சிறுபூளை Aerva lenatea, Juss.; Amarantaceae.
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டஈசன் பொன்போற் சடையிற் புனல்வைத் தபொருளே.
. - திருஞானசம்பந்தர்.
திரு இரும்பூளை (ஆலங்குடி) என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது சிறுபூளை ஆகும். இது சிறு நீள்வட்ட இலைகளையும், இலைக்காம்புகளில் வெண்மையான பூக்கதிர்களையும் உடைய நேராக வளரும் மிகச் சிறுசெடி வகையாகும். இஃது பொங்கல் பூ, சிறுபீளை என்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆவாரம் பூவுடன் சிறுபூளை பூவையும் இல்லந்தோறும் பயன்படுத்துவது மரபாக உள்ளது. செடிமுழுவதும் மருத்துவப் பயனுடையது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்ந்து காணப்படுகின்றது.
< PREV < சந்தனம் |
Table of Content | > NEXT > தருப்பை |