நந்தியாவட்டம் Ervatamia Coronaria. Stapf.; Apocyanaceae.
சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஎம் ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.
- திருஞானசம்பந்தர்.
திருவெண்ணியூர் திருக்கோயிலில் தலமரமாக விளங்குவது நந்தியாவட்டமாகும். இது கரும்பச்சை இலைகளையும், வெண்ணிற மலர்களையும் உடைய பாலுள்ள செடியினம். இதில் ஒற்றையடுக்கு, பலஅடுக்கு இதழ்களுடைய இனமும் காணப்படுகின்றன. பூசனைக்குரிய சிறந்த மலராதலால் இஃது எல்லாத் திருக்கோயில் நந்தவனங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பூ. வேர் முதலியன மருத்துவக் குணமுடையது.
வயிற்றுப் புழுக்கொல்லியாகவும் தோல்நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயற்படுகிறது.
< PREV < தேற்றாமரம் |
Table of Content | > NEXT > நாரத்தைமரம் |