ஆண்டுக் கல்வெட்டும் 
கனகசபையையும் திருமூலட்டானத்தையும் பிரிக்கும் சுவரில் உள்ளன.

கனக சபையைச் சுற்றியுள்ள பிராகாரம் விக்கிரமசோழன் திருமாளிகை என்றும், 
திருமூலட்டானத்தைச் சேர வருகின்ற இரண்டாம் பிராகாரம் குலோத்துங்க சோழன் திருமாளிகை 
என்றும், அதற்கும் வெளியிலுள்ள மூன்றாம் பிராகாரம் இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை 
என்றும் வழங்கப்பட்டன. இவற்றுள் குலோத்துங்கன் சோழன் திருமாளிகை என்ற பெயரும் 
விக்கிரமசோழன் திருமாளிகை ௭ன்ற பெயரும் மேற்குறித்த சுவரில் உள்ள கல்வெட்டுக் களிலேயே 
காணப்படுகின்றமையின், விக்கிரமனே தன் தந்தையாகிய குலோத்துங்கன் பெயரால் 
உட்பிராகாரத்தையும், தன்பெயரால் இரண்டாம் பிராகாரத்தையும் செய்திருக்க வேண்டும் என்று 
தெரிகிறது.

சம்பந்தர் முதலிய மூவர் காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருக்கவும், அவர்கள் காலத்திய 
பல்லவ வேந்தர்களின் கல்வெட்டு ஒன்றும் இதில் காணப்பெறாமை விளங்கவில்லை. 
சிதம்பரத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 271 உள்ளன. அவைகளுள் பெரும்பாலன 
கோப்பெருஞ்சிங்க அரசனைப் பற்றியும், ஜடாவர்மன் சுந்தர பாண்டியனைப் பற்றியும் கூறுவன. 
முதலாம் இராஜேந்திரன் காலத்திலிருந்து மூன்றாம் இராஜராஜன் வரை உள்ள பலருடைய 
கல்வெட்டுக்களும் விஜயநகர மன்னா்களின் கல்வெட்டுக்களும் நாயக்க மன்னர்களின்
கல்வெட்டுக்களும் இருக்கின்றன.

இவைகளுள் பெரும்பாலனவற்றில் நந்தவனப் பணிகளே அறிவிக்கப்பட்டு உள்ளன. மிகச்
சிலவற்றுள் பூசை வழிபாட்டுக்கு உரிய நிவந்தங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அறச்சாலைகளைப் 
பற்றியும், அக்கிரகாரங்கள் அமைப்பதைப் பற்றியும், திருப்பாவாடை (மூலவர் முன் ஆடை விரித்து 
அதில் படைக்கும் அன்னம்) போடுவதைப் பற்றியும் தெரிவிக்கின்றன. சில கல்வெட்டுக்கள். 
விக்கிரம சோழனது காலம் வரையில் கோயிற் சார்பாக நடைபெற்ற சாசனங்கள் எல்லாம்
திருப்புலியூர்ச் சண்டேசுவர தேவ நாயனார் பெயராலேயே நடை.பெற்று வந்திருக்கின்றன. இவன் 
காலத்துக்குப் பிறகு கோயில் கண்காணிப்புச் சபையின் பெயராலேயே எல்லாச் சாசனங்களும் 
நடைபெற்று வந்திருக்கின்றன.

அரசாங்கத் தலைமை அதிகாரிகளும், உள் நாயகத்தார்களும், சீகாரியம் 
செய்வார்களுமாகப் பலர் மேற்கூறிய சபையின் அங்கத்தினாரகளாக இருந்து, கோயிற் 
காரியங்களை மேற்பார்வை செய்து வந்துள்ளார்கள். சிதம்பரம் திருக்கோயிலைக் 
கண்காணித்தவர்களாக (1) தொண்டைமான்; (2) திருவையாறு உடையான்; (3) மதுராந்தகப் 
பிரமராயன்; (4) தில்லையம்பல பேரரையன்; (5) விழிஞத்தரையன்; (6) இராஜராஜ விழுப்பரையன்; 
(7) சித்தரையன்; (8) வில்லவரையன்; (9) அங்கராயன்; (10) சிங்களராயன்; (11) விஜய ராயன்; 
(12) மூவேந்தரையன்; (13) வாணதரையன்; (14) வயல்நாட்டரையன்; (15) பொத்தப்பிச் சோழன்; 
(16) காரணை விழுப்பரையன்; (17) குருகுலராயன்; (18) மழவராயன்; (19) காடு வெட்டி; 
(20) வயிராதிராயன்; (21) விலாடராயன்; (22) விக்ரம சோழப்பிரம ராயன்; (23) விள நாடு உடையான்; 
(24) நிகரில் சோழப்பல்லவரையன்; (25) குலோத்துங்க சோழவாண கோவரையன்; (26) எதிரில் சோழ 
வேளான்; (27) நரசிம்மவர்மன்; (28) பாண்டியராயன்; (29) மலையப்பிராயன்; (30) வேணாடுடையான் 
முதலிய பலர் குறிக்கப்படுகிறார்கள்.

கிழக்கு, தெற்கு, மேற்குக் கோபுரங்களை முடிசூடிய மன்னர்கள் கட்டியதாகவும், வடக்குக் 
கோபுரத்தைக் கடவுள் தானே கட்டிக் கொண்டதாகவும், எஸ். ஐ. ஐ. 374 - 1913 கல்வெட்டுப் 
பாட்டொன்று அறிவிக்கிறது. இவ்வடக்குக் கோபுரத்தைக் கிருஷ்ண தேவராயன் தொடங்கி நிலை 
மட்டம் வரையிலோ, அல்லது அதற்கு மேலுமோ நிறுத்திய தாகவும், அச்சுத தேவராயன் இதனை 
முற்றுப் பெறுவித்ததாகவும் கல்வெட்டுக்களால் யூகிக்க இடந்தருவதால் கடவுள் தானே கட்டிக் 
கொண்டார் என்று கல்வெட்டு உபசாரமாகக் கூறுகிறது போலும். தெற்குக் கோபுரம்
கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. இவனுக்கு அழகிய சிங்கன் என்ற மற்றொரு 
பெயருமுண்டாதலால் இக்கோபுரம் சொக்கசீயம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெற்கில் 
சொக்கச்சீயம், திருநிலை யேழுகோபுரத் திருவாசல் திருப்பணிக்கு உடலாகத் தொண்டை நாட்டு 
ஆத்தூரில் நிலம் விட்டதாக வரும் ஆத்தூர் முத்தீசுரமுடையார் கல்வெட்டும், கச்சிஏகம்பமுடையார் 
கல்வெட்டும் தெரிவிக்கின்றன.

மேலைக் கோபுரத்தைத் திருப்பணி செய்த சிற்பிகள் விருத்தகிரி சேவகப் பெருமாளும் 
அவன் மகன் விச்வமித்துருவும், திருப்பிரைக்குடையாசாரி திருமருங்கனும், அவன் சகோதரன் 
சாரணாசாரியும் ஆவார்கள் எனக் கல்வெட்டுக் காட்டுகிறது. இன்னும் அதிலேயே கீழ்ப்புறச் 
சுவரில் காமதேவன், அகத்தியன், சீதேவி, தேவேந்திரன், கணேசன், துர்க்கை, இவ்வுருவங்களும் 
வடபுறச்சுவரில் ருத்ரதேவர், ராகு கேதுக்கள், நாரதன், அளகேசன், சந்திரன், கிரியாசக்தி, சனி, 
வாயு இவ்வுருவங்களும் மேல்புறச் சுவரில் க்ஷேத்ர பாலப் பிள்ளையார், கங்காதேவி, தன்வந்திரி, 
திரிபுரசுந்தரி, சுக்கிரன், வைஜயன், நாகன், யமுனை, பத்ரகாளி, ஆதிசண்டீசர் இவ்வுருவங்களும், 
தென்சுவரில். புதன், நிருதி, ஞானசக்தி, அக்னிதேவன் இவ்வுருவங்களும் இருப்பனவாக 
அறிவிக்கிறது. தேவாரம் பாடிய மூவர் முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 
ஆகிய மூவருக்கும் தனித்தனியே ஆலயங்கள் இருந்தனவாகக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

வடக்குக் கோபுரத்தை அடுத்துத் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற ஒன்று 
குறிப்பிடப்படுகிறது. இதில், திருத்தொண்டத் தொகையில் பாராட்டப் பெற்ற தனிஅடியார் அறுபத்து 
மூவரும், தொகையடியார் ஒன்பதின்மருமாக உள்ள பெருமக்களில், தனியடியார் களுக்குத் 
தனித்தனித் திருவுருவம் அமைக்கப் பெற்றமை போலத் தொகையடியார் களாகிய 
கூட்டத்தினருக்குத் தனித்தனி உருவம் அமைக்க முடியாமையின் ஒவ்வொரு தொகுதிக்கும் 
ஒவ்வொரு இலிங்கத் திருமேனியாக எழுந்தருளச் செய்திருக்கிறது. முத்தி அடைந்த பெருமக்களை 
உருவம் தெரிந்தால் உருவம் அமைத்தும், உரு அமைக்க முடியாததற்கு சிவலிங்கம் தாபித்தும், 
அதுவும் இல்லையானால், பீடங்கள் அமைத்தும் வழிபடலாம் என்று ஆகமம் கூறுகிறது. ஆதலால், 
உருவம் அமைக்க முடியாத தொகை யடியார்களைச் சிவலிங்கத் திருமேனி வாயிலாக வழிபட 
வேண்டி, திருத்தொண்ட தொகைமீச்சரம் என்ற இக்கோயிலை அமைத்து உள்ளார்கள். அன்றியும் 
தொண்டத் தொகை பாடிய சுந்தரர் வடக்கு வாயில் வழியாக வந்தார் என்பது ஊன்றிக் கருதத் 
தக்கது. இவ்வாலயம் நவலிங்கம் கோயில் என இப்பொழுது வழங்கப்படுகிறது.

மூர்த்திகளின் திருநாமங்கள்: பொன்னம்பலக் கூத்தன், பொன்னம்பல நாதன், ஆனந்த 
தாண்டவப் பெருமாள் நாயனார், அழகிய திருச்சிற்றம்பலம் உடையார், ஆளுடைய நாயனார், 
சிதம்பரேசுவரர், தில்லை நாயகத் தம்பிரானார் முதலான பலபெயர்களால் குறிக்கப்படுகிறார். 
திருச்சிற்றம்பலக் கோவையில் மாணிக்கக் கூத்தன் என்றும் இறைவன் பெயர் வழங்கப்படுகின்றது. 
அதற்குப் பேராசிரியர், மாணிக்கம்போலும் கூத்தினை உடையான் என்று உரை கண்டார். 
ஆனாலும், அது இரத்தின சபாபதியாகிய மரகத நடராஜரைக் குறிப்பது என்பது தெளிவு.

அம்மை சிவகாமசுந்தரி என்றும், திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் 
வழங்கப்படுகிறார். சிவகாமசுந்தரி என்பது சிற்சபையில் இறைவன் இடப்பாகத்தில் எழுந்தருளி 
இருக்கும் அம்மையைக் குறிப்பதாகும். முக்குறுணி விநாயகர், முகக் கட்டணத்து விநாயகர் 
எனவும், குலோத்துங்க சோழ விநாயகர் எனவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் படுகின்றார். 
முகக்கட்டணம் என்பது முகப்பு தில்லைக்குத் தெற்குக் கோபுரமே சிறந்த பெருவாயில். 
அவ்வழியாகவே நடராஜப் பெருமானை வழிபடச் செல்கின்றவர்கள் செல்வது முறையாம். நடராஜப் 
பெருமானின் திருமுன்பும் இதுவே ஆதலால் முகப்பில் இருக்கும் பிள்ளையார் முகக்கட்டண 
விநாயகர் எனக் குறிப்பிடப்படுகிறார். முகக் கட்டணம் என்பது முக்கணமாகி - முக்கணம் 
முக்குணியாக, போலி இலக்கண அறிவு அதனை முக்குறுணியாக்கிவிட்டது. அதன் உருவத்தின் 
பெருமையையொட்டி, முக்குறுணி அரிசிக்கு ஒரே மோதகம் செய்து நிவேதிக்கப்படுவதால் 
இப்பெயர் உண்டாயிற்றென்ற செவிவழிச் செய்தியும் கிளைத்து விட்டது.

விக்கிரம சோழன் தெற்குத் திருவீதியில் வடபக்கத்துச் செங்கனி வாயான் திருநந்தவனத்து 
எழுந்தருளியிருக்கும் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பண்டார உடலிட்டும் என்ற குறிப்பு காணப் 
பெறுவதால் விக்கிரமசோழன் திருவீதியில் திருஞான சம்பந்தருக்குத் தனியாகக் கோயில் 
இருந்தமை தெற்றெனப் புலப்படும். மேலைக் கோபுரத்தை அடுத்து, திருநாவுக்கரசருக்குத் 
தனிமடம் இருந்ததாகக் காட்டப்பெறுகிறது. முருகன், சுப்பிரமணியப் பிள்ளையார் என்று ஒரு 
கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார். கற்பக விநாயகர், க்ஷேத்திர பாலப் பிள்ளையார் என்றும், 
குலோத்துங்க சோழ விநாயகர் என்றும் குறிப்பிடப் படுகின்றார். தில்லைக்காளி, தில்லை 
வனமுடைய பரமேசுவரி என்று குறிப்பிடப் படுகின்றார்.

விழாக்கள்:

தில்லையில் திரு ஆனித் திருநாளும், மார்கழித் திருவாதிரைத் திருநாளும் சிறப்பாகக் 
கோப்பெருஞ்சிங்கன் காலத்து முன்பிருந்தே நடைபெற்று வந்தன. மாசி மாதத்தில் ஒரு திருவிழா 
நடந்ததாகத் தெரிகிறது. அதில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பம் செய்யப் பெற்று வந்தது. 
ஏனைச் சிவத் தலங்களில் அம்மைக்கு ஆடிப்பூர விழா நடைபெற்று வருவது போல இங்கு ஐப்பசிப் 
பூரவிழா நடைபெற்று வருகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று நடைபெறும் கடலாட்டு விழாவும் 
குறிப்பிடப்படுகின்றது. திருப்புதியது விழா என்று ஒன்று காணப்படுகிறது. அதில் அம்மைக்குப் 
புதிய ஆடை சாத்தியதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. திருப்புடைவையீடுவிழா என்றும் அது 
வழங்கப் பெற்றுப் பின் திருப்புதியது விழா என்று வந்திருக்கலாமோ என்று கருத இடமுண்டு. 
அன்றி, திருப்பாலி வளத்திருநாள் என்று ஒரு விழா குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஐப்பசிப் பூரத் 
திருநாளைக் குறிப்பதாகுமோ என ஐயந்தருகிறது. இதில் அம்மை நீராடி, வெள்ளணி அணிந்து, 
பயறு முதலிய நவதானியங்களின் முளையைத் தன்மடியில் தரிக்கும் நாளாதலின் பாலிவளத் 
திருநாள் எனப்பட்டது போலும் (பாலி - நவதானிய முளை), வசந்தத் திருநாள் என்பது பெருமான் 
வசந்த உற்சவம் கொண்டாடக் குலோத்துங்கன் தோப்புக்கு எழுந்தருளியதாகத் தெரிகிறது. 
திருக்கண் சாத்தும் திருநாளும், பெருமான் பரிவார நாயன்மார்களுக்குத் திருவருள் நோக்கம் 
செய்யும் திருநாளாகும் என அக்கல்வெட்டே குறிப்பிடுகிறது.

இந்த ஒன்பது விழாக்களையுமன்றி, எதிரிலி சோழன் சிவபாத சேகரன் சித்தத் துணைப் 
பெருமாள் விழா என ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சிவபாத சேகரன் என்பது, முதல் 
இராஜராஜனுக்கு வழங்கிய பெயர். எதிரிலி என்பது, முதல் குலோத்துங்கனாகிய இராஜராஜன் 
வரையில் இருந்த சோழ மன்னா்கட்குச் சித்தத் துணையாகவே இருந்து வந்த நடராஜப்
பெருமானுக்கு நடந்த பெருவிழாக்களையே இது குறிப்பிட்டதாகுமென ஊகிக்கலாம். இதுவன்றித் 
தைப்பூசத்தில் பாவாடையிட்டுப் பெரிய பூசை விழா ஒன்று நடத்தியதாகவும் தெரிகிறது. இத்தகைய 
திருவிழாக்கள் கல்வெட்டுக்களில் இருந்து அறிய வருகிறது என்பது சிந்திக்கத் தக்கதொன்று.

கீழக்கோபுரத்தின் வாயிலின் வலப்பக்கத்தில் காணப்பெறும் கல்வெட்டு, சோழகுல 
வல்லியால் நாயன்மார்களுடைய பாமாலையைப் பாராயணம் செய்விப்பதற்காக நிவந்தம் விட்டதை 
அறிவிக்கின்றது. முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மாசித் திருவிழாவில் அழகிய 
திருச்சிற்றம்பலம் உடைய நாயனார் சந்நிதியில் திருத்தொண்டத் தொகை பாராயணம்
'செய்வாருக்கு நிலம் விட்டதாக உள்ளது. திருஞானசம்பந்தர் தெற்குக் கோபுர வாசல் வழியாக 
உட்சென்று நடராசப்பெருமானை வழிபட்டதாகவும், திருநாவுக்கரசர் மேற்கு வாயில் வழியாகவும், 
சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் சென்று வழிபட்டனர் என்றும் பெரிய புராணம் 
அறிவிக்கின்றது. மாணிக்கவாசகர் கிழக்கு வாயில் வழியாக சென்று வழிபட்டார் என்று 
அறியப்படுகிறது. சம்பந்தர் முதலிய மூவருக்கும், தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய கோபுரங்களைச் 
சார இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகைத் திருவீதியில் தனித்தனியே திருக்கோயில் 
இருந்ததாகவும், அவற்றுள் சம்பந்தப் பிள்ளையார் திருக்கோயில் பொன்வேயப்பெற்று 
இருந்ததாகவும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. - இதனால் திருமுறைகளுக்கும், 
திருமுறைகளைப் பாடியருளிய சமயாச்சாரியர்களுக்கும் எவ்வளவு சிறப்பு - சிதம்பரத்திலிருந்தது 
என்பதை ஊன்றி நோக்க வேண்டும்.

அப்பூதியடிகள் நாவுக்கரசர் மீதிருந்த பற்றினால் நிலம் புலம் எல்லாவற்றிற்கும் அவர் 
பெயரிட்டு வழங்கியது போல, அரசர்கள் ஆனந்தக் கூத்தர் மீதிருந்த பற்றால், குடிஞைக் கல்லுக்கும் 
(ஒரு வகை எடைக்கல்),, மரக்காலுக்கும் ஆடவல்லான் என்று பெயரிட்டு வந்தனர். 
சிற்றூர்களுக்குத் தில்லை விடங்கன், கூத்தனூர், கோயிற்பூண்டி, சபாநாயகபுரம், தில்லை 
நாயகபுரம், நடராஜபுரம் என்றும், ஓடைநீர் நிலை முதலியவற்றிற்குக் கூத்தாடு நாயகன் திருவோடை, 
ஆளுடைய நாயகன் திருவோடை என்றும் பெயரிட்டு இருந்தனர். தம்மிடம் அரசகாரியம்
பார்ப்பாருக்குத் தில்லையம்பலப் பல்லவராயன், திருச்சிற்றம்பலம் உடையான் நக்கன், இளைய 
திருச்சிற்றம்பலம் உடையான், தில்லையம்பலப் பேரரையன் என்றும் பெயர் வைத்திருந்தமை 
அரசுர்கட்கு உள்ள அன்பின் முதிர்ச்சியை எடுத்துக்காட்டும் தக்க சான்றுகளாகும்.

இத்தலத்திற்குப் பணிசெய்த மன்னர்களில் பல்லவர்களில் இரணியவர்மன்,

கோப்பெருஞ்சிங்கன் முதலியோர்களும் பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், 
ஐடாவாமன். சுந்தரபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன் குலசேகரன் 
முதலியோர் குறிக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்களில் முதல் பராந்தகன் முதல் மூன்றாம் 
இராஜராஜன் வரையிலுமாகப் பதின்மர் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களில் இரணியவர்மனும், 
முதல் பராந்தகனும், மணலில் கூத்தன் காளிங்கனும், அனபாயன் முன்னோர்களும் அனபாயனும் 
பல காலங்களில் பொன் வேய்ந்தார்கள் என்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இன்னும் 
விஜயநகர மன்னர்களும், நாயக்க அரசர்களும், சேர அரசர்களும் திருப்பணிகள் மிகச் 
செய்துள்ளார்கள்.

பதிக வரலாறு:

சீகாழியினின்றும் புகலிவேந்தர், அடியார்களும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் சிவபாத . 
இருதயரும் அவருடன் உடன்வர வேண்டிக்கொண்டனர். தில்லை செல்லத் திருவுளங்கொண்ட 
பொழுது, அவருடன் அவர்கள் அனைவரும் கொள்ளிடத்தைக் கடந்தார்கள். தில்லையின் 
தெற்குவீதியை அணுகினார்கள். தில்லை வாழ் அந்தணார்கள் சிரபுரப் பிள்ளையாரை எதிர்கொண்டு 
அழைக்க, நகரை அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்ப்புறத்தே வந்து, அழைத்துச் 
சென்றார்கள். பிள்ளையார் திருவீதியைத் தொழுதனர். எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கினர். 
திருமுன்றில் திருமாளிகையையும் வலம் வந்து வணங்கிக் கொண்டு உட்புகுந்து திருவணுக்கன் 
திருவாயிலை அடைந்தார்கள். சிந்தையில் ஆர்வம் பெருகிற்று. கண்கள் ஆனந்த பாஷ்பம் 
பொழிந்தன. செங்கைகள் சிரமீது ஏறிக் குவிந்தன. இவ்வாறு உருகிய அன்பினராய் உட்புகுந்தார்.

இறைவன் தமக்களித்த சிவஞானமேயான திருவம்பலத்தையும், அந்த ஞானத்தால் 
விளைந்த ஆனந்தமாகிய கூத்தப் பெருமானையும் கண்ணாரக் கண்டு கும்பிட்டார். ஆனந்தக் 
கூத்தருக்கு உரிமையான தனிச்சிறப்பினையுடைய தில்லை வாழ் அந்தணரை முன் வைத்து 
'கற்றாங் கெரியோம்பி’ என்னும் இப்பதிகத்தை ஏழிசையும் ஓங்க எடுத்தார். திருக்கடைக்காப்பும் 
முடித்து, ஊனையும் உயிரையும் உருக்கும் ஒப்பற்ற கூத்தை வெட்ட வெளியிற் கண்டு திளைத்து, 
சிவானந்தப் பேறமுதுண்ட பிள்ளையார் ஆனந்த மேலீட்டால் அழுதார். 
80. KOYIL (THILLAI-CHIDAMBARAM) 
HISTORY OF THE PLACE

This sacred place is to the north of river Cauvery in Chola Naadu. It has a railway station in the mainline train route between Chennai and Thiruchchi. The town is also connected to every major towns and cities of Tamil Nadu by bus. This place has other names such as, Thillai, Chidhaakaasa Ksheeththiram, and Perumparrappuliyoor; additional names such as Chirrambalam, Puliyoor, Porpuliyoor and Thillaiyoor are found in the inscriptions. The Annamalai University is situated to the east of Chidambaram Railway Station, where the Saivite Shrine known as Thiru-Vet-Kalam also stands.
The main deity of this temple is Aanandha Nataraasar. His holy icon itself represents the Five-lettered manthram, Panchaakkaram. His sacred dance represents the simultaneous execution of all the five great acts. His other names, noted in inscriptions Ponnambalak-Kooththan, Ponnambalanaathan, 
are: 
Aanandha- Thaandavap-Perumaal, Chidhambaresuvarar, Thillainaayakath-Thampiraan etc. In Thiruchchirrambalakkovai, the Lord is referred to as Maanikkak Kooththan. It seems to refer to the small emerald icon of Nataraja, known as Raththina Sabaapathi. 
The Goddess is known by the names of Sivakaama-sundhari and Thirukk Kaamakottamudaiya Periya Naachchiyaar. Sivakaama-sundhari is the name of 
Goddess standing next to the God on His left side. 
The Maithreya Upanishadham refers to this temple in the words, 'hridhayaa- kaasamayam kosam aanandham paramaalayam'. Since Thirumandhiram makes references to Thiruvambalach Chakkaram, Thiruk-k-Kooththu, Chidhambaram etc., the ancient nature of this temple is evident. According to Western scholar, the buildings inside this temple complex date from the 5th century to 10th and 11th centuries CE. Of the five 'sabhai' (pavilion) temples, this is known as the Kanakasabhai (Golden Pavilion). Within this temple there are five pavilions: Chithsabhai (Lord Nataraja's location which is knwon as sanctum-sanctorum), Kanakasabhai (the place in front of Chithsabhai), Raajasabhai (the 1000-pillared Hall), Nriththasabhai (next to the flag-pole for Nataraajar), and Thevasabhai (Perambalam hall on the northern side of the passage that leads to Kanaka Sabhai).

Besides the main deities, there are many other deities with their own shrines. Thirumoolattaanesurar, Umaiyammai, Mukkuruni Vinaayakar, Karpaga Vinaayakar, Paandinaayakam Amman, Navalingam, and Dhurgai are among the best known. There is also a Vaishnava shrine, known as Thiruch Chiththirakootam with the God known as Thillai Govindharaasar and Mother Goddess known as Pundareekavallith Thaayar in the same precincts.
The sacred fords for this temple are many: Sivagangkai, Paramaanandha- koopam, Pulimadu, Viyaakkirapaadha Theerththam, Aanandha Theerththam, Naagaseri, Birama Theerththam, Sivappiriyai, Thiruppaarkkadal etc. Also a temple of Kaali, who got defeated by the Lord in a dancing competition, situated at the eastern bank of Sivappiriyai Theerththam, at the northern limits of the town of Chidhambaram. 
The sacred tree is Aal (Banyan Tree). This tree no longer exists. Some are of the opinion that Thillai (Blinding tree; ma Excoecaria crenulata) is the sacred tree as the name Thillaivanam would seem to suggest. 
There are 271 inscriptions about this temple. Most of these speak of the kings, Kopperunjchingkan and Jataavarman Sundharapaandiyan. Many other kings, from Raajendhiran to Raajaraajan III, Vijayanagaram rulers, and Naayakkar kings have caused inscriptions to be made. It is remarkable that although this temple was very distinguished even during the times of the three saints, Sambandhar, Appar and Sundharar, no inscriptions of Pallava kings contemporaneous with them are to be found.
The earliest inscription, from the 24th regal year of Raajendhira Chola Thevan and another one from the 47th regal year of Kuloththungka Chola Thevan are on the wall that divides Kanakasabhai and Thirumoolattaanam. 
The ambulatory around Kanakasabhai is known as Vikkirama Cholan Thirumaaligai. The second ambulatory, around the Thirumoolattanam, is called Kuloththungkan Thirumaaligai and the one outer to that is known as Raasaakkal Thampiraan Thirumaaligai. Since the names Vikkirama Cholan Thirumaaligai and Kuloththungkan Thirumaaligai are found in the inscriptions in the wall referred to above, it would seem that Vikkiraman would have built both the ambulatories and named them after his father and himself. 
Most of the inscriptions concern flower-garden related endowments. Few of them refer to grants for worship services. Some inform about the alms-houses, formation of 'akkirahaarams' and arrangements for 'thiruppaavaadai'. Until the reign of Vikkirama Cholan, all the temple administration was performed in the name of Sandesuvara Dheva Naayanaar, but after his time, the temple was administered in the name of an assembly of supervisors. High government officials, insider-officials, and religious officers (Seekaaariyam Seivaar) were among the members of such an assembly. The names of 30 such supervisors are noted. 
Among the kings who provided for various services to this temple are the Pallava kings, Iraniyavarman and Kopperunjchingan; Paandiyar kings Maara-varman- Sundharapaandiyan, Jataavarman-Sundharapaandiyan, Maaravarman Veerapaandiyan and Vikkirama-Paandiyan, Kulasekaran; ten Chola kings from Paraanthakan I to Raajaraajan III. Of these kings, Iraniyavarman, Paraanthakan I, one Manavil Kooththan Kaalingan, Anapaayan and his ancestors had paved the temple roof with gold at different times. In addition, many kings of the Vijayanagara, Naayakka and Chera dynasties had performed services for the temple.

Various crowned kings have built the different gopurams. The south gopuram was built by Kopperunjchingan and after one of his names, this tower is called Chokkaseeyam. The construction of the north gopuram seems to have been started by Krishnadhevaraayan and completed by Achchutadhevaraayan. An inscription lists the names of the professional artisans (sirpi) who built the west gopuram. In the eastern wall of that gopuram, the images of Kaamadhevan, Agaththinyan, Sridhevi, Dhevendhiran, Ganesan and Dhurgai have ben installed. In the northern wall, those of Radhradhevar, Raahu and Kethu, Naaradhan, Alakesan, Chandhiran, Kiriyaasakthi, Sani, and Vaayu were installed. In the western wall were the images of Kshethrapaalap Pillaiyaar, Gangadhevi, Danvanthiri, Thiripurasundhari, Sukkiran, Vaijayan, Naagan, Yamunai, Badhrakaali, and Aadhisandeesar. In the southern wall were, Budhan, Niruthi, Jnaanasakthi and Agnidhevan. Inscriptions also reveal that there were separate shrines for the three Thevaram hymnist saints, Thirujnaana-sambandhar, Thirunaavukkarasar and Sundarar.
Next to the north gopuram is a shrine originally known as Thiruththondath thogaiyeechcharam. This houses separate images for the 63 Naayanmaar saints and linga representation for each group of the collection of saints known as 'thogaiyadiyaar onbadhinmar'. In this connection it may be noted that the saint and hymnist, Sundharar, who composed the 'Thiruththondath thogai' entered the temple by the north entrance. This shrine is called these days as Navalingam temple. 
The Vinaayagar, now known as Mukkuruni Vinaayakar, was known as Muka Kattanaththu Vinaayakar, as his shrine is located near the south entrance which was the front and main entrance. Apparently this meaningful name got corrupted into the current appellation, as Muk-kuruni Vinaayakar. 
From an inscription it is clear a separate shrine for Saint Thirujnaanasambandhar once existed in the Vikkirama Cholan Thiruveedhi. Also there was once a monastry for Saint Thirujnaanasambandhar next to the west gopuram.
Of the festivals that are used to be celebrated in Thillai temple, the one in the month of Aani and the other is the Thiruvaadhirai festival in the month of Maargazhi are the most imortant ones. These two go back at least to the times of Kopperunj- chingan. It appears that a festival used to be celebrated in the month of Maasi, during the course of which it was the practice to chant the Thiru-th-thonda-th-thogai hymns. Similar to the Pooram festival for the Goddess, celebrated in the month Aadi in other Siva temples, a festival on Pooram in Aippasi is also celebrated here. The festival held on the Magha asterism in Maasi of seabathing is mentioned in the inscriptions. A festival called 'Thiruppudhiyadhu Vizhaa' in which the Goddess was adorned with new clothes is also referred to. This name is suspected to the corrupted form of 'Thiruppudavaiyeedu Vizhaa'. Also a festival called Thiruppaali Valaththirunaal is noted. One wonders if this might actually be a reference to the Pooram festival in Aippasi. In this festival, the Goddess is ritually bathed and adorned with white clothes and is made to hold in Her lap a container of freshly sprouted grain (Nava Dhaaniyam) seeds, known as 'paali'. It appears that the Lord would visit a grove known as Kuloththungkan thoppu for the spring festival known as Vasanthath Thirunaal. The same inscription notes that the festival known as 'Thirukkann Saaththum Thirunaal' is the same festival as the one in which He graces the adjacent Naayanmaars with His benign vision. 
In addition to those mentioned above, a festival of the name 'Ethirili Cholan Sivapaadhasekaran Chiththath Thunaip Perumaal Vizhaa'. Besides, a festival on the Poosam day in Thai, was celebrated which is known as 'Paavaadai' (υ - Strewing boiled rice in a big white cloth spread before Civalingam). 
Some of the inscriptions pertain to land grants made for the recitation of various hymns and songs on the Lord and His saintly devotes. The three saints, Thirujnaanasambandhar, Appar and Sundharar each had a temple dedicated to them next to the south, west and north gopurams in Raajaakkal Thampiraan Thirumaaligai Street. Of these, the one for Thirujnaanasambandhar had a roof paved with gold. Such devotion on the part of the kings shows the very high regard for the Thirumurai and the authors of the Thirumurai in Chidhambaram.
In further evidence of the devotion of the rulers towards the Lord of Chidhambaram, it may be noted that they named measuring appliances as Aadavallaan; many villages were named after Thillai and its Lord.

INTRODUCTION TO THE HYMN

Our saint Thiru-gnaanasambandar started his pilgrimage to Thillai along with his father Siva-paatha Irudayar and was accompanied by Nilakanta Yazhppānar and other devotees. The town is called Chidambaram and also as Thillai, Koil and by a few other names. The holy folks of Thillai received our saint in a fitting manner. With them he reached the shrine, through the south tower entrance and adored the Dancer Lord Natarajar and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

80. கோயில் 
(தில்லை - சிதம்பரம்)

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே 
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய 
முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே | 
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1

கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே 
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய 
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே 
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

பொருள்: வேத நூல்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் கூறப்பட்ட நெறியிலே நின்று, 
வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் பாவங்கள் (வறுமையை) வாராது தடுக்கும் 
சான்றோர்கள் வாழும் தலம் தில்லையாகும். இத்தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளி 
இருக்கும் இறைவர் ஆனந்த நடராசர் ஆவார். இவர் இளமையான வெள்ளிய பிறைமதியைச்
சூடி உள்ளார். இவர் தேவர்களுக்குத் தலைமையான முதல்வர் ஆவார். இப்பெருமானின் 
திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றாது.

குறிப்புரை: இப்பாடல் சிற்றம்பலநாதன் திருவடியே பற்றுக் கோடாகக் கொண்டவர்களைப் பாவம் பற்றாது 
என்கின்றது. கற்று - வேதம் முதலியவற்றை ஓதி. ஆங்கு எரியோம்பி - அந்நெறியிலேயே நின்று 
வேள்வியைச் செய்து. கலி - பாவம். பற்றா - பற்றுக்கோடாக. 
Learned scholars who are living in Thillai have mastered the Vedas and aagamaas. They lead a strict moral and virtuous life as prescribed in the holy scriptures. They foster the sacrificial fire which prevents poverty and other ailments of humanity. In the sanctum sanctorum of this part of the temple in the town of Thillai, is called 'Chitrambalam' where the Chief Deity of this temple Lord Aananda Natarajar is enshrined. He is bedecked with the young white crescent moon in His matted hair. The scholar devotees throng to this chief temple in large numbers. They offer worship with sincere devotion to the holy feet of Lord Ananda Nataraajar. He is the God as the First cause in the whole universe (cosmos). He is entempled in the sanctum sanctorum which is known as Chith Sabai or Chitrambalam (சித்சபை அல்லது சிற்றம்பலம்). He showers His grace to all His sincere devotee who never get affected by the bad effects of their past karma.

Note: Thillai also called is Chidambaram is the Saivite shrine, par excellence. In the past, three thousand scholars, fostered this holy place. Yagas were performed here conforming to the strict rules enunciated in the scriptures. There are five Sabhas in this temple. 
a) Chitsabhai or normally known as Chitrambalam. This is the sanctum sanctorum where Lord Nataraja abides. 
b) Raajasabhai - This is the thousand pillars hall. 
c) Kanakasabhai - The portion just in front of Chitsabai – (Chitrambalam). 
d) Niruththasabhai situated near the Flag staff of Natarajar 
e) Thevasabhai - Pērambalam. This hall is the one situated on the south side of the aproaching foot path to Kanaka Sabhai. 
Lord Natarajar is the Uruvath-thirumeni  of Lord Civa; He is the main deity in this temple, known as Aananda Natarajar.

பறப்பைப் படுத்தெங் கும்பசுவேட் டெரியோம்புஞ் 
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய 
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை 
மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே. 2

பறப்பைப் படுத்து, எங்கும் பசுவேட்டு எரி ஓம்பும் 
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய 
பிறப்புஇல்பெருமானை, பின் தாழ்சடையானை, 
மறப்புஇலார் கண்டீர், மையல் தீர்வாரே.

பொருள்: பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து ஆன்ம போதத்தை அழித்து, 
சிவாக்கினியை வளர்க்கும் சிறப்பினை உடைய சான்றோர்கள் வாழும் தலம் தில்லை ஆகும். 
இத்தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவர் ஆனந்த நடராசர் 
ஆவார். இவர் தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவர். பின்புறம் தாழ்ந்து தொங்கும் 
சடாபாரம் உடையவர். இப்பெருமானை மறவாதவர்கள் தங்கள் மயக்க உணர்வு நீங்கப் 
பெறுபவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை: சிற்றம்பலநாதரை மறவாதவர்களே மலமயக்கம் தீர்வார்கள் என்கின்றது. பறப்பை - 
வேள்விச்சாலை. பசு வேட்டு - ஆன்மபோதத்தைக் கொன்று. எரி ஓம்பும் - சிவாக்கினியை வளர்க்கும். 
சிறப்பர் - சிறப்பினை உடைய தில்லை வாழ் அந்தணர்கள். 
Vedic scholars living in Thillai build sacrificial halls in many places of the town. Here they foster the special Civaaagni Fire and kill their egoistic knowledge in the sacrificial fire. In the temple of this town Lord Ananda Natarajar is enshrined in the sanctum sanctorum, called 'Chitrambalam' . He is the birthless Supreme God whose matted hair dangles downwards from His head. Those who adore Him for ever, even for a short while, will be freed from their mental delusion. 
Note: The performance of Yagaas is again celebrated in this verse.

மையாரொண் கண்ணார் மாடநெடு வீதிக் 
கையாற்பந் தோச்சுங்கழி சூழ்தில்லையுள் 
பொய்யா மறைபாடல் புரிந்தானு லகேத்தச் 
செய்யா னுறைகோயில் சிற்றம்பலந்தானே. 3

மைஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக் 
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள், 
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்தச் 
செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.

பொருள்: மை தீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட 
வீதிகளில் உள்ள மாடவீதிகளில் தம் கைகளால் பந்து எய்து விளையாடும் அழகுடையதும், 
உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தலம் தில்லையாகும். இத்தலத்தில் உள்ன சிற்றம்பலத்தில் 
சிவபெருமான் சிவந்த மேனியை உடையவராக எழுந்தருளி உள்ளார். இவர் என்றும் 
பொய்யாத வேதப் பாடல்களை விரும்பியும் உலக மக்கள் தன்னைத் தோத்தரிக்கவும் இங்கு 
வீற்றிருக்கின்றார். 
குறிப்புரை: வேதத்தை விரும்பிய சிவபெருமான் உறையுங் கோயில் சிற்றம்பலம் என்கின்றது. மையார் 
ஒண் கண்ணார் - மைபூசிய ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள். பொய்யா மறை - என்றும் 
பொய்யாத வேதம். புரிந்தான் - விரும்பியவன். 
Thillai is girt with a number of saltpans. Young girls with bright and attractive eyes painted with collyrium , play with balls in their hands to the enjoyment of everyone in the streets of the town full of mansions. In the temple of this city of Thillai, the red hued Lord Nataraja, the author of the never-failing Vedas is enshrined in Chitrambalam - the sanctum sanctorum. 
Note: The Vedaas are the abode of truth. Civa is their author. They merit utmost reverence and are to be construed into the very light of the Civaagamaas.

நிறைவெண் கொடிமாட நெற்றிநேர் தீண்டப் 
பிறைவந் திறைதாக் கும்பேரம்பலந் தில்லைச் 
சிறைவண் டறையோவாச் சிற்றம்பலமேய 
இறைவன் கழலேத்து மின்பமின்பமே. 4

நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப் 
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச் 
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய 
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

பொருள்: மாடவீடுகளில் வெண்மையான கொடிகள்: நிறைந்துள்ளன. இக்கொடிகள் 
வானத்தில் உள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுவது போலும், சிறிதே தாக்குவது 
போலும் உள்ளன. இந்தத் தில்லைப் பதியில் சிறகுகளை உடைய வண்டுகளின் ஒலி 
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் 
சிவபெருமானார் எழுந்தருளியிருக்கின்றார். இந்த இறைவரின் திருவடிகளைப் போற்றிப் 
புகழ்வதே இன்பமாகும்.

குறிப்புரை: சிற்றம்பலநாதன் சேவடியை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. கொடிவந்து பிறை 
இறைதாக்கும் பேரம்பலம் எனக் கூட்டுக. அறை - ஒலி. 
In the city of Thillai, white flags from the poles fixed in mansions graze straight into the skyway where the crescent moon is scrawling. It appears as though the flags gently dash over the forehead of the crescent moon. In the portion called Perambalam situated in front of and next to Chitrambalam, winged bees are always humming. In Chitrambalam Lord Nataraja is enshrined. It is real happiness indeed to hail the holy feet of Lord Natarajaa in this place. 
Note: Bliss is ours, here and now. Thillai is truly the embodiment of bliss.

செல்வ நெடுமாடஞ் சென்றுசே ணோங்கிச் 
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற 
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய 
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 5

செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் 
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற, 
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய 
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

பொருள்: செல்வ வளம் மிக்க பெரிய மாடவீதிகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய 
மதியினைத் தோய்கின்றன. இத்தகைய அழகிய நலன்கள் உயர்ந்து விளங்குகின்றதும் 
ஞானச் செல்வர்கள் பலர் வாழ்கின்றதுமான தலம் தில்லைப் பதியாகும். இத்தலத்தில் உள்ள 
சிற்றம்பலத்தில் சிவபெருமானார் எழுந்தருளியுள்ளார். இவர் வீடுபேறாகிய செல்வத்துக்கு 
உரிய பெருமான் ஆவார். இப்பெருமானின் திருவடிகளை வாழ்த்துதலே ஒருவருக்குச் 
செல்வம் ஆகும்.

குறிப்புரை: சிற்றம்பலத்து எழுந்தருளி இருக்கின்ற செல்வன் கழலை ஏத்தும் இன்பமே இன்பம் 
என்கின்றது. சேண் - ஆகாயம். 
In the town of Thillai, the lofty, affluent tall mansions brush against the beautiful crescent moon that apparently crawls in the sky. The city is very prosperous having many a different delightful set up. Here dwell many virtuous scholars. Here in the temple Lord Nataraja is enshrined. The real wealth to one is verily to adore the holy feet of the Chief of all wealth Lord Nataraja of this temple. 
Note: Thillai is the city of opulence - material as well as spiritual.

வருமாந் தளிர்மேனிமா தோர்பாகமாந் 
திருமாந் தில்லையுட் சிற்றம்பலமேய 
கருமானு ரியாடைக் கறைசேர் கண்டத்தெம் 
பெருமான் கழலல்லாற் பேணாதுள்ளமே. 6

வரு மாந்தளிர்மேனி மாது ஓர் பாகம் ஆம் 
திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய 
கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம் 
பெருமான் கழல்அல்லால் பேணாது, உள்ளமே.

பொருள்: சிவபெருமானார், மாமரத்தில் இருந்து புதிதாக வெளிவரும் மாந்தளிர் போன்ற 
மேனியை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இருப்பவர். யானைத் 
தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். 
இப்பெருமான், திருமகள் விளங்கும் தில்லைப் பதியினுள் உள்ள சிற்றம்பலத்தில் 
எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் திருவடிகளைத் தவிர வேறொன்றையும் என் உள்ளம் 
விரும்பாது.

குறிப்புரை: சிற்றம்பலத்து எழுந்தருளியுள்ள பெருமான் திருவடியல்லது என்னுள்ளம் வேறொன்றையும் 
பேணாது என்கின்றது. திருமாந்தில்லை - திருமகளோடு கூடிய பெரிய தில்லை. 
In the Chitrambalam of the big Thillai temple Lord Nataraja is enshrined. Here He is concorporate with His consort Umaa Devi, whose body is like the fresh shoot of mango tree. Goddess Lakshmi  is reigning her grace on this city for ever. Lord Nataraja covers His body with the black skin of the elephant. His neck is of dark blue in colour similar to the sapphire gem. My mind will never adore anything else except the holy feet of Lord Nataraja of this temple.
அலையார் புனல்சூடியாகத் தொருபாக 
மலையான் மகளோடுமகிழ்ந் தானுலகேத்தச் 
சிலையா லெயிலெய்தான் சிற்றம்பலந் தன்னைத் 
தலையால் வணங்குவார் தலையானார்களே. 7

அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒரு பாகம் 
மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச் 
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம்தன்னைத் 
தலையால் வணங்குவார் தலைஆனார்களே.

பொருள்: சிவபெருமான் அலைகள் வீசும் கங்கை நதியை தன் திருமுடியில் சூடியிருப்பவர். 
தன் திருமேனியில் ஒருபாகமாக மலை அரசன் மகளாகிய பார்வதி தேவியோடு 
மகழ்ந்திருப்பவர். உலகம் போற்றும் மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களை
நோக்கி அம்பை எய்து அழித்தவர். தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள 
இப்பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குபவர்கள் இந்த உலகத்தில் தலையானவர்களாக 
விளங்குபவர்கள் ஆவார்கள்.

குறிப்புரை: சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குபவர்களே தலையானவர்கள் என்கின்றது. சிலை - 
மேருமலையாகிய வில். 
Lord Nataraja supports the wavy waters of the Ganges river in His matted hair. He happily holds on His chest His consort Paarvathi Devi, daughter of the mountain king by keeping her in the left half portion of His body. Hailed by all the people of the world, He destroyed the three hostile citadels of Asuraas, utilising the Mēru mountain as His bow. Those who worship this Lord Nataraja enshrined at Chitrambalam in Thillai temple with heads bowed down will ever shine as sovereign Lords.
கூர்வாளரக் கன்றன்வலி யைக்குறைவித்துச் 
சீராலேமல் குசிற்றம்பலமேய 
நீரார்சடை யானைநித்த லேத்துவார் 
தீராநோ யெல்லாந் தீர்தல் திண்ணமே. 8

கூர்வாள் அரக்கன்தன் வலியைக் குறைவித்து, 
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய 
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் 
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

பொருள்: சிவபெருமான், கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை 
அழித்தவர். சிறந்த புகழ்பெற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளி இருப்பவர். 
கங்கையைத் தரித்த சடையினை உடையவர். இப்பெருமானை நாள்தோறும் 
துதிப்பவருக்குத் தீராத நோய்கள் எல்லாம் திண்ணமாகத் தீர்ந்துவிடும்.

குறிப்புரை: சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார் தீராத நோயெல்லாம் தீர்வர் என்கின்றது. 
கூர்வாள் அரக்கன் என்றது இராவணனை. 
Lord Nataraja crushed the prowess of Raavanan who possessed a sharp sword. 
He is enshrined in the highly famed Chitrambalam holding the river Ganges in His matted hair. Those who adore Him daily with sincere devotion will for sure get rid of all incurable diseases. 
Note: Maladies, physical as well as spiritual, cease if one ensouls Civa.

கோணாகணை யானுங்குளிர்தா மரையானுங் 
காணார்கழ லேத்தக்கன லாய்ஒங்கினான் 
சேணார்வாழ் தில்லைச் சிற்றம்பலமேத்த 
மாணாநோ யெல்லாம் வாளாமாயுமே.

கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும் 
காணார் கழல் ஏத்த, கனல்ஆய் ஓங்கினான், 
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த, 
மாணா நோய்எல்லாம் வாளா மாயுமே.

பொருள்: வளைந்து சுற்றிய நாகத்தை அணையாகக் கொண்ட திருமாலும், குளிர்ந்த தாமரை 
மேல் விளங்கும் நான்முகனும் சிவபெருமானின் அடிமுடிகளைக் காண இயலாதவர்கள்.
தனது திருவடிகளைப் பரவ, அழல்வடிவில் ஓங்கி நின்றவர். இவர் தேவர்களும் 
உயர்ந்தோர்களும் வாழும் தில்லைப் பதியினுள் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ளார். 
இப்பெருமானைத் துதிக்க கடுமையான பெரிய நோய்கள் யாவும் துன்பத்தைத் தராமல்
மாய்ந்து விடும்.

குறிப்புரை: சிற்றம்பலத்தைத் துதிக்க. பெரிய நோயெல்லாம் மாயும் என்கின்றது. கோண் நாகணையான் 
- வளைந்த நாகத்தை அணையாகக் கொண்ட திருமால். சேணார் - தேவர்கள். மாணா நோய் - 
மாட்சிமை தராத நோய்கள். 
Thirumaal who reclines on the coiling snake and Brahma who is seated in the cool lotus flower went out in the search of Lord Civan's holy feet and head in vain. Upon this, Lord Civan soared up as a blazing big column of fire to immeasurable heights. They both failed in their attempts. He is enshrined in Chitrambalam. Those who adore Lord Nataraja of Chitrambalam will get rid of all cruel diseases.

பட்டைத்து வராடைப்படி மங்கொண்டாடும் 
முட்டைக் கட்டுரைமொழி வகேளாதே 
சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பலமேய 
நட்டப் பெருமானை நாளுந்தொழுவோமே. 10

பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும் 
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே, 
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய 
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.

பொருள்: புத்தர்கள் மரப்பட்டையில் சாயம் ஏற்றிய ஆடையை அணிபவர்கள். சமணர்கள் 
நோன்புகளை மேற்கொண்டு திரிபவர்கள். அறியாமையோடு கூடிய இவர்களின் 
சொற்களைக் கேளாத ஒழுக்கமுடைய தவச்சீலர்கள் தில்லைப் பதியில் வாழ்கின்றனர். 
இப்பதியினுள் உன்ள சிற்றம்பலத்தில் நடராசப் பெருமான் எழுந்தருளி உள்ளார்.
இப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோமாக.

குறிப்பூரை: புறச்சமயிகளின் புல்லுரையைக் கேளாது சிற்றம்பலநாதன் திருவடியைத் தினம் தொழுவோம் 
என்கின்றது. பட்டைத்துவர் - மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காவி. படிமம் - நோன்பு. முட்டைக் 
கட்டுரை - அறியாமையோடு கூடிய சொல். சிட்டர் - ஆசாரசீலர். நட்டம் - நடம். 
Ye comrades! Do not listen to the ignorant sayings of Buddhists who wear clothes dyed in tree barks, and of the Samanars who roam about doing all sorts of meaningless penance. Lord Nataraja is enshrined at Chitrambalam in the Thillai temple. In this city, people of great virtue and good manners do live is to go numbers. Let us adore with sincere devotion this Lord Nataraja daily.

ஞாலத்துயர் காழிஞான சம்பந்தன் 
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலமேய 
சூலப்படை யானைச்சொன்ன தமிழ்மாலை 
கோலத்தாற் பாடவல்லார் நல்லாரே. 11

ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் 
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய 
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை 
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

பொருள்: ஞானசம்பந்தன், உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப் பதியில் தோன்றியவர். 
ஒழுக்கம் உடைய தவச்சீலர்களால் போற்றப்படுவது தில்லைத் தலம் ஆகும். இத்தலத்தினுள் 
உள்ள சிற்றம்பலத்தில், சூலப்படையுடன் எழுந்தருளி உள்ள சிவபெருமானை, இவர் 
போற்றிப் பாடினார். இத்தமிழ் மாலையாகிய பதிகத்தை அழகுறப் பாட வல்லவர் நல்லவர் 
ஆவர்.

குறிப்புரை: திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பலநாதனைப் பற்றிச் சொன்ன தமிழ்மாலையைப் 
பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் - ஒழுக்கம் 
உடையவர்களால் கொள்ளப்படுகின்ற சிற்றம்பலம். கோலத்தால் - அழகால். 
Seekaazhi is the loftiest town of the world. Here was born Gnaanasambandan who has sung on the Lord who wields the trident and who is enshrined at Chitrambalam in Thillai temple. He is hailed by virtuous and good mannered people, who are steeped in piety. Those who can sing tunefully, this garland of Tamil verses, are truly the holy ones. 
Note: Civa wields a trident which alone can quell the three malas.

திருச்சிற்றம்ப பலம்


80ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

81. சீகாழி

திருத்தல வரலாறு: 
முதல் பதிகம் பார்க்க. 
81. SEEKAAZHI

HISTORY OF THE PLACE 
See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

Note: 
Only seven verses of this decad are available.

திருச்சிற்றம்பலம்

81. சீகாழி 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

நல்லார் தீமேவுந்தொழி லார்நால்வேதஞ் 
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த 
வில்லாற் புரஞ்செற்றான் மேவும்பதிபோலுங் 
கல்லார் மதில்சூழ்ந்த காழிந்நகர்தானே. 1

நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்- 
சொல்லார், கேண்மையார், சுடர் பொற்கழல் ஏத்த, 
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்- 
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி(ந்) நகர்தானே.

பொருள்: சிவபெருமான் மேருமலையாலான வில்லால் முப்புரங்களையும் அழித்தவர். 
இப்பெருமான் மலைபோன்ற மதில்களால் சூழப்பட்ட தலமான சீகாழி நகரில் எழுந்தருளி
உள்ளார். இங்குள்ள சான்றோர்களாகிய நல்லவர்கள், நாள்தோறும் வேள்வியைச் 
செய்கின்றனர். நான்கு வேதங்களை ஓதுகின்றனர். அன்புடையவர்களாக விளங்குகின்றனர். 
இவர்கள் ஒளி பொருந்திய அழகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுகின்றனர்.

குறிப்புரை: வேதம் ஒதி வேள்வி செய்யும் அந்தணர்கள் திருவடியைத் தொழ, வில்லால் புரமெரித்த 
பெருமான் உறையும் இடம் காழி நகரம் என்கின்றது. தீ மேவும் தொழிலார் - யாகத் தீயை விரும்பும் 
தொழிலை உடைய அந்தணர். நால்வேதம் சொல்வார் - நான்கு வேதங்களாகிய சொல்லை உடையவர்கள். 
கல்லார் மதில் - மலையை ஒத்த மதில். 
In the city of Seekaazhi righteous people, who foster the ritual fire daily, those who chant the four Vedas and those who are poised in godly love and others - all these righteous men hail the bright and attractive holy feet of Lord Civan. It is He who destroyed the three citadels by using the mountain Mēru as His bow. This Lord Civan is enshrined at the temple in Seekaazhi girt with strong mountain like walls. 
Note: Only they that chant the Vedas as ordained in the scriptures and foster the ritual- fire in the Aagamic way are blessed to remain poised in godly love.

துளிவண் டேன்பாயுமிதழி தூமத்தங் 
தெளிவெண் திங்கள்மா சுணநீர்திகழ் சென்னி 
ஒளிவெண் டலைமாலை யுகந்தானூர் போலுங் 
களிவண் டியாழ்செய்யுங் காழிந்நகர்தானே. 2

துளி வண் தேன் பாயும் இதழி, தூ மத்தம், 
தெளிவெண்திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி, 
ஒளி வெண்தலைமாலை உகந்தான் ஊர்போலும் - 
களி வண்டு யாழ் செய்யும் காழி(ந்)நகர் தானே.

பொருள்: சிவபெருமான் ஒளிபொருந்திய வெள்ளிய தலைமாலையை விரும்பிச் 
சூடியிருப்பவர். வண்டுகள் தேனை உண்டு களித்து, யாழ் போன்று ரீங்காரம் செய்கின்ற, 
சீகாழி நகரில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இப்பெருமான் சென்னியில் வளமான 
தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம்பூ, தெளிந்த வெண்மையான பிறைமதி, 
பாம்பு, கங்கை ஆகியன விளங்குகின்றன.

குறிப்புரை: கொன்றை, பிறை, பாம்பு, ஊமத்தம் இவற்றை விரும்பிய இறைவனது இடம் இது என்கின்றது. 
வண் தேன் துளி பாயும் இதழி என மாற்றுக. இதழி - கொன்றை. மாசுணம் - பாம்பு.
Lord Civan happily supports in His matted hair the pure white crescent moon, cassia flower from which honey is dripping, datura flowers, the snake, the Ganges river as well a garland of blazing white human skulls. This Lord Civan is enshrined at the temple in the Seekaazhi city, where the honeybees, having drunk the nectar are happily humming. This noise resembles the music of the lute.

ஆலக்கோ லத்தின்நஞ்சுண் டமுதத்தைச் 
சாலத்தே வர்க்கீந்தளித் தான்தன்மையால் 
பாலற்கா ய்நன்றும்பரி ந்துபாதத்தால் 
காலற்கா ய்ந்தானூர் காழிந்நகர்தானே. 34567

ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச் 
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால் 
பாலற்குஆய் நன்றும் பரிந்து பாதத்தால 
காலற் காய்ந்தான், ஊர் காழி(ந்)நகர் தானே.

பொருள்: சிவபெருமான் மார்க்கண்டேயன் பொருட்டு கருணை கூர்ந்து தன் பாதத்தால் 
காலனை உதைத்தவர். இப்பெருமானின் ஊர் சீகாழி நகர் ஆகும். இவர், பாற்கடலில் 
தோன்றிய ஆலகாலம் எனப்படும் நஞ்சினை விழுங்காமல் தொண்டையில் நிறுத்தி, அமுதம் 
முழுவதையும் தேவர்கட்கு ஈந்தருளிய தன்மையை உடையவர்.

குறிப்புரை: அமுதத்தைத் தேவர்க்கு அளித்தவனும், காலனைக் காய்ந்தவனும் ஆகிய காவலன் ஊர், 
காழி என்கின்றது. ஆலக் கோலத்தின் நஞ்சு - ஆலகால விஷம். சால - மிக. பாலற்கு - 
மார்க்கண்டேயற்கு. பரிந்து - கருணை கூர்ந்து. அளித்தான் - உயிர் கொடுத்தான்.
Lord Civan without swallowing the poison, produced at the time of churning the ocean, has positioned it in His throat permanently. This poison is known as 'Aalaalam' (ஆலால விடம் or ஆலகால விடம்). At the same time He liberally gave the nectar, which also came from the ocean, to the celestials. Such is the nature of Lord Civan. He kicked with His foot (the messenger of Death) i.e., Yama to save His devotee Maarkandeyan. This Lord Civan is indeed enshrined at the temple in Seekaazhi city.

இரவில்திரி வோர்கட்கிறை தோளிணைபத்தும் 
நிரவிக்கர வாளைநேர்ந் தானிடம்போலும் 
பரவித்திரி வோர்க்கும்பால் நீறணிவோர்க்குங் 
கரவில்த டக்கையார் காழிந்நகர்தானே. 8

இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும் 
நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம்போலும் - 
பரவித் திரிவோர்க்கும் பால்நீறு அணிவோர்க்கும் 
கரவுஇல்-தடக்கையார் காழி(ந்) நகர்தானே.

பொருள்: சிவபெருமான், இரவில் திரியும் அசுரர்களின் தலைவனான இராவணனின் இருபது 
தோள்களையும் நெரித்தவர். பின்பு அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாளை 
அவனுக்கு வழங்கி அருளிய இடம் சீகாழி நகராகும். இறைவனைப் பரவி வழிபடும் 
அடியவர்களும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்களும், ஒளியாமல் வழங்கும் நீண்ட 
கைகளை உடைய வள்ளன்மை மிக்க அடியார்களும் இச் சீகாழிப் பதியில் வாழ்கின்றனர்.

குறிப்புரை: இராவணற்கு வாள் அருளிச் செய்தவன் இடம் காழி நகரம் என்கின்றது. இரவில் திரிவோர் 
- அசுரர்கள்; நிசாசரர் என்பதன் மொழி பெயர்ப்பு. நிரவி - ஒழுங்குபடுத்தி. கரவாள் - கை வாள். கரவு 
இல் தடக்கையார் - ஒளியாமல் வழங்கும் கையை உடையவர். 'நிசிசரா்’ என்றும் அசுரர்களைக் குறிப்பது 
உண்டு. ‘நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென’ - குமரகுருபரர். 
Lord Civan crushed the twenty shoulders of Raavanan who is the chief of Asuraas who roam about during night hours (They are called 'Nisaasarar' ). Later when he repented for his misdeed, Civa bestowed grace on Him and presented a mystic sword to be carried in hand. This Lord Civan is indeed enshrined at the temple in Seekaazhi city. Here abide the long armed philanthropists who munificently and unstintingly bestow all that is needed by their fellowmen who adore and follow devotedly Lord Civan and on those who smear their body with holy ashes.

மாலும்பிர மனுமறியா மாட்சியான் 
தோலும்புரி நூலுந்துதை ந்தவரைமார்பன் 
ஏலும்பதி போலுமிரந் தோர்க்கெந்நாளுங் 
காலம்பக ராதார்காழிந் நகர்தானே. 9

மாலும் பிரமனும் அறியா மாட்சியான், 
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன், 
ஏலும் பதிபோலும் - இரந்தோர்க்கு எந்நாளும் 
காலம் பகராதார் காழி(ந்)நகர் தானே.

பொருள்: சிவபெருமானார், திருமால், பிரமன் ஆகியோரால் அறியப்படாத மாட்சிமையை 
உடையவர். மான் தோலும் முப்புரிநூலும் படிந்த மலை போன்ற மார்பினை உடையவர்.
இப்பெருமான் எழுந்தருளியிருக்கும் பதி சீகாழி நகராகும். இந்நகரில் வாழும் செல்வர்கள், 
தம்மிடம் இரந்து வருகின்றவர்களுக்கு, எந்நேரமும், காலம் தாழ்த்தாது, உடனே கொடுக்கும் 
தன்மையை உடையவர்களாக இருக்கின்றனர்.

குறிப்புரை: அயனும் 'மாலும் அறியாதவனும், பூணூல் அணிந்தவனுமாகிய இறைவன் பதி காழி நகர் 
என்கின்றது. இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் - யாசிப்பவர்களுக்கு எப்போதும் 'இது 
காலமல்ல. இது காலமல்ல' என்று சொல்லாது எப்போதும் கொடுப்பவர்கள். 
His Majesty Lord Civan is beyond the comprehension of Thirumaal and Brahma. Lord Civan wears on His hill like chest the three ply sacred thread with a bit of deer skin attached to it. This Lord Civan is enshrined in Seekaazhi city temple. This city is famed for its philanthropists who bestow then and there, what all is needed for those who approach them for help.

தங்கையிட வுண்பார்தாழ் சீவரத்தார்கள் 
பெங்கையு ணராதேபேணித் தொழுமின்கள் 
மங்கையொரு பாகமகிழ்ந் தான்மலர்ச் சென்னிக் 
கங்கைதரித் தானூர்காழிந் நகர்தானே. 10

தம் கை இட உண்பார், தாழ் சீ வரத்தார்கள், 
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்! 
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக் 
கங்கை தரித்தான், ஊர் காழி(ந்) நகர்தானே.

பொருள்: சமணர்கள், உணவளிப்பவர்கள் கொடுக்கும் உணவை, தங்கள் கையில் வாங்கி 
உண்பவர்கள். புத்தர்கள் சீவரம் என்னும் கல்லாடையை உடுத்தியிருப்பவர்கள். அவர்களின் 
தீய ஒழுக்கத்தை மனத்தில் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து 
ஏற்றிருப்பவரும், மலரணிந்த, சென்னியில் கங்கையைத் தரித்திருப்பவருமாகிய 
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சீகாழி நகரைப் பேணித் தொழுவீர்களாக.

குறிப்புரை: புத்தர் சமணர்களுடைய தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழி நகரைத் தொழுமின்கள் 
என்கின்றது. தம்கையிட உண்பார் - கையில் பிச்சையிட ஏற்று உண்பவர்கள். சீவரத்தார்கள் - 
காவியாடை உடுத்தியவர்கள். பெங்கை - தீயொழுக்கம். 
Ye folks! Ignore and do not follow the indecent way of life of Samanars who get alms in their hands and eat it; similarly do not listen to the preaching of Buddhists who wear cloth dyed in red ochre. Instead adore and worship Lord Civan and the city Seekaazhi in which He is entempled. He supports the river Ganges in His flower decorated head; also He happily accommodated His consort Umaa Devi on the left portion of His body frame.
வாசங்கமழ் காழிமதிசெஞ் சடைவைத்த 
ஈசன்நகர் தன்னையிணை யில்சம்பந்தன் 
பேசுந்த மிழ்வல்லோர் பெருநீருலகத்துப் 
பாசந்த னையற்றுப் பழியில்புகழாரே. 11

வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த 
ஈசன் நகர் தன்னை, இணை இல் சம்பந்தன் 
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப் 
பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.

பொருள்: சிவபெருமான் பிறைமதியைச் செஞ்சடையில் வைத்துள்ளார். இப்பெருமான்
எழுந்தருளியுள்ள மணங்கமழ்கின்ற சீகாழிப் பதியை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப்
பாடினார். இப்பதிகத்தைப் பாடும் தமிழில் வல்லவர்கள், கடல் சூழ்ந்த இவ்வுலகில், 
பாசங்கள் நீங்கப் பெற்றுப், பழியற்ற புகழோடு வாழ்வார்கள்.

குறிப்புரை: காழிநகரைப் பற்றி சம்பந்தன் சொன்ன இத்தமிழை, வல்லவர்கள் பாட கடல்புடை சூழ்ந்த 
உலகத்துப் பாசம் நீங்கிப் பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன் கூறுகிறது. பெருநீர் - கடல். 
Gnaanasambandan has no equal to him on earth. He has sung on Lord Civan's fragrant Seekaazhi city. He wears in His ruddy matted crest the crescent moon. Those who are well versed in these Tamil hymns, will thrive in the sea girt world, freed of all fetters and lead a glorious life.

திருச்சிற்றம்பலப்

81ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
82. திரு வீழி மிழலை

திருத்தல வரலாறு:

நான்காம் பதிகம் பார்க்க. 
பதிக வரலாறு:

திரும்பாம்புரம் என்னும் தலத்தை வணங்கிக் கொண்டு பிள்ளையார் திருவீழிமிழலைக்கு 
அப்பருடன் எழுந்தருள அந்தணர்கள் எதிர் கொண்டு அழைத்தார்கள். பிள்ளையார் 
சிவிகையினின்றிழிந்து அந்தணர்கள் புடைசூழ விண்ணிழிந்த கோயிலை வலங்கொண்டார். 
வியந்தார். கீழே விழுந்து வணங்கினார். உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி வழிந்தது. இசை 
ஆயிற்று. ‘இரும்பொன் மலைவில்லா்’ என்றெடுத்துச் சந்த இசைத் தமிழைச் சாற்றி மணவாளப் 
பெருமானது திருவடிக்கீழ் ஆனந்த வெள்ளத்தாடினார். 
HISTORY OF THE PLACE 
See Fourth Hymn.

INTRODUCTION TO THE HYMN

82. THIRU-VEEZHI-MIZHALAI

The godly-child and St. Appar arrived at Thiru-veezhi-mizhalai from Thiruppāmpuram. The residents of this town received them fittingly. After completing this circumambulation of the shrine, our saint moved into the temple and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

82. திரு வீழி மிழலை 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

இரும்பொன் மலைவில்லா எரியம்பாநாணில் 
திரிந்தபுர மூன்றுஞ்செற்றா னுறைகோயில் 
தெரிந்த அடியார்கள்சென் றதிசைதோறும் 
விரும்பியெ திர்கொள்வார் வீழிமிழலையே. 1

இரும் பொன்மலை வில்லா, எரிஅம்பா, நாணில்,- 
திரிந்த புரம்மூன்றும் செற்றான் உறை கோயில்- 
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் 
விரும்பி எதிர் கொள்வார் வீழி(ம்) மிழலையே.

பொருள்: சிவபெருமான் பெரிய பொன்மயமான மேரு மலையை வில்லாக வளைத்து, 
அனலை அம்பாக அந்த வில்லின் நாணில் பூட்டி, வானில் திரிந்து கொண்டிருந்த 
முப்புரங்களையும் எரித்தவர். இப்பெருமான் உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். 
இங்கு, கலைகள் பலவற்றைக் கற்று உணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் 
அவர்களை விரும்பி எதிர்கொண்டு அழைக்கும் மக்கள் வாழ்கின்றனர்.

குறிப்புரை: மேருமலையை வில்லாகவும், அங்கியை அம்பாகவும் கொண்டு திரிபுரமெரித்த சிவன் 
உறையும் கோயில் திருவீழிமிழலை என்கின்றது. தெரிந்த அடியார்கள் சென்ற திசை தோறும் விரும்பி 
எதிர்கொள்வார் என்றது, ஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளியபோது எதிர்கொண்டதைத் 
திருவுள்ளத்து எண்ணி எழுந்த உரை போலும். 
Lord Civan destroyed the three citadels that roamed about in the sky by using the golden mountain Mēru as His bow and Agni as the arrow. This Lord Civan is entempled in Thiru-veezhi-mizhalai. The servitors of this town, well-versed in the scriptures, proceed, love impelled, in each and every direction to welcome Civan's devotees. 
Note: Thillai scholars number three thousand, and those of Thiru-veezhi-mizhalai five hundred. They are known for their hospitality.

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர 
ஓதக் கடல்நஞ் சையுண்டா னுறைகோயில் 
கீதத் திசையோ டுங்கேள்விக் கிடையோடும் 
வேதத் தொலியோ வாவீழிமிழலையே. 2

வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர 
ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் - 
கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும் 
வேதத்து ஒலி ஓவா வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான், துயரப்படுகின்ற தேவர்களின் துன்பம் நீங்குமாறு வெண்மையான 
நீரோடு கூடிய கடலில் இருந்து எழுந்த நஞ்சினை தொண்டையில் நிறுத்தியவர். 
இப்பெருமான் உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். இங்கு இசையமைப்போடு 
கூடியதும் சுருதிக்கு ஏற்ப, ஒருவர் ஓதக் கேட்டு ஓதப்பட்டு வருவதுமாகிய வேத 
பாராயணத்தை ஓதும் வேத ஒலி நீங்காமல் ஒலிக்கின்றது.

குறிப்புரை: துன்புறுகின்ற தேவர்கள் துயர்தீர, நஞ்சுண்டநாதன் கோயில் திருவீழிமிழலை என்கின்றது. 
வாதை - துன்பம். கேள்விக் கிடை - வேதத்தை ஓதும் மாணவர் கூட்டம். 
Being the repository of mercy, grace and love, Lord Civan came forward to save the celestial folks from death; HE, without swallowing the poison, positioned it in His throat permanently; He is enshrined in the temple of Thiru-veezhi-mizhalai. Here the literal sounds of the Vedas tunefully chanted by the throng of young students will be heard ceaselessly. 
Note: One should commence one's cultivation of the Vedas when one is young. The chanting of the Vedas is always enchanting. The chanter chants them aloud in company and does it silently when alone, in the mode of Ajapa.

பயிலும் மறையாளன்தலை யிற்பலிகொண்டு 
துயிலும் பொழுதாடுஞ்சோதி யுறைகோயில் 
மயிலும் மடமானும்மதி யும்மிளவேயும் 
வெயிலும் போல்மாதர் வீழிமிழலையே.

பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு, 
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் - 
மயிலும் மடமானும் மதியும்(ம்) இள வேயும் 
வெயிலும் போல் மாதர் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான், வேதங்களை ஓதும் பிரமனின் தலையோட்டில் பலி ஏற்பவர். 
அனைவரும் துயிலும் நள்ளிரவில் நட்டமாடும் ஒளி வடிவினர். இப்பெருமான் உறையும் 
கோயில் திருவீழிமிழலை ஆகும். மயிலைப் போன்ற சாயலும், மருளுகின்ற மான் போன்ற
கண்களும், மதி போன்ற முகமும், இள மூங்கில் போன்ற தோள்களும் இளங்கதிர் போன்ற 
அழகொளி மிக்க மகளிர் பலர் இங்கு வாழ்கின்றனர்.

குறிப்புரை: பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று, எல்லாம் துயிலும் நள்ளிரவில் நட்டமாடும் பெருமான் கோயில் 
வீழிமிழலை என்கின்றது. இந்நகரத்து மாதர் மயிலையும் மானையும் மதியையும் மூங்கிலையும் 
இளவெயிலையும் போல் விளங்குகின்றார்கள். சாயலால் மயில், பார்வையால் மான், நுதலழகால் மதி, 
தோளால் மூங்கில், கற்பால் வெயில் எனக் கொள்க. 
Lord Civan receives alms in one of the skulls of Brahma who is an adept in the Vedas. As a supernal flame He dances in the night when all are sleeping. He is enshrined in the temple in Thiru-veezhi-mizhalai. Here abide damsels whose gait is like the peacock's; whose eyes are like the deer's, whose forehead and face are moon- like; whose shoulders are like tender bamboos; and whose lustre is like the rays of the early sun. 
Note: Civa dances when the world sleeps. The human soul is a microcosm. It is in slumber where it is unruffled.

இரவன் பகலோனுமெச் சத்திமையோரை 
நிரவிட் டருள்செய்தநி மலன்னுறைகோயில் 
குரவஞ் சுரபுன்னைகு ளிர்கோங்கி ளவேங்கை 
விரவும் பொழிலந்தண் வீழிமிழலையே. 4

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை 
நிரவிட்டு, அருள்செய்த நிமலன்(ன்) உறை கோயில் - 
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை, 
விரவும் பொழில் அம் தண் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான், தக்கன் செய்த யாகத்தில் சூரியன் சந்திரன் முதலான தேவர்களைத் 
தண்டம் செய்து அருள் செய்த நிமலன் ஆவார். இப்பெருமான் உறையும் கோயில் 
திருவீழிமிழலை ஆகும். இங்கு, குரா, சுரபுன்னை, குளிர்ச்சி தரும் கோங்கு, இளவேங்கை 
ஆகிய மரங்கள் கலந்துள்ள குளிர்ந்த பொழில்கள் பல உள்ளன.

குறிப்புரை: தக்க யாகத்தில் சூரியன் சந்திரன் முதலான தேவர்களைச் செப்பஞ் செய்து அருள் செய்த 
நிமலன் கோயில் இது என்கின்றது. இரவன் - சந்திரன். பகலோன் - சூரியன். எச்சத்து - யாகத்தில். 
நிரவிட்டு - செப்பஞ்செய்து. 
When Dhakshan was celebrating the oblation rituals, Lord Civan, the pure and supreme, commanded Veerabadran  to go and punish the moon and the sun and other Devaas who were participating in the above oblation. Later He forgave and graced them. He is enshrined in Thiru-veezhi-mizhalai surrounded by gardens having a balanced and comfortable weather. In the cool gardens thrive the date tree , Alexandrian laural , the cool silk cotton , the young kino tree and other plants. 
Note: The punishment meted out by Civa is also an act of grace. It is known as Mara-k- karunai. He appears to be cruel. However, actually and factually, He is an embodiment of kindness.

கண்ணிற் கனலாலே காமன்பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்தபெரு மானுறைகோயில் 
மண்ணிற் பெருவேள்விவளர் தீப்புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழிமிழலையே. 5

கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக, 
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் - 
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும் 
விண்ணில் புயல் காட்டும் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் தோன்ற கனலால் மன்மதனைப் பொடி 
செய்தவர். பின்னர் அவனது மனைவியான இரதி தேவி வேண்டுதல் செய்த போது, 
அவளுடைய கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள்செய்த நிமலன் இவர். 
இப்பெருமான் உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். இங்கு, நாள்தோறும் மண்ணில் 
செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகையானது வானத்தில் மழை மேகங்களை 
உருவாக்குகின்றது.

குறிப்புரை: மன்மதன் எரிய விழித்து, இரதிக்கு அருள் செய்த பெருமான் கோயில் இது என்கின்றது. 
பெண் - இரதி. உமையெனப் பொருள் கொண்டு இடப்பாகத்தை அருளிய எனப் பொருள் உரைப்பாரும் 
உளர். பூமியில் செய்யப்படும் யாகப் புகை, வானத்தில் மேகத்தை வளர்க்கும் என்ற கருத்தைப் 
பின்னிரண்டடிகளில் காண்க. 
Lord Civan burnt Manmathan (Cupid), the God of Love by the fire emanating from His third eye in the forehead. Later He graced Cupid's wife Rathi, to the effect that he will be visible only to her and not to others. This Lord Civan is enshrined in Thiru-veezhi-mizhalai. Here the smoke rising from the fire of the great sacrificial pits soars up daily to form clouds in the sky. 
Note: He smote Manmatha. Yet when his wife implored Him, He resurrected him, making him visible to the eyes of his wife only.

மாலாயிரங் கொண்டுமலர்க் கண்ணிட ஆழி 
ஏலாவலயத் தோடீந்தானு றைகோயில் 
சேலாகிய பொய்கைச்செழு நீர்க்கமலங்கள் 
மேலாலெரி காட்டும்வீழி மிழலையே. 6

மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி 
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் - 
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள் 
மேலால் எரி காட்டும் வீழி(ம் மிழலையே.

பொருள்: ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு திருமால் அருச்சனை செய்தபோது, ஒன்று 
குறைந்ததைக் கண்டு, தனது மலர் போன்ற கண்களில் ஒன்றைப் பெயர்த்து சாத்திய அளவில் 
அவனுக்கு பிறர் சுமக்க முடியாத சக்கராயுதத்தை ஈந்தவர் சிவபெருமான். இப்பெருமான் 
உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். இங்கு, சேல் மீன்கள் வாழ்கின்ற செழிப்பான 
பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழம்பு போல் காணப்படுகின்றன.

குறிப்புரை: திருமால் ஆயிரம் பூவோடு கண் கொண்டு வழிபாடு செய்யச் சக்கரம் ஈந்த பெருமான் 
கோயில் இது என்கின்றது. இவ்வரலாறு இத்தலத்தில் நிகழ்ந்தது. ஏலாவலயம் - சுமக்கலாற்றாத சக்கரம். 
கமலங்கள் எரிகாட்டும் - செந்தாமரை தீப்பிழம்பைப் போல விளங்கும். 
Thirumaal used to worship Lord Civan daily by offering 1000 flowers. One day when he was worshipping Lord Civan like this, he found one flower short of one thousand. He immediately plucked one of his two eyes and offered it at the holy feet of Lord Civan. Lord Civan was very pleased by this action of Thirumaal and gave him the most powerful divine weapon Disc , which is very heavy and impossible to hold for anyone except Thirumaal. This Lord Civan is enshrined in Thiru-veezhi- mizhalai, in the pools of which, formed by nature, carp fish abound and ruddy lotus flowers blaze like fire.

மதியால் வழிபட்டான் வாணாள்கொடு போவான் 
கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில் 
நெதியான் மிகுசெல்வர் நித்தநியமங்கள் 
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே.

மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான், 
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில் - 
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் 
விதியால் நிற்கின்றார் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான் தன்னை மெய்யறிவால் வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரை 
எடுத்துச் செல்லச் சினந்து வந்த கூற்றுவனை அழித்தவர். இப்பெருமான் உறையும் கோயில் 
திருவிழிமிழலை ஆகும். இங்கு நிதியாலும், தியானத்தாலும் மிக்க செல்வர்கள் நாள்தோறும் 
செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழ்கின்றனர்.

குறிப்புரை: காலகாலன் கோயில் இது என்கின்றது. மதியால் வழிபட்டான் - அறிவோடு வழிபட்ட 
மார்க்கண்டன். கொதியா - கோபித்து. குமைத்தான் - உரு அழியச் செய்தவன், நெதியான் மிகு செல்வர் 
- தியானத்தால் மிக்க செல்வர். நியமங்கள் - யோக உறுப்புகள் எட்டனுள் ஒன்றாகிய நியமம். 
The wrathful Yama, approached Maarkandan to snatch away his life when he was worshipping Lord Civa with deep devotion and divine knowledge. Yama was then destroyed by the Lord. This Lord Civan is enshrined in Thiru-veezhi-mizhalai where regular servitors of spiritual opulence and excellence, reside and, offer worship to Lord Civan daily as detailed in the scriptures. 
Note: Civa is Kaalakaalar, the one who smote Yama to death. He was later revived by the even-merciful Civa.

எடுத்தான் தருக்கினை யிழித்தான் விரலூன்றிக் 
கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில் 
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை 
விடுத்தார் மிகவாழும் வீழிமிழலையே. 8

எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி; 
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில் - 
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை 
விடுத்தார், மிக வாழும் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிவபெருமான், கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கினை 
தன்கால் விரலை ஊன்றி அழித்தவர். பின்பு, அவன் தன் பிழையை உணர்ந்து வேண்ட, வாள் 
கொடுத்து அவனை ஆளாகக் கொண்டவர். இப்பெருமான் உறையும் கோயில் 
திருவீழிமிழலை ஆகும். இங்கு, வேதத்தைப் படித்து, உணர்ந்தவர்களும், வேள்விகளை 
இடைவிடாது செய்து, பாவத்தினின்று விடுபட்ட அந்தணர்களும் மிகுதியாக வாழ்கின்றனர்.

குறிப்புரை: இராவணனது தருக்கினை அழித்து வாள் கொடுத்து ஆளாகக் கொண்ட இறைவன்
கோயில் இது என்கின்றது. மறை படித்தார். வேள்வி பயின்றார் என மாறிக் கூட்டுக. வேதம் ஒதி வேள்வி 
இடைவிடாது செய்து பாபத்தை விட்டவர்கள் வாழ்கின்ற மிழலை என்க. 
Raavanan tried to uproot mount Kailash, the abode of Lord Civan. Civan pressed the mountain by His toe and removed his mighty valour. Later Raavanan repented for his misdeed. Civan forgave him and made him His servitor. He also gifted to Him a divine mystical sword and long life. This Lord Civan is enshrined in Thiru-veezhi-mizhalai temple. In this town thrive the learned, the practitioners of Vedic sacrifice and those who have forsaken all sin. 
Note: Raavana became an ardent Civa-bhaktha. On his forehead and body the holy ashes blaze in brilliance always.

கிடந்தா னிருந்தானுங் கீழ்மேற்காணாது 
தொடர்ந் தாங்கவரேத் தச்சுடராய வன்கோயில் 
படந்தாங் கரவல்குற் பவளத்துவர் வாய்மேல் 
விடந்தாங் கியகண்ணார் வீழிமிழலையே. 9

கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது, 
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில் - 
படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர்வாய், மேல் 
விடம் தாங்கிய கண்ணார் வீழி(ம்)மிழலையே.

பொருள்: பாம்பணையில் துயிலும் திருமாலாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனாலும் 
சிவபெருமானின் அடிமுடிகளைக் காண முடியவில்லை. அவர்கள் திரும்பித் தொடர்ந்து 
போற்றியபோது, அழலுருவாய் நின்றவர் இப்பெருமான். இவர் உறையும் கோயில் 
திருவீழிமிழலை ஆகும். இங்கு அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற 
வாயினையும், விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழ்கின்றனர்.

குறிப்புரை: மாலும் அயனும் அறியாவண்ணம் அழல் உருவானான் இடம் இது என்கின்றது. கிடந்தான் - 
பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமால். இருந்தான் - பூமேல் இருந்த பிரமன். சுடராயவன் - தீ 
உருவானவன். அரவு போன்ற அல்குலையும், வாயின் மேல் விஷத்தையும் தாங்கிய கண்ணார் என்றது 
பாம்பு ஒரிடமும் விடம் ஓரிடமும் இருக்கின்றதென்னும் வியப்புத் தோன்றக் கூறியது. 
Thirumaal who reclines on snake and Brahma whose seat is the lotus flower, failed to see the holy feet and head of Lord Civan, in spite of their serious search. Then they both realised their vanity and hailed Lord Civan as the Supreme Being. At that moment Lord Civan stood before them as a big and tall blazing column of fire. This Lord Civan is enshrined in Thiru-veezhi-mizhalai temple. In this town abide women whose forelaps are like the hood of cobra; whose lips are like the ruddy coral gem; and whose eyes are suffused with venom. 
Note: Civa can be behold only by and through His grace.

சிக்கார் துவராடைச் சிறுதட்டுடையாரும் 
நக்காங் கலர்தூற்றுநம்பா னுறைகோயில் 
தக்கார் மறைவேள்வித்தலை யாயுலகுக்கு 
மிக்கார வர்வாழும்வீழி மிழலையே. 10.

சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும் 
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் - 
தக்கார், மறை வேள்வித் தலைஆய் உலகுக்கு 
மிக்கார் அவர் வாழும் வீழி(ம்)மிழலையே.

பொருள்: சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஓலைத் தடுக்குகளையும் உடைய 
புத்தரும் சமணர்களும் சிவபெருமானை ஏளனம் செய்து சிரிக்கின்றனர். இப்பெருமான் 
உறையும் கோயில் திருவீழிமிழலை ஆகும். மெச்சத் தக்கவராகவும், வேத வேள்விகள் 
செய்வதில் தலையாயவராகவும், உலகிற்கே மிகவும் மேம்பட்டவராகவும் உள்ள 
மறையவர்கள் இங்கு பலர் வாழ்கின்றனர்.

குறிப்புரை: புறச்சமயிகள் புறம்பழிக்கும் நமதிறைவன் கோயில் இது என்கின்றது. சிக்கு ஆர் துவர் 
ஆடை - சிக்கு நாறும் காவியுடை, தட்டு உடை - ஒலைத் தடுக்காகிய உடை, நக்கு - சிரித்து. அவர் 
தூற்றும் - பழிதூற்றும். தக்காராய், வேதவேள்வியில் தலையானவராய், உலகுக்கே மிக்கவர்கள் 
வாழுகின்ற வீழிமிழலை என்க. 
The Buddhists clad themselves in dirty cloth dyed in red ochre, while the Samanars wear small plaited mats. They defile and defame our Lord Civan who is enshrined in Thiru-veezhi-mizhalai temple. Here in this town flourish many scholars who are competent people in Vedic sacrificial rites and who are world leaders of high repute.

மேனின் றிழிகோயில்வீழி மிழலையுள் 
ஏனத்தெ யிற்றானையெ ழிலார்பொ ழிற்காழி 
ஞானத்து யர்கின்றநலங் கொள்சம்பந்தன் 
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே. 11

மேல்நின்று இழி கோயில் வீழி(ம்)மிழலையுள் 
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி 
ஞானத்து உயர்கின்ற நலம் கொள்சம்பந்தன் 
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.

பொருள்: விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் 
சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை அழகிய பொழில்கள் சூழ்ந்த 
காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை 
உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை: வீழிநாதனைக் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் பாடவல்லார் நல்லார் என்கின்றது. 
மேல்நின்று இழிகோயில் - விண்ணிழி கோயில் இது இத்தலத்துச் சிறப்புக்களுள் ஒன்று. ஏனத்து 
எயிற்றானை - பன்றிக் கொம்பை அணிந்தானை. வாய்மைத்து இவை - உண்மையை உடையனவாகிய 
இவற்றை. 
The Vimaanam in the temple in Thiru-veezhi-mizhalai  - the tower above the sanctum sanctorum which is different from the towers on all four directions over the compound wall, descended by itself from heaven and stayed over the sanctum sanctorum of this temple. Lord Civan is enshrined in this temple wearing the teeth of a hog. The handsome Gnaanasambandan of Seekaazhi, which is surrounded by lush gardens, is an adept in divine scriptures. He has sung this hymn which is full of realism and the truth. Those who can recite this hymn are truly the virtuous ones.

திருச்சிற்றம்பலம்

82ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

83. திரு அம்பர் மாகாளம்

திருத்தல வரலாறு:

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். மயிலாடுதுறை திருவாரூர் வழியில் 
பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இத்தலம் கோயில் திருமாகாளம் எனவும் வழங்கும். அம்பன், அம்பாசூரன் இருவரையும் 
கொன்ற காளி, தன் பாவந்தீர, இறைவனை இத்தலத்தில் பூசை செய்தாள். மாகாளரிஷியும் பூசித்த 
தலம். காளி கோயில் தெற்குப் பிராகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக 
உற்சவம் நடைபெறும். சிறிய உருவமுடைய பாணலிங்கம் குவளை சாத்தப்பட்டு உள்ளது.
இறைவன் காளகண்டேசுவரர், இறைவி பட்சநாயகி. தீர்த்தம் மாகாளதீர்த்தம். சோமாசிமாற 
நாயனார் யாகம் செய்த தலம். இத்தலம் பேரளம் திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் 
இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
கல்வெட்டு:

இத்தலம் முதல் குலோத்துங்கன் காலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு 
அம்பர் திருமாகாளம் என வழங்கப் பெற்றது. இராஜகேசரிவர்மனான குலோத்துங்கன் காலத்து, 
பூபாலகுலவல்லி வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் மாகாளம் எனவும் வழங்கப் பெற்றது. இறைவன் 
திருமாகாளம் உடையார், திருமாகாளத்து மகாதேவர் என வழங்கப் பெறுகிறார். கோயிலுக்கு முதல் 
குலோத்துங்கன் காலத்து நுளம்பராசன் வேண்டுகோளுக்காக மாத்தூர் திருச்சிற்றம்பல 
நந்தராசனால் புரவுவரி விளாகம் என்ற கிராமம் கோயிலுக்கு அளிக்கப் பெற்றது. மேலும் அவனது 
ஆட்சி 42ஆம் ஆண்டில் வேதந்தூர் என்ற கிராமத்தை அம்பர் உதயமார்த்தாண்டன் 
அளித்திருக்கிறான்.

சேக்கிழான் வேளான் திருவாய்க்குலம் உடையான் எயினிகுடி கிராமத்தை அளித்தான்.
முன்னரே அதை அநுபவித்து வந்த காணியாளரைத் தள்ளிவிட்டுப் புதிதாகப் பயிர் செய்ய ஏற்பாடு 
செய்தான். விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1116-1135) நிலமளித்த செய்தி அறியப்பெறுகிறது. 
சிறப்பாக ஆட்கொண்ட நாயகனையும், அம்மையையும் கோயிலுக்கு வார்த்துக் கொடுத்து, 
திருவமுதுக்கு க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டுச் சிறுவேலூரானான அமுதன் 
திருச்சிற்றம்பலம் உடையான் உதய மார்த்தாண்ட மூவேந்த வேளான் நிலமும் அளித்தான். அதே 
அம்மைக்கு மற்றோர் சிறுவேளூர் உடையான் நிலமும் அளித்திருக்கிறான். இந்த ஆட்கொண்ட 
நாயகர் என்பது சோமாஸ்கந்தரின் பெயர் போலும். இவரைப் பற்றி விக்கிரம சோழன் காலத்துக் 
கல்வெட்டும் அறிவிக்கிறது. இறைவனுக்கு முத்துக் கழுத்தணி, வைரமுடி இவற்றைக் 
காரிபுலியனான சோழமாராயன் அளித்தான். விக்கிரமசோழன் திருமாளிகைப் பத்தியைக்
கட்டினான். மற்றும் விளக்கிற்காகவும், விழாவிற்காகவும் பொன்னும், நிலமும் அளித்த செய்தியை 
அறிவிக்கின்றன. முதுபகவர் என்ற கோயிலொன்று குறிப்பிடப்படுகின்றது. 
உமாபரமேஸ்வரி காளி அம்மையாக இருத்தல் வேண்டும். இதனை அமைத்தவன் விக்கிரம 
சோழன். பூசைக்கும், அமுதுக்குமாக நிலம் வழங்கி இருக்கிறான். இராஜேந்திர சோழனும் 
அக்கோயிலுக்கு நிலம் வழங்கினான்.

பதிக வரலாறு: 
திருநாவுக்கரசு சுவாமிகளோடும் அடியார்கள் புடைசூழத் திருமாகாளத்தை வணங்கிப் பதிக 
இன்னிசை பாடிய பிள்ளையார் திருஅம்பரமாகாளத்தைச் சேர்ந்தார்கள். ‘அடையார் புரம்’ என்னும் 
இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். 
HISTORY OF THE PLACE 
83. THIRU-AMBAR-MAAKAALAM

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It can be reached by buses plying from Poonthottam to Kaaraikkaal in the Mayilaaduthurai Thiruvaaroor bus route. It is at a distance of 3 km east of the Poonthottam railway station in the Peralam Thiruvaaroor train route. This place is also known as Koyil Thirumaakaalam. 
The name of the Lord is Kaalakandesuvarar and that of the Goddess is Patchanaayaki. The icon is of small size known as Baanalingam and is covered with 'kuvalai'. The sacred ford is Maakalatheerththam. 
Goddess Kaali worshipped the Lord here in order to get rid of the sin of killing two demons, Amban and Ambaasuran. Sage Maakaalarishi also offered worship here.
A shrine for Kaali is in the south ambulatory. A festival for Somaasimaarar is celebrated in the month of Vaikaasi. 
The inscriptions at this temple pertain to the reign of many Chola monarchs, Kuloththungkan I and Vikkirama Cholan being the most notable. They speak of the grant of many villages for the temple. Note is made of the installation of the icons of Aatkondanaayakar and Consort and the endowment of lands for food offerings for the same. This icon might refer to Somaaskandhar, and is mentioned in an inscription of Vikkirama Cholan also. Donation of ornaments to the Lord and that of gold and lands for lamps is noted. 
Vikkirama Cholan had also built a colonnade for the Lord and a shrine for Kaali, known as Umaaparamesuvari. He also made land grants to support the worship services and food offerings.

INTRODUCTION TO THE HYMN

Having hailed the Lord of Thiru-maakaalam with St. Appar, our saint arrived at Thiru-ambar-maakaalam and sang the following hymn:
திருச்சிற்றம்பலம்

83. திருஅம்பர்மாகாளம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி  

அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து 
மடையார் புனலம்பர் மாகாளம்மேய 
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும் 
சடையான் கழலேத்தச் சாராவினைதானே. 1

அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து, 
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய 
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும் 
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

பொருள்: சிவபெருமான் பகைவர்களாகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் தீயில்
எரிந்து அழியுமாறு அம்பை எய்தவர். இப்பெருமான், நீரைத் தேக்கும் மடைகளை உடைய 
நீர்வளம் மிக்க அம்பர் மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். விடை எழுதிய கொடியை 
உடையவரும், வெண்மையான பிறை மதியை அணிந்தவரும், எம் தந்தையுமாகிய 
இப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களை வினைகள் சேருவதில்லை.

குறிப்புரை: இப்பதிகத்தால் அம்பாமாகாளத்து எழுந்தருளிய இறைவனுடைய திருவடியை ஏத்த 
வல்லவர்க்கு வினை சாரா, தவம் சாரும், இன்பம் எய்தும் என்பது அறிவிக்கப்படுகின்றது. அடையார் - 
பகைவர் என்றது திரிபுராதிகள். மடை - வாய்க்கால் மடை. 
Lord Civan, our Father, has the insigne of the bull for His flag. He supports the white crescent moon in His matted hair. He fired a shot by an arrow at the three citadels of the hostile Asuraas so that they fell into the jaws of fire and got destroyed. This Lord Civan is enshrined at the temple in Thiru-ambar-maakaalam, which is rich in water-abounding sluices. The bad effects of karma will not attach those who adore the holy feet of Lord Civan of Thiru-ambar-maakaalam. 
Note: Our saint sang the above hymn for the reduction or annulment of karma of those who recite his verses in all sincerity.

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி 
வானார் பொழிலம்பர் மாகாளம்மேய 
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை 
ஆனான் கழலேத்த அல்லலடையாவே. 2

தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி, 
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய, 
ஊன ஆர் தலைதன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை 
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

பொருள்: சிவபெருமான் தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம்பூ, பிறைமதி, கங்கை 
ஆகியவற்றைச் சூடியிருப்பவர். இப்பெருமான் வானளாவிய பொழில் சூழ்ந்த 
அம்பர்மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் 
திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட இப்பெருமானின் திருவடிகளைப் போற்றத் 
துன்பங்கள் நம்மை வந்தடையாது.

குறிப்புரை: ஊனார் தலை - பிரம கபாலம். ஆனான் - இடபத்தை உடையவன். அல்லல் - துன்பம். 
Lord Civan who lives the life of a mendicant roams about on His bull and receives alms in a human skull to which flesh is still sticking. He is adorned with holy dripping rich datura flowers, the crescent moon and the river Ganges - all in His matted hair. This Lord Civan is enshrined in Thiru-ambar-maakaalam, which is surrounded by thick groves full of sky-vaulting tall trees. If we adore this Lord Civan's holy feet, we will not be affected by any affliction in our lifetime. 
Note: Civa is a mendicant. He annuls our poverty - physical as well as spiritual.

திரையார் புனலோடு செல்வமதிசூடி 
விரையார் பொழிலம்பர் மாகாளம்மேய 
நரையார் விடையூரும்நம் பான்கழல்நாளும் 
உரையா தவர்கண்மே லொழியாவூனம்மே. 3

திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி, 
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய, 
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும் 
உரையாதவர்கள் மேல் ஒழியா, ஊன(ம்)மே.

பொருள்: சிவபெருமான் அலைகளுடன் கூடிய கங்கை நதியோடு கண்டாரை மகிழ்விக்கும்
சிறப்பு வாய்ந்த பிறைமதியையும் சூடியிருப்பவர். இப்பெருமான் மணம் கமழும் பொழில் 
சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். இவர், வெண்மையான விடைமீது 
ஊர்ந்து வருபவர். இப்பெருமானின் திருவடிப்புகழை நாள்தோறும் உரைக்காவிட்டால்
அவர்களின் பழிபாவங்கள் நீங்கமாட்டாது.

குறிப்புரை: திரை - அலை. மேனி குறைதலாகிய வறுமையும் இறைவனைச் சார்ந்து கழிந்தமையின் 
செல்வமதியாயிற்று. விரை - மணம். நரை - வெண்மை. ஊனம் - பழி. இப்பாடல் எதிர்மறை முகத்தான் 
வற்புறுத்தியது. 
Lord Civan supports in His matted hair the billowing Ganges river, as well the splendorous crescent moon which creates happiness on those who gaze at it. He rides on the white bull. This Lord Civan is enshrined in Thiru-ambar-maakaalam, which is surrounded by thick groves full of fragrance. Those who do not adore daily the holy feet of this Lord Civan, cannot get rid of their fault and crime. 
Note: Worship of Civa is a must.

கொந்தண் பொழிற்சோலைக் கோலவரிவண்டு 
மந்தம்மலி யம்பர்மாகா ளம்மேய 
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த 
எந்தை கழலேத்த இடர்வந்த டையாவே.  

கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு, 
மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய, 
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன்சடை வைத்த, 
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே.

பொருள்: சிவபெருமான் பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளில் 
தென்றல் காற்றைப் போன்று அழகிய வரிவண்டுகள் இசைபாடும் மந்தச் சுருதி இசை 
நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். 
மணம் கமழும் கொன்றை மலர்களைத் தமது மணம் வீசுகின்ற சடையின் மேல் வைத்துள்ள 
எம் தந்தையாகிய இப்பெருமானின் திருவடிகளைப் போற்றினால் இடர்கள் நம்மை வந்து 
அடைய மாட்டாது.

குறிப்புரை: கொந்து அண் பொழில் - கொத்துக்கள் நிறைந்த நந்தவனம். கோலம் - அழகு. மந்தம் - 
தென்றற்காற்று. 
Lord Civan is my father; His ruddy matted hair is naturally sweet smelling. In addition He keeps the fragrant cassia flower in His hair. He is enshrined in Thiru- ambar-maakaalam. In the groves and gardens plenty of different kinds of flowers blossom in bunches. Here pretty and striped bees are humming melodiously but in the lowest pitch (மந்தம் மலி - மந்தச் சுருதி). If we adore the holy feet of Lord Civan of this place no calamity will happen to us. 
Note: The melodious murmur of bees constitutes their prayer.

அணியார் மலைமங்கை யாகம்பாகமாய் 
மணியார் புனலம்பர் மாகாளம்மேய 
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும் 
பணியா தவர்தம் மேற்பறை யாபாவம்மே. 5

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம்ஆய், 
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய, 
துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும் 
பணியாதவர் தம்மேல் பறையா, பாவ(ம்) மே.

பொருள்: சிவபெருமான் அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதி தேவியைத் தமது 
உடலின் இடப்பாகமாகக் கொண்டவர். இப்பெருமான், முத்துக்களோடு கூடிய நீர்வளம் 
உடைய அம்பர்மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். இவர் துணிக்கப்பட்ட கோவண 
ஆடையினர். இப்பெருமானின் பொன்னிறம் போன்ற திருவடிகளை, நாள்தோறும் பணிந்து 
வணங்காதவர்களின் பாவங்கள் குறையமாட்டாது.

குறிப்புரை: அணி - அழகு. ஆகம் - உடல். மணியார் புனல் - முத்துக்களோடு கூடிய தண்ணீர். துணி 
ஆர் உடை - துணிக்கப்பெற்ற கோவண ஆடை. பணியாதவர்மேல் பாவம் பறையா என இதுவும் எதிர்மறை 
முகத்தான் விளக்கியது. 
Lord Civan concorporates His beautiful consort Paarvathi Devi, daughter of mountain king in the left half of His body. He wears a loincloth cut from the big cloth. He is enshrined in Thiru-ambar-maakaalam where water flows abounding in gems. Sins will not leave those who do not adore daily, the golden hued holy feet of Lord Civan of this place. 
Note: Civa is clad in a loincloth. This is the clothing of a Brahmachaari. Civa who is Bhavan is an eternal Brahmachaari. This indeed is the message of the Sivagnaana Siddhiyaar.

பண்டாழ் கடல்நஞ் சையுண்டு களிமாந்தி 
வண்டார் பொழிலம்பர் மாகாளம்மேய 
விண்டார் புரம்வேவ மேருச்சிலையாகக் 
கொண்டான் கழலேத்தக் குறுகாகுற்றமே. 6

பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி, 
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய 
விண்டார் புரம் வேவ மேருச் சிலைஆகக் 
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்ற(ம்)மே.

பொருள்: சிவபெருமான், முற்காலத்தில் ஆழ்ந்த கடலில் இருந்து தோன்றிய நஞ்சை உண்டு 
களிப்படைந்தவர். இப்பெருமான், வண்டுகள் தேனை உண்டு களிப்புற்று இருக்கும் 
சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியுள்ளார். மேரு மலையை வில்லாகக் 
கொண்டு பகைவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்து போகுமாறு அழித்தவர்.
இப்பெருமானின் திருவடிகளைப் போற்றக் குற்றங்கள் நம்மை அணுகாது.

குறிப்புரை: பண்டு ஆழ் கடல் நஞ்சை எனப் பிரிக்க. அமுதமுண்டு களிப்பது இயல்பாயினும், இவர், 
நஞ்சையுண்டு களித்தார் என்றது மிக நயமான பகுதி. அமுதுண்டு களிப்பார் அறிவு மயங்குவார். நஞ்சை 
உண்டு இவர் களித்த களிப்பு இத்துணைத் தேவர்க்கும் இன்பம் செய்தோமே என்றதால் விளைந்தது. 
களிமாந்தி - களிப்பையடைந்து. விண்டார் - பகைவர். இது இத்தலவரலாறு. இத்தலத்திறைவன் பெயர் 
காளகண்டேசுவரர் என்பதும் காண்க. 
Being the repository of mercy, grace and love, Lord Civan came forward to save the celestials from death, He, therefore, without swallowing the poison, has positioned it in His throat permanently. He wielded mount Mēru as His bow and gutted with fire the three citadels of the hostile Asuraas. He is enshrined in Thiru-ambar-maakaalam surrounded by gardens where winged bees galore.

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி 
வளரும் பொழிலம்பர் மாகாளம்மேய 
கிளருஞ் சடையண்ணல் கேடில்கழலேத்தத் 
தளரும் முறுநோய்கள் சாருந்தவந்தானே. 7

மிளிரும்(ம்) அரவோடு வெள்ளைப்பிறை சூடி, 
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய 
கிளரும் சடை அண்ணல் கேடுஇல் கழல் ஏத்த, 
தளரும்(ம்) உறு நோய்கள்; சாரும், தவம்தானே.

பொருள்: சிவபெருமான், விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையைச் 
சூடியிருப்பவர். இப்பெருமான், வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் 
எழுந்தருளி உள்ளார். விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளர் இவர். 
இப்பெருமானின் குற்றமற்ற திருவடிகளைத் துதிக்க, மிக்க நோய்கள் தளர்வுறும். தவம் 
நம்மை வந்து அடையும்.

குறிப்புரை: மிளிரும் அரவு - விளங்குகின்ற பாம்பு. அரவுக்கு விளக்கம் அடியார்கள் அன்போடு 
அடைக்கலமாக நோக்கும் இறைவனுடைய திருவடி, கரம், கழுத்து, முடி, செவி இவற்றிலெல்லாம் அணியாக 
இருந்து அடியார்கள் மனத்தைக் கவர்தல், கேடில் கழல் - அழிந்து படாத்திருவடி. உறுநோய்கள் தளரும், 
தவம் சாரும் என முடிக்க. 
Lord Civan is the merciful Supreme Being. He supports in His shiny matted hair the dazzling serpent as well the white crescent moon. He is enshrined in Thiru-ambar- maakaalam girt with evergreen gardens. If we hail this Lord Civan's flawless holy feet, our ills will wilt; the good effects of penance will reach us.

கொலையார் மழுவோடு கோலச்சிலையேந்தி 
மலையார் புனலம்பர் மாகாளம்மேய 
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும் 
நிலையா நினைவார் மேல்நில்லா வினைதானே. 8

கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி 
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய 
இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும் 
நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.

பொருள்: சிவபெருமான், நமது பாவங்களைக் கொல்லும் மழுவாயுதத்தோடு அழகிய 
வில்லையும் கையில் ஏந்தியிருப்பவர். இப்பெருமான், கரையோடு மோதுகின்ற நீர்வளம் 
மிக்க அம்பர்மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். இலை வடிவமான முத்தலைச் சூலத்தைப் 
படையாகக் கொண்டவர். இப்பெருமானின் திருவடிகளை நாள்தோறும் உறுதியாக 
நினைப்பவர்கள்மீது வினைகள் சேருவதில்லை.

குறிப்புரை: கொலை ஆர் மழு என்றது படைக்கலம் என்ற பொதுமைபற்றி வந்த அடை. இறைவன் மழு 
யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின். கோலச் சிலை - அழகுக்காகத் தரிக்கப்பட்ட வில். 
Lord Civan wields a murderous battleaxe, a splendorous bow and a peerless weapon - the three-leaved trident. He is entempled in Thiru-ambar-maakaalam where streams coursing down the hills dash against the shores. Any sin will not affect those who daily adore this Lord Civan's holy feet.

சிறையார் வரிவண்டு தேனுண்டிசைபாட 
மறையார் நிறையம்பர் மாகாளம்மேய 
நறையார் மலரானும் மாலுங்காண் பொண்ணா 
இறையான் கழலேத்த எய்தும்மின்பம்மே.

சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட, 
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய 
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா, 
இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

பொருள்: சிவபெருமான், சிறகுகளை உடைய வரிவண்டுகள் தேனை உண்டு இசை 
பாடுகின்றதும், வேதங்களை ஓதும் சான்றோர்கள் நிறைந்ததுமான அம்பர்மாகாளத்தில் 
எழுந்தருளி உள்ளார். திருமாலாலும் தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் 
நான்முகனாலும் காண முடியாத இறைவர் இவர். இப்பெருமானின் திருவடிகளைத் துதிக்க 
இன்பம் மேலோங்கும்.

குறிப்புரை: மறையார் - அந்தணர். நறை - தேன். இறையான் - சிவபெருமான். 
Brahma seated in the lotus flower loaded with honey, as well Thirumaal could not see the Supreme Lord Civan's holy feet or head. This Lord Civan is enshrined in Thiru-ambar-maakaalam where the winged and striped bees are humming after drinking honey. A good number of Vedic scholars do live in this town.

மாசூர்வடி வின்னார்மண் டையுணல்கொள்வார் 
கூசாதுரை க்குஞ்சொற் கொள்கை குணமல்ல 
வாசார்பொ ழிலம்பர்மா காளம்மேய 
ஈசாஎன் பார்கட்கில் லையிடர்தானே.

மாசு ஊர் வடிவி(ன்)னார், மண்டை உணல் கொள்வார், 
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல; 
‘வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய 
ஈசா’ என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

பொருள்: சமணர்கள் அழுக்கடைந்த மேனியர். துன்ப வடிவினர். புத்தர்கள் மண்டை
என்னும் வாய் அகன்ற பாத்திரத்தில் உணவு கொள்பவர்கள். இவர்கள் வாய் கூசாது கூறும் 
பொய்யுரைகள் நன்மை தருவன அல்ல. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் 
சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். இப்பெருமானை ‘ஈசனே’ என்று உள்ளம் கனிந்து 
கூறுபவர்களுக்கு இடர் வாராது:

குறிப்புரை: மாசூர் வடிவு - அழுக்கடைந்த மேனி. இன்னார் - துன்பமுடையவர்கள். மண்டை - 
வாயகன்ற உண்ணும் பாத்திரம். கூசாது உரைக்கும் சொல் - பொய் என்றறிந்தும் மனமும் வாயும் கூசாமல் 
உரைக்குஞ்சொல். வாசு ஆர் பொழில் - நீர் நிறைந்த பொழில். வெட்டி வேரும் ஆம். 
The Buddhists are dirty people; the troublesome Samanars eat their food from human skull. It will do no good to listen and follow the shameless false advices of these two groups. Troubles cannot touch those who affirm thus: - "Oh Lord Civa! You are entempled in Thiru-ambar-maakaalam, which is girt with gardens full of fragrance. Our obeisance to thee".

வெருநீர் கொளவோங்கும் வேணுபுரந்தன்னுள் 
திருமாமறை ஞானசம்பந் தனசேணார் 
பெருமான் மலியம்பர் மாகாளம்பேணி 
உருகாவுரை செய்வாருயர் வானடைவாரே.

வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்- 
திருமாமறை ஞானசம்பந்தன சேண்ஆர் 
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி 
உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.

பொருள்: அஞ்சத்தக்க ஊழி வெள்ளம் உலகத்தை மூட அவ்வெள்ளத்தின் ஓங்கி மிதந்தது
வேணுபுரம் என்னும் சீகாழிப் பதி. இங்கு தேன் போன்ற நீர் மிகுந்து விளங்குகின்றது. 
இப்பதியில் தோன்றியவர் ஞானசம்பந்தன். இவர் அழகியதும் சிறந்ததுமான வேதங்களில் 
வல்லவர். இவர், விண்ணோர் தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள 
அம்பர்மாகாளத்தைப் போற்றிப் பாடினார். இப்பதிகப் பாடல்களை விரும்பி, உருகி, 
சொற்பொருள் உணர்ந்து சொல்பவர்கள் உயர்ந்த வான் உலகத்தை அடைவார்கள்.

குறிப்புரை: வெரி நீர் - தேனாகிய நீர். வேரி என்பது வெரி எனத் திரிந்து நின்றது. சேணார் பெருமான் 
- விண்ணவர் தலைவனாகிய சிவபெருமான். 
Gnaanasambandan, well versed in the divinely sublime Vedas, hailed from Venupuram that rose above every thing during the dreadful deluge period. He has sung this hymn on Lord Civan's sky vaulting Thiru-ambar-maakaalam. Those who can offer worship to Lord Civan of this place with sincere love and deep devotion and understands the meaning of this hymn will gain the sublime supreme world.

திருச்சிற்றம்பலம்

83ஆம் பதிகம் முற்றிற்று


சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
84. திருநாகைக்காரோணம்

திருத்தல வரலாறு:

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். தஞ்சை - நாகூர் இருப்புப் பாதையில் இரயில் 
நிலையம். சென்னை, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களில் 
இருந்து பேருந்துகள் உள்ளன. நாகை மாவட்டத்தின் தலைநகர். இது சப்தவிடங்க ஸ்தலங்களில் 
ஒன்று. அதிபத்த நாயனார் அவதரித்த நம்பியாங்குப்பம் திருக்கோயிலுக்கு வடகிழக்கில் 1.5 கி.மீ. 
தூரத்தில் இருக்கிறது. சிவபெருமான் புண்டரீக மகரிஷியை உடலோடு ஏற்றுக்கொண்ட 
தலமாதலின், காரோணம் எனப் பெயர் பெற்றது. ஆதிசேடன் பூசித்த தலமாதலின் நாகை எனப் 
பெயர் பெற்றது. அவன் பூசித்த திருக்கோயில் மேற்கே 1.5 கி.மீ தூரத்தில் நாகநாதர் கோயில் என 
வழங்குகிறது. முத்தி மண்டபம் என்ற ஒன்று இங்கு உள்ளமை தனிச்சிறப்பு,

இறைவன் பெயர் காயா ரோகணேஸ்வரா்: ஆதிபுராணர் என வழங்குதலும் உண்டு. அம்மை 
கருந்தடங்கண்ணி. வடமொழியில் நீலாயதாக்ஷி என வழங்குபவர். தல விருட்சம் மா. விநாயகர் 
மாவடி விநாயகர், நாகாபரணப் பிள்ளையார். தியாகர் திருவுரு தனியே உள்ளது. பாராவாரதரங்க 
நடனம். தீர்த்தம் புண்டரீக தீர்த்தம், காக தீர்த்தம் முதலியன. இது கீழ்க் கடற்கரை ஒரமாக உள்ள 
தலம்.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் மிகச் சிலவே. இவ்வாலயத்தைப் பற்றியனவாக
ஒன்றும் இல்லை. நாயக்க மன்னர்கள், ஒல்லாந்து நாட்டவருக்கு இந்நகரை 
வழங்கிய வரலாற்றுக் குறிப்பு இதில் காணப்படுகிறது.

பதிக வரலாறு:

திருச்சாத்தமங்கையில் திருநீலநக்க நாயனார் திருமாளிகையில் தங்கி வழிபட்டுத்
திருப்பதிகம்பாடி எழுந்தருளியிருந்த பிள்ளையார், பிற பதிகளையும் வழிபடத் திருவுளம்பற்றி, 
அடியார் கூட்டங்களோடு நாகப்பட்டினத்தை அடைந்தார்கள். திருநாகைக் காரோணத்தைக் 
கைதொழுது கலந்த ஓசைச் சொற்றமிழ் மாலையாகிய புனையும் விரி கொன்றை' என்னும் 
இப்பதிகத்தைப் பாடிச் சிலநாள் தங்கியிருந்தார்கள். 
HISTORY OF THE PLACE

84. THIRU-NAAKAI-K-KAARONAM

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It has a railway station on the Thanjai - Naagoor train route. Buses ply to this place from Chennai, Kumbakonam, Mayilaaduthurai, Thanjavoor and Thiruvaaroor. The town is the capital of the Naagai district. It is also on the shore of the eastern sea. 
The Lord's names are Kaayaaroganesuvarar and Aadhipuraanar, and the Goddess is known by the name of Karunthadangkanni or Neelaayathaakshi. The sacred fords are Pundareeka Theerththam and Kaaka Theerththam. Mango is the sacred tree. The idol of Vinaayakar consecrated here, is called Maavadi Vinaayakar (Vinaayakar at the foot of the Mango tree). He is also known as Naagaabarana-p- Pillaiyaar. There is a separate icon for Thiyaagar and His dance is known as Paaravaara Tharangka Natanam.
This temple is one of the seven 'vidanga' temples. Nambiyaangkuppam, where Saint Athipaththa Naayanaar was born, is situated at a distance of 1.5 km to the northeast of this temple. This place is called 'Kaaronam' because Lord Civan accepted the sage, Pundareeka Maharishi with his physical body (Matthima Mukthi). As Aadhiseshan worshipped here, the place came to be called also as Naagai. The shrine where he offered worship is called Naaganaathar temple and is at a distance of 1.5 km to the west of this place. A special distinction for this temple is the mandapam known as Muththi Mandapam. 
There are very few inscriptions about this temple. None of these is specific to this temple. A historical note about the ceding of this town to the Dutch is found in an inscription. Saint Appar has also sung hymns on this shrine.
INTRODUCTION TO THE HYMN

At Thiruchaatthamangai, our saint sojourned with Thiruneelanakkar and hailed Civa entempled in that town. From there he arrived in Thiru-naakai-k-kaaronam where he sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

84. திருநாகைக்காரோணம்

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

புனையும் விரிகொன் றைக்கடவுள் புனல்பாய 
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி 
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் 
கனையுங் கடல்நாகைக் காரோணத்தானே. 1

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய 
நனையும் சடைமேல் ஓர் நகுவெண்தலை சூடி, 
வினை இல்(ல்)அடியார்கள் விதியால் வழிபட்டு, 
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், தேவ கங்கை பாய்வதால் சடையின்மேல் அழகு செய்யும் விரிந்த 
கொன்றை மலர் மாலையையும் சிரிப்பது போல் தோன்றும் வெள்ளிய தலை மாலையையும் 
சூடியுள்ளார். இங்குள்ள சிவபெருமான், விதிப்படி வழிபடும் வினை நீங்கப் பெற்ற 
அடியார்கள் நிறைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி 
உள்ளார்.

குறிப்புரை: வினைநீங்கிய அடியார்கள் விதிப்படி வழிபட்டுச் செறியும் கடனாகைக் காரோணத்தானே 
சிரமாலை அணிந்தவன் என்கின்றது. புனையும் - அழகு செய்யும்.கடவுள்புனல் - தேவ கங்கை. 
வினையில் அடியார்கள் - வினை ஓய்ந்த அடியார்கள். கனையும் - செறியும். 
Lord Civan wears in His matted hair, garlands made up of fully blossomed cassia flowers. His matted hair is fully wet because He holds the river Ganges also there. Along with this He dons a garland of white human skulls, which appears as though it is laughing due to the visibility of the teeth. He is enshrined in Thiru-naakai- k-kaaronam near the sea which has a well secured shore.

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி 
அண்ணா மலைநாடனா ரூருறையம்மான் 
மண்ணார் முழவோவா மாடந்நெடுவீதிக் 
கண்ணார் கடல்நாகைக் காரோணத்தானே. 2

பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி 
அண்ணாமலைநாடன், ஆரூர் உறை அம்மான் - 
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக் 
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், பெண்ணும் ஆணுமாய் ஓர் உருவாய் விளங்கும் பெருமானார். 
இவர் பிறை சூடிய சென்னியனாய், அண்ணாமலை ஆரூர் ஆகிய தலங்களிலும் 
எழுந்தருளியுள்ள தலைவர். இப்பெருமான், மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி 
இடைவிடாது கேட்கும் மாடவீடுகளுடன் கூடிய நீண்ட வீதிகளையும், அகன்ற 
இடப்பரப்பையும் உடைய கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் 
எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: சிவமும் சத்தியுமாக நின்றவன். அண்ணாமலையான். ஆரூருறைவான் காரோணத்தானே 
என்கின்றது. திருமாலின் தருக்கொழித்த தலங்கள் மூன்றினையும் சேர்த்துக் கூறியருளினார். 
திருவாரூரில் வில் நாணைச் செல்லாக அரித்து நிமிர்த்தித் திருமால் சிரத்தை இடறினார். 
திருவண்ணாமலையில் தீமலையாய் நின்று செருக்கடக்கினார். நாகையிலும் தியாகர் திருவுருவில் 
இருந்து திருமாலின் தியான வஸ்துவானார் என்பதுமாம். மண் - மார்ச்சனை என்னும் மண். கண் - 
இடம். 
Lord Civan comes into view with radiance as both male and female in one body frame. He supports the crescent moon in His head. He is entempled in the towns of Annamalai and Aaroor and other places. He is also enshrined in Thiru-naakai-k- kaaronam where the noise of the 'black paste smeared drums'  will be going on without any break. This town is near to sea, and has broad open space and long streets with mansions. 
Note: Maarjanam is a black mud-paste applied to mirudangkam to improve its resonance.

பாரோர் தொழவிண் ணோர்பணியம் மதில்மூன்றும் 
ஆராரழ லூட்டியடி யார்க்கருள் செய்தான் 
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த 
காரார் கடல்நாகைக் காரோணத்தானே.

பாரோர் தொழ, விண்ணோர் பணிய(ம்), மதில்மூன்றும் 
ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்; 
தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன் - திரை சூழ்ந்த 
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், மண்ணில் வாழும் மக்கள் தொழவும், விண்ணில் வாழும் தேவர்கள் 
பணியவும், அழலைச் செலுத்தி, பகைவர்களின் முப்புரங்களை எரித்து, அடியார்களுக்கு 
அருள் செய்தவன். இப்பெருமான் அலைகள் நிரம்பிய கரிய கடலை அடுத்துள்ள நாகைக்
காரோணத்தில் எழுந்தருளி அங்கு இடைவிடாது நிகழும் தேர்த்திருவிழாவினை ஏற்றருளும் 
செல்வனாக விளங்குகிறார்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த செயல் விண்ணவர் மண்ணவர் அடியார் எல்லாரும் மகிழுஞ் செயல் ஆயிற்று 
என்பது உணர்த்துகின்றது. ஆரார் - பகைவர். காரார் கடல் - கரிய கடல். 
Lord Civan is worshipped by people on earth; and the celestials bow before Him submissively. He gutted the three citadels with a strong fire and graced His servitors. He is the opulent one hailed in the car festival, the celebration of which knows no end in Thiru-naakai-k-kaaronam where He is enshrined. This town is near the billowing sea where the clouds always gather. 
Note: Time was when each temple owned a car in which the utsava idols were taken out in a procession. The car festivals in the towns of Puri and Aaroor are world famous.

மொழிசூழ் மறைபாடி முதிருஞ்சடை தன்மேல் 
அழிசூழ் புனலேற்ற அண்ணல் லணியாய 
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் 
கழிசூழ் கடல்நாகைக் காரோணத்தானே. 4

மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல் 
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல்(ல்) அணிஆய 
பழி சூழ்விலர்ஆய பத்தர் பணிந்து ஏத்த, 
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், பொருள் பொதிந்த மந்திரச் சொற்கள் நிரம்பிய வேதத்தைப் பாடிக் 
கொண்டு இருப்பவர். உலகை அழிக்க எண்ணி வந்த கங்கையைத் தன் சடைமுடி மேல் 
ஏற்றருளிய தலைவன் ஆவார். இப்பெருமான் பழி பாவங்களை மனதிலும் எண்ணாத 
பக்தர்கள் கூட்டம் பணிந்து போற்ற, உப்பங்கழிகள் சூழ்ந்த கடலை அடுத்துள்ள நாகைக் 
காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: பழியொடு பொருந்தாத பத்தர்தொழும் நாகை என்கின்றது. மொழிசூழ் மறை - 
மந்திரமொழியாகச் சூழும் வேதம். அழிசூழ்புனல் - அழித்தலை எண்ணி மிடுக்கொடு வந்த கங்கை. பழி 
சூழ்வு இலராய - பழிசூழாத. பழியும் சூழ்ச்சியும் இலராய என்றுமாம். 
Lord Civan, our Guru, is singing the Vedas which are full of compact divine words. He supports the Ganges river which came to destroy the world, in His holy matted hair. This Lord Civan is enshrined in Thiru-naakai-k-kaaronam surrounded by saltpans, next to seashore. His devotees having all good manners and who never think in their minds about vengeance or evil, worship and praise Lord Civan of this place. Note: Civa is not only the Author of the Vedas but also their Reciter. St. Sekkizhaar hails Civa as the singer of the Pure Vedas (Thiru Marai Paadum Vaayaar திருமறை பாடும் வாயார்).

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் 
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தைசெய வல்லான் 
பேணி வழிபாடுபிரி யாதெழுந்தொண்டர் 
காணுங் கடல்நாகைக் காரோணத்தானே. 5

ஆணும் பெண்ணும்ஆய் அடியார்க்கு அருள் நல்கி, 
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் - 
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் 
காணும் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான் ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தருபவர் 
அடியார்களுக்கு அருள் வழங்குபவர். வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரியும் 
மனத்தை உடையவர். இப்பெருமான், அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் 
தொண்டர்கள் எப்பொழுதும் தரிசனம் செய்யும் வண்ணமாகக் கடலை அடுத்துள்ள நாகைக் 
காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: அடியார்க்கு அருள் செய்து, விலகி நின்றவருக்கும் திருவுளம் பாலித்துத் தியானிக்கும் 
செம்மனச் செல்வர் தரிசிக்க நின்றவன் இவன் என்கின்றது. சிவம் சத்தியாக நின்றாலல்லது அருளல் 
நிகழாமையின் ஆணும் பெண்ணுமாய் அருள் நல்கி என்றார். சேண் நின்றவர் - தூரத்தில் நின்றவர். 
தேவருமாம், இன்னம் சிந்தை செய வல்லான் - மேலும் திருவருள் உள்ளத்தைப் புரிய வல்லவன். காணும் 
- அநவரத தரிசனம் செய்யும். 
Lord Civan comes into view with radiance as both male and female in one body frame and graces His devotees. He confers great weal on the celestials. Devotees foster love towards Him. They all adore Him with full devotion. He is enshrined in Thiru-naakai-k-kaaronam upon the sea. 
Note: Civa bestows grace as Ammaiappar.
ஏனத்தெ யிறோடும்மரவ மெய்பூண்டு 
வானத்தி ளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் 
ஞானத்து றைவல்லார் நாளும் பணிந்தேத்தக் 
கானற் கடல்நாகைக் காரோணத்தானே. 6

ஏனத்துஎயிறோடும் அரவம் மெய் பூண்டு, 
வானத்து இளந்திங்கள் வளரும் சடைஅண்ணல் - 
ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த, 
கானல் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், பன்றியின் கொம்பையும், பாம்பையும் மெய்யில் பூண்டிருப்பவர். 
வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைவர். இத்தலத்தில் 
வாழும் சான்றோர்கள் சிவஞானத்தை உணர்ந்து, நாள்தோறும் இறைவன் புகழைப் பணிந்து, 
போற்றி, வழிபாடு செய்து வருகிறார்கள். இவ்வூரில் உள்ள கடலை அடுத்துள்ள சோலைகள் 
செழிப்புற்று விளங்குகின்றன. இந்த அழகிய நாகைக்காரோணத்தில் சிவபெருமான் 
எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

குறிப்புரை: ஞானிகள் பணிய இருப்பான் இவன் என்கின்றது. ஏனத்து எயிறு - பன்றிக் கொம்பு, அரவம் 
- பாம்பு, ஞானத்து உரைவல்லார் - சிவஞானத்தோடு செறிந்து இறைவன் புகழையே பேச வல்லவர்கள். 
கானல் - கடற்கரைச் சோலை. 
Lord Civan, the Guru wears on His body a hog's tusk and snakes. Also He supports on His matted hair the young crescent moon, moving on the sky. Surrounded by gardens next to the seashore is Thiru-naakai-k-kaaronam where Lord Civan is enshrined. He is worshipped and praised daily by devotees who well versed in imparting words of divine knowledge.

அரையா ரழல்நாகமக் கோடசைத்திட்டு 
விரையார் வரைமார்பின் வெண்ணீற ணியண்ணல் 
வரையார் வனபோல் வளரும்வங்கங்கள் 
கரையார் கடல்நாகைக் காரோணத்தானே.

அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு, 
விரை ஆர் வரைமார்பின் வெண்நீறு அணி அண்ணல் - 
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் 
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், இடையில் அழல் போலும் கொடிய நாகத்தை சங்கு மணிகளோடு 
இணைத்துக் கட்டிக் கொண்டுள்ளார். மணம் கமழும் மலை போன்ற மார்பில் 
திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவன் ஆவார். இப்பெருமான், மலைகள் மிதந்து வருவன 
போன்று தோன்றும் மரக்கலங்கள் வந்தடையும் கடற்கரையை அடுத்துள்ள நாகைக் 
காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: சங்குமணியைச் சர்ப்பத்தோடு அணிந்தவன் இவன் என்கின்றது. அரை ஆர் அழல் நாகம் - 
இடுப்பில் பொருந்திய தீயைப் போல் கொடிய விடப்பாம்பு. அக்கோடு - சங்குமணியோடு. அசைத்திட்டு - 
கட்டி. விரை - மணம். வரை ஆர்வன போல - மலைகள் நிறைந்திருப்பவை போல. வங்கங்கள் - 
தோணிகள். வங்கங்கள் வரையார்வன போல வளரும் கரை எனக் கூட்டுக. 
Lord Civan, the Guru, smears holy ashes on His fragrant and hill-like chest. He wears a narrow belt on His waist made up of chank beads and a fiery snake. He is enshrined in Thiru-naakai-k-kaaronam near the sea on which hill-like ships ply and arrive at the shore. 
Note: Naakai is a coastal town. Time was when it served as a mart of many nations. Referring to ships as 'mount like' vessels indicates the large magnitude of the sea faring trade in the region.

வலங்கொள் புகழ்பேணி வரையாலுயர் திண்டோள் 
இலங்கைக் கிறைவாட அடர்த்தங்கருள் செய்தான் 
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர்பணிந்தேத்தக் 
கலங்கொள் கடல்நாகைக் காரோணத்தானே.  8

வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண் தோள் 
இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான் - 
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த, 
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், மென்மேலும் பெற்ற வெற்றிகளால் செருக்குற்ற, மலைபோல் 
உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய இலங்கை அரசனான இராவணன் வாடுமாறு 
அவனை  அடர்த்தவன். பின்பு அவனுக்கு அருள் செய்தவனும் இவரே ஆவார். 
இப்பெருமான், வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்த பலத்தால் வந்த புகழை 
உடையவர்களாகிய அடியார்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து போற்றுமாறு, 
மரக்கலங்கள் வந்து அடையும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி
உள்ளார்.

குறிப்புரை: தன் புகழை நம்பி வளர்ந்த தோளை உடைய இராவணன் வாட அடர்த்து. அருள் செய்தவர் 
இவர் என்கின்றது. வலங்கொள் புகழ் என்றது கொடை முதலியவற்றாலும் புகழ் வருமாதலின் 
அவற்றினின்றும் பிரிக்க. கலம் - மரக்கலம். 
Raavanaa's fame grew up and up because of his success after success in his life due to his bravery. With his 'mountain like' strong shoulders he tried to uproot the mount Kailash. Lord Civan crushed him and he fainted. Later when he repented for his misdeed, Civan forgave him and graced him. Adored and hailed by devotees of this earth who are blessed with fruit of their life, Lord Civan is enshrined in Thiru-naakai-k- kaaronam, where in the nearby sea vessels ply in large numbers.

திருமாலடி வீழத்திசை நான்முகனேத்தப் 
பெருமானெ னநின்றபெம் மான்பிறைச்சென்னிச் 
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த 
கருமால் கடல்நாகைக் காரோணத்தானே. 9

திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த, 
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச் 
செரு மால்விடை ஊரும் செல்வன் - திரை சூழ்ந்த 
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: சிவபெருமான், தன் திருவடியில் திருமால் விழுந்து வணங்கவும், நான்முகன் 
போற்றவும், தாமே முழுமுதல் பரம்பொருள் என அவர்கள் உணரும்படி அழல் உருவாய் 
ஓங்கி நின்றவர். பிறைமதியைச் சென்னியில் சூடியவர். பகைவரை எதிர்க்க வல்ல 
விடையேறி ஊர்ந்து வரும் செல்வர் ஆவார். இப்பெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய 
பெரிய கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: அயன் மால் இவர்கள் பெருமானே என ஏத்த நின்றவர். விடையூருஞ் செல்வர். இவர் 
என்கின்றது. செரு மால் விடை - சண்டை செய்யும் பெரிய இடபம். கருமால் கடல் - கரிய பெரிய கடல். 
Lord Civan stood as a big and tall blazing fire and proved His Supremacy when Thirumaal fell at His feet and regretted for his egoism, while the four faced Brahma also felt the same and hailed him. He supports a crescent moon in His head. He is the Lord who rides a martial bull which can oppose all enemies. This Lord Civan is entempled in Thiru-naakai-k-kaaronam near the dark, vast and billowing sea. 
Note: Naakai is known as Naaka-p-pattinam.

நல்லார றஞ்சொல்லப் பொல்லார்புறங்கூற 
அல்லார லர்தூற்றஅடி யார்க்கருள்செய்வான் 
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் 
கல்லார் கடல்நாகைக் காரோணத்தானே. 10

நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற, 
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள் செய்வான்; 
பல்ஆர் தலைமாலை அணிவான் - பணிந்து ஏத்த, 
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள்: நல்லவர்கள் அறநெறியைப் போதிக்கின்றனர். ஆனால், பொல்லாதவர்களாகிய 
சமணர்கள் புறங்கூறுகின்றனர். நல்லவர்கள் அல்லாத புத்தர்கள் பழி தூற்றுகின்றனர். 
எம்பெருமானான சிவபெருமான் அடியார்க்கு அருள்புரியும் இயல்பினர். இப்பெருமான் 
பல்லோடு கூடிய தலையோடுகளை மாலையாக அணிந்து, பலரும் பணிந்து போற்றக் ‘கல்’ 
என்னும் ஒலியோடு கூடிய கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளி 
உள்ளார்.

குறிப்புரை: நல்லவர்கள் அறம் சொல்ல, தீயோர் புறங்கூற, அயலார் பழிசொல்ல, அடியார்க்கு அருள் 
செய்பவன் காரோணத்தான் என்கின்றது. பல்ஆர் தலை - பல்லோடுகூடிய தலை. கல்ஆர் கடல் - 'கல்' 
என்னும் ஒலியோடு கூடிய கடல். 
Virtuous people preach divine knowledge; while the base ones slander behind the back of others. The wicked speak falsehood; but our God Lord Civan grants grace to His devotees who humbly worship Him. He wears a garland made up of human skulls with teeth. He is enshrined in Thiru-naakai-k-kaaronam near the roaring sea. The sound of the sea waves, resembles the noise 'Kall'. 
Note: The base and the bad ones referred to in this verse are the Samanars and the Buddhists.
கரையார் கடல்நாகைக் காரோணம்மேய 
நரையார் விடையானை நவிலுஞ்சம்பந்தன் 
உரையார் தமிழ்மாலை பாடும்மவரெல்லாம் 
கரையா வுருவாகிக்கலி வானடைவாரே.

கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய 
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் 
உரை ஆர் தமிழ்மாலை பாடும்(ம்) அவர்எல்லாம் 
கரையா உருஆகிக் கலி வான் அடைவாரே.

பொருள்: இடைவிடாது ஒலிக்கும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் வெண்மை 
நிறம் பொருந்திய விடை ஊர்தியோடு சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். 
இப்பெருமானை புகழ் பொருந்திய தமிழ் மாலையால் ஞானசம்பந்தன் போற்றிப் பாடினார். 
இத்தமிழ் மாலையைப் பாடும் சான்றோர்கள் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் 
மிக்க, வானுலகை அடைவார்கள்.

குறிப்புரை: காரோண நாதனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் மாலையாகிய இவற்றைப் பாடுவார் 
அழியாவடிவோடு வான் அடைவார்கள் என்கின்றது. கரையார் கடல் - ஒலிக்கின்ற கடல். நரை - 
வெண்மை. உரை - புகழ். கரையா உருவாகி - அழியாத வடிவத்தோடு. கலி - ஓசை. 
Thiru Gnaanasambandan adored and worshipped the Lord Civan, singing this hymn. He rides on a white bull. He is enshrined in Thiru-naakai-k-kaaronam near the sea where the roaring noise of the sea waves never ceases. All those who can adore Lord Civan and chant this glorious garland of Tamil verses sung by Gnaanasambandan, will reach the ever vibrant upper world without any change in their physical frame.

Note: கரையாஉரு - Possibly a reference to 'உத்தம முத்தி' (உடம்பொடு மறைதல்) as in anmaargham.

திருச்சிற்றம்பலம்

84ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
85. திருநல்லம்

திருத்தல வரலாறு:

திருநல்லம் என்ற இத்திருத்தலம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்று. 
கும்பகோணம் வடமட்டம் பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் கோநேரி இராஜபுரம் என்றும் 
வழங்கி வருகிறது. இத்தலத்தில் நடராசர் விக்ரகம் மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது. 
சுவாமி உமாமகேசுவரர். அம்மை மங்கள நாயகி, தீர்த்தம் சக்தி தீர்த்தம்.

கல்வெட்டு:

இக்கோயிலை மதுராந்தத தேவனான உத்தம சோழன் தாயும் கண்டராதித்தன் 
மனைவியுமான செம்பியன்மாதேவியார் கருங்கற்பணியாகக் கட்டினார். இறைவன் 
திருநல்லமுடையார், திருநல்லமுடைய மகாதேவர் என வழங்கப் பெறுவர். இராஜகேசரி வர்மனான 
இராஜராஜன் காலத்தில் கோயிலில் திருப்பதிகம் ஓத இருவரால் பூங்குடி கிராமத்தில் நிலம் 
விடப்பெற்றது. உடைய பிராட்டியார் உத்தரவின்படி சாத்தன் குணபட்டனான அரசாணசேகரனால் 
கோயில் கட்டப் பெற்றது. இராஜராஜன் காலத்தில் தெரிஞ்ச கைக்கோளர்களில் ஒருவனான 
நக்கன் நள்ளாற்றடிகளால் கடவுளின் வெள்ளி விக்ரகம் ஒன்றும், சண்டேசுவரர் செப்பு விக்ரகமும்
செய்விக்கப் பெற்றன. இன்னாரது என்று அறியப் பெறாத கல்வெட்டு ஒன்று செம்பியன்மாதேவி 
கண்டராதித்தன் பெயரால் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்தார் என்கின்றது. இங்கே
கைலாசமுடைய மகாதேவர், ஆதித்தேசுவரமுடைய மகாதேவர், கோயில்களும் தனித்து 
இருந்தனவாக அறியப்படுகின்றன. உத்தம சோழ விண்ணகரம் என்ற விஷ்ணு ஆலயமும் குறிக்கப் 
பெறுகின்றது.

இவையன்றித் திருநல்லமுடையார் கோயில் தெற்குப் பக்கத்து பிரகாரத்தில் புகழா பரண 
மண்டபம் என்ற ஒன்று இருந்ததாகவும், அதில் பிள்ளையாரைப் பிரதிட்டை செய்ய மூன்றாம் 
குலோத்துங்கன் காலத்தில் நிலம் அளிக்கப் பெற்றது என்றும் வரலாறு விளங்குகின்றது. திட்டை 
விழுமியான் பிள்ளையடியாரால் சண்டேசுவரர் கோயில் திருப்பணி செய்விக்கப் பெற்றது. ஆதனூர் 
விஜய நட்டரையனான அருண்மொழித் தேவனால் திருநடை மாளிகை கட்டப் பெற்றது. ஏனைய 
கல்வெட்டுக்கள் திருமஞ்சனத்திற்கும், பூமாலைக்கும், நந்தவனத்திற்கும், அமுதுக்கும், 
விளக்கிற்கும் செய்த பணிகளை அறிவிப்பன. இத்தலத்தால் தெரியும் அரசர்களும், தண்டத் 
தலைவர்களும், அரச காரியம் பார்ப்பாரும், வெற்றிக் குறிப்புக்களும் பல.

பதிக வரலாறு:

வைகல் மாடக் கோயிலை வணங்கிப் போந்த பிள்ளையார் திருநல்லத்தை நணுகினார்கள்.
அங்கு எழுந்தருளியுள்ள நீடுமாமணியின் சேவடிகளை வணங்கி, இனிய தமிழாகிய ‘கல்லால் 
நிழன்மேய’ என்னும் பதிகத்தை அருளிச் செய்தார். 
85. THIRU-NALLAM

HISTORY OF THE PLACE

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It can be reached by bus from Kumbakonam and Vadamattam. It is also known as Koneri-raaja- puram. 
The Lord's name is Umaamahesuvarar and the name of the Goddess is Mangkalanaayaki. The sacred ford is Sakthi Theerththam. A largest and beautiful image of Nataraajar is here. 
From the inscriptions, we know that this temple was rebuilt with stone by Sembiyan Maadheviyaar, wife of Gandaraadhiththan and mother of Uththama Cholan. During the reign of Raajaraajan, a grant of land from Poongkudi village was made for the recitation of the sacred hymns (Thiruppadhigam). Also a silver icon of the Lord and a copper icon of Sandesuvarar were made by a Therinjcha Kaikkolar of the name Nakkan Nallaarradikal. Inscriptions reveal that there were two other Siva temples for Kailaasamudaiya Mahaadhevar and Aadhiththesuvaramudaiya Mahaadhevar and a temple for Vishnu of the name Uththama Chola Vinnagaram.
Kuloththungkan III installed a Pillaiyaar in a pavilion called Pugazhaabarana Mandapam in the southern ambulatory of this temple and made land grants for it. 
Others contributed by renovating the Sandesuvarar shrine and for building a 'thirunadai maaligai'.
Other inscriptions inform about gifts for ceremonial bathing of the icons, flower garlands, food offerings, and for lamps. There are many kings and their officers about whom the inscriptions here speak.

INTRODUCTION TO THE HYMN

From Vaikal Maadakkoyil, our saint arrived at Nallam where he sang the following hymn:


திருச்சிற்றம்பலம் 
85. திருநல்லம் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென் 
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த 
வில்லா லரண்மூன்றும் வெந்துவிழவெய்த 
நல்லா னமையாள்வா னல்ல நகரானே. 1

‘கல்லால்நிழல் மேய கறை சேர் கண்டா’ என்று 
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த, 
வில்லால் அரண்மூன்றும் வெந்துவிழ எய்த, 
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம்நகரானே.

பொருள்: சிவபெருமானை வானோர்கள் ‘கல் ஆலமர நிழலில் உபதேச குருமூர்த்தியாகிய 
நீலகண்டா' என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தொழுது போற்றுகின்றனர். 
மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு
செய்தருளிய நல்லவர். இப்பெருமானார் நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் 
என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: உபதேச குருமூர்த்தியாயிருந்த நீலகண்டர் என்று தேவர்கள் தோத்திரிக்கத் திரிபுரம் எரித்த 
பெருமான் நமையாட் கொள்ளுவதற்காகத் திருநல்லம் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருக்கின்றார் 
என்கின்றது. கறை - விஷம். எல்லா மொழியாலும் - தமக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும். 
Celestials hail and worship Lord Civan using many different expressions known to them by saying thus: "Oh! Lord Neelakanda! You presided over the celestial saints sitting under the shade of stone-banyan tree". You are the good one who destroyed the three citadels by using the Meru mountain as bow. This Lord Civan is enshrined in the town called Nallam (நல்லம்) to admit us into His good graces (நமை ஆள்வான் - நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு). 
Note: The first ten verses of this hymn ends with the phrase: "Nallam nakaraane". This phrase also means that Civa parts not from Vallam. Kallaala tree is the banyan tree which is without stilt roots called stone-banyan tree. This hymn opens with the phrase: "Kallaal nizhal". In St. Meykandaar's Siva-gnaana-botham - the first invocation verse on Lord Ganesh to bless him also begins with this very same phrase "Kallaal nizhal”.

தக்கன் பெருவேள்வி தன்னிலமரரைத் 
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக் 
கொக்கி ன்னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் 
நக்க னமையாள்வா னல்ல நகரானே. 2

தக்கன் பெருவேள்விதன்னில் அமரரைத் 
துக்கம்பல செய்து, சுடர்பொன்சடை தாழ, 
கொக்கின்(ன்)இறகோடு குளிர்வெண்பிறை சூடும் 
நக்கன்; நமையாள் வான் - நல்லம்நகரானே.

பொருள்: சிவபெருமான் தம்மை மதிக்காமல் தக்கன் செய்த பெருவேள்வி செய்ய 
அவ்வேள்விக்கு சென்ற தேவர்களை அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான 
துக்கங்களை அடையச் செய்தவன். ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக்
கொக்கின் வெண்மையான இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருக்கும் 
திகம்பரன் (நிர்வாணி - அம்மணமான சந்நியாசி) ஆவான். இப்பெருமான் நம்மை 
ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளான்.

குறிப்புரை: தக்க யாகத்தில் தேவர்களைத் துக்கப்படச் செய்த பெருமான் இவர் என்கின்றது. நக்கன் - 
நக்நன். இது நிர்வாணி (அம்மணம்) என்னும் பொருளது. 
Lord Civan made the celestials face many sufferings at the hands of His servitor Veerabadran for attending the big sacrificial ceremony arranged by Dakshan without giving due respect to Him. Some of the celestials ran away; some others were severely punished in the very ceremonial hall itself; the entire oblation hall was destroyed. In His radiant and dangling matted hair Lord Civan sports the heron's feather and the cool white crescent moon. This Lord Civan is entempled in Nallam to rule over us. 
Note: Heron's feather: Civa smote an Asura who assumed the form of a heron. He then added its feather to His crest. Kokkiraku is a flower known as Kokku-mantaarai. Our saint speaks of Kokkin iraku (heron's feather) and not the flower.

அந்திமதி யோடுமரவச் சடைதாழ 
முந்தியன லேந்திமுது காட்டெரியாடி 
சிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும் 
நந்தி நமையாள்வா னல்ல நகரானே. 3

அந்திமதியோடும் அரவச் சடை தாழ,  
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரிஆடி; 
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் 
நந்தி; நமை ஆள்வான் - நல்லம்நகரானே.

பொருள்: சிவபெருமான் மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் சூடிய 
சடைமுடி தாழ்ந்து தொங்க ஊழிக் காலத்தின் தொடக்கத்தில் கையில் அனலேந்திப் 
பழமையான சுடுகாட்டில் எரிஆடுபவர். தன்னையே சிந்தித்து, எச்செயலையும் தொடங்கும் 
வல்லவர்களின் தீராத வினைகள் எல்லாவற்றையும் தீர்த்து அருளும் பெருமான் இவன். 
இப்பெருமான் நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் 
எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: தியானிப்பவர்களுடைய தீராவினை நீக்குவார் இவர் என்கின்றது. முந்தி - ஊழித் 
தொடக்கத்தில். தீராவினை - இறைவன் திருவருளால் அன்றி வேறொன்றாலும் தீராத வினை. நந்தி - 
சிவ பெருமான். 
Lord Civan adorns His dangling matted hair with both the crescent moon which appears during the evening hours in the sky, as well the serpent. At the time of the great deluge, by holding the primal fire in His hand Lord Civan dances in the burial fire in an old cremation ground. He annuls all the insolvable bad karma of those who first pay obeisance to Him and thereafter only commence their routine work. This Lord Civan who is also known as Nandi is enshrined in Nallam to admit us into His good grace. 
Note: The Primal Fire is the one that occurs during Maha Samhaaram.

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ 
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில் 
தளிருந் திகழ்மேனித் தையல்பாகமாய் 
நளிரும் வயலசூழ்ந்த னல்ல நகரானே.  

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ, 
மிளிரும்(ம்) அரவோடு வெண்நூல் திகழ் மார்பில்,- 
தளிரும் திகழ்மேனித் தையல் பாகம்ஆய்,

நளிரும் வயல் சூழ்ந்த நல்லம்நகரானே.

பொருள்: சிவபெருமான் குளிர்ந்த பிறைமதியைச் சூடி இருப்பவர். கொன்றை மலர்களை 
அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க விளங்கும் பாம்போடு வெண்மையான பூணூல் 
திகழும் மார்பினை உடையவர். அம்மார்பில் தளிர் போன்ற திருமேனியை உடைய 
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவர். நந்தி என்னும் இச்சிவபெருமான் 
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: உமையொரு பாகன் இவன் என்கின்றது. மிளிரும் - விளங்குகின்ற. தளிரும் திகழ் மேனி - 
தளிரைப் போல் விளங்குகின்ற மேனி. நளிரும் வயல் - குளிர்ந்த வயல். 
Lord Civan supports the cool crescent moon as well the cassia flowers in His dangling matted hair. The dazzling snake and the three ply sacred thread shine on His chest. He is concorporate with His consort whose splendorous body is soft like the tender shoot. He is entempled in the town of Nallam, which is girt with cool fields (to admit us into His grace). 
Note: Civa is Theeyaadi (Dancer in fire). However, He is ever cool. He dwells in the snow-clad Mount Kailash. His consort is the Daughter of Himavan. Himam means ice. A cool river courses in His head. He wears a moist crescent moon. Flowers for ever cool, adorn Him. His shrine is girt with cool fields.

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு 
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் 
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த 
நணியா னமையாள்வா னல்ல நகரானே. 5

மணிஆர் திகழ் கண்டம்(ம்) உடையான்; மலர் மல்கு 
பிணி வார்சடை எந்தைபெருமான்; கழல் பேணித் 
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த, 
நணியான்; நமை ஆள்வான் - நல்லம் நகரானே.

பொருள்: சிவபெருமான் நீலமணி போன்று விளங்கிய கண்டத்தினை உடையவர். 
மலர்களால் வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினர். எமக்குத் தந்தையானவர். 
இப்பெருமானின் திருவடிகளை மனத்துணிவு உடைய தொண்டர்கள் மலர் கொண்டு, 
போற்றித் தொழுதேத்த அவர்களுக்கு அண்மையில் இருப்பவர் இவர். இப்பெருமான் 
நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: மலர் கொண்டு கழல் பேணி - தொண்டர்கள் தொழுது ஏத்த அவர்களுக்கு அண்மையில் 
இருப்பவன் இவன் என்கின்றது. மணி - நீலமணி. பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை. நணியான் - 
நணுகியவன். துணிவார் தொண்டர் - மனத்துணிவினை உடைய தொண்டர். 
My father Lord Civan's neck is dark blue in colour similar to the sapphire gem. His massive and long bounded matted hair is decked with flowers. He is easily accessible to the resolute servitors who adore and hail Him with flowers. He is entempled in the town of Nallam to admit us into His good grace. 
Note: The wearer of flowers is to be adored with flowers.

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் 
பூசுஞ் சுடுநீறுபுனைந் தான்விரி கொன்றை 
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு 
நாச னமையாள்வா னல்ல நகரானே. 6

‘வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் 
பூசும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை 
ஈசன்(ன்)!’ என உள்கி எழுவார் வினைகட்கு 
நாசன்; நமை ஆள்வான் - நல்லம் நகரானே.

பொருள்: சிவபெருமான், மலை அரசன் மகளாகிய மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய 
பார்வதி தேவியோடு இருப்பவர்.பூசத் தகுந்தவாறு சுட்டெடுத்த திருநீறு அணிந்தவர். 
ஈசன் எனத் தன்னை நினைந்து இதழ்விரிந்த கொன்றைப்பூ மாலையைப் புனைந்தவர். 
ஏத்துபவர்களின் வினைகளைப் பொடி செய்பவர். இப்பெருமான் நம்மை ஆட்கொண்டு 
அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: உமாதேவியோடு நீறணிந்து கொன்றை சூடிய ஈசன் எனத் தியானிப்பார்க்கு வினை நாசம் 
செய்பவன் இவன் என்கின்றது. உள்கி - நினைத்து. 
Lord Civan is the destroyer of bad karma of those who rise up praying and contemplating on Him as the Supreme Lord of the Universe. He wears the fully blossomed cassia flower garlands. He is concorporate with Himavaan's daughter Paarvathi Devi who is adorned with flowers of exceeding fragrance. He smears His body with burnt ashes. He is entempled in the town of Nallam to admit us into His good grace.

அங்கோல் வளைமங்கை காணஅனலேந்திக் 
கொங்கார் நறுங்கொன்றை சூடிக்குழகாக 
வெங்காடி டமாகவெந்தீ விளையாடும் 
நங்கோன் நமையாள்வா னல்ல நகரானே. 7

அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி, 
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகுஆக, 
வெங்காடு இடம்ஆக, வெந்தீ விளையாடும் 
நம் கோன்; நமை ஆள்வான் நல்லம் நகரானே.

பொருள்: சிவபெருமான், அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமையம்மை காண 
கையில் அனலை ஏந்தியிருப்பவர். தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர் 
மாலையைச் சூடியிருப்பவர். இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு
எரி ஆடுபவர். நமது அரசனான இப்பெருமான் நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு 
நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: உமையம்மைக் காண கொன்றைசூடி, ஊழிக்காலத்தில் நடனம் புரிபவர் இவர் என்கின்றது. 
அம் கோல் வளை - அழகிய திரண்ட வளையல். கொங்கு - மணம் நிறைந்த தேன். குழகா - 
இளமையாக. 
Lord Civan holding fire in His palm dances in the cremation ground. In the fierce cremation ground He dances in the blazing fire. In His youthful frame He always considers the cremation ground as His stage for dancing. His dance was witnessed only by His consort who wears comely and rotund bangles. This Lord Civan is entempled in the town of Nallam to admit us into His good grace. 
Note: Civa is Kuzhakan - the eternal youth.

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு 
கண்ணார் நுதலினான் கயிலைகருத்தினால் 
எண்ணா தெடுத்தானை யிறையேவிரலூன்றி 
நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே.

பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு 
கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால் 
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி 
நண்ணார் புரம் எய்தான் - நல்லம்நகரானே.

பொருன்: சிவன் உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள 
பெருமான். பிறைமதியைத் தன் சடையில் சூடியவர். தனது நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவர்.
இறைவனது வரம்பில்லாத ஆற்றலை முன்பே எண்ணாது கயிலை மலையை எடுத்த இராவணனைச்
சிறிதே விரலூன்றி அடர்த்தவர். பகைவரின்முப்புரங்களையும் எய்து அழித்தவர். 
நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: இராவணனை விரலால் ஊன்றித் திரிபுரம் எரித்தவர் இவர் என்கின்றது. எண்ணாது - 
பின்வருகின்ற தீங்கை முன் ஆராயாது. இறையே - சிறிது. நண்ணார் - பகைவர். 
Lord Civan concorporates His consort Umaa Devi on the left half of His divine body. He has a third eye on His forehead and a crescent moon on His head. He slightly pressed His toe on the mountain and crushed Raavanan, who thoughtlessly tried to uproot mount Kailash in vain. He gutted with fire the three citadels of the hostile Asuraas. This Lord Civan is entempled in the town Nallam.

நாகத் தணையானும் நளிர்மாமலரானும் 
போகத் தியல்பினாற் பொலியஅழகாகும் 
ஆகத் தவளோடும மர்ந்தங்கழகாரும் 
நாகம் மரையார்த்தா னல்ல நகரானே. 9

நாகத்து அணையானும் நளிர் மா மலரானும் 
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும் 
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும் 
நாகம்(ம்) அரை ஆர்த்தான் - நல்லம்நகரானே.

பொருள்: பாம்பணையில் துயிலும் திருமாலும், குளிர்ந்த தாமரை மலர்மேல் எழுந்தருளி 
உள்ள நான்முகனும் திருமகள் கலைமகளிரோடு போகம் பொருந்தி வாழும் பொருட்டு 
சிவபெருமானும் மலைமகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்கின்றார். அழகு 
பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டுள்ளார். இப்பெருமான் 
நம்மை ஆட்கொண்டு அருளும் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: நாகத்தணையான் - திருமால். திருமாலை இச்சொல்லால் குறித்தது. அணையிருந்தும் 
அணையிலேயே அருகில் அலர்மகள் இருந்தும், மாலுக்கு போகம் கூட வேண்டுமாயின் இறைவன் 
போகியாய் இருந்தால் அல்லது பயனில்லை என்பதைக் காட்ட; மாமலரான் என்பதும் அங்ஙனமே. 
Lord Civan has a happy conjugal life in His aspect as Sadaa Civan with His consort Umaa Devi, daughter of mountain king. This He did in His grace in order to enable Thirumaal who reclines in snake bed and Brahma seated in the cool lotus flower, to flourish in their conjugal life with their consorts Thiru-makal (Lakshmi) and Kalai-makal (Saraswathi) respectively. He has worn a beautiful snake on His waist as waist-cord. This Lord Civan is enshrined in Thiru-nallam to admit us into His good grace.

குறியில் சமணோடுகுண் டர்வண்தேரா் 
அறிவில் லுரைகேட் டங்கவமே கழியாதே 
பொறிகொள் ளரவார்த் தான்பொல்லா வினைதீர்க்கும் 
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லநகரானே. 10

குறி இல் சமணோடு, குண்டர் வண்தேரர், 
அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே! 
பொறி கொள் அரவு ஆர்த்தான் - பொல்லாவினை தீர்க்கும், 
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே.

பொருள்: சமணர்கள் குறிக்கோள் இல்லாதவர்கள். புத்தர்கள் அறிவற்றவர்கள். இவர்களின் 
அறிவற்ற சொற்களைக் கேட்டு நாட்களை வீணாகக் கழிக்காதீர்கள். சிவபெருமான் 
புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையில் கட்டி இருப்பவர். இப்பெருமான் நமது 
பொல்லாத வினைகளைத் தீர்க்கும் பொருட்டுத் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த நல்லம் 
என்னும் நகரில் எழுந்தருளி உள்ளார். அவனை வழிபாடு செய்வீராக.

குறிப்புரை: இது பொல்லா வினையைப் போக்குவார் இவர் என்கின்றது. குறி இல் சமண் - 
குறிக்கோளற்ற சமணர். குண்டர் - அறிவிலிகள். தேரர் - புத்தர். அவமே - வீணாக. பொறி - 
படப்பொறி. நறை - தேன். 
Ye folks! Do not waste your lifetime listening to the meaningless and aimless words of the Samanars and Buddhists. Lord Civan has worn in His waist a speckled serpent as His cord. He will annul all our evil karma. Worship this Lord Civan who is entempled in Thiru-nallam girt with gardens full of honey.

நலமார் மறையோர் வாழ்நல்ல நகர்மேய 
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு 
தலமார் தமிழ்ஞான சம்பந்தன்சொன்ன 
கலைகளி வைவல்லார் கவலைகழிவாரே. 11

நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம்நகர் மேய 
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு 
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன 
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

பொருள்: நல்லம் நகரில் நன்மைகள் செய்யும் வேதங்களை ஓதும் சான்றோர்கள் 
வாழ்கின்றனர். இந்நகரில் சிவபெருமான் நமது பாவங்களை அழிக்கவல்ல மழு என்னும்
ஆயுதத்தை ஏந்தியவாறு எழுந்தருளி உள்ளார். கொச்சை வயம் என்னும் புகழை உடைய 
சீகாழித் தலத்தில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் இப்பெருமானைப் போற்றிக் கலைநயம் 
வாய்ந்த இப்பதிகத்தைப் பாடினார். இக்கலைநயம் வாய்ந்த பதிகத்தை ஓத 
வல்லவர்களின் கவலைகள் கழிந்து அழிந்து விடும்.

குறிப்புரை: நல்ல நகரானை ஞானசம்பந்தன் சொன்ன கலைகளாகிய இவைகளில் வல்லவர்கள் கவலை 
கழிவார் என்கின்றது. கொச்சை - சீகாழி. இப்பதிகத்தைக் கலைகள் எனச் சிறப்பித்தமை காண்க. 
Lord Civan is enshrined in the city of Nallam holding in His hand the martial battleaxe. In this city Vedic scholars well versed in chanting the weal conferring scriptures abide in large numbers. Gnaanasambandan who is himself well versed in Tamil (Tamil Gnaanasambandan ) hails from the lofty and holy city of Seekaazhi called Kochai-vayam . He sang on Lord Civan of Nallam, this compact hymn revealing all the wisdom of holy scriptures. Those who can chant this hymn with deep devotion will stand freed from worry. 
Note: This verse refers to Kocchai vayam which is one of the twelve names of Seekazhi. The word Kalai means holy scriptures. In other words Kalai means science - Kalai inculcates science, physical as well as spiritual. Our Saint proclaims that his verses constitute kalai.

திருச்சிற்றம்பலம்

85ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
86. திருநல்லூர்

திருத்தல வரலாறு:

திருநல்லூர் என்ற இத்திருத்தலம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். 
சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ளது. பேருந்து வழி உள்ளது. இத்தலம் கோச்செங்கட் 
சோழனால். திருப்பணி செய்யப் பெற்ற மாடக்கோயிலுள் ஒன்றாக விளங்குவது. திருநாவுக்கரசு 
சுவாமிகள் நான்காம் திருமுறையில் திருச்சத்தி முற்றப் பதிகத்தில் (பதிகம் எண் - 4-96 
“கோவாய்முடுகி'' என்று தொடங்கும் முதல் பதிகத்தில் இரண்டாவது அடியில்) ‘பூவார் அடிச்சுவடு 
என்மேல் பொறித்துவை’ என்று விண்ணப்பஞ்செய்ய, இறைவன் ‘நல்லூருக்கு வா! உன்னுடைய 
நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்று அருள திருநல்லூரில் எழுந்தருளினார் (பெரியபுராணம் 
‘நன்மை பெருகு’ என்று தொடங்கும் பாட்டு 12-27-193 முதல் 196 முடிய). திருவடி சூட்டப் 
பெற்றார். அதனை அமைத்துத் திருத்தாண்டகத்து ஓதுதலைக் காண்க (6-14-6380 முதல் 6390 
முடிய).

அமர்நீதி நாயனார் பழையாறையில் வைசிய குலத்தில் பிறந்த பெரிய தனவந்தர். சிறந்த 
சிவபக்தர். சிவனடியார்களுக்கு உணவு, உடை, கோவணம் மற்றும் தேவையானவற்றை வாரி வாரி 
வழங்கும் கொடைவள்ளல். அண்மையில் உள்ள திருநல்லூரில் விளங்கும் சிவன் கோவிலில் 
நடக்கும் திருவிழாவிற்கு மக்கள் கூட்டம் மிக அதிகமாக வரும். அதை அறிந்து அமர்நீதி 
நாயனாரும் திருநல்லூர் வந்து ஒரு சத்திரம் கட்டி குடும்பத்துடன் அங்கு தங்கி, தன்னுடைய 
திருத்தொண்டை மிக அதிகமாக செயது வந்தார். இவருடைய பெருமையை உலகமக்கள் அறிய 
வேண்டுமென்று சிவபெருமான் விரும்பி ஒரு சிறிய நாடகம் நடத்தினார். சிவன், வேதியராய் 
பிரமசாரி வேடந்தாங்கி நாயனார் இல்லம் வந்து, உமது தொண்டைக் கேள்வியுற்று உம்மைக் காண 
வந்தோம் என்றார். நாயனார் முறைப்படி வணங்கி உபசரித்தார். வேதியர் ஒரு உலர்ந்த 
கோவணத்தைத் கொடுத்து இதைப் பத்திரமாக வைத்திரும். நான் காவேரி சென்று குளித்து விட்டு 
வந்து வாங்கி அணிந்து கொள்ளுவேன் என்று சொல்லிப் போந்தார். திரும்பி வரும் பொழுது மழை 
வந்து விட்டது. வேதியரின் உடை அனைத்தும் நனைந்து விட்டது. நாயனாரைச் சந்தித்து தன் 
கோவணத்தைக் கேட்டார். இறையருளால் கோவணத்தைக் காணவில்லை. வீடெங்கும் தேடிக் 
காணாமையால் வேறு ஒரு புதிய உயாந்த கோவணத்தைக் கொண்டு வந்து கொடுத்து வேதியரிடம் 
‘தாங்கள் கொடுத்த கோவணத்தை வைத்த இடத்தில் தேடினேன்; காணவில்லை. 
அதைப்பார்க்கிலும் இது மிக உறுதியானது; இதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார். 
வேதியர் அதை வாங்க மறுத்து நாயனாரை மிகவும் இகழ்ந்து பேசி வம்புக்கு இழுத்தார். நாயனார் 
“நான் என்ன பட்டாடைகள், மணிகள் வேண்டுமானாலும் தருகிறேன். என் தவறை மன்னியுங்கள்’ 
என்று மன்றாடினார். கடைசியாக வேதியர் ஒரு வழிக்கு வந்தார். என்னிடம் உள்ள இன்னுமொரு 
ஈரக் கோவணத்தின் எடைக்கு சமமாக மற்றுமொரு கோவணம் கொடுத்தால் போதும் என்று கூற, 
அடியார் விரைந்து வந்து ஒரு துலா நாட்டினார். வேதியர் தனது கோவணத்தை ஒரு தட்டில் இட்டார். 
நாயனார் தான் காண்பித்த கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார். நிறை ஒத்து வரவில்லை. 
மற்றும் பல கோவணங்கள், பட்டாடைகள், பொன், வெள்ளி முதலிய நாணயங்கள் அனைத்தையும் 
இட்டார். நிறை ஒத்து வரவில்லை. நாயனார் சிவனை மனதால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஒதி ' 
தானும், மனைவியும், மைந்தனும் தட்டில் ஏறினார்கள். நிறை ஒத்து வந்தது. வேதியர் மறைந்து 
விட்டார். விண்ணிலே சிவபெருமான் உமாதேவியாரோடு காட்சி கொடுக்க நாயனார் 
சிவபெருமான் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, போற்றி, வழிபட்டு வணங்கினார். 
“உமது தொண்டை உலகறியச் செய்வதற்காக இவ்வாறு செய்தோம்'' என்று சிவன் கூறி 
மூவரையும் துலாவை விமானமாக மாற்றி தன் இருப்பிடம் கூட்டிச் சென்று அருள் புரிந்தார். 
இதனை அப்பர் சுவாமிகள் ‘நாட்கொண்ட’ என்ற பாடலில் (4-97-7ஆம் பாட்டு) விளக்கி 
அருளுகிறார்கள். |

பிருங்கி வண்டுரூபமாகப் பூசித்ததால் இங்குள்ள திருமேனி முழுவதும் துளைகள் உள்ளன. 
அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டிய தலம் ஆதலால் அகத்திய லிங்கழும், கல்யாண 
சுந்தரக் கோலமும் கருப்பக்கிருகத்தில் இருக்கின்றன. சுவாமி பொன்வண்ணத் திருமேனியோடு 
விளங்குகிறார். ஒருநாளைக்கு ஐந்து வர்ணமாய்த் தோன்றுவதாக ஐதீகம். இக்கோயிலில் 
சாலிக்கிராமத்தால் செய்யப் பெற்ற சுப்பிரமணியர் விக்கிரகம் ஒன்று உண்டு. சுவாமி பெயர் 
பெரியாண்டேசுவரர், கல்யாண சுந்தரேசுவரர், பஞ்சவர்ணேசர் என்பன. இறைவி பெயர் பர்வத 
சுந்தரி, கல்யாண சுந்தரி என்பன. தீர்த்தம் சப்தசாகர தீர்த்தம். சுந்தரப் பெருமாள் கோயிலுக்குத் 
தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் உள்ளது.

கல்வெட்டு:

இத்தலம் ஹொய்சள அரசரான வீரராமநாத தேவரின் 23ஆவது ஆட்சியில் நித்த விநோத 
வளநாட்டு நல்லூர் நாட்டுப் பஞ்சவள மாதேவி சதுர்வேதி மங்கலமாகிய திருநல்லூர் என்று 
வழங்குகிறது. 
இறைவன் திருநல்லூர் நாயனார் என்று வழங்கப்படுகிறார். இத்தல விநாயகர் அகம்படி 
விநாயகர் என்று குறிக்கப்படுகிறார். நாராயணன் மேகவீரன் என்பவன் ஒரு மண்டபம் கட்டினான். 
ஏனைய கல்வெட்டுக்கள் நிவேதனத்திற்கு நெல்லும், நிலமும், விளக்கிற்குப் பொன்னும் 
பூந்தோட்டத்திற்கும், பூக்கட்டவும் நிலமும் பொன்னும் அளித்த செய்தியை அறிவிக்கின்றன. 
இராஜேந்திர சோழ தேவனின் 5ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கோயிலில் அடித்தளம் அமைக்க 
நிலம் வழங்கியதைத் தெரிவிக்கின்றது.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பாலைத்துறையை வணங்கிக் கொண்டு 
திருநல்லூரை அடைந்தார்கள். அங்கிருந்த அந்தணர்கள் மங்கள வாத்தியங்களுடன் 
எதிர்கொண்டு அழைத்தனா். பிள்ளையார் சிவிகையில் ஆரோகணித்த வண்ணமே சென்றார்.
கோயிலை அணுகியதும் சிவிகையினின்றும் கீழிறங்கி, அந்தணர் கூட்டம் முன்செல்ல, அடியார் 
கூட்டம் இரு மருங்கும் வர, திருக்கோயிலை அடைந்தார். கோபுரத்தைக் கண்டு வணங்கினார். 
கோயிலை வலம் வந்தார். அப்போது ஆனந்த பாஷ்பம் அருவிபோற்பொழிய இறைவனைத் தொழுது 
பரவிச் சொற்பதிகமாகிய ‘கொட்டும்பறை’ என்னும் இதனை அருளிச் செய்தார்.

HISTORY OF THE PLACE

86. THIRU-NALLOOR

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It is to the south of Sundharapperumaal Koyil at a distance of 3 km from it. It is accessible by bus. The names by which the Lord is known are Periyaandusuvarar, Kalyaana- sundharesuvarar and Panjchavarnesuvarar. The Goddess is known as Parvatha- sundhari and Kalayaanasundhari. The holy ford is Sapthasaagar Theerththam. 
This temple is one of the multi-storeyed temples (Maadakkoyil) renovated by Kochchengkat Cholan. Saint Thirunaavukkarasar prayed in his Thiruchchaththi mutram hymn (4-96-1-second line), 'poovAr aDicchuvaDu en mEi poritthu vai' (அடிச்சுவடு என்மேல் பொறித்துவை) (please grant your grace by crowning me with your flower-like feet). In response, the Lord asked him to come to Nalloor where He would grant him his prayer. So the Saint came to this temple and had the holy feet of the Lord bestowed on him. The Saint's Thiruththaandakam recalls this (6-14-1 to 10; 6380 to 6390). 
Saint Amarneethi Naayanar born in Pazhayaarai in Chola country belonged to a rich merchant community (Vaisyas). He is a staunch devotee of Lord Civan. He spent his wealth in feeding the devotees, giving them dhoties, loincloth and whatever needed by them. Thirunallur is a nearby town where people gather in large numbers to witness the temple festival. Amarneethi Naayanar also went and built a chatram in this town and settled there with all his family members. He carried on his charitable activities here in a more elaborate manner then before. Lord Civan decided to display his nobleness to all the people. HE therefore enacted a drama. He went in disguise as an old man to Amarneethi Naayanar's house and requested him to keep safely HIS dry loincloth until HE returns from HIS bath in the river nearby. When he returned it started rain and His entire dresses went vet. He met the Naayanaar and asked him to return His dry loincloth to wear, as all other cloths were wet. Naayanar went inside the place and searched for the loincloth. It was missing. He, therefore, brought a new one and gave it to HIM and regretted for losing HIS loincloth. Lord Civan shouted at Naayanar for alleged misdeeds and insulted him. Naayanar begged for pardon and offered to provide anything else in compensation He offered such as silk dhoties, silk loincloth, gems etc., and requested HIM to accept anything HE liked. Lord Civan calmed himself and told him that it is enough if he can give a loincloth equal in weight to HIS wet loincloth. Amarneethi Naayanar agreed. A scale was brought, He placed his wet loincloth in one of the two trays. Naayanar placed one loincloth of a certain kind in the other tray. The scale did not equalise. Naayanar placed one after another, the entire wealth in his house, but all in vain. Finally he prayed to Lord Civan by chanting the five letter mystic word  and proclaimed thus "I was doing all these years charity to all the devotees of the Lord sincerely. If it is a true one the scale should reach equalising as soon as I get into the scale along with my wife and son". Lo! the scale balanced as soon as Naayanar entered into the scale along with his wife and son. The old man disappeared, but Lord Civan and His consort Umaa Devi appeared in the sky riding in His bull vehicle. Naayanar and his family hailed and worshipped Lord Civan. Civa graced all the three and took them to HIS abode. The scale turned into an airplane and all the three rode to Civa's abode in the same scale. This is sung by Saint Appar in a verse that begins with 'naatkonDa ...' . 
As the sage Bringi took the form of a beetle to adore the Lord, the image of the Lord is seen here with holes bored by the insect. As the Lord showed His form at His wedding to Sage Agaththiyar, He is also present in the form of Agaththiyalingam and Kalyaanasundharar at the sanctum in this temple. The Lord's image is of a golden hue. According to tradition, He appears in five different colours each day. There is also an icon of Subbiramaniyar made of Saaligramam.
This temple is under the administration of Thiruvaavaduthurai Aadheenam. Among the inscriptions of this temple are those by Chola and Hoysala kings. They give information about the grant of land and gold for lamps, flower garland making and flower gardens. An inscription of the 5th regal year of Raajendhira Chola Thevan mentions the gift of land for laying a foundation at the temple.

INTRODUCTION TO THE HYMN

From Thiruppaalaitthurai our saint arrived at Thirunalloor and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

86. திருநல்லூர் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

கொட்டும் பறைசீராற் குழுமஅனலேந்தி 
நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை 
முட்டின் றிருபோதுமுனியா தெழுந்தன்பு 
பட்டம னத்தார்களறி யார்பாவமே. 1

கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, 
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை 
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு 
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

பொருள்: சிவபெருமான் திருநல்லூரில் எழுந்தருளி உள்ளார். இவர் நாதப்பறை கொட்டும் 
தாளத்திற்கு ஏற்பவும், பூத கணங்கள் சூழவும், திருக்கையில் அனலேந்தியும் விருப்பத்தோடு 
நடனம் ஆடுபவர். இப்பெருமானைக் காலையிலும் மாலையிலும் மனதில் விருப்பத்தோடு 
உதித்து எழுகின்ற அன்பினால், தொடர்ந்து வணங்குபவர்களைப் பாவம் அணுகாது.

குறிப்புரை: பறை கொட்டும் சீருக்கேற்ப அனலேந்தியாடும் நல்லூர்ப் பெருமானை, காலை மாலை இரு 
வேளைகளிலும் அன்பு செய்யுமனத்தவர்கள் பாவமறியார் என்கின்றது. சீரால் - சதிக்கு ஏற்ப சீரால் 
ஆடும் எனக் கூட்டுக். முட்டின்று - இடையீடு இல்லாமல். அன்புபட்ட - அன்பொடு பொருந்திய. 
Lord Civan surrounded by His goblin hosts enacts His dance with all love, holding fire in His hand. His dance harmonises with the beat of the drums. Those who any break serenely adore this Lord Civan twice daily with deep devotion and without and with a loving mind, will never know what is sin. 
Note: Nalloor literally means 'the town of weal or famous town'. It was here St. Appar was blessed with the Tiruvati-diksha. The Civalinga at Nalloor is hailed as Panchavarnesurar. It seemingly undergoes a fivefold change in hue daily, as stated by traditional folks of this town.

ஏறிலெரு தேறுமெழிலா யிழையோடும் 
வேறும் முடனுமாம் விகிர்தர வரென்ன 
நாறும் மலர்ப்பொய் கைநல்லூர்ப் பெருமானைக் 
கூறும் மடியார்கட் கடையா குற்றமே. 2

ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் 
வேறும்(ம்) உடனும்ஆம், விகிர்தர் அவர் என்ன, 
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் 
கூறும்(ம்) அடியார்கட்கு அடையா, குற்றமே.

பொருள்: சிவபெருமான், மணம் கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த திருநல்லூரில் எழுந்தருளி 
உள்ளார். இப்பெருமான், ஊர்தியாக எருது ஒன்றில் மட்டுமே ஏறும் விகிர்தர். அழகிய 
உமையம்மையோடு ஒன்றாகவும், வேறாகவும் விளங்கும் தன்மை உடையவர். இவ்விதமாக 
அவரது புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அணுகாது.

குறிப்புரை: அம்மையொடு உடனாயும், வேறாயும் இருக்கும் பெருமானாகிய, நல்லூர் இறைவனைத் 
தோத்திரிப்பார்க்குக் குற்றம் அடையா என்கின்றது. ஏறில் எருது ஏறும் விகிர்தர் எனக்கூட்டிப் பொருள் 
கொள்க. எருதன்றி வேறொன்றிலும் அவர்க்கு விருப்பில்லை என்றவாறு. எழில் - அழகு. வேறாதல் - 
அம்மையை இடப்பாகத்துக் கொண்டிருத்தல். உடனாதல் - தன்மேனியில் ஒருபங்காய்க் கொண்டு அர்த்த 
நாரீச்சுரராக இருத்தல். இதுவும் உருவில் வேறுபட்டுத் தோன்றுதலின் சத்தியைத் தன்னுளடக்கி யிருக்கும் 
நிலை கூறிற்றுமாம். 
Civan, who is the pre-eminent Supreme Lord  will ride only on His bull which is His vehicle. He is renowned as one when He shares half of His body frame with His charming consort Umaa Devi; but He is also a different entity when she sits on His left hand side in Her full form. He is one with Her and also different from Her. The devotees who adore and worship this Lord Civan of Thiru-nalloor, which is surrounded by fragrant and flowery gardens will never be touched by faults.

சூடுமிளந் திங்கட் சுடர்பொற் சடைதாழ 
ஓடுண் கலனாக வூரு ரிடுபிச்சை 
நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப் 
பாடும் மடியார்கட் கடையா பாவமே. 3

சூடும் இளந்திங்கள் சுடர்பொன்சடை தாழ, 
ஒடு உண்கலன் ஆக, ஊர்ஊர் இடு பிச்சை 
நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் 
பாடும்(ம்) அடியார்கட்கு அடையா, பாவமே.

பொருள்: சிவபெருமான் இளம்பிறையைத் தம் திருமுடியிற் சூடியுள்ளார். ஒளிவிடுகின்ற 
பொன்போன்ற திருச்சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டுள்ளார்
ஒவ்வோர்  ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச் செல்லும் அறநெறியாளர். இந்தத் 
திருநல்லூர்ப் பெருமானைப் போற்றிப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அ டையாது.

குறிப்புரை: ஊரிடு பிச்சையை நாடும் முறையை உடைய நல்லூர்ப் பெருமானைப் பாடுகின்ற
அடியவர்களைப் பாவம் அடையா என்கின்றது.சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன் போலும் 
திருச்சடை. 
Lord Civan holds the young crescent moon in His matted hair dangling downwards, which radiates its golden dazzling rays all over. He pursues His course, begging for alms, moving from place to place, with a human skull in His hand that serves as His begging bowl. Sin will never touch those devotees who sing and worship with deep devotion, this virtuous Supreme Lord Civan of Thiru-nalloor.

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை 
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக்கை கூப்பித்தொழு 
தேத்து மடியார்கட் கில்லை, யிடர்தானே 4

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை, 
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானை, 
காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது 
ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

பொருள்: சிவபெருமான் உலகியல் நெறிமுறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவர். 
நீங்காத தவத்தை உடையவர். கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவர்.
அந்நெறி நிற்பாரைக் காத்து அருளுபவர்.
கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவர்.  அந்நெறி 
நிற்பாரைக் காத்து அருளுபவர். இந்தத் திருநல்லூர்ப் பெருமானைக் கைகுவித்து 
தொழுதேத்தும் அடியவர்களுக்கு இடர் இல்லை.

குறிப்புரை: இவனைக் கைதொழுதேத்துவார்கட்கு இடர் இல்லை என்கின்றது. நீத்த நெறியானை - 
விடுபட்ட நெறிகளை உடையவனை, நெறி என்பன யாவும் மலமாயா பந்தங்களாற் கட்டப் பெற்ற நம் 
போலியர்க்கே ஆதலின், அவையற்ற இறைவன், விடுபட்ட ஆசார சீலங்களை உடையவனாயினன். நாத்த 
நெறியானை என்பதில் ஞாத்தநெறி நாத்த நெறியாயிற்று. ஞாத்த - கட்டப்பட்ட: எமக்கு ஒழுங்குகளைக் 
கட்டிக் கொடுத்தவனை என்பது பொருள். 
Lord Civan is unfettered by any type of worldly matters; Penance will never close to exist in Him; He formulated the virtuous ways of life for us to follow; He protects those who strictly adore by all these virtuous deeds. Those devotees who worship this Lord Civan of Thiru-nalloor with folded hands will never get any calamity in their lifetime.

ஆகத் துமைகேள் வனரவச் சடைதாழ 
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் 
தாகம் புகுந்தண்மித் தாள்கள்தொழுந் தொண்டர் 
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே. 5

ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ 
நாகம்(ம்) அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, 
தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் 
போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.

பொருள்: சிவபெருமான், தனது திருமேனியில் கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின்
கணவர் ஆவார். பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, தனது இடையில் பாம்பை
கச்சாகக் கட்டியவர். இந்த திருநல்லூர்ப் பெருமானை வேட்கை மிகுந்தவராய் அணுகி
அவரது திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய் 
உலகம் புகழத் திரிவார்கள்.

குறிப்புரை: சிவனைச் சேரவேண்டும் என்ற தாகம் எடுத்து அணுகுந் தொண்டர்கள் போகம் நிறைந்த 
மனத்தராக உலகம் புகழத் திரிவார்கள் என்கின்றது. ஆகம் - மேனி. தாகம் புகுந்து - வேட்கையமிக்கு 
அண்மி - அணுகி. 
Lord Civan is the consort of Umaa Devi who occupies half of His body. His matted hair holds a snake and dangles downwards. He also wears another snake in His waist as His waist cord. Those servitors who approach Him with great desire, and worship the holy feet of this Lord Civan of Thiru-nalloor, will be praised by one and all on this earth and will live with everlasting happiness in their mind.

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச 
நல்லநெறி யானைநல்லூர்ப் பெருமானைச் 
செல்லுநெறி யானைச்சேர்ந் தாரிடர்தீரச் 
சொல்லுமடி யார்களறியார் துக்கமே. 6

கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச 
நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, 
செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, 
சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.

பொருள்: தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையைக் கண்டு உமையம்மை 
அஞ்சினார். சிவபெருமான் அதனைக் கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல 
நெறியாளர் ஆவார். இவர் திருநல்லூர்ப் பெருமானாக எல்லோரும் அடையத்தக்க முத்தி 
நெறியாளராக விளங்குகின்றார். இப்பெருமானை அடைந்து, தங்களின் துன்பங்கள் 
தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.

குறிப்புரை: மக்களைடையும் நெறியாகவுள்ள நல்லூர்ப் பெருமானைச் சொல்லும் அடியார்கள் துக்கம் 
அறியார் என்கின்றது. உரி - தோல். செல்லுநெறி - அடையத்தகும் நெறியாகிய முத்தி. சேர்ந்தார் - 
தியானித்தவர்கள்- 
Umaa Devi got frightened at the sight of an exhilarated elephant that was approaching her. Lord Civan faced the elephant, peeled its skin, and covered His body with the skin. He is the virtuous Lord enshrined in Thiru-nalloor. Those deovtees who contemplate on Him in their minds and adore Him with a request to wipe out their miseries, will get rid of their troubles for ever.

எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும் 
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத் 
தங்கை தலைக்கேற் றியாளென் றடிநீழல் 
தங்கு மனத்தார்கள் தடுமாற்றறுப்பாரே. 7

எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் 
நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, 
தம் கை தலைக்கு ஏற்றி, ‘ஆள்’ என்று அடிநீழல் 
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் 
பெருமானும் ஆவார். இப்பெருமான் திருநல்லூரில் பிரிவின்றி எழுந்தருளி உள்ள தலைவர்  
ஆவார். அவரை அடைந்து தம் கைகளை தலையின்மேல் குவித்து, நாங்கள் உமக்கு அடிமை 
என்று கூறி, அவரது திருவடி நிழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் 
இல்லாதவர்கள் ஆவர்.

குறிப்புரை: சிரமேற் கைகுவித்து, திருமுன்நின்று அடியேன்மீளா ஆளாவேன் என்று திருவடி நீழலில் 
தங்கும் மனத்தார்கள் தடுமாற்றம் அறுப்பார்கள் என்கின்றது. 
Lord Civan is our Master God who is hailed and adored by all the supernal folks; He is our own Supreme Lord who never parts from the town of Thiru-nalloor. Those who reach this Lord, raise their adoring hands above their heads, and submit to Him that they all are His slaves, and abide in the shade of His holy feet, will quell their bewilderment in their lifetime.

காம னெழில்வாட்டிக் கடல்சூழி லங்கைக்கோன் 
நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை 
ஏம மனத்தா ராயிகழாதெழுந் தொண்டா் 
தீப மனத்தார் களறியார் தீயவே. 8

காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் 
நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, 
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் 
தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.

பொருள்: சிவபெருமான் மன்மதனது உருவ அழகை அழித்தவர். கடல் சூழ்ந்த இலங்கை 
மன்னனாகிய இராவணனது புகழை நீக்கியவர். இப்பெருமான் திருநல்லூரில் எழுந்தருளி 
இருப்பவர். இப்பெருமானை இகழாது பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் அவரைக் 
காண எழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞான ஒளி நிலைத்த மனம் உடையவர்கள் ஆவர். 
அவர்கள் தீயனவற்றை அறியமாட்டார்கள்.

குறிப்புரை: இராவணனது புகழைக் கெடுத்த பெருமானாகிய நல்லூர்ப் பெருமானைப் புகழுந் தொண்டர், 
ஒளிமனத்தர்களாய் தீயன அறியார் என்கின்றது. காமன் - மன்மதன். எழில் - எழுச்சி. தருக்கு. நாமம் - 
புகழ். ஏம மனத்தார் - பாதுகாப்புற்ற மனத்தவர்கள்.தீப மனத்தார் - எழுதிய தீபம் போல நிலைத்த 
மனத்தடியார்கள். 
Lord Civa burnt the beautiful form of Manmathan (God of Love ); He quelled the glory of the king of the sea-girt Sri Lanka; He is the God of Thiru-nalloor. His servitors who guard well their minds, and diligently exercise themselves in His worship will shine by enlightenment; they know not what evil is.

வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணரி யானைநல்லூர்ப் பெருமானைத் 
தண்ண மலர்தூவித் தாள்கள்தொழுதேத்த 
எண்ணு மடியார்கட் கில்லையிடுக்கணே. 9

வண்ண மலரானும் வையம் அளந்தானும் 
நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானை, 
தண்ண மலர்தூவித் தாள்கள்தொழுது ஏத்த 
எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.

பொருள்: திருநல்லூரில் விளங்கும் சிவபெருமானை செந்தாமரையில் விளங்கும் பிரமனும், 
உலகை அளந்த திருமாலும் நண்ணுதலுக்கு அரியவர். இப்பெருமானை குளிர்ந்த 
மலர்களைத் தூவி, அவரது திருவடிகளைத் தொழுது ஏத்த எண்ணுகின்ற அடியவர்களுக்குத் 
துன்பம் இல்லை.

குறிப்புரை: அயனும் மாலும் அணுகவும் அரிய பெருமான் திருவடியை மலர்தூவி வணங்கும் அடியார்கட்கு 
என்றும் துன்பமில்லை என்கின்றது. வண்ணமலரான் - செந்தாமரையில் உள்ள பிரமன், வையம் 
அளந்தான் - உலகளந்த பெருமாள், தொழுது ஏத்தவும் வேண்டாம் - எண்ணினாற்போதும் இடுக்கண் 
இல்லை என்று எளிமை கூறியவாறு. 
Lord Civan is inaccessible to Brahma seated on the splendorous lotus flower and to Thirumaal who (while asking for gift from king Bali) measured the earth. He is the Supreme Lord of Thiru-nalloor town. No trouble exists for those willing devotees who hail and adore Him strewing cool flowers at His holy feet.
பிச்சக்குடை நீழற்சமணர் சாக்கியர் 
நிச்சமலர் தூற்றநின்ற பெருமானை 
நச்சுமிடற் றானைநல்லூர்ப் பெருமானை 
எச்சுமடி யார்கட்கில்லை யிடர்தானே. 10

பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், 
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, 
நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, 
எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

பொருள்: சமணர்கள் மயில் இறகுகளால் ஆன குடை நிழலில் திரிபவர்கள். புத்தர்களால் 
நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமான் இவர். நஞ்சு பொருந்திய கண்டத்தை 
உடைய திருநல்லூர் சிவபெருமானைப் புகழும் அடியவர்களுக்கு இடரில்லை.

குறிப்புரை: அமணரும் புத்தரும் அலர் தூற்ற நின்ற பெருமானைப் புகழும் அடியார்கட்கு இடர் இல்லை 
என்கின்றது. பிச்சகுடை - மயிற் பீலியாலாகிய குடை. நிச்சம் - நாடோறும். அலர் - பழிச் சொல். நச்சு 
மிடற்றானை - விஷம் பொருந்திய கழுத்தை உடையவனை. எச்சும் - ஏச்சும். ஏத்தும் என்பதன் மருஉ. 
The Samanars and Buddhists roam about carrying an umbrella made up of peacock's feather. They daily censure and slander Lord Civan who never minds their abuse. Lord Civan positioned the venom of the ocean in His throat. Devotees who adore this Lord Civan of Thiru-nalloor remain unaffected by any distress.
தண்ணம் புனற்காழி ஞானசம்பந்தன் 
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை 
வண்ணம் புனைமாலை வைகலேத்துவார் 
விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே. 11

தண்ணம் புனல் காழி ஞானசம்பந்தன், 
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, 
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் 
விண்ணும் நிலனும்ஆய் விளங்கும் புகழாரே.

பொருள்: குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவர் ஞானசம்பந்தன் ஆவார். 
இவர், பொருந்திய நீரை வேலியாக உடைய திருநல்லூரில் விளங்கும் சிவபெருமானின் 
இயல்புகளைப் புனைந்து மாலையாகப் பாடினார். இத்திருப்பதிகத்தை நாள்தோறும் 
ஏத்தித் துதிப்பவர், விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.

குறிப்புரை: ஞானசம்பந்தன், நல்லூர்ப் பெருமானைச் சொன்ன புகழ்மாலையை நாளும் ஏத்துவார் 
விண்ணும் நிலனுமாக விளங்கும் புகழார் என்கின்றது. தண்ணம்புனல்: அம் சாரியை. புனல் வேலி - நீரை 
வேலியாகவுடைய. வண்ணம்புனை மாலை - இறையியல்புகளை எடுத்துச் சேர்த்துச் சொன்ன மாலை. 
வைகல் - நாடோறும். 
Gnaanasambandan of Kaazhi rich in cool watersheds has sung on the God of Thiru-nalloor, which is fenced with many water ways. The renown of those who hail the Lord God of Thiru-nalloor daily with his splenderous garland of verses will be hailed both by the celestial and the earth born humans.

திருச்சிற்றம்பலம்
86ம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
87. திருவடுகூர்

திருத்தல வரலாறு:

திருவடுகூர் ஒரு நடு நாட்டுத் தலம். விழுப்புரம் - பாண்டிச்சேரி (கோலியனூர் - 
கண்டமங்கலம் வழி) பேருந்து வழியில் உள்ளது. வடுகனாகிய வைரவர் பூசித்துப் பேறு 
பெற்றதாதலின் இப்பெயர் எய்தியது. தற்காலம் ஆண்டார் கோயில் என வழங்கப்படுகிறது. 
இறைவன் பெயர் வடுகூர்நாதர். இறைவியின் பெயர் வடுவகிர்க்கண்ணியம்மை. தீர்த்தம் 
பெண்ணை நதி.

பதிக வரலாறு:

சண்பை வேந்தர் திருப்பாதிரிப்புலியூரை வணங்கிப் பதிகம்பாடித் திருவடுகூரை 
அடைந்தார். இறைவனை வணங்கி ‘சுடுகூர் எரிமாலை’ என்னும் இப்பதிகத்தை அருளிச் 
செய்தார். 
HISTORY OF THE PLACE

87. THIRU-VADUKOOR

This sacred place is in Nadu Naadu and is in the Vizhuppuram - Pondichcheri via Koliyanoor - Kandamangkalam bus route. As it is the temple where Vairavar, who is a Vadugan, offered worship here, it got the name Thiruvadugoor. Nowadays it is called Aandaar Koyil. 
The Lord's name is Vadugoornaathar and the Goddess's is Vaduvakirkkanni Ammai. The sacred ford is river Pennai.

INTRODUCTION TO THE HYMN

Having adored Civa in the shrine of Thiruppaatiripuliyoor, he arrived in Thiruvadukoor. Here he hailed the Lord-God with the following hymn:

திருச்சிற்றம்பலம்

87. திருவடுகூர் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

சுடுகூரெரி மாலையணி வர்சுடர் வேலர் 
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் 
கடுகூர் பசிகாமங்க வலைபிணி யில்லார் 
வடுகூர் புனல் சூழ்ந்த வடுகூரடிகளே. 1

சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; 
கொடு கூர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்; 
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார் - 
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

பொருள்: சிவபெருமானார் சுடுகின்ற தன்மையுள்ள தீபமாலையை அணிந்திருப்பவர். ஒளி 
பொருந்திய சூலத்தை வைத்திருப்பவர். கொடியதும் கூர்மையானதுமான மழுவாயுதம் 
ஒன்றை கையில் உடையவர். விடைமேல் ஊர்ந்து வருபவர். மிக்க பசி, காமம், கவலை, பிணி 
இவைகள் இல்லாதவர். இப்பெருமானார் நீர்வளம் மிக்க வடுகூரில் எழுந்தருளியிருக்கும் 
இறைவர் ஆவார்.

குறிப்புரை: தீயணிவர், சுடர்வேலர். மழுவுடையர், பசி, காமம், கவலை, பிணி, முதலியன இல்லாதவர் 
வடுகூரடிகள் என்கின்றது. கூர் எரிமாலை - மிக்க தீவரிசையை. வேல் - சூலம். கொடுகுஊர் - 
கொடுமை மிக்க ஊர். கடுகுகூர் - விரைந்து ஊரும். 
Lord Civan of Vadukoor wears a flaming garland of fire; He wields a radiant spear; He holds a fierce and bright battle axe. He rides on a bull. Lo, he is ever free from violent and aggressive appetite, lust, worry and malady. He is the noble one of Vadukoor having plenty of water resources. 
Note: The garland of Civa is called Dipa-maalai. He alone is the light of the cosmos. Civa is Kothila Niraivu (the blemishless fullness). He knows no hunger. Civa did away with Kaama (Manmathan). Lust is alien to Him. He is the Queller of worry. He is Vaidhyanaathan.

பாலுந் நறுநெய் யுந்தயிரும் பயின்றாடி 
ஏலுஞ் சுடுநீறுமென் புமொளிமல்கக் 
கோலம் பொழிற்சோ லைக்கூடி மடஅன்னம் 
ஆலும் வடுகூரிலா டும்மடிகளே. 2

பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்று ஆடி, 
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளி மல்க, 
கோலம் பொழில்-சோலைக் கூடி மடஅன்னம் 
ஆலும் வடுகூரில் ஆடும்(ம்), அடிகளே.

பொருள்: சிவபெருமானார் பாலையும், நறுமணமுள்ள நெய்யையும், தயிரையும் விரும்பி 
ஆடுபவர். பொருந்துவதான திருவெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளி மல்க தன் 
மார்பில் அணிந்துள்ளவர். இப்பெருமானார் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் 
கூடியிருக்கும் பெண் அன்னங்கள் ஒலித்து ஆர்ப்பரிக்கின்ற வடுகூரில் மகிழ்வோடு 
திருநடனம் ஆடுகின்றார்.

குறிப்புரை: பால், நெய், தயிர் இவற்றை ஆடி, நீறும் எலும்பும் ஒளி நிரம்பச்சூடி, நடஞ்செய்வா இவர் 
என்கின்றது. பயின்று - பலகாலும் விரும்பி. ஏலும் - பொருந்தும். கோலம் - அழகு. ஆலும் - ஒலிக்கும் 
Lord Civan of Thiru-vadukoor loves to take His bath in milk, sweet smelling ghee, and curd. He smears His body with holy ashes and wears a garland of bones. 
With this majestic appearance He dances happily in Thiru-vadukoor where in the beautiful gardens and groves, swans gather and play with each other.

சூடுமிளந் திங்கட்சுடர் பொற்சடை தன்மேல் 
ஓடுங்களி யானையுரிபோர்த் துமையஞ்ச 
ஏடுமலர் மோந்தங்கெழி லார்வரிவண்டு 
பாடும் வடுகூரி லாடும்மடிகளே. 3

சூடும், இளந்திங்கள் சுடர்பொன்சடைதன்மேல் - 
ஒடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, 
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு 
பாடும் வடுகூரில் ஆடும்(ம்) அடிகளே.

பொருள்: சிவபெருமானார், ஓளி பொருந்திய பொன் போன்ற இளந்திங்களைச் 
சூடியிருப்பவர். மதம் கொண்டு தன்னிடம் ஓடி வந்த யானையைக் கண்டு, உமையம்மை 
அஞ்ச, அதனைக் கொன்று, அதன் தோலைப் போர்த்தியிருப்பவர். அழகு பொருந்திய 
வரிவண்டுகள் இதழ்களோடு கூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடுகின்ற வடுகூரில்
இப்பெருமானார் திருநடனம் ஆடுகின்றார்.

குறிப்புரை: சடையின்மேல் இளம்பிறையைச் சூடுவர். உமையாள் அஞ்ச யானையை உரித்துப் போர்த்துக் 
கொண்டு ஆடுவர் வடுகூர்நாதர் என்கின்றது. மலர் ஏடு - பூவிதழ் மோந்து - முகர்ந்து, எழிலார் - 
அழகுமிக்க. 
Lord Civan wears the young crescent moon in His dangling gold-like matted hair. Umaa Devi got scared at the sight of an exhilarated elephant approaching her; Civan faced the elephant, killed it and covered His body with it's skin. He dances in Thiru-vadukoor where comely and striped bees smell the petals of flowers and then suck the honey and go on buzzing, which resembles a singing spree.

துவரும் புரிசையுந்து தைந்தமணிமாடம் 
கவரவெரி யோட்டிக்கடிய மதிலெய்தார் 
கவருமணி கொல்லைக் கடியமுலை நல்லார் 
பவரும் வடுகூரி லாடும்மடிகளே. 4

துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் 
கவர எரியோட்டி, கடிய மதில் எய்தார் - 
கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார் 
பவரும் வடுகூரில் ஆடும்(ம்) அடிகளே.

பொருள்: செந்நிறமுடைய மதில்கள் நிறைந்த அழகிய மாடங்களைக் கொண்டதும் 
காவலோடு கூடியதுமான முப்புரங்கள் அழியுமாறு, தீயுடன் சேர்ந்த அம்பை எய்தவர் 
சிவபெருமானார். திருவடுகூரில் மிக அழகான பெண்கள் தங்கள் தனங்களை நன்றாக மூடிக் 
கொண்டு கூட்டம் கூட்டமாக முல்லைக் காட்டுப்பக்கம் சென்று நவரத்தினங்களை பொறுக்கி 
எடுத்து வந்து மகிழ்வெய்தி வாழ்கிறார்கள். இந்தத் திருவடுகூரில் சிவபெருமானார் நடனம் 
புரிகின்றார்.

குறிப்புரை: திரிபுரம் எரியச் செய்தார் வடுகூரிலாடும் அடிகள் என்கின்றது. துவரும் புரிசையும் துதைந்த 
மணிமாடம் - காவியூட்டி மதில்கள் செறிந்த அழகிய மாடங்கள், ஒட்டி - பரப்பி, கடிய மதில் - 
காவலோடுகூடிய முப்புரங்கள், மணிகவரும் கொல்லை கடிய முலை நல்லார் பவரும் - இரத்தினங்களைக் 
கவரும் முல்லை நிலத்தில் உள்ள காவல் பொருந்திய முலையோடு கூடிய பெண்களாகிய கொடிகளோடு 
கூடிய. 
Lord Civan discharged an arrow at the well guarded, beautiful citadels and destroyed the red walls and the mansion by fire. This Lord Civan is enshrined in Thiru- vadukoor. Here He dances. In this Thiru-vadukoor liana-like damsels wear protective coverings over their breasts, foregather in the mullai region (forest area) to gather gems.

துணியா ருடையாடை துன்னியரை தன்மேல் 
தணியா அழல்நாகந் தரியாவகை வைத்தார் 
பணியா ரடியார்கள்பல ரும்பயின்றேத்த 
அணியார் வடுகூரி லாடும்மடிகளே.

துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்- 
தணியா அழல்நாகம் தரியா வகை வைத்தார் - 
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த, 
அணி ஆர் வடுகூரில் ஆடும்(ம்) அடிகளே.

பொருள்: சிவபெருமானார், கிழிக்கப் பெற்ற கோவண ஆடையைத் தரித்திருப்பவர். 
அதன்மேல் தீப்போன்ற, கோபத்தோடு கூடிய நாகத்தை அழகாகத் தரித்திருப்பவர்.
இப்பெருமானார், அடியவர் பலரும் பணிந்து துதிக்க, அழகிய வடுகூரில் திருநடனம் ஆடி 
அருள்புரிகின்றார்.

குறிப்புரை: கோவணமுடுத்து அதன்மேல் அழகாக நாகம் வைத்தவர், அடியார்கள் பலரும் வணங்கும் 
வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. துணி - கிழிக்கப் பெற்ற கோவணம். துன்னி - பொருந்தி. 
தணியா அழல் நாகம் - தணியாத கோபத்தோடு கூடிய பாம்பு. பணிஆர் அடியார்கள் - பணிதலைப் 
பொருந்திய அடியார்கள். 
Lord Civan wears a fore-lap cloth round His loins and fixes it by a good looking fiery serpent of unabated wrath. He dances at the beautiful Thiru-vadukoor where devotees in their strength poised in service, hail Him with practiced perfection.

தளருங்.கொடியன்னாள் தன்னோடுடனாகிக் 
கிளருமர வார்த்துக்கிளரு முடிமேலோர் 
வளரும் பிறைசூடிவரி வண்டிசைபாட 
ஒளிரும் வடுகூரி லாடும்மடிகளே.

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன்ஆகி, 
கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர் 
வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட 
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

பொருள்: சிவபெருமானார், சுமை பொறுக்காது தன்ளாடும் கொடியை ஒத்த 
உமையம்மையோடு கூடியிருப்பவர். விளங்கும் பாம்பை இடையில் கட்டிக் 
கொண்டிருப்பவர். விளங்கும் முடிமேல் வளரும் பிறைமதியைச் சூடியிருப்பவர்.
அடிகளாகிய வரிகள் பொருந்திய வண்டுகள் இசை பாடப் பலராலும் நன்கறியப்பெற்ற 
வடுகூரில் இப்பெருமானார் திருநடனம் ஆடி அருள்புரிகின்றார்.

குறிப்புரை: உமாதேவியோடு உடனாகி, அரவு பிறை இவற்றை அணிந்து வடுகூர் அடிகள் ஆடுவர் 
என்கின்றது. தளரும் கொடி அன்னாள் - சுமை பொறுக்காது தள்ளாடும் கொடியை ஒத்த உமாதேவி. 
அரவு - பாம்பு, கிளரும் - விளங்கும். ஒளிரும் - பிரகாசிக்கும். (_ அனிச்சப் 
பூக்கால்களையா). 
Lord Civan is enshrined in Thiru-vadukoor along with Umaa Devi who is as tender as a creeping vine, which wobbles due to the heavy weight of it's own parts. He has tied a bright serpent in His waist. In His shining hair He holds a waxing crescent moon. This noble Lord Civan who enacts the dance is entempled in splendorous Thiru- vadukoor where striped honeybees buzz around as if in a choir.

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் 
முடியர் விடையூர்வர் கொடியர்மொழி கொள்ளார் 
கடிய தொழிற்காலன் மடியவுதை கொண்ட 
அடியர் வடுகூரி லாடும் அடிகளே.

நெடியர்; சிறிதுஆய நிரம்பா மதி சூடும் 
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்; 
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட 
அடியர் - வடுகூரில் ஆடும்(ம்) அடிகளே.

பொருள்: சிவபெருமானார் பேருருவம் கொள்பவர். சிறிதான கலை நிரம்பாத பிறைமதியைச் 
சூடும் முடியை உடையவர். விடைமேல் ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் 
கொள்ளாதவர். கொல்லுந் தொழில் புரியும் எமன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர். 
இப்பெருமானார் வடுகூரில் திருநடனம் ஆடி அருள்புரிகின்றார்.

குறிப்புரை: நெடியர், சிறுமதிசூடும் முடியர், விடையூர்வர், கொடியர் மொழி கொள்ளாதவர், காலனை 
உதைத்த அடியவர் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நிரம்பா மதி - இளம்பிறை. கடிய தொழில் - 
கொடுந்தொழில். 
Lord Civan who dances in Thiru-vadukoor has a gigantic figure. He supports in His hair the young small moon that has not waxed full; He rides on His bull. He ignores the talk of cruel folks. It is He who once kicked down the killer Kaalan , messenger of death, verily to death by His holy feet.

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார் 
மறையும் பலபாடி மயானத் துறைவாரும் 
பறையும திர்குழலும் போலப்பல வண்டாங் 
கறையும் வடுகூரிலா டும்மடிகளே. 8

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார், 
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் - 
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு 
அறையும் வடுகூரில் ஆடும்(ம்) அடிகளே.

பொருள்: சிவபெருமானார் இளம் பிறையையும் பெருகி வரும் கங்கை நீரையும் பிரியாத 
திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக் கொண்டு 
மயானத்தில் உறைபவர். இப்பெருமானார், அதிர்கின்ற பறையும், வேய்ங்குழலும் போலப் 
பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் திருநடனம் ஆடி 
அருள்புரிகின்றார்.

குறிப்புரை: கங்கையும் பிறையும் பிரியா முடியாரும், வேதம் பல பாடி மயானத்துறைவாரும் வடுகூரில் 
ஆடும் அடிகள் என்கின்றது. நெடுநீர் - கங்கை. பறையும் குழலும் போலப் பல வண்டு ஆங்கு அறையும் 
எனப் பிரிக்க. 
Lord Civa's holy head is ever holding the young crescent moon and the flooding river Ganges. He sings many of the Vedic prosody  and abides in the cremation ground. This noble dancer Civan is entempled in Thiru- vadukoor. In the gardens of this town innumerable bees are buzzing. This buzzing noise is similar to the reverberating sounds of drums and flutes.

சந்தம் மலர்வேய்ந் தசடையின் னிடைவிம்மு 
கந்தம் மிகுதிங்கட் சிந்துகதிர் மாலை 
வந்துநயந் தெம்மைநன்று மருள்செய்வார் 
அந்தண் வடுகூரிலா டும்மடிகளே. 9

சந்தம் மலர் வேய்ந்த சடையின்(ன்) இடை விம்மு 
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை 
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் - 
அம் தண் வடுகூரில் ஆடும் அடிகளே.

பொருள்: கண்ணைக் கவரும் மலர்கள் வேய்ந்த சடையை உடைய சிவபெருமானார், 
அதன்கண் பொங்கி எழும் மணம் மிகுந்த பிறைமதி கரணங்களை வெளியிடும் மாலை 
நேரத்தில். அழகும் குளிர்ச்சியும் பொருந்திய வடுகூரில் திருநடனம் புரிகின்றார். 
அந்நேரத்தில் இப்பெருமானார் இனியவை பலகூறி விரும்பி வந்து எமக்கு நன்றாக 
அருள்புரிவார்.

குறிப்புரை: மலர் புனைந்த சடைக்காட்டில் இருப்பதால் மணம் பெற்ற மதி சிந்துகின்ற கதிர்களோடு வந்து 
நயந்து எமக்கு நன்மையை அருளுவர் வடுகூரில் அழகர் என்கின்றது. சந்தம் - அழகு. கதிர்மாலை - 
கிரணவரிசை. நயந்து - இனியன பலகூறி, நன்றும் அருள் செய்வார் - நன்றாக அருளுவர். நன்றும் 
மருள் செய்வார் - நன்றாக மயக்குவர் என்றுமாம். 
The moon resting in Lord Civan's matted hair absorbs the fragrance of the flowers therein and spreads its fragrant rays in the evening hours all over the world. In such an evening hour Lord Civan comes over to us in love and showers grace on us in all goodness. This Lord Civan dances in the cool and beautiful city Thiru-vadukoor.

திருமா லடிவீழத்திசை நான்முகனாய 
பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேோர் 
செருமா ல்விடையூருஞ் செம்மான் திசைவில்லா 
அருமா வடுகூரி லாடும்மடிகளே. 10

திருமால் அடி வீழ, திசைநான்முகன்ஆய 
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர் 
செரு மால்விடை ஊரும் செம்மான் - திசைவு இல்லா 
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

பொருள்: திருமால் சிவபெருமானாருடைய அடிகளைத் தேடிப் பூமியைத் தோண்டிச் 
சென்றும் தோற்றவர். இசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுடிகளைக் கொண்ட நான்முகனும் 
சிவனது முடியினை காணாது திகைத்தவர். போர் செய்யத் தக்க விடைமீது எழுந்தருளி
வரும் சிவந்த நிறத்தினர். எல்லாத் திசைகளிலும் ஒளியை வீசுகின்ற அரிய பெரிய வடுகூரில் 
இப்பெருமானார் திருநடனம் ஆடி அருள்புரிகின்றார். 
குறிப்புரை: அயனும் மாலும் அறியவொண்ணாப் பெருமான் மாலாகிய இடபமூரும் செம்மான் வடுகூர் 
அடிகள் என்கின்றது. செருமால் - போர் வல்லமை கொண்ட பெரிய திருமாலாகிய என்றுமாம். 
திசைவில்லா அருமா வடுகூரில் - திசைகளில் எல்லாம் ஒளியைச் செய்கின்ற அரிய பெரிய வடுகூரில். 
Lord Civan could not be beheld by Thirumaal who burrowed the earth for long in search of His holy feet; while Brahma who has four faces facing the four directions, went in search of Civan's head in vain. This Lord Civan has a very large head which could not be seen by any one and rides on the bull, which is none other than Thirumaal himself (Thirumaal once appeared before Lord Civan in the form of a bull and requested Him to use him as His bull vehicle wherever He goes for fighting / war, to which Civan agreed). Lord Civan is entempled in, and dances in the rare and great Thiru-vadukoor whose glory and fame pervades all the eight directions. 
Note: This is one of the very few hymns where there is no reference to Raavana, the Samanars and the Buddhists.

படிநோன் பவையாவர் பழியில் புகழான 
கடிநாணி கழ்சோலை கமழும் வடுகூரைப் 
படியான சிந்தைமொழி யார்சம்பந்தன் 
அடிஞா னம்வல் லாரடிசேர் வார்களே. 11

படி நோன்புஅவை ஆவர், பழி இல் புகழ்ஆன, 
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, 
படிஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் 
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

பொருள்: சிவபெருமானார், இவ்வுலகில் கூறப்படும் பற்பல நோன்புகளுக்கு உரியவர். 
குற்றமற்ற புகழோடும், மணம் கமழும் சோலைகளால் மணம் பெறும் வடுகூரில் எழுந்தருளி 
இருப்பவர். இப்பெருமானாரை அமைதியான மனமுடைய ஞானசம்பந்தன் போற்றிப் 
பாடினார். இப்பதிகத்தை ஓதும் சிவஞானம் உடைய சான்றோர்கள் முத்தியாகிய சாயுச்சிய 
முத்தியை அடைவார்கள்.

குறிப்புரை: இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம் ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப் பாடிய 
திருவடிஞானத்தால் வந்த இத்திருப்பாடல்களை வல்லார், திருவடி சேர்மூர்த்தியை எய்துவார்கள். படி - 
பூமி. படியான சிந்தை - படிதலான மனம். அடிஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் - அடிசேரும் 
முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள். 
Lord Civan is the goal of all penance of the world; He is enshrined in the glorious and flawless Thiru-vadukoor made fragrant by its incense breathing gardens. Those devotees who are well versed in the hymns of Sambandan, whose mind is immersed in the grace of the hallowed feet, will gain the salvific feet of Civan, through divine gnosis.
திருச்சிற்றம்பலம்

87ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
88. திருஆப்பனூர்

திருத்தல வரலாறு:

திருஆப்பனூர் என்ற இத்திருத்தலம் பாண்டிய நாட்டுத் திருத்தலம். மதுரை மாநகரில் 
வைகை ஆற்றின் வடகரை ஓரமாக, கல்பாலத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறு பகுதியாகும். 
மதுரையில் இருந்து பேருந்துகளில் செல்லலாம். தற்பொழுது திருஆப்புடையார் கோயில் என 
வழங்கப் பெறுகிறது. சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னன் பொருட்டுச் சிவபெருமான் 
ஆப்பினிடத்துத் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது. நடராசர், சிவகாமி இருவர்களின் உருவம் 
சிலையிலும் செம்பிலும் உள்ளன. இறைவன் பெயர் ஆப்பனூர்காரணர், ஆப்பனூரீசுரர், 
திருவாப்புடையார். இறைவி பெயர் அம்பிகையம்மை, குரவங்கமழ் குழலம்மை. தீர்த்தம் இடப 
தீர்த்தம்.

பதிக வரலாறு:

திருப்பரங்குன்றம் வணங்கியபின் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஆப்பனூரை அணைந்து 
வணங்கி ‘முற்றுஞ் சடைமுடி’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். 
HISTORY OF THE PLACE

88. THIRU-AAPPANOOR

This sacred place is in Paandiya Naadu. In Madurai city, on the northern bank of river Vaikai and near the main bridge, this place is a very small one now called Thiru Aappudaiyaar Koyil. The reason for the name is that the Lord appeared from a wedge (aappu) for the sake of the Paandiya king Cholaanthakan. 
The Lord is known by the names of Aappaanoor-k-Kaaranar, Aappanooreesurar, and Thiruvaappudaiyaar. The Goddess is known as Ambikaiyammai and Kuravang Kamazh Kuzhalammai. The sacred ford is Idaba Theerththam. 
Images of both Lord Nataraajar and Goddess Sivakaami can be seen in both stone and bronze.
INTRODUCTION TO THE HYMN

From Thiru-p-paarang-kundram our saint arrived at Thiru-aappanoor where he 
sang the following hymn:

திருச்சிற்றம்பலம் 

88. திருஆப்பனூர்

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

முற்றுஞ் சடைமுடி மேல்முதிரா இளம்பிறையன் 
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான் 
செற்றமில் சீரானைத்திரு வாப்பனூரானைப் 
பற்றுமன முடையார்வினை பற்றறுப்பாரே. 1

முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன், 
ஒற்றைப் படஅரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், 
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் 
பற்றும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான் தமது முடியைச் சூழ்ந்துள்ள சடைமுடியின்மேல் வளர்ச்சி பெறாத 
இளம் பிறையைச் சூடியிருப்பவர். ஒரு தலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் 
கட்டியிருப்பவர். சிறிதும் வெறுத்தற்கு இயலாத புகழானவர். திருஆப்பனூரில் 
எழுந்தருளியுள்ள இப்பெருமானை விரும்பிப் பற்றுகின்ற உள்ளம் உடையவர்கள், தங்களின் 
வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவார்கள்.

குறிப்புரை: இப்பதிகம் ஆப்பனூரானைப் பணிவார், பரவுவார், புகழ்வார், வினைப்பற்றறுப்பார் என்கின்றது. 
‘முற்றும் சடை முதிரா இளம்பிறை’ என்பதில் பொருள்முரண் உள்ளது. செற்றம் - கோபம். 
Lord Civan in Thiru-aappanoor supports the ever young crescent moon around His matted hair. He fastens a single hooded cobra in His waist. His is the glory that is unassailable. Those who hail heartily this Civan will get rid of their bad karma.

குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் 
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின் 
அரவ மணிந்தானை யணியாப்பனூரானைப் 
பரவுமன முடையார்வினைப் பற்றறுப்பாரே. 2

குரவம் கமழ் குழலாள் குடிகொண்டு நின்று, விண்ணோர் 
விரவும் திருமேனி, விளங்கும் வளைஎயிற்றின் 
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் 
பரவும் மனம் உடையார் வினைப் பற்றுஅறுப்பாரே.

பொருள்: குராமலர் கமழும் கூந்தலை உடைய உமையம்மை விளங்கும் திருமேனியோடு 
இருக்கும் சிவபெருமானைத் தேவர்கள் கூடி வணங்குகின்றார்கள். தமது திருமேனியில் 
விளங்கும் வளைந்த பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை அணிந்திருப்பவர். அழகிய 
திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானைப் போற்றுகின்ற உள்ளம் 
உடையவர்கள். தங்களின் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: குரவம் கமழ் குழலாள் - குராமலர் மணக்கும் கூந்தலை உடைய உமாதேவி, விரவுதல் - 
கலந்து பணியும். வளை எயிறு - வளைந்த விஷப்பல். பரவுதல் - தோத்திரித்தல். 
Lord Civan is entempled in Thiru-aappanoor along with His consort Umaa Devi whose locks are fragrant with bottle-flower  so as to enable the celestial gods to come and adore Him from here. Those who offer worship to this Lord Civan will get rid from the continuity of their bad karma.

முருகுவிரி குழலார்மனங் கொளநங்கனைமுன் 
பெரிதுமுனிந் துகந்தான் பெருமான் பெருங்காட்டின் 
அரவமணிந் தானையணி யாப்பனூரானைப் 
பரவுமன முடையார்வினைப் பற்றறுப்பாரே.

முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் 
பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின் 
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் 
பரவும் மனம் உடையார் வினைப் பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், மணம் கமழும் கூந்தலை உடைய மகளிரால் நினைக்கப் பெறும் 
காமனை, முற்காலத்தில் பெரிதும் சினந்து எரித்தவர். பின்பு அவனுக்கு வாழ்வு தந்த 
பெருமானும் இவரே. பெரிய காட்டகத்தே வாழும் அரவத்தை அணிந்தவர். அழகிய 
திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானைப் போற்றும் உள்ளம் உடையவர்கள்
தங்களின் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: முருகு விரி குழலார் - மணம் வீசும் கூந்தலை உடைய பெண்கள். அநங்கன் - மன்மதன். 
Young girls with fragrant locks often think about Manmathan, the god of love ; Lord Civan once got enraged with him for his misdeed and burnt him to death; however, at the prayerful request of his wife Rathi, Civan gave back his life but to be visible only to his wife Rathi. This Lord Civan wears in His body a huge forest serpent and is entempled in the beautiful Thiru-aappanoor city. Those who offer worship to Civan in this city will get rid of their bad karma.

பிணியும்பிறப் பறுப்பான்பெரு மான்பெருங்காட்டில் 
துணியினுடை தாழச்சுடரே ந்தியாடுவான் 
அணியும்புன லானையணி யாப்பனூரானைப் 
பணியுமன முடையார்வினை பற்றறுப்பாரே.

பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்- 
துணியின்உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான், 
அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப் 
பணியும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், உடலைப் பற்றிய நோய்களையும் உயிரைப் பற்றிய பிறவி 
நோயையும் அறுத்தருள்பவர். சுடுகாட்டகத்தே கோவண ஆடையோடு அழலேந்தி 
ஆடுபவர். கங்கையை முடியில் அணிந்திருப்பவர். அழகிய திருஆப்பனூரில் 
எழுந்தருளியுள்ள இப்பெருமானைப் பணிந்து போற்றும் உள்ளம் உடையவர்கள் தங்களின் 
வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: பிணியும் பிறப்பும் அறுப்பான் என உம்மை விரிக்க. துணியின் உடை - கீண்ட கோவண 
உடை. 
Lord Civan annuls our bodily ailments and relieves us from the cycle of birth and death. Wearing a fore-lap cloth over His loins, He dances in the expansive burning ghat holding fire in His hand. He supports the river Ganges in His head. Those who offer worship to this Supreme Lord Civan will get rid of their karma.

தகரமணி யருவித்தட மால்வரை சிலையா 
நகரமொரு மூன்றும்நல ங்குன்றவென் றுகந்தான் 
அகரமுத லானையணி யாப்பனூரானைப் 
பகருமன முடையார்வினை பற்றறுப்பாரே. 5

தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா, 
நகரம்ஒருமூன்றும் நலம் குன்றவென்று உகந்தான், 
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப் 
பகரும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், தகரம் எனப்படும் மணமுள்ள பொருளும், மணிகளும் கலந்து 
வரும் அருவிகளை உடைய மிகப்பெரிய மேரு மலையை வில்லாக வளைத்தவர். வில்லாக 
வளைத்து அசுரர்களின் நகரங்களான முப்புரங்களும் பொடிபடச் செய்து மகிழ்ந்தவர்.
எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் ‘அ’கரம் போல பொருட்களிலும் கலந்து 
இருப்பவர். அழகிய திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானாகிய சிவபெருமான் 
புகழைக் கூறுகின்ற உள்ளம் உடையவர்கள், தங்களின் வினை மாசுகளினின்று நீங்கப் 
பெறுவர்.

குறிப்புரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - 
முப்புரம். அகர முதலானை என்பது அகரமுதல எழுத்தெல்லாம்' என்ற குறட்கருத்து. 
Lord Civan using the very big mountain 'Mēru' as His bow destroyed the three citadels of the Asuraas and felt delighted. In the waterfalls of this mountain, the water carries the fragrant leaves of the wax-flower dog-bane trees  as cool gems. The alphabet 'A' is combined with all other letters: similarly Lord Civan is the sustenance of all the universe. This Civan is entempled in the beautiful Thiru- aappanoor. Those who can adore and praise His glory will get rid of their bad karma. Note: One of the rare portions in the saints composition where a direct simile from Thirukkural has been employed - Vide Kural explaining the uniqueness of the Lord and the first alphabet'.

ஓடுந்திரி புரங்களுட னேயுலந்தவியக் 
காடதிட மாகக்கனல் கொண்டு நின்றிரவில் . 
ஆடுந் தொழிலானை யணியாப்பனூரானைப் 
பாடுமன முடையார்வினை பற்றறுப்பாரே.

ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய, 
காடு அது இடம்ஆகக் கனல் கொண்டு நின்று இரவில் 
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப் 
பாடும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், பறந்து திரியும் முப்புரங்களை ஒரு நொடியில் அழிவுறச் செய்தவர். 
சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு கனல் ஏந்தி நின்று இரவில் திருநடனம் 
புரிவதைத் தொழிலாகக் கொண்டவர். அழகிய திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள 
இப்பெருமானின் புகழைப் பாடும் உள்ளம் உடையவர்கள் தங்களின் வினைத் தொடர்ச்சி 
நீங்கப் பெறுவர்.

குறிப்புரை: உலந்து - வற்றி. 
Lord Civan destroyed and reduced to powder in one single moment, the three citadels that were flying in the sky. His avocation is to dance in the burning ghat during night hours by holding fire in His hand. He is entempled in the beautiful Thiru- aappanoor. Those who can sing in praise of this Lord will get rid of their bad karma.

இயலும்விடை யேறியெரிகொள் மழுவீசிக் 
கயலினிணைக் கண்ணாளொரு பாற்கலந்தாட 
இயலுமிசை யானையெழிலாப் பனூரானைப் 
பயிலுமன முடையார்வினை பற்றறுப்பாரே. 7

இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி, 
கயலின் இணைக் கண்ணாள் ஒருபால் கலந்துஆட, 
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப் 
பயிலும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், மனம் போல் இயங்கும் விடைமிசை ஏறிவருபவர். எரிதலைக் 
கொண்ட மழுவைச் சுழற்றிக் கொண்டு இருப்பவர். கயல் போன்ற இரு விழிகளை உடைய 
உமையம்மையைத் தனது திருமேனியில் ஒருபாகமாகக் கலந்தும், ஆடியும், கூடி இருந்தும், 
பொருந்தியும், மகிழ்ந்தும் இருப்பவர். அழகிய திரு ஆப்பனூரில் எழுந்தருளி உள்ள 
இப்பெருமானைப் பாடுவதைத் தம் இயல்பாகக் கொண்ட மனம் உடையவர்கள் வினைமாசு 
தீர்வார்கள்.

குறிப்புரை: இயலும் விடை - மனம் போலியங்கும் இடபம். 
By brandishing in His hand a burning battleaxe Lord Civan rides on the bull that is alert to His intent. He happily concorporates with Umaa Devi whose two eyes are similar to the eyes of carp fish. He rejoices in singing and is entempled in the beautiful Thiru-aappanoor. Those who can sing by their natural instinct in praise of this Lord Civan will get rid of their bad karma.

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் 
உருக்கு மடியவரை யொளிவெண் பிறைசூடி 
அரக்கன் றிறலழித் தானணியாப் பனூரானைப் 
பருக்குமன முடையார்வினை பற்றறுப்பாரே. 8

கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான், 
உருக்கும் அடியவரை, ஒளிவெண் பிறைசூடி, 
அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப் 
பருக்கும் மனம் உடையார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், கருமையான நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். சினம் 
பொருந்திய பாம்பைக் கச்சையாக அணிந்திருப்பவர். அடியவர்களை மனம் உருகச் 
செய்பவர். ஒளி பொருந்திய வெண்பிறையைச் சூடியவர். இராவணனின் வலிமையை 
அழித்தவர். அழகிய திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானை உணர்வுப் 
பூர்வமாக சுவைக்கும் உள்ளம் உள்ளவர்கள் தங்களின் மாசு நீங்கப் பெறுவார்கள்.

குறிப்புரை: கருக்கும் மணி மிடறன் - மேலும் கருக்கும் நீலமணி போலும் கழுத்தினை உடையவன். 
கதநாகம் - சினத்தோடுகூடிய பாம்பு. அரக்கன் - இராவணன். திறல் - வலி. பருக்கும் - பருகும் 
என்பதன் விரித்தல் விகாரம் குடிக்கும் என்பது பொருள். 
Lord Civan's neck is of dark blue colour similar to the sapphire gem and the darkness seems to increase ever more. He wears the ferocious serpent in His waist as a corset. He causes His devotee's heart to melt in love. He holds the white and bright crescent moon in His matted hair. He destroyed the valour of Raavanan. This Lord Civan is entempled in the beautiful city of Thiru-aappanoor. Those who heartily contemplate on this Lord Civan in their minds will get rid of their bad karma.

கண்ணன் கடிக்கமல மலர்மேலி னிதுறையும் 
அண்ணற் களப்பரிதாய் நின்றங்கடி யார்மேல் 
எண்ணில் வினைகளை வானெழிலாப் பனூரானைப் 
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 9

கண்ணன், கடிக்கமலமலர்மேல் இனிது உறையும் 
அண்ணற்கு அளப்பு அரிதுஆய் நின்று, அங்கு அடியார்மேல் 
எண்இல் வினைகளைவான்., எழில் ஆப்பனூரானைப் 
பண்ணின் இசை பகர்வார் வினை பற்றுஅறுப்பாரே.


பொருள்: திருமாலாலும், மணம் பொருந்திய தாமரை மலர்மேல் இனிதுறையும் பிரமனாலும் 
அளப்பதற்கு அரியவனாக நின்றவர் சிவபெருமான். அடியவர்கள் மேல் வரும் எண்ணற்ற 
வினைகள் பலவற்றையும் களைந்து அருளுபவர். - அழகிய திருஆப்பனூரில் 
எழுந்தருளியுள்ள இப்பெருமானைப் பண் பொருந்த இசையோடு உருகிப் பாடிப் 
போற்றுபவர்கள், தங்களின் வினை மாசு நீங்கப் பெறுவார்கள்.

குறிப்புரை: கடிக்கமலம் - மணம் உள்ள தாமரை. அண்ணல் என்றது பிரமனை. 
Lord Civan is unable to be searched into by Thirumaal as well as by Brahma who is beautifully seated on the fragrant lotus flower. He removes the multifarious bad karma of His devotees. This Lord Civan is entempled in the beautiful city of Thiru- aappanoor. Those who worship Him by singing tunefully the divine songs will get rid of their bad karma.

செய்யகலிங் கத்தார்சிறு தட்டுடையார்கள் 
பொய்யர்புறங் கூறப்புரிந்த வடியாரை 
ஐயமகற்று வானணியாப் பனூரானைப் 
பையநினைந் தெழுவார் வினைபற் றறுப்பாரே. 10

செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள், 
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை 
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப் 
பைய நினைந்து எழுவார் வினை பற்றுஅறுப்பாரே.

பொருள்: புத்தர்கள் சிவந்த காவி ஆடை உடுத்தியிருப்பவர்கள். சமணர்கள் சிறு தடுக்கை 
ஆடையாக உடுத்திக் கொண்டு திரிபவர்கள். இவர்கள் பொய் பேசுவார்கள். புறங்கூறித் 
திரிபவர்கள். சிவபெருமான், தன்னை விரும்பிய அடியவர்களின் சந்தேக ஞானத்தை 
விலக்கித் தெளிவுறச் செய்பவர். அழகிய திருஆப்பனூரில் எழுந்தருளிய இப்பெருமானை 
நுண்ணுணர்வாக நினைந்து எழும் அடியவர்களின் வினை மாசுகள் நீங்கும்.

குறிப்புரை: செய்ய கலிங்கத்தார் - சிவந்த காவியாடையார். சிறு தட்டு - சிறு தடுக்கு. புரிந்த - 
விரும்பிய. ஐயம் அகற்றுவான் - சந்தேக ஞானத்தை விலக்குபவன். 
Buddhists who wear the ruddy and ochre hued robe and Samanars who dress themselves in small plaited mats are liars and back biters on Lord Civan. Lord Civan removes the unreasonable doubts on spiritual knowledge of His loving devotees. He is entempled in the beautiful city of Thiru-aappanoor. They who contemplate slowly and have afflictions in their heart on Lord Civan will get rid of their bad karma.

அந்தண் புனல்வை கையணியா ப்பனூர்மேய 
சந்தமலர்க் கொன்றை சடைமேலுடையானை 
நந்தியடி பரவும்நலஞான சம்பந்தன் 
சந்தமிவை வல்லார் தடுமாற்றறுப்பாரே. 11

அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய 
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை, 
நந்திஅடி பரவும் நல ஞானசம்பந்தன் 
சந்தம்இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

பொருள்: சிவபெருமான், அழகிய கொன்றை மாலையைச் சடையின்மேல் அணிந்து 
கொண்டு குளிர்ந்த நீர் நிறைந்துள்ள வைகை ஆற்றின் கரையில் விளங்கும் திருஆப்பனூரில் 
எழுந்தருளியுள்ளார். சிவன் திருவடிகளையே பரவும் நல்ல ஞானசம்பந்தன், இப்பதிகத்தால் 
இப்பெருமானைப் போற்றிப் பாடினார். சந்த இசையோடு கூடிய இப்பதிகப் பாடல்களைப் 
பொருள் உணர்ந்து ஓதவல்லவர்கள், இவ்வுலகில் தடுமாற்றத்தைத் தருகின்ற அறிவை 
அறுத்து, நிலையான மெய்யறிவைப் பெறுவார்கள்.

குறிப்புரை: நந்தி - சிவபெருமான். சந்தம் - சந்தத்தோடுகூடிய திருப்பாடல். 
Lord Civan wears the good looking garland of cassia flowers on His matted hair. He is enshrined at the temple in the beautiful Thiru-aappanoor town. This town lies on the banks of river Vaigai  of cool and lovely stream full of water. Gnaanasambandan, the considerate, always adore the holy feet of Lord Civan this sang tuneful musical song. Those who can chant these songs will get rid of their bewilderment and gain spiritual wisdom.

திருச்சிற்றம்பலம்

88ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
89. திருஎருக்கத்தம் புலியூர்

திருத்தல வரலாறு:

திருஎருக்கத்தம் புலியூர் ஒரு நடு நாட்டுத் தலம். விருத்தாசலம் - ஜயங்கொண்டம் பேருந்து 
வழியில் உள்ளது. இராஜேந்திர பட்டினம் என வழங்குகிறது. எருக்கினைத் தல விருட்சமாக 
உடைய புலியூராதலின் இப்பெயர் பெற்றது. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம். 
இறைவன் பெயர் திருநீலகண்டர். இறைவியின் பெயர் நீலமலர்க்கண்ணியார். தல விருட்சம்
எருக்கு.

பதிக வரலாறு:

திருநீலகண்ட யாழ்ப்பாணர், பொன்னம்பலந் , தொழுது முடித்துவிட்டு வந்த புகலிப் 
பிள்ளையார் திருமுன்பு சென்று, ‘அடியேன் பிறந்த பதி திருஎருக்கத்தம்புலியூர் அண்மையில் 
உள்ளது. அதையும் வணங்கிப் போதல் வேண்டும்’ என்று விண்ணப்பிக்க, பிள்ளையார் அங்ஙனமே 
தந்தையார் பரிசனங்கள், பாணா் மதங்கசூளாமணியார் இவர்களுடன் நிவாநதியின் கரைவழியே, 
மேற்றிசையிற் போய்த் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்தார். திருக்கோயிலுக்குச் சென்று 
வழிபட்டுப் ‘படையார் தரு’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார். 
HISTORY OF THE PLACE

89. THIRU-ERUK-KATH-THAM-PULIYOOR

This sacred place is in Nadu Naadu. It is on the Viru-dhaa-chalam Jayangkondam bus route. It is called Raajendhirapattinam now. Since the sacred tree of this temple is 'erukku' and it is also a 'puliyoor', it got this name. 
The God's name is Neelakantar and the Goddess's name is Neelamalarkkanniyaar. This is the birthplace of the saint Thiruneelakanta Yaazhppaana Naayanar.
INTRODUCTION TO THE HYMN 
At the request of Thirunilakanta Yaazhppaanar, our saint visited Thiru-eruk- kath-tham-puliyoor, the birthplace of the great Paanar along with his father and his retinue. Our saint reached this place and sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

89. திருஎருக்கத்தம்புலியூர்

பண் : குறிஞ்சி . 
ராகம் : குறிஞ்சி

படையார் தருபூதப்பக டாருரிபோர்வை 
உடையா னுமையோடு முடனாயிடு கங்கைச் 
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் 
விடையா னடியேத்தமே வாவினைதானே. 1

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை 
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச் 
சடையான் - எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில் 
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

பொருள்: சிவபெருமான், பூதகணங்களைத் தமது படையாகக் கொண்டவன். யானையின் 
தோலைப் போர்வையாகக் கொண்டவன். உமையம்மையோடு உடனாய் விளங்குபவன். 
வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவன். எருக்கத்தம்புலியூரில் விளங்கும் 
தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளி இருப்பவன். விடை ஏற்றை உடைய இப்பெருமான்
திருவடிகளைத் துதிப்பவர்களை வினைகளின் வலிமை வந்து சேராது.

குறிப்புரை: பகடு ஆர் உரி - யானையின் தோல். மேவா - தம் வலிமையைக் காட்டா. 
Lord Civan is the Lord of His army of goblin hosts. He covers His body with the skin of an elephant. He is concorporate with His consort Umaa Devi. On His matted hair, is the river Ganges that came and rested. This Lord Civan, rider of the bull is entempled at the temple in Thiru-eruk-kath-tham-puliyoor. Bad karma will not show its force on those who adore His holy feet in this place.

இலையார் தருசூலப்படை யெம்பெருமானாய் 
நிலையார் மதில்மூன்று நீறாய்விழ வெய்த 
சிலையா னெருக்கத்தம் புலியூர்த்திகழ் கோயில் 
கலையா னடியேத்தக் கருதாவினை தானே. 2

இலை ஆர்தரு சூலப்படை எம்பெருமானாய், 
நிலையார் மதில்மூன்றும் நீறுஆய் விழ எய்த 
சிலையான்- எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில் 
கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

பொருள்: சிவபெருமானார், இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவர். 
நிலைபெற்ற முப்புரங்களும் நீறாய்ப் பொடிபடுமாறு கணையை எய்த வில்லை உடையவர்.
எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் எம்பெருமானார் எழுந்தருளியுள்ளார். சகல 
கலைகளின் வடிவான இப்பெருமானாருடைய திருவடிகளைத் துதித்து வாழ்த்துபவர்களை 
எண்ணங்களால் வருத்தும் வினைகள் வந்து சேரா.

குறிப்புரை: இலையார்தரு சூலப்படை - இலைவடிவாகச் செய்யப் பெற்ற சூலப்படை, நிலையார் - 
அழிந்து படுந்தன்மையரான திரிபுராதிகள். 
Lord Civa is our divine noble man armed with a leaf-like trident. He owns a powerful bow. He sent an arrow from this bow on to the three well established citadels, and they fell down as a shower of cinders. This Lord Civan is enshrined at the temple in Thiru-eruk-kath-tham-puliyoor. Bad karma will not affect those who worship His holy feet in this place.

விண்ணோர் பெருமானேவிகிர் தாவிடையூர்தீ 
பெண்ணா ணலியாகும்பித் தாபிறைசூடீ 
எண்ணாரெ ருக்கத்தம்புலி யூருறைகின்ற 
அண்ணா வெனவல்லார்க் கடையாவினை தானே. 3

‘விண்ணோர்பெருமானே! விகிர்தா! விடைஊர்தீ! 
பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடீ! 
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற 
அண்ணா’ என வல்லார்க்கு அடையா, வினைதானே.

பொருள்: சிவபெருமானாரே! விண்ணவர்களின் தலைவரே! வேறுபட்ட வடிவும் பண்பும் 
உடையவரே! விடைமீது ஏறி வருபவரே! பெண், ஆண், அலி என்னும் பாகுபாடுகளைக் 
கடந்தவரே! பேரின்பமானவரே! பித்தரே பிறைசூடியிருப்பவரே! எல்லாராலும் 
எண்ணப்படுபவரே! எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவரே! என்று உரைத்துப் போற்ற 
வல்லவரை வினைகள் வந்து அடையா.

குறிப்புரை: பெண் ஆண் அலியாகும் - பால்பாகுபாட்டையும் திணைப்பாகுபாட்டையும் கடந்தவன் என்பது 
கருத்து. 'பித்தா பிறை சூடி' என்ற இத்தொடரே சுந்தரர் வாக்கில் தோன்றுவது. எண் ஆர் - எண்ணுதல் 
பொருந்திய. 
Karma will not touch those who hail Him thus: "Oh! God of the celestials! Oh! Pre-eminent Supreme Lord! Oh! Rider of the bull! Oh! You are the embodiment of heavenly joy ! Oh! You are beyond the ambit of gender! (man-woman-neuter hermaphrodite) You hold the crescent moon in Your matted hair. Oh! You are enshrined at the temple in Thiru-eruk-kath-tham-puliyoor and hailed thus by every one in his mind".

அரையார் தருநாகமணி வானலர்மாலை 
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி 
வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற 
திரையார் சடையானைச் சேரத்திருவாமே. 4

அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை 
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி, 
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற 
திரை ஆர் சடையானைச் சேரத் திரு ஆமே.

பொருள்: சிவபெருமானார், பாம்பை இடையில் பொருந்துமாறு அணிந்துள்ளவர் மணம் 
கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவர். விடைமீது ஏறிவருபவர். கயிலை 
மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவர்.அலைகள் வீசும் கங்கைநதியை 
சடைமிசைத் தரித்திருப்பவர். எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்திருப்பவராக எழுந்தருளி- 
யிருக்கும் இப்பெருமானாரைச் சேர்வோர்க்கு செல்வங்கள் வந்து சேரும்.

குறிப்புரை: விரை - மணம். வரையான் - கைலைமலையை உடையவன். திரையார் சடையான் கங்கை 
அணிந்த சடையான். திரை ஆகு பெயராய்க் கங்கையை உணர்த்திற்று. 
Lord Civan keeps a serpent firmly in position in His waist. He is adorned with a fragrant garland of burgeoning cassia flowers. His mount is the bull. Mount Kailash is His permanent abode. He is joyfully enshrined in Thiru-eruk-kath-tham-puliyoor supporting the billowing river Ganges in His matted hair. Opulence (Affluence) will be theirs who gain access to Him and worship Him.

வீறார்முலை யாளைப்பாக மிகவைத்துச் 
சீறாவரு காலன்சினத் தையழிவித்தான் 
ஏறானெ ருக்கத்தம்புலி யூரிறையானை 
வேறாநினை வாரைவிரும் பாவினை தானே. 5

வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து, 
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான், 
ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை 
வேறா நினைவாரை விரும்பா, வினைதானே.

பொருள்: சிவபெருமானார், அழகிய தனங்களை உடைய உமையம்மையை, இடப்பாகத்தில் 
சிறப்புடன் வைத்திருப்பவர். சீறிவந்த காலனின் சினத்தை அடக்கி அழித்தவர். இடப 
ஊர்தியை உடையவர். எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானாராகிய 
சிவபெருமானை தனித்திருந்து தியானிப்பவர்களை வினைகள் விரும்பாது.

குறிப்புரை: வீறு - தனிப்பெருமை. வேறொன்றற்கு இல்லாத அழகு என்பர் நச்சினார்க்கினியர். 
அழித்தான் என்னாது அழிவித்தான் என்றது காலன் தானேயுணர்ந்து அடங்கச் செய்த தன்மையால். 
வேறா நினைவாரை தனியேயிருந்து தியானிப்பவர்களை. 
Lord Civan accommodates His consort Umaa Devi, whose breasts are incomparably imposing, very eminently on the left half of His body frame. He did away the fury of Kaalan (regent of god of death). Those who meditate on and adore this Lord Civan in a secluded atmosphere will not be sought by their bad karma.

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப் , 
புகுவான யம்பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத் 
தகுவானெ ருக்கத்தம் புலியூர் த்தகைந்தங்கே 
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 6, 7

நகுவெண்தலை ஏந்தி நானா விதம் பாடிப் 
புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான் - எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே 
தொகுவான்! கழல் ஏத்த தொடரா, வினைதானே.

பொருள்: சிரிப்பது போல விளங்கும் வெண்மையான தலையோட்டைச் சிவபெருமானார் 
கையில் ஏந்தி இருப்பவர். பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் 
புகுபவர்.புலித்தோலைப் பிடரியில் இட்டுக் கொண்டு இருப்பவர். தகுதி வாய்ந்தவராக 
எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கேயே நிலைத்திருப்பவர். இப்பெருமானார் திருவடிகளைத் 
துதிக்க வினைகள் நம்மைத் தொடராது.

குறிப்புரை: நானாவிதம் பாடி - பலவகையான பண்களைப் பாடி. அயம் பெய்யப் புகுவான் - பிச்சையை 
மகளிர் பெய்யப் புகுவான். ஐயம் என்ற வார்த்தை அயம் எனப் போலியாயிற்று. பியற்கு - பிடரிக்கு. 
Lord Civan holding a white human skull, with a smiling appearance (because of the exposed teeth) and singing in multifarious modes, goes about to accept the alms given by women. He wears on His shoulders a tiger skin. He abides fittingly in Thiru- eruk-kath-tham-puliyoor for ever. Karma will not pursue those who adore and worship His holy feet. 
Note: The tiger-skin is Civa's loincloth. It also serves as His shoulder cloth.

ஆவாவென வரக்கனலற வடர்த்திட்டுத் 
தேவாவென வருளார்செல் வங்கொடுத்திட்ட 
கோவேயெ ருக்கத்தம்புலி யூர்மிகுகோயில் 
தேவேயென அல்லல்தீர்தல் திடமாமே. 8

‘ஆவா!' என அரக்கன் அலற அடர்த்திட்டு, 
‘தேவா!’ என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட 
‘கோவே!’ எருக்கத் தம்புலியூர் மிகு கோயில்- 
‘தேவே!’ என அல்லல் தீர்தல் திடமாமே.

பொருன்: சிவபெருமானார், இராவணன் ‘ஆ, ஆ’ என்று அலறுமாறு அவனை அடர்த்தவர். 
அதன்பின் அவன் ‘தேவா’ என வேண்டுதல் செய்ய, அருள்நிறைந்த செல்வங்கள் பலவற்றை 
வழங்கியருளிய தலைவரும் இவரே ஆவார். எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க 
கோயிலில் எழுந்தருளியுள்ள இப்பெருமானாரைத் ‘தேவனே’ என்று போற்றும்போது நம் 
அல்லல்கள் தீர்வது உறுதியாகும்.

குறிப்புரை: ஆஆ - இரக்கக்குறிப்பு தேவா என - அவனே, 'தேவா' என்று வேண்ட. 
Lord Civan crushed the head and shoulders of Raavanan under the mountain. Unable to bear the pain, he cried aloud "Aa! Aah!". "Oh! Lord Civa forgive me. I regret my folly; Oh! Deva! Save me". Civan the sovereign, forgave and blessed him with riches and boons. If we can hail Him, the Lord of great Thiru-eruk-kath-tham-puliyoor temple, all the troubles will cease for sure. 
Note: Civa is touched by remorse or penitence. He dispenses mercy even to a cruel and haughty Raakshasa, if he repents for his misconduct.

மறையான் நெடுமால்காண் பரியான்மழுவேந்தி 
நிறையா மதிசூடிநிகழ் முத்தின்றொத்தே 
இறையா னெருக்கத்தம் புலியூரிடங்கொண்ட 
கறையார் மிடற்றானைக் கருதக்கெடும் வினையே. 9

‘மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழுஏந்தி! 
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய் 
இறையான்!' எருக்கத்தம்புலியூர் இடம்கொண்ட 
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

பொருள்: சிவபெருமானார், வேதங்கள் ஓதும் நான்முகனாலும், நெடுமாலாலும் காண 
முடியாத அரியவர். மழுவைக் கையில் ஏந்தியிருப்பவர். கலை நிறையாத பிறைமததியைச் 
சூடியிருப்பவர். ‘முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே!’ எனப் போற்றுங்கள்.
எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறை மிடற்றுப் பெருமானை நினைத்தாலே நம் 
வினைகள் கெடும்.

குறிப்புரை: மறையான் - பிரமன். நிறையாமதி - இளம்பிறை. முத்தின் தொத்தே - முத்தின் கொத்தே. 
Bad karma will perish for those who worship and hail Lord Civan enshrined in the temple in Thiru-eruk-kath-tham-puliyoor, uttering these words: "Oh! Lord Civa! You are beyond the comprehension of Brahma who chants the Vedas and of the tall Thirumaal. You are wielding a battle-axe in one of Your hands. You are supporting a young crescent moon in Your matted hair. You are glowing like a cluster of shining pearls. Kindly shower Your grace on us".

புத்தரருகர் தம்பொய்கள் புறம்போக்கிச் 
சுத்திதரித் துறையுஞ்சோதி யுமையோடும் 
நித்தனெருக் கத்தம்புலியூர் நிகழ்வாய 
அத்தனற வன்றன்னடியே யடைவோமே. 10

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச், 
சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும் 
நித்தன் - எருக்கத்தம்புலியூர் நிகழ்வுஆய 
அத்தன்; அறவன் தன் அடியே அடைவோமே.

பொருள்: புத்தர்களும் சமணர்களும் கூறும் பொய்யுரைகளை விலக்கி விடுங்கள். 
சிவபெருமானார் பரிசுத்தமாக விளங்கும் ஒளிவடி வினராய் உமையம்மையாருடன் நித்தமும் 
மணாளனாக விளங்குபவர். எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியிருக்கும் அறவடி வினராகிய 
இப்பெருமானாரின் அடிகளை நாம் அடைவோம்.

குறிப்புரை: சுத்தித் தரித்து - தூய்மையைப் பொருந்தி. அத்தன் - தலைவன். 
Lord Civan ignores the falsehood and lies of Buddhists and Samanars. He Himself is Purity. He shines brightly as an ever young consort of Umaa Devi. He is entempled in Thiru-eruk-kath-tham-puliyoor. Let us reach the holy feet of Him that is an embodiment of virtue.

ஏராரெருக் கத்தம்புலியூ ருறைவானைச் 
சீரார்திகழ் காழித்திருவார் சம்பந்தன் 
ஆராவருந் தமிழ்மாலை யிவைவல்லார் 
பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே. 11

ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை, 
சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன் 
ஆரா அருந்தமிழ்மாலைஇவை வல்லார் 
பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.

பொருள்: அழகிய எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானாரைச் சீர்மிகு 
காழிப்பதியில் தோன்றிய திருஞான சம்பந்தன் போற்றிப் பாடினார். கலை குன்றாத 
அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள், உலகத்தவர் போற்ற 
வானகம் எய்துவர்.

குறிப்புரை: ஏர் - எழுச்சி. ஆரா அருந்தமிழ் - உணர்ந்தது போதும் என்றமையாத மிக இனிய தமிழ். 
Gnaanasambandan of glory abounding Kaazhi, who is ever inseparable from grace, has sung of the deity of lofty Thiru-eruk-kath-tham-puliyoor. Those who are well versed in this garland of Tamil erudiction, will be hailed by terrestrial folks, and will eventually abide in the celestial world.

திருச்சிற்றம்பலம்

89ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
திருச்சிற்றம்பலம் 
90. திருப் பிரமபுரம் (திரு இருக்குக் குறள்)

திருத்தல வரலாறு:

முதல் பதிகம் பார்க்க.

பதிக வரலாறு:

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிரு பெயர்களைக் குறிப்பிட்டு அருளிச் 
செய்யப்பட்டுள்ளது. ‘திரு இருக்குக் குறள்’ என்று சொல்லப்டும் யாப்பு வகையில் இரண்டே 
வரியில் பாட்டுக்கள் அமைந்துள்ளன. இந்தப் பதிகத்தில் வழக்கமாக 11 பாட்டுக்களுக்குப் பதிலாக 
12 பாட்டுக்கள் உள்ளன. 
90. THIRU-P-PIRAMA-PURAM (THIRU-IRUKKU-K-KURALL)

HISTORY OF THE PLACE

See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

The holy place where our saint was born goes by twelve different names. This hymn mentions all the different twelve names of Seekaazhi. The verses do have only two lines; they are, therefore called 'Thiru-irukku-k-kurall′ . There are twelve verses in this hymn as against the normal eleven verses.

திருச்சிற்றம்பலம்

90. திருப்பிரமபுரம் 
திரு இருக்குக் குறள்

பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

அரனையுள்குவீர், பிரமனூருளெம் 
பரனையேமனம், பரவியுய்ம்மினே. 1

அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்எம் 
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

பொருள்: சிவபெருமானையே நினையுங்கள். பிரமனூரில் விளங்கும் எம் பெருமானையே 
மனத்தால் போற்றித் துதித்து உய்வீர்களாக. 
குறிப்புரை: சிவபெருமானைச் சிந்திப்பவர்களே, பிரமபுரத்தில் உள்ள பரமனைப் பரவி உய்யுங்கள் 
என்கின்றது. 
Oh! Ye! Who contemplate on Hara (Lord Civan)! Hail our Supreme Lord of 'Piramapuram' (шч) with all your heart and gain deliverance. 
Note: Hara is Civa. Hara is Ara in Tamil.  glorifying Lord Civa alone (ஏதேற்றே காரம்).
காணவுள்குவீர், வேணுநற்புரத் 
தாணுவின் கழல், பேணியுய்ம்மினே.  

காண உள்குவீர்! வேணு நல்புரத் 
தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!

பொருள்: சிவபெருமானைத் தரிசிக்க எண்ணும் அன்பர்களே! நல்ல வேணுபுரத்தில் 
விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.

குறிப்புரை: காண உள்குவீர் - தரிசிக்க எண்ணுபவர்களே. வேணுபுரம் - சீகாழி. தாணு - 
சிவபெருமான். 
Oh! Ye who seek His darshan! Adore Thaanu's  holy feet who is entempled in 'Vēnupuram'  and gain deliverance. 
Note: Sthaanu meaning pillar is a name for Civa. He is known as a column of fire the head and base of which could not be eyed even by Brahma and Vishnu. Sthamba is Kantazhi in Tamil (ஸ்தம்பத் என்ற வடமொழிச் சொல் தமிழில் ‘கந்தழி’ என்று பெயர்ப்படும்).
நாதனென்பிர்காள், காதலொண்புகல் 
ஆதிபாதமே, ஒதியுய்ம்மினே.  

நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல் 
ஆதிபாதமே ஒதி, உய்ம்மினே!

பொருள்: சிவபெருமானை எம் தலைவன் எனக்கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி 
விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.

குறிப்புரை: நாதன் என்பிர்காள் - என் தலைவன் என்பவர்களே. புகல் ஆதி - சீகாழியில் உள்ள 
முதல்வன். 
Oh! Ye! good hearted people! You declare that Lord Civan is your chief. He is enshrined in the bright and lovely 'Pukali' . Praise the glory of His holy feet and gain deliverance. 
Note: Naathan means master. St. Maanickavaachakar hailed Him thus "Naathan thaal vaazhka" (நாதன் தாள் வாழ்க).

அங்கமாதுசேர், பங்கமாயவன் 
வெங்குருமன்னும், எங்களீசனே.

அங்கம் மாது சேர் பங்கம்ஆயவன், 
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

பொருள்: அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு 
பாகமாகக் கொண்டுள்ளவன், 'வெங்குருவில்’ நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.

குறிப்புரை: அங்கம் - மேனி. பங்கம் - பாதி. வெங்குரு - சீகாழி. 
With intention to grace His devotees, He is ever enshrined in 'Venguru'  keeping His consort Umaa Devi on the left portion of His body. He is our permanent Lord of the Universe.
வாணிலாச்சடைத், தோணிவண்புரத் 
தாணிநற்பொனைக், காணுமின்களே.

வான்நிலாச் சடைத் தோணிவண்புரத்து 
ஆணிநன்பொனைக் காணுமின்களே!

பொருள்: ஒளி பொருந்திய. பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் 
தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.

குறிப்புரை: வாள்நிலாச் சடை - ஒளிபொருந்திய நிலாவை அணிந்த சடை. ஆணிநற்பொனை - 
மாற்றுயர்ந்த பொன்போன்றவனை. தோணிபுரம் - சீகாழி. 
Lord Civan retains in His matted hair the bright crescent moon. Oh! Ye good hearted people, meet and worship Lord Civan who is similar to the best kind of pure gold and is enshrined in 'Thonipuram' . 
Note: 'Aanippon' is gold of the finest purity.

பாந்தளார்சடைப் பூந்தராய்மன்னும் 
ஏந்துகொங்கையாள் , வேந்தனென்பரே. 6

“பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும், 
ஏந்து கொங்கையாள் வேந்தன்'' என்பரே.

பொருள்: பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை. ஏந்திய 
தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.

குறிப்புரை: பாந்தள் - பாம்பு. பூந்தராய் - சீகாழி. 
Containing a serpent in His matted hair, Lord Civan is (ever) enshrined in the town called 'Poontharaai' . People will hail this noble Guru as the consort of Umaa Devi who has upraise breasts.
கரியகண்டனைச், சிரபுரத்துளெம் 
அரசைநாள்தொறும், பரவியுய்ம்மினே.

கரிய கண்டனை, சிரபுரத்துள் எம் 
அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!

பொருள்: கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச் சிரபுரத்துள் எழுந்தருளிய 
அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.

குறிப்புரை: சிரபுரம் - சீகாழி. 
Oh! Ye, good hearted people, worship daily Lord Civan, whose neck is dark blue in colour and who is entempled in 'Sirapuram', and gain deliverance.

நறவமார்பொழிற், புறவநற்பதி 
இறைவன்நாமமே, மறவல்நெஞ்சமே. 8

நறவம் ஆர் பொழில் புறவம் நல்பதி 
இறைவன நாமமே மறவல், நெஞ்சமே!

பொருள்: தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய 
இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.

குறிப்புரை: நறவம் - தேன். புறவநற்பதி - சீகாழி. மறவல் நெஞ்சமே எனப் பிரிக்க. 
Oh! Heart, never forget the holy name of the Lord-God Civan who is entempled in virtuous 'Puravam'  which is rich in melliferous groves (smelling honey).

தென்றிலரக்கனைக் குன்றிற்சண்பைமன் 
அன்றுநெரித்தவா, நின்றுநினைமினே. 9

தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன் 
அன்று நெரித்தவா, நின்று நினைமினே!

பொருள்: தென் திசையில் உள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் 
சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப் படுத்து அன்று நெரித்த வரலாற்றை 
நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.

குறிப்புரை: தென்றில் அரக்கன் - தென்திசையில் உள்ள அரக்கன். குன்றில் - கயிலை மலையில் 
சண்பை - சீகாழி. அன்று - கயிலையைத் தூக்கிய காலத்து. நெரித்தவர் - இராவணனை நெரித்த 
வரலாற்றை. 
Oh! Ye, devotees! Contemplate, praise and worship Lord Civan who once upon a 
time crushed the heads and shoulders of the Asura - Raavanan under Mount Kailash. Raavanan is the king of Sri Lanka, in the southern part of this earth. This Lord Civan is the king entempled in 'Chanbai' town.

அயனுமாலுமாய், முயலுங்காழியான் 
பெயல்வையெய்தினின், றியலுமுள்ளமே. 10

அயனும் மாலும்ஆய், முயலும் காழியான் 
பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.

பொருள்: பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில் 
விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து காத்தலும் நினைத்துக் கொண்டே 
இருக்கிறது என் உள்ளம்.

குறிப்புரை: முயலும் - தேடமுயற்சி செய்யும். காழி - சீகாழி. 
Brahma and Thirumaal did their best searching for holy feet and head of Lord Civan in vain. My heart contemplates on this ancient Lord Civan, entempled in 'Seekaazhi' and aspires for His merciful downpour of grace.

தேரரமணரைச், சேர்வில் கொச்சை மன்
நேரில்கழல்நினைந், தோருமுள்ளமே. 11

தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன் 
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

பொருள்: புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, ‘கொச்சைவயத்து’ மன்னனாகிய 
சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

குறிப்புரை: கொச்சை - சீகாழி. நேரில் கழல் - ஒப்பற்ற திருவடி. 
My heart always thinks of and meditates upon, the incomparable holy feet of Lord Civan, the Supreme King of 'Koch-chai-vayam' (шů) who will never associate himself with the Buddhists and Samanars.

தொழுமனத்தவர், கழுமலத்துறை 
பழுதில்சம்பந்தன், மொழிகள்பத்துமே. 12

தொழு மனத்தவர், கழுமலத்து உறை 
பழுது இல் சம்பந்தன் மொழிகள்பத்துமே.

பொருள்: ‘கழுமலத்தில்’ உறையும் குற்றமற்ற. ஞானசம்பந்தன் அருளிய மொழிகளாகிய 
இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

குறிப்புரை: பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி. 
Oh! Ye good hearted people! chant all these verses of this hymn rendered by the flawless Gnaanasambandan who hails from 'Kazhumalam' and worship Lord Civan of this place.

The twelve names of Seekaazhi are as under: 
1. Piramapuram - பிரமபுரம்
2. Vēnupuram - வேணுபுரம்
3. Pukali - புகலி 
4. Venguru - வெங்குரு
5. Thonipuram  - தோணிபுரம் 
6. Poontharaai - பூந்தராய்
7. Sirapuram - சிரபுரம்
8. Puravam - புறவம்
9. Chanbai  - சண்பை
10. Seekaazhi - சீகாழி
11. Koch-chai-vayam - கொச்சைவயம்
12. Kazhu-malam -கழுமலம்

சிவமயம் 
திருச்சிற்றம்பலம்

91. திருவாரூர் (திரு இருக்குக் குறள்)

திருத்தல வரலாறு:

இத்திருத்தலம் மயிலாடுதுறை அறந்தாங்கிப் பாதையில் உள்ள இரயில் வண்டிக் கூட்டு 
நிலையம். ஸப்தவிடங்கத் தலங்களுள் தலைமையானது. மயிலாடுதுறை, கும்பகோணம், 
மன்னார்குடி முதலிய நகரங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. வீதி விடங்கப் பெருமானே 
எல்லா இடங்கட்கும் முதன்மையாய்த் திருமாலாலும், இந்திரனாலும் பூசிக்கப் பெற்ற சிறப்புடையார். 
ஆதலின், அவரைச் சூழ ஏனைய ஆறுவிடங்கர்களும் எழுந்தருள, இவர் இத்தலத்து நடுநாயகமாக 
தியாகராஜர் என்ற திருப்பெயரோடு வீற்றிருக்கிறார்.

இத்தலம் மிகத் தொன்மையானது. ‘திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ 
திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே’ என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கு இதனை 
மெய்ப்பிக்கும்.

இத்தலத்தில் பிரமன் கோயில், துருவாச ஆசிரமம், பரவையுண் மண்டளி, திருநீலகண்டர் 
கோயில், தண்டபாணி கோயில், பரவையார் கோயில், இராஜதுர்க்கை கோயில், நடுவனநாதா் 
கோயில், மாற்றுரைத்த விநாயகர் கோயில், சோமநாதர் கோயில், குளுந்தாளம்மன் கோயில், 
எல்லையம்மன் கோயில், ஜயனார் கோயில், உருத்திர கோடீசுவரர் கோயில், குமரகோயில், 
மாணிக்க நாச்சியார் கோயில் முதலிய கோயில்கள் உள்ளன.

தலப்பெயர்: இத்தலத்துக்குக் கமலாலயபுரம், க்ஷேத்ரவரபுரம், ஆடகேசபபுரம், மூலாதாரபுரம், 
சக்திபுரம், கந்தபுரம் எனப் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்குகின்றன.

தீர்த்தங்கள்: 
தேவ தீர்த்தம், சங்கதீர்த்தம், சரசுவதி தீர்த்தம் முதலிய 21 தீர்த்தங்கள் இருப்பதாகப் 
புராணங்கள் புகலுகின்றன.

உட்கோயில்கள்: 
திருக்கோயிலுக்குப் பூங்கோயில் என்றும் பெயர் உண்டு. கோயிலுக்குள் அசலேசம், 
ஆடகேசம், ஆனந்தேசம், அருணாசலேசம், விசுவகன்மேசம், சித்தீசம் எனப் பல உட்கோயில்கள் 
உள்ளன. அவற்றுள் அசலேசம் திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது.

மூர்த்திகள்:

ஐங்கலக்காசு விநாயகர், வன்மீகநாதர், தியாகேசர், வாதாபி விநாயகர், நீலோத்பலாம்பிகை, 
விடங்கர், தருணேந்துசேகரா், கமலாம்பிகை, சுந்தரர், சேரமான் முதலிய மூர்த்திகள் எழுந்தருளப் 
பெற்றுள்ளனர்.

வாத்தியம்:

பஞ்சமுக வாத்தியம், பாரி நாயனம், சுத்த மத்தளம் என்பவை இத்தலத்துக்குச் சிறந்த 
வாத்தியங்கள்.

தியாகப்பள்ளு, தியாகக்குறவஞ்சி, வீராணுக்கவிசயம் என்பன இத்தலத்தில் ஆடப்பட்ட 
கூத்துக்களில் சில.

மண்டபங்கள்: 
தேவாசிரிய மண்டபம், பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், துலாபார மண்டபம், 
சபாபதி மண்டபம், புராண மண்டபம், இராச நாராயண மண்டபம், தட்டஞ்சுற்றி மண்டபம், வசந்த 
மண்டபம், திருப்பள்ளித்தாம மண்டபம் முதலிய பல மண்டபங்கள் உள்ளன.

கல்வெட்டு:

சோழர்கள் தம் அரண்மனைத் தெய்வங்களாக வைத்துப் போற்றும் சிவாலயங்களில் 
இத்தலத்துக் கோயில் முதன்மையானது. இத்தலம் கயமாணிக்க வளநாட்டைச் சார்ந்த திருவாரூர் 
என்றும், அதிராஜ வளநாட்டைச் சேர்ந்த திருவாரூர் என்றும் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் 
திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர் என்றும் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

இரண்டாம் இராஜாதிராஜன் தன் ஆட்சி 16ஆம் ஆண்டில் பெரிய கோபுரத்தையும் சபாபதி 
மண்டபத்தையும் கட்டினான். செம்பியன் மாதேவியார் அரநெறிக் கோயிலைக் கற்கோயிலாகக் 
கட்டுவித்தார். இலக்கம தண்டம நாயக்க உடையாருக்கு அவர் மந்திரி நன்றாக ஒரு கோபுரம் 
கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கநாதர் கருப்பக்கிருகத்தையும், வன்மீக நாதர் 
கோயிலையும் பொன் வேய்ந்தான். திருமுறை ஆசிரியர்களின் திருநாள்களில் விழாக் கொண்டாட 
ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன.

நம்பியாரூரர் தாயாரான இசைஞானியார் கெளதம கோத்திரத்தைச் சார்ந்த 
ஞானசிவாசாரியாருடைய புத்திரி என்பதை ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது.

பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதி ராஜன், 
முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜேந்திரன், விக்ரம சோழன், இரண்டாம் 
குலோத்துங்கன், இராஜாதிராஜன் முதலிய சோழ அரசருடைய கல்வெட்டுக்களில் திருவிளக்கு 
போடுவதற்கும் தேவ தானங்கள் முதலானவை செய்வன பற்றியும் குறிப்பிடப்படுகின்றன.

தியாகராஜ சுவாமி கோயில் இரண்டாம் பிராகார வடசுவரில் உள்ள மனுச்சரிதம் கண்ட
கல்வெட்டில் மனுச் சரிதம் முழுவதும் குறிப்பிடப்படுகிறது. இத்தலத்தில், தருமை ஆதி 
குருமூர்த்திகளின் குருமூர்த்தியாகிய கமலை ஞானப்பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும், கிருஷ்ண 
தேவராயனும் அளித்த தேவதானங்களும், வீதிவிடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் 
பெருமானுக்கும் நித்தியார்ச்சனை, பெருநீராட்டு இவைகளுக்காக அளித்த தேவ தானங்களும் 
இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. அவற்றை அவர்கள் குருஞான 
சம்பந்த சுவாமிகளிடத்தில் ஒப்படைத்து விட்டார்கள். அது இப்போதும் தருமை ஆதீன 
நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

பதிக வரலாறு:

செல்வத் தியாகேசர் சேவடி தொழ வேண்டும் என்ற அன்பு வெள்ளம் திருஞானசம்பந்த 
மூர்த்தி சுவாமிகள் உள்ளத்துப் பெருகி வழிகின்றது. அப்பா பெருமானும் ஆரூர்த் தியாகேசப் 
பெருமானின் ஆதிரைநாளின் திருவோலக்கச் சிறப்பை எடுத்து விளக்கினார்கள். அதனால் 
அன்புவெள்ளம் உடைப்பெடுத்து ஓடுகின்றது. ஆரூர்க்கு வழிக்கொண்டு வருகின்றார்கள். 
கனிந்த சிந்தை கவிதைகளாக வெளிப்படுகின்றது. ‘பாடலனான்மறை’ என்ற பதிகமாகின்றது. 
விற்குடி முதலியவற்றை வணங்கிக் கொண்டு திருவாரூர் திருமதிற்புறத்து அணுகுகின்றபோது 
சிவிகையினின்றும் இறங்கித் தலத்தையும் சிவமாகக் கண்டு, செங்கை நிறைய மலர்களையேந்தித் 
தூவி திருவிருக்குக் குறளாகிய இதனைத் தமிழ்நாடுய்ய அருளிச் செய்கின்றார்கள்.

91. THIRU-AAROOR (THIRU-IRUKKU-K-KURALL)

HISTORY OF THE PLACE

This sacred place is in a railway junction, in the Mayilaaduthurai - Aranthaangi train route. It is foremost among the seven 'vidanga' temples. Buses ply to this place from Mayilaaduthurai, Kumbakonam and Mannaarkoil.
This place is known also by other names such as Kamalaalayapuram, Khethravarapuram, Aadakesurapuram, Moolaadhaarapuram, Sakthipuram, Kandhapuram etc. The Lord is known as Thiyaagaraajar and the Goddess as Kamalaambikai. The God is also known as Veethi Vidangar and has the distinction of being foremost in being worshipped by Indhiran and others. For this reason, the other six lords known as Vidangars have their shrines, with this as the central jewel among them. This is one of the most ancient temple. The evidence is Saint Appar Swaamigal's words. There are many shrines within this temple, for Biraman, Thiruneelakandar, Dhandapaani, Paravaiyaar, Raajadhurgai, Naduvanaathar, Maarruraiththa Vinaayakar, Somanaathar, Kuluthaalamman, Elliayamman, Iyanaar, Uruththirakoteesuvarar, Kumarar and Maanicka-naachchiyaar, besides Duruvaasa Aasiramam and Paravaiyun Mandali.
In addition, there are some inner shrines in this temple, known as Poongkoyil. These inner shrines are Achalesam, Aadakesam, Anandhesam, Arunaachalesam, Visvakanmesam, Chiththeesam etc. Among these, Acahlesam has the distinction of having being sung by the Saint Appar. 
Images of Ingkalakkaasu (...) Vinaayakar, Vanmeeakanaathar, Thiyaakesar, Vaathaapivinaayakar, Neelothpalaambikai, Vidangar, Tharunendhu- sekarar, Kamalaambikai, Sundarar and Cheramaan are installed in the temple. 
Sacred fords of this temple number 21 and these include Dhevatheerththam, Sangkatheerththam, Sarasuvaththitheertham etc. Special to this temple are certain musical instruments known as Panchamukavaaththiyam, Paarinaayanam and Sudhdhamaththalam. Thiyagappallu, Thiyaagakkuravanjchi and Veeraanuk-kavisayam are certain dances performed at this temple. 
There are many mandapams at this temple: Thevaasiraya Mandapam, Bakthakaatchi Mandapam, Oonjal Mandapam, Thulaabaaramandapam, Sabaapathi Mandapam, Puraana Mandapam, Raajanaaraayana Mandapam, Thattanjchurri Mandapam, Vasantha Mandapam and Thiruppalliththaama Mandapam etc.
This temple is the foremost among the Civa temples which the Chola kings adored as their palace deities. According to inscriptions, Raajadhiraajan II had the big gopuram and Sabaapathi Mandapam built in his 16th regnal year. Queen Sembiyan Maadheviyaar had the Aranerikkoyil built as a stone edifice. Raajendhiran II had the shrine roofs of the Veethividangkanaathar sanctum and Vanmeekanaathar shrine paved with gold. A minister of Laakkama Dhandama Naayakka Udaiyaar built a gopuram for the benefit of his king. 
Arrangements had been made to celebrate the festivals associated with the authors of the Saiva canon (Thirumurai). 
An inscription informs us that the mother of Nambi Aroorar, Isaijnaaniyaar was the daughter of Jnaanasivaachaariyaar of Gouthama Goththiram. Inscriptions of many Chola kings, from Paraanthakan to Raajaadhiraajan speak of their endowments for lamps and other grants.
In the northern wall of the second ambulatory of Thiyaagaraaja Swaami temple, the entire story of Manu is included in an inscription. 
Certain services, known as Raajaangkak Kattalai are being observed here in this temple. These were originally from the endowments made by the king of Thanjchai and Krishnadhevaraayar to the Gurumoorthi of the Aadhi Gurumoorthies of the Dharumai Aadheenam, Kamalai Jnaanap Pirakaasar. They include the gifts for the daily worship and ritual bathing of Veethividangkap Perumaan and Vanmeekanaathar. These endowments were submitted by them to Guru Jnaanasambandha Swaami. To this day, the Dharumai Aadheenam administers these endowments. Details of this may be found in the publication 'Thiruvaaroor' (No. 189) by the Aadheenam.
INTRODUCTION TO THE HYMN

Hearing of the greatness of the Aadirai festival at Aaroor from St. Appar, the youthful saint proceeded to Aaroor to adore Lord Thyagaraja. Visiting and adoring Thiruvirkudi and other shrines, he eventually arrived at the walled city of Aaroor which appeared verily as Civa Himself when be hailed it in a hymn of Kural metre.
The kural metre employed here, is however slightly different from the standard 'two line' kural 'venba' - (e.g.) Thiru-k-kural has two lines having four and three seers (சீர்) respectively. Also வெண்சீர் வெண்டளை in all couplets of திருக்குறள். 
Note: This hymn cast in the metre of Kural is compact of mantras. If duly chanted, the 
chanter gets blessed with weal, at once physical and spiritual. The greatness of flower-offering in Civa Puja is highlighted in this hymn. Flowers are also symbolic of cardinal virtue. The hymns of our youthful saint are known as verse-garlands. 
The offerer is himself a flower or a garland of flowers. From him wafts Civa's fragrance.

திருச்சிற்றம்பலம்

91. திருவாரூர் 
திரு இருக்குக் குறள் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

சித்தந்தெளிவீர்காள், அத்தனாரூரை 
பத்திமலா்தூவ, முத்தியாகுமே. 1

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் 
பத்திமலர் தூவ, முத்தி ஆகுமே.

பொருள்: சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே; அனைவர்க்கும் 
தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி 
வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்கி கிடைக்கும்.

குறிப்புரை: திருவிருக்குக்குறள் என்பது, வீடு, காதலிப்பவரால் விரும்பப் பெறும் பாடல். இரண்டு 
சீர்களான் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல். வேதங்களுள் இருக்கு, மந்திர வடிவாக 
உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திர வடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கம் 
உடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்ற வல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க.

அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கும் பாசத்தால் இரு வினைக்கீடாகக் கருவயிற் பிண்டமாய் வளர்ந்து 
பிறந்து, பரிபாகமுற்ற வினைகள் துன்ப இன்பங்களையும் ஊட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, 
அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்தி வேண்டும் உத்தமர்களை அழைத்து, அன்போடு மலர் 
தூவுங்கள். கைகளால் தொழுங்கள். எடுத்து வாழ்த்துங்கள். உங்களுடைய பற்று அறும். வினைகள் 
விண்டுபோம். இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும் வழியும் வகுப்பன இப்பத்துப் பாடல்களும். இம் 
முதற்பாட்டு முத்தி எய்தலாம் என்பதனைத் தெரிவித்து, அதற்கு உபாயம் உணர்த்துகின்றது.

சித்தம் தெளிவீர்காள் - மலமறைப்பாற் கலக்குண்ட சித்தந் தெளிய விரும்புபவர்களே. அத்தன் - 
அனைவர்க்கும் தலைவன், திருஆரூரில் எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானை பத்தியோடு மலர் தூவி 
வழிபடுங்கள் முத்தியாகும் என்பது போந்த பொருள். தெளிவீர்காள் என்று எதிர்காலத்தாற் கூறியது மலர் 
தூவல் முதலிய கிரியைத் தொண்டுகள் சித்தந்தெளிதற்கு ஏதுவென்பது தெரித்தற்கு; கிரியையென 
மருவும் யாவையும் ஞானங் கிடைத்தற்கு நிமித்தம் என்பது ஞான சாத்திரமாகலின், மலர் தூவ என்றது 
இறைவனும், ஞானாசாரியனும் எழுந்தருளியுள்ள இடங்களை மலர் தூவி வழிபடல் மரபு என்பதை விளக்கி 
நிற்கின்றது. முத்தியாகும் என முத்தியை வினை முதலாகக் கூறியருளியது திருவருட் பதிவு 
உற்றகாலத்துத் தாமே வந்தெய்துவதோர் சிவானந்தமாதலின். 
Oh! Ye devotees! you are anxious to get rid of defects from your mind and seek clarity. Worship Lord Civan our father, with devotion and praise Him offering flowers to Him who is entempled in Thiru-aaroor. Your mind will become pure and you will get salvation.
பிறவி யறுப்பீர்காள், அறவ னாரூரை 
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 2

பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை 
மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.

பொருள்: பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, 
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள். பிறப்பிற்குக் 
காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.

குறிப்புரை: முத்தியாதற்குப் பிறவி இடையூறாதலின் அப்பிறப்பு, பாவத்தைப் பற்றி வருவதொன்றாதலின், 
பாவமோ பற்றுள்ளம் காரணமாக எழுவதாகலின், காரியமாகிய பிறப்பினையறுக்க விரும்புவார்க்குத் 
துறவியாதலே சிறந்த உபாயம் என்பதை உணர்த்துகின்றது இப்பாட்டு. 
அறவன் - தரும வடிவன். மறவாது ஏத்துமின் - நினைப்பின்றி நினைத்து வழிபடுங்கள். 
நெஞ்சோடு படாத செயலும் உண்டன்றே. அங்ஙனமின்றிப் புத்திபூர்வமாக வழிபடுங்கள். துறவியாகும் - 
பிறவிக்கு ஏதுவாகிய பற்றுள்ளங்கழியும் என்பதாம். மறங்கடிய அறவனாலன்றி யாகாது என்பது உணரக் 
கிடக்கின்றது. துறவி - துறவு. வி, தொழில் விகுதி. 
Oh! Ye devotees! You desire to put an end to your birth and death cycle. The easy way is, not to forget to hail and worship Lord Civan who is entempled in Thiru- aaroor as an embodiment of Dharma. Then you can become an ascetic and put an end to your birth and death cycle.

துன்பந்துடைப்பீர்காள், அன்பனணியாரூர் 
நன்பொன்மலர்தூவ, இன்பமாகுமே. 3

துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர் 
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

பொருள்: துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் 
எழுந்தருளியுள்ள அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தாவி 
வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.

குறிப்புரை: பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின் அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், 
அதற்கு உபாயம் மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப்பாடல். 
Oh! Ye devotees! You seek to end your miseries in life. The easy way - you worship the ever-loving Lord Civan of Thiru-aaroor, by strewing bright and fair aromatic flowers; your life will be ever joyful.

அன்பன் - சிவன். அன்பனணி யாரூர் - அன்பனால் அழகு பெறும் ஆரூர். பொன்மலர் தூவ 
என்பது செம்பொன்னும் வெண் பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை முல்லை மலரோடு 
கலந்து தூவுதல் மரபு இன்பம் ஆகும் - துன்ப நீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும் ஆகும் 
என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும் நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.

உய்யலுறுவீர்காள், ஐயனாரூரைக் 
கையினாற்றொழ, நையும்வினைதானே.

உய்யல்உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக் 
கையினால்-தொழ, நையும், வினை தானே.

பொருள்: உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் 
எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் 
வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.

குறிப்புரை: இப்பாடல் துன்பந்துடைத்து உய்தியை விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் என்றருளிச் 
செய்கின்றது. ஐயன் - தலைவன். வினைதானே நையும் என்றது தொழுவாரிடம் இருப்புக் கொள்ள 
இடமின்மையால் வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம். வினை உண்டாலன்றிக் கழியாதாகலின் 
நையும் என்றார். 
Oh! Ye devotees! You desire to be relieved of the routine of worldly life. The easy way is to worship with folded hands our Chief, Lord Civan, who is enshrined in Thiru-aaroor. Your bad karma will become functionless. You will be redeemed.

பிண்டமறுப்பீர்காள், அண்டனாரூரைக் 
கண்டுமலர்தூவ, விண்டுவினைபோமே.

பிண்டம் அறுப்பீர்காள்அண்டன் ஆரூரைக் 
கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.

பொருள்: மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய 
அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள் 
பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவா நிலை எய்தலாம்.

குறிப்புரை: கீழைத் திருப்பாட்டு பிராரத்தவினை நைந்துபோம் என்றது. இத் திருப்பாட்டு வரக்கடவ 
வினைகளும் விண்டுபோம் என்கின்றது. பிண்டம் - கருவில் உறுப்பு நிரம்பாதிருக்கும் தசைத்திரள், 
‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்’ என்பது புறநானூறு. பிண்டம் அறுப்பீர்காள் - மீண்டும் விளையும் 
கருவிடைப் பிண்ட நிலையை அறுப்பவர்களே அண்டன் ஆரூர் என்றது தேவலோகத்தில் 
எழுந்தருளியிருந்ததை மனங் கொண்டு கூறியது. அண்டன் - தேவன். வினை விண்டுபோம் - 
வினைகள் மீண்டும் அங்குரியாதவாறு கெடும். நெல் வாய் விண்டது என்பது போல. 
Oh! Ye devotees! You desire not to be born again in this world. The easy way is, to go and have darshan of the Universal Lord Civan enshrined in Thiru-aaroor and offer worship to Him strewing elegant flowers. The bad karma which is the root cause of repeated births will crack and perish. You will attain the state of birthlessness.

பாசமறுப்பீர்காள், ஈசனணியாரூர் 
வாசமலர்தூவ, நேசமாகுமே. 6

பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆருர் 
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

பொருள்: உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, 
அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி 
வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.

குறிப்புரை: கீழைத் திருப்பாட்டு வினை நீக்கங்கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் 
பெறுவதாய், அநாதியே பந்தித்துள்ள பாசமுங் கெடும். இறைவன் நேசமாகும் என்று சொல்கிறது 
இப்பாட்டு. பாசம் - ஆணவம். கட்டி நிற்பதாகலின் அதனை அறுக்க வேண்டுமாயிற்று. ஆன்ம அறிவைப் 
பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம் எனப் பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற 
எம்போன்றவர்களுக்கு, பாசமறுத்த நம்பியாரூரா்க்குத் தோழரானதுபோல நமக்கும் நேசமாவார் என்ற 
நினைப்பு உண்டாகும். அன்பு முதிரும் என்றுமாம். 
Oh! Ye devotees, that seek to severe attachment to the illusive power which ensnares your soul! The easy way is, to approach the Lord of the Universe Civan, enshrined in the awe-inspiring town Thiru-aaroor and worship Him strewing elegant and fragrant flowers on His Holy Feet. Godly love will abound in you. The bad effects of the illusive power will vanish.
வெய்யவினைதீர, ஐயனணியாரூர் 
செய்யமலர்தூவ, வையமுமதாமே. 7

வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆருர் 
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.

பொருள்: கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் 
அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத் தூவி 
வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.

குறிப்புரை: இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும் 
உணர்த்துகின்றது இப்பாடல். வெய்ய வினை - விரும்பத்தக்க நல்வினையும் கொடிய தீவினையும். 
இரண்டும் பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின் நல்வினையும் 
தீரவேண்டுவதாயிற்று. செய்ய மலர் - சிவந்த மலர். வையம் உமதாம் - எலி மாவலியாகி 
வையமுழுதாண்டாற்போல உமதாம் என்பதாம். விளி முதற்பாட்டில் இருந்து கொள்ளப் பெறும். 
Oh! Ye devotees! who want to get rid of the harshness of your bad karma. The easy way for you is to go to the imposing town of Thiru-aaroor where our Universal Father is enshrined, and worship Him with devotion, by strewing elegant flowers on His Holy Feet.

அரக்கனாண்மையை, நெருக்கினானாரூர் 
கரத்தினாற்றொழத், திருத்தமாகுமே. 8

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் 
கரத்தினால் - தொழ, திருத்தம் ஆகுமே.

பொருள்: அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி
அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது
மனக் கோணல் நீங்கும். திருத்தம் பெறலாம்.

குறிப்புரை: செய்ய மலர் தூவி உலகாளும் அரசனாகிய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து 
திருத்தம் நல்குவர் தியாகேசர் ஆதலின் அவர் தலத்தைக் கையினாற்றொழ வேண்டும் என்கின்றது 
இப்பாடல். அரக்கன் - சிவபூசையை விதிமுறையியற்றி ஆட்சியும் படையும் பெற்ற இராவணன். ஆண்மை 
- திருவருட்பதிவு இன்மையால் தன்முனைப்பால் எழுந்த வன்மை. நெருக்கினான் - அடர்த்தவன். 
திருத்தம் - தூய்மை. திருத்தமாகும் - கோணல் நீங்கும் என்றுமாம். அரக்கன் தருக்கழித்த இறைவனது 
ஆரூர் தொழத் திருத்தமாம் என்க. 
Oh! Ye devotees! If you worship with your two folded hands- Lord Civan enshrined in Thiru-aaroor, who crushed the mightiness of Raavanan, you will for sure get poised in righteousness.

துள்ளுமிருவர்க்கும், வள்ளலாரூரை 
உள்ளுமவர்தம்மேல், விள்ளும்வினைதானே. 9

துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை 
உள்ளுமவர்தம்மேல் விள்ளும், வினை தானே.

பொருள்: செருக்குற்றுத் துள்ளிய திருமால் மற்றும் பிரமரின் செருக்கு அடக்கி அருள் செய்த, 
ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின்
வினைகள் நீங்கும்.

குறிப்புரை: அருள் பெற்றுச் சிறிது திருந்திப் பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் 
மயங்குவாராயினும், அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு என்று திருவுளங் கொண்டு 
அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் 
ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது இப்பாடல். துள்ளும்,இருவர் - அதிகாரம் 
பெற்ற சகலான்மாக்களாதலின் மலமுனைப்பால் தாம் பெரியர் எனத்  துள்ளுகின்ற பிரம விஷ்ணுக்கள். 
வள்ளல் - அவர்களுடைய மிகுதி கண்டும் நகையாது வழங்குபவர். உள்ளுதல் - தியானித்தல். மேல் 
வினை விள்ளும் எனவும் கூட்டலாம். 
Lord Civan curbed the arrogance of Thirumaal and Brahma; later when they realised their folly and repented, Civan graced them. Those who can contemplate on this Lord Civan and offer worship to Him will get freed from the effects of their two karmas - Sanjitham and Aahaamiyam  as they will be destroyed by Civan. Praaraththam  will not be scrapped, but will get eliminated only by experiencing it fully in this birth.

கடுக்கொள்சீவரை, அடக்கினானாரூர் 
எடுத்துவாழ்த்துவார், விடுப்பர்வேட்கையே. 10

கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர் 
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

பொருள்: கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை 
அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், 
வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.

குறிப்புரை: அதிகார மலத்தான் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை 
பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக் காட்டுகின்றது 
இச்செய்யுள். கடுக்கொள் சீவர் - கடுப்பொடியைக் கொள்ளும் சமணராகிய ஆன்மாக்கள். அடக்கினார் 
- அத்தன்மை கெடுமாறு அடக்கியவர். எடுத்து வாழ்த்துவார் - உள்ளத்துட்கிடந்த உணர்ச்சி வெள்ளம் 
உரையிறந்து வருதலின் கேட்டாரும் தம்போலுய்ய உரக்க வாழ்த்துபவர். வேட்கை விடுப்பர் - உரையினைச் 
செவிகேட்க, கேட்டதனைச் சித்தம் தியானிக்க, அதனால் மனம் ஒடுங்குதலின் பற்றுள்ளத்தை விடுவர் 
என்பதாம். 
Lord Civan quelled the haughtiness of Samanars who eat Chebulic myrobalam , as also that of Buddhists who cover their body with the ruddy and ochre hued cloth. Those who believe in and declare faith in Lord Civan (hailing Him) at Thiru-aaroor as the pre-eminent Lord  of the universe, will be able to discard their life's desire or anything.

சீரூர்சம்பந்தன், ஆரூரைச்சொன்ன 
பாரூர்பாடலார், பேராரின்பமே. 11

சீர்ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன 
பார்ஊர் பாடலார் பேரார், இன்பமே.

பொருள்: சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் 
முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

குறிப்புரை: முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளியவர்கள் அதற்கிடையூறான பிறவி வினை பாசம் 
இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும், நீங்கியார் எய்தும் பயனையும் முறையே 
கூறினார்கள். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துவர்; பேரார்; 
நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச் செய்து அருள்கின்றார்கள். சீர் ஊர் - சீகாழி பாரூர் பாடல் - 
உலகமுழுதும் பரவிப் பண்படுத்தும் பாடல். இன்பம் பேரார் - பெற்ற இன்பத்தினின்றும் மீளார். 
பேராவின்பப் பெருவாழ்வெய்துவர் என்பதாம். கீழ்ப்பாடல்களும் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை 
ஐந்து பாடல்களும், தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவார் எய்தும் பயனை 
இரண்டு பாடல்களும் பாடற்பயனை ஒரு பாடலும் உணர்த்துகின்றன. 
The distinguished Gnaanasambandan sang hymns on Civan of Thiru-aaroor that became world famous. Those who can chant these verses and worship this Aaroor of Lord Civan will never part with the highest bliss they acquire.

திருச்சிற்றம்பலம்

91ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

திருச்சிற்றம்பலம் 
92. திருவீழிமிழலை (திரு இருக்குக் குறள்)

திருத்தல வரலாறு:

நான்காம் பதிகம் பார்க்க.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனாரோடு திருவீழிமிழலையில் 
வீற்றிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டாக, அப்பசியால் உயிர்கள் வாடின. அடியார்களும் 
வருந்தினர். அதுகண்ட நாயன்மார்கள் ‘கண்ணுதலான் திருநீற்றுச் சார்பினோர்க்கும் கவலை 
வருமோ’ எனத் திருவுள்ளத்து எண்ணித் துயின்றனர். அன்று இரவு இறைவன் கனவில் தோன்றி, 
'கால மாறுதலினால் நீங்கள் கவலை கொண்டுள்ளீர்கள்: எனினும் உங்கள் அடியார்களின் 
வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும்வரை பீடத்தின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் 
பகுதியிலுமாகப் படிக்காசு ஒவ்வொன்று அளிக்கின்றோம்’ என்று அருள்செய்தனர். விடியலில் 
இருவரும் சென்று அவ்வாறே இருக்கக் கண்டு எடுத்து வந்து அடியார்கட்கு அமுதளித்தனர். 
வாகீசர் திருமடத்தில் காலம் தாழ்த்தாது அமுதூட்டப் பெறுதலையும் தமது காசு வட்டம் கொடுத்து 
மாற்றப் பெறுதலையும் அறிந்த சிவஞானப் பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சென்று ‘வாசி தீரவே’ 
என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்து வாசியில்லாக் காசு பெற்று, சிவனடியார்களுக்கு 
காலந்தவறாது திருவமுதளித்து எழுந்தருளி இருந்தனர். சில நாட்களில் பஞ்சம் நீங்கிற்று. 
92. THIRU-VEEZHI-MIZHALAI (THIRU-IRUKKU-K-KURALL)

HISTORY OF THE PLACE

See Fourth Hymn.

INTRODUCTION TO THE HYMN

When our young saint and St. Appar were sojourning in Thiru-veezhi-mizhalai a famine assailed the country. To relieve the distress of His devotees, Civa blessed each of the saints with a gold coin, daily. The coin received by Saint Sambandar was inferior to the one received by St. Appar. The saint therefore prayed to Civa through this hymn requesting coins matching the coins received by St. Appar. His prayer was answered.

திருச்சிற்றம்பலம்

92. திருவீழிமிழலை

திரு இருக்குக் குறள் 
பண் : குறிஞ்சி 
ராகம் : குறிஞ்சி

வாசிதீரவே, காசுநல்குவீர் 
மாசின்மிழலையீர், ஏசலில்லையே. 1

வாசி தீரவே, காசு நல்குவீர்! 
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

பொருள்: குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, அடியேனுக்கு வழங்கி
அருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து நல்ல காசினை நல்குக. அதனால் 
உமக்குப் பழிப்பு இல்லை.

குறிப்புரை: வாசி - உயர்வு தாழ்வு (வட்டமாகக் கழிக்கும் பணம்). மாசு - குற்றம். ஏசல் - நிந்தனை. 
Oh! Lord Civa! You are enshrined in the flawless Thiru-veezhi-mizhalai. Pray, grant that the gold coin You are giving me daily be not of inferior quality. By doing this graceful deed none will blame You.

இறைவராயினீர், மறைகொண்மிழலையீர் 
கறைகொள்காசினை, முறைமைநல்குமே. 2

இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! 
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

பொருள்: எல்லாருக்கும் இறைவனாக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த 
திருவீழிமிழலையில் எழுந்தருளி இருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் 
. உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருள்க.

குறிப்புரை: இறைவர் ஆயினீர் என இயற்கையே இறைவரை ஆயினீர் என ஆக்கம் கொடுத்துக் 
கூறினார். முறைப்படி வேற்றுமையறக் கொடுக்காமையால். கறைகொள் காசு - அழுக்கு படிந்த காசு; 
நாள்படச் சேமித்து வைத்த காசு என்பது கருத்து. 
Oh! Lord Civan! You are the Supreme Being for all in the Universe. You are enshrined in Thiru-veezhi-mizhalai where the chanting sounds of Vedas fill the atmosphere. Pray kindly remove the blemishness in the coin You are giving me daily.
செய்யமேனீமீர், மெய்கொண்மிழலையீர் 
பைகொளரவினீர், உய்யநல்குமே. 3

செய்யமேனீயீர்! மெய் கொள் மிழலையீர்! 
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

பொருள்: சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் 
எழுந்தருளி இருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, 
நாங்களனைவரும் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

குறிப்புரை: மெய் - உண்மைத் தன்மை. பை - படம். 
Oh! Lord Civa! You are having an elegant holy frame! You are enshrined in You wear the hood spreading serpent as Your ornament. Thiru-veezhi-mizhalai, where true holymen reside. 
We are Your servitors. We thrive by the coin which You are giving us daily. Pray, let the coin be flawless.

நீறுபூசினீர், ஏறதேறினீர் 
கூறுமிழலையீர், பேறுமருளுமே. 4

நீறு பூசினீர்! ஏறுஅது ஏறினீர்! 
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

பொருள்: திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் 
புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் 
பேறும் அருளுவீராக.

குறிப்புரை: பேறும் அருளும் - காசு கொடுத்ததோடமையாது; வீடு பேற்றையும் கொடும் என்பதாம். 
Oh! Lord Civa of the far renowned Thiru-veezhi-mizhalai! You are adorned with the holy ashes, all over Your body. Your mount is the Bull. In addition to the coin You are giving us daily, kindly grace us with divine bliss also.

காமன்வேவவோர், தூமக்கண்ணினீ்ர் 
நாமமிழலையீர், சேமநல்குமே. 5

காமன் வேவ, ஓர் தூமக்கண்ணினீர்! 
நாம மிழலையீர்! சேமம் நல்குமே!

பொருள்: காமனை எரித்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை 
உடையவரே, புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்குச் சேமத்தை 
அருளுவீராக.

குறிப்புரை: தூமக்கண் - புகையோடு கூடிய தீக்கண். நாமம் - புகழ் சேமம் - பாதுகாவல். க்ஷேமம் 
என்பதன் திரிபுமாம். 
Oh! Lord Civa of the celebrated Thiru-veezhi-mizhalai! You stared at Kaaman (God of Love ) through Your smoke surrounding fiery eye, and burnt him to death. Pray! Be pleased to give us Your full protection.

பிணிகொள்சடையினர், மணிகொண்மிடறினீர் 
அணிகொள்மிழலையீர், பணிகொண்டருளுமே. 6

பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! 
அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!

பொருள்: கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, 
அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளி இருப்பவரே, எம்மைப் பணி கொண்டு 
அருளுவீராக.

குறிப்புரை: பிணிகொள் சடையினீர் - கட்டிய சடையை உடையவரே. மணி - நீலமணி. பணி - ஏவல். 
Oh! Lord Civa of well decorated Thiru-veezhi-mizhalai! Your neck is of dark blue colour similar to the sapphire gem. You keep Your strands of hair well bound to each other. Kindly grace us by taking our services upon You.

மங்கைபங்கினீர், துங்கமிழலையீர் 
கங்கைமுடியினீர், சங்கைதவிர்மினே. 7

மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! 
கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!

பொருள்: உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் 
உறைபவரே; கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கி 
அருளுக.

குறிப்புரை: பங்கு - ஒரு பகுதி. துங்கம் - உயர்வு. சங்கை - சந்தேகம். தேவரீரிடம் வேற்றுமை சிறிதும் 
இல்லையாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம். வாசிதீர அளித்து அதனைப் போக்கி அருளும். 
Oh! Lord Civa! You are having Your consort Umaa Devi on the left half of Your body frame! You are abiding in the lofty Thiru-veezhi-mizhalai. You are having the river Ganges in Your matted hair. Pray, dispel our misgivings.

அரக்க னெரிதர, இரக்கமெய்தினீர் 
பரக்குமிழலையீர், கரக்கைதவிர்மினே. 8

அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! 
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

பொருள்: இராவணன் கயிலை மலையின்கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டி 
அருளுபவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு 
அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

குறிப்புரை: அரக்கன் - இராவணன். பரக்கும் - எங்கும் புகழ் பரவிய. கரக்கை - வஞ்சகம். 
Oh! Lord Civa! You are enshrined in the far famed Thiru-veezhi-mizhalai. When Raavanan got crushed under Your mount Kailash, You relented and graced him. Pray remove disparities in the coins You are giving us daily.

அயனுமாலுமாய், முயலுமுடியினீர் 
இயலுமிழலையீர், பயனுமருளுமே. 9

அயனும் மாலும்ஆய் முயலும் முடியினீர்! 
இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!

பொருள்: நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் போது, அவர்கள் காணமுடியாத 
பேருருவம் கொண்டவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் 
எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின்பத்தை அருளுவீராக.

குறிப்புரை: பயன் - வீட்டின்பம். 
Oh! Lord Civa! You took the huge form of a blazing fire when Thirumaal and Brahma ventured out to see Your Holy Feet and head. You are enshrined in Thiru- veezhi-mizhalai to enable everyone to worship You easily. Pray! grace us by granting us holy bliss also.

பறிகொள்தலையினார், அறிவதறிகிலார் 
வெறிகொள்மிழலையீர், பிறிவதரியதே. 10

பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; 
வெறி கொள் மிழலையீர்! பிறிவுஅது அரியதே. 

பொருள்: ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டிய 
உண்மை ஞானங்களை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் 
உறைபவரே, நாங்களனைவரும் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

குறிப்புரை: பறிகொள் தலையினார் - மயிர் பறித்த தலையை உடைய சமணர். அறிவது அறியவேண்டிய 
உண்மை ஞானங்களை, வெறி - மணம். 
Oh! Lord Civa! The Samanars should realise Your supremacy; but without any knowledge that You are the Supreme Lord of the universe, they lead a wasteful life. They pluck their hair one by one and keep their head bald. You are enshrined in the fragrant Thiru-veezhi-mizhalai. We, Your devotees cannot have an independent life separated from You.

காழிமாநகர், வாழிசம்பந்தன் 
வீழிமிழலைமேல், தாழுமொழிகளே. 11

காழி மா நகர் வாழி சம்பந்தன் 
வீழிமிழலைமேல் - தாழும் மொழிகளே.

பொருள்: இத்திருப்பதிகம் சீகாழிப். பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் 
ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர்மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக்
கொண்டதாகும்.

குறிப்புரை: வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே வல்லார் எல்லா நன்மையும் எய்துவர் எனச் 
செயப்படுபொருளும், வினையும் வருவித்து முடிக்க. 
These humble verses were sung by Gnaanasambandan of the famed city of Seekaazhi on Lord Civan of Thiru-veezhi-mizhalai. Those who can chant these verses with devotion will be graced by Lord Civan of Thiru-veezhi-mizhalai.

திருச்சிற்றம்பலம்

92ஆம் பதிகம் முற்றிற்று

 

Related Content

திருப்பதிகக் கோவை

அகத்தியர் தேவாரத் திரட்டு

திருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்

உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த "திருப்பதிகக் கோவை"

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng