கோரை Cyperus rotundus, Linn.; Cyperaceae.
மண்புகார் வான்புகுவார் மனைமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டென் தலைவன்தாள் சார்ந்தாரே.
- திருஞானசம்பந்தர்.
திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை
திருமுறைகளில் கோரை பற்றிய குறிப்பு :-
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 10.09.22.46