இறைவர் திருப்பெயர்: வேதபுரிசுவரர், அத்யாபகேசர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரியாம்பிகை
தல மரம்:
தீர்த்தம் : வேத தீர்த்தம், வேதாமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள் முதலியோர்
Sthala Puranam
![]() |
இவ்வூர் தற்போது தேரழுந்தூர், தேரழந்தூர் என்றெல்லாம் மக்களால் வழங்கப்படுகிறது.
அகத்தியர் இத்தல இறைவனைப் பூஜிப்பதை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் இத்தலம் தேர்-அழுந்தூர் = தேரழுந்தூர் என்று வழங்குகிறது என்னும் வழக்குள்ளது.
வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் வழிபட்டத் திருத்தலம். இத்தலம் "சந்தனவனம்" என்றும் விளங்கியுள்ளது.
கற்கசன் என்ற திருடனை அரசசேவகர்கள் அரசனிடம் கொண்டு செல்ல இழுத்து சென்றார்கள். அன்று சோம வாரமாக இருந்த காரணத்தால் வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆரத்தி நடந்து கொண்டு இருந்தபடியால் எங்கும் ஹர ஹர என்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஹர ஹர ஒலி கற்கசன் காதில் விழுந்த காரணத்தால் இந்த ஒலியிலேயே லயித்து சமாதி நிலையை அடைந்து இதை அறியாத சேவகர்கள் கற்கசனை மிகவம் துன்புறுத்தி விட்டார்கள். எம தூதர்கள் அவன் உயிரைக் கொண்டு செல்ல கால பாசத்தோடு வந்திருந்தனர். சிவன் தூதர்கள் உடன் தோன்றி அவன் மரிக்கும்போது வேதபுரீஸ்வரனைத் தியானித்து விட்டான். ஆகவே அவனைக் கயிலாயம் அழைத்துச் செல்ல வேண்டுமென அழைத்துச் சென்றனர். ஆகையால் இங்கு சோமவாரதினத்தில் வேதபுரீஸ்வரனைத் தொழுவது சாலச் சிறந்தது என கருதப்பட்டுவருகின்றது.
![]() |
![]() |
திருமுறை பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. தொழுமா றுவல்லார் (2.20);
பாடல்கள் : அப்பர் - அஞ்சைக் களத்துள்ளார் (6.51.8);
எச்சில் இளமர் (6.70.4);
சுந்தரர் - காட்டூர்க் கடலே (7.47.1);
பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி விண்ணுறும் (11.30.63);
சேக்கிழார் - நிலவு மாளிகைத் (12.28.434) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address