இறைவர் திருப்பெயர்: கேதாரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கேதாரகௌரி.
தல மரம்:
தீர்த்தம் : மந்தாகினி நதி, உதககுண்ட தீர்த்தம்
வழிபட்டோர்: உமையம்மை, பாண்டவர்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், சேக்கிழார், ஆதிசங்கரர் முதலியோர்
Sthala Puranam
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. முனிவர், தேவர், யக்ஷரால் வணங்கப்படுவது என்று ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் போற்றப்படுவது திருக்கேதாரம்.
இந்திரன் சிவபெருமானை நோக்கி, "கே தாரயாமி" என்று தாங்கள் கேட்டதால் இத்தலம் கேதாரம் என்று அழைக்கப்படட்டும். தினமும் உங்களை சுவர்க்கத்திலிருந்து வந்து வழிபடுவேன் என்றான். அன்று முதல் தினமும் வழிபாடு செய்யத் தொடங்கிய இந்திரன், பனிக்காலத்தில் கேதாரம் முழுமையும் பனியால் மூடப்படுவது கண்டு, இங்கு வழிபட வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாவர் என்று கேதாரேஸ்வரரிடம் விண்ணப்பம் செய்ய, சிவபெருமான் 8 மாதங்கள் கேதாரத்தில் அருள்வதாகவும், பனி மூடும் 4 மாதங்கள் ஹாடகேஸ்வரத்தில் அருள் புரிவதாகவும் வரம் தந்தார்.
பாண்டவர்கள் மஹாபாரதப் போரில் வெற்றிபெற்று ஆட்சி மேற்கொண்டாலும் தங்கள் உறவினர்களைப் போரில் வீழ்த்தி வென்றதற்கு வருந்தினர். அவர்கள் தங்கள் பேரன் பரிக்ஷித்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கி சுவர்க்கம் செல்ல எண்ணினர். எல்லா வினைகளையும் போக்குபவரான சிவபெருமானை வணங்க இமயமலை வந்தனர். பாண்டவர்கள் காணா வண்ணம் இறைவன் ஒரு தலத்தில் மறைந்து நின்றார். அது குப்தகாசி எனப்படுகிறது. இறைவனை எங்கு காண்பது என்று வருந்தினர். இறைவன் அங்கிருந்த எருமைக்கூட்டத்தில் ஒன்றாக இருப்பதை உணர்ந்தனர். தொடர்ந்து சென்று வீமன் அவ்வெருமையின் வாலைப் பிடிக்க அவ்வுருவில் இருந்த சிவபெருமான் பூமிக்குள் சென்று மறைந்தார். பீமன் பற்றிய பின்பகுதி கேதாரேஸ்வர சிவலிங்கமாகக் காட்சி தந்தது. சிவவழிபாடு செய்து உய்வுறவேண்டும் என்ற பாண்டவர்களின் உறுதியான முயற்சியை மகிழ்ந்த பெருமான் அவர்களுக்குத் தன் அங்கங்களாகப் பஞ்ச கேதாரங்களிலும் காட்சியளித்து அவர்கள் பாவங்களைப் போக்கி சுவர்க்கத்திற்கு வழிகாட்டினார்.தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. தொண்டரஞ்சு களிறும் (2.114); சுந்தரர் - 1. வாழ்வாவது மாயம்மிது (7.78); பாடல்கள் : அப்பர் - திரையார் புனற்கெடில (6.7.4), பூதியணி பொன்னிறத்தர் (6.51.2), ஆண்டானை அடியேனை (6.54.1), உஞ்சேனை மாகாளம் (6.70.8), கந்தமா தனங்கயிலை (6.71.9); சேக்கிழார் - அங்கண் வடதிசை (12.28.1026) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், வட மாதிரத்துப் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், மன்னு திருக் கேதாரம் (12.30,3) திருமூல நாயனார் புராணம்.
Specialities
இமய மலையின் பனி சூழ்ந்த சிகரங்களுக்கு மத்தியில் எழிலோடு காட்சியளிக்கின்றது.அநேகதங்காவதம் (கௌரிகுண்டம்) தல வரலாறு
Contact Address