logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருச்சுழியல் (திருச்சுழி)

Om symbol

இறைவர் திருப்பெயர்: திருமேனிநாதர், சுழகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், பூமீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை.

தல மரம்:

தீர்த்தம் : பாவகிரி நதி, கவ்வைக்கடல் (ஒலிப்புணரி), பூமிதீர்த்தம், சூலதீர்த்தம்.

வழிபட்டோர்:அப்பர், சுந்தரர், சேரமான் பெருமான், சேக்கிழார். திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர்,அருச்சனன், சித்திராங்கதை.

Loading map...

Sthala Puranam

thiruchuzhiyal temple

சிவபெருமான் ஒருசமயம் பிரளயத்தைச் சுழித்துப் பூமிக்குள் புகச் செய்தார் ஆதலின் (திருச்)சுழியல் என்று பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. ஊனாய்உயிர் புகலாய் (7.82); பாடல்கள்      :    அப்பர்     -       திருநீர்ப் புனற்கெடில (6.7.12);                     சுந்தரர்     -       சுற்றுமூர் சுழியல் (7.31);                   சேக்கிழார்    -       பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                         திரு இராமேச்சரத்துச் (12.37.110,111 & 114) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

  • மூலவர் சுயம்பு லிங்க திருமேனி.

 

அம்பாள் சந்நிதியில் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

அம்பாள்; திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம்.

 

  • திருவண்ணாமலையில் தங்கி அவனிக்கு ஞானதீபமாய் விளங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த தலம்.

 

  • திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர்.
முந்தைய தலம்<திருப்பூவணம்

 அடுத்த தலம்>திருக்குறும்பலா (குற்றாலம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இராமநாதபுரம், பரமக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 15.கி.மீ. - ல் உள்ளது. தொடர்புக்கு :- 04566 - 282 644.
Loading map...

Related Content