logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - தமிழ் உரை English Translation Part 2

தமிழ் உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் 
 

Thirugyanasambandhar Thevaram - Second Thirumurai - Part 2

 English Translation and Tamil Explanation

(Copyright Courtasy: Socio Religious Guild, Thirunelveli)

 

பகுதி 1 (Part 1)  பகுதி 3 (Part 3) பகுதி 4 (Part 4)

 


சிவமயம் 
33.திரு அன்பிலாலந்தூறை
திருத்தலவரலாறு: 
திருஅன்பிலாலந்துறை என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். திருச்சிராப்பள்ளிக்கு அருகே லால்குடிக்குக் கிழக்கே5 கி.மீ. தூரத்தில் கொள்ளிடத்தின்வடகரையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி,லால்குடி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள்உள்ளன. 
அன்பில் என்பது தலப்பெயர். ஆலந்துறை என்பது கோயில் பெயர். பிரமதேவர்,வாகீசமுனிவர் முதலியோர் பூசித்த தலம். இது கொள்ளிடக்கரையில் உள்ளது. திருஞானசம்பந்தப்பெருமான் இத்தலத்துஎழுந்தருளியிருந்தபோது,கொள்ளிடம் நீர்ப்பெருக்காய்இருந்ததாகவும், இக்கரையில் இருந்தே பாடியதாகவும்,இறைவன் ஆணையின் வண்ணம் விநாயகர் காதைச்சாய்த்துக்கேட்டதாகவும்,ஒரு கர்ணபரம்பரைச் செய்தி உண்டு. அதற்கேற்பதல விநாயகர் திருவுருவம் முடிசாய்த்துச் செவி சாய்த்துக்கேட்கின்ற பாவனையில் அமைந்து இருக்கிறது. இறைவன் பெயர் சத்யவாகீசர்,இறைவியின் பெயர் செளந்தர நாயகி. சத்தியலோகவாசியாகியபிரமனும்,வாகீசரும்பூசித்தமையால்சத்தியவாகீசர் என்ற பெயர் போலும். தீர்த்தம் கொள்ளிடநதி. 
கல்வெட்டு: 
இத்தலத்தைப் பற்றியனவாக1902இல் படியெடுக்கப் பட்டவை13 கல்வெட்டுக்களும், 1938இல் எடுக்கப்பட்டவை6ம் உள்ளன. அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை. ஏனையவை சத்தியவாகீசரைப்பற்றியன. கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப்பெறுகிறது. மாறவர்மன்குலசேகர பாண்டியன்,மூன்றாம் இராஜேந்திரசோழன்,ஹொய்சளவீரராமநாத தேவர்,மதுரை கொண்ட பரகேசரிவர்மன்,இராஜராஜதேவன்முதலியோர்கள்காலத்தனவாகக்காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிவந்தம்அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன. 
பதிக வரலாறு: 
திருக்கானூரைவணங்கிப்பதிகத்தொண்டுபாலித்துப்போந்தகாழிப்பிள்ளையார்அன்பிலாந்துறைக்குஎழுந்தருளினார்கள். அங்கே “முன்னவனைத் தொழுது பதம்நிறைசெந்தமிழ் பாடினார்கள்.

THE HISTORY OF THE PLACE 
33. THIRU-ANBIL-AALANTHURAI 
The sacred city of Thiru-anbil-aalanthurai is to the north of river Cauvery in Chola Naadu. It is located on the north bank of river Kollidam, at a distance of 5 km from Lalgudi near Thiruchchiraappalli. It is accessible by bus from Lalgudi and Thiruchchiraappalli. The name of the place is Anbil and that of the temple is Aalanthurai. Piramadevar, Vaageesa Munivar etc., offered worship at this temple. According to legends, when Saint Thirujnaanasambandhar came to this temple, the river Kollidam was in spate, and the saint sang of the Lord from the other shore to which Vinaayakar listened by turning his ear towards the saint, as ordered by the Lord. As if to confirm this story, the Vinaayakar at this temple has his head turned to one side in the posture of listening.

The Lord's name is Saththiyaavageesar, perhaps because He was worshipped by Piraman of Saththiyalokam and Vaageesar. Soundharanaayaki is the name of the Goddess. The holy ford is the river Kollidam.

Stone Inscriptions 
Thirteen inscriptions in this temple were copied in 1902 and six in 1938. Of these, seven are in the Perumaal temple. The rest pertain to Saththiyavaageesar, who is referred to in the inscriptions as Piramapureesuvarar. They are of the times of Maaravarman Kulasekara Paandiyan, Raajendhira Cholan III, Hoysala Veera Raamanaatha Thevar, Madhurai Konda Parakesarivarman, and Raajaraaja Thevan. They mostly contain information about grants to the temple.

INTRODUCTION TO THE HYMN 
From Thiru-k-kaanur, our saint came to the town of Anbil the shrine of which is known as Aalanthurai and sang the following hymn.

திருச்சிற்றம்பலம்

33.திரு அன்பிலாலந்துறை
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

கணைநீடெரிமாலரவம்வரைவில்லா
இணையாவெயின்மூன்றுமெரித்தவிறைவர்
பிணைமாமயிலுங்குயில்சேர்மடவன்னம்
அணையும் பொழிலன்பிலாலந் துறையாரே.1

கணை நீடு எரி,மால் அரவம்,வரை வில்லா, 
இணையாஎயில்மூன்றும் எரித்த இறைவர் - 
பிணை மா மயிலும் குயில்,சேர் மடஅன்னம், 
அணையும் பொழில்அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான், 'நீண்டு எரிகின்றதீயையும்,திருமாலையும்அம்பாகக் கொண்டுபூட்டினார். அவர் வாசுகி,என்னும் பாம்பைநாணாக் கட்டினார். மேருமலையைவில்லாகவளைத்து முப்புரங்களையும் பெருமான் எரித்தார். தத்தம் பெடைகளோடு கூடிய பெரிய மயில்களும்,குயில்களும்சேர்ந்தும் மற்றும் அன்னங்களும்உறையும்பொழில்சூழ்ந்தஅன்பிலாலந்துறையில் சிவபிரான் விளங்குகிறார்.

குறிப்புரை: இது திரிபுரம் எரித்த இறைவர்ஆலந்துறையார் என அறிவிக்கின்றது. நீடு எரி மால் கணை – மேலோங்கி எழுகின்றதீயையும், திருமாலையும்கணையாகவும். அரவம் வரை வில்லா - வாசுகி என்னும் பாம்பைநாணாகக் கொண்ட மேருமலையைவில்லாகவும். இணையா - இணைத்து. பிணை - தத்தம் பெட்டைகளோடு கூடிய.

Lord Civan burnt the three citadels of Asuras by using Mēru mountain as Bow; the snake Vasuki as string; Thirumaal as arrow; and the upsoaring Agni as the tip of the arrow. This Civan belongs to and shines at the temple called Aalanthurai in the town of Anbil. This town is surrounded by lush forests where big peacocks along with their mates, the kuils and swans live and thrive in harmony.

Note: Mountain-bow: Mount Mēru. Its string was Vaasuki, the serpent. Vishnu became the arrow the tip of which was Agni, the Fire-God.

சடையார்சதுரன்முதிராமதிசூடி
விடையார்கொடியொன்றுடையெந்தைவிமலன்
கிடையாரொலியோத்தரவத்திசைகிள்ளை
அடையார்பொழிலன்பிலாலந்துறையாரே.

சடை ஆர்சதுரன்,முதிரா மதி சூடி, 
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை,விமலன் - 
கிடை ஆர் ஒலி ஓத்துஅரவத்து இசை கிள்ளை 
அடை ஆர்பொழில்அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான் சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவர். இளம்பிறையைமுடிமிசைச்சூடியவர்இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையராகியவிமலர் ஆவார். வேதம் பயிலும் இளம் சிறார்கள்கூடியிருந்து ஓதும் வேதஓலியைக் கேட்டு, அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்தியசோலைகளால்சூழப்பெற்றஅன்பிலாலந்துறைஇறைவராவார்.

குறிப்புரை: இது கிளிகள் வேத இசையைச் சொல்லும் ஆலந்துறைஇறைவனே எந்தை விமலன்என்கின்றது. சதுரன் - சாமர்த்தியம் உடையவன். கிடை ஆர் ஒலி - மாணவர்கள்கூட்டமாயிருந்துஒலிக்கும் வேத ஒலி. இதனைச்சந்தைகூறுதல்என்ப. ஒத்து அரவத்துஇசைக்கின்ற கிளி. அடை ஆர்பொழில் - அடைதல் பொருந்திய சோலை. இசை கிள்ளை - வேத ஒலியை

Lord Civan wears the young moon in His matted hair. The bull is the insignia of His flag. He is my immaculate father. Young Vedic learners jointly recite the Vedas in a particular special tune in the Vedic school. Parrots listening to these voices, make the same noise and live in the forest trees which encircle the town Anbil. Lord Civan is the Supreme God of this place.

Note: The Vedas are taught to the well-chosen young boys. The inculcation takes place with rigour and vigour. Thanks to their purva-punya, parrots listen to the vedic chanting. In time, these too become well-versed in the art of chanting. On occasions, it is said, they even correct the alumni that err.

ஊரும்மரவஞ்சடைமேலுறவைத்துப்
பாரும்பலிகொண்டொலிபாடும்பரமர்
நீருணகயலும்வயல்வாளைவராலோ
டாரும்புனலன்பிலாலந் துறையாரே.3

ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து, 
பாரும் பலி கொண்டு ஓலி பாடும் பரமர் - 
நீர் உண் கயலும்,வயல் வாளை,வராலோடு
ஆரும்... புனல் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான்,ஊர்ந்து செல்லும் பாம்பைச்சடைமுடிமேல் பொருந்த அணிந்துள்ளார். உலகம் முழுதும் சென்று பலியேற்று,இசை பாடி மகிழும்பரமனாக அவர் இருக்கிறார். நீரின்வழி உணவு உண்ணும் கயல்மீன்களை,வயல்களிடத்திலுள்ளவாளை மற்றும் விரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல் வளம் மிக்க அன்பிலாலந்துறையாராகப் பெருமான் விளங்குகிறார்.

குறிப்புரை: இது பலிகொள்ளும்பரமர்அன்பிலாலந்துறையார்என்கின்றது. அடியார்களதுஒடும்மனத்தை ஓரிடத்து நிறுத்தி வைப்பதுபோலஊரும்பாம்பைச்சடைமேல்உறவைத்தார் என்ற நயம் உணர்க.

Lord Civan wears properly the crawling snake on His matted hair and goes all over the world singing songs and receiving alms and takes pleasure in that way of life.  This Lord Civan belongs to Anbil-Aalanthurai which has copious water always. The Vaalai and Varaal fishesliving in the watery fields eat the Kayal fish which survives in aquatic fields.

Note: Carp 
Vaalai: Scaffard-fish 
Varaal: Mirel.

பிறையும்மரவும்முறவைத்தமுடிமேல்
நறையுண்டெழுவன்னியுமன்னுசடையார்
மறையும்பலவேதியரோதவொலிசென்
றறையும்புனலன்பிலாலந்துறையாரே.

பிறையும்(ம்) அரவும்(ம்) உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும்மன்னுசடையார் - 
மறையும்பலவேதியர்ஓத,ஒலி சென்று 
அறையும் புனல் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்:சிவபிரான்,பிறைமதி பாம்பு ஆகியவற்றை பகைநீக்கி,ஒருங்கே பொருந்த வைத்தமுடியை உடையவர். அந்த முடியின்மீதுநறுமணத்துடன் தோன்றும் வன்னித்தளிர்களும்மன்னியசடையினர். வேதியர் பலர் வேதங்களைஓத,அந்த ஒலி பல இடங்களிலும் ஒலிக்கும்நீர்வளம் மிக்க அன்பிலாலந் துறை இறைவராவார்.

குறிப்புரை: இது இத்தலத்திறைவன்பகைநீக்கி ஆளும் பண்பினன்என்கின்றது. உறவைத்த - பகைநீக்கி ஒருங்கே பொருந்த வைத்த. நறை - நல்ல மணம். வன்னி - வன்னிப் பத்திரம். வேதியர்மறைபலவும்ஓதஅவ்வொலிசென்று அறையும் ஆலந்துறைஎனக்கூட்டுக.

Lord Civan fairly keeps both the snake and the moon together on His matted hair by nullifying their hostile nature against each other. He also wears on His hair the young shoots of Vanni. Vedic scholars chant the Vedas, the sounds of which reverberate all around. Lord Civan belongs to this fertile city of Anbil- Aalanthurai which is rich with abundant water.

Note: Vanni: Indian mesquit tree.

நீடும்புனற்கங்கையுந்தங்கமுடி மேல் 
கூடும் மலையாளொருபாகமமர்ந்தார்
மாடும்முழவம்மதிரம்மடமாதர்
ஆடும் பதியன்பிலாலந் துறையாரே.5

நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல், 
கூடும் மலையாள் ஒரு பாகம் அமர்ந்தார் - 
மாடு(ம்) முழவம் அதிர(ம்),மடமாதர்
ஆடும் பதி அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான்,முடிமேல்பெருகிவரும் நீரை உடைய கங்கையாற்றையும்தங்குமாறுஅணிந்துள்ளார். தம்மைத்தழுவியமலைமகளை ஒரு பாகமாகக்கொண்டுள்ளார். பல இடங்களிலும் முழவுகள்ஒலிக்க,இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும்' அன்பிலாலந்துறைஇறைவர் ஆவார்.

குறிப்புரை: இது அன்பிலாலந்துறைஇறைவர்,கங்கையை முடி மேல் வைத்து உமையாளை ஒரு பாகம் வைத்துள்ளார்என்கின்றது. இவர் போகியாய்இருப்பதற்கேற்ற தலம்,முழவம் அதிர மடமாதர் ஆடும் பதியாய்ப்போகபூமியாய்இருப்பதைக்குறித்தவாறு. மாடு - பக்கம்.

Lord Civan permits the gushing river Ganges to stay on His matted hair. He is concorporate with His consort, the daughter of the King of the Himaalayan mountain who embraced Him. In many places of Anbil young girls dance to the beat of drums. He who owns this Anbil-Aalanthurai is our Lord Civan.

நீறார்திருமேனியரூனமிலார்பால்
ஊறார்சுவையாகியவும்பர்பெருமான்
வேறாரகிலும்மிகுசந்தனமுந்தி
ஆறார்வயலன்பிலாலந் துறையாரே.6

நீறு ஆர்திருமேனியர்,ஊனம் இலார்பால்
ஊறு ஆர்சுவை ஆகிய உம்பர் பெருமான் - 
வேறு ஆர்அகிலும்,மிகு சந்தனமும்,உந்தி 
ஆறு ஆர் வயல் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான்,திருநீறு அணிந்ததிருமேனியர். குற்றம் அற்றவர்களின்உள்ளங்களில்பொருந்திய சுவையாக இனிப்பவர். அவர் தேவர் தலைவர். தனியாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும்,உயர்ந்த சந்தன மரங்களையும்அடித்துவரும் காவிரி ஆற்று நீர் பாயும் வயல்களை உடைய திரு அன்பிலாலந்துறைஇறைவராகச் சிவபிரான் விளங்குகிறார்.

குறிப்புரை: இது குற்றமே இல்லாத நற்றவர்பால்ஊறுஞ்சுவையாய்விளங்குபவர்என்கின்றது. ஊனம் இல்லார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய எனப் பிரிக்க. ஆர் சுவை - அரிய அமுதம். வேறு ஆரா - வேறாகப்பெயர்ந்த.

Lord Civan's beautiful body is smeared with holy ashes. He is as sweet as nectar in the hearts of His unblemished devotees. He is the Chief of Devas. He is the Lord Supreme of Anbil-Aalanthurai which is surrounded by fertile fields into which the river water flows. The uprooted eaglewood trees and good quality sandalwood trees are carried on by this river.

செடியார்தலையிற்பலிகொண்டினிதுண்ட
படியார் பரமன் பரமேட்டிதன்சீரைக்
கடியார்மலரும்புனல்தூவிநின்றேத்தும்
அடியார் தொழுமன்பிலாலந் துறையாரே.7

செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன் பரமேட்டி - தன் சீரைக், 
கடி ஆர்மலரும் புனல் தூவி நின்று,ஏத்தும் 
அடியார் தொழும்அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்:சிவபிரான்,முடை நாற்றம் உடைய தலையோட்டில்பலியேற்று,அதனை இனிதாகஉண்டருளும்தன்மையினைக் கொண்ட பரமனாகியபரம்பொருளாக இருக்கிறார். அவர், மணம் பொருந்திய மலர்களையும்,நீரையும்தூவி,நின்று,தன் புகழைத்துதிக்கும்அடியார்களால்தொழப்படும்திருஅன்பிலாலந்துறைஇறைவர் ஆவார்.

குறிப்புரை: இது இறைவன் புகழைச் சொல்லி அடியார்கள்வழிபடும்ஆலந்துறையார்என்கின்றது. செடி -முடைநாற்றம். செடியார் தலையில் பிச்சை ஏற்று இனிதுண்டார் என்பது இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை உணர்த்தியது. படி - தன்மை. அடியார். சீரைத்தூவிநின்றுஏத்தித்தொழும்,ஆலந்துறையார்என்க.

Lord Civan metaphorically is immaculate and has no likes and dislikes. Out of Supreme mercy and consideration for the elevation of souls Lord Civan commands them to get rid of their ignorance and egoism so as to enable them to achieve the goal of their life, which is enjoyment of Bliss in the pervasion of the Supreme and to have ineffable union with Him.

Note: God is above qualities. Odour and malodour are one and the same to Him.

விடத்தார்திகழும்மிடறன்னடமாடி
படத்தாரரவம்விரவுஞ்சடையாதி
கொடித்தேரிலங்கைக்குலக்கோன்வரையார
அடாத்தாரருளன்பிலாலந்துறையாரே.

விடத் தார் திகழும்மிடறன்,நடம்ஆடி, 
படத்துஆர் அரவம் விரவும் சடை ஆதி, 
கொடித்தேர்இலங்கைக்குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் - அருள் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: சிவபிரான்,ஆலகாலவிடக் கறை விளங்கும் கரிய கண்டத்தினர். நடனம் ஆடுபவர்படத்தோடு கூடிய அரவம் விரவும்சடையினை உடைய முதற்கடவுள். அவர் கொடிய தேரைக் கொண்ட இலங்கையர்குலத்தலைவனாகியஇராவணணை,மலையின்கீழ்அகப்படுத்திஅடர்த்தவர். இவ்வகைய சிவபிரான்,அன்பர்கள் அருள் கணனிஇடமாக விளங்கும்திருஅன்பில்ஆலந்துறை என்னும் தலத்தில்எழுத்தருளினான்

குறிப்புரை: இது நீலகண்டனாய் அரவம் அணிந்து இராவணனைஅடர்த்தவன்ஆலந்துறையான்என்கின்றது. விடத்தார்திகழும்மிடறன் -'கறைமிடறுஅணியலும்அணிந்தன்று'என்ற கருத்தை ஒப்புநோக்குக. படத்துஆர் அரவம் - படம் பொருந்திய பாம்பு. ஆதி - முதல்வனே;அண்மைவிளி

Lord Civan's gullet is dark blue in colour due to swallowing of the cruel poison that came out of the sea. He is the king of dancing and a supreme dancer by Himself. He is the Supreme Lord who keeps the hooded snake on His matted hair. He crushed the head and shoulders of Raavana who is the head of Sri Lankans as well the king of Sri Lanka, whose chariot sports a flag. This Lord Civan is enshrined in Anbil- Aalanthurai to enable His devotees to be blessed by His grace.

வணங்கிம்மலர்மேலயனுந்நெடுமாலும்
பிணங்கியறிகின்றிலர்மற்றும்பெருமை
சுணங்கும்முகத்தம்முலையாளொருபாகம்
அணங்குந்நிகழன்பிலாலந் துறையாரே.9

வணங்கி(ம்) மலர் மேல் அயனும்,நெடுமாலும், 
பிணங்கிஅறிகின்றிலர்,மற்றும் பெருமை - 
சுணங்கு(ம்) முகத்து அம்முலையாள்ஒருபாகம்
அணங்கும் நிகழ் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: தாமரை மலர்மேல் விளங்கும் அயனும்,திருமாலும்சிவபிரானுடைய பெருமையை வணங்கி அறியாது,தம்முட்பிணங்கித் தேடி அறியாதவராயினர். அச்சிவபிரான்,சுணங்கு பொருந்திய உமையம்மையைஒருபாகத்தேஅணங்காகக்கொண்டுள்ளதிருஅன்பில்ஆலந்துறைஇறைவர் ஆவார்.

குறிப்புரை: இது உமையொருபாகர்ஆலந்துறையார்என்கின்றது. வணங்கி மலர்மேல் என்பது சந்தம் நோக்கி மகரம் மிகுந்தது. பிணங்கி உம் பெருமையறிகின்றிலர்எனக்கூட்டுக. மற்று அசை - சுணங்கு முகத்து முலையாளாகிய அணங்கு ஒரு பாகம் நிகழ் ஆலந்துறையார்எனக்கூட்டுக. ஒரு பாகம் இருந்தும் சுணங்கு பூக்கும் முலையாள் என்றது அம்மையின் மாறாத காதலை அறிவித்தவாறு. சுணங்கு பெண்களுக்குண்டாகும்தேமல். அணங்கு - தெய்வப்பெண்.

Both Brahma (who is seated on the Lotus) and Thirumaal challenged one another as to who was superior between them. They knew neither the glory of Lord Civan nor paid any obeisance to know about Him. They both went in search of His head and Holy Feet but in vain. Lord Civan is concorporate with His lovely divine consort Umaa Devi whose attractive breasts have yellow spots. This Lord Civan belongs to Anbil-Aalanthurai.

Note: Any contention is an indicant of the assertion of ego. It is egolessness that earnestly invites the bestowal of grace.

தறியார்துகில்போர்த்துழல்வார்சமண்கையர்
நெறியாவுணராநிலைக்கேடினர்நித்தல்
வெறியார்மலர்கொண்டடிவீழுமவரை
அறிவாரவரன்பிலாலந் துறையாரே.10

தறியார்,துகில் போர்த்து உழல்வார்,சமண்கையர், 
நெறியாஉணரா நிலை கேடினர்;நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில்ஆலந்துறையாரே.

பொருள்: தறிபோலஆடையின்றி உள்ள சமணர்கள்,நெய்தஆடையினை உடலில் போர்க்குஉழலும்பெளத்தர்கள் ஆகியோர்,தவபரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்குஉரியவர்களாய் உள்ளனர். அவர்களைச்சாராது,நாள்தோறும் மணமலர்களைச்சூட்டித் தம் திருவடிகளில்வீழ்ந்துதொழும்அடியார்களை நன்கு அறிந்து அருளும்சிவபெருமானார்திருஅன்பில்ஆலந்துறைஇறைவர் ஆவார்.

குறிப்புரை: இது அன்போடு பூவும் நீரும் கொண்டு அடிபணிவாரை அறிபவர் ஆலந்துறையார்என்கின்றது. தறியார் துகில் - தறியில்நெய்த ஆடை. நெறியாஉணரா - முறைமைப்படி உணர்ந்து கொள்ளாத,நிலைக்கேடினர் - கெட்ட நிலையை யுடையவர்கள். வீழுமவர் - விரும்பித் தொழுமடியார்.

Samanars wear no cloth on their body while the Buddhists cover their body with woven cloth and roam around. They both never realize about the Supreme Being according to scriptures. They indulge in evil ways of life. Devotees of Civan never approach these people, but they decorate Civan with fragrant flowers and prostrate before His Holy Feet daily and offer worship to Him. Lord Civan knows all about His devotees well and graces them. He is the Supreme Lord of Anbil-Aalanthurai.

Note: Jainism and Buddhism are Godless cults. It is an error to call them faiths.

அரவார்புனலன்பிலாலந்துறைதன்மேல்
கரவாதவர்காழியுண்ஞானசம்பந்தன்
பரவார்தமிழ்பத்திசைபாடவல்லார்போய்
விரவாகுவர்வானிடைவீ டெளிதாமே.11

அரவுஆர் புனல் அன்பில்ஆலந்துறைதன்மேல்
கரவாதவர்காழியுள்ஞானசம்பந்தன்
பரவு ஆர்தமிழ்பத்து இசை பாட வல்லார் போய் 
விரவுஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே.

பொருள்: வஞ்சனை இல்லாத மக்கள் வாழும் சீகாழிப்பதியில்தோன்றியஞானசம்பந்தன்சிவபிரானைப் பாடினார். பாம்பு நெளிந்து விரைந்து வருவது போன்ற தோற்றமுடையநீர்வளம்உடையதாயும் உள்ள திருஅன்பில்ஆலந்துறைஇறைவனாகிய சிவபிரான் மேல்பரவிப்பாடியஇப்பத்துப்பாடல்களையும்இசையோடுபாடவல்லவர்மறுமையில்வானகஇன்பங்களுக்குஉரியவர்கள்ஆவர். அவர்களுக்கு வீட்டின்பம்எளிதாம்.

குறிப்புரை: இப்பாடல்பத்தினையும்இசையோடுபாடவல்லார்விண்ணின்பத்தைமேவுவர்;அவர்க்குவீட்டின்பமும்எளிதாம்என்கின்றது. கரவாதவர்காழி - வஞ்சனை இல்லாத தவத்தவர்மேவியுள்ளகாழி. ஆலந்துறை தன்மேல் பரவு ஆர்,தமிழ் எனக்கூட்டுக. வானிடைவிரவுஆகுவர் - விண்ணிற்கலப்பர். அரவார் புனல் - பாம்பை ஒத்த புனல் (நெளிந்து விரைந்து வருதல்).

Anbil-Aalanthurai has plenty of waterways where the water gushes crawling and warping like snake's movement. Gnaanasambandan hails from Seekaazhi where live people of nobility without any jealous nature. He sang these ten verses with profound intensity on Lord Civan of Anbil-Aalanthurai. Those who can sing these ten verses with proper musical notes will be eligible to attain celestial bliss in their next birth. Also it will be easy for them to reach Civan's Holy Feet.

Note: Paradise is gained by Pasa-punya and Moksha by Pati-punya.

திருச்சிற்றம்பலம் 
33ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
34.சீகாழி 
திருத்தலவரலாறு: 
முதல் பதிகம் பார்க்க. 
திருச்சிற்றம்பலம் 
34.சீகாழி 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

அடலேறமருங்கொடியண்ணல்
மடலார்குழலாளொடுமன்னுங்
கடலார்புடைசூழ்தருகாழி
தொடர்வாரவர்தூநெறியாரே.

அடல் ஏறு அமரும் கொடி அண்ணல் 
மடல் ஆர்குழலாளொடுமன்னும், 
கடல் ஆர் புடை சூழ்தரு,காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

பொருள்: சிவபிரான்,வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்டகொடியைத்தனதாகக்கொண்ட தலைவராவார். கடலால்சூழப்பட்டசீகாழிப்பதியில்,மலர்சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடுஎழுந்தருளி இருக்கிறார். சென்று வழிபடுபவர்தூயநெறியில் நிற்பவர் ஆவார். அந்தத் தலத்தை இடைவிடாது

குறிப்புரை: இது இறைவன் உமையோடுஎழுந்தருளியிருக்கும்சீகாழியைப்பரவுவார்தூநெறியார்என்கின்றது. அடல் ஏறு - வலிமை பொருந்திய இடபம். மடல் - பூ. தொடர்வார் - இடைவிடாது தியானிப்பவர்.

The Supreme Lord Civan has the strong bull as the insignia of His flag. He is enshrined at Seekaazhi along with His consort Umaa Devi whose hair locks have been decked with flowers. This town is close to the sea. Those devotees who visit Seekaazhi city uninterruptedly and offer worship to the Lord are the pursuers of the pure and holy way.

Note: Civa is the way as well as the Goal.

திரையார்புனல்சூடியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார்புனல்சூழ்தருகாழி
நிரையார்மலர்தூவுமினின்றே.

திரை ஆர் புனல் சூடிய செல்வன், 
வரையார்மகளோடுமகிழ்ந்தான், 
கரை ஆர் புனல் சூழ்தரு,காழி
நிரைஆர் மலர் தூவுமின்நின்றே!

பொருள்: சிவபிரான்,அலைகளோடு கூடிய கங்கையைமுடிமிசைச்சூடியசெல்வனாகவிளங்குகிறார். கரையை உடைய நீர்நிலைகளால்சூழப்பட்டசீகாழிப்பதியில் சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியுள்ளான். அந்தச்சீகாழிப்பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவிவழிபடுமின்.

குறிப்புரை: காழியைஇன்றேமலர்தூவிவணங்குங்கள்என்கின்றது. நிரையார் மலர் - வரிசையான பூக்கள்.

Lord Civan sports on His head the billowing river Ganges. He is happily enshrined in Seekaazhi along with His consort who is the daughter of the King of the Himalayan mountain. This town is encircled by pools having proper banks. Ye folks! Carrying flowers, form a line and offer worship placing the flowers at His Holy Feet.

Note: 'Nilai aar malar' is Kondrai.

இடியார்குரலேறுடையெந்தை
துடியாரிடையாளொடுதுன்னுங்
கடியார்பொழில்சூழ்தருகாழி
அடியாரறியா ரவலம்மே.3

இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை 
துடி ஆர்இடையாளொடுதுன்னும், 
கடி ஆர்பொழில்சூழ்தரு,காழி
அடியார் அறியார்,அவல(ம்)மே.

பொருள்: இறைவனாகிய சிவபிரான்,இடியைஒத்த குரலை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம்தந்தையாவான். மணம் பொருந்திய பொழில்களால்சூழப்பட்டசீகாழிப்பதியில்துடிபோலும்இடையை உடைய உமையம்மையோடுஎழுந்தருளிஇருக்கிறான். அந்த சீகாழிப்பதியைவணங்கும் அடியவர்கள் துன்பத்தை அறியார்கள்.

குறிப்புரை: இது காழி அடியார் அவலம் அறியார்என்கின்றது. இடியார் குரல் ஏறு - இடியையொத்தகுரலுடைய இடபம். துடி - உடுக்கை. எந்தை துன்னும்காழி அடியார் அவலம் அறியார்எனக்கூட்டுக.

Lord Civan who is my father has for His vehicle the vociferous bull which makes noise like thunder. He is enshrined in Seekaazhi along with His consort Umaa Devi whose waist is as narrow as the centre portion of the small drum which He holds in His hand. This town is encircled by lush forests with fragrant flowers. Those devotees who offer worship to Lord Civan of this place will never be confronted by any sadness.

Note: Tudi: A small drum shaped like an hourglass.

ஒளியார்விடமுண்டவொருவன்
அளியார்குழன்மங்கையொடன்பாய்க்
களியார்பொழில்சூழ்தருகாழி
எளிதாமதுகண் டவரின்பே.4

ஒளி ஆர்விடம்உண்ட ஒருவன், 
அளி ஆர் குழல் மங்கையொடுஅன்புஆய்க், 
களி ஆர்பொழில்சூழ்தரு,காழி
எளிதுஆம். - அது கண்டவர் - இன்பே.

பொருள்: ஒப்பற்றவனாகிய சிவபிரான்,நீலநிறஒளியோடு கூடிய ஆலகாலவிடத்தைஉண்டருளியவன். பொழில்கள்சூழ்ந்தசீகாழிப்பதியில்உமையம்மையோடு அன்புடன் களிக்கின்றான். அந்த உமையம்மை,வண்டுகள் மணத்தைத்தேடிவந்துநாடும் கூந்தலை உடையவள். உமையம்மையுடன் பெருமான் உறையும்சீகாழிப்பதியைக்கண்டவர்க்குஇன்பம் எளிதாம்.

குறிப்புரை: இது காழிகண்டவர்க்கு இன்பம் எளிதாம்என்கின்றது. ஒளியார்விடம் - நீலஒளியோடுகூடியவிடம். அளி - வண்டு. ஒருவன் மங்கையோடுஅன்பாய்க் களி ஆர்காழி கண்டவர் இன்பம் எளிதாம் என முடிவு செய்க.

The incomparable Lord Civan swallowed the cruel dark blue poison and happily stayed in Seekaazhi along with His consort Umaa Devi. Her hair is so fragrant that bees fly towards Her hair to enjoy the smell and suck honey if available. The devotees who have visited this place will gain bliss easily.

பனியார்மலரார்தருபாதன்
முனிதானுமையோடுமுயங்கிக்
கனியார்பொழில்சூழ்தருகாழி
இனிதாமதுகண் டவரீடே.5

பனி ஆர் மலர் ஆர்தருபாதன், 
முனி தான்,உமையோடுமுயங்கிக், 
கனி ஆர்பொழில்சூழ்தரு,காழி
இனிதுஆம், -அது கண்டவர் - ஈடே,

பொருள்: சிவபிரான்,தண்மை பொருந்திய தாமரை மலர்போன்றதிருவடிகளை உடையவன். அவன்,உமையம்மையோடு கூடி உலக உயிர்கட்குப்போகத்தைப்புரிந்தருளினும்,தான் முனிவனாகவேவிளங்குகிறான். கனிகள்குலுங்கும்பொழில்கள்சூழ்ந்தசீகாழிப்பதியில்சிவபிரான் எழுந்தருளியுள்ளான்.அந்தப்பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தடையும்.

குறிப்புரை: இது காழி கண்டவர் பெருமை எய்துவர்என்கின்றது. பனி - குளிர்மை. பனியார் மலர் - தாமரை மலர். ஆர்தரு - ஒத்த. உமையோடுமுயங்கிமுனிதான் - ஒருத்தியோடுகூடியிருந்தும் தான் முனிவனாய் இருப்பவன். பாதன் முனி காழிகண்டவர்வீடுஇனிதாம் என முடிக்க.

Lord Civan's Holy Feet are as cool and charming as Lotus flower. Though He is in union with His consort Umaa Devi and imparts all knowledge about family life to all the souls in the world, He remains an ascetic maintaining celibacy.

Note: Gender has no relevance when Civa and Umaa are described. The Sivagnaana Siddhiyaar says: "Civa is a Bachelor and Umaa whose words are sweet like milk is a virgin".

கொலையார்தருகூற்றமுதைத்து
மலையான்மகளோடுமகிழ்ந்தான்
கலையார்தொழுதேத்தியகாழி
தலையாற்றொழுவார் தலையாரே.6

கொலை ஆர்தருகூற்றம் உதைத்து 
மலையான்மகளோடுமகிழ்ந்தான், 
கலையார் தொழுது ஏத்திய,காழி
தலையால்-தொழுவார்தலையாரே.

பொருள்: சிவபிரான்,கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்தான். அவன் மலையரையன்மகளாகியஉமையம்மையோடுமகழ்ந்துஉறைபவன். அத்தகையசிவபெருமான் விரும்புவதும்,மெய்ஞ்ஞானியர்கள் தொழுது ஏத்துவதும் ஆகிய சீகாழிப்பதியைத் தலையால் வணங்குவார்தலையாயவர் ஆவார். 
குறிப்புரை: இது காழிக்குச் சிரம் பணிவார்மேலானவர்என்கின்றது. கலையார் - கலைஞானிகள்.

Lord Civan kicked to death Yama the god of death whose sole duty is killing. He happily dwells with His consort Umaa Devi, daughter of the king of Himalayan Mountain. He craves to be entempled in Seekaazhi. Also men of true wisdom offer worship and adore Lord Civan of this place. Those who prostrate before the temple of this city and the Lord therein will become leaders of the world.

Note: Servitors devoted to Civa are true spiritual leaders.

திருவார்சிலையாலெயிலெய்து
உருவாருமையோடுடனானான்
கருவார்பொழில்சூழ்தருகாழி
மருவாதவர்வான்மருவாரே.

திரு ஆர்சிலையால்எயில் எய்து, 
உரு ஆர்உமையோடுஉடன்ஆனான், 
கரஆர்பொழில்சூழ்தரு,காழி
மருவாதவர் வான் மருவாரே.

பொருள்: சிவபிரான்,அழகிய வில்லால்மூவெயில்களையும்எய்தழித்தார். எழில் தவழும் உமையம்மையோடுசீகாழிப்பதியில்எழுந்தருளியுள்ளார். இருண்ட அடர்த்தியான சோலைகளால்சூழப்பெற்றசீகாழிப்பதியைஅடையாதவர்கள்,விண்ணுலகஇன்பங்களைஅடையாதவர் ஆவார்கள்.

குறிப்புரை: இது காழியடையார் வான் அடையார்என்கின்றது. திருவார் சிலை - அழகிய வில்;என்றது பொன் வில்லாதலின். உரு - அழகு. கருவார்பொழில் - கருமையாகிய சோலை. மருவாதவர் - அடையாதவர்.

Lord Civan destroyed the three citadels of Asuraas with His divine strong bow. He dwells with His lovely and affectionate consort Umaa Devi. He is entempled in Seekaazhi which is encircled by dense dark gardens. Those who have not gone to this city and offered worship to the Lord therein cannot enjoy the heavenly bliss.

அரக்கன் வலியொல்கவடர்த்து
வரைக்கும் மகளோடுமகிழ்ந்தான்
சுரக்கும்புனல்சூழ்தருகாழி
நிரக்கும்மலாதூவு நினைந்தே.8

அரக்கன் வலி ஒல்கஅடர்த்து, 
வரைக்கு(ம்) மகளோடுமகிழ்ந்தான், 
சுரக்கும் புனல் சூழ்தரு,காழி
நிரக்கும் மலர் தூவும்,நினைந்தே!

பொருள்: சிவபிரான்,இராவணனுடைய வலிமை சுருங்குமாறு,அவனைத் தளரச் செய்து அடர்த்தார். அவர் மலைமகளோடுமகிழ்ந்துசீகாழிப்பதியில்விளங்குகின்றார். மேலும் மேலும்பெருகிவரும் நீர் சூழ்ந்தசீகாழிப்பதியை நினைந்து,வரிசையாக மலர்களைத்தூவுமின்.

குறிப்புரை: இது காழிக்கு மலர் தூவுங்கள்என்கின்றது. அரக்கன் வலி அடர்த்துவரைக்குமகளோடுமகிழ்ந்தான் என்பது. அரக்கன் மலையெடுக்க,உமையாள் எய்தியஅச்சத்தைப்போக்கியதும்,அவன் செய்த தவற்றிற்காக அவள் காணத்தண்டித்ததையும் விளக்கி நின்றது. ஒல்க - சுருங்க. நிரக்கும் - ஒழுங்கான.

Lord Civan subdued Raavanaa's vigor by crushing him under the mountain. He happily dwells in Seekaazhi with His consort who is the daughter of the Himalayan mountain king. This town has many waterways, where water ever flows and overflows. Ye! Companions!! Contemplate on this town and offer plenty of flowers at the Holy Feet of Lord Civan therein.

இருவர்க்கெரியாகி நிமிர்ந்தான் 
உருவிற்பெரியாளொடுசேருங்
கருநற்பரவைகமழ்காழி
மருவப்பிரியும் வினைமாய்ந்தே.9

இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் 
உருவில்பெரியாளொடு சேரும், 
௧ரு நல் பரவை கமழ்,காழி
மருவப்,பிரியும்,வினை மாய்ந்தே.

பொருள்:திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்தான் சிவபிரான். அழகிற் சிறந்த பெரியநாயகிஅம்மையோடுசீகாழிப்பதியில்எழுந்தருளியிருக்கிறான். கரிய நல்ல கடலின்மணம்கமழும்சீகாழிப்பதியைமனத்தால்நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.

குறிப்புரை: இது காழியையடையவினைகெடும்என்கின்றது. இருவர் - மாலுமயனும். உருவிற்பெரியாள் - பெரியநாயகி என்னும் திருத்தோணிச்சிகரத்திருக்கும் அம்மையார். பரவை - கடல்.

Lord Civan took the form of tall and big column of fire for the sake of Thirumaal and Brahma. He is enshrined in Seekaazhi with His most beautiful consort Periya Naayaki (the name of goddess of this place). Fragrant air blowing from the dark blue unspoiled sea fills up the air in this town. Those devotees who contemplate on their minds the Seekaazhi city and the Lord Civan therein will get their karma nullified and it will leave them finally.

Note: Her form is full of immense grace: The Goddess of the holy shrine (Tonipuram) is called Periya Naayaki. She indeed is the Magna Mater.

சமண்சாக்கியர்தாமலர் தூற்ற 
அமைந்தானுமையோடுடனன்பாய்க்
கமழ்ந்தார்பொழில்சூழ்தருகாழி
சுமந்தார்மலர்தூவுதல் தொண்டே.10

சமண்சாக்கியர் தாம் அலர் தூற்ற, 
அமைந்தான்உமையோடு உடன் அன்புஆய்க; 
கமழ்ந்துஆர்பொழில்சூழ்தரு,காழி
சுமந்தார்,மலர் தூவுதல்தொண்டே.

பொருள்: சமணர்களும்,சாக்கியர்களும் புறம் கூறுகின்றனர். அவர்களை ஏறிடாமல்சிவபிரான் உமையம்மையோடு அன்பாய் ஒருசேரச்காழியார்எழுந்தருளி இருக்கின்றான். மணம் கமழ்ந்துநிறையும்பொழில்கள்சூழ்ந்தசீகாழிப்பதியைத்தம்மனத்தேதியானித்து, மலர் தூவித்தொழுதலே சிறந்த தொண்டாகும்.

குறிப்புரை: இது சமண் முதலியோர் அலர் தூற்ற அடியார் மலர் தூவுதல் தொண்டு என்கின்றது. அலர்தூற்ற - பழிசொல்ல. உமையோடு உடன் அன்பாய் அமர்ந்தான் - அம்மையொடு ஒருசேர ஆசனத்துஅன்பாய் அமர்ந்தான் என்க. காழிசுமந்தார் - காழியைச் தம் மனத்துத்தியானித்தவர்கள்.

The Samanars and Buddhists backbite about Lord Civan and His followers without minding slander. Lord Civan dwells in Seekazhi with His consort Umaa Devi with all love and affection. This city Seekaazhi is encircled by forests full of fragrance. To contemplate on the city and adore Lord Civan therein with flowers will be considered as the true spiritual service.

Note: 'Sumanthaar' means bearers. They are the bearers who bear the Lord in their consciousness.

நலமாகியஞானசம்பந்தன்
கலமார்கடல்சூழ்தருகாழி
நிலையாக நினைந்தவர்பாடல்
வலரானவர்வான டைவாரே.11

நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ்தருகாழி
நிலைஆகநினைந்தவர் பாடல் 
வலர்ஆனவர் வான் அடைவாரே.

பொருள்: சீகாழிப்பதி,நன்மையைமக்கட்குநல்கும். அந்த நகர் மரக்கலங்களை உடைய கடலால்சூழப் பெற்றது. அந்தச்சீகாழிப்பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தருடையபாடல்களில்வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும்விண்ணகஇன்பங்களைஅடைவர்.

குறிப்புரை: காழியைத் தமது நிலைத்த இடமாக நினைந்தபெருமானதுபாடலில்வல்லவர்கள்வானடைவர் என முடிக்க.

Seekaazhi will yield all goodness to people. It is encircled by the sea where ships move. Those who contemplate on this city with firmness in their minds, sing the hymn of Gnaanasambandan and offer worship to Lord Civan therein will get the celestial Bliss.

Note: 'Nalamaakiya Gnaanasambandan': The very presence of the boy-saint ushers weal, welfare and well-being. His hymns indicate on reciters salvation.
திருச்சிற்றம்பலம்

34ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

35.திருவீழிமிழலை 
திருத்தலவரலாறு: 
நான்காம் பதிகம் பார்க்க. 
பதிக வரலாறு: 
பிள்ளையார் எழுந்தருளுவதைத் திருநாவுக்கரசு சுவாமிகளாலும்,அடியார்களாலும் அறிந்து கொண்ட திருவீழிமிழலைஅந்தணர்கள்,நிறைகுடம் முதலிய அட்டமங்கலங்களுடன் வரவேற்க, பிள்ளையார் முத்துச்சிவிகையினின்றும்கீழிறங்கிஅந்தணரும்,அடியாரும் புடைசூழ எழுந்தருளுகின்றார்கள். அப்போது “அரையார்விரிகோவண ஆடை” என்னும் ஒப்புரைக்கஇயலாத இப்பதிகத்தைஇசையுடன்ஒதிக்கொண்டேசிவஞானச்செந்தாமரையில்வீற்றிருக்கும்விடையேறும் பிரான் திருக்கோயிலை அடைந்து உச்சிமேற்கரங்குவித்துவணங்கினார்கள்.

THE HISTORY OF THE PLACE

See 4th Hymn.

திருச்சிற்றம்பலம்


35.திருவிழிமிழலை 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

அரையார்விரிகோவணவாடை
நரையார்விடையூர்திநயந்தான்
விரையார்பொழில்வீழிம்மிழலை| 
உரையாலுணர்வா ருயர்வாரே.1

அரை ஆர் விரி கோவணஆடை, 
நரை ஆர்விடைஊர்தி,நயந்தான், 
விரை ஆர்பொழில்,வீழிம்)மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

பொருள்: சிவபிரான்'இடையில் விரிந்த கோவணஆடையைகட்டியுள்ளார். அவர் வெண்மை நிறம் பொருந்திய விடையூர்தியை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளார். மணம்பொருந்திய பொழில்களால்சூழப்பட்டதாகியதிருவீழிமிழலையில் சிவபிரான் உறைகிறார். அந்தப் பதியின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவார்.

குறிப்புரை: வீழிமிழலையைத்தியானிப்பவர்கள்உயர்வர்என்கின்றது. கோவணஆடையையும்ஊர்தியையும்நயந்தான் என முடிக்க. நரை - வெண்மை. உரையால் - வேதாகமங்களில்சொல்லப்பட்டசொற்களால். விரிகோவணம் - படம் விரியும் பாம்பாகிய கோவணம், “அற்றம்மறைப்பதுமுன்பணியே' 'ஐந்தலையமாகணங்கொண்டுஅரையார்க்குமே'என்ற பகுதிகள் இதற்கு ஒப்பு.

Lord Civan likes much to wear the brood loincloth known as Kōvanam. He also loves to have the white coloured bull as His carrier. He abides in Thiru-Veezhi-mizhalai which is surrounded by fragrant lush forests. Those who conceive and contemplate on Thiru-Veezhi-mizhalai as explained in the scriptures such as Vedas and Aagamaas will gain glory.

Note: Kovanam: Loincloth. The Lord's Kovanam is a snake. The Lord has no limbs like ours. His frame is the form of grace. Snake is symbolic of this Kundalini Yoga.

புனை தல்புரிபுன்சடைதன்மேல்
கனை தல்லொருகங்கைகரந்தான்
வினை யில்லவர்வீழிம்மிழலை
நினை வில்லவர்நெஞ்சமுநெஞ்சே.  

புனைதல் புரிபுன்சடை தன்மேல் 
கனைதல் ஒரு கங்கை கரந்தான், 
வினை இல்லவர்,வீழி(ம்)மிழலை
நினைவு இல்லவர்நெஞ்சமும்நெஞ்சே?

பொருள்:சிவபிரான்,மலரால்அலங்கரிக்கப்பட்டமுறுக்குகளை உடைய சிவந்த சடைமுடியை உடையவர். அந்த முடியின்மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கையாற்றைமறைத்து வைத்துள்ளார்.சிவபிரான்உறையும்திருவீழிமிழலை தீவினை இல்லாத மக்கள் வாழும்தலம் ஆகும். அந்தத் தலத்தைநினையாதவர்நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?

குறிப்புரை: வீழிமிழலையைநினையாதவர் நெஞ்சம் நெஞ்சாஎன்கின்றது. புனைதல் - முடித்தல். கனைதல் - ஒலித்தல். வினையில்லவர் - இயல்பாகவேவினையில்லாதவர். நெஞ்சத்தின் தொழில் நினையவேண்டியவற்றைநினைவதாயிருக்க,அது செய்யாமையின்நெஞ்சமும்நெஞ்சே என இகழ்ந்து கூறியவாறு.

Lord Civan conceals the uproarious and peerless river Ganges in His ruddy and curly matted hair. His braided hair is decorated with flowers. He abides in Thiru- Veezhi-mizhalai where people who are freed from evil karma are living.

அழவல்லவராடியும்பாடி
எழவல்லவரெந்தையடிமேல்
விழவல்லவர்வீழிம்மிழலை
தொழவல்லவர்நல்ல வர்தொண்டே.3

அழ வல்லவர் ஆடியும் பாடி 
எழ வல்லவர்,எந்தை அடிமேல்
விழ வல்லவர்,வீழி(ம்)மிழலை
தொழ வல்லவர்,நல்லவர்;தொண்டே!

பொருள்:திருவீழிமிழலைத்தலத்தில் அடியவர்கள் நிறைந்துள்ளனர். அவர்கள் அழவல்லவரும்,ஆடியும் பாடியும் எழவல்லவரும்,எந்தையாகிய இறைவன் திருவடி மேல் விழ வல்லவரும் ஆகிய அடியார்கள்ஆவர். அந்தத் தலத்தைத்தொழவல்லவரே நல்லவர்.அவர் தொண்டேநற்றொண்டாம். 
குறிப்புரை: இது அழுதும்,ஆடியும்,பாடியும்,விழுந்தும் தொழ வல்லவர் தொண்டில்நல்லராம்என்கின்றது. வல்லவர் என்பனநான்கும் அருமை விளக்கி நின்றன. அடிமேல் விழுதல் - தன்வசமற்றுஆனந்தமேலீட்டால் விழுதல்.

In Thiru-Veezhi-mizhalai devotees of Lord Civan are in large numbers, they melt in love, weep, dance, sing and prostrate at the Holy Feet' of Lord Civan who is my father and adore Him. Those who can offer worship like this are really good souls. Their service is genuine spiritual service to Lord Civan.

உரவம்புரிபுன்சடை தன்மேல் 
அரவம் மரையார்த்தவழகன்
விரவும்பொழில்வீழிம்மிழலை
பரவும் மடியாரடியாரே.| 4

உரவம்புரிபுன்சடை தன் மேல் 
அரவம்(ம்) அரை ஆர்த்த அழகன், 
விரவும்பொழில்,வீழி(ம்) மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!

பொருள்: அழகனாகிய சிவபிரான்,வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடிமீதுபாம்பைஅணிந்தும்,அதனை இடையில் கட்டியும் உள்ளார். அவர் திருவீழிமிழலையில்எழுந்தருளியுள்ளார். அத்தலம்பொழில்கள்விரவிச்சூழ்ந்துள்ளது. அதனைப்பரவித்துதிக்கும்அடியவரே அடியவர் ஆவார்.

குறிப்புரை: இது வீழிமிழலையைத்தொழும்அடியாரே அடியார் என அடியார் இயல்பை விளக்குகின்றது. உரவம் - வலிமை.

The handsome Lord Civan wears and binds a snake in His ruddy matted hair which exposes it's mightiness. He also wears and binds a snake in His waist. He is enshrined in Thiru-Veezhi-mizhalai which is surrounded here and there by lush gardens. Those devotees who can adore and worship the Lord in Thiru-Veezhi- mizhalai are the genuine servitors of Civan.

கரிதாகியநஞ்சணிகண்டன்
வரிதாகியவண்டறை கொன்றை 
விரிதார்பொழில்வீழிம்மிழலை
உரிதாநினைவா ருயர்வாரே.5

கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன், 
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை 
விரி தார் பொழில்,வீழி(ம்).மிழலை
உரிதாநினைவார்உயர்வாரே.

பொருள்: நீலகண்டனாகிய சிவபெருமான்,கரிதாகியநஞ்சினை உண்டு,அதனை அணியாகநிறுத்தித்திருவீழிமிழலையில்எழுந்தருளியுள்ளார். அங்கு,வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் நிறைந்த சோலைகள் உள்ளன. அந்த மரங்களில் விரிந்த மாலைகளைப்போலக்கொத்தாகக் கொன்றை மலர்கள் மலர்ந்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவீழிமிழலையைத்தமக்குரியதலமாகக்கருதுவோர் சிறந்த அடியவர் ஆவார்.

குறிப்புரை: இது இத்தலத்தை உரிமையோடு நினைவார் உயர்வார் என்கின்றது. வரிதாகிய வண்டு - வரிகளையுடையதாகிய வண்டு.'பொறிவரிவண்டினம்'என்பது காண்க. உரியதா என்பது உரிதாஎனத்தொகுத்தல் விகாரம் பெற்றது,உரித்து உரிது போலவும்,வரிதுவரிது போலவும் என்க.

Lord Civan also known as 'Neelakanntan' consumed the black cruel poison and held it as an ornament in His gullet. This town is surrounded by gardens where the blossomed Kondrai flowers hang from their trees looking like garlands. The stripped bees making noise, fly here and there in the garden in search of honey. Those who consider Thiru-Veezhi-mizhalai as their own suitable place for worship will be highly renowned as servitors of Lord Civan.

சடையார்பிறையான்சரிபூதப்
படையான்கொடிமேலதொர்பைங்கண்
விடையானுறைவீழிம்மிழலை
அடைவாரடியாரவர் தாமே.6

சடை ஆர்பிறையான்,சரி பூதப் - 
படையான்,கொடிமேலது ஓர் பைங்கண் 
விடையான்,உறை வீழி(ம்),மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

பொருள்: சிவபிரான்,சடைமிசைச்சூடியபிறைமதியை உடையவன். இயங்கும் பூதப்படைகளை உடையவன். கொடிமேல்பசிய கண்களை உடைய ஒற்றையேற்றைஉடையவன். இத்தகைய சிவபிரான் உறையும்திருவீழிமிழலையைஅடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர்.

குறிப்புரை: இது இத்தலத்தைஅடைவாரே அடியார் என்கின்றது. சரி - இயங்குகின்ற. பைங்கண் - பசியகண். பசுமை ஈண்டு இளமை குறித்து நின்றது.

Lord Civan wears the crescent moon on His matted hair. He is the Lord of active material Bhuta hosts. The insigne of His flag is the single large bull whose eyes are radiant. He abides in Thiru-Veezhi-mizhalai. Those who can reach this place will become renowned devotees of Lord Civan.

செறியார்கழலுஞ்சிலம்பார்க்க
நெறியார்குழலாளொடுநின்றான்
வெறியார்பொழில்வீழிம்மிழலை
அறிவாரவலம்மறியாரே. [

செறி ஆர்கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர்குழலாளொடு நின்றான், 
வெறி ஆர்பொழில்வீழி(ம்),மிழலை
அறிவார் அவலம் அறியாரே.

பொருள்: சிவபெருமானின்கால்களில் செறிந்த கழலும்சிலம்பும் ஆகிய அணிகள்ஆர்க்கின்றன. அம்மைசுருண்ட கூந்தலை உடையவர். அம்மையோடுநின்றருளும்சிவபிரான் திருவீழிமிழலைத்தலத்தில்எழுந்தருளியுள்ளார். பொழில்களால்சூழப்பெற்றது. அத்தலத்தைத்தியானிப்பவர் அவலம் அறியார். அத்தலம் மணம் கமழும்

குறிப்புரை: இது இத்தலத்தையறிவார்,துன்பர்அறியார்என்கின்றது. செறி - வளை. செறி ஆர்கழலும்சிலம்பு ஆர்க்கஎன்பதில்எண்ணும்மையைஏனையவிடத்தும்கூட்டுக. நெறியார் குழல் - சுருண்டகூந்தல். அறிவார் - தியானிப்பார்கள்.

Lord Civan wears anklets such as the vibrant Veera-k-kazhal and Silambu in His legs. He along with His consort Umaa Devi whose hair is twisted, abides in Thiru-Veezhi-mizhalai which is surrounded by gardens full of fragrance. Those who contemplate on Thiru-Veezhi-mizhalai know not what woe is.

Note: Veerakkazhal: It is a small bell attached to a cord that is festened below the right knee.

உளையாவலியொல்கவரக்கன்
வளையாவிரலூன்றியமைந்தன்
விளையார்வயல்வீழிம்மிழலை
அளையாவருவா ரடியாரே.8

உளையா வலி ஒல்க,அரக்கன், 
வளையா விரல் ஊன்றிய மைந்தன், 
விளை ஆர் வயல் வீழி(ம்) மிழலை
அளையா வருவார் அடியாரே.

பொருள்: இராவணன் மிக வருந்திக் கயிலை மலையைப்பெயர்த்தான். அவனுடைய வலிமை கெடுமாறு சிவபிரான் தன் காலை வளைத்து விரலால் ஊன்றினார். அவ்வாறு, வலிமை வாய்ந்தசிவபிரான்திருவீழிமிழலைத்தலத்தில்எழுந்தருளியுள்ளார். விளைவு மிகுந்த வயல்களை உடைய அத்தலத்தை நினைந்து வருபவர் சிறந்த அடியவர் ஆவார்.

குறிப்புரை: இத்தலத்தைநெருங்குவாரே அடியார் என்கின்றது. உளையா - வருந்தி. அளையா - அளைந்து;பொருந்தி. உளையா வலி - பண்டு வருந்தாவலிமையுமாம்.

Raavanan the king of Sri Lanka, with much labour, was trying to lift and move aside the mount Kailas, abode of Lord Civan. Lord Civan bent His foot and pressed the top of the mountain with His toe. Raavanan got crushed under the mountain and lost His mightiness. This valiant Lord Civan is enshrined in Thiru-Veezhi-mizhalai endowed with plenty of fertile fields which yield plenty. Those who contemplate always on Thiru-Veezhi-mizhalai will become highly renowned servitors.

Note: It is Civa-consciousness which is the theme of this verse.

மருள்செய்திருவர்மயலாக
அருள்செய்தவனாரழலாகி
வெருள்செய்தவன்வீழிம்மிழலை
தெருள்செய்தவர்தீ வினைதேய்வே.9

மருள்செய்து இருவர் மயல் ஆக 
அருள்செய்தவன்ஆர் அழல் ஆகி 
வெருள்செய்தவன்,வீழி(ம்). மிழலை
தெருள்செய்தவர் தீவினை தேய்வே.

பொருள்: திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடி காணாதுமயங்கினர். சிவபிரான் அரிய அழல் உருவாய்வெளிப்பட்டு நின்று வெருட்டினார். பின்பு, அவரே அவர்களுக்கு அருள் செய்தார். அப்பிரான்எழுந்தருளியதிருவீழிமிழலையைச்சிறந்த தலம் என்று தெளிந்தவர்களுடையதீவினைகள் தேய்தல் உறும்.

குறிப்புரை: இத்தலத்தைத்தெளிந்தவர்களது தீவினை தேயும்என்கின்றது. இருவர் மருள்செய்துமயலாக - மாலும்அயனும்அஞ்ஞானத்தால் மயங்க. வெருள் செய்தவன் - வெருட்டியவன். தெருள்செய்தவர் - தெளிந்தவர்கள்.

Both Thirumaal and Brahma were unable to see the Holy Feet and head of Lord Civan due to their spiritual ignorance and got perplexed. Lord Civan appeared before them as a rare soaring flame. On seeing this, they both stupefied but later recognised His greatness. Later Lord Civan graced them. This Lord Civan is enshrined in Thiru- Veezhi-mizhalai. Those who realize that this Thiru-Veezhi-mizhalai is the well- renowned spiritual place, will get their bad karma wiped out.

துளங்குந்நெறியாரவர்தொன்மை
வளங்கொள்ளன்மின்புல்லமண்டேரை
விளங்கும் பொழில்வீழிம்மிழலை
உளங்கொள்பவர்தம் வினையோய்வே.10

துளங்கும்நெறியார் அவர் தொன்மை 
வளம் கொள்ளன்மின்,புல் அமண்தேரை! 
விளங்கும் பொழில்வீழி(ம்).மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

பொருள்: தடுமாற்றம் உள்ள கொள்கைகளைமேற்கொண்டுள்ளஅற்பமானவராகியஅமணர்,தேரர்ஆகியோரின்சமயத்தொன்மைச்சிறப்பைக்கருதாதீர். விளங்கும் பொழில்கள்சூழ்ந்தருவீழிமிழலையைநினைப்பவர்களுடையவினைகள் ஓய்தல் உறும். 
குறிப்புரை: இத்தலத்தைத்தியானிப்பவர்களின் வினை ஓயும்என்கின்றது. துளங்கும்நெறியார் - அளவைக்கும்அநுபவத்திற்கும்நிலைபெறாது அசையும் சமய நெறியை உடையவர்கள். தேரை - தேரரைஎன்பதன் சிதைவு.

Samanars and Buddhists have inconsistency in their doctrine. They are very base and mean minded. Ye! Companion!! Do not give any consideration to the antiquity of their religious fame. Those who contemplate on the greatness of Thiru- Veezhi-mizhalai, surrounded by lush gardens will get their bad karma eliminated.

Note: All faiths differing from that of the Vedas, were founded on something intrinsically good. As years passed on, they stood forfeited of their intrinsic value.

Emerson said "In ancient Greece, every stoic was a stoic. What is the Christian in Chris tendam?"

When Saivism too begins to decline, Civa sends His servitors to set things straight.

நளிர்காழியுள்ஞானசம்பந்தன்
குளிரார்சடையானடிகூற
மிளிரார்பொழில்வீழிம்மிழலை
கிளரா்பாடல்வல்லார்க் கிலைகேடே.11

நளிர்காழியுள்ஞானசம்பந்தன்
குளிர் ஆர்சடையான் அடி கூற, 
மிளிர் ஆர்பொழில்,வீழி(ம்) மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை,கேடே.

பொருள்: குளிர்ந்த காழிப்பதியில்தோன்றியவர்ஞானசம்பந்தன். தண்மையானசடைமுடியை உடைய சிவபிரானுடையதிருவடிப்பெருமைகளைக்கூறத்தொடங்கினார். விளக்கமானபொழில்கள்சூழ்ந்ததிருவீழிமிழலைப் பெருமான் புகழ் கூறும் இப்பதிகப்பாடல்களை ஓதவல்லார்க்குக் கேடு இல்லை.

குறிப்புரை: இது இப்பாடலைவல்லார்க்குக் கேடு இல்லை எனப்பயன்கூறுகிறது. நளிர் - குளிர்.

Gnaanasambandan hails from cool Kaazhi town. He sang the glory of the Holy Feet of Lord Civan whose matted hair is moist and cool. Those who can sing with sincerity this hymn about the glory of Lord Civan in Thiru-Veezhi-mizhalai will have no adversity.

Note: Coolness is welcome to the east, as warmth to the west.
திருச்சிற்றம்பலம்

35ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

36.திருவையாறு 
திருத்தலவரலாறு: 
திருவையாறு என்ற திருத்தலமானதுசோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம்ஐயாறு, பஞ்சநதம்,பூலோகக் கயிலாயம் என வழங்கப் பெறும். ஐந்து தெய்வீக ஆறுகள் தம்முட்கலப்பதால்வந்த பெயர் என்று நூல்கள் கூறும். ஐந்து ஆறுகளாவன: சூரியபுஷ்கரிணி,சந்திரபுஷ்கரிணி, கங்கை,பாலாறு,நந்திவாய்நுரை என்னும் நந்தி தீர்த்தம் என்பன. கோயிலுக்குக்காவிரிக் கோட்டம் என்பது திருமுறைகளில் வழங்கும் பெயர். “காவிரிக்கோட்டத்துஐயாறுடையஅடிகளோ” என்பது அதற்குப் பிரமாணம். இதற்குக்காவிரிக்கரைக்கண்ணதாகியஐயாறுஎனப் பொருள் காண்பாரும்உளர்,சுவாமி அம்மன் சந்நிதிகள்கிழக்குப்பார்த்தவை. சோமாஸ் கந்தர் கோயில் தனியாக இருக்கின்றது. ஐபேசம் என்னும் முக்தி மண்டபம்,நூற்றுக்கால் மண்டபம்,உற்சவ மண்டபம் முதலிய சிறந்த மண்டபங்கள் உள்ளன. ஆலயம் தருமைஆதீனஅருளாட்சிக்கு உட்பட்டது.
இறைவன் பெயர் ஐயாறப்பர்,செம்பொற்சோதீசுவரர் என்பது திருமுறைகளில் வழங்கும் பெயர். இன்றும் ஐயாறுடைய அடிகள்,ஐயாற்றின் பெருமான் எனவும் அவை வழங்குகின்றன. புராணத்தில்கைலாயநாதர்,ஜபேசர்,பிரணதார்த்திஹரர் எனவும் வழங்கப்பெறுவர். இறைவி பெயர் அறம் வளர்த்த நாயகி. திரிபுர சுந்தரி,தருமாம்பிகை,தரும சம்வர்த்தினி என வழங்கும்.வல்லபை விநாயகர்,ஓலமிட்ட விநாயகர்,ஆதி விநாயகர் முதலான விநாயகவடிவங்களும், வில்வேள் நாயனார் என்ற வில்லேந்தியசுப்பிரமணியர்வடிவமும் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தித் திருவுருவம் தனிச்சிறப்புடையது. திருவடியில்ஆமையைமிதித்திருப்பதுஅறிந்து இன்புறுதற்குரியது. இவருக்கு அரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்பது பெயர். ஆட்கொண்டார் சந்நிதி மிக விஷேசமானது. எப்போதும் குங்குலியப்புகைகமழ்ந்து கொண்டே இருக்கும். 
தீர்த்தங்கள் காவிரி,சந்திரபுஷ்கரிணி,சூரியபுஷ்கரிணி,தேனாயிர்த தீர்த்தம்,நந்தி தீர்த்தம் முதலியன. தலவிருட்சம் வில்வம். 
ஐயாறப்பர் ஆதி சைவர் வேடந்தாங்கித் தன்னையே பூசித்துக்கொண்டார். இதனைத்திருவாசகம் “ஐயாறதனிற்சைவனாகியும்” எனக்குறிப்பிடுகிறது. இதனை ஆத்மபூசைஎன்பர். திருநந்திதேவர்சிலாதமுனிவர்க்குமகனாகஅவதரித்த தலம். அகத்தியர் பூசித்துக் கயிலை காட்சி பெற்ற தலம். சுசரிதன் என்னும் அந்தணச் சிறுவன் இறுதியெய்தாத வண்ணம் இறைவன் ஆட்கொண்டார் திருமேனி தாங்கிக்காத்தனர். முதன்முதல் பிரியவிருதன் திருப்பணி செய்தான். அடுத்துக் கரிகாலன் திருப்பணி செய்தான். அடுத்து வேங்கி நாட்டு விமலாதித்தன்இதனைப்புதுப்பித்தான். முதல் இராஜராஜன்மனைவி உத்தரகயிலாயத்தைப் புதுப்பித்து ஓலோகமாதேவீச்சரம்எனத் தன் பெயரை இட்டாள். 
சித்திரையில் திருவிழா நடைபெறுகிறது. அதில்5ஆம் திருநாள் ஆத்மபூஜை. சித்திரைப்பூரணிமையில்சப்தஸ்தானத் திருவிழா நடக்கும். நந்தியும்,அவர் மனைவியானசுயம்பிரகாசஅம்மையாரும்எழுந்தருளுவர். 
திருநாவுக்கரசு சுவாமிகள்கயிலைநாதனைக் காணவேண்டும் என்ற விருப்பால்,கயிலை நோக்கிச் செல்கிறார். இறைவர் அவர் முன் ஓர் அந்தணராகத் தோன்றி ஒரு பொய்கையை' உண்டாக்கி,அதிலே மூழ்கி திருவையாற்றில் எழுந்து நம் கயிலைக்காட்சியைக்காண்பாயாகஎன்று கூறி மறைந்தருளினார். திருநாவுக்கரசரும் அவ்வாறு இமயத்தில் உள்ள பொய்கையில்மூழ்கி,திருவையாற்றில் உள்ள குளத்தில் எழுந்தார். மலர்மாரிபொழிந்தன (முழு விபரம் 88-ஆவது தலத்தில் பார்க்கவும், 
கல்வெட்டு: 
இக்கோயில் முதன்முதல் பல்லவகாலப்படைப்பாக இருக்கலாம் என்பது துவாரபாலகர், கொடுங்கை,தூண் இவற்றைக் கொண்டு துணிகின்றனர். மூன்றாம் பிராகாரத்துக்கீழ்க்கோபுரம்விக்ரமசோழன் திருப்பணி. கி.பி.1381இல் செந்தலைக்கருப்பூர்கச்சிவீரப் பெருமாள் மகனால்கோயில் திருமதில் மண்டபம் சீர்திருத்தப்பெற்றன. மேலக் கோபுரம்,முதல் பிராகாரத்துத்திருமாளிகைப்பத்தி,மூன்றாம் பிராகாரத்துக்குத்தெற்குக் கோபுரம்,இடைமருதூர்ஆனையப்பப்பிள்ளையாலும்,அவர் தம்பி வைத்யநாத அண்ணன் என்பவராலும்எடுப்பிக்கப்பெற்றன. காவிரி பூசப்படித் துறை கட்டியவர்களும்இவர்களே. படித்துறைக்கு அவர்கள் வைத்த பெயர் கல்யாணசிந்து என்பதாம். 
அம்மை பெயர் திருக்காமக்கோட்டத்துஆளுடையநாச்சியார்,உலகுடையநாச்சியார்என்பன. இத்தலம் முதல் இராஜராஜன்காலத்துஇராஜேந்திரசிங்கவளநாட்டுப் பொய்கை நாட்டுத்திருவையாறு எனவும்,மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் புவனமுழுதுடையான்வளநாட்டுப்பொய்கை நாட்டைச் சேர்ந்ததாகவும்,சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துஇராஜராஜவளநாட்டுப் பொய்கை நாட்டைச் சேர்ந்ததாகவும்குறிக்கப்பெறுகின்றது. இது இன்ன கூற்றத்தைச்சார்ந்ததுஎனக்குறிக்கப்பெறாமையின்தனியூராக இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒலோகமாதேவீச்சுரம்: இது உத்தர கைலாசம் எனவும் வழங்கும். இதனைக்கட்டியவர்முதலாம் இராஜராஜனதுமனைவியாராகிய தந்தி-சத்தி-விடங்கியாரானஒலோகமாதேவியார். ஆதலால் இக்கோயில் கி.பி.1006இல் கட்டப்பெற்றிருக்கலாம். இங்குள்ள சோமாஸ்கந்தர்க்குஒலோக வீதி விடங்கர்எனப் பெயர். இதில் சித்திரைப் பெருவிழா,சதய விழா கொண்டாடப்பெற்றன. 
தென் கயிலாயம்: இதனைத்திருப்பணிச் செய்தவர் முதலாம் இராஜேந்திரன்மனைவியானபஞ்சவன்மாதேவியார். இறைவன் பெயர் பஞ்சநதிவாணன். இறைவி அஞ்சலை. முதலாம் பராந்தகன் விளக்குப்பல இட்டு வரவும் பொன்,வெள்ளி விளக்குகள்வைக்கவும், நிவந்தங்கள் அளித்தான். முதலாம் இராஜராஜன்,முதலாம் இராஜேந்திரன்,முதலாம் இராஜாதிராஜன்,பரகேசரிஇராஜேந்திரன்ஆகியோரதுதருமங்களும் பல உள்ளன. 
பதிக வரலாறு: 
திருப்பூந்துருத்தியைவணங்கிப் பதிகம் பாடி,அப்பர் சுவாமிகளிடம்விடைபெற்றுக்கொண்டு,காவிரியாற்றைக் கடந்து,திருநெய்த்தானத்துநெய்யாடியபெருமானைப் போற்றி, திருவையாற்றை அடைந்த பிள்ளையார் “கலையார் மதி: என்னும் இப்பதிகத்தைஅருளினார்கள்.

36. THIRU-VAI-YAARU

THE HISTORY OF THE PLACE

The sacred place Thiru-vai-yaaru is to the north of river Cauvery in Chola Naadu. It is connected by buses from Thanjchaavoor and Kumbakonam. This place is known by the names Iyaaru, Panjchanadham and Booloka Kayilaayam. The name comes from the belief that five sacred rivers join together in confluence here: Sooriya Pushkarani, Chandhira Pushkarini, Gangai, Paalaaru, and Nandhivaainurai alias Nandhi Theerththam.

The temple is known as Kaavirikkottam in the Saivite canon, as evidenced by the expression, “Kaavirikkottaththu Iyaarudaiya adikalo". Some hold that this simply means Iyaaru on the bank of river Cauvery. The shrines for the God and Goddess face east. There is a separate shrine for Somaaskandhar. There are also exclusive mandapams (pavilions) such as Japesam or Mukthi Mandapam, the Hundred-pillared Mandapam, Festival Mandapam etc. The temple is under the spiritual administration of Dharumai Aadheenam.

          The Lord's name is Iyaarappar. In canonical literature He is known as Semporchotheesuvarar. To this day names such as Iyaarudaiya Adigal and Iyaarrin Perumaan are in usage. In the Puraanam the names, Kailaayanaathar, Japesar and Pranathaarthiharar are used. The Goddess is known by the names Aram Valartha Naayaki, Thiripurasundhari, Dharumaambikai and Dharuma Samvardhini. Vinayakar appears in different forms, Vallabai Vinaayakar, Olamitta Vinaayakar, and Aadhi Vinaayakar. The icon of Dakshinaamoorthi here is of special note, as He is depicted with foot resting on a tortoise and has the name Ariguru Sivayoga Dakshinaamoorthi. The shrine of Aatkondaar is of special importance. It is redolent of the incense of 'kungkiliyam' smoke. The sacred fords at this temple are the river Cauvery, Chandhira Pushkarini, Sooriya Pushkarini, Thenaamirtha Theerththam, Nandhi Theerththam etc. The sacred tree is 'Vilvam'.

          Lord Iyaarappar, in the guise of an Aadhisaiva is stated to have worshipped Himself here. This episide is noted in the Thiruvaachakam by expression, ‘Iyaarathanil saivan aagiyum'. This kind of worship is called Aathmapoojai. This sacred temple is also the place where Thiru Nandhi Thevar is incarnated as the son of Silaatha Munivar; Agaththiyar attained Kayilai by offering worship here; the Lord Himself saved Susarithan, an Andhanar boy, by preventing his death and protecting his body.

          The temple was continuously being renovated by many kings, the first being Piriyaviruthan, followed by Karikaalan, and Vimalaadhiththan of Vengi Naadu. A queen of Raajaraajan I renovated Uttara Kailaayam and named it after her own self as Olokamaadheveechcharam. The major festival falls in the month of Chiththirai. Athmapoojai takes place on the 5th day of this festival. On the full moon day of this month the Sapthasthaanam festival is celebrated. Nandhi and his consort Suyampirakaasa Ammai are taken in procession on this occasion.

Stone Inscriptions

            From the style of the Dhuvaarapaalakas, cornice (Kodungkai) and pillars, it is held that this temple may have originally been the creation of the Pallava dynasty. The eastern gopuram in the third ambulatory was the work of Vikkirama Cholan. A son of Kachchiveerap Perumaan of Sendhalaik Karuppoor had renovated the compound wall in 1381 CE. The west gopuram, the colonnade in the first ambulatory, and the south gopuram of the third ambulatory were caused to be built by one Aanaiyappa Pillai of Idaimarudhoor and his younger brother Vaidhyanaatha Annan. The same brothers also had the bathing ghat in the river Cauvery built up. They named this bathing ghat 'Kalyaana Sindhu'.

The Goddess is here known by the names of Thiruk Kaamakottaththu Aaludaiya Naachchiyaar and Ulagudaiya Naachchiyaar. This place was known as Thiruvaiyaaru in Poigai Naadu of Raajendhira Singa Valanaadu during the reign of Kuloththungkan III, and in Poigai Naadu of Raajaraaja Valanaadu during the reign of Sataavarman Sundhara Paandiyan. As the administrative subdivision of Kooram is not mentioned, this village might have been an autonomous entity. As Olokamaadheveechcharam or Uththarakailaasam was built by the queen of Raajaraajan I, it may be surmised that the temple was built in 1006 CE. The Somaskandhar here has the name of Oloka Veedhi Vidangkar. It is known that a major festival in Chiththirai and the Sadhayam festival were celebrated here.

The Thenkailaayam was renovated by another queen of Raajaraajan I, Panjchavan Maadheviyaar. The Lord's name is Panjchanadhivaanan and that of the Goddess is Anjchalai. Paraanthakan I made grants for installing many lamps and also for golden and silver lamps. Many charitable endowments were instituted also by Raajaraajan I, Raajendhiran I, Raajaadhiraajan I, and Parakesari Raajendhiran.

திருச்சிற்றம்பலம்

36.திருவையாறு 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

கலையார்மதியோடுரநீரும்
நிலையார்சடையாரிடமாகும்
மலையாரமுமாமணிசந்தோ
டலையார்புனல்சேருமையாறே.

கலை ஆர்மதியோடுஉரநீரும்
நிலை ஆர்சடையார் இடம் ஆகும் 
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

பொருள்: சிவபிரான்,ஒருகலைப்பிறைமதியோடு,வலிய கங்கைநீரும்நிலையாகப்பொருந்திய சடையை உடையவர். மலையில் இருந்து கொணர்ந்தமுத்துக்கள் சிறந்த மணிகள்,சந்தனம் ஆகியவற்றை அள்ளிவரும்அலைகளை உடைய காவிரியாறு பாயும் திருவையாறுசிவபிரானுடையஇடமாகும்.

குறிப்புரை: இப்பதிகப்பாடல்பத்தும் இறைவன் இடம் திருவையாறுஎன்கின்றது. பாடல்கள்தோறும்இறைவனது மதி,கொன்றை,கங்கை,வன்னி,கொக்கிறகு,தலைமாலை முதலிய அணிவகைகளும் அவர் வீரமும்அறிவிக்கப்பெறுகின்றன. உரநீர் - வலியநீர். மலையாரம் - மலையிற்பிறந்தமுத்துக்கள்.

Lord Civan gave protection to the first phase of the crescent moon on His matted hair. Also the mighty river Ganges occupies His hair. Lord Civan enshrines in Thiru- vai-yaaru where the river Cauvery flows carrying along with its waves, pearls of the hill, rare gems, sandalwood trees and leaves them along it's banks.

மதியொன்றியகொன்றைவடத்தன்
மதியொன்றவுதைத்தவர்வாழ்வு
மதியின்னொடுசேர்கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.2

மதி ஒன்றியகொன்றைவடத்தன், 
மதி ஒன்ற உதைத்தவர்வாழ்வும் - 
மதியி(ன்)னொடு சேர் கொடி மாடம் 
மதியம் பயில்கின்றஐயாறே.

பொருள்: சிவபிரான்,பிறைமதிபொருந்தியசடையில் கொன்றை மாலையை அணிந்தவன். தக்க யாகத்தில்வீரபத்திரரைஏவிச்சந்திரனைக் காலால் பொருந்த உதைத்தவன். மதியோடுசேரும் கொடிகளைக்கொண்டதும்,மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளைஉடையதுமானதிருவையாறு சிவபிரான் வாழும் இடமாகும். 
குறிப்புரை: நான்கடிகளிலும் உள்ள மதி என்ற சொல் சந்திரனையேகுறிப்பதாகும். வடம் - மாலை. மதி ஒன்ற உதைத்தது,தக்க யாகத்தில் தம் திருவடியால்தேய்த்தது.

Lord Civan decorates His matted hair with Kondrai flowers along with the crescent moon. Lord Civan commanded Veerabadran to teach Dakshan a lesson for his ill treatment of his daughter Dakshaayini. Veerabadrar went to the hall of sacrifice where Dakshan was celebrating the ritual, played havoc and kicked down and rubbed the moon. Lord Civan who commanded Veerabadran, is enshrined in Thiru-vai-yaaru where the crawling moon in the sky mingles with the flags that fly over the high mansions of this place and also rests therein.

Note: Veerabadran was created by Lord Civan from a bit of His matted hair.

கொக்கின்னிறகின்னொடுவன்னி
புக்கசடையார்க் கிட மாகும்
திக்கின்விசைதேவர்வணங்கும்
அக்கின்னரையாரதையாறே.

கொக்கின்(ன்) இறகி(ன்)னொடுவன்னி
புக்கசடையார்க்கு இடம் ஆகும் - 
திக்கின்(ன்) இசை தேவர் வணங்கும்
அக்கின்(ன்) அரையாரதுஐயாறே.

பொருள்: சிவபிரான்,எட்டுத்திசைகளிலும் வாழும் தேவர்களால்வணங்கப் பெறுபவர். அவர் சங்கு மணிகள்கட்டியஇடையினை உடையவர். கொக்கிறகு என்னும் மலரோடு,வன்னிப்பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடைய அப்பெருமானுக்கு உரிய இடம் திருவையாறு ஆகும்.

குறிப்புரை: கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ;கொக்கினதுஇறகுமாம். வன்னி - வன்னியிலை. திக்கின் இசை தேவர் - எட்டுத்திக்கிலும்பொருந்தியிருக்கின்றதேவர்கள். அக்கு - சங்குமணி.

Lord Civan decorates His matted hair with a flower called Kokkirakam along with the green leaves of Vanni tree. He is enshrined in Thiru-vai- yaaru and is adored and worshipped by the Devas occupying the eight directions. He wears on His waist the garland made of chanks.

Note: An Asura, in the form of a stork, was done away with by Civa. Civa wears a feather of that stork in His head. Kokkiraku also denotes a flower called Kokku- manthaarai. Civa is also described as a wearer of this flower.  The word 'akku' means (1) Rudrakasha bead, (2) a ring of chank and (3) bare.

சிறைகொண்டபுரம்மவைசிந்தக்
கறைகொண்டவர்காதல்செய்கோயில்
மறைகொண்டநல்வானவர்தம்மில்
அறையும் மொலிசேருமையாறே.

சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல்செய் கோயில் - 
மறை கொண்ட நல் வானவர் தம்மில் 
அறையும்(ம்) ஒலி சேரும் ஐயாறே.

பொருள்:சிறகுகளோடு கூடிய முப்புரங்களும்அழியச்சினந்தவராகிய சிவபிரான் விரும்பும்கோயில் இருவையாறு ஆகும். அங்கு மக்களுடையகண்களுக்குப்புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள்தங்களுக்குள்பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள இடமாக அத்தலம் இருக்கிறது.

குறிப்புரை: சிறைகொண்டபுரம் - சிறகோடு கூடிய முப்புரங்கள். கறைகொண்டவர் - கோபித்தவர்மறைகொண்ட நல் வானவர் - மக்கள் கண்ணுக்கு மறைந்துவதியும்தேவர்கள். தம்மில் அறையும் ஒலி - தமக்குள்பேசிக்கொள்ளும் ஒலி.

Lord Civan got wild and destroyed the three winged citadels of the Asuras. He desires to be enshrined in Thiru-vai-yaaru. The Devas who are invisible to men on earth discuss among themselves and this noise fills the air in the temple at Thiru-vai- yaaru.

Note: Thiru-vai-yaaru is dear to the gods who frequently visit it, remain invisible.

உமையாளொருபாகமதாகச்
சமைவாரவர்சார்விடமாகும்
அமையாருடல்சோர்தரமுத்தம்
அமையாவருமந்தணையாறே.

உமையாள் ஒருபாகம்அதுஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் - 
அமையார் உடல் சோர்தர முத்தம் 
அமையா வரும் அம்தணைஐயாறே.

பொருள்: உமையம்மையை ஒரு பாகத்தேவிளங்கப்பொருந்தியவரான சிவபெருமான் சாரும் இடம் திருவையாறு என்ற தலமாகும். அது மலையிடையே உள்ள மூங்கில்கள்முத்துக்களைச் சொரிய,அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த தலமாகும்

குறிப்புரை: சமைவார் - பொருந்தியவர். அமையார் உடல் சோர்தர - மூங்கிலினது உடல் வெடிக்க அமையா -- பொருந்தி.

Goddess Umaa Devi shines from on the left portion of Lord Civan, who desires to be enshrined in Thiru-vai-yaaru wherein flows the cool Cauvery river carrying with it pearls dropped by the bamboo trees of the mountain, and then leaves them on the banks in Thiru-vai-yaaru during its course.

Note: A special type of bamboo, it is said, produces pearls.

தலையின்றொடைமாலையணிந்து
கலைகொண்டதொர்கையினர்சேர்வாம்
நிலைகொண்டமனத்தவர்நித்தம்
மலர்கொண்டுவணங் குமையாறே.6

தலையின் தொடை-மாலை அணிந்து 
கலை கொண்டது ஓர் கையினர்சேர்வுஆம்- 
நிலை கொண்ட மனத்தவர் நித்தம் 
மலர் கொண்டு வணங்கும்ஐயாறே.

பொருள்: தலையோட்டினால்தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து,மானைக்கையிலே கொண்டவராகியசிவபிரானுடைய இடம் திருவையாறு என்ற தலமாகும். அது, இறைவனுடையதிருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர்கள் நாள்தோறும் மலர்கொண்டு,தூவி,வழிபாடு செய்யும் திருத்தலமாகும்.

குறிப்புரை: கலை - மான். நிலைகொண்டமனத்தவர் என்றது. இறைவனதுதிருவடியின் கண் நிலைத்த மனமுடையஅடியார்களை.

Lord Civan wears a garland made out of skulls and holds a deer in His left hand. He loves to be enshrined in Thiru-vai-yaaru where men with steadfast mind on the Holy Feet of Civan, adore Him daily with flowers.

வரமொன்றியமாமலரோன்றன்
சிரமொன்றையறுத்தவர்சேர்வாம்
வரைநின்றிழிவார்தருபொன்னி
அரவங் கொடுசேருமையாறே.7

வரம் ஒன்றிய மா மலரோன்தன்
சிரம் ஒன்றை அறுத்தவர்சேர்வுஆம் - 
வரை நின்று இழிவார்தரு பொன்னி 
அரவம்கொடு சேரும் ஐயாறே. -

பொருள்: வரங்கள் பல பெற்றுத் தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்தசிவபிரானுக்குரிய இடம் திருவையாறு என்ற. தலமாகும். அது, மலையினின்றுபொங்கிப்பெருகிவரும்காவிரியாறுஓசையோடு ஆரவாரித்து வரும் திருத்தலம் ஆகும்.

குறிப்புரை: வரம் ஒன்றிய - வரம் பெற்ற. மேன்மை பொருந்திய என்றுமாம். சேர்வு - இடம். வரை நின்று இழிவார்தரு பொன்னி எனப்பிரிக்க. வார்தரு - ஒழுகுகின்ற. அரவம் - ஒலி. பொன்னி - காவிரி.

Lord Civan sliced away one of the heads of Brahma who had obtained several boons and seated on a Lotus flower. Thiru-vai-yaaru is the place where Lord Civan is enshrined, and where the river Ponni (another name of Cauvery) after descending from the mountain flows uproariously.

வரையொன்றதெடுத்தவரக்கன்
சிரமங்கநெரித்தவர்சேர்வாம்
விரையின்மலர்மேதகுபொன்னித்
திரைதன் னொடுசேருமையாறே.8

வரை ஒன்று அது எடுத்த அரக்கன் 
சிரம் மங்கநெரித்தவர்சேர்வுஆம் - 
விரையின் மலர் மேதகுபொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

பொருள்: கயிலை மலையைப்பெயர்த்தஇராவணனுடையசிரங்களும்,பிற உறுப்புகளும்சிதறுமாறுநெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவையாறு என்ற தலமாகும். அது மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு,புண்ணிய ஆறாகிய காவிரி அலைகளோடுகூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருத்தலம் ஆகும்.

குறிப்புரை: விரை - மணம். சிரம் அங்கம் - தலையும் பிற அங்கங்களும்.

Raavanan tried to lift and put aside mount Kailas, the abode of Lord Civan. Lord Civan pressed down the mountain and crushed Raavana's head and other parts of his body. The sacred Cauvery river carrying fragrant flowers flows with its waves through Thiru-vai-yaaru, and makes it fertile. In such a fertile town of Thiru-vai-yaaru, Lord Civan loves to be entempled.

சங்கக்கயனுமறியாமைப்
பொங்குஞ்சுடரானவர்கோயில்
கொங்கிற்பொலியும்புனல்கொண்டு
அங்கிக்கெதிர்காட் டுமையாறே.9

சங்கக்கயனும்(ம்) அறியாமைப்
பொங்கும்சுடர்ஆனவர் கோயில் - 
கொங்கில்பொலியும் புனல் கொண்டு 
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

பொருள்: சங்கத்தைக்கையின்கண் கொண்ட திருமாலும்,அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத்தோன்றிய சிவபிரான் கோயில் கொண்ட இடம் திருவையாறு ஆகும். அது,காவிரி மகரந்தம்,தேன் ஆகிய பொலியும்நீரைக் கொண்டு வந்து,அழல் வடிவான இறைவன் திருமுன்அர்க்கியமாகக் காட்டும் திருத்தலம் ஆகும். 
குறிப்புறை: சங்கக்கயன் - சங்கத்தைக்கையிலேயுடைய திருமால். கொங்கு - தேன். அங்கிக்குஎதிர்காட்டும் - காலையில் அக்கினி காரியம் செய்வோர்அர்க்கியம்சமர்ப்பிக்கும்.

Thirumaal who holds the Paancha Sanyam in his left hand, could not conceive of Lord Civan who soared as a tall column of fire. This Lord Civan is enshrined at the temple in Thiru-vai-yaaru, where the waters of the Cauvery river get mixed up with the pollen grain and honey. This water flows past Lord Civan who was then a tall column of fire, as 'Arkkiyam' (sacred water offered to gods).

Note: Arghya: Water offered to gods or guests.

துவராடையர்தோலுடையார்கள்
கவர்வாய்மொழிகாதல் செய்யாதே 
தவராசர்கள்தாமரையானோ
டவர்தாமணையந் தணையாறே.10

துவர்ஆடையர்,தோல்உடையார்கள், 
கவர் வாய்மொழி காதல் செய்யாதே, 
தவராசர்கள்தாமரையானோடு
அவர்தாம் அணை அம்தண்ஐயாறே.

பொருள்: துவராடை தரித்த பெளத்தர்கள்,ஆடையின்றித்தோலைக்காட்டும்சமணர்கள் . ஆகியவர்களின் மாறுபட்ட வாய்மொழிகளை கேட்காமல்,தவத்தால்மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்கள் வந்து அணைந்து வழிபடும்தலமாகியதிருவையாறு சென்று வழிபடுமின்.|

குறிப்புரை: கவர்வு - கபடம். தவராசர்கள் - தவத்தான் மிக்க முனிவர்கள். தாமரையான் என்றது பிரமனை.

Ye companions! Go to Thiru-vai-yaaru and worship the Lord Civan therein, by discarding the deceitful words of the nude Samanars and the ochre-robed Buddhists, as is being done by the Holy men famed by sacrifice, Brahma and other devas.

Note: Clad in their skin (only); Samanars go about naked. Samana sannyasins are digambaras and lay-samanas are svetambaras (clad in white cloth).

கலையார்கலிக்காழியர்மன்னன்
நலமார்தருஞானசம்பந்தன்
அலையார்புனல்சூழுமையாற்றைச்
சொலுமாலைவல்லார் துயர்வீடே.11

கலை ஆர்கலிக்காழியர் மன்னன் - 
நலம் ஆர்தருஞானசம்பந்தன் - 
அலை ஆர் புனல் சூழும்ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

பொருன்: கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப்பதியில்உள்ளவர்களுக்குத்தலைவனாக நன்மை அமைந்த ஞானசம்பந்தன் விளங்குகிறார். அவர்,அலைகளை உடைய காவிரியில்சூழப்பட்டதிருவையாற்றைப்போற்றிப்பாடியஇத்தமிழ்ப்பாடல்கள், பாடுவோரின் துயர் நீங்கும்.

குறிப்புரை: இது ஐயாற்றைப் பற்றிய இம்மாலையைச் சொல்ல வல்லார்துன்பத்தினின்றுவீடுபெறுவர்
என்கின்றது. கலை - கலை ஞானங்கள். கலி - ஒலி.

The good natured Gnaanasambandan is the chief of scholars and artists who abide in Seekaazhi making busting noise due to their chanting of the Vedas. He sang this hymn adoring Thiru-vai-yaaru which stands on the banks of the billowing Cauvery river, and Lord Civan entempled therein. Those who can sing this hymn will get rid of their distress.

திருச்சிற்றம்பலம்

36.ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

37.திருப்பனையூர் 
திருத்தலவரலாறு: 
திருப்பனையூர் என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத். தலம் ஆகும். பேரளம் - திருவாரூர் பேருந்து வழியில் சன்னாநல்லூரைஅடுத்துள்ளது. இங்கு சுந்தரமூர்த்திசுவாமிகளுக்கு இறைவன் நடன தரிசனம் காட்டி அருளினார். பராசரமுனிவர்பூசித்துப் பேறு பெற்றார். கரிகால்வளவன் இங்கு வளர்ந்தான் என்றும்,அவனுக்கு விநாயகர் துணை இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இறைவன் பெயர் செளந்தரநாதர்;இறைவி பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் அமுதபுஷ்கரிணி. இது மகாலட்சுமி தீர்த்தம் எனவும் வழங்கும். விநாயகர் துணையிருந்தபிள்ளையார். தலவிருட்சம் பனைமரம். நன்னிலம் இரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கேதரை மார்க்கமாக ஒரு கி.மீ'தொலைவில் இருக்கிறது. 
பதிக வரலாறு: 
திருவாரூரை வணங்கி வருகின்றதிருஞானசம்பந்தப் பெருமான்,யானையை உரித்துப் போர்த்த பெருமான் எழுந்தருளியதிருப்பனையூரை வணங்கி, “அரவச்சடை'என்னும் வேதப்பொருள் நிறைந்த இசைப்பதிகமாகிய இதனை அருளிச் செய்தார்கள்.

37. THIRU-P-PANAIOOR

THE HISTORY OF THE PLACE

           The sacred city of Thiru-p-panaioor is to the south of river Cauvery in Chola Naadu. It is next to Sanaaanalloor on the Peralam - Thiruvaaroor bus route. It is located southeast of Nannilam railway station, 1 km along the riverbank. The Lord's name here is Soundharanaathar and the Goddess is known as Periyanaayaki. The sacred ford is Amudhapushkarini, also known as Mahaalakshmi Theerththam. Vinaayakar is known as Thunaiyirundha Pillaiyaar. The sacred tree of this shrine is the Palm.

Saint Sundharamoorthi Svaami had the vision of the Lord's dance here. Sage Paraasarar offered worship here to attain salvation. According to legends, Karikaal Valavan grew up here and offered worship to Lord Vinaayakar who bestowed His grace on him by helping him.

திருச்சிற்றம்பலம் 
37.திருப்பனைவூர் 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

அரவச்சடைமேன்மதிமத்தம்
விரவிப்பொலிகின்றவனூராம்
நிரவிப்பலதொண்டர்கள்நாளும்
பரவிப்பொலியும்பனையூரே.

அரவச்சடைமேல் மதி,மத்தம், 
விரவிப்பொலிகின்றவன்ஊர்ஆம் - 
நிரவிப்பலதொண்டர்கள் நாளும் 
பரவிப்பொலியும்பனையூரே.

பொருள்: சிவபிரான்,சடைமுடிமேல் அரவம் மதி ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறுஅணிந்துள்ளார். தொண்டர்கள் பலரும் நாள்தோறும் கலந்து வணங்க மகிழ்வுறும்திருப்பனையூரேசிவபிரானதுதலமாகும்.

குறிப்புரை: இது,சடைமேல்மதியும்ஊமத்தமும் கலந்து விளங்குகின்றஇறைவனூர்பனையூர்என்கின்றது. மத்தம் - ஊமத்தம். நிரவி - கலந்து. பரவி - வணங்கி.

Lord Civan nicely wears on His matted hair snake, a crescent moon, and datura flower, which are bright and stand close to each other. He is enshrined in Thiru-p-panaioor where all His servitors gather daily together and offer worship and glow in the bliss of grace.

Note: The town of palm-trees.

எண்ணொன்றிநினைந்தவர்தம்பால்
உண்ணின்றுமகிழ்ந்தவனூராம்
கண்ணின் றெழுசோலையில்வண்டு
பண்ணின்றொலிசெய் பனையூரே.2

எண் ஒன்றி நினைந்தவர்தம்பால்
உள்-நின்று மகிழ்ந்தவன்ஊர்ஆம் - 
கள்-நின்று எழு சோலையில் வண்டு 
பண் நின்று ஒலிசெய்பனையூரே.

பொருள்: சிவபிரான்,மனம் ஒன்றி நினைந்தஅடியார்களின்உள்ளத்தே இருந்து,அவர்தம்வழிபாட்டை ஏற்று மகழ்கின்றான். தேன்பொருந்தியமலர்களோடுஉயர்ந்துள்ளசோலைகளில் வண்டுகள் பண்ஒன்றிய ஒலி செய்யும் திருப்பனையூரேஅந்தச்சிவபிரானுடையதலமாகும்.

குறிப்புரை: மனம் ஒன்றி நினைக்கும்அடியார்களிடத்துஉள்நின்றுமகிழும்இறைவனூர்பனையூர்என்கின்றது. எண் - எண்ணம். ஒன்றி - விஷய சுகங்களில் சென்று பற்றாது திருவடியிலேயே பொருந்தி. மகிழ்ந்தவன் - தான்மகிழ,தன்னைச் சார்ந்த ஆன்மாவும்மகிழுமாதலின்மகிழ்வித்தவன்என்னாதுமகிழ்ந்தவன் என்றார். மகிழ்தற்குரியசுதந்திரமும்ஆன்மாவுக்கு இல்லை என்றபடி. கள் நின்று - தேன் பொருந்தி.

Lord Civan indwells in the hearts of those devotees who contemplate on Him with single-minded devotion. He happily accepts and admires their adoration. Fie is enshrined in Thiru-p-panaioor where honeybees hum tunefully according to the relevant Pann, and fly around from one honeyed flower to another. These flowers blossom in the tall gardens that are found everywhere in the town.

அலரும்மெறிசெஞ்சடைதன்மேல்
மலரும்பிறையொன்றுடையானூர்
சிலரென்றுமிருந்தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.

அலரும் எறி செஞ்சடைதன்மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் - 
சிலர் என்றும் இருந்து அடி பேணப், 
பலரும் பரவும் பனையூரே.

பொருள்: சிவபிரான்,எரிபோல விளங்கும் சிவந்த சடைமுடிமீது வளரும் பிறை ஒன்றை உடையவன். அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப்பரவிப் பூசனை செய்து போற்றவும்,பலர் பலகாலும் வந்து வணங்க,விளங்கும் திருப்பனையூரே அந்தப் பெருமானின்திருத்தலம் ஆகும்.

குறிப்புரை: பிறையணிந்தபெருமானூர்பனையூர்என்கின்றது. எறி - அர்ச்சிக்கப்படுகின்ற. மலரும்பிறை - வளரும் பிறை. சிலர் - அணுக்கத்தொண்டர்களாகியஅடியார்கள். பலர் - வழிபடும்அடியார்கள்.

Lord Civan wears on His ruddy matted hair that blazes like fire, the waxing crescent moon. Some of His servitors who render service as personal attendants to Lord Civan stay in Thiru-p-panaioor and carry out the rituals daily. Many other devotees do come and offer worship at all times in this place. In such Thiru-p-panaioor Lord Civan is entempled.

Note: Some servitors: These are 'anukkatthondar'. They are permanently attached to the temple service.

இடியார்கடனஞ்சமுதுண்டு
பொடியாடியமேனியினானூர்
அடியார் தொழமன்னவரேத்தப்
படியார்பணியும் பனையூரே.4

இடிஆர் கடல் நஞ்சு அமுதுஉண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர் - 
அடியார் தொழ மன்னவர்ஏத்த, 
படியார்பணியும்பனையூரே.

பொருள்: சிவபிரான்,கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத்தோன்றியநஞ்சைஅமுதாக உண்டார். அவர்,தமது மேனிமீதுதிருநீற்றுப்பொடியைநிரம்பப்பூசியுள்ளார். அடியவர்கள் தொழ,மன்னவர்கள்ஏத்த உலகில் வாழும் பிறமக்கள்பணியும்திருப்பனையூர்,அந்தப் பெருமானதுஊராகும்.

குறிப்புரை: இது,நீறுபூசியஇறைவனூர்பனையூர்என்கின்றது. இடியார் கடல் - கரைகளைமோதுகின்றகடல். பொடி - விபூதி. படியார் - பூமியில் உள்ள பிறமக்கள்.

Lord Civan lavishly smears on His body with holy ashes. He swallowed the poison, (as though it was nectar) that came out of the sea from where the waves dash against the shores. Thiru-p-panaioor is verily His town where His devotees offer worship, the kings adore, and other people in the world pay obeisance to Him.

Note: Civa is alike hailed by the ruler and the ruled.

அறையார்கழன்மேலரவாட
இறையார்பலிதேர்ந்தவனூராம்
பொறையார்மிகுசீர்விழமல்கப்
பறையாரொலிசெய் பனையூரே.5

அறை ஆர் கழல் மேல் அரவு ஆட, 
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர்ஆம் - 
பொறையார் மிகு சீர் விழ மல்க, 
பறையார்ஒலிசெய்பனையூரே.

பொருள்: சிவபிரான்,ஒலிக்கின்றவீரக்கழல்மேல்,அரவு ஆட,முன்கைகளில்பலியேற்றுத்திரியும்பிட்சாடனராகவிளங்குகின்றார். மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறைய நடப்பனவால்,பறைகளின்ஒலி இடைவிடாது பயிலும்திருப்பனையூர் அந்தப் பிட்சாடனரின்ஊராகும்.

குறிப்புரை: இது பிட்சாடனமூர்த்தியின் ஊர் பனையூர்என்கின்றது. அறை - ஒலி. இறை - முன்கை. பொறையார்மிகுசீர்விழமல்க - பூமியிற் சிறந்த புகழினையுடைய திருவிழா நிறைய.

A snake dances above the resounding anklet worn by Lord Civan in one of His legs. He implores the souls to give up their egoism and ignorance so as to enable them to be eligible to receive His grace and to move on towards the goal of life. This is metaphorically said in this verse as though He begs by assuming the form of Bishaadanar, which is one of His manifestations.

Note: At Panaioor, each day is a holy day.

அணியார்தொழவல்லவரேத்த
மணியார்மிடறொன்றுடையானூர்
தணியார்மலர்கொண்டிருபோதும்
பணிவார்பயிலும்பனையூரே.

அணியார் தொழ வல்லவர் ஏத்த, 
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் - 
தணி ஆர் மலர் கொண்டு இருபோதும்
பணிவார்பயிலும்பனையூரே.

பொருள்: சிவபிரான்,தம்மைப் பூசனை செய்து தொழவல்லஅடியவர்களுக்கு அண்மையில் இருப்பவர். அவர்,அடியவர்கள் அருகிருந்துஏத்துமாறு உள்ள நீலமணி போன்ற கழுத்தை உடையவர். தன்னைப் பணியும் அடியவர்கள் குளிர்ந்த மலர்களைக் கொண்டு,இருபோதும்தூவிவழிபடும்இடமானதிருப்பனையூர்அந்தச்சிவபிரானுடையஊராகும்.

குறிப்புரை: நீலகண்டனது உறைவிடம் பனையூர்என்கின்றது. தொழவல்லவர்அணியார்ஏத்த என மாற்றுக. அணியார் - அண்மையில் உள்ளவர்கள். மணி - நீலமணி. தணிஆர் மலர் கொண்டு - குளிர்ந்த மலரையுங்கொண்டு.'பூவும் நீரும் கொண்டு'என்பதனை நினைவு கூர்க. தணி - தண்மை.

Lord Civan abides in close proximity those devotees who standby Him and offer worship by performing the daily rituals. His neck looks like sapphire gem. Thiru-p- panaioor is His town where His servitors worship Him twice a day with cool flowers.

Note: Close to Him: The Sivaachaaryas are referred to here. They are the privileged that can enter the sanctum sanctorum to adore the Lord.

அடையாதவர்மூவெயில்சீறும்
விடையான்விறலார்கரியின்தோல்
உடையானவனொண்பலபூதப்
படையானவனூர் பனையூரே.7

அடையாதவர்மூஎயில்சீறும்
விடையான்,விறல்ஆர்கரியின் தோல் 
உடையான் அவன்,ஒண்பலபூதப்- 
படையான் அவன்,ஊர் - பனையூரே.

பொருள்: சிவபிரான் தன்னை வணங்காதபகைவர்களானஅசுரர்களின் மூன்று அரண்களையும்அழித்தவர். விடையில் ஊர்ந்து வருபவர். வலிய யானையை உரித்து,அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவர். எண்ணற்றபூதப்படைகளை உடையவர். இவ்வளவு சிறப்புள்ள சிவபெருமானுடையஊர்திருப்பனையூராகும்.

குறிப்புரை: இது வீரன் மேவும் ஊர் பனையூர்என்கின்றது. அடையாதவர் - பகைவராகியதிரிபுராதிகள்; சீறும் என்ற பெயரெச்சம் விடை உடையானைவிசேடித்தது. விறல் - வலிமை.

Lord Civan destroyed the three citadels of the recalcitrant Asuraas who did not pay obeisance to Him. He rides on His vehicle, the Bull. He tore the skin of the ferocious elephant and used it as His upper cloth. He is the Lord of numberless Bhuta warriors. His town is Thiru-p-panaioor.

இலகும்முடிபத்துடையானை
அலல்கண்டருள்செய்தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர்நிலமற்றும்
பலகண்டவனூர் பனையூரே.8

இலகும்முடிபத்துஉடையானை
அலல் கண்டு அருள் செய்த எம் அண்ணல், 
உலகில்(ல்) உயிர் நீர் நிலம் மற்றும் 
பல கண்டவன்,ஊர் - பனையூரே.

பொருள்: சிவபிரான்,விளங்கும் முடிபத்தை உடைய இராவணனைஅடர்த்தவர். அவன் படும் அல்லல் கண்டு அவனுக்கு அண்ணல் அருள் செய்தார். உலகின்கண்உன்னஉயிர்களுக்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்த சிவபிரானுடைய ஊர் திருப்பனையூர் ஆகும்.

குறிப்புரை: ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனூர்பனையூர்என்கின்றது. அலல் - துன்பம்;அல்லல் என்பதன் திரிபு மற்றும் பல என்றமையான்நுண்பூதங்களும். தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையுங்கண்டவன்.

Lord Civan who is our Supreme Lord crushed the shining ten heads of Raavanan; later took pity on His suffering and graced him. He created and bestowed the primary elements such as water, earth, fire, air and ether; also all other wants of all the souls in the world.

Note: Civa is the Provider. It is He who provides tanu, karanam, bhuvanam and bhogam to all living beings in accordance with their past karma.

வரமுன்னிமகிழ்ந்தெழுவீர்காள்
சிரமுன்னடிதாழவணங்கும்
பிரமன் னொடுமாலறியாத
பரமன் னுறையும்பனையூரே.

வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்! 
சிரம் முன் அடி தாழ வணங்கும் - 
பிரம(ன்)னொடு மால் அறியாத 
பரமன்(ன்) உறையும்பனைவயூரே!

பொருள்: சிவபிரானிடம்வரங்களைப்பெறுவதற்காகமகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே! அப்பெருமானின்திருமுன்தலைதாழ்த்திவணங்குகின்றவர்கள் எளிதில்நல்ல வரம் பெறலாம். பிரமனும்,திருமாலும் அவனை அறிய மாட்டாதநிலையினன். அப்பரமன்உறையும் ஊர் திருப்பனையூர் ஆகும்.

குறிப்புரை: இது வரம் வேண்டியவர்கள் பனையூரைச்சிரந்தாழவணங்குங்கள்என்கின்றது. முன்னி - எண்ணி. வணங்கும் - வணங்குங்கள்;செய்யுமேன் முற்று.

Ye Devotees! Coming merrily to get boons from Lord Civan, who is above Brahma and Thirumaal. Bow before Lord Civa and worship Him. This Lord abides in Thiru-p-panaioor.

அழிவல்லமணரொடுதேரா்
மொழிவல்லனசொல்லியபோதும்
இழிவில்லாதொர்செம்மையினானூர்
பழியில்லவர்சேர்பனையூரே.

அழி வல்அமணரொடுதேரர்
மொழி வல்லனசொல்லியபோதும், 
இழிவு இல்லாது ஓர் செம்மையினான் ஊர் - 
பழிஇல்லவர் சேர் பனையூரே.

பொருள்: அழிவில் வல்ல அமணர்களும்,பெளத்தர்களும்வாய்த்திறனால்புறங்கூறுகிறார்கள். அதனால்,சிறிதும் குறைவுறாதசெம்மையன் ஆகிய சிவபிரானது ஊர் திருப்பனையூர் என்ற தலமாகும். அத்தலத்தில்பழியற்றவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.

குறிப்புரை: இது புறச்சமயிகள்பொருந்தாதனசொல்லியபோதும் அவற்றால் இழிவுபடாத இறைவனின் ஊர் பனையூர்என்கின்றது. அழிவல்அமணர் - அழிதலில் வல்ல சமணர்கள். தேரர் - புத்தர். மொழி வல்லன-வாய் வன்மையாற் சொல்லும் புன்மொழிகளை. இழிவு - குறைபாடு.

The destructive minded Samanars and Buddhists, with their habit of backbite utter unbecoming words about Lord Civan. Unmindful of these, Lord Civan is well- renowned and with undiminishing fame abides in Thiru-p-panaioor where flawless people assemble to offer worship to Him.

பாரார்விடையான்பனையூர்மேல்
சீரார்தமிழ்ஞானசம்பந்தன்
ஆராதசொன்மாலைகள்பத்தும்
ஊரூர்நினைவா ருயாவாரே.11

பார் ஆர்விடையான்பனையூர்மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராதசொல்மாலைகள்பத்தும்
ஊர்ஊர்நினைவார்உயர்வாரே.

பொருள்: விடையூர்தியைக் கொண்ட சிவபிரானைநினைத்தால் மண்ணுலகில் பொருந்தி வாழலாம். அப்பெருமான்உறையும்திருப்பனையூரின்மேல்,புகழால்மிக்க தமிழ் ஞானசம்பந்தன்,மென்மேலும்விருப்பத்தைத்தருவனவாகப்போற்றிப்பாடியசொல்மாலைகளானஇப்பத்துப்பாடல்களையும்ஒவ்வோர்ஊரிலும் இருந்து கொண்டு நினைவார்உயர்வெய்துவர்.

குறிப்புரை: பனையூர் மாலை பத்தையும்வல்லவர்கள் உயர்வார் எனப்பயன்கூறுகிறது. பார் - பூமி. ஆராத - கேட்டு அமையாத;அதாவது மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கக் கூடிய. ஊர் ஊர்நினைவார் - பொலிகின்றவன் ஊர்,மகிழ்ந்தவன் ஊர் என்பனமுதலியவாகமுடிவனவற்றைநினைவார்.

The well renowned Tamizh Gnaanasambandan hath sung this hymn with insatiable love of Lord Civan at the shrine in Thiru-p-panaioor. He has the Bull as His carrier which is the most appropriate vehicle to move about on this earth to grace people. If the dwellers of each and every town on this earth could contemplate on this garland of ten verses, they will rise up to great heights.
Note: The child-saint is every inch a Tamil saint. His hymns constitute the Tamil Veda and are set to divine musical metres.

திருச்சிற்றம்பலம்

37ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
38.திருமயிலாடுதுறை 
திருத்தலவரலாறு: 
திருமயிலாடுதுறை என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும். சிதம்பரம் - கும்பகோணம் பேருந்து வழியில் உள்ள நகரம். சென்னை - திருச்சி நேர்வழி இருப்புப் பாதையில் இரயில் சந்திப்பு நிலையம். இரயில் நிலையத்தில் இருந்து ஆலயம் கிழக்கே2 கி.மீதூரத்தில் உள்ளது. அம்மை மயில் உருக்கொண்டு இறைவனைவழிபட்ட தலம். இங்கு அம்மையின்வேண்டுகோளுக்காக இறைவன் மயில் உருக்கொண்டு தாண்டவம் ஆடினார். இதற்குக்கெளரீ தாண்டவம் என்று பெயர். தலம் கெளரீதாண்டவபுரம் ஆயிற்று. 
இறைவன் பெயர் மாயூரநாதர்கல்வெட்டுக்களும்தேவாரமும்மயிலாடுதுறையார், மயிலாடுதுறையரன்எனக்குறிக்கின்றன. இறைவியின் பெயர் அஞ்சல் நாயகி,அபயாம்பிகைஎன்பன. தீர்த்தம்: காவிரியில்இடபதீர்த்தத் துறை விசேடம். துலாமாதம் முழுவதும் இங்கு நீராட்டுவிழா நடைபெறும். 
கல்வெட்டு: 
இத்தலத்தைப்பற்றிப் படியெடுக்கப்பட்டதாக16 கல்வெட்டுக்கள் உள்ளன. பணி செய்த அரசுகள் முதலாம் குலோத்துங்கன்,இரண்டாம் இராஜாதிராஜன்,மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன்,சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஆவர். இக்கல்வெட்டுக்களால்நிலம் பொன் அளிக்கப்பெற்றமைஅறியப்பெறுகின்றது. இறைவன் திருமயிலாடுதுறை உடையார் எனவும் குறிக்கப்பெறுவர். இக்கல்-வெட்டுக்களில் ஐந்து போக ஏனையவை ஐயாறப்பரைப்பற்றியன. இத்தலத்துஐயாறப்பர் கோயில் தனியே மாயூரநாதர்கோயிலுக்குத்தென்மேற்கில்உள்ளது. இந்த ஐயாறப்பர்ஜயங்கொண்டசோழவளநாட்டுத்திருவழுந்தூர் நாட்டு குலோத்துங்கசோழன் குற்றாலமாகியதிருவையாறு உடையார் எனக்குறிக்கப்பெறுவர். இத்தலத்துவிக்கிரமசோழன் திருமடம் என ஒன்றிருப்பதாகக்குறிக்கப்பெறுகின்றது. முதல் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த சோழன் எனப்படுகின்றான். ஐயாறப்பர் கோயில் ஐயாறப்பரைப்பிரதிட்டை செய்தது போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பெறுகின்றன. 
பதிக வரலாறு: 
மூவலூரைக்காதலோடுவணங்கிப்போற்றியபின்னர் பிள்ளையார் திருமயிலாடுதுறைஎன்னும் மாயூரதலத்தை அடைந்தார்கள். அப்போது அவ்வூர்அந்தணார்கள் . அடியார்களோடுஎதிர்கொள்ள எழுந்தருளி,மானேந்தியபெருமானைத்திருக்கோயிலிற் சென்று வணங்கினார்கள். எல்லையில்லாததோர் ஆனந்தம் அடைந்தார்கள். “கரவின்றிநன்மாமலர்” என்னும் இப்பதிகத்தைத்தெளிந்த இசையோடுஒதியருளினார்கள்.

38. THIRU-MAYIL-AADUTHURAI

THE HISTORY OF THE PLACE

          The sacred place, Thiru-mayil-aaduthurai, is to the south of river Cauvery in Chola Naadu. It lies in the Chidambaram - Kumbakonam bus route. It has a railway station in the main line connecting Chennai - Thiruchchi. The temple is at a distance of about 2 km from the station. Lord Mayooranaathar is referred to as Mayilaaduthuraiyaar or Mayilaaduthuraiyaran in Thevaaram and the many inscriptions. The Goddess is Anjchalnaayaki or Abayaambikai. The sacred ford is the Idaba Theerththam ghat in the river Cauvery, the ritual of bathing here is celebrated through out the month of Thula.

Once the Goddess assumed the form of a peahen during her worship of the Lord, who obliged her by dancing in the form of peacock. This dance is known as Gowree Thaandavam and the place became known as Gowree Thaandavapuram. The sixteen inscriptions here are of the period of Chola monarchs Kuloththungkan I to Raajaraajan III and Sadaiyavarman Sundhara Paandiyan, and speak of grants of gold and lands. Eleven of these pertain to the Iyaarappar temple, which is to the southwest of Mayooranaathar temple.

திருச்சிற்றம்பலம் 
38.திருமயிலாடுதுறை 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

கரவின்றிநன்மாமலர்கொண்டே
இரவும்பகலுந்தொழுவார்கள்
சிரமொன்றியசெஞ்சடையான்வாழ்
வரமாமயிலாடுதுறையே.

கரவு இன்றி நல்மாமலர் கொண்டே 
இரவும்பகலும்தொழுவார்கள் - 
சிரம் ஒன்றியசெஞ்சடையான் வாழ் 
வர மா மயிலாடுதுறையே.

பொருள்: சிவபிரான்,திருமயிலாடுதுறையில் உறைகிறான். நெஞ்சில் வஞ்சனை இன்றி, மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும்பறித்துக் கொண்டு வந்து,இரவும்பகலும்தொழும்அடியார்களுக்குதிருமயிலாடுதுறை மிகச் சிறந்த தலமாகும். தலை மாலை பொருந்தும் செஞ்சடைஉடையவரும்,வள்ளன்மைஉடையவருமானசிவபிரான்உகந்தருளும் தலம் திருமயிலாடுதுறை ஆகும். அடியார்களுடையசிரத்தின்கண் ஒன்றி நிற்கும் பெற்றியனானசெஞ்சடையெம்பெருமான் எனவும் பொருள் கோடலாம்.

குறிப்புரை: இது மயிலாடுதுறை,இரவும்பகலுந்தொழும்அடியார்கட்குச்சிவன்வாழும் இடம் என்று அறிவிக்கிறது. கரவு - வஞ்சனை. சிரம் - தலைமாலை.

குருவருள்: வரம் என்ற சொல் வழங்குதலைக்குறிக்கும் இங்குள்ள பெருமான் வள்ளற்பெருமானாகலின் வரம் என்ற சொல்லால்அவ்வள்ளலைக்குறித்துள்ளார். அப்பர்,வள்ளல் என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க. மயிலாடுதுறையரன்அடியார்களுக்குவள்ளலாக அருள் வழங்குகிறான்என்பது குறிப்பு.

The unique Lord Civan wears a special head garland on His ruddy matted hair. He is enshrined in Mayil-aaduthurai. This place is considered as the most sacred one by the devotees who have no ill will in their hearts. They pluck and bring fragrant and luxurious flowers of different varieties to this temple and offer worship both day and night.

Note: Mayil-aaduthurai means the place where peacocks dance. The Lord with ruddy matted hair who is immanent in the heads of devotees abides in Mayilaaduthurai.

உரவெங்கரியின்னுரிபோர்த்த
பரமன் னுறையும்பதியென்பர்
குரவஞ்சுரபுன்னையும்வன்னி
மருவும்மயிலா டுதுறையே.2

உரவெங்கரியின்(ன்) உரி போர்த்த
பரமன்(ன்) உறையும் பதி என்பர் - 
குரவம்,சுரபுன்னையும்,வன்னி, 
மருவும்மயிலாடுதுறையே.

பொருள்: வலிமை பொருந்திய கொடிய யானையைக் கொன்று,அதன் தோலைப்போர்த்தபரமனாகிய சிவபிரான் உறையும் பதி திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அங்குக்குராமரம்சுரபுன்னைவன்னி ஆகிய மரங்கள் செறிந்துள்ளன.

குறிப்புரை: யானைத்தோல்போர்த்த பரமன் உறையும்பதி மயிலாடுதுறை என்கின்றது. உரம் - வலிமை. குரவம் - குராமலர். சுரபுன்னை - இது இக்காலத்துநாகலிங்கப் பூ என வழங்குகிறது.

Lord Civan stripped the skin of the mighty and ferocious elephant and covered His body with that skin. This Lord Civan is enshrined in Mayil-aaduthurai, where Kuravam, Surapunnai and Vanni trees are in plenty.

Note: Kuravam: Common bottle-flower.
Surapunnai: Gamfoge
Vengkai: Kino tree.

ஊனத்திருள்நீங்கிடவேண்டில்
ஞானப் பொருள் கொண்டடிபேணும்
தேனொத்தினியானமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.3

ஊனத்து இருள் நீங்கிடவேண்டில், 
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் - 
தேன் ஒத்து இனியான்அமரும்சேர்வு
ஆனம்மயிலாடுதுறையே.

பொருள்: தேனைஒத்தஇனியனாய் விளங்கும் சிவபிரான்,தனக்குச் சேர்வானதிருமயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான். பக்தர்களே! இப்பிறப்பில்நமக்குள்ளகுறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால்,முத்தியில்தேனைப்போன்றுஇனியவனாய் விளங்கும் திருமயிலாடு துறையில் எழுந்தருளியிருக்கும்ஞானப்பொருளாய்உன்ளசிவபிரானின்திருவடிகளைவணங்குங்கள்.

குறிப்புரை: உயிர்களைஅணுவாக்கும்ஆணவமலம் நீங்க வேண்டில்ஞானப்பொருளைத்துணைக்கொண்டுமயிலாடுதுறையைப்பேணுங்கள்என்கின்றது. ஊனத்து இருள் - குறைபாட்டைஉண்டாக்கும் மலம். குறைபாடாவதுசிவத்தோடொன்றிச்சிவமாகும் ஆன்மாவை மறைத்து அணுவாக்கும்குறைபாடு. தேன் ஒத்து இனியான் - முத்தியில்ஒன்றியகாலத்துத்தேனை ஒத்த இனியவன்.'தேனைப்பாலையொத்திருப்பவன்முத்தியினிற்கலந்தே'என்றதும் காண்க. அமரும்,சேர்வு ஆன. மயிலாடுதுறையைஅடிபேணும்எனக்கூட்டுக.

If you aspire to get rid of your egoism (Aanavam - ) in this birth, worship the Holy Feet of Lord Civan who is the personification of Supreme knowledge. At the time of ineffable union with Him, He will be as sweet as honey. This Lord Civan loves to be entempled in Mayil-aaduthurai.

Note: The murk of mala: The murky mala: The Aanava mala. It is dame darkness according to St. Umapati. It abides with the soul even at the beginning. It is the denigrating principle from which the soul suffers. The effect of this mala will become null and void, one worships the Holy Feet of Lord Civan.

அஞ்சொண்புலனும்மவைசெற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சொன்றிநினைந்தெழுவார்மேல்
துஞ்சும்பிணியா யினதானே.4

அஞ்சு ஒண்புலனும்(ம்) அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல்- 
துஞ்சும்,பிணிஆயின தானே.

பொருள்: சிவபிரான்,ஐம்பொறிகளைப்பற்றும்ஒள்ளியபுலன்களாகியஅவைகளைக்கெடுத்தபெருவீரன். அந்தப் பெருமான் விரும்பி எழுந்தருளியதலம்திருமயிலாடுதுறைஆகும். அந்தத் தலத்தில்எழுந்தருளியஇறைவனை மனம் ஒன்றி நினைத்து,வழிபட எழுவார்மேல்,இனிவரும் பிறவி முதலாகியபிணிகள் அழிந்து ஒழியும்.

குறிப்புரை: பொறிவாயிலைந்தவித்த வீரன் மேவியமயிலாடுதுறையைமனமொன்றித்தியானிப்பவர்களின்பிணிகள்அழியும்என்கின்றது. அஞ்சு ஒண்புலனும் - தத்தமக்கேற்றபொறிகளைக்கவரும்ஒள்ளிய ஐந்து புலன்களையும். செற்ற - கெடுத்த. மஞ்சன் - இது மைந்தன் என்பதன் போலி. வலிமையுடையோன்என்பதாம். நினைந்து எழுவார் - துயில்விட்டுஎழும்போதேதியானித்துஎழுபவர்கள். பிணி - பிறவிப்பிணி.

Lord Civan is the sagacious and mighty One who subdued the five sensory organs. He is entempled in Mayil-aaduthurai. Those who rise up contemplating with single mindedness of devotion and offer worship to the Lord in Mayil-aaduthurai will get rid of their next birth and other ills associated with it.

Note: Pentad of senses: Sound, touch, form, essence and smell (Sabda, Sprisa, Roopa, Rasa and Gandham).

தணியார்மதிசெஞ்சடையான்றன்
அணியாரந்தவருக்கருளென்றும்
பிணியாயினதீர்த்தருள்செய்யும்
மணியான்மயிலாடுதுறையே.

தணி ஆர் மதி செஞ்சடையான் தன் 
அணி ஆர்ந்தவருக்கு அருள்,என்றும் 
பிணி ஆயின தீர்த்து அருள்செய்யும்
மணியான்,மயிலாடுதுறையே.

பொருள்: சிவபெருமான்,குளிர்ந்த பிறைமதியைஅணிந்துள்ளவன். சிவந்த சடைமுடியைஉடையவன். அப்பெருமானைஅணுகியவர்க்கு என்றும் அருள் உளதாம். பிறவிப் பிணி முதலானவற்றைப்போக்கிஅருள்புரியும் மணி போன்றவனாய் உள்ள அப்பெருமான்மயிலாடுதுறையில் உள்ளார். 
குறிப்புரை: இது மயிலாடுதுறையைச்சேர்ந்தவருக்கு என்றும் அருள் உளதாம்என்கின்றது. தணியார்மதி - குளிர்ந்த மதி. அணியார்ந்தவர் - அணுகியவர். மணியான் - மணி போன்றவன். பிணிதீர்ப்பனமணி மந்திரம் ஒளஷதம் என்ற மூன்றுமாதலின்அவற்றுள்ஒன்றாயமணிபோன்றவன் என்றார். பிணியாயின தீர்த்து அருள்செய்யும்மணியான்.

Lord Civan wears on His ruddy matted hair the cool crescent moon. Those who approach Him with devotion will get His grace forever. He is like ruby. He Graces His devotees by annihilating their illness of birth and death cycle. This Lord is enshrined in Mayil-aaduthurai.

தொண்டரிசைபாடியுங்கூடிக்
கண்டு துதிசெய்பவனூராம்
பண்டும்பலவேதியரோத
வண்டார்மயிலா டுதுறையே.6

தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதிசெய்பவன்ஊர்ஆம் - 
பண்டும்பலவேதியர்ஓத, 
வண்டுஆர்மயிலாடுதுறையே.

பொருள்: தொண்டர்களாய்உள்ளவர்கள் கூடி இசையபாடியும்,தரித்தும்,துதித்தும்சிவபெருமானைவழிபடுகின்றனர். முற்காலத்தும்இக்காலத்தும்வேதியர்கள்வேதங்களைஓதித்துதிக்கவும் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள்சூழ்ந்ததும் ஆகிய திருமயிலாடுதுறைசிவபிரானதுஊராகும்.

குறிப்புரை: தொண்டர்கள் கூடித்துதிபாடும் ஊர் என்கின்றது. துதி செய்பவன் - துதி செய்யப்படுமவன். பண்டும் - முன்பும்.

Lord Civan is enshrined in Mayil-aaduthurai. His servitors gather at the temple here, have His darshan, sing and pay obeisance to Him. In the olden days and even now Vedic scholars chant Vedas and adore Him here in Mayil-aaduthurai which is surrounded by lush gardens.

அணங்கோடொருபாகமமர்ந்து
இணங்கி யருள்செய்தவனூராம்
நுணங்கும்புரிநூலா்கள்கூடி
வணங்கும்மயிலா டுதுறையே.7

அணங்கோடுஒருபாகம் அமர்ந்து 
இணங்கி அருள்செய்தவன்ஊர்ஆம் - 
நுணங்கும்புரிநூலர்கள் கூடி 
வணங்கும்மயிலாடுதுறையே.

பொருள்: சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள்புரிபவன். அவனுடைய ஊர் திருமயிலாடுதுறை என்னும் தலமாகும். அத்தலத்தில் உள்ள சிவபிரானைமுப்புரி நூல் துவளும்அந்தணர்கள் கூடி வணங்குகிறார்கள்.

குறிப்புரை: இது உமையம்மையைஒருபாகங்கொண்டு அருள் செய்த ஊர் என்கின்றது. அணங்கு - உமையம்மை. இணங்கி - பொருந்தி. நுணங்கும் - துவளும். புரிநூலவர்கள் - முப்புரிநூலை உடைய அந்தணர்கள்.

Lord Civan with love and affection has His consort Umaa Devi on the left portion of His body. He is enshrined in Mayil-aaduthurai and graces His devotees. Vedic scholars gather at the temple in Mayil-aaduthurai and pay obeisance to Him.

சிரங்கையினிலேந்தியிரந்த
பரங்கொள்பரமேட்டிவரையால்
அரங்கவ்வரக்கன்வலிசெற்ற
வரங்கொள்மயிலா டுதுறையே.8

சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி,வரையால்
அரங்க(வ்) அரக்கன் வலி செற்ற, - 
வரம் கொள் - மயிலாடுதுறையே.

பொருள்: சிவபிரான்,பிரமகபாலத்தைக்கையிலஏந்திப் பலர் இல்லங்களுக்கும் சென்று இரந்தமேன்மையைக் கொண்டவன். கயிலைமலையால்இராவணனைநெரியுமாறுஅடர்த்தநன்மையாளன்சிவபிரான். அப்பெருமானைஅடியவர்கள்வணங்கிநன்மைகளைப் பெறும் தலம்திருமயிலாடுதுறை.

குறிப்புரை: இது பிரமகபாலத்தைத் தாங்கி இரந்தபரமேட்டியின் இடம் என்கின்றது. பரம் கொள் பரமேட்டி - மேன்மையைக் கொண்ட சிவன். வரையால்அரங்க - கைலையால் நசுங்க.

Lord Civan crushed Raavanan's ten heads and shoulders under mount Kailas and quelled his might. Devotees worship this Lord Civan in Mayil-aaduthurai and get boons from Him (Lord Civan holding the skull of Brahmaa as His begging bowl goes to many houses and collects alms given by the householders. He is such a One).

ஞாலத்தைநுகர்ந்தவன்தானும்
கோலத்தயனும்மறியாத
சீலத்தவனூர்சிலர்கூடி
மாலைத்தீர்மயிலா டுதுறையே.9

ஞாலத்தைநுகர்ந்தவன்தானும், 
கோலத்துஅயனும்,அறியாத 
சீலத்தவன் ஊர் - சிலர் கூடி 
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

பொருள்: 
சிவபிரான்,உலகை விழுங்கித் தன்னுடைய வயிற்றகத்தே வைத்த திருமாலும்,அழகிய நான்முகனும் அறிய இயலாத தூயவனாவார். அவர் விரும்பி உறையும் ஊர்திருமயிலாடுதுறை ஆகும். அத்தலம் அடியவர்கள் ஒருங்குகூடிவழிபட்டுத் தம் அறியாமை நீங்கப்பெற்றசிறப்புடையதாகும்.

குறிப்புரை: இது அயனும்மாலும்அறியாதவனூர்என்கின்றது. ஞாலத்தைநுகர்ந்தவன் - பூமியைவிழுங்கித் தன் வயிற்றகத்துஅடக்கிய மாயன். சீலம் - எளிமை. மால் - மயக்கம்.|

Lord Civan was unknowable to Thirumaal who swallowed the earth and kept it in His stomach and to the four headed Brahma of impressive bearing. His place of manifestation is the sacred Mayil-aaduthurai where devotees gather, offer worship and get their ignorance removed.

நின்றுண்சமணும்நெடுந்தேரர்
ஒன்றும் மறியாமையுயர்ந்த
வென்றியருளானவஊராம்
மன்றன்மயிலா டுதுறையே.10

நின்று உண் சமணும்,நெடுந்தேரர்
ஒன்றும் அறியாமை உயர்ந்த 
வென்றி அருள் ஆனவன்ஊர்ஆம் - 
மன்றல்மயிலாடுதுறையே.

பொருள்: நின்று உண்பவர்களாகியசமணர்களும்,நெடிது உயர்ந்த'பெளத்தர்களும்சிவபிரானை ஒரு சிறிதும் அறியாதவர்களாய்'ஒழிந்தார்கள். சிவபிரான்,உயர்ந்த வெற்றி மற்றும் அருள் ஆகியவைகளைக்கொண்டுள்ளவன். அப்பிரானுடைய ஊர்,நறுமணம் கமழும்திருமயிலாடுதுறை ஆகும்.

குறிப்புரை: புறச்சமயத்தார்க்குஅறியொண்ணாதபடிஉயர்ந்தோனிடம்இதுஎன்கின்றது. வென்றிஅருளான் - வெற்றியை விளைவிக்கும்அருளையுடையவன். மன்றல் - நறுமணம்.

The Samanars who take food in the standing posture as well as the tall Buddhists, live meaninglessly, knowing nothing about the greatness of Lord Civan. However, Lord Civan who is the personification of lofty and triumphant grace, manifests Himself in a place where fragrant air fills the town, which is Mayil- aaduthurai.

நயர்காழியுள்ஞானசம்பந்தன்
மயலதீர்மயிலாடுதுறைமேல்
செயலாலுரைசெய்தனபத்தும்
உயர்வாமிவையுற் றுணா்வார்க்கே.11

நயர்காழியுள்ஞானசம்பந்தன்
மயல் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தனபத்தும்
உயர்வு ஆம்,இவை உற்று உணர்வார்க்கே.

பொருள்: ஞானத்தினால்மேம்பட்டவர்கள் வாழும் சீகாழிப்பதியில் வாழ்பவர் திருஞானசம்பந்தர். மயிலாடுதுறையில்எழுந்தருளியுள்ளசிவபெருமான்,தன்னை வழிபடுபவரின்மயக்கத்தைத்தீர்த்தருளுபவன். அப்பெருமானைப்பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் ஞானசம்பந்தர் உரைத்தனவாகியஇத்திருப்பதிகப்பாடல்கள்பத்தும் உற்று உணர்வார்க்குஉயர்வைத் தரும்.

குறிப்புரை: இவைபத்தும்உணர்வார்க்குஉயர்வாம்என்கின்றது. நயர்காழி - நயம் உணர்ந்தபெரியோர்கள்உறைகின்றகாழி. மயல் - மயக்கம். செயலால் - திருவருள் உண்ணின்றுசெய்தலால்.

Gnaanasambandan hails from Sree Kaazhi where scholars of spiritual knowledge reside. Gnaanasambandan has sung this hymn of ten verses on Lord Civan of Mayil- aaduthurai who annuls the bewilderment of His devotees. Those who cultivate and comprehend the significance of these ten verses which propagate His grace will become praiseworthy people.

38ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

39. திருவேட்களம்

திருத்தலவரலாறு: 
திருவேட்களம் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். சிதம்பரத்துக்கு கிழக்கே2 கி.மீ. தூரத்தில் உள்ளது. அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் கீழ்பால் உள்ளது,சிதம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலம்மூங்கில்வனம் எனவும்கூறப்பெறும். அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதாஸ்திரம்ஏந்திய இறைவன் திருவுருவமும்,அர்ச்சுனன் தவநிலையைக் காட்டும் திருவுருவமும் இருக்கின்றன. இறைவன் வேடனாக வந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை “வேடனார் உறை வேட்களம்” என்ற அப்பர் வாக்கும் நன்கு விளங்கும். இறைவன் பெயர் பாசுபதேசுவரர். இறைவி பெயர் நல்ல நாயகி. கோயிலுக்கு எதிரில் தீர்த்தம் உண்டு.புதிய திருப்பணி. திருஞானசம்பந்தசுவாமிகள்சிதம்பரத்தில்இருப்பதற்கு அஞ்சி,இத்தலத்திலேயேதங்கிச்சிதம்பரத்தைத்தரிசித்தார்என்பது பெரிய புராண வரலாறு (பாடல்165 திருஞானசம்பந்தர் புராணம். பெரியபுராணம் பாடல்2065 காண்க. சிதாகாசம்,இதயக்கமலம்எனச் சிதம்பரம் போற்றப்படுவதால் “அவண்இரவில்” தங்குதல் தகாதுஎனக் கொண்டு “அவண்அல்கும் திறன்” அஞ்சினார்எனக்கொள்க -C.K.S.பெரியபுராண உரை. 
கல்வெட்டு: 
சகம்1488இல் (கி.பி.1556)சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத்திருவேட்களங்கிராமத்தைஅச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது. 
பதிக வரலாறு: 
திருஞானசம்பந்தசுவாமிகள்ஆனந்தக்கூத்தப் பெருமான் எழுந்தருளியிருக்கின்றகனகசபையைத் தொழுது,வெளியே போகின்றவர்கள்,திருமுன்னிலையையும்,திருவாயிலையும்அடியாருடன்வணங்கித்,திருவீதிகளையும் தொழுது தலத்தின் பெருமை நோக்கி அங்கே இராத்தங்கஅஞ்சுவார்களாகத்திருவேட்களத்தை அடைந்தார்கள். அங்கே பாசுபதநாதரைக்கைதொழுது “அந்தமும்ஆதியுமாகிய” என்னும் இந்தச்சொற்பதிகத்தைஅருளிச் செய்து, அத்தலத்தையேதங்குமிடமாகக் கொண்டு தில்லையைத்தரிசித்துவருவாராயினார்.

39. THIRU-VETKALAM

THE HISTORY OF THE PLACE

The sacred city of Thiru-vetkalam is to the north of the river Cauvery in Chola Naadu, and is situated 2 km east of Chidhambaram. It can be reached by bus from Chidhambaram. The temple is also known as Moongkilvanam. The name of the God at this shrine is Paasupathesuvarar, and that of the Goddess is Nallanaayaki. Archchunan performed thavam here and the Lord came in the guise of a hunter to bestow His grace on him and gave him the Paasupathaasthiram. Sage Appar sings of this as 'vedanaar urai vetkalam'. Images of Archchunan as a hermit and the Lord carrying the Paasupathaasthiram can be seen. Afraid of staying in Chidhambaram, Sage Thiru- Gnaanasambandar is said to have stayed here and had the vision of Chidhambaram. The sage avoided night halt at Chidambaram with due deference to the unique status of this shrine which is hailed as Chithaahaasam.

An inscription here reveals the gift of the village (Thiruvetkalam) to the temple by Achchuthappa Naayakkar in 1556 CE.

INTRODUCTION TO THE HYMN

Having adored the Lord of Thillai, afraid to stay there at night, the child-saint proceeded to Thiru-vetkalam. The following hymn was sung in this holy place.

திருச்சிற்றம்பலம்

39.திருவேட்களம்  
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

அந்தமுமாதியுமாகியவண்ணல்ஆரழலங்கையமர்ந்திலங்க
மந்தமுழவமியம்ப மலைமகள் காணநின்றாடிச்
சந்தமிலங்குநகுதலைகங்கைதண்மதியம்மயலேததும்ப
வெந்தவெண்ஸணீறுமெய்பூசும்வேட்கள நன்னகராரே.1

அந்தமும்ஆதியும் ஆகிய அண்ணல் - ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க; 
மந்த முழவம்இயம்ப;மலைமகள் காண,நின்று ஆடி; 
சந்தம் இலங்கு நகுதலை,கங்கை,தண்மதியம்,அயலேததும்ப; 
வெந்த வெண்நீறு மெய் பூசும் - வேட்களநன்நகராரே.|

பொருள்: சிவபிரான்,உலகங்களைப்படைப்பவரும்,இறுதி செய்பவருமாகியதலைமைத்தன்மை உடையவர். பிறரால் பொறுத்தற்கரியதீ அவர் கையின்கண்விளங்குகிறது. மலைமகளாகியபார்வதிதேவிகாணுமாறு,மெல்லெனஒலிக்கும்முழவம்இயம்பத்திருநடம்புரிகிறார். அழகு விளங்கும் கபால மாலை,கங்கை,குளிர்ந்த பிறை ஆகியன அவருடைய தலையில் விளங்குகின்றன. அவர் வெந்த வெண்ணீற்றைத் தம் மெய்யில்பூசியுள்ளார். இத்தகைய பெருமான் திருவேட்களநன்னகரில்எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: அழல் அங்கையில்தயங்க,கங்கையும்கபாலமும்மதியமும் விளங்க. மலைமகள் காண நின்றாடுபவர்வேட்களநாதர்என்கின்றது. அந்தமும்ஆதியும் ஆகிய அண்ணல் - காணப்பட்டபிரபஞ்சத்திற்கெல்லாம் இறுதி செய்பவனும்,முதலாய் நின்று படைப்பவனும் ஆகிய பெருமையிற்சிறந்தவன். அந்தம் ஆதி'சிவஞான போதம்,ஆரழல் - பிறரால் பொறுத்தற்கரிய தீ,மந்த முழவம் - மந்த ஸ்தாயியில்அடிக்கப்பெறுகின்ற மத்தளம். மலைமகள் - உமாதேவி. இறைவனதுஆனந்தத்தாண்டவத்தை மலைமகள் கண்டு ஆன்மாக்களின்பக்குவத்திற்குஏற்பப் பயன் கொள்ளச் செய்கின்றாள் ஆதலின் உமை காண நின்றாடி என்றார். நகரார் ஆகிய அண்ணல்,இலங்க,இயம்ப,ஆடி,ததும்ப,பூசும்என முடிக்க.

குருவருள்:'வேட்களநன்னகராரே” என்பதற்கு ஏற்ப அவ்வருள்வாக்கின்படி இன்று இத்தலம்பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலை நகராகவிளங்குவது காண்க.

Lord Civan is the creator and dissolver of all the worlds. As the Supreme Being He holds in one of His hands the fierce fire which no one can dare to handle. He dances to be seen by His consort Paarvathi devi, the mountain child. He wears in His matted ruddy hair a garland made out of skulls, the river Ganges and the cool crescent moon. This Lord Civan abides in the sacred Thiru-vetkalam.


Note: The Lord is 'Antam-Aadi' according to St. Meykandaar. Civa is the ultimate Resolver of the cosmos. It is He who re-evolves it into being.

சடைதனைத்தாழ்தலுமேறமுடித்துச்சங்கவெண்தோடுசரிந்திலங்கப்
புடைதனிற்பாரிடஞ்சூழப்போதருமாறிவர்போல்வார்
உடைதனில்நால்விரற்கோவணவாடையுண்பதுமூரிடுபிச்சைவெள்ளை
விடைதனையூர்திநயந்தார்வேட்கள நன்னகராரே.2

சடைதனைத்தாழ்தலும் ஏற முடித்து,சங்கவெண்தோடு சரிந்து இலங்கப், 
புடைதனில்பாரிடம் சூழ,போதரும் ஆறு இவர் போல்வார் - 
உடைதனில்நால்விரல்கோவண ஆடை,உண்பதும் ஊர் இடு பிச்சை, ,வெள்ளை- 
விடைதனை ஊர்தி நயந்தார் - வேட்களநன்நகராரே.

பொருள்:திருவேட்களநன்னகரில்எழுந்தருளியுள்ளஇறைவனாகியசிவபிரான்,தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டியுள்ளார். சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதில் சரிந்து விளங்குகிறது. அவர்,அருகில் பூதங்கள் சூழ்ந்து வரப் போதருகின்றார். அவருடைய உடையோ,நால்விரல் அகலம் உடைய கோவணஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோவெண்ணிறமுடையவிடையாகும்.

குறிப்புரை: இறைவன் சடைமுடித்து,சங்க குண்டலந்தாழ,பூதந்தாழப்போதருவர்;அவருக்கு உடை கோவணம்;உண்பது பிச்சை;ஊர்தி இடபம் என்கின்றது. ஏறமுடித்து - எடுத்துக்கட்டி,சரிந்து - தாழ்ந்து. பாரிடம் - பூதம். போல்வார் - ஒப்பில் போலி. ஊர்தி - வாகனம். கோவணம் நால்விரல் அகல முடையதாயிருத்தல் வேண்டும் என்பது மரபு ஆதலின் நால் விரல் கோவணம் என்றார்.

Lord Civan of the sacred Thiru-vetkalam has nicely bound His hanging matted hair to form a crown over His head. He wears ear-ring made of white chank which shines and dangles below His ear. He goes about surrounded by Bhuta warriors all around Him. His dress is only a loin cloth which is only four inches wide. His food is the alms He gets from the householders. He loves to ride on His bull mount.

பூதமும்பல்கணமும்புடைசூழப்பூமியும்விண்ணுமுடன்பொருந்தச்
சீதமும்வெம்மையுமாகிச்சீரொடுநின்றவெஞ்செல்வர்
ஓதமுங்கானலுஞ்சூழ்தருவேலைஉள்ளங்கலந்திசையாலெழுந்த
வேதமும்வேள்வியுமோவாவேட்கள நன்னகராரே.4

பூதமும்பல்கணமும் புடை சூழப்,பூமியும்விண்ணும்உடன்பொருந்தச், 
சீதமும்வெம்மையும் ஆகி,சீரொடு நின்ற எம்செல்வர் - 
ஓதமும்கானலும்சூழ்தரு வேலை,உள்ளம் கலந்து இசையால் எழுந்த 
வேதமும்வேள்வியும்ஓவா - வேட்களநன்நகராரே.

பொருள்: திருவேட்களநன்னகர்,கடல்நீர்ப்பெருக்கும்சோலையும்சூழ்ந்தது. அந்தணர்கள்மனம் கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும்,அவர்கள் இயற்றும் வேள்விகளும்அந்த நகரில் இடையறாது நிகழும் இயல்பின. அந்தத்திருவேட்களநன்னகர்இறைவனானசிவபிரான்,பூதங்களும்சிவகணங்களும் அருகில் சூழ விளங்குகின்றார். விண்ணும்மண்ணும்அவர்பால்பொருந்தத்தண்மையும்வெம்மையும் ஆகி,அந்தப் பெருமான் புகழோடு விளங்கும் எம்முடையசெல்வராவார்.

குறிப்புரை: இது விண்ணும்மண்ணும் கலந்து தட்பமும்வெப்பமுமாகிப்புகழோடு நின்ற செல்வர்வேட்களநன்னகரார் என்று அறிவிக்கின்றது. உடன்பொருந்த - எங்குமாயிருக்க. உள்ளங்கலந்துஇசையால்எழுந்த வேதம் - மனத்தில் நின்று ஊதி இசையோடு எழுந்த வேதம். ஓவா - இடையறாத.

Civan of the sacred Thiru-vetkalam is our resplendent Lord. He is the earth; He is the sky; He is coolness; He is heat. Closely surrounded by Bhutas and Civaganas, He is gloriously entempled in this place. The town flourishes with pools and lush gardens close to the sea. Holy sacrifices and the chanting of the Vedas in soulful music will never cease in this town.

அரைபுல்குமைந்தலையாடலரவமமையவெண்கோவணத்தோடசைத்து
வரைபுல்குமார்பிலொராமைவாங்கியணிந்தவர்தாந்
திரைபுல்குதெண்கடல்தண்கழியோதந்தேனலகானலில்வண்டுபண்செய்ய
விரைபுல்குபைம்பொழில்சூழ்ந்தவேட்கள நன்னகராரே.4

அரை புல்கும்ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்கோவணத்தோடு அசைத்து, 
வரை புல்கு மார்பில் ஒர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் - 
திரை புல்குதெண்கடல்தண்கழிஓதம் தேன் நல் கானலில் வண்டு பண்செய்ய, 
விரை புல்குபைம்பொழில்சூழ்ந்தவேட்களநன்நகராரே.

பொருள்: சிவபிரான்,இடையில் பொருந்தியதும்,ஐந்து தலைகளைஉடையதுமான ஆடும் பாம்பை,வெண்மையானகோவணத்தோடும்பொருந்தக்கட்டியுள்ளார். அவர்,மலை போன்று அகன்ற மார்பின்௧ண்ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய்விளங்குகிறார்.திருவேட்களநன்னகர்அலைகளை உடைய தெளிந்த கடல்நீர்பெருகிவரும்உப்பங்கழிகளை உடையது. அது,வண்டுகள் இசைபாடும்தேன்பொருந்தியகடற்கரைச்சோலைகளை உடையது. மேலும் அது,மணம் கமழும்பைம்பொழில்கள்சூழ்ந்தது. சிவபிரான்,இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய திருவேட்களநன்னகரில்எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: அரைபுல்கும் - அரையைத்தழுவிய அசைத்து - இறுக உடுத்து. வரைபுல்கு - மலையையொத்த. ஆமை - ஆதி கூர்மம். ஓதம் - பைம்பொழில்சூழ்ந்தவேட்களம் என்றது நெய்தலோடுதழுவிய நகர் என அறிவித்தவாறு.

Lord Civan wears a white loincloth on His waist and it is tightened with a five- headed snake. He loves to wear on His mountain like broad chest the rare tortoise shell. He is enshrined in Thiru-vetkalam. In this town the clear waters of the sea where roaring waves dash against the shores - flow into the saltpans. In the seaside gardens honey drips from flowers towards which the bees fly creating a musical sound. This town is surrounded by lush groups where fragrance fills the air.

பண்ணுறுவண்டறைகொன்றையலங்கல்பால்புரைநீறுவெண்நூல்கிடந்த
பெண்ணுறுமார்பினர்பேணார்மும்மதிலெய்த பெருமான் 
கண்ணுறுநெற்றிகலந்தவெண்டிங்கட்கண்ணியர்விண்ணவர்கைதொழுதேத்தும்
வெண்ணிறமால்விடையண்ணல்வேட்களநன்னகராரே.

பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல்,பால் புரை நீறு,வெண்நூல்,கிடந்த 
பெண் உறு மார்பினர்;பேணார்மும்மதில்எய்த பெருமான்; | 
கண் உறு நெற்றி கலந்த வெண்திங்கள்கண்ணியர்;விண்ணவர்கைதொழுது ஏத்தும் 
வெண்நிறமால்விடை அண்ணல் - வேட்களநன்நகராரே.

பொருள்:திருவேட்கனநன்னகருடையஇறைவனானசிவபிரான்,இசைபாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவர். அவர்,பால் போன்ற வெண்ணீறு பூசியவர். முப்புரிநூலும்உமையம்மையையும் பொருந்திய மார்பினர். அவர்,பகைவர்களாகியஅசுரர்களின்மும்மதில்களையும் எய்து அழித்த தலைவர். அவர் நெற்றிக்கண்ணராகவும், பிறைமதிக்கண்ணியராகவும்,விண்ணவர்கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடைமீது ஊர்ந்து வருபவராயும் விளங்கும் தலைவர் ஆவார்.

குறிப்புரை: இது கொன்றைமாலை,பூணூல் இவற்றையணிந்து உமை ஒரு பாதியராகத்திரிபுரமெரித்தபெருமான் இவர் என்கின்றது. பண் உறு வண்டு - இசையைஎழுப்புகின்ற வண்டுகள். அறை - ஒலிக்கின்றஅலங்கல் - மாலை. கண்ணுறு நெற்றி - அக்கினிக்கண் பொருந்திய நெற்றி. வெண்திங்கள்கண்ணியர் - பிறையைத் தலை மாலையாய்அணிந்தவர். பிறையைக்கண்ணியாகச்சூடுதல் மரபு.'மாதர்ப்பிறைக்கண்ணியானை'என்பதை நோக்குக. மால்விடை - பெரிய இடபம்.

Lord Civan of the sacred Thiru-vetkalam city wears on His matted hair, the garland made of cassia flowers around which bees fly, raising a musical note. He smears on His body the milk-white holy ashes. He wears the sacred thread on His chest where His consort Umaa Devi also abides. He is the Lord who destroyed with His bow the three citadels of the hostile Asuras. He has a fierce third eye on His forehead. He holds as garland a white crescent moon in His matted hair. The Devas worship Him with folded hands. He is the Supreme Lord who rides on the big white bull and moves about.

கறிவளா்குன்றமெடுத்தவன்காதற்கண்கவரைங்கணையோனுடலம்
பொறிவளராரழலுண்ணப்பொங்கியபூதபுராணர்
மறிவளரங்கையர்மங்கையொர்பங்கர்மைஞ்ஞிறமானுரிதோலுடையாடை
வெறிவளர்கொன்றையந்தாரார்வேட்கள நன்னகராரே.6

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன்உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ணப்பொங்கியபூதபுராணர், 
மறி வளர் அம்கையர்,மங்கை ஓர்பங்கர்,மைஞ்ஞிறமான் உரி-தோல்உடை ஆடை 
வெறி வளர் கொன்றைஅம்தாரார் - வேட்களநன்நகராரே.|

பொருள்: திருவேட்களநன்னகருடையஇறைவரானசிவபிரான்மான்ஏந்தியகரத்தினர். மங்கை பங்கர். கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப்போர்த்தவர். மணம் கமழும் கொன்றை மாலையை அணிந்தவர். இவ்வகைப்பட்ட சிவபிரான்,மிளகுக்கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தனமலையைக்குடையாக எடுத்த திருமாலுடையஅன்பு மகனும்,அழகு மிக்கவனும்,ஐங்கணைகளைஉடையவனுமாகியமன்மதனுடையஉடல் பொறி பரக்கும் அரிய அழல் உண்ணும்படிசினந்தபழையோர் ஆவார்.

குறிப்புரை: இது மன்மதனை எரித்த மங்கைபங்கர்திருத்தலம்இவ்வூர்என்கின்றது. கறி - மிளகு. குன்றம் என்றது கோவர்த்தனம். எடுத்தவன் - கண்ணன். காதல் கண்கவர்ஐங்கணையோன் - மகனாகியபேரழகனாகிய மன்மதன். ஆர் அழல் உண்ண - தீப்பற்றி எரிய. பொங்கிய - கோபித்த. மறி - மான். வெறி - மணம்.

Thirumaal holds the mountain known as 'Kovardan' as an umbrella. On this mountain, pepper vines grow lavishly. His loving son Manmathan is a very handsome person. He holds in His hand a bow and five flowered arrows (Aravindam, Ashokam, Mango flower, Mullai, and Neelam. Lord Civa burnt Manmathan with a fierce fire from His third eye. He holds in one of His hands the doe. He holds His consort on one side of His body. He stripped the skin of the black coloured elephant and used it as a cloth to cover His body. He is the One who wears the fragrant cassia flower garland.

Note: Bhuta Puranar: The Primal Lord of all living beings, i.e., Civa.

மண்பொடிக்கொண்டெரித்தோர்சுடலைமாமலைவேந்தன்மகள்மகிழ
நுண்டபொடிச்சேரநின்றாடிநொய்யனசெய்யலுகந்தார்
கண்பொடிவெண்டலையோடுகையேந்திக்காலனைக்காலாற்கடிந்துகந்தார்
வெண்பொடிச்சேர்திருமார்பர்வேட்களநன்னகராரே.

மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை,மாமலைவேந்தன்மகள் மகிழ, 
நுண்பொடிச் சேர நின்று ஆடி,நொய்யனசெய்யல்உகந்தார், 
கண் பொடி வெண்தலைஓடு கை ஏந்திக்காலனைக் காலால் கடிந்துஉகந்தார், 
வெண்பொடிச் சேர் திருமார்பர் - வேட்களநன்நகராரே.

பொருள்: திருவேட்களநன்னகரின்இறைவரான சிவபிரான்,மண்ணும்பொடியாகுமாறுஉலகை அழித்தார். அவர் ஒப்பற்ற அந்தச்சுடலையில்சிறப்புத்தன்மையை உடைய இமவான்மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ,சுடலையின் நுண் பொடிகள் தம் உடலில் படிய நின்று ஆடினார். அந்தத் திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள்செய்ய அவர் உகந்தார். அந்தச் சிவபிரான்,கண் பொடிந்து போன வெள்ளியதலையோட்டினைக் கையில் ஏந்தியவர். காலனைக் காலால் கடிந்துஉகந்தவர். வெள்ளியதிருநீறு சேர்ந்த அழகிய மார்பினர் ஆவார்.

குறிப்புரை: உலகத்தைச்சங்கரித்தசுடலையில் மலைமகள் மகிழ ஆடி நுட்பமான செயலைச் செய்பவர் இந்நகரார்என்கின்றது. பொடிக்கொண்டு - பொடித்தன்மையைக் கொள்ள. நுண்பொடிச் சேர - துகள்செய்தல்பிரமனாதியர் தொழில். கண்பொடிவெண்தலை - கண் பொடிந்து போனதலை. பொடிதல் - இல்லையாதல்.திருமேனியில் பொருந்த. நொய்யனசெய்யல்உகந்தார் - மிகவும் நுட்பமான பஞ்சகிருத்தியங்களைச்செய்யத்திருவுளம்பற்றினார். செய்தார் என்னாதுசெய்யல்உகந்தார்என்பதில்சிறப்பிருத்தல்நோக்குக.

At the close of an aeon (Yugantam in Sanskrit) the entire universe is dissolved and the elements merge into one another, and lastly everything merges into Sakthi, and Sakthi merges with Civan. Civan alone will be in existence in the Universe. In that rare scenario, Lord Civan performs His widely acclaimed Pancha Kritya Dance, symbolising His fivefold activities Creation, Sustenance, Dissolution, Abstraction or Involution and Benediction. This dance was enjoyed with great joy by Goddess Paarvathi, daughter of the king of the mighty Himalayas. During this dance, fine white ashes from the burning ghat rise and settle down on Lord Civan's body. By gladly performing this dance, He portrays the three different activities to be performed by the respective demigods (Brahmaa, Vishnu, Rudran) under His overall command. The Supreme Lord Civan commanding the three demigods, holds in one hand, a white skull in which the eyes had been destroyed. He kicked down Yamaa the very god of death, to death. His auspicious chest is smeared over with white holy ashes .

Note: In the dance pose of Lord Civa (Nataraja Form) we notice His physical frame signifying the five fold acts. The drum in His right hand symbolises creation; sustenance is indicated by the other right hand; fire in the left hand signifies dissolution; right foot abstraction and the left foot shows benediction or the haven of refuge as pointed out by the other left hand. Thus the order of the five fold activities is implicit in the dance pose of Lord Civa.

“Noyyana Seyyal Ugandhar” this verse, has a special significance.
“Noyyana” refers in a subtle way to the five fold activities.
The five fold activities in themselves are subtle. This takes place between the Samharam and the Re-creation of the Universe. '' Ugandhar”implies that the wish of the Lord is being carried out by His agents (Brahmaa, Vishnu and Rudran). the gross five fold activities (Creation, Sustenance, Dissolution, Abstraction or Involution and Benediction), go on endlessly, as indicated by the dancing posture of Lord Civa.

ஆழ்தருமால்கடனஞ்சினையுண்டாரமுதமமரர்க்கருளிச்
சூழ்தருபாம்பரையார்த்துச்சூலமோடொண்மழுவேந்தித்
தாழ்தருபுன்சடையொன்றினைவாங்கித்தண்மதியம்மயலேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்வேட்கள நன்னகராரே.8

ஆழ்தருமால்கடல்நஞ்சினை உண்டு ஆர்அமுதம்அமரர்க்குஅருளிச், 
சூழ்தரு பாம்பு அரை ஆர்த்துச்,சூலமோடுஒண்மழுஏந்தித், 
தாழ்தருபுன்சடைஒன்றினைவாங்கித்தண்மதியம்அயலேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் - வேட்களநன்நகராரே.

பொருள்:திருவேட்களநன்னகருடையஇறைவனானசிவபிரான்,ஆழமான பெரிய கடலிடத்தில்தோன்றியஅமுதத்தைத்தேவருக்குஅளித்தருளினார். நஞ்சினைத் தாம்உண்டார். அவர்,சுற்றிக் கொள்ளும் இயல்பினதாயபாம்பினை இடையில் கட்டிக்கொண்டார். அவர் சூலம்,ஒளி பொருந்திய மழுஆகியவற்றைக் கையில் ஏந்தியவர். உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத்தம்பிறைஅயலில்விளங்கத்தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து,அதன்கண்சுவறுமாறுசெய்தவரும் ஆவார்.

குறிப்புரை: நஞ்சினைத் தாம் உண்டு,அமுதத்தைத்தேவர்க்கருளி,பாம்பு சூலம்,மழுஇவற்றைத்தரித்துச்சடையில்கங்கையை மறைத்து வைத்தவர் இவர் என்கின்றது. புன்சடை - மெல்லிய சடை. உயிரைக் கொல்லும் விடத்தைத் தான் உண்டு சாவாமையை அளிக்கும் அமுதினைத்தேவர்க்களித்ததுஇவர் பெருங்கருணையைத் தெரிவிக்கிறது.

Lord Civan of the sacred Thiru-vetkalam blessed the Devas by giving them the nectar that came out of the big deep sea while He swallowed the poison, which also came out of the same sea. He binds the creeping snake on to His waist. He holds in His hands the Trident and the battle-axe. The Ganges river which came down from the sky so swiftly as to suggest it might destroy the entire earth was allowed to abide in one of His hair strands, a little apart was the crescent moon which was already there on His matted hair.

Note: Mazhu means (1) a battle-axe and (2) a burning rod.

திருவொளிகாணியபேதுறுகின்றதிசைமுகனுந்திசைமேலளந்த
கருவரையேந்தியமாலுங்கைதொழநின்றதுமல்லால்
அருவரையொல்கவெடுத்தவரக்கனாடெழிற்றோள்களாழத்தழுந்த
வெருவுறவூன்றியபெம்மான்வேட்கள நன்னகராரே.9

திருவொளிகாணியபேதுறுகின்றதிசைமுகனும்திசைமேல்அளந்த
கருவரைஏந்தியமாலும்,கைதொழ நின்றதும் அல்லால், 
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில்-தோள்கள்ஆழத்து அழுந்த 
வெருஉறஊன்றியபெம்மான் - வேட்களநன்நகராரே.

பொருள்: அழகிய பேரொளிப்பிழம்பைக் காணும் பொருட்டு மயங்கியநான்முகனும்,எண் திசைகளையும்அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தனமலையைக்குடையாகஏந்தியதிருமாலும்சிவபிரானுடைய அடிமுடி காண இயலாது கைதொழுதுநின்றனர். அத்தகையதிருவேட்களநன்னகர் உறை இறைவனான சிவபிரான்,கயிலை மலை தளருமாறு,அதனை எடுத்த இராவணனுடையஆற்றலும்,அழகு மிக்க தோள்களும் ஆழத்துஅழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலைஊன்றிய பெருமான் ஆவார்.

குறிப்புரை: இறைவனுடைய பேர் ஒளித்திருமேனியைக் காண வருந்தியஅயனும்மாலும்அறியமுடியாமல்வணங்க நின்றதோடுஇராவணனைஆழத்தழுத்திய பெருமான் இந்நகரார் என அறிவிக்கின்றது. திருவொளி - அழல்தூணின் பேரொளி. திசைமேல்அளந்த - திக்குகள்அனைத்தையுமளந்த. கருவரை-கோவர்த்தனகிரி,அருவரை - கைலைமலை. ஆடு எழில் தோள் - வெற்றியோடு-கூடிய எழுச்சிமிக்கதோள்.

Thirumaal measured the eight directions of the Universe with his two steps. He was holding the mountain 'Goverdhan' as his umbrella (vide his incarnations). This Thirumaal and Brahma were unable to see the holy Feet and Head of Lord Civan. They were bewildered and worshipped with folded hands, Lord Civan who was then standing before them as a tall column of fire. When Raavanan, the king of Lanka tried to lift and put aside mount Kailas, it started shaking. Lord Civan then pressed the mountain with His toe. Raavanan's strength vanished; his mighty shoulders got crushed under the mountain; he got frightened and trembled. Of such glory is our Lord Civan of Thiru-vetkalam.

அத்தமண்தோய்துவராரமண்குண்டர்யாதுமல்லாவுரையேயுரைத்துப்
பொய்த்தவம்பேசுவதல்லாற்புறறுரையாதொன்றுங்கொள்ளேன்
முத்தனவெண்முறுவல்லுமையஞ்சமூரிவல்லானையினீருரிபோர்த்த
வித்தகர்வேத முதல்வர் வேட்கள நன்னகராரே.10

அத்தம் மண் தோய் துவரார்,அமண் குண்டர்,ஆதும் அல்லா உரையேஉரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால்புறன் உரை யாதொன்றும்கொள்ளேல்; 
முத்து அனவெண்முறுவல்(ல்) உமைஅஞ்ச,மூரி-வல்ஆனையின்ஈர்உரிபோர்த்த
வித்தகர்,வேதமுதல்வர் - வேட்களநன்நகராரே.

பொருள்: சிவந்த நிறமான காவி மண் தோய்ந்தஆடைகளைஅணிந்தபெளத்தர்கள்,சமணர் குண்டர்கள் ஆகியோர் பொருளற்ற சொற்களை உரைக்கின்றனர். அவர்கள் பொய்த்தவம்பேசுவதோடு,சைவத்தைப்புறனுரைத்துத்திரிவர். அவர்கள்தம் உரை எதனையும்கொள்ளாதீர். முத்துப் போன்ற வெண்முறுவல் உடைய உமையம்மைஅஞ்சுமாறு,வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவித்தகரும்,வேத முதல்வருமாகியதிருவேட்களநன்னகர்இறைவனைவணங்குமின்.

குறிப்புரை: இது யானைத்தோல்போர்த்தவித்தகர்இவ்வூரார்என்கின்றது. அத்தம் மண் - செந்நிறமான மண்.'ஆடுநீரனஅத்துமண்களும்'சிந்தாமணி, 2418.யாதும் அல்லா உரை - பொருளற்றஉரை. முறுவல் - பல். மூரி - வலிமை.

The Buddhists wearing brown red cloth and the Samanars very low in their character preach meaningless words and about their false penance. They also speak ill about Saivism and indulge in calumny. Ye companions! Do not listen to any of their sermons. Worship Lord Civan of Thiru-vetkalam who is the author of the Vedas. Goddess Umaa, whose teeth are as white as pearls, got freightened 'at the sight' of a mighty elephant. Lord Civan then stripped the elephant of its skin and covered His body with it. He is the Supreme One of Thiru-vetkalam.

விண்ணியன்மாடம்விளங்கொளிவீதிவெண்கொடியெங்கும்விரிந்திலங்க
நண்ணியசீர்வளர்காழிநற்றமிழ்ஞானசம்பந்தன்
பெண்ணினல்லாளொருபாகமமர்ந்துபேணியவேட்களமேன்மொழிந்த
பண்ணியல்பாடல்வல்லார்கள்பழியொடு பாவமிலாரே.11

விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க, 
நண்ணிய சீர் வளர் காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் அமர்ந்து பேணியவேட்களம் மேல் மொழிந்த
பண்இயல் பாடல் வல்லார்கள்பழியொடு பாவம் இலாரே.

பொருள்: சீர்வளரும்சீகாழிப் பதி விண்ணுற ஓங்கிய மாடவீடுகளையும்,வெண்மையானகொடிகள் எங்கும் விரிந்து விளங்குவதும் ஒளி தவழும் வீடுகளையும் உடையது. அந்த ஊரில்தோன்றியவர்நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன். அவர்,பெண்ணில்நல்லவளானநல்லநாயகியைஒருபாகமாக விரும்பி,ஏற்று,எழுந்தருளியுள்ளதிருவேட்களத்துஇறைவர்மீதுபாடியருளிய,பண் பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர்பழிபாவம்இலராவர்.

குறிப்புரை: இது திருவேட்களப்பதிகத்தைஒதவல்லவர்கட்குப் பழி பாவம் இல்லை என்கின்றது. புகழுக்குஅடையாளமாகவெண்கொடி எடுத்தல் மரபு. பெண்ணின் நல்லாள் - இது இத்தலத்துஅம்மையின்பெயராகிய நல்ல நாயகி என்பதை நினைவூட்டுகின்றது.

The young-saint Gnaanasambandan is a scholar in chaste Tamil. He hails from See Kaazhi. This city has many mansions that soar into the sky. The white flags fly aloft on the top of these mansions. The moonlight brightens the streets. In short everything in this town is plentiful and is still expanding. Gnaanasambandan has sung these ten verses in tuneful music on Lord Civan of Thiru-vetkalam who has accepted His consort on the left side of His physical frame. Those who can sing these melodies will be freed from sin and blame.
THIRU-CH-CHITRAM-BALAM

End of 39th Hymn

திருச்சிற்றம்பலம்

39ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

40.திரு வாழ்கொளிபுத்தூர்

திருத்தலவரலாறு:

திரு வாழ்கொளிபுத்தூர் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.  மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

இன்று திருவாளபுத்தூர் என வழங்குகிறது. தேவாரத்தில்வாழ்கொளிபுத்தூர் எனவும், வாள்ஒளிபுற்றூர் எனவும் வழங்கப்பெறுகின்றது. திருமால் மாணிக்கலிங்கத்தைத் தாபித்து வழிபட்டார். வடமொழியில்அரதனபுரம் என வழங்கும். வண்டு,அருச்சுனன் பூசித்த தலம்.  அருச்சுனன் செய்த பூசைக்கு உகந்த பெருமான் அவன் வாளைப்புற்றில் ஒளித்து வைத்திருந்து, மீட்டும் அவன் அத்தினாபுரி திரும்பும் போது அளித்தார் என்பது வரலாறு.  இதனாலேயே வாள்ஒளிபுற்றூர் ஆயிற்று என்பது புராணம். “உன் கரவாள் நின்ற வாகையின் அயல்புற்றொளித்தான்” என்பது தலபுராணப்பாடற்பகுதி. இறைவன் திருமேனி மாணிக்கம் ஆதலின்வாள்ஒளிபுத்தூர் என்பது இங்ஙனமெல்லாம்மாறிற்றோ என்று எண்ணவும் இடம் உண்டு. 
வாள் ஒளி - மிக்க ஒளி.

பதிக வரலாறு: 
திருஓமாம்புலியூரை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் திருவாழ்கொளிபுத்தூரை அடைந்தார்கள். கார் வளர்கண்டர் தாள் பணிந்தார்கள். பார்புகழ்பதிகமாகிய “பொடியுடை'  என்னும் இப்பதிகத்தைஅருளினார்கள்.

40. THIRU-VAAZH-KÕLI-PUTHOOR

THE HISTORY OF THE PLACE

The sacred city of Thiru-vaazh-kōli-puthoor is to the north of river Cauvery in Chola Naadu, and is reachable by bus from Mayilaaduthurai. The village, known by the names of Vaazhkolipuththoor and Vaal Oli Putrroor in Thevaram, is called Thiruvaalaputhur today. The Lingam is made of ruby.

திருச்சிற்றம்பலம் 
40.திரு வாழ்கொளிபுத்தார்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

பொடியுடைமார்பினர்போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடையூர்திரிந்தையங் கொண்டு பலபலகூறி
வடிவுடைவாணெடுங்கண்ணுமைபாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்
கடிகமழ்மாமலரிட்டுக்கறைமிடற்றானடி காண்போம்.1

பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி,பூதகணம் புடை சூழக், 
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு,பலபல கூறி, 
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன்வாழ்கொளிபுத்தூர், 
கடி கமழ் மா மலர் இட்டு,கறைமிடற்றான் அடி காண்போம்.

பொருள்: சிவபிரான் திருநீறு அணிந்தமார்பினன். அவர் வீரம் மிக்க விடைமீது ஏறி வருவார்.  பூதகணங்கள் அவரைப் புடை சூழ்ந்து வரும். கொடிகள் கட்டியஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக்கூறிப்பலியேற்பது அவர் வழக்கம். அவர் அழகிய வாள் போன்ற நெடிய கண்களை உடைய உமையம்மையைத் தனது இடப்பாகத்தில்கொண்டுள்ளார்.  அவர் வாழ்கொளிபுத்தூரில்எழுந்தருளி அருள் ஆட்சி செய்து வருகிறார். அவ்வூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அவரை அருச்சித்துஅக்கறைமிடற்றுஅண்ணலைக் காண்போமாக.

குறிப்புரை: இது பலிகொண்டுஉமையொருபாகனாய்எழுந்தருளியிருக்கும்நீலகண்டனதுதிருவடியை, வாழ்கொளிபுத்தூரில் சென்று மலரிட்டு வணங்குவோம் என்கின்றது. ஐயம் - பிச்சை. பிச்சை ஏற்பார் வாகனத்திலேறிப் பலர் புடைசூழச் செல்லுதல் அழகியது என நயந்தோன்ற நின்றது. வடிவு - அழகு.  புத்தூர்மிடற்றான் அடி மலரிட்டுக் காண்போம் எனக்கூட்டுக.

Lord Civan smears His body with holy ashes. He rides on the valiant bull, followed by Bhuta warriors. Along with them He goes to various towns where His flags fly and deliver different kinds of sermons and receives alms. His consort Umaa Devi abides on the left portion of His body. She has attractive, long and sharp eyes that are like a sword. He is entempled in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us go to Vaazh-kōli-puthoor and offer worship to the Lord whose neck is dark blue in colour, and take with us elegant and fragrant flowers as our offerings and rejoice at sight of His Holy Feet.

அரைகெழுகோவணவாடையின்மேலோராடரவம்மசைத்தையம்
புரைகெழுவெண்டலையேந்திப்போர்விடையேறிப்புகழ
வரைகெழுமங்கையதாகமொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்
விரைகமம்மாமலர்தூவிவிரிசடையானடிசேர்வோம்.

அரை கெழுகோவணஆடையின் மேல் ஓர் ஆடு அரவம்(ம்) அசைத்து,ஐயம் 
புரைகெழுவெண்தலைஏந்திப்,போர் விடை ஏறிப்,புகழ 
வரை கெழுமங்கையதுஆகம்ஓர்பாகம்ஆயவன் வாழ் கொளிபுத்தூர், 
விரை கமழ் மா மலர் தூவி,விரிசடையான் அடி சேர்வோம்.

பொருள்: சிவபெருமான் தனது இடையில் கட்டியகோவணஆடையின் மேல் ஆடுகின்ற அரவம் (பாம்பு) ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளார். அவர் துளை பொருந்திய வெண்மையானதலைஓட்டைக் கையில் ஏந்திப்பலியேற்கிறார். அவர் சினம் பொருந்திய விடைமேல்ஏறிப் பலரும் புகழ வருகிறார். இமவான்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக்கொண்டுள்ளார். சிவபிரான் எழுந்தருளியதிருவாழ்கொளிபுத்தூர்செல்வோம்.  அங்கு மணம் கமழும் சிறந்த மலர்களைத்தூவி, அவ்விரிசடையானின்திருவடிகளைச் சேர்வோம்.

குறிப்புரை: பிரமகபாலத்தில் பிச்சை ஏற்ற பெருமானை மலர் தூவித்தியானிப்போம்என்கின்றது.  புரை -ஓட்டை.  மங்கையதுஆகம் - உமையின் திருமேனி.

Lord Civan tightens His loincloth (Kōvanam) with the hooded snake. He holds in one of His hands the holy white skull and receives alms in it. He rides on the ferocious bull and goes round when all people pay obeisance to and praise Him. He is entempled in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us carry elegant and fragrant flowers, reach Vaazh-kōli-puthoor and offer them at the Holy Feet of Lord Civan who has matted hair (Viri-Chady-yan) and get His grace.

Note: Civa is subtle as the scent in flowers. He is therefore fittingly hailed with fragrant blossoms.

பூணெடுநாகமசைத்தனலாடிப்புன்தலையங்கையிலேந்தி
ஊணிடுபிச்சையூரையமுண்டியென்றுபலகூறி
வாணெடுங்கண்ணுமைமங்கையொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்த்
தாணெடுமாமலரிட்டுத்தலைவனதாணிழல் சார்வோம்.3

“பூண் நெடுநாகம் அசைத்து,அனல்ஆடி,புன்தலைஅங்கையில் ஏந்தி, 
ஊண் இடு பிச்சை,ஊர் ஐயம் உண்டி'என்று பல கூறி, 
வாள் நெடுங்கண் உமைமங்கைஓர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர், 
தாள் நெடு மா மலர் இட்டு,தலைவனதாள்நிழல்சார்வோம்.

பொருள்: சிவபெருமான் நெடிய பாம்பைஅணிகலனாகப்பூண்டுள்ளார். அனலைக் கையில் ஏந்தி ஆடிக்கொண்டிருக்கிறார்.  அவர் பிரம்மாவின்தலையோட்டை தனது அழகிய கைகளில் ஏந்திக்கொண்டுள்ளார். பல ஊர்களில் திரிந்து,பலவாறு கூறிக்கொண்டு மக்கள் உணவாகத் தரும் பிச்சையை தனக்கு உணவாகஏற்றுக்கொள்ளுகிறார். உமையம்மையைத் தனது ஒரு பாகமாகஏற்றிருக்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் செல்வோம். அங்கு அப்பெருமானின்திருவடிகளில் சிறந்த மலர்களைத்தூவுவோம்.  நம் தலைவனாக விளங்கும் அவன் திருவடி நிழலில்சேர்வோம்.

குறிப்புரை: இது இறைவனுக்கு மலரிட்டு வணங்கி அவன்தாள்நிழலைச்சார்வோம்என்கின்றது.  பூண் அசைத்து - ஆபரணமாகக் கட்டி.  இடுபிச்சை ஊண் உண்டி ஊர் ஐயம் என்று பலகூறி என்றது.  பிச்சைதான் உணவு என்பதைப்பலமுறையாகச் சொல்லி. தலைவன தாள் – தலைவனுடைய திருவடிகள்.  அகரம் ஆறாம்வேற்றுமைப் பன்மை உருபு (ஆறானொருமைக்கு அதுவும் ஆதுவும்பன்மைக்குஅவ்வும் உருபாம் - நன்னூல்).

Lord Civan wears a long snake in His body as an ornament. He holds in one of His hands the fire and dances. He preaches sermons wherever He goes. This Lord Civan is entempled in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us reach Vaazh-kōli- puthoor and offer worship to the Lord therein by offering elegant flowers on His Holy Feet and get from Him liberation from the cycle of birth and death. He is our Supreme Lord.

Note: Thaall Nizhal: The shade of the Lord's Feet. "Eesan enthai inai adi neezhal" (the shade of the Feet twain of Lord-Father) are the words of St. Appar.

தாரிடுகொன்றையொர்வெண்மதிகங்கைதாழ்சடைமேலவைசூடி
ஊரிடுபிச்சைகொள்செல்வமுண்டியென்றுபலகூறி
வாரிடுமென்முலைமாதொருபாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்க்
காரிடுமாமலர்தூவிக்கறைமிடற்றானடி காண்போம்.4

“தார் இடு கொன்றை,ஒர் வெண்மதி,கங்கை,தாழ்சடை,மேல் அவை சூடி, 
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி, 
வார்இடுமென்முலை மாது ஒருபாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர்க், 
கார் இடு மா மலர் தூவிக்,கறைமிடற்றான் அடி காண்போம்.

பொருள்: சிவபெருமான் கொன்றை மாலையையும்,வெண்மதியையும்,கங்கையையும், தனது தாழ்ந்து தொங்கும் சடைமுடியில்சூடியவன். ஊர்மக்கள் இடும் பிச்சையைஏற்றுக் கொண்டு அதுவே தனக்கு செல்வம்,உணவு என்று பலவாறு கூறிக்கொண்டிருப்பவன்.  அவன் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவன். சிவபிரான் எழுந்தருளியதிருவாழ்கொளிபுத்தூர்செல்வோம். கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத்தூவிக்கறைமிடறனாகியஅப்பெருமானின் திருவடிகளைக் காண்போம்.

குறிப்புரை: கார்காலத்துப்பூவைத்தூவித்திருவடியைத்தரிசிப்போம்என்கின்றது. நமக்கு உணவு ஊரர்ப்பிச்சைதான் என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்ணை ஒரு பாகமாகக்கொண்டிருக்கிறானென நயச்சுவை காண்க. வார் - கச்சு. கார் இடுமாமலர் - கார் காலத்துப்பூவாகிய கொன்றை.

Lord Civan wears on His dangling matted hair, garland of cassia flowers, the white crescent moon, and the river Ganges. He accepts the alms given by the village folks and blesses them by telling them that the alms they have given is His real asset and His food. This Lord Civan whose neck is dark blue in colour is entempled in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us collect the elegant cassia flowers which will blossom in the rainy season (October to November) and go to Vaazh-kōli-puthoor and offer them at the holy Feet of Lord Civan therein and get His grace.

கனமலர்க்கொன்றையலங்கலிலங்கக்காதிலொர்வெண்குழையோடு
புனமலர்மாலைபுனைந்தூர்புகுதியென்றேபலகூறி
வனமுலைமாமலைமங்கையொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்
இனமலரேய்ந்தனதூவியெம்பெருமானடி சேர்வோம்.5

“கன மலர்க்கொன்றைஅலங்கல்இலங்கக்,காதில் ஓர் வெண்குழையோடு
புனமலர்மாலை புனைந்து,ஊர் புகுதி” என்றே பல கூறி, 
வனமுலைமாமலைமங்கைஒர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர், 
இனமலர்ஏய்ந்தனதூவி,எம்பெருமான் அடி சேர்வோம்.

பொருள்: சிவபெருமான் கார்காலத்துமலராகிய கொன்றை மலர்மாலையை தன் திருமேனியில்அணிந்தவன். ஒரு காதில் வெண் குழை அணிந்தவன். முல்லை நிலத்து மலர்களால்தொடுக்கப்பெற்றமாலைகளைச்சூடியவன். பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப்பலியேற்பவன். அழகிய தனங்களை உடைய மலைமகளாகியபார்வதியைத் தனது ஒரு பாகமாகக் கொண்டவன். அந்த எம்பிரான் எழுந்தருளியதிருவாழ்கொளிபுத்தூர் செல்வோம். நமக்குக்இட்டியஇனமானமலர்களைத்தூவி அவனது அடிகளைச்சேர்வோம்.

குறிப்புரை: கனமலர் - பொன்போலுமலர். அலங்கல் - மாலை. புனமலர் - முல்லைநிலத்துப்- பூக்கள்.  புகுதி - புகுவாய் - ஏய்ந்தன - அருச்சிக்கத்தகுந்தன.

Wearing garlands of cassia flowers of the rainy season in His sacred body Lord Civan shines bright. He wears white ear-ring in one of His ears. He decorates His hair with garlands of forest flowers and travels over different places. There He makes many sermons and gets alms from them. Lord Civan's consort Paarvathi, daughter of the king of the Himalayan mountains having lovely breasts, abides on the left half of His body frame. This Lord Civan is entempled in Vaazh-kōli- puthoor. Ye companions! Let us go to this place with available elegant flowers and offer them at His holy Feet and get His blessings.

அளைவளாநாகமசைத்தனலாடியலர்மிசையந்தணனுச்சிக்
களைதலையிற்பலிகொள்ளுங்கருத்தனேகள்வனேயென்னா
வளையொலிமுன்கைமடந்தையொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்த்
தளையவிழ்மாமலர்தூவித்தலைவனதாளிணைசார்வோம்.

“அளை வளர் நாகம் அசைத்து,அனல்ஆடி,அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா, 
வளைஒலிமுன்கை மடந்தை ஒர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர்த், 
தளை அவிழ் மா மலர் தூவி,தலைவனதாள்இணைசார்வோம்.

பொருள்: புற்றின்கண் வாழும் பாம்பினை இடையில் கட்டியவனே! சுடுகாட்டில் ஆடுபவனே! தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் உச்சித்தலையைக் கொய்தவனே! அத்தலைஓட்டில்பலிகொள்ளும் தலைவனே! நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே என்று கூறுவோம். தனது முன்கைகளில்வளையல்கள்ஒலிக்கும் பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும்திருவாழ்கொளிபுத்தூர் செல்வோம். மொட்டவிழ்ந்தநறுமலர்களைத்தூவிஅப்பெருமானின்தாளிணைகளைச் சார்வோம்.

குறிப்புரை: கருத்தனே! கள்வனே! என்று மலர்தூவித் தாழ்ந்து சார்வோம்என்கின்றது. அளை - புற்று.  அலர்மிசை அந்தணன் - பிரமன்.  உச்சி களை தலையில் - உச்சியிலிருந்துகளையப்பட்ட தலையில்.  தளை - முறுக்கு.

Lord Civan ties on His waist a snake which normally lives in ant hills. He dances in the universal cremation ground. He is our Supreme Lord who plucked off the top head of the Lotus seated Brahma and uses His skull as a begging bowl. He is the elusive One who has captured our minds. He accommodates on the left portion of His body Goddess Paarvathi Devi who wears on her forearms jingling bangles. This Lord Civan is entempled in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us go to this place and offer, fully blossomed fragrant flowers on Lord Civan and be under His Holy Feet to get liberation.

அடர்செவிவேழத்தினீருரிபோர்த்துவழிதலையங்கையிலேந்தி
உடலிடுபிச்சையோடையமுண்டியென்றுபலகூறி
மடனெடுமாமலர்க்கண்ணியொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்த்
தடமலராயினதூவித்தலைவனதாணிழல்சார்வோம்.

“அடர் செவி வேழத்தின்ஈர்உரி போர்த்து,அழிதலைஅங்கையில் ஏந்தி, 
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி, 
மடல் நெடு மா மலர்க்கண்ணிஓர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர்த், 
தட மலர் ஆயினதூவி,தலைவன தாள் நிழல் சார்வோம்.

பொருள்: சிவபெருமான் பரந்த காதுகளை உடைய யானையைக் கொன்றவன். அதன் உதிரப் பசுமை கெடாததோலை உரித்துப் போர்த்திருப்பவன்.கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தியிருப்பவன். தாருகாவனத்து முனிவர் மகளிர் தம் கைகளால் இட்டபிச்சையோடு ஐயம்,உண்டி என்று பலகூறப்பலியேற்பவன். மடப்பம் வாய்ந்த நீல மலர் போன்ற கண்களை உடைய உமாதேவியைஒருபாகமாகக் கொண்டவன்.  அந்தத்திருவாழ்கொளிபுத்தூர்இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால்அருச்சிப்போம்.  அப்பெருமான் தாள் நிழலைச்சார்வோம்.

குறிப்புரை: ஐயமும்பிச்சையுமேஉண்பவன் என்று கூறி உமையோடிருக்குந்தலைவன்தாளைமலர்தூவிச் சார்வோம்என்கின்றது. அடர்செவி - பரந்த காது. அழி தலை - இறந்தார் தலை. என்றது பிரம கபாலம்.  பிச்சை - இரவலனாகச் சென்று ஏற்பது. ஐயம் - இடுவானாகஅழைத்திடுவது.  இவ்வேற்றுமை தோன்றவேஸ்ரீஆண்டாள்திருப்பாவையில்'ஐயமும்பிச்சையும்ஆந்தனையும் கைகாட்டி'என்றார்.  ஆத்திச்சூடியில் ஐயம் இட்டுண்” என்று இடுவார் மேலேற்றிச் சொன்னதும் இக்கருத்து நோக்கி, 'பிச்சைபுகினும்கற்கைநன்றே'என்பது இதனை வலியுறுத்தல் காண்க. உடலிடு பிச்சை – தன்வசமிழந்து தாருகாவனத்து மாதர் உடலாலிட்ட (பரவசமாகிய) பிச்சை,மாறுபட்ட என்றுமாம். உடனிடுஎன்றொரு பாடமும் உண்டு.  அங்ஙனமாயின்உடனேயிட்ட பிச்சை என்பதாம். பிச்சையிடுவார்இரவலரைக் காக்க வைத்தலாகாது என்பது மரபு,போர்த்து,ஏந்தி,உண்டி என்று கூறி ஆயவன்புத்தூர்த்தலைவன்தாணிழல் தூவிச்சார்வோம் என வினை முடிவு செய்க.

Lord Civan is the one who killed the broad-eared elephant and ripped off its skin. He then covered His body with the same blood dripping fresh from the skin. He held in His hand the skull of the snipped head of Brahma and used it as His begging bowl. He solicited alms. Also He received alms given by the ladies of saintly folks living in the Daaruka forests. Wherever He goes, He preaches many kinds of sermons. He accommodates on the left half of His body Umaa Devi whose beautiful eyes look like long blue lily flowers. This our Lord Civan is enshrined in Vaazh-kōli-puthoor. Ye companions! Let us go to this place taking fully blossomed flowers of different varieties and offer worship by reciting the Lord's names and get liberation by joining in the shadow of His holy Feet.

உயர்வரையொல்கவெடுத்தவரக்கனொளிர்கடகக்கையடர்த்து
அயலிடுபிச்சையோடையமார்தலையென்றடி போற்றி 
வயல்விரிநீலநெடுங்கணிபாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரிமாமலர்தூவித்தாழ்சடையானடி சார்வோம்.8

“உயர்வரைஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து, 
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை''என்று அடி போற்றி, 
வயல் விரி நீல நெடுங்கணிபாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர்ச், 
சய விரி மா மலர் தூவித்,தாழ்சடையான் அடி சார்வோம்.

பொருள் : சிவபெருமான்உறைகின்ற உயர்ந்த கயிலை மலையைஅசையுமாறுபெயர்த்தவன் இராவணன். அந்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமைய நெருக்கியபெருமானே! ஊர் மக்கள் இடும் பிச்சை ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே! வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையின்பாகனே!திருவாழ்கொளிபுத்தூர்இறைவனே! என்று போற்றுவோம்.  என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த மலர்களைத்தூவுவோம்! அத்தாழ் சடையன் அடிகளைச்சார்வோம்.

குறிப்புரை: ஒல்க - அசைய. அடர்த்து - நெருக்கி. ஆர்தலை என்று - உண்டலை உடைய தலைவன் என்று சயவிரி - வெற்றியோடு விரிந்த. அடர்த்து,ஆர்தலை உடையவன் என்று,பாகம் ஆயவன் தாழ்சடையான்அடிமலர்தூவிப்போற்றிச்சார்வோம்எனப் பொருள் முடிக்க. சயவிரிமலர் - வாகை மலர்.  Note : ஐயம்இரவலர்கள்கேளாமல்தாங்களாகக் கொடுப்பது: பிச்சை இரவலர்கள் கேட்டபின் கொடுப்பது.

Raavanan the king of Lanka, having shining braceleted hands and shoulders, tried to lift mount Kailas which then started shaking. Lord Civan, by pressing the top of the mountain with His toe crushed the mighty of Raavanan. Lord Civan, the Supreme, consumes the alms asked for and/or alms given by village folks. He shares the left portion of His body with His consort Umaa Devi whose eyes are long as the blue lily flower, that blossoms in the fields. Ye companions! Let us extol Lord Civan by offering elegant flowers on His holy Feet and get refuge in them.

Note: People offering alms by themselves without any request from any one.Alms given to those who asks for it.

கரியவன்நான்முகன்கைதொழுதேத்தக்காணலுஞ்சாரலுமாகா
எரியுருவாகியூரையமிடுபலியுண்ணியென்றேத்தி
வரியரவல்குன்மடந்தையொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்
விரிமலராயினதூவிவிகிர்தனசேவடி சேர்வோம்.9

“கரியவன் நான்முகன் கைதொழுதுஏத்தக்,காணலும்சாரலும் ஆகா 
எரிஉரு ஆகி,ஊர் ஐயம் இடு பலி உண்ணி” என்று ஏத்தி, 
வரிஅரவு அல்குல் மடந்தை ஒர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர், 
விரிமலர்ஆயினதூவி,விகிர்தன சேவடி சேர்வோம்.

பொருள்: சிவபெருமானைத்திருமாலும்நான்முகனும் கைகளால் தொழுதேத்திக்காணவும் சாரவும்இயலாதவனே! எரி உரு ஆகியவனே! பல ஊர்களிலும் திரிந்து ஐயம்,பிச்சை ஆகியவற்றை உண்பவனே! என்று போற்றுவோம். பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் நம் வாழ்கொளிபுத்தூர் இறைவன். அவனை விரிந்த மலர்களைக் கொண்டு தூவிவழிபடுவோம்.  விகர்தனாகிய அவன் சேவடிகளைச்சேர்வோம்.

குறிப்புரை: மால் அயன் இருவர்க்கும்அறியலாகாவிகிர்தன் அடி சேர்வோம்என்கின்றது. கரியவன் - திருமால். கரியவன் சாரலும்,நான்முகன் காணலுமாகாஎனக்கூட்டுக. எரியுரு - அக்னிமலையின் வடிவு வரி யரவு - பொறிகளோடு கூடிய பாம்பின் படம். விகிர்தன - சதுரப்பாடுடையவனது.

Ye companions! Let us hail Lord Civan as the One who rose up as a tall column of fire, the base and top of which could neither be seen nor reached by the dark coloured Thirumaal or by the four faced Brahma, who both adored Him with folded hand. He is the One who roams about in many towns and consumes food asked for and/or given by people living therein. He is the One who concorporates His consort Umaa Devi whose forelap is like unto the hood of speckled serpent. Let us worship this Lord Civan of Vaazh-kōli-puthoor, offering blooming flowers and gain His salvific Feet.

Note: The dark One: Vishnu 
Vikirthan: He who is pre-eminent Supreme Lord.

குண்டமணர்துவர்க்கூறைகள்மெய்யிற்கொள்கையினார் புறங்கூற 
வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்றுவிளம்பி
வண்டமர்பூங்குழன்மங்கையொர்பாகமாயவன்வாழ்கொளிபுத்தூர்த்
தொண்டர்கண்மாமலர்தூவத்தோன்றிநின்றானடி சேர்வோம்.10

“குண்டு அமணர்,துவர்க்கூறைகள்மெய்யில்கொள்கையினார்,புறம்கூற, 
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி, 
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர்பாகம்ஆயவன்வாழ்கொளிபுத்தூர்த், 
தொண்டர்கள் மா மலர் தூவத்,தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

பொருள்: சிவபெருமானைக் கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்தபுத்தர்களும் புறம் பேசுவர்.  வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று அடியவர்கள் புகழ்ந்து போற்றுவார்கள். வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் அவன். அவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர்செல்வோம். அங்கு அடியவர்கள் சிறந்த மலர்களைத்தூவி வழிபட அவர்களுக்குக் காட்சி அளிப்பவனாகியசிவனடிகளைச்சேர்வோம்.

குறிப்புரை: அமணர் புறங்கூற,பிச்சையேற்பவன்என்றுகூறிமலர்தூவ நின்றான் அடி சேர்வோம் என்கின்றது. புறச்சமயத்தார்பொருந்தாதன கூறவும், நம்போல்வார்க்குவெளிப்பட்டு அருள் செய்யும்.

The obese Samanars and Buddhists who wear saffron cloth speak ill of Lord Civan behind His back. Without minding their ill will, He is the One who likes to get alms in the white skull. He concorporates with His consort Umaa Devi in whose lovely hair-lock bees are humming. Devotees gather in Vaazh-kōli-puthoor and worship Lord Civan with elegant flowers and reach the holy Feet of the Lord who gives them His divine vision.

கல்லுயர்மாக்கடனின்றுமுழங்குங்கரைபொருகாழியமூதூர்
நல்லுயர்நான்மறைநாவின்நற்றமிழ்ஞானசம்பந்தன்
வல்லுயர்சூலமும்வெண்மழுவாளும்வல்லவன்வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லியபாடல்கள்வல்லார்துயர்கெடுதல்லெளி தாமே.4

கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொருகாழியமூதூர்
நல்உயர்நான்மறைநாவின்நல-தமிழ் ஞானசம்பந்தன்
வல்உயர்சூலமும்வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லியபாடல்கள்வல்லார் துயர் கெடுதல்எளிதாமே

பொருள்: மலைபோல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல்,பெரிய கரையோடு மோதி முழங்குவதுகாழிப்பழம்பதி. அங்கு தோன்றியவன்,உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ்ஞானசம்பந்தன். வலிதாக உயர்ந்த சூலம்,வெண்மையானமழு, வாள் ஆகியவற்றைப்பயன்படுத்துவதில் வல்லவன் சிவபிரான். அந்தச் சிவபிரான் விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப்போற்றிச்சொல்லிய பாடல்களை ஓதவல்லவர்களுக்குதுயர்கள் எளிதில் கெடும்.

குறிப்புரை: பாடல்வல்லார்துயர்கெடுதல்எளிதாம்என்கின்றது. கல்லுயர்மாக்கடல் – மலைபோலத் திரையுயர்ந்துவரும் கரிய கடல். வல்லுயர் சூலம் - வலிய உயர்ந்த சூலம் – துயர்கெடுதல்எளிதாம் என்றது வாதநோய்க்குச்சரப செந்தூரம் போலப்பிறவித்துயருக்குச் சிறந்த மருந்தாதலின்எளிதாம் என்றவாறு,

The elegant Tamil Gnaanasambandan, the articulator of the lofty four Vedas hails from See Kaazhi. Here the high waves of the sea rise to mountain heights and dash against the shores making heavy noise. Gnaanasambandan has sung ten verses on Lord Civan of Vaazh-kōli-puthoor who is adept at using the weapons of valour - the trident, the white battle-axe and the sword. Those who can sing these ten verses will easily get rid of their lives' misery.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 40th Hymn

திருச்சிற்றம்பலம்

40ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

41.திருப்பாம்புரம்

திருத்தலவரலாறு:

திருப்பாம்புரம் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். பேரளம் - கும்பகோணம் பேருந்து வழியில் உள்ளது. பாம்பு புரம் என்பது பாம்புரம் என மருவியது. நாகராஜன் பூசித்த தலம். ஆதிசேடனுடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ளன.  இறைவன் பெயர் பாம்புரேஸ்வரர். இறைவி வண்டார்குழலி. தலவிருட்சம்வன்னி. தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்.

கல்வெட்டு: 
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்15 உள்ளன.  அவை இராஜராஜன், இராஜேந்திரன், திரிபுவனவீரதேவன்,மூன்றாம் குலோத்துங்கன்,சுந்தரபாண்டியன்,சரபோஜிமன்னர்கள் காலத்தன. இத்தலம்உய்யக்கொண்டார்வளநாட்டுத்திருப்பாம்புரம் என வழங்கப்படுகிறது. இறைவன் திருப்பாம்புரம் உடையார் எனவும்,இறைவி மாமலை- யாட்டியாள் எனவும் வழங்கப்படுகின்றனர்.

இராஜராஜதேவன் காலத்தில் சோழிய-தரைய-வேளான் தாமோதரையனால் கோயில்2ஆம் பிராகாரத்தில் மண்டபம் கட்டவும்இதனைப்பராமரிக்கவும்நிலமளிக்கப்பட்டது. வசந்த மண்டபத்தை சரபோஜிமன்னனுடையபிரதிநிதியானசுபேதார்ரகுபண்டிதராயன் கட்டினான்.  கி.பி.1209இல் திருப்பாம்புரத்தில்கடும்பஞ்சம்நிலவியது. ஒரு பொற்காசுக்கு3 படி நெல் விற்றது.  பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன் தன்னுடைய இரண்டு பெண்களை நூறு பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாகவிற்றான்.

பதிக வரலாறு:

ஆக்கூர் தான்தோன்றி மாடத்துஇறைவனைவணங்கிப்பதிகம்பாடிப் போற்றி,வழியிலுள்ள பிறதலங்களையும்வணங்கிக் கொண்டு திருமீயச்சூரை அடைந்த பிள்ளையார்,அங்கும் அவ்வாறு பணிந்தெழுந்து,திருப்பாம்புரம் சென்று சேர்ந்தார்கள். பாம்புரநாதரைப்பதிகஇன்னிசையால்பாடத் திருவுளம்பற்றி,சீரணி திகழ் என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.

41. THIRU-P-PAAM-PURAM

THE HISTORY OF THE PLACE

          The sacred city of Thiru-p-paam-puram is to the north of river Cauvery in Chola Naadu, and is in the bus route between Peralam and Kumbakonam. The name Paampuram seems to be a corrupted form of Paambu Puram. The Lord God is known by the name of Paampuresuvarar and the Goddess as Vandaarkuzhali. In the inscriptions, the names are given as Thiruppaampuramudaiyaar for the Lord and Maamalaiyaattiyaal for the Goddess. The sacred tree is Vanni and the sacred ford is known as Aadhisesha Theerththam. Vinaayakar is called Raajaraajap Pillaiyaar. Naagaraajan offered worship here. Aadhiseshan are seen in the temple.Both the fixed and the processional images of the fifteen inscriptions here are from the period of Chola kings from Raajaraajan to Kuloththungkan III, Sundharapaandiyan and Sarafoji. During the reign of Raajaraajan, a grant was made for building and maintaining a mandapam in the second ambulatory. The Vasantha Mandapam was built by Subedhaar Raghu Panditharaayan, a representative of King Sarafoji.

           A sad piece of information from the inscription is that in the year 1209 CE a severe famine occurred here and the price of paddy rose to three measures for one gold 'kaasu'. Driven to destitution by the famine, a farmer sold his two daughters to the temple for the price of 100 gold 'kaasus'.


INTRODUCTION TO THE HYMN

Adoring the Lord-God at His many shrines the boy Saint arrived at Meeyacchur whence he came to Paampuram and sang the following hymn.

திருச்சிற்றம்பலம் 
41. திருப்பாம்புரம்
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

சீரணிதிகழ்திருமார்பில்வெண்ணூலர்திரிபுரமெரிசெய்தசெல்வர்
வாரணிவனமுலைமங்கையோர்பங்கர்மான்மறியேந்தியமைந்தர்
காரணிமணிதிகழ்மிடறுடையண்ணல்கண்ணுதல்விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தருநான்மறையாளர்பாம்புர நன்னகராரே.1

சீர் அணி திகழ் திருமார்பில்வெண்நூலர்,திரிபுரம் எரிசெய்தசெல்வர், 
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர்,மான் மறி ஏந்தியமைந்தர், 
கார் அணி மணிதிகழ் மிடறு உடை அண்ணல்,கண்ணுதல்,விண்ணவர் ஏத்தும் 
பார் அணி திகழ்தருநால்மறையாளர் - பாம்புரநன்நகராரே.

பொருள்: விண்ணவர்போற்றும்திருப்பாம்புரநன்னகரில் வீற்றிருப்பவர் சிவபெருமான்.  இவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல்அணிந்தவர்.  திரிபுரங்களைஎரித்தவீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப்பொருந்தியவர். மான்குட்டியை கையில் ஏந்தியவர் நீலமணிபோலும்திகழ்கின்றகண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளைஅருளியநெற்றிக்கண்ணர் இவர் ஆவார்.

குறிப்புரை: பாம்புரநன்னகரார் இயல்புகள் இவை என்கின்றது. சீர் அணி திகழ் - புகழ் அழகு இவைகள் விளங்கும் செல்வர் என்றது தம்கையிலிருந்து ஒன்றையும் ஏவாதே. இருந்த நிலையில் இருந்தே விளைக்கப் பெற்ற வீரச்செல்வத்தையுடையவர். வார் - கச்சு. மான்மறி - மான்குட்டி. கார் அணி மணி திகழ் மிடறு - கரிய அழகிய நீலமணி போலும் மிடறு.

Lord Civan of Thiru-p-paam-puram is adored by all celestials. He wears a three- ply sacred thread in His jewels decorated handsome chest. He is the valiant Lord who destroyed the Asura's three citadels without using any war weapon. He accommodated Umaa Devi, who wears a corset over her soft breasts, on the left half of His frame. He is the Lord whose dazzling neck is of the colour of the sapphire gem. He is the author of the admirable four Vedas that are world famous. He has a third eye in His forehead.

கொக்கிறகோடுகூவிளமத்தங்கொன்றையொடெருக்கணிசடையா்
அக்கினொடாமைபூண்டழகாகஅனலதுவாடுமெம்மடிகள்
மிக்கநல்வேதவேள்வியுளெங்கும்விண்ணவர்விரைமலர்தூவப்
பக்கம்பல்பூதம்பாடிடவருவார்பாம்புர நன்னகராரே.2

கொக்குஇறகோடுகூவிளம்மத்தம்கொன்றையொடு எருக்கு அணி சடையர். 
அக்கினொடு ஆமை பூண்டு அழகுஆகஅனல்அதுஆடும்எம்அடி கள், 
மிக்க நல்வேதவேள்வியுள் எங்கும் விண்ணவர்விரைமலர்தூவப், 
பக்கம் பல்பூதம்பாடிட,வருவார் - பாம்புரநன்நகராரே.

பொருள்: சிவபெருமான் திருப்பாம்புரநன்னகர்இறைவராவார். இவர் கொக்கிறகு என்னும் மலர்,வில்வம்,ஊமத்தம்பூ,கொன்றை மலர் எருக்க மலர் ஆகியவைகளைத் தனது சடைமுடியில்அணிந்தவர். எம்தலைவராகிய இவர் சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண்ஆடுபவர். விண்ணோர்கள் மணம் கமழும்மலர்களால் அருச்சிக்கவும் அருகில் பூதங்கள் பல பாடவும் வருவார்.

குறிப்புரை: இது அவருடைய அணிகளை அறிவிக்கின்றது. கொக்கிறகு - ஒருவகைப்பூ. கொக்கின் இறகுமாம். கூவிளம் - வில்வம். மத்தம் - ஊமத்தம்பூ. அக்கு - சங்குமணி. வேதவேள்வி – வைதிக யாகம். விரை - மணம்.

Lord Civan wears in His matted hair kokkirahu flower, Bael tree, Datura flower, cassia flower and madar flower. Our Lord God is decorated with tortoise and conch shells. He dances enchantingly in the fire. The celestial gods chanting the Vedas and performing sacrifices adore Lord Civan with elegant and fragrant flowers. He goes around accompanied by the singing Bhuta hosts. His is the grand town Paampuram.


Note: Kokkiraku: The stork's feather. Kokku also refers to an Asura who played havoc,
assuming the form of a cruel crane. Civa did away with him and wore a feather of his.
Mattham: The Datura plant.
Kuvilam: The Vilva tree / Bael tree.
Erukku: Madar.

துன்னலினாடையுடுத்ததன்மேலோர்சூறைநல்லரவதுசுற்றிப்
பின்னுவார்சடைகள்தாழவிட்டாடிப்பித்தராய்த்திரியும்மெம் பெருமான் 
மன்னுமாமலர்கள்தூவிடநாளும்மாமலையாட்டியுந்தாமும்
பன்னுநான்மறைகள்பாடிடவருவார்பாம்புர நன்னகராரே.3

துன்னலின் ஆடை உடுத்து,அதன் மேல் ஒர் சூறை நல் அரவு அது சுற்றிப், 
பின்னுவார்சடைகள்தாழவிட்டுஆடிப்,பித்தர்ஆய்த்திரியும் எம்பெருமான், 
மன்னு மா மலர்கள் தூவிட,நாளும் மாமலையாட்டியும்தாமும், 
பன்னும்நால்மறைகள்பாடிட,வருவார் - பாம்புரநன்நகராரே.

பொருள்: திருப்பாம்புரநன்னகர்இறைவர்கோவணஆடையைஅணிந்திருப்பவர்.  அதன்மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றி இருப்பவர். பின்னிய நீண்ட சடைகளைத்தாழவிட்டுக் கொண்டு பித்தராய்ஆடித்திரிபவர்எமது பெருமான்.  அவர் மேல் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத்தூவி ஒவ்வொரு நாளும் நாம் வழிபட வேண்டும். அப்போது மலையரசன்மகளாகியபார்வதியும்தாமுமாய்,நான்மறைகளை அடியவர்"புகழ்ந்துபோற்றிப்பாடிக்கொண்டுவர,நம்முன் காட்சி தருவார்.

குறிப்புரை: கோவணமுடுத்துப்பாம்பைச்சுற்றிச்சடைதாழநின்றாடும்பித்தர்;அன்பர்கள் மலர்தூவி வழிபட உமையும்தானும் வருவார்.'அவரே பாம்புரநகரார்என்கின்றது. துன்னலின் ஆடை – கோவண ஆடை,சூறை நல் அரவு - காற்றையுட்கொள்ளும் பாம்பு.

Lord Civan of Paampuram wears a loincloth in His waist and to hold it fast, tightens it with cobra, which inhales air. His plaited strands of matted hair is hanging on His back. With this external appearance, He roams about dancing like a demented one. He is our Lord. Let us worship Him daily with elegant and fragrant flowers. Accompanied by Devas who were chanting the four Vedas and along with His consort Paarvathi Devi daughter of the king of Himalayas, He will give us His divine appearance.

Note: As a snake can live without food for many days, it is supposed to subsist on air.

துஞ்சுநாள்துறந்துதோற்றமுமில்லாச்சுடர்விடுசோதியெம் பெருமான் 
நஞ்சுசோகண்டமுடையவென்நாதர்நள்ளிருள்நடஞ்செயுந்நம்பர்
மஞ்சுதோய்சோலைமாமயிலாடமாடமாளிகைதன்மேலேறிப்
பஞ்சுசேர்மெல்லடிப்பாவையர்பயிலும்பாம்புரநன்னகராரே.

துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச்சுடர்விடு சோதி எம்பெருமான், 
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர்,நள்இருள்நடம்செயும் நம்பர் - 
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாடமாளிகைதன்மேல் ஏறி, 
பஞ்சு சேர் மெல்அடிப்பாவையர்பயிலும் - பாம்புரநன்நகராரே.

பொருள்: மேகங்கள் தோயும்சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடுகின்றன.  மாடமாளிகைகளில் ஏறி,செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய பாதங்களை உடைய பெண்கள் ஆடுகின்றனர். சிவபெருமான் இவ்விதசிறப்புக்களைக் கொண்ட திருப்பாம்புர நன்னகரின்இறைவர் ஆவார். எம்பெருமான் இறக்கும் நாள் இல்லாதவராய்,தோற்றமும் இல்லாதவராய் ஒளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த்திகழ்பவர். இவர் விடம் பொருந்திய கண்டத்தை உடையவர். நள்ளிருளில் நடனம் புரியும் நம்பப்படத்தக்க கடவுளாவார்.

குறிப்புரை: இறப்பு பிறப்பு இல்லாத சோதியாய்,சர்வசங்காரகாலத்துநள்ளிருளில்நட்டமாடும் நம்பர் இவர் என்கின்றது. துஞ்சுநாள் துறந்து - இறக்கும்நாள் இன்றி. நள் இருள் - நடு இரவு. நம்பர் - நம்பப்படத்தக்கவர். மஞ்சு - மேகம். பஞ்சுசேர் - செம்பஞ்சக் குழம்பு பூசப்பெற்ற.

Lord Civan is birthless and deathless and has only a subtle body. He took the form of brilliant and dazzling fire. He is our Lord whose neck is coloured like that of sapphire gem because He swallowed poison. He loves to dance in the midnight.

Paampuram is surrounded by gardens over which clouds move and where the beautiful peacocks dance. In this town damsels go to the top of the mansions and sing. Their soft rosy feet are smeared with red-cotton dye. This gorgeous Paampuram is our God's place.

நதியதனயலேநகுதலைமாலைநாண்மதிசடைமிசையணிந்து
கதியதுவாகக்காளிமுன்காணக்கானிடைநடஞ்செய்தகருத்தர்
விதியதுவழுவாவேதியர்வேள்விசெய்தவரோத்தொலியோவாப்
பதியதுவாகப்பாவையுந்தாமும்பாம்புரநன்னகராரே.

நதிஅதன்அயலேநகுதலைமாலை,நாள்மதி,சடைமிசை அணிந்து, 
கதிஅதுஆக,காளி முன் காணக்,கான்இடை நடம் செய்த கருத்தர்; 
விதி அது வழுவாவேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப் . 
பதிஅதுஆகப்பாவையும்தாமும் - பாம்புரநன்நகராரே.

பொருள்: விதிமுறை வழுவாமல்வேதியர்கள்,வேள்விகள்பல செய்து வருகின்றனர்.  அதனால் வேத ஒலி நீங்காத பதி அது என விரும்பி உமையம்மையும்தாமுமாய்த் திருப்பாம்புரநன்னகரில் விளங்குகிறார் நம் இறைவர். தம் சடைமுடிமீதுகங்கையின் பக்கத்தில் சிரிக்கும்தலைமாலையையும்பிறைமதியையும்அணிந்துள்ளார். இந்த அணிகள் நடனத்திற்குரிய கதி அதுவே என்னும்படி,காளி முன்னே இருந்து காண,இடுகாட்டுக்குள் நடனம் செய்த தலைவர் இவர் ஆவார்.

குறிப்புரை: தலையில் கங்கை,கபாலம்,பிறை முதலியன அணிந்து காளியோடு நடனமாடிய நாதர் இவர் என்கின்றது. நதி - கங்கை. நகுதலை - உடலைச் சதம் என்றிருக்கின்றபிறரைப்பார்த்துச்சிரிக்கின்ற தலை. கதியதுவாக - நடனகதிஅதுவாக. கான் - இடுகாடு. ஒத்துஒலி - வேத ஒலி.ஓவா - நீங்காத.

Lord Civan wears on His matted hair the crescent moon, the river Ganges and the garland of skulls which seems to smile. He is the Lord who dances in measured steps as per the rules of dancing, in the cremation ground witnessed by Kaali, goddess of war. His is the great town Paampuram where He abides with His consort Umaa Devi. This place resounds with the chanting of the Vedas since the virtuous perform the sacrificial fire according to the rules ordained.

ஓதிநன்குணர்வார்க்குணர்வுடையொருவரொளிதிகழுருவஞ்சேரொருவர்
மாதினையிடமாவைத்தஎம்வள்ளல்மான்மறியேந்தியமைந்தர்
ஆதிநீயருளென்றமரர்கள்பணியஅலைகடல்கடையவன்றெழுந்த
பாதிவெண்பிறைசடைவைத்தவெம்பரமர்பாம்புர நன்னகராரே.6

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்;ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்; 
மாதினைஇடமா வைத்த எம் வள்ளல்;மான்மறி ஏந்தியமைந்தர்; 
“ஆதி,நீ அருள்!” என்று அமரர்கள் பணிய,அலை கடல் கடைய,அன்று எழுந்த 
பாதிவெண்பிறை சடை வைத்த எம்பரமர் - பாம்புரநன்நகராரே.

பொருள்: திருப்பாம்புரநன்னகர்இறைவர் கல்வி கற்றுத் தெளிந்த ஞானியர்களால் உணரப்படும்ஒருவராவார். ஒளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர் எம் வள்ளல் ஆவார். இளமான்மறியைக் கையில் ஏந்திய மைந்தர் ஆவார். திருப்பாற்கடலைக்கடைந்த பொழுது எழுந்த ஆலகாலவிடத்திற்கு அஞ்சியதேவர்கள், “ஆதியாக விளங்கும் தலைவனே,நீ எம்மைக்காத்தருள்க” என வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கு இணங்கி நஞ்சினைஉண்டும்,கடலினின்று எழுந்த பிறை மதியைச்சடையிலேவைத்தும் அருள் புரிந்தவர் எம் மேலான தலைவராயெ சிவபிரான் ஆவார்.

குறிப்புரை: ஓதியுணர்வார்க்குஞானமாக இருக்கும் நாதனாகியபிறைசூடிய பெருமான் இவர் என்கின்றது. உணர்தல் - கல்வியைத்துணையாகக் கொண்டு கற்றுத் தெளிந்து அறிதல். உணர்வுடை ஒருவன் - உணரத்தக்க ஒப்பற்றவன். ஒளிதிகழ் உருவம் - ஒளியாக விளங்கும் சோதியுருவம். வள்ளல் என்றது சத்தியொடு கூடிய வழியே சிவம் கருணையை மேவி வள்ளன்மைபூணுதலின். ஆதி - முதலுக்கெல்லாம்முதற்பொருளாய் இருப்பவன். கடலில் எழுந்த பொருள்கள் ஆகிய இலக்குமி,விஷம், பிறை,உச்சைசிரவம் (இந்திரன் குதிரை),கெளத்துவம் (திருமால் மார்பில் அணியும் மணி) முதலிய பொருள்களில்ஒன்றாகிய பிறை.

Lord Civan is the peerless One who can be understood and known only by those mature scholars who meticulously acquire the real knowledge, cultivate, develop and adhere to it. He takes the form of a dazzling fire. He is our Patron who keeps His consort Umaa Devi in His left part of His body. He is our young, strong and powerful One who holds a young female deer in one of His hands. While churning the sea of milk, the cruel poison came out of the sea. Frightened by the poison, the Devas ran to Lord Civan and begged Him saying "O! Beginningless! Thou the first Supreme Lord! Protect us from death". Lord Civan graced them by swallowing the poison and keeping the moon which also came out of the sea, in His matted hair. He is our Supreme Lord.

Note: A slice of the white (full) moon: The word 'Paathi' does not mean half. Paathi means part. It is cem-paathi which is half. The full moon arose from the milky ocean. It began to wane by reason of a curse. Civan saved it from its impending and total disaster by wearing it in its crescent-form. Without invoking the aid of Civa, Devas and Asuras took to the churning of the ocean, all in vain. Then is dawned on them that their mighty venture would only prove to be a futile exercise. So, they sincerely prayed to Civan and started afresh.

மாலினுக்கன்றுசக்கரமீந்துமலரவற்கொருமுகமொழித்து
ஆலின்கீழறமோர்நால்வருக்கருளியனலதுவாடுமெம்மடிகள்
காலனைக்காய்ந்துதங்கழலடியாற்காமனைப்பொடிபடநோக்கிப்
பாலனுக்கருள்கள்செய்தவெம்மடிகள்பாம்புரநன்னகராரே. [

மாலினுக்கு அன்று சக்கரம் ஈ ந்து,மலரவற்கு ஒரு முகம் ஒழித்து, 
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்குஅருளி,அனல் அதுஆடும்எம் அடிகள்; 
காலனைக் காய்ந்து தம் கழல்அடியால்காமனைப்பொடிபட நோக்கி, 
பாலனுக்குஅருள்கள் செய்த எம் அடிகள் - பாம்புரநன்நகராரே.

பொருள்: திருப்பாம்புரநன்னகர்இறைவர் முன்பு திருமாலுக்குச்சக்கராயுதம்அளித்தவர்.  தாமரை மலர் மேல் உறையும்பிரமனதுஐந்தலைகளில் ஒன்றைக் கொய்தவர். சனகாதி முனிவர்கள்நால்வருக்குக்கல்லாலின்கீழிருந்து அறம் அருளியவர்.தீயில்நடனமாடுபவர்.  தமது கழலணிந்ததிருவடியால்காலனைக்காய்ந்தவர். காமனைப்பொடிபடநோக்கியவர்.  உபமன்யுமுனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்த தலைவர் ஆவார்.

குறிப்புரை: இது வீரச்செயலை விளக்குகின்றது. சக்கரமீந்ததுதிருவீழிமிழலையில் நடந்த செய்தி. ஒரு முகம் ஒழித்தது திருக்கண்டியூர்ச் செய்தி. காலனைக் காய்ந்தது கடவூர்ச் செய்தி. காமனைஎரித்தது குறுக்கைச் செய்தி. நால்வர் - சனகாதியர். அறம் - சிவாநுபவத் திறம். பாலன் - உபமன்யு.

In the days of yore Lord Civan gifted a Disc (a war weapon) to Vishnu. Brahma is normally seated in lotus flower. Lord Civan snipped off one of the five heads of Brahmaa. Seated under the Banyan tree, which has no stilt roots, He imparted the Divine knowledge to the four saints Chanakar, Chanandanar, Chanaadarar and Chanarkumaarar. He turned His eyes upon Kaaman and burnt him to ashes instantaneously. He is our Supreme Lord who graced the child Upamanyu (son of Vyakrapaadar) by bringing the sea of milk from Devaloka to earth.

Note: The Disc: This sprocket wheel was gifted to Vishnu at Tiruveezhimizhalai: Civa severed one of the heads of Brahma at Kandiyur. Civa explicated the dharma to the four sages seated under the Banyan tree at Mount Kailash. Civa kicked Yama (God of Death) at Kadavur.
Kaama: The god of love. He was reduced to ashes by the fire of Civa's third eye at Kailash. According to the Tamil tradition, this event took place in Kurukkai. 
The Child: Upamanyu the son of St. Vyaakrapaadar.

விடைத்தவல்லரக்கன்வெற்பினையெடுக்கமெல்லியதிருவிரலூன்றி
அடர்த்தவன்றனக்கன்றருள்செய்தவடிகளனலதுஆடுமெம்மண்ணல்
மடக்கொடியவர்கள்வருபுனலாடவந்திழியரிசிலின்கரைமேல்
படப்பையிற்கொணாந்துபருமணிசிதறும்பாம்புர நன்னகராரே.8

விடைத்தவல்அரக்கன்வெற்பினை எடுக்க மெல்லிய திருவிரல் ஊன்றி, 
அடர்த்தஅவன்தனக்கு அன்று அருள்செய்த அடிகள்;அனல்அதுஆடும்எம்அண்ணல்
மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட,வந்து இழிஅரிசிலின்கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் - பாம்புரநன்நகராரே.

பொருள்: இளங்கொடி போன்ற பெண்கள் அரிசிலாற்றில்நீராட வருகின்றனர். அந்த நத, ஆற்றங்கரைத்தோட்டங்களில்,பெரிய மணிகளை அடித்து வந்து சேர்க்கின்றன.  திருப்பாம்புரநன்னகர்இறைவர் இங்கு வீற்றிருக்கிறார். செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தபோது மெல்லிய திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை நெருக்கினார். பின்னர் இராவணன் தன் பிழையை உணர்ந்து வருந்தி இறைவனைப் போற்றினான். அதன்பின் அவனுக்கு அருள்பல செய்தவர் நம் தலைவர் ஆவார்.

குறிப்புரை: கைலையைஅசைத்தஇராவணனைவலியடக்கிய அடிகள்,அரிசிலாற்றங்கரையில்பருமணி சிதறும்பாம்புரநகரார்என்கின்றது. விடைத்த - செருக்குற்றஅடர்த்து - நெருக்கி. அடர்த்து அருள்செய்த என்றது மறக்கருணையும்அறக்கருணையும் காட்டி ஆட்கொண்டது. அனல் - ஊழித்தீ.  அரிசிலின்கரைமேல் (புனல்) மணிசிதறும் நகர் எனப் பொருள் முடிக்க. படப்பை - தோட்டம்.

Civan of Paampuram is our noble Lord who dances on fire. Creeper-like damsels go to the river known as Arisilaaru for their daily bath. This river brings along the water gems of different varieties and strew them in the gardens which are on the banks of the river. The Lord of Paampuram pressed the mountain (Kailas) with His soft toe when it was uprooted by the haughty Raavanan. Civan granted him boons when he regretted and graced him.

கடிபடுகமலத்தயனொடுமாலுங்காதலோடடிமுடிதேடச்
செடிபடுவினைகடீர்த்தருள்செய்யுந்தீவணரெம்முடைச்செல்வர்
முடியுடையமரர்முனிகணத்தவர்கள்முறைமுறையடிபணிந்தேத்தப்
படியதுவாகப்பாவையுந்தாமும்பாம்புரநன்னகராரே.

கடி. படு கமலத்துஅபனொடுமாலும்,காதலோடு அடிமுடி தேடச், 
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்;எம்முடைச்செல்வர்; 
முடி உடை அமரர் முனிகணத்தவர்கள்முறைமுறை அடிபணிந்து ஏத்தப், 
படிஅதுஆகப்பாவையும்தாமும் - பாம்புரநன்நகராரே.

பொருள்: முடிசூடியஅமரர்களும்முனிகணத்தவர்களும் முறையாக சிவபெருமான் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி வாய்ந்த நல்ல இடம் திருப்பாம்புரம். இந்த நன்னகரத்தில்உமையம்மையும்தாமுமாய்எழுந்தருளி இருக்கிறார். மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும்திருமாலும் அன்போடு அடிமுடி காண முடியாமல் திகைத்து நின்றனர். அப்போதுதீவண்ணராய்த்தோன்றியசிவனார்தூறாகமண்டிக் கடக்கும்வினைகள்பலவற்றையும் தீர்த்து அவர்களுக்கும் அருள் செய்தார். இவர் எம் செல்வர் ஆவார்.

குறிப்புரை: அடி.முடிதேடியஅயனுக்கும்மாலுக்கும்அருள்செய்தசெல்வர் இவர் என்கின்றது. கடி - மணம். செடிபடுவினைகள் - தூறாகமண்டிக் கிடக்கும் வினைகள். படி - தகுதி.

Brahma of the fragrant Lotus flower and Vishnu, both in all eagerness went in search of the head and the Holy Feet of Lord Civan and failed. This resplendent Lord of ours annulled the entire evil effects of their bad karma and graced them. He abides along with His consort Umaa Devi in Paampuram which deserves to be the place for celestial gods and saintly ganaas to visit and adore His Holy Feet in an orderly manner.

Note: The punishment meted out to Brahmaa is also an act of grace. Says the
Sivagnaana Siddhiyaar "Viewed anywise the act of God is but an act of grace”.

குண்டர்சாக்கியருங்குணமிலாதாருங்குற்றுவிட்டுடுக்கையர்தாமுங்
கண்டவாறுரைத்துக்கானிமாத்துண்ணுங்கையர்தாமுள்ளவாறறியார்
வண்டுசேர்குழலிமலைமகணடுங்கவாரணமுரிசெய்துபோர்த்தார்
பண்டுநாஞ்செய்தபாவங்கள்தீர்ப்பார்பாம்புர நன்னகராரே.10

குண்டர்,சாக்கியரும்,குணம் இலாதாரும்,குற்றுவிட்டு,உடுக்கையர்தாமும், 
கண்டஆறுஉரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர் தாம் உள்ளஆறுஅறியார்; 
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்துபோர்த்தார்; 
பண்டு நாம் செய்த பாவங்கள்தீர்ப்பார் - பாம்புரநன்நகராரே.

பொருள்: பரு உருவம் படைத்த சமணர்களாலும்புத்தர்களாலும்,மிகச் சிறிய ஆடையை அணிந்தும் கண்டபடி பேசக்கொண்டும்,நின்றபடியே உண்ணும் சமணத்துறவியராலும், உள்ளபடி அறியப்படாதவராகுிய சிவபெருமான் திருப்பாம்புரநன்னகரின்இறைவர் ஆவார்.  வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களைத்தீர்ப்பவர்.

குறிப்புரை: புறச்சமயிகட்குஅறியப்பெறாதவர்என்கின்றது. குண்டர் - பருஉடல் படைத்த சமணர்கள்.  சாக்கியர் - புத்தர். குற்றுவிட்டுஉடுக்கையர் - மிகச்சிறியஆடையைஉடையவர்கள். கானிமிர்த்து உண்ணும் கையர் - நின்றபடியே உண்ணும் கீழ்மக்கள். இவர்களை'நின்றுண் சமணர்” என்பர். வண்டு சேர்குழலி மலைமகள் நடுங்க என்றது. அம்மையின் மென்மை அறிவித்தது. வாரணம் - யானை. பண்டு -முன்பு.

The Samanars are obese and eat in the standing posture. Buddhists wear minimum cloth. They both do not realise and know the greatness of Lord Civan. He stripped the skin of an elephant and covered His body, the sight of which made Paarvathi Devi daughter of the king of Himalayan mountain to scare. Lord Civan will annul all our sins done in our previous births.

பார்மலிந்தோங்கிப்பருமதில்சூழ்ந்தபாம்புநன்னகராரைக்
கார்மலிந்தழகார்கழனிசூழ்மாடக்கழுமலமுதுபதிக்கவுணி
நார்மலிந்தோங்குநான்மறைஞானசம்பந்தன்செந்தமிழ்வல்லார்
சீர்மலிந்தழகார்செல்வமதோங்கிச்சிவனடிநண்ணுவர்தாமே. 11

பார் மலிந்துஒங்கிப் பரு மதில் சூழ்ந்தபாம்புரநன்நகராரைக்
கார் மலிந்த அழகு ஆர் கழனி சூழ் மாடக்கழுமல முது பதிக்கவுணி - 
நார் மலிந்து ஓங்கு நால்மறைஞானசம்பந்தன் - செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்துஅழகுஆர்செல்வம்அதுஓங்கிச்சிவன்அடிநண்ணுவர்தாமே.

பொருள்: உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும் பெரிய மதில்களால்சூழப்பெற்றதுமான நன்னகரம்திருப்பாம்புரம். இங்கு வீற்றிருக்கும் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள்சூழப்பெற்றதும்,மாடவீடுகள்உடையதும்,கழுமலம் என்னும் பெயர் பெற்ற பழம்பதியில், கவுணியர் கோத்திரத்தில் அன்பிற் சிறந்தவனாகவும், புகழால் ஓங்கி விளங்கும் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்போற்றிப் பாடினார். இந்த செந்தமிழ்ப்பதிகத்தைஓதவல்லவர்புகழும் அழகும் மிகுந்தவராய்ச்செல்வத்தால் சிறந்து வாழ்ந்து,முடிவில் சிவனடியை அடைவார்.

குறிப்புரை: பாம்புரப் பதிகம் வல்லவர் செல்வத்திற் சிறந்து சிவனடிசேர்வர்என்கின்றது. கழனி - வயல்.  கவுணி - கவுண்டின்யகோத்திரத்தவன். நார் - அன்பு. சீர் - புகழ்.

Gnaanasambandan belonging to Kounya gotram hails from the grand old city known also as Kazhu Malam. This city has copious rainfall by which the surrounding fields are fertile. There are many magnificent mansions all around the city. He is very loveable to one and all and well versed in the far-famed four Vedas. The grand town Paampuram is well renowned in the world and fortified by big walls all around. Gnaanasambandan adored and sang in chaste Tamil on the Lord of Paampuram. Those who can chant this chaste Tamil hymn will become handsome and famous. They will lead a happy life in the earth and at the end will be liberated and reach the Holy Feet of Lord Civan.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 41st Hymn

திருச்சிற்றம்பலம்

41ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

42.திருப்பேணுபெருந்துறை 
திருத்தலவரலாறு:

திருப்பேணுபெருந்துறை என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும். கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழியில் நாச்சியார்கோயிலைஅடுத்துள்ளது. இது திருப்பந்துறை என இன்று வழங்குகிறது. அம்மை,முருகன்,பிரமன் இவர்கள் பூசித்த. தலம்.  இறைவன் சிவானந்தர். அம்மை மலையரசி. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விருட்சம் வன்னி.  முருகனுக்கு ஊமை நீங்கியதாக வரலாறு.

கல்வெட்டு: 
அரசியலார் 1932இல் படியெடுத்த கல்வெட்டுக்கள் ஐந்து உள்ளன. மதுரை கொண்ட பரகேசரி 22ஆம் ஆண்டுக் கல்வெட்டில்திருநறையூர்நாட்டுக்கிராமமான பேணு பெருந்துறை எனவும்,இறைவன் பெயர் பேணு பெருந்துறைமகாதேவர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளன.  இராஜராஜன் ஆட்சி 14ஆம் ஆண்டில் பாண்டிய குலாசனிவளநாட்டுஆர்க்காட்டுக்கூற்றத்து அரைசூராள்ஒருத்தியால்,அமாவாசையில் சுவாமி அம்மன் பெரிய தேவர் அஸ்திரதேவர் வீதி உலா போதவும்,அரிசிலாற்றில் தீர்த்தம் கொடுக்கவும் நிலம் அளித்தாள். வீரபாண்டியன் ஆட்சி6ஆம் ஆண்டில்,நல்லுடையான்வழுதூரானால் சுவாமி படிமம் செய்து கொடுக்கப் பெற்றது.

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கின்ற காலத்து, பெருகுபுனல் சூழ்ந்த திருப்பேணுபெருந்துறையை வழிபடத் திருவுளங் கொண்டார்கள். அங்ஙனம் சென்று வழிபட்டகாலத்துப் “பைம்மா நாகம்” என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

42. THIRU-P-PENU-PERUN-THURAI

THE HISTORY OF THE PLACE

This sacred place is to the south of river Cauvery in Chola Naadu, and is next to Naachchiyaar Koyil in the bus route from Kumbakonam to Kaaraikkaal. It is known as Thiruppandhurai these days. God is known here by the name of Sivaanandhar and the Goddess as Malaiyarasi. The sacred tree is Vanni and the sacred ford is known as Mangkala Theerththam. The Goddess and Piraman are among those who offered worship here and according to legend, Murugan got rid of muteness by worshipping here.

The five inscriptions here speak of grants by a woman for the processional deity to be taken around the town and to offer the sacred water. The gift of the processional deity by a man in the reign of Veerapaandiyan.

INTRODUCTION TO THE HYMN

Impelled by a strong desire to adore the Lord of Perunthurai, the child-saint came from Veezhimizhalai to this holy town where he sang the following hymn.

திருச்சிற்றம்பலம்

42.திருப்பேணுபெருந்துறை 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண்கொம்பொன்று பூண்டு 
செம்மாந்தையம்பெய்கென்றுசொல்லிச் செய்தொழில் பேணியோர்செல்வர்
அம்மா னோக்கிவந்தளிர் மேனி யரிவையோர்பாகமமர்ந்த
பெம்மானல்கியதொல்புகழாளர்பேணுபெருந்துறையாரே.

பைம் மா நாகம்,பல்மலர்க்கொன்றை,பன்றிவெண்கொம்பு ஒன்று,பூண்டு, 
செம்மாந்து, “ஐயம் பெய்க!” என்று சொல்லி,செய் தொழில் பேணியோர்;செல்வர்; 
அம் மான் நோக்கு இயல்,அம்தளிர்மேனி,அரிவை ஓர்பாகம் அமர்ந்த 
பெம்மான்;நல்கியதொல்புகழாளர் - பேணுபெருந்துறையாரே.

பொருள்: திருப்பேணுபெருந்துறையில்உறையும் சிவபெருமான் படம் பொருந்திய பெரிய நாகம்,பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர்,வெண்மையானபன்றிக் கொம்பு ஆகியவற்றை தலையில் அணிந்தவர்.  அகமலர்ச்சி உடையவர். பலர் இல்லங்களுக்கும் சென்று “ஐயம் இடுக'என்று கேட்பவர்.  கடமை தவறாதவர்களுக்குச்செல்வத்துட் செல்வமாய்இருக்கின்றவர். அழகிய மான்விழி போன்ற கண்களையும்,தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர் இவர். நிலைத்த பழமையான புகழை உடையவர்.

குறிப்புரை: இது உடம்பெடுத்தபிறவியின் பயனாக,செய்ய வேண்டிய தொழில்களைத்தவறாது செய்யும் அடியார்களுக்கு,ஒரு செல்வம் போன்றவர்பேணுபெருந்துறையார்என்கின்றது. பை - படம். பல்மலர் - தும்பை,மத்தம்முதலாயின. செம்மாந்து - இறுமாந்து. ஐயம்பெய்க என்று சொல்லி - பிச்சையிடுக என்று கூறி. பிச்சையிடுக என்பார் இரங்கிய முகத்துடன் தாழ்ந்து சொல்ல வேண்டியிருக்க,இவர் இறுமாந்து சொல்கின்றார் என்றது. ஏலாமல்ஏற்கின்ற இறைமை தோன்ற,கடமை தவறாதவர்க்குச்செல்வத்துட் செல்வமாய் இருக்கின்றார் என்பார்,தொழில் பேணியோர்க்குச்செல்வர் என்றார். தமது அருள் வழங்குந் தொழிலைப்பேணியோர்எனலுமாம். அம்மான் நோக்கி - அழகிய மான் போன்ற கண்ணையுடையவள்.  அந்தளிர் மேனி - அழகிய தளிர் போன்ற மேனியைஉடையவள்.

Lord Civan wears in His matted hair, a great hooded snake, good many flowers including cassia flower and a white horn of the hog. He abides in Thiru-p-penu-perun- thurai. He goes majestically to many houses and begs for alms. He is the resplendent Lord to all those who give Him alms. He is our Lord who concorporates Umaa Devi on the left half of His body. Her eyes are like that of a deer and the body is as soft as tender leaves. His glory is very hoary and perpetual.

Note: The Hog: The Cosmic Boar / Vishnu.

மூவருமாகியிருவருமாகிமுதல்வனுமாய்நின்ற மூர்த்தி 
பாவங்கள்தீர்தரநல்வினைநல்கிப்பல்கண நின்று பணியச்
சாவமதாகியமால்வரை கொண்டு தண்மதிண்மூன்றுமெரித்த
தேவர்கள் தேவ ரெம்பெருமானார்தீதில்பெ ருந்துறையாரே.2

மூவரும்ஆகி,இருவரும்ஆகி,முதல்வனும்ஆய்,நின்ற மூர்த்தி - 
பாவங்கள்தீர்தர நல்வினை நல்கிப்,பல்கணம் நின்று பணியச், 
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த 
தேவர்கள்தேவர் எம்பெருமானார் - தீது இல்பெருந்துறையாரே.

பொருள்: சிவபெருமான் குற்றமற்றபேணுபெருந்துறையில்விளங்குபவர்.  அரி,அயன்,அரன் ஆகிய முத்தொழிலைச் செய்யும் மூவரையும்அதிட்டித்து நின்று அவரவர் தொழிலைத் திறம்பட ஆற்றச் செய்பவர். தன்னிடத்துஒடுங்கிய உலகம் முதலிய யாவற்றையும்மீளவும் தோற்றுவிக்கும்போது,சிவம்,சத்தி என்னும் இருவராகி நிற்பவர். இவர்களில்வேறாய் பரசிவமுமாகி நிற்பவர். நம் பாவங்கள் தர,நல்வினைகளைசெய்வதற்குத்தனு,கரண,புவன போகங்களைக்கொடுத்துச்சிவபுண்ணியம் அடையச் செய்பவர். பதினெண்கணங்களுக்குத் தலைவராக நின்று அவர்களைத்தமக்குப் பணிய வைப்பவர். மேருமலையைவில்லாகக் கொண்டு,மும்மதில்களையும் எரித்த தேவதேவர் ஆவார்.

குறிப்புரை: மூவருமாய்இருவருமாய்முதல்வனுமாய் நின்று பணிவார்கள்பாவங்கள் தீர நல்வினைகளை நல்கி நிற்கும் தேவதேவர் இவர் என்கின்றது. மூவருமாகி - அயன்,மால்,உருத்திரன் என முத்தொழிலைச் செய்யும் மூவரையும்அதிட்டித்து நின்று அவரவர் தொழிலைத் திறம்பட ஆற்றச் செய்தும், இருவருமாகி - தன்னிடத்து ஒடுங்கிய உலகம் முதலான யாவற்றையும்புனருற்பவம்செய்யுங்காலைச் சிவம் சத்தியென்னும் இருவரும் ஆகி,முதல்வனும் ஆகி - இவர்களின் வேறாய்நின்று இயக்கும் பரசிவமுமாகி,வினை ஓய்ந்து ஆன்மாக்கள்பெத்த நிலையில் நில்லா ஆகையால் தீவினைகள் நீங்கி நிற்கப்பரங்கருணைத்தடங்கடலாகிய பரமன் நல்வினைகளைஅவைகள் ஆற்ற அருள்கின்றார் என்பது.  சாவம் - வில். வரை - மேருமலை.

Lord Civan who is our Lord presides over the flawless Perundurai.

He is an immanentist Supreme over Brahma, Vishnu, and Rudran, and commands them to do their respective duties by getting His grace. It is therefore said He is Three.

After the great deluge and when He plans about the reappearance of the cosmos He does it with Sakthi. It is therefore said He is Two.

He gets disunited from all the above and becomes the Primal One as One entity and activates all of them. He is then said to be the One.

To uplift the souls in bondage He helps them to do virtuous deeds by giving them body, implements, world and objects to possess and enjoy

He is the Lord Supreme of all other demigods who gutted with fire the three citadels of the Asuras.

Note: The Three: Brahma, Vishnu and Rudra.
The Two: Civa and Sakthi
The Primal One: The One and only Activernal Civa.
Mountain Bow: Mount Meru.

செய்பூங் கொன்றை கூவிளமாலைசென்னியுட்சேர்புனல்சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமைபாகங்கூடியோர்பீடுடை வேடர் 
கைபோனான்றகனிகுலை வாழை காய்குலையிற்கமுகீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழிதேறல்பில்குபெ ருந்துறையாரே.3

செய் பூங்கொன்றை,கூவிளமாலை,சென்னியுள் சேர் புனல்,சேர்த்திக், 
கொய்பூங்கோதைமாதுஉமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் - 
கை போல் நான்றகனிகுலைவாழைகாய்குலையின் கமுகு ஈனப், 
பெய் பூம்பாளை பாய்ந்து இழிதேறல்பில்குபெருந்துறையாரே.

பொருள்: யானையின் கைபோன்ற நீண்ட வாழைக்குலையில் பழுத்த பழங்களிலும்,காய்த்த குலைகளிலும்,கமுக மரங்களின் பூம்பாளைகளிலும் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறையில்வீற்றிருப்பவர்சிவபெருமான். இவர் கொன்றைப்பூமாலையையும்கூவிள மாலையையும் தம் தலையில் அணிந்திருப்பவர். கங்கையைஏற்றிருப்பவர். பூமாலை சூடிய உமையைத் தன் உடலின் ஒருபாகமாகக் கொண்ட பெருமை பெற்ற வேடத்தை உடையவர்.  அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமை உடைய உருவினர் ஆவார்.  குறிப்புரை: உமையொருபாகம் வைத்த வேடர் இவர் என்கின்றது. செய்மாலைஎனக் கூட்டிப் புனையப்பெற்ற மாலை என்க. சென்னி - தலை. கொய் பூங்கோதை - கொய்யப்பட்டபூவால் இயன்ற மாலை. பீடு உடை வேடர் - பெருமை பெற்ற வேடத்தை உடையவர். கை - யானையின் துதிக்கை.  வாழைக்குலைக்கு யானையின் கையை ஒப்பிடுதல் மரபு. தேறல் - தேன்,வாழைக்குலையில் கமுகு ஈன என்றது இரண்டும் ஒத்த அளவில் வளர்ந்திருக்கின்றன என்று உணர்த்தியவாறு.

Lord Civan is the majestic hunter who concorporates His consort Umaa Devi, on
the left portion of His body frame. She is wearing plucked flower garlands. By this rare

P 602

single physical frame of a male and female, He became glorious and He is known as Ammaiappar (i.e., mother and father). He adorns His matted hair with cassia flowers and trifoliate Bael leaves, where He has accommodated also the river Ganges.

There are plantain gardens in Penu-perun-thurai where long banana clusters looking like the trunk of an elephant hang. In these raw and ripe banana clusters honey drips from the tender flower spates of arecanut trees which grow side by side along with the plantain trees. In this fertile town of Penu-perun-thurai, Lord Civan is enshrined.

Note: Vetar: Hunter/Forester
Vetam also means the salvific form. Vide Sutra 12, Sivagnaana Botham.

நிலனொடுவானுநீரொடுதீயும்வாயுவுமாகியோரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள்தீர்ந்தபுண்ணியர்வெண்பெடிப் பூசி 
நலனொடுதீங்குந்தானலதின்றிநன்கெழுசிந்தையராகி
மலனொடு மாசு மில்லவர்வாழுமல்குபெருந்துறையாரே.

நிலனொடுவானும்நீரொடுதீயும்வாயுவும் ஆகி,ஓர் ஐந்து- 
புலனொடு வென்று,பொய்ம்மைகள்தீர்ந்தபுண்ணியர்-வெண்பொடிப் பூசி, 
நலனொடுதீங்கும்தான்அலது இன்றி,நன்கு எழு சிந்தையர்ஆகி, 
மலனொடுமாசும்இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

பொருள்: நிலம்,வானம்,நீர்,தீ,காற்று ஆகிய ஐம்பூதங்களின்வடிவினர். ஐம்புலன்களையும் வென்றவர். பொய்மைகள் இல்லாத புண்ணியராய்வாழுபவர் சிவபெருமான்.  திருவெண்ணீறுஅணிந்திருப்பவர். நன்மையும்தீமையும்சிவனாலின்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங்கள் கொண்டு ஆணவம்,கன்மம்,மாயைகள்தீர்ந்தவராய் வாழும் சிவனடியார்கள் நிறைந்த பேணுபெருந்துறையார் ஆவார்.

குறிப்புரை: பூதங்கள்ஐந்தாய்ப்புலன்வென்றபுண்ணியர் இவர் என்கின்றது. பூதங்கள்ஐந்துமாகி, தன்மாத்திரைகளாகியஐம்புலன்களையும் வென்று,பொய்ம்மை நீங்கியபுண்ணியர்பெருந்துறையார் என முடிக்க. அன்றி,புண்ணியராகிப் பொடி பூசி,இறை சிந்தையராகிமாசில்லாதவர் வாழும் பெருந்துறை எனவும் முடிக்கலாம். இப்பொருளில்நிலனொடுவாயுவுமாகிய ஓர் ஐந்து புலன் – ஐம்பூதங்களும் அவற்றிற்குக்காரணமாகியதன்மாத்திரைகள்ஐந்தும்,பொய்ம்மைகள்தீர்ந்த – அழியுந்தன்மையவாகிய விஷயசுகங்களில் பற்றற்ற,நலனொடுதீங்கும்தானலது இன்றி - நன்மையும் தீமையும் இறைவனையன்றி வேறொன்று இன்று என எண்ணி, 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே'என்ற நினைவு. நன்கெழுசிந்தையராகி - இறைவன் திருப்பாதகமலங்களை நன்றாக இறுகத்தழுவிய மனமுடையராகி. மலன் - ஆணவம். மாசு - மாயையும்கன்மமும்.

The righteous and holy Civan Himself is Earth, Water, Fire, Wind and Space. He surpasses and is outside the reach of the five senses of the body (Taste, Light, Sense of touch, Sound and Smell). He is virtuous and without any falsities. He has smeared on His body holy white ashes. He abides in the flourishing Penu-perun-thurai. A good number of devotees live here. They are all broadminded; they believe that good and bad will never come without the will of Civan; they are not afflicted with egoism; they are all flawless people. In this place Lord Civan is enshrined.

பணிவாயுள்ளநன்கெழுநாவின்பத்தர்கள்பத்திமைசெய்யத்
துணியார் தங்க ளுள்ளமிலாதசுமடர்கள்சோதிப்பரியார்
அணியார் நீல மாகிய கண்ட ரரிசிலுரிஞ்சுகரைமேல்
மணிவாய்நீலம்வாய்கமழ்தேறன்மல்குபெ ருந்துறையாரே.5

பணிவுஆய் உள்ள நன்கு எழு நாவின்பத்தர்கள்பத்திமை செய்ய, 
துணியார் - தங்கள் உள்ளம் இலாதசுமடர்கள்-சோதிப்ப(அ)ரியார்; 
அணிஆர்நீலம் ஆகிய கண்டர்-அரிசில்உரிஞ்சுகரைமேல்
மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

பொருள்: சிவபெருமான் அரிசிலாற்றின் அலைகள் மோதும்கரையில் அமைந்துள்ள பேணுபெருந்துறையில்எழுந்தருளி உள்ளவர். நீலமணி போலும் நிறம் அமைந்த குவளை மலர்களில் இருந்து வெளிப்படும் தேன் இங்கு கமழ்ந்துநிறைகிறது. பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவியநாவினுடையபக்தர்கள் அன்போடு வழிபட எளியராய் இருப்பவர் இவர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய்உள்ளவர்கள்பகுத்தறிவதற்குஅரியவர். அழகிய நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.

குறிப்புரை: அன்பர்க்கணியராய்,அல்லவர்க்குச்சேயராய் இருப்பவர் இவர் என்கின்றது.  பணிவாய் உள்ள - துதிப்பாடல்களைப்பாடிப்பணியும்,துணியார் - அன்பர்களைவிட்டுவேறுபடாதவர். துணிதல் - வேறாதல். சுமடர் - அறிவற்றவர்கள். சோதிப்புஅரியார் - சோதித்து அறிதற்கும்அரியவர். சோதித்தல் - அளவைகளால் சோதித்தல். அணி - அழகு. மணி - நீலமணி. நீலம் - நீலப்பூ. தேறல் - தேன்.

Lord Civan is enshrined in Penu-perun-thurai on the banks of river Arisilaaru where its waves dash against the shores. His neck is attractive and dark blue in colour. The air in Penu-perun-thurai is filled with the aroma of honey that spills from the blue lilies that look like sapphire. He is easily accessible to those humble devotees who are endowed with disciplined tongues that adore Him by singing submissive prayer songs. But He is a rarity to those who have different ideas against their conscience and who have no reasoning.

எண்ணார் தங்கள் மும்மதிள்வேவஏவலங் காட்டிய வெந்தை
விண்ணோர்சாரத்தன்னருள் செய்த வித்தகர் வேத முதல்வர் 
பண்ணார் பாட லாடலறாத பசுபதி யீசனோர் பாகம் 
பெண்ணாணாயவார்சடையண்ணல்பேணுபெருந்துறையாரே.

எண்ணார்தங்கள்மும்மதிள்வேவ ஏ வலம் காட்டிய எந்தை, 
விண்ணோர்சாரத் தன் அருள் செய்த வித்தகர்,வேதமுதல்வர், 
பண்ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி,ஈசன்,ஓர்பாகம்
பெண் ஆண் ஆயவார்சடை அண்ணல் - பேணுபெருந்துறையாரே.

பொருள்: சிவபெருமான் திருப்பேணுபெருந்துறைஇறைவர் ஆவார். தம்மை மதியாதவர்களானஅசுரர்களின்முப்புரங்களை எரித்து அழித்தவர். அவற்றை அழிக்க வில் வன்மை காட்டிய எம் தந்தை ஆவார். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளைநல்கிய வித்தகர் ஆவார். வேதங்களின் தலைவர். இசை நலம் நிறைந்த பாடல்களோடு ஆடி மகிழும் பசுபதியாயஈசனும் ஆவார். ஒரு பாகம் பெண்ணுமாய்,ஒருபாகம்ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியை உடைய தலைவர் ஆவார்.

குறிப்புரை: முப்புரம் எரித்த வீரர். தேவர்க்கருளியதேவதேவா;பெண்ணாணாயபரமர் இவர் என்கின்றது. எண்ணார் - பகைவர். ஏவலம் - அம்பின் வன்மை. வார் சடை - நீண்ட சடை.

Lord Civan our Father displayed His prowess by using the bow and arrow gutted with fire the three citadels of the hostile Asuras who did not respect Him. He is the adept who graced the Devas who worshipped Him. He is the author of the Vedas. He is Pasupathi i.e., Lord of all souls. He is the Eesan, i.e., Lord of the Universe. He sings tunefully and dances merrily and enjoys these. He is male on one half of His body and female on the other half and has long matted hair. He is our Supreme Lord.

விழையாருள்ளநன்கெழுநாவில் வினை கெடவேதமாறங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற்பெரியோரேத்தும் பெருமான் 
தழையார்மாவின்றாழ்கனியுந்தித்தண்ணரிசில்புடை சூழ்ந்து 
குழையார் சோலை மென்னடையன்னங்கூடுபெ ருந்துறையாரே.7

விழைஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட,வேதம் ஆறு அங்கம் 
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றால்,பெரியோர் ஏத்தும் பெருமான் - 
தழைஆர்மாவின்தாழ்கனிஉந்தித்தண்அரிசில் புடை சூழ்ந்து 
குழைஆர் சோலை மென் நடை அன்னம் கூடுபெருந்துறையாரே.

பொருள்: செழித்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைகுளிர்ச்சியுடையஅரிசிலாறு உருட்டிக் கொண்டு வருகிறது. அந்த ஆற்றங்கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையை உடைய அன்னங்கள்கூடுகின்றன. இங்கு திருப்பேணுபெருந்துறைஇறைவராகிய சிவபெருமான் வீற்றிருக்கின்றார்.  விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்௧ண் தம்வினை கெட,நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதி வரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் இவர்.

குறிப்புரை: கனிந்தஉள்ளத்தடியார்வேதமோதி ஏத்தும் பெருமான் இவர் என்கின்றது.  விழைஆர் உள்ளம் - விரும்புதலைப் பொருந்திய உள்ளத்தோடு. நாவில் வேதம் ஆறங்கம்பிழையாவண்ணம் வினை கெடப் பண்ணிய ஆற்றால்எனக்கூட்டுக. அரிசில் - அரிசிலாறு.

Lord Civan is enshrined in Penu-perun-thurai on the banks of the river Arisilaaru which carries fruits that falling from the prolific mango trees. On the banks of this river, trees with tender leaves grow in the gardens. In these gardens swans walk graciously all around.

Lord Civan is worshipped here by great scholars who gladly chant the Vedas with their desirable tongue to eliminate their bad karma. They chant the four Vedas and the six parts (Angas)  wholeheartedly in flawless manner and tune much as their ancestors did.

பொன்னங் கானல் வெண்டிரைசூழ்ந்தபொருகடல் வேலி யிலங்கை
மன்னனொல்கமால்வரையூன்றிமாமுரணாகமுந்தோளும்
முன்னவைவாட்டிப்பின்னருள் செய்த மூவிலைவேலுடை மூர்த்தி 
அனனங்கன்னிப்பேடையொடாடியணவுபெருந்துறை யாரே.9

பொன்அம் கானல் வெண்திரை சூழ்ந்தபொருகடல்வேலி இலங்கை 
மன்னன் ஒல்கமால்வரை ஊன்றி,மா முரண் ஆகமும்தோளும்
முனண்அவை வாட்டி,பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி - 
அனனம்கன்னிப்பேடையொடு ஆடி அணவுபெருந்துறையாரே.

பொருள்: ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத்தோடு ஆடியும் கூடியும்மகிழும் இடத்தில் இருப்பவர் பேணுபெருந்துறை சிவபெருமான் ஆவார். இலங்கை மாநகர் அழகிய கடற்கரைச்சோலைகளை உடையது. வெண்மையான கடல் அலைகளால்சூழ்ந்துள்ளது.  நாற்புரங்களிலும்கடலையேவேலியாக உடையது. இந்நகரின்மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக்கால்விரலால் ஊன்றி,அவனுடைய சிறந்த வலிமையுடைய மார்பும்,தோள்களும் வலிமை குன்றுமாறு செய்தார் சிவபெருமான் பின்னர் அவனது சாமகானம் கேட்டு அவனுக்கு அருள்பல செய்தவர். இவர் மூவிலை வேலையுடையமூர்த்தியாவார்.

குறிப்புரை: உயிர்களின் முனைப்படக்கி ஆட்கொண்டு அருள் வழங்கும் பெருமானிவர்என்கின்றது.  பொன் - அழகு. மன்னன் - இராவணன். இவன் தன் மார்பையும் தோளையுமே நம்பித்தருக்கி இருந்தான்.  ஆதலின், அவற்றைப்ப யனற்றனவாக, இறைவன் காட்டவே, தனது மாட்டாமையையும், தலைவன் ஆற்றலையும் உணர்ந்தான். சாமம் பாடினான். இறைவன் அருளினார் என்பது. அணவு - கலக்கின்ற.

Lord Civan is enshrined in Penu-perun-thurai. Here the male swans join their virgin female swans and dance happily moving all around. Lanka is encircled on all it's four sides by the sea which forms a natural fence for the land. The white waves of the sea dash against the beautiful groves that exist near the shores. Lord Civan who holds the three leaved trident in one of His hands, pressed the huge mount Kailash with His toe and crushed the chest and shoulders of the King of Lanka and nullified his mightiness. Raavana's spirit got depressed. Later he repented and begged for pardon and Lord Civan graced him with boons.

புள்வாய்போழ்ந்துமாநிலங்கீண்டபொருகடல்வண்ணனும் பூவின் 
உள்வாயல்லிமேலுறைவானுமுணர்வரியானுமைகேள்வன்
முள்வாய்தாளின் தாமரை மொட்டின்முகமலரக்கயல்பாயக்
கள்வாய்நீலங்கண்மலரேய்க்குங்காமர்பெருந்துறை யாரே.9

புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்டபொருகடல்வண்ணனும்,பூவின் 
உள் வாய் அல்லிமேல்உறைவானும்,உணர்வு அரியான்;உமைகேள்வன் - 
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர,கயல்பாய, 
கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும்காமர்பெருந்துறையாரே.

பொருள்: முட்களையுடையதண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல்மலருகிறது.  அதன்கண்கயல்மீன்கள் பாய்கின்றன. தேனை உடைய நீலமலர்,கண்மலரைஒத்துள்ளது.  'இந்த இயற்கை அழகு மாதர்களின் மலர்ந்த முகங்களைப்போலத் தோற்றம் தருகின்றன.  இவ்வாறு வளம் பெற்ற பேணுபெருந்துறையில் நம் இறைவராகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார். கொக்கு வடிவங் கொண்ட பகாசுரனின்வாயைப்பிளந்தவரும்நிலவுலகைத் தோண்டிய கடல் வண்ணனும் ஆகிய திருமாலும்,தாமரை மலரின்அகஇதழ்கள் மேல் உறையும்நான்முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்;உமையம்மையின் கணவர் ஆவார்.  குறிப்புரை: பதவிகளால்மயங்கியஆன்மாக்களால்அறியொணாத பெருமான் இவர் என்கின்றது. புள் - கொக்கு. பகாசுரன் என்பவனைக்கிருஷ்ணாவதார காலத்தில் வாயைப் பிளந்து கொன்ற வரலாறு குறிக்கப்பெறுகின்றது. நிலங்கீண்டது - வராக அவதார வரலாறு. அல்லி - அகவிதழ். தாமரை மொட்டு இன்முகம் மலர - தாமரை அரும்பு இனியமுகம் போல மலர. இப்பகுதிதாமரைப்போதுமுகம்போல மலர, நீலம் கண்ணை ஒக்க. கயல்விழியையொக்கஎல்லாமாக மாதர் முகம் போல முற்றும் மகிழ் செய்யும் அழகிய பெருந்துறை என அறிவித்தவாறு.

Lord Civan is enshrined in Penu-perun-thurai. In the pools of Penu-perun-thurai lotus bud looking like pleasant human face blossom on their thorny stalk over which Kayal fish leap and play. The honeyed blue lilies growing all around are as sweet as the blooming eyes and faces of maids. Penu-perun-thurai known for such an enchanting scene of nature is our Lord's place. An Asura known as Bahan took the form of a Heron and came to kill Krishnan (one of the incarnations of Thirumaal). Krishna tore off the beak of the bird and killed him. In another incarnation as a Hog Thirumaal killed Iranyaakshan and recovered the earth from him. Even this Lord of the seas Thirumaal and Lord Brahma who is seated in the internal petals of the Lotus flower could not know and realise the glory of Lord Civan, who is the consort of Umaa Devi.

Note: The Bird: The Asura called Bhagasura who assumed the form of a stork. Vishnu killed him.

குண்டுந்தேருங்கூறைகளைந்துங்கூப்பிலர்செப்பிலராகி
மிண்டும்மிண்டர்மிண்டவை கண்டு மிண்டுசெயாதுவிரும்பும்
தண்டும்பாம்பும் வெண்டலை சூலந்தாங்கிய தேவர் தலைவர் 
வண்டுந்தேனும்வாழ்பொழிற் சோலை மல்குபெருந்துறை யாரே.10

குண்டும்தேரும்,கூறைகளைந்தும்கூப்பிலர்செப்பிலர் ஆகி 
மிண்டும்மிண்டர்மிண்டுஅவை கண்டு மிண்டுசெயாதுவிரும்பும்! 
தண்டும்பாம்பும்வெண்தலைசூலம்தாங்கிய தேவர் தலைவர் - 
வண்டும்தேனும் வாழ் பொழில் - சோலை மல்கு பெருந்துறையாரே.

பொருள்: சிவபெருமானை,பருஉடல் கொண்ட சமணர்களும்தேரர்களாகியபுத்தர்களும் அறிகிலர். அவர்கள் தங்களுடைய ஆடைகளைக்களைந்தும்,பல்வகைவிரதங்களை மேற்கொண்டும்,கைகூப்பி வணங்காதவர்கள். திருப்பெயர்களைக்கூறாதவர்கள். வம்பு செய்யும் இயல்பினர். வீண்தவம்புரிகின்றவர்கள். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளக் கூடாது. சிவநெறியைவிரும்புமின். யோகம்,தண்டம், பாம்பு,தலைமாலை,சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும்,தேனும் நிறைந்து வாழும் "சோலைகள் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.

குறிப்புரை: புத்தர் சமணர் பொய்யுரை கண்டு புந்திமயங்காதுபோற்றுங்கள் என அறிவிக்கின்றது.  குண்டு - குண்டர். தேர் - தேரர். கூப்பிலர் - வணங்காதவர்களாய். செப்பிலர் – தோத்திரியாதவர்கள் ஆகி. மிண்டர் - வம்பர். மிண்டு - குறும்பு.

The obese Samanars and Buddhists throw away their clothing, undertake penance of different kinds. They neither worship Lord Civan by folding their hands nor chant His name. They are mischievous people in nature and do worthless penance. Ye companions! Do not follow their incongruous way of life. Pray, adore Lord Civan and learn Divine knowledge from Him. Our Civan is the Lord of the Devas. He carries the staff of Yogi, trident and adorns His head with head garland and the snake. He is enshrined in Penu-perun-thurai which is surrounded by groves and gardens where the honeybees hum and where the honey laden flowers blossom.

கடையார்மாடநன்கெழுவீதிக்கழுமலவூரன் கலந்து 
நடையாரின்சொல்ஞானசம்பந்தன்நல்லபெருந்துறைமேய
படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவைவல்லார்
உடையாராகியுள்ளமுமொன்றியுலகினின்மன்னுவர் தாமே.11

கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக்கழுமலஊரன்-கலந்து 
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறைமேய
படை ஆர்சூலம்வல்லவன் பாதம் பரவிய பத்துஇவைவல்லார்
உடையார் ஆகி,உள்ளமும் ஒன்றி,உலகினில்மன்னுவர்தாமே.

பொருள்: வாயில்களை உடைய மாடவீதிகளையும்நன்கமைந்தவீதிகளையும் உடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றி,அன்போடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவர் ஞானசம்பந்தன். நல்ல பேணுபெருந்துறைமேவிய வலிய சூலப்படையை உடைய இறைவன் திருவடிகளைப்பரவிப்போற்றியஇப்பதிகப்பாடல்கள்பத்தையும்ஓதுபவர்.  எல்லா நன்மைகளும்உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப்பெறுவர்.

குறிப்புரை: இப்பதிகம் வல்லவர் எல்லா வளமும்உடையவராகி மன ஒருமைப்பாட்டுடன்வாழ்வர் என்கின்றது. கடை - வாயில். மன்னுவர் - வினைப்போகத்திற்கு உரிய காலம் வரையில் பூதவுடலோடும், அதற்குப்பின்புகழுடலோடும் நிலை பெறுவர்.

Gnaanasambandan hails from Kazhumalam wherein the well laid out streets many mansions with proper thresholds are a sight to see. Gnaanasambandan praised, worshipped, and adored with sincere love the Holy Feet of Lord Civan who is holding in one of His hands, a mighty trident and abides in Thiru-p-penu-perun-thurai, Gnaanasambandan sang this hymn in a gentle tune and in a sweet tempered manner. Those who can recite these ten verses in all sincerity and oneness of mind will become prosperous with all goodness and will have a permanent and peaceful life in this world.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 42nd Hymn

திருச்சிற்றம்பலம்

42ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

43.திருக்கற்குடி 
திருத்தலவரலாறு:

திருக்கற்குடி என்னும் இத்திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.  திருச்சிராப்பள்ளிக்கு அருகில் மேற்றிசையில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. இன்று உய்யக் கொண்டான் மலை என வழங்குகிறது. நந்திவர்மபல்லவனால் திருப்பணி செய்விக்கப் பெற்றமையின்நந்திவர்ம மங்கலம் எனக்கல்வெட்டுக்கள்வழங்குகின்றன. மேற்கு நோக்கிய சந்நிதி,அம்மன் சந்நிதிகள் இரண்டு. இறைவன் பெயர் உச்சி நாதர். முத்தீசர்,கற்பகநாதர், உச்சீவநாத சுவாமி,உய்யக் கொண்ட நாயனார்,விழுமியார்,ஆள்வார் விழுமிய தேவர்,விழுமிய நாயனார் எனக்கல்வெட்டுக்களிலும்,புராணங்களிலும்வழங்கப்பெறுகின்றன. அம்மை, அஞ்சனாட்சி. தீர்த்தங்கள்பொன்னொளி ஓடை,குடமுருட்டி,ஞானவாவி,எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு என்பன. மார்க்கண்டர் வழிபட்டு அருள் பெற்ற தலம். முனிவர்கட்குக் குருமூர்த்தியாக இருந்து பெருமான் விழுமிய நூல்களை உபதேசித்த தலம். கரனும்,ஈழ நாட்டரசனும்வழிபட்ட தலம். தருமைஆதீனஅருளாட்சியில்விளங்குவது.

கல்வெட்டு:

இத்தலம்இராஜராஜன்காலத்து,பாண்டிய குலாசனிவளநாட்டுராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலத்துக்கற்குடி எனவும்,குலோத்துங்கன்காலத்து,இராஜமகேந்திரவளநாட்டுஉறையூர்க் கூற்றத்துப்பிரமதேயமான மேற்படி சதுர்வேதி மங்கலத்துக்கற்குடி எனவும்,முதலாம் இராஜேந்திரன்காலத்துகேரளாந்தகவளநாட்டுஉறையூர்க்கூற்றத்துக்கற்குடி எனவும், மல்லிகார்ச்சுன மகாராஜா காலத்துஇராஜகம்பீரவளநாட்டுப்பிரமதேயம் ஆன உய்யக் கொண்டான் திருமலை எனவும் வழங்கப்பெறுகின்றது.

தருமம் ஆற்றிய மன்னர்கள்: முதலாம் பராந்தகன்,கண்டராதித்தன் மனைவி,பராந்தகன் மாதேவஅடிகளாராகியசெம்பியன்மாதேவியார்,உத்தம சோழன்,முதலாம் இராஜராஜன்,முதலாம் பரகேசரிஇராஜேந்திரன்,வீர இராஜேந்திரன்,முதலாம் குலோத்துங்கன்,மல்லிகார்ச்சுன மகாராஜா, மயிலைத்திண்ணன் முதலியோர் அளித்தன பெரும்பாலும் விளக்கிற்காகப்பொன்னும் ஆடும், நிவேதனத்திற்காகநிலமும் ஆகும்.

பதிக வரலாறு:

திருப்பராய்த்துறையை வழிபட்டு வந்தருள்கின்றகாழிப்பிள்ளையார்,திருக்கற்குடிமலையை அடைந்தார்கள். அம்மலைமேல்எழுந்தருளியுள்ளகனகக்கொழுந்தை - திரிபுரம் எரித்த வீரரை - விடையாளியைப் போற்றி “வடந்திகழ்” என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.

43. THIRU-K-KARKUDI

THE HISTORY OF THE PLACE

     This sacred place is to the north of the river Cauvery in Chola Naadu, and is near Thiruchchirappalli, from where town buses ply to this place. The place is known today as Uyyakkondaan Malai. Inscriptions call this place Nandhivarma Mangalam, this name stemming from the fact of renovations made by Nandhivarma Pallavan.

     The Lord has been known by the names of Uchchinaathar, Muththeesar, Karpakanaathar, Uchcheevanaatha Suvaami, Uyyakkonda Naayanaar, Vizhumiyaar, Azhvaar Vizhumiya Thevar, and Vizhumiya Naayanaar, in inscriptions and puraanaas. The shrine faces west. The Goddess is known as Anjchanaatchi. The sacred fords comprise Ponnoli Odai, Kudamurutti, Jnaanavaavi, Octogonal Well and the Four- cornered Well. The Lord in the form of a guru seated before the sages and taught them books of great holiness. Maarkkandar, Karan and a king of Eezham are among those who worshipped the Lord here. This temple is under the spiritual administration of Darumai Aadheenam.

     Many Chola kings from Paraanthakan-I to Kuloththungkan-I and other kings had gifted gold and sheep for lighting lamps and land for holy food offerings.

INTRODUCTION TO THE HYMN

     The child-saint adored the Lord in Thiru-p-paraai-t-thurai and came to Karkudi where he sang the following hymn.

திருச்சிற்றம்பலம் 
43.திருக்கற்குடி 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

வடந்திகழ்மென்முலையாளைப்பாகமதாகமதித்துத்
தடந்திரைசேர்புனல்மாதைத்தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ்முப்புரிநூலர்துன்பமொடின்பமதெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்கற்குடிமாமலை யாரே.1

வடம் திகழ் மென்முலையாளைப்பாகம்அதுஆக மதித்து, 
தடந் திரை சேர் புனல் மாதைத்தாழ்சடை வைத்த சதுரர்; 
இடம் திகழ் முப்புரிநூலர்;துன்பமொடு இன்பம் அது எல்லாம் 
கடந்தவர்-காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

பொருள்: சிவபெருமான்,திருக்கற்குடிமாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர் ஆவார். முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டவர். பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைதாழ்கின்ற சடைமிசைவைத்துள்ளசதுரப்பாடுஉடையவர்.திருமேனியில் விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக்கடந்தவர்.

குறிப்புரை: ஒருமாதைமுடியிலும்,ஒருமாதைப்பாகத்திலும்வைத்தும்,பிரமசாரியாயிருப்பவர்கற்குடியார் என்கின்றது. முப்புரிநூலர் என்றது'பவன் பிரமசாரியாகும்'என்பதை விளக்க. வினையின்நீங்கிய முதல்வன்ஆதலின்,வினைபற்றிநிகழ்வனவாகிய துன்ப இன்பங்கள் அவரைப் பாதிக்காது என்பது விளக்கக்'கடந்தவர்'என்றார்.

குருவருள்: 'துன்பமொடுஇன்பமதெல்லாம்கடந்தவர் காதலில் வாழும் கற்குடிமாமலையாரே'என்ற தொடர் கடவுள் என்ற சொல்லின் பொருளை விளக்குதல் காண்க. கடவுள் என்ற சொல் வேறாய்உடனாய் இருந்து அருள் செய்தலை உணர்த்துவது. கட - கடந்தது. வேறாய் என்பதை உணர்த்துவது. உள் - ஒன்றாய் என்பதை உணர்த்துவது. கடவு என்று பார்க்கும்போதுஉடனாயிருந்துஇயக்குவதைக் காணலாம்.

Civan, the ingenious Lord who had a high esteem for Umaa Devi, accommodated her on the left portion of His body. Her delicate soft breasts are adorned by bright pearl chains. Simultaneously He kept the river Ganges with its billowy waves dashing in the hanging strands of His matted hair. He wears the three ply sacred thread on the His body. He is far beyond happiness and misery and He resides at the hill-Karkudi.

Note: In the past, Karkudi was surrounded by forests. It was a settlement of foresters.  It is very near Kumaara Vayalur so dear to St. Arunagirinathar.

அங்கமொராறுடை வேள்வி யானவருமறைநான்கும்
பங்கமில்பாடலோடாடல் பாணி பயின்றபடிறர்
சங்கமதார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள்தாவிக்
கங்குலின்மாமதிபற்றுங்கற்குடிமாமலையாரே.

அங்கம்ஒர்ஆறொடுஐவேள்வி ஆன அருமறைநான்கும்
பங்கம் இல்பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் - 
சங்கம் அதுஆர்குறமாதர்தம்கையின்மைந்தர்கள்தாவிக்
கங்குலில் மா மதி பற்றும்கற்குடி மா மலையாரே,

பொருள்: சங்கு வளையல்களைக்குறப்பெண்கள்அணிந்துள்ளனர். அவர்கள் கைகளில் இருக்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப் பெரிய சந்திரனைக் கைகளால் பற்ற முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட உயரமான திருக்கற்குடிமாமலையில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். இவர் வேள்விகட்குரியவிதிகளைவிளக்குபவர். ஆறு அங்கங்களுடன் கூடிய அரிய வேதங்கள்,நான்காகியகுற்றமற்ற பாடல்,ஆடல்,தாளச் சதிகள் ஆகியவற்றைப்பழகியவர்.

குறிப்புரை: வேதம் பாடியும் படிறர் இவர் என்கின்றது. வேள்வியானஅருமறை – யாகவிதிகளை விளக்கும் வேதம். பாணி - கை. ஈண்டு தாளத்தைஉணர்த்தியது. படிறர் - பொய்யர். சங்கம் - சங்கு வளையல். கங்குல் - வானம். குறமாதர்கையிலுள்ளபிள்ளைகள் எட்டி மாமதியைப்பற்றுகின்றறு கற்குடி மலையின் உயரமும்கவினும்உரைத்தவாறு.

Lord Civan is the exponent of the following

Four rare Vedas
The six auxiliaries of the Vedas known as Angas
Rules for conducting the spiritual discipline - sacrificial fire
Flawless music
Dancing
Agreement in Time measure by hand or cymbols.

This Lord Civan is enshrined in the tall mountain of Karkudi. Here the women carry their young male babies in of hill tribes wearing conch shell bangles in their hands their hands. During night hours when the moon shines in the sky, these babies jump from their mother's hands as if to catch the big moon by their hands.

Note: Paani: This Tamil word means hand. In olden days, as now, musicians kept
time, clapping hands. So Paani also means taalam.

நீரகலந்தருசென்னிநீடியமத்தமும்வைத்துத்
தாரகயின்னொளிசூழ்ந்ததண்மதிசூடிய சைவர்
போரகலந்தரு வேடர் புனத்திடையிட்டவிறகில்
காரகிலின்புகைவிம்முங்கற்குடிமாமலையாரே.

நீர் அகலம் தரு சென்னிநீடியமத்தமும் வைத்து
தாரகையின் ஒளி சூழ்ந்ததண்மதிசூடிய சைவர் - 
போர் அகலம் தரு வேடர் புனத்துஇடைஇட்டவிறகில்
கார் அகிலின் புகை விம்மும்கற்குடி மா மலையாரே.

பொருள்: வேடர்கள் போர் செய்வதற்கு ஏற்ற அகன்ற மார்பினைக்கொண்டுள்ளவர்கள். அவர்கள் காடுகளிலிருந்து அகில் மரங்களை வெட்டிக் கொணர்ந்து எரிக்கின்றனர். அதினின்று வரும் கரிய அகிலின் புகை மணம் வீசும் திருக்கற்குடி,மாமலையின்இறைவர் சிவபெருமான். அவர் பரந்து விரிந்து வந்த கங்கை நதியை உடைய முடிமீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரைஅணிந்துள்ளார். அவர் விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ச்சியான பிறைமதியைச்சூடியுள்ளஇறைவர்ஆவர் (திருக்கற்குடி மலையில் அகில்மரங்களே இருக்கின்றன என்பதாம்).

குறிப்புரை: கங்கை வைத்த திருமுடிக்கண்மத்தழும்மதியமும்சூடியிருக்கிறஇறைவர் இவர் என்கின்றது. அகலந்தரும் - பரந்தத தாரகை - நட்சத்திரம். திருமுடிக்கண் வைத்த அந்த பிராகிருதமதிக்குத்தாரகைகள் சூழ்தல் இல்லையாயினும் மதி என்ற பொதுமைபற்றியருளிய அடைமொழி. போர் அகலம் தரு வேடர் - பொருதற்கு ஏற்ற மார்பினையுடையவேடர்கள். வேடர்கள்அகிற்காட்டைக் கொளுத்திப்புனம்செப்பனிடுகின்றார்கள்என்பதாம். அம்பெய்திப்பயில்வதால்வலுவடைந்த மார்பு (அகலம்) சிலைசெலமலர்ந்த மார்பு.

The martial race of hunters whose chests are broad enough to wage wars split the eagle wood trees in their forests, bring the logs and burn them. The black smoke arising out of the fire swells up and expands in the air with fragrance of agil in the tall mountain of Karkudi. The Lord of this mountain dons His matted hair with the broad and swollen river Ganges along with long and fully blossomed Datura flowers. He is the chief accommodating the cool moon with it's bright and shining stars all around (It is to be understood that there are no trees other than the eagle wood in the mountain forest of Karkudi).

Note: Civa is referred to as a Saivaite. Indeed He is the One and only Anaadi-Saiva. The modern temple-priests are Aadi-saivas.

ஒருங்களிநீயிறைவாவென்றும்பர்களோலமிடக்கண்
டிருங்களமாரவிடத்தையின்னமுதுண்ணியஈசர்
மருங்களியார்பிடி வாயில் வாழ்வெதிரின்முளைவாரிக்
கருங்களி யானை கொடுக்குங்கற்குடிமாமலையாரே.

“ஒருங்கு அளி,நீ இறைவா!” என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு, 
இருங்களம்(ம்) ஆரவிடத்தைஇன்அமுதுஉண்ணியஈசர் - 
மருங்கு'அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின்முளை வாரி, 
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

பொருள்: பசுமையோடுமுளைத்து வரும் மூங்கல்களை,மதம் கொண்ட கரிய யானை, தானுண்ணாது,அன்பு காட்டி வரும் பெண் யானையின் வாயில் வாரிக்கொடுத்து ஊட்டுகின்றது. அதுபோலவே,கற்குடியில்வீற்றிருக்கும் சிவபெருமான்,தேவர்கள் ஒன்றுகூடி,இறைவா! நீ அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டு,அமுதத்தை அவர்களுக்கு அளித்துவிட்டுத் தாம் நஞ்சினை உண்டார்.

குறிப்புரை: தேவர் வேண்ட விடத்தைத்திருவமுதுசெய்தருளியஈசர் சிவம் என்கின்து. இறைவா! நீ ஒருங்கு அளி என்று உம்பர்கள் ஓலம் இட எனக்கூட்டுக. இரும் களம் ஆர - பெரிய கண்டம் நிறைய.  உண்ணிய - உண்ட. இது ஒரு அரும் பிரயோகம். உண் என்ற பகுதி அடியாகப் பிறக்கும் இறந்தகாலப் பெயரெச்சம்உண்ட என்பதே. உண்ணியஎனவருதல் மிக அருமை. அளியார் பிடி வாயில் - அன்பு செறிந்த பெண் யானையின் வாயில். வெதிர் - மூங்கில். வலிய மதக்களிப்போடு கூடிய யானை தானுண்ணாது,பிடியின் வாயில் அமுதம் போன்ற மூங்கில் முளைகளைவாரிக்கொடுக்கின்ற கற்குடி நாதர்,தேவர்கள்வேண்டத் தாம் விடமுண்டு,அவர்கட்கு அமுதம் அளித்தார் என்ற நயம் காண்க.

The Devas lamentingly appealed to Lord Civan "O! Our Lord, kindly protect us all from Death". He pitied them for their distress and swallowed the poison that came out of the sea of milk as though it was nectar. Owing to this, His neck became dark blue in colour. This Lord Civan is enshrined in the big mountain of Karkudi. On this mountain gleeful black male elephants collect young tender shoots of bamboo trees and feed the females that come near them, with love and affection.

போர்மலிதிண்சிலை கொண்டு பூ,தகணம்புடைசூழப்
பார்மலிவேடுருவாகிப்பண்டொருவர்க்கருள் செய்தார் 
ஏர்மலிகேழல்கிளைத்தவின்னொளிமாமணியெங்கும்
கார்மலி வேடர் குவிக்குங்கற்குடிமாமலை யாரே.5

போர் மலிதிண் சிலை கொண்டு,பூதகணம் புடை சூழப், 
பார் மலிவேடுஉருஆகி,பண்டுஒருவர்க்குஅருள்செய்தார் - 
ஏர் மலிகேழல்கிளைத்தஇன்ஒளி மா மணி எங்கும் 
கார் மலி வேடர் குவிக்கும்கற்குடி மா மலையாரே.

பொருள்: அழகிய பன்றிகள்நிலத்தைக்கிளைக்கின்றன. அதிலிருந்து இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகள்வெளிப்படுகின்றன. அந்த மணிகளைக் கரிய நிறமுள்ளவேடர்கள் பல இடங்களில் குவித்துள்ளனர். அப்படிக்குவித்துள்ளதிருக்கற்குடிமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இவர் போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு வேடர் உருவம் தாங்கி,பூதகணங்கள்புடைசூழ்ந்து வர,மண்ணுலகத்திற்கு வந்து அருச்சுனனுக்கு பாசுபதம் அளித்து அருள் செய்தார். ஒருவர் என்றது அருச்சுனனைக் குறிப்பதாயிற்று.

குறிப்புரை: வேடரான பெருமான் இவர் என்கின்றது. வேட்டுவஉருவானதுஅருச்சுனற்குப் பாசுபதம் அருளித்தருள் செய்ய. ஒருவர் - அருச்சுனன். ஏர் - அழகு. கேழல் - பன்றி. கார்மலி வேடர் - கருமை நிறமிகுந்தவேடர்கள். இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல வேடர் ஆகி வேடரோடு வாழும் மாமலையர் என்ற நயம் ஓர்க.

In ancient times, Lord Civan assumed the guise of a hunter, armed Himself with a martial mighty bow, and surrounded by Bhuta hosts came to earth. Here He confronted Arjunan and in incognito fought with him, and defeated him. Thereafter He unfolded, and showed His real form and graced him with a divine arrow, the chosen weapon of Lord Civa.

In the great mountain of Karkudi brave hogs dug out the earth in search of roots for their food. While burrowing thus, gems of purest rays come out of the earth and get scattered nearby. The dark skinned hunters collect these gems and pile them up conically all around. On this great mountain of Karkudi Lord Civan is enshrined.

உலந்தவரென்பதணிந்தேவூரிடுபிச்சையராகி
விலங்கல்வில்வெங்கனலாலேமூவெயில்வேவமுனிந்தார்
நலந்தருசிந்தையராகிநாமலிமாலையினாலே
கலந்தவர் காதலில் வாழுங்கற்குடிமாமலையாரே.

உலந்தவர்என்பு அது அணிந்தே,ஊர் இடு பிச்சையர்ஆகி, 
விலங்கல்வில்வெங்கனலாலேமூஎயில்வேவமுனிந்தார் - 
நலம் தரு சிந்தையர்ஆகி நா மலிமாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

பொருள்: சிவபெருமான் எழுந்தருளியதிருக்கற்குடிமாமலையில்,நன்மை தரும் எண்ணங்கள்உடையவர்களும்,நாவினால் புகழும் சொல் மாலைகளினாலே இறைவன் திருவருளில்ஒருமைப்பட்டவர்களும்வாழ்கின்றார்கள். இங்குள்ள சிவபெருமான் இறந்தவர்களின்எலும்பை அணிந்து ஊர் மக்கள் இடும் பிச்சையைஏற்பவர். மேரு மலையாகியவில்லிடைத்தோன்றிய கொடிய கனலால்முப்புரங்களும் வெந்து அழியுமாறு முனிந்தவர்.

குறிப்புரை: பிட்சாடனமூர்த்தியாய்மூவெயிலைமுனிந்தவர் இவர் என்கின்றது. உலந்தவர் - இறந்தவர் என்பது. அணிந்து - எலும்புகளைச் சூடி. விலங்கல் - மேருமலையாகிய வில். நாமலி மாலை – நாவில் மலிந்ததோத்திரப் பாமாலை. நலந்தரு சிந்தை - காமம் வெகுளி மயக்கம் முதலிய மூன்றும் கெட்ட மனம்.  கலந்தவர் - ஒருமைப்பட்டவர்கள். மனம் ஒன்றிய முனி புங்கவர்கள் வாழும் கற்குடி மலை என்றதால் யோகியர் இடம் இது என அறிவித்தவாறு.

Virtuous devotees always hold good thoughts in their minds. They adore the Lord with garlands of words of salutation pronounced by the tongue. These persons of true spiritual wisdom, the yogis with single mindedness, choose to live in Karkudi. The Lord of this place adorns Himself with the bones of the dead and taking the form of a mendicant roams around the town and accepts the alms given by the town- folks. He got angry with the Asuras and destroyed their three citadels with the fire that arose from mountain Meru which was used as his bow.

மானிடமார்தரு கையர் மாமழுவாரும்வலத்தார்
ஊனிடையார்தலையோட்டிலுண்கலனாகவுகந்தார்
தேனிடையார்தருசந்தின்திண்சிறையாற்றினைவித்திக்
கானிடை வேடர் விளைக்குங்கற்குடிமாமலை யாரே.7

மான்இடம்ஆர்தரு கையர்,மா மழுஆரும்வலத்தார், 
ஊன் இடை ஆர்தலைஓட்டில்உண்கலன்ஆகஉகந்தார் - 
தேன் இடை ஆர்தருசந்தின்திண்சிறையால்-தினை வித்திக், 
கான் இடை வேடர் விளைக்கும்கற்குடி மா மலையாரே.

பொருள்: தவபெருமான்வீற்றிருக்கும்திருக்கற்குடிமாமலையானது,தேனடைகள் பொருந்திய சந்தன மரங்கள் இடையே,வேடர்கள்கரைகளைக் கட்டி,தினைகளை விதைத்துப்பயிர்களைவிளைவிக்கும்இடமாகும். இவர் மானைஇடக்கையிலும்,மழுவை வலக்கையிலும்தரித்தவர். ஊன்பொருந்திய தலை ஓட்டை உண் கலனாகஉகந்தவர்.

குறிப்புரை: மானையும்மழுவையும் ஏந்தி,கபாலத்தைஉண்கலமாகஉகந்தவர் இவர் என்கின்றது. சந்து -சந்தனம்,வேடர் சந்தன மரத்தின் நடுவில் தினைவித்திவிளைக்கின்றார்கள் என்பது. ஆன்மாக்கள் வினைப்போகம்தடையாய் இருப்பினும் அவற்றை நீக்கிச்சிவபோகத்தைவித்திவிளைக்கும் புண்ணியபூமி எனக்குறிப்பித்தவாறு.

Lord Civan holds a deer in His left hand and a battleaxe in His right hand. He likes to possess the flesh-sticking skull as His alms-bowl. On the great mountain of Karkudi, honeybees have built their honeycombs in the sandalwood trees. In between the rows of these trees hunters have built strong ridges and sowed Thinai seeds (similar to Ragi, millet etc.,) and develop their agriculture. Our Lord Civan abides in this Karkudi.

Note: Honey and millet - powder form part of their basic food of the foresters.

வாளமர் வீர நினைந்தவிராவணன்மாமலையின்கீழ்த்
தோளமர்வன்றலைகுன்றத்தொல்விரலூன்றுதுணைவர்
தாளமர்வேய்தலைபற்றித்தாழ்கரிலிட்ட விசை போய்க்
காளமதாரமுகில்கீறுங்கற்குடிமாமலை யாரே.8

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின்கீழ்த்
தோள் அமர் வன்தலைகுன்றத்தொல்விரல் ஊன்று துணைவர் - 
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்க், 
காளம்அதுஆர் முகில் கீறும்கற்குடி மா மலையாரே.

பொருள்: அடிமரத்தோடு கூடிய மூங்கிலினதுநுனித்தழையைப் பற்றி வளைத்து உண்ட யானையானது,மீதமுள்ளஅடிமரத்தைவேகமாகவீசுகின்றது. அம்மூங்கில்விசையோடு சென்று கரிய நிறம் பொருந்திய மேகங்களைக்கீறுகிறது.சிவபெருமான் அந்த திருக்கற்குடி மாமலையில்வீற்றிருக்கின்றார். இவர்,வாட்போரில்வல்லவனும்,தனது பெருவீரத்தை நினைந்தவனும் ஆகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் அவன் தோள்களும்,வலிய தலைகளும்நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால்விரலால்ஊன்றியதுணைவர் ஆவார்.

குறிப்புரை: இராவணனை விரல் ஊன்றி அடக்கியவர் இவர் என்கின்றது. வேய் - மூங்கில். தாள் - அடி.  கரி - யானை,காளம் - கருமை நிறம். யானை மூங்கிலினதுநுனியைப்பற்றிவிட்டவிசையால் கருமுகிலின் வயிறு கீறப்படும் மலை என்றது. திருவருள் துணையிருப்பின் ஆணவமான படலத்தையும் கீறிக் கருணை மழையைக் காணலாம் எனக்குறிப்பித்தவாறு.

Elephants in the great mountain of Karkudi roam about in the bamboo forests and after eating the tender portion of bamboo throws away the remaining portion, which swiftly flies into the sky and dashes against the dark clouds that move over the forest trees. Raavanan, the valiant sword fighter was very proud of his irresistible bodily strength. This haughtiness was nullified by Lord Civan who crushed his shoulders and mighty heads under the reputed great Kailai mountain by pressing it with His toe of Eternal glory. This Lord Civan is our soul mate.

தண்டமர் தாமரை யானுந்தாவியிம் மண்ணை யளந்து
கொண்டவனும்மறிவொண்ணாக்கொள்கையர்வெள்விடையூர்வர்
வண்டிசையாயின பாட நீடியவார்பொழில்நீழல்
கண்டமர்மாமயிலாடுங்கற்குடிமாமலையாரே.

தண்டு அமர் தாமரையானும்,தாவிஇம் மண்ணை அளந்து 
கொண்டவனும்,அறிவு ஒண்ணாக்கொள்கையர்;வெள்விடைஊர்வர் - 
வண்டு இசை ஆயின பாட,நீடியவார்பொழில்நீழல், 
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

பொருள்: வண்டுகள் இசைபாட,நீண்ட பொழிலின்நிழலைக் கண்டு,சிறந்த மயில்கள் மகிழ்ந்து ஆடும் திருக்கற்குடிமாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். குளிர்ந்த தாமரை மலர்மேல்உறையும்நான்முகனாலும்,உயர்ந்த இவ்வுலகைஅளந்ததிருமாலாலும் இவர் அறிய ஒண்ணாதஇயல்பினர். இவர் வெண்ணிறமானவிடைமீது ஊர்ந்து வருபவர்.

குறிப்புரை: அயனும்மாலும்அறியவொண்ணாதார் இவர் என்கின்றது. வார்பொழில் - நீண்ட சோலை.  பொழிலின்நீழலில் வண்டு பாடக்கண்டுமயிலாடும்கற்குடி என்றது திருவடி நிழலில்திளைத்திருக்கும் சிவயோகியர்பரநாத இன்னிசை கேட்டு ஆனந்தக்கூத்தாடுகின்ற இடம் என அறிவித்தவாறு.

On the great mountain of Karkudi, peacocks dance cheerfully attracted by the shades of the extensive mountain forests, and groves while bees hum all around. Here abides our Lord Civan whose stature and glory are unknowable to Brahma who is seated in the cool Lotus flower and also to Thirumaal who measured this earth with giant strides of his feet. He rides on a White Bull.

மூத்துவராடையினாரும்மூசுகடுப்பொடி யாரும் 
நாத்துவர்பொய்ம்மொழியார்கள்நயமிலராமதி வைத்தார் 
ஏத்துயர்பத்தர்கள் சித்தரி றைஞ்சஅவரிடரெல்லாங்
காத்தவர்காமருசோலைக்கற்குடிமாமலை யாரே.10

மூத்துவர்ஆடையினாரும்,மூசுகடுப்பொடியாரும், 
நாத்துவர்பொய்ம்மொழியார்கள்,நயம் இலரா மதி வைத்தார்; 
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச,அவர் இடர் எல்லாம் 
காத்தவர் - காமருசோலைக்கற்குடி மா மலையாரே.

பொருள்: காவியாடைஅணிந்தவர்கள்புத்தர்கள். கடுக்காய்ப்பொடியை நிரம்ப உண்ணுபவர்கள்சமணர்கள். இவர்கள் வெறுப்பை உண்டாக்கும் பொய்மொழி பேசுபவர்கள். நேயமற்றவர்களாகவும்,அறிவில்லாதவர்களாகவும் இருப்பவர்கள். அழகிய சோலைகள் நிறைந்த திருக்கற்குடிமாமலையில்விளங்கும்சிவபெருமான்,அவர்களை விடுத்துத்,தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும்சித்தர்களும் வணங்க,அவர்கட்கு வரும் இடர்களைஅகற்றிக்காத்தவர்.

குறிப்புரை: சமணரும்புத்தரும்அறியமுடியாத பிறை சூடிய பெருமான் என்கின்றது. மூதுவர் ஆடை - முதிர்ந்த காவியாடை. கடு - கடுக்காய்த்துவர். நா துவர்பொய்ம்மொழி - நாக்கிற்குத்துவர்ப்பை உண்டு பண்ணும் பொய்.

The Buddhists who wear ochre robes and the Jains who excessively consume the powder of Chebulic myrabalam ( Terminalia chebula) utter false words that are sour to their own tongues. Their intellect is so poor that they have neither piety nor devotion. Ye companions! Do not listen to them; leave them alone to have their own way. Lord Civan protects, removes miseries and graces those devotees and siddhars who adore, praise and worship Him. His is the great mountain of Karkudi, which is surrounded by lush gardens.

காமருவார்பொழில்சூழுங்கற்குடிமாமலை யாரை 
நாமருவண்புகழ்க்காழிநலந்திகழ்ஞானசம்பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவைபாடவல்லார்கள்
பூமலிவானவரோடும்பொன்னுலகிற்பொலி வாரே.11

காமருவார்பொழில்சூழும்கற்குடி மா மலையாரை
நா மருவண்புகழ்க்காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மருசெந்தமிழ்மாலைபத்துஇவை பாட வல்லார்கள்
பூ மலிவானவரோடும்பொன்னுலகில்பொலிவாரே.

பொருள்: அழகிய பரந்த பொழில்களால்சூழப்பட்டதிருக்கற்குடிமாமலையில் வீற்றிருப்பவர் சிவபெருமான். இப்பெருமானைநாவிற் பொருந்திய வண்புகழால்போற்றப் பெறும் சீகாழிப்பதியில்தோன்றிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் செந்தமிழ் மாலையாகியஇத்திருப்பதிகத்தைப் பாடினார். இப்பாடல்கள்பத்தையும்ஓதவல்லவர்கள் பொலிவுடன் கூடிய தேவர்களோடும்பொன்னுலகின்கண் செழித்து வாழ்வார்கள்.  குறிப்புரை: இத்தலத்திறைவனைஏத்தவல்லவர்கள்தேவராய்த்திகழ்வர்என்கின்றது. காமரு –அழகிய நாமரு - நாவிற் பொருந்திய.

The benevolent Gnaanasambandan hails from the well renowned and glorious Seerkaazhi which is praised by all tongues (by all people in the earth). He has sung this Tamil heritage garland of ten verses on this Lord of the great mountain of Karkudi that is surrounded by extensive forests. Those who can recite these ten verses with sincerity will abide with the splendorous Devas in the golden heaven.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 43rd Hymn

சிவமயம்

44,திருப்பாச்சிலாச்சிராமம்

திருத்தலவரலாறு:

திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.  திருச்சி - முசிறி பேருந்து வழித்தடத்தில் உள்ளது. பாச்சில்கூற்றத்துஆச்சிராமம்ஆதலின், பாச்சிலாச்சிராமம் என வழங்கப்படுகிறது. கல்வெட்டுக்களில்கொள்ளிடத்தின்வடபகுதி பாச்சில்கூற்றம்,வடகரைமழபாடி நாடு,இராஜாதிராஜ வளநாடு எனப்பலபெயர்களால்வழங்கப் பெற்றதாகத்தெரிகின்றது. கொல்லி மழவன்புதல்விக்கு உற்ற முயலகன் என்னும் நோயைத் திருஞானசம்பந்தசுவாமிகள் நீக்கி அருளிய தலம். இங்குள்ள நடராஜர்திருவுருவிலும்முயலகன் 1991ஆம் ஆண்டில்எடுக்கப் பெற்ற34 எண்ணுள்ள கல்வெட்டு ஒன்று உள்ளது. ஏனைய எடுக்கப் பெறவில்லை போலும். இது -ஹொய்ஸள மன்னன் வீரசோமேஸ்வரன்காலத்தது.  இதனால் இக்கோயிலுக்குப்பதினாயிரங்கலம் அரிசி கிடைத்ததாகத்தெரிகின்றது. இவன் கி.பி. 1253இல் சமயபுரத்தைத்தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். சோழஅரசர்களில் குலோத்துங்கன் விளக்கு எரிக்க நிவந்தம் அளித்து இருக்கிறான்.

பதிக வரலாறு:

காழிப்பிள்ளையார்திருஅன்பிலாந்துறை,திருமாந்துறை முதலிய தலங்களைவணங்கிக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்குஎழுந்தருளினார்கள். இத்தலம்மழநாட்டைச்சார்ந்தது.  அந்நாட்டு மன்னன் கொல்லி மழவன் என்பவன். அவன் மகளுக்கு “முயலகன்” என்னும் நோயிருந்தது. அது எவ்வாற்றானும்தீருமாறில்லாமையைஉணர்ந்த அரசன்,தம் மரபில்வழக்கப்படி பாச்சிலாச்சிராமத்து இறைவன் திருமுன் கொண்டுவந்து பாடுகிடத்திவைத்திருந்தான். அப்போது ஒருநாள் பிள்ளையார் வருகையைத்திருச்சின்னஒலிகேட்டு உணர்ந்தான். எல்லா மரியாதைகள் உடனும் எதிர்கொண்டு அழைத்து வந்தான். திருவடியில்வீழ்ந்துவணங்கினான்.  திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றான். திருக்கோயிலை வலம் வந்த பிள்ளையார்,உணர்வு அழிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்கின்றஇளங்கொடியை ஒத்த கன்னியை இறைவன் திருமுன்பு கண்டார். “இது என்ன?'என்று மழவனைவினாவினார். அரசன் அவரடியில்வீழ்ந்து இறைஞ்சி “இவள் என் மகள்;நெடுநாள்முயலகன் என்னும் நோயால்வருந்துகின்றாள். தீர்க்கும் உபாயம் தெரியாமல் சிவபெருமான் திருமுன்புசேர்ப்பித்திருக்கிறேன்” என்று தெரிவித்துக் கொண்டான்.  பிள்ளையார் மனமிரங்கி மாற்றறிவரதரை நோக்கி,பிணி தவிர்க்கும் பெரும்பதிகமாகிய “துணி வளர் திங்கள்” என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார். இறைவனைப் போற்றி நின்றார். மழவன் மகள் உடன் பிணிநீங்கி எழுந்து தந்தையின் பக்கம் சார்ந்தாள். எல்லாரும் பிள்ளையார் பெருங்கருணைக்கும் பெருமான் திருவருளுக்கும்இலக்கானார்கள். சுவாமிகள்சிலநாள் அங்கு எழுந்தருளியிருந்துதிருப்பைஞ்ஞீலியை அடைந்தார்கள்.

44. THIRU-P-PAACHILAA-CH-CHIRAAMAM

THE HISTORY OF THE PLACE

     The sacred city of Thiru-p-paachilaa-ch-chiraamam is to the north of river Cauvery in Chola Naadu, and is in the Thiruchchi - Musiri bus route.

     The Lord is known by the names of Maarrarivaradhar and Sameevanesuvarar and the Goddess, Baalasoundhari. The sacred fords (waterways) are Annamaam Poygai and Silambu river, with the former in front of the Goddess shrine and the latter running to the north of the village. The river is also called Pangkuniyaaru and Amalaiyaaru. The sacred tree is Vanni, standing next to the Poygai. In front of the temple are other temples for the 'angry gods' Theradi Karuppannasaami, Madhuraiveeran and Adikkalam Kaaththaan.

This temple has the following distinctions: Saint Thirujnaanasambandhar suvaami cured the daughter of one Kolli Mazhavan, the local king, of a disease known as Muyalakan. The image of Natarajar here does not have the usual form of Muyalakan under His foot, and instead has a great snake. Saint Sundharamoorthi Swaami sang sarcastically of the Lord as 'ivaralladhu illaiyo piraan' (is there no Lord other than Him?) and thus obtained wealth from the Lord. Paarvathi, Brahma, Ilakkumi and Agaththiyar offered worship at this temple. The major festival falls in the month of Vaikaasi.

From an inscription of the time of Hoysala King Veera Somesvaran, who ruled over this region with Samayapuram as his capital, it is known that the temple received ten thousand kalams of paddy. Kulohthungkan is known to have made grants for lighting the lamps.

INTRODUCTION TO THE HYMN

      Adoring Civa at Anpillaalanthurai and Maanthurai the child-saint arrived at Thiru-p-paachilaa-ch-chiraamam. There the local chieftain received our Saint in all propriety. He implored our Saint to cure his daughter of the great malady with which the lass was afflicted. At this he sang the following hymn in the shrine of the Lord-God. Lo and behold! The lass stood cured instantaneously.
திருச்சிற்றம்பலம்

44.திருப்பாச்சிலாச்சிராமம் 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

துணிவளர்திங்கள்துளங்கிவிளங்கச்சுடர்ச்சடைசுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர்பாரிடஞ்சூழவாரிடமும்பலிதேர்வர்
அணிவளர்கோலமெலாஞ்செய்துபாச்சிலாச்சிராமத்துறைகின்ற
மணிவளர்கண்டரோமங்கையைவாடமயல்செய்வதோவிவர்மாண்பே.

துணி வளர் திங்கள் துளங்கிவிளங்கச்,சுடர்ச்சடை சுற்றி முடித்துப், 
பணி வளர் கொள்கையர்,பாரிடம் சூழ,ஆர் இடமும் பலி தேர்வர்; 
அணி வளர் கோலம்எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
மணி வளர் கண்டரோ,மங்கையை வாடமயல்செய்வதோ இவர் மாண்பே.

பொருள்: சிவபெருமான் முழுமதியினதுபாகமாக விளங்கும் ஒரு கலைச்சந்திரனை தம் ஒளி பொருந்திய சடையில்விளங்கித்திகழுமாறுசுற்றிக்கட்டியுள்ளார். அவர் பாம்புகளை அணிந்துள்ளார். பூதங்கள்தம்மைச்சூழ்ந்துவரஎல்லோரிடமும் சென்று பலியேற்பவராய் இருக்கின்றார். அழகிய தோற்றத்துடன்விளங்கும்திருப்பாச்சிலாச்சிராமத்தில் தங்கியிருக்கின்ற நீலமணி போன்ற கழுத்துடையவரே! கொல்லி மழவன்மகளாகிய இப்பெண்ணை இவ்வாறு மயங்கச் செய்வது உமக்குமகிமையாகுமோ என்று பாடியருளினார்.

குறிப்புரை: தவறிழைத்ததண்மதியைத்தலையிற்சூடிவிடத்தை அமுது செய்த பெருமானோஇவள்வாட மயக்குவதுஎன்கின்றார். துணி-கீறு. பணி வளர் கொள்கையர் – பாம்புகள் வளர்வதைக் கொள்ளுகின்ற திருக்கரங்களை உடையவர். பாரிடம் - பூதம். ஆரிடமும் – ஏற்பார்ஏலாதார்என்கின்றவேறுபாடில்லாமல் எல்லாரிடமும். மங்கை என்றது கொல்லி மழவனது மகளை.

Lord Civan keeps in His shining matted hair, the single phase crescent moon well bounded and brightly exposed along with the snakes. Surrounded by Bhuta hosts, He abides in Paachilaa-ch-chiraamam, goes to everybody and seeks alms. He is decked with bright ornaments and His neck is dark blue in colour like that of sapphire. Is it not below His dignity for Lord Civan to see this young girl suffer an incurable malady?

Note: The first ten verses are cast in the form of a rhetorical question. Obviously, the answer is 'No'.

கலைபுனைமானுரிதோலுடையாடைகனல்சுடராலிவர்கண்கள்
தலையணிசென்னியர்தாரணிமார்பர்தம்மடிகள்ளிவரென்ன
அலைபுனல்பூம்பொழில்சூழ்ந்தமர்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
இலைபுனைவேலரோவேழையைவாடஇடர்செய்வதோ விவரீடே.2

கலை புனை மான் உரி-தோல்உடை ஆடை;கனல் சுடரால் இவர் கண்கள்; 
தலை அணி சென்னியர்;தார் அணி மார்பர்;தம் அடிகள் இவர் என்ன, 
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
இலை புனை வேலரோ,ஏழையைவாட இடர் செய்வதோ இவர் ஈடே?

பொருள்: மான்தோலை இடையில் ஆடையாக உடுத்தி இருக்கின்றவர்,நெருப்பு,சூரியன், சந்திரன் இவைகளைக்கண்களாகக்கொண்டுள்ளார். தலைமாலைஅணிந்துள்ளார்.  மார்பில் மாலை அணிந்துள்ளார். உயிர்களுக்குத் தலைவர் இவர் என்று சொல்லத் தக்கவராய் இருக்கின்றார். நீர்வளம் நிரம்பிய சோலைகள்சூழ்ந்தபாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளி, இலை வடிவமான வேலை ஏந்தியசிவபெருமானாகிய இவர்,இந்தப் பெண் வாடுமாறுதுன்பப்படுத்துவது இவரது பெருமைக்குப்பொருந்துவதாமோ?

குறிப்புரை: இறைவனது கலை,ஆடை,கண் முதலியன இவை என உணர்த்தி. இவற்றையுடைய இவரோ இவளை இடர் செய்வது என்று வினாவுகின்றது. மானுரிபுனைகலை. தோலுடை ஆடை, கனல்சுடர் இவர் கண்கள் என இயைக்க. கலை - மேலாடை. உடை ஆடை - உடுத்தலையுடைய ஆடை இலை புனை வேலர் - இலைவடிவாகப்புனையப் பெற்ற வேலினை உடையவர். ஏழை - பெண்.

Lord Civan wears in His waist the skin of a deer. His three eyes are the fire, the sun and the moon. In His head He puts on the skull bones. His chest is adorned with garlands. He is the Lord of all souls in the universe. He holds in one of His hands the trident looking like a leaf. He abides in Thiru-p-paachilaa-ch-chiraamam, which has abundant supply of water and is surrounded by natural lush forests. Is it not below His dignity for Lord Civan to allow the daughter of the king Kolli Mazhavan to suffer in such a languishing condition?

Note: Three are the eyes of Civa, they being the sun, the moon and the Fire-God (Agni).

வெஞ்சுடராடுவர்துஞ்சிருள்மாலைவேண்டுவர்பூண்பதுவெண்ணூல்
நஞ்சடைகண்டர்நெஞ்சிடமாகநண்ணுவர்நம்மைநயந்து
மஞ்சடைமாளிகைசூழ்தருபாச்சிலாச்சிராமத்துறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோபைந்தொடிவாடச்சிதைசெய்வதோ விவர்சீரே.3

வெஞ்சுடர்ஆடுவர்,துஞ்சுஇருள்;மாலை வேண்டுவர்;பூண்பதுவெண் நூல்; 
நஞ்சுஅடைகண்டர்;நெஞ்சுஇடம்ஆகநண்ணுவர்,நம்மை நயந்து; 
மஞ்சு அடை மாளிகை சூழ்தருபாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோ,பைந்தொடிவாடச்சிதைசெய்வதோ இவர் சீரே?

பொருள்: சிவபெருமானார்உலகமெல்லாம் அழிந்து ஒழியும்ஊழிக்காலத்துஇருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவர். தலைமாலைமுதலியவற்றைவிரும்புவர். வெண்ணூல் பூணுபவர். நஞ்சைஉண்டதால் அவர் கழுத்து நீலநிறமாயிற்று. அன்போடு அவரை விரும்பி நினைத்தவர்கள் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவர். மேகங்கள் தவழ்ந்து வரும்  மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியவர். செழுமையான தீயின் நிறத்தை உடையவர். இவருடைய புகழுக்கு,தங்க வளையல் அணிந்தமழவன்மகளாகிய இப்பெண்ணைவருத்துவதுபொருந்துவதோ?

குறிப்புரை: உலகமெல்லாந்துஞ்சும்பிரளயகாலத்திருளில்தீயாடுவார். மாலை வேண்டுவார், வெண்ணூல்பூண்பர்,நஞ்சடைகண்டர்,ஆன்மாக்களாகிய நம்மை எளிவந்தகருணையால்நண்ணுவார் என்கின்றது. துஞ்சு இருள் - அண்டமெல்லாம்இறக்குங்காலமாகிய இருள். இருள் ஆடுவர் என இயைபு படுத்துக. நெஞ்சிடமாக நம்மை நயந்துநண்ணுவர் எனவும் இயைக்க. ஆன்மாக்கள்தற்போதமிழந்து நம்மை நண்ணட்டும் ஆட்கொள்வோம் என்றிராது,சென்று பயன்படும் கால்போலத்தாமேவலியவந்து அணுகுவர்என்பதாம். மஞ்சு - மேகம். சிதை செய்வது - வருத்துவது. இவர் சீர் - இவர் புகழ்.

At the close of an aeon (eon) the entire universe is dissolved when Lord Civan dances alone blazing a trail of fire in the enveloping darkness. He loves to wear the garland of skulls. He wears the white sacred thread in His chest and His neck is dark blue in colour because He swallowed poison. He loves to abide in the hearts of those who remember Him lovingly. His body frame is as red in colour as that of fire and He is enshrined in Thiru-p-paachilaa-ch-chiraamam. Will it match His honour for Lord Civan to allow to suffer this young girl who is wearing golden bracelet in her hands and is the daughter of Mazhavan?

Note: The dance referred to here is the one enacted by Civa in the great crematory after the dissolution of the cosmos.

கனமலர்க்கொன்றைஅலங்கலிலங்கக்கனல்தருதூமதிக்கண்ணி
புனமலாரமாலையணிந்தழகாயபுனிதர்கொலாமிவரென்ன
வனமலிவண்பொழில்சூழ்தருபாச்சிலாசிராமத்துறைகின்ற
மனவலிமைந்தரோமங்கையைவாடமயல்செய்வதோ விவர்மாண்பே.4

கனமலர்க்கொன்றைஅலங்கல்இலங்க,கனல்தரு தூ மதிக்கண்ணி
புனமலர்மாலை அணிந்து,அழகுஆயபுனிதர்கொல்ஆம் இவர் என்ன, 
அனம்மலிவண்பொழில்சூழ்தருபாச்சிலாசிராமத்துஉறைகின்ற
மனம் வலி மைந்தரோ,மங்கையை வாடமயல்செய்வதோ இவர் மாண்பே?

பொருள்: சிவபெருமானார்கார்காலத்தில்மலரும் கொன்றை மலர் மாலையைத் திருமேனியில்அணிந்தவர். பிரிந்து வாழும் கணவன் / மனைவிகளுக்குத்துன்பந்தரும் தூய பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவர். அழகாயபுனிதர் என்று சொல்லும் படியானவர். எழிலார்ந்த அழகிய சோலைகள்சூழ்ந்ததிருப்பாச்சிலாச்சிராமத்துஅடியவர்களுக்கு மனநிறைவு தருபவர். இப்பெருமானுக்கு ஒரு பெண் வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ? பிறைக்கண்ணியை அணிந்து அழகாயபுனிதர் இவர் என

குறிப்புரை: கொன்றை மாலை விளங்க.  கனம் - மேகம். தூமதி - அறிவிக்கின்றது. கனமலர் - கார் காலத்துமலரும் கொன்றை மலர்.  ஒருகலைப்பிறையாதலின்களங்கமில்லாத மதி. இறைவன் அணிந்தமையின்தூமதிஎனலுமாம். வனம் - அழகு. இங்ஙனம் பிறர் உற்ற துன்பம் போக்குதற்குஅறிகுறியாகப்பிறையைஅணிந்த பெருமான் ஒருபெண்வாடமயல்செய்வதுமாண்பாகுமா என்று வினாவியவாறு. கனல்தரு - மதிக்கு அடை.

Lord Civan's chest is brightly adorned with the garland made of cassia flowers that blossom in the rainy season. He accommodates the pure bright crescent moon in His head, the moon that causes the parted couples to grieve, when they are away from each other. He is a handsome pure holy person wearing garlands of flowers blossomed in forests. He endowed comfort in the minds of His devotees who live in Thiru-p- paachilaa-ch-chiraamam, which is surrounded by lush forests. Is it not below His dignity for Lord Civan to allow this young girl to suffer in an incurable delusional condition?

மாந்தர்தம்பானறுநெய்மகிழ்ந்தாடிவளர்சடைமேற்புனல்வைத்து, 
மோந்தைமுழாக்குழல்தாளமொர்வீணைமுதிரவோர்வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச்சிறுபூதத்தர்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
சாந்தணிமார்பரோதையலைவாடச்சதுர்செய்வதோ விவர்சார்வே.5

மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி,வளர்சடை மேல் புனல் வைத்து, 
மோந்தை,முழா,குழல்,தாளம்,ஒர் வீணை,முதிர ஓர் வாய்மூரி பாடி, 
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர்;பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
சாந்து அணி மார்பரோதையலைவாடச்சதுர்செய்வதோ இவர் சார்வே?

பொருள்: சிவபிரான் மண்ணுலகில் அடியார்களால் பால் நறுமணமுள்ள நெய் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதை விரும்புகின்றார். வளர்ந்த சடைமுடியின் மேல் கங்கை நதியைச்சூடியவர். மொந்தை,முழா,குழல்,தாளம்,வீணை முதலான வாத்தியங்கள் முழங்க வீற்றிருப்பவர். ஆந்தை போன்ற விழிகளை உடையசிறு பூதகணங்கள்இவரைச் சூழ்ந்து இருக்கின்றன. இவர் சந்தனக் கலவையைஅணிந்த மார்பினர்.திருப்பாச்சிலாச்சிராமத்தில்உறைகின்றவர் இவர். இந்தப் பெண்ணை வாடச் செய்து தம் வலிமையைக்காட்டுவதுஏற்புடையதோ?

குறிப்புரை: அடியார்கள் ஆட்டும் பால்,நெய் முதலானவற்றில்ஆடிக்கங்கையைச்சடைமேல் வைத்து மொந்தை முதலான வாத்தியங்கள்முழங்கப்பாடும்பூதகணநாதர் இவர் என்கின்றது. மோந்தை;மொந்தை என்பதன் நீட்டல் விகாரம். முதிர - ஒலிக்க. ஒருமாதைத் தலையில் வைத்த இவரோஇம்மாதுவாடச் சதுர்செய்வது என நயந்தோன்றஉரைத்தவாறு.

Lord Civan likes and enjoys the sacred bath given to Him by devotees on the earth, using milk and pure ghee. He accommodates the river Ganga on His growing matted hair. To the accompaniment of music from 'Monthai-muzha-kuzal - cymbals - Veenai' He sings in melodious tone. He is surrounded by Bhutas with eyes like those of owls and His chest is decorated with sandal paste. Is it not below His ability for Lord Civan to allow this young girl to suffer such a swoon?

Note: Montai: It is a special type of pot used as a percussion instrument. Today, it goes by the name of Gatam.
Muzhaa: Akin to Mrudangkam. Kuzhal: Flute. Taalam: Cymbals.
Veena: The Indian Lute.

நீறுமெய்பூசிநிறைசடைதாழநெற்றிக்கண்ணாலுற்று நோக்கி 
ஆறதுசூடியாடரவாட்டியைவிரற்கோவணவாடை
பாறருமேனியர்பூதத்தர்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
ஏறதுவேறியரேழையைவாடஇடர்செய்வதோ விவரீடே.6

நீறு மெய் பூசி,நிறைசடை தாழ,நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி, 
ஆறுஅது சூடி,ஆடுஅரவுஆட்டி,ஐவிரல்கோவண ஆடை 
பால் தரு மேனியர்;பூதத்தர்;பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
ஏறுஅதுஏறியா்;ஏழையைவாட இடர் செய்வதோ இவர் ஈடே?

பொருள்: சிவபிரான் திருநீற்றை உடல் முழுவதும் பூசியவர். நிறைந்த சடைகள்தாழ்ந்தவாறு விளங்குபவர். தமது நெற்றிக்கண்ணினால்மறக்கருணை. காட்டி பாவங்களைபோக்குபவர்.  கங்கையைத் தலையில் அணிந்தவர். ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து ஆட்டிக் கொண்டு இருப்பவர். ஐந்து விரல் அளவுள்ளகோவண ஆடை அணிந்தவர். பால் போன்ற வெள்ளிய மேனி உடையவர். பூதகணங்கள்தம்மைச் சூழ திருப்பாச்சிலாச்சிராமத்தில் விடை ஊர்தியாகஉறைகின்றவர். இந்தச்சிவபிரான்இப்பெண்ணைவாடுமாறு செய்து இவளுக்குத் துன்பம் செய்வது அவருக்குப் பெருமை தருவது ஒன்றா?

குறிப்புரை: அருளும்மறமும் உடையவர் இவர் என அறிவிக்கின்றது. நெற்றிக்கண்ணால்உற்றுநோக்கி என்றது மறக்கருணைகாட்டிச்சம்ஹரித்தலைச்சொல்லியது. ஐவிரல் கோவணம் என்பது கோவணத்தின் அகலம் கூறியது. ஏழை - பெண். ஈடு - பெருமை.

Holy ash has been spread all over the body of Lord Civan. His dense matted hair dangles (in the air). He stared through His third eye on His forehead and chastised Kaaman, the god of love, but nullified Kaaman's evil karma. He accommodates the river Ganges on His head. By catching the dancing snake in His hand, He rattles it. He wears loincloth of five inches width. He shines bright white like milk. Accompanied by Bhuta servitors He abides in Thiru-p- paachilaa-ch-chiraamam. Is it not below His honour for Lord Civan not to care about the sufferings of this young girl who is in incurable affliction?

பொங்கிளநாகமொரேகவடத்தோடாமைவெண்ணூல்புனைகெரன்றை
கொங்கிளமாலைபுனைந்தழகாயகுழகர்கொலமிவரென்ன
அங்கிளமங்கையோர்பங்கினர்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோதாழ்குழல்வாடச்சதிர்செய்வதோ விவர்சார்வே.7

பொங்கு இளநாகம்,ஓர் ஏகவடத்தோடு,ஆமை,வெண்ணூல்,புனை கொன்றை, 
கொங்கு இளமாலை புனைந்து அழகுஆயகுழகர்கொல்ஆம் இவர் என்ன, 
அங்கு இளமங்கைஓர்பங்கினர்;பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
சங்குஒளிவண்ணரோ,தாழ்குழல்வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

பொருள்: சிவபெருமான்சினம்பொங்கும்இளநாகத்தைப் பூண்டவர். ஒற்றை மாலை அணிந்தவர். ஆமை ஓட்டையும்,வெண்மையானபூணூலையையும்அணிந்தவர். தேன் நிறைந்த புதிய கொன்றை மலர்மாலைஅணிந்த அழகிய இளைஞர் இவர். இளநங்கையான உமையம்மையைஒருபாகமாக உடையவர். திருப்பாச்சிலாச்சிராமத்தில்உறைபவர்.  சங்கொலி போல திருநீறு அணிந்ததிருமேனியை உடைய இறைவர்'இவர். இவரோ இத்தாழ்குழலாள்வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது! இது இவர் பெருமைக்குப் பொருந்துமோ?

குறிப்புரை: நாகம்,ஆமையோடு,பூணூல்,கொன்றைமாலை - புனைந்தவர் இவர் என்கின்றது. ஏகவடம் - ஒற்றைமாலை. குழகர் - இளமையுடையவர். சதிர் - சாமர்த்தியம். இளமங்கையைப் பக்கத்தில் உடைய இவர் இவ்வாறு சதிர் செய்தல் ஆகாது என்பது குறிப்பு.

Lord Civan wears the wrathful young raging snake over His chest along with a single garland of gems. He adorns His body with the tortoise shell and sacred thread. Devotees praise Him by saying "What a young handsome appearance our Lord has with the garland of cassia flowers on His neck and keeping Umaa Devi on the left portion of His body". He smears His body with holy ashes which is as white as the pure white conch shell and is entempled in Thiru-p-paachilaa-ch-chiraamam. Is it a tactful deed of Lord Civan to blink at the suffering of this young virgin, whose hair is dangling in the air, and who is undergoing this swoon?

Note: Eka Vatam: A single row (of chain).

ஏவலத்தால்விசயற்கருள்செய்துஇராவணனையீடழித்து
மூவரிலும்முதலாய்நடுவாயமூர்த்தியையன்றிமொழியாள்
யாவர்களும்பரவும்மெழிற்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
தேவர்கள்தேவரோசேயிழைவாடச்சிதைசெய்வதோவிவர்சார்வே.

ஏ வலத்தால்விசயற்கு அருள் செய்து,இராவணன் தன்னை ஈட அழித்து, 
மூவரிலும்முதல்ஆய்நடுஆயமூர்த்தியைஅன்றி.மொழியாள்; 
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
தேவர்கள்தேவரோ,சேயிழைவாடச்சிதைசெய்வதோ இவர் சார்வே?

பொருள்: சிவபெருமான் தனது அம்பின் வலிமையால்அருச்சுனனோடு போரிட்டு வென்று அவனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி அருள் செய்தவர். இராவணனின்தற்பெருமையை அழித்தவர். மும்மூர்த்திகளுக்கும்தலைவராம்அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல்,அழித்தல் தொழிலைப் புரிய அருள் செய்பவர். எல்லோராலும்துதிக்கப்பெறுபவர். திருப்பாச்சிலாச்சிராமத்தில்உறையும்மகாதேவராகிய சிவபெருமான் திருப்பெயரை-யன்றி வேறு வார்த்தைகள் பேசுவதற்குஇப்பெண்அறியாள். இப்பெண்ணைவாடச் செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?

குறிப்புரை: அண்டினாரைக் காத்து மிண்டினாரை அழிக்கும் பெருமையர் இவர் என்கின்றது.  ஏ வலத்தால் - அம்பின் வலிமையால். ஈடு - வலிமை.'இராவணன் தன்னை” என்றும் பாடம்.

Lord Civan with the dominance of His mighty bow fought against and defeated Arjuna, graced Him thereafter by giving Him, what he needed - the mighty divine arrow. It is He who annulled the fame of Raavana as a great warrior. Lord Civan is the Immanent Supreme Lord of the three demigods - Brahma, Vishnu and Rudran, controlling and commanding them to execute their responsibility through His grace. He is entempled in Thiru-p-paachilaa-ch-chiraamam where He is worshipped by one and all. The young daughter of the local king 'Kolli Mazhavan' was averse to speak the name of any god other than our Lord Civan. Is it fair for Lord Civan to allow this girl to suffer from delusional affliction?

மேலதுநான்முகனெய்தியதில்லைகீழதுசேவடிதன்னை
நீலதுவண்ணனுமெய்தியதில்லையெனவிவர்நின்றதுமல்லால்
ஆலதுமாமதிதோய்பொழிற்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
பாலதுவண்ணரோபைந்தொடிவாடப்பழிசெய்வதோ விவர்பண்பே.9

மேலது நான்முகன் எய்தியது இல்லை,கீழது சேவடி தன்னை 
நீல்அதுவண்ணனும்எய்தியது இல்லை,என இவர் நின்றதும் அல்லால், 
ஆல்அது மா மதி தோய் பொழில்பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
பால்அதுவண்ணரோ,பைந்தொடிவாடப் பழி செய்வதோ இவர் பண்பே?

பொருள்: சிவபெருமான் தீப்பிழம்பாய் நின்ற பொழுது அவன் திருமுடியை நான்முகன் தேடி அடைந்ததுமில்லை. கீழே உள்ள அவருடையதிருவடியை நீல நிறத்தனாகிய திருமால் அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறுதீஉருவாகநின்றவர் சிவபெருமான்.  ஆலமரங்களின்உச்சியில் பெரிய முழுநிலா சென்று தோயும்சோலைகள்சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்தில்உறைந்திருக்கின்றார்பால்வண்ணரான சிவபெருமான்.  இப்பைந்தொடியாள்வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?  குறிப்புரை: அயனும்திருமாலும் மேலும் கீழும்அறியாதபடிமயங்கச் செய்த பெருமான் இவர் என்கின்றது.

The entire world wondered and praised Lord Civan as He appeared as a tall and huge flame of fire. Lord Civan's head at the top of the fire column could not be reached and seen by the four-faced Brahma. Similarly His Holy Feet at the bottom of the fire column could not be reached and seen by the blue hued Thirumaal. The search and efforts of these two went in vain. Lord Civan having the pure blazing white body as that of milk is enshrined in Thiru-p-paachilaa-ch-chiraamam, which is surrounded by thick forest of banyan trees over which the full moon rests while passing through the sky. Is it His true nature for Lord Civan to allow this young girl to weaken and languish in her stupefied condition?

நாணொடுகூடியசாயினரேனுநகுவரவரிருபோதும்
ஊணொடுகூடியவுட்குநகையாலுரைகளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடிவாயினர்பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
பூணெடுமாபரோபூங்கொடிவாடப்புனைசெய்வதோ விவர்பொற்பே.10

நாணொடு கூடிய சாயினரேனும்நகுவர்,அவர் இருபோதும்; 
ஊணொடு கூடிய உட்கும்தகையார்உரைகள் அவை கொளவேண்டா; 
ஆணொடுபெண்வடிவுஆயினர்,பாச்சிலாச்சிராமத்துஉறைகின்ற
பூண் நெடுமார்பரோ,பூங்கொடி வாடப்புனைசெய்வதோ இவர் பொற்பே?

பொருள்: சமணர்கள்நாணத்தோடு கூடிய செயல்களை மறந்து ஆடையின்றித்திரிவதோடு எல்லோராலும்பரிகசக்கத்தக்கவர்கள். புத்தர்கள்இருவேளை உண்டு அஞ்சத்தக்க நகையோடுதிரிகின்றனர். அவர்களுடைய சொற்களை உண்மை எனக் கொள்ள வேண்டாம்.  திருப்பாச்சிலாச்சிராமத்தில் சிவபெருமான் ஆணோடு பெண் வடிவினராய்,அணிகலன்கள் திருமார்பில்பூண்டவராய்விளங்குகின்றார். இப்பெருமான்இப்பூங்கொடியாளைவாடச் செய்து பழிப்புரை கொள்ளுவது இவரது அழகுக்கு ஏற்ற செயலாகுமோ?

குறிப்புரை: புறச்சமயிகள்புல்லுரை கொள்ள வேண்டா என உலகவர்க்குஅறிவுறுத்திப்,பின்னா் ஆணோடு பெண் வடிவானவர் இவர் என்கின்றது. நாணொடு கூடிய - நாணத்தோடு சேர்ந்த பிறவற்றையும். சாயினரேனும் - இழந்தவர்களாயினும். நகுவர் -. பரிகசிக்கத்தக்கவர்கள். ஆதலால் இருவேளைஉண்ணுகின்ற அவருடைய அஞ்சத்தக்க சிரிப்பால் அவர்களைக் கொள்ள வேண்டா என முதல் இரண்டடிகட்கும் பொழிப்புரை காண்க. பெண்ணொருபாதியான பெருமான் ஒரு பெண்ணை வாடச் செய்யார் என்பது குறிப்பு.

Ye companions! Do not heed to the malicious exhortations of the Jains and Buddhists. The Jains roam about nude, forsaking the sense of shame. The Buddhists eat twice a day and move about cachinnating awfully. Lord Civan with His chest decorated with jewels is entempled in Thiru-p-paachilaa-ch-chiraamam having His consort in one part of His body. Does it speak well of Lord Civan to leave the young girl to weaken and languish in stupor? Will it not bring ignoring to Him?

அகமலியன்பொடுதொண்டர்வணங்கவாச்சிராமத்துறைகின்ற
புகைமலிமாலைபுனைந்தழகாயபுனிதர்கொலாமிவரென்ன
நகைமலிதண்பொழில்சூழ்தருகாழிநற்றமிழ்ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ்கொண்டிவையேத்தச்சாரகி லாவினைதானே.11

அகம் மலிஅன்பொடு தொண்டர் வணங்க,ஆச்சிராமத்துஉறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகுஆயபுனிதர்கொல்ஆம் இவர் என்ன, 
நகை மலிதண்பொழில்சூழ்தருகாழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலிதண்தமிழ் கொண்டு இவை ஏத்த,சாரகிலா,வினைதானே.

பொருள்: உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வணங்கும்ஆச்சிராமம் என்னும் ஊரில்உறைகின்றவர் சிவபெருமான். அன்பர்கள் காட்டும் நறுமணப் புகை நிறைந்த மாலைகளைச்சூடியவர். அழகும் தூய்மையும்உடையவருமானசிவபெருமானை,மலர்ந்த குளிர்ச்சியான சோலைகள்சூழ்ந்தசீகாழிப்பதியில்தோன்றியநற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்போற்றிப் பாடினார். இன்றைக்கும்ஓதுவாரது நோய் தீர்க்கும்இந்தத் தமிழ் மாலையை ஏத்திப் பரவி வழிபடுவோரைவினைகள்சாரா.

குறிப்புரை: இப்பாடல்பத்தும் வல்லாரை வினைசாரா என்கிறது. அகமலி அன்பு - மனம் நிறைந்த அன்பு.  தகைமலிதண் தமிழ் - இன்றைக்கும்ஓதுவாரது நோய் தீர்க்கும் தகுதி வாய்ந்த தமிழ்.

Lord Civan who is enshrined in Thiru-p-paachilaa-ch-chiraamam is worshipped by His servitors with heartfelt love. He dons His body with garlands made more fragrant with the smoke of the incense. He is known for His purity and beauty. Gnaanasambandan who is well versed in chaste Tamil hails from Seekazhi which is surrounded by cool forests full of flowers. With adoration to Lord Civan who is entempled in Thiru-p-paachilaa-ch-chiraamam he sang this hymn. It is capable to ward off all ailments. It ranks the highest in sublimity. It creates peace and happiness in the minds. Those who can adore and worship Lord Civan with this Tamil garland of ten verses will not be affected by the ill effects of their bad karmaa.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 44th Hymn

திருச்சிற்றம்பலம்

44ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

45.திருவாலங்காடு

திருத்தலவரலாறு:

திருவாலங்காடு என்ற திருத்தலம் தொண்டை நாட்டுத் தலம் ஆகும். திருவள்ளூர்-அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது. திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. நடராஜப் பெருமான் நடனம் செய்யும் சபை ஐந்தனுள் இது இரத்தின சபையாகும். இறைவன் காளியைஊர்த்துவதாண்டவத்தால்தோற்கச் செய்த தலம். இதனைத் தேவாரம்’ஆடினார்காளிகாணஆலங்காட்டடிகளாரே‘என்று சொல்லும். பதஞ்சலி கார்க்கோடகன் என்ற பெயரோடும்,வியாக்கிரபாதர்முஞ்சிக்கேசர் என்ற பெயரோடும் எப்பொழுதும் நடன தரிசனம் செய்வர்.கயிலைக்குத்தலையாலே நடந்து சென்ற காரைக்கால் அம்மையார் என்றும் திருவடிக்கீழ் ஆனந்த தாண்டவதரிசனத்தோடு அமர்ந்து இருக்கின்றார்.  திருஞானசம்பந்தசுவாமிகள்,அம்மையார் தலையாலே நடந்த தலமென்றுமிதித்தற்குஅஞ்சிப் புறம்போக,இறைவன் கனவில்’எம்மை பாட மறந்தனையோ‘என்றுகேட்டுப் பாடல் பெற்ற தலம்.

இங்கே வாழ்ந்த வேளாளர்கள்பழையனூர்நீலிக்குக் கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டினார்கள். இதனைத்’துஞ்சவருவாரும்‘என்னும்பதிகத்தில் ஞானசம்பந்தசுவாமிகள்விளக்கியுள்ளார்கள்.  சுவாமி பெயா்தேவர்சிங்கப் பெருமான்,ஊர்த்துவதாண்டவேசுவார். அம்மை பெயா் வண்டார்குழலி. தீர்த்தம் முத்தி தீர்த்தம். தலவிருட்சம் பலா.

கல்வெட்டு: 
அரசியலார்படியெடுத்த கல்வெட்டுக்கள்52 உள்ளன. இத்தலம்வடகரைமணவிற் கோட்டத்து மேல் மாலை பழையனூர்நாட்டுத்திருவாலங்காடு என்றும்,ஜெயங்கொண்டசோழ மண்டலத்து மேல் மாலையாகியபழையனூர்நாட்டுத்திருவாலங்காடு என்றும் வழங்கப்படுகின்றது.  பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக்குறிப்பிடப்படுகின்றார். இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன்பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான். நடராஜப் பெருமான் திருவரங்கில் அண்டம் உறநிமிர்ந்தருளிய நாயனார் எனக்குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர் நாட்டு அரும்பாக்கத்துக்குன்றத்தூரக் கோட்டத்துஅறநிலைவிசாரகன்திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான். அம்மை வண்டார்குழலிநாச்சியார் எனவும்,பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படுகிறார்.

ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும்,தண்டநாயகருக்கு உத்தரவு இட்டதையும் அறிவிப்பன.477, 476 என்ற விஜயநகர அரசர் கல்வெட்டுக்கள்இம்மடிதர்மசிவாச்சாரியார், பொன்னம்பலசிவாச்சாரியார்,அனந்தசிவாச்சாரியார்,இவர்களுக்கு விழா நடத்த உத்தரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. முதலாம் பராந்தக சோழன் காலம் முதல் விஜய நகர அரசர் காலம் வரையுள்ளஇக்கல்வெட்டுகளால்இத்தலத்தின்தொன்மையை அறியலாம்.

பதிக வரலாறு: 
புகலியாண்டகையார்தக்கோலம் என்னும் திருத்தலத்தை அடைந்து திருணறலை வணங்கிப்பதிகம்பாடிப்பழையனூர்,திருவாலங்காட்டிற்கு அருகே வருகின்றார்கள். அப்போது இத்தலம்எம்மையாளும் அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும்அம்மையப்பரின் அணிநகரல்லவா?என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனை மிதிக்க அஞ்சி அடுத்துள்ள ஊரிற்சென்று இரவு பள்ளி கொண்டார்கள். இடையாமத்திலே பிள்ளையார் கனவிலே பெருமான் எழுந்தருளி’எம்மைப் பாட மறந்தனையோ‘என்றுவினாவினார். அதனை உணர்ந்த பிள்ளையார் வியந்தெழுந்து கருணையைப் போற்றித் ’துஞ்ச வருவாரும்' என்ற இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள். இதில் பழையனூர் நீலி வரலாற்றையும்,கனவில்வந்தருளிச் செய்ததையையும் முதல் திருப்பாடலில்சிறப்பித்திருக்கின்றார்கள். இச்செய்தியை மறுநாட்காலையில் எல்லாருக்கும் அறிவித்துத்திருவாலங்காடு சென்று ஆலங்காட்டப்பரை வழிபட்டுத்திருப்பாசூருக்குவழிக்கொண்டார்கள்.  குருவருள்: இத்திருப்பதிகத்தைப் பண் - தக்கராகம் என்று தொன்றுபதிப்பித்து வருகிறார்கள். ஆனால் சேக்கிழார்'பஞ்சமரம்பழையதிறம் கிழமை கொள்ளப் பாடினார் ஞானசம்பந்தர்” என்பதால் இது பழம் பஞ்சுரப்பண்ணாகும். பழம் பஞ்சுரப் பண் வரிசையில் மூன்றாம் திருமுறையில் இடம் பெறத்தக்கதே முறையாகும். ஓதுவார்கள் இது விவரம் தெரிந்து பழம் பஞ்சுரப்பண்ணாகப் பாடுதல் நலம்.

45. THIRU-AALANG-KAADU

THE HISTORY OF THE PLACE

     This sacred place is in Thondai Naadu, in the Thiruvalloor - Arakkonam bus route. It is at a distance of 5 km from the railway station of the same name.

     The God is known by the names of Thevarasingapperumaan and Oordhdhuva Thaandavesuvarar. The Goddess has the name Vandaarkuzhali. The sacred ford is Muththi Theerththam. The sacred tree is 'Palaa'.

The special significance of this temple is as follows: Of the five pavilions (sabhai) in which the Lord Natarajar dances, this one is known as the Raththina Sabhai (Diamond Pavilion). In a dancing competition the Lord got the better of Kaali by adopting a pose with an uplifted leg known as 'Oordhdhuva Thaandavam'. This is referred to by the Thevaaram, 'aadinaar kaali kaana Aalangkaattadikalaare' (the Lord of Aalangkaadu danced as Kaali watched). This dance is always watched by Pathanjchali (known as Kaarkkotakan) and Viyaagrapaadhar (known as Munjchikesar). Kaaraikkaal Ammaiyaar, who walked to Kaiyilai on her head, sits at the feet of the Lord, watching the dance of bliss. Saint Thirujnaanasambandhar tried to avoid setting foot into this temple, out of respect for Ammaiyaar. But the Lord appeared in his dream and asked him whether he had forgotten to adore Him with his songs, after which the saint gave the Lord his songs. This is also the place where the farmers of the village gave their lives in order to keep their word to one Pazhaiyanoor Neeli. This episode was sung by the saint Thirujnaanasambandhar in the decad, 'thunja varuvaarum'.

     The inscriptions in this temple range from the time of Chola Paraanthakan I to the kings of Vijayanagaram. They reveal how the name of the administrative subdivisions within which this village is situated changed from time to time. Different names for the God and Goddess are given in different inscriptions. The inscriptions speak of grant of land for lighting the lamps and gold for holding temple festivals.

INTRODUCTION TO THE HYMN

     Our young saint adored Civa at Takkolam and Thiru Ural and proceeded onward. When he came near Thiru-vaalan-kaadu, he did not consider it proper to enter this holy town on foot as St. Kaaraikkal Ammaiyaar had earlier arrived at this holy town not by walking but moving on her head as support. Therefore our Saint stayed one night in a nearby village. During midnight Civa appeared in his dream and said "Wherefore have you forgotten to hail us?" Our Saint had a mystic experience; when the day broke he proceeded to the temple and sang the following hymn.

திருச்சிற்றம்பலம்

45.திருவாலங்காடு

பண் : பழம்பஞ்சுரம்
ராகம் : சங்கராபரணம்

துஞ்சவருவாருந்தொழுவிப்பாரும்வழுவிப்போய்
நெஞ்சம்புகுந்தென்னைநினைவிப்பாருமுனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்திவாணாள்கொள்ளும்வகைகேட்
டஞ்சும்பழையனூராலங்காட்டெம்மடிகளே.

துஞ்சவருவாரும்,தொழுவிப்பாரும்,வழுவிப் போய் 
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் - முனை நட்புஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு, 
அஞ்சும்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் யான் தூங்கும் பொழுது என் கனவில்எழுந்தருளுவார். தம்மைத் தொழுமாறுசெய்விப்பார். உயிர்களுடையமுனைப்புக் காலத்தில் மறைந்திருப்பார். அன்பு செய்யும் காலத்தில் என் நெஞ்சம் புகுந்து தம்மை நினையுமாறு செய்பவர். நவஞானி என்ற பார்ப்பனியை அவள் கணவன் கொன்றான். அவள் அவனைப்பழிவாங்க எண்ணி மறுபிறவியில் அவன் மனைவிபோல் நடித்து,அவனை வஞ்சித்துக் கொன்றாள். அவள் கணவனுக்குப் பிணை கொடுத்த இவ்வூரில் வாழ்ந்த எழுபது வேளாளர்களும்தீப்புகுந்து உயிர் துறந்தனர். (குறிப்புரையில் முழு விபரம் காண்க).

குறிப்புரை: அடியேனை எல்லாம் செய்விப்பவர் இவர் என்கின்றது. துஞ்சவருவார் - யான் தூங்க என்கனவில்எழுந்தருளுவார். இவன் இறைவன் என்று உணரச் செய்த இறைவனேதொழச் செய்தாலன்றித்தொழும்உரிமையும்ஆன்மாக்களுக்குஇல்லையாதலின்தொழுவிப்பாரும் என்றார்.  வழுவிப்போய் - உயிர்களுடையமுனைப்புக்காலத்து மறைந்து நின்று,முனைநட்பாய் - முன்னமே இருந்த நட்பினைஉடையவளைப்போலாகி,ஒருத்தி யென்றதுநீலியை. நவஞானியென்னும்பார்ப்பனியைஅவள் கணவன் கொன்றான். அவள் அவனைப்பழிவாங்க எண்ணி மறுபிறவியில்புரிசைக்கிழார் என்னும் வேளாளர்க்குப்புத்திரியாகப்பிறந்திருந்தாள். தோற்றத்தைக் கண்டு அவளைப்,பேயென்று ஊரார் புறக்கணித்தனர். முற்பிறப்பின்கணவனாகிய பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான். அவனைக்கண்டதும் இவள் அவன். மனைவிபோலநடித்துப்பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடிஅவ்வூர்வேளாளர் எழுபது பேரிடம் அடைக்கலம் புகுந்தான்.  அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியைவஞ்சித்துக் கொன்றாள். பிணை கொடுத்த வண்ணம் எழுபது வேளாளரும்தீப்புகுந்து உயிர் துறந்தனர். இதனைக் கேட்ட அயலார் அனைவரும் அஞ்சினர் என்று தொண்டமண்டலவரலாற்றில்குறிக்கப்பெற்றுள்ளது.

Lord Civan manifests Himself in my dream while I am sleeping; He graces me and enables me to worship Him, when I am awake. When egoism overpowers me He hides Himself away from me. When I show my real love, He abides in my heart and makes me remember Him and offer worship to Him. A lady who was killed by her husband wanted to take revenge on him. In her next birth she recognized her husband of past birth and killed him. The seventy Vēlaalars belonging to this Aalangadu village who guaranteed to safeguard the life of her husband, sacrificed their lives by entering into fire in lieu of their inability to save the life of her husband as promised by them (See footnote for full story). In this Thiru-aalang-kaadu our Lord is enshrined.

Note: That woman: She was known as Neeli. In her previous birth she was the wife of a wastrel and a debauchee who eventually killed her and her son. She became a ghoul and could assume any form. Assuming her earlier form, she appealed to the Assembly of Vellaalaas (seventy in number), for restitution of her conjugal rights. The Assembly granted her prayer, in spite of her husband's protest. He had with him a magical sword. Neeli appealed to the Assembly to cause her husband part with it. To this the Assembly assented. They assured him that their lives would save as forfeit, should any harm befall him. That very night, the woman killed him and vanished. Coming to know of this, the next day, the seventy Vellaalaas immolated themselves in fire. Even that day Vellaalaas shudder to hear the dreadful name of Neeli.

கேடும்பிறவியுமாக்கினாருங்கேடிலா
வீடுமாநெறிவிளம்பினாரெம்விகிர்தனார்
காடுஞ்சுடலையுங்கைக்கொண்டெல்லிக்கணப்பேயோ
டாடும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.2

கேடும்பிறவியும்ஆக்கினாரும்,கேடுஇலா
வீடுமாநெறிவிளம்பினார்,எம்விகிர்தனார் - 
காடும்சுடலையும் கைக்கொண்டு,எல்லிக்கணப்பேயோடு
ஆடும் பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் பிறப்பு இறப்புக்களைஉயிர்களுக்குத் தந்து அருளியவர். அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரியநெறிகளையும்உயிர்கள்அறியச்செய்தவரும் அவரே.  சிவபெருமான் நம்மிலும் வேறுபட்ட இயல்புடையவர். இடுகாடு,சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டவர். இராப்பொழுதில்பேய்க்கணங்களோடுநடனமாடும் பழையனூரைச் சேர்ந்தவர். இவர் எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை: தோற்ற நரகங்களைத் தந்த இவரே வீட்டு நெறியையும்விளம்பினார்என்கின்றது. கேடு - அழிவு. கேடிலா - என்றும் அழிதலில்லாத. அந்நெறியையுணர்த்துதலேஇறைவனருளிச் செயல், நெறிக்கண் சென்று வீடடைதல்ஆன்மாவின் கடன் என்பது காட்டியவாறு. எல்லி - இரவு. கணப்பேய் - கூட்டமாகிய பேய்.

Lord Civan is the sole and Supreme Lord commanding the many demigods and ordering them to perform their duty, of creation and dissolution (birth and death) of beings. He is the chief who has explained the pathway to the salvation of souls. He is a different entity from us. He dances during the night on the burning ground and in the burning ghat accompanied by hosts of ghouls. This Lord Civan is entempled in Thiru- aalang-kaadu alias Palayanoor.

Note: Vikirthan: One whose deportment is very strange.

கந்தங்கமழ்கொன்றைக்கண்ணிசூடிக்கனலாடி
வெந்தபொடிநீற்றைவிளங்கப்பூசும்விகிர்தனார்
கொந்தண்பொழிற்சோலையரவிற்றோன்றிக்கோடல்பூத்
தந்தண்பழையனூராலங்காட்டெம் மடிகளே.3

கந்தம் கமழ்கொன்றைக் கண்ணி சூடி,கனல்ஆடி, 
வெந்தபொடி-நீற்றைவிளங்கப்பூசும்விகிர்தனார் - 
கொந்துஅம்தண்பொழில்-சோலை அரவின்தோன்றிக்கோடல்பூத்த
அம்தண்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்:சிவபெருமான் மணம் கமழும் கொன்றை மலர் மாலையைச்சூடியவர்.தீயில் நின்று ஆடி,சுடுகாட்டில் வெந்த சாம்பலை உடல் முழுதும் விளங்கப்பூசுபவர். நம்மிலும் அவர் வேறுபட்ட இயல்பினர். கொத்துக்கொத்தாகப் பூக்கள் நிறைந்த இயற்கையாய் வளர்ந்த காடுகளும்,வைத்து வளர்க்கப்பட்டபூங்காக்களும் (சோலைகளும்) இவ்வூரில் உள்ளன.  பாம்பின் படம் போலக்காந்தன் மலர் மலர்ந்து விளங்கும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்தவர் எம்அடிகளானதிருவாலங்காட்டுச் சிவபெருமான்.

குறிப்புரை: கொன்றையணிந்து,கனலாடிநீறுபூசும்நிமலர் இவர் என்கின்றது. கண்ணி – திருமுடியிற் சூடப்பெறும் மாலை. கொந்துஅண் - கொத்துக்கள் நெருங்கிய பொழில் - இயற்கையே வளர்ந்த காடு.  சோலை - வைத்து வளர்க்கப் பெற்ற பூங்கா. கோடல் - செங்காந்தள்.   கோடல்அரவில்தோன்றிப்பூத்து எனக்கூட்டுக. செங்காந்தள்பூத்திருப்பது பாம்பு படம் எடுத்ததைஒக்குமாதலின் இவ்வாறு கூறினார்.

Lord Civan wears garland of cassia flowers and dances in the fire surrounding atmosphere. He smears His body with the ashes of burning ghat. He is a different entity from us. He is enshrined in the cool and delightful Thiru-aalang-kaadu of Palayanoor. Here Kodal flowers (our) resembling the hood of snake and bunches of different kinds of flowers blossom in the forest area as if they are a form of garden encircling this town.

பாலமதிசென்னிபடரச்சூடிபழியோராக்
காலனுயிர்செற்றகாலனாயகருத்தனார்| 
கோலம்பொழிற்சோலைப்பெடையோடாடிமடமஞ்ஞை
ஆலும்பழையனூராலங்காட்டெம்மடிகளே.

பாலமதிசென்னிபடரரச்சூடிப்,பழி ஓராக்
காலன் உயிர் செற்ற காலன் ஆயகருத்தனார் - 
கோலம் பொழில்-சோலைப்பெடையோடு ஆடி மடமஞ்ஞை
ஆலும்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் இளம்பிறையைத் தனது முடிமீதுபொருந்தச்சூடியவர். தனக்கு வரும் பழியை ஆராயாதஇயமனது உயிரை வென்ற காலகாலராயஇறைவர் நம் சிவபெருமான். அவரே,அழகிய இயற்கைக்காடுகளிலும்சோலைகளிலும் ஆண் இள மயில்கள் பெண் மயில்களோடுகூடிக் களித்து ஆரவாரிக்கும்பழையனூரைச் சேர்ந்த எம் அடிகளானதிருவாலங்காட்டுச் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை: கால காலனாயகருத்தா இவர் என்கின்றது. பாலமதி - இளம்பிறை. பழியோரா - தனக்கு வரும் பழியை ஆராயாத. பழியாவதுசிவனடியாரைப் பிடிக்க முயன்ற தீங்கு காலன் பிறவற்றின் உயிர்களைப்பறிப்பதும் இறைவன் அருளாணைவழிநின்றே என்பது விளங்கக்காலகாலனாயகருத்தனார் என்றார். கோலம் - அழகு. ஆலும் - ஆரவாரிக்கும். இது மயில் ஒலியைக்குறிக்கும்மரபுச் சொல்.

Lord Civan keeps the young crescent moon on His matted hair shining brightly. Without anticipating the serious consequences of his action the god of death met with his own death at the feet of Lord Civan who is known as Kaala Kaalan.  This, our Lord Civan is of Palayanoor Aalangaadu where in its fertile and lush forests and gardens, peacocks dance with their bashful mates making lovely and lively din.

ஈர்க்கும்புனல் சூடி பிளவெண்டிங்கள்முதிரவே
பார்க்குமரவம்பூண்டாடிவேடம்பயின்றாரும்
கார்க்கொள்கொடிமுல்லைகுருந்தமேறிக்கருந்தேன்மொய்த்
தார்க்கும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.5

ஈர்க்கும் புனல் சூடி,இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி,வேடம் பயின்றாரும் - 
கார்க் கொள் கொடிமுல்லைகுருந்தம்ஏறிக்,கருந்தேன் மொய்த்து, 
ஆர்க்கும்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் தனதுதிருமுடியில்இழுத்துச் செல்லும் வலிய கங்கை நதியைச் சூடியுள்ளார். இளம்பிறையைவிழுங்க அதன் வளர்ச்சியைப்பார்த்திருக்கும்பாம்பை அணிகலனாகப்பூண்டுள்ளார். நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில்தோன்றிஅருள்புரிபவர்.  கார்காலத்தில்முல்லைக் கொடிகள் மலருகின்றன. அந்தக் கொடிகள் குருந்த மரத்தில் ஏறிப்படருகின்றன.  அம்மலர்களில் உள்ள தேனை உண்ண வரும் கரிய வண்டுகள் மலர்களை மொய்த்து ஆரவாரிக்கும்இடமானபழையனூரைச் சேர்ந்தவர் எம் அடிகளானஇருவாலங்காட்டுச் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை : இளவெண் திங்கள் முதிரும்வரைபார்த்திருக்கும் அரவம் பூண்டாடிய பெருமான் இவர் என்கின்றது. ஈர்க்கும் - இழுத்துச் செல்லும். திருமுடிக்கண் உள்ள அரவம் உடனிருக்கும் இளம்பிறையை முதிரட்டும்;உண்போம் என்று பார்த்திருக்கின்றது என்பதை விளக்கியவாறு. கார்க்கொள் – கார் காலத்தைக் கொண்ட. கருந்தேன் - கரிய வண்டு.

Lord Civan holds and controls on His head the swift flowing Ganges river. He keeps a snake also on His matted hair which seems to be waiting to swallow the moon and therefore watches its growth. He dances in various postures and bestows His grace. Our Lord of Palayanoor Aalangaadu where during the rainy season, the Mullai vine creeps over the Kuruntha tree and where the bussing of black beetles that come to consume honey is heard.

Note: Portrayal of the moon being swallowed by the snake on Lord Civa's head, is seen in several works of Saivite literature St. Kumara Guruparar paints a similar
scene involving a crescent, a snake and the river on Lord Civan's matted hair.
Vetam: A holy form. Kuruntam: Wild lime.

பறையுஞ்சிறுகுழலும்யாழும்பூதம்பயிற்றவே
மறையும்பலபாடிமயானத்துறையும்மைந்தனார்
பிறையும்பெரும்புனல்சேர்சடையினாரும்பேடைவண்
டறையும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.6

பறையும் சிறு குழலும்யாழும் பூதம் பயிற்றவே, 
மறையும் பல பாடி,மயானத்துஉறையும்மைந்தனார், 
பிறையும்பெரும்புனல் சேர் சடையினாரும்-பேடைவண்டு
அறையும் பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமானைச் சுற்றி உறையும்பூதங்கள் பறை,சிறுகுழல்,யாழ் முதலிய கருவிகளை இயக்குகின்றன. இவர் வேதங்களைப்பாடிக் கொண்டு மயானத்தில் உறைகிறார். பிறைச்சந்திரன்,பெருகிவரும் கங்கை ஆகியவற்றை தம் சடையில் அணிந்துள்ளார். அவரே பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும் சோலைகள்சூழ்ந்தபழையனூரைச் சேர்ந்த எம்அடிகளானதிருவாலங்காட்டுச் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை: பறை குழல் யாழ் முதலியவற்றைப் பூதகணம் வாசிக்க,திருவாலங்காட்டுறையும் பெருமானிவர்என்கின்றது. பயிற்ற - தம்முடனுறைபூதங்கள்பலகால் முழக்க. பேடை வண்டு - பெண் வண்டு. அறையும் - ஒலிக்கும்.

Lord Civan the beloved, by singing the Vedas to the orchestration of His Bhuta hosts that play drums, small flute and Yazz goes to the burning ghat. Our Lord in whose crest rests the crescent moon, and the fast flowing river Ganges is of Palayanoor of Aalangaadu where male and female beetles buzz around in search of honey in the groves that encircle the town.

நுணங்குமறைபாடியாடிவேடம்பயின்றாரும்
இணங்குமலைமகளோடிருகூறொன்றாயிசைந்தாரும்
வணங்குஞ்சிறுத்தொண்டர்வைகலேத்தும்வாழ்த்துங்கேட்
டணங்கும்பழையனூராலங்காட்டெம்மடிகளே.| 7

நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும், 
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றுஆய் இசை ந்தாரும் - 
வணங்கும்சிறுத்தொண்டர்வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு 
அணங்கும்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் நுட்பமான ஒலிக்கூறுகளை உடைய வேதங்களைப் பாடியும், ஆடியும் வருபவர். பல்வேறு திருஉருவங்களைக் கொள்பவர். தம்மோடு இணைந்த பார்வதி தேவியுடன்இருவேறுஉருவுடையஒருவராகஇசைந்தவர். தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்பவர்.  தெய்வத்தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த எம்அடிகளான திருவாலங்காட்டுச்தவபெருமான் ஆவார்.

குறிப்புரை: உமையொருகூறனாக,இருவேறுருவின் ஒரு பெரியக்யாக்கையோடுஎழுந்தருளிய பெருமான் இவர் என்கின்றது. இருகூறு - சத்தியின் கூறும் சிவத்தின்கூறும் ஆகிய இரண்டு கூறு, வைகல் - நாடோறும். அணங்கும் - தெய்வத்தன்மை மிகும்.

Lord Civan poses in various forms according to needs and as necessitated by the circumstances to grace the souls. He dances and sings the Vedas replete with subtle one half is His consort Paarvathi and rhythmic variations. His body is of two halves Devi and the other half is Himself. Thus He is one but with two different shapes. Our Lord abides in Palayanoor of Thiru-aalang-kaadu, which became a renowned holy place because the servitors worship Him with all humility and sing daily divine songs in the temple and elsewhere.

கணையும்வரிசிலையுமெரியுங்கூடிக்கவர்ந்துண்ண
இணையிலெயின்மூன்றுமெரித்திட்டாரெம்மிறைவனார்
பிணையுஞ்சிறுமறியுங்கலையுமெல்லாங்கங்குல்சேர்ந்
தணையும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.8

கணையும்வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண, 
இணை இல்எயில்மூன்றும்எரித்திட்டார்,எம்இறைவனார் - 
பிணையும்சிறுமறியும்கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து 
அணையும் பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: சிவபெருமான் ஒப்பற்ற முப்புரங்களைஅம்பும்வில்லும்தீயும் கூடி கவர்ந்து உண்ணுமாறுஎரித்தவர் ஆவார். அவரே பெண்மான் அதன் குட்டிகள் மற்றும் ஆண்மான் ஆகியன இரவில் சென்று ஒதுங்கும்பழையனூரைச் சேர்ந்த எம்அடிகளான திருவாலங்காட்டுச் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை: முப்புரங்களைவில்லும்அம்பும்தீயும்கூடிஎரிக்கச் செய்த இறைவன் இவர் என்கின்றது.  இணை - ஒப்பு. பிணை - பெண்மான். மறி - மான்குட்டி. கலை - ஆண்மான். கங்குல் - இரா.

Our Lord Civan burnt the three matchless citadels using the combined action of the bow and fire tipped arrow. He is our Lord enshrined in Palayanoor of Thiru- aalang-kaadu where the female deer, male deer and their young ones all join together during the night for a get-together'.

கவிழமலைதரளக்கடகக்கையாலெடுத்தான்தோள்
பவழநுனைவிரலாற்பையவூன்றிப்பரிந்தாரும்
தவழுங்கொடிமுல்லைப்புறவஞ்சேரநறவம்பூத்
தவிழும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.9

கவிழ மலை,தரளக்கடகக் கையால் எடுத்தான் தோள் 
பவழநுனைவிரலால் பைய ஊன்றிப்பரிந்தாரும் - 
தவழும் கொடிமுல்லைபுறவம் சேர நறவம்பூத்து
அவிழும் பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே;

பொருள்: முத்துக்கள்பதித்தவீரக்கடகம்அணிந்த தன் கைகளால் கயிலை மலையை நிலைகுலையுமாறுபெயர்த்தவன் இராவணன். அவனது தோள் வலிமையைத் தமது பவளம் போன்ற கா ல் விரல் நுனியால் மெல்ல ஊன்றி நெருக்கினார்சிவபெருமான்.  பின்னர் அவனுக்கு இரங்கி அருள்புரிந்தவரும் அவரே முல்லை க் கொடிகள் முல்லை நிலத்தின்மேல்  படர,நறவக் கொடிகள் மலர்களைப்பூத்து விரித்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்தவர் எம் அடிகளானஇருவாலங்காட்டுச் சிவபெருமான்.

குறிப்புரை: இராவணனைப் பைய நெரித்த பெருமான் இவர் என்கின்றது. மலை - கயிலை மலை.  தரளக்கடகம் கை - முத்துக் கடகம் செறிந்த கை. பவழநுனை விரல் - பவழம் போன்ற நுனியை உடைய விரல். பைய - மெதுவாக. பரிந்தார் - கருணை செய்தவர். புறவம் - முல்லை நிலம். நறவம் - நறவு மலர்.

Raavanan wears pearl-inlaid bracelets on his hands. He once tried to uproot mount Kailash, the abode of Lord Civan, who then gently pressed the mountain with His coral like toe and nullified his shoulder's strength and his haughtiness. Later when he repented, Lord Civan forgave him and graced him with boons. This Lord Civan abides in Palayanoor of Thiru-aalang-kaadu where the Mullai vines, crawl and spread in the forest lands while the vines of Naravam flowers spread and the flowers therein unfold their petals and blossom all around.

Note: Naravam: A fragrant creeper. Mayil Kondrai (Peacock's crest).

பகலுமிரவுஞ்சேர்பண்பினாரும்நண்போரா
திகலுமிருவர்க்குமெரியாய்த்தோன்றிநிமிர்ந்தாரும்
புகலும்வழிபாடுவல்லார்க்கென்றுந்தீயபோய்
அகலும்பழையனூராலங்காட்டெம் மடிகளே.10

பகலும்இரவும் சேர் பண்பினாரும்நண்புஓராது
இகலும்இருவர்க்கும்எரிஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும் - 
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் 
அகலும் பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: நான்முகனும்,திருமாலும் பகல்,இரவு போன்ற வெண்மை மற்றும் கருமை நிறம் கொண்டவர்கள். அவர்கள் தங்களிடையேதந்தையும் மகனும் என்ற உறவு முறை கருதாது, யார் பெரியவர் என்பதில் மாறுபட்டு நின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவரே ஆகமநூல்களில்சொல்லப் பெற்ற வழிபாடுகளில்தலைநிற்கும்அடியவர்களை என்றைக்கும் பாவம் அணுகாத வண்ணம் பாதுகாக்கும்எம்அடிகளானபழையனூர்திருவாலங்காட்டுச் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை: தந்தையும் மகனும் என்ற முறையையும்பாராதேமுனிந்தஅயனுக்கும்மாலுக்கும் இடையே எரியாய்நிமிர்ந்த பெருமான் இவர் என்கின்றது. நண்பு - தந்தையும்மகனுமானமுறையன்பு. இகலும் - மாறுபட்ட. புகலும் – விதிநூல்களாயஆகமங்களிற்சொல்லப்பெற்றஉண்ணும்வரைநோய்தடுக்கும் உலக மருந்துகள் போலாது என்றைக்கும் பாவம் அணுகாத வண்ணம் பாதுகாக்கும் அடிகள் என்பதை விளக்குதல் காண்க.

Brahma is white in colour as the daylight; but Vishnu is as dark as nighttime. Without realizing the relationship among themselves (Thirumaal and Brahma as father and son) they contended with each other as to who was the superior of the two. At that moment Lord Civan stood in between them as a tall and big flame of fire; Lord Civan nullifies the evil effects of His devotees and graces them who are highly well versed in the Aagamaas, and who strictly adhere to the rules regarding oblations and rituals as described therein. He is our Lord who is enshrined in Palayanoor of Thiru-aalang- kaadu.

போழம்பலபேசிப்போதுசாற்றித்திரிவாரும்
வேழம்வருமளவும்வெயிலேதுற்றித்திரிவாரும்
கேழல்வினைபோகக்கேட்பிப்பாருங்கேடிலா ் 
ஆழ்வர்பழையனூராலங்காட்டெம்மடிகளே.

போழம்பலபேசிப்போதுசாற்றித்திரிவாரும், 
வேழம் வரும்அளவும்வெயிலேதுற்றித்திரிவாரும், 
கேழல் வினை போகக்கேட்பிப்பாரும்;கேடுஇலா
ஆழ்வர்- பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளே.

பொருள்: புறச்சமயத்தார் மாறுபட்ட சொற்களைப்பேசுபவர்கள். காலத்திற்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச்சொல்லித்திரிபவர்கள். நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக்கூறுபவர்கள். யானைத்தீ என்னும் நோய் வரும் அளவும்வெயிலிடை உண்டு திரிபவர்கள். இவர்களைச்சாராதுஅழிவற்றஆளுமையுடையபழையனூர் திருஆலங்காட்டுச் சிவபெருமான்) தம்மைச் சேர்ந்த அடியவர்களின்வினைகள்அகலுமாறு அவர்களுக்குப்புரியும்படியாகஉபதேசங்களைச் செய்பவர். அவரது ஆளுமை அழிவற்றது.

குறிப்புரை: போழம் - மாறுபட்ட சொல். போதுசாற்றி - காலம் பார்த்துச் சொல்லி. திரிவார் என்றது பறச்சமயிகளை வேழம் - யானைத்தீ என்னும் நோய். துற்றி - உண்டு. கேழல் வினை – கெழுவுதலை உடைய வினை. போக - கெட. கேழ்பவா்- நன்மை உடையார். கேழ்பு - நன்மை. கேழ்அல் - நன்மை அல்லாத.

Adherents of other religions (Jains and Buddhists) always speak in controversy. They roam about prattling deceptive messages according to the circumstances. They deliver sermons which are base and do no good. They stand and eat their food under the scorching sun until they are afflicted by Yaanai-th-thee. Those who refuse to follow these people, are the devotees of Lord Civan and they will be blessed by Him. He will advise them on how to get to know things to ward off the evil effects of their sins in their lives. He is the flawless ruler and He abides in Palayanoor of Thiru-aalang-kaadu.

Note: There are twelve verses in this hymn as against 11 verses that are normally found in many other hymns.

சாந்தங்கமழ்மறுகிற்சண்பைஞானசம்பந்தன்
ஆந்தண்பழையனூராலங்காட்டெம்மடிகளை
வேந்தனருளாலேவிரித்தபாடலிவைவல்லார்
சேர்ந்தஇடமெல்லாந்தீர்த்தமாகச்சேர்வாரே. ்

சாந்தம் கமழ் மறுகில்சண்பைஞானசம்பந்தன்
ஆம் தண்பழையனூர்ஆலங்காட்டுஎம்அடிகளை
வேந்தன் அருளாலே,விரித்த பாடல்இவைவல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச்சேர்வாரே.

பொருள்: சந்தனம் கமழும்திருவீதிகளை உடைய சண்பைப்பதியில்தோன்றியவர் ஞானசம்பந்தன். . அழகிய தண்ணிய ஆலங்காட்டுவேந்தனாக விளங்கும் சவபெருமான் திருவருளாலேஇதைப் போற்றி விரித்து ஓதினார். இந்தத்திருப்பதிகத்தை பாட வல்லவர்கள் அவர்கள் சேர்ந்த இடமெல்லாம்புனிதமானவைகளாய்ப்பொருந்தப்பெறுவர்.

குறிப்புரை: இறைவனருளால்பாடிய இதை வல்லார் சேர்ந்த இடமெல்லாம்புனிதமாம்எனப்புகல்கின்றது.  சாந்தம் - சந்தனம். தீர்த்தமாக - புனிதமாக. சேர்வார் - பொருந்துவார். இந்தத் திருப்பதிகத்தில்12 பாக்கள் உள்ளன என்பதை நோக்குக.

Gnaanasambandan hails from the town Seekaazhi also known as Shanby where the aroma of sandalwood spreads all over the streets. Animated by the grace of the sovereign Lord of Thiru-aalang-kaadu Gnaanasambandan composed these hymns. Those who recognize the importance of these make the place pure and holy wherever they go.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 45th Hymn

திருச்சிற்றம்பலம்

45ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

46.திருவதிகைவீரட்டானம் 
திருத்தலவரலாறு:

திருவதிகைவீரட்டானம் என்ற திருத்தலம் நடு நாட்டுத் தலம் ஆகும். கடலூர் - சென்னை இருப்புப் பாதையில் பண்ணுருட்டி இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. சென்னை,கடலூர், விருத்தாசல்ம்,சிதம்பரம் நகர்களில் இருந்து பேருந்துகளில்பண்ணுருட்டி வரலாம். அப்பர் அருள் பெற்ற தலம்.

இது அட்டவீரட்டங்களுள் ஒன்று. முப்புரங்களை எரித்த தலம். கருடன்,பிரமன்,விஷ்ணு, பஞ்ச பாண்டவர்கள் பூசித்துப் பேறு பெற்றனர். பல்லவ அரசன் திருநாவுக்கரசரைநீற்றறையில் இட்டதலமும் இதுவே. இது இப்போது ஓடையாக இருக்கிறது. சக்கர தீர்த்தம் என வழங்குகிறது.  குணதரேச்சுரம் என்ற ஒரு கோயிலும் உண்டு. அது குணதரப்பல்லவனால்பாடலிபுரத்துக் கோயிலைஅழித்துக்கட்டப் பெற்றது என்பது வரலாறு. திருஞானசம்பந்தர்சுவாமிகளுக்குச் சித்தவடமடத்தில் திருவடி தீட்சை அளித்த இடமும் இதுவே. மெய்கண்ட தேவர் மாணாக்கராகிய மனவாசகம்கடந்தார் உண்மை விளக்கம் செய்து அருளியதலமும் இதுவே. இறைவன் பெயர் திருவதிகைவீரட்டானேசுவரர்,திரிபுராந்தகேசுவரரா். அம்மை திரிபுரசுந்தரி. தீர்த்தம் கெடிலம், சூலகங்கை,சக்கர தீர்த்தம் என்பன. தலவிருட்சம்சரக்கொன்றை.

கல்வெட்டு: 
இத்தலத்தில்படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள்34. இவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் சாரநாராயணக்கோயிலைப்பற்றியவை. ஏனையவை திருவதிகைவீரட்டானமுடையார் கோயிலில் உள்ளவை. அவற்றுள்,தெள்ளாற்றுப் போர் எறிந்தநந்திபோத்தரையன்விளக்கிற்காக வைத்த நிவந்தம்,கோப்பெருஞ்சிங்கன்விளக்கிற்காகப் பசுவும் காளையும்அளித்தமை,பரமேசுவரப் போத்தரையன் பொன் அளித்தமை ஆகிய பல்லவ பரம்பரை நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பெறுகின்றன.  அவ்வாறே சோழர்களில் முதலாம் குலோத்துங்கன்,இரண்டாம் குலோத்துங்கன்,மூன்றாம் குலோத்துங்கன்,இராஜேந்திர சோழன்,இரண்டாம் பராந்தகன்,இராஜாதிராஜன் முதலிய சோழ அரசர்களும்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் முதலிய பாண்டிய மன்னர்களும், காளிங்கராயன்,காடவராயன்,கங்கபல்லவன்முதலியோர்களும் உணவு,நிவேதனம் மற்றும் விழாக்கள்ஆகியவற்றிற்காக நிலம் அளித்தமையைக் காட்டும் கல்வெட்டுக்கள் பல.  சகம்1235-இல் சேர அரசனானஇரவிவர்மவீரராஜகுலசேகரதேவனால் கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப் பெற்ற செய்தி தெரிகிறது. வாகீசமடம் என்ற பெயருடன் ஒன்று இத்தலத்தில் இருந்திருக்க வேண்டும். இதற்கு முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் நிலம் அளித்து உள்ளான்.

பதிக வரலாறு: 
திருவக்கரை முதலிய பதிகளைவணங்கிய பிள்ளையார்,அடியார் கூட்டத்துடன் திருவதிகைக்குஎழுந்தருளுகின்றகாலத்து,சிவபெருமான் தம் திருநடனத்தைப்புலப்படும்படிக் காட்டியருள’குண்டைக்குறட்பூதம்’ என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

46. THIRU-VATHIKAI-VEE-RAT-TAANAM

THE HISTORY OF THE PLACE

     This sacred place is in Nadu Naadu, near Pannurutti railway station, which lies in Kadaloor Chennai train route. Buses from Chennai, Kadaloor, Virudhdhaachalam and Chidhambaram ply to Pannurutti.

     The Lord's names are Thiruvadhikai Veerattaanesuvarar and Thiripuraantha- kesuvarar. That of the Goddess is Thiripurasundhari. The sacred fords are Kedilam, Soolagangkai, and Chakkara Theerththam. The sacred tree is 'Sarakkonrai'.

This is one of the eight 'Veerattam' temples. This is from where the Lord destroyed with fire the demonic 'triple-cities'. The five Paandava brothers, Piraman, Vishnu and Garudan etc., attained salvation by worshipping here. This is where Saint Appar received the Lord's grace. It is also where he was subjected to torture by immersion in a lime kiln by a Pallava king. The place where this happened is now a creek named Chakkara Theerththam. The Lord showed a vision of his dance to Saint Thirujnaanasambandhar at this temple and it is also here that Saint Sundharamoorthi Suvaami received initiation from the Lord, by having his head touched by the Lord's holy foot at the 'Sidhdhavatamatam'. Manavaasagam Kadandhaar, a disciple of

P657

Meikanda Thevar, composed the treatise, Exposition of Truth (Unmai Vilakkam), at this sacred place.

     There is also a shrine of the name Gunatharechchuram, which is said to have been built by Gunadhara Pallavan after destroying the Paatalipuram temple.

     There are 27 inscriptions in this temple, including the one from the Pallava dynasty kings Nandhi Poththaraiyan, conqueror of the Thellaaru war, (grant for lamps), Kopperunjchingan (gift of cow and calf for lamps), and Paramesuvarap Poththaraiyan (grant of gold). The inscriptions also pertain to the reigns of Chola kings, Kuloththungkan I, II and III, Raajendhira Cholan and Paraanthakan Raajaadhiraajan II; Paandiyan kings Vikkirama Paandiyan and Veera Paandiyan and others. They give information on various grants of land for feeding the devotees, food-offering to the deity and for holding festivals. Kuloththungkan I has given land for a monastery known as Vaageesamatam. In the Saka year 1235, the Chera king Ravi Varma Veeraraaja Kulasekara Thevan, had arranged to clean and renew the whole temple.

INTRODUCTION TO THE HYMN

     Adoring the Lord at Thiruvakkarai and other shrines, the young saint arrived at Thiruvatikai. Here he had a darshan of Civa's dance and composed the following hymn.

திருச்சிற்றம்பலம்

46.திருவதிகைவீரட்டானம் 
பண் : தக்கராகம்
ராகம் : காம்போதி

குண்டைக்குறட்பூதங்குழுமஅனலேந்திக்
கெண்டைப்பிறழ்தெண்ணீர்க்கெடிலவடபக்கம்
வண்டு மருள்பாடவளர்பொன்விரிகொன்றை
விண்டதொடையலானாடும்வீரட்டானத்தே.

குண்டைக் குறள் பூதம் குழும,அனல் ஏந்தி, 
கெண்டைப் பிறழ் தெண்நீர்க்கெடிலவடபக்கம்
வண்டு மருள் பாட,வளர் பொன்விரி கொன்றை 
விண்டதொடையலான் ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: சிவபெருமானைப் பருத்த குள்ளமான பூதகணங்கள் சூழ்ந்து இருக்கின்றன.  அவர்தம் கையில் அனல் ஏந்தியிருக்கின்றார். வண்டுகள் மருளியஇந்தளம் என்னும் பண்ணைப் பாடுகின்றன. அவர் பொன் போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலையை அணிந்திருக்கின்றார். கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும் தெளிந்த நீரை உடைய,கெடிலநதியின்வடகரையில் உள்ள,திருவதிகைவீரட்டானத்தில்இப்பெருமான் ஆடுகின்றார்.

குறிப்புரை: கெடிலநதியின்வடபக்கத்து,கொன்றை மாலை அணிந்த பெருமான் அனல் ஏந்தி வீரட்டானத்துஆடுமஎன்கின்றது. குண்டை - பருத்த. குறள் - குள்ளமான. குழும - கூடியிருக்க.  மருள் பாட - மருளிந்தளம் என்னும் பண்ணைப் பாட. இது குறிஞ்சிப்பண் திறம் எட்டனுள் ஒன்று.  பொன்விரிகொன்றை - பொன்னிறமாக விரிந்த கொன்றை. தொடையலான் - மாலையை அணிந்த இறைவன். தொடையலான் ஏந்தி வீரட்டானத்து ஆடும் எனப்பொருத்துக.

Lord Civan dances holding fire in one of His hands in Thiru-vathikai-vee-rat- taanam which is situated on the northern bank of Kedila river where Barbus fishes leap and jump in the crystal clear water. Lord Civan wears garland made of fully blown gold like Kondrai flowers. Beetles hum round these flowers. Their tune resembles the tune called Marul Inthala-p-pann  The Lord is surrounded by short and stout Bhuta hosts.

Note: Veerattaanam: A holy place sanctified by the enactment of Civa's heroic deed. Marull: Marull Indalam: One of the eight of Kurinji-p-pann tiram.
Kendai: A freshwater fish. Barbus.

அரும்புங்குரும்பையுமலைத்தமென்கொங்கைக்
கரும்பின்மொழியாளோடுடன்கையனல்வீசிச்
சுரும்புண்விரிகொன்றைச்சுடர்பொற்சடைதாழ
விரும்பு மதிகையுளாடும்வீரட் டானத்தே.2

அரும்பும் குரும்பையும்அலைத்தமென்கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசிச், 
சுரும்பு உண் விரிகொன்றைச்சடர்பொன்சடை தாழ, 
விரும்பும்அதிகையுள் ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: தாமரை அரும்பு,குரும்பை ஆகியவற்றை தன் அழகால் வென்ற மென்மையான தனங்களையும்,கரும்பு போன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு சிவபெருமான் கூடியிருக்கின்றார். கையில் அனல் ஏந்தி ஆடிக்கொண்டிருக்கின்றார்.  வண்டுகள் தேன் உண்ணும் இதழ் விரிந்த கொன்றை மலர் மாலை அணிந்திருக்கின்றார்.  இத்தகைய சிவபெருமான் ஒளி மயமான பொன் போன்ற சடைகள்தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும்அதிகைவீரட்டானத்தே ஆடுகிறார்.  குறிப்புரை: இறைவர்உமையம்மையாரோடுதிருவதிகைவீரட்டானத்துஆவர்என்கின்றது. அரும்பு - தாமரை அரும்பு. அலைத்த.- அழகின்மிகுதியால்வருத்திய;கரும்பு - ஒரு சாதி வண்டு. அதிகை - தலப்பெயர். வீரட்டானம் - கோயில் பெயர்.

Umaa Devi's breasts are soft and more beautiful than the Lotus bud and the coconut fruit bud. Her melodious voice is as sweet as sugarcane juice. Lord Civan wears on His radiant and dangling matted hair (looking like gold), the garland of elegant cassia flowers. The honeybees hum around these flowers to consume the honey therein. This Lord Civan very much loves to abide in Thiru-vathikai-vee-rat-taanam. He dances here in the company of Umaa Devi, holding fire in one of His hands.

Note: Arumpu: Here, refers to the lotus-bud.
Kurumpai: Immature coconut fruit bud.

ஆடலழல்நாகமரைக்கிட்டசைத்தாடப்
பாடன்மறைவல்லான்படுதம்பலிபெயர்வான்
மாடமுகட்டின்மேன்மதிதோயதிகையுள்
வேடம் பலவல்லானாடும்வீரட் டானத்தே.3

ஆடல் அழல்நாகம்அரைக்கு இட்டு அசைத்து ஆடப், 
பாடல் மறை வல்லான் படு தம் பலி பெயர்வான், 
மாடமுகட்டின்மேல் மதி தோய் அதிகையுள், 
வேடம்பலவல்லான் ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: சிவபெருமான்,வெற்றியையும்,அழல்போலும் கொடிய தன்மையையும் கொண்ட நாகத்தை தம் இடையில் பொருந்தக் கட்டி அதை ஆடுமாறு செய்கிறார். அவர் வேதங்களில் பாட வல்லவர். படுதம் என்னும் கூத்தினைஆடிக்கொண்டுபலிதேடித்இரிகறார்.  இத்தகைய சிவபெருமான்,மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகைவீரட்டானத்தில்,பல்வேறு வேடங்களில்வல்லவனாக ஆடுகிறார்.

குறிப்புரை: நாகம் முதலியவற்றைக் கட்டி,வேடம் பலவல்லஇறைவர்வீரட்டானத்துஆடுவர்என்கின்றது.  ஆடல் அழல் நாகம் - வெற்றியோடு கூடிய கொடிய பாம்பு. இட்டு - அணியாக இட்டு.  படுதம் பலி பெயர்வான் - படுதம் என்னும் கூத்தினைஆடிக் கொண்டு பலிக்காகத்திரிபவன். வேடம் பலவல்லான் என்றது நினைந்தவடிவைநினைந்த வண்ணம் அடையும் வல்லமை உடையனாதலின்.

Lord Civan binds His waist with a fiery and cruel natured cobra and makes it dance. He is an adept in chanting the Vedas. He dances in a particular mode known as 'Padutham' and goes about for alms. He is skilful in acquiring any figure He wants to in a fraction of a moment and also can dissolve and disappear from that figure momentarily. He thus dances in Thiru-vathikai-vee-rat-taanam where the moon mingles and crawls over the tall mansions therein.
Note: Patutham: A type of dance.

எண்ணாரெயிலெய்தானிறைவனனலேந்தி
மண்ணார்முழவதிரமுதிராமதிசூடிப்
பண்ணார்மறைபாடப் பரம னதிகையுள்
விண்ணோர்பரவநின்றாடும்வீரட் டானத்தே.8

எண்ணார்எயில் எய்தான்;இறைவன்;அனல் ஏந்தி; 
மண் ஆர்முழவு அதிர,முதிரா மதி சூடிப், 
பண் ஆர் மறை பாட, -பரமன் - அதிகையுள், 
விண்ணோர் பரவ நின்று ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: சிவபெருமான்பகைவரதுதிரிபுரங்களைஎரித்தருளியஇறைவர்;இளம்பிறையை முடியில்சூடியிருக்கிறார்.. அத்தகைய இறைவன் கையில் அனல் ஏந்தி கருஞ்சாந்து இடப்பட்டமுழவு முழங்க,பண்ணமைப்புடையவேதங்களைச் சான்றோர் ஓத,தேவர்கள் போற்ற திருவதிகைவீரட்டானத்தே நின்று ஆடுகின்றார்.

குறிப்புரை: பகைவரதுதிரிபுரத்தைஎரித்தருளியஇறைவர்அனலேந்தி. மதிசூடி,மறைபாடஅதிகை வீரட்டானத்துஆடுவர்என்கின்றது. எண்ணார் - பகைவர். மண் - மார்ச்சனை. முதிரா மதி - இளம்பிளை:'

Lord Civan destroyed the enemy's three citadels. He wears the young crescent moon on His matted hair. To the accompaniment of large loud sounding drum which is smeared with black paste on its sides and to the chanting of Vedas in the appropriate time by scholars, Lord Civan holding fire in one of His holy hands, dances at Thiru-vathikai-vee-rat-taanam while He is adored by Devas there.

Note: Mann: Maarcchanai: The black paste applied to a mridangam. It enhances the instruments resonance. Muzhavu: A percussion instrument; mridangam.

கரிபுன்புறமாயகழிந்தாரிடுகாட்டில்
திருநின்றொருகையாற்றிருவாமதிகையுள்
எரியேந்தியபெருமானெரிபுன்சடைதாழ
விரியும் புனல்சூடியாடும்வீரட் டானத்தே.5

கரிபுன்புறம்ஆயகழிந்தார்இடுகாட்டில, 
திரு நின்று ஒரு கையால், -திரு ஆம் அதிகையுள், 
எரி ஏந்திய பெருமான்,எரிபுன்சடை தாழ, 
விரியும் புனல் சூடி,ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: கரிந்தபுல்லியஊர்ப்புறமாகியஇறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில்,ஒரு திருக்கரத்தில் எரி ஏந்து சிவபெருமான் ஆடுகிறார். திருமகள் நிலைபெற்றதிருவதிகையில் உள்ள வீரட்டானத்தில்எரிபோன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கையைச்சூடிக் கொண்டு ஆடுகிறார்.

குறிப்புரை: எரியேந்திய பெருமான் சடைதாழப்புனல்சூடிஇடுகாட்டில் ஆடுவார் என்கின்றது.  கரி புன்புறம்ஆய - கரிந்தபுல்லியஊர்ப்புறமாகிய. திருநின்று - திருமகள் நிலைபெற்று. ஒருகையால் - ஒழிதலால். அஃதாவது பிற இடங்கட்குச்செல்லுதலைஒழிதலால் இது திரு அதிகைஎன்பதற்குப் பொருள் காட்டியவாறு.

Lord Civan holding fire in one of His holy hands dances in the charred neglected burning ghat lying on the outskirts of the town where corpses are burnt. Also accommodating the river Ganges on His dangling fire like ruddy matted hair, He dances in Thiru-vathikai-vee-rat-taanam where the goddess of wealth - Thiru Magal has established herself well.

Note: Thiru: Sri: The Goddess of Wealth known as Lakshmi.

துளங்குஞ்சுடரங்கைத்துதைய விளையாடி 
இளங்கொம்பனசாயலுமையோடிசைபாடி
வளங்கொள்புனல்சூழ்ந்தவயலாரதிகையுள்
விளங்கும் பிறைசூடியாடும்வீரட்டானத்தே.

துளங்கும் சுடர் அங்கைத்துதைய விளையாடி, 
இளங்கொம்புஅன சாயல் உமையோடு இசை பாடி, 
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர்அதிகையுள், 
விளங்கும் பிறைசூடி ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: சிவபெருமான் அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்தி ஏந்தி விளையாடுகிறார். இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசை பாடுகிறார்.  வளமை உள்ள புனல் சூழ்ந்தவயல்களை உடைய திருவதிகைவீரட்டானத்தில்முடிமிசை விளங்கும் பிறைசூடிய பெருமான் ஆடுகின்றார்.

குறிப்புரை: உமையோடுஇசைபாடி ஆடுவார் என்கின்றது. துளங்கும் - அசைந்து (எரிகின்ற). துதைய - நெருங்க.  சாயல் - மென்மை.

Lord Civan firmly holding on His dainty hand sports with the fluttering and blazing fire. With the crescent moon on His head He sings along with Umaa Devi who is like a tender shoot and dances at Veerattaanam temple in Thiru-vathikai which is surrounded by fertile fields with copious supply of water.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப்புலித்தோலுடையாகக்
கீதமுமைபாடக்கெடிலவடபக்கம்
வேத முதல்வனின்றாடும்வீரட் டானத்தே.7

பாதம் பலர் ஏத்தப், -பரமன்,பரமேட்டி
பூதம் புடைசூழ,புலித்தோல்உடைஆகக், 
கீதம் உமை பாடக்,கெடிலவடபக்கம்
வேதமுதல்வன் நின்று ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூதகணங்கள் புடை சூழவும்,புலித்தோலைஉடையாகக்கொண்டும் இருக்கிறார்.  உமையம்மைகதம்பாடக்கெடிலநதியின்வடகரையில்வேதமுதல்வனாய்வீரட்டானத்தில் ஆடுகின்றார்.

குறிப்புரை: இது உமையவளேஇசைபாட வேதமுதல்வன் ஆடுகிறான் என்கின்றது. பலர் என்றது பாதத்தைத்திருவருளாகவேஎண்ணிப்பணியும்சிவஞானியரும்,உறுப்பென எண்ணிப் போற்றும் உலக ஞானியரும் ஆகிய பலரையும்.

The Supreme God, Lord Civan's Holy Feet are worshipped by many sages and saints. They are:
a) Saints of true spiritual wisdom who adore Civan's Holy Feet as divine grace in themselves.
b) Worldly sages who adore Civan's Holy Feet as part of His body.

Wearing the tiger skin and accompanied by a host of goblins Civan, the chief author of the Vedas dances to the singing of Umaa Devi at Veerattaanam on the northern bank of the Kedila river.

கல்லார்வரையரக்கன்றடந்தோள்கவின்வாட
ஒல்லையடர்த்தவனுக்கருள்செய்ததிகையுள்
பல்லார்பகுவாயநகுவெண்தலைசூடி
வில்லாலெயிலெய்தாஸனாடும்வீரட்டானத்தே.

கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட, 
ஒல்லைஅடர்த்து,அவனுக்கு அருள் செய்து,அதிகையுள், 
பல் ஆர்பகுவாயநகுவெண்தலை சூடி, 
வில்லால்எயில் எய்தான் ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோன்களின் அழகு வாடுமாறு அவற்றை நெரித்தவர் சிவபெருமான் பின்னர் அவனுக்கு அருள்பல செய்தவர். முப்புரங்களைவில்லால் எய்து அழித்துத் தனது பெருவீரத்தைப் புலப்படுத்தியவர். இவ்வாறானஇறைவர் பற்கள் பொருந்திய பிளந்த வாயை உடைய வெள்ளிய தலை ஓட்டை மாலையாகச் சூடி திருவதிகைவீரட்டானத்தில் ஆடுகின்றார்.

குறிப்புரை: இராவணனதுதோளழகுகெடஅடர்த்து அவனுக்கு அருள் செய்தவர். அதிகையுள் ஆடுகிறார் என்கின்றது. கல்லார் வரை என்றது கயிலையை. கயிலை கல்லில்லாததாயினும்மலையென்ற பொதுமைபற்றிக் கூறியது. கவின் - அழகு. ஒல்லை - விரைவாக. காலந்தாழ்க்கஅடர்ப்பின் அவனிறந்தேபடுவான்என்னுங்கருணையால். பல்ஆர்பகுவாய - பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

Lord Civan crushed the large shoulders of Raavanan to wilt. Raavanan tried to uproot the rocky-mount Kailash. Later Raavana repented. Thereafter Lord Civan graced him with many boons. He destroyed the three citadels of His Asura enemies, by His bow and proved His prowess. He wears a white skull, the mouth of which is wide open showing the teeth, He thus dances at Veerattaanam on the northern banks of the river Kedila.

நெடியானான்முகனுநிமிர்ந்தானைக்காண்கிலார்
பொடியாடுமார்பானைப்புரிநூலுடையானைக்
கடியார்கழுநீலம்மலரும்மதிகையுள்
வெடியார்தலையேந்தியாடும்வீரட் டானத்தே.9

நெடியான்,நான்முகனும்,நிமிர்ந்தானைக்காண்கிலார்; 
பொடிஆடுமார்பானை,புரிநூல்உடையானைக், 
கடி ஆர்கழுநீலம்மலரும்(ம்) அதிகையுள், 
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: தீப்பிழம்பாய் ஓங்கி நிமிர்ந்தவனும்,திருநீற்றைஅணிந்தவனும்,முப்புரிநூலை அணிந்து பேருருக் கொண்ட சிவபெருமானைப்திருமாலும்,நான்முகனும் காண முடியவில்லை. மணம் கமழும்நீலப்பூக்கள்திருவதிகையில் மலர்ந்து விளங்குகின்றன.  முடைநாற்றமுடையதலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு திருவீரட்டானத்தில் சிவபெருமான் ஆடுகின்றான்.

குறிப்புரை: அயனும்மாலும் அறிய முடியாதவர்என்கின்றது. கடி - மணம். கழுநீலம் - நீலப்பூ. வெடி - முடைநாற்றம். நெடியானும்நான்முகனும்நிமிர்ந்தானை. மார்பானை,உடையானை,காண்கிலார்;அவன் அதிகையுள்வீரட்டானத்து ஆடும் என முடிக்க.

Lord Civan smears His chest with holy ashes, He wears on His body a sacred thread with three strands. But when He stood as a tall and big flame of fire in front the big sized Thirumaal and the four faced Brahma, He could not be seen by them. This Lord Civan holding the mal-odorous skull in His hand dances at the Veerattaanam temple in Thiru-vathikai where fragrant blue lilies blossom.

அரையோடலர்பிண்டிமருவிக்குண்டிகை
சுரையோடுடனேந்தியுடைவிட்டுழல்வார்கள்
உரையோடுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோயலர்தாரானாடும்வீரட்டானத்தே.

அரையோடுஅலர்பிண்டிமருவிக்குண்டிகை
சுரைஓடு உடன் ஏந்தி,உடை விட்டு உழல்வார்கள் 
உரையோடு உரை ஒவ்வாது;உமையோடுஉடன்ஆகி, 
விரை தோய் அலர்தாரான் ஆடும்,வீரட்டானத்தே.

பொருள்: புத்தர்கள்அரசமரத்தையும்,தழைத்தஅசோகமரத்தையும் புனித மரமாகக் கொண்டு,குண்டிகையாகச்சுரைக்குடுக்கையைஏந்தித்திரிகின்றனர். சமணர்கள் ஆடையின்றித்திரிகின்றனர். அவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக்கேளாதீர்கள்.  மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடுஉடனாய்அதிகை வீரட்டானத்தில் ஆடுகிறான். அவனை வணங்குங்கள்.

குறிப்புரை: அரை - அரச மரம். புத்தர் சமணர் உரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாஎன்கின்றது.  சுரைக்குடுக்கையைஏந்தித்திரிபவர்ஆதலின் இங்ஙனம் கூறினார். விரை - மணம்.

The Buddhists consider the Asoka trees and leafy Peepul (Pipol) tree as sacred. They roam about carrying the dried bottle gourd as water jug. Jains roam about without any dress on their body. Ye companions! Do not listen to the useless words of these people. Lord Civan decorated with garlands of fragrant flowers dances along with His consort Umaa devi at Veerattaanam temple in Thiru-vathikai. Ye folks! Adore and worship Him.

ஞாழல்கமழ்காழியுள்ஞானசம்பந்தன்
வேழம்பொருதெண்ணீரதிகைவீரட்டானத்துச்
சூழுங்கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே.11

ஞாழல் கமழ் காழியுள்ஞானசம்பந்தன்
வேழம் பொரு தெண் நீர் அதிகைவீரட்டானத்துச்
சூழும்கழலானைச் சொன்ன தமிழ்மாலை, 
வாழும் துணை ஆக நினைவார் வினை இலரே.

பொருள்: புலிநகக்கொன்றைச்செடிகளின் மலர்களின் மணம் கமழும்சீகாழிப்பதியில் தோன்றியவர்ஞானசம்பந்தன். நாணல்களால்கரைகள்அரிக்கப்படாமல்காக்கப்படும் தெளிந்த நீர்வளம் உடையது திருவதிகைவீரட்டானம். அங்கே,பாதங்களில் சிலம்பு அணிந்து ஆடும் சிவபெருமானைப்போற்றிப் பாடினார் ஞானசம்பந்தன். இத்தமிழ் மாலையை வாழ்விற்குத்துணையாகக்கொண்டவர்களுக்கு வினை இல்லை.

குறிப்புரை: இப்பதிகத்தைத் தமது வாழ்விற்குத்துணையாகக்கொண்டவர்கட்குவினையில்லை என்கின்றது. ஞாழல் - புலிநகக் கொன்றை. வேழம் - கொறுக்காந்தட்டை. கரை – கரையாமலிருக்க நாணல்இடுவது மரபு.

Gnaanasambandan hails from Seekaazhi, which is pervaded by the fragrance of the tiger nailed cassia flower. He adored the Lord and sang this hymn on Lord Civan who wearing anklets at His feet, dances at Veerattaanam in Thiru- vathikai. Here copious crystal clear water is available in the pools, the banks of which are protected by reeds of grass to prevent erosion. Those who consider this garland of Tamil verses as their life support will find their karma considerably reduced.

Note: Gnaazhal: Pulinakkondrai
Vezham: Korukkai (European bamboo reed). It also refers to spiny bamboos and kaus (a large and coarse grass).

THIRU-CH-CHITRAM-BALAM

End of 46th Hymn

திருச்சிற்றம்பலம்

46.ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

47.திருச்சிரபுரம் 
திருத்தலவரலாறு: 
முதல் பதிகம் பார்க்க. 
47. THIRU-C-CHIRA-PURAM

THE HISTORY OF THE PLACE

See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

          Adoring at Thiruvakkarai and other shrines, the boy-saint arrived at Thiru-c- chira-puram. Here he had a darshan of Civa's dance and composed the following hymn.

திருச்சிற்றம்பலம் 
47.திருச்சிரபுரம்  
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

பல்லடைந்தவெண்டலையிற்பலிகொள்வதன்றியும்போய்
வில்லடைந்தபுருவநல்லாண்மேனியில்வைத்தலென்னே
சொல்லடைந்ததொல்மறையோடங்கங்கலைகளெல்லாஞ்
செல்லடைந்தசெல்வர்வாழுஞ்சிரபுரமேயவனே.

பல் அடைந்த வெண்தலையிற் பலி கொள்வது அன்றியும்,போய், 
வில அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே - 
சொல் அடைந்த தொல்மறையோடுஅங்கம்கலைகள் எல்லாம் 
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம்மேயவனே?

பொருள்: பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பி இருப்பது பழமையான வேதங்கள்: அவற்றின் அங்கங்களையும் பிற கலைகளையும்கற்றுணர்ந்தசான்றோர்கள் வாழும் இடமானதுதிருச்சிரபுரம் என்னும் சீகாழிப்பதியாகும். இங்கு எழுந்தருளியஇறைவனான சிவபெருமானே! பற்கள் பொருந்திய வெண்மையானதலையோட்டில் பல இடங்களுக்கும் சென்று பலியேற்கிறீர். அது மட்டுமின்றி வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உமதுதிருமேனியில்வைத்திருக்கின்றீர். இதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை: வேதம்,அங்கம்,கலைகள் எல்லாவற்றினும் செல்லும் கலைச்செல்வர்கள் வாழும் சிரபுரமேயவனே! வெண்தலையிற் பலி கொள்வதோடன்றிஉமையவளை ஒரு பாகத்து வைத்தது என்னே என வினவுகின்றார். வில் அடைந்த புருவம் - வில்லை ஒத்த புருவம். செல் அடைந்த செல்வர் - வேத முதலியவற்றில் செல்லுதலைப் பெற்ற கலைச்செல்வர்கள்.

The old Vedas are full of meaningful words and ideas. They have six auxiliaries. Many scholars who are well versed in these two arts as well in other arts and sciences are living in Seekaazhi, which is also known as Chira-puram. Oh! Lord Civa You are enshrined in this celebrated town! Tell me why You roam about and accept alms in the white human skull with the teeth clinging to it, despite the fact that You are sharing Your body frame with Your consort Umaa Devi whose eye-brows resemble a bow?

Note: Chirapuram is Seekaazhi. It is not to be confused with Civapuram, also a famous Tevaaram shrine.

கொல்லைமுல்லைநகையினாளோர்கூறதுவன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப்பலிகொண்டுண்ணுமாதரவென்னைகொலாஞ்
சொல்லநீண்டபெருமையாளர்தொல்கலைகற்றுவல்லார்
செல்லநீண்டசெல்வமல்குசிரபுர மேயவனே.2

கொல்லை முல்லைநகையினாள்ஓர்கூறுஅது அன்றியும்,போய், 
அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம் - 
சொல்ல நீண்ட பெருமையாளர்,தொல்கலை கற்று வல்லார், 
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம்மேயவனே?

பொருள்: அளவிட முடியாத பெருமையாளர்களும்,பழமையான கலைகளில் வல்லவர்களுமாகியஅறிஞர்களும் வாழ்கின்ற பெரும் செல்வவளத்தைஉடையசிரபுரத்தில் எழுந்து அருளும்சிவபெருமானே! முல்லை நிலத்தில் தோன்றிய முல்லை அரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில்வைத்திருக்கின்றீர்.  ஆயினும் துன்ப வாழ்க்கையாகியபலியைஏற்றுத்திரிவது ஏனோ?

குறிப்புரை: இதுவும் பெண்பாகராகிய தேவரீர் பலிதேர்வது ஏன் என்கின்றது. கொல்லை - முல்லை நிலம். முல்லை நகை - முல்லையரும்பு போன்ற பல் நகை;தொழிலாகுபெயர். ஓர் கூறு - ஒரு பங்கில் உள்ளாள். அல்லல்வாழ்க்கைப் பலி - துன்ப வாழ்வாகிய பலி,இரத்தலின்இன்னாதது இல்லை என்ற வள்ளுவர்குறளும்நோக்குக.

Highly renowned mortals who are beyond description, as well scholars who are proficient in the age-old arts and sciences have a meaningful existence in Chira-puram which has undiminishing abundant economic resources. Oh! Lord enshrined in such a comprehensive city, kindly let me know why You have a liking for such painful act of begging, getting alms and consuming it, forgetting that Your consort Umaa Devi is abiding in the left half of Your body, whose teeth are getting like glittering forest flowers (Mullai) Arabian jasmine growing in forest tracts.

Note: Kollai: The mullai region / woodland.

நீரடைந்தசடையின்மேலோர்நிகழ்மதியன்றியும்போய்
ஊரடைந்தவேறதேறியுண்பலிகொள்வதென்னே
காரடைந்தசோலைசூழ்ந்துகாமரம்வண்டிசைப்பச்
சீரடைந்தசெலவமோங்குசிரபுரமேயவனே.

நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும்,போய், 
ஊர் அடைந்த ஏறுஅது ஏறி உண் பலி கொள்வது என்னே - 
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்பச், 
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம்மேயவனே?

பொருள்: சிரபுரத்தில் வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் போல் பாடி இசைக்கின்றன.  மேகங்கள் தவழும் சோலைகளால்சூழப்பெற்றதுசிரபுரம். அல்தெறியில் ஒட்டிய செல்வம் பெருகி விளங்குவதுசிரபுரம். அந்த சிரபுரத்தைவிரும்பியசிவபெருமானே! கங்கையை அணிந்தசடைமுடியின்மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்திருந்தும்,பல ஊர்களுக்கும் சென்று அடைவதற்குஏதுவாகஇடபத்தில்ஏறிச்சென்று,பலரிடம் பலி ஏற்பது ஏனோ?

குறிப்புரை: மதிசூடிய நீர் பலிகொள்வது ஏன் என்கின்றது. கார் - மேகம். வண்டு காமரம்இசைப்ப எனக்கூட்டுக. அறவழிஈட்டப்பெற்றசெல்வமாதலின்,நீர் அடைந்த செல்வம் என்றார்.

Oh! Lord Civa! You are enshrined in Chira-puram of great glory and prosperity; where beetles are humming in the flower gardens. Their humming noise is comparable to the tune known as Seekaamaram. The clouds are crawling over the trees in the groves encircling this town. The economic growth of people residing here is due to their acquiring wealth by honest means only. He is having the crescent moon on His matted hair. Oh Lord! Please let us know the reason why You go about many towns riding in Your bull and accept for alms.
Note: Kaamaram: A Tamil Pann.

கையடைந்தமானினோடுகாரரவன்றியும்போய்
மெய்யடைந்தவேட்கையோடுமெல்லியல்வைத்தலென்னே
கையடைந்தகளைகளாகச்செங்கழுநீர்மலர்கள்
செய்யடைந்தவயல்கள்சூழ்ந்தசிரபுர மேயவனே.4

கை அடைந்த மா னினோடுகார்அரவு அன்றியும்,போய், 
மெய் அடை ந்தவேட்கையோடுமெல்லியல் வைத்தல் என்னே - 
கை அடைந்த களைகள்ஆகச்செங்கழுநீர்மலர்கள்
செய் அடைந்த வயல்கள்சூழ்ந்தசிரபுரம்மேயவனே?

பொருள்: களையெடுப்போர் கைகளில்,மிக அதிகமான களைகளாகச்செங்கழுநீர் மலர் வந்தடைகின்றன. இத்தகைய செழுமையான வயல்களால்சூழப்பெற்றசிரபுரம்மேவிய சிவபெருமானே! கையில் மானைவைத்திருக்கின்றீர். கரிய பாம்பைவைத்திருக்கின்றீர்.  அதுவன்றிதிருமேனியில்பெருவிருப்போடுஉமையம்மையைஇடப்பாகமாக கொண்டுள்ளீர். இது ஏனோ?

குறிப்புரை: கையில் மானையும்அரவையும்அணிந்திருப்பதோடு அன்றி,மெல்லியலையும் வைத்திருப்பது ஏன் என்கின்றது. கார் அரவு - கரும்பாம்பு வேட்கை - பற்றுள்ளம். கையடைந்தகளைகள் - பக்கங்களை அடைந்த களைகள். செய் அடைந்த வயல்கள் - நேர்த்தி அமைந்த வயல்கள்.

The town Chira-puram is surrounded by fertile fields where Chen-galu-neer flowers also grow in plenty along with the rice seedlings. While farm workers remove the weeds, these flowers also get collected in their hands (This shows the fertility of the soil and availability of copious water supply). Oh! Lord Civa! You are enshrined in such a fertile Chira-puram town holding a deer in one of Your hands and a black snake in another hand. With this stature, You are accommodating Your consort Umaa Devi in the left side of Your body frame! What may this be!

Note: Chen-galu-neer: Purple water lily.

புரமெரித்தபெற்றியோடும்போர்மதயானைதன்னைக்
கரமெடுத்துத்தோலுரித்த காரண மாவதென்னே
மரமுரித்ததோலுடுத்தமாதவர்தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள் கூப்புஞ் சிரபுரமேயவனே.5

புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக் 
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே - 
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர்தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும்சிரபுரம்மேயவனே?

பொருள்: மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையைஅணிந்தமுனிவர்களும், திரிபுரங்களை எரித்து அழித்தபெருவீரத்தோடு,போர் செய்ய வந்த மத யானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப் போர்த்த,காரணம் யாதோ?

குறிப்புரை: திரிபுரம் எரித்த தேவரீர் யானையை உரித்தது ஏன் என்கின்றது. பெற்றி - தன்மை.  கரம் எடுத்து - கையால் தூக்கி. மரம் உரித்த தோல் - மரவுரி. தேவரும்முனிவரும் கை தலைமேல் கூப்பி வணங்கும்சிரபுரமேயவன்என்க.

The highly regarded ascetics who wear the bark peeled from trees, as well the Devas adore You, with hands folded above their heads. You destroyed the three citadels of Asuras. While You are having such a prowess, why You lifted the exhilarated elephant, peeled off its skin and covered Your body with that skin?

கண்ணுமூன்றுமுடையதன்றிக்கையினில்வெண்மழுவும்
பண்ணுமூன்றுவீணையோடுபாம்புடன்வைத்தலென்னே
எண்ணுமூன்றுகனலுமோம்பியெழுமையும்விழுமியராய்த்
திண்ணமூன்றுவேள்வியாளர்சிரபுர மேயவனே.6

கண்ணுமூன்றும் உடையது அன்றிக்,கையினில்வெண்மழுவும்
பண்ணுமூன்றுவீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே - 
எண்ணும் மூன்றுகனலும்ஓம்பிஎழுமையும்விழுமியர்ஆய்த், 
திண்ணம் மூன்றுவேள்வியாளர்சிரபுரம்மேயவனே?

பொருள்: சான்றோர்கள்,ஆகவனீயம்,காருகபத்தியம்,தஷிணாக்கினி என்று சொல்லப்படும் முத்தயையும்வேட்பவர்கள்சிரபுரத்தில்வாழ்கின்றார்கள். அவர்கள் எழுபிறப்பிலும் தூயவராய்உறுதிப்பாட்டுடன்தேவயாகம்,பிதுர்யாகம்,இருடியாகம்எனப்படும் மூன்று வேள்விகளையும்புரிபவர்கள்ஆவர். அப்படிப்பட்ட சான்றோர்கள் வாழும் சிரபுரம்மேவிய சிவபெருமானே! முக்கண்களைஉடையவராய் இருக்கின்ற நீர் கைகளில் வெண்மமுவும், பண் மூன்று உடைய வீணை பாம்பு ஆகியவற்றை வைத்திருக்கும் காரணம் யாதோ?

குறிப்புரை: மூன்று கண்ணுடையமுதல்வராகிய தேவரீர் மழு,வீணை,பாம்பு இவற்றை வைத்தது ஏன் என்கின்றது. பண் மூன்று - பண்,திறம்,திறத்திறம்என்பன. இறைவன் திருக்கரத்தில்வீணையுள்ளமை எம்மிறைநல்வீணைவாசிக்குமே,என்ற பகுதியாலும் அறிக. எண்ணும் - எண்ணப்படுகின்ற. மூன்று கனல் - ஆகவனீயம்,தட்சிணாக்கினி,காருகபத்தியம்என்பன. மூன்று வேள்வியாளர் - தேவயஞ்ஞம், பிதிர்யஞ்ஞம்,ருஷியஞ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.

Men of virtue perform the ritual of raising the three fires - Aahavaneeyam, Dakshinaakkini, Kaarugapathyam and accomplish three sacrifices with purity and firmness in their mind in all their seven births. The three sacrifices are Deva Yaagam, Pithir Yaagam, Irudi Yaagam. Such famed people are living in Chira-puram. Oh! The three eyed Lord Civa! What is the reason for You to possess in Your hands, the white battleaxe, the Veena with three musical modes, and a snake?

Note: The triad of fires: Aahavaniyam, Gaaruhapathyam and Daakshinaagni.
The triad of sacrifices: Yagas for (1) Devas, (2) Manas and (3) Rishis.

குறைபடாதவேட்கையோடுகோல்வளையாளொருபாற்
பொறைபடாதஇன்பமோடுபுணா்தருமெய்ம்மையென்னே
இறைபடாதமென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாதபாடலோங்குசிரபுரமேயவனே.

குறைபடாதவேட்கையோடுகோல்வளையாள்ஒருபால்
பொறைபடாதஇன்பமோடுபுணர்தரும்மெய்ம்மை என்னே - 
இறை படாதமென்முலையார்மாளிகைமேல் இருந்து, 
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம்மேயவனே?

பொருள்: சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இளமகளிர்மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்றபாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ளசிரபுரம்மேவியஇறைவனே! குன்றாதவேட்கையோடு திரண்ட கை வளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்றஇன்பத்துடன்ஏற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை: தேவரீரைக்குறையாக்காதலோடும்,பொறுக்கலாற்றாதஇன்பத்தோடும் பெரிய பிராட்டி புணர்வதென்என்கின்றது. வேட்கை - பொருளை அடையாதகாலத்து அதன் கண்ணிகமும் பற்றுள்ளமாதலின்அடைந்தவழிநுகர்ந்தவழிக்குறையுமன்றே அங்ஙனம் குறையாமல் என்பது வலியுறுத்தக்குறைபடாத வேட்கை என்றார். கோல் வளை - திரண்ட வளையல். பொறைபடாத இன்பம் - பொறுக்க முடியாத அளவுகடந்த இன்பம். மெய்ம்மை - தத்தும். இறைபடாத - சிறிதும் தளராத. சிறை - குற்றம்.

Lord Civan is enshrined in Chira-puram where young girls having ever firm and soft breasts sing happily divine songs from the top of their mansions. His consort Umaa Devi forms part of His body. Her hands are well formed and decorated with heavy bangles. Oh! Lord Civa! What is the reason for You to accommodate within You, Your consort with immeasurable bliss?

Note: Civa's form is androgynic - both male, female, neuter and neither male, female, neuter Civa experiences transcendental bliss. Indeed this Sakthi is Bliss. No mortal can contain this bliss. Human beings, at best, can come by a fleeting glimpse of bliss. Civa is the Killer of Kaaman (the God of Love). Civa stands beyond gender. His very nature has transcended sex. He is neither male nor female, nor is He of neuter gender. His is verily infinite bliss. This indeed is a mystery par excellence.

மலையெடுத்தவாளரக்கனஞ்சவொரு விரலால் 
நிலையெடுத்தகொள்கையானேநின்மலனேநினைவார்
துலையெடுத்தசொற்பயில்வார்மேதகுவீதிதோறுஞ்
சிலையெடுத்ததோளினானேசிரபுர மேயவனே.8

மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச,ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார்மேதகுவீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம்மேயவனே!

பொருள்: திருச்சிரபுரத்தில்மேன்மைமிக்கவீதுதோறும்சிவனடியார்கள்வாழ்கின்றார்கள்.  அவர்கள் வனை எப்பொழுதும் தங்கள் நெஞ்சத்தில் நினைந்து போற்றித்துதுப்பவர்கள்.  அவர்கள் “கேடும்,ஆக்கமும் கெட்ட திருவினர்;ஓட்டையும் செம்பொன்னையும்ஓக்கவே நோக்குவர்”. இருவினை ஒப்பு என்ற பக்குவ நிலையை அடைந்தவர்கள். இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மனநிலை கொண்டவர்கள். அருச்சுனனுக்காக தனது தோளில் வில்லைச்சுமந்தவன் சிவபெருமான். முன் ஒரு காலத்தில் கயிலை மலையை தூக்க முயற்சித்தவாள்வலி உடைய இராவணன் அஞ்சுமாறுகால்விரல்ஒன்றினால்அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்த குற்றமற்றவனே! இச்செயலைச் செய்து காட்டிய உனது உள் நோக்கம் - செயல் என்னே!

குறிப்புரை: இது இறைவனைநின்மலனே! கொள்கையானே! தோளினானே! மேயவனே! என விளிக்கின்றது. அரக்கன் - இராவணன். நிலையெடுத்த - இறைத்தன்மையின் நிலையை எடுத்துக் காட்டிய;நிலைக்கச் செய்த எனலுமாம். துலையெடுத்த சொல் பயில்வார் - இருவினையொப்பொடு கூடிய தோத்திரிக்கும் அன்பர்கள். மேதகு வீதி - மேவுதல் தக்கவீதி. அதாவது அவர்கள் வாழ்கின்ற வீதி.  சிலை எடுத்த - வில்லைச்சுமந்த.

The devotees of Lord Civa reside in all the well-formed clean streets of Chirapuram. They are famed for their attitude of perfect equanimity in the midst of meritorious or sinful deeds - good and bad events in life. They always think of and adore Lord Civan in their minds. Lord Civan carried the bow and arrow on His shoulders on account of Arjunan (vide the archery battle with Arjunan). In the days of yore Raavanan, the mighty king adept in sword fighting, tried in vain to lift and keep aside mount Kailash. Lord Civan pressed the mountain by His toe and Raavanan trembled and got crushed under the mountain and repented. Oh! Flawless Lord Civa enshrined in Chirapuram, what is Your nature in exhibiting Your prowess in the handling of Raavanans affair?

மாலினோடுமலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப்பண்ணிநீண்டதத்துவமேயதென்னே
நாலுவேதமோதலார்கணந்துணையென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனி சூழ்ந்தசிரபுரமேயவனே.

மாலினோடுமலரினானும் வந்தவர் காணாது
சாலும்அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே - 
நாலுவேதம்ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்சச், 
சேலுமேயும் கழனி சூழ்ந்தசிரபுரம்மேயவனே?

பொருள்: நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச்சேல் மீன்கள் மேயும்வயல்கள்சூழ்ந்தசிரபுரம்மேவியஇறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில்உறையும்நான்முகனும் அடிமுடி காண இயலாது அவர்கள் மிகவும் அஞ்சுமாறு செய்த மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?

குறிப்புரை: அயனும்மாலுங்காணாத வண்ணம் நீண்டதன் தத்துவம் என்ன என்கின்றது. சாலும் - மிகவும். ஓதலார்கள் - ஓதுதலைஉடையவர்கள். சேலுமேயும் கழனி - சேல் மீன்கள் மேயும் வயல். சேலு என்பதில்உகரம் சாரியை.

The town Chirapuram is surrounded by lush paddy fields where cale fish pasture in the waters of the field. In this town virtuous scholars chant always the four Vedas and adore Civa by saying that He is their sole help. Thirumaal declared that he was superior to the four-headed Brahma who was seated in the Lotus, who then challenged Thirumaal and declared that he was superior to Thirumaal. When these two approached Lord Civan He took the form of an imposing and big flame of fire, the very sight of which frightened the two and made them surrender and accept that Civan is the Supreme Lord for all. Oh! Civa, why You took such a stretching divine form is mysterious.

புத்தரோடு சமணர் சொற்கள் புறனுரையென்றிருக்கும்
பத்தர்வந்துபணியவைத்தபான்மையதென்னைகொலாம்
மத்தயானையுரியும்போர்த்துமங்கையொடும்முடனே
சித்தர்வந்துபணியுஞ்செல்வச்சிரபுர மேயவனே.10

புத்தரோடு சமணர் சொற்கள் புறன்உரை என்று இருக்கும் 
பத்தர் வந்து பணிய வைத்த பான்மைஅது என்னை கொல்ஆம் - 
மத்தயானைஉரியும் போர்த்து மங்கையொடும்(ம்) உடனே, 
சித்தர் வந்து பணியும்செல்வச்சிரபுரம்மேயவனே?

பொருள்: மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து சித்தர்கள் பலரும் பணியச் செல்வச்சிரபுரநகரில் உமையம்மையாருடன் மேவிய இறைவனே! புத்தர்கள்சமணர்கள் ஆகிய புறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மை யாதோ?உரியும் - உம்மை இசை நிறை.

குறிப்புரை: புத்தர் சமணராகியபுறச்சமயிகள் வார்த்தை புறம்பானது என்றெண்ணும் அன்பர்கள் வணங்க இருப்பதேன்?என்கின்றது. சித்தர் - யோகநெறியில் நின்று சித்தி பெற்றவர்கள்.

Oh Lord Civa! You are enshrined in the famed city of Chirapuram, where a huge number of ascetics in the company of Your consort Umaa Devi reach You and offer worship. You peeled the skin of the exhilarated elephant and covered yourself with it. Those devotees who consider the sermons of the Jains and Buddhists as falsehood come to you to adore You. We wonder how You brought these servitors over to You and made them pay obeisance to You!

தெங்குநீண்டசோலைகூழ்ந்தசிரபுரமேயவனை
அங்கநீண்டமறைகள்வல்லஅணிகொள்சம்பந்தனுரை
பங்கநீங்கப்பாடவல்லபத்தர்கள்பாரிதன்மேற்
சங்கமோடுநீடிவாழ்வர்தன்மையி னாலவரே.11

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்தசிரபுரம்மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை 
பங்கம் நீங்கப்பாடவல்லபத்தர்கள் பார் இதன்மேல் 
சங்கமோடுநீடிவாழ்வர்,தன்மையினால் அவரே.

பொருள்: தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும்சோலைகள்சூழ்ந்தசிரபுரம்மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன்விரிந்துள்ளவேதங்களைஅறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன்போற்றிப்பாடியஇப்பதிகவாசகங்களைக்குற்றமறப்பாடவல்லபக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகி வாழ்வர்.

குறிப்புரை: இப்பதிகத்தைக்குற்றமறப்பாடவல்லார் இவ்வுலகில் சத்சங்கத்தோடுநீடுவாழ்வார்எனப் பயன்கூறுகிறது. அங்கம் நீண்ட மறைகள் - சிக்ஷை முதலிய ஆறு அங்கங்களால் நீண்ட வேதங்கள்.  பங்கம் - மலமாயாபந்தத்தால்விளைந்த குற்றங்கள். சங்கம் - அடியார் கூட்டம். தன்மையினால் நீடிவாழ்வார்எனக் கொண்டு கூட்டுக.

Lord Civan is enshrined in Chirapuram which is surrounded by fruit-yielding tall coconut trees. Gnaanasambandan who had a deep knowledge of the four Vedas and its six auxiliaries adored Lord Civan of Chirapuram and sang this hymn. Those devotees who are capable of singing these hymns will get rid of their sins. Also they will have longevity in union with the congregation of sages in this world.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 47th Hymn

திருச்சிற்றம்பலம்

47ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் ப 
48.திருச்சேய்ஞலூர் 
திருத்தலவரலாறு:

திருச்சேய்ஞலூர் என்ற திருத்தலம்சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும்.  கும்பகோணம் - திருப்பனந்தாள் பேருந்து வழியில் உள்ளது. முருகன் திருக்கைலையில் இருந்து, சூரசம்காரத்தின் பொருட்டு,வீரமகேந்திரத்திற்குஎழுந்தருளிய பொழுது,வழிநடையில் இங்கு வந்து சிவபூசைசெய்தருளினார் என்பது கந்தபுராண வரலாறு. சண்டேசுவர நாயனார் திருஅவதாரம்செய்தருளிய தலம். இவ்வரலாறுஇவ்வூர்ப்பதிகத்துஏழாம்பாடலில்விளங்கக் காணலாம். சண்டேஸ்வரஅவதாரஸ்தலம் என்று சம்பந்தசுவாமிகள்சிவிகையினின்றும் இறங்கி நடந்து சென்று வழிபட்டார்கள் என்று பெரிய புராணம் கூறுகிறது. முருகன் வழிபட்ட தலம் ஆதலின் சேய் நல்லூர் என்பது சேய்ஞலூர்என்றாயிற்றுப் போலும். இத்தலம்இக்காலத்து சேங்கனூர் என வழங்குகிறது.  சுவாமி பெயர் சத்தகிரீசுவரர். அம்மை பெயர் சகிதேவியார். தீர்த்தம் மண்ணியாறு.

கல்வெட்டு: 
1932இல் எடுத்த89ஆம் கல்வெட்டு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

பதிக வரலாறு: 
திருப்புறம்பயத்தை வணங்கி எழுந்தருளுகின்ற காழிநாதர் திருச்சேய்ஞலூரை, அணுகுகின்ற காலத்து, அவ்வூர் அந்தணர்கள் சண்டேசப்பிள்ளையாரே எழுந்தருளியதாக எண்ணி வணங்கி வரவேற்றுப் பாராட்டினார். பிள்ளையார்,சண்டேசர்அவதரித்த தலம் ஆகையால் சிவிகையிற் செல்லல் ஆகாதென்றுஎண்ணித் திருவடி நோவ நடந்து திருக்கோயிலை அடைந்தார்.  இறைவனைவணங்கினார்.'நூலடைந்த கொள்கை என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்.  முருகன் வழிபட்ட தலம் என்பதைக் காட்ட, “சேயடைந்தசேய்ஞலூர்” என்றும்,சண்டேசர் வரலாற்றைத் தெரிவிக்க'பீரடைந்தபாலதாட்ட'என்றும் தலவரலாற்றுப்பகுதிகளைக்குறிப்பித்து அருளுகிறார்கள்.

48. THIRU-CH-CHEIGNALOOR

THE HISTORY OF THE PLACE

     The sacred city of Thiru-ch-cheignaloor is to the north of river Cauvery in Chola Naadu, and is in the Kumbakonam - Thiruppanandhaal bus route. The name perhaps is derived from Sei-nalloor that is the sacred place (nalloor) where the child Murugan (Sei) offered worship to the Lord. According to the Kandhapuraanam, as Murugan was on his way from Thirukayilai to Veeramahendhiram to slay in battle the demon Soora, He stopped here and worshipped at this temple. It is called Sengkanoor these days.

     The Lord's name is Saththagireesuvarar and that of the Goddess is Sakidheviyaar. The sacred ford is Manniyaaru.

Chandesvara Naayanaar was born in this place. This episode is described in the seventh verse of the decad pertaining to this temple. According to Periya Puraanam, Saint Thirujnaanasambandhar, got down from his palanquin as he was being carried through this village, out of respect for Chandeesvarar and walked to the temple to offer worship. There is a single inscription in this temple.

INTRODUCTION TO THE HYMN

     After adoring at the shrine of Thiruppurampayam, the boy-saint arrived at the outskirts of Cheignaloor where he was received by its pious residents in joy. As Cheignaloor was the birthplace of Chandesura Naayanar, the boy-saint stepped out of his palanquin and proceeded to the shrine on foot. Here the following hymn was sung by him.

திருச்சிற்றம்பலம்

48.திருச்சேய்ஞலூர் 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

நூலடைந்தகொள்கையாலேநுன்னடிகூடுதற்கு
மாலடைந்தநால்வர்கேட்கநல்கியநல்லறத்தை
ஆலடைந்தநீழல்மேவியருமறைசொன்னதென்னே
சேலடைந்ததண்கழனிச்சேய்ஞலூர் மேயவனே.1

நூல் அடைந்த கொள்கையாலேநுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க,நல்கியநல்அறத்தை, 
ஆல் அடைந்த நீழல் மேவி,அருமறை சொன்னது என்னே - 
சேல் அடைந்த தண்கழனிச்சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால்சூழப்பட்டதிருச்சேய்ஞலூரில் அமர்ந்திருக்கும்சிவபெருமானே! வேதம் முதலிய நூல்களில்விதிக்கப்பட்டமுறைகளினால், உன் திருவடிகளை அடைய முயன்றும்சனகாதிமுனிவர்களாகியநால்வருக்கும் அஞ்ஞானம் நீங்கவில்லை. அதனால் அவர்கள் உன்னை அடைந்து உண்மைப்பொருளைக்கேட்டனர்.  அவர்கள் தெளிவு பெறுமாறு,கல்லால மர நிழலில்வீற்றிருந்து,அரிய அநுபூதிநிலையாகிய இரகசியத்தை,எவ்வாறு அவர்களுக்கு உணர்த்திஅருளினாய்?கூறுவாயாக.

குறிப்புரை: பலநூல்கற்றும் மயக்கம் தெளியாமையாலே வந்து கேட்ட சனகாதியர் நால்வர்க்கும் உபதேசப் பொருளை உரைத்ததென்னே என வினாவியதாக அமைந்தது இப்பாடலும்பிறவும். நூல் - வேதாகம முதலிய நூற்பிரமாணங்கள். மால் - மயக்கம். நால்வர் - சனகாதியர் நால்வர். அருமறை - அரிய அநுபூதிநிலையாகியஇரகசியத்தை.

Thiru-ch-cheignaloor is surrounded by cool fields where carnatic carp fish move about in large numbers. The four celestial saints - Sanakar, Sananthanar, Sanaathanar and sanarkumarar tried their level best to reach Your Holy Feet through the knowledge acquired from the Vedas and other scriptures. They were unsuccessful and became destitute regarding spiritual knowledge. Therefore they approached You to know real knowledge. Sitting under the stone- banyan tree You explained to them, to their fullest satisfaction, the mysterious spiritual knowledge contained in the sacred scriptures. Pray tell us how You were able to clear their doubts.

Note: The Four: The four sages collectively called Sanakaadi Munivergal.
The Banyan tree: It is known as Kallaala, in Tamil. It is of the type of Ficus indica and has no stilt roots. Seated under this at Kailash, Civa explicated the Truth to this Four, in silence, through the Cin-mudhra.

நீறடைந்தமேனியின்கணேரிழையாளொருபால்
கூறடைந்தகொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்ததிங்கள்சூடியரவமணிந்ததென்னே
சேறடைந்தண்கழனிச்சேய்ஞலூர் மேயவனே.2

நீறு அடைந்த மேனியின்கண்நேரிழையாள்ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றிக்,கோல வளர்சடை மேல் 
ஆறு அடைந்த திங்கள் சூடி,அரவம் அணிந்தது என்னே - 
சேறு அடைந்த தண்கழனிச்சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால்சூழப்பட்டதிருச்சேய்ஞலூரில்எழுந்தருளிய சிவபெருமானே!திருநீறணிந்த நின் திருமேனியின்ஒருபாகமாகஉமையம்மை இருக்கின்றபோது,அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல்கங்கையையும்,காமத்தால் கலை குறைந்த சந்திரனையும்,போடியாகியபாம்பையும்அணிந்துள்ள காரணம் யாதோ?

குறிப்புரை: ஒருபாகமாகஉமையைக்கொண்டிருத்தலேயன்றிக் கங்கை முதலியவற்றையும் அணிந்ததென்னேஎன்கின்றது. கோலம் - அழகு. பெண்ணொருபாதியராக இருந்தும்,மற்றொரு பெண்ணாகியகங்கையையும்,காமத்தாற்கலைகுறைந்தமதியையும்,போகியாகியபாம்பையும் அணிதல் தகுமா என வினாவியதன் நயம் ஓர்க.

Lord Civa! You are entempled in Thiru-ch-cheignaloor encircled by muddy cool fields. You have accommodated Your consort goddess Umaa Devi in Your handsome sacred body, smeared by holy ash. Despite this, in Your long matted hair You have also accommodated the Ganga Devi (the river Ganges, personified as a lady), and the moon that surrendered to You, and also a snake. Pray tell us the reason for this strange (weird) combination.

ஊனடைந்தவெண்தலையினோடுபலிதிரிந்து
கானடைந்தபேய்களோடுபூதங்கலந்துடனே
மானடைந்தநோக்கிகாணமகிழ்ந்தெரியாடலென்னே
தேனடைந்தசோலைமல்குசேய்செய்ஞலூர் மேயவனே.3

ஊன் அடைந்த வெண்தலையினோடு பலி திரிந்து, 
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே, 
மான் அடைந்த நோக்கி காண,மகிழ்ந்து எரிஆடல் என்னே - 
தேன் அடைந்த சோலை மல்குசேய்செய்ஞலூர்மேயவனே?

பொருள்: வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில்எழுந்தருளிய சிவபெருமானே! ஊன் பொருந்திய வெண்மையானதலையோட்டைக் கையில் ஏந்தி பலியேற்றுத்திரிகின்றாய். அதோடு காட்டில் பேய்களோடுபூதங்களும் கலந்து சூழ, மான்போன்ற கண்களை உடைய உமையம்மைகாணும்படி,மகிழ்வோடுஇடுகாட்டில் எரியாடுதல் ஏன்?

குறிப்புரை: பலியேற்று,பேயும்பூதங்களும் புடைசூழ,மலையரசன் மகள் காண எரியாடுதல் ஏன் என வினவுவதை விளக்குகிறது. கான் - காடு. மான் அடைந்த நோக்கி - மான் பார்வையைக்கற்றுக் கொள்வதற்காகவந்தடைந்தநோக்கினையுடையாளாகியஉமாதேவி.

Lord Civan! You abide in Thiru-ch-cheignaloor wherein the groves beetles hum in large numbers. You are holding the white human skull with the flesh particles still sticking to it and are roaming about to get alms. You are dancing in the burning ghat, holding fire in Your hands, accompanied by a host of goblins and devils. Your joyful dance is seen and enjoyed by Your consort Umaa Devi whose eyes are as attractive as those of a deer. Pray tell us why You are dancing in the burning ghat like this.

வீணடைந்தமும்மதிலும்வின்மலையாஅரவின்
நாணடைந்தவெஞ்சரத்தாநல்லெரியூட்டலென்னே
பாணடைந்தவண்டுபாடும்பைம்பொழில்சூழ்ந்தழகார்
சேணடைந்தமாடமல்குசேய்ஞலூர் மேயவனே.4

வீண் அடைந்த மும்மதிலும்,வில் மலையா,அரவின்
நாண் அடைந்த வெஞ்சரத்தால்,நல் எரியூட்டல் என்னே - 
பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகுஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் “சூழ்ந்ததும், அழகியதாய் வானுயர்ந்த மாடவீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும்வீணடையுமாறுமலையைவில்லாகவும்அரவைஅவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியைஅம்முப்புரங்களுக்குஊட்டியது ஏன்?

குறிப்புரை: மலை வில்லாக,பாம்பு நாணாகக் கொண்டு முப்புரத்தைத் தீ வைத்தது என்னே என வினாவுகிறதுஇத்திருப்பாடல். வீண் அடைந்த - பயனற்றுப் போன,நல்லெரி என்றது பூதஎரிபோலாது, புண்ணியப்பொருளாகியசிவபெருமானுடையசிரிப்பினின்றெழுந்தசிவாக்கினி என்பதைக் குறிப்பித்தது.  பாண் - பாட்டு. சேண் - ஆகாயம்.

Lord Civan is enshrined in Thiru-ch-cheignaloor, which is surrounded by thick green vegetation where the bees keep on humming; this humming sounds like musical notes. Here imposing, tall mansions are found. You improvised and used the Meru mountain as the bow and the snake as its arrow, with fire at the tip of the arrow and destroyed the three citadels of the Asuras. Pray tell us why You indulged in such an activity.

பேயடைந்தகாடிடமாப்பேணுவதன்றியும்போய்
வேயடைந்ததோளியஞ்சவேழமுரித்ததென்னே
வாயடைந்தநான்மறையாறங்கமோடைவேள்வித்
தீயடைந்தசெங்கையாளர்சேய்ஞலூர்மேயவனே.

பேய் அடைந்த காடு இடமாப்பேணுவது அன்றியும்,போய், 
வேய் அடைந்த தோளி அஞ்ச,வேழம் உரித்தது என்னே - 
வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடுஐவேள்வித்
தீ அடைந்த செங்கையாளர்சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: சேய்ஞலூரில் வாழும் அந்தணர்கள்வாயினால்ஓதப்படும் நான்கு வேதங்களுடன் ஆறு அங்கங்களையும்கற்றவர்கள். ஐவகைவேள்விகளை இயற்றி தீப்பொருந்திய சிவந்த கையினராகவிளங்குபவர்கள். அந்த மறையோர்கள் வாழும் சேய்ஞலூரில்எழுந்தருளிய சிவபெருமானே! பேய்கள் விளங்கும் சுடுகாட்டை விரும்பி அமர்ந்ததுமன்றி மூங்கில் போன்ற தோளையுடையஉமையம்மைஅஞ்சும்படியானையை உரித்தது ஏனோ?

குறிப்புரை: சுடுகாட்டைஇடமாகக் கொண்டு ஆடுதலேயன்றிஅம்மையஞ்ச ஆனை உரித்ததென்னே என்கின்றது. பேணுவது -'விரும்பியமர்வது. வேய் அடைந்த தோளி - மூங்கிலை ஒத்த தோள்களை உடைய உமையம்மை. வாயடைந்த - ஓதப்பெறுகின்ற உண்மை செறிந்த என்றுமாம். ஐவேள்வி - தென்புலத்தார்,தெய்வம்,விருந்து,ஒக்கல்,தான் என்ற ஐவருக்கும்செய்யப்பெறும் வேள்வி. தீ அடைந்த செங்கையாளர் - தீப்பொருந்தியவலக்கரத்தை உடைய அந்தணர்கள்.

Lord Civa! You are enshrined in Thiru-ch-cheignaloor where the virtuous scholars incessantly chant the four Vedas and the six auxiliaries and orally propagated for generations together. These scholars abiding here perform the rituals of five different kinds of sacrifice. Their hands are reddish owing to the sacrifice performed constantly. Besides performing an ecstatic dance in the burning ghat You peeled the skin of an elephant and covering Your body with that skin caused Umaiyammai whose shoulders are beautiful like the bamboo, to tremble. Let us know why all this was done?

காடடைந்தஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்தவேடனாகிவிசயனொடெய்ததென்னே
கோடடைந்தமால்களிற்றுக்கோச்செங்கணாற்கருள்செய்| 
சேடடைந்தசெல்வர்வாழுஞ்சேய்ஞலூர் மேயவனே.6

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம்ஆகி வந்து, 
வேடு அடைந்த வேடன் ஆகி,விசயனொடு எய்தது என்னே - 
கோடு அடைந்த மால்களிற்றுக்கோச்செங்கணாற்குஅருள்செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும்,பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில்மேவியவனுமாகியஇறைவனே! வில்லடிபட்டுக்காட்டுக்குள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக,தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை: பன்றியைத் துரத்தி வந்து வேடனாகிவிசயனோடுசண்டையிட்டது ஏன் என்கின்றது.  ஏனம்  - பன்றி.  இது விசயன் தவத்தைக்கெடுத்துக் கொல்ல வந்த மூகாசுரன் என்னும் பன்றி.  இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக் கொன்று விசயனைக்காத்தனர் என்பது வரலாறு. கோடு - கொம்பு, மால் - பெரிய; மயக்கமுமாம்.'கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்குஅருள்செய்சேய்ஞலூர்மேயவனே என்றார். சேடு - பெருமை.

Oh Lord Civa! You are enshrined in Thiru-ch-cheignaloor where prosperous and famed people live. You graced the Chola King 'Ko-chengat-cholan', who had in his garrison a large elephant force with tusks. A hog struck by an arrow, ran into the forest and hid itself fearing death. On account of this event, You took the form of a hunter and clashed with Arjunan. What for this unnecessary clash?

Note: Kochenkanaan: A Chola Sovereign. He is one of the 63 Naayanmaars. He pioneered the building of Maadakkoyil (Shrine built on a raised platform). He had built and consecrated over 70 such temples.

The Hog: Arjuna undertook the performance of a severe tapas to gain the Paasupata Astra through the grace of Civa. Duryodana, the inveterate enemy of the Paandavas commanded an Asura called Mukaasura to kill Arjuna. He assumed the form of a wild hog, to attack and kill Arjuna. Civa, pleased with the tapas of Arjuna appeared as a hunter in the forest, and killed the hog. Then He gifted the Astra coveted by Arjuna.

பீரடைந்தபாலதாட்டப்பேணாதவன்றாதை
வேரடைந்துபாய்ந்ததாளைவேர்த்தடிந்தான்றனக்குத்
தாரடைந்தமாலைசூட்டித்தலைமைவகுத்ததென்னே
சீரடைந்தகோயில்மல்குசேய்ஞலூர்மேயவனே.

பீர் அடைந்த பால்அதுஆட்டப்,பேணாது,அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்ததாளைவேர்த்தடிந்தான்தனக்குத்
தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே - 
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: சிறப்பு மிக்க மாடக்கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் சிவபெருமானே! பசுவின் முலைக்காம்பின் வழியே தானாகச்சுரந்த பாலை விசாரசருமன், தான் மணலால் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதனை விரும்பாத அவனது தந்தை எச்சதத்தன் சினந்து,பாற்குடத்தை தன் காலால் இடறினான். அந்தக் காலை வெட்டியவிசாரசருமரின்பக்தியை மெச்சி அவருக்கு சிவன் தாரையும் தனக்குச் சூட்டப்பட்டமாலையையும் சூட்டி அவரைச்சிவகணங்களுக்கும்தலைவனாகஆக்கியது ஏன்?

குறிப்புரை: தந்தையின் தாளைவெட்டியசண்டீசற்கு மாலை சூட்டித் தலைமை தந்ததென்னே என்கின்றது. பீர் - சுரப்பு பேணாது - அது சிவார்ப்பணம் ஆன அருமைப் பாட்டை அகங்கொள்ளாது.  அவன் என்றது விசாரசருமனை. தாதை - எச்சதத்தன். வேர் அடைந்து பாய்ந்ததாளை – வேரூன்றிப் பாற்குடத்தின் மேல் பாய்ந்ததாளை;அதாவது இடறிய காலை என்பதாம். வேர் அடைந்து என்பதற்குச் சினத்தால் வேர்த்து எனலுமாம். வேர்த்தடித்தான் - நிலையை அறுத்தவன். அடைந்த தார் மாலைசூட்டி - தாம் சூட்டியதாரையும்மாலையையும் சூட்டி.

Oh Lord Civa! You are enshrined in the very famous temple at Thiru-ch- cheingnaloor built on a mound with narrow passage so as to avoid elephants entering the temple. Visarasarumar  used to give sacred bath of milk to the Civalinga he made of sand. He got the milk from the cows, which he tended. His father Echa-thath-than got wild with his son, for misusing the milk. Therefore he kicked the Civalinga. Visarasarumar, before knowing that it was his father's action, gave a severe blow to his leg. Highly pleased with his action, Lord Civa conferred on him the title known as Chandeesan and also bestowed on him a sacred cloth and a garland. We wonder at this conferment.

மாவடைந்ததேரரக்கன்வலிதொலைவித்தவன்றன்
நாவடைந்தபாடல்கேட்டுநயந்தருள்செய்ததென்னே
பூவடைந்தநான்முகன்போற்பூசுரர்போற்றிசெய்யும்
சேவடைந்தவூர்தியானேசேய்ஞலூர் மேயவனே.8

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்துஅவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து,அருள் செய்தது என்னே - 
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர்போற்றிசெய்யும்
சே அடைந்த ஊர்தியானே,சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள்போற்றும்,விடையை ஊர்தியாகக்கொண்டவனே! திருச்சேய்ஞலூரில்மேவியஇறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனதுவலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?

குறிப்புரை: இராவணனது வலி தொலைத்து,அவன் பாடல் கேட்டு அருளியதேன்என்கின்றது.  இராவணன் தேர் புஷ்பகமாயினும் மா அடைந்ததேர் என்றது தேர் என்ற பொதுமை நோக்கி. மா - குதிரை; வண்டுமாம். பாடல் - சாமகீதம். பூசுரர் - அந்தணர். சே - இடபம்.

Lord Civan, using the bull as His vehicle, is hailed by the virtuous scholars who do the rituals as Brahma do. He resides in Thiru-ch-cheignaloor. He destroyed the strength of Raavanan who had a chariot of horses. But Oh! Lord You were enticed by the song sung by Raavanan and bestowed Your grace on him; tell us why?

காரடைந்தவண்ணனோடுகனகமனையானும்
பாரிடந்தும்விண்பறந்தும்பாதமுடிகாணார்
சீரடைந்துவந்துபோற்றச்சென்றருள்செய்ததென்னே
தேரடைந்தமாமறுகிற்சேய்ஞலூர் மேயவனே.9

கார் அடைந்த வண்ணனோடுகனகம்அனையானும், 
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார், 
சீர் அடைந்து வந்து போற்றச்,சென்று அருள்செய்தது என்னே - 
தேர் அடைந்த மா மறுகின்சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர்மேவியசிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன் வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகத்தை அகழ்ந்தும் விண்ணில்பறந்தும் சென்று அடிமுடிகளைக்காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?

குறிப்புரை: அயனும்மாலும்பறந்தும்தோண்டியும்காணக்கிடையாத தேவரீர் அவர்கள் திருந்தி வந்த காலத்து அருள் வழங்கியது ஏன் என்கின்றது. கார் - கருமை நிறம். கனகம்அனையான் - பொன் நிறமுடைய பிரமன். சீர் அடைந்து - தாம் முதலல்ல என்றும் மீளாஆளாவோம்'என்ற உண்மை உணர்ந்து. மறுகு - வீதி.

Civan is entempled in Thiru-ch-cheignaloor, which consists of broad streets in which chariots ply. The dark complexioned Thirumaal and gold-complexioned Brahma, delving deep and flying high, have failed in their attempt to find the crown and feet of Lord Civa. Flouted in their attempt they shed their arrogance and later glorified the Lord. Oh Lord! You bestowed Your grace on them. Why?

மாசடைந்தமேனியாரும்மனந்திரியாதகஞ்சி
நேசடைந்தவூணினாருநேசமிலாததென்னே
வீசடைந்ததோகையாடவிரைகமழும்பொழில்வாய்த்
தேசடைந்தவண்டுபாடுஞ்சேய்ஞலூர் மேயவனே.10

மாசு அடைந்த மேனியாரும்,மனம் திரியாத கஞ்சி 
நேசு அடைந்த ஊணினாரும்,நேசம் இலாதது என்னே - 
வீசு அடைந்த தோகை ஆட,விரை கமழும்பொழில்வாய்த், 
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர்மேயவனே?

பொருள்: வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள்ஆடுவதும்,மணம் கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில்மேவிய இறைவனே! அழுக்கேறியஉடலினரும்,மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக்கொள்வோரும் ஆகிய சமணபுத்தர்கள்உன்பால் நேசம் இல்லாததற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை: புத்தரும் -சமணரும்தேவரீரிடத்து அன்பு கொள்ளாதது என்னே என்கின்றது. மாசு - அழுக்கு. நேசடைந்த - அன்பு கொண்ட. வீசடைந்த தோகை-- வீசியாடுகின்ற மயில். தேசு - ஒளி.

Lord Civan resides in Thiru-ch-cheignaloor in which peacocks with stretched out their feather and dance. Beetles hum in gardens and groves filled with aroma. Men with bodies of accumulated dirt and men with minds bearing no revulsion for taking porridge as their food, the Jains and Buddhists move about without love for the Lord Civa. Oh Lord! What is the reason behind this?

சேயடைந்தசேய்ஞலூரிற்செல்வனசீர்பரவித்
தோயடைந்தவண்வயல்சூழ்தோணிபுரத்தலைவன்
சாயடைந்தஞானமல்குசம்பந்தனின்னுரைகள்
வாயடைந்துபாடவல்லார்வானுல காள்பவரே.11

சேய் அடைந்த சேய்ஞலூரில்செல்வன சீர் பரவி, 
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணிபுரத்தலைவன் - 
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன்உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார்வான்உலகுஆள்பவரே.

பொருள்: முருகப் பெருமான் வழிபட்டசிறப்புமிக்கத் தலம் திருச்சேய்ஞலூர். இத்தலத்தில் விளங்கும் செல்வனானசிவபிரானதுபுகழைப்போற்றிப் பாடினார் ஞானசம்பந்தன். இவர், நீர்வளம் மிக்க வளமையான வயல்களால்சூழப்பட்டதோணிபுரத்தின் தலைவர். நுட்பமான ஞானம் கொண்டவர். அவர் பாடிய இந்த இனிமையான பதிகத்தைவாயினால் பாடி வழிபட வல்லவர்கள்வானுலகைஆள்வர்.

குறிப்புரை: நுணுகியஞானத்தோடு கூடிய இப்பதிகத்தைவாயினால் பாடி வழிபட வல்லவர்கள் வானுலகு ஆள்வர்என்கின்றது. சேய் - முருகன். முருகன் சூரபன்மனைக்கொல்லப் படை எடுத்த காலத்து இத்தலத்தில் தங்கி இறைவனைவழிபட்டார் என்பது கந்தபுராண வரலாறு. ஆதலின்'சேயடைந்த சேய்ஞலூர்'என்றார். தோயடைந்த - நீர் நிறைந்த தேயம் என்பது தோய் என ஈறு குறைந்தது. சாய் - நுணுக்கம்.

Thiru-ch-cheignaloor is specially known as the place of worship of Lord Civa by Lord Muruga portrayed as His son. Gnaanasambandan, belonging to Thonipuram  which is well-known a place of plenty of water availability and fertile fields, and possessing intricate wisdom, has sung pleasant verses in praise of Civan. Those who can sing his verses are sure to reach the eternal world.

Note: His Son: Muruga. He visited this holy place and worshipped Civa. So, this town came to be known as Cheignaloor. Chei: Child/son. Naloor: The good city.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 48th Hymn

திருச்சிற்றம்பலம்

48ஆம் பதிகம் முற்றிறறு

உ 
சிவமயம்

49.திருநள்ளாறு 
திருத்தலவரலாறு: 
ஏழாம் பதிகம் பார்க்க. 
பதிக வரலாறு:

திருத்தருமபுரத்தை வழிபட்டுத் திருநள்ளாறடைந்த காழிவேந்தர் அன்புறுகாதலினால் உள்ளுருகி இறைவனை வணங்கி, பொருவில் திருப்பதிகமாகிய ’போகமார்த்த‘ என்னுமிதனை எடுத்துப் பாடி, திருக்கடைக்காப்புமிட்டு, திருநீலகண்டயாழ்ப்பாணரையாழில் வைத்து வாசிக்கச் செய்து,தாமும்பாடி,எல்லோரையும் மகிழ்வித்தார். இப்பதிகமேசமணருடன் செய்த அனல்வாதத்தில் வெற்றி கண்ட பச்சைப் பதிகம்.

49. THIRU-NALLAARU

THE HISTORY OF THE PLACE

    See Seventh Hymn.

INTRODUCTION TO THE HYMN

    From Dharmapuram, the boy-saint arrived at Thiru-nallaaru and sang the following peerless decad. This is known as 'Pacchai-p-pathikam', which secured success for our Saint in his encounter with the Samanars at Madurai.

திருச்சிற்றம்பலம்

49.திருநள்ளாறு  
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

போகமார்த்தபூண்முலையாள்தன்னோடும்பொன்னகலம்
பாகமார்த்தபைங்கண்வெள்ளேற்றண்ணல்பரமேட்டி
ஆகமார்த்ததோலுடையன்கோவணவாடையின்மேல்
நாகமார்த்தநம்பெருமான்மேயது நள்ளாறே.1

போகம் ஆர்த்தபூண்முலையாள்தன்னோடும்பொன்அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல்,பரமேட்டி, 
ஆகம்ஆர்த்ததோல்உடையன்,கோவணஆடையின்மேல்
நாகம் ஆர்த்தநம்பெருமான்,மேயதுநள்ளாறே.

பொருள்: நம் பெருமானாகிய சிவபெருமான்,இன்பத்திற்குநிலைக்களனாய்உள்ளனவும், அணிகலன்கள் பொருந்தியதுமானதனங்களை உடைய உமையம்மையை,தம்முடைய அழகிய திருமேனியின்இடப்பாகத்தில் நிறைந்து இருக்கச் செய்தவர். குளிர்ந்த கண்களையும்வெண்மையானநிறத்தையும் உடைய எருதைத் தனது வாகனமாகக் கொண்ட தலைவர். மேலானவர்.திருமேனியில் தோல் ஆடையைப்போர்த்தவன். இடுப்பில் உள்ளாடையாகக்கட்டியகோவணஆடையின்மேல்நாகத்தைக்கச்சாகஇறுக்கிக் கட்டியவர். இந்த நம்பெருமான்எழுந்தருளி இருக்கும் இடம் திருநள்ளாறு.

குறிப்புரை: இப்பதிகம்முழுவதுமே பெருமான் விரும்பி இருக்கும் இடம் நள்ளாறுஎன்கின்றது. ஆர்த்த - நிறைந்த. அம்மையின் திருநாமம் போகமார்த்தபூண்முலையாள் என்பது. தன்னோடும் என்றது அம்மையைத்தன்னின் வேறாக இடப்பாகத்துக்குஎழுந்தருளச் செய்த நிலையைக்குறித்தது. பொன் அகலம் பாகம் ஆர்த்த என்பது தன்னோடு ஒரு திருமேனியில் இருக்கும் நிலையைக்குறித்தது. அகலம் - மார்பு,ஆகம் - மார்பு.

குருவருள்: அனல் வாதத்தின்போது ஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இந்த'போகமார்த்தபூண்முலையாள்'என்னும் பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபைஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம்.  “போகமார்த்தபூண்முலையாள்‘என்னும்இத்தொடரால்இன்பதுன்பஅநுபவங்களாகியபோகத்தைத் தன்மார்பகத்தேதேக்கி வைத்து உயிர்களாகிய தம் பிள்ளைகட்குப்பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தேதிருவருளால்சுரக்கின்றதாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக்கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது.  தாய்ப்பாலேகுழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும்சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.

Thiru-nallaaru is a shrine much desired by Lord Civa. He has accommodated on the left part of His body goddess Umaa Devi who is known here as Bhogam-aartha- poonn-mulaiyaal. He uses the bull with cool and white eyes complexion as His vehicle. He, the Supreme, has covered His divine body with the skin of an animal and has tied the snake over His loincloth. This Lord is entempled in Thiru- nallaaru.

Note: Bhogam-aarttha-poonn-mulaiyaal is the name of the Goddess of Thiru-nallaaru.
Bhogam: Bliss; aarttha: compact of; poonn-mulaiyaal: She has bejeweled breasts. Umaa is hailed as a virgin by the Sivagnaana Siddhiyaar. This bliss granted by Civa-Sakthi is non-physical. It is spiritual and endless.

Kovanam: loincloth.

தோடுடையகாதுடையன்தோலுடையன்தொலையாப்
பீடுடையபோர்விடையன்பெண்ணுமோர்பாலுடையன்
ஏடுடையமேலுலகோடேழ்கடலுஞ்சூழ்ந்த
நாடுடையநம்பெருமான்மேயது நள்ளாறே.2

தோடு உடைய காது உடையன்,தோல் உடையன்,தொலையாப்
பீடு உடைய போர்விடையன்,பெண்ணும் ஓர்பால்உடையன், 
ஏடு உடைய மேல்உலகோடுஏழ்கடலும்சூழ்ந்த
நாடு உடைய நம்பெருமான்,மேயதுநள்ளாறே.

பொருள்:சிவபெருமான்,உமையம்மைபாகத்தே உள்ள இடது காதில் தோடணிந்தவர்.  தோலைஆடையாகக் கொண்டவர். குன்றாத பெருமை உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியர். மலை மகளை ஒரு பாகமாகக் கொண்டவர். அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழு கடல்களாலும்சூழப்பட்ட இந்த நிலவுலகத்தையும் உடையவர். இந்த நம் பெருமான் விரும்பிய இடம்திருநன்ளாறு ஆகும்.

குறிப்புரை: தோடுடைய காது - அம்மையின் காது. பீடு - பெருமை. ஏடு உடைய மேலுலகு - ஒன்றின்மேல் ஒன்றாக எடுத்தலை உடைய மேலுலகங்கள். இவ்விரண்டடிகளாலும்இறைவனுடைய தனியரசிற்கு உரிய நாட்டுப்பரப்புசொல்லப்பட்டது.

Lord Civa, having accepted His consort at the left portion of His body wears a stud at His left ear. He uses the skin of an animal as His robe. His vehicle is a bull of endless fame and valorous deeds in war. His consort forms part of His body. He is a lord of tiered upper worlds, as well as this world, the earth, engirdled by the seas. His beloved shrine is this Thiru-nallaaru.

ஆன்முறையாலாற்றவெண்ணீறாடியணியிழையோர்
பான்முறையால்வைத்தபாதம்பத்தர்பணிந்தேத்த
மான்மறியும்வெண்மழுவுஞ்சூலமும்பற்றியகை
நான்மறையான்நம்பெருமான்மேயது நள்ளாறே.3

ஆன்முறையால் ஆற்ற வெண்நீறு ஆடி,அணியிழை ஓர்- 
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, 
மான்மறியும்,வெண்மழுவும்சூலமும் பற்றிய கை 
நால்மறையான்நம்பெருமான்,மேயதுநள்ளாறே.

பொருள்: சிவபெருமான் பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுவதும் பூசியவர். அழகிய அணிகலன்களைத் தரித்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவர். தன் திருவடிகளைபக்தர்கள் பணிந்து போற்றத்தக்க மேன்மையானவர்.  இளமையான மான்,வெண்மையானமழு,சூலம் ஆகியவற்றை ஏந்தியகையினர்.  நான்மறைகளையும்அருளியவர். இந்த நம் பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: ஆன்முறையால் - பசுவினிடமிருந்துவிதிப்படி எடுக்கப்பட்ட. ஆற்ற ஆடி எனக்கூட்டுக.  ஆற்ற - மிக. அணியிழை - உமாதேவியார்.

Civaperuman has smeared on His body the white ash made out of the cow-dung properly processed; He retains at His side Umaiammai who wears beautiful jewels. In His hands He holds the cub of a deer, white axe and trident. He is the author of the four Vedas and resides at Thiru-nallaaru.

புல்கவல்லவார்சடைமேற்பூம்புனல்பெய்தயலே
மல்கவல்லகொன்றைமாலைமதியோடுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர் தம்பொற்பாதநிழற்சேர
நல்கவல்லநம்பெருமான்மேயதுநள்ளாறே.

புல்க வல்ல வார்சடைமேல்பூம்புனல் பெய்து,அயலே
மல்க வல்ல கொன்றைமாலைமதியோடுஉடன்சூடிப், 
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாதநிழல் சேர, 
நல்க வல்ல நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்:சிவபெருமான் தனது நீண்ட சடையின் மேல் கங்கையைவைத்துள்ளார். அதன் அருகில் கொன்றை மாலையையும்பிறைச்சந்திரனையும் ஒரு சேரச்சூடியுள்ளார். தன்னை இறுகப் பற்றிக் கொண்டு வழிபடுபவர்க்குத் தனது திருவடி நிழலைச் சேரும் பேற்றை நல்குபவர். இப்பெருமான்மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: புல்கவல்ல - தழுவவல்ல. மல்க - நிறைய. பல்க - இறுக. இது அடியார்களுக்குத் திருவடி நிழலைத் தருகின்றார் என்று பயன் கூறுகின்றது.

In Thiru-nallaaru resides our Lord who holds on His long matted hair the splendorous river Ganges, the garland of cassia flowers and the crescent moon in close proximity to each other. He blesses His servitors ever increasing in number with the salvific shade of His Golden Feet. Such is the nature of the Lord of Thiru-nallaaru.

ஏறுதாங்கியூர்திபேணியேர்கொளிளமதியம்
ஆறுதாங்குஞ்சென்னிமேலோர்ஆடரவஞ்சூடி
நீறுதாங்கிநூல்கிடந்தமார்பினிரைகொன்றை
நாறுதாங்குநம்பெருமான்மேயதுநள்ளாறே.

ஏறு தாங்கி ஊர்தி பேணி,ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடுஅரவம்சூடி, 
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை 
நாறு தாங்கு நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்: சிவபெருமான் தனது கொடியாகஇடபத்தைக்கொண்டுள்ளார். அதனையே தனது வாகனமாகவும் விரும்பி ஏற்றுள்ளார். அழகிய இளம்பிறைச் சந்திரன்,கங்கைஆகியன பொருந்திய சடைமுடியின் மேல் ஆடுகின்ற பாம்பைச்சூடியுள்ளார்.  திருநீறுபூசியுள்ளார். பூணூலோடு விளங்கும் மார்பில் மணம் கொண்ட மாலையை ஆகியன பொருந்திய பூணூலோடு விளங்கும் மார்பில் மணம் கொண்ட மாலையை அணிந்துள்ளார். இந்த நம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: ஏறுதாங்கி - கொடியின்கண்இடபத்தைத் தாங்கி. ஊர்தி பேணி – இடபவாகனத்தின்மீது ஆரோகணித்து. ஏர் - அழகு. நிரைகொன்றை - ஒழுங்கான கொன்றை. நாறு - மணம்.

The bull is the insignia of Lord Civan's flag. The real bull is His vehicle on which He rides majestically. His matted hair holds the beautiful, young, crescent moon and the river Ganges and a dancing snake. Having applied the sacred ashes to His body He wears the sacred thread on His chest from which arises the fragrance of cassia garland. It is in Thiru-nallaaru that our Lord Civan is entempled.

திங்களுச்சிமேல்விளங்குந்தேவனிமையோர்கள்
எங்களுச்சியெம்மிறைவனென்றடியேயிறைஞ்சத்
தங்களுச்சியால்வணங்குந்தன்னடியார்கட்கெல்லாம்
நங்களுச்சிநம்பெருமான்மேயதுநள்ளாறே.

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் -இமையோர்கள், 
“எங்கள் உச்சி எம் இறைவன்!'என்று அடியே இறைஞ்சத், 
தங்கள் உச்சியால்வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் 
நங்கள் உச்சி நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்: சிவபெருமான் தன் திருமுடியின்உச்சிமீதுபிறைச்சந்திரனைவைத்துள்ளார்.  எங்கள் தலைவனாய்உன்ளஎம்பெருமானே! என்று தேவர்கள்அடிபரவிஇறைஞ்சுவர்.  தங்கன் தலையால் தன்னை வணங்கும்அடியவர்களும் “எங்கள் முடிமீது விளங்கும் நம்பெருமானே” என்று போற்றுவர். இந்தச் சிவபெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: உச்சி - தலை. எங்கள் உச்சியின்மேல் இருக்கின்றார் எம்மிறைவன் என்று தேவர்கள் வணங்க. தலைவணங்கும்அடியார்களும் நமது உச்சியில் உள்ளான் (எனக்கூற இருக்கும்) நம் பெருமான் மேயதுநள்ளாறு என இயைத்துப் பொருள் காண்க.

Lord Civan is the Supreme God in whose crest the bright moon abides. The Devaas adore His holy feet by saying "Oh Lord! You are our Chief". The devotees who worship Him by placing their heads on His holy feet proclaim that He abides on their heads. It is in Thiru-nallaaru where He is entempled.

வெஞ்சுடர்த்தீயங்கையேந்திவிண்கொண்முழவதிர
அஞ்சிடத்தோராடல்பாடல்பேணுவதன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர்திங்கள்சூடித்திகழ்தருகண்டத்துள்ளே
நஞ்சடைத்தநம்பெருமான்மேயது நள்ளாறே.7

வெஞ்சுடர்த்தீஅயங்கை ஏந்தி விண்கொள்முழவு அதிர, 
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும்,போய்ச், 
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடித்,திகழ்தருகண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்: சிவபெருமான் கொடிய ஒளிபொருந்தியநெருப்பைக் கையில் ஏந்தியவர்.  விண்ணளாவும்ஒலிக்கும்முழவுமுழங்கப் பலரும் அஞ்சும்சுடுகாட்டில்ஆடுவதையும் பாடுவதையும்விரும்புபவர். தலையில் ஓர் இளம்பிறையைச்சூடியவர். பிரகாசிக்கின்ற தன் கழுத்தில் நஞ்சினைநிறுத்தியவர். இந்த நம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: விண் கொள் முழவு - மேகத்தை ஒத்த முழவம்;அல்லது ஆகாயத்தின்தன்மையாகிய சப்தத்தைக்கொண்டிருக்கின்றமுழவுமாம். அஞ்சிடம் - அஞ்சத்தக்கஇடமாகிய மயானம்.

Lord Civa holding the fierce and bright rayed flame in His hand; He sings and dances in the dreadful burning ghat to the beat of the drum that resonates even to the skies. He wears in His ruddy matted hair the crescent moon. He has stayed (stalled) the poison at His splendorous throat. This Lord Civan is enshrined in Thiru-nallaaru.

சிட்டமார்ந்தமும்மதிலுஞ்சிலைவரைத்தீயம்பினால்
சுட்டுமாட்டிச்சுண்ணவெண்ணீறாடுவதன்றியும்போய்ப்
பட்டமார்ந்தசென்னிமேலோர்பான்மதியஞ்சூடி
நட்டமாடுநம்பெருமான்மேயது நள்ளாறே.8

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும்சிலைவரைகத்தீஅம்பினால்
சுட்டு மாட்டிச்,கண்ணவெண்நீறுஆடுவது அன்றியும்,போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால்மதியம் சூடி, 
நட்டம் ஆடு நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்: சிவபெருமான்,பெருமை மிக்க முப்புரங்களையும்வில்நாணில்பூட்டியதயாகிய அம்பினால் சுட்டு அழித்தவர்.திருவெண்ணீற்றுப்பொடியில் திளைத்து விளங்குபவர்.  நெற்றியில் பட்டம் என்னும் அணிகலன் கட்டித்தலைமுடிமேல்பால்போன்றநிறமுடைய பிறைமதியைச் சூடி நடனம் ஆடுபவர். இந்த நம் சிவபெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: சிட்டம் - பெருமை. மாட்டி - மாளச்செய்து. தீயில்விறகை மாட்டி என்ற வழக்குண்மையும் அறிக. பட்டம் - நெற்றியில் அணியும் அணி.

The three famous citadels were reduced to ashes by Lord Civan with arrows of huge flames; He smeared the holy ashes on His body, and danced about. With His head decorated by an ornament called 'Pattam' along with the milk-white crescent moon, He went about dancing. This Perumaan of such activities resides at Thiru- nallaaru.

உண்ணலாகாநஞ்சுகண்டத்துண்டுடனேயொடுக்கி
அண்ணலாகாவண்ணனீழலாரழல்போலுருவம்
எண்ணலாகாவுள்வினையென்றெள்கவலித்திருவா்
நண்ணலாகாநம்பெருமான்மேயது நள்ளாறே.9

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி, 
அண்ணல் ஆகா அண்ணல் நீழல்ஆர்அழல் போல் உருவம் 
எண்ணல் ஆகா,உள்வினை” என்று எள்க வலித்து,இருவர் 
நண்ணல் ஆகா நம்பெருமான்மேயதுநள்ளாறே. ப

பொருள்: சிவபெருமான் யாராலும் உண்ண முடியாத நஞ்சினை உண்டு அதன் வலிமையைக் கெடுத்து,அதனைத் தம் கழுத்தில் நிறுத்தியவர். யாராலும் அணுக இயலாத தலைவர். ஒளி பொருந்திய அழல் போன்ற திருஉருவினர். அநாதியாகவே உள்ள வினையால் உண்மையை உணரமுடியவில்லையேஎனச் சோர்ந்து வருந்திய திருமால் பிரமர்களாலும் அணுக முடியாதவர்நம்பெருமான். இவர் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை: உண்ணலாகா நஞ்சு - எந்தத்தேவராலும் உண்ண முடியாத விஷம். ஒடுக்கி - அதன் வலியைக் கெடுத்து. அண்ணலாகா - அணுகமழுடியாத. உள் வினை எண்ணலாகா என்று எள்க வலித்து இருவர் நண்ணலாகா நம் பெருமான். அநாதியேபற்றியுள்ளவினையால்உள்ளபடியேஉணரமாட்டாது இகழ, வருந்தி அயனாலும்மாலாலும் அணுக முடியாத பெருமான்.

Our Perumaan is unique. He consumed the poison which could not be eaten by anybody else and stayed (stalled) it in His throat. He is the lord who is not accessible to anybody. His divine shape appears like a bright blaze. He is inaccessible to Vishnu and Brahma who sorely grieved that they could not think of Him, standing disabled, as it were by their beginningless karma. This our Lord is enshrined in Thiru-nallaaru.

Note: Beginningless karma: This is known as mula karma. Karma mala, it is said, is adventitious. This does not negate the beginninglessness of karma. Mula karma is the innate propensity of the soul which is subject to likes and dislikes.

மாசுமெய்யர்மண்டைத்தேரர்குண்டர்குணமிலிகள்
பேசும்பேச்சைமெய்யென்றெண்ணியந்நெறிசெல்லன்மின்
மூசுவண்டார்கொன்றைசூடிமும்மதிளும்முடனே
நாசஞ்செய்தநம்பெருமான்மேயதுநள்ளாறே.

மாசு மெய்யர்,மண்டைத்தேரர்,குண்டர் குணம்இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி,அந்நெறிசெல்லன்மின்! 
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி,மும்மதிளும்(ம்) உடனே 
நாசம் செய்த நம்பெருமான்மேயதுநள்ளாறே.

பொருள்: சமணர்கள்அழுக்கேறியஉடம்பினர். புத்தர்கள் மண்டை ஓட்டை உண்கலமாகக் கொண்டு கையில் ஏந்தித்திரிபவர்கள். இவர்கள் தடித்த உடம்புடன்விளங்குபவர்கள்.  நற்குணமும்இல்லாதவர்கள். அவர்கள் பேச்சை உண்மை என்று எண்ணி,அவர்கள் சமயங்களில் செல்ல வேண்டாம். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி,மும்மதில்களையும் ஒருசேர அழித்து,தேவர்களைக்காத்தவர் நம் சிவபெருமான். அவர் விரும்பிய தலம் திருநள்ளாறே.

The Jains are exceedingly dirty and the Buddhists holding alms-bowls called 'Mandai' in their hands roam about here and there. They are obese and lacking in virtue. Ye companions! do not join them treating their speech as true. Instead go to Thiru-nallaaru where resides our Lord and worship Him. He is the One who destroyed the three fortresses at one stroke and rescued the Devaas. He wears the garland of Kondrai flowers around which beetles throng.

Note: The destruction of the citadels was at once simultaneous and instantaneous.

தண்புனலும்வெண்பிறையுந்தாங்கியதாழ்சடையன்
நண்புநல்லார்மல்குகாழிஞானசம்பந்தன்நல்ல
பண்புநள்ளாறேத்துபாடல் பத்து மிவைவல்லார்
உண்புநீங்கிவானவரோடுலகி லுறைவாரே.11

தண்புனலும்வெண்பிறையும்தாங்கியதாழ்சடையன், 
நண்புநல்லார் மல்கு காழிஞானசம்பந்தன்,நல்ல 
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும்இவைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே.

பொருள்: நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில்தோன்றியவர்ஞானசம்பந்தன்.  குளிர்ந்த கங்கையையும்வெண்மையானபிறையையும்தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபெருமான் எழுந்தருளிய,நல்ல இயல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடினார். இத்திருப்பதிகப்பாடல்கள்பத்தையும்ஓதவல்லவர்கள்பிராரத்த கன்ம வலிமை குறைந்து,வானவர்களோடுதேவருலகில்வாழ்வர்.

குறிப்புரை: இப்பாடல்பத்தும்வல்லார்இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னிநாடன் - காவிரி நாட்டிற்பிறந்தவன். மன்னுசோதி - நிலைபெற்ற சோதி வடிவானவன்.

Gnaanasambandan hails from Seekaazhi where abound dwellers that foster goodly fellowship. He has sung on the Lord whose dangling matted hair bears the cool river Ganges and the white crescent moon. Those who are well versed in these ten verses that hail Nallaaru which is great and virtuous will be liberated to a great extent from their karma. They will also abide in the celestial world with supernal folks.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 49th Hymn

திருச்சிற்றம்பலம்

49ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

50.திருவலிவலம்

திருத்தலவரலாறு:

திருவலிவலம் என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும்.  திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது வலியன்பூசித்த தலம் ஆதலின்இப்பெயர் பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. சூரியனும்,காரணிரிஷியும்பூசித்துப் பேறு பெற்றனர்.  சுவாமி சந்நிதி கட்டு மலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக்கிழக்குப்பக்கந்தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று. சுந்தரமூர்த்தி நாயனார்,திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும்சொல்லியவே சொல்லி ஏத்துகப்பான் என இருவர் பாடல் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார்.

சுவாமி பெயர் மனத்துணைநாதர். அம்மை பெயர் மாழையங் கண்ணி. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் காரணர் கங்கை.

கல்வெட்டு: 
படியெடுத்தன ஒன்பது உள்ளன. மூன்றாம் இராஜேந்திரன்காலத்தன மூன்று.  குலோத்துங்கன்காலத்தன இரண்டு. மூன்றாம் இராஜராஜன்காலத்தன இரண்டு. சுந்தரபாண்டியன் காலத்தன இரண்டு. இத்தலம்அருமொழித் தேவ வளநாட்டுவலிவலக்கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது. இறைவன் மனத்துள் தேவா என்றே கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகிறார். உடையார் மனத்துள்நாயனாரது கோயில் காரியம் பார்ப்பார் சிலரால்தேவப் பெருமாள் திருமடத்து எதிர் ஒப்பிலாதார்சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது. இந்தத்திருமடம்மனத்துள் நாயனார் கோயிலுக்குத்தெற்குப் பக்கத்தில் இருக்கிறது. தென்விடங்கலூர்,குலோத்துங்கசோழநல்லூர் திரிசூலம்,பொன் வேய்ந்த பெருமான் நல்லூர் முதலிய கிராமங்கள் பல்வேறு காரியங்களுக்குத் தானமாகஅளிக்கப்பெற்றமைஅறியப்பெறுகின்றன. திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அருச்சகர் ஒருவருக்கு நிலம் விற்கப் பெற்றது என்பதால் திருமூல தேவர் மடம் என்பது ஒன்று இருந்தமைபுலனாகும்.

பதிக வரலாறு: 
திருவாரூர்ப்புற்றிடங்கொண்டபெருமானைச்சேவித்துச்சிலநாள்தங்கியிருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் வ்ளமிகுந்த -வலிவலத்தை அடைந்தார்கள். மனத்துணைநாதரை வணங்கி இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

50. THIRU-VALI-VALAM

THE HISTORY OF THE PLACE

     This sacred place is to the south of river Cauvery in Chola Naadu, and can be reached by bus from Thiruvaaroor. Valian is a kind of sparrow, also known as Karikkuruvi. The name of the temple derives from the legend that a valiant offered worship here. A sage, Kaaranarishi, also attained salvation by worshipping here.

The Lord's name is Manaththunainaathar and that of the Goddess is Maazhaiyangkanni. The sacred ford is Kaaranar Gangkai. The sancred tree is Punnai.

The Lord's shrine is on top of a built-up hill. A moat surrounds the temple on all sides except the east. This is one of the storeyed templed (maadakkoyil). Saint Sundharamoorthi Naayanaar, appreciates the verses of both Saint Thiru- Gnaanasambandar and Saint Thirunaavukkarasar in 'solliyave solli eththukappaan'.

There are nine copies inscriptions here, of the reigns of Chola monarchs Raajendhiran III, Kuloththungkan, Raajaraajan III, and the Paandiyan king Sundharapaandiyan. These inscriptions reveal that many villages surrounding the temple had been gifted to the temple for various services.

INTRODUCTION TO THE HYMN

           After his sojourn at Thiruvaarur, the boy-saint visited this holy place where he sang the following hymn.

திருச்சிற்றம்பலம்

50.திருவலிவலம் 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

ஒல்லையாறியுள்ளமொன்றிக்கள்ளமொழிந்துவெய்ய
சொல்லையாறித்தூய்மை செய்து காமவினையகற்றி
நல்லவாறேயுன்றனாமநாவில்நவின்றேத்த
வல்லவாறே வந்து நல்காய்வலிவலமேயவனே.

ஒல்லை ஆறி,உள்ளம் ஒன்றிக்,கள்ளம் ஒழிந்து,வெய்ய
சொல்லை ஆறித்,தூய்மை செய்து,காமவினை அகற்றி, 
நல்லஆறேஉன்தன் நாமம் நாவில்நவின்றுஏத்த, 
வல்லஆறே வந்து நல்காய் - வலிவலம்மேயவனே!

பொருள்: திருவலிவலம் என்ற ஊரின்கண்எழுந்தருளியசிவபெருமானே! எனது பரபரப்பு அடங்கி,மனம் ஒன்றி,வஞ்சம் நீங்கி,வெஞ்சொல் தவிர்த்து,தூய்மையோடு காமம் முதலிய குற்றங்களைக்கடிந்து,மனதைத் தூய்மை செய்து,நல்ல முறையில் உனது நாமமாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத்தக்கவாறு ஓதி வழிபடுகின்றேன். தேவரீர் வந்து அருள வேண்டும்.

குறிப்புரை: வலிவலம்மேயவனே! மனம் ஒன்றி,வஞ்சம் நீங்கி இனிய கூறி,காமமாதிகடிந்து,உனது நாமத்தைச் சொல்ல,தேவரீர் வந்து அருளவேண்டும்என்கின்றது. ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு, கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி.  நாமம் - திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு. இறைவற்குவல்லவாறு என்று உரைப்பாரும்உளர்.

Oh Lord of Thiru-vali-valam! Without any excitement, with single-mindedness, avoiding violence and wrathful words, shedding weakness like lust, retaining only purity, I utter the five lettered holy word, 'Namasivaya', Your name in a perfect way, within the limits of my capacity. I worship You in the possible way known to me. Kindly bless me.

இயங்குகின்றஇரவிதிங்கள்மற்றுநற்றேவரெல்லாம்
பயங்களாலேபற்றிநின்பாற்சித்தந்தெளிகின்றிலா்
தயங்குசோதிசாமவேதாகாமனைக்காய்ந்தவனே
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலமேயவனே.2

இயங்குகின்ற இரவி,திங்கள்,மற்றும் நல்-தேவர்எல்லாம், 
பயங்களாலே பற்றி,நின்பால் சித்தம் தெளிகின்றிலர்; 
தயங்குசோதி! சாமவேதா! காமனைக்காய்ந்தவனே! 
மயங்குகின்றேன்! வந்து நல்காய் - வலிவலம்மேயவனே!

பொருள்: வானவெளியில்இயங்குகின்ற சூரியன்,சந்திரன் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் பயத்தால் பந்தப்பட்டுஉன்னைப் பரம்பொருள் என்று தம்சித்தம் தெளியாதவர்களாய் உள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே! சாம வேதம் பாடி மகிழ்பவனே! காமனைஎரித்தவனே! உன்னை எவ்வாறு தெளிவது என்று தெரியாமல் அடியேனும்மயங்குகின்றேன். திருவலிவலம்மேவியசிவபெருமானே! வந்து அருள் புரிவாயாக.

குறிப்புரை: தேவர் எல்லோரும் பயத்தால் பற்றப்பட்டுச் சித்தம் தெளிகிலார்கள்.  நானோ மயங்குகின்றேன். வந்தருள் செய் என்கின்றது. இரவி - சூரியன். திங்கள் - சந்திரன். பயங்களாலே பற்றி - அச்சத்தால்பற்றப்பட்டு.

The heavenly bodies - the sun and the moon - and the good Devaas, all these out of fear in their confused minds are unable to comprehend You as the Supreme Lord. Oh Civa! You, who appear in the form of a blaze, You who sing and enjoy 'Saama Vedam', You who burnt the god of lust, might be aware that I too am stupefied, bewildered as to how to understand You. Oh Lord! Kindly come to bless me.

பெண்டிர்மக்கள்சுற்றமென்னும்பேதைப்பெருங்கடலை
விண்டுபண்டேவாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டேயுன்றனாமங்காதலிக்கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப்பாடுஞ்சோலைவலிவல மேயவனே.3

பெண்டிர்,மக்கள்,சுற்றம்,என்னும் பேதைப்பெருங்கடலை
விண்டு,பண்டேவாழமாட்டேன்;வேதனைநோய்நலியக், 
கண்டு கண்டேஉன்தன் நாமம் காதலிக்கின்றது,உள்ளம்; - 
வண்டு கிண்டிப் பாடும் சோலை வலிவலம்மேயவனே!

பொருள்: வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசைபாடும்சோலைகள் சூழ்ந்ததிருவலிவலம் என்ற ஊரின்கண்எழுந்தருளுகின்றசிவபெருமானே! அடியேன் மனைவி,மக்கள்,சுற்றம் முதலான பாசப்பெருங்கடலில்பந்தப்பட்டுஅதனின்று பிரிய முடியாமல் வருந்துகின்றேன். வேதனை நோய் ஆகியன நலியஉலகியல்பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டேன். உன் திருநாமம் சொல்லுவது ஒன்றே இன்பமாவதுஎனக் கண்டு கொண்டேன். அதனைச் சொல்ல உள்ளம் விரும்புகின்றது. அருள்புரிவாயாக.

குறிப்புரை: பெண்டிர் முதலாகியபாசப்பெருங்கடலில் பற்றி,விட்டுப் பிரிய கில்லாதுவருந்துகின்றேன்.  உனது நாமத்தைச் சொல்ல உளம் விழைகின்றது என அறிவிக்கின்றார். பேதைப் பெருங்கடல் - அறியாமைக் கடல். விண்டு - பிரிந்து,கண்டு கண்டு - இவை துன்பம் உன்நாமம் சொல்வது இன்பம் எனப்பலகாலும் கண்டு.

Oh! Lord of Thiru-vali-valam, that is encircled by groves in which beetles keep on stirring the cups in the flowers to drink honey. I was unable to be detached from the big ocean of folly that bound me with my wife, children, and other kith and kin (Gnaanasambandar's utterances in this verse are not applicable to him but only to us). Now I realise that this worldly attachment is a turmoil causing suffering disease teeming with agony. I am fully convinced that the chanting of Your name alone can redeem me from this coil and bring bliss to me. I long to chant Your name for that alone is real joy. Kindly bless me so that I could derive that divine bliss.

மெய்யராகிப்பொய்யைநீக்கிவேதனையைத் துறந்து 
செய்யரானார்சிந்தையானேதேவர்குலக்கொழுந்தே
நைவனாயேனுன்றனாமநாளுந்நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய்வலிவலமேயவனே.

மெய்யர்ஆகிப்பொய்யை நீக்கி,வேதனையைத் துறந்து, 
செய்யர்ஆனார்சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே! 
நைவன்,நாயேன்;உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்; 
வையம்முன்னே வந்து நல்காய் - வலிவலம்மேயவனே!

பொருள்: தத்துவ உணர்ச்சி உடையராய்,பொய்மையை விலக்கி,உண்மையை மேற்கொண்டு பந்தபாசங்களால் வரும் ஆசை பற்றி எழும் துன்பங்களைத் துறந்து,செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின்சிந்தையுள்இருப்பவனே! தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன்திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகின்றேன். வலிவலம்மேவும்சிவபெருமானே! இவ்வுலகத்தில் பலரும் காண வந்து உய்யவேண்டியவற்றைக் காட்டி அருள்செய்வாயாக.

குறிப்புரை: செம்மனச்செல்வர்சிந்தையுள்இருப்பவனே! அடியேன் அவலத்தால்நைகின்றேன். வந்துஅருள் செய் என்கின்றது. மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும்மீட்டுங்கூறியதுவற்புறுத்த. அல்லது மெய்யராகி - தத்துவஞான உணர்ச்சி உடையராய் - பொய்யை நீக்கி என்றுமாம்.  வேதனை - ஆசைபற்றி எழும் துன்பம். செய்யர் - செம்மையானஅடியார்கள். நைவன் - வருந்துவேன்.  வையம் - முன்னே வந்து நல்காய் - இவ்வுலகத்துஎன்போலியரும்அறிந்துய்ய வேண்டி மானைக் காட்டி மானைப்பிடிப்பார்போல் வந்து அருள்செய்வாய்.

Oh! Lord Civa of Valivalam! You reside in the hearts of
a) those who shun falsehood
b) those who entertain only the truth in their lives
c) those who renounce all worldly attachment and escape from its evil effects
d) those who live with purity of mind
e) those who lead virtuous lives.

Oh! Lord Civa! the illustrious Chief of Devaas! I stand afflicted. I am chanting Your sacred name (Namasivaaya) daily. Oh Lord! Kindly shower Your grace on me and make all the earthly folk witness it.

Note: The word 'Kozhuntu' means shoot, twig, scim and the like. In literature it is used as a very endearing expression. Civa is hailed as Civakkozhunthu by the Tēvaram Trio.

துஞ்சும்போதுந்துற்றும்போதுஞ்சொல்லுவனுன்திறமே
தஞ்சமில்லாத்தேவர்வந்துன்தாளிணைக்கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க்கென்செய்கேனோநாளுநினைந்தடியேன்
வஞ்சமுண்டென்றஞ்சுகின்றேன்வலிவல மேயவனே.5

துஞ்சும்போதும்துற்றும்போதும்சொல்லுவன்,உன் திறமே; 
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து,உன் தாள் இணைக்கீழ்ப் பணிய, 
நஞ்சைஉண்டாய்க்கு என் செய்கேனோ?நாளும் நினைந்து,அடி யேன், 
“வஞ்சம் உண்டு” என்று அஞ்சுகின்றேன் - வலிவலம்மேயவனே!

பொருள்: உறங்கும்போதும்உண்ணும்போதும்உன்றன்புகழையேசொல்லுகின்றேன்.  தேவர்கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் திருவடிகளின்கீழ்ப்பணிந்தனர்.  அவர்களைக் காக்கும் பொருட்டு நஞ்சைஉண்ட உன் கருணையைஎந்நாளும்நினைப்பதை அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன். உன் அருளைப்பெறுதற்குத்தடையாக என்னிடம் வஞ்சம் உண்டென்றுஅஞ்சுகின்றேன். திருவலிவலம்மேவியசிவபெருமானே! அதனைப்போக்கி எனக்கு அருள் செய்வாயாக.

குறிப்புரை: உறங்கும்போதும்உண்ணும்போதும்உன்புகழேபேசுகின்றேன். என்னிடம் வஞ்சம் இருப்பதால் ஏற்பாயோமாட்டாயோ என அஞ்சுகின்றேன்என்கின்றது. துஞ்சும்போதும் - தூங்கும்போதும்.  துற்றும்போதும் - உண்ணும்போதும். தஞ்சம் - அடைக்கலத்தானம்.. “ஒடிவந்தெல்லாம்ஒருங்கிய தேவர்கள் -” எனத் தொடங்கும் திருமந்திரக்குறிப்பும் காண்க.

Lord! I will utter only Your fame while sleeping and eating. When the Devaas, not finding refuge anywhere else, sought Your feet, as the last resort and prostrated before You, You gulped the poison. What else could I, Your servitor, do other than thinking of Your compassion! I am afraid perhaps deceit is harboured in my heart and that becomes the barrier to Your grace. Kindly destroy my deception and shower Your grace on me.

Note: Deception: A prayer tends to create a bargain-counter. It is therefore not absolutely pure. It is to this (recondite) impurity reference is made by our Saint.

புரிசடையாய்புண்ணியனேநண்ணலார்மூவெயிலும்
எரியவெய்தாயெம்பெருமானென்றிமையோர்பரவும்
கரியுரியாய்காலகாலாநீலமணிமிடற்று
வரியரவாவந்துநல்காய்வலிவல மேயவனே.6

“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார்முஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும் 
கரிஉரியாய்! காலகாலா?நீலமணிமிடற்று
வரிஅரவா! - வ ந்துநல்காய் - வலிவலம்மேயவனே!

பொருள்:திருவலிவலம்மேவியஇறைவனே! முறுகியசடையைஉடையவனே! புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும்எரியுமாறுஅம்பெய்தவனே என்று தேவர்கள் யானையின் தோலைஅணிந்தவனே! காலனுக்குக்காலனே! நீலமணிபோலும்கண்டத்தையும்வரித்துகட்டப் பெற்ற பாம்பினையும்உடையவனே! என்பால் வந்து அருள் புரிவாயாக.

குறிப்புரை: புண்ணியனே! காலகாலா! நீலகண்டா! வந்து அருள் செய் என்கின்றது. நண்ணலார் - பகைவர். வரி அரவு - வரிந்து கட்டப்பட்ட பாம்பு.

Oh! Lord of Thiru-vali-valam with strands of twisted matted hair! You are an embodiment of virtue and You wear the skin of an elephant. You are hailed by the Devaas as one who with a dart burnt the three hostile citadels. You put to death the god of death (væág áííí). Your throat reflects blue colour like sapphire and You have wound the snake around Your waist. Oh Lord! Do come and bless me.

தாயுநீயேதந்தைநீயேசங்கரனேயடியேன்
ஆயுநின்பாலன்புசெய்வானாதரிக்கின்றதுள்ளம்
ஆயமாயகாயந்தன்னுளைவர்நின்றொன்றலொட்டார்
மாயமேயென்றஞ்சுகின்றேன்வலிவலமேயவனே.  

தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! - அடியேன் 
ஆயும்நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது,உள்ளம் 
ஆயம்ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல்ஒட்டார்; 
மாயமே என்று அஞ்சுகின்றேன் - வலிவலம்மேயவனே!

பொருள்: திருவலிவலம்மேவியஇறைவனே! சங்கரனே! எனக்குத்தாயும்தந்தையும் நீயே ஆவாய். அடியேன் உன்னம்சிவஞானிகளால்ஆய்ந்துணரப்படும்நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப்படைத்தளிக்கப்பட்டஇவ்வுடலிடைப் பொருந்திய ப பணததுஅதும் உன்னைப் பொருந்த வொட்டாமல்தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.

குறிப்புரை: சுற்றமும்மற்றெல்லாமும் நீயே என்கின்றது. ஆயும் – சிவஞானம்கைவரப்பெற்ற ஆன்மாவினால்ஆராயப்படுகின்ற. ஆயம்ஆய - படைக்கப்பெற்ற. ஐவர் - பஞ்சேந்திரியங்கள். ஒன்றல் ஒட்டார் - நின்னொடுபொருந்தவிடார்.

Oh! Lord Sankara! God of Thiru-vali-valam! You are my father and mother too. You are the giver of all pleasure in my life. I am Your servitor. Your ascetics realised Your greatness after prolonged research. My soul longs to intensely love You as the ascetics did. But alas! The five senses created and bestowed on me, which form part of my body restrict me from doing so. I am afraid of this treachery caused by illusion. Oh! Lord Civa protect me from this dissimulation and shower Your grace on me.

Note: Sankara: The name 'Sankara' means 'One who confers weal′. The Five: The pentad of senses.

நீரொடுங்குஞ்செஞ்சடையாய்நின்னுடையபொன்மலையை
வேரொடும்பீழ்ந்தேந்தலுற்றவேந்தனிராவணனைத்
தேரொடும்போய்வீழ்ந்தலறத்திருவிரலாலடர்த்த
வாரொடுங்குங் கொங்கை பங்காவலிவல மேயவனே.8

நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடையபொன்மலையை
வேரோடும்பீழ்ந்துஏந்தல்உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்துஅலறத்,திருவிரலால்அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம்மேயவனே!

பொருள்: தருவலிவலம்எழுந்தருளியசிவபெருமானெ!தருக்கி வந்த கங்கை தன் செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடைஉடையவனே! உன்னுடைய பொன்மயமானகயிலைமலையை நகர்த்து வைக்கத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத்தேரோடும்வீழ்ந்துஅலறுமாறு உன் கால் விரலால் நெரித்தவனே! கச்சு அணிந்த பெருத்த தனங்களைஉடையஉமைபங்கனே! வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை: ஆணவத்தால் மிஞ்சிய இராவணனையும் அடக்கி ஆட்கொண்டஅம்மையப்பா! அடியேனை ஆட்கொள்ள வேண்டும் என்கின்றது. நீர் ஒடுங்கும் - தருக்கி வந்த கங்கைதன் வலி ஒடுங்கும்.  பொன்மலை - அழகிய கயிலைமலை. பீழ்ந்து - பிடுங்கி. வார் ஒடுங்கும் - கச்சு தன் வலியழியும்.

Oh! Lord enshrined in Thiru-vali-valam! You controlled the river Ganges and compressed it in Your ruddy matted hair. The King of Sri Lanka who dared to uproot Your golden mount Kailash was overcome by You when You pressed the mount with Your toe. Falling along with the chariot he yelled. Umaadevi wearing corset over her breasts is Your consort. Oh Lord! Do come and bless me.

ஆதியாயநான்முகனுமாலுமறிவரிய
சோதியானேநீதியில்லேன் சொல்லு வனின்திறமே
ஓதிநாளுமுன்னையேத்துமென்னைவினைய வலம் 
வாதியாமேவந்துநல்காய்வலிவலமேயவனே. ்

ஆதிஆயநான்முகனும்மாலும் அறிவு அரிய 
சோதியானே! நீதிஇல்லேன்சொல்லுவன்,நின் திறமே; 
ஒதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் 
வாதியாமே வந்து நல்காய் - வலிவலம்மேயவனே!

பொருள்: திருவலிவலம்மேவியஇறைவனே! உலகங்களைப்படைத்துக்காத்தலில் ஆதியானவர்களாகியநான்முகனும்,திருமாலும்அறிதற்கரியசோதிப்பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையேசொல்லுகின்றேன்.  நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாயதுன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.

குறிப்புரை: இடைவிடாது உன்னையேதோத்திரிக்கின்றேன். ஆதலால் அடியேனைஅவலவினைகள் அடையாவண்ணம் அருள் செய்க என்கின்றது. வினை அவலம் - வினையும் அதனால் வரும் துன்பமும்.  வாதியாமே - துன்புறுத்தாதபடி.

Oh! Civa! You are the Light beyond the knowledge of the four-faced Brahma and to Thirumaal, the originator of creation and sustenance. Though I lack justice in my actions, I keep on uttering only Your fame. I daily go on reciting Your name and fame and glorifying Your gracefulness. Kindly ensure that karma and its subsequent afflictions do not affect me, Your slave. Oh! Lord Civa! shower Your grace on me.

பொதியிலானேபூவணத்தாய்பொன்திகழுங்கயிலைப்
பதியிலானேபத்தர் சித்தம் பற்றுவிடாதவனே
விதியிலாதார்வெஞ்சமணர்சாக்கியரென்றிவர்கள்
மதியிலாதாரென்செய்வாரோவலிவல மேயவனே.10

பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும்கயிலைப்- 
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே ! 
விதிஇலாதார்வெஞ்சமணர்சாக்கியர் என்று இவர்கள் 
மதிஇலாதார் என் செய்வாரோ? -வலிவலம்மேயவனே!

பொருள்:திருவலிவலம்மேவியஇறைவனே! பொதியமலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே! இருப்பூவணம் என்னும் தலத்தில்உறைபவனே! தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின்சித்தங்களில்எழுந்தருளிஇருப்பவனே! கொடிய சமணர்களும், சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக்காண்பார்களோ?

குறிப்புரை: புறச்சமயிகள்என்செய்வார்களென,அவர்கட்காகஇரங்குகின்றது. பொதியிலான் – பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவன். பொதியிலும்,திருப்பூவணமும்,கயிலையும்,அன்பர் உள்ளமும் அவன் உறையும் இடங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

Oh! Lord of Thiru-vali-valam, You reside on mount Pothigai as well in Thiru-p- puvanam and also on mount Kailash that glitters like gold. You are enshrined also in the hearts of those devotees who venerate You. The fierce Jains and Buddhists are lacking in virtuous deeds. How could these people, lacking in wisdom, benefit by following their religions.

வன்னிகொன்றைமத்தஞ்சூடும்வலிவலமேயவனைப்
பொன்னிநாடன்புகலிவேந்தன்ஞானசம்பந்தன் சொன்ன 
பன்னுபாடல்பத்தும்வல்லார்மெய்த்தவத்தோர்விரும்பும்
மன்னுசோதியீசனோடே மன்னியிருப்பாரே.11

வன்னி,கொன்றை,மத்தம்,சூடும்வலிவலம்மேயவனைப்
பொன்னிநாடன் - புகலி வேந்தன்,ஞானசம்பந்தன் - சொன்ன 
பன்னுபாடல்பத்தும்வல்லார்மெய்த்தவத்தோர்விரும்பும்
மன்னுசோதிஈசனோடே மன்னி இருப்பாரே.

பொருள்: வன்னி,கொன்றை மலர் ஊமத்தம்பூஆகியவற்றைச்சூடும்திருவலிவலத்தில் எழுந்தருளியுள்ளசிவபெருமானை,காவிரி நாட்டில் உள்ள புகலி என்னும் சீகாழிப்பதிக்கு வேந்தனானஞானசம்பந்தன் புகழ்ந்து பாடியுள்ளார். இவைகள்எக்காலத்தும்ஓதத்தக்கன.  இத்தருப்பதிகப்பாடல்கள்பத்தையும்ஓதவல்லவர்கள்உண்மைத்தவமுடையோர் விரும்பும்நிலைபெற்ற சோதி வடிவான ஈசனோடுநிலையெற்றிருப்பர்.

குறிப்புரை: இப்பாடல்பத்தும்வல்லார்இறைவனோடுஒன்றியிருப்பார்என்கின்றது. பொன்னி நாடன் - காவிரி நாட்டில் பிறந்தவன். மன்னுசோதி - நிலைபெற்ற சோதி வடிவானவன்.

These verses have been sung by Gnaanasambandan who has been the Chief of Puhali also known as Seekaazhi, a place in the land of river Cauvery. The King of Puhali has written these verses in praise of the Lord of Thiru-vali-valam who wears in His head flowers like Suma leaves, Cassia and Datura flower . These verses sung by Gnaanasambandan are suitable to be sung at all times. Those who recite these ten verses will with sincere love be in unison with the eternal blaze of god and attain salvation, which is aspired for, by all those who really perform
true penance.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 50th Hymn

திருச்சிற்றம்பலம்

50ஆம் பதிகம் முற்றிற்று

உ. 
சிவமயம்

51.திருச்சோபுரம் 
திருத்தலவரலாறு:

திருச்சோபுரம் என்ற திருத்தலம்நடுநாட்டுத் தலம் ஆகும். சிதம்பரம் - கடலூர் இருப்புப் பாதையில் ஆலப்பாக்கம் இரயில் நிலையத்துக்குக்கிழக்கே உள்ளது. இவ்வழியில்பேருந்துகளிலும் ஆலப்பாக்கம் வரலாம். ஆலப்பாக்கத்திற்குக் கிழக்கே2 கி.மீ. தூரத்தில் சோபுரம் உள்ளது. சாலை வசதி உள்ளது.

இது இப்பொழுது தியாகவல்லி என வழங்குகிறது.,முதல் குலோத்துங்கன் மனைவி மூவருள்பட்டத்துமனைவியாகியதியாகவல்லியால் திருப்பணி செய்யப் பெற்றமையின்இப்பெயர் பெற்றது போலும். அகத்தியர் பூசித்த தலம். சமீபகாலம் வரையில் கடற்கரை மணலால்மூடப்பட்டு மேடாய் இருந்தது. ஒரு துறவி கருப்பக்கிருகத்தின் கல் ஸ்தூபி மணலில்காணப்படத் தோண்டி, ஊரவர்உதவியைக் கொண்டு இக்கோயிலைவெளிப்படுத்தினார். பரிவாரங்களுடன் ஆலயம் முழுவதும் மணலில் இருந்து தோண்டப்பட்டது. சில அறிகுறிகளால்நகரமேபுதையுண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. சுவாமி பெயர் சோபுரநாதர். அம்மை பெயர் சோபுர நாயகி. தீர்த்தம் பரம தீர்த்தம்.

கல்வெட்டு: 
கல்வெட்டுக்கள்5 உள்ளன. இங்கே நர்த்தன கணபதி கோயில் இருந்ததாகவும்,அதற்குச் சுந்தர பாண்டியன் நிலம் அளித்ததாகவும்அறியப்படுகிறது. இராஜராஜ தேவர்,சாரிபுத்த பண்டிதர், முதலாம் மாறவர்மன்சுந்தர பாண்டியன்,கோநேரின்மை கண்டான்,சுந்தர பாண்டிய தேவர் முதலியவர்கள்பெயர்கள்குறிப்பிடப்பெறுகின்றன.

பதிக வரலாறு: 
சம்பந்தர் தமது நான்காம்முறைத்தலயாத்திரையில்தில்லையைவணங்கித்திருத்தினை நகருக்கு எழுந்தருளியிருக்க வேண்டும். அங்கே “வெங்கணானை” என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இவ்வரலாறு பெரிய புராணத்தில்அறியக்கூடவில்லை.

51. THIRU-CHOO-PURAM

THE HISTORY OF THE PLACE

    The sacred city of Thiru-choo-puram is in Nadu Naadu, at 2 km east of the Aalappaakkam railway station, which is in the Chidhambaram Kadaloor railway route. Aalappakkam can also be reached by bus from where there is a road to Chopuram. This place is known as Thiyaagavalli now, perhaps because it was renovated by Thiyagavalli, the queen and one of the three wives of Kuloththungkan I.

    Until recently the temple lay buried in sand, appearing like a mound. A monk accidentally discovered one of the pillars of the sanctum and had the villagers excavate the temple. The entire temple has now been excavated. Indications are that the whole village had been buried. The name of the God is Chopuranaathar and that of the Goddess is Chopuranaayaki. The holy ford is Parama Theerththam. Sage Agasthiyar worshipped here.

    The five inscriptions mention the names of Raajaraaja Thevar, Saaripuththa Pandithar, Maaravarman Sundhara Paandiyan, Konerinmaikandaan and Sundhara Paandiya Thevar. They also reveal the existence of a shrine for dancing Ganapathi for which Sundhara Paandiyan donated land.

திருச்சிற்றம்பலம்

51.திருச்சோபுரம் 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

வெங்கணானையீருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கைபாகம்வைத்துகந்தமாண்பதுஎன்னைகொலாம்
கங்கையோடுதிங்கள்சூடிக்கடிகமழுங்கொன்றைத்
தொங்கலானேதூயநீற்றாய்சோபுர மேயவனே.1

வெங் கண் ஆனை ஈர்உரிவை போர்த்து,விளங்கும் மொழி 
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்புஅதுஎன்னைகொல்ஆம்? - 
கங்கையோடு திங்கள் சூடி,கடி கமழும்கொன்றைத்- 
தொங்கலானே! தூயநீற்றாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: கங்கை நதியுடன்பிறைச்சந்திரனையும் சூடி,மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து,தூய திருநீறு பூசித்திருச்சோபுரத்தில் விளங்கும் சிவபெருமானே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்தி,விளக்கமானமொழிகளைப் பேசும் மலை மங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?

குறிப்புரை: சோபுரம்மேயவனே! யானைத் தோல் போர்த்து,ஒரு பாகத்துஉமையையும் வைத்துக் கொண்டது என்னவோ என்கின்றது. வெங்கண் - கொடுமை. ஈர் உரி - கிழிக்கப் பெற்ற தோல். ஈரமாகிய தோல் என்றுமாம். கடி - மணம். தொங்கல் - மாலை.

Oh! Lord Civa enshrined in Thiru-choo-puram. You have in Your matted hair the river Ganges and the crescent moon closeted together. You wear the fragrant garland of cassia flowers. You have smeared Your body with the holy ashes. You killed the fierce elephant and with its skin You have covered Your body. On the left half of Your body, You have happily accommodated Your consort, the delightful and sweet voiced Umaa Devi. What for You had this glory?

விடையமர்ந்துவெண்மழுவொன்றேந்திவிரிந்திலங்கு
சடையொடுங்கத்தண்புனலைத்தாங்கியதென்னைகொலாம்
கடையுயர்ந்தமும்மதிலுங் காய்ந்தன லுள்ளமுந்தத்
தொடை நெகிழ்ந்தவெஞ்சிலையாய் சோபுரமேயவனே.2

விடை அமர்ந்து,வெண்மழு ஒன்று ஏந்தி,விரிந்து இலங்கு 
சடை ஒடுங்க,தண்புனலைத்தாங்கியதுஎன்னைகொல்ஆம்? - 
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த, 
தொடை நெகிழ்ந்தவெஞ்சிலையாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: வாயில்களாற் சிறந்த முப்புரங்களும்அனலுள்அழுந்துமாறுசினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம்மேவியஇறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையானமழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண்ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத்தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை: முப்புரம்எரியக் கணை தொடுத்தவில்லையுடையஇறைவா,விடையேறி,வெண்மமழுவேந்தி, சடையில்கங்கையைத்தாங்கியதுஎன்னையோஎன்கின்றது. விடை - இடபம். வெண்மழு என்றது இறைவன் திருக்கரத்தில் உள்ள மழுஅலங்காரப்பொருளாதலன்றி யாரையும் அழித்தல் இல்லையாதலின்.  தொடை - அம்பு. நெகிழ்ந்த - செலுத்திய.

Oh! Lord Civa abiding in Thiru-choo-puram. Holding in Your hand the mighty mountain Meru as Your bow, You got angry with the hostile Asuraas roaming in their three citadels with ornamented entrances. You sent an arrow by which all the three cities were destroyed under fire. You ride over the bull, holding a white battle axe in Your hand. You have compressed the river Ganges with its cool waters in Your widespread dangling matted hair. What is the reason for You to keep the Ganges like this?

தீயராயவல்லரக்கர்செந்தழலுள்எழுந்தச்
சாயவெய்துவானவரைத்தாங்கிய தென்னை கொலாம்
பாயும்வெள்ளைஏற்றையேறிப்பாய்புலித்தோலுடுத்த
தூயவெள்ளைநீற்றினானேசோபுரமேயவனே. ட்ட

தீயர்ஆயவல்அரக்கர்செந்தழலுள் (ஸ்) அழுந்தச்
சாய எய்து வானவரைத்தாங்கியதுஎன்னைகொல்ஆம்? - 
பாயும் வெள்ளைஏற்றை ஏறி,பாய் புலித்தோல் உடுத்த 
தூய வெள்ளைநீற்றினானே! சோபுரம்மேயவனே!

பொருள்: பாய்ந்து செல்லும் வெண்ணிறமானவிடையேற்றின்மீது ஏறி,பாயும் புலியினது தோலைஉடுத்துத் தூய வெண்ணீற்றைஅணிந்துள்ளவனே! திருச்சோபுரம்மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள்அழுந்துமாறு கணை எய்து தேவர்களைவாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?

குறிப்புரை: இடபத்திலே ஏறி,புலித்தோல் உடுத்த புண்ணியனே! அரக்கரை அழித்து,வானவரை வாழ்வித்ததுஎன்னையோஎன்கின்றது. இறைமைக் குணம் வேண்டுதல் வேண்டாமைஇலவாய் இருக்க.  சிலரை அழித்து,சிலரைவாழ்விப்பதுபொருந்துமோஎன்பார்க்குக் காரணம் அருள்வதுபோல,தீயராய வல்லரக்கர் என்று திரிபுராதிகள்தீமைதோன்றக் கூறினார். வானவர் என அடைமொழி இன்றிக் கூறியதும்இரங்கத்தக்கார் என்றும் குறிப்புப்பற்றி.

Oh! Lord Civa belonging to Thiru-choo-puram! You ride on the white bull that moves fast galloping. You wear the skin of the charging tiger and have smeared Your body with pure white holy ashes. The nefarious and powerful Asuraas got killed in the blazing fire, and thus saved the Devaas from the onslaught of the Asuraas. What is the reason behind this?

பல்லிலோடுகையிலேந்திப்பல்கடையும்பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கைமேலதானஆதரவென்னைகொலாம்
வில்லை வென்றநுண்புருவவெல்நெடுங்கண்ணியோடுந்
தொல்லை யூழியாகி நின்றாய் சோபுர மேயவனே.4

பல்இல்ஓடு கையில் ஏந்தி,பல்கடையும் பலி தேர்ந்து, 
அல்லல் வாழ்க்கைமேலதுஆன ஆதரவு என்னைகொல்ஆம்? - 
வில்லை வென்ற நுண் புருவவெல்நெடுங்கண்ணியோடும்
தொல்லை ஊழிஆகி நின்றாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: வில்லை வென்றை வளைந்த நுண் புருவத்தையும்,வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும்,பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம்மேவியஇறைவனே! பல் இல்லாத மண்டையோட்டைக் கையிலேந்திப் பலர் இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?

குறிப்புரை: வேல்நெடுங்கண்ணியோடு ஊழி ஊழியாக இருக்கின்ற நீ பிச்சை வாழ்க்கையை விரும்பியது என்னையோஎன்கின்றது. பல் இல்ஒடு - பற்கள் உதிர்ந்து போன மண்டையோடு. கடை - கடை வாயில்.  அல்லல் வாழ்க்கை - துன்ப வாழ்வு.

Oh! Lord Civa of Thiru-choo-puram. You have been in existence for many many hoary eons along with Your consort Umaa Devi. Her crescent like brows excel the bow in beauty and her attractive long and sharp eyes resemble a spear. You carry the human skull deprived of its teeth, receiving alms from many houses. You are inclined to pursue this sort of miserable life of receiving alms from many homes. What is the reason for this?

நாற்றமிக்க கொன்றை துன்றுசெஞ்சடைமேல்மதியம்
ஏற்றமாக வைத்து கந்தகாரணமென்னைகொலாம்
ஊற்றமிக்ககாலன்றன்னையொல்கவுதைத்தருளித்
தோற்றமீறுமாகிநின்றாய்சோபுர மேயவனே.5

நாற்றம் மிக்க கொன்றை துன்றுசெஞ்சடைமேல் மதியம் 
ஏற்றம்ஆக வைத்து உகந்த காரணம் என்னைகொல்ஆம்? - 
ஊற்றம் மிக்க காலன்தன்னைஒல்கஉதைத்துஅருளி, 
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: வலிமை பொருந்திய காலனைஅழியுமாறுஉதைத்தருளி,எல்லாப்பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகிநிற்பவனே! திருச்சோபுரம்மேவியஇறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல்பிறைமதியைஅழகுபெற வைத்து.  மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை: காலனை உதைத்து உலகத்திற்குத் தோற்றமும் ஈறுமாக இருக்கின்ற தேவரீர்,கொன்றை நிறைந்த செஞ்சடைமேல்மதியும் வைத்தது ஏன் என்கின்றது. ஏற்றம் - உயர்வு. உகந்த - மகிழ்ந்த.  மகிழ்ச்சிக்குக் காரணம் பலர் சாபத்தால்இளைத்தஒருவனுக்கு ஏற்றம் அளித்தோமே என்ற மகிழ்ச்சி.  ஊற்றம் - வலிமை. தோற்றம் ஈறுமாகி நின்றாய் என்றது. தான் எல்லாவற்றிற்கும் தோற்றமும் ஈறுமாய் ஆவதன்றித்தனக்குத் தோற்றமும் ஈறும் இல்லாதவன் என்பது குறிப்பு இதனையேமணிவாசகரும் ஆதியனே அந்தம் நடுவாகிஅல்லானே” என்பார்கள்.

Oh! Lord Civa enshrined in Thiru-choo-puram! You caused the death of the mighty god of death (Kaalan). You are the creator and dissolver of all souls in the universe. You have worn the fragrant cassia flowers in abundance on Your ruddy matted hair. Along with this, You have decorated it further with the crescent moon and rejoice over it. What is the reason for this?

கொன்னவின்றமூவிலைவேற்கூர்மழுவாட்படையன்
பொன்னைவென்றகொன்றைமாலைசூடும்பொற்பென்னைகொலாம்
அன்னமன்னமென்னடையாள்பாகமமர்ந்தரைசேர்
துன்னவண்ணஆடையினாய்சோபுர மேயவனே.6

கொல்-நவின்றமூஇலைவேல்,கூர்மழுவாள்படையன், 
பொன்னை வென்ற கொன்றைமாலைசூடும்பொற்புஎன்னைகொல்ஆம்? - 
அன்னம் அன்னமென்நடையாள்பாகம்அமர்ந்து,அரை சேர் 
துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி,இடையில் அழகிய கோவணஆடையைஅணிந்தவனே! திருச்சோபுரம்மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலைவேலையும்தாயமழுவாட் படையையும்உடையவனே! நிறத்தால்பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச்சூடுதற்குரிய காரணம் என்னையோ?

குறிப்புரை: ஒரே மேனியில்பெண்பாதியும்உடையன் ஆதலால் கோவணமும்,பட்டாடையும் உடைய பெருமானே,கொன்றை மாலை சூடுவதென்னைஎன்கின்றது. கொன் - பெருமை. பொற்பு - அழகு.  துன்னஆடையினாய். வண்ண ஆடையினாய்எனத்தனித்தனிப்பிரித்துக்கட்டிக்கோவணமாகிய ஆடையைஉடையவனே,நிறம் பொருந்திய ஆடையைஉடையவனே என உமையொருபாதியனாய் இருப்பதற்கேற்பப் பொருள் உரைக்க.

Oh! Lord! You are the presiding deity in Thiru-choo-puram. You wear a good looking loincloth on Your waist. You have accommodated Your consort Umaa Devi on the left half of Your body. Her steps are as gentle as the swan's. You are armed with the murderous three leaf trident in one hand and with the holy battle axe in another hand. What is the reason, for You to create a liking to wear the garland of cassia flowers which are more glowing than gold.

குற்றமின்மையுண்மைநீயென்றுன்னடியார்பணிவார்
கற்றகேள்விஞானமானகாரணமென்னைகொலாம்
வற்றலாமைவாளரவம்பூண்டையன்வெண்டலையில்
துற்றறானகொள்கையானேசோபுரமேயவனே.

“குற்றம்இன்மை,உண்மை,நீ” என்று உன் அடியார் பணிவார், 
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னைகொல்ஆம்? - 
வற்றல்ஆமை வாள் அரவம் பூண்டு,அயன் வெண்தலையில்- 
துற்றல்ஆனகொள்கையானே! சோபுரம்மேயவனே!

பொருள்: ஊன் வற்றிய ஆமை ஓட்டையும்,ஒளி பொருந்திய பாம்பையும்,அணிகலனாகப் பூண்டு,பிரமனின்வெண்மையானதலையோட்டில்பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம்மேவியஇறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்கு அவர்கள் கற்ற கல்வியும்,கேள்வியும் அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

குறிப்புரை: பிரமகபாலத்துப் பிச்சை ஏற்பவனே,குணமும் நீ,குற்றமும் நீ என்று பணியும்அடியார்கட்குக் கல்வியும்கேள்வியும் அதனால் விளங்கும் ஞானமுமாகத் தேவரீர் விளங்குவதுஎன்னையோஎன்கின்றது.  கற்ற கேள்வி - கேள்வி பயன்படுவது கற்ற பின்னாதலின்கற்றதன்பின் கேட்கப்படும் கேள்வி எனக் குறித்தமை காண்க. வற்றலாமை - ஆமை ஒடு. துற்றலான - உண்ணுதலாகிய.

Oh! Lord Civa! enshrined in Thiru-choo-puram! You have adorned Your body with a garland of tortoise shell, well dried of flesh, along with a dazzling snake. You have made it a principle to eat the food received in Your alms bowl of Brahma's skull.  Your servitors adore You saying thus "Oh! Lord! You are alike perfect and imperfect". You constitute the learning of Your servitors, as well as the fruit of their wisdom. Why do you pose in such differing aspects?

Note: Kelvi: Inter alia, it means interrogation. Through this, clarity is gained. Clarity means certainty and that indeed constitutes wisdom.

விலங்கலொன்றுவெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
குலங்கள்வாழுமூரெரித்த கொள்கை யிதென்னைகொலாம்
இலங்கை மன்னுவாளவுணர்கோனையெழில்விரலால்
துலங்கவூன்றிவைத்துகந்தாய்சோபுர மேயவனே.8

விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு,விறல் அரக்கர்- 
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னைகொல்ஆம்? - 
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்- 
துலங்க ஊன்றி வைத்து உகந்தாய்! சோபுரம்மேயவனே!

பொருள்: இலங்கையில் நிலைபெற்று வாழும்,வாட்போரில் வல்ல அவுணர்தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால்விரலால்நடுங்குமாறுஊன்றிப் பின் அவன் மன்னிப்பு வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம்மேவியஇறைவனே! மேரு மலையைக்கொடியதொருவில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகியஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?

குறிப்புரை: இலங்கை மன்னனைஒருவிரலால்அடர்த்த நீ,மலையைவில்லாகத்தூக்கித் திரிபுரம் எரித்ததுஎன்னையோஎன்கின்றது. விலங்கல் - மேருமலை. அரக்கர் - திரிபுராதிகள்.

Raavanan, the valiant sword fighter, the chief of the Raakshasaas, abides permanently in Sri Lanka. Oh! Lord Civa You once made Raavanan tremble by pressing the top of Your mount Kailash, with Your toe, while he tried to uproot Your abode. Later he regretted and begged for pardon. You felt happy on his singing Saama Gaanam and granted several boons to him. What is the reason for You to destroy by fire the three citadels where the mighty Asuraas lived, by improvising and using the Meru mountain as Your bow?

விடங்கொள்நாகமால்வரையைச்சுற்றிவிரிதிசைநீர்
கடைந்தநஞ்சையுண்டுகந்தகாரணமென்னைகொலாம்
இடந்து மண்ணை யுண்டமாலுமின்மலர்மேலயனுந்
தொடர்ந்து முன்னங்காணமாட்டாச்சோபுரமேயவனே.

விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி,விரிதிசைநீர்
கடைந்தநஞ்சை உண்டு உகந்த காரணம் என்னைகொல்ஆம்? - 
இடந்து மண்ணை உண்டமாலும்,இன் மலர்மேல்அயனும், 
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச்சோபுரம்மேயவனே!

பொருள்: மண்ணுலகைஅகழ்ந்துஉண்டதிருமாலும்,இனிய தாமரை மலர்மேல் விளங்கும்  பிரமனும்,முற்காலத்தேஉன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய்,நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள்விடத்தை உடைய வாசுகி என்னும் பாம்பைமந்தரம் என்னும் பெரிய மலையைச்சுற்றிக் கட்டி,விரிந்த அலைகளை உடைய கடல்நீரைக்கடைந்தபோது,அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை: அயனாலும்மாலாலும்அறியப்படாத நீர் விடம் உண்டு மகிழ்ந்த காரணம் என்னை என்கின்றது. நாகம் - வாசுகி என்னும் பாம்பு. மால் வரை - மந்தர மலை. நஞ்சை உண்டு உகந்த - தேவர்கள்அஞ்சியநஞ்சைத் தாம் உண்டு அவர்களைக்காத்தும்,சாவாமைக்குஏதுவாகியஅமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த. இடந்து - தோண்டி.

Thirumaal who dug deep and swallowed earth, and Brahma who is seated in the enchanting lotus flower, long ago, searched for You in vain. Oh! Lord Civa You are enshrined in Thiru-choo-puram. When Devaas churned the billowing sea of milk using the mountain Meru as the churning rod, and the venomous snake called Vaasuki (a) as the churning rope, poison came out of the sea. Oh! Civa! What is the reason for you to swallow the poison happily?

புத்தரோடுபுன்சமணர்பொய்யுரையேயுரைத்துப்
பித்தராகக்கண்டுகந்தபெற்றிமையென்னைகொலாம்
மத்தயானையீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ்சூடினானேசோபுர மேயவனே.10

புத்தரோடுபுன்சமணர்பொய்உரையே உரைத்து, 
பித்தர்ஆகக் கண்டு உகந்த பெற்றிமைஎன்னைகொல்ஆம்? - 
மத்தயானைஈர்்உரிவை போர்த்து,வளர்சடைமேல்- 
துத்திநாகம்சூடினானே! சோபுரம்மேயவனே!

பொருள்: மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து,நீண்ட சடையின்மேல்புள்ளிகளை உடைய நாகப்பாம்பைச்சூடியவனே!திருச்சோபுரம்மேவிய இறைவனே! புத்தர்களும்,சமணர்களும்பொய்யுரைகளையேபேசிப்பித்தராகத்தரிதலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை: புத்தரும்சமணரும்பொய்யுரைத்துப்பித்தராக்கிய தன்மை என்னையோஎன்கின்றது.  அவர்களுக்கும் ஞானம் அளித்து உயர்த்த வேண்டிய தேவரீர்,இங்ஙனம் பித்தராகக் கண்டது அவர்களுக்கு அதற்கேற்றபரிபாகம்இன்மையாலே என்று உணர வைத்தவாறு. துத்தி - படம்;பொறி.

Oh! Lord Civa! enshrined in Thiru-choo-puram! You killed and peeled of the skin of the exhilarated elephant and covered Your body with it. You have worn in Your long matted hair a speckled snake. What is the reason for Your happiness to see the Buddhists and Jains who always speak lies, and roam about like mad men?

சோலைமிக்கதண்வயல்சூழ்சோபுரமேயவனைச்
சீலமிக்கதொல்புகழார்சிரபுரக்கோன்நலத்தால்
ஞாலமிக்கதண்டமிழால்ஞானசம்பந்தன் சொன்ன 
கோலமிக்கமாலைவல்லார்கூடுவர் வானுலகே.11

சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம்மேயவனை, 
சீலம் மிக்க தொல்புகழ்ஆர்சிரபுரக்கோன்-நலத்தான், 
ஞாலம் மிக்க தண்தமிழால்ஞானசம்பந்தன்-சொன்ன 
கோலம் மிக்க மாலை வல்லார்கூடுவர்,வான்உலகே.

பொருள்: சோலைகள்மிகுந்ததும்,குளிர்ச்சியான வயல்களால்சூழப்பட்டதுமான திருச்சோபுரத்தில்சிவபெருமான்எழுந்தருளியுள்ளார். சிரபுரம் என்ற சீகாழிப்பதியில் நல்லொழுக்கம் மிக்க,பழமையான புகழை உடைய சான்றோர்கள்வாழுகின்றனர்.  இந்தப் பதியின்நன்மைகளையேகருதுபவரும்,தலைவரும் ஆவார் ஞானசம்பந்தன். இவர்,உலகில் மேம்பட்ட அருள்மொழியானதமிழில்அழகுமிக்க இந்த தமிழ் மாலையைப் பாடினார்.  இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள்வானுலகைஅடைவர்.

குறிப்புரை: இந்தத்தமிழ்மாலையைஒதவல்லவர்கள்வானுலகைக்கூடுவர்எனத் திருக்கடைக்காப்பு : அருளுகின்றது. கோலம் - அழகு.

Gnaanasambandan is the chief of Civapuram, where dwell exceedingly virtuous scholars hailing from the families of hoary glory. He always thinks high and does good for others. He sang this hymn in the world renowned Tamil language. Those who can chant this hymn with all sincerity will gain salvation and will reach heaven.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 51st Hymn

திருச்சிற்றம்பலம்

51ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

52. திருநெடுங்களம்
திருத்தலவரலாறு:

திருநெடுங்களம் என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும்.  திருச்சிராப்பள்ளிக்குக்கிழக்கே உள்ளது. பேருந்து வசதி உள்ளது. தஞ்சை - திருச்சி பேருந்து வழியில் துவாக்குடி வந்து அங்கிருந்து வடக்கே செல்ல வேண்டும்.  திருநெட்டான்குளம் என இக்காலத்து வழங்கும். வங்கிய சோழன் பூசித்துப்பேறுபெற்ற தலம். சுவாமி நித்தியசுந்தரர். தேவி ஒப்பிலாநாயகி. தீர்த்தம் சுந்தரதீர்த்தம்.

கல்வெட்டு: 
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்34 உள்ளன. அவை சுந்தர பாண்டியன் காலத்தன மூன்றும்,கரிகாலன் காலத்தது ஒன்றும்,ஸ்ரீவல்லபதேவனது ஒன்றும்,இராஜ கேசரி வர்மன் காலத்தனஒன்பதும், 3ஆம் இராஜராஜன் கல்வெட்டு இரண்டும்,ஹொய்ஸளவீரராமநாததேவரது ஒன்றும்,திரிபுவனவீரதேவனுடையனஇரண்டும்,பரகேசரி வர்மன் என்று மட்டும் குறிப்பன மூன்றும்,விஜயநகரஅரசர்களுடையனஐந்தும்,நாயக்கமன்னரது ஒன்றும் ஏனைய அறியப்படாதனவுமாகஅமைந்தன.

இத்தலம் சுந்தரபாண்டியன் காலத்து பாண்டிய குலபதிவடகரைநாட்டுத்திருநெடுங்களம் என்றும்,மூன்றாம் இராஜராஜ தேவன் காலத்துபாண்டியகுலாசனிவளநாட்டுவடகாவிரிநாட்டுப் பிரமதேயம்தியாகவல்லி சதுர்வேதி மங்கலமான திருநெடுங்களம் என்றும் குறிக்கப்பெறுகிறது.  இறைவன் திருநெடுங்களமுடைய நாயனார்,நெடுங்களமுடையார்,உலகாண்டேசுவரமுடையார்,  களந்தை நாயகர்,திருநெடுங்களமுடையதம்பிரானார். நிழலார் சோலை- வளமுடைய நாயனார், திருநெடுங்களத்து ஆள்வார் என்றெல்லாம் வழங்கப்பெறுகிறார்.

இவ்வரசர்கள் அனைவரும் கோயிலுக்குப்பொன்னும்,நெல்லும்,நிலமும் அளித்த செய்தி அறிவிக்கப்பெறுகின்றன. அரசர்களேயன்றி,அரசருடைய தண்டல் நாயகர்களும்,அரசகாரியம் பார்ப்பவர்களும்,மனைவியார்களும் அறம் செய்துள்ளனர். இராஜகேசரி வர்மன் மூன்றாம் ஆண்டில் உறையூர் உடையான் ஒருவனால்லோகசுந்தரத்திருப்படிமம்பிரதிட்டைசெய்யப்பெற்றது, பிள்ளையார் கணபதி கோயிலுக்கு விளக்கீடுசெய்வித்தான் முதலாம் இராஜகேசரி வர்மன் (கி.பி.985-1013).பித்தளையால் செய்யப்பட்டு பொன்முலாம் பூசப்பெற்றமத்தளி ஒன்றைக் கம்பன் மணியனானவிக்கிரமசிங்கன்மூவேந்த வேளாளன் என்பான் ஸ்ரீபலிஉபயத்திற்காகச் செய்து கொடுத்தான். இக்கோயிலில்முழுக்குடி அரசன் வல்லபதேவன்அரங்க மண்டபம் கட்டிக் கொடுத்தான்.

பதிக வரலாறு: 
திருஎறும்பியூர் முதலிய தலங்களைவணங்கிக் கொண்டு ஆளுடைய பிள்ளையார் திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு “நின்பால் நேசம் செலாவகைத்தடுக்கும்இடும்பை தீர்த்தருள்வாய்'என வேண்டி “மறையுடையாய்” என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

52. THIRU-NEDUNG-KALAM

THE HISTORY OF THE PLACE

    This sacred place is to the south of river Cauvery in Chola Naadu, to the east of Thiruchchiraappalli. It can be reached by bus, proceeding towards north from Thuvaakkudi, which lies in Tiruchi Thanjai bus route. The place is called Thirunettaankulam nowadays.

     The Lord's name is Niththiyasundharar and the Goddess's is Oppilaanaayaki.
The sacred ford is Sundharatheerththam. Vangiya Cholan attained salvation by worshipping here.

    The 34 inscriptions in this temple belong to reigns of various Chola, Paandiya, Hoysala, Vijayanagar and Naayakkar kings. The Lord is described by various names such as Thirunedungkalamudaiyanaayanar, Nedungkalamudaiyaar, Ulagaande- suvaramudaiyaar, Kalandhainaayakar, Thirunedungkalamudaiya Thampiraanaar, Nizhalar Solai Valamudaiyanaayanaar and Thirunedungkalaththu Aalvaar.

    The various kings had gifted gold, land and paddy to the temple. In addition, the high officials of the kings and the queens have also made gifts. The installation of the icon Lokasundharar, lamp endowment for the Pillaiyaar Ganapathy shrine, gift of a gold-plated musical drum for the service known as Sreebali, and the construction of a pavilion are all cited in the inscriptions.

INTRODUCTION TO THE HYMN

The young boy saint adored Civa in Thiruverumpiyur and other shrines. Then he came to Nedungkalam where he sang the following hymn. This patikam is a very significant one in Saivite Literature. Since the staff of the Saraswati Mahal Library, Thanjavur, underwent much hardship in work. They were asked to read and recite this hymn daily. They did it in all sincerity. Their troubles vanished in a short space of time. They then visited the shrine at Nedungkalam in full strength and caused the performance of a great puja to the Lord.

திருச்சிற்றம்பலம்

52.திருநெடுங்களம்

பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

மறையுடையாய்தோலுடையாய்வார்சடைமேல்வளரும்
பிறையுடையாய்பிஞ்ஞகனேயென்றுனைப்பேசினல்லால்
குறையுடையார்குற்றமோராய்கொள்கையினாலுயர்ந்த
நிறையுடையாரிடர்களையாய்நெடுங்களமேயவனே.|

“மறைஉடையாய்! தோல்உடையாய்! வார்சடைமேல் வளரும் 
பிறைஉடையாய்! பிஞ்ஞ்கனே!” என்று உனைப்பேசின்அல்லால், 
குறைஉடையார் குற்றம் ஒராய்! கொள்கையினால் உயர்ந்த 
நிறைஉடையார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களம்மேவியசிவபெருமானே! வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே! தோல் ஆடையைஉடுத்தவனே! நீண்ட சடை மேல் வளரும் இளம்பிறையைச்சூடியவனே! தலைக் கோலம் உடையவனே! என்றவாறுஉன்னைத் தோத்தரிக்கின்றேன். குறையுடையவர்களின் குற்றங்களை நீர் மனதில் கொள்ளாதவர். மனத்தினால் வேறு தெய்வத்தை நினையாதகொள்கையில் மேம்பட்ட மாட்சிமை உடைய அடியவர்களின்துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை: மறையுடையாய் என்பது முதலிய சொல்லித்தோத்திரித்தால் அல்லது குறையுடையார் குற்றத்தை ஆராயாத தேவரீர்,நிறையுடையார்துன்பத்தையும் களைய வேண்டும் என்கின்றது. மறை உடையாய் என்பது முதலியன நிறைந்த மறையையும்,அருவருக்கத்தக்க தோலையும்,சாபம் ஏற்ற மதியையும்ஒப்பமதிக்கும்பெரியோனேஎனப்பின்னர்வரும்'குறையுடையார் குற்றம் ஒராய்'என்பதற்கு இயையஅமைந்திருத்தல் காண்க. ஓராய் - ஆராயாதவனே.

"Oh! Lord Civa - You are having a special decorative head-wear and that is why You are called Pinggnakan ; You are the Lord author of the Vedas; Your garment is made of animal skin; You are holding the growing young crescent moon in Your long matted hair". You are gracious enough to ignore the shortcomings even in the prayers of those who do not hail Thy Name. Oh! Lord Chief of Nedungkalam, kindly annul the troubles of the lofty virtuous people, who think of no god other than Your graceful self.

Note: Pinggnakam: It is a head-ornament. Civa so binds His matted hair that it resembles a crown.
The message of this hymn is that troubles beset the perfect as well as the imperfect. The perfect are so perfect that they do not pray for their own personal welfare. Our young saint prays for them also.

கனைத்தெழுந்த வெண்திரை சூழ்கடலிடைநஞ்சுதன்னைத்
தினைத்தனையாமிடற்றில்வைத்திருந்தியதேவநின்னை
மனத்தகத்தோர்பாடலாடல்பேணியிராப்பகலும்
நினைத்தெழுவாரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.2

கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல்இடைநஞ்சுதன்னைத்
தினைத்தனையாமிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களத்தில்எழுந்தருளியிருக்கும்சிவபெருமானே! ஆரவாரித்து எழுந்த, வெண்மையானஅலைகளால்சூழப்பட்ட கடல் நஞ்சினைத்தினைஅளவாகச் செய்து, கழுத்தில் நிறுத்திய மேம்பட்ட தேவனே! நின்னைமனத்தின்அகத்தே நிறுத்தி,பாடல் ஆடல்களால் போற்றி,இரவும்பகலும்தியானிக்கும்அடியார்களின்துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை: ஆகாத நஞ்சை அழகிய மிடற்றில் வைத்த பெருமானே! அல்லும்பகலும்தியானிக்கும் அடியார் இடர்களைவாயாகஎன்கின்றது. கனைத்து - ஒலித்து. தினைத்தனையா - அதன் பெருமை எல்லாவற்றையும் அடக்கித்தினையளவாகச் செய்து. மிடறு - கழுத்து.

The white waves rose aloft raging in the billowing sea of milk (in the days of yore). While it was churned, venom came out from the sea and was about to destroy things all around. Oh! Supreme Mahadeva You reduced the size of venom to that of a millet seed, swallowed it and held it in Your throat. Oh! Lord entempled in Thiru Nedungkalam! Pray annul the afflictions of Your devotees who holding You in their minds, hail You. Singing Your praise and dancing by day and night from the moment of their waking up.

நின்னடியேவழிபடுவான்நிமலாநினைக்கருத
என்னடியானுயிரைவவ்வேலென்றடற்கூற்றுதைத்த
பொன்னடியேபரவிநாளும்பூவொடுநீர்சுமக்கும்
நின்னடியாரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.3

நின் அடியே வழிபடுவான், -நிமலா! - நினைக் ௧ருத/ 
“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்த
பொன்அடியே பரவி,நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்:திருநெடுங்களம்மேவியசிவபெருமானே! குற்றமற்றவனே! நின் திருவடிகளையே வழிபடும்மார்கண்டேயன்நின்னையேகருதிச் சரண் புகுந்தான். அவனைக் கொல்ல வந்த வலிமை மிக்க எமனைச் சினந்து, “என் அடியானின்உயிரைக்கவராதே என்று உதைத்தீர்.  நினதுபொன்னடிகளையே வழிபட்டு,நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து வழிபடும் நின் அடியார்களின்துன்பங்களை நீக்கி அருள்க.

குறிப்புரை: காலகாலராகியநின்னடியையே கருதும் அடியார்கள்இடரைக்களைகஎன்கின்றது. நிமலா, நின் அடியே வழிபடுவான்நினைக்கருத (நீ)'என் அடியான் உயிரை வவ்வேல்'என்று அடல் கூற்று உதைத்தபொன்னடியே பரவி எனக் கூட்டிப் பொருள் காண்க. சுமக்கும் அடியார் இடர்களையாய் என்றது.  இவர்கள் வினை இடையீடாகஇருந்ததாயினும்சுமைக்குக் கூலி கொடுப்பார்போல,அடியார்கள் பூவும் நீரும்சுமந்தமைக்காகவாவது நீர் அருள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

Oh! Immaculate Lord Civa entempled in Thiru Nedungkalam! Maarkandeya was ever thinking of You, worshipped Your Holy Feet and surrendered to You, when the mighty god of death Yaman (wor) came to snatch his life. You got infuriated at sight of the god of death and shouted "Do not take away the life of my devotee" and kicked him to death. Oh! Civa! pray annul the afflictions of Your devotees who worship You daily by carrying water and offering flowers to Your golden feet that kicked the god of death.

Note: Civa smote Yama for the sake of His devotee Maarkandeya, the eternal lad.

மலைபுரிந்தமன்னவன்றன்மகளையோர்பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்குமவிர்சடையாரூரா
தலைபுரிந்தபலிமகிழ்வாய்தலைவ நின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தாரிடர்களையாய்நெடுங்களமேயவனே.

மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால்மகிழ்ந்தாய்! 
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடைஆரூரா! 
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல்கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களம்எழுந்தருளியசிவபெருமானே! இமவான்மகளாகியபார்வது தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே! அலைகள் வீசும் கங்கை நீரைத்தாங்கிய விரிந்த சடையினை உடைய திருவாரூர் இறைவனே! தலை ஓட்டை விரும்பி ஏந்தி அதன்கண்பலியேற்றுமகிழ்பவனே! தலைவனே! நினது திருவடி நிழலின்கீழ் நிற்பதையேவிரும்பும்அடியவர்களின் துன்பத்தை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை: மலைமகளையொருபாலும்,அலைமகளைத்தலைமேலும் வைத்து மகிழ்ந்த தேவரீர்,நின்னடி மறவாதநிலையுடையார்இடரைக்களைகஎன்கின்றது. புரிந்த - விரும்பிய. நிலைபுரிந்தார் – அநவரத தியானத்தால்நிற்றலைஉடையவர்கள்.

Oh! Lord Civa! enshrined in Thiru Nedungkalam! You are glad to accommodate Your consort Paarvathi Devi, daughter of the king of the Himaalayas on the left portion of Your body. Oh! Lord of Thiruvaaroor! You are holding in Your broad matted hair the billowing river Ganges. You like to hold in Your hands the human skull to get alms and enjoy doing it. You are my chief! Pray! annul the afflictions of Your devotees whose sole desire is to be in unison with You under the shadow of Your Holy Feet.

பாங்கினல்லார்படிமஞ்செய்வார்பாரிடமும்பலிசேர்
தூங்கிநல்லார்பாடலோடுதொழுகழலேவணங்கித்
தாங்கிநில்லாஅன்பினோடுந்தலைவ நின்றாள் நிழற்கீழ்
நீங்கிநில்லாரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.5

பாங்கின்நல்லார்,படிமம் செய்வார்,பாரிடமும் பலி சேர் 
தூங்கி நல்லார்பாடலோடு தொழு கழலே வணங்கி, 
தாங்கி நில்லாஅன்பினோடும் - தலைவ! நின் தாள் நிழல்கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்:திருநெடுங்களம்மேவியசிவபெருமானே! குணங்களில்நல்லவர்களும்,தவ வேடம் தாங்கியவர்களும்,பூமியில் வாழும் மக்களும்,பலருடையஇல்லங்களில் பலிசேர்க்கும் உனது செயல்களில் -எனம்ஒன்றுகின்றனர். நன்மையானவற்றையே செய்யும்  நல்லவர்கள்,பாடல்களோடுதொழத்தக்கஉனதுதிருவடிகளைவணங்குகின்றனர்.  தம்மளவில் பொறுக்க இயலாத பொங்கி வருகின்ற அன்போடு,தலைவனாகிய உனது திருவடி நிழலில் நீங்காமல் எப்போதும் இருக்கின்றனர். அந்த அடியவர்களின் துன்பங்களைக்களைந்துஅருள்வாயாக.

குறிப்புரை: இடையீடின்றியேதிருவடிக்கண்உறைத்து நிற்கும் அன்பர் இடர்களையாய்என்கின்றது.  தலைவ,நெடுங்களமேயவனே,நல்லார் செய்வார் நல்லார்பாடலொடுஅன்பினோடும்நின்தாள்நிழற்கீழ் நீங்கி நில்லார்இடர்களையாய்எனக்கூட்டிப்பொருள் காண்க. பாங்கின் - குணங்களால். படிமம் - தவவேடம். தூங்கி - மனம் ஒன்றி. தாங்கி நில்லாஅன்பினோடும் - தம்மளவில்பொறுக்கலாற்றாது கரை கடந்து வருகின்றஅன்போடும்.

Oh! Lord Civa! entempled in Thiru Nedungkalam! Your devotees excel in virtuous deeds. They are clad as ascetics, and some are ordinary folks of this world. All these good people sing with concentration songs in adoration of Your behaviour of getting alms from various householders. With uncontainable love and devotion, they worship Your Holy Feet. They do not flee from the shadow of Your Holy Feet. Pray, do annul the afflictions of these devotees.

விருத்தனாகிப்பாலனாகிவேதமோர்நான்குணர்ந்து
கருத்தனாகிக்கங்கையாளைக்கமழ்சடைமேற்கரந்தாய்
அருத்தனாயஆதிதேவனடியிணையே பரவும் 
நிருத்தாகீதரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.6

விருத்தன்ஆகி,பாலன்ஆகி,வேதம்ஒர் நான்கு உணர்ந்து, 
கருத்தன்ஆகி,கங்கையாளைக் கமழ் சடைமேல்கரந்தாய்! 
அருத்தன்ஆயஆதிதேவன்அடிஇணையே பரவும் 
நிருத்தர்கீதர் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களம்மேவியசிவபெருமானே மூத்த வேடம் தாங்கியும்,இளமை வடிவம் கொண்டும்இருப்பவனே! வேதங்கள்நான்கையும் நன்கு உணர்ந்த தலைவனே! கங்கை நங்கையை மனம் கமழும்சடைமேல்வைத்திருப்பவனே! கலைஞானங்கள் மெய்ஞானங்களின்பொருளானமுழுமுதற் கடவுளே! உன் திருவடி சேர்ந்து போற்றிப் பாடி, ஆடும் அடியவர்களுடையதுன்பங்களைக்களைந்துஅருள்வாயாக.

குறிப்புரை: விருத்தகுமாரபாலராகிக்கங்கையைச்சடைமேற்கரந்தபெருமானே,நின்னடி பரவும் ஆடல் பாடலை உடைய அடியார்களின்இடரைக்களைவாயாகஎன்கின்றது. கருத்தனாகி - முழுமுதற்கடவுளாகி,அருத்தன் - பொருளானவன். நிருத்தர் - ஆனந்தத்தால் திருத்தம் செய்பவர். கீதம் -பாடுபவர்.

Oh! Lord of Thiru Nedungkalam! At times You disguised Yourself as an elderly man; You disguised Yourself as youngster. You are the Chief well-versed in the four Vedas. In Your fragrant matted hair You have concealed the distinguished goddess of Ganga. You are the scholar erudite, the significance of all arts and spiritual wisdom. Pray! annul the afflictions of Your devotees who adore You and cling to Your feet by dancing and singing Your praise.

கூறுகொண்டாய்மூன்றுமொன்றாக்கூட்டியோர்வெங்கணையால்
மாறுகொண்டார்புரமெரித்தமன்னவனேகொடி.மேல்
ஏறுகொண்டாய்சாந்தமீதென்றெம்பெருமானணிந்த
நீறுகொண்டாரிடர்களையாய்நெடுங்களமேயவனே.

கூறு கொண்டாய்! மூன்றும்ஒன்றாக் கூட்டி ஒர்வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்
ஏறு கொண்டாய்! “சாந்தம் ஈது” என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களம்அமர்ந்திருக்கும்சிவபெருமானே! உமையம்மையைத் திருமேனியின்ஒருபாகமாகக்கொண்டவனே!திருமால் ஆகிய அப்பு,நெருப்பு,காற்று ஆகிய மூன்றையும்ஒன்றாகக் கொண்ட ஒப்பற்ற அம்பினால்,பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்து அழித்தமன்னவனே! கொடிமீதுஇடபத்தைமுத்திரையாகக் கொண்டவனே! மணம் பொருந்திய சந்தனம் இதுவேயாகும் என்று எம்பெருமான் அணிந்துள்ளதிருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின்துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை: திரிபுரம் எரித்த மன்னவனே,விடைக்கொடிஉடையவனே,நீறு அணிந்தஅடியார்களது இடரைக்களைகஎன்கின்றது. கூறுகொண்டாய் - உமாதேவியைஒருபாகத்துக்கொண்டவனே.  மூன்றும்ஒன்றாகக்கூட்டிஒர்வெங்கணையால் - அரி,எரி,கால் என்ற மூன்றையும்ஒன்றாகக்கூட்டிய ஓர் அம்பினாலே,இதனை'எரி காற்று அரி கோல்'என்னும் திருவீழிமிழலைப்பதிகத்தாலும் அறிக. மாறு - பகை. சாந்தம் - சந்தனம்.

Oh! Lord Civa! enshrined in Thiru Nedungkalam with Your consort Umaa Devi as a part of Your body! You are the king who destroyed with fire the three citadels of the recalcitrant Asuraas, by using Your matchless fierce arrow, which is a combination of discus, fire and air. You have the figure of the bull as insignia in Your flag. Oh! Civa my Guru! Pray! annul the afflictions of Your devotees who willingly smear on their body the same holy ashes used by You, considering it as the fragrant sandal paste.

Note: The sons of Taarakaasura, namely Kamalaaksha, Taarakaaksha and
Vidyunmaali, by their prolonged tapas, elicited boons from Brahma by praying thus: "We will move about in our aerial citadels as we like. if we are to be overtaken by death, it should be only at the hour when we meet, once in a thousand years. A single arrow alone should cause our destruction". Brahma grants them, these boons. Thus grown well-nigh invulnerable, they wrought havoc for aeons on end. Eventually Civa burnt their citadels by a single dart, when they stood in single file.

குன்றினுச்சிமேல்விளங்குங்கொடிமதில்சூழிலங்கை
அன்றிநின்றவரக்கர்கோனையருவரைக்கீழடர்த்தாய்
என்றுநல்லவாய்மொழியாலேத்தியிராப்பகலும்
நின்றுநைவாரரிடர்களையாய்நெடுங்களமேயவனே.

“குன்றின்உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை 
அன்றி நின்ற,அரக்கர்கோனைஅருவரைக்கீழ்அடர்த்தாய்! 
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும், 
நின்று நைவார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: திருநெடுங்களம்மேவியசிவபெருமானே! குன்றின்மேல்விளங்குவதும்,கொடிகள் கட்டப்பட்டதும்,மதில்களால்சூழப்பட்டதுமான இலங்கை நகரின் மன்னன் இராவணன், முன்பொருகால் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான். அந்த அரக்கர் தலைவனை அம்மலையின்கீழேஅடர்த்தவனே என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி,இரவும் பகலும் மனம் உருகித்தொழுகின்றஅடியார்களின்துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

குறிப்புரை: இராவணனைஅடர்த்தாய் என்று தோத்திரித்து,இராப்பகலாகஉருகித்தொழுகின்ற அடியார்களின்இடரைக்களைவாயாகஎன்கின்றது. உச்சிமேல் விளங்கும் இலங்கைக்குன்றின் – மேரு மலையில் இருந்து,வாயு தேவனால்பெயர்த்துப்வீழ்த்தப் பெற்ற சிகரங்களுள்ஒன்றாகியஇலங்கைக் குன்றின். அன்றி - கோபித்து;பகைத்து எனலுமாம். வாய்மொழி - தோத்திரம். நைவார் - மனங்களிவார்.

A Top of a hill encircled by flagged walls, Raavanan, king of Sri Lanka and Chief of Asuras abides. Once he tried to uproot mount Kailash but in vain. He got crushed under the mount Kailash when Oh Lord Civa, You pressed the mountain with Your toe. Pray! annul the afflictions of Your suffering devotees who melt in love and adore You day and night, chanting about this eventful action of Yours.

வேழவெண்கொம்பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்குநேடஆங்கோர்சோதியுளாகி நின்றாய் 
கேழல்வெண்கொம்பணிந்தபெம்மான்கேடிலாப்பொன்னடியின்
நீழல்வாழ்வாரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.9

வேழவெண்கொம்புஒசித்தமாலும்,விளங்கிய நான்முகனும், 
சூழ எங்கும் நேட,ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! 
கேழல்வெண்கொம்புஅணிந்தபெம்மான்! கேடுஇலாப் பொன் அடியின்
நீழல்வாழ்வார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: நெடுங்களம்மேவியசிவபெருமானே,குவலயா பீடம் என்ற யானை,கஞ்சன் என்பவனால்திருமாலைக் கொல்ல ஏவப்பட்டது. அந்த யானையின் கொம்புகளை ஒடித்தான் திருமால். அவனும்,புகழ்பெற்ற நான்முகனும்,சூழ்ந்துள்ள இடம் முழுவதும் தங்களைத்தேடியபோது,அவர்களுக்கு இடையில் சோதிப்பிழம்பாய் நின்றாய். பன்றியின் வெண்ணிறமானகொம்பைஅணிகலனாகஅணிந்தபெருமானே! அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நிழலின்கீழ் வாழும் அடியவர்களின்துன்பங்களைக்களைந்தருள்வாயாக.

குறிப்புரை: அயனும்மாலும்தேடச்சோதியாய் நின்ற பெருமானே! நின் திருவடிக்கீழ்வாழும்அடியாரது இடரைக்களைவாயாகஎன்கின்றது. வேழம் - குவலயாபீடம் என்னும் யானை. கண்ணன் கம்சனால் ஏவப்பட்டகுவலயாபீடம் என்னும் பட்டத்து யானையின் கொம்பைஒடித்தார் என்பது வரலாறு. நேட - தேட. கேழல் - பன்றி. அடியின்நீழல்வாழ்வார் - திருவடிச்சார்பேசார்பாகக் கொண்டு மற்றொன்றையும் சாராத அடியார்கள்.

Both Thirumaal who broke the white tusk of an elephant and the four faced Brahma, went in search of You, when You assumed the form of a mighty flame. Oh Lord Civa, of Nedunkalam who wears the white horn of a boar, pray remove the sufferings of Your devotees who dwell in the shadow of Your eternal golden feet.

Note: Mythological events in Puraanaas, recalled in this verse.

வெஞ்சொற்றஞ்சொல்லாக்கிநின்றவேடமில்லாச்சமணும்
தஞ்சமில்லாச்சாக்கியருந்தத்துவமொன்றறியார்
துஞ்சலில்லாவாய்மொழியால்தோத்திரநின்னடியே
நெஞ்சில் வைப்பாரிடர்களையாய்நெடுங்கள மேயவனே.10

வெஞ்சொல்-தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இல்லாச்சமணும்
தஞ்சம் இல்லாச்சாக்கியரும்,தத்துவம் ஒன்று அறியார்; 
துஞ்சல் இல்லா வாய்மொழியால்-தோத்திரம் நின் அடியே 
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் - நெடுங்களம்மேயவனே!

பொருள்: சமணர்கள்,தமது வேடத்திற்குப் பொருந்தாத கொடுஞ்சொற்களையே தம் சொற்களாகக்கொண்டவர்கள். புத்தர்கள்நற்சார்புஇல்லாதவர்கள்சைவசமயம்கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களின் உரையைவிட்டு விடுங்கள்.  நெடுங்களம்மேவியசிவபெருமானே! என்றும் அழியாத புகழுடையவேதங்களோடு தோத்திரங்களால்நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் வைப்பவர்களின் துன்பங்களைப்போக்கியருள்வாயாக.

குறிப்புரை: சமணரும்புத்தரும்பொருளுண்மை அறியாதவர்கள். ஆதலால் அவர்கள் உரையை விட்டு நின்னடியையே நெஞ்சில் வைப்பாரதுஇடர்களைவாய்என்கின்றது. வெம்சொல் - கொடுஞ்சொல்.  சமணர்கள்கொடுஞ்சொல்லையே எப்பொழுதும் பேசி,கொண்ட வேடத்திற்குப்பொருந்தாதிருப்பர்எனக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் - நற்சார்பு. சாக்கியர் - புத்தர். தத்துவம் - பொருளுண்மை. துஞ்சல் இல்லா - இறவாத. வாய்மொழி - வேதம்.

The Jains who employ harsh words in their routine use and behave in a manner inconsistent with their appearance, and also the Buddhists, devoid of good company these two, know nothing about the divine knowledge explained in Saiva theology. Your devotees pay no heed to them. They adore You with the famed eternal Vedas and hold Your Holy Feet close to their hearts. Pray! annul the afflictions of these devotees and bless them.

Note: Vetam: The worshipful form of a devotee.

நீடவல்லவார்சடையான்மேயநெடுங்களத்தைச்
சேடர்வாழுமாமறுகிற்சிரபுரக்கோன்நலத்தால்
நாடவல்லபனுவன்மாலைஞானசம்பந்தன் சொன்ன 
பாடல்பத்தும்பாடவல்லார் பாவம் பறையுமே.11

நீட வல்ல வார்சடையான்மேயநெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகின்சிரபுரக்கோன்நலத்தால்
நாட வல்ல பனுவல் மாலை,ஞானசம்பந்தன் சொன்ன 
பாடல்பத்தும்,பாட வல்லார் பாவம் பறையுமே.

பொருள்: மேலும் மேலும் நீண்டு வளரத்தக்கசடைமுடியைஉடையசிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநெடுங்களம். பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளைக் கொண்ட சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின்தலைவனாகியஞானசம்பந்தன்இத்தலத்தின் இறைவனைப்போற்றிப்பனுவல்மாலை பாடினார். நன்மைப்பொருளால் ஆராய்ந்து உணரத்தக்கஇப்பாடல்கள்பத்தையும்பாடவல்லவர்களின்பாவங்கள்நீங்கும்.

குறிப்புரை: இப்பாடல்பத்தும்பாடவல்லார் பாவம் பறையும்எனப்பயன்கூறுகிறது. நீடவல்லவார் சடையான் - மேலும் வளரத்தக்க நீண்ட சடையை உடையவன். சேடர்_இளைஞர். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பனுவல்போல் பயன் விளைத்தலின் பனுவல் மாலை எனப்பட்டது.

Gnaanasambandan the noble of Sivapuram (another name of Seekaazhi) where many virtuous people live in its big streets, adored and sang the glory of Lord Civan of Thiru Nedungkalam whose matted hair is ever growing long. Those who make a deep study of the implications of these ten verses and chant them, will get rid of their sins.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 52nd Hymn

திருச்சிற்றம்பலம்

52ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

53.திருமுதுகுன்றம் 
திருத்தலவரலாறு: 
12ம் பதிகம் பார்க்க.

பதிக வரலாறு:

திருஎருக்கத்தம்புலியூரினின்றுஎழுந்தருளி பிள்ளையார் திருமுதுகுன்றத்தை அடைந்தார்கள். திருமுதுகுன்றத்தில்எழுந்தருளியிருந்தநாள்களுள் ஒருநாள் “தேவராயும் அசுரராயும்” என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள். இதனைச் சேக்கிழார் பெருமான் “வீழ்ந்த காதலால் பலமுறை விளம்பியே” எனக்குறிப்பிடுகிறார்.

53. THIRU-MUTHU-KUNDRAM

THE HISTORY OF THE PLACE
    See Twelfth Hymn.

INTRODUCTION TO THE HYMN

    Starting from Erukkaththampuliyur, our saint came to Thirumuthukundram where he sang the following hymn.

    This hymn indicates the supremacy of Lord Civan over everything in the cosmos. As Maanickavaachakar says "You are not anything in the Universe, and yet nothing exists in the Universe without You - This fact is a little more explicitly expressed in this hymn.

திருச்சிற்றம்பலம்

53.திருமுதுகுன்றம் 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

தேவராயுமசுரராயுஞ்சித்தர்செழுமறைசேர்
நாவராயு நண்ணு பாரும்விண்ணெரிகால்நீரும்
மேவராயவிரைமலரோன் செங்கண் மாலீசனென்னும்
மூவராயமுதலொருவன்மேயது முதுகுன்றே.1

தேவராயும்,அசுரராயும்,சித்தர்,செழுமறை சேர் 
நாவராயும்,நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர்ஆய,விரைமலரோன்செங்கண்மால் ஈசன் என்னும் 
மூவர்ஆய,முதல்ஒருவன்மேயது - முதுகுன்றே.

பொருள்: தேவர்,அசுரர்,சித்தர்,வளம் மிகுந்த வேதங்களை ஓதும் சான்றோர்கள் ஆகியோர் உயர்மக்களாவர். நாம் வாழும் மண்,ஆகாயம்,நெருப்பு,காற்று,நீர் ஆகியனஐம்பூதங்கள் ஆகும். மணம் மிக்க தாமரை மலர்மேல்வீற்றிருக்கும் நான்முகன்,சிவந்த கண்களை உடைய திருமால்,உருத்திரன் ஆகியவர்கள் மும்மூர்த்திகள். இவர்கள் எல்லாமாகவும்,அவர்களின் தலைவராகவும் இருப்பவர் சிவபெருமான். இவர் எழுந்தருளி இருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: இறைவனதுமுழுமுதற்றன்மையை உணர்த்துகின்றது இது. செழுமறைசேர்நாவர் - அந்தணர். மேவராய - மேவி உள்ளவராகிய. மூவராய முதல் - மூவருமாய் அவர்கள் தலைவருமாய் இருக்கின்ற சிவன்.

குருவருள்: இப்பாடல் இறைவன் எல்லாவற்றிலும் கலந்து ஒன்றாய் இருந்து அருள் செய்யும் திறனைக் குறிக்கிறது.

Lord Civan who is entempled in Thiru-Muthu-kundram is Immanent in all. He is the All Pervasive Supreme. He is Omnipresent in everything. He is in all the following and is also Chief of all these. Devaas, Asuraas, Siddhars (the eighteen classes of supernal beings); the virtuous people of this earth who chant the valuable divine Vedaas; The five elements - Earth, Water, Fire, Wind and Sky; the four-headed Brahma who is seated in the highly fragrant lotus flower; Thirumaal who has reddish eyes; Rudran, the chief dissolver those three demigods known as Mummoorthi. Lord Civa is the Chief of all the above.

Note: Eesan: Guna Rudran. He is one of the Trinity. Civa is beyond the Trinity. He is
Maha Rudra or Gunaa-theetha-Rudran.
The gods are Devas. Civa is Maha Deva.

பற்றுமாகிவானுளோர்க்குப்பல்கதிரோன்மதிபார்
எற்றுநீர்தீக்காலுமேலைவிண்ணியமானனோடு
மற்றுமாதோர்பல்லுயிராய்மாலயனும்மறைகள்
முற்றுமாகிவேறுமானான்மேயது முதுகுன்றே.2

பற்றும் ஆகி வான் உளோரர்க்கு,பல்கதிரோன்,மதி,பார், 
எற்று நீர்,தீ,காலும்,மேலைவிண்,இயமானனோடு, 
மற்று மாது ஓர் பல்உயிர்ஆய்,மால் அயனும்மறைகள்
முற்றும்ஆகி,வேறும்ஆனான்மேயது - முதுகுன்றே.

பொருள்:சிவபெருமான்,தேவர்களுக்குப்பற்றப்படும்பொருளாய் இருப்பவர். பல வண்ணக்கதிர்களை உடைய சூரியன்,சந்திரன்,பூமி,கரையைமோதும் நீர்,நெருப்பு, காற்று,மேலே உள்ள ஆகாயம்,உயிர் முதலியன ஆகி அட்டமூர்த்தங்களாய் இருப்பவர் அவரே. எல்லா உயிர்களாகியும் திருமால்,பிரமன்,வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இருப்பவரும் அவரே. இவைகள்எல்லாவற்றினும்வேறானவராகியும்இருப்பவரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்தலம்திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: அட்டமூர்த்திவடிவாயும்,பல்லுயிராயும்,மால் அயன் மறைகள் எல்லாம் ஆகியும் உள்ளவர்மேவியமுதுகுன்றுஎன்கின்றது. வானுளோர்க்குப்பற்றும் ஆகி – தேவர்களுக்குப்பற்றப்படும் பொருளாகியும். எற்றுநீர் - கரையைமோதுகின்ற நீர். கால் - காற்று. மேலை விண் – மேலதாகிய ஆகாயம். இயமானன் - புருடன். மற்று,மாது,ஓர் இம்மூன்றும் அசை,முற்றும் ஆகி – இவையெல்லாம் ஆகி. வேறும்ஆனான் - இவற்றின் வேறாயும் இருப்பவன்.

Lord Civan is the support for the Devaas. He is known as Attamoorthi. He is immanent in the myriad rayed sun, moon and water which dashes against the earth, fire, wind, sky above the earth and in all souls. He is in all the souls in cosmos. He is one with Thirumaal, Brahma and Vedaas; but also disunited from all these. This Lord Civan is entempled in Thiru-Muthu-kundram.
Note: The message of this verse is this. God is all, but all is not God. The Deity is
omniety. Lord Civa is Supreme, over and above all (c.f. Thiruvaachakam also.)

வாரிமாகம்வைகுதிங்கள்வாளரவஞ்சூடி
நாரிபாகம்நயந்துபூமேல்நான்முகன்றன்றலையில்
சீரிதாகப்பலிகொள் செல்வன் செற்றலுந்தோன்றியதோர்
மூரிநாகத்துரிவைபோர்த்தான்மேயது முதுகுன்றே.3

வாரி,மாகம்வைகு திங்கள்,வாள்அரவம்,சூடி, 
நாரி பாகம் நயந்து,பூமேல்நான்முகன்தன் தலையில் 
சீரிதுஆகப் பலி கொள் செல்வன்;செற்றலும் தோன்றியது ஓர் 
மூரிநாகத்துஉரிவைபோர்த்தான்;மேயது - முதுகுன்றே.

பொருள்: கங்கை,வானகத்தே தங்கும் சந்திரன்,ஒளி பொருந்திய பாம்பு ஆகியவற்றை தன் திருமுடியில்சூடியவர்.உமையம்மையைஒருபாகமாகவிரும்பிஏற்றிருப்பவர்.  தாமரைமலரில்வீற்றிருக்கும்பிரமனதுதலைகளில்ஒன்றைக்கொய்துஅந்தத்தலையில் பலிஏற்கச் செல்பவர். தன்னைச் சினந்து வந்த யானையைக் கொன்று அதன்தோலைப் போர்த்தியவர். இந்தச் சிவபெருமான் எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றமாகும்

குறிப்புரை: கங்கை மதி முதலியன சூடி,உமையொருபாகனாய்,பலி ஏற்றுண்ணும் பரமன் விரும்பும் இடம் முதுகுன்றம்என்கின்றது. வாரி - கங்கை. மாகம் - ஆகாயம். வாள் - ஒளி. நாரி - பெண்; உமையம்மை. செற்றலும் - கோபித்தலும்,மூரி நாகம் - வலிய யானை.

Lord Civan adorns Himself, wearing in His matted hair, the river Ganges, the moon that roams in the sky and the dazzling snake. With all love and affection to His consort Umaa Devi, He accommodated her on the left portion of His body. He snipped one of Brahma's heads, and went around to get alms in that skull; He killed the angry elephant, which charged towards Him with intent to kill. He stripped its skin and covered His body with that skin. This Lord Civan is entempled in Thiru- Muthu- kundram.

பாடுவாருக்கருளுமெந்தைபனிமுதுபெளவமுந்நீர்
நீடுபாருமுழுதுமோடியண்டர்நிலைகெடலும்
நாடுதானுமூடுமோடிஞாலமுநான்முகனும்
ஊடுகாணமூடும்வெள்ளத்துயர்ந்தது முதுகுன்றே.4

பாடுவாருக்குஅருளும் எந்தை - பனி முதுபெளவ-முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும், 
நாடுதானும்ஊடும்ஓடி,ஞாலமும்நான்முகனும்
ஊடு காண,மூடும் வெள்ளத்து உயர்ந்தது - முதுகுன்றே.

பொருள்: தன்னைப் பாடி போற்றுவார்க்குஅருள்செய்யும்எம்தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளியதலம்திருமுதுகுன்றம் ஆகும். குளிர்ந்த பழமையான கடலானது,நீண்ட மண் உலகிலும்;தேவர் உலகிலும் பரவி,அவர்களின் இருப்பிடங்களை அழித்தது. நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடியது. பூமியில் உள்ளாரும்,நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழிதேடும்படி ஊழி வெள்ளமாய் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நின்ற தலம்திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: பாடும் அடியார்க்கருளும் எந்தை எழுந்தருளியுள்ளதுஊழிக்காலத்தும் அழியாத முதுகுன்றே என்கின்றது. பனி முது பெளவம் - குளிர்ந்த தொன்மையான கடல். பார் - பூமி. அண்டர் - தேவர்.  நாடுதானும்ஊடும் ஓடி - நாடுகளிலும்,அவற்றின் இடையிலும் பரந்து. ஊடுகாண - இடைவெளி காண.  ஊழியிலுயர்ந்த குன்று என்றது.

Lord Civan graces those who sing His praise and adore Him. During the great final deluge, water in the very old extensive cool sea spread on the earth, into the world of Devas, destroyed their abodes, gushed into the nook and corner of the entire earth. People on the earth, the four headed Brahma and all the Devass, homeless, ran helter- skelter to save their lives. Even at this stage Thiru-Muthu-kundram was unaffected and stood aloft from the rest of the universe.

வழங்குதிங்கள்வன்னிமத்தமாசுணமீசணவிச்
செழுங்கல் வேந்தன் செல்விகாணத்தேவர்திசைவணங்கத்
தழங்கு மொந்தை தக்கைமிக்கபேய்க்கணம்பூதஞ்சூழ
முழங்கு செந்தீயேந்தியாடிமேயது முதுகுன்றே.5

வழங்கு திங்கள்,வன்னி,மத்தம்,மாசுணம்,மீசுஅணவி, 
செழுங்கல்வேந்தன்செல்வி காண,தேவர் திசை வணங்க, 
தழங்கு மொந்தை,தக்கை,மிக்க பேய்க்கணம் பூதம் சூழ, 
முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது - முதுகுன்றே.

பொருள்: சிவபெருமான்,வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன்,வன்னி இலை,ஊமத்தம்பூ, பாம்பு ஆகியவற்றைத் தன் திருமுடிமீதுநெருக்கமாகச்சூடியிருக்கின்றார். மலையரசன் மகளாகியஉமையம்மை காண,தேவர்கள்எல்லாத்திசையிலும் நின்று அவரை வணங்குகின்றனர். மொந்தை,தக்கை ஆகிய பறைகள் ஒலிக்கின்றன. பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றன. அந்தச் சிவபெருமான் முழங்கும்செந்தீயைக் கையில் ஏந்தியபடி ஆடி அமர்ந்த தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: பாம்பு,மதி முதலியவற்றைச் சூடிக் கொண்டு மலைமகள் காண இறைவன் அடியமர்ந்த இடம் முதுகுன்றம்என்கின்றது. வழங்கு திங்கள் - வானமண்டலத்துஊடறுத்துச் செல்லும் சந்திரன். வன்னி -வன்னிமரத்து இலை. மாசுணம் - பாம்பு,மீசனவி - சிரத்தின்மேற்கலந்து. செழுங்கல் வேந்தன் - வளப்பமானமலையரசன். தழங்கும் - ஒலிக்கின்ற மொந்தை - ஒரு முகப்பறை வகைகளில் ஒன்று.  தக்கை - இருமுகப்பறை வகையில் ஒன்று. உடுக்கையும் ஆம்.

Lord Civa wears in His matted hair, close to each other, the moon that sojourns in the sky, the leaves of the sumaa tree (Prosopis spicigera) and Datura flowers. He dances holding the red hissing and flaming fire, surrounded by Bhuta ghosts and goblins, to the accompaniment of music from instruments known as Monthai, Thakkai. Umaa Devi looks on this dance with awe while the Devas worship Lord Civan from all directions of their world. This Lord Civan is entempled in Thiru-Muthu-kundram.

Note: Monthai: The modern musical instrument called Gatam.

Thakkai: It is a percussion instrument still in vogue in Srirangam Ranganaathar Temple.         There is a Ramayana called "Takkai Ramayanam' which was recited to the beat of Takkai.

சுழிந்தகங்கைதோய்ந்ததிங்கட்டொல்லராநல்விதழி
சழிந்தசென்னிச்சைவவேடந்தான்நினைத்தைம்புலனும்
அழிந்த சிந்தையந்தணாளர்க்கறம்பொருளின்பம்வீடு
மொழிந்தவாயான்முக்கணாதிமேயது முதுகுன்றே.6, 7

சுழிந்த கங்கை,தோய்ந்த திங்கள்,தொல் அரா,நல் இதழி, 
சழிந்தசென்னிசைவவேடம் தான் நினைத்து,ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்குஅறம்பொருள்இன்பம்வீடு
மொழிந்தவாயான்,முக்கண் ஆதி,மேயது - முதுகுன்றே.

பொருள்: சுழிகளோடு கூடிய கங்கை,அதனோடு உறையும் சந்திரன்,பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன அணிந்த நெருங்கிய தலை உச்சியை உடையவன் சிவபெருமான். தாழ் சடை,வெண்ணீறு,தாழ்வடம் முதலிய சைவ முனிவர் வேடத்தோடு திருவடிகளை நினைவில் நிறுத்தி,ஐம்புலன்களால் தோன்றும் எண்ணங்களை முற்றிலும் அழித்தசான்றோர்களுக்கு,அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினன். முக்கண் உடையவன். அந்தச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: கொன்றை,மதி,கங்கை முதலியன அணிந்தசென்னியோடுஅந்தணர்க்குஅருமறைகளை உபதேசித்த இறைவன் மேயதுதிருமுதுகுன்றம்என்கின்றது. கழிந்த - கழிகளோடு கூடிய. தொல் அரா - பழம் பாம்பு இதழி - கொன்றை. சழிந்த - நெருங்கிக்கிடக்கின்றசைவ வேடம் – தாழ்சடை வெண்ணீறு தாழ்வடம் முதலிய முனிவர் வேடத்தோடு. தாள் இணைத்து - கால்களைப்பதுமம் முதலிய ஆசன வகைகள் பொருந்தப் பின்னி. அழிந்த - செயலற்றுப் போன. சென்னி,வாயான்,ஆதி மேயது எனக் கூட்டிப் பொருள் காண்க.

குருவருள்:'கழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அராநல்லிதழி,சழிந்தசென்னிச்சைவ வேடம் தான் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு'என்ற பாடம் புதுவை பிரெஞ்சுஇந்தியக் கலை நிறுவனஆய்வுப்பதிப்பில் காணப்படுகிறது. இது சிறப்பாய் உள்ளது. சைவ வேடம் தாள் நினைந்து'என்பதிலும்சைவவேடத்தையும்தாளையும் நினைத்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர் என்பதும் சிறக்கிறது. தாள் இணைத்து என்பதில்சிறப்புத் தோன்றவில்லை.

The four Supernal aascetics - Sanakar and his three comrades  who have subdued the five senses and mind were attracted by the divine Saiva posture and the lotus like Holy Feet of the three eyed primal Lord Civan and approached and requested Him to instruct them in the intricate knowledge of Virtue, Wealth, Happiness and Salvation. Lord Civan took the form of Dakshinaa Moorthy and imparted the knowledge they wanted. With this graceful form the three-eyed Civan is entempled in Thiru-Muthu-kundram.

மயங்குமாயம்வல்லராகிவானினொடுநீரும்
இயங்குவோருக்கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராகமாநடத்தன்புணாமுலைமாதுமையாள்
முயங்குமார்பன்முனிவரேத்தமேயது முதுகுன்றே.8

மயங்கு மாயம் வல்லர் ஆகி,வானினொடுநீரும்
இயங்குவோருக்குஇறைவன்ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மா நடத்தன்,புணாமுலை மாது உமையாள் 
முயங்கு மார்பன்,முனிவர் ஏத்தமேயது - முதுகுன்றே.

பொருள்: சிவபெருமான் அறிவைமயங்கச் செய்யும் மாயத்தில்வல்லவராய் இருப்பவர். வானிலும்நீரிலும்இயங்குகின்றஅரக்கர்களுக்குத்தலைவனானஇராவணனின் தோளை நெரித்தவர். பாம்பு நடனத்தில்விருப்பமுடையவர். இணைந்த முலையை உடைய உமையம்மையைத்தழுவியமார்பினர். இப்பெருமான்முனிவர்கள் துதிக்க எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: மாயம் வல்லராய்,வானிலும்நீரிலும்இயங்குகின்றஅரக்கர்களுக்குத்தலைவனாகிய இராவணனைஅடக்கியபுஜங்கநடனத்தினராகிய இறைவன் முனிவர்கள் வந்து அடி வணங்க மேயது முதுகுன்றம்என்கின்றது. புயங்கராக மா நடத்தன் - பாம்பு நடனத்தில்விருப்புடையன். புணர் முலை - இணைந்த முலை.

Raavanan, the king of Sri Lanka is the chief of Asuraas. He is an adept in several acts which will confuse one's knowledge. He will travel with ease in the sky and over the water in the sea. Lord Civan once crushed Raavanaa's shoulders by His valour. He is the master of the great snake dance. He who embraced Umaa Devi of closeted breasts; this Lord Civan, hailed by ascetics is gracefully enshrined in Thiru- Muthu- kundram.

ஞாலமுண்டமாலுமற்றைநான்முகனுமறியாக்
கோலமண்டர் சிந்தை கொள்ளாராயினுங்கொய்மலரால்
ஏலஇண்டை கட்டி நாமமிசைய எப்போது மேத்தும்
மூலமுண்டநீற்றர்வாயான்மேயது முதுகுன்றே.9

ஞாலம் உண்டமாலும்மற்றைநான்முகனும்(ம்) அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும்,கொய் மலரால்
ஏலஇண்டை கட்டி,நாமம் இசைய எப்போதும் ஏத்தும் 
மூல முண்டநீற்றர்வாயான்மேயது - முதுகுன்றே.

பொருள்: உலகங்களைஉண்டதிருமாலும்,நான்முகனும் அறிய முடியாத சிவபெருமானது திருக்கோலத்தைத்தேவர்களாலும் அறிய முடியவில்லை. ஆயினும்,நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை வகையான மாலைகள்தொடுத்து,திருவைந்தெழுத்தையே மனம் பொருந்தச்சொல்பவரும்,ஆணவமலத்தை அழிக்கும் திருநீற்றைப்பூசியவர்களின் வாயில் நாமமந்திரமாகஉறைந்திருக்கின்றார். அப்பெருமான்எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை: அயனும்மாலும் அறியாத வடிவைத்தேவர்கள்மனங்கொள்ளமாட்டாராயினும்ஆணவவலி கெடுத்தஅடியார்கள்மலர்மாலை கட்டி வழிபடும் இடம் முதுகுன்றம்என்கின்றது. கோலம் – விண்ணும் பாதலமும்ஊடுருவி நின்ற தீப்பிழம்பாகிய வடிவம். ஏல - பொருந்த;நாமம் - திருவைந்தெழுத்து மூலம் உண்டநீற்றர் - மூலமலமாகியஆணவத்தின்வலிகெடுத்ததிருநீற்றினை உடைய அடியவர்கள். வாயான் - வாயில் நாமமந்திரமாகஉறைபவன்.

Thirumaal who swallowed the worlds and the four headed Brahma could not perceive the holy posture of Lord Civan. The Devaas also could not do this. The devotees of Lord Civan daily gather flowers, string garlands for headwear (L) and for other purposes, chant in all propriety His hallowed name smear their body with the holy ashes which will destroy the three impurities of the soul and with the mystic words chanted wholeheartedly hail Lord Civan. This Lord Civan is entempled in Thiru-Muthu-kundram.

Note: Mulam - The root. Root cause of birth cycles

உறிகொள்கையர்சீவரத்தருண்டுழல்மிண்டர் சொல்லை 
நெறிகளென்னநினைவுறாதேநித்தலுங்கைதொழுமின்
மறிகொள்கையன்வங்கமுந்நீர்ப்பொங்குவிடத்தையுண்ட
முறிகொள்மேனிமங்கைபங்கன்மேயது முதுகுன்றே.10

உறி கொள் கையர்,சீவரத்தர்,உண்டு உழல் மிண்டர் சொல்லை 
நெறிகள் என்ன நினைவு உறாதேநித்தலும்கைதொழுமின்!| 
மறி கொள் கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தைஉண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன்மேயது - முதுகுன்றே.

பொருள்: சமணர்கள்கமண்டலத்தைக்கயிற்றில்கட்டித் தூக்கி வைத்திருப்பவர்கள். புத்தர்கள் காவி ஆடை அணிந்திருப்பவர்கள். அவர்கள் பெருந்தீனி தின்று உடல் வலிமை பெற்று அலைபவர்கள். அவர்களின் சொற்களைக்கேளாதீர்கள். மானைஏந்திய கையினனும்,கப்பல்கள் ஓடும் கடலில் இருந்து பொங்கி எழுந்த விடத்தைஉண்டவனும், தளிர்போன்றமேனியை உடைய உமையம்மையை ஒரு கூறாகஉடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றம் ஆகும். அத்திருத்தலத்தை நாள்தோறும் சென்று வணங்குவீராக.

குறிப்புரை: சமணர் புத்தர் சொற்களைக்கேளாதீர்கள்;இறைவனை நித்தம் தொழுங்கள்; அவ்விறைவன்மேயதுமுதுகுன்றேஎன்கின்றது. உறி - சமணர்கள்குண்டிகை வைத்திருக்கும் கயிற்றுறி.  சீவரம் - மஞ்சளாடை. மிண்டர் - உடல் வலிமை உடையவர். வங்கமுந்நீர் - கப்பலோடுங் கடல்;என்றது கடல் என்ற பொதுமைபற்றி வந்த அடைமொழி. முறி - தளிர்.

The Jains carry their water pot in a sling; the Buddhists dress themselves in red ochre - both lead lives of eating and wandering. Ye companions! do not consider what they say as real knowledge. Lord Civan holds a deer in one of His hands. He swallowed the venom that surged from the sea where merchant ships move now and then. He is concorporated with His consort Umaa Devi whose body is soft as tender leaves. This Lord Civan abides in Thiru-Muthu-kundram. Worship Him in this sacred place.

மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கு முதுகுன்றைப்
பித்தர்வேடம்பெருமையென்னும்பிரமபுரத்தலைவன்
…………….

மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கு முதுகுன்றை, 
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன் 
…………….

பொருள்: தேவர்கள்கணங்கள்பலவும் நிறைந்து செறிந்துவணங்கும்திருமுதுகுன்றப் பெருமானாகியசிவபெருமானை,பித்தர்போலத் தன் வயம்இழுந்து தியானம் செய்யும் தவத்தினரது வேடம் பெருமை தருகிறது. இது பிரமபுரத்தலைவனாகியஞானசம்பந்தனது கருத்தாகும்.

குறிப்புரை: பித்தர் வேடம் பெருமை என்னும் - சிவபோதமிகுதியால்பித்தரைப்போல இருப்பார் வேடம் பெருமை தருவதாகும் என்னும் ... . .

Gnaanasambandan, the chief of Piramaapuram, considers those who roam about as frenzied people without any consciousness of their selves. They feel great and proved of them. The devaas and other celestials come in large numbers to worship the Lord of Thiru-Muthu-kundram.

Note: The eleventh verse in Tamil is incomplete.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 53rd Hymn

|திருச்சிற்றம்பலம்

53ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

54.திருவோத்தூர் 
திருத்தலவரலாறு:

திருவோத்தூர் என்ற திருத்தலம் தொண்டை நாட்டுத் தலம் ஆகும். வடஆற்காடு மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்துகளிலசெல்லலாம்.  இது திருவத்தூர் என வழங்குகிறது. இறைவன் தேவர்களுக்கும்,முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இப்பெயர் பெற்றது. சம்பந்தசுவாமிகள்எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனை: வைத்து வளர்த்தார்.  அவை ஆண் பனையாயின. சமணார்கள்பரிகசித்தனர். அதைக் கண்டு வருந்திச்சுவாமிகளிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி,திருக்கடைக்காப்பில் “குரும்பை ஆண் பனை ஈன்குலைஓத்தூர்” என்று அருளியபோது அவை பெண் பனைகளாயின. ஆலயத்தில் பனை உருவம் பிரதிட்டைசெய்யப்பட்டுப்பூசிக்கப் பெற்று வருகிறது. சிவாலயத்துஉள்ளேயே ஆதிகேசவப் பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. 
சுவாமி வேதநாதர். அம்மை இளமுலை நாயகி. தீர்த்தம் சேயாறு (வேத தீர்த்தம்).

கல்வெட்டு: 
இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள்29 உள்ளன. அவற்றுள்இராஜாதிராஜன், குலோத்துங்கன்,இராஜேந்திரன்,பொத்தப்பிச் சோழன்,முதலாம் இராஜராஜன்,மூன்றாம் இராஜராஜன்,விக்கிரமசோழன் ஆகிய சோழமன்னர்கள்காலத்தனவும்,சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்தனவும்,கோப்பெருஞ்சிங்கன்காலத்தனவும்,இராஷ்டிரகூடகன்னரதேவன் காலத்தனவும் ஆக அமைந்துள்ளன. இறைவன் பெயர் வேதபுரீசுவரர் எனவும்,ஓத்தூர் உடைய நாயனார்,எனவும் வழங்கும். கோயில் வழிபாட்டிற்கும்நிவேதனத்திற்கும்,அருச்சகர்களுக்கும் நிலமளித்தசெய்திகளும்,பூந்தோட்டத்திற்குநிலமளித்தசெய்திகளும்அறிவிக்கப்பெறுகின்றன.  விளக்கிற்காகப்பசுக்கள் வாங்கி விடப்பெற்றமையைத் தெரிவிக்கின்றன. சிறப்பாக, விளையாட்டாகவேட்டைக்குச் சென்ற ஒருவன் எய்த அம்பு குறிதவறி ஒரு மனிதன்மேல்பட்டுவிட, அதற்காகத்திருஓத்தூர்சபையாரைக் கூட்டி,குற்றத்தைக் கூறி,சபை விதித்த வண்ணம் குற்றத்தண்டமாகக் கோயிலுக்கு16 பசுக்களை வாங்கிக் கொடுத்து விளக்கிடச் செய்தான்.  விக்கிரம சோழன் (கி.பி.1118-1135)காலத்து வெள்ளம் புகுந்து விளைச்சல் அழிந்ததால் குடிகளுக்குவரிகட்ட முடியாமல் போக இரண்டாயிரம் குழி நிலத்தை25 காசிற்கும், 4450 குழி புன்செய்யை20 காசிற்கும் கோயிலுக்கு விற்று இறையிலி செய்தான். மூன்றாம் குலோத்துங்கன் பொன் ஆபரணங்கள் அளித்திருக்கின்றான். அதே கோயிலில் சிதம்பரேசுவர ஆலயம் ஒன்று இருப்பதாக அறியப்படுகிறது. கேதாரிநாதர் மடம் என்ற ஒன்று குறிப்பிடப்பெறுகிறது.

பதிக வரலாறு: 
நடுநாட்டுயாத்திரையிலே,சிரபுரவேந்தராகிய பிள்ளையார் திருவண்ணாமலையை வழிபட்டு,திங்கள்முடியார் இனிது அமர்ந்த திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கி எழுந்தருளிஇருக்குங்காலத்து,ஒருநாள் அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். பிள்ளையார் “காரணம் என்னை?”என்று வினாவ,அவர், “அடியேன் இறைவனுக்காக வைத்த பனைகள் எல்லாம் ஆண் பனைகளாய்க்காயாவாயின. அதனைக் கண்ட சமணர்கள்,நீர் வைத்த பனைகள்காய்க்குமோ??என்று ஏளனம் செய்தனர் என்று விண்ணப்பித்துக்கொண்டார். அதனைக் கேட்ட பிள்ளையார்,கோயிலை அடைந்து, “பூத்தேர்ந்தாயன” என்னும் இப்பதிகத்தைத் தொடங்கி முடித்து,பதினொராந்திருப்பாட்டில் “குரும்பையாண்பனையீன்குலைஓத்தூர்” என்று திருக்கடைக்காப்பு அருளியபோதுஅப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. அடியார்கள்களித்தனர்.  வியந்தனர். இதனைக் கண்ட சமணரிற் சிலர் தமது கையில் இருந்த குண்டிகையைக் தகர்ந்தெறிந்து இறைவன் கருணையைப்போற்றிச்சைவராயினா். சிலர் அந்நாட்டை விட்டு அஞ்சி ஓடினார். குலையீன்றஆண்பனைகள் தமது கால எல்லைவரை வாழ்ந்து பிறவி ஒழிந்து சிவத்தைச் சார்ந்தன.

54. THIRU-OOTH-THOOR

THE HISTORY OF THE PLACE

    This sacred place is in Thondai Naadu, near Cheyyaaru in North Aarkkaadu district. It can be reached by bus from Kaanchipuram. This place got its name from the event of the Lord teaching the Vedhaas to the celestials and sages here. Now the place is known as Thiruvaththoor.

    The name of the Lord is Vedhanaathar and that of the Goddess is Ilamulainaayaki. Inscriptions name the Lord as Vedhapureesuvarar and Oththoor Udiaya Naayanaar. The sacred ford is Cheyyaaru (Vedhatheerththam).

There is an interesting legend associated with this temple. A devotee of Siva who was the caretaker of the temple had been growing palm trees in the temple lands. As they matured they proved to be all 'male' palms, incapable of bearing fruit. Certain Jains mocked him on this account. As Saint Thiru-Gnaana-sambandhar was visiting the temple at that time, the frustrated devotee told him of the palm trees. The saint then sang a decad in praise of the Lord and in the last verse of that decad, added, '... kurumbai aanpanai eenkulai Oththoor ...'. At this, the male palms turned into female palms and started bearing fruits. Thus the icon of a palm is installed in the temple and being offered worship.

A shrine for Aadhikesavapperumaal is with the Siva temple.

          The 28 inscriptions in this temple are from the times of many Chola kings and some Paandiyan kings in addition to Kopperunjchingan and Raashtrakoota Kannaradhevan. Most of the information from these pertain to gift of land for temple services, food offerings, flower gardens and grants for priests. They speak of the gift of cows for lamps and of gold ornaments.

An interesting episode from the inscriptions pertains to the case of a man shooting another with an arrow by mistake while hunting playfully. The village assembly of Thiru Oththoor met to consider the case and ruled that the man guilty of the accidental shooting should buy and donate 16 cows for lamp lighting at the temple. During the reign of Vikkirama Cholan flooding ruined the crops and the king sold vast acres of dry land to the temple for a pittance and made that land tax-free.

A Chidhambaresuvara shrine is noted to have been inside the temple and a Kethaarinaathar Matam is also mentioned.

INTRODUCTION TO THE HYMN

         When our Saint arrived at Thiru Ooththoor from Thiruvannaamalai, a devotee of Civa came before him and wept bitterly. When our saint bade him to disclose the reason for his weeping, he said: "I reared palmyra trees for Civa, they proved to be male trees. At their inability to yield, the Jains jeer at me". Hearing this our Saint proceeded to the shrine of Civa and hailed him in song in solemn strain. The last verse declares thus: "Behold, Ooththoor where male palmyra trees yield kurumpais!". At this, profuse bunches of kurumbais appeared in all the trees. Some of the Samanars became Saivites. Others abandoned the town in sheer dread.

திருச்சிற்றம்பலம்

54. திருவோத்தூர்
பண் : பழந்தக்கராகம்

ராகம் : ஆரபி

பூத்தேர்ந்தாயனகொண்டுநின்பொன்னடி
ஏத்தாதாரில்லையெண்ணுங்கால்
ஓத்தூர்மேயவொளிமழுவாளங்கைக்
கூத்தீரும் மகுணங்களே.1

பூத்தேர்ந்துஆயன கொண்டு நின் பொன்அடி
ஏத்தாதார் இல்லை,எண்ணும்கால்- 
ஓத்தூர்மேய ஒளி மழுவாள்அங்கைக்
கூத்தீர்! - உ(ம்)ம குணங்களே.

பொருள்: திரு ஓத்தூரில் அழகிய கையில்ஒளி பொருந்திய மழுவாகியவாளைஏந்தியவராய் எழுந்தருளியிருக்கும்கூத்தராகியசிவபெருமானே! ஆராய்ந்து பார்க்கையில்,பூசைக்குரிய நறுமலர்களைத்தேர்ந்து பறித்தும்,ஏனைய உபகரணங்களைச்சேகரித்துக்கொண்டும்,உம் குணநலன்களைய்போற்றியும்,பொன் போன்ற திருவடிகளைப்போற்றியும்,எல்லோரும் வணங்குகின்றனர்.

குறிப்புரை: ஓத்தூர்மேயகூத்தரே,பூவேந்தி உம் பொன்னடிபோற்றாதார் இல்லை என்கின்றது.  பூதேர்ந்து - வண்டு,ஈக்கடி எச்சம்,முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து,ஆயன - பூசைக்கு வேண்டிய உபகரணங்கள்.

Oh! Lord Civa the dancer! You abide in Oo-th-thoor, holding the battle axe in one of Your hands. When we think of Your greatness, the fact comes to our mind, that there is none who does not adore and worship Your golden feet with selected choice flowers and other adornments.

Note: Ooththoo: Ooththu means Vedas (confer Thirukkural - Ooththu is scriptures). It is Vedapuram. "At Oththoor" says our saint, "there is none that fails to hail Your golden feet...". The hailing includes the recitation of Vedic hymns.

இடையீர்போகாஇளமுலையாளையோர்
புடையீரே புள்ளி மானுரி
உடையீரேயும்மையேத்துதுமோத்தூரச்
சடையீரேயும தாளே.2

இடை ஈர் போகாஇளமுலையாளை ஓர்- 
புடையீரே! புள்ளி மான் உரி 
உடையீரே! உம்மைஏத்துதும் - ஒத்தூர்ச்
சடையீரே! - உமதாளே.

பொருள்: திரு ஓத்தூரில்சடைமுடியோடு விளங்கும் இறைவனானசிவபெருமானே! ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இள முலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்கொண்டவரே! புள்ளிமான் தோலைஆடையாகஅணிந்தவரே! உம்மை வணங்குகிறோம்.

குறிப்புரை: இளமுலையுமையாள்பாகரே,மான்தோல்உடையீரே,உம்மைவணங்குகிறோம்என்கின்றது.  இடையீர்போகாஇளமுலை - இரண்டு முலைகளுக்கும் இடையில் ஈர்க்கு நுழையாதஇளமுலை.  ஈர்க்கிடைபோகாஇளமுலை'என்ற திருவாசகமும்நோக்குக. புடையீர் - பக்கத்துடையவரே!

Oh! Lord Civa! having matted hair! You have accommodated in Your body Your consort Umaa Devi whose breasts are so big and young, that even the rib of a palm leaf cannot pass in between them. You have worn the skin of a spotted deer. We worship Your Holy Feet.

Note: Eerkku: Rib of a palm leaf. The description is "between whose young breasts an eerkku cannot pass". This indeed is a stock comparison. Vide Thiruvaachakam, Potrithiruvakaval, line 34 (Eerkku itai pokka ila mulai).

உள்வேர்போலநொடிமையினார்திறம்
கொள்வீரல்குலோர் கோவணம் 
ஒள்வாழைக்கனிதேன்சொரியோத்தூர்க்
கள்வீரேயும காதலே.3

உள்வேர் போல நொடிமையினார் திறம் 
கொள்வீர்,அல்குல் ஓர் கோவணம்! 
ஒள் வாழைக்கனி தேன் சொரி - ஒத்தூர்க்
கள்வீரே! உம காதலே!

பொருள்: ஒளி சிறந்த வாழைக்கனிகள் தேன் போன்ற சாற்றைச்சொரியும்திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே,உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய்அடியார்களைநினைப்பவரைப்போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

குறிப்புரை: ஓத்தூர்க்கள்ளரே! உம்முடைய காதல் நன்றாயிருக்கிறதுஎன்கின்றது. உள்வேர் போல - நினைப்பீர்போல. உள்வீர் என்பதும் பாடம். நொடிமையினார்திறம் – பொய்யாகப்பேசுபவருடைய தன்மையை. அல்குல் - அரை.

Oh! Lord Civa! You behave like a holdup man! Your way of showing Your attachment to Your devotees is funny indeed! You show Yourself as One who considers devotees as false, and yet accept them in Your fold as sincere devotees. Oh! Lord! You present Yourself wearing the loin cloth in Your waist, and abide in Ooththoor where full ripe bright yellow banana fruits burst and honey drip down. Note: Thief: An endearing description of Civan. A thief acts concealed. The mercy of Civa runs in mystery. He draws His devotees unto Him on the sly.

தோட்டீரேதுத்தியைந்தலைநாகத்தை
ஆட்டீரேயடியார்வினை
ஓட்டீரேயும்மையேத்துதுமோத்தூர்
நாட்டீரேயருள் நல்குமே.4

தோட்டீரே! துத்தி ஐந்தலைநாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை 
ஓட்டீரே! உம்மைஏத்துதும் - ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே!

பொருள்: செங்காந்தட்பூவைஅணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை நாகத்தைஆட்டுபவரே! அடியவர் வினைகளைஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத்துதிக்கின்றோம். அருள்புரிவீராக.

குறிப்புரை: உம்மை ஏத்துவோம்;அருளும்என்கின்றது. தோட்டீர் - செங்காந்தள் பூவை அணிந்தவரே.  துத்தி - படப்பொறி.

Oh! Lord Civa! You wear the superb red lily flower (Gloriosa); You caused the speckled snake to dance; You are the remover of the bad Karmaa of Your devotees You are enshrined in the town of Ooththoor. We adore and worship You.

Note: Naadu: Country / realm.

குழையார்காதீர்கொடுமழுவாட் படை 
உழையாள்வீர்திருவோத்தூர்
பிழையாவண்ணங்கள்பாடிநின்றாடுவார்
அழையாமேயருள் நல்குமே.5

குழை ஆர்காதீர்! கொடுமழுவாள்படை
உழை ஆள்வீர்! திருஓத்தூர்
பிழையாவண்ணங்கள்பாடிநின்று ஆடுவார் 
அழையாமே அருள் நல்குமே!

பொருள்: குழை அணிந்தகாதினைஉடையவரே,கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ளகரத்தில் ஏந்தி ஆள்பவரே,திருவோத்தூரில் பிழை நேராதபடிவண்ணப் பாடல்கள் பல பாடி நின்று ஆடும் அடியார்க்குஅழையாமலே வந்து அருள் நல்குவீராக.

குறிப்புரை: பாடி,ஆடும் அடியார்களுக்கு அவர்கள் அழையாமலே வந்து அருளும்என்கின்றது. உழை - பக்கம். பிழையா - தவறாதபடி. வண்ணங்கள் - தாஅவண்ணம் முதலிய வண்ணப்பாடல்கள்.  அழையாமே நல்கல் முதல்வள்ளல் ஆவார் கடமையென்றுவிண்ணப்பித்தவாறு.

Oh! Lord Civa! You wear the ear jewel called Kuzhai in Your ear. You
hold in one of Your hands the lethal battle axe; Your devotees dance and sing faultless
divine songs in Your praise. Kindly grace them without waiting for their solicitation, as it is Your good faith.

Note: Kuzhai: Male ear ring

மிக்கார் வந்து விரும்பிப்பலியிடத்
தக்கார்தம்மக்களீரென்
றுட்காதாருளரோதிருவோத்தூர்
நக்கீரேயருள் நல்குமே.6

மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று 
உட்காதார்உளரோ? -திருஒத்தூர்
நக்கீரே! - அருள் நல்குமே!

பொருள்: திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும்இறைவரே,நீர் பலிகொள்ளவருங்காலத்து, உம் திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள்மகளிரை அனுப்புதற்குஅஞ்சாததந்ைததாயர்உளரோ?எவ்வாறேனும் ஆக,அவர் தமக்கு அருள் நல்குவீராக.

குறிப்புரை: நீர் பலியேற்கவந்தகாலத்து,தம் மக்களுள்உம்முன் வந்து பலியிடத்தக்கவர் யார் என்று அஞ்சாதார்உளரோ: அருள் நல்கும்என்கின்றது. இறைவன் கொண்ட விடவேடத்தில்ஈடுபட்டவர்கள் மயங்கித் தன்வசம் அழிந்தமையின் அவர் அண்மைக்கண் நடந்து வந்து பிச்சைபோடத்தக்கார் யார் என்று அஞ்சாதார்உளரோ என்று கூறியதாம். நக்கீரே - மகிழ்ந்திருப்பவரே.

Oh! Lord Civa! You happily abide in Thiru Ooththoor. Whenever You come out for alms, is there any parent who can, without fear, bid his daughters come before You to give alms with devotion? (The inner meaning is that no one will do so for fear that His divine beauty and radiance will make their daughters lose their chastity). Whatever it may be, kindly do grant us Your grace.

Note: A hidden reference to the ancient act at Dharukaavanam.

தாதார் கொன்றை தயங்குமுடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதாதாருளரோதிருவோத்தூர்
ஆதீரேயருள் நல்குமே.7

“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை 
நாதா!” என்று நலம் புகழ்ந்து 
ஓதாதார்உளரோ? -திருஓத்தூர்
ஆதீரே! - அருள் நல்குமே!

பொருள்: திருவோத்தூரில்முதற்பொருளாகவிளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்துஉமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர்உளரோ?அருள் நல்குவீராக.

குறிப்புரை: கொன்றை விளங்கு முடியுடைநாதா என்று ஓதார் யார்?அருள் நல்கும்என்கின்றது. தாது -மகரந்தம். ஆதீர் - முதற்பொருளாயுள்ளவரே.

Oh! Primal Lord Civa of Ooththoor! Is there any one who does not adore You and praise Your beauty proclaiming that You are the Primal Lord wearing in Your glittering matted hair pollen-laden cassia flowers? Pray grant us Your grace.

Note: Kurumpai: Tender palmyra fruits.

என்றானிம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார்மும்மதிலெய்தவனோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.8

“என்தான்இம் மலை!'என்ற அரக்கனை
வென்றார் போலும்,விரலினால்; 
“ஒன்றார்மும்மதில்எய்தவன்ஓத்தூர்” 
என்றார்மேல் வினை ஏகுமே.

பொருள்: இக்கயிலை மலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால் விரலால் வென்றவர் சிவபெருமான். அவர்,தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்துஅசுரர்களின் மும்மதில்களை,தனது அம்பால் எய்து அழித்தவர். திருவோத்தூர் என்று,அப்பெருமானது ஊர்ப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில்,சொன்னவர்மேல்படிந்திருக்கும்வினைகள் அகலும்.

குறிப்புரை: ஓத்தூர்என்றார்மேல் உள்ள வினைகெடும்என்கின்றது. என்தான் - எம்மாத்திரம். ஒண்ணார் - பகைவர். என்றார் மேல்வினைஏகும் என்றும்,என்றார்மேல் வினை ஏகும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

Raavanan due to his haughtiness and mighty autocracy once remarked "After all, what is this Kailash mount before my valour". Alas! He was crushed under the mountain by Lord Civa who pressed the mountain with His toe. The three citadels of the recalcitrant Asuraas who were dead against Lord Civa, were destroyed by a shot of an arrow by Civan. This Civan is enshrined in Thiru Ooththoor. Those who pronounce the very name of this town Ooththoor, will find that their bad karma vanishes instantaneously.

நன்றாநான்மறையானொடுமாலுமாய்ச்
சென்றார்போலுந்திசையெலாம்
ஒன்றாயொள்ளெரியாய்மிகவோத்தூர்
நின்றீரேயு மைநேடியே.9

நன்றாநால்மறையானொடுமாலும்ஆய்ச்
சென்றார் போலும்,திசைஎலாம் - 
ஒன்றாய்! உள் எரிஆய் மிக,ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!

பொருள்:திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவராகிய பிரமன்,திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத்தோன்றவும், அறியாராய்திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர். அவர்தம்அறிவுநிலையாதோ?

குறிப்புரை: அயனும்மாலும்உம்மைத் தேடித் திசையெல்லாம்சென்றார் போலும் என்று நகைசெய்கின்றது. நன்றாம்நான்மறையான் என்றது நல்லனசெய்யும்நான்மறைகளை ஓதியும் அவன் அறிந்திலன்எனக்குறிப்பித்தபடி. ஒன்றாயும் - பெருஞ்சோதிப்பொருளாயும்,நேரில் இருந்தும் காணாது திசையெல்லாந்தேடினர்;அவர்கள் அறிவு இருந்தபடி என்னே என்று நகைசெய்தவாறு.

Oh! Lord Civa! abiding in Thiru Ooththoor! Brahma, who is well-versed in chanting the four Vedas which always does good to those who chant, as well as Thirumaal, were unable to identify you when You explicitly stood by their side as a big tall flame of fire. They went on searching for You in all directions of the universe but in vain. They became weary by exertion. How funny is their ignorance?

காரமண்கலிங்கத்துவராடையா்
தேரர் சொல்ல வைதேறன்மின்
ஓரம்பாலெயிலெய்தவனோத்தூர்ச்
சீரவன் கழல் சேர்மினே.10

கார்அமண்,கலிங்கத்துவர்ஆடையா்- 
தேரர்,சொல்அவைதேறன்மின்! 
ஓர அம்பால் எயில்எய்தவன்ஒத்தூர்ச்
சீரவன்,கழல் சேர்மினே!

பொருள்: கரிய நிறத்தவராகியசமணர்களும்,கலிங்கநாட்டுத்துவர்ஏற்றியஆடையை அணிந்தபுத்ததுறவியரும் கூறும் பொய் மொழிகளைநம்பாதீர். முப்புரங்களைஓரம்பினால் எய்து அழித்தவனாகிய,திருவோத்தூரில் விளங்கும் சிறப்புமிக்கசிவபிரானின்கழல்களைச் சேர்வீர்களாக.

குறிப்புரை: ஓரம்பால்எயில்எய்தவன்கழல்சேருங்கள்;புத்தர்,சமணர் பொய்யுரைகேளாதீர்கள் என அறிவுறுத்தவாறு. தேரார் - பெளத்தர். கலிங்கத்துவராடையர் – துவர்ஏற்றியகலிங்கராட்டு ஆடையையுடையபுத்தர்கள். கலிங்கம்என்றாலே ஆடை என்பதாகும். எனவே,துவரேற்றியகலிங்கம் என்பது குறிப்பு.

Ye! Companions! Do not believe the false words of the shady Jains or those of the Buddhists who wear ochre-dyed garments. Adore the glorious feet of Lord Civa who is enshrined in Thiru Ooththoor and who destroyed the three citadels with just one arrow.

குரும்பையாண்பனையீன்குலையோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்புகலியுள்ஞானசம்பந்தன் சொல் 
விரும்புவார் வினைவீடே.11

குரும்பைஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப், 
பெரும் புகலியுள்ஞானசம்பந்தன் சொல் 
விரும்புவார் வினை வீடே.

பொருள்: கொன்றை அரும்பைச்சடைமுடியில் உடைய சிவபெருமான்,திருவோத்தூரில், ஆண்பனைகள்குரும்பைக்குலைகள்ஈனும்அற்புதத்தைச்செய்தருளினார். இப்பெருமானைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயரை உடைய சீகாழிப்பதியில் தோன்றியஞானசம்பந்தன்போற்றிப் பாடினார். இப்பாமாலைபத்தையும்விரும்பும் அன்பர்களின்வினைகள்அழியும்.

குறிப்புரை: ஞானசம்பந்தன்சொல்லிய இவை பத்தும்விரும்புவார்க்கு வினை ஒழியும்என்கின்றது. முதலிரண்டடியிலும் கூறிய கருத்து,பிள்ளையார் பாடல்களைக் கேட்டதும் இறைவனருளால் ஆண்பனைகள் பெண் பணைகளாகக்குலையீன்றனஎன்பதாம்.

Invoking Lord Civan Gnaanasambandan sang this hymn when all the male palmyra trees in the town became female trees and started yielding palmyra fruits, the tender fruits are called Kurumbai . This Lord Civan wearing unblossomed cassia flower in His matter hair is entempled in Thiru Ooththoor. Gnaanasambandan hailing from the highly famed Thiru-p-puhali city (another name for Seekaazhi) adored Lord Civan of Thiru Ooththoor and sang this hymn. Those who admire and chant this hymn will get their bad karma wiped out.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 54th Hymn

திருச்சிற்றம்பலம்
54ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம் 
55.திருமாற்பேறு

திருத்தலவரலாறு:

திருமாற்பேறு என்ற திருத்தலம் தொண்டை நாட்டுத் தலம் ஆகும். செங்கல்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில் காஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து3 மைல் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உள்ளது. இதுவே எளிதானது. இத்தலம்ஹரிசக்ரபுரம் எனவும் வழங்கும். திருமால் ததீசிமுனிவருடன் போர் செய்ய அவர் சக்ரம்வாய்மடிந்து போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம் சங்கரனிடத்து இருப்பதை அறிந்த திருமால் இத்தலத்திற்கு வந்து இறைவனை ஆயிரந்தாமரை கொண்டு அருச்சிக்க,இறைவன் ஒரு நாள் ஒரு மலரைமறைத்துவிட்டார்.  திருமால் அதற்குப்பதிலாகத் தம் கண்ணையிடந்துஅருச்சிக்க,சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஈந்தார். கண் இடந்துஅருச்சித்தமைக்காகபதுமாக்ஷன் என்னும் பெயரையும் கொடுத்தார்.  சோமனும்பூசித்துப்பேறுபெற்ற தலம். இச்செய்தி “மன்னி மாலொடுசோமன்பணிசெயும் மன்னுமாற்பேற்றடிகளை” என்னும் தேவாரத்தாலும், “பெருமாற்றின்படைவேண்டிநற்பூம்புனல் வருமாற்றின் மலர் கொண்டு வழிபடும்கருமாற்கின்னருள் செய்தவன்” என்னும் திருக்குறுந்தொகையாலும்அறியப்படும். இறைவன் பெயர் மால்வணங்கீசர்,மணிகண்டேசர். 
இறைவி கருணை நாயகி,அஞ்சனாக்ஷியம்மை. தீர்த்தம் பாலாறு.

கல்வெட்டு: 
ஜயங்கொண்டசோழமண்டலத்தில் உள்ள காமக் கோட்டத்தின்பகுதியான வல்ல நாட்டில் உள்ள இத்தலம்திருமாற்பேறு என்றும்,திருமால்பூர் என்றும்,இராஜகேசரி வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுக்களில்திருமாற்பேறுடையார்,ஆளுடையார்,உத்தம சோழீசுவரமுடையார், அவிமுக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில்அக்கினீசுவரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்க வேண்டும். இக்கோயிலுக்குக்கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தப்பட்டுநிலங்களைக்கவனிக்கவும்,படையலுக்கு நெல் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயிலில் உள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளியபெருமானடிகள் என்பது. இது தண்டக நாட்டின் மாவட்டமானதாமக்கோட்டத்தின் பிரிவானவல்லநாட்டில்கோவிந்தபதியில் உள்ள கோயிலில் உள்ள நின்றருளிய பெருமான் ஆகும்.  மாற்பேறுடையார்கோயிலைக்கட்டவும்,சுற்று மண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது. உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார் செய்ய சேதிராயன்என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது, உமாபத்தராகியார் (அதி சுந்தரதேவதேவியார) உருவம் தயார் செய்ய சோழன் இராஜகேசரி வர்மனால் நிலம் தானம் செய்யப்பட்டது. மணவாளப் பெருமாள் உருவம் செய்யவும்,ஆபரணம் தயார் செய்யவும் பரகேசரிவர்மன்இராஜேந்திர சோழன் ஆட்சியில்ஆவனசெய்ததைத் தெரிவிக்கின்றது. கோயிலில் அனையமான்பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டி உள்ளான்.  நம்மாழ்வார்திருவாய்மொழியின்வரிகள்கருப்பக்கிருகத்தின்மேற்குச்சுவரில்காணப்படுகின்றன.  மணவில்கோட்டத்தின்பகுதியானமேல்பழுங்கூர் நாட்டில் சிறியரூரில்கோவிந்தபதி ஆழ்வார் கோயில் ஒன்று உள்ளது. தோழனார்தந்தையால்கோவிந்தபதிஆழ்வார்மீது ஒரு திருப்பதிகம் பாடப்பட்டு உள்ளது.

சோழன் இராஜகேசரி வர்மன் காலத்தில் வைஷ்ணவர்களின்18 நாடு குறிக்கப்படுகின்றது.  மேலும் வண்டல் படிந்த நிலங்களைப்பற்றியும்பாலாற்றில் வெள்ளம் வந்ததைப் பற்றியும்,இதற்குச் செப்பனிட1000 கூலிகள்நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும்12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன. மற்றைய கல்வெட்டுக்கள்விளக்கிற்கு,பிராமணஉணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன்,நிலம்,பசுக்கள்,குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

பதிக வரலாறு: 
திருஞானசம்பந்தப் பெருமான்,திருக்கச்சிமேற்றளியை வணங்கி,எழுந்தருளி இருக்கின்ற காலத்து,ஒரு நாள்,பாலியாற்றுத்தென்கரைவழியாகச் சென்று திருமாற்பேறு என்னும் தலத்தை அடைந்தார்கள். முப்புரம் வென்ற முதல்வரை வணங்கி “ஊறியார்தரு'என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இதனை,மொழி மாலை எனச்சிறப்பிப்பர் சேக்கிழார் பெருமான்.

55. THIRU-MAAR-PËRRU

THE HISTORY OF THE PLACE

    This sacred place is in Thondai Naadu with a station in the Kaanchipuram Arakkonam railway line. It is easier to reach it by bus from Kaanchipuram.

    The names of the God are Maalvanangkeesar and Manikandesar and the Goddess is known by the names of Karunainaayaki and Anjchanaakshiyammai. The sacred ford is Paalaaru.

    The place is known also as Harichakrapuram. Some notable information given by the inscriptions at this temple are as follows: Inscriptions refer to the God's name as Thirumaarperudaiyaar, Aaludaiyaar, Uththama Chozheesuramudaiyaar, and Avimuktheesuvaramudaiyaar. It seems that there was once a separate shrine for Akkineesuvarar here, as Kandaraadhiththan had constituted a 'committee of five' (imperungkuzhu) to administer the lands and to ensure supply of paddy to the temple for food offering. Land had been donated by kings and others for making icons of the God. There is also a shrine for Vishnu, whose name is Govindhapadhiyil Ninraruliya Perumaanadikal. Lines from the verses of Nammaazhvaar's Thiruvaaimozhi are found written on the west wall of the sanctum.

    We also learn from the inscriptions of the flood in Paalaaru which resulted in
silting of the lands, and the effort to repair the land with 1000 workers, each having been given 12 'kol' of land in lieu of wages. Gift of gold, land, cows and pots for lamps, Brahmin-feeding and ritual ablutions are recorded in the inscriptions.

INTRODUCTION TO THE HYMN

    From Kacchi Metrali, the godly child arrived in Maarpērru and hailed the Lord in the following hymn. Only the ten verses on Maarpērru have so far been traced.

திருச்சிற்றம்பலம்

55.திருமாற்பேறு 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

ஊறியார்தருநஞ்சினையுண்டுமை
நீறுசேர்திருமேனியர்
சேறுசேர்வயல்தென்திருமாற்பேற்றின்
மாறிலா மணி கண்டரே.1

ஊறி ஆர்தருநஞ்சினை உண்டு,உமை 
நீறு சேர் திருமேனியர் - 
சேறு சேர் வயல் - தென்திருமாற்பேற்றின்
மாறு இலாமணிகண்டரே.

பொருள்:சிவபெருமான் கடலில் ஊறிவந்தநஞ்சினைஉண்டவர்ஆதலால்ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். உமையம்மையோடு கூடிய திருநீறு பூசியதிருமேனியை உடையவர். இவர் சேற்று வளம் நிறைந்த வயல்களால்சூழப்பெற்ற அழகிய திருமாற்பேற்றின்இறைவனாவர்.

குறிப்புரை: நஞ்சத்தை உண்டு,உமையும்,நீறும் சேர்ந்த திருமேனியர்மாற்பேறர்என்கின்றது. ஊறி ஆர் தரு நஞ்சு - கடலில் ஊறி வந்த விடம். உமை நீறு சேர் மேனி எனப் பிரிக்க. மாறிலா - தீது செய்யாத; அருளேவழங்குகின்ற,மணிகண்டர் - நீலகண்டர்.

Lord Civan enshrined in the magnificient Thiru Maarpērru along with His consort Umaa Devi smeared His body with holy ashes. He swallowed the well-soaked poison that came out of the sea. With this His throat dazzled like changeless sapphire. The town Thiru Maarpērru is surrounded by lush fields full of abundant mire. Note: Civa is Manikantan. The meaning of this sacred name is explained in verse 3.

தொடையார்மாமலர்கொண்டிருபோதும்மை
அடைவாரா மடிகள்ளென
மடையார்நீர்மல்குமன்னியமாற்பே
றுடையீரேயுமையுள்கியே.

தொடை ஆர் மா மலர் கொண்டு,இருபோது,உம்மை
அடைவார் ஆம், “அடிகள்(ள்)” என - 
மடை ஆர் நீர் மல்கு மன்னியமாற்பேறு
உடையீரே! - உமை உள்கியே.

பொருள்: சிவபெருமானே! நீவீர் வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் திருமாற்பேற்றைஉமதுஇருப்பிடமாகக்கொண்டிருக்கின்றீர். சிறந்த மாலைகளைத் தொடுத்தும் அதனை ஏந்தியகையினராயும்,காலையிலும்மாலையிலும்உம்மைத் தலைவராக எண்ணி நினைந்து தொழுகின்றஅடியார்கள்உம்மை வந்து அடைகின்றனர்.

குறிப்புரை: மாற்பேறரேஉம்மை எண்ணி அடியார்கள் மாலை முதலியவற்றை ஏந்தி இருபோதும் அடைகின்றார்கள் என்கின்றது. தொடை - மாலை. இருபோதும் - காலையும்மாலையும்.

Oh Lord Civa! You have selected Thiru Maarpērru as Your abode which has abundant water supply in the sluices of the canals. Your devotees always think of You and bear in their minds that You are their Chief. They carry garlands made of choice flowers both day and night and worship at Your Holy Feet.

Note: Even as the sluices are brimming with water, the hearts of the devotees are surcharged with love for Civa.

பையாரும்மரவங்கொடுவாட்டிய
கையானென்றுவணங்குவர்
மையார்நஞ்சுண்டுமாற்பேற்றிருக்கின்ற
ஐயா நின்னடியார்களே.3

“பை ஆரும்அரவம்கொடுஆட்டிய
கையான்'என்று வணங்குவர் - 
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற 
ஐயா! - நின் அடியார்கனே.

பொருள்: கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு,நீலகண்டராய்த்திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்றசிவபெருமானே! உமதுஅடியார்கள்,நீவீர் “படம் பொருந்திய பாம்பை பிடித்து ஆட்டும் கைகளை உடையவர்” என்று சொல்லி வணங்குகின்றனர்.

குறிப்புரை: நின்னடியார்கள்நின்னைஅரவமாட்டியகையான் என்று வணங்குவார்கள்என்கின்றது.  பை - படம். மை - கருமை.

Oh! Lord Civa enshrined in Thiru Maarpērru, You have consumed the black coloured venom and saved the Devas. As a result of this Your throat shines like blue sapphire. Your devotees adore and praise You saying that You have valiant hands, by which You catch hold of the hooded snake and make it dance.

Note: Civa indeed is the true Amrita that vanquishes venom.

சாலமாமலர்கொண்டுசரணென்று
மேலையார்கள்விரும்புவர்
மாலினார் வழிபாடு செய்மாற்பேற்று, 
நீலமார் கண்ட நின்னையே.

சால மா மலர் கொண்டு’சரண்’ என்று, 
மேலையார்கள்விரும்புவர். 
மாலினார்வழிபாடுசெய்மாற்பேற்று
நீலம்ஆர் கண்ட! - நின்னையே.

பொருள்: இத்தலத்தில்திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் இந்த ஊர் திருமாற்பேறுஎனப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளி இருக்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தைஉடையசிவபெருமானே! மேன்மைமிக்கசான்றோர்கள்,அதிகமான நறுமலர்களைக் கொண்டு விருப்பத்தோடுஅருச்சித்து,உம்மையேசரணடைகிறோம் என்று வழிபடுகின்றனர்.

குறிப்புரை: நீலகண்ட,உயர்ந்தோர்கள்மலர்கொண்டுநின்னைவழிபடுவார்கள்என்கின்றது. சால - மிக. மேலையோர்கள் - உயர்ந்தோர்கள்மாலினார் வழிபாடு செய் மாற்பேறு என்றது இத்தலவரலாற்றுக் குறிப்பு.

Thirumaal worshipped Lord Civan whose grace he received at the temple in Thiru Maarperru. For this reason this town carries the name of Thirumaal as Thiru Maarpērru. Here Lord Civan's throat shines like blue sapphire. Very famous scholarly devotees consider You as their only refuge and worship You with dedication by offering large quantities of fragrant choice flowers at Your Holy Feet.

Note: Civa is the sole Refuge of all souls.

மாறிலாமணியேயென்றுவானவர்
ஏறவே மிக ஏத்துவார் 
கூறனேகுலவுந்திருமாற்பேற்றின்
நீறனேயென்றுநி ன்னையே.5

“மாறு இலாமணியே!'என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர் - 
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! - என்று நின்னையே.

பொருள்: திருமாற்பேற்றுச் சிவபெருமான் உமையம்மையைஒருபாகமாகக் கொண்டு திருநீறு பூசியவராய்விளங்குகின்றார். தேவர்கள்,இப்பெருமானை,இந்த ஓளியான மாணிக்கமணிஎத்தகையோர்க்கும்இன்பமே செய்யும் என எப்போதும் வெகுவாகப் புகழ்ந்து போற்றி வழிபடுகின்றனர்.

குறிப்புரை: நின்னைத்தேவர்கள்மாறிலாமணியே என்று ஏத்துவர்என்கின்றது. சில ரத்தினங்களை அணிந்தால் தீமையும் செய்யக்கூடும். இந்தமணிஎத்தகையோர்க்கும்இன்பமேசெய்தலின் மாறிலாமணியே என்றார். ஏறவே - மிக. தாமுயரஎன்றுமாம். மாறிலா - ஒப்பற்ற எனினுமாம். இதற்கு மாறாக ஒன்றுமில்லாத.

Oh! Lord Civa! You have Your consort Umaa Devi in a portion of Your body and are enshrined in Thiru Maarpērru. You have smeared Your body with holy ashes and Your body frame comes into view with radiance. The celestials adore and praise You in abounding, magnificent way saying You are like a peerless Ruby.

உரையாதாரில்லையொன்றுநின்தன்மையைப்
பரவாதாரில்லைநாள்களும்
திரையார்பாலியின்தென்கரைமாற்பேற்
றரையானேயருள் நல்கிடே.6, 7

உரையாதார் இல்லை,ஒன்றும் நின் தன்மையை; 
பரவாதார் இல்லை,நாள்களும்; - 
திரை ஆர்பாலியின்தென்கரைமாற்பேற்று
அரையானே! - அருள் நல்கிடே!

பொருள்: அலைகள் பொருந்திய பாலியாற்றின்தென்கரையில் உள்ள இருமாற்பேற்றின் அரசனாகவீற்றிருக்கும்சிவபெருமானே! நாள்தோறும் நினதுபெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப்பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

குறிப்புரை: திருமாற்பேற்றுஅரசனே,உன்னைப்புகழாதாரும்,பரவாதாரும் இல்லை என்கின்றது.  இத்தலம்பாலியாற்றுத்தென்கரையது என்பது குறிக்கப்பெறுகின்றது.

Oh! Sovereign Lord Civa! You are enshrined in Thiru Maarperru on the southern bank of the billowing river Paali. There is none who does not extol Your great dignity. There is none who does not propagate daily Your grandeur. Pray! grant us Your grace. Note: The day unspent in praise of Civa is indeed the day that is unlived.

அரசளிக்கும்மரக்கனவன்றனை
உரைகெடுத்தவனொல்கிட
வரமிகுத்தவெம்மாற்பேற்றடிகளைப்
பரவிடக்கெடும் பாவமே.8

அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து,அவன் ஒல்கிட
வரம் மிகுத்தஎம்மாற்பேற்றுஅடிகளைப்
பரவிடக்கெடும்,பாவமே.

பொருள்: எமதுதிருமாற்பேற்றுச் சிவபெருமான்,இலங்கை அரசனானஇராவணனின் புகழை மங்கச் செய்தவர். பின்னால்,அவன்தன்பிழையை உணர்ந்து மன்னித்தருள வேண்டியபோது,அவனுக்கு வரங்கள்பலவற்றையும்அளித்தருளியவர். இப்பெருமானின் திருவடிகளைப்போற்றிட நம் பாவம் நீங்கும்.

குறிப்புரை: இராவணன் வலிகெடுத்துவரமளித்தஇறைவனைப்பரவப் பாவம் கெடும்என்கின்றது.  உரை - புகழ். ஒல்கிட - பணிய.

Lord Civan did away the name and fame of Raavanan, the king of Sri Lanka for his misdeeds. Later when he repented for his folly and begged for pardon, Civa granted him many boons and graced him. Those who adore His Holy Feet and worship Him who is enshrined in Thiru Maarperru will get their sins washed off.

இருவர் தேவருந்தேடித்திரிந்தினி
ஒருவராலறிவொண்ணிலன்
மருவுநீள்கழல்மாற்பேற்றடிகளைப் ் 
பரவுவார் வினை பாறுமே.

இருவர்தேவரும் தேடித் திரிந்து,இனி 
ஒருவரால் அறிவு ஒண்ணிலன். 
மருவுநீள்கழல்மாற்பேற்றுஅடிகளைப்
பரவுவார் வினை பாறுமே.

பொருள்: திருமால்,பிரமன் ஆகிய இருவரும் அடிமுடியைத் தேடித் திரிந்த போதும், ஒருவராலும் அறிய இயலாத இயல்பினன். இத்தகைய இயல்பினை உடைய திருமாற்பேற்றுச்சிவபெருமானின்விரிந்ததிருவடிகளைப்போற்றித்துதுப்பவரின் வினைகள் சிதறி அழியும்.

குறிப்புரை: இறைவன் அடிகளைப்பரவுவார்வினைசிதறும்என்கின்றது. தேவர் இருவர் – அயனும் மாலும். இருவர் தேடியும் ஒருவராலும் அறிய முடியாதவன் என்பது கருத்து.

Thirumaal as well Brahma - did their best and went all around in quest of the Holy Feet of Lord Civan but in vain. He could not be reached or realised by anyone.  Those who adore and worship Civan's ever grand Holy Feet will get rid of the effects of their bad karma.

Note: The two Devas are Vishnu and Brahma.

தூசுபோர்த்துழல்வார்கையில்துற்றணும்
நீசர்தம்முரைகொள்ளெலும்
தேசமல்கியதென்திருமாற்பேற்றின்
ஈசனென்றெடுத்தேத்துமே.

தாசு போர்த்து உழல்வார்,கையில்-துற்றஉணும்
நீசர்தம் உரை கொள்ளெலும்! 
“தேசம் மல்கியதென்திருமாற்பேற்றின்
ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!

பொருள்: ஆடையைஉடம்பில் போர்த்து அலைபவரும்,கைகளில் உணவை ஏற்று உண்ணும் உடம்பில் போர்த்து அலைபவரும்,கைகளில் உணவை ஏற்று உண்ணும் இயல்புடைய இழிந்த வர்களான புத்தர் மற்றும் சமணர்களின் சொற்களை உண்மை என்று ஏற்காதீர்கள்.ஒளி நிறைந்த அழகிய திருமாற்பேற்றின்ஈசனானசிவபெருமானைப்புகழ்ந்துபோற்றுங்கள்.

குறிப்புரை: சமணர் புத்தர் சழக்குரைகொள்ளாதீர்; திருமாற்பேற்றீசன் என்று ஏத்தும் என்கின்றது.  தூசு - ஆடை. துற்று - உணவு. நீசர் - இழிந்தவர். கொள்ளெலும் - கொள்ளாதீர்கள். இது அருவழக்கு. தேசம் - ஒளி.

Ye companions! do not concede the false sermons of the Buddhists who wander all around, and that of the ignoble Samanars who receive alms in their cupped hands and eat. Hail and adore Civa as the true Lord enshrined in the famed and graceful temple in Thiru Maarpērru.

மன்னிமாலொடுசோமன்பணிசெயும்
மன்னுமாற்பேற்றடிகளை
மன்னுகாழியுள்ஞானசம்பந்தன்சொல்
பன்னவே வினை பாறுமே.11

மன்னி மாலொடுசோமன் பணி செயும்
மன்னுமாற்பேற்றுஅடிகளை
மன்னுகாழியுள்ஞானசம்பந்தன் சொல் 
பன்னவே,வினை பாறுமே.

பொருள்: திருமாலும்சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபடும்நிலைபேறுடைய திருமாற்பேற்றுள்விளங்குபவர்சிவபெருமான். நிலைத்த காழிமாநகரில்தோன்றிய ஞானசம்பந்தன்இப்பெருமானைப்போற்றிப் பாடினார். இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் தறி அழியும்.

குறிப்புரை: இத்தலம்மாலும்,மதியும்வணங்கியதலமாதலின்இத்தலத்திறைவனை வழிபட வினைகள் சிதறும்என்கின்றது. சோமன் - சந்திரன். பன்ன - சொல்ல.

Those who recite this hymn of Gnaanasambandan who hails from Seekaazhi which exists from time immemorial, on Lord Civan enshrined in the ever existing Thiru Maarperru will get the evil effects arising out of their karma, destroyed. This Lord in Thiru Maarperru was served well and worshipped both by Thirumaal and the moon.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 55th Hymn

திருச்சிற்றம்பலம் 
55ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

56.திருப்பாற்றுறை

திருத்தலவரலாறு:

திருப்பாற்றுறை என்ற திருத்தலம்சோழவளநாட்டுக் காவிரி வடகரைத் தலம் ஆகும். திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் பேருந்தில் ஏறி,பனையபுரம் என்ற ஊரில் இறங்கி,வடக்கு நோக்கி வரவேண்டும். இத்தலத்துப்போந்தமார்க்கண்டேய முனிவர் சிவபூசைக்குப் பால் இல்லாமையால்வருந்தியபோது,சிவபெருமான் அருளினால் பால் பெருகியது.  ஆதலால் இப்பெயர்எய்தியது. கொள்ளிடநதியின்தென்கரையில் உள்ளது. இறைவன் பெயர் திருமூலநாதர்,மூலநாதேசுவார். இறைவியின் பெயர் மோகநாயகி,மேகலாம்பிகை. தீர்த்தம் திருக்குளம். இடம் திருவானைக்காவிலிருந்து கிழக்கே8 கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்சமயம் திருப்பாலைத்துறை என வழங்கப்படுகிறது.

கல்வெட்டு: 
இத்தலத்தைப் பற்றி அரசியலாரால்படியெடுக்கப்பட்டகல்வெட்டுக்கள்பதினாறு உள்ளன.  அவை முதற் பராந்தகன்பரகேசரிவர்மனானவிக்கிரம சோழன்,இராஜராஜன்,இராஜேந்திரசோழ தேவன் காலத்தன. அவற்றால் இத்தலம்கொள்ளிடத்துத்தென்கரைநாட்டுப்பிரமதேயமான உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்துத்திருப்பால்துறை என விக்கிரம சோழன் காலத்துக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இறைவன் திருப்பால்துறைமகாதேவர் என்றும் திருப்பால்துறை நாயனார் என்றும் திருப்பால்துறை உடையார் என்றும் வழங்கப்படுகிறார். கல்வெட்டுக்குறிப்பாளர் ஆதிமூலேசுவரர் என்று அழைக்கிறார். தலம் திருப்பாலைத்துறை என இக்காலத்துவழங்குகிறது.  கோயிலுக்கண்மையில்திருநாவுக்கரசர்திருமடமும் ஆண்டார் எம்பிரானார் மடம் எனப்பெரிய லிங்கியசந்தானத்துமடமும் திருவானைக்கா திருஞானசம்பந்தர்மடமும்நாற்பத்தெண்ணாயிரவர் திருமடமும்இருந்தனவாகக்குறிக்கப்பட்டு உள்ளன. அவற்றிற்கு அரசாகள் நிலம் வழங்கிய செய்தியும்குறிக்கப்படுகின்றன. ஏனைய! கல்வெட்டுக்கள்திருக்கோயில்விளக்கிற்காகநிலமும் பசுவும் ஆடும் விட்ட செய்திகள் அறிவிப்பன. இவையன்றி,கோயிலுக்கு வடபக்கத்தில் காக்கும் நாயகன்மடம் என்ற ஒன்று இருந்ததாகவும் அதற்கு மும்முடிச்சோழமங்கலத்துச் சபையார் நிலம் அளித்ததாகவும் தெரிகிறது. திருப்பனம்பூதூர்பரமேசுவாருக்குஅரிகுலகேசரிதேவரால் உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து நிலம் விட்ட செய்தியும்அறியப்படுகிறது.

பதிக வரலாறு: 
திருத்தவத்துறையைவணங்கிப்பிறதலங்களையும்வணங்கத்திருவுளம் பற்றிய பிள்ளையார்,திருப்பாற்றுறையை அடைந்தார்கள்.  அத்தலத்துஎழுந்தருளியுள்ளஏறுயர்ந்த பெருமானைவணங்கிக் “காரார் கொன்றை” என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.  இப்பதிகத்தைஅருளுகின்றகாலத்துப்பிள்ளையாரின் திருவுள்ளம் சன்மார்க்கநெறிக்கண்நாயக நாயகித்தன்மையில்ஈடுபடுவதாயிற்று. தலைவியாகியதன்னுள்ளத்தில் தலைவன் உருவன்றி வேறொன்றும்தோன்றாத நிலையில்,ஊடியும்பிரிந்தும்நுகரும் இன்ப நிலைகள் தோன்ற இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

56. THIRUP-PAAT-TURAI

THE HISTORY OF THE PLACE

      The sacred city of Thirup-paat-turai is to the north of river Cauvery in Chola Naadu. To reach this place one has to get on the bus from Thiruchchiraappalli going to Kallani, get off at the village Panaiyapuram and go towards the north. It is on the south bank of river Kollidam and is located about 8 km east of Thiruvaanaikka. The name comes from the story that a miracle of flowing milk occurred here when Sage Maarkkandeyar grieved at the lack of availability of milk to offer to the Lord of this temple. Nowadays the place is called Thiruppaalaiththurai.

      The God is known as Thirumoolanaathar or Moolanaathesuvarar and the Goddess as Mohanaayaki or Mekalaambikai. The sacred ford is Thirukkulam.

      There are sixteen inscriptions about this temple. These are from the times of Paraanthakan I to Raajendhira Cholan. It is known from them that there once were four matams near the temples: Thirunaavukkarasar Matam, Aandaar Empiraanaar Matam or Periya Lingkiya Santhaanaththu Matam, Thiruvaanaikka Thirujnaana-sambandhar Matam and the Matam of the 48 thousands. Kings had given land grants to these Matams. In addition, it seems there was another Matam known as Kaakkum Naayakkan Matam to the north of the temple, for which the village assembly of Mummudichchola Mangkalam had gifted lands. Other inscriptions speak of gifts of land, cows and sheep for lamps.

INTRODUCTION TO THE HYMN

     It is from Thirutthavatthurai our saint arrived in Thirupppatturai. Gnaanasambandar was absorbed in the path of wisdom when he started singing this hymn. He contemplated on himself as partner servitor of the Supreme Lord Civan. This is called Naayaki Naayakan Bhaavam. In this stage the mind of Gnaanasambandar is fully absorbed in the Lord and realises nothing other than the Supreme as his/her Lord.

திருச்சிற்றம்பலம்

56.திருப்பாற்றுறை 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

காரார் கொன்றை கலந்த முடியினார்
சீரார் சிந்தை செலச் செய்தார் 
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆராராதிமுதல்வரே.

கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், 
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் - 
பாரார் நாளும் பரவிய பாற்றுறை - 
யார்,ஆர்ஆதிமுதல்வரே.

பொருள்: திருப்பாற்றுறையில்உறையும் ஆதி முதல்வனான சிவபெருமான் கார்காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலை சூடியதிருமுடியினராகவிளங்குகின்றார். உலக மக்கள் நாள்தோறும் இங்கு வந்து வழிபடுகின்றனர். இவர்,தெவிட்டாத,அன்பு கனிந்த,நிறைவான நம் சிந்தையைத்தம்மிடமேசெல்லச் செய்தார்.

குறிப்புரை: திருஞானசம்பந்தப் பிள்ளையார் தம்மைப்பெண்ணாக்கி,தலைவனாகத்திருப்பாற்றுறைத் திருமூலநாதரைப்பாவித்து ஈடுபட்டு,சிறந்த சிந்தை தம்மிடமேசெல்லச்செய்தார்என்கின்றார். கார் ஆர் கொன்றை - கார்காலத்துக் கொன்றை. சிந்தை செலச் செய்தார். அடியார்கள்சிந்தையைத்தம்மிடமே செல்லச் செய்தார். ஆரார் - தெவிட்டாதவர். ஆதி முதல்வர் என்றது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர்பெயரைக் குறிப்பது.

The primal Lord Civan wears in His head cassia flower blooming in the rainy season. He draws the minds of glorious folks towards Him. He abides in Thiruppaatturai and is hailed by devotees from all over the world.

Note: He who is the Primal Lord is also the One who is the End. St. Meikandaar says “Antam Aadi enmanaar pulavar"

நல்லாரும்மவர்தீயரெனப்படும்
சொல்லார்நன்மலர்சூடினார்
பல்லார்வெண்டலைச்செல்வரெம்பாற்றுறை ் 
எல்லாருந்தொழுமீசரே.

நல்லாரும்(ம்) அவர்;தீயர்எனப்படும்
சொல்லார்;நன்மலர்சூடினார்; 
பல்ஆர்வெண்தலைச்செல்வர் - எம்பாற்றுறை
'எல்லாரும் தொழும்ஈசரே.

பொருள்: எல்லாராலும்தொழப்படும்எம்ஈசனாகிய சிவபெருமான் திருப்பாற்றுறையில் உறைகின்றார். அவர் பற்கள் நீங்காதிருந்தவெண்மையான தலை ஓட்டை அணிந்த செல்வந்தர். அவர் நல்லவர்.  கையில் தீயை ஏந்து இருப்பதால் தீயர் எனவும் போற்றப்படுபவர். நிறைந்த நல்ல மலர் மாலையைச்சூடியவர்.

குறிப்புரை: இவர் நல்லவரும்ஆவர்;தீயர் எனவும் சொல்லப்பெறுவர்;ஆயினும் எனது சொன்மலரைச் சூடினார்என்கின்றது. தீயர் - கையில் தீயையுடையவர். சொல் ஆர்நன் மலர் - சொல்லாகிய நிறைந்து நல்ல மலர்கள்;என்றது,தலைவி பேசுவன யாவும் அவன் புகழேயாதல் தெரிவித்தது. எல்லாரும் தொழும் - பரிபாகமுடையவர்அஃதில்லாதஉலகவர் யாவரும் வணங்கும்.

Lord Civan is the most considerate one. He holds fire in one of His hands. He wears fresh unspoiled flowers in His head. He is our resplendent Lord abiding in Thiruppaatturai. He wears a skull in which the teeth are still showing. He is the Supreme Lord adored by all.

Note: He is the Good One. He alone is the Good One. His goodness is absolute and eternal.

விண்ணார் திங்கள் விளங்குநுதலினா்
எண்ணார்வந்தெனெழில்கொண்டார்
பண்ணார்வண்டினம்பாடல்செய்பாற்றுறை
உள்நாள் நாளும் முறைவரே. ப4

விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர், 
எண்ணார் வந்து,என் எழில் கொண்டார் - 
பண் ஆர்வண்டுஇனம்பாடல்செய்பாற்றுறை - 
யுள்நாள்நாளும்உறைவரே.

பொருள்: இயற்கையில்பண்ணின் இசை போன்றுவண்டினங்கள்முரலிக்கொண்டிருக்கும் திருப்பாற்றுறையில்எக்காலத்திலும்உறைபவர் சிவபெருமான். இவர்,தவழும் பிறைச் சந்திரன் விளங்கும்திருமுடியினர்ஆவர். இவர் என் மனதின்எண்ணத்தில் இருந்து என் எழில் நலம் அனைத்தையும் கவர்ந்து கொண்டார்.

குறிப்புரை: திருமூலநாதர்ஆராயாதே வந்து என்னழகெல்லாவற்றையும்கவர்ந்தார்என்கின்றது.  எண்ணார் - எண்ணத்தில் இருப்பவர். இது உறுப்பு நலனழிதல் என்னும் மெய்ப்பாடு. பாற்றுறையுள் நாள்நாளும்உறைவர்எனப் பிரித்துப் பொருள் காண்க.

Lord Civan's forehead is dazzling by the brightness of the crescent moon of the He abides forever in He invaded my heart and coveted my beauty. Thiruppaatturai, where bees hum. Their noise resembles the songs sung in musical tone.

Note: Bees make honey. Honey is symbolic of moksha.

பூவுந் திங்கள் புனைந்தமுடியினா்
ஏவினல்லாரெயிலெய்தார்
பாவந்தீர்புனல்மல்கியபாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.

பூவும் திங்கள் புனைந்தமுடியினர், 
ஏவின்அல்லார்எயில் எய்தார் - 
பாவம் தீர் புனல் மல்கியபாற்றுறை, 
ஒ! என் சிந்தை ஒருவரே.

பொருள்: சிவபெருமான் மலர்களையும்பிறைமதியையும் தரித்த திருமுடியினர்.  பகைவராய் வந்த அசுரர்களின்முப்புரங்களை தனது ஒரே கணையால்அழித்தவர்.  பாவங்களைப்போக்கும்தீர்த்தங்கள்நிறைந்ததிருப்பாற்றுறை இறைவன் ஒருவரே.  என் சிந்தை முழுவதையும் ஆட்கொண்டு இருப்பவர்.

குறிப்புரை: அம்பால் அடையார் புரம் எய்தபாற்றுறைநாதனே என் சிந்தைக்கண் உள்ள ஒருவர் என்கின்றது. ஏவின் - அம்பால். அல்லார் - பகைவர். ஓ என்பது வினாப்பொருளின்கண்ணது.

Lord Civan wears the crescent moon on His sacred head along with flowers. He destroyed by a single dart, the three citadels of the hostile Asuras. He abides in Thiruppaatturai. By His grace devotees get rid of their sins. A dip in the sacred waters of Paatturai removes sin. Lo! He alone kills my mind, He, the unparalleled One.

மாகந்தோய்மதிசூடிமகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணுமுடையவர்பாற்றுறை
நாகம் பூண்டநயவரே.

மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து,எனது 
ஆகம்பொன்நிறம்ஆக்கினார் - 
பாகம் பெண்ணும் உடையவர்,பாற்றுறை
நாகம் பூண்டநயவரே.

பொருள்: சிவபெருமான் தன்னுடைய ஒரு பாதியில் பெண்ணை உடையவர். நாகத்தை அணிகலனாகக் கொண்ட நலமுடையவர். வானகத்தேதோயும்பிறைமதியைமுடியிற்சூடி, மகிழ்ந்து வந்து,எனது உடலைப்பொன்னிறமாக்கினார். பசலை பூக்கச்செய்தவராவர்.

குறிப்புரை: தன்னுடம்பில்ஒருபாதியில் பெண்ணை உடைய பெருமான் என்னுடைய மார்பைப் பொன்னிறமாக்கினார் என்று பிரிவால்வருந்திய தலைவி பசந்தமையை அறிவிக்கின்றது. மாகம் - ஆகாயம். ஆகம் - மார்பு. நயவர் - நலமுடையவர்.

Lord Civan's consort forms a part of His body. He wears the snake as His jewellery. He abides in Thiruppaatturai. He has the crescent moon on His head, which crawls over in the sky. With joyful heart He approached me and created love-sickness in me which results in my complexion turning out to be golden.

Note: The sallow hue is symbolic of (conjugal) separation.

போதுபொன்திகழ்கொன்றைபுனைமுடி
நாதாவந்தென்நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும்விகிர்தரே. ௦

போதுபொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்து,என் நலம் கொண்டார் - 
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஒதும்விகிர்தரே.

பொருள்: சிவபிரானது தொண்டர்கள் தம்திருவடிகளைப்போற்றத்திருப்பாற்றுறையுள் வீற்றிருக்கின்றார். அவர் வேதங்களைஅருளியவிகிர்தர். அலரும்பருவத்து உள்ள அரும்புகளைக் கொண்ட,பொன்னிறம் திகழும் கொன்றை மலர்களைத்தரித்துள்ள திருமுடியினர்.   இந்தத்தலைவனானசிவபிரானாரே என்பால் விரும்பி வந்து என் அழகினைக்கவர்ந்தவராவார்.

குறிப்புரை: கொன்றை புனைந்தநாதர் வந்து என் நலங்கொண்டார்என்கின்றது.

Lord Civan abides in Thiruppaatturai. Devotees adore His Holy Feet. He is the author of the Vedaas. He is God as different from the world . He wears on His holy head blooming gold coloured kondrai flowers. Lord Civan is my chief who approached me with desire, and snatched away my pleasing physical brilliance.

Note: Vikirthan is the one who is different from others.

வாடல் வெண்டலை சூடினார்மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம்பண்செயும்பாற்றுறை
ஆடல் நாகமசைத்தாரே.

வாடல்வெண்தலைசூடினர்,மால்விடை
கோடல்செய்தகுறிப்பினார் - 
பாடல் வண்டுஇனம்பண்செயும்பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.

பொருள்: பண் இசை போன்ற பாடல்களை முரலுகின்றவண்டினங்கள் நிறைந்த திருப்பாற்றுறையில் சிவபெருமான் ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் தன் திருமேனியில் பல இடங்களிலும் கட்டி உள்ளார். உலர்ந்த வெண்மையானதலைஓடுகளைமாலையாகச் சூடியுள்ளார். பெரிய இடபத்தின் மேல் ஏறிவந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் கொள்கையினை உடையவர் ஆயினார்.

குறிப்புரை: ஆடும் அரவைஅணிந்தபாற்றுறைநாதர்விடையேறிப்பிரிதலைக் கருதினார் என்கின்றது.  வாடல் வெண்தலை - உலர்ந்த தலை. மால்விடைகோடல் செய்த குறிப்பினார் - பெரிய இடபத்தைக் கொள்ளுதலைச் செய்த குறிப்பினை உடையவர். என்றது ஊர்தியாகியவிடையைக் கொள்ளுதல் என்பது தலைவன் பிரிவு கருதியதாம்.

Lord Civan abides in Thiruppaatturai where bees hum in musical notes. He wears in many places of His holy body, the cobra which is known for dexterous dance. He puts on white dried skulls as garland in His body. He rode on the big bull and approached me with intention to snatch away my beauty.

Note: The snake is symbolic of Kundalini Yoga.

வெவ்வமேனியராய் வெள்ளை நீற்றினா்
எவ்வஞ்செய்தெனெழில்கொண்டார்
பவ்வநஞ்சடைகண்டரெம்பாற்றுறை
மவ்வல்சூடியமைந்தரே.

வெவ்வமேனியராய்,வெள்ளை நீற்றினர்; 
எவ்வம் செய்து,என் எழில் கொண்டார்; 
பவ்வநஞ்சு அடை கண்டர் - எம்பாற்றுறை
மவ்வல்சூடியமைந்தரே.

பொருள்: திருப்பாற்றுறைஇறைவனான சிவபெருமான் கடல் நஞ்சைக்கண்டத்தில் அடக்கியவர். முல்லை மலர் சூடியமைந்தர். வெம்மையோடு கூடிய மேனியை உடையவர்.  திருவெண்ணீறுஅணிந்தவர். என் எழிலைக்கவர்ந்துப் பின் எனக்குப்பிரிவுத்துன்பத்தைத் தந்தவர்ஆவர்.

குறிப்புரை: முல்லை சூடியஇறைவர்பிரிவுத் துன்பத்தை எனக்குப் பெரிதாக்கி எனது அழகைக் கவர்ந்தார்என்கின்றது. வெவ்வமேனியர் - வெம்மையோடு கூடிய மேனியை உடையவர். எவ்வம் செய்து -துன்புறுத்தி. பவ்வம் நஞ்சு - கடல் நஞ்சு. மவ்வல் - முல்லை.

Lord Civan's body blazes bright. He smears His body with white ashes. He holds in His throat the oceanic venom. He is the male who wears the November flower (Jasminum trichotomum). He approached me and snatched away my prettiness, which later caused in me love sickness.

ஏனமன்னமுமானவருக்கெரி
ஆனவண்ணத்தெமண்ணலார்
பானலம்மலர்விம்மியபாற்றுறை
வானவெண் பிறை மைந்தரே.

ஏனம் அன்னமும்ஆனவருக் எரி 
ஆன வண்ணத்துஎம்அண்ணலார் - 
பானல்அம்மலர்விம்மியபாற்றுறை
வானவெண்பிறைமைந்தரே.

பொருள்: நீலோற்பவ மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் உள்ள தலம் திருப்பாற்றுறை.  இங்கு வானகத்தே விளங்கும் வெண்மையானபிறைமதியைச்சூடியமைந்தராகச் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இவர்,பன்றியும்அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால்,பிரமன் ஆகியோருக்கு தீப்பிழம்பாக ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.

குறிப்புரை: தீப்பிழம்பாகியசெல்வரே வெண்பிறை அணிந்தமைந்தராக இருக்கின்றார் என்கின்றது.  ஏனம் - பன்றி. பானல் - நீலோற்பவம்.

In Thiruppaatturai there are a good number of tanks full of water and plenty of blue lily flowers. In this town Lord Civan is enshrined who has on His matted hair the white bright crescent moon, which crawls over in the sky. He is the dignified Lord who stood as a big tall blazing column of fire before Thirumaal and Brahma who had gone out in search of His head and feet in vain.

Note: The column of fire symbolises infinity.

வெந்த நீற்றினார்வேலினர்நூலினா்
வந்தெனன்னலம்வெளவினார்
பைந்தண்மாதவிசூழ்தருபாற்றுறை
மைந்தர்தாமோர் மணாளரே.10

வெந்தநீற்றினர்,வேலினர்,நூலினர், 
வந்து என் நன்நலம்வெளவினார் - 
பைந்தண் மாதவி சூழ்தருபாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே.

பொருள்: பசுமையானகுருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ளதிருப்பாற்றுறைமைந்தரான சிவபெருமான்,முன்னரே மலைமகளை மணந்த மணானர் ஆவார். ஆயினும்,அவர் தம் மேனிமீது வெந்த திருநீறு பூசியவராய்,கையில் வேலை ஏந்தியவராய்,மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினைக் கவர்ந்து சென்றார்.

குறிப்புரை: பாற்றுறைமணாளர் என் நலம் வெளவினார்என்கின்றது. இதில் தலைவி தலைவருடைய உள்ளத் தூய்மையைக் காட்டும் வீரத்தை விளக்கும்வேலையும்,இதுவரை மணமாகாமையைக் காட்டும் நூலையுங்கண்டுகாதலித்தேன். அவர் என் நலத்தைவெளவினார் என்பது தோன்ற,நீற்றினர்வேலினர் நூலினராய் வந்து என் நலத்தைவெளவினார்என்கின்றார். எம்மணாளர்என்னாது ஓர் மணாளர் என்றது மலைமகளையும் முன்னரே மணந்திருக்கின்றமைகுறிப்பிக்க. இப்பதிகத்துள்இராவணனை அடர்த்ததும்,புறச்சமயிகளைப் பற்றிய குறிப்பும்கூறாமை,தலைவனும்தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும்அருள்நெறிமுதிர்ச்சியால் என அறிக. வரும் தோணிபுரப்பதிகத்தும்இக்காட்சியைக் காண்க.

Manly Lord Civan is enshrined in Thiruppaatturai. In this city the tender and fresh "common delight of the woods" (Hiptage madablota) are found all around the town. He smears His body with burnt holy ashes. He wields in one of His hands the spear. He wears the sacred thread in His chest. He approached me in desire and snatched away my elegant loveliness. He is already a groom, having married the daughter of the Himaalayan king.

Note: In this hymn Gnaanasambandar has not mentioned any thing about Raavanaa's incident nor about the false propaganda of Jains and Buddhists. It is evidently because of the imagery of male and female acting as one and experiencing Divine Bliss together (Sanmaargam concept of Lord and Consort). Civa is the eternal Bridegroom (Kaliyaana Sundarar).

பத்தர்மன்னியபாற்றுறைமேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன்ஞானசம்பந்தனதின்தமிழ்
பத்தும்பாடிப் பரவுமே.11

பத்தர்மன்னியபாற்றுறைமேவிய
பத்து - நூறு பெயரனை, 
பத்தன்ஞானசம்பந்தனதுஇன்தமிழ்
பத்தும்பாடிப்பரவுமே!

பொருள்: பக்தர்கள்நிறைந்துள்ள தலம் திருப்பாற்றுறை. இங்கு,ஆயிரம்திருநாமங்களை உடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். பக்தனாகியஞானசம்பந்தன்பாடிய இனிய இத்தமிழ்பாடல்கள்பத்தையும்பாடிப்போற்றுங்கள்.

குறிப்புரை: பாற்றுறைநாதரைப் பற்றிய இப்பாடல்பத்தையும்சொல்லிப்பரவுங்கள்என்கின்றது.  பத்து நூறு பெயரன் - ஆயிரந்திருநாமத்தை உடையவன்.

The names of Lord Civan are ten times a hundred [i.e., innumerable (infinite)]. He abides in Thiruppaatturai where a large number of devotees hail Him. Ye companions! Hail and sing the delightful hymn composed by the devotee Gnaanasambandan, who adored Lord Civan of this place, in chaste Tamil verse.

Note: To come by bhakti, the devotee should cultivate the hymns of the bhakta par excellence (St. Thiru Gnaanasambandar).

THIRU-CH-CHITRAM-BALAM

End of 56th Hymn

திருச்சிற்றம்பலம்

56ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

57.திருவேற்காடு 
திருத்தலவரலாறு:

திருவேற்காடு என்ற திருத்தலம் தொண்டை நாட்டுத் தலம் ஆகும். சென்னையைச் சேர்ந்த தலம். சென்னையில் இருந்து நகரப்பேருந்துகள் பல உள்ளன. இங்கு வேல் தல விருட்சம் ஆதலின்இப்பெயர்எய்தியது. இங்குள்ள இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டி அருளினார். சுப்பிரமணியர்,சூரசம்காரத்தின் பின் பூசித்த தலம். இறைவன் பெயர் வேற்காட்டு நாதர்,வேதபுரீசுவரர். இறைவியின் பெயர் வேற்கண்ணியம்மை. தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்.  விருட்சம் - வேல். கருமாரியம்மன் கோயில் பிரசித்தமானது.

பதிக வரலாறு: 
திருக்காளத்திமலையைவணங்கிக்காளத்தியிற்சிலகாலம்தங்கியிருந்த காழிப்பிள்ளையார் அடியார் கூட்டத்தோடுகாடும்மலையும் கடந்து,வழியில் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு, பாலியாற்றுவடகரையில் இருக்கும் திருவேற்காட்டைவந்தடைந்தார்கள்.  அங்குள்ள செழுஞ்சுடர்பொற்கோயிலை அடைந்து பணிந்து, “ஒள்ளிது உள்ள” என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

57. THIRU-VĒR-KAADU

THE HISTORY OF THE PLACE

    This sacred place is in Thondai Naadu, near the city of Chennai. There are town buses from Chennai to this temple. Since 'vel' is the sacred tree for this temple, the name became Thiruverkaadu.

    The name of the God is Verkaattunaathar or Vedhapureesuvarar; that of the Goddess is Verkanniyammai. The sacred ford is Velaayutha Theerththam. The Lord here graced Sage Agaththiyar with a vision of Himself in the style of a bridegroom at His wedding ceremony. It is also known as the temple where Subbiramaniyar offered worship after He destroyed the demon Sooran. The temple for Karumaariyamman here is very famous.

INTRODUCTION TO THE HYMN
On his return from Kaalatthi, our saint visited Thiru-vēr-kaadu and hailed Civa with the following hymn.

திருச்சிற்றம்பலம்

57.திருவேற்காடு 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

ஒள்ளிதுள்ளக்கதிக்காமிவனொளி
வெள்ளி யானுறைவேற்காடு
உள்ளி யாருயர்ந்தாரிவ்வுலகினில்
தெள்ளியாரவர்தேவரே.

ஒள்ளிது உள்ள,கதிக்கு ஆம்;இவன் ஒளி 
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்;இவ்உலகினில் - 
தெள்ளியார்;அவர் தேவரே.

பொருள்: மிகவும் உயர்ந்த மெய்ப்பொருளை அன்போடு உள்ளத்தில் எண்ணினால்,அது நற்கதிக்கு செல்லும் நுழைவாயிலாகஅமைகிறது. அத்தகையமெய்ப்பொருளாய், வெண்மையான ஒளி வடிவினனாய்,சிவபெருமான் திருவேற்காட்டில்எழுந்தருளியுள்ளார்.  இந்த ஒளிமயமானஇறைவனைநினைந்தவர்கள் இவ்வுலகில் உயர்ந்தவர் ஆவர். அந்த ஒளிமயமானஇறைவனைக் கண்டு தெளிந்தவர்கள் தேவர்கள்ஆவர்.

குறிப்புரை: மிகவும் உயர்ந்ததைஎண்ணின் அது நற்கதிக்குவாயிலாம் ஆதலால் வேற்காடு எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர்என்கின்றது. ஒள்ளிது - உயர்ந்த பொருளை. உள்ள - எண்ண: உள்ளம் - உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.

Those persons who think with sincere love that the Supreme Lord Civan is the only one great Reality, will reach the path to blissful state. The frame of that Civan of Reality, is pure white effulgent. He is enshrined in Thiru-vēr-kaadu. Those who pay obeisance to this Lord will become eminent persons in this world; and by realising His gracefulness they will become Devas.

Note: They are demigods who have gained the grace of Civa - the God of gods.

ஆடல்நாகமசைத்தளவில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தாரிவ்வுலகினில்
சேடராகியசெல்வரே.

ஆடல் நாகம் அசைத்து,அளவு இல்லது ஓர் 
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார்இவ்உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

பொருள்: சிவபெருமான் ஆடுதற்குரியபாம்பைத் தன் இடையிற்கட்டியுள்ளார். அவர் அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டவர். இந்ததிருவேற்காடுஇறைவனைப் புகழ்ந்து பாடி வணங்குபவர்கள்,இவ்வுலகில் பெருமை பொருந்திய செல்வர்கள்ஆவர்.

குறிப்புரை: வேற்காடுபணிந்தார் இவ்வுலகில் பெரிய செல்வராவர்என்கின்றது. சேடர் - பெருமை உடையவர்.

Lord Civan binds the dancing snake in His waist. He takes many different forms as necessitated by the situation. He is enshrined in Thiru-vēr-kaadu. Those who pay obeisance to this Lord by singing His praise will become renowned munificent men in this world.

Note: Vetam is Civa-vetam.

பூதம் பாடப்புறங்காட்டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ்சாந்தும்புகையுங்கொடுத்தவர்க்
கேதமெய்து தலில்லையே.3

பூதம் பாடப்புறங்காட்டுஇடை ஆடி, 
வேதவித்தகன்,வேற்காடு, 
போதும் சாந்தும்புகையும்கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

பொருள்: சிவபெருமான் பூதகணங்கள் பாட,சுடுகாட்டில் நடனம் ஆடுபவர். வேதங்களை அருளியஞானாசிரியன். இந்த திருவேற்காட்டுநாதரைமலர்களும்,சந்தனமும், நறும்புகையும் கொண்டு வழிபட்டவர்களுக்குதுன்பங்கள்வாரா.

குறிப்புரை: வேற்காட்டுநாதரைப்பூவுஞ்சாந்தும்புகையுங் கொண்டு வழிபட்டவர்க்குஏதம்எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி - ஆடுபவன். பெயர்ச்சொல். ஏதம் - துன்பம்.

Lord Civan of Thiru-vēr-kaadu dances in the burning ground to the singing of goblins. As an embodiment of wisdom He authored the Vedas. Those who worship and hail this Lord with flowers, sandalwood paste and fragrant smoke will never have any calamity.

Note: The adorers of Civa are freed from troubles.

ஆழ்கடலெனக்கங்கைகரந்தவன்
வீழ்சடையினன்வேற்காடு
தாழ்வுடைமனத்தாற்பணிந்தேத்திடப்
பாழ்படும்மவர் பாவமே.4

ஆழ்கடல்எனக் கங்கை கரந்தவன், 
வீழ்சடையினன்,வேற்காடு
தாழ்வு உடை மனத்தால்,பணிந்து ஏத்திட, 
பாழ்படும்(ம்),அவர் பாவமே.

பொருள்: சிவபெருமான் ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைக்கும் விழுது போன்ற சடைமுடியை உடையவர். இந்ததிருவேற்காட்டுஇறைவனைப் பணிவான உள்ளத்தோடுவணங்கித்துதுப்பவர்களின்பாவங்கள் அழிந்து ஓழியும்.

குறிப்புரை: பணிந்த மனத்தோடு ஏத்தப் பாவம் அழியும்என்கின்றது. ஆழ்கடல்எனக் கங்கை கரந்தவன் - பல மகாநதிகளைத்தன்னகத்து அடக்கிக் கொள்ளும் கடலைப்போல,கங்கையை அடக்கியவன்.  வீழ்சடை - விழுதுபோலும் சடை. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந் தன்மை (சித்தியார்) பாவம் பாழ்படும் - பாவம் பயன் அளியாதுஒழியும்.

Lord Civan of Thiru-vēr-kaadu conceals in His hanging matted hair the Ganges river, deep as the sea. Those who worship and hail this Lord in all humility will get rid of their sins.

Note: Civa's Ganga washes all sins away (as the sea absorbs all, so does His matted hair concealed the Ganges).

காட்டி னாலுமயர்த்திடக்காலனை
வீட்டினானுறைவேற்காடு
பாட்டி னாற்பணிந்தேத்திட வல்லவர் 
ஒட்டி னார்வினை ஒல்லையே.5

காட்டினாலும்,அயர்த்திடக்காலனை
வீட்டினான்,உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் 
ஓட்டினார்,வினை ஒல்லையே.

பொருள்: மார்கண்டேயர் பூசித்து,சிவபெருமானேமுழுமுதற் கடவுள் என்பதைக் காட்டியும், காலன்'அதனை உணராமல் மயங்கி அவன் உயிரைக் கவர வந்தான். அந்தக் காலனை அழித்த சிவபிரான் உறையும் இடம் திருவேற்காடு. இந்த இறைவனைப்பாடல்கள்பாடிப் பணிந்து வழிபட வல்லவர்கள் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவார்கள்.

குறிம்புரை: இது பாடிப் பணிந்து ஏத்த வல்லவர் வினை ஒடும்என்கின்றது. காட்டினாலும்அயர்த்திடு அக்காலனை - மார்க்கண்டேயர் பூசித்து,சிவன் முழுமுதல்வன் என்பதைக் காட்டினாலும் அதனை உணராதேமயங்கியகாலனை,வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு காட்டினானும் என்ற  பாடமும் உண்டு.

Sage Markandeyar declared to Yama, the god of death, that Lord Civan is the only Supreme Being above all in the universe. Ignoring this, Yama approached Markandeyar to take away his life. Lord Civan of Thiru-ver-kaadu gave a deadly kick to Yama and he fell dead. Those who sing and worship Lord Civan of this place with humility will get rid of the evil effects of their bad karma.

Note: Death cannot lay its icy hands on Civa-bhaktas.

தோலினாலுடைமேவவல்லான்சுடர்
வேலினாலுறைவேற்காடு
நூலினாற்பணிந்தேத்திடவல்லவர்
மாலினார் வினை மாயுமே.6

தோலினால் உடை மேவ வல்லான்,சுடர் 
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர், 
மாலினார்,வினை மாயுமே.

பொருள்: திருவேற்காட்டுச் சிவபெருமான் ஒளி பொருந்திய வேலைக் கையில் கொண்டு உள்ளார். தோலினால் அமைந்த உடைகளைக் கட்டியும் போர்த்தும் உள்ளார். ஆகம நூல்களில்விதித்தவாறு வழிபட்டு ஏத்தவல்லவர்க்குமயங்கச் செய்யும் வினைகள் மாய்ந்து ஒழியும்.

குறிப்புரை: விதிப்படிஏத்தவல்லவர்க்குவினைமாயும் . என்கின்றதுநூலினால் - ஆகமவிதிப்படி.  மாலினார் வினை - மயங்கியஆன்மாக்களினது வினை.

Lord Civan of Thiru-ver-kaadu wears and covers His body with garments made out of animal skin. He holds in one of His hands the luminous spear. Those who offer worship and hail this Lord as detailed in the Aagamaas will get rid of their confusion and the evil effects of bad karma.

மல்லல்மும்மதில்மாய்தரஎய்ததோர்
வில்லினானுறைவேற்காடு
சொல்ல வல்ல சுருங்காமனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.7

மல்லல்மும்மதில்மாய்தர எய்தது ஓர் 
வில்லினான்உறைவேற்காடு
சொல்ல வல்ல சுருங்காமனத்தவர்
செல்ல வல்லவர்,தீர்க்கமே.

பொருள்: திருவேற்காட்டுச் சிவபெருமான் வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்து ஒழியுமாறு அம்பை. எய்தவர். ஒப்பற்ற மேருமலையைவில்லாகஏந்தியவர். இந்தப் பெருமானைப் புகழ்ந்து சொல்ல வல்லவர்கள் பரந்து விரியும் மனதுடையவர்கள்.  அத்தலத்தில் சென்று தரிசிக்க வல்லவர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.

குறிப்புரை: இறைவனை எப்பொழுதும் பேசவல்லகுவியாமனத்து அடியவர்கள் நீடு வாழ்வர்என்கின்றது.  தீர்க்கம் - நெடுங்காலம்.

Lord Civan of Thiru-ver-kaadu, by holding the Meru mountain as His bow sent a dart and destroyed the three prosperous citadels of the Asuras. Those who hail Him and the Thiru-ver-kaadu city where He is enshrined will have liberal minded hearts. Those who can reach this place and worship Him here will have longevity of life.

Note: Civa alone can quell the two malas.

மூரல்வெண்மதிசூடுமுடியுடை
வீரன்மேவியவேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேவர்செய்கழல் திண்ணமே.8

மூரல்வெண்மதி சூடு முடி உடை 
வீரன் மேவியவேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல்: திண்ணமே.

பொருள்: சிவபெருமான் இளமையான வெண்மை நிறங்கொண்டபிறைமதியைத் தனது திருமுடியில்சூடியவர். அவர் ஒரு வீரனாகதிருவேற்காட்டில்எழுந்தருளியுள்ளார்.  இப்பெருமானை அன்போடு வழிபடுபவர்கள் நிச்சயமாக அவரது சிவந்த திருவடிகளைச் சேர்வர்.

குறிப்புரை: அன்போடு வழிபடுவார் அடி அடைவர்என்கின்றது. மூரல் - இளமை. வாரம் - அன்பு.

Lord Civan of Thiru-vēr-kaadu is the hero who wears on His holy matted hair the young and bright crescent moon. Those who offer worship to this Lord with utmost love and sincerity will definitely have communion with His ruddy Holy Feet.

Note: Civa's feet are salvific.

பரக்கினார்படுவெண்டலையிற்பலி
விரக்கினானுறைவேற்காட்டூர்
அரக்கனாண்மையடரப்பட்டானிறை
நெருக்கினானை நினைமினே.9

பரக்கினார்படுவெண்தலையில் பலி 
விரக்கினான் உறை வேற்காட்டுர், 
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை 
நெருக்கினானைநினைமினே!

பொருள்:சிவபெருமான்,பிரமனின் தலை ஓட்டில் பலி ஏற்கின்றசமர்த்தர். இவர் உறைகின்ற தலம் திருவேற்காடு. இப்பெருமான்,அரக்கனாகியஇராவணனின்ஆணவத்தைத் தன் கால் விரலால் அடர்த்துநெருக்கியவர். இப்பெருமானை நினைந்து வழிபாடு செய்யுங்கள்.

குறிப்புரை: இராவணனதுஆண்மையைஅடர்த்தஇறைவனைநினையுங்கள்என்கின்றது.  பரக்கினார் - உலகில் தன் படைப்பால்உயிர்களைத்தனுகரணபுவனபோகங்களோடு பரவச் செய்தவராகியபிரமனார்.  விரக்கினான் - சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகை நோக்கி விரிந்தது.

Lord Civan of Thiru-vēr-kaadu is very skillful in accepting alms in the skull of Brahma. By slightly pressing the mount Kailash by His toe, He quelled the might of Raavanan. Ye companions! contemplate on this Lord and pay obeisance to Him.

Note: All can be done if the God-touch is there.

மாறிலாமலரானொடுமாலவன்
வேறலானுறைவேற்காடு
ஈறிலாமொழியேமொழியாவெழில்
கூறினார்க்கில்லை குற்றமே.10

மாறு இலாமலரானொடுமால்அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறுஇலாமொழியேமொழியா எழில் 
கூறினார்க்கு இல்லை,குற்றமே.

பொருள்: திருவேற்காட்டில்உறையும் சிவபெருமான்,ஒப்பற்ற தாமரை மலர்மேல்உறையும் நான்முகனையும்,திருமால் ஆகியவர்களையும் வெற்றி கொள்பவர். இந்த இறைவனைப் பற்றிய மொழியேஈறிலாமொழியாக அதனை அழகுபெறக்கூறினார்க்குக்குற்றமில்லை.

குறிப்புரை: இறைவனைப் பற்றிய மொழியேஈறிலாமொழியாக அதனை அழகுபெறக்கூறினார்க்குக் குற்றமில்லை என்கிறது. வேறலான் - வெல்லுதலையுடையான். வேறாகாதவன்எனலுமாம்.

Lord Civan of Thiru-vēr-kaadu overpowered Thirumaal and Brahma who is seated in the matchless Lotus flower. Those who praise this Lord in sacred and endless words on His uncomparable aspects and attributes will be His flawless devotees.

Note: Praise Civa and travel on life's decent way in cheerful Godliness.

விண்டமாம்பொழில்சூழ்திருவேற்காடு
கண்டு நம்பன்கழல்பேணிச்
சண்பைஞானசம்பந்தன செந்தமிழ் 
கொண்டு பாடக்குணமாமே.

விண்டமாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு,நம்பன் கழல் பேணி, 
சண்பைஞானசம்பந்தன செந்தமிழ்- 
கொண்டு பாட,குணம்ஆமே.

பொருள்: விரிந்த மலர்களை உடைய மாஞ்சோலைகள்சூழ்ந்ததிருவேற்காட்டை அடையுங்கள். அங்கு எழுந்தருளியுள்ளசிவபெருமானின்திருவடியைத்தியானியுங்கள்.  சீகாழிப்பதியுள்தோன்றியஞானசம்பந்தன்உரைத்த செந்தமிழ் பதிகத்தால்பாடிப் போற்றுங்கள். நன்மைகள் விளையும்.

குறிப்புரை: திருவேற்காட்டைத்தரிசித்து இறைவன் திருவடியைத்தியானித்துஇப்பதிகத்தைப்பாடக் குணமாம்என்கின்றது. விண்ட - மலர்ந்த. சண்பைசீகாழிக்கு மறுபெயர்.

Sage Gnaanasambandan hailing from Seekaazhi praised and worshipped the Holy Feet of Lord Civan and sang this hymn in chaste Tamil language. He is enshrined in Thiru-ver-kaadu. This town is surrounded by mango groves full of blossomed flowers. Those who can sing this hymn and worship this Lord will get all goodness.

Note: St. Sambandhar's hymns show us the way.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 57th Hymn

திருச்சிற்றம்பலம்

57.ஆம் பதிகம் முற்றிற்று

சிவமயம்

58.திருக்கரவீரம்

திருத்தலவரலாறு:

திருக்கரவீரம் என்ற திருத்தலம்சோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும்.  இத்தலம்கரையபுரம் என வழங்கும். திருவாரூர்,கும்பகோணம் பேருந்து வழியில் உள்ளது.  கெளதமர்பூசித்துப் பேறு பெற்ற தலம். கரவீரம் - பொன் அலரி. அலரியைத்தலமரமாகக் கொண்ட காரணத்தால் கரவீரம்என்றாயது. இறைவன் கரவீரநாதர். இறைவி பிரத்தியட்ச மின்னம்மை. தீர்த்தம் அனவரத தீர்த்தம். இத்தலம்திருவாரூருக்குமேற்கே உள்ளது.

பதிக வரலாறு: 
திருஞானசம்பந்தசுவாமிகள்திருச்சாத்தங்குடி சென்று பெருமானைவணங்கிய பின்பு, திருக்கரவீரத்தை அடைந்து நம்பர்தாளைவணங்கி’அரியும்நம்வினை‘என்னும் இத்திருப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.

58. THIRU-K-KARA-VEERAM

THE HISTORY OF THE PLACE

      This sacred place is to the south of river Cauvery in Chola Naadu. It is also known as Karaiyapuram. The place got this name since Karaveeram or Pon Alari is the sacred tree of the temple. It is in the bus route connecting Thiruvaaroor and
Kumbakonam and is to the west of Thiruvaaroor.
The name of the God is Karaveeranaathar and that of the Goddess is Piraththiyatchaminnammai. The sacred ford is Anavaratha Theerththam.

INTRODUCTION TO THE HYMN

       Thirugnaanasambandar arrived at this holy place during his pilgrimage from Thiru-ch-chatthangudi and sang the following hymn

திருச்சிற்றம்பலம்

58.திருக்கரவீரம் 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

அரியுநம்வினையுள்ளனஆசற
வரிகொள்மாமணிபோற்கண்டங்
கரியவன் திகழுங்கரவீரத்தெம்
பெரியவன் கழல் பேணவே.

அரியும்,நம் வினைஉள்ளனஆசு அற - 
வரி கொள் மாமணி போல் கண்டம் 
கரியவன்,திகழும்கரவீரத்துஎம்
பெரியவன்,கழல் பேணவே.

பொருள்: திருக்கரவீரத்தில்எழுந்தருளியுள்ளஎம்பெருமானாகிய சிவபெருமான்,வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக்கருநீலக்கழுத்துடையவராகவிளங்குகின்றார். இவரது திருவடிகளைத்துதித்தால் நம் வினைகள் யாவும் முற்றிலும் நீங்கும்.

குறிப்புரை: கரவீரத்து இறைவன் கழல் பேண வினையுள்ளன எல்லாம் அரியும்என்கின்றது. கழல்பேண நம்வினையுள்ளனஅரியும்எனக்கூட்டுக. வரிகொள்மாமணி - நிறங்கொண்ட நீலமணி. வினை உள்ளன - உள்ள வினைகள்,எஞ்சு வினைகள்எனலும் கூடும். எஞ்சு வினை - சஞ்சிதம்.

Our Lord Supreme, Civan is entempled in Thiru-k-kara-veeram. His neck is of dark blue in colour, similar to the lined sapphire gem. If we worship the Holy Feet of this Lord, the entire evil effects of bad karma will be completely wiped out.

தங்குமோவினைதாழ்சடைமேலவன்
திங்களோடுடன்சூடிய
கங்கையான்திகழுங்கரவீரத்தெஞ்
சங்கரன் கழல் சாரவே.

தங்குமோ,வினை-தாழ்சடைமேலவன், 
திங்களோடுஉடன்சூடிய
கங்கையான்,திகழும்கரவீரத்துஎம்
சங்கரன்,கழல் சாரவே?

பொருள்: திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரனாகிய சிவபெருமான்,தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடையவர். அவர் யாவருக்கும் உயர்ந்தவர். இளம்பிறைச்சந்திரனோடு கங்கையையும்உடனாகச்சூடியவர். இந்தச்சங்கரனின்திருவடிகளைவழிபட்டால் நம்மைப்பற்றினவினைகள்தங்குமோ?தங்காது.

குறிப்புரை: சங்கரன் கழல்சார வினை தங்குமோ என வினாவுகிறது. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

Lord Sankaran (Civan) enshrined in Thiru-k-kara-veeram accommodates in His dangling matted hair, the young crescent moon as well as the river Ganges. If we worship His Holy Feet, will our evil karma affect us? No; it will not.

ஏதம்வந்தடையாவினிநல்லன
பூதம்பல்படையாக்கிய
காதலான்திகழுங்கரவீரத்தெம்
நாதன் பாதநணுகவே.

ஏதம் வந்து அடையா,இனி-நல்லன
பூதம் பல்படை ஆக்கிய 
காதலான்,திகழும்கரவீரத்துஎம்
நாதன்,பாதம் நணுகவே.

பொருள்: திருக்கரவீரத்தில்எழுந்தருளியஎம்நாதனான சிவபெருமான் அன்பு வடிவினன்.  நல்லனவாகியபூதகணங்களைப்பல்வகைப்படைகளாகஅமைத்துக் கொண்டவன்.  இவரது திருவடிகளைஅடைவோரைத்துன்பங்கள்வந்தடையா.

குறிப்புரை: கரவீரநாதன் பாதம் நணுகஏதம்அடையாஎன்கின்றது. ஏதம் - துன்பம்.

Our Lord Civan enshrined in Thiru-k-kara-veeram is an embodiment of love. He commands the good goblins who constitute the different categories of soldiers. Those who hail His Holy Feet will not be affected by any calamity.

பறையுநம்வினையுள்ளனபாழ்பட
மறையுமாமணிபோற் கண்டம் 
கறையவன்திகழுங்கரவீரத்தெம்
இறையவன் கழலேத்தவே.

பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் - மாமணி போல் கண்டம் 
கறையவன்,திகழும்கரவீரத்துஎம்
இறையவன்,கழல் ஏத்தவே.

பொருள்: திருக்கரவீரத்தில்எழுந்தருளியுள்ளஇறைவனான சிவபெருமான் நீலமணி போன்ற கழுத்தில் கறையுடையவனாகவிளங்குகின்றார். இப்பெருமானின்திருவடிகளை வணங்கினால் நமது சஞ்சிதகர்மவினைகள்நீங்கும்.

குறிப்புரை: கழல் ஏத்த வினை பறையும்என்கின்றது. பறையும்என்றதோடமையாதுபாழ்படபறையும் என்றது அதன் வாசனையும்கெடும் என்பதை விளக்க.

Our Lord Civan is entempled in Thiru-k-kara-veeram. His neck is of dark blue colour, similar to the sapphire gem. Even as we hail His Holy Feet, our two karmaas (Sanchitham and Aahamiyam) will vanish.

பண்ணினார் மறைபாடலனாடலன்
விண்ணினார்மதிலெய்தமுக்
கண்ணினாருறையுங்கரவீரத்தை
நண்ணுவார் வினைநாசமே.5

பண்ணின்ஆர் மறை பாடலன்,ஆடலன், 
விண்ணின்ஆர் மதில் எய்தமுக்- 
கண்ணினான்உறையும்கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே.

பொருள்: திருக்கரவீரத்தில்உறையும் சிவபெருமான் வானத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்து அழித்த மூன்றாம் கண்ணை உடையவராகவிளங்குகின்றார்.  இப்பெருமானைசந்த இசை அமைப்போடு கூடிய வேதங்களால் பாடியும்,ஆடியும் அடைபவர்களின்வினைகள்நாசமடையும்.

குறிப்புரை: கரவீரத்தைநண்ணுவார்வினைநாசமாம்என்கின்றது. பண்ணின்ஆர் மறை – சத்தத்தோடு கூடிய வேதம்.

Lord Civan enshrined in Thiru-k-kara-veeram has a third eye in His forehead. He destroyed the three citadels flying in air. He enjoys the dance as well as the songs of Vedas sung to the tune of musical note. Those who reach Thiru-k-kara-veeram where He is entempled and offer worship, will get rid of their sins.

நிழலினார்மதிசூடியநீள்சடை
அழலினாரனலேந்திய
கழலினாருறையுங்கரவீரத்தைத்
தொழவல்லார்க்கில்லை துக்கமே.6

நிழலின்ஆர் மதி சூடியநீள்சடை
அழலினார் அனல் ஏந்திய
கழலினார்,உறையும்கரவீரத்தைத்
தொழ வல்லார்க்கு இல்லை,துக்கமே.

பொருள்: திருக்கரவீரத்தில்எழுந்தருளியசிவபெருமான்ஒளி நிறைந்த பிறைமதியைச் சூடியிருக்கின்றார். நீண்ட சடைமுடியினர். நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கிறார்.  வீரக்கழலைதிருப்பாதத்தில்அணிந்திருக்கின்றார். இப்பெருமானைத் தொழ வல்லவர்க்குத் துக்கம் இல்லை.

குறிப்புரை: இத்தலத்தைத்தொழுவார்க்குத் துக்கம் இல்லை என்கின்றது. நிழலின்ஆர் மதி - ஒளி நிறைந்த பிறை.

Lord Civan is enshrined in Thiru-k-kara-veeram. He wears on His long matted hair the bright crescent moon. He holds the fire in one of His palms. He is decked with anklets. Those who hail this Lord are freed from sorrows.

வண்டாமும்மதில்மாய்தரவெய்தவன்
அண்டனாரழல்போலொளிர்
கண்டனாருறையுங்கரவீரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.7

வண்டர்மும்மதில்மாய்தரஎய்தவன், 
அண்டன்,ஆர் அழல் போல் ஒளிர் 
கண்டனார்உறையும்கரவீரத்துத்
தொண்டர்மேல்-துயர் தூரமே.

பொருள்: திருக்கரவீரத்தில்உறையும் சிவபெருமான் விடம் போல் ஒளிவிடும் கண்டத்தை உடையவர். தீயவர்களாகியஅசுரர்களின்முப்புரங்கள்அழிந்துஒழியுமாறு அம்பை எய்தவர்.  அனைத்து உலகங்களின்வடிவாகவிளங்குபவர். இப்பெருமானைவழிபடும் தொண்டர்களின் துயரங்கள் தூர விலகிவிடும்.

குறிப்புரை: அடியார்மேல் துயரம் தூரமாம்என்கின்றது. வண்டர் - தீயோர்களாகியமுப்புராதிகள்.  அழல்போல் ஒளிர் கண்டனார் - விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தை உடையவர். துயர் தூரமே - துன்பம் தூர விலகும்.

Lord Civan is entempled in Thiru-k-kara-veeram. He demolished the three citadels of the evil Asuraas by an arrow. He is the personification of the entire universe.
His neck blazes like poison. The servitors of this Lord will get rid of their misery.

புனலிலங்கையர்கோன்முடிபத்திறச்
சினவலாண்மைசெகுத்தவன்
கனலவன்னுறைகின்றகரவீரம்
எனவல்லார்க் கிடரில்லையே.8

“புனல் இலங்கையர்கோன்முடிபத்துஇறச்
சின வல் ஆண்மை செகுத்தவன், 
கனலவன்(ன்),உறைகின்றகரவீரம்” 
என வல்லார்க்கு இடர் இல்லையே.

பொருள்: கடலால்சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகியஇராவணனின்பத்துத் தலைகளையும்நெரித்தவர் சிவபெருமான். கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவர். இப்பெருமான்எரிபோன்றஉருவினராகஎழுந்தருளிய தலம் கரவீரம் என்று சொல்ல வல்லவர்க்கு துன்பம் இல்லை.

குறிப்புரை: கரவீரம்என்பார்க்கு இடர் இல்லை என்கின்றது. புனல் இலங்கை - கடல் சூழ்ந்த இலங்கை.  சின வல் ஆண்மை - கோபத்தோடு கூடிய வலிய ஆண்மை. செகுத்தவன் - அழித்தவன்.

Lord Civan of Thiru-k-kara-veeram crushed the ten heads of Raavanan, head of the people of Sri Lanka which is surrounded by sea on all four sides. Lord Civan also nullified Raavana's anger and mighty manhood. His body dazzles like fire. Those who declare that Thiru-k-kara-veeram is the divine town where our Lord abides and adore Him, will get rid of their distress.

வெள்ளத்தாமரையானெடுமாலுமாய்த்
தெள்ளத்தீத்திரளாகிய
கள்ளத்தானுறையுங்கரவீரத்தை
உள்ளத்தான் வினை ஓயுமே.9

வெள்ளத்தாமரையானெடுமாலும்ஆய்த்
தெள்ள,தீத்திரள் ஆகிய 
கள்ளத்தான்உறையும்கரவீரத்தை
உள்ளத் தான் வினை ஓயுமே.

பொருள்: நீரில் தோன்றும் தாமரை மலர்மேல்உறையும்நான்முகனும்திருமாலும் உண்மையைத் தெளிவாக அறியத்தீப்பிழம்பாகத்தோன்றினார்சிவபெருமான். அவர்கள் தன் உருவத்தை அறியாத வண்ணம் கள்ளம் செய்தார். இப்பெருமான்உறையும் திருக்கரவீரத்தைத்தியானிக்கவினைகள்நீங்கும்.

குறிப்புரை: கரவீரத்தைத்தியானிக்க வினைவலி குன்றும்என்கின்றது. வெள்ளத்தாமரையான் - நீரில் இருக்கும் தாமரையானாகிய பிரமன். வெள்ளத்தாமரை என்றது சாதியடை. பிரமனிருக்கும் தாமரை உந்தித்தாமரையாயினும்தாமரையென்றபொதுமைநோக்கிக்கூறப்பட்டது. தான்;அசை,

Both Vishnu, and Brahma seated on the Lotus flower that stems from water were bewildered. To make them understand the divine truth Lord Civan acting on the sly (ů ш) took the form of a big column of dazzling fire. Those who can contemplate on and hail Thiru-k-kara-veeram where abides Lord Civan, and adore Him will get rid of their karma.

செடியமண்ணொடுசீவரத்தாரவர்
கொடிய வெவ்வுரைகொள்ளேன்மின்
கடியவன்னுறைகின்றகரவீரத்
தடியவர்க்கில்லை யல்லலே.10

செடி அமண்ணொடுசீவரத்தார் அவர் 
கொடிய வெவ்உரைகொள்ளேன்மின்! 
கடியவன்(ன்) உறைகின்றகரவீரத்து
அடியவர்க்கு இல்லை,அல்லலே.

பொருள்: அமணர்கள்முடைநாற்றமுடையவர்கள். அவர்களோடு காவி ஆடை அணிந்த புத்தர்களும்பேசுகின்ற கொடிய வெம்மையானபேச்சுக்களை உண்மை என்று கொள்ள வேண்டாம். அனைத்து உலகையும் காத்து அருளுகின்ற சிவபெருமான் திருக்கரவீரத்துள் உறைகின்றார். அவரை அண்டியவர்களுக்குத் துன்பம் இல்லை.

குறிப்புரை: கரவீரத்தடியவர்க்கு அல்லல் இல்லை என்கின்றது. செடி - நாற்றம். அமணொடு என்பது அமண்ணொடு என விரித்தல் விகாரம் பெற்றது. சீவரம் - காவியாடை,கொடிய வெவ்வுரை - நெறியல்லாநெறிக்கண்செலுத்தலின் கொடிய வெம்மையானஉரையாயிற்று. கடியவன் – காத்தலை உடையவன்.

The Buddhists wearing cloth dyed in red ochre along with the Jains whose body emits bad smell, utter evil and cruel words as divine knowledge. Ye devotees! abiding in Thiru-k-kara-veeram, never take their words as divine knowledge. Be sure to adore Lord Civan who abides in Thiru-k-kara-veeram and sustains all the worlds, will remove your distress.

வீடிலான்விளங்குங்கரவீரத்தெஞ்
சேடன்மேற்கசிவாற்றமிழ்
நாடுஞானசம்பந்தனசொல்லிவை
பாடுவார்க்கில்லை பாவமே.11

வீடுஇலான்,விளங்கும் கரவீரத்துஎம்
சேடன்மேல்கசிவால்-தமிழ் 
நாடும்ஞானசம்பந்தன்சொல்இவை
பாடுவார்க்கு இல்லை,பாவமே.

பொருள்: அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெருமை உடையவனான சிவபெருமான் மேல் அன்புக் கசிவால்தமிழைவிரும்பும்ஞானசம்பந்தன்இப்பதிகத்தைப் பாடினார். இத்திருப்பதிகப்பாடல்களைப்பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

In deep love and with devotion to the Tamil language Gnaanasambandan sang this hymn on the Supreme Lord of Thiru-k-kara-veeram, who is immortal. Those who can sing with sincere devotion these verses will have no trouble in their life.

Note: The entire hymn attests to the truth that karma becomes nullified unto them who sing in devotion the hymns of the godly child.
The conquest of karma and flaws (1), the cessation of karma (2), the abolition of troubles (3), the vanquishing of karma, both past and present (4), the perishing of karma (5), the freedom from sorrows (6), the annulment of misery (7), completely get rid of troubles (8), the quelling of karma (9), the wiping out of trembles (10) and the eternal freedom from sin (11) constitute the message of this hymn.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 58th Hymn

திருச்சிற்றம்பலம்

58ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

59.திருத்தூங்கானைமாடம்

திருத்தலவரலாறு:

திருத்தூங்கானைமாடம் என்ற திருத்தலம் நடு நாட்டுத் தலம் ஆகும். விருத்தாசலத்தில் இருந்து பேருந்துகளில்செல்லலாம். இத்தலம்பெண்ணாகடம் எனவும்,திருக்கடந்தை நகர் எனவும் வழங்கும். பெண் (தேவ கன்னியர் ஆ (காமதேனு) கடம் (வெள்ளை யானை) ஆகிய இவர்கள் பூசித்துப் பேறு பெற்றதாதலின்இப்பெயர்எய்தியது. ஆலயத்தின் பெயர் தூங்கானைமாடம்.  அப்பரடிகள் “பொன்னார்திருவடிக்கொன்றுண்டு விண் ணப்பம்: என்றேத்தித் தம்முடைய தோளின் மேல் சூலக்குறியும்இடபக்குறியும் பெற்ற தலம். இங்கு அவதரித்தகலிக்கம்ப நாயனார்,ஒருநாள் தன் பணியாளனேசிவனடியாராக வர,தம் மனைவி அவருக்கு நீர்வார்க்கத்தாழ்த்தமையை அறிந்து மனைவியின் கரத்தைவாள்கொண்டு வெட்டி வீடு பெற்றார். மெய் கண்ட தேவரின் தகப்பனார் அச்சுதகளப்பாளர் வாழ்ந்த தலமும் இதுவே. சுவாமி பெயர் சுடர்க்கொழுந்துநாதர்.  அம்மை கடந்தை நாயகி. தீர்த்தம் கெடில நதி.

கல்வெட்டு: 
பரகேசரிவர்மனானஇராஜேந்திரன் காலத்தில் வடகரைஇராஜாதிராஜவளநாட்டு மேற்காநாட்டுப்பிரமதேயமானமுடிகொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துத்திருத்தூங்கானை மாடம் என்று குறிக்கப்பட்டு உள்ளது. இறைவன் நாமம் திருத்தூங்கானைமாடமுடையமகாதேவர் எனவும்,திருத்தூங்கானைமாடமுடைய நாயனார் எனவும் நல்ல பெண்ணாகடத்தில் உள்ள வீற்றிருந்த பெருமான் எனவும்,திருத்தூங்கானைமாடத்துக் கடவுள் எனவும் வழங்கப்படுகின்றது.  இவையன்றிகோயிலுள்கோச்செங்கணேசுவரம் உடையார் கோயிலும்மதுராந்தகஈச்சரமுடையார் கோயிலும்தனிமையாகப்பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும்இருந்திருக்கின்றன.

இராஜகேசரிவர்மனானகுலோத்துங்கன்காலத்துவடகயிலாயமுடையமகாதேவர்க்கு விருதராச பயங்கர வளநாட்டுமேற்கா நாட்டு முடிகொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையாரால் நிலம் தானம் வழங்கப்பட்டது. திருத்தூங்கானைமாடமுடையமகாதேவர் கோயிலுக்கும்கோச்செங்ணேசுவரமுடையார்கோயிலுக்கும்முடிகொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துத்தேவதானமானகிராமத்தைச்சேரிசபையார் இறையிலி செய்தார். குலோத்துங்கன் தான்பிறந்தநாளாகியமாதபூசவிழாவைநடத்தவும்,கோயில் நாட்பூசைக்காகவும்நிலமளிக்க உத்தரவிட்டான். மேலும் மதுராந்தகேசுவரமுடையார்கோயிலிலுள்ளசிவப்பிராமணர்கள் இருவருக்குஉணவளிக்க பணம் வழங்கப்பட்டது. பரகேசரிவர்மனானஇராஜேந்திரன்காலத்து, திருத்தூங்கானைமாடமுடையமகாதேவர் கோயிலுக்கு தூண்டாவிளக்கெரிக்கப்பசுக்கள் வழங்கப்பட்டன. தென்கரைநித்தவினோதவளநாட்டுக்கிழார்க்கூற்றத்துக்கீழநல்லூர் உடைய ஒருவன் பசுக்கள் அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குநீராட்டவும்பார்ப்பனர்களுக்கு அன்னம் அளிக்கவும் ஸ்ரீராமன்ஸ்ரீதரரானபவித்திரமாணிக்கச்சேரி உடையான் ஒருவனால் ஏற்பாடு செய்யப்பட்டது. இராஜகேசரிவர்மனானராஜராஜன்முத்திரையிடப்பட்டஅளவைகளால் வியாபாரிகள்,பொருள்களை அளக்கவும் சில வரிகளைக் கோயிலுக்கு அளிக்கவும் ஏற்பாடு செய்தான்.249ஆவது கல்வெட்டால்மூவாயிரவன் கோல் என்ற நீட்டலளவையால் (15 அடி) நிலமளந்த செய்தி தெரிகிறது. பரகேசரிவாமனான விக்கிரமன் காலத்துஅரையன்ஆதித்த தேவன் தேவர்கள் நாதன் என்ற மரக்காலைப் பயன்படுத்தி உள்ளான். குலசேகரன்காலத்துப் பொன்பேத்தி அம்பலத்தாடி அழகனால்மண்டபமும்,முகப்பும்கட்டப்பட்டன. அரசன் மந்திரியான மையிருஞ்சோலை மண்டபம் கட்டியுள்ளான்.

விஜயநகரதேவமகாராயர் காலத்தில் நைவேத்தியத்திற்கும்,திருப்பணிக்கும் பள்ளி கொண்ட பெருமாள் கச்சிராயருடையமகனானஏகரம்பரநாதன் சில கிராமங்களை இறையிலி செய்தான். தராஜமீகாராஜா சகம்1356இல்18ப் பற்றுச்சபையாரால்வீதிகளுக்கு இறையிலி செய்து திருமடைவிஜயத்திற்காகவும் நல்ல பெண்ணாகடத்துப்பெருமாளுக்கும்திருமாறன் பாடியிலுள்ளதாகந்தீர்த்தருளியநாயனாருக்கும் விழா செய்வதற்காக,பெரிய நாட்டான் இறையிலி செய்தார். விக்கிரமன் காலத்தில் அமாவாசையில் சுவாமி உலா வரவும்,விளக்கு முதலானவற்றிற்கு நிலம்,பொன்,பசுக்கள்,நெல் முதலியன அளித்தமையையும்குறிப்பிடுகின்றன.

பதிக வரலாறு: 
திருமுதுகுன்றத்தை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் பெண்ணாகடத்தை அடைந்தார்கள். அங்கு,வேதவோசை நீங்காத தூங்கானைமாடச்சுடர்க்கொழுந்தை வணங்கி வலங்கொண்டு ஒடுங்கும் பிணி பிறவி: என்னும் இப்பதிகத்தைஅருளிச் செய்தார்கள்.  'இப்பதிகத்தின் சுருக்கமான குறிக்கோள் “தீங்கு நீங்குவீர்தொழுமின்கள்தூங்கானைமாடம்' என்பது எனச் சேக்கிழார் பெருமான் அருளியுள்ளார்கள்.

59. THIRU-TH-THOONGAANAI-MAADAM

THE HISTORY OF THE PLACE

This sacred place is in Nadu Naadu. It is accessible by bus from Virudhdhaachalam. It is known also a Pennakadam and Thirukkadanthai Nagar. The name Pennaakadam is derived by the combination of penn (celestial maidens), aa (the divine cow Kaamadhenu) and kadam (white elephant), all of whom offered worship here. The name of temple is known as "Thoongkaanai Maadam'.

The name of the God is Sudarkkozhundhunaathar and that of the Goddess is Kadanthainaayaki. The sacred ford is Kedilam river.

This temple has the distinction that Saint Appar Suvaami appealed to the Lord, 'ponnAr thiruvaDikk konRunDu viNNappam' (I have a prayer at your holy golden feet) and got branded with the marks of the trident (soolam) and the sacred bull (idabam) on his shoulders. This is the birthplace of Saint Kalikkamba Naayanar, who obtained salvation after showing his devotion to the devotees of Siva by cutting off the hand of his wife when she hesitated to give water to a servant who took the guise of a devotee of Siva. This is also the place where Saint Meikanda Thevar's father Achchutah Kalappaalar lived.
From the inscriptions, it could be seen that shrines for Kochchengkanesuvara- mudaiyaar and Madhuraanthaka-eecharamudaiyaar were once inside this temple and there was a separate temple for Vishnu in the reclining pose without his consorts.

Endowments during the reign of Kuloththungkan are described in some inscriptions. He ordered land be granted for celebrating on his birth asterism the monthly Poosam festival and for the daily worship services. Inscriptions record gift of cows and gold for feeding Siva-Brahmins and for lamps and ceremonial bathing of the holy icons. We also know from the inscriptions that Raajaraajan made merchants use only measuring devices with a royal seal for trade purposes. During the reign of Kulasekaran one Azhagan had the front mandapam built. One of his ministers built the 'Maiyirunjcholai mandapam'.

During the time of Vijayanagar king, some villages were made tax-free gifts for the temple for celebration of festivals, food offering, and renovation. Grants of land, gold, cows and paddy for lamps etc., are detailed in the other inscriptions.

INTRODUCTION TO THE HYMN

After hailing the Lord-God at Muthukundram our saint arrived at Thiru-th- thoongaanai-maadam where he hailed Civa and sang the following hymn. This town is called Thiru-k-kadanthai-nagar and/or Pennaa-kadam. The temple goes by the name
Thoongaanai-maadam.

திருச்சிற்றம்பலம்

59.  திருத்தூங்கானைமாடம்
பண் :பழந்தக்கராகம்
இராகம் : ஆரபி

ஒடுங்கும் பிணிபிறவிகேடென்றிவையுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதிநின்றீரெல்லாமடிகளடிநிழற்கீழாளாம் வண்ணம் 
கிடங்கும்மதிலுஞ்சுலாவியெங்குங்கெழுமனைகள்தோறுமறையின்னொலி
தொடங்குங்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானைமாடந்தொழு மின்களே.1

ஒடுங்கும் பிணி,பிறவி கேடு,என்று இவை உடைத்துஆய வாழ்க்கை ஒழியத் தவம் 
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம்,அடிகள் அடி நிழழ் கீழ் ஆள்ஆம் வண்ணம், 
கிடங்கும்மதிலும்சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும் மறையின்(ன்) ஒலி 
தொடங்கும் கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: வெளிப்படுவதற்குரிய நேரம் வரும் வரைக்கும் வெளிப்படாமல் மறைந்து இருக்கும் நோய்கள்,இனி வரும் பிறப்புகள்,துன்பங்கள் ஆகியன இவைகள்தான் நமது வாழ்க்கையில் அடங்கி இருப்பனவாம். இத்துன்ப வாழ்க்கை நீங்கத் தவம் புரிதலுக்கு ஏற்ற இடத்தை நீவிர் விரும்புகின்றீர். அது,அகழியும்மதிலும் சூழ்ந்து,எங்கும் உள்ள வீடுகள் தோறும் வேதங்கள் ஒலிக்கும்இடமானகடந்தைத்தலமாகும். அந்தத் தலத்தின்தலைவனாகிய சிவபெருமானின் திருவடி நிழலின்கீழ்,அவருக்கு ஆளாகுமாறு,அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் சென்று தொழுது தவம்புரிவீர்களாக.

குறிப்புரை: தவம் செய்யும் இடத்தைத்தேடுகின்றமக்களே! தூங்கானைமாடம்தொழுமின்கள் என்கின்றது. நின்றீர் எல்லாம் ஆளாம்வண்ணம்தொழுமின்கள்எனக்கூட்டுக. ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம் வருந்துணையும்வெளிப்படாதேஒடுங்கியிருக்கும் நோய் அடங்கும் இடம் - அடங்கியிருத்தற்குரிய இடம். கிடங்கு - அகழ். கலாவி - சுற்றி. கெழுமனைகள் - கூடிய வீடுகள்.  கடந்தை - பெண்ணாகடம் இது தலப்பெயர். தூங்கானை மாடம் என்பது கோயிலின் பெயர்.

Diseases are subdued in our physical frame until such time they are ripe for exposure. In addition, future births and innumerable miseries make up our total life period. Do you want to escape from these miseries? If so, do penance in Thiru-th- thoongaanai-maadam temple which is the most appropriate place for this. Ditches and walls surround this city. Vedic scholars in all the houses in this city are reciting the Vedas. The impact of the sound waves of this recitation reverberates all over the city. Lord Civan is enshrined at the Thiru-th-thoongaanai-maadam temple in Kadanthai city. You go to this temple and be our Lord's servitor under the shadow of His salvific feet and gain the path to salvation.

பிணிநீரசாதல்பிறத்தலிவைபிரியப்பிரியாதபேரின்பத்தோ
டணிநீர மேலுலக மெய்தலுறிலறிமின்குறைவில்லைஆனேறுடை
மணிநீலகண்டமுடைய பிரான்மலை மகளுந்தானுமகிழ்ந்துவாழும்
துணிநீர்க்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானைமாடந்தொழு மின்களே.2

பிணிநீர சாதல்,பிறத்தல்,இவை பிரியப் பிரியாத பேர்இன்பத்தோடு
அணி நீரமேலுலகம் எய்தல் உறில், அறிமின் குறைவு இல்லை ஆன்ஏறுஉடை
மணிநீலகண்டம் உடைய பிரான் மலைமகளும்தானும் மகிழ்ந்து வாழும் 
துணிநீர்க்கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: நோய்த்தன்மையுடைய இறத்தல்,பிறத்தல் ஆகியன நீங்கவும்,எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த மேலுலகத்தை,நீவீர் அடைய விரும்புகின்றீர். குறைவில்லாமல் இதை அறியுங்கள். இடபத்தைஊர்தியாகவும் தனது கொடியாகவும்,நீலமணி போன்ற கண்டத்தையும் உடைய சிவபெருமான்,தெளிந்த நீரை உடைய கடந்தைத்தலத்தில்மலைமகளும்தானுமாக மகிழ்ந்து வாழும் திருத்தூங்கானை மாடம் சென்று,அப்பெருமானைத்தொழுவீர்களாக.

குறிப்புரை: பிறப்பிறப்பு நீங்கிப் பேரின்பம் உறஎண்ணில்இக்கோயிலைத்தொழுங்கள்என்கின்றது.  பிணிநீர் - நோய்த்தன்மையை உடைய. அணிநீர - அழகிய. மணிநீல கண்டம் - அழகிய நீலகண்டத்தை உடைய. பிரான் - வள்ளன்மை உடையவன். துணிஆநீர் - தெளிந்த நீர்.

Ye companions! Do you wish to be freed from the miseries arising out of the cycle of birth and death? Do you wish to reach heaven, the abode of Lord Civan where you can have permanent enjoyment of Supreme Bliss without any break? If so, proceed to Thoongaanai-maadam temple in the city of Thiru-k-kadanthai and offer worship to Lord Civan therein. The bull is His vehicle, in which He rides majestically, as well the insignia of His flag. His neck is of dark blue colour similar to the sapphire gem. He is happily enshrined in the temple in the company of His consort, the daughter of the Himaalayan king. This city is rich in crystal clear water source and the temple is radiating the brightness of the Lord. If you hail and worship Lord Civan therein with all sincerity and love, you will be blessed with all Your wants without any shortfall.

சாநாளும்வாழ்நாளுந்தோற்றமிவைசலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமாறறியாதலமந்துநீரயர்ந்துங்குறைவில்லைஆனேறுடைப்
பூமாணலங்கலிலங்கு கொன்றை புனல்பொதிந்தபுன்சடையினானுறையும்
தூமாண்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானை மாடந்தொழுமின்களே.3

சாம்நாளும்வாழ்நாளும் தோற்றம் இவை சலிப்புஆய வாழ்க்கை ஒழியத் தவம் 
ஆம்ஆறு அறியாது,அலமந்து,நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன ஏஏறுஉடைப்
பூ மான் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்
தூ மாண்கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: இறப்பு நாளும்,வாழும் நாளும்,பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடியது நம் சலிப்பான வாழ்க்கை. இவற்றை நீங்கத் தவம் சித்திக்கும் தலம் யாதென அறியாது நீவீர் மறந்ததினால்யாதும்குறைவில்லை. விடையேற்றைஊர்தியாகவும்,மலர்களில் மாட்சிமை பெற்று விளங்கும் கொன்றை மாலையும்,கங்கையும்தாங்கிய சிவந்த சடையினை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும்தலமானது தூய்மையான மாண்புடைய கடம்பை நகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடம் ஆகும்.  அங்கு சென்று தொழுவீர்களாக. அது ஒன்றே தவம்சித்திக்கும்தலமாகும்.

குறிப்புரை: பிறந்து,வாழ்ந்து,இறந்துவரும் இந்த வாழ்க்கையை ஒழிக்க விரும்புவீர்இக்கோயிலைத் தொழுங்கள்என்கின்றது. சலிப்பு - ஓய்தல். தவம் ஆமாறு - தவம் சித்திக்கும் வண்ணம் அலமந்து - வருந்தி. தூமாண்கடந்தை - தூய்மையான மாட்சிமை பொருந்திய கடந்தை.

Ye companions! You have forgotten the type of penance and the place where you have to do it, which will enable you to get rid of the disgusting life arising out of the cycle of birth, sustenance and death. You feel bewildered and exhausted. Do not worry. Now you proceed to the big Thoongaanai-maadam temple and offer dedicated worship to Lord Civan therein. The bull is His vehicle. He wears in His ruddy matted hair the river Ganges along with the garland made out of cassia flowers which is more elegant than other flowers. He is enshrined in the pure, magnificent and huge temple of Thoongaanai-maadam in the city of Thirukkadanthai. It is enough to get the full benefit of your penance and prayer, if you do it in this temple.

ஊன்றும்பிணிபிறவிகேடென்றிவையுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்றுமனங்கருதிநின்றீரெல்லாமனந் திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்றுமதிலெய்தமூவர்ச்சிலைமுதல்வர்க்கிடம்போலுமுகில்தோய்கொடி
தோன்றுங்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கனை மாடந்தொழுமின்களே.4

ஊன்றும் பிணி,பிறவி,கேடு,என்று இவை உடைத்துஆய வாழ்க்கை ஒழியத் தவம் 
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம்,மனம் திரிந்து மண்ணில் மயங்காது,நீர் 
மூன்றுமதில்எய்தமூவர்ச் சிலை முதல்வர்க்குஇடம்போலும் - முகில் தோய் கொடி 
தோன்றும் - கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கனைமாடம்தொழுமின்களே!

பொருள்: நிலைபெற்ற நோய்,பிறப்பு,இறப்பு இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடுபேற்றைப் பெறவும் தவம் செய்ய மனம் விரும்பி மயங்கி நிற்கிறீர். நீவீர் எல்லோரும் மனம் திரும்புங்கள். உலகில் மயங்காதீர்கள். திரிபுரங்களைஎய்த அழியாத வில்லை உடையவரும்,உலகின்தலைவருமாகியசிவபெருமானது இடமாக விளங்குவதும், மேகங்களில்முழுகும் கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உன்ன பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடம் சென்று தொழுவீர்களாக.

குறிப்புரை: இதுவும் அது. பிணியூன்றும் பிறவி - நோய் நிலை பெற்ற பிறப்பு,மான்று - மயங்கி.  மூவாச்சிலை - மூப்படையாத வில். முகில் - மேகம்.

Ye companions! you are confused in your mind as to how to perform proper penance to get rid of permanent bodily ailments, birth, death, and other miseries so as to enable you to get permanent salvation. You give up the earthly muddle mindedness You adore and worship Lord Civan enshrined in caused by mental aberration. Thoongaanai-maadam. He holds the ageless bow which destroyed the three citadels of Asuraas. He is the Universal Lord. Lord Civan is entempled in the huge temple at Thoongaanai-maadam in the city of Thirukkaranthai where flags are flying high in the sky.

மயல்தீர்மையில்லாததோற்றம்மிவைமரணத்தொடொத்தழியுமாறாதலால்
வியல்தீரமேலுலகமெய்தலுறின்மிக்கொன்றும்வேண்டாவிமலனிடம்
உயர்தீரவோங்கியநாமங்களாலோவாதுநாளுமடிபரவல்செய்
துயர்தீரகடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானை மாடந்தொழுமின்களே.5

மயல்தீர்மை இல்லாத தோற்றம்இவைமரணத்தொடுஒத்துஅழியும்ஆறு ஆதலால், 
வியல் தீர மேலுலகம்எய்தல்உறின்,மிக்கு ஒன்றும் வேண்டா;விமலன் இடம் - 
உயர் தீர ஒங்கியநாமங்களால்,ஓவாது நாளும் அடி பரவல்செய்்
துயர் தீர் - கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: மாறிமாறிவருகின்ற பிறப்பு,இறப்பு என்ற சூழலில்அகப்பட்டு உழன்று கொண்டு இருக்கும்வரை,நமக்கு மெய்யறிவு கிட்டாது. மயக்கமே தலைதூக்கி நிற்கும். முத்தி அடையும் வழியை அறிய முடியாது இந்த மயக்கம் நீங்கி மேலுலகம்எய்தநீவீர் விரும்பினால் பெரிதாக முயற்சி எதுவும் வேண்டாம். எளிய வழியாகச்சிவபெருமானது இடமாக விளங்குவதும்,நம் துயர்களைத்தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகியதிருத்தூங்கானைமாடம்செல்லுங்கள். அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத்தொழுவீர்களாக.

குறிப்புரை: பிறப்பிறப்புக்கள்அழியும்வழிகள்;ஆதலால்,அவற்றை நீங்கி மேலுலகம்எய்தலுறின் வேறொன்றும் தேட வேண்டாம்;இறைவன் நாமத்தைச்சொல்லிக் கொண்டு தூங்கானைமாடத்தைத் தொழுங்கள்என்கின்றது. மயல்தீர்மை - மயக்கம் நீங்கும் உபாயம். ஆறு - வழி. வியல்தீர - பலதிறப்படுதல் நீங்க. உயர்தீர ஓங்கிய நாமம் - உயர்ந்த பெயர். ஓவாது - இடைவிடாது.

The non-ending cycle of birth and death causing all sorts of confusion in your mind will not lead you to salvation but only degradation. If you desire to get rid of this confusion and get salvation, you need not make any big effort. The simple way is to go to the big temple Thoongaanai-maadam in the city of Kadanthai where Lord Civan is entempled and chant His famous five-lettered lofty Divine name (the Pentad) 'Namasivaaya' and offer worship without any break, at His Holy Feet. By doing this in this temple you will get all your miseries ended.

பன்னீர்மைகுன்றிச்செவிகேட்பிலாபடர்நோக்கிற்கண்பவளநிற
"நன்னீர்மைகுன்றித்திரைதோலொடுநரைதோன்றுங்காலம்நமக்காதல்முன்
பொன்னீர்மைதுன்றப்புறந்தோன்றுநற்புனல் பொதிந்த புன்சடையினானுறையும்
தொன்னீர்க்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானை மாடந்தொழுமின்களே.6

பல்-நீர்மைகுன்றி,செவி கேட்புஇலா,படர் நோக்கின் கண் பவள (ந்) நிற 
நன்நீர்மைகுன்றி,திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல்முன், 
பொன்நீர்மைதுன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்
தொல்நீர்க்கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: மூப்புக் காலத்தில் புலன்நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து விடுகிறது.  காதுகள்கேட்பதில்லை. கண்களில் படலம் மூடியதால் பார்வை குறைகிறது. பவளம்' போன்ற உடல் நிறம் குறைகிறது. தோல் சுருங்கி நரை தோன்றுகிறது. இந்த மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுவதற்கு முன்பே,பொன் போன்ற நிறம் பொருந்திய,கங்கை தங்கிய செஞ்சடையினை உடைய சிவபெருமான் உறையும் பழமையான புகழை உடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகியதிருத்தூங்கானைமாடத்துஇறைவனைத்தொழுவீர்களாக.

குறிப்புரை: காது,கண் இவை கெட்டு,தோல் சுருங்கி,நரை தோன்றுவதற்குமுன்தொழுமின் என்கின்றது. பல் நீர்மைகுன்றி - புலன் நுகர்ச்சிக்கு ஏற்ற பலதன்மைகளும் குறைந்து. படர்நோக்கின் - படலம் மூடியதால். பவளநிறநல்நீர்மை - செவ்வரி பரந்த நல்ல நிலைமை. திரை - திரங்கியய பொன் நீர்மைதுன்ற - பொன் போன்ற தன்மை பொருந்த;புறந்தோன்றும் - உருத்தாங்கிக்காட்சியளிக்கும்.

As reach old age, you all your five senses loose their efficiency. The ear looses its hearing capacity; eyes loose the power of vision; body colour fades; wrinkles form on the skin; hair becomes grey. Before the advent of these physical discomforts, you go and offer worship to Lord Civan at Thoongaanai-maadam temple in the city of Kadanthai Lord Civan is enshrined in this age old glorious temple Thoongaanai- maadam in the well watered Kadanthai city. In His golden coloured ruddy matted hair, abides the river Ganges.

இறையூண்துகளோடிடுக்கணெய்தியிழிப்பாயவாழ்க்கையொழியத்தவம்
நிறையூணெறிகருதிநின்றீரெல்லாம்நீள்கழலேநாளுநினைமின்சென்னிப்
பிறைசூழலங்கலிலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ்கடந்தைத்தடங்கோயில்சோதூங்கானை மாடந்தொழுமின்களே.7ீ

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்புஆய வாழ்க்கை ஒழியத் தவம் 
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம்,நீள் கழலே நாளும் நினைமின்! சென்னிப்
பிறை,சூழ் அலங்கல் இலங்கு கொன்றை,பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்கனே!

பொருள்: குறைந்த உணவோடுபல்வகைத்துன்பங்களும் நிரம்பி,வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க,தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழி யாது என நீவீர் எல்லோரும் மயங்கி நிற்கிறீர். நீண்ட திருப்பாதத்தைத்இனமும்நினையுங்கள். முடியில் பிறை சூடிக் கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் பிரியாதுஉறையும்நீர்த்துறைகள்சூழ்ந்த கடந்தை நகரில் உள்ள தடங்கோயிலாகியதூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

குறிப்புரை: புல்லிய உணவு கொண்டு வருந்தும் இழிந்த வாழ்வு ஒழியத்தவமாகியபேருண்டியை விரும்பியிருக்கின்றவர்களே! இக்கோயிலைத்தொழுமின்என்கின்றது. இறையூண் - சிற்றுணவு.  துகள் - தூளி. இடுக்கண் - துன்பம். தவம் நிறையூண் நெறி- தவமாகிய நிறைந்த உணவைப்பெறுமார்க்கம்.  அலங்கல் - மாலை. பிணையும் - விரும்பும்.

You are afflicted with all sorts of miseries; arising out of your sparse consumption of food and food insufficient to your bodily requirements. All of you are in a confused state of mind as to how to get rid of such a mean way of life. Do you want to undertake penance which is better nourishment than real food? The way is this. You set your mind daily on Lord Civan who abides permanently in Thoongaanai- maadam of Kadanthai city surrounded by tanks full of water. He accommodates crescent moon in His matted hair. He wears the garland of kondrai flowers. Here you adore and worship Lord Civan; all your confusion will disappear.

பல்வீழ்ந்துநாத்தளர்ந்துமெய்யில்வாடிப்பழிப்பாயவாழ்க்கையொழியத்தவம்
இல்சூழிடங்கருதிநின்றீரெல்லாமிறையேபிரியாதெழுந்துபோதும்
கல்சூழரக்கன்கதறச்செய்தான்காதலியுந்தானுங்கருதிவாழும்
தொல்சீர்க்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானை மாடந்தொழுமின்களே.8

பல் வீழ்ந்து,நாத் தளர்ந்து,மெய்யில் வாடி,பழிப்புஆய வாழ்க்கை ஒழியத் தவம் 
இல்சூழ் இடம் கருதி நின்றீர்எல்லாம்இறையேபிரியாது எழுந்து போதும்! 
கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான்,காதலியும்தானும் கருதி வாழும், 
தொல்சீர்க்கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: பல்வீழ்ந்து,பேச்சுத் தளர்ந்து,உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும்இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாது எனக் கருதி நிற்கும் நீவீர் அனைவரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்து வாருங்கள். கயிலை மலையைப்பெயர்த்தஇராவணனைக் கதறுமாறுஅடர்த்த சிவபெருமான் மலைமகளும்தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலானதூங்கானைமாடம் சென்று அங்கு எழுந்தருளியுள்ளசிவபெருமானைத்தொழுவீர்களாக.

குறிப்புரை: பல்வீழ்ந்துநாத்தளர்ந்துபழிப்பாய வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் தேடுபவர்களே!: விரைந்து வாருங்கள்;இக்கோயிலைத்தொழுங்கள் என்கிறது. பழிப்பாய வாழ்க்கை – காளையரான காலத்துக்காமுற்றாரும்இந்நிலையைக் கண்டு ஏளனம் செய்யும் கிழப்பருவத்தது. இறையே - சிறிதும்.  போதும் - வாருங்கள். கல் - கயிலை. அரக்கன் - இராவணன்.

Ye companions! You all are tired of your life, which is full of miseries caused by bodily illness and mental worries. Do you all want to get rid of such a miserable life and do penance? If so you all come to Thoongaanai-maadam temple in the city of Kadanthai which is surrounded by tall trees in the cool groves which brushes the sky. The four faced Brahma who is seated in the Lotus flower and Thirumaal who scaled the earth and heaven by His two feet could not see our Lord Civan entempled here. You offer worship with devotion to this Lord Civan and fulfil your wishes by His grace.

நோயும்பிணியுமருந்துயரமுநுகருடையவாழ்க்கையொழியத்தவம்
வாயுமனங்கருதிநின்றீரெல்லாமலா்மிசையநான்முகனும்மண்ணும்விண்ணும்
தாயஅடியளந்தான்காணமாட்டாத்தலைவர்க்கிடம்போலுந்தண்சோலைவிண்
தோயுங்கடந்தைத்தடங்கோயில்சேர்தூங்கானைமாடந்தொழுமின்களே.

நோயும்பிணியும்அருந்துயரமும்நுகரஉடைய வாழ்க்கை ஒழியத் தவம் 
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசையநான்முகனும்,மண்ணும்விண்ணும்
தாய அடி அளந்தான்,காணமாட்டாத்தலைவர்க்குஇடம்போலும் - தண்சோலை விண் 
தோயும் - கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: உடலை வருத்தும்நோய்களையும் மனத்தை வருத்தும்கவலைகளையும் அவற்றால் வரும் துன்பங்களையும் அனுபவிக்கும் இந்த வாழ்க்கை நீங்குவதற்கு உரிய தவம் புரியும் எண்ணத்துடன் நீவிர்நிற்கின்றீர். நீவீர் அனைவரும் தாமரை மலர்மேல்உறையும் நான்முகனும்,மண்ணையும்விண்ணையும் தன் காலால் அளந்ததிருமாலும்,காணமாட்டாத தலைவனாகியசிவபெருமானுக்கு உரிய இடமாகிய விண் தோயும்சோலைகளால் சூழப்பட்டகடந்தை நகரில் உன்ளதிருத்தூங்கானைமாடப்பெருங்கோயில் சென்று அங்கு அருள்பாலித்து வரும் சிவபெருமானைத்தொழுவீர்களாக.

குறிப்புரை: இதுவும் அது. நோய் - உடலைப்பற்றியனவாகிவாதபித்தசிலேட்டுமத்தால்விளைவன.  பிணி - மனத்தைப்பிணித்து நிற்கும் கவலைகள். அருந்துயரம் - அவற்றால் விளையும் துன்பங்கள்.  வாயும் - பொருந்தும். தாய - தாவிய.

Ye companions! You all are tired of your life, which is full of miseries caused by bodily illness and mental worries. Do you all want to get rid of such a miserable life and do penance? If so you all come to Thoongaanai-maadam temple in the city of Kadanthai which is surrounded by tall trees in the cool groves which brushes the sky. The four faced Brahma who is seated in the Lotus flower and Thirumaal who scaled the earth and heaven by His two feet could not see our Lord Civan entempled here. You offer worship with devotion to this Lord Civan and fulfil your wishes by His grace.

பகடூர்பசிநலியநோய்வருதலாற்பழிப்பாயவாழ்க்கையொழியத்தவம்
முகடூர்மயிர்கடிந்தசெய்கையாருமூடுதுவராடையருநாடிச் சொன்ன 
திகடீர்ந்தபொய்ம்மொழிகள்தேறவேண்டாதிருந்திழையுந்தானும்பொருந்திவாழுந்
துகடீர்கடந்தைத்தடங்கோயில்சோதூங்கானை மாடந்தொழுமின்களே.10

பகடுஊர்பசிநலிய,நோய் வருதலால்,பழிப்புஆய வாழ்க்கை ஒழிய,தவம் 
முகடு ஊர் மயிர் கடிந்தசெய்கையாரும் மூடு துவர்ஆடையரும்நாடிச் சொன்ன 
திகழ் தீர்ந்தபொய்ம்மொழிகள்தேறவேண்டா,;திருந்திழையும்தானும் பொருந்தி வாழும் 
துகள் தீர் கடந்தைத்தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்தொழுமின்களே!

பொருள்: பெரும்பசியால்நோய்கள் வந்து வருத்துவதால்பழிக்கத்தக்கஇவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய நீவீர்விரும்புகின்றீர். தலை உச்சி முடியைப் பிடுங்கும்சமணரும், உடலைக் காவி நிற ஆடையால்போர்த்தபுத்தர்களின்ஞானமற்றபொய்மொழிகளை நம்ப வேண்டாம். இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்றகடந்தைநகர்த் தடங்கோயிலாகியதூங்கானைமாடம் சென்று,தவம் செய்து,அங்குள்ள சிவபெருமானைத் தொழுவீர்களாக.

குறிப்புரை: பிறப்பறுக்கப்புறச்சமயத்தார்பொய்ம்மொழிகளைத்தேறவேண்டா. தூங்கானை மாடம் தொழுமின்கள்என்கின்றது. பகடு ஊர் பசி - யானைப்பசி. முகடு - தலையுச்சி. திகழ் தீர்ந்த - விளக்கம் ஒழிந்த. துகள் - குற்றம்.

Ye companions! You are suffering from many diseases caused by severe hunger. Do you want to perform penance to get freed from such a wretched life? Then do not listen to the false and inglorious propaganda by the bald headed Jains and by Buddhists who cover their body in ochre robes. All of you come to the sacred Thoongaanai- maadam temple where Lord Civan is happily enshrined along with His consort, and offer worship to Him with full devotion.

மண்ணார்முழவதிரும்மாடவீதிவயற்காழிஞானசம்பந்தன்நல்ல
பெண்ணாகடத்துப்பெருங்கோயில்சேர்பிறையுரிஞ்சுந்தூங்கானைமாடமேயான்
கண்ணார் கழல்பரவுபாடல்பத்துங்கருத்துணரக்கற்றாருங்கேட்டாரும்போய்
விண்ணோருலகத்துமேவிவாழும்விதியதுவேயாகும் வினைமாயுமே.11

மண் ஆர்முழவுஅதிரும்மாட வீதி வயல் காழிஞானசம்பந்தன்,நல்ல 
பெண்ணாகடத்துப்பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும்தூங்கானைமாடம்மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல்பத்தும் கருத்து உணரக்கற்றாரும்கேட்டாரும் போய், 
விண்ணோர்உலகத்து மேவி வாழும் விதிஅதுவே ஆகும்;வினை மாயுமே.

பொருள்: கருஞ்சாந்துபூசப்பட்டமுழவு ஒலி செய்யும் மாடவீதிகளைக்கொண்டுள்ள வயல்கள்சூழ்ந்தசீகாழிப்பதியில்தோன்றியவர் ஞானசம்பந்தர். இவர்,பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவியதிருத்தூங்கானை-மாடத்து இறைவன் சிவபெருமானின்திருவடிகளில்போற்றிப்பாடியுள்ளார். இவர் பாடியபாடல்கள் பத்தையும்கற்றவரும்,கேட்டவரும்,விண்ணவர் உலகத்தை அடைந்து வாழ அப்பாடல்களே தவப்பயன் தரும். வினைகள்அழியும்.

குறிப்புரை: சுடர்க்கொழுந்து நாதன் கழலைப்பரவும் பாடல் பத்தும்கருத்துணரக்கற்றாரும்கேட்டாரும் தேவராய்வாழ்வர். வினைகள்மாயும்எனப் பயன் கூறுகின்றது. மண் - மார்ச்சனை.

Gnaanasambandan was born in Seekazhi which is surrounded by fields, and streets with mansions where the musical notes of drums pasted black resound. He hailed and adored the Holy Feet of Lord Civan in the great temple of Thiru-th- thoongaanai-maadam and sang these ten verses. Those who studied, or heard these ten verses will reach the world of Devas and will be bestowed with all the goodness of penance performed. Also they will get freed of their sins.

Note: It was at Thoongaanai-maadam St. Appar was blessed to receive the inscribing of the insignia of Saivism on his person when he prayed to Civa thus:
"O Lord Sutar-k-kozhuntu of Thoongaanai-maadam
Of Katanthai - girt with vaulting clouds!
Be pleased to inscribe on my person
The effulgent, three-leaved trident".
Thoongaanai-maadam is an extraordinary shrine of singular and sacred significance. The message of the Godly child is this:
It is tapas that shows the way to deliverance". Tapas in Siva Siddhantha is asceticism practised through charya, kriya and yoga leading to gnosis that confers moksha.
Our saint says that the best place for performing tapas is Kadanthai where Thoongaanai-maadam is situated.

P 826

Maarcchanai: A black paste glued to the head of a percussion instrument to enhance its resonant quality.
In every stanza of this hymn, the saint points to the miseries inherent in the repeated cycles of births and deaths and exhorts devotees to get rid of this conundrum through prayers to Lord Civa at Thiru-th-thoonganai-maadam. Evidently, an indication of the high importance of this shrine in saivite lore.
In stanza (9), there is reference to the episode of Thirumaal scaling the earth and the heavens, during interaction with the King Bali. Even though, this incidence is well known the usage of the verse " அடி அளந்தான் தாய " reminds one of Thiru-k-kural (verse 610) where Valluvar has used precisely the same words "அடி அளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”. Thiru-k-kural must have been quite popular even in Sambandar's time. Further, it must have been studied avidly by all saivites as a noble code of ethics.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 59th Hymn

திருச்சிற்றம்பலம்

59ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

60.திருத்தோணிபுரம்

திருத்தலவரலாறு: 
முதலாம் பதிகம் பார்க்க. 
பதிக வரலாறு:

பிரிவாற்றாத தலைவி,வண்டு முதலியவற்றை திருத்தோணிபுரத்தில் உள்ள .சிவபெருமானிடம்தூதாக அனுப்புவதாக அகப்பொருள் துறையில் இத்திருப்பதிகம் அமைந்து உள்ளது.

60. THIRU-TH-THONI-PURAM

THE HISTORY OF THE PLACE

See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

           The mistress who is unable to bear her separation from her Lora, requests the king bee and other birds to go to Him as her special messenger and convey to Him about her pathetic condition due to her separation from Him. The ten verses in this hymn come under the category of love-theme (äü¦шïííáíî). The real philosophical meaning is that the soul's deep anxiety to reach the pervasion of Lord Civan and to enjoy His Supreme bliss.

திருச்சிற்றம்பலம்

60.  திருத்தோணிபுரம்
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

வண்டரங்கப்புனற்கமலமதுமாந்திப்பெடையினொடும்
ஒண்டரங்கஇசைபாடுமளியரசேஒளிமதியத்
துண்டரங்கப்பூண்மார்பர்திருத்தோணிபுரத்துறையும்
பண்டரங்காக்கென்நிலைமைபரிந்தொரு காற்பகராயே.1

வண்தரங்கப் புனல் கமல மது மாந்திப்பெடையினொடும்
ஒண்தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்- 
துண்டா,அங்கப்பூண்மார்பர்,திருத்தோணிபுரத்துஉறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

பொருள்: வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில்,மலர்ந்த தாமரை மலர்களின் தேனைக்குடித்துத் தன் பெண் வண்டோடு களித்து,சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும்அரசவண்டே! என்மேல் பரிவு கொள்ளாய்! என் பிரானாகிய சிவபெருமான் ஒளி பொருந்திய இளம் பிறையைமுடியிற்சூடியுள்ளார்.  எலும்பு மாலைகளை மார்பில் அணிகலனாகப்பூண்டுள்ளார். திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடுகின்றார். அவரிடம் சென்று எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும்பகர்வாயாக.

குறிப்புரை: பிரிவாற்றாமையால்பேதுறுகின்ற தலைவி,தன் நிலைமையை உணர்த்த வண்டைத்தூதாக அனுப்பக்கருதி,அதனைப் பார்த்து வேண்டுகின்றாள். வண்தரங்கம் - வளப்பமான அலை. தரங்க இசை -அலைபோல்அசைகின்றஇசையின்ஆலத்தி. அளி - வண்டு. மதியத்துண்டர் – பிறைத்துண்டை அணிந்தவர். அங்கப்பூண் - எலும்பாகிய ஆபரணம். பண்டரங்கன் - பண்டரங்கக்கூத்தை ஆடுபவன்.  பதினொரு வகைக்கூத்தினுள் சிவபெருமான் திரிபுரத்தைஅழித்தபோதுவெண்ணிறணிந்து ஆடிய கூத்து,தான் ஏவுந்தொழிலுக்குஉடந்தையாய் இருக்க அளி அரசே எனச் சிறப்பித்து அழைத்தாள்.  பெடையினொடும்இசைபாடும் அளி என்றதனால்,பிரிவுத்துன்பம்அறியாமையால்,அழைத்து உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிலும் மது மாந்திமயங்கியவர்களுக்கு,காதல் வாழ்க்கையில் களித்து இருப்பவர்களுக்குஉணர்த்தினாலல்லது தானே உணரும் ஆற்றல் இல்லை என்பதையும்அறிவித்தவாறு.  பெடையோடு இருக்கும் அளியைமூன்றாமவளாகிய தான் பார்த்தமையால் உடன் உறைவுஇனிக்கூடாது;  என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையையும்குறிப்பித்தாள். இசைபாடும் அளியாதலின்,தோணிபுரநாதரை உன் இசை முதலில் வசப்படுத்த,என்னிலைமையைஎடுத்தியம்ப உனக்கு இனிய வாய்ப்புக்கிட்டுமென்றுஉணர்த்தினாள். காதலனொடுகளித்திருக்கும்பெடை வண்டு பெண்கள் படும்பிரிவுத் துன்பத்தை நன்கு முன்னர் அறியுமாயினும்,அதனைத் தனித்து மற்றொரு தலைவனிடத்து அனுப்புதல் மரபு அன்றாகலின் அளி அரசே என ஆண் வண்டைவிளித்தாள்.  நீ செல்லினும்என்னிலைமைஉணர்த்தக் கூடிய அள விற்கு அவகாசம் இராதென்பாள்பண்டரங்கற்கு என்றாள். கூத்தில் ஈடுபட்டவர்க்குக் கேட்பதற்கு அவகாசம் ஏது? இத்தனை நயங்கள் இப்பாடலில் பொதிந்து ஆன்மாவின் பெண்மைத் தன்மையை மிகுதிப்படுத்தி, இறைவனாகியதலைவனின் இன்றியமையாமையை உணர்ந்து இடையறாப்பேரன்பாகிறவண்டைத்தூதனுப்புகின்ற நிலை மிக அறிந்து இன்புறுதற்கு உரியது. அளி என்பது அன்பிற்கும் ஒரு பெயராதல் காண்க.

Oh king bee! You have consumed a lot of honey from the lotus flowers grown in deep ponds, where wavelets dash against the banks. You move up and down like those wavelets and make music and enjoy with your mate. Kindly have sympathy on my pathetic condition due to my separation from my Lord. Therefore fly up to reach my Lord and explain to Him at least once, my mental suffering I am undergoing due to His separation from me. He accommodates in His head the bright crescent moon. He wears over His chest garland of bones as His ornament. He will be dancing in Thiru-th- thōni-puram the special dance known as 'Pandarangam'. These are His identification for your guidance to spot Him. Do oblige me!

Note: Pandarangam: is the name of one of the many dances enacted by Civa.

எறிசுறவங்கழிக்கானலிஎங்குருகேஎன்பயலை
அறிவுறாதொழிவதுவுமருவினையேன்பயனன்றே
செறிசிறார்பதமோதுந்திருத்தோணிபுரத்துறையும்
வெறிநிறார்மலர்க்கண்ணிவேதியர்க்குவிளம்பராயே.

எறிசுறவம்கழிக் கானல் இளங்குருகே! என் பயலை 
அறிவுஉறாதுஒழிவதுவும்அருவினையேன் பயன் அன்றே! 
செறி சிறார் பதம் ஒதும்திருத்தோணிபுரத்துஉறையும்
வெறி நிற ஆர்மலர்க்கண்ணிவேதியர்க்குவிளம்பராயே!

பொருள்: வெற்றி கொள்ளும் இயல்புடையசுறாமீன்கள் நிறைந்த கடலை அடுத்த உப்பங்கழி அருகில் உள்ள சோலைகளில் வாழும் இள நாரையே! என்னுடைய பிரிவுத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பது,என் வினைப்பயன் அல்லவா?தூய்மையான மனமுடைய சிறுவர்கள் பலர்கூடிபதமந்திரங்களைஓதிப்பயிலும்திருத்தோணிபுரத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவர்,மணமும் நிறமும் கொண்ட மலர் மாலையை தன் தலையில் சூடியிருக்கின்றார். அவரிடம் சென்று என் துன்ப நிலையைக்கூறுவாயாக.

குறிப்புரை: வண்டின் இன்னிசை அங்கு ஓதப்படும் வேத ஒலியில் இறைவன் காதில் வீழாது என்பதை உணர்ந்த தலைவி,தாரை போல் பெருங்குரல் இடும் குருகைத்தூதனுப்ப எண்ணி,என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் என் வினைப்பயன் தான்;ஆயினும் அவர்க்கு நீ சொல்லு என்று தூதனுப்புகின்றாள். சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை (பசலை) - தலைவனைப் பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறி சிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். நீ இளங்குருகாயிருந்தும் என் நோய் அறியாதது என் வினைப்பயன் என்றாள்.

Oh young heron! You live in the groves adjoining the salt pans near the sea. You wait there for the swordfish which is a habitual killer of all that comes before it. It is my evil fate that you are not aware of my affliction till now. On my behalf, kindly go to Lord Civan who is entempled in Thiru-th-thōni-puram where you will find many young pupils chanting again and again the pentad mantras and trying to memorise them. Their voice reverberates all around. Lord Civan, the author of Vedas, wears in His head fragrant and elegant flowers. These are the identification for your guidance, to help reach the proper place and to meet Him. Introduce yourself as you are my special messenger and explain to Him my sufferings due to His separation from me. Do oblige!

பண்பழனக்கோட்டகத்துவாட்டமிலாச்செஞ்சூட்டுக்
கண்பகத்தின்வாரணமேகடுவினையேனுறுபயலை
செண்பகஞ்சேர்பொழில்புடைசூழ்திருத்தோணிபுரத்துறையும்
பண்பனுக்கென்பரிசுரைத்தாற்பழியாமோ மொழியாயே.3

பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச்செஞ்சூட்டுக்
கண்புஅகத்தின்வாரணமே! கடுவினையேன் உறு பயலை, 
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத்தோணிபுரத்துஉறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ?மொழியாயே!

பொருள்: பண்படுத்தப்பட்டவயல்களின்கரைகளில்சம்பங்கோரைகள் முளைத்திருக்இன்றன. அவற்றின் இடையே வருத்தமின்றி மகிழ்ச்சியாக வாழும் சிவந்த உச்சிக்கொண்டையை உடைய கோழியே! சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால்சூழப்பட்டதிருத்தோணிபுரத்தில், எனக்கு இனியனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். கடுமையானி என் வினைப்பயனால்,அவரைப் பிரிந்து மிகுதியான பசலை நோயால் வருந்தி வாடுகின்றேன். அவரிடம் சென்று என் நிலைமையை அறிவித்தால் உனக்குப் பழி விளையுமோ?சொல்வாயாக.

குறிப்புரை: இளங்குருகும் இவள் துன்பத்தை அறியாதாகவே,கோழியைவிளித்துக்கூறுகிறாள்.  நற்பண்புடையநாயகனுக்கு என் தன்மை உரைத்தால்உனக்குப்பழியாவந்துவிடும் என வேண்டுகிறாள்.  பழமை - வயல். கோடு - கரை. சூட்டு - உச்சிக் கொண்டை. கண்புஅகத்தின் – சம்பங்கோரையின் நடுவில்.'செருந்தியோடுகண்பு அமர்ந்து ஊர்தார்' (மதுரைக்122)என்பதிலும்இப்பொருளதாதல் காண்க.  தன் துன்பம் கண்டும் தான் தூதுபோகாமல் இருப்பது வருத்தம் அறியாமையால் என்று எண்ணிய தலைவி வாட்டமில்லாவாரணமேஎன்கின்றாள். சம்பங்கோரையின் நடுவில் வாழ்வதால் உனக்கு வருத்தம் தெரியாது. ஆனாலும் நீ ஒரு சேவலாதலின்எம்போலியர்வேண்டுகோளைமொழியத்தான் வேண்டும், என்று வற்புறுத்துகிறாள். அதற்குள்,நான்போய்ச்சொல்லுகிறேன் அவர் கேட்பாரோ என்று ஐயம் வாரணத்திற்குஉண்டாவதாக எண்ணி,தன் தலைவன் பண்பன் என்று அறிவிக்கின்றாள். அதிலும் சிறப்பாக அவனியல்பு அவன் ஊருக்கும்,ஊர் இயல்பு அவனுக்கும்உண்டாகையாலேசெண்பகஞ்சோ் பொழில்சூழ்தோணிபுரம் என்ற குறிப்பால்,வண்டு மொய்க்காதமலராகிய செண்பகம் சேர்ந்திருப்பதால் வண்டுகள் செல்ல அஞ்சுகின்றன. நீ கோரையின் நடுவில் வாழ்வதால் தோணி அணுகும்போது செல்லும் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணித்தான் உன்னை அனுப்புகின்றேன்என்கின்றாள்.

Oh! ruddy crested rooster! You reside happily without any want amidst the elephant grass grown on the well-developed ridges of the fields. I am restless in my mind due to my evil fate and my complexion is becoming pale owing to the separation of my Lord (love sickness). My Lord abides in Thiru-th-thōni-puram which is surrounded by thick groves full of chambaka trees (Michelia champaca - which yields very fragrant yellow flowers). My Lord is a very pleasant and good-natured one. Do you feel that any blame will fall upon you if you apprise Him about my pathetic condition? (Certainly not. Kindly go and explain to Him my sorrowful situation). Note: Kanupu: This Tamil word refers to Sampang-korai which is elephant-grass.
Even while experiencing the agony resulting from separation, the lady-love does not blame her beloved. She but bemoans her bad karma.

காண்டகையசெங்காலொண்கழிநாராய்காதலாற்
பூண்டகையமுலை மெலிந்து பொன்பயந்தாளென்றுவளர்
சேண்டகையமணிமாடத்திருத்தோணிபுரத்துறையும்
ஆண்டகையாற்கின்றேசென்றடி யறியவுணர்த்தாயே.4

காண் தகையசெங்கால்ஒண்கழிநாராய்! “காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று,வளர் 
சேண் தகைய மணி மாடத்திருத்தோணிபுரத்துஉறையும்
ஆண்தகையாற்குஇன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

பொருள்: உப்பங்கழியில் வாழும் அழகுமிக்ககால்களை உடைய நாரையே! வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக்கொண்டுள்ளதிருத்தோணிபுரத்தில்,ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு இன்றே சென்று அடைவாயாக. காதல் மிகுந்ததால் அணிகலன்கள் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து உன் அடியவன் வருந்துகிறான் என்று என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.

குறிப்புரை: கோழியும்பயன்படாதொழிய,நாரையைப் பார்த்து வேண்டுகிறாள். நாராய்! தோள் மெலிந்து மேனி பசந்தாள் என்று இன்றே சென்று உணர்த்து என்கின்றனள். காண்தகைய - அழகுமிக்க.  பூண்தகைய - அணிகளால்அழகுபெற்ற. பொன்பயந்தாள் - பயலை பெற்றாள். சேண் - ஆகாயம்.  அவர் ஆண்டகையாய் இருப்பதால் அவரால் பூணத்தக்கதளராதமுலையும் தளர்ந்து. மெலிந்து,மேனி பசந்தது என்று உணர்த்தினால்,உடனே வந்து'தலையளிசெய்வர் என்று இன்றே சென்று தூது சொல்ல வேண்டிய இன்றியமையாமையை விளக்குகிறாள். நீ சென்றால் பிறர் கண்ணில் படாமல் தங்கி,என் தூதை இரகசியமாய்ச்சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத்தங்குவதற்குமணிமாடங்கள் இருக்கின்றன.  அவரோதிருத்தோணிமலைச்சிகரத்தில் இருக்கிறார் என்று செவ்வி அறிதல் எளிமையும் செப்புகிறாள்.  இதில் நுகர்ச்சிக்குரிய முலை மெலிந்தால் இனி அவருக்கு பயன்படுமாறுயாங்ஙனம்என்பதனையும் உணர வைத்தாள். அடி - காரணம்.

Oh! Beautiful red footed heron living in salt pans! Kindly inform my Lord that due to my love sickness, my jewelled breasts have become small and charmless and my complexion has turned pale. Kindly go to day itself to Thiru-th-thōni-puram where you will notice the tall and imposing mansions brush the sky. Here abides my Lord Civan who is the most adorable of all. Tell Him the reason and make Him realise the affliction of His servitor - this unfortunate soul of mine.

Note: (i.e.) sea embrazing land. In Tamil literature, is associated with folks bitten by the love bug (vide the five fold classification of - land in Tamil grammar works). wherein sorrowing couples suffer the pangs of separation.

பாராரேயெனையொருகால்தொழுகின்றேன்பாங்கமைந்த
காராருஞ்செழுநிறத்துப்பவளக்காற்கபோதகங்காள்
தேராருநெடுவீதித்திருத்தோணிபுரத்துறையும்
நீராருஞ்சடையாருக்கென் நிலைமை நிகழ்த்தீரே.5

பாராரே,எனைஒரு கால்;தொழுகின்றேன்,பாங்கு அமைந்த 
கார் ஆரும்செழுநிறத்துப்பவளக்கால்கபோதகங்காள்! 
தேர் ஆரும்நெடுவீதித்திருத்தோணிபுரத்துஉறையும்
நீர் ஆரும்சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்திரே!

பொருள்: அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய மாடப்புறாக்களே! உம்மைத்தொழுகின்றேன்.  வண்டு முதலியவற்றிடம் என் நிலைமையைக்கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பார்க்கவில்லை. தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில்,கங்கை தங்கிய சடையினை உடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். நீவீர் அங்கு சென்று, என் பிரிவாற்றாதநிலையைக்கூறுவீர்களாக.

குறிப்புரை: இங்ஙனம் நாரை முதலானவற்றை இவள் வேண்ட அவை இவளைத்திரும்பியும்பாராமல் ஒழிய,இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில்,மாடப்புறாக்களைஅழைத்துக்கூறுகிறாள்.  கபோதகங்காள்! உங்களைத்தொழுகின்றேன். என் தலைவருக்கு என் நிலையை உணார்த்துங்கள் என்கின்றாள். எனை ஒருகால் பாராரே - யான் அழைத்த அளி குருகுமுதலியவர்கள் என்னை ஒருமுறையும்பாராரே. அளி முதலியவற்றைப் பாரார் என உயர்திணையாற் கூறியது,பிரிவால்விளைந்த பேதைமையால் ஆகும். பாங்கு - பக்கத்தில். கார்ஆரும் - கருமை நிறைந்த. கபோதகம் - மாடப்புறா. நீர் -கங்கை. கபோதகங்காள்எனப் பன்மை வாய்ப்பாட்டால் அழைத்தது புறாக்கள் என்றும் இணை பிரியாமல் இருத்தலின். அன்றி,இணைந்து வாழுகின்றஇவைகளும் என் வேண்டுகோளிற்காகப் பிரிந்து, யான் அடையும் துன்பத்தை இவைகள் எய்தல் ஆகாது என்ற இரக்கத்தாலும் ஆம். தலைவனை “நீர் ஆரும்சடையார்” என்றது கங்கையாகிய ஒருத்தி எஞ்ஞான்றும் உடன் உறைவதால்அவருக்குப்பிரிவுத் துன்பம் தெரியாது. நிழலில்இருப்பவனுக்கு வெயிலின் கொடுமை தெரியாதவாறுபோல,என்னிலையைக் கண்ட நீங்களே சொல்லும் வன்மையால்அவரைச்செவிமடுக்கச் செய்ய வேண்டும் என்று குறிப்பித்தவாறு.

Oh! Ye strong hued, well-formed pigeons with feet of coral shade! I adore you all! I conveyed my love-sickness to the king bee and many others. None so far met me once even. They turned a deaf ear to my request. Therefore I now appeal to you all; please go to Thiru-th-thōni-puram where chariots will be plying now and then in the broad streets. In this town my Lord Civan abides in whose matted hair lady Ganges (River Ganges personified) also abides. Kindly apprise Him of my affliction and my pitiable plight.

Note: The idea is that Civa who is the conqueror of death, should grant His devotee the deathless beatitude, by allowing the praying devotee (one who prays), to get communion with His salvific feet.

சேற்றெழுந்தமலர்க்கமலச்செஞ்சாலிக்கதிர்வீச
வீற்றிருந்தஅன்னங்காள்விண்ணோடுமண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணிபுரத்தீசன்துளங்காத
கூற்றுதைத்ததிருவடியேகூடுமாகூறீரே.

சேற்று எழுந்த மலர்க்கமலச்செஞ்சாலிக்கதிர் வீச, 
வீற்றிருந்தஅன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத்தோணிபுரத்து ஈசன்,துளங்காத
கூற்று உதைத்த,திருவடியேகூடுமாகூறீரே!

பொருள்: வளமான சேற்றிடைமுளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல்,நெற்பயிர்கள் தம் கதிர்களையேசாமரையாக வீச, அரசபோகத்தில்வீற்றிருக்கும்அன்னங்களே! விண்ணுலகத்தையும்மண்ணுலகத்தையும்வேதங்களையும் தோற்றுவித்த சிவபெருமான்திருத்தோணிபுரத்தில் உறைகின்றார். அவர் யாவராலும் அசைக்க முடியாத இயமனைதன்காலால் உதைத்து அழித்தவர். அந்தத் திருவடிகளை யாம் அடையும்வழிகளைக்கூறுவீர்களாக.

குறிப்புரை: புறாக்களும்இன்பத்தில் மூழ்கி அசையாதிருக்க,தாமரை ஆசனத்தில்இருபுறமும் செந்நெற்கதிர்களாகியசாமரைவீசஅரசபோகத்தில் இருக்கும் அன்னங்கள் இவள் கண்ணில் பட்டன.  இந்த அரசஅன்னமாவது என் குறையை நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தாள்.  தனக்குப்,பிரிவேபெருங்காலனாக இருந்து உயிர்கொள்வதைஉணர்த்தினாள்.காலகாலன்திருவடியைக்கூடினால்கலக்கமில்லை என்று தெரிவித்துக்கொள்கின்றாள். விண்ணும்மண்ணும் தோற்றுவித்தல் – பொருட்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல். மறையைத் தோற்றுவித்தல் - சொற்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல்.

Oh! Swans! You enjoy kingly pleasures and abide in the opulent mire where the panicles of paddy, fan the lotus flowers that rise aloft in the mire. Kindly let me know the ways and means to have communion with the Holy Feet of Lord Civan who kicked to death Yama, the god of death. Lord Civan is the first cause to create the heaven and earth and author of the Vedas and abides in Thiru-th-thōni-puram town.

முன்றில்வாய்மடற்பெண்ணைக்குரம்பைவாழ்முயங்குசிறை
அன்றில்காள்பிரிவுறுநோயறியாதீர்மிகவல்லீர்
தென்றலார்புகுந்துலவுந்திருத்தோணிபுரத்துறையும்
கொன்றை வார்சடையார்க்கென்கூர்பயலைகூறீரே.

முன்றில்வாய்மடல்பெண்ணைக்குரம்பை வாழ்,முயங்கு சிறை, 
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்;மிக வல்லீர்; 
தென்றலார் புகுந்து உலவும்திருத்தோணிபுரத்துஉறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

பொருள்: வீடுகளின் வாயிற் பகுதியில் மட்டைகளோடு கூடிய பனை மரங்களில் கூடுகள் கட்டி வாழ்ந்து தம் பெடைகளைத்தழுவும்சிறகுகளோடு கூடிய அன்றில்பறவைகளே! நீவீர் பிரிவுத் துன்பத்தை அறியமாட்டீர். ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகள் உடையது திருத்தோணிபுரம். கொன்றை மாலை அணிந்தசடைமுடியினை உடைய சிவபெருமான் அங்கு எழுந்துள்ளார். அவரிடம் சென்று என்பால் மிகுந்துள்ள பசலை நோயின்தாக்கத்தை எடுத்து உரைப்பீர்களாக.

குறிப்புரை: அன்னங்களாலும்பயன்பெறாதுமயங்கிய தலைவி,பனை மடலில் வாழும் அன்றிலைப் பார்த்துக் கூறுகிறாள். அவள் பார்த்த "தாலம் பகல் ஆதலின்அன்றில்கள்கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. ஆதலால் அவற்றை அழைக்கின்ற அவள் உங்களுக்குப்பிரிவுத்துன்பமே தெரியாது.  ஆனாலும் மிக வல்லவர்கள். என் பயலை நோயைக்கூறுங்கள்என்கின்றாள். மேலும் “தென்றலார் புகுந்துலவு”” என இளவேனிற்காலம்வந்தமை காரணத்தால் தான்படும் துன்பத்தை மிகுத்துக் காட்டுகின்றாள். “கொன்றைவார்சடையார்க்கு” என்ற குறிப்பால்என்நோயைக்கூறுகின்ற நீங்கள், அவர் சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப்பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால்,அது பெற்றாயினும்உய்வேன் என்று,உபாயம் அறிவித்தாள். முன்றில் - வாயில். மடற்பெண்ணை - மட்டைகளோடு கூடிய பனை. குரம்பை - கூடு. முயங்கு சிறை - தழுவியிருக்கின்றசிறகுகள். கூர் பயலை - மிக்க பசலைநோய்.

Oh! Nightingale of India! You build your nest in between the stems of palmyrah tree that grows in the front yard of houses. You happily abide there with your mate embracing it with your plumes. You never part from your mate. Therefore you are unaware of the affliction due to separation. However by nature, you are an expert in bestowing affection especially to your mate. Therefore, I request you to meet my Lord Civan who abides in Thiru-th-thōni-puram where the southern wind blows gently in the streets. He wears in His matted hair the garland of cassia flowers. You meet Him and explain to Him in detail the love-sickness that afflicts me very badly because of His separation from me.

Note: Andrils (male and female) never part from each other. It is said that the male sleeps with one eye shut, while its other eye is open and watches its sleeping mate.
In Tamil 'thendral' means southerly wind.

பானாறுமலர்ச்சூதப்பல்லவங்களவைகோதி
ஏனோர்க்குமினிதாகமொழியுமெழிவிளங்குயிலே
தேனாரும்பொழில்புடைசூழ்திருத்தோணிபுரத்தமரா
கோனாரையென்னிடைக்கேவரவொரு காற்கூவாயே.8

பால் நாறும் மலர்ச் சூதப்பல்லவங்கள் அவை கோதி, 
ஏனோர்க்கும்இனிதுஆகமொழியும் எழில் இளங்குயிலே! 
தேன்ஆரும்பொழில் புடை சூழ் திருத்தோணிபுரத்து அமரர்- 
கோனாரைஎன்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!

பொருள்: பால் மணம் கமழும்மலர்களைக் கொண்ட மாமரத்தின்தளிர்களைக் கோது உண்டு,எல்லோர்க்கும்இனிதாகக்கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும்திருத்தோணிபுரத்தில் தேவர் தலைவனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவர் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் அங்கு சென்று கூவுவாயாக.

குறிப்புரை: பிரிவுநோய்அறியாமையினாலேஅன்றில்பறவைகளும் பேசாமல் இருக்க,குரல் நயம் இன்மையால் அவரும் கேளார் என்ற எண்ணத்தால்,அவரை மீட்டும்வற்புறுத்தாதுகுயிலைப்பார்த்துத் தலைவன் வரக்கூவாய்! என வேண்டுகின்றாள். குயில் மாந்தளிரை உண்டு மிக இனிமையாகக்கூவும் தன்மையது என்று குறிக்கின்றாள். அது அங்கு சென்று கூவினாலே போதும் அவர் மனம் மாறும் என்று எதிர்நோக்கினளாக,அளி முதலியவற்றைப் பார்த்துப்பகராய்,விளம்பாய் என வேண்டிய அவள்,இதனைக் கூவாய் என்று மட்டும் வேண்டுகிறாள். தோணிபுரத்தைப்பொழில்சூழ்தோணிபுரம் என்றது தூது போகின்றகுயிலுக்குத் தங்குமிடம் வசதியாய் உள்ளது என்பதை அறிவிக்க. என் இடைக்கேஎன்பதில், ஏகாரம் வந்தால் பிரியவிடாதுகாப்பாற்றும்பொறுப்பும்உன்னுடையதே என்று குறிப்பித்து நிற்கின்றது.  சூதப்பல்லவம் - மாந்தளிர்.

Oh! the young and good looking Indian Cuckoo (a bird celebrated in Indian poetry for the sweetness of its notes) - you are cooing sweetly to one and all. You eat the tender shoots of mango tree full of fragrant flowers. The aroma of the flower similar to milk spreads all around. You, please go to my Lord Civan, Chief of Devas who resides in Thiru-th-thōni-puram. This town is surrounded by groves full of honey- laden flowers. See Him there, and request Him to visit me by cooing near Him your sweet note at least once.

Note: Kuyil: Pope says that Kuyil is mystically speaking, the human soul.

நற்பதங்கள் மிக அறிவாய் நானுன்னைவேண்டுகின்றேன்
பொற்பமைந்தவாயலகிற்பூவைநல்லாய்போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர்மறையாளர்திருத்தோணிபுரத்துறையும்
விற்பொலிதோள்விகிர்தனுக்கென்மெய்ப்பயலை விளம்பாயே.9

நல் பதங்கள் மிக அறிவாய்;நான் உன்னை வேண்டுகின்றேன்; 
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய்! போற்றுகின்றேன்; 
சொல்பதம் சேர் மறையாளர்திருத்தோணிபுரத்துஉறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

பொருள்: அழகாக அமைந்த வாயாகியஅலகினை உடைய நாகணவாய்ப்பறவையே! நான் உன்னைத்துதித்துப்போற்றுகின்றேன். தலைவனிடம்முறையிடுதற்கு உரிய நல்ல சந்தர்ப்பத்தை நீ நன்கு அறிவாய். ஆகையால்,உன்னிடம் நான் வேண்டிக் கொள்ளுகிறேன்.  திருத்தோணிபுரத்தில்வேதங்களில்வல்லவர்களும்,சொல்லப்படுகின்ற பதம் என்னும் ஓதும் முறை அறிந்த சான்றோர்களும்வாழ்கின்றனர். அங்கு எழுந்தருளியவில்லாற்பொலிந்த தோளை உடைய விகர்தனாகியசிவபெருமானிடம் என் உடலிற்தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.

குறிப்புரை: குயிலும்வேனிற்காலத்தன்றி,வேறு காலங்களில் தூது செல்லும் தரத்தன அல்ல என்பதை உட்கொண்ட தலைவி,நாகணவாய்ப்புள்ளைவேண்டுகின்றாள். நற்பதங்கள் மிக அறிவாய் - நல்ல சந்தர்ப்பத்தை நன்றாக அறிவாய். பொற்பு - அழகு. சொற்பதம் - சொல்லப்படுகின்ற பதம் என்னும் ஓதும் முறை. தலைவன் தோளும்சாமர்த்தியமுமே தம்மை வசீகரித்தன என்பாள். தோள் விகிர்தனுக்கு என்றாள். தன்னுடைய உள்ளக் காதலை,மெய்ப்பயலை பலர் அறியப்பரப்புதலின்,அதனை நீக்க வேண்டியதன்இன்றியமையாமையை எடுத்து இயம்புக என்று குறிப்பித்தாள்.

Oh lovely Bush Myna (áшů um...) having a charming beak of mouth.  I adore and praise you. I know that you are adept at establishing liaison with my Lord. I shall now let you know my grievance. Kindly go to my Lord who carries a bow on His bright shoulders and who is the pre-eminent, Supreme Lord („ðåä). He abides in Thiru-th-thōni-puram where eminent Vedic scholars also reside. The Vedic words they chant are full of musical note. Meet my Lord in Thiru-th-thōni-puram and apprise Him in a convincing manner of the seriousness of my affliction, as a result of which, my complexion became pale.

சிறையாருமடக்கிளியேயிங்கேவாதேனொடுபால்
முறையாலேயுணத்தருவன்மொய்பவளத்தொடுதாளந்
துறையாருங்கடற்றோணிபுரத்தீசன்றுளங்குமிளம்
பிறையாளன்திருநாமமெனக்கொருகாற் பேசாயே.10

சிறை ஆரும்மடக்கிளியே! இங்கே வா! தேனொடு பால் 
முறையாலே.உணத்தருவன்;மொய்பவளத்தொடு தாளம் 
துறை ஆரும் கடல்-தோணிபுரத்து ஈசன்,துளங்கும் இளம்- 
பிறையாளன்,திருநாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!

பொருள்: அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்னிடம் வருவாயாக. நான்உனக்குத்தேனையும்பாலையும் மாறி மாறிஉண்ணத் தருவேன்.  என்னிடம் வருவாயாக.  நான் நெருக்கமான பவளங்களையும்முத்துக்களையும்கரைகளில்சேர்ப்பிக்கும் கடல் அருகில் திருத்தோணிபுரம் உள்ளது. அங்கு இளம்பிறை சூடியசிவபெருமான் உறைகின்றார். அப்பெருமானின் திருநாமத்தை எனக்காக ஒருமுறையேனும் என் செவி குளிரப்பேசுவாயாக.

குறிப்புரை: இங்ஙனம் சேய்மையிலும்அண்மையிலும் இருக்கின்ற பொருள்களை வேண்டிக் கொள்ள, அவை பயன்படாதொழியவே,தான்வளர்த்தகிளியையே நோக்கி,ஒருகால் அவர் பெயரைச் சொல் என்று வேண்டுகின்றாள். இதுவரை தூது வேண்டிய அவள் இப்போது கிளியிடம் பெயரை வேண்டுவது,கிளி சென்று தூதுரைத்துத் தலைவரை உடன்படுத்திஅழைத்துவரும் வரையில் பிரிவுத்துன்பம் பொறுக்க முடியாத அளவு பெரிதாம் என்பதை எண்ணி,தலைவனுடையபெயரைக்கேட்கின்றஅளவிலாவதுதுன்பந் தோன்றாது என்ற குறிப்பினளாக இங்ஙனம் வேண்டுகின்றாள். அங்ஙனம் சொல்வதற்குக்கைக்கூலியும் தருவதாகதேனொடுபால் முறையாக உண்ணத்தருவேன்என்கின்றாள்.

Oh young parrot! I very much admire your attractive coloured wings. Kindly do come to me. I will feed you honey and milk alternately which you will definitely enjoy very much. I think you know the town Thiru-th-thōni-puram which is near the sea that brings plenty of coral and pearls and drops them on the shores. In that city my Lord Civan abides wearing the young crescent moon in His matted hair. May I request you to pronounce His divine name 'Namasivaayaa' at least once, in your sweet tone, so as to enable me to enjoy in my mind, this holy chant, through my ears.

போர்மிகுத்தவயற்றோணிபுரத்துறையும்புரிசடையெங்
கார்மிகுத்தகறைக்கண்டத்திறையவனைவண்கமலத்
தார்மிகுத்தவரைமார்பன்சம்பந்தனுரை செய்த 
சிர்மிகுத்ததமிழ்வல்லார்சிவலோகஞ் சேர்வாரே.11

போர் மிகுத்த வயல் - தோணிபுரத்துஉறையும்புரிசடைஎம்
கார் மிகுத்தகறைக்கண்டத்துஇறையவனை,வண்கமலத்- 
தார் மிகுத்தவரைமார்பன் - சம்பந்தன் - உரைசெய்த
சீர் மிருத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

பொருள்:திருத்தோணிபுரம் வைக்கோற்போர் மிகுதியாகக் கொண்ட,வயல்களால் சூழப்பட்டு உள்ளது. அங்கு முறுக்கேறியசடையினையும்,கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். வளமையான தாமரை மலர் மாலை அணிந்தமார்புடையவனானஞானசம்பந்தன்இப்பெருமானைப்போற்றிப் பாடினார்.  புகழ்பொருந்தியஇத்தமிழ்பதிகத்தைஒதிநினைய வல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை: கழுமலநாதனைப்பற்றிச்சம்பந்தர்அருளிச் செய்த சிறப்பமைந்தஇத்தமிழ் மாலையை ஓத வல்லவர்கள் சிவலோகம் சார்வர்எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது. போர் - வைக்கோற்போர்.  கார் - கருமை. கமலத்தார்மிகுத்த வரை மார்பன் - தாமரை மலர் மாலை அணிந்த மார்பை உடையவன்.  அந்தணர்க்கு அடையாள மாலை தாமரை யாதலின் இங்ஙனம் கூறினார். பதிகங்கள் தோறும் கூறப்பெறும்இராவணனைஅடர்த்தவரணி புத்தர் சமணர்களைப் பற்றிய குறிப்பு இவைகள் இத்திருப்பதிகத்து இல்லாமை ஊன்றி இன்புறுதற்குரியது. சன்மார்க்கநெறியில்தலைவனும் தலைவியுமாகஇறைவனும்ஆன்மாவும்ஈடுபடுகிறபோது காதல் வெள்ளத்துஆழங்காற்படுகின்றபோது,  இறைவனுடையஇன்றியமையாத் தன்மை உள்ளத்தைக்கவர்ந்துநின்றபோது இன்ப உணர்ச்சியன்றி வேறு எதுவும் தோன்றாது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Lord Civan abides in Thiru-th-thōni-puram that abounds in rich fields and many big haystacks. His neck is of dark blue colour similar to sapphire gem. Gnaanasambandan wears garland of lotus flowers on his comely and majestic chest. He sung this glorious Tamil hymn on Lord Civan of Thiru-th-thōni-puram. Those who are well-versed in reciting these hymns will, for sure, gain access to Civa-Loka.

Note: Sending messages to loved ones through the medium of verse (as carriers of news) is common in literary folklore. Vide Kantha Puraanam,

in Aham Naanuuru a mother appeals to crow for help in bringing back her daughter by promising a good food in golden cup. However, in sangam literature, animal food is widely spoken about

THIRU-CH-CHITRAM-BALAM
End of 60th Hymn

திருச்சிற்றம்பலம்

60ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம் 
61.திருச்செங்காட்டங்குடி 
திருத்தலவரலாறு: 
ஆறாம் திருப்பதிகம் பார்க்க.

பதிக வரலாறு: 
நாகை,கீழ்வேளுர் முதலிய தலங்களைவணங்கிக் கொண்டு பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளுகின்றபோது,இச்செய்தியைச்செவியுற்றசிறுத்தொண்டர் ஓடிப் போய் அழைத்துவந்து திருச்செங்காட்டங்குடிசேர்ப்பித்தார். சிறுத்தொண்டரோடுநட்புக் கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கின்ற காலத்தில் கணபதீச்சரம்வழிபடச்சென்றார். கோயிலை வலங்கொண்டார். அரவணிந்தார்அடிக்கீழ்வீழ்ந்து எழுந்து திருமுன் கைகூப்பி நின்று, சிறுத்தொண்டர் தொழ இருந்த பெருமையைச் சிறப்பித்து நறை கொண்ட மலர்தூவி” என்னும் பொங்கியெழும்இசைப்பதிகமாகியஇதனைப் பாடினார்.

61. THIRU-CH-CHENG-KAATTANG-KUDI

THE HISTORY OF THE PLACE

See 6th Hymn.

INTRODUCTION TO THE HYMN

This Temple is called Ganapathy-eech-charam.

Our saint adored Civa at Nakaippattinam and Keezhvelur and continued his pilgrimage. Sirutthondar called on him and took him to his hometown, namely Thiruchchengkaattangkudi. In its temple Ganapathi-eechcharam the following hymn was sung by the godly child.

திருச்சிற்றம்பலம்

61.திருச்செங்காட்டங்குடி 
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

நறைகொண்ட மலர்தூவிவிரையளிப்பநாடோறும்
முறைகொண்டுநின்றடியார்முட்டாமேபணிசெய்யச்
சிறைகொண்டவண்டறையுஞ்செங்காட்டங்குடியதனுள்
கறைகொண்டகண்டத்தான்கணபதீச் சரத்தானே.1

நறை கொண்ட மலர் தூவி,விரை அளிப்ப,நாள்தோறும் 
முறை கொண்டு நின்று,அடியார். முட்டாமே பணி செய்ய, 
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடிஅதனுள், 
கறை கொண்ட கண்டத்தான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: சிறகுகளை உடைய வண்டினங்கள்ஒலிக்கும் இடம் திருச்செங்காட்டங்குடி- அந்த இடத்தில் கணபதீச்சரம் என்னும் கோயிலில்,விடக்கறை பொருந்திய கண்டத்தினராகச் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு,அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய மலர்களைத்தூவி,மணம் கமழச்செய்வித்து,இடைவிடாமல் பணிசெய்து வழிபடுகின்றனர்.

குறிப்புரை: அடியார் மணந்தரும்பூக்களைத்தூவி வழிபட இறைவன் கணபதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்றான்என்கின்றது. நறை - தேன். விரை - மணம். முறைகொண்டு - விதிப்படி.  முட்டாமே - இடைவிடாமல். சிறை - சிறகு. அயம் - ஒலிக்கும். கறை - விடம்.

Lord Civan whose neck is of dark blue colour similar to the colour of sapphire gem, is entempled at Ganapathy-eechcharam in the Thiruchchengkaattangkudi town, where the humming sound of the winged bees is heard all around. Devotees without any break daily offer flowers full of honey to this Lord and worship Him. The pleasant smell of the flowers prevails everywhere in the shrine.

Note: Honey is symbolic of moksha. Fragrance in floral service is Civa-manam.

வாரேற்றபறையொலியுஞ்சங்கொலியும்வந்தியம்ப
ஊரேற்றசெல்வத்தோடோங்கியசீர்விழவோவாச்
சீரேற்றமுடைத்தாயசெங்காட்டங்குடியதனுள்
காரேற்ற கொன்றை யான்கணபதீச்சரத்தானே:  

வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும்வந்துஇயம்ப, 
ஊர் ஏற்றசெல்வத்தோடு ஓங்கிய சீர் விழவுஓவாச்
சீர் ஏற்றம் உடைத்துஆயசெங்காட்டங்குடிஅதனுள், 
கார் ஏற்ற கொன்றையான் - கணபதீச்சரத்தானே.

பொருள்:திருச்செங்காட்டங்குடியில்வாராஇழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் நீங்காது ஒலிக்கின்றன. ஊர் முழுவதும் செல்வவளங்கள் நிறைந்துள்ளன. மேன்மையான புகழை உடையதிருவிழாக்கள் இடைவிடாது நிகழும் இடம் இது. - இங்கு விளங்கும் கணபதீச்சரம்என்றகோயிலில்கார்காலத்தேமலரும் கொன்றை மலரைஅணிந்துள்ள சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.  

குறிப்புரை: பலவகை வாச்சியஒலிகள்நீங்காததும்விழவறாததுமாகியசெங்காட்டங்குடிக் கணபதீச்சரத்தான்என்கின்றது: வார் ஏற்ற பறை - வாரால்இழுத்துக்கட்டப்பெற்ற பறை. சீர் ஏற்றம் - புகழின் மிகுதி. கார் - கார்காலம்.

Lord Civan wears the cassia flowers that blossom during the rainy season and is enshrined at Ganapathy-eechcharam in Thiruchcheng-kaattangkudi. In this town, festivals take place all round the year. During these festivals the noise of drums tightened by leather straps as well the noise of conch shells reverberate all around. The glory and fame of this prosperous city spreads everywhere.

Note: Festivities keep alive the glory of the Vedic faith.

வரந்தையான்சோபுரத்தான்மந்திரத்தான்தந்திரத்தான்
கிரந்தையான்கோவணத்தான்கிண்கிணியான்கையதோர்
சிரந்தையான்செங்காட்டங்குடியான்செஞ்சடைசேருங்
கரந்தையான்வெண்ணீற்றான்கணபதீச்சரத்தானே 3

வரந்தையான்,சோபுரத்தான்,மந்திரத்தான்,தந்திரத்தான், 
கிரந்தையான்,கோவணத்தான்,கிண்கிணியான்,கையது ஓர் 
சிரந்தையான்,செங்காட்டங்குடியான்,செஞ்சடை சேரும் 
கரந்தையான்,வெண்நீற்றான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: கணபதீச்சரத்தில்எழுந்தருளியுள்ள இறைவன்,வரந்தை,சோபுரம் ஆகிய தலங்களில்எழுந்தருளி இருப்பவன்,வேதாகமங்களைஅருளிச் செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற்சண்கிணிஅணிந்தவன். கையில் உடுக்கைஒன்றைஏந்தியவன்.  சிவந்த சடைமுடி மீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறுஅணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில்கணபதீச்சரத்தில்எழுந்தருளி உள்ளான்.

குறிப்புரை: வரந்தை முதலிய பதிகளில்இருப்பவனும்,உடுக்கை,கோவணம்,கிண்கிணி,கபாலம் இவற்றை உடையவனும்கணபதீச்சரத்தான்என்கின்றது. வரந்தை,கிரந்தை,சோபுரம்என்பனஊர்ப் பெயர்கள். மந்திரம் - வேதம். தந்திரம் - ஆகமம். கையது ஓர் சிரந்தையான் - கையின்கண்ணதாக ஓர் உடுக்கையை உடையான். சிரந்தை - உடுக்கை. கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு:

Lord Civan who is entempled in Thiruchchengkaattangkudi also presides over the towns of Varanthai and Chōpuram. He is the author of Vedas and Aagamaas He is clad in a fore-lap cloth (C) strapped to His loins. He wears on His feet tinkling anklets. He holds a small drum (á) in His hand. He wears on His ruddy matted hair the Karanthai leaves. He is the Lord of Thiruchcheng-kaattangkudi who smears His body with holy ashes.

Note: Kirantai: This place is not identified.

தொங்கலுங்கமழ்சாந்துமகிற்புகையுந்தொண்டர்கொண்
டங்கையால்தொழுதேத்தஅருச்சுனற்கன்றருள்செய்தான்
செங்கயல்பாய்வயலுடுத்தசெங்காட்டங்குடியதனுள்
கங்கைசேர்வார்சடையான்கணபதீச்சரத்தானே. ன க டக

தொங்கலும்கமழ்சாந்தும்அகில்புகையும் தொண்டர் கொண்டு, 
அங்கையால்-தொழுது ஏத்த,அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்; 
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடிஅதனுள்; 
கங்கை சேர் வார்சடையான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: சிவபெருமான் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவர். முன்பொரு நான் சிவனை நோக்கி தவம் செய்த அருச்சுனனுக்கு அருள் செய்தவர். வந்த கயல்மீன்கள் பாயும் வளமான வயல்களால்சூழப்பட்டதிருச்செங்காட்டங்குடியில்கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி உள்ளார். தொண்டர்கள் மாலைகளும் மணம் கமழும்சந்தனமும், அகில் புகையும் கொண்டு தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சித்த உடனே அருள் செய்யும் பெருமான் இவர்.

குறிப்புரை: அருச்சுனனுக்கு அருள் செய்தான் கணபதீச்சரத்தான்என்கின்றது. தொங்கல் - மாலை.

Lord Civan is enshrined at Ganapathy-eechcharam in the Thiruchcheng-kaattangkudi town surrounded by fertile fields where ruddy kayal fish leap about. He accommodates the river Ganges in His long matted hair. Servitors perform puja and adore, praise and worship Him by their graceful hands using fragrant flower garlands, sandalwood paste, and the smoke of eaglewood. He graces the servitors then and there. He showered Blessings on Arjunan in the days of yore, in response to this prayers and rituals.

பாலினால்நறுநெய்யாற்பழத்தினாற்பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணைர்ந்தடியார்புரிந்தேத்தச்
சேலினார்வயல்புடைசூழ்செங்காட்டங்குடியதனுள்
காலினாற்கூற்றுதைத்தான்கணபதீச் சரத்தானே.5

பாலினால்நறுநெய்யால்பழத்தினால் பயின்று ஆட்டி, 
நூலினால் மணமாலை கொணர்ந்து,அடியார் புரிந்து ஏத்த, 
சேவின்ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடிஅதனுள், 
காலினால் கூற்று உதைத்தான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: திருச்செங்காட்டங்குடி,சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்களால் புடை சூழப்பட்டு உள்ளது. இங்குள்ள கணபதீச்சரத்தில்,தனது இடது காலால் இயமனை உதைத்த சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்." இங்கு,அடியவர்கள் ஆகமவிதிப்படி பாலினாலும்,மணம் கமழும்நெய்யாலும்,பழங்களாலும்பலகாலமாக விரும்பி அபிடேகிக்கின்றனர். மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி! அன்போடு வழிபடுகின்றனர்.

குறிப்புரை: அடியார் பாலும்நெய்யுங்கொண்டுஅபிடேகித்து மணமாலை கொண்டு வழிபடக் கூற்றுதைத்தான். இவ்வூரான்என்கின்றது. பயின்று - பலகாலும்பழகிநூலினான் - வேதவிதிப்படி.  புரிந்து - விரும்பி.

Lord Civan kicked with His left leg Yama, the god of death. He is enshrined at Ganapathy-eechcharam in the Thiruchchengkaattangkudi town which is surrounded by fertile fields having plenty of carp fishes. Devotees of Civan offer worship to Him, here in this temple, full of devotion. They perform the sacred bath and other rituals strictly according to prescribed rules of the Aagamaas. They use milk, fragrant fresh ghee, different kinds of fruits and other sacred items for the holy bath. Then they garland Him with elegant flowers, and worship Him.

நுண்ணியான்மிகப்பெரியான்ஓவுளார்வாயுளான்
தண்ணியான்வெய்யானந்தலைமேலான்மனத்துளான்
திண்ணியான்செங்காட்டங்குடியான்செஞ்சடைமதியக்
கண்ணியான்கண்ணுதலான் கணபதீச்சரத்தானே.6

நுண்ணியான்,மிகப் பெரியான்,நோய்்உளார் வாய் உளான், 
தண்ணியான்,வெய்யான்,நம் தலைமேலான்,மனத்துஉளான், 
திண்ணியான்,செங்காட்டங்குடியான்,செஞ்சடைமதியக்- 
கண்ணியான்,கண் நுதலான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: திருச்செங்காட்டங்குடியில்கணபதீச்சரத்தில்எழுந்தருளியுள்ள சிவபெருமான் நுண்ணியனயாவற்றிலும் மிக நுண்ணியன்,பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன். நோயினால்வருந்துபவர்களால்துதிக்கப்படுபவன். தன்னடியடைந்த அடியார்களுக்குகுளிர்ச்சியானவன். புறச்சமயத்தார்க்குவெய்யவன். ஞானிகளின் முடிமீதும்மனத்திலும்உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீதுபிறைமதிக் கண்ணியைச்சூடியவன். நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவன்.

குறிப்புரை: நுண்மைக்குநுண்ணியனாகவும்,பருமைக்குப்பரியனாகவும்,வருந்துவார்வாயுளானாகவும், தண்ணியனாகவும்வெம்மையனாகவும்,மேலும் அகத்தும்இருப்பவனாகவும்விளங்குங்கண்ணுதலான் கணபதீச்சரத்தான்என்கின்றது. நுண்ணியான் மிகப் பெரியான்” என்றதும்,அணோரணிீயாந்மஹதோ மஹீயாந் என்னும் உபநிடதக்கருத்தும்ஒத்தமை காண்க. தன்னடியடைந்தஅடியார்கட்குத்தண்ணியான், புறச்சமயத்தார்க்குவெய்யான்,கிரியாவான்களுக்குசகத்திரதளபத்மத்தின்மேலதாகத்தலைமேலோன், ஞானிகட்குமனத்துளான்என்க. கண்ணி - தலையில் சூடப்படும் மாலை.

Lord Civan who is enshrined at the Ganapathy-eechcharam in Thiruchchengkaattangkudi has the third eye in His forehead and wears the crescent moon in His ruddy matted hair. He is the subtlest of the subtle. He is much bigger than all the biggest. He is adored by the sick through their sincere prayers. He is cool and calm to those devotees who adore Him. But He will be very furious to those who defy Him. He is calm and steady temperamented. He is in the head and heart of His devotees and graces them as an invisible guide

Note: Pain is a blessing in disguise. It inculcates bhakti.

மையினார்மலர்நெடுங்கண்மலைமகளோர்பாகமாம்
மெய்யினான்பையரவமரைக்கசைத்தான்மீன்பிறழச்
செய்யினாரகன்கழனிச்செங்காட்டங்குடியதனுட்
கையினார்கூரெரியான்கண்பதீச்சரத்தானே.

மையின்ஆர்மலர்நெடுங்கண் மலைமகள் ஓர்பாகம்ஆம்
மெய்யினான்,பைஅரவம்அரைக்குஅசைத்தான்,மீன் பிறழ் அச்
செய்யின்ஆர்அகன்கழனிச்செங்காட்டங்குடிஅதனுள்
கையின்ஆர் கூர் எரியான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: சிவபெருமான்,கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாகத்தன்திருமேனியில்கொண்டுள்ளார்.  படத்தோடு கூடிய பாம்பைஇடையிலேகட்டியுள்ளார். கையில் மிகுந்துள்ளதீயை ஏந்தியுள்ளார். இவர் மீன்கள் துள்ளுகின்ற அந்த வயலையும்,அகன்ற நீர் நிலைகளையும், பண்படுத்தப்பட்டவயல்களையும்,தானே அமைந்த விளைநிலங்களையும் உடைய திருச்செங்காட்டங்குடிகணபதீச்சரத்தில்எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டவன்,கையில் மழுவேந்தியகணபதீச்சரத்தான் என்கின்றது. மையினார் மலர் - நீல மலர். பையரவம் - படத்தோடு கூடிய பாம்பு. மீன் பிறழ் அச்செய்யின் ஆர்அகன்கழனி - மீன்கள் துள்ளுகின்ற அந்த வயலையும்,நிறைந்த அகன்ற நீர்நிலைகளையும் உடைய.  செய் - பண்படுத்தப்பெற்ற வயல். கழனி - தானே அமைந்த விளைபுலம்.

Lord Civan is enshrined at Ganapathy-eechcharam in the Thiruchcheng- kaattangkudi town. This town is encircled by broad natural fields as well as developed fields where different kinds of fish swim around in the water. He is concorporate with His consort Paarvathi Devi, daughter of the Himalayan king, whose long dyed eyes resemble flowers. He is clothed in wasit by a hooded snake. He holds in one of His hands the sharp battle axe.

Note: The snake is symbolic of Kundalini yoga.

தோடுடையான்குழையுடையானரக்கன்றன்றோளடர்த்த
பீடுடையான்போர்விடையான்பெண்பாகமிகப்பெரியான்
சேடுடையான்செங்காட்டங்குடியுடையான்சேர்ந்தாடுங்
காடுடையானாடுடையான்கணபதீச்சரத்தானே.

தோடுஉடையான்,குழைஉடையான்,அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான்,போர் விடையான்,பெண் பாகம் மிகப் பெரியான், 
சேடு உடையான்,செங்காட்டங்குடி உடையான்,சேர்ந்து ஆடும் 
காடு உடையான்,நாடுஉடையான் - கணபத்தீச்சரத்தானே.

பொருள்: திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்தில்எழுந்தருளியுள்ள சிவபெருமான்,ஒரு காதில் தோடையும்;,பிறிதொரு காதில் குழையையும்அணிந்தவர்.  கயிலையைபெயர்த்தஇராவணனின்தோள்களைநெரித்த பெருமை உடையவர். போரிடும் காளையை உடையவர். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவர். மிகவும் பெரியவர்.  பெருமைகட்கு உரியவர். பூதகணங்களோடு சேர்ந்து ஆடும்சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்டவர். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருளாட்சி புரிபவர்.

குறிப்புரை: தோடும்குழையும்பீடும் உடையவன் என்பது முதலாக அவன் சிறப்பியல்புகள்பலவற்றைச் செப்புகிறது. தோடு சத்திபாகத்திற்குரியது. குழை சிவத்தின்பாகத்திற்கு உரியது. அரக்கன் - இராவணன். பீடு - பெருமை.

Lord Civan wears an 'ola roll' (C) in His left ear and an ear jewel (, 600) in His right ear. He is the eminent One who crushed the shoulders of Raavanan who tried to lift His abode mount Kailas. His vehicle is the martial Bull. He is the pre-eminent and glorious One, having His consort on the left portion of His body. He dances in the burning ground along with His hosts of goblins. He is entempled in Ganapathy-eechcharam and graces His devotees everywhere. He is Chief of the magnificent Kailas peak and also Chief of everywhere, forest and land.

Note: The first line of this verse is indicative of Civa's form as Ammai-appar. The glorious peak is Mt. Kailas. The Tamil word 'Cedu' means 'mountain peak'.

ஆனூராவுழிதருவானன்றிருவர்தேர்ந்துணரா
வானூரான்வையகத்தான்வாழ்த்துவார்மனத்துளான்
தேனூரான்செங்காட்டங்குடியான்சிற்றம்பலத்தான்
கானூரான்கழுமலத்தான் கணபதீச்சரத்தானே.9

ஆன்ஊராஉழிதருவான்,அன்று இருவர் தேர்ந்துஉணரா
வான்ஊரான்,வையகத்தான்,வாழ்த்துவார்மனத்துஉளான், 
தேனூரான்,செங்காட்டங்குடியான்,சிற்றம்பலத்தான், 
கானூரான்,கழுமலத்தான் - கணபதீச்சரத்தானே.

பொருள்:சிவபெருமான்இடபத்தில் ஏறி அதன் மீது ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவர்.  முன்னொரு காலத்தில் திருமால்,பிரமன் ஆகிய இருவர்க்கும்அடிமுடிகளைத் தேடி உணர முடியாதவாறுவானளாவ ஓங்கி நின்றவர். இவ்வையகத்திலும்,சிற்றம்பலத்திலும், தேனூரிலும்,கானூரிலும்,கழுமலத்திலும்விளங்குபவர். இவ்வாறு புறத்தில்வையகத்திலும் வானிலும்விளங்குபவர்,வாழ்த்துபவர்கள்மனத்தினுள்ளும்விளங்குபவர் ஆவார். இவர் திருச்செங்காட்டங்குடியில்கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: அவன் ஏறுவது விடை. இடம் வான்,வையகம்,வாழ்த்துவார் மனம்,தேனூர்,கானூர் முதலியன என்கின்றது. ஆன்ஊரா ஊழி தருவான் - இடபத்தைஏறிச்சுற்றுவான். இருவர் – அயனும் மாலும். வானூரான் - விண்ணிடமாக ஓங்கி வளர்ந்தவன். இங்ஙனம் புறத்தானே எனினும் வாழ்த்துவார் மனத்தகத்துள்ளான்.

Lord Civan rides on His bull through many realms. He is the Lord who, in the past, stood as a big column of Fire blazing beyond the upper reaches of the atmosphere, unknowable to Thirumaal and Vishnu. In this earth He is enshrined in Citrambalam (Chidambaram) Thenoor, Kanoor and Kazhumalam towns. Though He is externally present as above, He also resides internally in the minds of His devotees, who adore Him. This Lord Civan is enshrined at Ganapathy-eechcharam in the Thiruchcheng- kaattangkudi town.

செடிநுகருஞ்சமணர்களுஞ்சீரவரத்தசாக்கியரும்
படிநுகராதயருழப்பார்க்கருளாதபண்பினான்
பொடிநுகருஞ்சிறுத்தொண்டாக்கருள்செய்யும்பொருட்டாகக்
கடிநகராய்வீற்றிருந்தான் கணபதீச்சரத்தானே.10

செடி நுகரும்சமணர்களும்,சீரவரத்தசாக்கியரும், 
படி நுகராத அயர் உழப்பார்க்குஅருளாதபண்பினான்; 
பொடி நுகரும்சிறுத்தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர்ஆய்வீற்றிருந்தான் - கணபதீச்சரத்தானே.

பொருள்: முடைநாற்றத்தைநுகரும்சமணர்களும்,காவி ஆடை உடுத்த புத்தர்களும் எம்பெருமானுடையஅருளை அறியாது துன்புறுபவர்கள். அவர்களுக்கு எம்பெருமான் அருள்புரியாதஇயல்பினர். திருநீற்றுமணத்தையேநுகரும்சிறுத்தொண்டநாயனாருக்கு அருள் செய்யும் பொருட்டுத்திருச்செங்காட்டங்குடியைத்தலமாகக் கொண்டு அங்குள்ள கணபகூதீச்சரத்தில்எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை: புறச்சமயத்தார்க்கிருளாயிருப்பவன்சிறுத்தொண்டநாயனார்க்கு அருள் வழங்க இந்நகரில் எழுந்தருளி இருக்கின்றான் என்கின்றது. செடி - நாற்றம். சீவரம் - காவியாடை. படி நுகராது – பூமியின் கண் நுகரத்தகுவனநுகராதே. அயர் உழப்பார் - துன்பத்தைத்தாமேதேடிக்கொண்டுவருந்துபவர்கள்.  பொடி - விபூதி. கடி நகர் - காவல் நகரம்.

The stinking smell that emanates from the body of Samanars spreads all around. Buddhists cover their body with ochre-robed cloth. Both these people suffer in their life; because they neither realise nor acknowledge the golden attributes, aspects and the supremacy of our Lord Civan. Naturally they get deprived of His grace. For the sole purpose of showing grace on Siru-th-thonda-naainaar, a great devotee of Civan, who hails from this town and who wears only the sweet smelling holy ashes of Civan, our Lord is enshrined at the Ganapathy-eechcharam in Thiruchchengkaattangkudi.
Note: St. Thiru-Gnaanasambandar, a contemporary of Siru-thondar gives an advance indication through this verse, about Lord Civan's plans to redeem Siru-thondar from within this shrine in Thiruchchengkaattangkudi.

கறையிலங்குமலர்க்குவளைகண்காட்டக்கடிபொழிலின்
நறையிலங்குவயற்காழித்தமிழ்ஞானசம்பந்தன்
சிறையிலங்குபுனற்படப்பைச்செங்காட்டங்குடி சேர்த்தும் 
மறையிலங்குதமிழ்வல்லார் வானுலகத்திருப்பாரே.11

கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக்கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
சிறை இலங்கு புனல் படப்பைச்செங்காட்டங்குடி சேர்த்தும் 
மறை இலங்கு தமிழ் வல்லார்வான்உலகத்துஇருப்பாரே.

பொருள்: நீலமலராகியகுவளைக் கண் போல் மலர்ந்து விளங்குவதும்,மணம் கமழும் சோலைகளில் உள்ள தேனின் மணம் வீசுவதுமான,வயல்களால்சூழப்பட்டசீர்காழிப் பதியில்தோன்றியவர் தமிழ் வல்லவரானஞானசம்பந்தன். கரைகளோடு நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்து திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் சுணபதீச்சரத்துச் சிவபெருமான்மீதுவேதப் பொருள் நிறைந்த இப்பதிகத்தைப் பாடினார். இத்திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லார்வானுலகில்வாழ்வார்கள்.

குறிப்புரை: இத்திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர்கள்வானுலகத்திருப்பவர்என்கின்றது.  கறை இலங்கு மலர் - நீலமலர். நறை - தேன். சிறை - கரை. படப்பை - தோட்டம். மறை இலங்கு தமிழ் - வேதக் கருத்துக்கள் விளங்கும் தமிழ்ப்பாடல்கள்வானுலகத்து இருப்பார் - புண்ணிய லோகந்துய்க்கச் சென்ற தேவர்கள்போலாதுஅயனால்படைக்கப்பட்டபதினென்கணத்தவர்களில்ஒருவராக என்றும் இருப்பார்.

Gnaanasambandan, scholar in Tamil hails from Seekaazhi which is encircled by fields and groves, where fragrant smell of honey and flowers spreads all around; lilies ( ̄á шær) like unto human eyes, blossom in the ponds everywhere. He sang this hymn on Lord Civan of the Eechcharam temple in Thiruchchengkaattangkudi, which is surrounded by fields full of water with well-formed ridges. Those who can master these Tamil hymns, which is the gist of the Vedas, will abide and flourish in heaven.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 61st Hymn

திருச்சிற்றம்பலம்

61ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

62.திருக்கோளிலி 
திருத்தலவரலாறு:

திருக்கோளிலி என்ற திருத்தலமானதுசோழநாட்டுக்காவிரித்தென்கரைத் தலம் ஆகும்.  திருவாரூரில் இருந்து பேருந்துகளில்செல்லலாம். திருக்குவளை என வழங்கப்பெறுகிறது.  ஆதியில் பிரமன் சிருட்டித்தொழிலைப்பெறவேண்டிப்பூசித்தான். அதனால் பிரமதபோவனம் என வழங்கப் பெறும். இது சப்தவிடங்கத்தலங்களுள் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ளதியாகர் அவனிவிடங்கர்,நவகோள்கள்பூசித்துப் பேறு பெற்றமையால்கோளிலி என வழங்கப்பெறுகிறது.

இறைவன் பிரமபுரீசுவரர். அம்மை வண்டமர்பூங்குழலாள். தியாகர்ஊழிப்பரன். அவனி விடங்கத்தியாகர். விநாயகர் தியாக விநாயகர். முருகன் சுந்தரவடிவேலன். சுந்தர மூர்த்திகளுக்குக்குண்டையூர்கிழார் தந்த நெல் மலையைப்பூதங்களைக் கொண்டு திருவாரூரில் சேர்ப்பித்தஅற்புதத் தலம். 
தீர்த்தம்,முத்தி நதியாகிய சந்திர நதி,மணி கர்ணிகை,இந்திர தீர்த்தம்,அகத்திய தீர்த்தம், விநாயகதீர்த்தம்,சக்திதீர்த்தம்என்பன.தலவிருட்சம்தேற்றாமரம்

வழிபட்டவர்கள்: 
பிரமதேவர்,திருமால்,இந்திரன்,அகத்தியன்,முசுகுந்தன்,பஞ்சபாண்டவர்கள், நவகோள்கள்,ஓமகாந்தன் முதலியோர்.

விழாக்கள்: 
மாசிமகத்தில் நெல் திருவிழா,மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம்,கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் தீர்த்தம். தருமைஆதீனஅருளாட்சியில் உள்ளது.

கல்வெட்டு: 
இங்குள்ள கல்வெட்டுக்கள்19. இத்தலம் இராஜேந்திரசோழவளநாட்டுஇடையள நாட்டு வெண்டாழைவேளூர்க்கூற்றத்திற்குஉட்பட்டதாய் இருந்தது. வட்வல்லத்துஇருள்குடியான் இந்திராபதிநல்லூர்உய்ய வந்தான் சிய்யாழிப்பிள்ளையானஜெயதுங்கவன்மன்மகாமண்டபந் தொடங்கிக்கீழைவாசல் வரையில் திருப்பணி செய்தான். இத்திருப்பணிஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தது ஆகும். இத்திருக்கோயிலில்சிவன்படரில் (செம்படவர்) ஒருவனான ஆலன் என்பான் அதிபத்த நாயனார் படிவத்தைஎழுந்தருளிவித்தான்.

பதிக வரலாறு: 
மல்லல்நீடியவலிவலம்வணங்கிப்போதரும் பிள்ளையார்,கோளிலிப்பெரும்பதியை அடைந்து கோளிலிப் பெருமான் குரைகழலைக் கும்பிட்டு “நாளாயபோகாமே” என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடினார்.


62. THIRU-K-KOLILEE

THE HISTORY OF THE PLACE

The sacred city of Thiru-k-kōlilee is to the south of river Cauvery in Chola Naadu. It is accessible by bus from Thiruvaaroor. It is also called Thirukkuvalai.

The Lord is called Biramapureesuvarar and the Goddess is known as Vandamar Poongkuzhalaal. The Thiyaagar image is known by the names of Oozhipparan and Avanividangkath Thiyagaar. The Vinaayakar is known as Thiyaaga Vinaayakar. Murugan here is called Sundharar Vadivelan. The sacred fords are Muththi River or Chandhiranadhi, Manikarnikai, Indhira Theerththam, Agaththiya Theerththam, Vinaayaka Theerththam, and Sakthi Theerththam. The sacred tree is the Therraa tree (Communi; Water clearing nut tree; Strychnos pototorium).

In the beginning of creation, Brahman worshipped here to get the work of creation. For that reason this is called 'Biramathapovanam'. This is one of the seven 'vidangka' temples. It is called 'Kolili' as the nine planets (kol) offered worship here.

This temple is associated with the miracle of Siva's servants (bhoothas) transporting to Thiruvaaroor the huge amount of paddy given to Saint Sundharamoorthi by Kundaiyoor Kizhaar. In addition to Biraman and the nine planets, others who offered worship here include Indhiran, Agaththiyan, Mucukundhan, the Five Paandavaas, Omakaanthan and others.

The festivals celebrated here are the paddy festival in Maasi Magham, Aarudhraa Dharisanam in Maargazhi, and Theerththam on Kaarthigai Sundays. This temple is under the administration of Dharumai Aadheenam.

There are 19 inscriptions in this temple. During the reign of Jataavarman Sundharapaandiyan, one Jayathungkavarman renovated the part of the temple from the great mandapam to the east entrance. One Aalan of the fisherman clan had the image of Adhipaththa Naayanar installed here.

INTRODUCTION TO THE HYMN

From Valivalam our saint came to this holy place and sang the following hymn.

திருச்சிற்றம்பலம்

62.திருக்கோளிலி  
பண் : பழந்தக்கராகம்
ராகம் : ஆரபி

நாளயபோகாமேநஞ்சணியுங்கண்டனுக்கே
ஆளாயஅன்பு செய்வோம் மடநெஞ்சேயரன்நாமம்
கேளாய்நங்கிளைகிளைக்குங்கேடுபடாத்திறமருளிக்
கோளாயநீக்குமவன்கோளிலியெம் பெருமானே.1

நாள்ஆயபோகாமே,நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள்ஆய அன்பு செய்வோம்; -மடநெஞ்சே! - அரன் நாமம் 
கேளாய்! நம் கிளைகிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள்ஆயநீக்குமவன் - கோளிலிஎம்பெருமானே.

பொருள்: அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாட்கள் வீணாகிப் போவதற்கு முன்பே,நீலகண்டனானசிவபெருமானுக்குஅடியவராக விளங்கி,அவரிடத்தில் அன்பு செய்வாயாக. அப்பெருமானின்திருநாமங்களை எப்பொழுதும் கேட்பாயாக.  அவ்வாறு கேட்டால் நம் சுற்றத்தினரும் செழித்து இனிது வாழ்வர். துன்பங்கள்நம்மைத் தாக்காதவாறுஅருள்புரிவான். நம் மனத்தின்மாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருளுவான். அவ்விறைவன்,திருக்கோளிலி என்னும் தலத்தில்எழுந்தருளி உள்ளான்.

குறிப்புரை: வாழ்நாள் வீணாளாகக்கழியாத வண்ணம்,நீலகண்டனுக்குஆளாய் அன்பு செய்வோம்.  நமக்கு மட்டுமன்று;நம் சுற்றமுங்கூடநன்மையடையும்உபாயத்தைஅருளிச் செய்து கோள்களை நீக்குபவன்கோளிலிப் பெருமான் என்கின்றது. மடநெஞ்சே - அறியாமையை உடைய நெஞ்சமே.  கேளாய் - கேட்பாயாக. கிளை கிளைக்கும் - சுற்றம் சுற்றத்திற்குச் சுற்றம் இவைகட்கும். கோள் - மாறுபாடு.

Oh humanity! I pity your ignorance. Without wasting our lives on earth and before leaving this world, let us adore Lord Civan with sincere devotion, whose Let us attain bliss by hearing His name poisoned neck is of dark blue colour. Namasivaaya again and again. By this our kith and kin as well their kith and kin will flourish in life. Our Lord will remove our sufferings as well as our mental aberrations
and grace us. This Lord is enshrined at the temple in Thiru-k-kōlilee.

Note: In this verse Gnaanasambandan addresses literally the minds. However his intention is that he address humanity at large.

ஆடரவத்தழகாமைஅணிகேழற்கொம்பார்த்த
தோடரவத்தொருகாதன்துணைமலர்நற்சேவடிக்கே
பாடரவத்திசைபயின்றுபணிந்தெழுவார்தம்மனத்தில்
கோடரவந்தீர்க்குமவன்கோளிலியெம் பெருமானே.2

ஆடுஅரவத்து அழகு ஆமை,அணி கேழல்கொம்பு,ஆர்த்த
தோடுஅரவத்து ஒரு காதன்,துணைமலர்நல்சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று,பணிந்து எழுவார்தம் மனத்தில் 
கோடரவம்தீர்க்குமவன் - கோளிலிஎம்பெருமானே.

பொருள்: சிவபெருமான்,படம் எடுத்து ஆடும் இயல்புடையபாம்பைநாணாகக் கொண்டவர். அதில் அழுகிய ஆமை ஓட்டையும்,பன்றிக்கொம்பையும் கோர்த்து அணிந்திருப்பவர். தோடாகப்பாம்பையே கொண்டவர். திருக்கோளிலியில்எழுந்தருளி உள்ள எம்பிரானின் இரண்டு மலர் போன்ற நல்ல சிவந்த திருவடியில்துதிப் பாடல்களை இசையோடுபாடிப் பணிந்து வணங்குபவர்களின் மனக் கோணலைத்தீர்த்துஅருளுவான்.

குறிப்புரை: பாம்பாகியநாணில்ஆமையோட்டையும்,பன்றிக்கொம்பையும்கட்டியணிந்த இறைவன் திருவடியில்,துதிப்பாக்களைச் சொல்லி எழுவார்மனத்துக்கோணலை நீக்கும் பெருமான் இவர் என்கின்றது. கேழல் - பன்றி. தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு,பாடு அரவம் - பாட்டோசை.  கோடாவம் - கோணல்.

Lord Civan is bedecked with a snake to which is attached the turtle shell and the tusk of hog. Also He wears the snake itself as His ola roll (C). Those who adore Him in tuneful song glorifying and worshiping His twin beautiful, ruddy flower-like Holy Feet will get rid of their aberrations. This our Lord is enshrined in Thiru-k-kōlilee. 
Note: The carapace: Vishnu made an avatar in the shape of a tortoise. Civa had to wrench its carapace when it grew haughty beyond measure.
The Hog: Vishnu who made his avatar as a boar. Civa had to wrench its tusks when it grew haughty. Snakes are Civa's jewels. He alone can tame the thanatophidian creature.

நன்றுநகுநாண்மலரால்நல்லிருக்குமந்திரங்கொண்
டொன்றி வழிபாடு செயலுற்றவன்றனோங்குயிர்மேல்
கன்றிவருகாலனுயிர்கண்டவனுக்கன்றளித்தான்
கொன்றை மலர்பொன்றிகழுங்கோளிலியெம்பெருமானே.

நன்று நகுநாள்மலரால்,நல் இருக்குமந்திரம்கொண்டு, 
ஒன்றி வழிபாடு செயல்உற்றவன்தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் - 
கொன்றைமலர்பொன்திகழும்கோளிலிஎம்பெருமானே.

பொருள்: திருக்கோளிலியில்எழுந்தருளியுள்ளஎம்பெருமானாகிய சிவபெருமான் பொன் போன்று விளங்கும் கொன்றை மலரைச்சூடியிருக்கின்றார். இப்பெருமானை, மார்க்கண்டேயன் மலர்ந்த புதிய பூக்களைக்கொண்டும்,இருக்கு வேத மந்திரங்களைக் கூறியும்,மன ஒருமைப்பாட்டுடன் வழிபாடு செய்தான். இவனின் உயர்ந்த உயிரைக் கவர இயமன்சினந்து வந்தான். சிவபெருமான் இயமனது உயிரைப் போக்கியும், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரத்தையும்அருளினார்.

குறிப்புரை: அன்றலர்ந்தபுதுப்பூக்களைக் கொண்டு இருக்குவேதமந்திரங்களுடன் பூசை செய்த மார்க்கண்டேயன் மேல்வந்தகாலனை உதைத்து மார்க்கண்டனுக்கு உயிர் வழங்கிய இறைவன் இவன் என்கின்றது. நகுநாண்மலர் - மலர்ந்த புதுப்பூ. ஒன்றி - மன ஒருமைப்பாட்டுடன். கன்றி - கோபித்து.  கண்டு - போகக் கண்டு.

Sage Maarkandeyan was worshipping Lord Civan with single-minded deep devotion using fresh elegant flowers and chanting the Rig Vedic verses (Mantras). Yama, the Regent of Dharma Raajan, the god of death, came furiously to snatch away the life of this sage. Then he was kicked away to death by Lord Civan. Also Civan blessed Maarkandeyan, the youthful saint, and gave him the boon of Eternity without ageing beyond sixteen.

Note: Civa is worshipped with Vedic mantras. The form of worship is prescribed in the Aagamaas.

வந்தமணலாலிலிங்கமண்ணியின்கட்பாலாட்டும்
சிந்தைசெய்வோன்தன்கருமந்தேர்ந்துசிதைப்பான்வருமத்
தந்தைதனைச்சாடுதலுஞ்சண்டீசனென்றருளிக்| 
கொந்தணவுமலர்கொடுத்தான்கோளிலியெம் பெருமானே.4

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கண்பால்ஆட்டும்
சிந்தைசெய்வோன்தன் கருமம் தேர்ந்துசிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச்சாடுதலும், “சண்டீசன்'என்று அருளி, 
கொந்துஅணவும் மலர் கொடுத்தான் - கோளிலிஎம்பெருமானே.

பொருள்: விசாரசருமர்,மண்ணியாற்றங்கரையில்மணலால் இலிங்கம் அமைத்து, மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்துவழிபட்டார். இவரது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையானஎச்சதத்தனின் காலை விசாரசருமர்வெட்டினார். திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமானான சிவபெருமான்,அதனைக் கண்டு,விசாரசருமருக்குச்சண்டீசப்பதவிஅருளித்,தான் உண்ட கலத்தோடுசூடிய மலர் மாலைகளைச்சூடிக்கொள்ளும்சிறப்பையும் அளித்தார்.

குறிப்புரை: மண்ணியாற்றங்கரையில்மணலால் இலிங்கம் தாபித்துப்பாலாபிஷேகம் செய்த விசார சருமர் செயலை அறிந்து பூசனைக்கு இடையூறு செய்த தந்தை எச்சதத்தனைஒறுத்தலும்அவருக்குச் சண்டேசப்பதவியைக் கொடுத்து,சூடியமாலையும்உண்டகலமும்அருளிச் செய்தவர் இவர் என்கின்றது.  சிதைப்பான் - இடற. கொந்துஅணவும் மலர் - பூங்கொத்துக்களில் உள்ள மலர்.

A deeply devoted and learned youth of the priestly class, Visaara Sarumar () son of Echchathaththan (s) was tending cattle belonging to the entire people of his village Thiru-ch-chenga-loor (шái). He daily takes the cows to the rich grassy area on the banks of the river Manni (10600T 600f) to graze in the lawns. As the cows graze, he used to erect a Civalingam out of the river sand in the banks of the river and do all rituals including a sacred bath to the Lingam by milk obtained from the cows he was tending. His father came to know about his 'misuse' of the milk belonging to the cow owners in the village. He came to the riverbed and saw his son pouring a lot of milk over the Civalingam he had erected out of sand. By seeing this, he became furious and kicked the Civalingam and the milk pot etc., resulting in a mess of everything he has arranged. The son took a stick that was lying nearby and gave a severe blow on the leg of his father, which kicked his Civalingam. Lo! The wooden stick miraculously transmuted into an axe and his father fell down dead, his leg amputated. Lord Civa then appeared along with his consort before the saintly lad, pardoned his impartial action and graced him with several boons as under:

1. A position as chief Lord Civa's attendants known as 'Chandeesan' ( L&&GOT).
2. Flower garlands after His use daily.
3. His dress after His use daily.
4. His food along with His daily.
Such is our Lord enshrined at Thiru-k-kōlilee.

Note: The Linga spoken of here, is called the Kshanika-linga. It has to be daily evolved out of the wet sand and has to be dissolved into it after the puja is completed. It is Chandeesa who runs the shrine of Civa. The hagiography of Chandeesa indicates that all sections of the then society could be engaged in cattle breeding activity.

வஞ்சமனத்தஞ்சொடுக்கிவைகலும்நற்பூசனையால்
நஞ்சமுதுசெய்தருளுநம்பியெனவேநினையும்
பஞ்சிற்பார்த்தனுக்குப்பாசுபதமீந்துகந்தான்
கொஞ்சுகிளிமஞ்சணவுங்கோளிலியெம் பெருமானே.5

வஞ்சமனத்து அஞ்ச ஒடுக்கி,வைகலும் நல் பூசனையால், 
“நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி''எனவே நினையும்
பஞ்சவரில்பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான் - 
கொஞ்சுகிளி மஞ்சு அணவும்கோளிலிஎம்பெருமானே.

பொருள்: பாண்டவர் ஐவரில் ஒருவன் அருச்சுனன். அவன் தன் வஞ்சகமான மனத்தைத் இருத்தி,ஐம்பொறிகளை ஒடுக்கி,நாள்தோறும் நல்ல சிவபூசையைச் செய்தவன். “நஞ்சினை அமுதாகஉண்ட நம்பியே அடைக்கலம்” என நினைந்தசிவபக்தன். இந்த அருச்சுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்கி மகிழ்ந்தவர் சிவபெருமான். இப்பெருமான்,கொஞ்சும் கிளிகள் வானவெளியில்பறக்கும்திருக்கோளிலியில்எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஆவார்.

குறிப்புரை: பொறிகளைஒடுக்கித் தவம் செய்த விஜயனுக்குப் பாசுபதம் தந்த பரமன் இவர் என்கின்றது.  அஞ்சு - மெய் வாய் முதலிய பொறிகள் ஐந்து. வைகலும் - தினந்தோறும். பஞ்சவர் - பாண்டவர்.  பார்த்தன் - அருச்சுனன். மஞ்சு - ஆகாயம்.

Arjunan, one of the five Paandava brothers, controlled his deceiving mind, controlled his five senses, and daily worshipped Lord Civan daily addressing Him in his mind "Oh Lord Civa! You quaffed the poison as though it is nectar and saved the Devaas and all humanity from disaster". To him, Oh Lord Civa You happily gave Your invincible missile and projectile weapon (uus). This Civan is our Supreme Lord enshrined in Thiru-k-kōlilee where loveable parrots are flying in the sky above this town.

Note: The paasupata Astra, divine weapon, is the greatest. The astraas of Brahma and Naarayana are no match for it. So Krishna (Vishnu) helped Arjunaa to secure this from Civa.

தாவியவனுடனிருந்துங்காணாததற்பானை
ஆவிதனிலஞ்சொடுக்கியங்கணனென்றாதரிக்கும்
நாவியல்சீர்நமிநந்திபடிகளுக்குநல்குமவன்
கோவியலும்பூவெழுகோற்கோளிலியெம் பெருமானே.6

தாவியவன் உடன் இருந்தும் காணாததற்பானை, 
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, “அங்கணன்” என்று ஆதரிக்கும் 
நா இயல் சீர் நமிநந்தியடிகளுக்குநல்குமவன் - 
கோ இயலும் பூ எழு கோல் கோளிலிஎம்பெருமானே.

பொருள்: தலைமை சான்ற மலர் மரங்களை உடைய திருக்கோளிலியில்எம்பெருமானான சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். மூவுலகங்களையும் தனது ஒரு காலால் அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும்,தன் திருவடிகளை அவனால் காண இயலவில்லை.  சிவபெருமான் காணப்படாதஎல்லாவற்றிற்கும்மேலானவன். எனினும்,தன் ஐம்பொறிகளை ஒடுக்க,கருணையாளனாகஉயிர்க்குயிராய்காதலித்துசிவபெருமானைப் புகழ்ந்து வழிபடும்நமிநந்திஅடிகளுக்கு,விருப்பத்தோடு அருள் செய்த பெருமானாகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம் திருக்கோளிலி ஆகும்.

குறிப்புரை: உலகத்தைத்தாவியளந்ததிருமாலும்காணாததற்பரன்,பொறிகளை அடக்கி அன்பு செய்த நமிநந்தியடிகளுக்குப்புகழைத் தந்த பெருமான் இவர் என்கின்றது. தாவியவன் – மூவுலகத்தையும் ஈரடியால்தாவியளந்த திருமால். காணாததற்பரனை - நாயகனாகவும்,ஊர்வோனாகவும், ஆண்டானாகவும்,மைத்துனனாகவும்,கண்டதன்றித்தற்பரன் என்று காணப்படாதவற்றிற்கெல்லாம் மேலானாவனை.

Thirumaal measured the three worlds by his one foot. Even he could not perceive or find out the Holy Feet of Lord Civan who is the absolute deity independent of agencies (ur). Sage Nami Nandi Adigal suppressed his five senses and brought them under his mind's control. He was an ardent worshipper of Lord Civan whom he loved more than his own soul and adored by singing His praise. For this, our Supreme Lord Civa Perumaan who is enshrined in Thiru-k-kōlilee, graced him. This city is full of stately trees and plants full of flowers.
Note: Nami Nandi is one of the 63 Naayanmars.

Nami Nandi Adigal once went to the 'Aranneri Temple' (m) in the town Tiruvaaroor (). He wanted to undertake the service of lighting all the lamps in that temple. He went out to the neighbouring houses and asked for some ghee for lighting the lamps. The occupants were Samanars (Jains). They not only refused to give ghee but rebuked him. With a heavy heart he returned to the temple and prayed to Lord Civan. An ethereal voice was then heard, which thus "Take water from the temple tank and light the lamps". He immediately brought water. from the temple tank and lighted all the lamps. Lo! All the lamps started glowing more brightly than before and throughout the night. The Jains were stunned. All others enjoyed this and praised Lord Civan and Nami Nandi Adigal. Thirumaal measured the three worlds by his one foot. Even he could not perceive or find out the Holy Feet of Lord Civan who is the absolute deity independent of agencies (ur). Sage Nami Nandi Adigal suppressed his five senses and brought them under his mind's control. He was an ardent worshipper of Lord Civan whom he loved more than his own soul and adored by singing His praise. For this, our Supreme Lord Civa Perumaan who is enshrined in Thiru-k-kōlilee, graced him. This city is full of stately trees and plants full of flowers.
Note: Nami Nandi is one of the 63 Naayanmars.

Nami Nandi Adigal once went to the 'Aranneri Temple' (m) in the town Tiruvaaroor (). He wanted to undertake the service of lighting all the lamps in that temple. He went out to the neighbouring houses and asked for some ghee for lighting the lamps. The occupants were Samanars (Jains). They not only refused to give ghee but rebuked him. With a heavy heart he returned to the temple and prayed to Lord Civan. An ethereal voice was then heard, which thus "Take water from the temple tank and light the lamps". He immediately brought water. from the temple tank and lighted all the lamps. Lo! All the lamps started glowing more brightly than before and throughout the night. The Jains were stunned. All others enjoyed this and praised Lord Civan and Nami Nandi Adigal.

கன்னவிலுமால்வரையான்கார்திகழுமாமிடற்றான்
சொன்னவிலுமாமறையான்தோத்திரஞ்செய்வாயினுளான்
மின்னவிலுஞ்செஞ்சடையான் வெண்பொடி யானங்கையினில்
கொன்னவிலுஞ்சூலத்தான்கோளிலியெம் பெருமானே.6.

கல்-நவிலும்மால்வரையான்,கார் திகழும்மாமிடற்றான், 
சொல்-நவிலும்மாமறையான்,தோத்திரம்செய்வாயின்உளான், 
மின் நவிலும்செஞ்சடையான்வெண்பொடியான்,அம்கையினில்
கொல்-நவிலும்சூலத்தான் - கோளிலிஎம்பெருமானே.

பொருள்: கற்கள் செறிந்த பெரிய கயிலாய மலையில் எழுந்தருளி இருப்பவன் சிவபெருமான்.  கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களைஅருளிச் செய்தவன். தன்னைத்தோத்திரிப்பாரின்வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறுஅணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையைஏந்தியவன். இத்தகையோனாகிவிளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை: கயிலையை உடையவன்,நீலகண்டன்;வேதங்களை உடையவன்;தோத்திரம் செய்யும் வாயில் உள்ளவன்;செஞ்சடையான்;வெண்பொடியான்;சூலத்தான் இவன் என்கின்றது. கல் நவிலும்மால்வரை எனப் பிரிக்க. கார் - கருமை நிறம். கொன் - பெருமை.

Lord Civan abides in the big rocky Kailas mountain. His huge neck is dark blue in colour. He is the author of the universally renowned Vedaas. He is in the mind and words of those who adore Him. His matted hair is brilliant like lightning. He smears His body with holy ashes. He holds in one of His hands a highly remarkable and extraordinarily powerful trident. Such a resplendent, transcendental and immanent Lord of ours is enshrined in Thiru-k-kōlilee and graces everybody.

அந்தரத்தில்தேரூருமரக்கன்மலையன்றெடுப்பச்
சுந்தரத்தன்திருவிரலாலூன்றவவனுடல்நெரிந்து
மந்திரத்தமறைபாடவாளவனுக்கீந்தானும்
கொந்தரத்தமதிச்சென்னிக்கோளிலியெம்பெருமானே.

அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப, 
சுந்தரத் தன் திருவிரலால்ஊன்ற அவன் உடல் நெரிந்து, 
மந்திரத்த மறை பாட,வாள் அவனுக்கு ஈந்தானும் - 
கொந்துஅரத்தமதிச்சென்னிக்கோளிலிஎம்பெருமானே.

பொருள்: ஆகாய வெளியிலேதேரில் ஊர்ந்து வந்து,இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது,சிவபெருமான் தனது அழகிய கால் விரலால் சிறிது ஊன்ற;அவன் உடல் நெரிந்தது. இராவணன் மந்திரமாக விளங்கும் சாமகானத்தைப்பாடிச்திணைப் போற்ற,அவர் சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்து அருள் செய்தார்.  இப்பெருமான் பெருமையுடைய,பிறைமதியைச்சூடிய'சடையினராகத்திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை: வானவூர்தியனாகிய இராவணன் கயிலையை எடுத்த காலத்துவிரலூன்றிஅடர்த்து அவன் சாம கானம் செய்ய அருள் செய்தவன் இவன் என்கின்றது. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் - அழகு. வாள் - சந்திரஹாசம் என்னும் வாள். உம்மை - இசைநிறை. கொன்தரத்த - கொந்த ரத்த எனத்திரிந்தது.  பெருமை உடைய என்பது பொருள்.

Raavana, the king of Sri Lanka used to travel in the sky in his own sky chariot. He once tried to lift and keep aside mount Kailas, the abode of Lord civan. The charming Lord Civan slightly pressed the mountain by His holy toe by which Raavanaa's body got crushed under the mountain. Raavanan realised his fault, begged for pardon and adored Lord Civan by singing 'Saama Gaanam' full of Vedic Mantras. Pleased by hearing the song Lord Civan gave him the powerful divine sword known as 'Chandrahaasam' and other boons. Civan accommodates in His matted hair the eminent crescent moon. This Civan is our Lord of Thiru-k-kōlilee.

நாணமுடைவேதியனுநாரணனுநண்ணவொணாத்
தாணுவெனையாளுடையான்றன்னடியார்க்கன்புடைமை
பாணனிசைபத்திமையாற்பாடுதலும்பரிந்தளித்தான்
கோணலிளம்பிறைச்சென்னிக்கோளிலியெம் பெருமானே.9

நாணம் உடை வேதியனும்நாரணனும்நண்ணஒணாத்
தாணு,எனை ஆள் உடையான்,தன் அடியார்க்குஅன்புஉடைமை
பாணன் இசை பத்திமையால்பாடுதலும் பரிந்து அளித்தான் - 
கோணல் இளம்பிறைச்சென்னிக்கோளிலிஎம்பெருமானே.

பொருள்: அறிய முடியாததால் நாணமுற்றவேதியனாகியபிரமனும்,திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவன்சிவபெருமான். அவன் என்னை அடிமையாக உடையவன். தன் அடியவர்களுக்கு அன்பு வடிவானவன். பாணபத்திரன் பக்தியோடுபாடப் பரிவோடு அவனுக்கு அருள்புரிந்தவன். வளைந்த பிறைமதியைத்தலைமுடியில்சூடியவன்.  அந்தச் சிவபிரான்,திருக்கோளிலியில்எழுந்தருளும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை: அயனும்மாலும்அறியவொண்ணாத் தாணு,பாணபத்திரன் அன்போடு பாடுதலும் அருள் சுரந்து பரிசில் பல அளித்தவன் இவன் என்கின்றது. நாணம் உடை வேதியன் - அறிய முடியாமையால் வெட்கமுற்ற பிரமன்,தலை போனமையால்வெட்கியஎன்றுமாம் தாணு - நிலைத்த பொருள். பாணன் - பாணபத்திரன். பரிந்து - விரும்பி.

Lord Civan, the permanent Reality could not be approached by Thirumaal as well as by the shame faced Brahma who lost one of his five heads. Lord Civan treats me as His faithful servitor. He is the embodiment of love for His devotees. The temple songster Paanapathiran (uus) is the customary songster to sing divine songs with sincere devotion daily before Him in the temple. Lord Civan graced him with his wants. He wears the young crescent moon on His head. He is our Supreme Lord enshrined in Thiru-k-kōlilee.

Note: The everlasting pillar is Sthaanu. The Lord is hailed as Sthamba and Kamba, by the Atharva Veda. 'Nadu Thari' the Tamil term refers to this aspect of Civa.

தடுக்கமருஞ்சமணரொடுதர்க்கசாத்திரத்தவர்சொல்
இடுக்கண் வருமொழிகேளாதீசனையேஏத்துமின்கள்
நடுக்கமிலாஅமருலகம்நண்ணலுமாமண்ணல்கழல்
கொடுக்ககிலாவரங்கொடுக்குங்கோளிலியெம் பெருமானே.10

தடுக்கு அகமரும்சமணரொடுதர்க்கசாத்திரத்தவர் சொல் 
இடுக்கண் வரும் மொழி கேளாது,ஈசனையேஏத்துமின்கள்! 
நடுக்கம் இலாஅமருலகம்நண்ணலும் ஆம்;அண்ணல் கழல் 
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் - கோளிலிஎம்பெருமானே.

பொருள்: தடுக்கையைஆசனமாகவிரும்புகின்றசமணரும்தர்க்கசாஸ்திரத்தில் வல்ல புத்தர்களும்கூறுகின்ற துன்ப வார்த்தைகளைக்கேளாதீர்கள். ஈசனானசிவபெருமானையே புகழுங்கள். பயம் இல்லாமல் அமரர் வாழும் வானுலகத்தை அடையலாம். அப்பெருமான் திருவடிகள் வேறு யாராலும் தர இயலாத வரங்கள்பலவற்றைத் தரும். அவ்விறைவன் திருக்கோளிலிஎம்பெருமானே ஆவான்.

குறிப்புரை: சமணர்களும்தார்க்கீகர்களும் கூறும் துன்ப வார்த்தைகளைக்கேளாமல்ஈசனையே ஏத்துங்கள். வானுலகை அடையலாம். அவன் கழல் அரிய.வரங்களையும் கொடுக்கும் என்கின்றது.  தடுக்கு அமரும் - தடுக்கைஆசனமாகவிரும்புகின்ற. "தர்க்கசாஸ்திரிகளும்நாஸ்திகர்கள்ஆதலின் அவருரையும்கேளாதீர் என்றார்.

Ye companions! Listen not to the trouble making words of the Jains who are clad in mats and the Buddhists who profess words of logic. You adore Lord Civan alone. You can gain the trouble free world of the immortals. His Holy Feet will confer all boons which none else can grant. He is our Supreme Lord enshrined in Thiru-k-kōlilee. Note: The Samanars and the Buddhists are atheists. Godless people lack basic clarity.

நம்பனைநல்லடியார்கணாமுடைமாடென்றிருக்கும்
கொம்பனையாள்பாகனெழிற்கோளிலியெம்பெருமானை
வம்பமருந்தண்காழிச்சம்பந்தன்வண்டமிழ்கொண்
டின்பமரவல்லார்களெய் துவார்களீசனையே.11

நம்பனை,நல் அடியார்கள்’நாம் உடை மாடு‘என்று இருக்கும் 
கொம்பு அனையாள்பாகன்,எழில் கோளிலிஎம்பெருமானை, 
வம்பு அமரும்தண்காழிச்சம்பந்தன்வண்தமிழ்கொண்டு
இன்பு அமர வல்லார்கள்எய்துவர்கள்,ஈசனையே.

பொருள்: பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின்கணவனாய்,அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமானை;நல்ல அடியவர்கள் ஒவ்வொருவரும் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பர். இப்பெருமானை மணம் கமழும் குளிர்ச்சியான சீகாழிப்பதியுள்தோன்றியஞானசம்பந்தன்போற்றிப் பாடினார். இத்தமிழ்ப்பதிகத்தை இன்பம் பொருந்தப்பாடவல்லவர்கள்அப்பெருமானையேஅடைவர்.

குறிப்புரை: நல்ல அடியார்கள்ஒவ்வொருவரும் நம்முடைய செல்வம் என்று நம்பியிருக்கும் கோளிலிப் பெருமானைஞானசம்பந்தன்அருளியவண்டமிழ் கொண்டு இன்பங்கொள்ளவல்லவர்கள்ஈசனை எய்துவர்என்கின்றது. கொம்பு அனையாள் - பூங்கொம்பை ஒத்த உமாதேவி. வம்பு - மணம். இன்பு அமர - இன்பத்து இருக்க.

True devotees hold Civan as their resplendent Lord. His consort Umaa Devi is charming as the flowery shoots. He is our Lord enshrined in the renowned city of Thiru-k-kōlilee. Those who can sing this holy Tamil hymn comosed by Gnaanasambandan of Seekaazhi which is cool and odoriferous, and are poised in pure joy, will reach the Holy Feet of Lord Civan.

Note: The verses of St. Sambandhar are Vedic hymns in Tamil. They breathe salvific fragrance.

THIRU-CH-CHITRAM-BALAM

End of 62nd Hymn

திருச்சிற்றம்பலம்

62ஆம் பதிகம் முற்றிற்று
சிவமயம்

63.  திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

திருத்தலவரலாறு: 
முதலாம் பதிகம் பார்க்க.

குருவருள்: 
ஞானசம்பந்தர் அவதரித்தசீகாழிப்பதிபன்னிருதிருப்பெயர்களை உடையது. ஆளுடைய பிள்ளையார் அப்பன்னிருதிருப்பெயர்களைத் தனித்தனியே குறிப்பிட்டுப்பதிகங்கள்அருளியிருப்பதோடு, பன்னிருபெயர்களுக்குப்பன்னிருதிருப்பாடல்களைக் கொண்ட11 திருப்பதிகங்கள்அருளியுள்ளார். அத்தகையபதிகங்களில்ஒன்றாய்அப்பெயர்கள்அமைதற்குரியபுராணவரலாற்றுக் .குறிப்புக்களுடன்இப்பல்பெயர்ப்பத்துஅமைந்துள்ளது.  இத்திருப்பதிகத்தில்பிரமபுரம்முதலாக ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு தலம் வருமாறு பன்னிருபெயருக்கும்பன்னிருபாடல்கள் அமைந்துள்ளன.  அகத்துறைப் பதிகம்: சீகாழிப்பதியின்பன்னிருபெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு பாடலிலும்குறிக்கும் பல்பெயர்ப் பத்து.

63. THIRU-P-PIRAMA-PURAM

PAL PEYAR PATTHU (The Hymn of Many Names)

THE HISTORY OF THE PLACE

See First Hymn.

INTRODUCTION TO THE HYMN

The town where our saint was born, bears twelve names. This hymn celebrates
these twelve names in the twelve verses. They are as under:

Verse No.  Name    Verse No.  Name 
   1.    Piramapuram      7.    Sivapuram

   2.    Venupuram      8.    Puravam

   3.   Poompukali       9.   Chanbai

   4.   Venkuru      10.   Kaazhi (Seekaazhi)

   5.   Thonipuram      11.   Kochaivayam

   6.   Poontharai      12   .Kazhumalam


Note: There are a total of eleven hymns in the three Thirumurais of Thiru- Gnaanasambandar, in which the twelve names of the birth place of St. Sambandhar are celebrated. Vide hymn numbers, 63, 90, 117, 127, 128, 206, 209, 210, 325, 368 and 371.

திருச்சிற்றம்பலம்

63.திருப்பிரமபுரம்

பண் : தக்கேசி
ராகம் : காம்போதி

எரியார்மழுவொன்றேந்தியங்கையிடுதலையேகலனா
வரியார்வளையாரையம்வவ்வாய்மாநலம்வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.4

எரி ஆர்மழு ஒன்று ஏந்தி,அங்கைஇடுதலையேகலனா, 
வரி ஆர்வளையார் ஐயம் வவ்வாய்,மா நலம் வவ்வுதியே? - 
சரியா நாவின் வேதகீதன்,தாமரை நான்முகத்தன், 
பெரியான்,பிரமன் பேணி ஆண்டபிரமபுரத்தானே!

பொருள்: பெரியவனாகிய பிரமன் நான்கு திருமுகத்தை உடையவன். வேதகீதங்களை உச்சரிப்புத்தவறாதவாறு பாடுபவன். தாமரை மலர் மேல் விளங்குபவன். இந்தப் பிரமன் விரும்பி,வழிபட்டு ஆட்சிபுரிந்தபிரமபுரத்தில் விளங்கும் சிவபெருமானே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியிருக்கின்றீர். அழகிய மற்றொரு கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அந்த மண்டை ஓட்டையேஉண்கலனாகக் கொண்டு வீதிகள்தோறும்பலிஏற்பதுபோல் வந்து வரிகளை உடைய வளையல்களைஅணிந்த (முனி பத்தினி) மகளிரிடம் பிச்சை வாங்காது,அவர்களின் அழகைக் கவர்ந்து செல்கின்றீரே! இது ஏன்?

குறிப்புரை: பிரமபுரத்தானே! ஒருகையில்மழுவையும்,ஒருகையில்கபாலத்தையும்ஏந்திக் கொண்டு மகளிரிடம் பிச்சை வாங்காது அவர்கள் அழகை வாங்குகிறீரே ஏன் என்று வினாவுகிறது. எரியார்மழு - எரிதலைப் பொருந்திய மழு. வரியார்வளையார் - கோடுகளோடு கூடிய வளையலை உடைய முனிபத்தினியர். ஐயம் - பிச்சை. சரியா நாவின் என்பது முதல் பிரமன் என்பது. வரை'பிரமனைக் குறிக்கும் தொடர். பிரமன் வழிபட்டதால்பிரமபுரம்எனத்தலத்திற்குப் பெயர் வந்தமை விளக்கியது.

Brahma, the four faced, recites the Vedas without any flaw. He is normally seated in the Lotus flower. He is an eminent and noble person. With great desire and dedication, he ruled over the city Piramapuram (Seekaazhi). Oh! Lord Civa! You are enshrined in that famed city of Piramapuram, holding a red-hot battle-axe in one of Your hands. In another lovely hand, You hold the skull clipped from the head of Brahma and utilise it as your begging bowl. You move about in the streets as a mendicant. Young girls (of Dhaarukaa Vanam) wearing lined bangles come forward to give You alms. But without accepting it, You snatch their beauty. Is this legitimate behaviour of yours?

Note: Civa is a seeker of alms from the wives of the sages of Daarukaa Vanam () to contain the haughtiness and egoism of the saints and not done permanently.

பெயலார்சடைக்கோர்திங்கள்சூடிப்பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கணஞ்சொனல்லார்கண்டுயில்வவ்வுதியே
இயலானடாவியின்பமெய்தியிந்திரனாள்மண்மேல்
வியலார்முரசமோங்கு செம்மை வேணுபுரத்தானே.

பெயல்ஆர்சடைக்குஓர்திங்கள் சூடி,பெய் பலிக்கு என்று,அயலே
கயல்ஆர்தடங்கண்அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே? - 
இயலால்நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண்மேல்
வியல்ஆர்முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!

பொருள்: வேணுபுரமானது,இந்திரன் மண்ணுலகம் வந்து மூங்கிலாய்மறைந்திருந்த இடம்.  முறைப்படி ஆட்சி நடத்திய இடம். மகழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த தலம். இங்கு அகலமான முரசு ஒலிக்கும். நீதி நிலைபெற்று இருக்கும். இந்தத்தலத்தில்எழுந்தருளிய சிவபெருமானே! கங்கை தங்கிய சடைமுடியில்பிறையைச் சூடி உள்ளீர். மகளிர் இடும் "பலியைஏற்பதற்காக வீதிகளில் வந்தீர். ஆனால்,அதற்கு மாறாகக்கயல்மீனைஒத்ததும், நீர் நிறைந்த கண்களை உடைய (முனி பத்தினி) இளம் பெண்கள் (விரகநோயால்) துயில் கொள்வதைக்கவர்ந்தீர். இது நீதியோ?

குறிப்புரை: வேணுபுரத்தானே! சடையிற்சந்திரனையும்சூடிப்பிச்சைக்கென்று புறப்பட்டு மகளிர் துயிலை வவ்வுவதேன்என்கின்றது. பெயல் - கங்கை. திங்கள் - பிறை. கயல்ஆர் - கயல்மீனை ஒத்த. நல்லார் _பெண்கள். கண் துயில் வவ்வுறியே என்றது விரகநோயால் அவர்கள் துயில் துறந்தார்கள்எனக் குறித்தது. இயலான்நடாவி - முறைப்படி நடத்தி. இந்திரன் ஆள் மண் மேல் - இந்திரன் வந்து மறைந்திருந்தாண்டமண்ணுலகத்தில். வியல் - அகலம். இந்திரன் மூங்கிலாய்மறைந்திருந்தமையின் வேணுவனம் ஆயிற்று எனக் காரணம் குறித்தது.

Indira having lost his kingdom "Indra Loka”, came to this earth and remained incognito as bamboo tree. Later he ruled over the city Venupuram (Seekaazhi) according to the best laws of the land and happily lived there. In this city big drums make heavy musical notes now and then. Justice prevailed in the city always. Oh! Lord Civa! You are enshrined in such a renowned city accommodating the river Ganga and the crescent moon on Your matted hair. You go about in the streets as a mendicant to collect alms. Young fish eyed and charming girls uttering harmonious voice come forward to give alms. By seeing You they fall asleep due to lasciviousness (விரகநோய்) (probably due to your mesmerizing them) plunging them into carnal diseases. You take this opportunity to snatch their beauty especially of their eyes. Is this legitimate behaviour of Yours?
Note: Indra hid himself in a bamboo at Seekaazhi. It offered him refuge thanks to Civa's grace. Surapanma's search for Indra did not extend to Venupuram.

நகலார்தலையும்வெண்பிறையுநளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந்தையம்வவ்வாய்பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையுமாநிலத்திலயலின்மையாலமரர்
புகலால்மலிந்தபூம்புகலிமேவியபுண்ணியனே.

நகல்ஆர்தலையும்வெண்பிறையும்நளிர்சடைமாட்டு,அயலே
பகலாப் பலி தேர்ந்து,ஐயம் வவ்வாய்,பாய் கலை வவ்வுதியே? - 
அகலாதுஉறையும் மா நிலத்தில் அயல் இன்மையால்,அமரர் 
புகலால்மலிந்தபூம்புகலிமேவியபுண்ணியனே!

பொருள்: இந்த உலகத்தில் அடைக்கலம் புகும்'இடம் வேறு இல்லை. ஆதலால், தேவர்களின் புகலிடமாகவும் அவர்கள் என்றும் நீங்காதுஉறைவதுமாகிய அழகிய புகலி என்னும் தலம். இந்தப்புகலித்தலத்தில்எழுந்தருளியபுண்ணியனானசிவபெருமானே! சிரிக்கும்தலையோட்டையும்,வெண்மையான பிறை மதியையும்,குளிர்ந்த சடையில் அணிந்து இருக்கின்றீர். பகற்பொழுதில் பலி ஏற்பதுபோல்வருகின்றீர். ஆனால்,மகளிர் தரும் பிச்சையைஏற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு விரகதாபத்தை உண்டு பண்ணுகின்றீர். அந்த விரகதாபத்தால் அவர்கள் அணிந்துள்ள பரந்த ஆடை முதலியன நெகிழும்படி செய்து போதல் நீதியோ?

குறிப்புரை: இவ்வுலகத்தில்அடைக்கலத்தானம்வேறில்லாமையால்அமரர்கள் வந்து அடைக்கலம் புகுந்த புகலிமேவியபுண்ணியனே! கலையைக்கவர்ந்த தேன் என்கின்றது. நகல் - சிரித்தல். பகலாப் பலி - நடுவற்ற பிச்சை;பகற்காலத்துப்பலிஎன்றுமாம். ஐயம் - பிச்சை;பாய் கலை - பரந்த ஆடை. அயல் இன்மையால் - (அடைக்கலம்) வேறின்மையால். புகல் - அடைக்கலம். புகலிஎன்பதற்குத்தேவர்களால் அடைக்கலம் புகப்பெற்ற இடம் எனக் காரணம் விளக்கியவாறு.

Unable to get any refuge, the Devas come and settle down for long in the famed city of Pugali (Seekazhi). Oh! Lord Civa! You are enshrined in this renowned city. In Your matted hair You wear Brahma's skull in which the teeth are exposed. In the daytime you roam about as a mendicant as though to get alms. Young girls come forward to offer You alms. But without accepting it, You create by Your divine charm, lascivious tendencies () in those girls. Thereby the dress, bangles etc., they are wearing get loosened. Is this legitimate behaviour of Yours?

Note: Pukali: The place of refuge. It is the resort of sages and seers, siddhars and yogi's
as well as munis and seekers of moksha.

சங்கோடிலங்கத்தோடுபெய்துகாதிலொர்தாழ்குழையன்
அங்கோல்வளையாரையம்வவ்வாயானலம்வவ்வுதியே
செங்கோனடாவிப்பல்லுயிர்க்குஞ்செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன்மேவியாண்டவெங்குரு மேயவனே.4

சங்கோடுஇலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ்குழையன், 
அம்கோல்வளையார் ஐயம் வவ்வாய்,ஆய்நலம்வவ்வுதியே? - 
செங்கோல் நடாவிப்பல்உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய, 
வெங்கோத் தருமன் மேவி ஆண்டவெங்குருமேயவனே!

பொருள்: எமதருமராசன் கொடிய அரசன் எனப்படுபவன். இவன் வெங்குரு என்ற தலத்தில் செங்கோல் ஆட்சி நடத்தினான். தான் செய்யும் செயல்கள்நீதிநெறிக்குஉட்பட்டவை என்ற உண்மை எல்லா உயிர்களுக்கும்தெரியுமாறு ஆண்டான். இந்த வெங்குரு என்ற தலத்தில் எழுந்தருளியசிவபெருமானே! கடல் சங்கினால் ஆகிய குண்டலம் என்று சொல்லப்படும் தோட்டை ஒரு காதில் அணிந்திருக்கின்றீர். மற்றொரு காதில் குழையைஅணிந்தருக்கின்றீர்.  பலி ஏற்பதற்காகவந்திருக்கின்றீர். ஆனால் அதை ஏற்காது,அழகிய திரண்ட வளையல்கள் அணிந்த இளம் பெண்களின் அழகைக் கவர்ந்து செல்லுகின்றீர். இது நீதியோ?

குறிப்புரை: வெங்குருமேயவனே! தோடும்குழையும்காதிற்பெய்தஉமையொருபாதியனாகிய உருவத்தைக் கொண்டு மகளிரிடம் ஐயம் பெறாதுநலங்கவர்ந்தது ஏன் என்கின்றது. சங்கோடுஇலங்க - சங்க குண்டலத்தோடு விளங்க. அம்கோல்வளையார் - அழகிய திரண்ட வளையலைஉடையவர்கள்.  ஐயம் வவ்வாயால் - பிச்சையைஏற்காய். நடாவி - நடத்தி. வெங்கோ தருமன் செங்கோல் நடாவிச் செய்வினை பல்லுயிர்க்கும்மெய்தெரிய மேவி ஆண்டவெங்குருஎனக்கூட்டுக. தருமன் செங்கோல் முறைப்படி பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறிய வெங்குருஎனப் பெயர் பெற்றது எனக் காரணம் விளக்கியது.

Dharma Raajan (Guna Rudran), the god of death is wrongly personified as a cruel king. To nullify that impression and to prove that his actions are justifiable as per Divine laws, he came to Venguru (Seekaazhi). From here, he governed and earned a good name as a benevolent ruler. Oh! Lord Civa! You are enshrined in such a famed city. You wear a bright 'ola' roll in one of Your ears and a long hanging ear ring in the other ear. You roam about to receive alms. Instead of receiving alms, You loot the beauty of the young girls (at Dhaarukaa Vanam) who wear good looking heavy bangles and come forward to give You alms. Is this a legitimate behaviour of Yours?

தணிநீர்மதியஞ்சூடிநீடுதாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவாரையம்வவ்வாய்பெய்கலைவவ்வுதியே
அணிநீருலகமாகியெங்குமாழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத்தான்மிதந்ததோணிபுரத்தானே.

தணி நீர் மதியம் சூடி,நீடு தாங்கியதாழ்சடையன், 
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய்,பெய் கலை வவ்வுதியே? - 
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால்அழுங்க, 
துணி நீர் பணிய,தான் மிதந்ததோணிபுரத்தானே!

பொருள்: ஊழிக்காலத்தில்மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி,அனைத்து இடங்களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தியது. அந்த வேளையில் அச்சம் தரும் அந்தத் துணிவு கொண்ட தண்ணீர் பணிந்து போகவும் தான் மட்டும்,அந்த ஊழி வெள்ளத்தில்அழியாது, தோணிபுரத்தில்எழுந்தருளியஇறைவனானசிவபெருமானே! தன்னை வந்து பணிந்த பிறைமதியைச்சூடியிருக்கிறீர். நீண்டு தாழ்ந்து தொங்கும் சடைமுடியைஉடையவராக இருக்கின்றீர். ஏற்கனவே பருவமடைந்து காமநோயால் வருந்தும் இளம் மகளிரிடம் பிச்சை ஏற்கச்செல்கின்றீர். ஆனால் அவர்கள் தரும் பிச்சையைஏற்காது,உம்முடையதெய்வீகப் பார்வையால்,அவர்கள் விரகநோயடையப் பெற்று,அவர்களது ஆடைகள் நிலை குலைகின்றன. இவ்வாறு செய்தல் நீதியாகுமா?

குறிப்புரை: உலகம் கடலுள் ஆழ்ந்த காலத்துமிதந்ததோணிபுரத்தானே! மகளிரிடம் ஐயம் ஏற்காது உடுத்த ஆடையைவவ்விய தேன் என்கின்றது. தணிநீர் மதியம் - கீழ்ப்படிந்ததன்மையை உடைய பிறை.  பிணிநீர்மடவார் - காமநோய்வாய்ப்பட்டமாதர்கள். ஐயம் - பிச்சை. பெய்கலை - உடுத்திய ஆடை.  உலகம் எங்கும் அணி நீராகிக்கடலால்அழுங்கஎனக்கூட்டுக. துணிநீர் பணிய - துணிவு கொண்ட  தண்ணீர் கீழ்ப்படிய. தோணிபுரம் என்ற பெயரின் காரணம் விளக்கியது.

At the time of the final deluge (), the entire earth got submerged in the deep-sea waters. By the grace of Your divinity, the sea calmed down and You floated in the boat over the wide expanse of sea water. Thonipuram was the only place on the earth not drowned by the sea, as it was Your abode at the time. Oh! Lord Civa of this famed city! You gave protection for a long period to the crescent moon that came to You as a refugee and kept him in Your long and dangling matted hair. How come You approach infatuated young girls in forest homes for alms? Yet You did not accept their alms. Your divine charming presence before them, increased their infatuation resulting in the derangement of their garments. Is this a legitimate behaviour of Yours?

கவர்பூம்புனலுந்தண்மதியுங்கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோடையம்வவ்வாயானலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க்காதியாய் அவள் தன்மன்னனாள்மண்மேல்
தவர்பூம்பதிகளெங்குமெங்குந்தங்கு தராயவனே.6

கவர் பூம்புனலும்தண்மதியும் கமழ் சடைமாட்டு,அயலே
அவர் பூம்பலியோடு ஐயம் வவ்வாய்,ஆய் நலம் வவ்வுதியே? - 
அவர் பூண் அரையர்க்குஆதிஆய அவள் தன் மன்னன் ஆள் மண்மேல்
தவர்பூம்பதிகள் எங்கும் எங்கும் தங்கு தராயவனே!

பொருள்: வலிமை மிக்க காக்கும் தெய்வமாகிய திருமால்,அணிகலன்களைஅணிந்த எல்லா மக்களையும் காத்து வருகின்றஅரசர்கள்அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் தனது வராகஅவதாரத்தில்இரண்யகசிபுவைக் கொன்றான். அதனால் வந்த பழியைப் போக்க, இம்மண்ணுலகத்தில்பூந்தராய் என்னும் தலத்திற்கு வந்து பூக்களைக் கொண்டு அங்கு எழுந்தருளியுள்ளசிவபெருமானைப்பூசித்தான். இந்தத் தலம்,தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்புப் பெற்றது. இந்தப்பூந்தராயில்எழுந்தருளியசிவபெருமானே! இந்த மண்ணுலகைக் கவர வந்த அழகிய கங்கையையும்,குளிர்ச்சியான பிறைமதியையும், மணம் கமழும்சடைமுடியையும் சூடி இருக்கின்றீர். நீர் பலிகேட்டு வீதிகளில் செல்லும் காலத்து மகளிர் ஆங்காங்கே இடும் சுவைமிக்கபலியாகிய உணவை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது அழகைக் கவர்ந்து கொள்ளுகின்றீர். இது நீதியோ?

குறிப்புரை: பூந்தராய்மேவியவனே! பலி வவ்வாயாய் அவர்கள் நலம் வவ்வுதியேஎன்கின்றது. வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியேஎனப் பிரித்துப் பொருள் கொள்க. பூண் அரையர்அவர்க்குஆதியாய்அடல் மன்னன் - மன்னர்க்கெல்லாம்முதலாகிய வலிமை மிக்க திருமால். காக்கும் மன்னர்க்கு எல்லாம் தலைவன்,காத்தற்றெய்வமாகிய திருமால் என்ற ஒற்றுமைபற்றிஉரைக்கப் பெற்றது. திருவுடை மன்னரைக்காணில்திருமாலைக்கண்டேன் என்பதும் இந்த இயைபு பற்றியே,ஆதிவராகமான திருமால் இரணியனைக்கொன்றபழிபோகப்பூக்களைக் கொண்டு பூசித்தமையால்பூந்தராய் என அழைக்கப் பெற்றது எனத்தலப்பெயர்க்காரணம்கூறியவாறு.

Kings who rule over the earth wear all sorts of jewels in their body. They protect all their subjects. Thirumaal is the Chief of all these kings and sustains the whole universe. In the days of yore, Thirumaal incarnated as a wild boar and killed an Asura called Hiranya Kasipu (ш). To atone for this sin Thirumaal came to the earth and selected the city Poontharai () and worshipped Lord Civan entempled therein. This town was sanctified by the stay of holy saints in many parts of the city. Oh! Lord Civa! You are enshrined in such a renowned city - Poontharai. You contained in your sweet smelling matted hair the awe-inspiring Ganges that came down fiercely to drown the earth. The cool crescent moon also abides in your head. Whenever You roam about to receive alms, You never accept the delicious food the young girls offer, but steal away their beauty. Is this legitimate behaviour of Yours?

Note: Vishnu, be it remembered, is ever devoted to Civa.

முலையாழ்கெழுமமொந்தைகொட்டமுன்கடைமாட்டயலே
நிலையாய்ப்பலிதேர்ந்தையம்வவ்வாய்நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ்வையமெல்லாந்தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்தசீர்ச் சிலம்பன் சிரபுரமேயவனே.7

முலையாழ்கெழும,மொந்தை கொட்ட,முன் கடைமாட்டுஅயலே, 
நிலையாய்ப்பலிதேர்ந்தையம்வவ்வாய்நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ்வையமெல்லாந்தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்தசீர்ச் சிலம்பன் சிரபுரமேயவனே!

பொருள்: வில் வீரனான சிலம்பன் என்ற இராகு தேவர்களுடன் கலந்து வஞ்சனையாக திருப்பாற்கடலில் இருந்து வந்த அமுதை உண்டான். அதனால் திருமாலால்வெட்டப்பட்டு தலைமாத்திரமாய் நின்றான். இந்த இராகு வையகம் முழுவதையும் தனது ஆணை வழி நடத்தி ஆட்சிபுரிந்த நகரம் சிரபுரம் என்ற தலம். இந்தச்சிரபுரம் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ளஇறைவனானசிவபெருமானே! முல்லை யாழ்,சுரம் ஒத்து ஒலிக்கவும், மொந்தை என்னும் பறை ஒலிக்கவும்,வீடு வீடாகச் சென்று வீட்டின்முன்கடையின்அயலே நின்று உண்பதற்காக அன்றி பொய்யாகப் பிச்சை கேட்கிறீர். மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீர் அவர்தம்அழகினைக்கவர்வதுநீதியோ?

குறிப்புரை: சிரபுரமேயவனே! நிலையாப்பிச்சையாக ஐயம் ஏற்காது நலம் வவ்வுதியேஎன்கின்றது.  முலையாழ்கெழுவ - முல்லை யாழ் சுரம் ஒத்து ஒலிக்க. கெழும் என்பதும் பாடம். நிலையாப் பலி என்றது தாருகாவனத்துமுனிவர்களின்ஆணவத்தை அடக்க ஏற்றுக் கொண்ட பிச்சையேயன்றிநிலைத்ததன்று என்பது விளக்கிற்று. தலையே வடிவாய் (உடல் முதலியன இன்றி) உலகத்தையெல்லாம்தன்னாணையின் நடக்கச் செய்யும் சிலம்பன் என்னும் அசுரன்,ராகு என்ற பெயர் தாங்கி வழிபட்டசிரபுரம் என விளக்கியவாறு. தேவர்களுடன் கலந்து கரவாகஅமுதுண்ட சிலம்பன் என்னும் அசுரனைமோகினியான திருமால் சட்டுவத்தால் வெட்ட,தலை மாத்திரமான ராகு இத்தலத்தில்பூசித்தான் என்பது வரலாறு.

Silamban was an Asura (Raakshasan) who later became Raaghu. He was an expert archer and ruled over the earth, and lived in Sirapuram (சிரபுரம்). Oh Lord abiding in Sirapuram, You went out for alms beating the musical instruments (மொந்தை & கடம்), but snatched the beauty of forest maids. Is this proper on Your part?

Note: More on the life of Silamban (who had only the head and no body and name) can be seen in Mythological texts.
Monthai (மொந்தை): It is known as gatam (கடம்) in modern times.

எருதேகொணர்கென்றேறியங்கையிடுதலையேகலனாக்
கருதேர்மடவாரையம்வவ்வாய்கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவியாரமருளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன்மேவியாண்டபுறவமர் புண்ணியனே.8

“எருதேகொணர்க!” என்று ஏறி,அங்கை இடு தலையேகலனா, 
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய்,கண் துயில் வவ்வுதியே? - 
ஒரு தேர் கடாவிஆர்அமருள்ஒருபதுதோள்தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்டபுறவு அமர் புண்ணியனே!

பொருள்: புறவம் என்ற சீகாழியைசிபிச் சக்கரவர்த்தி அரசாண்டான். அவன் தனது ஒரு தேரைச் செலுத்தி பத்துத்தேர்கள்அழியுமாறுபோர்புரிவதில் வல்லவன். அவன் புறாவிற்கு அடைக்கலம் கொடுத்து தன் தசையையும்,தன்னையும் தியாகம் செய்த காரணத்தால் புறவம் என்ற பெயர் கொண்ட சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மீதுஏறித் தனது அழகிய கையில் ஏந்தியபிரம கபாலத்தையேஉண்கலனாகக் கொண்டு பலிஏற்கச்சென்றாய். வீடுகளில் உள்ள மகளிர் கொடுக்கும் பலியைக் . கொள்ளாது,அவர்கள் உறக்கம் கெடுமாறுவிரகதாபத்தை உண்டு பண்ணினாய். இது உனக்கு நீதியாகுமா?

குறிப்புரை: இதுவும் புறவமர்புண்ணியனே மாதர் துயில் வவ்வியது ஏன் என்கின்றது. ஐயம் ஏற்பார் ஊர்தியேறிச்செல்லார்ஆகவும்எருதைக்கொணர்க என்று ஆணையிட்டு அதில் ஏறி. கருதேர்மடவார் - கருவைத்தேரும்மடவார்;காமினிகள். கருது ஏர் மடவார்எனப்பிரித்தலுமாம். ஒருதேரைச் செலுத்தி, பத்துத்தேரை வென்ற தேர் வல்லவனாகியசிபியாண்டபுறவம்எனப்பெயர்க்காரணத்தைக் குறிப்பாக உணர்த்தியது. சிபியின் தசை எடைக்கு எடை பெற்ற தீக்கடவுளாகிய புறா அப்பாவம் போக வழிபட்ட தலமாதலின்புறவம்என்றாயிற்று என்பது வரலாறு.

The Chola emperor Cibi (Сƒƒâ÷éíiġà Âð) was a mighty charioteer. Once, in a battle field he rode on his single chariot and brought down ten chariots of his enemy. He dwelt in and ruled over Puravam. By unfair means, he was cheated by his enemies Indra and Agni. Later the god of Fire, came down to Puravam and begged Lord Civan to pardon him for his deceitful action against the king. He stayed in Puravam and worshipped Lord Civan entempled therein.

"Oh! the righteous Lord Civa! You are entempled in such a famed city. You summoned Your bull vehicle, rode on it, holding in Your pretty hand the skull of Brahma as Your begging bowl and went round to receive alms. The beautiful girls of the forest zone () come out of their houses to give You alms. You did not receive the alms; but by Your divine charm You kindled the flames of bust in those damsels and spoiled their sleep. Is this legitimate behaviour of Yours?"

Note: Indra, the king of Devas and Agni the god of Fire took the form of a hunter and dove respectively. The dove flew in Thirumaal took the form of Mohini and distributed the nectar obtained from the ocean of milk to the Devas. Silamban the Asura took the form of a Deva and stood in between the sun and moon on the line and got the nectar from Thirumaal. The Sun and the Moon identified Silamban and revealed the fact to Thirumaal who became wild and stroke the head of Silamban by a Laddle (). His body became two parts - the head alone without body frame known as Raagu (§), and the body frame without the head known as Kēthu (G) (These two became celestial bodies but not planets. However they move round the Sun taking 181⁄2 years to make one round. They are descending nodes and rarely visible in the sky. They are also known as Saaya Giraham (ш) in Tamil language. In Indian Astronomy they play an important role). This Silamban who became Raaghu did severe penance and prayer and was bestowed with several boons.

By the boons, he became a super powerful man. He ruled over the entire earth dwelling in Sripuram and making it his capital city and worshipped Lord Civa in all sincerity.

துவர்சேர்கலிங்கப்போர்வையாருந்தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக்கண்டவண்ணங்காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோடையம்வவ்வாயானலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற்சண்டனாளச்சண்பையமா்ந்தவனே.

துவர் சேர் கலிங்கப்போர்வையாரும்,தூய்மை இலாச்சமணும், 
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம்,காரிகை வார்குழலார்- 
அவர் பூம்பலியோடு ஐயம் வவ்வாய்,ஆய்நலம்வவ்வுதியே? - 
தவர்செய்நெடுவேல்சண்டன்ஆளச்சண்பைஅமர்ந்தவனே!

பொருள்: உடலைத்துளைக்கின்ற நீண்ட வேலை இயமன்ஏந்தியிருக்கின்றான். அவனை அடக்கி ஆண்டசண்பை என்னும் தலத்தில்எழுந்தருளியசிவபெருமானே! புத்த சமயத்தினர்கலிங்க நாட்டில் நெய்த காவி நிறத்தை உடைய போர்வையைப் போர்த்து இருக்கின்றனர். சமணர்கள் தூய்மை இல்லாதவர்கள். இந்த இரு சமயத்தினரும் மனம் திரிந்து உழலுகின்றனர். நீர்,நீண்ட கூந்தலை உடைய மகளிர் வாழும் இல்லங்களுக்குச் செல்கிறீர். அம்மகளிர்உம்மைக் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்கின்றனர். அவர்கள் கொடுக்கும் இனிய உணவாகியபிச்சையைஏற்காது,அவர்களின் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே?இது நீதியோ?

குறிப்புரை: புறச்சமயிகள்மனந்தேராதுஉழலச் செய்தது போல மகளிர் நலத்தையும்கொண்டனையே என்கின்றது. கலிங்கப் போர்வை - கலிங்க நாட்டில் நெய்த போர்வை. கவர்செய்து - மனந்திரிந்து.  காரிகை - அழகு. தவர்செய்நெடுவேல்சண்டன் ஆள - துளைக்கின்ற நீண்ட வேலை ஏந்தியயமனை அடக்கி ஆள. இது மார்க்கண்டேயர்க்காகயமனைஉதைத்தவரலாற்றை உட்கொண்டது.

Oh! Lord Civa! You are enshrined in such a renowned city, Shanbai. You take the form of a mendicant and reach the houses of ladies of Dhaarukaa Vanam to receive alms. The household ladies of Dhaarukaa Vanam having long hair come to You to give alms. By Your divine charm they were amazed and become dumbfounded. You did not accept the sumptuous food they offer, but loot away their beauty. Is this legitimate behaviour of Yours?

Note: The Samanas and the Teras are notorious doubters. The Lord let the Samanars and Buddhists roam about in confusion. So did He with the maids of the forests.

நிழலால்மடிந்த கொன்றை சூடிநீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவாரையும்வவ்வாய்கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங்கவ்வைதீரஐந்தலைநீண்முடிய
கழனாகரையன்காவலாகக் காழியமர்ந்தவனே.10

நிழலால் மடிந்த கொன்றை சூடி,நீறு மெய் பூசி,நல்ல 
குழல் ஆர்மடவார்ஐயும்வவ்வாய்,கோல்வளைவவ்வுதியே? - 
அழல்ஆய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய 
கழல் நாக(அ)ரையன் காவல் ஆகக்காழிஅமர்ந்தவனே!

பொருள்: ஊழிக்காலத்தில் உலகம் வெப்பத்தால் வெதும்பி வருந்தித்துன்புற்றது. ஐந்து தலைகளையும்வீரக்கழலையும் நீண்ட முடியையும்அணிந்தநாகங்களின்தலைவனான “காளிதன்” என்ற பாம்பு காழிப்பதியை காவல் புரிந்தது. அந்தக் காழிப்பதியில் அமர்ந்திருக்கும்தலைவனானசிவபெருமானே! நீர்,ஒளிநிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடியிருக்கிறீர். திருமேனியில்நீற்றினைப்பூசியிருக்கிறீர். பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில்செல்கிறீர். அந்த அழகிய கூந்தலை உடைய மகளிரின் பிச்சையைஏற்காது,அவர்களை விரகதாபத்தால்மெலியச்செய்கின்றீர்.  அவர்களின் திரண்ட வளையல்களைக்கவ்வுகின்றீர். இது நீதியோ? அவர்களின்

குறிப்புரை: காழியமர்ந்தவனே,வளை கவர்ந்தனையேஎன்கின்றது. கோல் - திரட்சி, அழலாய் -வெதும்பி. கவ்வை - துன்பம்,ஐந்தலைநீள்முடிய கழல் நாகஅரையன் - ஐந்து தலையோடும்முடியோடும் கூடிய வீரக்கழலைஅணிந்தகாளிதன் என்னும் பாம்பு.

In the days of yore, once the world suffered by excessive heat. To alleviate this and protect the city of Kaazhi and to give relief to the people therein from the oppressive heat, the king of snakes known as 'Kaalithan' () had a close watch and saved the city from excessive heat. The king of snakes has five heads, very long hair and was wearing a string of bells on the leg as a sign of heroism (ƒ).
Oh! Lord Civa! You are enshrined in this famous city of Kaazhi. You wear the garland made up of elegant and dazzling cassia flowers. You smear Your body with holy ashes. You pretend to be like a mendicant and roam about in the streets where ladies are dwelling. These ladies of Dhaarukaa Vanam with beautiful long hair come forward to give You alms. You do not accept it. Instead by Your divine charm, You kindle carnal desires in them. Their body gets debilitated. You then coveted their thick bangles and walked away. Is this legitimate behaviour of Yours?

Note: Kaalithan, the five headed serpent king.

கட்டார்துழாயன்தாமரையானென்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர்ந்தையம்வவ்வாய்செய்கலைவவ்வுதியே
நட்டார் நடுவே நந்தனாளநல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்ததண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.11

கட்டுஆர்துழாயன்,தாமரையான்,என்று இவர் காண்பு அரிய 
சிட்டார் பலி தேர்ந்து,ஐயம் வவ்வாய்,செய் கலை வவ்வுதியே? - 
நட்டார் நடுவே நந்தன் ஆள,நல்வினையால் உயர்ந்த 
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!

பொருள்: பராசர முனிவன் ஆற்றின் நடுவே மச்சகந்தியோடுகூடினான். அந்தப் பழி நீங்குவதற்கு அம்முனிவன் பூசை செய்தான். அவன் செய்த பூசையால்அப்பெண்ணுக்கு உயர்ந்த மயிர்ச்சாந்து போன்ற மணத்தையும் நல்ல ஒழுக்கத்தையும்கொடுத்தீர். அந்தச் சிறப்பினைஉடையதும்,குளிர்ந்த வயல்களால்சூழப்பட்டதுமாகிய தலம் கொச்சைவயம்.  இந்தத்தலத்தில்எழுந்தருளியஇறைவனானசிவபெருமானே! நீவிர்,கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்ததிருமாலும்,நான்முகனும்காணமுடியாதமேன்மையைஉடையவராக இருக்கின்றீர். ஆனால்,நீர்,பிச்சை ஏற்கச் சென்று,மகளிர் தரும் பலியைஏற்காது, அவர்களின் அழகிய ஆடைகளைக்கவர்கின்றீர். இது நீதியோ?

குறிப்புரை: திருமாலும்பிரமனும்காணுதற்கரியசிட்டராய்ப் பலி கொள்ளாது கலை கொள்ளக் காரணம் ஏன் என்கின்றது. கட்டு ஆர்துழாயன் - கட்டுதல் பொருந்திய துளசி மாலையை உடைய திருமால்.  சிட்டார் - ஒழுங்கினை உடையவர். கலை - ஆடை. நட்டாறு என்பது நட்டார் என ஆயிற்று. நந்தன் - பிரமன் மகனாகியபராசரன். ஆள - மச்சகந்தியைப்பெண்டாள. (அப்பழிபோம்படி) நல்வினையால் - அவன் செய்த பூசையால். கொட்டு ஆறு உடுத்த - மயிர்ச்சாந்து போன்ற மணத்தையும்.  நல்லொழுக்கத்தையும்பொருந்தச் செய்த. உடுத்த கொச்சை எனக்கூட்டுக. இது கொச்சைவயம் என்றதன் காரணம் உணர்த்தியவாறு.

The saint Paraasaran (ÙƒƒÃ¿ÉT) son of Brahma had union with the girl Mach-cha-ganthi (u) while she was in the middle of a river. She was also called Satyavathi. She gave birth to sage Vyaasa (fl). To nullify the evil effect that might affect Paraasaran for his sinful act, he came down to Koch-chai-vayam (Seekaazhi) and did penance and prayer along with Mach-cha-ganthi with appropriate rituals before Lord Civan entempled therein. The Lord condoned him without malice. Also He bestowed on her more beauty than before, virtuousness and a good permanent fragrance from her body. He also made them live together and lead a virtuous life thereafter. 
Oh! Lord Civa! You are abiding in such a famed Koch-chai-vayam which is surrounded by cool fields. You are unknowable even to Thirumaal and to the four headed Brahma who were wearing garlands made up of Tulsi leaves. You roam about to get alms in the forest areas where girls are living, but without accepting their alms, You coveted their garments. Is this legitimate behaviour of Yours?

Note: Vyaasar was born to Paraasaran and Sathyavathi. This Sathyavathi later married Santhanu Maharaaja as a second wife.

கடையார்கொடிநன்மாடவீதிக்கழுமலவூர்க்கவுணி
நடையார் பனுவல் மாலையாகஞானசம்பந்தன் நல்ல 
படையார்மழுவன்மேல்மொழிந்தபல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகளுலகில்நாளுமமருலகாள்பவரே.

கடை ஆர் கொடி நல் மாடவீதிக்கழுமலஊர்க்கவுணி - 
நடை ஆர்பனுவல்மாலைஆகஞானசம்பந்தன்-நல்ல 
படை ஆர்.மழுவன்மேல்மொழிந்தபல்பெயர்ப்பத்தும்வல்லார்க்கு
அடையாவினைகள் உலகில் நாளும்;அமருலகுஆள்பவரே..

பொருள்: கழுமலம் என்ற பெயர் பெற்ற தலம் சீகாழிப்பதி. இப்பதியில்வாசல்களில் கொடிகள் கட்டப்பட்ட மாடவீடுகளை உடைய வீதிகள் உள்ளன. இந்தக்கழுமலம் என்ற சீகாழிப்பதியில்கவுணியர்குலத்தில்தோன்றியவர்ஞானசம்பந்தன். இவர்,மழுப்படையைக் கையில் ஏந்திய சீகாழி இறைவர்மீது, “பல்பெயர் பத்து” என்னும் இத்திருப்பதிகத்தை பத்தின்மேலும்பலவாகியபெயர்களைக் (12 பெயர்களையும் குறிப்பிட்டு) குறிப்பிட்டு இலக்கியமாலையாகப் பாடினார். இத்திருப்பதிகத்தை ஓதி வழிபடும்வல்லவர்களை, இவ்வுலகில் துன்புறுத்தும்வினைகள் ஒருபோதும் வந்து அடையாது. இவர்கள் மறுமையில் அமரர் உலகத்தை ஆளுவார்கள்.

குறிப்புரை: மேற்கூறிய கழுமலநகரின்பெயராகக் கூறிய பன்னிரண்டையும்பாடியபதிகத்தைஓத வல்லார்க்கு இவ்வுலகில் தீவினை பொருந்தா. தேவர் உலகினையும்ஆள்வர்எனப்பயன்கூறுகிறது.  கடை - வாயில். கவுணி - கவுணியகோத்திரத்துஉதித்தவர். பல்பெயர்ப்பத்தும் - பத்தின் மேலும் பலவாகியபெயா். அமரர் உலகு அமருலகாயிற்று.

Gnaanasambandan of the clan of Kauniyars (ш C) hailed from the city of Kazhu-malam (u). This city also known as Seekaazhi has streets with big mansions, where flags are flying aloft in the front portion of the mansions. He has sung this hymn known as 'Pal-peyar-path-thu' (u Quшu us) containing twelve names one in each verse. This hymn he sang as a garland of literature with rhythmic musical flow (εŧ ã...) on Lord Civan of this place, who is holding a battle axe in one of his hands. Those who can chant this hymn and offer worship with sincere devotion to Lord Civan, will not get affected by the evil effects of their karma. In their next birth they will rule over the celestials.

THIRU-CH-CHITRAM-BALAM
End of 63rd Hymn

திருச்சிற்றம்பலம்

63ஆம் பதிகம் முற்றிற்று

உ 
சிவமயம்

64.திருப்பூவணம்

திருத்தலவரலாறு:

திருப்பூவணம் என்ற திருத்தலமானது பாண்டி நாட்டுத் தலம் ஆகும். மதுரைக்குக்கிழக்கே வைகையின் தென்கரையில்18 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மதுரையில் இருந்து பேருந்துகள் உள்ளன. இது பிரமன் பூசித்த தலம். நான்மறையோன் கழலே சென்று பேணி ஏத்த நின்ற தேவர் பிரான் இடமாம் என்பது சம்பந்தர் தேவாரம்.

இத்தலம் தமிழ்நாட்டு மூவேந்தர்களும்ஒருங்குகூடிவழிபட்டதலமாக இருந்தது என்பதனை “முன்சேர் தென்னர் சேரர்சோழர்கள் தாம் வணங்கும்திருப்பூவணம்” என்னும் சம்பந்த சுவாமிகள்வாக்காலும், “உதியருடன்வன்றொண்டர்தாமிருந்தஇடங்கெழுமிவளவனார்.  மீனவனார்வளம்பெருகமற்றவரோடும்அளவளாவியவிருப்பால் அமர்ந்து கலந்து இனிதிருந்தார்” என்னும் சேக்கிழார் திருவாக்காலும் அறியலாம். “பொன்னனையாள் என்னும் அம்மையாருக்குச் சொக்கலிங்கப் பெருமான் சித்தர் வடிவாகஎழுந்தருளிரசவாதம் செய்து சோமாஸ்கந்தர் திருவுருவத்தை அமைக்க அருள் செய்தனர் என்பது திருவிளையாடற்புராணத்தில் காணப்படும் வரலாறு.

இறைவன் பூவணநாதர்,இறைவி மின்னம்மை,மின்னனையாளம்மை என்று வழங்குவதும் உண்டு. தலவிருட்சம் பலா. தீர்த்தம் வைகை.

கல்வெட்டு: 
கோநேரின்மை கொண்டான் தனது எட்டாம்ஆட்சியாண்டில்புஷ்பவனேசுவரர் கோயிலுக்கு நிலம் வழங்கினான். குலசேகர தேவன் தனது25ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் வேத பாராயணம் செய்ய1008 பிராமணார்களுக்குஉணவிற்காக நிலம் அளித்தான். ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதி மங்கல சபைக்கு25 காசுகள்வழங்கியதை அறிவிக்கிறது.

பதிக வரலாறு: 
திருப்புத்தூரைவணங்கிப் பதிகம் பாடி எழுந்தருளும் பிள்ளையார்,புற்றில்வாழ் அரவம் பூண்ட பெருமான் எழுந்தருளியுள்ளதிருப்பூவணத்தைச் சேர்ந்தார். “அறையார்புனலும்” என்னும் இப்பதிகத்தைஅருளினார்.

64. THIRU-P-POOVANAM

THE HISTORY OF THE PLACE

This sacred city of Thiru-p-poovanam is in Paandiya Naadu, 18 km east of Madurai on the south bank of Vaigai river. There are buses from Madurai to this place.

The name of the God is Poovananaathar and that of the Goddess os Minnammai, also known as Minnanaiyaalammai. The sacred tree is Palaa and the sacred ford is Vaigai.

Biraman worshipped the Lord at this temple, which is noted in Sambandhar Thevaaram as 'nAnmaRaiOn kazhalE senRu pENi Eththa ninRa thEvar pirAn iDamAm'. According to a story in the Thiruvilaiyaadal Puraanam, the Lord came here in the guise of a Sidhdhar to answer the prayers of a devotee, Ponnanaiyaal and with alchemy made an icon of Somaaskandhar.

That this temple had the distinction of having all the three Tamil kings offer worship is noted by Gnaana-sambandhar in 'mun sEr thennar sErar sozhargaL thAm vanangkum tiruppoovaNam', and by Sekkizhaar in ‘udhiyarudan vanRondar thAmirundha idam kezhumi vaLavanAr meenavanAr vaLam peruga maRRavarodum aLavaLAviya viruppAl amarndhu kalandhu inidhirundhAr'.

Inscriptions speak of the grants of land by Konerinmaikondaan and Kulasekara Thevan for the Pushpavanesuvarar temple and for the daily feeding of 1008 Brahmin reciters of the Vedas. A copper plate notes the gift of 25 'kaasu' for a village assembly.

INTRODUCTION TO THE HYMN
From Thirupputhur our saint arrived at Thiru-p-poovanam where he sang the following hymn:

திருச்சிற்றம்பலம்

64.திருப்பூவணம் 
பண் : தக்கேசி
ராகம் : காம்போதி

அறையார்புனலுமாமலருமாடரவார்சடைமேல்
குறையார்மதியஞ்சூடிமாதோர்கூறுடையானிடமாம்
முறையார்முடிசேர்தென்னர்சேரர்சோழர்கள்தாம்வணங்கும்
திறையாரொளிசேர்செம்மையோங்குந்தென்திருப்பூவணமே.

அறை ஆர்புனலும் மா மலரும் ஆடு அரவும்ஆர்சடைமேல்
குறை ஆர் மதியம் சூடி,மாது ஓர்கூறு உடையான் இடம்ஆம் - 
முறை ஆர் முடி சேர் தென்னர் சேரர்சோழர்கள்தாம்வணங்கும், 
திறைஆர் ஒளி சேர்,செம்மை ஓங்கும்,தென்திருப்பூவணமே.

பொருள்: சிவபெருமான் தன் சடைமீது, ஆரவாரித்து வரும் கங்கை, ஆத்திமலர், ஆடும் பாம்பு, ஒருகலையாகக்குறைந்தபிறைமதிஆகியவைகளைச்சூடியிருக்கிறார். உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டிருக்கிறார். இவர் எழுந்தருளிய தலம் திருப்பூவணம் ஆகும். இது வைகை ஆற்றின் அலைகளும், வயல் வளமும்,புகழும் உடைய தலமாகும்.திருப்பூவணமானது,நீதி தவறாமல் முடிசூடி ஆ ளுகின்றவேந்தர்களானபாண்டியர்,சேரர்,சோழர் ஆகிய மூவேந்தர்களும்வணங்கும் தலமாகும்.  சூடியஉமையொரு பாகன் இடம் பூவணம்என்கின்றது.

குறிப்புரை: புனலும்,ஆத்திமலரும்,மதியும்சூடியஉமையொரு பாகன் இடம் பூவணம்என்கின்றது.  அறை - பாறை. ஆ - ஆச்சா (ஆத்தி). குறயார்மதி - பிறைமதி. தென்னர் - பாண்டியர். திறை - கப்பம். செம்மை - ஒழுங்கு.  குருவருள்:'முறையார்முடிசேர் தென்னர் சேரர்சோழர்கள் தாம் வணங்கும்திறையாரொளி சேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணமே'என்ற தொடரால்மூவேந்தரும்பூவணத்தில் ஒருங்கு வணங்கிய குறிப்பு இப்பாடலில்அமைந்துள்ளமையை,கண்டு மகிழலாம்.

The roaring Ganges river descending from the mountains, the Aath-thi flower ( - Bauhinia racemosa) and the dancing snake adorn Lord Civan's matted crest on which the crescent moon also rests. He is concorporate with His consort. He is entempled in the well renowned city of Poovanam situated on the banks of the billowing river Vaigai (......á áo). The righteous and duly crowned trio monarches - the Cheras, Cholas and Paandyaas (Céŋ, Cory, uп) regularly come to this town and offer worship to Lord Civan enshrined therein.

மருவார்மதில்மூன்றொன்றவெய்துமாமலையான்மடந்தை
ஒருபால்பாகமாகச்செய்தவும்பர்பிரானவனூர்
கருவார்சாலியாலைமல்கிக்கழல்மன்னார்காத்தளித்த
திருவால்மலிந்தசேடர்வாழுந்தென் திருப்பூவணமே.2

மருவார்மதில்முன்று ஒன்று எய்து,மாமலையான்மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர் 
கரு ஆர்சாலி ஆலை மல்கி,கழல் மன்னர் காத்து அளித்த 
திருவால்மலிந்தசேடர் வாழும் தென்திருப்பூவணமே.

பொருள்: சிவபெருமான்,பகைவர்களாகியதிரிபுரஅசுரர்களின் மூன்று மதில்களையும், ஒருசேர எய்து அழித்தவர். மலையரசன்மகளாகிய பார்வதி தேவியை தனது உடம்பின் ஒரு பக்கத்தில் பாகமாகக்கொண்டுள்ளவர். தேவர்களின் தலைவராகவிளங்குபவர். இவரது ஊர் . திருப்பூவணம். இப்பூவண நகரில் கதிர்கள் நிறைந்த நெல் பயிர்களும்,கரும்புச் சோலைகளும்நிறைந்திருக்கின்றன. வீரக்கழல்அணிந்தமன்னர்கள்காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால்,இத்தலத்தில் சிறந்த மேலோர்கள்வாழ்கின்றனர்.

குறிப்புரை: திரிபுரம் எரித்துத்தேவியைஒருபாகம்வைத்தவனூர் இது என்கின்றது. மருவார் - பகைவர்.  உம்பர்பிரான் - தேவதேவன். கருவார்சாலி - கருக்கொண்ட நெல். ஆலை - கரும்பு. திரு - செல்வம்.  சேடர் - பெருமை உடையவர்.

Lord Civan completely destroyed all the three citadels of Asuraas in one single shot. He is the Chief of Devaas having in one half of His body His consort Paarvathi Devi (u), is the daughter of the Himalayan mountain king. He is entempled in the delightful city of Poovanam (u) surrounded by sugarcane fields and flourishing paddy fields having fully ripe grains. In this town opulent and generous people live who become rich by the liberal gifts of kings who visited this town, who wore anklets made up of little bells (...).

Note: Not only the three crowned sovereigns, namely the Paandya, the Chera and the Chola, but other princes too gathered in Thiru-p-poovanam to offer obeisance to the God of the Supernal.

போரார்மதமாவுரிவைபோர்த்துப்பொடியணிமேனியனாய்க்
காரார்கடலின்நஞ்சமுண்டகண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகைப்புனல்வாய்பரப்பிப்பன்மணிபொன்கொழித்துச்
சீரார்வாரிசேரநின்றதென்திருப்பூவணமே.

போர் ஆர்மதமாஉரிவை போர்த்து,பொடி அணி மேனியனாய், 
கார் ஆர் கடலில் நஞ்சம்உண்டகண்ணுதல்,விண்ணவன்,ஊர் - 
பார் ஆர்வைகைப் புனல் வாய் பரப்பி,பல்மணி பொன் கொழித்து, 
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

பொருள்: போர் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இருப்பவர் சிவபெருமான். திருநீற்றுப் பொடி அணிந்தமேனியை உடையவர்.  கருநிறம் பொருந்திய கடலில் தோன்றியநஞ்சினைஉண்டவர். நெற்றிக்கண்ணைஉடையவர்.  இவரது ஊர்திருப்பூவணமாகும்.  இத்தலத்தில்நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வைகை ஆறு வாய்க்கால் வழியே பரவுகிறது.  இந்த வைகை நதியின்நீரோடு வந்த பலவகை மணிகளும்,பொன்னும்பூவணத்தின்செல்வவளத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

குறிப்புரை: யானையை உரித்துப் போர்த்தது. பொடியணிந்து,நஞ்சுண்டு விளங்கும் கண்ணுதற் பெருமானூர் இது என்கின்றது. போர் ஆர்மதமா - சண்டை செய்யும் மத யானை. உரிவை - தோல்.  கண்நுதல் - நெற்றிக் கண்ணை உடையவன். பார் ஆர் - பூமியிற் பொருந்திய. வாய் - வாய்க்கால். வாரி-நீர்.

The city Thiru-p-poovanam is very fertile as a result of the river Vaikai (mamá) which came to enrich the earth and reached the city Poovanam. It brings with its water gold and several kinds of gems and distribute them all along the channels that gush through this town. Lord Civan covers His body with the skin of the martial elephant which He killed; He smears His body with holy ashes; He swallowed the black poison that came out of the ocean; He has a third eye in His forehead. Lord Civan of such characteristics is enshrined in the fertile city of Thiru-p-poovanam.

கடியாரங்கற்கொன்றைசூடிக்காதிலொர்வார்குழையன்
கொடியார்வெள்ளையேறுகந்தகோவணவன்னிடமாம்
படியார்கூடிநீடியோங்கும்பல்புகழாற்பரவச்
செடியார்வைகைசூழநின்றதென்திருப்பூவணமே.

கடி ஆர்அலங்கல் கொன்றை சூடி,காதில் ஓர் வார்குழையன், 
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன்இடம்ஆம் - 
படி ஆர் கூடி,நீடி ஓங்கும் பல்புகழால் பரவ, 
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

பொருள்: சிவபெருமான் மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச்சூடியிருக்கின்றார்.  ஒரு காதில் நீண்ட குழையைஅணிந்திருக்கிறார். வெண்மையானஇடபக்கொடியை ஏந்தியிருக்கிறார். கோவணத்தைஅணிந்துள்ளார். இவர் எழுந்தருளிய இடம் திருப்பூவணமாகும். இது புதர்கள் நிறைந்த வைகை ஆறு சூழ்ந்துள்ள தலம். இத்தலத்தில் நிலவுலக மக்கள் ஒன்றுகூடி,நீண்டு விரிந்த சிவபெருமானின்புகழைப் போற்றி வணங்குகின்றனர்.

குறிப்புரை: கொன்றை அணிந்து,காதில் குழை விளங்க இடபக் கொடி ஏந்திய கோவணாண்டி இடம் இது என்கின்றது. கடி - மணம். அலங்கல் - மாலை. படியார் - பூமியில் உள்ள மக்கள். செடி ஆர் வைகை - புதர் நிறைந்த வைகை.

Lord Civan wears the fragrant cassia garland. In one of His ears He wears a dangling ear-ring (my). He uses the sign of the white bull as insignia of His flag. He wears the fore lap cloth (C) in His loins. Thiru-p-poovanam is His choice city surrounded by the river Vaikai, full of bushes on its banks. The devotees of the earth gather here, hail His endless glory and pay obeisance to Him.

கூரார்வாளிசிலையிற்கோத்துக்கொடிமதில்கூட்டழித்த
போரார்வில்லிமெல்லியலாளோர்பால்மகிழ்ந்தானிடமாம்
ஆராஅன்பில் தென்னர் சேரர்ர்சோழர்கள்போற்றிசைப்பத்
தேரார்வீதிமாடநீடுந் தென்திருப்பூவணமே.5

கூர் ஆர் வாளி சிலையில்கோத்துக்கொடிமதில்கூட்டுஅழித்த
போர் ஆர்வில்லி,மெல்லியலாள்ஓர்பால்மகிழ்ந்தான்,இடம்ஆம் - 
ஆராஅன்பில் தென்னர் சேரர்சோழர்கள் போற்றி இசைப்ப, 
தேர் ஆர் வீதி மாடம் நீடும்தென்திருப்பூவணமே.

பொருள்: சிவபெருமான்,கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி கொடிகள் கட்டிப் பறந்தமும்மதில்களின்கூட்டுக்களையும் ஒருசேர அழித்தார். அவர் போரில் வல்ல வில் வீரர்.  உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவர். இவர் எழுந்தருளிய இடம் திருப்பூவணமாகும். இது தேர் ஓடும் வீதியையும்,மாடவீடுகளையும் கொண்ட தலம்.  இந்த அழகிய திருப்பூவணத்தலத்தைபாண்டியர்,சேரர்,சோழர் ஆகிய மூவேந்தர்கள்குன்றாத அன்போடு போற்றுகின்றனர்.

குறிப்புரை: திரிபுரம் எரித்த வில்லாளியாய்உமையொரு பாகம் கொண்டான் இடம் இது என்கின்றது.  சிலை - வில். கூட்டழித்த - ஒருசேர அழித்த. ஆராஅன்பில் - போதும் என்றமையாத: அன்பொடு.

Lord Civan is an unparalleled hero, adept in field of battle, who has His bow fitted with a sharp arrow. He destroyed at one stroke, all the three citadels of the Asuraas over which flags were flying then. He has in the left side of His body, His consort Umaa Devi and is happily enshrined in Thiru-p-poovanam. The three kings Chera, Chola and Paandya gather here with unabated love and pay obeisance to Lord Civan entempled here. In the Thiru-p-poovanam town, tall mansions are to be found all over and streets, big and wide, where the temple chariots ply during festive days. Note: This verse celebrates the regal splendour of the shrine of Thiru-p-poovanam.

நன்றுதீதென்றொன்றிலாதநான்மறையோன்கழலே
சென்றுபேணியேத்தநின்ற தேவர் பிரானிடமாம்
குன்றிலொன்றியோங்கமல்குகுளிர்பொழில்சூழ்மலர்மேல்
தென்றலொன்நறிமுன்றிலாருந் தென்திருப்பூவணமே.6

நன்று தீது என்று ஒன்று இலாதநால்மறையோன்,கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான்,இடம்ஆம் - 
குன்றில் ஒன்றி ஒங்க மல்கு குளிர்பொழில் சூழ் மலர்மேல்- 
தென்றல் ஒன்றி முன்றில் ஆரம் தென்திருப்பூவணமே.

பொருள்:சிவபெருமான் நன்மை தீமை என்பவற்றுள் ஒன்றும் இல்லாதவன். நான்கு வேதங்களையும்அருளியவன். தேவர்களின் தலைவன். இப்பிரான்,தன் திருவடிகளை அடைந்த அன்பர்கள் போற்றி அருள்பெறுமாறு நின்ற இடம்திருப்பூவணமாகும். பொதிகை மலையில் உற்பத்தியான தென்றல் காற்று,அங்குள்ள மலைகளில் பொருந்தி பூக்கள் நிறைந்த குளிர்ச்சியான ஓங்கிய மரங்களில் படர்ந்து,அதன் மணத்தையும்தன்னகத்தே கொண்டு,கீழ்த்திசையை நோக்கி வந்து,மிக்க அழகு வாய்க்கப் பெற்ற திருப்பூவணத்தில் உள்ள மாளிகைகளில்முன்வாசலில்அடிக்கப்பட்டுஅங்குள்ளோரைமகிழ்விக்கின்றது.

குறிப்புரை: நல்லது தீது இரண்டையும் கடந்த பெருமான். எல்லோரும் ஏத்த நின்ற பெருமான் இடம் இது என்கின்றது. நன்றும்தீதும்வினையான்வருவனஆதலின்வினையிலியாகியபெருமானுக்கு அவ்விரண்டும்இல்லையாயிற்று. குன்றில் ஒன்றி - மலைகளிற் பொருந்தி. முன்றில் - முன்வாயிலில். 
Good and bad occurs from out of one's own karma. Lord Civan is immaculate. It is therefore said that He is above the good and the bad. He is the author of four Vedas. He is the Chief of Devaas. He is enshrined in Thiru-p-poovanam to enable His devotees to adore His feet, pay their obeisance and to get His grace. The southerly wind (m) rising from the Pothihai hills in the Western Ghats, blows over the flowers that blossom in the cool and tall vegetation; and carrying the pleasant smell of the flowers it travels all along towards the east and reaches the foreyard of mansions in this Thiru-p-poovanam city giving pleasure to the inhabitants therein.

பைவாயரவமரையிற்சாத்திப்பாரிடம்போற்றிசைப்ப
மெய்வாய்மேனிநீறுபூசிஏறுகந்தானிடமாம்
கைவாழ்வளையார்மைந்தரோடுங்கலவியினால்நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடலோவாத்தென் திருப்பூவணமே.7

பைவாய் அரவம் அரையில் சாத்தி,பாரிடம் போற்றி இசைப்ப, 
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் - 
கை வாழ் வளையார்மைந்தரோடும்கலவியினால்நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத்தென்திருப்பூவணமே.

பொருள்: சிவபெருமான் படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டியிருப்பவர். பூதகணங்கள்போற்றிப் பாட ஆடுபவர். மேனிமுழுவதும் மெய்மை வடிவான திருநீற்றைப்பூசியிருப்பவர். விடையேற்றில் ஊர்ந்து வருபவர்.  இவரது இடம் திருப்பூவணமாகும். இந்த அழகிய திருப்பூவணத்தலத்தில் கைகளில் வளையல்களை அணிந்துள்ளஇளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்பமுடையவராய்நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்கள்நீங்காதுஒலித்துக் கொண்டு இருக்கும்.

குறிப்புரை: பாம்புடுத்துப் பூதம் போற்ற நீறுபூசி இடபமூர்ந்தவன் இடம் இது என்கின்றது. பை - படம்.  பாரிடம் - பூதம். கைவாழ் வளை யார் - இளைய மகளிர்கள். கலவி - புணர்ச்சி. கலவிக்காலத்து நிகழ்த்தும் காதற்பாட்டு நீங்காத பூவணம்என்க.

Lord Civan ties in His waist, the hooded snake. He smears His body with holy ashes. He rides on His Bull and moves around while His goblin hosts accompany Him singing His praise. He is enshrined in the Thiru-p-poovanam. In this city the love songs of young girls sung during their union with their life partners reverberate in the night hours.
Note: The holy ashes is the vital symbol of Saivism and it is indeed the mark of truth.

மாடவீதி மன்னிலங்கைமன்னனைமாண்பழித்துக்
கூடவென்றிவாள்கொடுத்தாள்கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடுமாடலோங்கிப்பன்மணிபொன்கொழித்து
ஒடநீரால்வைகைசூழுமுயர்திருப்பூவணமே.

மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து, 
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்குஇடம்ஆம் - 
பாடலோடும் ஆடல் ஓங்கி,பல்மணி பொன் கொழித்து, 
ஓட நீரால்வைகைசூழும் உயர் திருப்பூவணமே.

பொருள்: இராவணன் மாடவீதிகள்நிலைபெற்றஇலங்கையின் மன்னன். அவன் பெருவீரன் என்ற புகழை சிவபெருமான் அழித்தார். அவன்,தன் பிழையை உணர்ந்து பாடியபோது, வெற்றி நல்கும்வாளைக் கொடுத்து ஆண்டு கொண்டார். இத்தகைய அருட்கொள்கையாளன்சிவபெருமானாவார். இவரது இடம் திருப்பூவணமாகும்.  ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடைய தலம் இது. பல்வகைமணிகளையும்,பொன்னையும் செழிப்பாகக் கொடுத்து,ஓடிவரும் வைகை ஆற்று நீரால்சூழப்பெற்ற உயர்ந்த தலம் திருப்பூவணமாகும்.

குறிப்புரை: இராவணனை அடக்கி ஆண்டு,வாளும்அருளிச் செய்த மன்னர்க்கு இடம் பூவணம் என்கின்றது. மாண்பு - சிறப்பு.

Raavanan was king of Sri Lanka where exist tall and good looking mansions in the streets making it an impressive city. This Raavanan was glorified by his subjects as the best hero of his time. His ego was quelled by Lord Civan. Raavanan realised his fault, begged for pardon and sang Saama geetham in praise of Lord Civan. Pleased with his music, Lord Civan forgave him and gifted a divine sword that would bring him fame and victory over his enemies whenever needed. This Lord Civan abides in Thiru-p-poovanam which is famous for its fine arts, music and dance. The river Vaikai flows along this city carrying all kinds of gems and gold particles and makes it prosperous.

Note: Thiru-p-poovanam is renowned for arts, music and dance.

பொய்யாவேதநாவினானும்பூமகள்காதலனும்
கையாற்றொழுதுகழல்கள்போற்றக்கனலெரியானவனூர்
மையார்பொழிலின் வண்டு பாடவைகைமணிகொழித்துச்
செய்யார்கமலந்தேனரும்புந்தென்திருப்பூவணமே._- 9

பொய்யா வேத நாவினானும்,பூமகள்காதலனும், 
கையால்-தொழுது கழல்கள் போற்ற,கனல்எரிஆனவன் ஊர் - 
மை ஆர்பொழிலின் வண்டு பாட,வைகை மணி கொழித்து, 
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

பொருள்: என்றும் பொய்யாகாதவேதங்களை ஓதும் நாவினன் நான்முகன் ஆவான்.  திருமால் மலர்மகளின் கணவன். இவ்விருவரும் தங்கள் கைகளினால்இவன்திருவடிகளைத் தொழுது போற்ற,சிவந்த எரி உருவாகத்தோன்றிய அவனது ஊர் திருப்பூவணமாகும். இந்த அழகிய திருப்பூவணத்தலத்தில் இருள் செறிந்த சோலைகளில் வண்டுகள் பாடுகின்றன.  அதன் பயனாய் சிவந்த தாமரை மலர்களில் தேன் துளிர்கின்றது. வைகை. ஆறு மணி கொழித்து வளம் சேர்க்கிறது.

குறிப்புரை: அயனும்மாலும்அறியொண்ணா வகை அழலுருவானவன் ஊர் இது என்கின்றது. பொய்யா வேதம் - எக்காலத்தும்பொய்யாகாத வேதம். வேதத்தின்நித்யத்துவம் கூறியது. பொழிலில் வண்டு பாடச் செய்களிற் கமலம் தேனரும்பும் என்றது கன்று கத்தச்சுரக்கும் கறவை போல வண்டு பாடக் கமலம் மலர்ந்து தேன்சுரக்கும்என்பதாம்.

Lord Civan in the days of yore stood as a tall and huge column of fire. Brahma, who chants the never failing Vedas and Thirumaal, (husband of the goddess of the earth) who resides in the lotus (ш) both of them worshipped Lord Civan by raising both their hands and adored His Holy Feet. This Lord Civan abides in this impressive southern Thiru-p-poovanam city which is very prosperous as a result of the river Vaikai bringing and depositing here all kinds of gems. The city gardens are dark, full of tall trees close to one another. Honeybees are humming tunes in these gardens. The humming noise of the bees makes the lotus flower to drop their honey.

அலையார்புனலைநீத்தவருந்தேரருமன்புசெய்யா
நிலையா வண்ண மாயம் வைத்தநின்மலன்தன்னிடமாம்
மலைபோற்றுன்னிவென்றியோங்குமாளிகைசூழ்ந்தயலே
சிலையார்புரிசைபரிசுபண்ணுந்தென் திருப்பூவணமே.10

அலை ஆர்புனலைநீத்தவரும்,தேரரும்,அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம்ஆம் - 
மலை போல் - துன்னிவென்றி ஓங்கு மாளிகை சூழ்ந்து,அயலே
சிலை ஆர்புரிசை பரிசு பண்ணும்தென்திருப்பூவணமே.

பொருள்: அலைகள் வீசும் நீரில் நீராடாது,சமணர்கள்அதனைத்துறந்தனர். இந்தச் சமணரும்,புத்தரும்புண்ணியப் பேறு இல்லாதவர்கள். ஆதலால் அன்பு செய்து வழிபாட்டில்நிலைத்திராது இருக்கின்றனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட மாயத்தை வைத்தவர் சிவபெருமான். இந்தக்குற்றமற்ற சிவபெருமான் எழுந்தருளிய இடம் திருப்பூவணம். இந்த அழகிய திருப்பூவணத்தில்வெற்றிமிக்கமாளிகைகள்மலைபோல் நெருங்கி அமைந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றி கருங்கல்லால் அமைந்த மதில்கள் அழகு செய்கின்றன.

குறிப்புரை: புத்தர் சமணர் அன்பு செய்து நிலையாத வண்ணம் அவர்கட்குமாயையைக்கூட்டிய நின்மலன் இடம் இது என்கின்றது. புனலைநீத்தவர் - நீராடாதே. அதனை விலக்கிய சமணர்.  தேரர் - புத்தர். துன்னி - நெருங்கி. சிலையார்புரிசை - மலையை ஒத்த மதில். பரிசு - அழகு.

Lord Civan is ever free from soul impurities; He caused the Samanars and the Buddhists who never take bath in rippling waters and thus loose virtuous life. They cannot have sincerity or steadfastness in their prayers. Therefore, the unblemished Civan caused bewilderment in their minds. This Civan is entempled in this fair southern Thiru-p-poovanam, which has impregnable and hill-like mansions close to each other. They are surrounded by good looking blue granite stone walls - all of which enhance the beauty of the city.

திண்ணார்புரிசைமாடமோங்குந்தென்திருப்பூவணத்துப்
பெண்ணார்மேனியெம்மிறையைப்பேரியலின்தமிழால்
நண்ணாருட்கக்காழிமல்குஞானசம்பந்தன் சொன்ன 
பண்ணார் பாடல் பத்தும்வல்லார்பயில்வது வானிடையே.11

திண்ஆர்புரிசை மாடம் ஒங்கும்தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம்இறையை,பேர் இயல் இன்தமிழால், 
நண்ணார்உட்கக்காழிமல்கும்ஞானசம்பந்தன் சொன்ன 
பண் ஆர்பாடல்பத்தும்வல்லார்பயில்வதுவான்இடையே.

பொருள்: வலிமை பொருந்திய மதில்களும்மாடவீடுகளும் நிறைந்த அழகிய தலம் திருப்பூவணம். இங்கு,எம்இறைவனான சிவபெருமான் பெண்ணொருபாகனாக விளங்குகின்றார். இந்தச்சிவபெருமானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால், புறச்சமயத்தார்அஞ்சுமாறு விளங்கும் சீகாழிப்பதியில்தோன்றிய'ஞானசம்பந்தன் பாடினார். இந்த இசைத்தமிழ்ப்பாடல்கள்பத்தையும்பண்ணோடுஓதவல்லவர்கள் வானுலகில்வாழ்வர்.

குறிப்புரை: இந்தப்பண்ணார்ந்தபாடலைப் பாட வல்லவர்கள்வானுலகிற்பயில்வார்என்கின்றது.  திண் - வலிமை. நண்ணார் - பகைவர். உட்க - அஞ்ச.

Lord Civan, our Chief, is entempled in the divine form having His consort on the left portion of His body. This beautiful city has multi-storied mansions surrounded by impregnable fort walls. Gnaanasambandan hailing from Seekaazhi (dreaded by the adherents of alien faiths) has sung in glorious sweet Tamil language on Lord Civan, our Chief entempled in Thiru-p-poovanam. Those who can chant these ten verses of tuneful hymn, will flourish in the world of Devaas.

Note: Gnaanasambandar is Parasamaya Kolari. He is ever dreaded by the adherents of alien faiths.
Saivite hymns sung at various shrines in the Tamil land, speak of Lord Civan ever abiding at the respective shrines and not leaving those shrines at any time - e.g.... பெருமானார்பெருவேளூர்பிரியாரே (vide திருப்பெருவேளூர்திருப்பதிகம் - பாடல்(1) - This can possibly by amplified further
விழையாதார்விழைவார்போல்விகிர்தங்கள்
for clarity, thus:
Shrines were built in the past at various places for the benefit of local people who may not be able to travel far and wide. A vast majority of folks, confined to certain regions should have the full benefit at the shrines nearby. Hence each decad is in itself a complete composition on the glories of Lord Civa and how to attain His grace. Thus our hymns come forward to assure all men of the gift of liberation from within their neighbourhood shrines as well. Assigning different location as permanent abodes of Lord Civan, does not therefore involve any inconsistency. It is well known that Lord Civa is omnipresent.

THIRU-CH-CHITRAM-BALAM
End of 64th Hymn
திருச்சிற்றம்பலம்

64ஆம் பதிகம் முற்றிற்று

 

Related Content

திருப்பதிகக் கோவை

அகத்தியர் தேவாரத் திரட்டு

திருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்

உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த "திருப்பதிகக் கோவை"

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - தமிழ் உரை Eng