கருங்காலி Diosphyrus ebenum, Koenig.; Ebenaceae.
அடையார் புரம்மூன்றும் அனல்வாய் விழவெய்து மடையார் புனலம்பர் மாகா ளம்மேய விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும் சடையான் கழலேத்தச் சாரா வினைதானே
- திருஞானசம்பந்தர்.
திருஅம்பர் மாகாளம் திருக்கோயிலில் தலமரமாக விளங்குவது கருங்காலியாகும். இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும். இதன் பட்டை, கட்டை, பிசின், வேர் முதலியன மருத்துவப் பயனுடையன.
குருதி சீழ்க்கசிவு அடக்கல், நோய்தரும் நுண்ணுயிரிகளைக் கொல்லுதல், உடல் பலம் மிகுத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.
< PREV < கடுக்காய்மரம் |
Table of Content | > NEXT > கல்லத்தி |