இறைவர் திருப்பெயர்: அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : காசிக் கங்கை, காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர் - எற்றான் மறக்கேன், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. எற்றான் மறக்கேன் (7.92); பாடல்கள் : மாணிக்கவாசகர் - நரியைக் குதிரைப் பரியாக்கி (8.50.7) ஆனந்தமாலை; சேக்கிழார் - மைந்தன் தன்னை (12.72.9 & 13) வெள்ளானைச் சருக்கம்.
Specialities
இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பூரத்தில் தேர்த்திருவிழாவுடன் நடைபெறுகிறது.Contact Address