கடுக்காய் Terminalia Chebula. Retz.; Combretaceae.
அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வந்த
கணபுல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.
- திருநாவுக்கரசர்.
திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும். இஃது தமிழக காடுகளில் தானே வளரும் மர வகையைச் சார்ந்தது. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்துப் பொருள்களில் இதுவும் ஒன்று.
திருமுறைகளில் கடுக்காய் பற்றிய குறிப்பு :-
கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 1.091.10
கடுக்கள் தின்று கழிமீன்
கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த
வொண்ணா இடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள்
கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான்
உறைகின்ற கேதாரமே. 2.114.10
கடுக்கொடுத் ததுவ ராடையர்
காட்சியில் லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி
வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம
ருந்திருக் கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம
ரர்க்கிறை யாவரே. 3.012.10
கையிலுண்ணுங் கையருங்
கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும்
வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான்
தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ்
ஆனைக்காவு சேர்மினே. 3.053.10
கட்டமண் தேரருங் கடுக்கடின்
கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமாமே. 3.091.10
அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்
களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்
புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி
யூரர் திருமுடியே. 4.086.10
கடுக்கை யஞ்சடை
யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக்
கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற
நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும்
அம்ம அழகிதே. 5.55.10
ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.076.4
வீரன் அயன்அரி வெற்பலர்
நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர்
ஊர்திவெவ் வேறென் பரால்
யாரும் அறியா வகைஎங்கள்
ஈசர் பரிசுகளே. 11.007.95
புனைகடற்குப் பொன்கொடுக்கும்
பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப்
புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும்
நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு. 11.023.44
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசைஇழிவ
தொக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத்
தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம். 11.026.17
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40) 11.027.40
ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே. 11.030.65
இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கல்உன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழிலிது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே. 11.030.84
கங்கையும் மதியும் பாம்பும்
கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீதமதி
இரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும்
திரு முனைப்பாடி நாடு. 12.006.1